இயேசுகிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல் பாகம் 1 THE REVELATION OF JESUS CHRIST PART 1 வில்லியம் மரியன் பிரன்ஹாம் முதலாம் அத்தியாயம் இயேசு கிறிஸ்து தம்மை வெளிப்படுத்துதல் THE REVELATION OF JESUS CHRIST சகோ. நெவில் அவர்களே! தங்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் அனைவரும் அமரலாம். “ கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்ன போது மகிழ்ச்சியாயிருந்தேன்'' என்பதாக ஒரு சமயம் சொல்லப்பட்டது என்று நான் நினைக்கிறேன். 2. இப்பொழுது இங்கு இருக்கிற அனைவருக்கும் உட்கார இட வசதி போதுமானதாக இல்லாதிருக்கிறதற்காக நாங்கள் வருந்துகிறோம். ஒரு வேளை இன்னும் எதிர்வரும் வாரங்களில் இச்செய்திகளைக் கேட்க மேலும் அதிகமதிகமாக மக்கள் வரக்கூடும். 3. ஆனால் இந்த விசேஷித்த கூட்டங்களுக்கான காரணம் என்னவெனில், நாம் செய்யப் போவதென்னவெனில்... சபையானது இந்நாளில் இச்செய்தியைப் பெற்றிருத்தல் வேண்டும்'' என்ற எச்சரிக்கை உணர்வை பரிசுத்த ஆவியானவர் எனதுள்ளத்தில் ஆழப்பதித்திருந்தார். ஏனெனில் இச்செய்தியானது வேதம் முழுவதிலும் மிகவும் தலைசிறந்ததாகக் காணப்படுகிறதென நான் விசுவாசிக்கிறேன். மேலும், இச்செய்தியானது இவ்வேளையில் கிறிஸ்துவை அவருடைய சபையில் வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. 4. ஒருவருக்கு தன் எண்ணங்களையும் விசுவாசத்தையும் ஆதாரமாகக் கொண்டுள்ள ஒன்று இல்லாமல் போனால், எவருக்குமே விசுவாசம் இருக்க முடியாது. அவர் செய்கிறது என்னவென்றும் அவர் எங்கே செல்கின்றார் என்றும் அறிந்து கொள்ள இயலாது, எனவே வேத வசனங்கள் கிறிஸ்துவையும் காலத்தின் நிலையையும் நமக்கு இக்கடைசி நாட்களில் வெளிப்படுத்தியிருக்குமானால், அதை ஆராய்ந்து நாம் எங்கிருக்கிறோம் என்பதைக் கண்டு கொள்வது, நமக்கு நன்மை பயக்கும். 5. இப்பொழுது நமது சபையானது பெரிதாக இல்லாமைக்கு வருந்துகின்றோம். ஒரு நாளில் அவ்வாறான பெரிதான கட்டிடத்தை நாம் பெறுவோம் என்று எதிர்பார்க்கிறோம். 6. கடந்த நான்கு தினங்களாக வெளிப்படுத்தின விசேஷத்தின் வரலாற்றுப் பூர்வமானவைகளை நான் ஆராய்ந்து கொண்டிருக் கையில், உண்மையாக இவ்வாறாக சம்பவித்திருக்கும் என்று நான் எதிர்பாராதவைகளைப் பற்றி தெரிந்து கொண்டேன். ஒரு முறை நான் வேதத்தில் காணப்படும் “ உண்மையான திராட்சைச் செடி'', "கள்ளத் திராட்சைச் செடி'யைப் பற்றி அத்தலைப்பில் ஒரு பிரசங்கத்தை நிகழ்த்துவதற்காக முயற்சியொன்றை எடுத்துக் கொண்டேன். அதைப் போலவே, இந்த ஏழு சபைக் காலங்களைப் பற்றிய செய்தித் தொடர் அளிக்கப்பட்டதற்குப் பிறகு, வரலாற்றையும், வேதத்தையும் அடிப்படையாகக் கொண்டு, "மெய்யான சபை', "கள்ளச் சபை' என்ற தலைப்பில் ஒரு செய்தித் தொடரை அளிக்கலாம் என்ற எண்ணம் எனக்குண்டானது. 7. இன்னும் கூடுதலாக இருக்கைகளை பின்னால் உள்ள காலியிடங்களில் கொண்டு வந்து நிரப்பி இன்னும் கொஞ்சம் மக்களை உட்கார வைக்க வேண்டும் என்று நாம் முயன்று கொண்டிருக்கிறோம். அதற்காக கூடுதல் இருக்கைகளை பெற நாம் முயலுகிறோம். அப்படிச் செய்தால் ஆராதனை சமயங்களில் மேலும் கூடுதலாக மக்களை நாம் அமர வைக்க இயலும். 8. இப்பொழுது இச்செய்திகளைப் பற்றி, நான் இங்குள்ளவர்களில் இதைப் பற்றிய உண்மையாகவே கரிசனை கொண்டவர்களைப் பார்த்துக் கேட்டுக் கொள்வதென்ன வெனில், இச்செய்தியை நாம் விளக்கிக் கூறும் ஒவ்வொரு கூட்டங்களுக்கும் தவறாது வரவேண்டுமென்பதே. இந்த மகத்தான நூலாகிய வெளிப் படுத்தின விசேஷத்தையும், ஏழு சபைகளைப் பற்றியும் நானே விளக்குவேன் என்பதாக நான் என் மேல் பொறுப்பேற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால் நான் பயபக்தியுடன் தேவன் மேல் சார்ந்து, இதனிடத்தில் நான் வருகையில், தேவனே இதை வெளிப்படுத்த வேண்டும் என்று வாஞ்சிக்கிறேன். 9. இச்செய்தியில் உள்ள வரலாற்றுப் பூர்வ சான்றுகள், எனக்குத் தெரிந்த வரை மிகவும் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களின் வரலாற்று நூல்களிலிருந்து எடுத்து கையாளப்பட்டவைகளாகும். இப்பொழுது எனது படிக்கும் அறையில், ஐந்தாறு விளக்கவுரை நூல்கள் உள்ளன. அவையாவன: ஹிஸ்லோப்பின் “இரண்டு பாபிலோன்கள்'' (TwoBabylons) ஃபாக்ஸ் என்பவரின் “ இரத்த சாட்சிகளின் புத்தகம்'' (Bookof the Martyrs) மற்றும் இதர மகத்தான புத்தகங்களாகும். “ நிசாயா ஆலோசனை சங்கத்துக்கு முந்தைய காலம்'' அதைப் பற்றிய நான்கு புத்தகங்கள், ஒவ்வொன்றும் நானூறு பக்கங்கள் கொண்டதாகும். அவைகளில் நாம் நிசாயா ஆலோசனை சங்கம் மற்றும் அனைத்து வரலாற்று உண்மைகளையும் பெறலாம். ஏனெனில் இவ்வொலி நாடாவிலுள்ள செய்திகளை பின்னணியாகக் கொண்டு, ஏழு சபைக் காலங்களைப் பற்றிய ஒரு வியாக்கியானத்தை எழுதித் தயாரித்து, அதை உலகம் முழுவதிலும் நாம் அனுப்பப் போகிறோம். ஏனெனில் நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். நாம் கடைசிக் காலத்தில் இருக்கிறோம். 10. இது கடந்த தேர்தல் வரையிலுங்கூட எனதுள்ளத்தில் உதிக்கவில்லை. அதன் பின்பு தான் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நான் கண்டேன். மேலும் பரிசுத்தாவியானவர் எனக்கு இதைப் பற்றி வெளிப்படுத்த ஆரம்பித்து, இச்செய்தியை மக்கள் மத்தியில் வைத்து அவர்களை எச்சரிக்கச் சொன்னார். இவ்விதமானதொரு சபையில் இச்செய்தியை போதுமான அளவு என்னால் அளிக்க இயலாது. மேலும் நான் அமர்ந்து ஒரு புத்தகத்தை இச்செய்திக்காக எழுதினால்... நான் பிரசங்க பீடத்தில் நிற்கையில், கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவும் பரிசுத்த ஆவியானவரின் ஊக்கு விக்கும் அசைவு (inspiration) எனக்குதவ என் மேல் வருகிறது என்று நான் உணருகிறேன். இப்பொழுது, இச்செய்தியானது ஆவியானவரின் ஊக்குவிக்கும் அசைவுடன் ஒலிநாடாக்களில் பதிவு செய்யப்பட்டு விடுகிறபடியால், அவ்வசைவு, ஒலி நாடாவில் அடங்கியுள்ள இச்செய்தியின் பேரில் ஒரு நூலை நான் எழுத என்னை போதுமான அளவு தகுதிப்படுத்திவிடும். இங்கே பிரசங்கத்தில் கூறுகிறவைகளெல்லாவற்றையும் புத்தகத்தில் நாம் போட முடியாது. எனவே வாஸ்தவமாகவே, எழுதப்படும் புத்தகமானது சற்று நேர்செய்யப்பட்டதாகக் காணப்படும். நான் உரைக்கும் பிரசங்கங்களில், சொன்னவைகளை திரும்பச் சொல்லி விளக்குவதில் நிறைய நேரம் எடுத்துக் கொள்வதுண்டு. ஆனால் எழுதப்படும் புத்தகத்தில் அவையெல்லாம் சரி செய்யப்பட்டு விடும். ஆனாலும் ஒலிநாடாக்களில் உள்ளவைகளில் இருந்து எவ்வளவு அதிகமாக எழுதப்படும் புத்தகத்தில் சேர்க்க முடியுமோ அவ்வளவாக சேர்க்க முயற்சிப்போம். 11. இப்பொழுது ஒவ்வொரு இரவிலும் இக்கட்டிடத்தின் முகப்பில், வாலிபர் ஒலிநாடாக்களையும் புத்தகங்களையும் வைத்திருப்பர். 12. இந்த ஏழு சபைக் காலங்களின் செய்திகளை அல்லது, ஏழு சபைக் காலங்களை, ஒவ்வொன்று வீதம் ஏழு இரவுகளில் தேவனுடைய மகிமைக்காக அளிக்க வேண்டு மென்று நாம் தீர்மானித்துள்ளோம். ஆனால் ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு சபைக் கால செய்தியை கொடுத்துவிட ஒரு வேளை இயலாமற் போகலாம். நாம் ஒவ்வொரு இரவிலும் ஒரு சபைக் காலத்தை எடுத்துக் கொள்ளலாம். அதாவது திங்கள் இரவில் எபேசு சபைக் காலத்தையும், செவ்வாய் இரவில் சிமிர்னாவையும், புதன் இரவில் பெர்கமுவையும், வியாழன் இரவில் தீயத்தீராவையும், வெள்ளி இரவில் சர்தையையும், சனி இரவில் பிலதெல்பியாவையும், ஞாயிறு காலை, ஞாயிறு இரவில், நாம் வாழும் லவோதிக்கேயா சபைக் காலத்தையும் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆதிச் சபையின் வரலாற்றுப் பூர்வ காரியங்களையும், அதன் வரலாற்றையும், அவ்வரலாற்று ஆசிரியர்களைப் பற்றியும், ஒவ்வொரு சபையின் தூதன் யார் என்பதையும், அதனதற்குரிய செய்தியையும் நாம் பார்ப்பதோடு, சபையானது இந்தக் காலம் வரையிலும் எவ்வாறு காலங்கள் தோறும் வளர்ந்து வந்திருக்கிறது என்பதையும் குறித்து நாம் பார்க்கலாம். வேத வாக்கியங்களிலுள்ள முன்னுரைத்தல் ஒவ்வொன்றும் எவ்வாறு மிகச் சரியாக வரலாற்றோடு அமைந் திருக்கிறது என்பதை பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அதைப் பற்றிய நினைவே... அவைகளை நான் படித்த போது நேற்று வரையிலும் என் கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிந்தன. 13. நான் எனது படிக்கும் அறையிலிருந்து வெளியே வந்தபோது என் மனைவியிடம், “இவ்வாறான வகையில் காரியங்கள் இருந்திருக்கும் என்று நான் கனவு கூட காணவில்லை. இது எத்தனை மகத்துவமானதாக இருக்கிறது என்று பார்'' என்று கூறினேன். 14. மேலும் இப்பொழுது, ஒவ்வொரு சபைக்குரிய செய்தியை ஒரே இரவில் நான் அளிக்க இயலாமற் போகலாம். அவ்வாறு ஒவ்வொரு இரவிலும் அந்தந்த சபைக்குரிய செய்தியை பூர்த்தியாக அளிக்க இயலாமற்போனால், அடுத்த நாள் காலை 10 மணிக்கு மீதியை அளிக்கலாம். எனவே, இவ்வாறு இரவில் கொடுத்த செய்தியின் தொடர்ச்சியான மீதமுள்ள செய்தியை அடுத்த நாள் காலையில் கொடுக்கும் போது, வந்து கேட்க விருப்பமுள்ளவர்களுக்காக ஒவ்வொரு இரவிலும் அதற்கான அறிவிப்பு கொடுக்கப்படும். ஏனெனில் நாம் இச்செய்தியை ஒலிநாடாவில் முழுவதும் பதிவு செய்யப் போகிறோம். எனவே, இரவில் கொடுத்த செய்தி முற்றுப் பெறாத போது மீதியை அடுத்த நாள் காலையில் கொடுப்பதற்காக, காலை 10 மணி முதல் பிற்பகல் வரையிலும் ஆராதனை இருக்கும். அப்பொழுது செய்தியை ஒலி நாடாவில் பதிவு செய்து கொள்ளலாம். 15. வேதத்தில் உரைக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களை கருத்தாய் ஊன்றி கற்க நாம் முயன்று கொண்டிருக்கிற படியால், இவ்விசேஷித்த கூட்டங்களின் நாட்களில் நமக்கு சுகமளித்தல் ஆராதனைகள் இருக்காது என்று நாம் அறிவிப்பு செய்து விட்டோம். சமீபத்தில் தான், நமக்கு சுகமளித்தல் ஆராதனை உண்டாயிருந்தது. எனவே, இவ்விசேஷித்த கூட்டங்கள் முடிந்த பிறகு மீண்டுமாக இங்கே சுகமளிக்கும் கூட்டங்களை நாம் வைத்துக் கொள்ளலாம். 16. ஒவ்வொருவருக்கும் நான் இப்பொழுது, நீங்கள் நினைவில் கொண்டிருக்கத்தக்கதாக, ஒன்றை மிகவும் தெளிவாக சொல்லப் போகிறேன். இச்செய்தியானது, அது அளிக்கப்படுகையில், ஒரு வேளை உங்களை வெட்டலாம், உலுக்கலாம், அல்லது பெரிதாக அசைக்கக்கூடும். ஆனால் வசனத்தை பிரசங்கிப்பதைத் தவிர வேறு எதற்கும் நான் பொறுப்பாளி அல்ல. அவ்வளவுதான் வார்த்தையை சரியாக அப்படியே பற்றிக் கொண்டிருப்பதைத் தான் நான் செய்கிறேன். அநேக சமயங்களில் இந்த சபைக் காலங்களில் சம்பவித்தவைகள், யாரோ ஒருவரின் ஸ்தாபனத்தில் நடப்பவைகளுக்கு மாறாக இருக்கக் கூடும். அப்படி இருக்குமானால் அதை கடுமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. வேத வாக்கியங்கள் உரைப்பதென்னவோ அதையும் அதைக் குறித்து எனக்குண்டாயிருக்கும் வெளிப்பாடு இவற்றை அது எடுத்துரைப்பதுவே ஆகும். அதில் நான் தவறாக இருக்கிறேன் என்று நீங்கள் கருதினால், அப்பொழுது அதை எனக்கெதிராக விரோதம் பாராட்டாமல், தேவன் சரியானது எது என்பதை எனக்குக் காண்பிக்க எனக்காக ஜெபியுங்கள், ஏனெனில் நான் சரியாகவே இருக்க விரும்புகிறேன். 17. பிறகு பிறிதொரு விஷயம் என்னவெனில், மக்களுக்கு போதிக்கும் இவ்வாறான கூட்டங்களில் நான் இப்பீடத்திலிருந்து உரைக்கும் வார்த்தைகளுக்கு பரிசுத்த ஆவியானவர் என்னைப் பொறுப்பாளியாக்குவார் என்பதை நான் நன்கு உணர்ந்தேயுள்ளேன். எனவே எவ்வளவு பயபக்தியுடன் நாம் இதை அணுகுகிறோம் என்பதைப் பாருங்கள். 18. இப்பொழுது நம்முடைய.... நான் இச்செய்தியை வேறு எங்காகிலும் இருந்து அளித்திருக்கலாம். ஆனால் இது உபதேசமாக இருப்பதால்தான் நமது சபையில் இதை அளிக்கிறோம். வெளியில் சுவிசேஷ கூட்டங்களில், நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு எண்ணங்களும், பகுத்தறிதலும் உள்ளன. காலங்கள் தோறும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. மேலும் நம் ஒவ்வொருவருக்கும் நமது சொந்த சபைகளும், அவைகள் என்ன போதிக்கின்றனவோ அவைகளை நாம் விசுவாசிப்பவர்களாகவும் இருக்கிறோம். இன்னொருவருடைய சபையில் போய், அவர்கள் வழி வழியாகப் போதிக்கப்பட்டவைகளுக்கு ஒத்துப் போகாத ஒன்றை அவர்கள் மத்தியில் போதிக்க நான் விரும்ப மாட்டேன். ஏனெனில், எனது அறிக்கைகளை தெளிவாக இருக்க செய்யவே நான் முயலுகிறேன். அதாவது, ஒரு கத்தோலிக்கனாக இருந்தால், தனது இரட்சிப்புக்காக கத்தோலிக்க சபையை சார்ந்திருந்தால் அவன் இழந்து போகப்படுவான். ஒருவன் பாப்டிஸ்டாக இருந்தால், பாப்டிஸ்டு சபையை தன் இரட்சிப்புக்காக சார்ந்திருந்தால் அவனும் இழந்து போகப்படுவான். ஒருவன் பெந்தெகொஸ்தே யினனாக இருந்தால், பெந்தெகொஸ்தே சபையை அவன் சார்ந்து கொண்டால், அவனுங்கூட இரட்சிப்பைக் கண்டு கொள்ள மாட்டான். ஆனால்.... எந்த சபையானாலும்.... ஆனால் அந்த தனிநபர் கல்வாரியில் கிறிஸ்துவானவர் செய்து முடித்த கிரியைகளின் பேரில் விசுவாசத்தினால் சார்ந்திருப்பாராயின், அவர் எந்த சபையைச் சார்ந்தவராயினும் எனக்கு அக்கறையில்லை, அந்த மனிதர் இரட்சிக்கப்பட்டிருக்கிறார். ஏனெனில், கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள்...'' (எபே.2:8). 19. சில வேளைகளில், இதை பிரசங்கிக்கையில்... பின்பு நான் எனது சொந்த சிறிய இக்கட்டிடத்தை அநேக ஆண்டுகளுக்கு முன்பாக காங்க்ரீட் ப்ளாக்குகளால் கட்டி ஆரம்பித்ததாகும். இதில் அமர்ந்து நான் சிந்திக்கையில், ஒரு விதத்தில் இது நமக்கு ஒரு பரிசுத்த ஸ்தலமாக இருக்கிறது. இக்கட்டிடத்தில் சரியானதொரு தளம் கூட இல்லாத சமயத்தில், தேவன் முதன் முதலாக சந்திக்க ஆரம்பித்தார். எனவே, ஒரு விதத்தில் இக்கட்டிட அமைப்பை மாற்றி அமைப்பதை நாம் விரும்பவில்லை. ஆனால், இக்கட்டிட மானது மிகவும் பழமையானதாக ஆகிவிட்டது. எனவே, ஒரு புதிய சபைக் கட்டிடம் இவ்விடத்தில் கட்டி எழுப்ப நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். 20. நான் வெளியில் ஊழியக்களங்களில் சகோதரருக்கு மனம் புண்படாமலிருக்கவும், உபதேசங்களைக் கொடுக்காமலும் செய்வேன். ஆனால் வெளி ஊழியங்களிலிருந்து திரும்பி இந்த எனது சபையில் வந்து இந்த பிரசங்க பீடத்தில் நான் நிற்கையில், எனது சொந்த கருத்தை வெளியிட எனக்கு உரிமை உள்ளது. எனவே, “ நான் சிறிது வித்தியாசமாக போதிக்கப்பட்டிருக்கிறேன்'' என்று நீங்கள் கூறினால்... நான் கூறுவேன்... இங்கே வர விரும்பும் எவரையும் வாருங்கள் என்று நாம் வரவேற்கிறோம். வேறு யாரும் இக்கூட்டங்களை நமக்காக ஏற்படுத்தித் தரவில்லை. இங்கே நமது கூடாரத்தில் இது பிரசங்கிக்கப்படுகிறது. வர விரும்புவோர் எவரையும் வாரீர் என்று வரவேற்கிறோம். வாருங்கள். ஒவ்வொரு கூட்டங்களுக்கு வரும்போதும், உங்கள் வேதாகமத்தையும், பென்சிலையும், தாளையும் கொண்டு வாருங்கள். 21. இப்பொழுது, இங்கே நான் மேற்கோள் காட்ட விரும்பும் வியாக்கியானப் புத்தகங்களையும், மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் இங்கே கொண்டு வர இயலாது. எனவே, நான் இங்குள்ள இத்தாளில், அவ்வரலாற்று நூல்களிலிருந்தும், வியாக்கியானப் புத்தகங்களிலிருந்தும் சிறு குறிப்புகளை வரைந்துள்ளேன். அதனால், இப்புத்தகங்களையே இங்கு கொண்டு வந்து அதின் பக்கங்களை திருப்பி வாசிப்பதற்குப் பதிலாக இச்சிறு குறிப்புகளிலிருந்து நான் தேவையான போது உங்களுக்கு வாசித்துக் காட்டலாம். ஆயினும், வேத வாக்கியங்கள் பற்றிய இடம் வரும்போது, அதற்காக நாம் நமது வேதாகமத்தையே உபயோகித்துக் கொள்வோம். வியாக்கியானப் புத்தகம், மற்றும் வரலாறு, வரலாற்று ஆசிரியன் யார் என்பதைப் பற்றி தேவையான போது நான் விளக்கிக் கூறுவேன். பிறகு, நாம் எழுத நினைத்துள்ள அப்புத்தகத்தைப் பற்றியோவெனில், எல்லாம் சரியாக செய்யப்படத்தக்கதாக, நாம் அவை யாவையும் தட்டச்சு செய்து கொள்வோம். 22. சீக்கிரமாய் கூட்டங்களை தொடங்கி சீக்கிரமாய் முடித்து மக்களை அனுப்பிவிட, எங்களால் ஆனதனைத்தையும் செய்வோம். இக்கூட்டங்கள் ஞாயிறு தொடங்கி, அடுத்த ஞாயிறு முடிய, மொத்தம் எட்டு நாட்கள் நடைபெறப்போகிறது. 23. இக்காலையில் நான் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தின் முதலாம் அதிகாரத்தை ஆரம்பிக்கப் போகிறேன். இவ்வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம் மூன்று பாகங்களாக அமைந்துள்ளது. இந்த எட்டு நாட்கள் கூட்டங்களில் முதல் மூன்று அதிகாரங்களைப் பற்றி நாம் பார்க்கப் போகிறோம். ஆனால் ஒரு சபைக் காலத்தைப் பற்றிய செய்தியோ நமக்கு ஒரு மாத காலம் பிடிக்கும். ஆனால் நாமோ, அவற்றில் உள்ள பிரதானமான விஷயங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம். பிறகு, இச்செய்தி புத்தகமாக எழுதித் தயாரிக்கப்பட்டு வரும்போது அதில் இன்னும் விரிவாக கூறப் பட்டிருக்கும் (தீர்க்கதரிசி “ ஏழு சபை காலங்களின் வியாக்கியானம்'' என்ற புத்தகத்தைப் பற்றி கூறுகிறார் - மொழி பெயர்ப்பாளர்). 24. இப்பொழுது, வெளிப்படுத்தின விசேஷத்தின் முதல் மூன்று அதிகாரங்கள் சபையைப் பற்றியே கூறுகின்றன. பின்பு, சபையானது மறைந்து விடுகிறது. அதை கடைசி வேளை வரையிலும் காண முடிவதில்லை. வெளிப்படுத்தல் 1 முதல் 3 முடிய சபையைப் பற்றியது. வெளிப்படுத்தின விசேஷம் 4 முதல் 19 முடிய இஸ்ரவேல் என்ற ஜாதி முழுமையைப் பற்றியதாகும். பிறகு 19ம் அதிகாரம் முதல் 22 முடிய இரண்டையும் பற்றி பார்க்கிறோம். அதன் பிறகு வாதைகள் மற்றும் எச்சரிக்கைகள் முடிவாகப் பார்க்கிறோம். மூன்று பாகங்களாக அமைந்துள்ளதைப் பாருங்கள். சபையைப் பற்றியும், நாம் வாழும் சபைக் காலத்தையும் பற்றி உரைக்கிற முதல் மூன்று அதிகாரங்களையும் நாம் எடுத்துக் கொள்கிறோம். 25. முதலில் இது ஒரு விதத்தில் ஏதோ வறட்சியாக காணப் படலாம். ஏனெனில், கடந்த காலத்திற்குள் நாம் திரும்பிச் சென்று ஒரு அஸ்திபாரத்தை நாம் அமைத்துக் கொள்ளுதல் அவசியமா யிருக்கிறது. மக்கள் இச்செய்தியை கண்டு கொள்ளத்தக்கதான முறையில் அவர்கள் மத்தியில் அதை அளிப்பதற்காக வேண்டி, பரிசுத்த ஆவியானவரின் அசைவைப் பெற்றுக் கொள்ளவும், நான் வேதத்தைப் படித்தும், ஜெபிக்கவும் செய்துள்ளேன். இச் செய்தியை நீங்கள் கண்டு கொண்டீர்களாயின், அப்பொழுது, உங்கள் மனக்கண்கள் பிரகாசிக்கப்பட்டு, கிறிஸ்துவண்டை நெருங்கி வர முடியும். ஏனெனில் நாம் கடைசிக் காலத்தில் இருக்கிறோம். 26. வரலாற்று நூல்களை நான் படித்துக் கொண்டிருக்கையில், சபையானது எவ்வாறு துவங்கியது, எவ்வாறு பின்னுக்கு தள்ளப்பட்டது, பின்பு என்ன நடந்தது, எவ்வாறு அந்த சிறிய தேவனுடைய வித்தானது அந்த ஒவ்வொரு காலங்கள் தோறும் கடந்து வந்து ஒரு கட்டத்தில் சற்று ஏறக்குறைய அது மறைந்தது போல் காணப்படுகிறது; ஆகிய இவ்விஷயங்களைப் பார்க்க அது அத்துணை பிரமிக்கத்தக்கதாக உள்ளது. 27. நாளை இரவு கரும்பலகையைக் கொண்டு வந்து அதில் எழுதி விளக்கி போதிக்க விரும்புகிறேன். ஞாயிறு பள்ளி ஆசிரியர் வசம் ஒரு கரும்பலகை உள்ளது என்று நம்புகிறேன். நான் அதை பின் பக்கத்தில் பார்க்கிறேன். கட்டிட காப்போனை அக்கரும் பலகையை இங்கு கொண்டு வந்து முன்னால் வைத்திடுமாறு செய்யப் போகிறேன். அதில் நான் விளக்க வேண்டியவைகளை வரைந்தால், நீங்கள் அதைப் பற்றி சரியாக புரிந்து கொண்டு, அவைகளை நீங்களும் உங்கள் தாள்களில் வரைந்து கொண்டு அதை மிகவும் நன்றாக புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். 28. ஆனால், துவங்கும் முன்னர், இதை நான் கூற விரும்புகிறேன். சபைக் காலத்தின் துவக்கத்தைப் பார்க்கவும், அப்போஸ்தலர்கள் உபதேசம் எவ்வாறு இருந்தது, வேதத்தின் அடிப்படை எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றி அறியலாம். பின்பு, இரண்டாவது கட்டத்தில் அப்போஸ்தலர்களையும், சபையையும், அது எவ்வாறு இறுதியில் மங்கிப் போனது என்பதை (உண்மையான சரியான உபதேசம்) அறியலாம். மூன்றாவது சுற்றில், சபையானது எவ்வாறு இன்னும் விலகிச் சென்றது, நான்காவது சுற்றில், சபையானது, வெதுவெதுப்பானதாக அது முடிவாக மங்கிப் போனது எவ்வாறு என்பதையும் பார்க்கலாம். சபையானது இறுதியில் ஒரு வெதுவெதுப்பான சபையைக் கொண்டு வந்தது. 29. அதன் பிறகு ஆவியால் நிரப்பப்பட்ட சபையானது... (இதை நான் ஒவ்வொரு மனிதனின் தெய்வ நம்பிக்கைக்குமுரிய தேவ மரியாதையுடன் கூறுகிறேன்) ஆரம்ப முதல் இக்காலம் வரை, உண்மையான, அந்த சபையானது, பெந்தெகொஸ்தே சபையாகவே இருந்து வந்துள்ளது. அது உண்மைதான். தேவன் இந்த சபையை காத்தே வந்திருக்கிறார். 30. “ பயப்படாதே, சிறு மந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்'' என்று இயேசு கூறினதைப் பற்றி நான் அடிக்கடி வியந்ததுண்டு. ஏன் இயேசு இவ்வாறு கூறினார் என்பதைப் பற்றி நான் வியந்ததுண்டு. ஆனால் இப்பொழுது அதை நான் புரிந்து கொண்டேன். 31. கடந்த வாரத்தில், லூயிஸியானாவிலுள்ள ஷ்ரீவ் போர்ட்டில் என் வாழ்விலேயே கண்டிராத மகத்தான ஆவிக்குரிய கூட்டம் நமக்கு உண்டாயிருந்தது. 32. எனக்கு கிடைத்த இரண்டு நாட்கள் விடுமுறையின் போது, நான் நமது சபையின் உதவிக்காரர்களில் ஒருவரான அல்லது டிரஸ்ட்டிகளில் ஒருவராகிய சகோதரன் உட் அவர்களுடன் கென்டக்கி ஊருக்கு வேட்டைக்காக சென்றிருந்தேன். நாங்கள் காடுகளுக்குள் சென்றோம். 33. நான் முதல் அணிலைச் சுட்டேன். யாரோ ஒருவர் நாய் களுடன் வந்ததால், அணில்கள் மரப்பொந்துகளுக்குள் ஓடி ஒளிந்து கொண்டதால், அவைகள் மீண்டும் பொந்துகளுக்குள் இருந்து வெளியே வரும்வரை காத்திருப்பேன் என்று கூறினேன். அப்பொழுது கடுங்குளிரும், உறைபனியுமாக இருந்தது, அதினால் தான் காதுகள் எரிச்சலெடுத்தன. சிறு பள்ளத்தாக்குகளின் வழியாக தீவிரமான குளிர்காற்றுகள் வீசுவதை நீங்கள் அறிவீர்கள். “ அணில்கள் மீண்டும் வெளியே வரும் வரை காத்திருப்பேன்'' என்றேன். 34. இவ்வாறு நான் அங்கு எண்ணிக் கொண்டு சற்று உட்காரு வதற்குள், பரிசுத்த ஆவியானவர், என்னிடம், “ எழுந்து, வேட்டைக்காரன் குகை (Sportman's Hollow) என நீ குறிப்பிடும் இடத்திற்கு போ, நான் அங்கே உன்னுடன் பேசுவேன்'' என்றார். 35. “வேட்டைக்காரன் குகை'' என நான் பெயரிட்டுள்ள அவ்விடத்திற்கு ஆவியானவர் கூறியபடி எழுந்து சென்றேன். நான் இவ்வாறு அக்குகைக்கு பெயரிட்டதின் காரணம் என்னவெனில், நான் இருந்த இடம் இன்ன இடம் என்று குறிப்பிட்டு அறிந்து கொள்ளும் படியாகத்தான். “ வேட்டைக்காரன் குகை'' என்பதின் காரணம் என்னவெனில், அவைகள் அங்கே... நான் அந்த இடத்திற்குச் சென்றபோது, அங்கே பதினாறு அணில்கள் ஒரு மரத்தின் மேல் இருக்கக் கண்டேன். அவைகளில் எனக்குத் தேவையான வைகளை மட்டுமே சுட்டுவிட்டு மீதமுள்ளவைகளை சுடாமல் அவைகள் தப்பித்துப் போக விட்டு விட்டேன். (வேட்டை என்பது இதுதான்), எனவே தான் அவ்விடத்தை “ வேட்டைக் காரன் குகை'' என்று அழைத்தேன். 36. அவ்விடத்தைப் பற்றி குறிப்பிடுகையில், கர்த்தர், “ நீ வேட்டைக்காரன் குகை என்று அழைப்பாயே'' என்று தான் கூறினார். அவர் அவ்வாறு அவ்விடத்திற்கு பெயரிடவில்லை, நான் தான் அவ்வாறு அவ்விடத்தை அந்தப் பெயர் சொல்லி அழைத்தேன். 37. பின்பு, நான் அந்த குகையின் வாயில் வரை சென்று, அங்குள்ள ஓர் "ஓக்' மரத்தின் கீழ் அமர்ந்தேன். அங்கே அரை மணி நேரம் காத்திருந்தேன், ஒன்றும் சம்பவிக்கவில்லை. நான் என் உடலை நெடுஞ்சாண் கிடையாக தரையில் கிடத்தி கைகளை நீட்டிக் கொண்டேன். அப்பொழுது ஆவியானவர் என்னிடம் பேசினார். 38. அவர் பேசிய போது, இன்று காலையில் இங்கு நாம் படிக்கப் போகிற இவ்வேதவாக்கியங்களை எனக்கு வெளிப்படுத்தித் தந்தார். என் வாழ்நாள் முழுவதிலும் நான் கண்டிராத வண்ணம் அது இருந்தது. 39. அதன் பிறகு, நான் லூயிஸியானாவிலுள்ள ஷ்ரீவ்போர்ட் என்ற இடத்திற்கு சென்றேன். அங்கே வரம் பெற்ற ஒரு பெண்மணி உள்ளார்கள். அவர்கள் பெயர் திருமதி. ஷ்ரேடர் என்பதாகும். 40. அநேக ஆண்டுகளுக்கு முன்பாக, கர்த்தருடைய தூதன் என்னை அந்த நதிக்கரையில் முதன்முதலாக சந்தித்து, அவ்வொளியில் தோன்றிய பொழுது, அவர் பேசிய அதே வார்த்தைகளை, பதினொரு ஆண்டுகளுக்கு பின்பு, ஒரு கூட்டம் நடக்கும் இடத்திற்கு நான் நுழைந்தபோது, அந்த சிறிய பெண்மணி எழும்பி, அந்நிய பாஷையில் பேசி, வியாக்கியானித்து, தூதன் கூறிய அதே விஷயங்களை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே உரைத்தாள். 41. மேற்சொன்ன அதே பெண்மணி, ஷ்ரீவ் போர்டிலுள்ள லைஃப் கூடாரத்திற்குள்... நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு நான் சென்றபோது, பரிசுத்த ஆவியானவர் தன் மேல் வரப்பெற்று, மலையின் மேல் ஆண்டவர் கூறிய அதே வார்த்தைகளை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே ஆவியினால் நிறைந்து பேசினாள். பிறகு ஆவியானவர், அசைவாட ஆரம்பித்து, வியாக்கியானம் செய்து, வெளிப்படுத்துதலினால் நடைபெறப் போகிறவைகளை தீர்க்கதரிசனத்தினால் முன்னுரைத்தார். அவ்வாறு முன்னுரைத்தவைகள், அடுத்து நாளிரவில் நடைபெறும் கூட்டத்தில் சம்பவிக்கப் போகிறவைகளைப் பற்றியதாக இருந்தது. ஒரு தடவை கூட அது நிறைவேறாமல் போனதில்லை. 42. இச்சம்பவத்திற்கு முன்பு, நடைபெற்ற ஒரு கூட்டத்தில், ஓர் இளம் பெண்மணி, செய்வதறியாது எழுந்து நின்றாள். கூட்டத்தினர் நடுவில் அவள் நின்று கொண்டிருந்தாள். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவள் மேல் இறங்கி, அதனால் அவள் அந்நிய பாஷையில் பேச ஆரம்பித்தாள். அப்பெண்மணி, ஷ்ரீவ்போர்ட்டிலுள்ள முதல் பாப்டிஸ்டு சபையைச் சேர்ந்தவள். தான் என்ன செய்தோம் என்பதை அறியாமல் திகைத்தவளாக நின்று கொண்டிருந்தாள். அவள் அவ்வாறு அந்நிய பாஷையில் தன்னையறியாமல் பேசி முடித்த பிறகு, அவள் வேறெதுவும் பேசும் முன்பாக, பரிசுத்த ஆவியானவர் அவள் அந்நிய பாஷையில் பேசியவைகளின் அர்த்தத்தை, பாஷையை வியாக்கியானித்துத் தந்தார். “ கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இன்னும் மூன்று மாதத்திற்குள், இந்தக் கூடாரத்தில், மோசேயின் ஆவியும், எலியாவின் ஆவியும், கிறிஸ்துவின் ஆவியும், ஊழியத்தை நிறைவேற்றும்'' என்பது தான் அப்பெண்மணி அந்நிய பாஷையில் பேசியவைகளின் வியாக்கியானமாயிருந்தது. உரைக்கப்பட்ட அவ்வார்த்தை களின்படியே முழுவதும் நிறைவேறிற்று. 43. ஸிஸிப்பியிலுள்ள மெரிடியன் என்ற ஊரில் ஒரு பாப்டிஸ்டு மனிதர், தனது குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எதையோ எடுக்க வேண்டி, அக்குளிர் சாதனப் பெட்டியின் மேல் கை வைத்தபோது, தேவ ஆவியானவர் அவர் மேல்வந்து, அவர் தன்னையறியாமல் அந்நிய பாஷையில் பேசினார். தான் என்ன செய்கிறோம் என்பதை அவர் அறிந்து கொள்ளும் முன்னர், பரிசுத்த ஆவியானவர் அவரிடம், “ லூயிஸியானாவிலுள்ள ஷ்ரீவ் போர்ட்டுக்கு போ, என் ஊழியக்காரன் நீ என்ன செய்ய வேண்டு மென்பதை உனக்கு உரைப்பான்'' என்று கூறினார். 44. அவர் இங்கே வந்து, “ இது என்னவென்று நான் புரிந்து கொள்ள முடியவில்லை. இதுபோல் இதற்கு முன் சம்பவித்ததேயில்லை'' என்று கூறினார். 45. ஓ, நாம் கர்த்தரின் வருகைக்கு சமீபமாக கடைசிக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 46. பெந்தெகொஸ்தே அனுபவத்தையுடைய அச்சிறிய சபை எப்பொழுதும் சிறுபான்மையாகவே இருந்து வந்துள்ளது. ஸ்தாபன ரீதியிலான பெந்தெகொஸ்தே சபையைக் குறித்து நான் குறிப்பிடவில்லை. அதை நான் குறிப்பிடவில்லை. ஆனால் பெந்தெகொஸ்தேயின் அனுபவத்தைப் பெற்ற மக்களைப் பற்றியே நான் குறிப்பிடுகிறேன். பெந்தெகொஸ்தே என்பது ஒரு ஸ்தாபனமல்ல. அது விரும்பும் எவருக்கும் கிடைக்கும் ஓர் உன்னத அனுபவமாகும். அது, கத்தோலிக்கனோ, அல்லது யூதனோ, அல்லது பிராடெஸ்டெண்டு, மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு மற்றும் இன்ன பிறவற்றைச் சேர்ந்த எவனாகிலும் எவன் அதைப் பெற்றுக் கொள்ள விரும்பியுள்ளானோ, அவனை வா என்று அழைப்பதாக உள்ளது. அவ்வனுபவம் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் உரியது. தேவன் ஒருபோதும் ஒரு மத ஸ்தாபனத்தோடு இடைபடுவதில்லை, அல்லது புறஜாதியாரோடு ஓர் இனம் என்ற ரீதியில் ஒட்டு மொத்தமாகவும் அவர்களோடு கிரியை புரிவதில்லை. அவர் தனிப்பட்ட ஒவ்வொரு நபருடனும் இடைபடுகிறார். “ எவன் வாஞ்சையாயிருக்கிறானோ'', அவன் வெள்ளையனாக இருக்கலாம், அல்லது கருப்பனாகவோ, அல்லது மஞ்சள் நிறத்தவனாகவோ, அல்லது பழுப்பு நிறத்தவனாகவோ இருக்கலாம். மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, ப்ராடெஸ்டெண்ட், கத்தோலிக்கர் இவர்களில் எவனாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவன் எதுவாக இருந்தாலும் சரி, “ எவன் விருப்பமாயுள்ளானோ அவன் வரட்டும்'' என்றே அழைக்கிறார். ஆண்டவர் இவ்வாறு ஏற்படுத்தியமைக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். 47. ஒரு தடவை ஒரு மனிதர் கூறிய வண்ணமாக, “ வில்லியம் பிரன்ஹாம் வரட்டும்'' என்று என் பெயரை சொல்லி அழைக்கப்படுவதற்குப் பதிலாக “ விருப்பமுள்ளவன் எவனோ'' என்பதாகவே அவரது அழைப்பு உள்ளது. அவ்வாறு உரைக்கப் பட்டதால், அது என்னையும் குறிக்கிறது என்று நான் அறிவேன். ஏனெனில் வில்லியம் பிரன்ஹாம் வரட்டும்'' என்று ஆண்டவர் அழைத்தால், மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பல வில்லியம் பிரன்ஹாம்கள் இருக்கக் கூடும். 48. எனவே அவ்வண்ணமாகவே நாமும் கருதலாம். “ எவன் விருப்பமாயுள்ளானோ அவன் வரட்டும்.'' 49. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் வந்துள்ள அநேக மக்கள் இங்கு விடுதிகளிலும் ஓட்டல்களிலும் என்னைச் சந்திப்பதற்காக நேர்காணல் வேண்டி காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை நான் அறிவேன். அயர்லாந்து மற்றும் வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து வந்து இந்த நேர்காணலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்காக என் நேரத்தை ஒதுக்க தற்போது இயலாது உள்ளது. நான் இந்த மகத்தான செய்திக்கே எனது நேரத்தையெல்லாம் ஒதுக்க விரும்புகிறேன். அதை நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்கள். 50. நான் எனது ஊழியப் பயணங்களிலிருந்து திரும்பி வருகையில், இந்த நேர்காணல்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறபடியால், யாருக்காவது ஊழியம் செய்ய வேண்டி நான் இங்கு திரும்பி வருவது வழக்கம். ஆனால் இப்பொழுதோ, இம்மகத்தான செய்தி பிரசங்கிக்கப் படுவதற்காக, அவர்களை போக விட வேண்டியதுதான். 51. இப்புத்தகத்திலிருந்து பிரசங்கிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக ஒரு காரியத்தை கூற நான் விரும்புகிறேன். ஆதியில் சபையானது பெந்தெகொஸ்தேயாக இருந்தது. அந்த பெந்தெகொஸ்தே அனு பவத்தை பெற்ற சபையானது பரிசுத்த ஆவியின் வல்லமையால் கிரியை செய்து, அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை எழுதிற்று. இரண்டாவது கட்டத்தில் (அல்லது சுற்றில்) சபையானது நலிவடைய ஆரம்பித்து பெலனற்ற வெறும் சம்பிரதாய ரீதியிலானதாக ஆரம்பித்தது. இரண்டாவது சபைக் காலமானது பெலனற்ற சம்பிரதாயங்களைப் பின்பற்றக் கூடியதாக மாறி விட்டது. ஆயினும், அச்சிறிய தேவனுடைய வித்தானது, பெந்தெகொஸ்தே அனுபவத்தை இழக்காமல் ஆவிக்குள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. அதன்பிறகு, சபையானது இருளின் காலங்களுக்குள் பிரவேசித்தது. அவ்விருள் காலம் உபத்திரவம் நிறைந் ததாக சுமார் 1400 ஆண்டுகளுக்கு நீடித்தது. அப்படிப்பட்ட இருள் காலத்திலும் கூட அந்த பெந்தெகொஸ்தே அனுபவத்துடன் கூடிய தேவ வித்தானது தொடர்ந்து ஜீவித்து வந்தது. அவ்வித கொடிய காலத்தினூடே எவ்வாறு அவ்வித்து பிழைத்து இருந்தது என்று என்னை கேட்டு விடாதீர்கள். தேவனுடைய கரம்தான் அவ்வாறு அவ்வித்து பிழைத்திருக்கச் செய்தது. அதுதான் அவ்வாறு செய்திருக்க வேண்டும். 52. ஏனெனில், அவர்களை கம்பங்களில் கட்டிப் போட்டார்கள். கூர்மையான அடி மரங்களில் அவர்களைத் தூக்கிப் போட்டு, அவர்கள் கால்களில் கூர்மையான ஆப்புகளை கடாவி, அவர்களின் பின்புறமாக இருந்து மிருகம் (நாய்கள்) அவர்களைக் கடித்திழுத்து அவர்களுடைய குடல்களை வெளியே இழுத்து, அவர்கள் மரிக்கு முன்பாகவே, அவர்களை தின்று விடும்படி செய்தனர். பெண்களின் வலது மார்பகத்தை அறுத்து, உயிர் பிரியும் வரை அவர்களை இரத்தம் வடியும்படி நிற்க வைத்தார்கள். கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து, சிசுக்களை வெளியே எடுத்து அவற்றை அவர்கள் கண்கள் முன்பாகவே காட்டுப் பன்றிகளுக்கு இரையாக கொடுத்தார்கள். அப்படிச் செய்வதுவே கிறிஸ்தவமாக கருதப்பட்டது. ஆனால் வேதமோ, இயேசு கூறினார், “ உங்களைக் கொலை செய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டு செய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்'' பார்த்தீர்களா? 53. இவ்வாறு அக்காரியமானது ஊர்ந்து அடுத்த சபைக் காலத்திற்கும் வந்தது. பின்பு இறுதியாக அது வெளியே வந்தது. அதன் பிறகு, சபையானது சீர்திருத்தக் காலத்திற்குள் வந்து, அதன் பின்பு, மேலும் மேலும் ஆவியானவரை விட்டு வழுவிப் போய்க் கொண்டே இருந்து, அது இக்கடைசிக் காலத்திலும் வந்து, இப்பொழுது, அது மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கும் கட்டத்திற்கு ஆயத்தமாக தன்னை ஒருமுகப்படுத்திக் கொண்டுள் ளது. 54. ஆனால் இயேசு வரும் வரையிலும் அந்த மகத்தான ஆவியானவர் அவரது ஜனங்களின் உள்ளங்களில் ஜீவித்துக் கொண்டேயிருப்பார். அது அவ்வாறுதான் இருக்க வேண்டும். 55. காரியமானது அவ்வாறே உள்ளது என்பதை சரித்திரம் மற்றும் அனைத்துக் காரியங்களிலிருந்தும் உங்களுக்கு நிரூபிக்க முடியும். வரலாறு என்ன கூறுகிறது என்பதையும், வேதம் என்ன கூறுகிறது என்பதையும் ஒரு சேர எடுத்துப் படித்துப் பாருங்கள், அப்பொழுது அவைகள் எவ்வளவு சரியாக பொருந்துகிறது என் பதைக் காண்பீர்கள். 56. ஓ! இதை வெறும் ஒரு சொற்பொழிவாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நாம் பயபக்தியுடன் பரிசுத்த ஆவியானவர் அளிக்கும் எச்சரிக்கைகளை எடுத்துக்கொண்டு, இரவும் பகலும் ஜெபிப்போமாக. ஜெபிக்கிறதிலிருந்து எந்தவொன்றும் உங்களை தடை செய்ய வேண்டாம். 57. நாம் இவைகளை ஆராயும் போது, அந்த மகத்தான தேவ மனிதர்களின் வாழ்க்கைகளைத் தோண்டிப் பார்க்கையில், அவர்கள் எவ்வாறு தியாகம் செய்தார்கள் என்பதை காணலாம். அப்பொழுது நீங்கள் எவ்வாறு ஒன்றுமே செய்யவில்லை என்பதை உணருவீர்கள். சில சமயங்களில் இதைக் குறித்து நான் சிந்திக்கையில், நான் என்னைக் குறித்து, நமக்கு எப்படி எல்லாம் சுலபமாக உள்ளது, அவர்களுக்கோ எப்படி எல்லாம் மிகவும் கடினமாக இருந்தது என்று எண்ணி வெட்கப்படுவதுண்டு. எபிரேயர் 11ம் அதிகாரத்தில் பவுல், “ ...செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக் கொண்டு திரிந்து, குறைவையும், உபத்திரவத்தையும் துன்பத்தையும் அனுபவித்தார்கள்'' என்று கூறினான். அவர்களுடைய சாட்சியை விட நமது சாட்சி எந்த விதத்தில் மிஞ்சி நிற்கப் போகிறது? நமக்கோ எல்லாம் அருமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். 58. இந்த மகத்தான புத்தகத்தைத் திறக்கும் முன்பு, மரியாதையினிமித்தம் நாம், எழுந்து நிற்க இயன்றவர்கள் யாவரும் சற்று நேரம் ஜெபத்திற்காக எழுந்து நிற்போமாக. இப்பொழுது, உங்கள் இருதயத்தில் உத்தமத்துடன், தேவனை நோக்கி ஜெபத்தை ஏறெடுங்கள். 59. தேவனாகிய கர்த்தாவே, வானங்களையும், பூமியையும் உண்டாக்கினவரே. நித்திய ஜீவனின் ஊற்றே, நன்மையும் பரிபூரணமான எல்லா ஈவுகளையும் அளிப்பவரே, உமக்கெதிராகவும், எங்கள் உடன் சகோதரருக்குள்ளே ஒருவருக்கொருவர் எதிராகவும் நாங்கள் செய்துள்ள பாவங்களையும், மீறுதல்களையும், வேற்றுமை களையும் எங்களுக்கு மன்னித்தருளும். 60. இவ்விதமாக நாங்கள் கூடி வந்திருத்தலான இவ்வேளையானது எங்களுடைய ஆத்துமாக்கள் பக்தி விருத்தியடைவதற்காக மட்டுமல்ல, மற்றவர்களுக்கு நாங்கள் சென்று இவற்றை கூறுவதற் கேதுவாக, எங்கள் இருதயங்களை அந்த விதத்தில் பிரகாசிப்பித்து, உத்வேகமளித்தருளும். கிறிஸ்துவின் முழு சரீரத்தோடு எங்களை ஒருங்கிணைத்துக் கொள்வதற்காக, எங்களை மறுபிரதிஷ்டை செய்து கொள்ளத்தக்கதாக ஒரு வேளையாக இது அமையட்டும். மேலும் அது எங்களை எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக ஆயத்தம் உள்ளவர்களாக ஆக்கட்டும். 61. பிதாவாகிய தேவனே, எனது சொந்தக் கருத்துக்களின் படியல்ல, உம்முடைய ஊழியக்காரனாகிய நானும், மற்றுமுள்ள ஏனைய தேவ ஊழியக்காரர்களாகிய நாங்கள் அனைவரும், இந்த மகத்தான வேலைக்காக போதுமானவர்கள் அல்ல என்று அறிந்திருக்கிறோம். கடந்த காலங்களில் எவ்வளவு மகத்தான தேவ மனிதர்கள் தோன்றி மறைந்தார்கள். அவர்கள் இந்த மகத்தான வார்த்தையை வெளிப்படுத்தவும், வெளிப்படுத்தின விசேஷத்தை வியாக்கியானிக்கவும் முயன்றார்கள் என்பதை அறிகிறோம். அதன் பிறகு, நாங்கள் அவர்களை விட எத்துணை அதிகமாக தகுதிக் குறைவானவர்கள் என்பதையும் உணருகிறோம். ஆனால் நீரே எங்களுடைய நிறைவாக இருக்கிறீர். 62. பரம பிதாவே, நான் வேண்டுகிறேன், நீர் இவ்வேளையில் விசேஷித்ததொன்றை செய்வீர் எனவும், ஒவ்வொரு இருதயத்திலும் பரிசுத்த ஆவியானவர் முதன்மை வகித்து சிறப்பான இடம் பெற்று, பேசுகிற உதடுகளை நீர் விருத்தசேதனம் செய்யவும் கேட்கிற செவிகளை விருத்தசேதனம் செய்யவும் வேண்டுகிறேன். இவை யாவும் முற்றுப் பெறுகையில், அதை நாங்கள் உமக்கே அர்ப்பணம் செய்கிறோம். இக்கூடாரத்தை விட்டு நாங்கள் புறப்பட்டுச் செல்லுகையில், “ அங்கே நாம் சென்றது நமக்கு நலமாயிருந்தது, பரிசுத்த ஆவியானவர் நாம் அங்கே அமர்ந்திருக்கையில் நம்மோடு பேசினார்; இப்பொழுது சாயங்கால வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கையில் நாம் நம்மால் இயன்ற அளவு யாவற்றையும் அவருக்காக செய்திட தீர்மானித்துள்ளோம்'' எனக் கூறி கொண்டே கடந்து செல்ல அனுக்கிரகித்தருளும், கர்த்தாவே. 63. இவ்வாராதனையின் போது, ஆண்களும் பெண்களும் புதிதான ஒரு பிடிப்பைப் பெறுவார்களாக. அந்நிய பாஷைகளை பேசுகிறவர்களையும், அவற்றை வியாக்கியானிக்கிறவர் களையும் எழுப்பும். தீர்க்கதரிசன வரங்களை அளித்தருளும். சபையானது பக்தி விருத்தியடையும்படி பிரசங்கிகளையும், போதகர்களையும், சுவிசேஷகர்களையும் எழுப்பும். தூரப் பிரதேசங்களிலெல்லாம் மகிமையான இச்சுவிசேஷத்தினைக் கொண்டு செல்லத்தக்கதாக மிஷனரிகளை எழுப்பும். இந்த வார்த்தை எங்கெல்லாம் செல்கிறதோ, அது அங்கே நல்ல நிலத்தில் விழுந்து நூறத்தனையாக பலன்களைக் கொண்டு வரட்டும். ஏனெனில் நாங்கள் காலத்தின் முடிவில் நிற்கிறோம். முடிவு நெருங்கிவிட்டது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். 64. இவைகளை எங்களுக்கு அளித்தருளும், பிதாவே. எல்லா வற்றுக்கும் மேலாக, கர்த்தாவே, இவ்வேளையில், தேவையுள்ள எனக்கு உதவியருளும். இவ்வாராதனைகளுக்காக நான் என்னையே உம்மிடம் ஒப்படைக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். 65. (ஒரு சகோதரி அந்நிய பாஷையில் பேசுகிறார்கள். ஒரு சகோதரன் அதற்கு வியாக்கியானம் செய்கிறார் - ஆசி) 66. வல்லமையுள்ள தேவனே, இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியவரே, உம்முடைய ஆவியானவர் எமது நடுவில் வாசம் பண்ணுகிறார் என்பதை நாங்கள் அறிந்து அதினால் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர் எப்பொழுதும் உண்மையுள்ள வராயிருக்கிறார். ஒருபோதும் பொய்யுரையாதவர். உம்முடைய மகிமைக்காக நாங்கள் உமது வார்த்தையை வாசிக்கையில், உம்முடைய வார்த்தையை இன்னும் உறுதிப்படுத்தும், பிதாவே. “ மகத்தானதொன்று வரப்போகிறது, அதற்காக ஆயத்தப்பட்டு, தயாராயிருங்கள்'' என்று நீர் கூறினீரே, அதன்படி, ஒவ்வொரு இருதயமும் இருக்கட்டும். மக்கள் தாங்கள் இப்பொழுது செய்து கொண்டு வருகிற தவறான காரியங்களிலிருந்து திரும்பி, உண்மையான பாதைக்குத் திரும்பும்படி, அவர்கள் இப்பொழுது தங்களுக்குரிய கடைசி எச்சரிப்பை பெறுவதாக இவ்வேளை இருக்கக்கூடும். பரிசுத்த தேவனே, உம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் உமக்கு நன்றி செலுத்துகிறோம், ஆமென். 67. வெளிப்படுத்தின விசேஷம் 1ம் அதிகாரத்திற்கு இப் பொழுது நாம் திருப்புவோம். இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதிகாரத்தில் ஒன்று முதல் மூன்று முடிய உள்ள வசனங்களை வாசிக்க விரும்புகிறேன். “ சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும் பொருட்டு, தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். இவன் தேவனுடைய வசனத்தைக் குறித்தும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியைக் குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள்; காலம் சமீபமாயிருக்கிறது”. வெளி. 1:1-3 68. நான் முன்பே கூறிய வண்ணம், இப்பொழுது இந்தப் புத்தகத்தை, வரலாற்று ரீதியாக பகுத்தாய்வு செய்யப் போகிறோம். ஒவ்வொரு தடவையும் நான் இங்கு எழுதி வைத்துள்ள பக்கங்களிலிருந்து குறிப்புகளைக் காண்பிக்கும் போது, அவைகள், வியாக்கியானப் புத்தகங்களிலிருந்து (Commentaries) எடுத்தாளப் பட்டவைகள் என அறியலாம். 69. இப்பொழுது, இப்புத்தகத்தை எழுதியவன் யோவான், திவ்ய வாசகனாகிய பரிசுத்த யோவான் ஆவான். எதிர்கால தலைமுறையினருக்கென்று எழுதினான். அப்போஸ்தலர் காலம் முதல் கர்த்தருடைய வருகை மட்டும் உள்ள ஏழு வெவ்வேறு கிறிஸ்தவ சபைக் காலங்களின் ஏழு வெவ்வேறு தூதர்களுக்கும் எழுதப்பட்டதாகும். கர்த்தர் பரத்திற்கு ஏறின நாள் முதல் அவர் திரும்பி வரும்வரை இந்த ஏழு சபைக் காலங்கள் தொடர்ந்து ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சபைக் காலத்திற்குரிய அதனதன் ஆவிக்குரிய நிலைமை இதில் விவரிக்கப் பட்டுள்ளது. வேதமும் ஆவியானவரும் சபைகளுக்குப் பேசுவதன் மூலம், ஒவ்வொரு சபைக் காலமும் தன்னைத் தானே உற்று நோக்கிக் கொள்ள முடியும். ஒவ்வொரு சபைக் காலமும் புத்தியுள்ள கன்னிகையாகிய கிறிஸ்துவின் மெய்யான திராட்சை செடியையும், புத்தியில்லாத கன்னியராகிய ஒட்ட வைக்கப்பட்ட திராட்சைச் செடியையும் தன்னகத்தே உடையதாகக் காணப்படுகிறது. 70. யோவான் அப்போஸ்தலன் தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் எபேசு பட்டணத்தில் வாழ்ந்தான் என்றும், அங்கேயே தான் அவன் மரித்தான் என்பதை வரலாற்றாசிரியர்கள் ஒப்புக் கொள்கின்றனர். வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை யோவான் எழுதுகையில், பத்மு என்னும் தீவில் இருந்தான். இப்புத்தகம் அவனது வாழ்க்கை வரலாற்றைக் கூறும் ஒரு புத்தக மல்ல. எதிர் வரும் காலங்களில் உள்ள கிறிஸ்துவின் வரலாற்றைக் கூறுவதாகவே இது உள்ளது. அது ஒரு தீர்க்கதரிசனம் என்பதைப் பாருங்கள். இது யோவானின் வாழ்க்கை வரலாறு அல்ல, இது இயேசுவின் வாழ்க்கை வரலாறும் அல்ல, ஆனால் இது வரப் போகும் ஒரு காலத்தைக் குறித்த ஒரு தீர்க்கதரிசனமாகும். இது யோவானின் தீர்க்கதரிசன உரைத்தலல்ல. ஆனால் கர்த்தரை பயபக்தியோடு மேன்மைப்படுத்துதலாகும். இப்புத்தகம் திவ்ய வாசகனாகிய யோவானைப் பற்றிய வெளிப்படுத்துதல் அல்ல, ஆனால் இது கர்த்தராகிய கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்து தலாகும். 71. இப்புத்தகம் புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தின் கடைசிப் புத்தகமாகும். ஆயினும், அது சுவிசேஷ யுகத்தின் துவக்கத்தையும், முடிவையும் பற்றி உரைக்கிறது. அது சரிதான் என்று வேத அறிஞர்கள் ஒத்துக் கொள்கின்றனர். 72. ஏழு சபைக் காலங்களுக்கென்று எழுதப்பட்ட இந்நிருபங்கள், தீர்க்கதரிசனமாக எதிர் வரும் காலங்களுக்கென்று எழுதப் பட்டவையாகும். பவுலும்கூட தன் காலத்தில் இருந்து வந்த ஏழு சபைகளின் ஜீவியம் மற்றும் மகிமையைப் பற்றி எழுதியிருக்கிறான். யோவானோ எதிர்வரும் காலங்களில் உள்ள ஏழு சபைகளின் ஜீவியம் மற்றும் மகிமையைப் பற்றி எழுதி, அவைகளை நேரடியாக அந்தந்த சபையின் போதகர் அல்லது தூதனுக்கும் மற்றும் இந்த வெவ்வேறு ஏழு சபைக் காலங்களில் வாழும் எல்லா கிறிஸ்தவர்களுக்குமாக விளித்து எழுதியுள்ளான். 73. இப்பொழுது இந்த வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை காலை, மாலை என இரு வேளைகளிலும் ஆராய்வோம். காலை ஆராதனையை 11 மணி அல்லது 11.30 மணி அளவில் முடித்துக் கொள்வோம். இரவு ஆராதனையை இரவு 7 மணிக்கு ஆரம்பிப் போம். 74. இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதி காரத்தின் பொருளடக்கத்தைப் பார்ப்போம். முதலாம் வசனமானது, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல் என்றே தெளிவாகக் கூறுகிறது. (ஆங்கில வேதாகமத்தில் "The Revelation of Jesus Christ" என்று துவக்கத்திலேயே அவ்வாறு ஆரம்பிக்கிறது). 2ம் வசனம், திவ்யவாசகனாகிய பரிசுத்த யோவானே வேத பாரகன் மற்றும் தேவ ஊழியக்காரனாகக்கூறுகிறது. 3ம் வசனம், ஆசீர்வாதங்களை உரைக்கிறது. 4ம் வசனம் முதல் 6ம் வசனம் முடிய சபைக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது. 7ம் வசனம் அவர் வருகையைக் குறித்து அறிவிப்புச் செய்கிறது. 8ம் வசனம் இயேசு கிறிஸ்துவின் உன்னத தெய்வீகத்தை விவரிக்கிறது. 9ம் வசனம் முதல் 20ம் வசனம் முடிய பத்மு தீவு தரிசனம். 75. 14ம் வசனம், மற்றும் 15ம் வசனம், இயேசு கிறிஸ்துவின் ஏழு விதமான மகிமையை ஆள்தத்துவத்தில் விவரிக்கிறது. அவரது தோற்றம் ஏழு விதமான ஏழு மகிமையோடு விவரிக்கப் பட்டிருக்கிற ரூபத்தில் கிறிஸ்துவை காணக் கிடைப்பது எத்தனை அழகாயுள்ளது. அவருடைய மகிமையான உயிர்த்தெழுதலில் அவருக்குள்ள ஏழு விதமான வருணிப்போடு உள்ள அவரது ஆள் தத்துவம். 76. இச்செய்தியின் தலைப்பு “ இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல்'' என்பதானது, அதின் உட்கருப்பொருளை விவரிக்கிறது. 77. திவ்ய வாசகனாகிய யோவானைப் பற்றிய வெளிப்படுத்துதல் அல்ல இது. ஆனால் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலாகும். 78. வெளிப்படுத்துதல் என்ற பதத்திற்கு கிரேக்க மொழியில் 'அபோகலிப்ஸ் (Apocalypse) என்பதாகும். அதன் பொருள் “ திறக்கப்படுதல" என்பதாகும். நான் இந்த வார்த்தையை எடுத்துக் கொண்டு அதைப் பற்றி ஆராய்ந்து பார்த்த போது... அபோகலிப்ஸ் என்ற இந்த வார்த்தைக்கு, ஒரு சிற்பி ஒரு சிலையைச் செதுக்கி, அதைத் திரைச் சீலையினால் மூடி, மறைத்து விட்டு, பின்பு, அதை அவனே அந்தத் திரைச் சீலையை நீக்கி, அதின் பின்னால் என்ன உள்ளது என்று திறந்து காண்பிப்பது போல் உள்ளது. மறைந்திருக்கிற ஒன்றை திறந்து காண்பித்தலாகும் அது. 79. ஆயினும் இப்புத்தகம் இயேசு கிறிஸ்து என்ற நபரைப் பற்றி மிகவும் அதிகமான அளவில் திறந்து கொடுக்கவில்லை. இருப்பினும் அது நிச்சயமாக அவரது தெய்வீகத்தைப் பற்றியும், அவரது ஏழுவிதமான மகிமையான தோற்றங்களையும், அவர் என்னவாக இருக்கிறாரோ, அதைப் பற்றியும், அதாவது, பிரதான ஆசாரியன், இராஜா என்பன போன்ற காரியங்களைப் பற்றியும் கூறுகிறது என்பது உண்மையே. ஆனால் வரவிருக்கின்ற அவரது ஏழு சபைக் காலங்களிலும் அவரது எதிர்வரும் கிரியைகளைப் பற்றி இது விவரிக்கிறது. அது... 80. நமது கர்த்தர் பூமியில் இருக்கையில், சீஷர்கள் அவரிடம், “ ...இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்'' என்று கேட்டார்கள். 81. “ அந்தக் காலத்தையும் வேளையையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல'' என்று கூறினார். ஒருவரும் அதை அறிய மாட்டார்கள். “ குமாரனுங்கூட அதை இதுவரை அறியவில்லை'' என்று கூறினார். 82. ஆனால் அவரது மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் மற்றும் மகிமைக்குள் பரத்துக்கேறுதல் ஆகியவைகளுக்குப் பின்பு, சபையின் எதிர்காலத்தைப் பற்றி அவர் தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொண்டார். பின்பு, சபைக்கு இச்செய்தியை கொடுக்க மீண்டும் திரும்ப வந்தார். அவரது வருகையைப் பற்றிய செய்தி அது, மற்றும் காலந்தோறும், சபைகளின் நிலையை தெளிவாக காண்பிப்பதாகவும் இச்செய்தி உள்ளது. 83. அவரது மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு முன்பாக அவர் இதைச் செய்ய முடியவில்லை. ஏனெனில் அவர் உலகில் இருக்கையில் இன்னும் அதை அறிந்து கொள்ளவில்லை. ஆனால் இங்கு இந்த குறிப்பிட்ட வசனம் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பதை கவனித்தீர்களா? இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலை தேவன் அவருக்கு (கிறிஸ்துவுக்கு) ஒப்புவித்ததும்... (ஆங்கில வேதாகமத்தில் உள்ளபடி- மொழி பெயர்ப்பாளர்) 84. பிதாவாகிய தேவன், தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு எவ்வாறு அந்த வெளிப்படுத்துதலை அளித்தார்! அவர் தம்முடைய தூதனை யோவானிடத்திற்கு அனுப்பி, இவைகளைத் தெரியப்படுத்தினார், இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவரைப் பற்றி தெரியப்படுத்தினார். ஓ! இது எவ்வளவு அழகாக அமைந்துள்ளது. 85. இப்பொழுது, இந்த மகத்தான வருகையின் காலத்தை யோவான் பார்த்தான்... இப்பொழுது இவைகள்... கிறிஸ்து என்னவாக இருப்பார், எவ்வாறு ஒவ்வொரு காலத்திலும் இருப்பார் என்பதைப் பற்றிய கிறிஸ்துவின் குறிப்பிட்ட நோக்கத்தை திட்ட வட்டமாக வெளிப்படுத்துவதற்காகத்தான் இந்த வெளிப்பாடு யோவானுக்கு அளிக்கப்பட்டது. எனவே தான் இன்று காலையில் நான் உங்களிடம், “ உண்மையான சபையின் மேல் உங்கள் சிந்தையை வையுங்கள், அது பெந்தெகொஸ்தே நாளில் ஆரம்பிக்கப்பட்ட உண்மையான சபையாகும்'' என்று கூறினேன். 86. எந்தவொரு சமயக் கோட்பாடுகளைக் கற்றறிந்தவனோ அல்லது வேதவிற்பன்னரோ, அல்லது எந்தவொரு வரலாற்று ஆசிரியனோ, உண்மையான சபை, மார்ட்டின் லூத்தர் காலம் அல்லது வெஸ்லி காலம் அல்லது கத்தோலிக்க காலம் அல்லது வேறெந்த காலத்திலோ ஆரம்பித்தது என்று கூற முடியாது என்பது நிச்சயம். அது பெந்தெகொஸ்தே நாளில் ஆரம்பித்தது. அதின் துவக்கம் அப்பொழுதிலிருந்துதான். அதுவே அதன் ஆரம்பம். ஆகவே இக்காரியத்தைப் பற்றி எவருடனும் விவாதிக்க நேர்ந்தால், சபையின் ஆரம்பத்தைப் பற்றி நிரூபிக்க பெந்தெகொஸ்தே நாள் என்னும் தலைவாயிலிலேயே நில்லுங்கள், அவர்களால் அதைப் புறக்கணித்து வேறு வாதத்தை எடுத்துரைக்க முடியாது. 87. அது ஒரு முயலை ஒரு விளை நிலத்தில் விடுவதைப் போல் உள்ளது. எல்லாப் பொந்துகளையும் நீங்கள் அடைத்து விட்டால், முயலானது தான் முன்பிருந்த இடத்துக்கே வரவேண்டும். 88. நல்லது, அவ்விதமாகத்தான், சபைகளைக் குறித்தும், சபைக் காலங்களைக் குறித்தும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளைக் குறித்தும் பேசினால், நீங்கள் ஆதியோடந்தமான ஆரம்பத்திற்கே வரவேண்டும். தேவன் முடிவில்லாதவர் மற்றும் சர்வ வல்லவர் ஆதலின், ஆரம்பத்திற்குத் தான் வரவேண்டும். எனவே அவர் முடிவில்லாதவராதலால், முன்பு ஒன்றைச் செய்துவிட்டு, பின்பு அதற்கு முரணாக வேறொன்றைச் செய்ய முடியாது. ஆதியில் அவர் எப்படிச் செய்தாரோ, அவ்வாறே ஒவ்வொரு தடவையும் அவர் செய்ய வேண்டும். 89. புறஜாதிகள் பரிசுத்த ஆவியைப் பெற்ற நாளில் பேதுரு கூறினான், “ நம்மைப் போல் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி''. 90. இப்பூவுலகில் இயேசு இருந்தபொழுது அவர் கூறினார். ...அது... 91. ஒருவன் இயேசுவினிடத்திற்கு வந்து, “ புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்திரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா?'' என்று கேட்டான். 92. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக, ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன்...''. 93. அதற்கு அவர்கள், “ அப்படியானால் தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார்'' என்றார்கள். 94. இயேசு அதற்குப் பிரதியுத்தரமாக, “ ஆதி முதலாய் அப்படியிருக்கவில்லை '' என்று கூறினார். 95. எனவே எப்பொழுதும் ஆதிக்கே (துவக்கத்திற்கே) செல் லுங்கள். எனவே, நாம் சபைக் காலத்தைக் குறித்துப் பேசப் போகிறோமென்றால், பின் காலங்கள்தோறும் மனிதன் அதைப் பற்றிக் கருத்துரைத்தவைகளைத் தள்ளிவிட்டு, துவக்கத்திற்கே செல்ல வேண்டும். 96. வேதத்திலுள்ள புத்தகங்களிலெல்லாம், வெளிப்படுத்தின விசேஷப் புத்தகமே மிகவும் அதிகாரப்பூர்வமான புத்தகமாகும். கிறிஸ்து தனது முத்திரையைப் பதித்திருக்கிற ஒரே புத்தகம் இது. இப்புத்தகம் ஆசீர்வாதத்தோடு ஆரம்பித்து, சாபங் கூறுதலோடு முடிவடைகின்றது. “ இப்புத்தகத்தை வாசிக்கிறவன் பாக்கியவான்'' என்று தொடங்கி, “ இதிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போடுகிறவன் சபிக்கப்பட்டவன்'' என்று முடிவாகக் கூறப்பட்டள்ளது. 97. வேதம் முழுவதிலும் கிறிஸ்துவினால் எழுதப்பட்ட ஒரே புத்தகம் இதுதான். தன்னுடைய விரல்களினால் பத்துக் கற்பனைகளை அவர் எழுதினார். யூதர்களும் அதைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இன்று, வெளிப்படுத்தின விசேஷம். 98. சாத்தான் வேத வாக்கியங்கள் முழுவதையும் வெறுக்கிறான். ஆயினும் மிகவும் அதிகமாக அவன் வெறுப்பது வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தைத்தான். இரு புத்தகங்களை அவன் மிகவும் வெறுக்கிறான். அவையாவன, வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம் மற்றும் ஆதியாகமப் புத்தகம். இவற்றை அவன் மிகவும் வெறுக்கிறான். ஏனெனில், ஆதியாகமப் புத்தகம் ஆதியில் நடந்தவைகளைப் பற்றி உரைக்கிறது. வெளிப்படுத்தின விசேஷப் புத்தகமோ, கடைசி நாளில் சாத்தானுக்கு என்ன நேரிடப் போகிறது என்பதை காண்பிக்கிறது. சாத்தான் ஆயிரம் ஆண்டுகள் கட்டிப் போடப்படவிருக்கிறான். அதன்பிறகு, அவனும் கள்ளத் தீர்க்கதரிசியும், மிருகமும் உயிருடன் அக்கினிக் கடலில் தள்ளப்படவிருக்கிறார்கள். 99. ஆதியாகமப் புத்தகத்தை, அது “ நம்பத் தகுந்ததல்ல'' என்று அவன் குறை கூறுவான். அப்படிச் சொல்லி மக்களின் சிந்தையை அவன் கலக்குவான். முதலும் கடைசியுமான ஆதியாகமம் மற்றும் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகங்களில் சாத்தானைப் பற்றிக் கவனித்துப் பாருங்கள். 100. வேதத்திலுள்ள மற்றெந்த புத்தகங்களைக் காட்டிலும், வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில் தான் அதிகமான அடையாளச் சின்னங்கள் உள்ளன. அதில் அதிகமான அடையாளச் சின்னங்கள் உள்ளன. ஏனெனில், அது ஒரு தீர்க்கதரிசனப் புத்தகமாகும். எனவே, அது ஒரு தீர்க்கதரிசன வகுப்பினரால் மாத்திரமே புரிந்து கொள்ளப்பட முடியும். இப்புத்தகம் யாவரும் புரிந்து கொள்வதற்காக உள்ளது அல்லவே அல்ல. இதை யாராலும் அறிந்து கொள்ளவே முடியாது. ஒரு குறிப்பிட்ட மக்கள் வகுப்பினருக்கு மட்டும் உரியதாக இது எழுதப்பட்டுள்ளது. உபாகமத்தில், “ மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்...'' என்று கூறப்பட்டுள்ளது. அது சரிதான். மறைவானவைகளை அவர் தனது பிள்ளைகளாகிய நமக்கு வெளிப்படுத்துகிறார். எனவே அது மற்றவர்களுக்குரியது அல்ல. 101. மாம்ச சிந்தையுள்ள மனிதனால், பரிசுத்த வேதத்தின் மகத்துவமானவைகளை கிரகித்துக் கொள்ள முடியாது, ஏனெனில் அவைகள் அவனுக்கு மதியீனமாக, பைத்தியமாகத் தோன்றும். ஆனால் தேவனுடைய வார்த்தையை நேசிக்கிறவர்கள் அதை அறிந்து கொள்வார்கள், புரிந்து கொள்வார்கள். ஏனெனில் சபையாகிய அவர்களுக்குத் தான் வேதமானது எழுதப்பட்டது. எபேசுவிலுள்ள சபைக்கு, சிமிர்னாவிலுள்ள சபைக்கு மற்றும் தொடர்ந்து வரும் சபைக்குத்தான் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல் வருகிறது. சபைக்கு அளிக்கப்படும். “ இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல்”. 102.மேலும், கவனியுங்கள், இப்புத்தகம் வேதவாக்கியங்களின் நிறைவான முடிவாயிருக்கிறது. பூளோகரீதியிலும் அது சரியான ஸ்தானத்தில், அதாவது வேதத்தின் இறுதியில் வைக்கப் பட்டுள்ளது. இதிலுள்ள யாவற்றின் வெளிப்படுத்து தலானது, அதை வாசிக்கிறவருக்கும், அதை வாசிக்கக் கேட்கிறவருக்கும் ஆசீர்வாதத்தையும், இதிலுள்ளவற்றோடு எதையாகிலும் கூட்டவோ, அல்லது இதிலிருந்து எடுத்துப் போடவோ செய்வோருக்கு சாபத்தையும் உடையதாக இருக்கிறது. அது தானே முழுமையான பிரமாணமாக இருக்கிறது. ஓ, அதுவே குறைவில்லாதது, முழுமை பெற்றது. அதுவே எல்லாம். வேறு யாதொன்றும் அதனோடு சேர்க்கப்படக் கூடாது. இப்பரிசுத்த எழுத்துக்களோடு, எவராவது யாதொன்றைக் கூட்டவோ, அல்லது அதிலிருந்து எடுத்துப் போடவோ செய்தால், தேவன் அப்படிப்பட்டவனுடைய பெயரை, பங்கை ஜீவபுத்தகத்திலிருந்து எடுத்துப் போடுவேன் என்று கூறியுள்ளார். அவ்வாறு அதனோடு ஒன்றைக் கூட்டும் மனிதனின் பங்கை ஜீவ புத்தகத்திலிருந்து தேவன் எடுத்துப் போடுவார் என்பதைப் பார்த்தீர்களா? 103. எனவே, நமது கர்த்தரைப் பற்றிய எண்ணிறந்த வெளிப்படுத்துதல்களை நாம் காண்கையில், அதாவது யார், அவர் எவ்வாறு உள்ளார் என்ற வெளிப்படுத்துதல்கள், அவ்வெளிப் பாட்டுடன், யாராவது ஒன்றைக் கூட்டவோ, அதிலிருந்து எடுத்துப் போடவோ செய்தால், அது கள்ளத் தீர்க்கதரிசனமாகும். வெளிப்படுத்தின விசேஷத்திற்கு பிறகும்கூட, மேற்கொண்டு தங்களுக்கு வெளிப்படுத்துதல்கள் கிடைத்துள்ளன என்று அநேகர் கூற முற்பட்ட துண்டு. ஆனால் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகமானது அவரது சபைக் காலத்தில், அவரது நாட்களில், இயேசு கிறிஸ்துவைப் பற்றின முழுமையான, குறைவற்ற வெளிப்படுத்துதலாக இருக்கிறது. நமது கர்த்தரைப் பற்றின ஒரு வெளிப்படுத்துதலாகும் அது! 104. அபோகலிப்ஸ் என்ற கிரேக்க வார்த்தை மறைந்திருக்கிற ஒன்று திரைநீக்கம் செய்யப்படுதல் என்பதாகும். அதாவது கிறிஸ்துவைப் பற்றிய இரகசியம் வெளிப்படுத்துதலாகும். 105. இரண்டாவது வசனத்தில் நாம் காண்கிறோம்.... 106. முதலாம் வசனமானது கிறிஸ்துவை பற்றிய இரகசியத்தை திறந்து கொடுப்பதைப் பற்றியது. வெளிப்படுத்துதல், அதாவது மறைவானதை திறந்து காண்பிப்பது. ஓ, எவ்வளவாக அப்போஸ் தலருக்கு கடைசிக் காலம், மற்றும் கர்த்தருடைய வருகையைப் பற்றிய காரியங்கள் மறைக்கப்பட்டிருந்தன! அப்போஸ்தலர் அதைப் பற்றிய கேள்விகளைக் கர்த்தரிடம் கேட்டார்கள். ஆனால் அவைகளைப் பற்றிய வெளிப்படுத்துதலைப் பெற ஒரே ஒரு அப்போஸ்தலன் மட்டும் உயிர் வாழ்ந்திருந்தான் (யோவான் தான் அது). ஆயினும் யோவான், தான் எழுதின வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தையே அது என்னவென்று புரிந்து கொள்ள வில்லை. ஏனெனில் அதில் எழுதப்பட்டுள்ளவைகள் வந்து நிறைவேறி வரலாறாகும் காலம் வரை அவன் உயிர் வாழவில்லை. 107. இப்பொழுது, இப்புத்தகத்தின் வரலாறு - இப்புத்தகத்தின் பொருளடக்கம், அப்பொழுது ஆசியா மைனரில் இருந்த ஏழு சபைகளுக்கும் எழுதப்பட்டது. ஆசியா மைனரில் இருந்த அந்த ஏழு சபைகளின்னியில், அக்காலத்தில் வேறு எத்தனையோ சபைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால் ஆசியா-மைனரில் இருந்த அந்த ஏழு சபைகளும், எதிர் வரும் ஏழு சபைக் காலங்களில் இருக்கப் போகும் சபைகளின் தன்மையை பிரதிபலிப்ப தாக இருந்ததால், அவைகள் முக்கியத்துவம் பெற்றன. எபேசுவிலுள்ள சபை என்று கூறும்போது, அது எபேசு சபைக் காலத்தின் தன்மையை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. சிமிர்னா, பெர்கமு, பிலதெல்பியா மற்றும் உள்ள சபைகள் ஒவ்வொன்றும், எதிர்வரும் அந்தந்த சபைக் காலத்தின் தன்மையை அப்படியே பிரதிபலிப்பதாக அமைந்திருந்தன. 108. ஓ! உங்களால் மட்டும்.... எந்தவொரு மனிதனாவது வேத வாக்கியங்களை ஆவிக்குரிய பிரகாரமாக சம்பந்தப்படுத்திக் காண்பிப்பதை கண்டும்கூட, அவை தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்டவை என்பதை எவ்வாறு காணத் தவற இயலும்? மனிதனின் செயல், நோக்கங்கள், எண்ணங்கள் இவை யாவும் வேதவாக்கியங்கள் தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்டவை என்பதை நிரூபிக்கின்றன. தேவன் அவற்றை எவ்வாறு சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறார் என்பதைப் பார்க்க முடிகிறது. நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்களோ, அது ஏதோ ஒன்றின் சாயலாக இருக்கிறது. 109. ஆபிரகாம் தனது ஒரே பேரான குமாரன் ஈசாக்கை பலியிட ஒப்புக் கொடுத்தபோது, அச்செயலானது, அநேக நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தேவன் தமது குமாரனை பலியாக ஒப்புக் கொடுத்தலுக்கு சாயலாக அமைந்ததே. எவ்வாறு யோசேப்பு தன் தந்தையால் நேசிக்கப்பட்டும், சகோதரர்களால் பகைக்கப்பட்டு, விற்கப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டு இருந்தானோ, அது இயேசுவுக்கு சாயலாக அமைந்தது. மனிதனாகிய யோசேப்பின் மூலம் ஆவியானவர் கிரியை செய்து, கிறிஸ்துவின் வாழ்க்கைக்கு பரிபூரணமான மாதிரியை ஏற்படுத்தினார் பாருங்கள். தாவீது எவ்வாறு தான் ராஜாவாக இருக்கையில் தன் ஜனங்களால் புறக் கணிக்கப்பட்டு, ஒலிவ மலையின் மேல் நகரத்தைப் பார்த்துக் கொண்டே அழுது கொண்டே நடந்து சென்றானோ, அதே காரியம் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு தாவீதின் குமாரனாகிய இயேசுவும் அதே மலையின் மேல் ஏறி, தன்னைப் புறக்கணித்த எருசலேம் பட்டணத்தைப் பார்த்து அழுது கொண்டே சென்றபோது, நடை பெற்றது. ஆவியானவர் எல்லாவற்றிற்கும் மாதிரியையும், முறை களையும் வைத்துள்ளார். 110. ஓ! இக்கடைசி நாட்களில் உங்களால் அந்த மகத்தான பெந்தெகொஸ்தே அனுபவம் பெற்ற சபையைக் காண முடி கிறதா? பெந்தெகொஸ்தே நாளில் தேவன் எவ்வாறு அதை ஆரம்பித்து வைத்தார் என்பதைக் காண முடிகிறதா? அந்த ஆவியானவர் எல்லாக் காலங்களின் வழியாகவும் அந்த மெய்யான சபையில் வாசம் பண்ண வேண்டும். அவர்கள் சமய சம்பிரதாயங்களை யுடையவர்களாகவும், மாறுபட்ட வர்களாகவும் ஆகிவிட்டார்கள். அவர்களுக்கு ஒரு மத ஸ்தாபனம் தேவைப்பட்டது. சபையையும், அரசையும் ஒன்றாக இணைக்க அவர்கள் விரும்பினார்கள். முடிவாக அதை சாதிக்கவும் செய்து, அதினால், நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு உபத்திரவத்தை உண்டாக்கக் காரணமானார்கள். அதன் பிறகு சீர்திருத்தலின் காலம் வந்தபோது அவர்கள் வெளியே வந்தார்கள். அதன்பின்பு, ஒவ்வொரு ஆண்டும், ஆவியானவரை விட்டு அவர்கள் தங்களை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்துக் கொண்டு மாம்சப் பிரகாரமான காரியங்களை இன்னும் கூடுதலாக தங்களோடு சேர்த்துக் கொண்டே வந்தார்கள். இவ்வாறு மெல்ல ஆவியானவரை விட்டு விலகி, லௌகீக காரியங்களை அதிகமாக சேர்த்துக்கொண்டே வந்து, இறுதியில் அவர்கள் முதலில் செய்தது போலவே, சபையையும் அரசையும் ஒன்றாக இணைக்க ஆயத்தமாக இருக்கிறார்கள். நாம் தானே இறுதியான முடிவடையக் கூடிய வேளையில், அதாவது சபையின் காலம் முடிவடையும் இறுதிக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் பிலதெல்பியா... இல்லை, லவோதிக்கேயா சபையின் காலத்தில் இருக்கிறோம். 111. முதலாம் அதிகாரம், முதலாம் வசனமானது, யோவானை அறிமுகப்படுத்துகிறது. இப்புத்தகத்தை எழுதியது யார்? அது யோவானாகும். இப்புத்தகம் யோவானைப் பற்றிய வெளிப்படுத்துதல் அல்ல, இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலாகும். யோவான் ஒரு சீஷனாக இருக்கும்படி தெரிந்து கொள்ளப்பட்டான். இப்புத்தகமே இது இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல் என்பதாக தெரிவிக்கிறது. அவரில்தான் இந்த வெளிப்பாடு வருகிறது. 112. “ இது அவர் தம்முடைய தூதனை அனுப்பி யோவானுக்குத் தெரியப்படுத்தினார்'' அந்தத் தூதன் யார் என்பது நமக்குத் தெரியாது. அந்த தூதன் யார் என்பதைப் பற்றி வேதமும் ஒன்றும் கூறவில்லை. ஆனால், அந்தத் தூதன் ஒரு தீர்க்கதரிசி என்று நாம் அறிந்திருக்கிறோம். ஏனெனில், வேதத்தில் அதன்பின்னர் கூறப்பட்டுள்ளது, “ இயேசுவாகிய நானே சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளை அறிவிக்கும் படியாக என் தூதனை அனுப்பினேன்'' என்று. 113. யோவான் அத்தூதனை - அவன் காலில் விழுந்து வணங்கப் முற்பட்ட போது, அத்தூதன், “ இப்படி செய்யாதபடிக்கு பார்'' என்று கூறினான். அது வெளிப்படுத்தின விசேஷம் 22ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். “ நீ இப்படி செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும், தீர்க்கதரிசிகளோடும் கூட நானும் உடன் ஊழியக்காரன்''. அது எலியாவாக இருக்கக் கூடும். தீர்க்கதரிசிகளில் ஒருவனாக இருந்திருக்கக் கூடும். யோவான் அப்போஸ்தலனாக இருந்தான். ஆனால் இத்தீர்க்கதரிசி அனுப்பப்பட்டான். யோவான் அப்போஸ்தலனாக இருந்த படியால், அவன் எழுதியுள்ள ஏனைய நிருபங்களின் தன்மையைப் பாருங்கள்; அவைகள் வெளிப்படுத்தின விசேஷத்தை யோவான் தானே எழுதவில்லை என்பதை நிரூபிக்கிறது. வெளிப்படுத்தின விசேஷத்திற்கு, யோவானின் ஏனைய நிருபங்களில் காணப்படும் தன்மையை காண முடியவில்லை. யோவான் எழுதிய முதலாம் நிரூபம் ஆகியவைகளை எடுத்துப் படித்துப் பாருங்கள். அவைகளில் யோவான் எழுதினவைகளின் தன்மையையும், வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தின் தன்மையையும் ஒப்பிட்டுப் பாருங்கள், யோவான் ஒரு வேதபாரகனாகவும் ஒரு அப்போஸ்தலனாகவும் இருந்தார். ஆனால் இதுவோ தீர்க்கதரிசியின் ஆவியாயிருக்கிறது. அது முற்றிலும் வித்தியாசமான நபராயிருக்கிறது. பார்த்தீர்களா? அது யோவானின் எழுத்தல்ல. யோவானுடைய வெளிப்படுத்துதலல்ல. அது தேவன் சபைகளுக்கு அருளிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலாகும். யோவான், சொல்லச் சொல்ல அதை எழுதின ஒரு வேதபாரகன் மட்டுமே, அப்படித்தான் அப்புத்தகமும் அறிவிக்கிறது. 114. இப்புத்தகம் யோவானுக்கு என்று உரைக்கப்பட்டதல்ல. அது சபைகளுக்கு என்று உரைக்கப்பட்டதாகும். அது சரிதான். இப்புத்தகத்தை எழுதுகையில் யோவான் எபேசுவிலுள்ள சபைக்கு போதகராயிருந்தான். இப்புத்தகமோ யோவானை விவரித்துப் பேசவில்லை. சபைக்கென்றே பேசப்பட்டது. 115. இப்பொழுது மூன்றாவது வசனத்தைப் பாருங்கள். ஆண்டவர் இதில் ஆசீர்வாதங்களை அறிவிக்கிறார், இதை கவனியுங்கள். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது. 116. எந்தக் காலம் சமீபமாயிருக்கிறது? ஒவ்வொரு சபைக் காலத்தினூடாகவும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல் பூர்த்தியடையும்போது, இக்காரியங்கள் சம்பவிக்கையில், காலம் சமீபமாயிருக்கிறது. 117. காலம் சமீபமாயிருக்கிறது என்று எழுதக் காரணம் என்னவெனில், அவர்கள் அவர் திரும்பி வருவார் என எதிர் பார்த்து இருந்தார்கள். அப்பொழுது இருந்த சபைகள் முடிந்தவுடன் அவர் வருவார் என யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்டு இருந்தால்... அவ்வாறிருக்கும் என்று தான் யோவானும் எண்ணியிருந்தான்; ஆனால் அப்படியல்ல, ஆனால் ஏழு நீண்ட சபைக் காலங்கள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு அல்லது பல நூற்றாண்டு களுக்கு நீடித்திருக்கும் என்று யோவானுக்கு வெளிப்பட்டிருந் தால், அவர்கள் தங்கள் காலத்தில் அவர் வருகைக்காக காத்திருத்தல், உண்டாயிருக்கவே இருக்காது. அவர்கள் தங்கள் சபைக்காலத்தை, இயேசுவின் வருகையை எதிர்பாராமல் வாழ்ந்து முடித்திருப்பார்கள். அவர்கள் அந்தக் காலத்தில் இருந்த தங்களின் சபைகளின் காலம் முடிந்த பிறகு இயேசு வந்து விடுவார் என்றே எதிர்பார்த்திருந்தார்கள். 118. எனவே, தேவன் அதைப் பற்றிப் பேசினார். ஆயினும் அவர்களுக்கு அது வெளிப்படவில்லை. ஜான் வெஸ்லிக்கு வேதத்தைப் பற்றி தெரிந்த காரியங்கள் மார்டின் லூத்தருக்கு தெரிந்திருக்கவில்லை. வேதத்தைப் பற்றி பெந்தெகொஸ் தேயினர் அறிந்த அளவுக்கு பாப்டிஸ்டுகள் அறிந்திருக்கவில்லை. ஏனெனில் அது வித்தியாசமான காலமாயிருந்தது. வித்தியாசமான நேரமாயிருந்தது. தேவன் அந்தந்தக் காலத்திற்கு தம்முடைய காரியங்களை வெளிப்படுத்துகிறார். தேவன் சரியாக உரிய நேரத்தில் தமது காரியங்களை வெளிப்படுத்துகிறார். 119. நீங்கள் வசந்த காலத்தில் விதை விதைத்து, அதே காலத்தில் அறுவடை செய்ய முடியாது. நீங்கள் ஒரு விதையை விதைத்தால், அது முதிர்ச்சி அடைகிற வரையிலும் வளர்கிறது. தேவன் தனது வசனமாகிய விதையை விதைக்கிறார். அது வளர்ந்து மீண்டும் வெளியே வருகிறது, அப்பொழுது நாம் திரும்பிப் பார்த்து, “ இதோ அது வந்திருக்கிறது'' என்று கூறுகிறோம். ஆம் நிச்சயமாகவே, அது வெளிப்படுத்தப்பட்ட பின்பே நாம் அதைக் காண்கிறோம். 120. மூன்றாவது வசனத்தில், இப்புத்தகத்தின் இரகசியங்களை வாசிக்கிறவனும், அதை வாசிக்கக் கேட்கிறவனும் பாக்கிய வான்கள் என ஆசீர்வாதங்களை அறிவிக்கிறதைப் பார்க்கிறோம். மாம்ச சிந்தையுள்ளவன் அதைத் தள்ளிவிடுகிறான். ஏனெனில் மாம்ச சிந்தையுள்ளவன் அதை அறிந்து கொள்வதில்லை, சாத்தான் அம்பலப்படுத்தப்படுகிறான், தான் அம்பலப்படுத்தப் படுவதை அவன் விரும்புவதில்லை. 121.சாத்தான், தன் காரியங்களெல்லாம் அம்பலப்படுத்தப்படப் போகிறதை எண்ணுகையில், அது அவனுக்கு எவ்வளவு பயங்கரமானது என்பதை நீங்கள் அறிவீர்களா? கூட்டங்களில் மக்களின் செய்கைகளை கவனித்திருக்கிறீர்களா? கவனித்துப் பாருங்கள். நான் நடத்தும் கூட்டங்களில் அதைக் கவனித்துப் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட நபருக்குள் இருக்கும் சாத்தான் அம்பலப்படுத்தப்படப் போகும்போது, அந்த நபரின் முகமானது மாறுதலடைவதை பாருங்கள். என்ன சிந்திக்க வேண்டுமென்பதே அப்பொழுது அவர்களுக்குத் தெரியாது. திடீரென பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து, அப்பிசாசை அம்பலத்திற்குக் கொண்டு வருகிறார். ஓ! சாத்தானானவன் இவ்வகையான கூட்டங்களை வெறுக்கிறான். தேவனுடைய வார்த்தை மனிதருக்குள் இருக்கும் பிசாசை அம்பலப் படுத்துவதினால், அவன் எப்படிப் பட்டவன் என்று கூறுவதினால், நமக்கு அப்படிப்பட்டதொரு போராட்டம் உண்டாயிருக்கிறது. 122. பரிசுத்தாவியானவரின் ஏவுதலின் கீழ் இருக்கையில் நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிற செல்வி ஜோன்ஸ் என்ற இந்தப் பெண்மனி, அவர் இன்னார் இன்னார், இன்ன இடத்திலிருந்து வருகிறார்'' என்று சொல்லக்கூடும், அது என்ன செய்கிறது? அது அப்பெண்மணியின் ஆவியை உந்தி அந்த இடத்திற்குக் கொண்டு வருகிறது. 123. “ என்னை எப்படி நீங்கள் அறிவீர்கள்? அந்த மனிதனுக்கு என்னை தெரியாதே? எனவே அது ஒரு ஆவியாகத்தான் இருக்க வேண்டும். அது என்னவிதமான ஆவி?'' 124. “ அது தேவனுடைய ஆவியாகும்.'' 125. “ எப்படி? எனக்கு என்ன கோளாறு?'' 126. “ உங்களுக்கு காசநோய், புற்றுநோய் உள்ளது''. எதுவாயிருந்த போதிலும், “ அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கிறது. 127. ஓ! எவ்வளவாக சாத்தான் அதை வெறுக்கிறான். ஏனெனில் அது அவனது முகத்திரையை கிழித்துவிடுகிறது. 128. பரிசுத்த ஆவியானவரால் இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தும் இவ்வகையான கூட்டங்களை பார்த்துக் கொண்டிருக்கும் சுபாவ மனிதன் (மாம்ச சிந்தையுள்ளவன்) “ இது மனோதத்துவ ரீதியில் சிந்தையை ஆராய்தல் ஆகும், அல்லது மனோவசிய முறையாகும்'' என்று சொல்லலாம். இவர்களுக்கு இது என்னவென்று தெரியாது. அது அவர்களுக்கு பைத்தியமாகத் தோன்றும். 129. ஆனால் அது என்னவென்று அறிந்தவர்களுக்கோ அது எவ்வளவாக ஆசீர்வாதமாயுள்ளது! அது என்னவாக இருக்கிறது? ஒரு வெளிப்பாடாக இருக்கிறது. யாரைப் பற்றிய வெளிப்படுத்துதல் அது? பிரசங்க பீடத்தில் நிற்கும் அம்மனிதனைப் பற்றிய வெளிப்பாடா? இக்கடைசிக் காலத்திய சபையில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலாகும்! அவர் செய்வேன் என வாக்குரைத்தபடியே, அவர் தன்னைத் தானே வெளிப்படுத்து கிறதாக அது இருக்கிறது. அது வெளிப்படுத்துதலாக இருக்கிறது. பார்த்தீர்களா? 130. அதை சாத்தான் வெறுக்கிறான். என்னே, சாத்தான் எவ்வளவாக அதை வெறுக்கிறான்! அவனும், அவனது தீய திட்டங்களும் அம்பலப்படுத்தப்படுகிறது. சாத்தான், ஆதியாகமத்தில் தன்னைப் பற்றியுள்ள வெளிப்பாடுகளை வெறுக்கிறான். அதை நாம் இங்கே எழுதி வைத்திருக்கிறோம். அது மிகவும் சரியாக உண்மையாக உள்ளது. ஏன் சாத்தான் ஒரு வெளிப்பாட்டை வெறுக்கிறான்? வெளிப்பாட்டிற்கு அவன் ஏன் எதிராயிருக்கிறான்? முழு வேதப் பிரமாணமும் தேவனுடைய சபையும் பயபக்தியுடன் வெளிப்பாட்டின் மேல்தான் கட்டப்பட்டுள்ளது என்பதுதான் காரணம். 131. அது ஒருபோதும் வேதப்பள்ளியின் மூலமாக ஏற்படாது. நமக்கு எவ்வளவு அருமையான வேதக் கலாசாலைகள் இருக்கக் கூடும். வேதக் கல்லூரிகள் யாவும் இன்னமும் அந்த மங்கிய இருண்ட காலத்திற்குள் தான் இருந்து வருகின்றன. வேதமும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையும் முழுவதும் வெளிப்படுத்து தலாக உள்ளன. 132. நாம் வேதத்தில் மத்தேயு எழுதிய சுவிசேஷம் 16ம் அதிகாரம் 18ம் வசனத்திற்குத் திருப்புவோம். மத்தேயு 16:18ஐ நாம் படிப்போம். அங்கே அது வெளிப்பாடாக இருக்கிறது என்பதை பார்க்கலாம். இயேசுவும் சீஷர்களும் மலையிலிருந்து இறங்கி வருகிறார்கள். 17ம் வசனம். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. மத்.16:17-18 133. கத்தோலிக்க சபையானது, “ சபை பேதுருவின் மேல் கட்டப்பட்டுள்ளது'' என்று கூறுகிறது. அது உண்மையிலேயே மாம்ச சிந்தையின்படியானதாகும். ஆவிக்குரிய சிந்தையானது அவ்வித மான ஒரு காரியத்தை கிரகித்துக் கொள்ளும் என்பதை நீங்கள் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. தேவன்... தமது சொந்த குமாரன் அங்கே நின்றிருக்க, தேவனுடைய குமாரன் தாமே அங்கு நின்று கொண்டிருக்கிறார், அப்படியிருக்க, தேவன் ஒரு சாதாரண, பாவத்தில் பிறந்த மனிதன் மேல் தன் சபையைக் கட்டுவார் என்பதை சிந்தித்தும் பார்க்க முடியுமோ? பேதுரு தன் மேல் சபை கட்டப்படவில்லை என்பதை தனது ஜீவியத்தில் நிரூபித்துக் காட்டினான். அவன், தன்னிடத்தில் இருந்த அதே ஆவியோடு, இயேசுவை சபித்து, அவரது முகத்திற்கு முன்பாகவே, அவரை மறுதலித்து விட்டான். ஆகவே பேதுருவின் மேல் சபை கட்டப் படவில்லை. அல்லது சில சபைகள் நம்புகிறது போல், அங்கே இருந்த ஒரு பாறையின் மேலும் சபையானது கட்டப்பட வில்லை. அது எழுத்தின்படியே ஒரு வெறும் பாறையின் மேல் கட்டப் போவதாக அவர் குறிப்பிடவில்லை. அது பேதுருவுமல்ல. 134. அவர் மேற்படி வசனத்தில் குறிப்பிடும் பாறையானது, பேதுருவுமல்ல, அல்லது ஆண்டவர் தன்னைக் குறித்தும் குறிப் பிடவில்லை. 135. பிராடெஸ்டெண்டுகள் இயேசுவின் மேல் சபை கட்டப் பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். அவர், தன் மேலேயே சபையைக் கட்டினார் என்று கூறுகிறார்கள். அதுவும் தவறு. நன்றாகக் கவனித்தீர்களானால், சபையானது இயேசுவின் மேலும் கட்டப்படவில்லை. பேதுருவின் மேலும் கட்டப்படவில்லை. அது வெளிப்படுத்துதலின் மேல் கட்டப்பட்டுள்ளது. ...மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 136. பாருங்கள்! நான் உங்களை ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். ஏதேன் தோட்டம் இருந்தபொழுது, வேத வாக்கியங்கள் எழுதப்படவேயில்லை. அதன்பின்பு, காயீன், ஆபேல் ஆகிய இருவாலிபர்களும் தேவனிடம் சகாயம் பெற ஒரு பலி செலுத்த விரும்பினர். அவர்கள் செய்ய விரும்பிய போது, காயீன் வந்து ஒரு பலிபீடத்தைக் கட்டினான். ஆபேலும் ஒரு பலி பீடத்தைக் கட்டினான். இவ்வளவுதான் தேவை தேவனை ஆராதிக்க என்பதாக இருக்குமானால், காயீனை ஆக்கினைக்குட்படுத்தியதில் தேவன் அநீதியுள்ள வராயிருப்பார். சரி, அதன் பிறகு, காயீன் பலி செலுத்தினான். ஆபேலும் பலி செலுத்தினான். இருவருமே தேவனுக்கு பலி செலுத்தினார்கள். காயீன் தொழுது கொண்டான். ஆபேலும் அவ்வாறே செய்தான். ஆபேல் செய்த யாவையும் காயீனும் செய்தான். 137. எனவே வெறுமனே ஒரு சபைக்குச் செல்லுதல், ஒரு சபையைச் சார்ந்திருத்தல், காணிக்கை செலுத்துதல், தேவனை தொழுது கொள்ளுதல் என்று பெயருக்குச் செய்வதே போதும் என்று தேவன் எதிர்பார்ப்பாராகில், அவ்வாறே நடந்து கொண்ட காயீனை தேவன் ஆக்கினைக்குள்ளாக்கியதில் அநீதியுள்ளவர் என்றாக்கப்படுவாரே. 138. ஆனால், நீங்கள் கவனியுங்கள்! ஆபேல் ஒரு வெளிப்பாட்டினால், தங்களை ஏதேன் தோட்டத்தினின்று வெளியேறச் செய்தது வெறும் ஒரு கனியைத் தின்றுவிட்டதினால் அல்ல என்பதை அறிந்திருந்தான். மாம்ச சிந்தையுள்ளவர்கள், ஒரு கனியைத் தின்றது தான் காரணம் என்று எண்ணுகின்றனர். ஆபேல் நிலத்தின் கனிகளைக் கொண்டு வந்தான், தேவன் அதை நிராகரித்தார், ஆனால் அது வெளிப்படுத்தப்பட்டது... மன்னியுங்கள், ஆபேல் அல்ல, காயீன், தான் அதைச் செய்தான். காயீன் நிலத்தின் கனிகளை காணிக்கையாகக் கொண்டு வந்தான். ஏனெனில், கனியைத் தின்றதினால் தாங்கள் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டதாக காயீன் கருதியிருந்தான். ஆனால் வெளிப்பாடு எப்படியுள்ளது என்பதைக் கவனியுங்கள். வெளிப்பாட்டோடு மற்ற கருத்துக்கள் எப்படி ஒத்திருக்கவில்லை என்பதை கவனியுங்கள். அது இன்று எவ்வாறு புண்படுத்துகிறது என்பதைக் கவனியுங்கள். ஆனால் மனிதனை ஏதேன் தோட்டத்தை விட்டு விரட்டியதற்குக் காரணம், அவன் ஒரு வெறும் கனியைத்தான் புசித்தான் என்பதினால் அல்ல. நிச்சயம் ஏவாள் வெறும் ஆப்பிள் பழத்தை சாப்பிடவில்லை. ஆப்பிள் தான் ஏவாள் புசித்தாள் என்றால், ஆப்பிள் புசிப்பதனாலா அவள் தான் நிர்வாணி என்று கண்டு கொண்டாள்? இல்லை. கனி புசித்தல் என்ற காரியத்தை ஏவாள் செய்ததானது, அவள் கொண்டிருந்த காமவிகார உடலுறவைக் குறிக்கிறது. அவ்வாறு தான் அது இருந்தது. 139. நாம் அதைக் குறித்து ஒரு பாடமாக படிப்போம். நமக்கு அதற்கு வேத வாக்கியங்கள் உண்டு, அவைகளுக்குள் நாம் ஆராயும்படி திரும்பிச் செல்லுவோம். ஆனால் அவர்களுக்கோ, அப்படியல்லவென்று நிரூபிக்க ஒரு வேத வசனம் கூட கிடை யாது. 140. சிலர் கூறுகிறார்கள், “ ஏவாள், “ கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்... '' என்றாளே'' என்கிறார்கள். ஆம், ஐயா விபச்சாரியும் அவ்வாறே கூறுகிறாள் தேவன் எல்லா உயிர்களையும் உருவாக்குகிறார். 141. ஆனால் அது நெறிகுலைந்த நிலையில் வந்த ஜீவனாகும். அந்தப் பையனின் (காயீன்) சுபாவத்தைக் கவனித்துப் பாருங்கள். அவன் தன் தந்தையினால் உண்டாயிருந்து, தன் தந்தையைப் போலவே, பகையுணர்வு, கீழ்த்தரம், கொலைகார குணம் இவற்றையுடையவனாயிருந்தான். பார்த்தீர்களா? 142. ஆபேலின் பெற்றோர் ஒருவேளை அவனிடம், தோட்டத்தில் மரங்கள் உண்டாயிருந்தன என்றும், அவற்றின் கனிகள் அவைகளில் உண்டாயிருந்தன என்றும் சொல்லியிருக்கக் கூடும். அப்படியிருந்தும், அவன் எவ்வாறு காரியத்தை அறிந்து கொண்டான்? அது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. ஆபேல் போய் இரத்தத்தையுடைய ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து வந்தான். உயிருக்கு ஈடாக ஜீவனுள்ள ஒன்றை பலியாகக் கொடுக்க, அவன் இரத்தமில்லாத ஒரு மரத்தின் கனியைக் கொண்டு வரவில்லை. அவன் ஆப்பிள்களையோ, வாழைப் பழங்களையோ அல்லது பேரிக்காய் கனிகளையோ கொண்டு வரவில்லை. “ ஆனால் ஆபேலோ...'' ஆவிக்குரிய வெளிப்படுத்துதலினாலே... "தேவனுக்கு மேன்மையான பலியைச் செலுத்தினான். தேவனே அதைக் குறித்து சாட்சி கொடுத்தார். ஏனெனில் அது அவனுக்கு விசுவாசத்தினாலே வெளிப்படுத்தப்பட்டது. 143. அங்கே தான் தேவன் தம் சபையைக் கட்டுகிறார். “ மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை (ஒரு வேதகல்லூரியில் இதை கற்கவில்லை. யாரோ உனக்கு எங்கோ இதைப் போதிக்கவில்லை) ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்''. அங்கே அனைத்தும் வெளிப்படுத்துதலின் மேல் உள்ளதைப் பார்க்கிறோம். சபையானது முழுவதும் வெளிப்படுத்துதலின் மேல் தான் கட்டப்பட்டுள்ளது. “இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடாகிய கன்மலையின் மேல் நான் என் சபையைக் கட்டுவேன்'' என்பதாக அது உள்ளது. 144. நீங்கள் ஒருவேளை உங்களது போதகர் சொல்லுவதையோ, அல்லது உங்கள் வேதக்கல்லூரி கூறுவதையோ அல்லது உங்களது சபை கூறுவதையோ நம்பிக்கொள்ளக் கூடும். ஆனாலும் அது சரியல்ல. நாவன்மையுடன் நீங்கள் அதைக் குறித்து விளக்கக் கூடும். ஆனால் தேவனானவர், இயேசு கிறிஸ்துவானவர் தன் குமாரன் என்பதையும், அவரது இரத்தத்தால் மட்டுமே நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும். “ அவர் எனது இரட்சகர்'' என்ற அந்த வெளிப்பாட்டின் மேல் உள்ளது. 145. “ இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” (மத்.16:18).. 146. எனவே, காரியம் இப்படியிருக்கிறபடியினால், ஏன் சாத்தானானவன் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை வெறுக்கிறான் என்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆவிக்குரிய பிரகாரமாக வெளிப்படும் எந்த வெளிப்பாட்டையும் சாத்தானானவன் எதிர்க்கிறான். எனவே தான் அவன் இந்த ஊழியத்திற்கு மிகவும் எதிராக இருந்து வருகிறான். ஏனெனில்... அது என்ன? அது கிறிஸ்துவை வெளிப்படுத்து கிறதாயிருக்கிறது. 147. உலகப் பிரகாரமான சபையானது, தன்னுடைய மகத்தான ஸ்தாபனங்களையும் நிறுவனங்களையும் உடையதா யிருக்கட்டும், அது தனக்கு உரித்ததான தனது அலங்காரமான மிருதுவான செய்திகளோடு போகட்டும், அவ்வாறு அவர்கள் இருக்கும் வரையிலும், சாத்தான் அவர்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய மாட்டான். அவர்களுக்கு எந்தத் தொல்லையுமில்லை. யாவரும் அவர்களை முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டுகின்றனர். 148. விசுவாசிகளை பின் தொடரும் அடையாளங்கள் இன்னின்ன என்று தேவன் சொன்ன வாக்குப்படி அடையாளங்கள் தனது சபைக்குள் வல்லமையோடு வெளிப்பட்டு, சபையில் மீண்டும் பரிசுத்த ஆவியின் மூலமாக தேவன் கிறிஸ்துவை வெளிப்படுத்தும் காலம் வருகிறது. அப்பொழுது சாத்தானானவன், அதற்கெதிராக கிரியை செய்வதற்காக எழும்புகிறான். இவ்வாறு கிறிஸ்து சபையில் வெளிப்படுவது நடைபெறுகிற வரையிலும், நீங்கள் எத்தனை சபைகளில் சேர்ந்தாலும் சாத்தான் கவலைப்படுவதில்லை. ஆனால் கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்றும், அவர் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள் என்றும் வெளிப்படுத்தும் போது, வேறு கிரியைகளை அல்ல, அவர் செய்த அதே கிரியைகளை... சாத்தான் கிரியை செய்ய ஆரம்பிக்கிறான். 149. “ .... என்னை விசுவாசிக்கிறவன்...'' யோவான் 14:12ல் “ என்னை விசுவாசிக்கிறவன், நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். நான் செய்த அதே கிரியைகளையும், அதைவிட மேலான கிரியைகளையும் செய்வான்'' என்று இயேசு கூறினார். இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகள்... ஏனெனில் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மிகப் பெரியதாயிருக்கும் என்று கிறிஸ்து தாமே பிரசங்கிக்க முடியாது. இயேசுவால் பரிசுத்தாவியின் அபிஷேகத்தைக் குறித்த செய்தியை கொண்டு வரமுடியவில்லை. ஏனெனில் பரிசுத்த ஆவி அப்பொழுது அருளப்பட்டிருக்கவில்லை. ஆனால் இயேசு வந்து தனது ஜீவனை தியாக பலியாக்கியபோது, பரிசுத்த ஆவியானவர் திரும்பி வர முடிந்தது. அதன்பின்பு, அவர்கள் ஜனங்களுக்கு நித்திய ஜீவனைக் குறித்து பிரசங்கிக்க முடிந்தது. இதுதான் “ பெரிய கிரியைகள்'' ஆகும். 150. ஆனால் அற்புத அடையாளங்கள் விசுவாசியைத் தொடரு வதைப் பற்றி இயேசு தெளிவாகச் சொன்னார், மாற்கு சுவிசேஷம் 16ம் அதிகாரத்தில், “ உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' என்று கூறினார். எது வரைக்கிலும் போக வேண்டும்? உலகமெங்கும் போக வேண்டும். யாருக்கெல்லாம் பிரசங்கிக்க வேண்டும்? சர்வ சிருஷ்டிக்கும் பிரசங்கிக்க வேண்டும். சுவிசேஷமானது எது வரைக்கிலும் பிரசங்கிக்கப்படுகிறதோ, அது வரையிலும் இந்த அடையாளங்கள் விசுவாசிக்கிறவர்களை பின்தொடரும். சகோதரனே, அது வெளிப்பாடாக ஆகி வரும்போது, அப்பொழுது நீங்கள் இராஜ்யத்திற்கு சமீபமாயிருக்கிறீர்கள். “ இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற் கொள்வதில்லை''. 151. ஏனெனில், மோசேயைப் போல், வனாந்தரத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள எந்த ஒரு மனிதனுக்கோ, அல்லது மனுஷிக்கோ தேவனுடைய வெளிப்பாடு பரிசுத்த ஆவியின் மூலமாக பிரத்தியட்சமாக்கப்படுகிறது. ஆகையால் அவன் அசைக்கப்படுவதில்லை. அவன் அப்பொழுது, எவ்வளவு தெளிவாகவும், உறுதியாகவும் இருக்க முடியுமோ அந்த அளவுக்கு ஆகிவிடுகிறான். 152. சாத்தான் வெளிப்பாட்டை வெறுக்கிறான். அவன் அதை விரும்புவதே கிடையாது. அது அவனது திட்டத்தையெல்லாம் கவிழ்த்துப் போடுகிறது. 153. இந்தப் புத்தகத்தின் தன்மையை ஆராயும்போது, யோவான் அதை எழுதவில்லை என்பதாக காண்பிக்கிறது. அது சரிதான். அதாவது யோவானின் சொந்த எழுத்துக்கள் அல்ல, அதாவது இதன் ஆக்கியோன் யோவான் அல்ல. ஆனால் யோவான் தான் அதை எழுதினான். ஆனால் அவை அவனுடைய ஊக்க உணர் வல்ல. அவைகள் தேவனுடைய ஆவியினால் ஊக்க மூட்டப்பட்டவையாகும். அதுதான் அப்புத்தகத்தை எழுதியது. 154. நல்லது, வசனம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும் கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது'' வெளி.1:3 155. இப்பொழுது, “ காலம் சமீபமாயிருக்கிறது'' என்ன? இயேசு கிறிஸ்துவைப் பற்றிய முழுமையான வெளிப்பாடு அவரது சபைகளுக்கு தெரியப்படுத்தும் போது, காலம் சமீபமாயுள்ளது. காலங்கள் செல்லச் செல்ல, அது அவர்களுக்கு வெளிப்படுகிறது. 156. நாம் இப்பொழுது சரியாக கடைசி காலத்தின் முடிவில் இருக்கிறோம். எனவே நாம் இப்பொழுது உண்மையிலேயே உலகத்தின் இறுதிக் காலத்தில் இருக்கிறோம். இந்த வாரம் முடிவுபெறு முன்னர், தேவன் நம்மோடு இருக்கிறபடியால், அவரது உதவியைக் கொண்டு, நாம் தாமே சபைக் காலங்களின் முடிவில் இருக்கிறோம் என்பதை நிரூபிப்போம். நாம் தாமே இப்பொழுது பிலதெல்... லவோதிக்கேயா சபையின் காலத்தில் இருக்கிறோம். இக்காலமானது எல்லா காலங்களின் முடிவாக இருக்கிறது. அரசியல் உலகத்தின் முடிவில் நாம் இருக்கிறோம். இயற்கையான உலகத்தின் முடிவில் நாம் இருக்கிறோம். எல்லாம் முடிவடையும் தருவாயில் நாம் இருக்கிறோம். லௌகீக காரியங்கள் எல்லாவற்றின் முடிவிற்குள் நாம் வந்துவிட்டோம். முடிவில்லாத ஒன்றுக்குள் பிரவேசிக்க ஆயத்தமாக இருக்கிறோம். 157. நான் அன்றொரு நாள் ஷ்ரீவ்போர்ட் அல்லது வேறு எங்கோ போய்க் கொண்டிருக்கையில், நான் எல்லாவற்றையும் பார்த்து, “ மரங்கள் யாவும் செத்துக் கொண்டிருக்கின்றன, புற்கள் சாகின்றன, மலர்கள் சாகின்றன, நான் மரித்துக் கொண்டிருக்கிறேன். உலகமானது மரித்துக் கொண்டிருக்கிறது. யாவும் மரித்துக் கொண்டிருக்கின்றன, உலகத்தில் உள்ள யாவும் மரித்துக் கொண்டிருக்கின்றன'' என்று கூறினேன். இந்த காலை வேளையில் இங்கே அமர்ந்திருக்கிற நாம் யாவரும் மரித்துக் கொண்டேயிருக்கிறோம். 158. நிச்சயமாகவே ஏதோ ஒரு இடத்தில் ஒரு உலகம் உள்ளது, அங்கே ஒன்றும் மரிப்பதில்லை. யாவும் மரித்துக் கொண்டிருக்கிற ஓர் உலகம் உண்டென்றால், ஒன்றுமே மரணமடையாத உலகம், என்றுமே ஜீவித்துக் கொண்டிருக்கும் உலகம் ஒன்று இருக்கத் தான் வேண்டும். அப்படிப்பட்ட உலகைத் தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம், அங்கே மரங்கள் முதற்கொண்டு யாவும் அழியாமல் நிலைத்து நிற்பவையாகும். யாவும் அழியாமையைத் தரித்துக் கொண்டிருக்கும் அவ்வுலகுக்கு, தேவ மகிமையினால் நிலைபெற்றிருக்கும் அவ்வுலகுக்குப் போகப் போகிறோம். 159. வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தின் முதலாம் அதி காரத்தின் முதல் மூன்று வசனங்களில் உள்ள அடிப்படையான காரியங்களை சற்றுத் திரும்பிப் பார்ப்போம். 1ம் வசனம் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல். 2ம் வசனம், ஒரு தூதனால் யோவானுக்கு இது அருளப்பட்டதைப் பற்றி கூறுகிறது. 3ம் வசனம் ஆசீர்வாதங்களை உரைக்கிறது. இதை வாசிக்கிறவர்களுக்குரிய ஆசீர்வாதங்களைக் கூறுகிறது. இதை உங்களால் வாசிக்க முடியாவிட்டால், இதை வாசிக்க கேட்டாலும் ஆசீர்வாதம் உண்டு. “ இதை வாசிக்கிறவன் பாக்கியவான்'' உங்களால் படிக்க இயலாது என்றால், “ இதை வாசிக்கக் கேட்கிறவனும் பாக்கியவான், காலம் சமீபமாயிருக்கிறது. 160. யோவான், இதை வாசிக்கிறவனும், இதை வாசிக்கக் கேட்கிறவனும் பாக்கியவான் என்று எழுதுகிறான். இதைக் குறித்த அர்த்தம் என்னவெனில், நான் இதைப் பற்றி கருதுவது என்ன வெனில், பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஆசாரியன் ஒவ்வொரு நாள் காலையிலும் வேத வாக்கியங்களை வாசிக்கும்படி எழுந்து நின்று வாசிப்பான், அதை சபையார் வாசிக்கக் கேட்பர். அந்நாட்களில் அநேகருக்கு வாசிக்கத் தெரியாது. எனவே தான் அவர் சொன்னார், “ இதை வாசிக்கிறவனும், இதை வாசிக்கக் கேட் கிறவனும் பாக்கியவான்'' என்று. வாசிக்கிறவனும், வாசிக்கக் கேட்கிறவனும் என்பதைப் பாருங்கள். இதை வாசிக்கிறவனும், அதை வாசிக்கக் கேட்கிறவனும் பாக்கியவான். எனவே, நீங்கள் அமர்ந்து, இதை வாசிக்கக் கேட்டாலே ஆசீர்வதிக்கப்படுவீர்கள். “ இதை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும் பாக்கியவான்,'' காலம் சமீபமாயிருக்கிறது. 161. இப்பொழுது 4 முதல் 6 முடிய உள்ள வசனங்கள் சபைக்கு வாழ்த்துத் தெரிவித்தலை யுடைதாயிருக்கின்றன. இப்பொழுது 4ம் வசனம் முதல் 6ம் வசனம் முடிய நாம் எடுத்துக் கொள்வோம். 162. இவ்வசனங்களை நாம் ஆராயும் முன்பு, நீங்கள் நன்கு சிந்தித்துப்பார்க்க நான் விரும்புகிறேன். அது என்ன வாயிருக்கிறது? அது இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப் படுத்துதலாயிருக்கிறது. அங்கே தேவன் காலத்திரையை நீக்கிக் காண்பிக்கிறார். இயேசு இப்பூவுலகில் இருக்கையில், காலத்திரை இருந்தது. எனவே அவரால் காலத்திற்கு அப்பால் பார்க்க முடியவில்லை - சபைக் காலங்களையும், அவைகளில் என்ன சம்பவிக்கும் என்பவைகளையும். எனவே, தேவன் அத்திரையை நீக்கினார், அதை முன் கூட்டியே நீக்கி, ஒவ்வொரு சபைக் காலத்திலும் என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை உள்ளே சென்று காணும்படி யோவானுக்கு அருளினார். அவன் அவைகளைப் பார்த்து, அதை ஒரு புத்தகத்தில் எழுதி ஏழு சபைகளுக்கு அனுப்பினான். 163. அது என்ன? கிறிஸ்து, தான் கிரியை நடப்பிக்கும் தனது நாட்களுக்குள்ளாக வெளிப்படுத்தப்படுகிறார். இப்புத்தகம் முழுவதும் அவரது கிரியை முழுவதும் நிறைந்ததாக உள்ளது. இது கிறிஸ்து அளித்த ஒரு தீர்க்கதரிசன புத்தகமாகும். தேவன் தனது தூதனைக் கொண்டு யோவானுக்கு சொல்லியனுப்பி, யோவான் எழுதித் தந்தது இப்புத்தகம். இதை வாசிக்கிற, கேட்கிற எவருக்கும் ஆசீர்வாதமுண்டு, இவை யாவும் நிறைவேறுகை யில், காலமானது சமீபித்துவிடும். 164. இப்பொழுது, நமக்கு ஒரு நல்ல அடிப்படை கிடைத்து விட்டது. நாம் சபையை சிந்தையில் கொண்டுள்ளோம் என்பதை நினைவு கூருங்கள். ஒரு பக்கத்தில் சபையானது ஆரம்பிக்கிறது. மற்றொரு பக்கத்தில் சபையானது முடிவடைகிறது. திங்கள் இரவில் நாம் சபைக் காலங்களைக் குறித்து படிக்கையில் இன்னும் விபரமாகப் பார்ப்போம். “ யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது; இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்... உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக'' வெளி.1:4-5 165. இப்பொழுது, இப்பாகத்திலுள்ள அடையாளச் சின்னங் களில் இரகசியமான, ஆழமான காரியங்கள் அடங்கியுள்ள பகுதிக்குள் நாம் போய்க் கொண்டிருக்கிறோம். ஆசியா மைனரிலுள்ள ஏழு சபைகளுக்கும் இது எழுதப்பட்டுள்ளது. அவர்களுக்கு எழுதப்பட்டிருந்த அக்காலங்கள், அவர்களுடைய எதிர்வரும் காலங்களில் வரவேண்டியிருந்தது. அவர் அவர்களை அவர்களுடைய கிரியைகளுக்காகவும், அவர்கள் செய்த வைகளுக்காகவும், போற்றி புகழுகிறார். ஆனால் ஆசியா மைனரிலுள்ள ஏழு சபைகளுக்கும் இது கூறப்பட்டுள்ளது. 166. ஆசியா மைனர் என்ற பிரதேசமானது, முழு ஆசிய கண்டமல்ல. அதிலுள்ள ஒரு சிறு பிரதேசமாகும். ஆசியா மைனர் என்பது, அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா அல்லது இந்தியானா மாநிலத்தின் அளவுக்கொப்பாயுள்ள பரப்பளவைக் கொண்ட ஒரு பகுதியாகும். இச்சிறிய பிரதேசத்தில் தான் அவ்வேழு சபைகளும் அமைந்திருந்தன. அக்காலத்தில், இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அவ்வேழு சபைகளில் காணப்பட்ட தன்மை அல்லது குணாதிசயம், ஏழு சபைக் காலங்களிலும் வரப்போகும் சபைகளின் தன்மையை பிரதிபலித்து வெளிப்படுத்து கிறதாயிருந்தன. அதைக் குறித்ததான வரலாற்றுக் குறிப்பிலிருந்து நான் இப்பொழுது இங்கே படிக்கவிருக்கிறேன். 167. இதை வாசிக்கக் கேட்டும், கவனிக்காதவன் சபிக்கப்பட்டவன்''. 168. 4ம் வசனத்திலிருந்து ஒரு காரியத்தை விளக்கிக் கூறும் கட்டத்திற்கு நாம் வந்திருக்கிறோம். “ ... இருக்கிறவரும், இருந்தவரும், வருகிறவருமானவராலும், அவருடைய சிங்கா சனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்...'' இப் பொழுது, இந்த “ ஆவிகள்'' என்பதைப் பற்றி பின்னால் பார்ப்போம். 169. 7ம், 8ம் வசனங்களிலும் கூட மீண்டும் ஏழு சபைகளுக்கு கூறப்படுவதைக் கவனியுங்கள். “ இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய...'' (ஒரு சமயத்தில்) இருந்தவரும், இப் பொழுது இருக்கிறவரும், மற்றும் வருகிறவருமானவர். இங்கே தானே அவர், தனது கிரியையின் மூன்று விதமான தோற்றத்தை தெரியப்படுத்துகிறார். 170. இதைக் குறித்து இன்னும் ஒரு நிமிடத்தில் பார்ப்போம். ஆனால் 8ம் வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நான் அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம் பற்றுகிறார். வெளி. 1:8 171. இப்பொழுது நாம் 4,8 ஆகிய வசனங்களைக் கருத்தில் எடுத்துக் கொள்ளுவோம். இரண்டும் ஒரே கருத்தையுடையவை. இரண்டும் ஒன்றே. “இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர்'' என்று அவர் கூறுகிறார். சபைக்கு முன்பாக தேவன் எதை வைக்க விரும்புகிறார்? தனது தெய்வீகத்தை! இன்றைக்கு மக்கள் அவரை வெறும் ஓர் தீர்க்கதரிசியாக வருணிக்க விரும்புகின்றனர். அவர் தீர்க்கதரிசியை விட மேலானவர். வேறு சிலர் அவரை மூன்று தேவர்களாக்க முயலுகின்றனர். அவர் மூன்று தேவர்களல்ல. அவர் ஒரே தேவன், மூன்று வித அலுவல்களில் ஜீவிப்பவர். ஒரே தேவனின் மூன்று வித தோற்றங்கள். 172. இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், இதுதான் அந்த வெளிப்படுத்துதலாயிருக்கிறது, “ ... கேட்கிற எவனும், இப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகளை கைக்கொள்ளாமற்போனால், ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனது பங்கு எடுத்துப் போடப்படும்''. இயேசு தன்னை இங்கே மூன்று தேவர்களாக வெளிப்படுத்திக் காண்பிக்கவில்லை. ஆனால் ஒரே தேவனும் மூன்று அலுவல்களும், ஓ! சிறிது நேரத்தில் இதைப் பற்றிய காரியமானது, இன்னும் சீரிய முறையில் உன்னதமாக இருக்கப் போகிறது. அப்பொழுது, நாம் அந்த சபைக் காலங்களுக்குள் சென்று, எப்பொழுது இந்த உன்னத வெளிப்பாட்டை அவர்கள் இழந்தார்கள் என்று காணப் போகிறோம். தேவத்துவத்தைக் குறித்த விஷயம் நிசாயா ஆலோசனை சங்கத்தில் ஒரு பெரிய பிளவுண்டாக காரணமாயிருந்தது. இரு மாறுபட்ட கருத்துக் களையுடையவர்கள் தங்கள் தங்கள் கொள்கைகளின் தீவிரப் போக்கில் பிரிந்து சென்றனர். 173. இக்கடைசி நாட்களிலும் அவர்கள் அதே காரியத்தைத் தான் மீண்டும் செய்திருக்கிறார்கள், மீண்டும் நிசாயா ஆலோசனை சங்கத்துக்கு முன்பிருந்த காலம் போல, ஏனெனில் மீண்டும் வேறொன்று வரப்போகிறது; நான் இங்கே நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமாக உள்ளதோ, அதே விதமாக கத்தோலிக்கரும், பிராடெஸ்டெண்டுகளும் ஒன்றாக இணைந்து ஏதாவதொன்றில் ஒத்துப் போகப் போகிறார்கள். காண்டர்பெரி ஆர்ச் பிஷப்பை கவனியுங்கள். யாவும் ஒன்று சேர குவிந்து கொண்டிருக்கிறது. யாவும் ஒன்று சேர குவிந்து கொண்டிருக்கிறது. வேதத்தில் திரித்துவ தேவனைப் பற்றி உபதேசம் இல்லவே இல்லை. ஒரே ஒரு தேவன் தான் உண்டு. 174. அது தானே வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதினால், முழு வேதப்பிரமாணமும் நிரூபிக்கப்பட்டு, கிறிஸ்து அதின் மேல் தன் முத்திரையைப் பதிக்கிறார். அதுதான் இது. இதனோடு யாராவது ஒன்றைக் கூட்டினாலோ அல்லது இதிலிருந்து எடுத்துப் போட்டாலோ, ஜீவபுஸ்தகத்திலிருந்து அவன் பெயர் நீக்கப்படும். எனவே, இப்புத்தகத்தை சுயநலமில்லாமல், திறந்த மனதுடன், திறந்த சிந்தையுடன் அணுகுங்கள். 175. ஆதி சபையில் இருந்த சபை பிதாக்களில் அநேகர், நிசாயா ஆலோசனை சங்கத்தில், இரு மாறுபட்ட பெரும் கருத்து வேறுபாடுகளுக்குள் போனார்கள். அவர்கள் தங்களுக்குள் இரு முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளுக்குள் போனார்கள். ஒன்று திரித்துவ தேவனை நம்புகிற திரித்துவக் கொள்கை. இன்னொன்று ஒருத்துவக் கொள்கை. அவ்விருக் கொள்கைக்காரர்களுமே இன்றும் நீடித்திருக்கிறார்கள். அவையிரண்டும் இரு நேர் கோடுகளைப் போல் ஒன்றையொன்று சந்திக்காமல் பிரிந்தே செல்லுகின்றன. திரித்துவமானது, மூன்று தனித்தனி ஆட்களாகிய தேவர்களைக் குறித்தது. மற்றொன்று ஒருத்துவக்காரர்களாவர். ஒன்று அடுத்ததைப் போன்றே தவறானது. எனவே அவர்கள் இருவருமே இரு நேர்கோடுகள் போல பிரிந்தே செல்கின்றனர். ஆனால் இங்கோ சத்தியமானது வெளிப்படுகிறது. 176. இயேசு தாமே தம்முடைய சொந்த பிதாவாக இருக்க முடியாது. அல்லது... பரிசுத்தாவியையன்றி, பிறிதொரு பிதா இயேசுவுக்கு இருப்பாரெனில், அப்பொழுது, அவர் முறை தவறிப் பிறந்த குழந்தையாகிவிடுவார். ஏனெனில் பரிசுத்தாவியினால் தான் அவர் உற்பவித்தார். தேவனே தனது பிதா என்று இயேசு கூறினார். எனவே, பரிசுத்தாவியானவரும், தேவனும்... அது மத்தேயு 1:18. எனவே இதின்படி பரிசுத்தாவியானவரும், தேவனும் ஒரே நபராகத்தான் இருக்க வேண்டும். அப்படியில்லை யென்றால் இயேசு இரு தந்தைகள் உடையவராகிவிடுவார். அப்படியல்ல. இயேசு "இம்மானுவேல்'' என்று அழைக்கப் பட்டார். அதற்கு “ தேவன் நம்மோடிருக்கிறார்'' என்று அர்த்தமாம். இயேசு இப்பூவுலகில் இருந்த போது, 'நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்'' என்று கூறினார். 177. நான் இது சம்மந்தமாக அனைத்து வேத வாக்கியங்களையும் இங்கு எழுதி வைத்துள்ளேன். ஏனெனில் இதைக் குறித்து உங்களுக்கு கேள்விகள் ஏதாகிலும் உண்டென்றால் அதற்குரிய பதிலைக் காணலாம். 178. இங்கே, அவர், “இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமானவர், சர்வ வல்லமையுள்ள கர்த்தர்'' என்று இவ்வாறாக அவரது மூன்று விதமான அலுவல்களைக் குறித்து தன்னை பிரத்தியட்சப்படுத்திக் காண்பிக்கையில், அவரை நீங்கள் அங்கே மூன்று தேவர்களாக உருவகப்படுத்திக் கொள்ள முடியாது. ஒரே தேவன் தான் உண்டு. 179. ரோமானிய தேசங்களில், அவர்களுக்கு, பல தேவர்கள் உண்டு என்ற நம்பிக்கை இருந்தது. எனவேதான், நிசாயா ஆலோசனை சங்கத்தில் அவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட தேவர்கள் உண்டு என்ற கொள்கையைச் சொல்லுகிற திரித்துவக் கொள் கையை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் இறந்து போன தங்கள் மூதாதையர்களிடம் வேண்டுதல்கள் ஏறெடுத்தார்கள். (இப்பொழுது, இங்கே என்னிடம் அவர்களது வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன, அவைகளிலிருந்து நான் மேற்கோள் காட்ட முடியும்). ரோமானியர்கள் இறந்து போன தங்களது மூதாதை யர்களிடம் வேண்டுதல் செய்யும் மூட நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள். அதினால் தான் அவர்கள் கிறிஸ்தவத்தை தழுவிய போதும், தங்களுக்கு தங்களுடைய பழைய அஞ்ஞானக் கொள்கையின்படியே, கிறிஸ்துவத்திலும், பரிசுத்த சிசிலியா, பரிசுத்த மார்கஸ், இன்ன பரிசுத்தவான், இன்ன பரிசுத்தவான் என்று, இவ்வாறு பரிசுத்தவான்களை மத்தியஸ்தர்கள் என்று கூறி பரிசுத்தவான்களிடம் வேண்டுதல் செய்யும் மூட நம்பிக்கையை உள்ளே புகுத்தினார்கள். 180.அப்போஸ்தலனாகிய பேதுருவும் “தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே, அவர் மனுஷனாகிய கிறிஸ்து இயேசு...'' என்று கூறினான். ஒருவன் தான். 181. அவர்களுக்கு திரித்துவ தேவன் இருக்க வேண்டியதா யிருந்தது. ஏனெனில், ஏற்கனவே அவர்களது அஞ்ஞான மதத்தில் அவர்களுக்கு ஜூபிடர், மார்ஸ், வீனஸ் என்ற தேவர்கள் உண்டு. “ எல்லாம் ஒரே தேவனுக்குள் இருந்தது என்று ஒரே தேவன் மேல் எல்லாவற்றையும் சுமத்தக் கூடாது'' என்று அவர்கள் கூறி, தேவனை மூன்று, ஆட்களாக, அதாவது, தேவன் மூன்று அலுவல்களில் தன்னை வெளிப்படுத்துகிறார் என்பதற்குப் பதிலாக, தேவனை மூன்று கூறாக்கி, அவரை மூன்று வெவ்வேறு ஆட்கள், மூன்று தேவர்கள் என்று பிரித்தார்கள். 182. ஆனால் இங்கே வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில் அவர் தன்னை யார் என்று தெளிவாகக் கூறுகிறார். இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமான சர்வ வல்லமையுள்ள கர்த்தர்'' இதை பற்றி இன்னும் சிறிது நேரத்தில் பார்ப்போம். அவர், ''நான் அல்பாவும் ஓமெகாவும்'' என்று கூறினார். A முதல் B முடிய உள்ள அனைத்தும் இவரே. (அல்பா முதல் ஓமெகா முடிய - இது கிரேக்க மொழி அகர வரிசையாகும்). “ பள்ளத்தாக்கின் லீலி, சாரோனின் ரோஜா, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர், தாவீதின் வேரும் சந்ததியுமானவர்''. அவரே தேவன். 1தீமோத்தேயு 3:16, “ அன்றியும், தேவ பக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிற படியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார். ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார். தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார். மகிமையிலே ஏறெடுத்துக் கொள்ளப்பட்டார்.'' தேவன்! அவர் மூன்றாவதான ஆள், அல்லது வெறும் ஒரு தீர்க்கதரிசியல்ல, தேவன் தாமே மனித உருவத்தில் தோன்றிய காரியம் அது. இதைப் பற்றிய விஷயம் வெளிப்படுத்துதலினால் தான் வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 183. தேவன் ஆதியில் மகத்தான யேகோவாவாக, இஸ்ரவேலுக்கு மேலாக அக்கினி ஸ்தம்பத்தில் நின்று அவர்களை நடத்தினார். அவர் தேவன், உடன்படிக்கையின் தூதனானவர். அவர் மலையின் மேல் இறங்கி வந்தபோது, மலை தீப்பற்றிக் கொண்டது, மலையிலிருந்து அக்கினி புறப்பட்டு வந்து, அந்தப் பத்துக் கற்பனைகளை எழுதிற்று. அப்பேற்பட்ட தோற்றத்தோடு பிரத்தியட்சமானது போது, அது “ தேவனின் பிதா தன்மை '' என்று யூதர்களாகிய அவரால், தெரிந்து கொள்ளப்பட்ட அவரது ஜனங்களால் அழைக்கப்பட்டது. 184. பின்பு, அதே தேவன் தானே, மரியாளின் கர்ப்பத்தில் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு சரீரத்தை எடுத்து கன்னிப்பிறப்பில் பிறந்து பிரத்தியட்சமானார். (முன்பு செய்தது போல) மானிட வர்க்கத்தின் நடுவில் அவர் ஜீவித்து தனது கூடாரத்தை ஸ்தாபித்தார். அதே தேவன் தாமே மாம்சமாகி நம்மிடையே வாசம் பண்ணினார். “ கிறிஸ்துவில் தேவன் இருந்தார்'' என்று வேதம் கூறுகிறது. சரீரம் இயேசுவாயிருந்தது. இயேசுவாகிய அவருக்குள் சரீரப் பிரகாரமாக தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் வாசமாயிருந்தது. இப்பொழுது நீங்கள் அவரை மூன்று ஆட்களாக கூறு போட முடியாது. மூன்று தேவர்களுக்கென்று ஞானஸ்நானம் கொடுக்காதீர்கள். ஒரேயொரு தேவன் தான் உண்டு. பார்த்தீர்களா? தேவன் ஒருவரே. அந்த ஒரே தேவன் தான் மாம்சமானார். அவர் கூறினார், ''நான் தேவனிடத்திலிருந்து வந்தேன். தேவனிடத்திற்குத் திரும்பிப்போகிறேன்.'' 185. அவரது மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் இவற்றின் மூலம் உலகிலிருந்து மறைந்து போன அவர், தமஸ்குவுக்கு போகும் வழியில் பிரயாணமாயிருந்த பவுலை சந்தித்து, அவனை “ சவுலே'' என்று அழைத்தார். ஒரு சப்தம் வந்து, “ சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?'' என்று கேட்டது. 186. அதற்கு அவன், 'ஆண்டவரே நீர் யார்? என்றான்''. 187. 'அதற்கு கர்த்தர்... இயேசு நானே'' என்றார். 188. அவர் அக்கினி ஸ்தம்பமாக இருந்தார். அவ்வொளி அந்த அப்போஸ்தலனின் கண்களை குருடாக்கியது. அதே இயேசுவானவர் பிதாவாகிய தேவனிடத்திற்குத் திரும்பிச் சென்றார். எனவேதான், “ நான் சர்வல்லமையுள்ள கர்த்தர்'' என்று கூறினார். அவர் தாம் மாம்சமானதற்கு முன்பாக இருந்த அதே சாயலுக்கு திரும்பிவிட்டார். அவர் வாழ்ந்த அந்த சரீரம் - இயேசு என்று அழைக்கப்பட்ட, நாம் அறிந்துள்ள அம்மனிதன். 189. பிரிய ஒருத்துவக் கொள்கைக்காரரே! நீங்கள் வெறும் “ இயேசு'' வின் நாமத்தில் மட்டும் ஞானஸ்நானம் கொடுக்கிறீர்கள். அதன் மூலம் நீங்கள் தவறு செய்கிறீர்கள். இன்று உலகில் நூற்றுக்கணக்கான இயேசு என்னப்பட்ட நபர்கள் உண்டு. ஆனால், ஒரேயொரு “ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து'' தான் உண்டு. அவர் கிறிஸ்துவாகப் பிறந்தார். இயேசு என்ற பெயருடைய அநேக மனிதர்களை நானே சந்தித்திருக்கிறேன். ஆனால் ஒரேயொரு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் உண்டு, அவரே தேவன். 190. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பவை நாமங்கள் (பெயர்கள்) அல்லவே அல்ல. அவைகள் பட்டப் பெயர்கள் (வகிக்கும் பதவிக்கான உத்தியோகங்கள்) தாம். அவைகளுக்கு ஒரேயொரு நாமம் (பெயர்) உண்டு. குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் “ பிதா கொடுங்கள்'' என்று கூறும்போது. பிதா என்பது ஒரு பெயர் அல்ல, குமாரன் என்பதும் ஒரு பெயர் அல்ல, பரிசுத்த ஆவி என்பதும் ஒரு பெயர் அல்ல. அவைகள் ஒவ்வொன்றும் வகிக்கும் பதவியைக் குறித்த ஒரு பட்டம்தான். “ மானிடன்'' என்று கூறினால் அது எப்படி ஒரு பெயர் என்றில்லாமல், வெறும் பட்டமாகத் தான் இருக்கிறதோ, அவ்வாறு ஒரு பட்டம்தான். பரிசுத்த ஆவி எனும்போது, ஒரு மானிடன், அல்லது ஒரு ஆவி என்று சொன்னால் அதில் எவ்வாறு பெயர் என்று ஒன்று இல்லையோ, எவ்வாறு அது ஒரு வெறும் பட்டமாக இருக்கிறதோ, அவ்வாறே அது உள்ளது. பரிசுத்த ஆவி. “ பிதாவின் நாமத்தில்'' என்று கூறும்போது, இங்குள்ள பிதாக்களைப் பாருங்கள், உங்கள் குமாரர்களுடைய குமாரர்களைப் பாருங்கள். இங்குள்ள மானிடரைப் பாருங்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது ஒரு பெயர் அல்லவே அல்ல. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்ற நாமத்திற்கு உள்ள பட்டங்கள்தான் அவை. 191. அப்போஸ்தல சபையானது ஆதியில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தான் ஞானஸ்நானம் கொடுத்தது. கத்தோலிக்க சபையானது நிறுவப்பட்டு, அவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற திரித்துவக் கோட்பாட்டை ஏற்படுத்தி, “ பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம்'' என்று கொடுக்க ஆரம்பிக்கிற வரையிலும், அதற்கு முன் இருந்த சபையானது, “ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்'' தான் ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்கள். அவர்கள் இவ்வாறு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஆதி சபையில் ஞானஸ்நானம் கொடுத்து வரவில்லை, வேறு விதங்களில்தான் ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்று நிரூபிக்க நீங்கள் ஏதாவது ஒரு வேதவாக்கியத்தையோ, அல்லது அது சம்மந்தமான வரலாற்று சான்றையோ, உங்கள் கூற்றை நிரூபிக்க கொண்டு வாருங்கள் பார்க்கலாம் என்று நான் அறைகூவல் விடுக்கிறேன். வரலாற்று ஆசிரியர்களே, நீங்கள் உங்கள் வரலாறுகளைக் கொண்டு வாருங்கள் பார்க்கலாம். அவ்வாறு அவர்கள் கொண்டு வருவதற்கு அவர்களுக்கு சான்று ஏதும் இல்லை என்பதுதான் உண்மையாகும். கி.பி.304க்குப் பின்பு, “ தேவனாகிய பிதா, தேவனாகிய குமாரன், தேவனாகிய பரிசுத்த ஆவி' என்று மூன்று தேவர்களுக்காக, திரித்துவ ஞானஸ்நானமானது வந்தது. அது சுத்த அஞ்ஞானக் கொள்கையாகும். 192. இந்த வாரம் முடியும் முன்பு, நான் உங்களுக்கு இதைப் பற்றிக் கூறுகிற புத்தகங்களிலிருந்து வாசித்ததும், வேதத்திலிருந்தும் அதை நிரூபிப்பேன். இன்று காலையில் நாம் வெளிப் படுத்துதலைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். அது எங்கே வருகிறது என்றும், எவ்வாறு அது காலங்கள் தோறும் நிலை பெற்று வந்திருக்கிறது என்பதைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறோம். சகோதரனே! சத்தியத்திற்கு திரும்பு. நாம் கடைசி நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 193. எபேசு சபைக்கு நாம் வரும் வரைக்கும் காத்திருங்கள். அதை நாம் லவோதிக்கேயா சபை காலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து இவ்விரண்டு காலங்களின் நடுவில் என்ன சம்பவித்தது என்பதைப் பற்றிப் பார்ப்போம். எவ்வாறு அந்த உபதேசம் உள்ளே நுழைந்தது என்பதைப் பார்ப்போம். லூத்தரின் காலத்தில் கள்ள உபதேசம் நுழைந்த போது, “ நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. சர்தை என்ற வார்த்தைக்கே “ மரித்துப் போன '' என்று அர்த்தம். 1500 ஆண்டுக்கால இருண்ட காலத்தினூடே அவர்கள் சத்தியத்தை இழந்தார்கள். அது வரைக்கிலும் அக்காலத்தில் ஒவ்வொரு சபையும் அவ்வுபதேசத்தைக் கொண்டிருந்தனர். கி.பி.325ல் நிசாயா ஆலோசனை சங்கத்தில், அவர்கள் அந்த நாமத்தை அகற்றி விட்டு, அதிலிருந்து மூன்று தேவர்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். 194. “ இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நானே'' என்று அவர் இங்கே கூறுகிறார். 195. நிச்சயமாகவே, அவர் இப்பூமியில் மூன்று விதமான தொழில்களையுடையவராகக் காணப்பட்டார். அவர் இப்புவியில் இருந்த போது, மூன்று விதமான தொழில்களையுடையவராக இருந்தார். பூமியில் அவர் தீர்க்கதரிசியாக இருந்தார். அவர் பரலோகத்தில் ஆசாரியனாக இருக்கிறார். அவர் பூமிக்குத் திரும்பி வருகையில் அவர் இராஜாவாக இருப்பார். தீர்க்கதரிசி, ஆசாரியன், இராஜா, இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர். “ இருந்தவர்'' என்றால் ஒரு தீர்க்கதரிசியாக விளங்கிய இயேசு வாகும் அது. “ இருப்பவர்'' என்றால் ஆவிக்குரிய பலிகளை செலுத்தி வரும் நமது மகா பிரதான ஆசாரியர் அவர். அவர் நமது பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கும் ஆசாரியனாவார். அவர் நமது மத்தியில் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தி அதை நிரூபிக்கிறார். தீர்க்கதரிசி, ஆசாரியன், மற்றும் இராஜா. ஆனால் ஒரேயொரு தேவன் தான். 196. அவர் இப்புவியில் இருந்தபோது வார்த்தையாகிய தீர்க்கதரிசியாக இருந்தார். சற்று பின்னால் வெளிப்படுத்தின விசேஷத்தில் வேதமானது அவரை உண்மையுள்ள சாட்சி என்று அழைக்கிறது. “ உண்மையுள்ள சாட்சி என்பது தீர்க்கதரிசியைக் குறிக்கும். அவர் ஆசாரியனாயிருக்கிறார், அவர் வருகையில் அவர் இராஜாவாயிருப்பார். 197. நீங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 15:3ல் படிக்கையில் அங்கே பார்க்கலாம்... நாம் அந்த வசனத்தை எடுத்து படிப்போம். அவர் இராஜாவாக இருப்பார் எனில், அவர் வருகையில் அவர் ராஜா என்று இருக்குமானால்... வெளிப்படுத்தின விசேஷம் 15ம் அதிகாரம் 3ம் வசனம். ''அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்த வான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும், சத்தியமுமானவைகள்''. வெளி. 15:3 198. அவர் பூமியில் இருக்கையில் என்னவாக இருந்தார்? தீர்க்கதரிசியாக இருந்தார். அவர் தீர்க்கதரிசி என்பதை ஜனங்கள் எவ்வாறு கண்டு கொண்டார்கள்? அவர் மேசியாவின் அடையாளத்தைச் செய்தார். அது தீர்க்கதரிசிக்குரியதாகும். ஓ, கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. அவர் வந்தபோது அவர்கள் அவரை எவ்வாறு அறிந்து கொள்ளாமல் போனார்கள்? அவர்கள் வேறு ஏதோ ஒன்றை எதிர்பார்த்து இருந்தார்கள். அவர் மேசியாவின் அடையாளத்தை செய்து காண்பித்த போதிலும் அவர்கள் அவருக்கு செவி கொடுக்கவில்லை. அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். 199. “ உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரி சியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார். அவருக்குச் செவி கொடுப்பீர்களாக'' என்று மோசே கூறினான். அந்தத் தீர்க்கதரிசிக்கு செவி கொடாதவன் எவனோ அவன் தன் ஜனங்களின் நடுவே இராதபடிக்கு அறுப்புண்டு போவான் என்று மோசே கூறினான். 200. அவர் இப்பூமியில் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். ஏன் அவ் வாறு இருந்தார்? “ தேவனுடைய வார்த்தைக்கு உண்மையுள்ள சாட்சியாக அவர் இருந்தபடியால். ஆமென்! அவர் மாம்சத்தில் பிரத்தியட்சமான தேவனுடைய வார்த்தையாவார். 201. யோவான் 1ம் அதிகாரம் 1ம் வசனம், 14ம் வசனம். “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி.... நமக்குள்ளே வாசம் பண்ணினார்”. 202. அவர் தாமே, தேவனுடைய நித்திய வார்த்தைக்கான உண்மையும் சத்தியமுள்ள சாட்சியாயிருந்தார். அவர் வார்த்தையாயிருந்தார். அவர் தேவனுடைய வார்த்தை யாயிருந்தார். அவர் வார்த்தையாயிருந்தபடியினால், அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தார். தேவனுடைய வார்த்தை அவருக்கு என்ன கூறிற்றோ அதை மட்டுமே அவர் பேச வேண்டியிருந்தது. “ பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார். அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்''. “ நானாக இந்தக் கிரியைகளைச் செய்யவில்லை, என்னில் வாசமாயிருக்கிற பிதாவே கிரியைகளைச் செய்கிறார். நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். என் பிதா என்னில் வாசமாயிருக்கிறார்'' என்று மனிதனாகிய, தேவனுடைய கூடாரமாகிய இயேசு கூறினார். 203. தேவனுக்கு அநேக பட்டங்கள் உண்டு. யேகோவா, யேகோவா-யீரே, யேகோவா-ராஃபா, யேகோவா-நிசி. ஓ, அநேகம் உண்டு. அவருக்கு மீட்பின் தன்மையையுடைய ஏழு கூட்டுப் பெயர்கள் உண்டு. அவருக்கு அநேக பட்டங்கள் உண்டு. சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலி, விடிவெள்ளி நட்சத்திரம், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இவையெல்லாம், ஆனால் அவருக்கு ஒரெயோரு மனுஷப் பெயர் உண்டு. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்ட போது, அவருக்கு இருக்கிற ஒரே யொரு மனிதப் பெயர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதாகும். 204. கர்த்தராகிய கிறிஸ்துவாக அவர் பிறந்த எட்டு நாட்கள் கழித்து, அவரை பரிசுத்த ஆவியானவர் ''இயேசு'' என்னும் நாமத்தினால் அழைத்தார். அவரது தாய் அவருக்கு விருத்தசேதனம் செய்தாள். அவரை பரிசுத்த ஆவியானவர் “ இயேசு'' என்று அழைத்தார். நான் ''பிரன்ஹாம்'' ஆகப் பிறந்து, ''வில்லியம்'' என நாமமிடப்பட்டது போல, அவர் "கிறிஸ்து'வாகப் பிறந்து, “ இயேசு'' என்று நாமம் சூட்டப்பட்டார். அவர் கிறிஸ்துவாகிய இரட்சகராகப் பிறந்து அதன் பின்பு, எட்டு நாட்கள் கழித்து, அவருக்கு “ இயேசு'' என்ற நாமம் சூட்டப்பட்டது. மேலும், அவர் மாம்சத்தில் பிரத்தியட்சமான மகிமையின் கர்த்தராமே. எனவே அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆவார். மகிமையின் தேவன் தாமே மாம்சத்தில் நமது மத்தியில் வெளிப்பட்டார். ஓ! அவர் அதோ அங்கே இருக்கிறார். 205. பூமியில் அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். மகிமையில் ஒரு ஆசாரியனாக இருக்கிறார். அவர் ராஜாவாக வருகிறார். ஓ! நான் அதை விரும்புகிறேன். தீர்க்கதரிசி, ''வார்த்தையின் உண்மையுள்ள சாட்சி''. அவர் ஆசாரியன்! “ தனது சொந்த இரத்தத்தைக் கொண்டு தேவனுக்கு முன்பாக நிற்கிறார்''. அவர் ராஜா; “ பரிசுத்தவான்களின் இராஜா' அவர். அவர் உலக மக்களின் இராஜா அல்ல. அவர் பரிசுத்தவான்களின் இராஜா, உலக மக்களுக்கு லௌகீக அரசர்கள் என்னப்பட்டவர்கள் உண்டு. ஆனால் நமக்கு ஒரு ராஜாவும், அதற்குரிய ஒரு இராஜாங்கமும் உண்டு. எனவே தான் நாம் வித்தியாசமான முறையில் செயல்படுகிறோம். 206. நானும் என் மனைவியும் பேசிக் கொண்டதைப் பற்றி சமீபத்தில் நான் கூறினேன். நானும் என் மனைவியும் ஒரு கடைக்குச் சென்றபோது, அங்கே ஏறத்தாழ ஒரு அற்புதத்தையே கண்டோம் என்று சொல்லலாம். அது ஒரு கோடைக் காலமாயிருந்தது. அங்கே ஒரு பெண்மணி ஒரு உடையுடுத்தியிருந்தாள். ''அது ஒரு ஆச்சரியமான காரியம்' என்றேன் நான். “ என்னிடம் ஒரு காமிரா இருந்தால், அப்பெண்மணியின் படத்தை நான் எடுப்பேன்'' என்றேன். ஏனெனில், ஒரு பெண் எவ்வாறு முறையாக ஒழுங்காக உடுத்த வேண்டுமோ அதற்கேற்ப அவள் கணுக்கால் வரையிலும் உள்ள நீண்ட ஆடையை உடுத்தியிருந்தாள். “ இப்படிப்பட்ட ஒழுங்கான ஆடையுடுத்திய ஒரு பெண்மணியை நான் இப்பொழுது தான் முதல் தடவையாகப் பார்க்கிறேன்'' என்றேன். அவள் ஒரு முதல் தரமான பெண்மணி. 207. என் மனைவி, என்னிடம், “ ஏன் பில்லி, நமது மக்கள் இவ்வாறு உடுத்துகிறார்கள், அவ்வாறு தான் உடுத்த வேண்டும் என்று நமக்கு கட்டளையுண்டா ?'' என்று கேட்டாள். 208. "அவர்கள் நம்முடைய மக்களல்ல, அவர்கள் தேவனுடைய மக்கள், தேவனுடைய மக்களுக்கு பரிசுத்தம் தேவைப்படுகிறது'' என்று நான் கூறினேன். 209. ''நல்லது, அவர்கள் சபைக்குச் செல்லுகிறார்களல்லவா?'' என்று கேட்டாள். 210. ''ஒரு குறிப்பிட்ட சபையில் அங்கே அந்தப் பாடகர் குழுவில் பாடும் ஒரு பெண்மணி இருக்கிறாள்'' என்றேன் நான். 211. ''ஏன் அவர்கள் அவ்வாறு தவறாக உடுத்துகிறார்கள்?'' என்று என் மனைவி கேட்டாள். 212. "மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட நிலையில் நாம் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி அவளுக்கு போதிக்கப்படவில்லை” என்று நான் பதிலளித்தேன். அவ்வாறு தான் காரியம் உள்ளது. 213. லௌகீகமான மாம்சப் பிரகாரமான சபை ஒன்று உள்ளது. அதைப் பற்றி இவ்வாரத்தில் பார்ப்போம். ஆவிக்குரிய சபையும், மாம்சப் பிரகாரமான சபையும் உள்ளன. அவர்கள், மனிதனால் உண்டாக்கப்பட்ட சபைக்குள் பின்னிட்டு விழுகிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரத்தில் முன்னுரைக்கப்பட்டுள்ளது. அவர்கள் யாவரும் பின்னிட்டுத் திரும்பிக் கொண்டிருக் கிறார்கள், அவர்கள் ஒரு ஸ்தாபனத்தை தாங்களாகவே உருவாக்கிக் கொண்டு, நாங்கள் இன்னின்னதை சார்ந்தவர்கள் என்று கூறு கிறார்கள். அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, “ நாங்கள் இந்த சபை, நாங்கள் அந்த சபை" என்று கூறுகிறார்கள், ஆதியில் சபையில் இவ்வாறு இருக்கவில்லை. அவர்கள், சபையை விட்டு வல்லமையை அகற்றிவிட்டு, அதை பேராயர் அல்லது போப் என்றொருவரின் அதிகாரத்திற்கு ஒப்புக் கொடுத்து விட்டார்கள். தேவன் தன் சபையில் இருக்கிறார், தன் ஜனங்களின் மத்தியில் இருக்கிறார், தன்னைத் தானே அவர் சபையின் ஜனங்களின் மூலமாக எங்கும் பிரத்தியட்சமாக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் இப்பொழுது, இந்நாளில்... 214. அவள், ''நாம் அமெரிக்கர்கள் இல்லையா?'' என்று கேட்டாள். 215. “ இல்லை, நாம் இங்கு வாழ்கிறோம், ஆயினும் நாம் அமெரிக்கர்கள் அல்ல, நாம் கிறிஸ்தவர்களாயிருக்கிறோம், நமது அரசு உன்னதத்திற்குரியது'' என்று நான் பதிலளித்தேன். 216. நமது ஜீவன்கள் அங்கிருந்து வருகிறபடியால், நாம் அதற்குரியவிதமாக நடந்து கொள்கிறோம். ஏனெனில் நமது ஜீவன் ஒரு பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வந்திருக்கிறது. அது உலக மக்களினின்றும் வித்தியாசமாக நடந்து கொள்ளவும், உடையுடுத்திக் கொள்ளவும் செய்கிறது. நாங்கள் அக்கடையில் பார்த்த அப்பெண்மணி, நீண்ட தலைமுடியையுடைய வளாயிருந்தாள். அவர்கள் தங்கள் முகங்களில் அலங்காரச் சாதனங்களைப் பூசுவதில்லை. குட்டைப் பாவாடைகளை அவர்கள் அணிவதில்லை. அவர்கள் உடலை நன்கு மறைத்து, நீண்ட ஆடைகளையே அணிந்து தங்கள் முடியை நீளமாக வளர்க்கிறார்கள். ஆகவே உன்னதத்திற்குரிய சுபாவமானது நம்மில் பிரதிபலிக்கிறது. 217. உன்னதத்திலிருந்து வரும் அந்தப் பரிசுத்த ஸ்தலத்திற்குரிய ஆவியானது ஒரு மனிதனின் மேல் வந்திருக்கையில், அவன் புகைப்பதில்லை. வெற்றிலை, புகையிலை சுவைப்பதில்லை, பொய் சொல்லுவதில்லை, திருடுவதில்லை, அது அவர்களை பரிசுத்தமாக நடக்க செய்கிறது, ஒருவரையொருவர் சகோதரர்களாக அடையாளங் கண்டு கொள்ளச் செய்கிறது. நீங்கள் அதைக் கண்டீர்களா? அதுதான் அது. நாம் ஒரு இராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள். நமக்கு ஒரு ராஜா உண்டு. அவர் பரிசுத்தவான்களின் இராஜா. ''பரிசுத்த மாக்கப்பட்டவர்கள்'' என்ற வார்த்தையிலிருந்துதான் “பரிசுத்தவான்” என்ற வார்த்தை வருகிறது. 218. ஒரு நபர் பரிசுத்தமாக்கப்படும் போது, பரிசுத்த ஆவியான வராகிய கிறிஸ்து அந்த இருதயத்தினுள் அசைந்து, அதன் மேல் ராஜாவாகிறார். ஓ, என்னே! அது உங்கள் இருதயத்தை ஆழமாகத் தொட வேண்டும். ஓ! பரிசுத்தமாக்கப்பட்ட தேவனுடைய பாத்திரத்தினுள் பரிசுத்த ஆவியாகிய, இராஜாவாகிய கிறிஸ்து உள்ளே புகுந்து வாசம் பண்ணுகிறார். ஒரு ராஜாவுக்கு அவனது ஆதிக்கத்திற்குட்பட்ட நாடு உண்டு. ஓ! ஆமென். நீங்கள் முழுவதுமான பரிசுத்தவான்களின் இராஜாவால் ஆளப்படு கிறீர்கள். ஒரு இராஜ்யம்! பூமியிலுள்ள ஒவ்வொரு ராஜ்யமும் அணுசக்தியினால் அசைக்கப்படும். அவை அடித்து நொறுக்கப்படும். ஆனால் வேதமோ, ''அசைவில்லாத இராஜ்யத்தை நாம் பெறுவோம்...'' என்று கூறுகிறது. பரிசுத்தவான்களின் இராஜா! 219. வேதத்திலும், பூமியிலும் கிறிஸ்துவுக்குரிய உலகிலுள்ள அடையாளச் சின்னங்களை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். பூமியில் அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஒரு தீர்க்கதரிசி வார்த்தை யாக இருக்கிறான். அது நமக்குத் தெரியும். ''தீர்க்கதரிசி'' என்ற பதத்திற்கு, 'தேவ வார்த்தையை தெய்வீக வியாக்கியானம் செய்பவர்'' என்பதே அர்த்தமாகும். இந்த தெய்வீக வார்த்தையானது எழுதப்பட்டுள்ளது. தீர்க்கதரிசிக்குள் தெய்வீக ஆவி வாசம் பண்ணுகிறது. பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசியானவன், “ தேவன்'' என்று அழைக்கப்பட்டான். உங்களில் எத்தனை பேர் இதை அறிவீர்கள்? 220. “ அவர்கள் தேவர்களாயிருக்கிறார்கள் என்று உங்கள் வேதத் தில் எழுதப்படவில்லையா?'' என்று இயேசு கேட்டார். நீங்கள் தேவர்களாயிருக்கிறீர்கள்... “ தேவ வசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களை (தேவ வசனம் யாரிடத்தில் வந்ததோ அவர்கள் தான் தீர்க்கதரிசி) தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதமும் தவறாததாயிருக்க நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?'' என்று இயேசு கேட்டார். 221.அவருக்குள் கர்த்தருடைய வார்த்தை நிரப்பப்பட்டிருந்தது. அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கிறது. எனவே அவர் தேவன் என்னப்பட்டார். எனவே 'தீர்க்கதரிசி' என்ற பதத்திற்கு அர்த்தம் என்னவெனில்.... அத்தீர்க்கதரிசியின் வியாக்கி யானம் கலப்படம் செய்யப்படக் கூடாது. பார்த்தீர்களா! 'உங்களுக்குள் ஆவிக்குரியவனான ஒரு தீர்க்கதரிசி இருந்தால், கர்த்தராகிய நானே அவனோடே பேசுவேன், அவன் சொல்லுவது நிறைவேறினால் அவனுக்குச் செவி கொடுங்கள், ஏனெனில் நானே அவனோடிருக்கிறேன். ஆனால் அவன் சொல்லும் காரியம் நடவாமற் போனாலும், நிறைவேறாமல் போனாலும் இருந்தால் அவனுக்குச் செவி கொடுக்க வேண்டாம். நான் அவனை அனுப்பவில்லை'' என்று கூறினார். அவ்வாறுதான் நீங்கள் அதைக் கண்டு கொள்ள வேண்டும். அதன் பின்பு, நீங்கள் கவனியுங்கள், வார்த்தையின் தெய்வீக வியாக்கியானமானது, சபைக்குரிய கடைசி காலத்திய வெளிப்பாட்டுடன் முரண்படாமல் ஒத்துப் போக வேண்டும். 222. அவர் சர்வ வல்லமையுள்ள தேவன் ஆவார். பூமியில் அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். தீர்க்கதரிசி ஒரு கழுகாக சித்தரிக்கப்படுகிறான். ஒரு தீர்க்கதரிசி கழுகு என்று கருதப்படுவதை எத்தனை பேர் அறிவீர்கள்? 223. பறவைகளுக்குள்ளே நமக்கு இருக்கும் மிகவும் வலிமை வாய்ந்த ஒரேயொரு பட்சி கழுகு மட்டுமே. கழுகு தனது செட்டைகளை விரித்தால், அதின் ஒரு முனை துவக்கி மறுமுனை மட்டும் பதினான்கு அடி நீளமுள்ளதாக இருக்கிறது. கழுகு மிக மிக உயரமாக பறக்கக் கூடியது. வேறு எந்தப் பறவையும் அவ்வுயரத்தை எட்டிப் பிடித்து கழுகுடன் சேர்ந்து பறக்க முயற்சித்தால், தங்கள் சிறகுகள் பிய்ந்து போன நிலையில் உருக் குலைந்து போய் விழுந்து விடும். ஏன் அவ்வாறு உள்ளது? கழுகு சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மிக மிக உயரமாக கழுகு பறக்கையில், அதனால் அவ்வளவு உயரத்தி லிருந்து கூர்மையாக பார்க்க முடியாமற் போனால் அது மிக உயரத்தில் பறக்கிறதினால் அதற்கு என்ன நன்மை? ஒரு வல்லூறின் கண்ணைப் பற்றி நீங்கள் புகழ்ந்து பேசினால், அப்பொழுது கழுகு கண்களை அதோடு ஒப்பிட்டுப் பாருங்கள் பார்க்கலாம். 224. ஒரு பருந்து ஒரு வேளை பறக்கையில் ஒரு கோழிக் குஞ்சை பார்த்துவிடக் கூடும். அது சரிதான். இன்றுள்ள சில பருந்துகளின் நிலைமை அவ்வாறு தான் உள்ளது. ஆனால் கழுகோ, பருந்துக்கும் எட்ட முடியாத உயரத்தில் பறக்க முடியும். பருந்து கழுகின் உயரத்தை எட்டிப் பிடிக்க முயன்றால், அது மூச்சு முட்டி கஷ்டப்படும், இறக்க நேரிடும். கழுகு பறக்கும் உன்னத உயரங்களை பருந்தால் எட்டிப் பிடிக்க இயலவே இயலாது. வேறு எந்தப் பறவையும் தன்னை வந்து எட்டிப் பிடிக்க இயலாத அப்படிப் பட்ட மிகுந்த உயரத்தில் அது பறக்கையில், மிகவும் தூரத்திலுள்ளதையும், தெளிவாகப் பார்க்க அதற்கு முடியும். எனவே தான் தனது தீர்க்கதரிசிகளை “ கழுகுகள்'' என்று தேவன் அழைக்கிறார். தீர்க்கதரிசியால் மிகத் தொலைவிலுள்ள காலத்தின் காரியங்களை பார்க்க முடியும், கழுகைப் போல். 225. கிறிஸ்து பூமியிலிருந்த போது கழுகாயிருந்தார். அவர் மரித்த போது ஆசாரியனானார். அது அவரை ஆட்டுக் குட்டியாகவும் ஆக்கியது. அது சரிதானே? அவர் திரும்பி வருகையில் அவர் இராஜாவாக இருப்பார். எனவே அவர் சிங்கமாய் இருப்பார். ஆமென்! யூதா கோத்திரத்து சிங்கம்! ஆமென்! அவர் ஒரு கழுகு. ஒரு ஆட்டுக்குட்டி, மற்றும் அவர் ஒரு சிங்கம். ஆமென்! பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, தீர்க்கதரிசி, ஆசாரியன், மற்றும் அவர் ஒரு இராஜா, இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ளவர்! அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமுமானவர். அவர் நித்திய தேவன். 226. அருமையான சில கத்தோலிக்க மக்களை நான் கேட்க விரும்புவது என்னவெனில், நீங்கள், “ தேவனின் நித்திய குமாரத்துவம், அதாவது தேவனோடு இயேசு கிறிஸ்துவுக்குள்ள நித்திய குமாரத்துவம்'' என்று சொல்லுகிறீர்கள். இவ்வாறான ஒரு வார்த்தையை நீங்கள் எவ்வாறு சொல்ல முடியும்? நான் ஒரு அறிவில்லாதவன், ஏழாம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன். ஆனால் நீங்கள் சொல்லுவதை விட தேவனைப் பற்றி எனக்கு சிறப்பாகத் தெரியும். "குமாரன்' என்று சொன்னால், அதற்கு ஒரு துவக்கம் உண்டு என்று தெரிகிறது. எனவே, அவர் ஒரு குமாரன் ஆக இருந்து கொண்டு எப்படி துவக்கமும் முடிவுமில்லாத நித்தியமாகவும் இருக்க முடியும்? நித்தியத்திற்கு நாட்களின் துவக்கமும், முடிவுமில்லை. எனவே அவர் ஒரு நித்திய குமாரத் துவம் உடையவராக இருக்கவே முடியாது. ஏனெனில் குமாரத்து வத்திற்கு ஒரு துவக்கம் உண்டு, முடிவும் உண்டு. ஆகவே, அவர் நித்திய குமாரன் அல்லவே அல்ல. ஒரு குமாரனுக்கு ஒரு துவக்கம் உண்டு. அப்படியாயின் அவர் நித்தியமாயிருக்க முடியாது. 227. பாருங்கள், அவர் நித்திய தேவனாயிருக்கிறார். ஆனால் அவர் நித்திய குமாரன் அல்ல. மகிமை! சர்வ வல்லமையுள்ளவர் யேகோவா-யீரே, யேகோவா-ராஃபா, மாம்சத்தில் தோன்றினார். “ தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது''. 228. பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அக்கினி ஸ்தம்பமானது மக்கள் மேல் வந்த போது, அவர் தாமே தன்னையே மக்களுக்குள் பிரித்தளித்தார் என்பதை கவனித்தீர்களா? அக்கினி மயமான நாவுகள் அவர்கள் ஒவ்வொருவர் மேலும் இறங்கியது. தேவன் என்ன செய்து கொண்டிருந்தார்? தனது சபைக்குள்ளாக அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும், ஆண்களும், பெண்களுமான அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும், தனது ஆவியின் பகுதிகளை, அதாவது தன்னைத் தானே அவர் பகிர்ந்தளித்தார். 229. அப்படியிருக்க, எவ்வாறு ஒரு மனிதன் வந்து, “ போப் ஒரு பரிசுத்த மனிதன், பிஷப் ஒரு பரிசுத்த மனிதன்'' என்று கூற முடியும்? நமக்குள் பரிசுத்த ஆவியாயிருக்கிற கிறிஸ்துவே பரிசுத்த மனிதனாவார். சபையின் ஜனங்கள் சொல்லும்படி அவர்களுக்கு வார்த்தையில்லை என்று நீங்கள் எவ்வாறு கூற முடியும்? உங்கள் ஒவ்வொருவருக்கும் சொல்லத்தக்க வார்த்தை உண்டு. நீங்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கிரியை ஒன்றுண்டு. நீங்கள் ஒவ்வொருவரும் சுமந்து செல்லும் செய்தி ஒன்று உண்டு. மகிமை! 230. பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர், அதாவது தேவன் தாமே, தன்னைப் பகிர்ந்தளித்தார். “ நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்'' என்று இயேசு கூறினார். அந்நாளில் பரிசுத்த ஆவியானவர், “ எல்லார்மேலும் எல்லோருக் குள்ளும் எல்லோர் மூலமாயும்'' இருக்கிறார். ஆமென். பரிசுத்த ஆவியானவர் தான் விரும்புகிற எவ்விடத்திலும், தான் விரும்புகிற எவர்மேலும் அசைவாட அவருக்கு உரிமையுண்டு. ஏதோ ஒரு பிஷப் அல்லது ஏதோ ஒரு மதகுரு கூறுவதை நீங்கள் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவர் ஒருவரே நமது மகாபிரதான ஆசாரியராக இருக்கிறார். இப்பொழுது, தீர்க்கதரிசி, ஆசாரியன், ராஜா. 231. இப்பொழுது: “ உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதல்பிறந்த வரும் (அதைப் பற்றி நாம் இனி பார்ப்போம்) பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும்... நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினால் நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவின அவருக்கு... வெளி.1:5-6 232. "கழுவினார்' (ஆங்கிலத்தில் washed) என்ற இந்த பதத்தின் மூல கிரேக்க வார்த்தையின் அர்த்தம் என்னவெனில் 'கட்டவிழ்த்தல்' (loosed) என்பதாகும். நாம் இப்பூமியோடு, நமது பாவத்தினிமித்தம் கட்டப்பட்டுக் கிடந்தோம். நமது பாவத்தினால், நம்மால் பரலோகத்தைப் பார்க்கவோ, அதைப் பற்றி கேட்கவோ, அல்லது நமது சிந்தையில் அது எப்படியிருக்கும் என்று எண்ணிப் பார்க்கவோ முடியாமல் இருந்தது. ஆனால் இயேசுவின் இரத்தம் வந்தபோதோ, அது நம்மைக் கட்டியிருந்த பாவக்கட்டிலிருந்து நம்மை அவிழ்த்து விட்டது. 233. நான் ஒரு சமயம் ஒரு கதையைப் படித்தேன். அது இந்தக் காரியத்திற்கு நன்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என்று எண்ணுகிறேன். ஓர் விவசாயி ஒரு காகத்தைப் பிடித்து அதைக் கட்டிப் போட்டானாம். “ ஏனைய காகங்களுக்கு இதன் மூலம் ஒரு பாடம் கற்பிப்பேன்'' என்று கூறினானாம். எனவே அந்த கிழ காகத்தை அதின் காலில் ஒரு கயிற்றைக் கொண்டு கட்டிப் போட்டான். அது பசியினால் மிகவும் வாடியது. அது மிகவும் பெலவீனமடைந்து நடக்கக் கூட இயலாமற் போனது. 234. அப்படித்தான் இங்கே சில மத ஸ்தாபனங்கள் மற்றும் சபைகள் மக்களை கட்டிப் போட்டிருக்கிறார்கள். அவைகளால் ஒன்றும் செய்ய முடியாது. “ நீ இவ்வளவு தூரம் தான் போக முடியும். அற்புதங்களின் காலம் கடந்து போய் விட்டது. நீ கட்டப்பட்டிருக்கிறாய், இதற்கு மேல் உன்னால் முடியாது. இவ்வளவுதான்'', “ பரிசுத்த ஆவி என்ற ஒன்று கிடையாது, அவர் முன்பு அந்நிய பாஷைகளில் பேசியது போல் இப்பொழுது பேசுவது கிடையாது'' என்கிறார்கள். 235. அவர் தேவனாயிருக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்''. எல்லா சபைக் காலங்களிலும் அவர் ஜீவிக்கிறார். நாம் அதைக் குறித்து இக்காலை நேரம் கடந்த பிறகு பார்ப்போம். அவர் தேவனாயிருக்கிறார், ஒவ்வொரு சபைக் காலத்திலும் அவர் ஜீவிக்கிறார் என்பதைப் பாருங்கள், அவர் ஒவ்வொரு சபைக் காலத்திலும் ஜீவித்து, நித்தியமாக தன் ஜனங்களுக்குள் ஜீவிப்பார். ஏனெனில் நாம் இப்பொழுது நமக்குள் நித்திய ஜீவனைப் பெற்றுள்ளோம். 236. ஸ்தாபனமானது மனுஷரை, அந்தக் காகம் கட்டிப் போடப் பட்டது போல, கட்டிப் போட்டிருக்கிறது. ''அற்புதங்களின் காலம் கடந்து போய்விட்டது, தெய்வீக சுகமளித்தல் என்ற ஓன்று இல்லை'' என்று கட்டிப் போடப்பட்டவர்கள் கூறுகிற அளவுக்கு ஸ்தாபனங்கள் அவர்களை கட்டிப் போட்டுள்ளது. இவ்வாறு கட்டிப் போடப்பட்ட அந்த காகமானது பசியினால் வாடி நடக்க இயலாமற் போயிற்று. 237. ஒரு நாள், ஒரு நல்ல மனிதன், கட்டிப் போடப்பட்டிருந்த அக்காகத்தண்டை வந்து, 'ஐயோ, பாவம் இந்தக் காகம், நான் இதற்காக வேதனைப்படுகிறேன். இது கட்டப்படாதிருந்தால் தன்னுடைய தானியத்தை தேடித் தின்று கொண்டிருக்கும். அதன் ஜீவனம் அவ்வாறு தான் நடைபெறுகிறது. அதற்கு சாப்பிட ஏதாவது கிடைக்க வேண்டுமே, இப்படி கட்டப்பட்டிருந்தால் உயிர் வாழ தேவையான உணவு அதற்கு கிடைக்காதே'' என்று கூறி, தனது கத்தியை எடுத்து, கிழ காகத்தை கட்டியிருந்த கயிற்றை அறுத்துவிட்டு, அதை விடுவித்தான். 238. அப்பொழுது, ஏனைய காகங்கள் விடுவிக்கப்பட்ட காகத்தினிடம் வந்து, “ ஜானி காகமே, வா போகலாம், குளிர் காலமானது வருகிறது, எனவே நாம் தெற்கு நோக்கி சென்று விடுவோம்'' என்று கூறின. 239. கட்டவிழக்கப்பட்ட காகம் என்ன கூறியது தெரியுமா? கட்ட விழ்க்கப்பட்ட பிறகும், அது பழையபடியே, தான் கட்டப் பட்டிருந்த போது, அந்தக் கயிறு எவ்வளவு தூரம் இருந்ததோ அவ்வளவு தூரமே நடந்து சென்று பழகியிருந்ததால், அதற்கு மேல் அதனால் நடக்க முடியவில்லை. அதனுடைய பழைய பழக்கத்தினால். ''என்னால் இதற்கு மேல் போக முடியாது, இந்தக் காலத்திற்கு உரிய காரியம் அல்ல இது, இக்காலத்தில் நாம் இதற்கு மேல் பறந்து செல்ல முடியாது, அந்தக் காலம் கடந்த விட்டது'' என்று கூறியதாம். அக்காகம் அதிக காலம் கட்டப்பட்டு கிடந்தது, அதினால் விடுவிக்கப்பட்ட பிறகும், தான் கட்டப்பட்டே உள்ளதாக அது நினைத்துக் கொண்டிருந்தது. பார்த்தீர்களா? 240. அவ்வாறு தான் அநேகம் மக்கள் அந்தப் பழைய வேசியாகிய தாயின் ஸ்தாபனங்களாலும், அதன் கொள்கைகளாலும் கட்டப்பட்டிருக்கிறார்கள். அந்த பழைய வேசிகளின் தாயானவள், “ இயேசு கிறிஸ்து மாறாதவரல்ல, சுகமளித்தல் என்ற ஒன்றில்லை, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற ஒன்றில்லை. அப்படிப்பட்ட காரியம் ஒன்றும் இல்லை'' என்கிறாள். நீங்கள் அநேக காலமாக கட்டப்பட்டிருந்தபடியால், அதிலேயே பழகிப் போய், கட்ட விழ்க்கிறவர் வந்து கட்டவிழ்த்தாலும், அதே பழைய கட்டில் இன்னும் கட்டப்பட்டிருக்கிறவைகளைப் போலவே பேசுகிறார்கள். 241. காகத்தை அவிழ்க்க வந்த நல்ல மனிதனைப் போல் உள்ள, நல்ல மனிதனாகிய இயேசு கிறிஸ்து, தம்முடைய இரத்தத்தால் நாம் கழுவப்பட்டு, கட்டவிழ்க்கப்படுவதற்காக தம்முடைய இரத்தத்தை நமக்காக சிந்தினார். பாவம் என்றால் என்ன? அது என்னவென்று யாராவது நீங்கள் எனக்குச் சொல்லுங்கள். பாவம் என்றால் என்ன? பாவம் என்பது அவிசுவாசமாகும். அதுதான் சரியான அர்த்தம். “ விசுவாசியாதவனோ ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று''. 242. உங்களுடைய பாவம்தான் உங்களை சுதந்திரமாக இருக்க முடியாதபடி கட்டிப் போட்டுள்ளது, உங்கள் அவிசுவாசத்தினின்றும் தேவன் உங்களை கட்டவிழ்க்கிறார், ஆயினும், நீங்கள், பாரம்பரியமாக சில கோட்பாடுகளினால் கட்டப்பட்டிருக்கிறபடியால், கட்டவிழ்த்தாலும், இன்னும் நீங்கள் கட்டப்பட்டுள்ள தாகவே உங்களைக் கருதுகிறீர்கள். ''நான் பிரெஸ்பிடேரியன், நான் மெதோடிஸ்டு, நான் பாப்டிஸ்டு, என்று நீங்கள் கூறிக் கொண்டு, ஆத்துமாவில் பட்டினிச் சாவு ஏற்படுகிற அளவுக்கு, இரண்டு கால்கள் கட்டப்பட்டவன் எப்படி தவ்வி தவ்விக் கொண்டு நடப்பானோ, அவ்வாறு சுற்றி சுற்றி, நொண்டிக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள், “ நான் கிறிஸ்துவின் சபை ஸ்தாபனத்தைச் சேர்ந்தவன்'' என்று என்னிடம் கூறுகிறார்கள். அவர்கள் “ அற்புதங்களின் நாட்கள் கடந்து போய்விட்டது, அவ்வாறு ஒரு காரியம் கிடையவே கிடையாது'' என்று கூறுகிறார்கள். 243. ஓ, பரிதாபத்திற்குரிய காகமே, நீ ஏன் இக்காலையில் வரக் கூடாது? ஏன் நீ பறந்து போகக் கூடாது? அல்லேலூயா! இப்படிப் பட்ட காகத்தை விட்டு விலகி ஒவ்வொரு எச்சரிக்கையையும் விசுவாசித்து, தன் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் உள்ள நீதியின் சூரியனாகிய குமாரனிடம் பறந்து செல்லுங்கள், ஆமென். சகோதரனே, சகோதரியே, அப்படித்தான் நீங்கள் செய்ய வேண்டும். ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்''. ஆம், ஐயா! 244. “ நல்லது! என் போதகர் இவ்வாறு கூறுகிறாரே'' என்று ஒரு வேளை கூறலாம். அதை நாம் கவனிக்கத் தேவையில்லை. வேதம், “ நீங்கள் விடுதலையானீர்கள்'' என்று கூறுகிறதென்றால் அது தான் சரி, நீங்கள் விடுதலையாயிருக்கிறீர்கள். 245. “ என்னுடைய சபை என்ன சொல்லுமோ'' என்று நீங்கள் கூறலாம். 246. நல்லது, அதினின்றும் கட்டவிழ்க்கப்படுவாயாக. “ அவர் தமது சொந்த இரத்தத்தினால் நம்மை கழுவி, நமது மத ஸ்தாபனங்களினின்றும் நம்மை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். அவர் நம்மை சுயாதீனராக்கியிருக்கிறார், எனவே நாம் சுயமாக சிந்திக்க முடியும், சுயாதீனமாக செயல் புரிய முடியும், நமக்காக நாம் கிரியை செய்து, நமக்காக நாம் சுயாதீனமாக பேசி, செயல்புரிய முடியும். 247. “ நல்லது, நான் திரும்பிச் சென்று எனது போதகரிடம் நான் திரும்ப ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமாமே என்று கூறினால், ஒருவேளை...'' என்று நீங்கள் கூறலாம். 248. “ நீங்கள் விடுதலையாயிருக்கிறீர்கள்'' என்பதைக் குறித்து என்ன? இது ஒரு வெளிப்பாடாயிருக்கிறது என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் விடுதலையாகி இருக்கிறீர்கள். அது சரி தான். 249. நீங்கள் ஏற்கனவே சிறிதளவு உப்புக் கலந்த நீரினால், “ பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால்'' என்று உங்கள் தலையில் தெளிக்கப்பட்டிருந்தால், அது சரியானதல்ல. இக்காலையில் இங்கே உங்களுக்கு நீர் நிறைந்த தொட்டி ஆயத்தமாயுள்ளது. 250. எனவே நீங்கள் இனிமேல் கட்டுண்டவர்களல்ல. நீங்கள் விடுதலையாகி விட்டீர்கள். ஒருவேளை நீங்கள் அதை அறியாமல் இருக்கலாம். ஆனால் நான் இன்று காலையில் உங்களுக்குச் சொல்லட்டும், வேதம் கூறுகிறது, ''அவர் நம்மை நம்முடைய பாவங்களினின்றும், நமது அவிசுவாசத்தினின்றும் விடுவித்து, அதினால் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலை பெற்றுக் கொள்ளும்படி செய்துள்ளார்''. எனவே நீங்கள் விடுதலையடைந்து செல்லுங்கள்! எந்த ஒரு சபையும் கூறுவதையும் நம்பத்தேவையில்லை. அதைக் குறித்து தேவன் என்ன கூறுகிறார் என்பதைப் பாருங்கள். அவர் யார் என்று தம்மை வெளிப் படுத்துவதை பற்றிய வெளிப்பாடு இங்கே இருக்கிறது. 251. நானுங்கூட முன் காலத்தில், தேவனாகிய பிதா, நீண்ட வெள்ளைத் தாடியையும், வெண்முடியையும் உடையவர் என்றும், குமாரன் நடுத்தர வயதினர் என்றும், பரிசுத்த ஆவியானவர் ஒரு அதிர்ஷ்ட தேவதையைப் போல் இருக்கக் கூடிய ஒரு பையன்'' (சகோ. பிரான்ஹாம் இங்கு ஆங்கிலத்தில் 'Mascot Boy (meaning a person coho is believed to be a luck-bringer) என்று குறிப்பிட்டுள்ளார் - மொழி பெயர்ப்பாளர்) என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். சகோதரனே, அப்படிப்பட்ட ஒரு கருத்து அஞ் ஞானக் கொள்கையாகும். மூன்று தேவர்கள் உண்டு என்று நீங்கள் விசுவாசிப்பது அஞ்ஞானக் கொள்கையாகும். 252. முதலாம் பிரதான கற்பனையே என்னவெனில், ''...இஸ்ரவேலே கேள், உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்''. 253. அவர் ஒரே தேவன் தான், அவர் மூன்று தேவர்களாயிருக்கவில்லை. அவர் தனது மூன்று அலுவல்களில் இருந்தார், மூன்று இடங்களில் பணியாற்றினார். அவர் தாமே தீர்க்கதரிசி, ஆசாரியன், மற்றும் இராஜாவாக இருக்கிறார். அவர் கழுகு, ஆட்டுக்குட்டி மற்றும் சிங்கமாக இருக்கிறார். அவர் தாமே, பள்ளத்தாக்கின் லீலி, சாரோனின் ரோஜா, தாவீதின் வேரும் சந்ததியுமானவர். 'A' முதல் 'Z' முடிய எல்லாம் அவரே. அவரே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர். அவர் இவை யாவுமாயிருக்கிறார், ஆனால் அவர் ஒருவரே. அவர் அந்த ஒரே தேவனாயிருக்கிறார். அந்தப் பட்டங்கள் யாவும் அவருக்கு உரித்தவைதான், ஆனால் ஒரேயொரு தேவன் தான் உண்டு. 254. கத்தோலிக்க சபையானது, 'பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால்'' என்று ஞானஸ்நானம் கொடுக்கத் துவங்குகிற வரையிலும், அதற்கு முன்பாக உள்ள காலத்தில் எவரும் அவ்வாறு ஞானஸ்நானம் கொடுக்கவேயில்லை என்பதை வேதத்தினின்றும், வரலாற்றுக் குறிப்புகளிலிருந்தும் நாம் தெளிவாகக் காண முடியும். 255. நீங்கள் நான் கூறுவது தவறு என்பீர்களானால், உங்கள் கூற்றை நிரூபிக்க வேத வசனங்களிலிருந்தோ, அல்லது வரலாற்றிலிருந்தோ, அது எப்பக்கத்தில் உள்ளது என்று குறிப்பிட்டு, அப்படிப்பட்ட சான்றைப் பற்றிய ஓர் குறிப்பை இப்பிரசங்க பீடத்தில் எனக்காகக் கொண்டு வந்து வைத்துவிடுவீர்களானால், அப்பொழுது, நான் இச்சபையை விட்டு, “ நான் ஒரு மாய்மாலக்காரன், நான் மக்களுக்கு தவறானதைப் போதித்து விட்டேன்'' என்று கூறிக்கொண்டே வெளியேறிவிடுவேன். கி.பி.325ல் நிசாயா ஆலோசனை சங்கத்தில் தான் “ பிதா, குமாரன், பரிசுத்த ஆவி' யின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்க அவர்கள் தீர்மானித்து, அவ்வாறு ஞானஸ்நானம் கொடுக்க அப்போதிலிருந்து ஆரம்பித்தார்கள் அல்லவா? அதற்கு முன்பாக உள்ள மூன்று நூற்றாண்டு களில் மக்கள் எப்போதாகிலும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டார்களா என்பதை நிரூபிக்க ஏதாவது ஒரு வேத வசனமோ, அல்லது வரலாற்றில் இன்ன பக்கத்தில் ஆதி சபை இவ்வாறு ஞானஸ்நானம் கொடுத்தது என்றோ உங்களால் நிரூபிக்க முடியுமா? நீங்கள் அப்படி நிரூபிக்க முடியுமானால், அப்பொழுது நான், என் முதுகின் மேல், “ நான் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி, மக்களை வழி தப்பி நடக்கச் செய்தவன்'' என்று எழுதி தொங்க விட்டுக் கொண்டு இந்த ஜெபர்ஸன்வில்லின் தெருக்கள் பூராவும் நடந்து செல்வேன், நீங்கள் என் பின்னால் வந்து அதையே கொம்பு ஊதி யாவருக்கும் தெரியப்படுத்துங்கள். 256. இங்கே இக்காலையில், போதகர் யாராவது இருப்பீரெனில், நீங்கள் எனக்கு அதை செய்யுங்கள், இந்த ஒலி நாடாக்களை பெறப் போகிறவர்களே, நீங்கள் அப்படிச் செய்யுங்கள். 257. இது என்னவாக இருக்கிறது? இது வெளிப்படுத்துதலா யிருக்கிறது. இதுவே அந்த வெளிப்படுத்துதலாயிருக்கிறது. கிறிஸ்துவாகிய ஆவியானவரே, தன் செய்தியை சபைகளுக்கு அனுப்பியிருக்கிறார். அதற்கு செவி கொடுங்கள், பரிசுத்த ஆவியானவருக்கு செவி கொடுங்கள். அதைத்தான் வேதமும் போதிக்கிறது. 258. அப்போதகம் எங்கே உள்ளே நுழைந்தது? நீங்கள் கோப மடையாதிருந்தால், இவ்வாரம் முழுவதும் தொடர்ந்து கேளுங்கள். நிசாயா ஆலோசனை சங்கத்தில் என்ன நடந்தது என்பதைக் காணுங்கள். அதற்காக “ நிசாயா ஆலோசனை சங்கம்'' ஹிஸ்லாப்பின், “ இரு பாபிலோன்கள்'' என்ற நூல்களைப் பெற்று படித்துப் பாருங்கள். 259. ஜோஸெஃபஸ் என்பவர் எழுதிய வரலாறு ஓரளவுக்குத் தான் சரி. ஆனால் கிறிஸ்துவைக் குறித்து எழுதிய ஒரு பத்தியில், இவ்வாறு கூறியுள்ளார். “ இயேசு என்றொரு மனிதர் இருந்தார், அவர் ஜனங்களை அவர்கள் வியாதியினின்றும் குணமாக்கினார், அவர் மரித்தார். அவரை பிலாத்து கொன்றான், அல்லது ஏரோது கொன்றான். பின்பு அவரது சீஷர்கள் மரித்த அவரது உடலைத் திருடிக்கொண்டு போய் அதை ஒளித்து வைத்திருந்தார்கள். ஒவ்வொரு இரவிலும் அவர்கள் போய் அவர் உடலிலிருந்து ஒரு துண்டை வெட்டி புசித்தார்கள். எனவே அவர்கள் நரமாம்சம் புசிப்பவர்களாயிருந்தார்கள். இவ்வாறு நற்கருணை ஆசரித்தார்கள்'' என்று எழுதியிருக்கிறார். இவ்வாறு எழுதியதில் ஜோஸெஃ பெஸின் மாம்ச சிந்தையைப் பாருங்கள். எனவே ஜோஸெஃபஸ் சொல்லுவதைக் கேட்க வேண்டாம். 260. ஃபாக்ஸ் என்பவர் எழுதிய “ இரத்த சாட்சிகள்'' (Fox's "Book of Martyrs") என்ற புத்தகத்தை பாருங்கள். அது மிகவும் நம்பத்தகுந்தது. அதை எத்தனை பேர் வாசித்திருக்கிறீர்கள்? பெம்பர்ஸ் எழுதிய ''ஆதி காலங்கள்'' (Early ages) அல்லது ஹிஸ்லாப்பின் “ இரு பாபிலோன்கள்'' (Two Babylons) ஆகிய இப்புத்தகங்களிலும் மிகவும் அதிகாரப் பூர்வமானதாக உள்ளன. மிகவும் அதிகாரபூர்வமானதாக உள்ள “ நிசாயா கவுன்சில்” மற்றும் “ நிசாயா கவுன்சிலுக்கு முன்'' என்ற புத்தகங்களும் நம்பத் தகுந்தவை. இவை, ஒருவரும் எப்போதும் இவ்வாறு பெற்றதாகக் கூறவேயில்லை. 261. “ பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' என்ற பட்டங்களை வெறுமனே கூறி எவராவது எப்பொழுதாவது ஞானஸ்நானம் பெற்றார்கள் என்று கூறும் வேத வசனங்கள் ஒன்றும் இல்லை என்பதை வேதத்தை எடுத்துப் பாருங்கள். அவ்வாறு ஞானஸ்நானம் கொடுப்பது மூன்று தேவர்களைக் குறிக்கும். அஞ்ஞான மத சடங்காகத்தான் அது இருக்கிறது. இவ்வுலகில் காணப்படும் கத்தோலிக்க மதமானது, கிறிஸ்தவ வேஷம் போட்டுக் கொண்டுள்ள அஞ்ஞான மார்க்கமாகும். கத்தோலிக்க சபையிலிருந்து தான், மார்ட்டின் லூத்தர், ஜான் வெஸ்லி மற்றும் பாப்டிஸ்டு, பிரெஸ்பிடேரியன் ஆகியோர் வந்தனர். 262. ஆனால் இந்தக் கடைசி நாட்களில் இவை யாவற்றுக்கும் நடுவில், மீண்டும் ஒரு சத்தியத்தை திறந்து கொடுக்கும் ஒரு வாசலானது வைக்கப்பட்டுள்ளது. அது, ''வேதம் இவ்வாறு கூறுகிறது'' என்கிறது. அந்த மகத்தான தீர்க்கதரிசியானவர் இக்கடைசி நாட்களில் பூமியின் மேல் வரவேண்டும். அவர் வருகிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். கவனியுங்கள், அவர் சொல்லுவதைக் கேட்க அவருக்கு ஒரு சபை உண்டாயிருக்கும். இப்பொழுது நாம் அதைப் பற்றிப் பார்ப்போம். 263. இது வெளிப்படுத்துதலாயிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அதிலிருந்து ஒன்றையும் எடுத்து விட முடியாது. எப்படிப்பட்ட அறைகூவலாயிருக்கிறது என்று பாருங்கள். தங்களின் பாவ மன்னிப்பிற்காக எவராவது “ பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால்'' என்று வெறும் பட்டங்களைச் சொல்லி அல்லது தெளித்து ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டார்களா என்பதை வேதத்தில் எங்காவது பார்த்துச் சொல்லுங்கள் பார்க்கலாம். அப்படி அவர்கள் கொடுக்கவேயில்லை. ஆகவே ஒவ்வொரு நபரும், அவர்கள் வேறெந்த விதத்தில் ஏற்கனவே ஞானஸ்நானம் எடுத்திருந்தாலும், அவர்கள் மீண்டும் வந்து, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள 'இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்'' ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும். 264. அப்போஸ்தலர் 19ல், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய் எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சிஷரைக் கண்டு, அவர்களை 'சீஷர்கள்'' என்று கூறுகிறான். அவர்கள் ஒரு பெரிய கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அப்பொல்லோ என்ற மனிதனைப் பின்பற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த அப்பொல்லோ என்பவன் சாதுரியவானும் வேத வாக்கியங்களில் வல்லவனுமாயிருந்தான். அவன் மனந்திரும்பிய வனாயிருந்தான். யோவான் ஸ்நானனை விசுவாசித்த ஒரு பாப்டிஸ்ட்டாக மட்டும் இருந்தான். அவன் ஜனங்களுக்கு, வேத வாக்கியங்களைக் கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று நிரூபித்துக் கொண்டிருந்தான் . 265. அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகம் 18ம் அதிகாரத்தில், ஆக்கில்லா, ப்ரிஸ்கில்லா ஆகியோரின் ஊரைக் கடந்து செல்லுகையில், பவுல் அவர்களை சந்தித்தான். ஆக்கில்லா மற்றும் ப்ரிஸ்கில்லா ஆகியோரின் இல்லத்திற்கு பவுல் உணவருந்தச் சென்ற போது, அப்பொல்லோ என்ற அந்த மகத்தான மனிதனைப் பற்றி அவர்கள் இருவரும் பவுலிடம் குறிப்பிட்டார்கள். (எபேசுவில்) அப்பொல்லா பிரசங்கிப்பதைக் கேட்க அவனுடைய கூட்டத்திற்கு சென்றிருந்தார்கள். அவன் பேசுவதை பவுல் அந்த இராத்திரியில் கேட்டான். ''அவன் நன்றாகத்தான் பிரசங்கிக்கிறான், அது அருமையான பிரசங்கம். ஆனால் நீங்கள் விசுவாசிகளான பின்பு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?'' என்று பவுல் கேட்டான். 266. விசுவாசிகளான போது பரிசுத்த ஆவியைப் பெற்றோம் என்று கற்பனையாக நினைத்துக் கொண்டிருக்கிற பரிதாபத்துக்குரிய பாப்டிஸ்டுகளே! உங்களைப் பற்றி என்ன? 267. பவுல் அவர்களை, “ நீங்கள் விசுவாசிகளான பின்பு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?'' என்று தான் கேட்டான். 268. சிலர் சொல்லுகிறார்கள், அங்கு அவ்வாறு எழுதப்பட வில்லை '' என்று . 269. அதை நான் மறுக்கிறேன். அதிகார பூர்வமானதாக உள்ள மூல கிரேக்க வேதம் என்னிடம் இங்கே உள்ளது. எபிரேய மொழி வேதாகமம் கூட உள்ளது. என்னிடத்தில் இங்கே கிரேக்கம், எபிரேயம் மற்றும் அராபிய மொழி வேதாகமங்கள் உள்ளன. அவைகள் மூன்றிலுமே, “ நீங்கள் விசுவாசிகளான பின்பு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?'' என்று தான் உள்ளது. (தமிழ் வேதாகமத்தில் “ நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியை பெற்றீர்களா என்று எழுதப்பட்டுள்ளது - மொழி பெயர்ப்பாளர்). “ நீங்கள் விசுவாசிகளான பின்பு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?'' என்பது தான் சரியானது. 270. அதற்கு மறுமொழியாக அவர்கள், “ பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை'' என்றார்கள். 271. அப்பொழுது அவன், ''அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?'' என்றான். 272. அதற்கு அவர்கள், ''நாங்கள் ஏற்கனவே, இயேசு கிறிஸ்துவுக்கே ஞானஸ்நானம் கொடுத்த மனிதன் கொடுத்த ஞானஸ்நானத்தை பெற்றுள்ளோம், நாங்கள் யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம்'' என்றார்கள். ஒருவேளை அதே குளத்தில். 273. “ அந்த ஞானஸ்நானம் கிரியை செய்யாது, யோவான் மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைத் தான் கொடுத்தான். பாவமன்னிப்புக்காக அந்த ஞானஸ்நானம் கொடுக்கப் படவில்லை” என்று பவுல் அவர்களுக்கு கூறினான். 274. ஒருத்துவக் கொள்கைக்காரர்களே, நீங்கள் சிலர், தவறாக ஞானஸ்நானம் கொடுக்கிறீர்கள். நீங்கள் இரட்சிப்பு பெறுவதற்கு ஞானஸ்நானம் தான் உதவுகிறது என்று சொல்லி ஞானஸ்நானத்தைக் கொடுக்கிறீர்கள். தண்ணீர் ஒரு மனிதனை இரட்சிப்பதில்லை. இரத்தம் தான் அதைச் செய்கிறது, மனந்திரும்பும் பொழுது. ஞானஸ்நானத்தினால் மறுபிறப்பின் அனுபவம் வருகிறதில்லை. இல்லை ஐயா. மறுபிறப்பின் அனுபவம் ஆவியினால் வருகிறது. உள்ளத்தில் நடைபெற்றுள்ள மறு ஜென்மம் அடைதலின் கிரியையின் வெளிப்பிரகாரமான தோற்றம்தான் ஞானஸ்நானமாகும். அதைக் கவனித்தீர்களா? 275. நல்லது, கவனியுங்கள். 'விசுவாசிகளான பின்பு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?'' என்று பவுல் அவர்களைக் கேட்டான். 276. ''பரிசுத்த ஆவியுண்டென்று நாங்கள் கேள்விப்படவே இல்லை'' என்று அவர்கள் சொன்னார்கள். 277. “ அப்படியானால் நீங்கள் எவ்வாறு ஞானஸ்நானம் பண் ணப்பட்டீர்கள்'' என்று கேட்டான். 278. 'யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம்'' என்றார்கள் அவர்கள். 279. “ யோவான் தனக்குப் பின் வருகிற பலியாகிய ஆட்டுக் குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசமா யிருக்க வேண்டும் என்று கூறி, உங்கள் மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தான்'' என்று பவுல் அவர்களுக்கு பதிலளித்தான். இதை அவர்கள் கேட்ட பொழுது, அவர்கள் மீண்டும் ஞானஸ்நானம் எடுத்தார்கள், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால். பின்பு பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்த போது, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று அந்நிய பாஷைகளில் பேசி தீர்க்கதரிசினம் உரைத்தார்கள். 280. எனவே, வேதத்தில் புதிய ஏற்பாட்டில் எங்காகிலும் எவராவது “ இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தவிர வேறு எந்த விதத்திலும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டார்களா என்பதை எனக்குக் காண்பியுங்கள். அதற்கு ஏதாவது ஒரு வேத வசனம் காண்பியுங்கள் பார்க்கலாம். 281. பரிசுத்த அகாபஸ் (Saint Agabus) மற்றும் ஏனைய கிறிஸ்தவர்களும் நிசாயா ஆலோசனை சங்கத்தின் காலத்திற்கு முன்னால் வரைக்கிலும், அவர்கள் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தான் ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டிருந்தார்கள். ஊழியக்காரர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தான் ஊழிய நிலத்தை உழுதார்கள். 282. ஆனால் நிசாயா ஆலோசனை சங்கம் கூடிய போது, அவர்கள் மூன்று தேவர்களின் கொள்கையை தழுவிக் கொண்டார்கள். அவர்களுடைய அஞ்ஞான மார்க்கத்தில் அவர்களுக்கு இருந்த ஜூபிடருக்குப் பதில், அவர்கள் பவுலை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் அஞ்ஞானிகளாக இருந்தபொழுது தொழுது கொண்டு வந்து வீனஸ் தேவதைக்குப் பதிலாக மரியாளை அந்த ஸ்தானத்தில் வைத்து தொழுது கொள்ள ஆரம்பித்தார்கள். அவர்கள் எல்லாவிதமான தேவர்களும், எல்லா விதமான பரிசுத்தவான்களின் வணக்கமும் உடையர்களாயிருந்தனர். அவர்கள் திரித்துவ ஞானஸ் நானத்தையும் ஏற்படுத்தி, இவ்வாறு அவ்வுபதேசங்களை ப்ராடெஸ்டெண்டுகளுக்கும் ஊட்டி விட்டார்கள். அவர்கள் இன்னும் அதை பின்பற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். 283. ஆனால் சாயங்கால நேர வெளிச்சங்கள் இப்பொழுது வந்து விட்டன. ''சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும்'' என்று தீர்க்க தரிசி கூறினார். மாலை நேரத்திலே ஒளியுண்டாகும் மகிமைக்குப் போகும் வழியை நிச்சயம் காண்பீர் தண்ணீரின் வழியில் இன்று வெளிச்சம் உண்டு இயேசுவின் விலையுயர்ந்த நாமத்தில் அடக்கம் செய்யப்படுவீர் இளைஞரே, முதியோரே, பாவங்களை விட்டு மனந்திரும்புவீர் அப்பொழுது பரிசுத்த ஆவி உங்களில் நிச்சயம் பிரவேசிப்பார் மாலை நேர வெளிச்சம் வந்துவிட்டது தேவனும் கிறிஸ்துவானவரும் ஒருவரே என்பதே உண்மை. 284. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு, 'நீங்கள் சிலுவையில் அறைந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார் என்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாக அறியக் கடவீர்கள்'' என்றான். ஆம்! “ இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாக அறிய வேண்டும், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார்.'' 285. சமீபத்தில் நான் “ தாவீதின் வீடு'' என்றழைக்கப்படும் ஓரிடத்தில் ஒரு யூதருடன் பேசினேன். அவர், “ புறஜாதிகளாகிய நீங்கள் தேவனை மூன்று கூறாக்கி அவரை ஒரு யூதனுக்கு அளிக்க முடியாது. நாங்கள் அதை விட தெளிவாக தேவனைக் குறித்து அறிந்திருக்கிறோம்'' என்றார். 286. “ ரபீ, அது நியாயம் தான், ஆனால் நாங்கள் தேவனை மூன்று கூறாக்குகிறது இல்லை, நீங்கள் தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீர்களா?'' என்று இவ்வாறு நான் அவரைக் கேட்டேன். “ நிச்சயமாக'' என்று அவர் பதிலளித்தார். ''ஏசாயா 9:6ஐ நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?'' என்று நான் கேட்டேன். "ஆம்" என்றார் அந்த யூத போதகர். ''யாரைக் குறித்து தீர்க்கதரிசி அங்கே பேசுகிறான்'' என்று நான் கேட்டேன். ''மேசியாவைக் குறித்து'' என்று அவர் பதிலளித்தார். “ மேசியாவுக்கும் தேவனுக்கும் உள்ள உறவு என்ன?'' என்று மீண்டும் கேட்டேன். அதற்கு அவர், “ அவர் தேவனாயிருப்பார்'' என்றார். 'அது சரிதான்'' என்றேன் நான். ஆமென். 287. அதுதான் சரி. நீங்கள் தேவனை மூன்று கூறாக்க முடியாது. 288. இங்குள்ள மிஷனரிகளில் ஒருவர் யூதர்களுக்கு ஊழியம் செய்கிறவர்... இங்கு அமர்ந்திருக்கிற அந்த மனிதர் தான் அவர் என்று நான் நம்புகிறேன். நீங்கள் யூதரிடம் ஒரு போதும் தேவனை மூன்று கூறாக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று மூன்று ஆட்கள் உண்டு என்று போதிக்க முற்படாதீர். அப்போதகம் நிசாயா ஆலோசனை சங்கத்தில் பிறந்தது என்று உங்கள் திரித்துவ போதகத்தைக் கேட்ட உடனே யூதர் கூறிவிடுவர். அவருக்கு அது எங்கிருந்து வந்தது என்று நன்கு தெரியும். அப்படிப்பட்ட போதகத்திற்கு அவர்கள் செவி கொடுக்க மாட்டார்கள். ஆனால் நீங்கள் அவர்களுக்கு, ஒரே தேவன்தான் உண்டு என்றும், அவரே மாம்சத்தில் வந்தார் என்றும், அவர் நம்மை பரிசுத்தமாக்க நம்மிடையே வாசம் பண்ணினார் என்றும், மீண்டும் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் நமக்குள் வருவதற்காக அவர் பரத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். ஆகவே தேவனே பிதா, அவரே பரிசுத்த ஆவி, எல்லாம் அந்த ஒரு நபர்தான் என்று இவ்வாறு அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். 289. மத்தேயு சுவிசேஷம் 1ம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு கூறப்பட்டுள்ளதே, அதில் இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது, “ ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான், ஈசாக்கு யாக் கோபைப் பெற்றான்”. அதற்குக் கீழே தொடர்ந்து நீங்கள் படிப்பீர்களானால், நான் என்னத்தைக் குறிப்பிட விரும்புகிறேன் என்பதை அறிவீர்கள். மத்தேயு.1:18ம் வசனம் முதல் ஆரம்பிப்போம். “ இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பிதாவாகிய தேவனாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது”. 290. அங்கே தேவனாகிய பிதாவினாலே கர்ப்பவதியானாள் என்றா எழுதப்பட்டுள்ளது? யாரால் கர்ப்பவதியானாள் என்று எழுதப் பட்டுள்ளது? (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி). பிதாவாகிய தேவனே அவரது பிதா என்று நான் நினைத்தேன். பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியானாள் என்று எழுதப்பட்டுள்ளதால், தேவன் அவருடைய பிதா என்று இருப்பதால், அப்பொழுது, பிதாவாகிய தேவனும், பரிசுத்த ஆவியானவரும் ஒரே நபர்தான் என்று புலப்படுகிறது. இரண்டும் இருவெவ்வேறு நபர்கள் என்றிருப்பின், அப்பொழுது, இயேசுவுக்கு, இரு பிதாக்கள் உண்டு என்றாகி விடும். ''அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு, தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியா யிருக்கிறது (பிதாவாகிய தேவனால்?) ...பரிசுத்த ஆவியினால் உண்டானது”. மத். 1:19-20 291. அப்படியாயின், இயேசு கிறிஸ்துவின் பிதா யார்? மேற் கண்ட வசனத்தின்படி பரிசுத்த ஆவியானவர்தான் அவரது பிதா. நல்லது, அவரே பிதாவாகிய தேவனும் கூட. அப்படியில்லையா? நிச்சயமாக அப்படித்தான். "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக...'' மத். 1:21 292. இங்கு பிதாவாகிய தேவன், இங்கு பரிசுத்த ஆவியாகிய தேவன், இங்கு குமாரனாகிய தேவன். அவ்வாறு சொன்னால் அது நிச்சயமாக மூன்று தனித்தனி தேவர்களைக் குறிக்கும். வேதம் ஒரு போதும் அப்படி சொல்லவில்லை. பரிசுத்த ஆவியும், பிதாவும் ஒரே ஆளாக இருக்க வேண்டும், அப்படியில்லையெனில், இயேசுவுக்கு இரண்டு பிதாக்கள் உண்டு என்ற அர்த்தமாகி விடும். அவருக்கு இரண்டு பிதாக்கள் இல்லை, நீங்கள் அதை அறிவீர்கள். "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசியின் மூலமாய் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம் மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். மத். 1:21-23. 293. மத்தேயு. 28:19ல் இயேசு, “ நீங்கள் புறப்பட்டுப் போய் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்றார். 294. பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் (பெயர்) என்ன? இயேசு என்பதுதான் அதின் நாமம். 295. நீங்கள் கதை படிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதின் முடிவில் “ ஜானும், மேரியும் அதன் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்'' என்று கண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். யார் இந்த ஜானும் மேரியும் என்று கேள்வி கேட்டால், கதையின் தொடக்கக் கட்டத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும், அவர்கள் யார் என்று கண்டுபிடிக்க. பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் என்று மட்டும் கூறியிருந்தால், அது யாருடைய நாமம் (பெயர்)? பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் என்று சொன்னால், அந்த நாமமானது என்ன என்று கண்டு பிடிக்க நீங்கள் விஷயத்தின் துவக்கத்திற்குச் சென்று அவர் யாரைக் குறிப்பிட்டுள்ளார் என்பதை காணுங்கள். 296. பெந்தெகொஸ்தே நாளில், பேதுரு, “ நீங்கள் மனந் திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறினான். அவனுக்கு வெளிப்படுத்துதல் உண்டாயிருந்தது. யோவானுக்கு வெளிப்படுத்துதல் உண்டாயிருந்தது. 297. இயேசு தான் அந்த வெளிப்படுத்துதலாயிருந்தார். வேதவாக்கியத்தில் அவரே தம்மைப் பற்றி, ''இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவராகிய சர்வவல்லமை யுள்ளவராக இருக்கிற நான்'' என்று எடுத்துக் காண்பித்துள்ளார். 298. நாம் இப்பொழுது விரைவாக 6ம் வசனத்தைப் பார்ப்போம். ஏனெனில் நாம் சீக்கிரமாக முடிக்க வேண்டும். ...சர்வ வல்லமையுள்ளவருக்கு... ''மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.” '....தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கி அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். 299. அங்கே காணப்படுகிற வெளிப்படுத்துதலைப் பாருங்கள்? எவ்வாறு தேவன்... பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது யார் என்று கண்டுபிடிக்க, மனிதர்கள் தங்கள் தலையைச் சொரிந்து கொண்டு குழம்பிப் போய் தலைமுடியைப் பிய்த்துக் கொள்கிறார்கள். குழம்பிப் போய் மூன்று ஆட்களில் ஒரு தேவன் என்று கூறுகிறார்கள். நீங்கள் உங்கள் தலை முடியைப் பிய்த்துக் கொண்டு, தலையைச் சொரிந்து கொள்ள வேண்டாம், மேலே நோக்கிப் பாருங்கள், அங்கிருந்து உங்களுக்கு வெளிப்பாடு உண்டாகும். அது தான் சரி. அதை அவர் வெளிப்படுத்துவார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது மூன்று தனித்தனி ஆட்கள் அல்ல, அது ஒரே தேவன் ஜீவித்த அவரது மூன்று அலுவல்கள் ஆகும். 300. அவர் தம்மிலே தாமே “ ஆவியானவர்'' என்ற அலுவலில் இருந்து வந்தார். மானிட வர்க்கம் தாழ்ந்த நிலையில் இருந்தபடியால், அவரும், தமக்கென்று ஒரு சரீரத்தை உண்டாக்கினார், அதில் அவர் ஜீவித்து, தனது சொந்த இரத்தத்தை உண்டாக்கிக் கொண்டார். ஏதேன் தோட்டத்தில் ஏற்பட்ட மாம்ச சம்மந்தமான உடல் உறவில் ஏற்பட்டது போல் இது ஏற்படவில்லை. ஆனால் ஒரு சரீரத்தை உண்டாக்கினார், தனது அந்த கறைபடாத கன்னிகை பிறப்பினால் ஏற்பட்ட சரீரத்தில் இருந்து தனது சொந்த பரிசுத்த இரத்தத்தை நமக்களித்து, நம்மைச் சுத்திகரித்து, நம்மை அவிசுவாசத்தினின்று விடுவித்தார். அது மட்டுமல்ல, அவர்மேல் நாம் விசுவாசம் கொள்ளும்படி அவர் செய்தார். அதை நாம் செய்யும் பொழுது, நாம் அவரை நமது இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறோம், அது தேவன் நம்மில் இருப்பதாகும். தேவனே, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாயிருக்கிறார். அவர் தீர்க்கதரிசி, ஆசாரியன், இராஜா என்று இருப்பதைப் போல்தான் இதுவும். அதே காரியம் தான். 301. சரி, இப்பொழுது நாம் 7ம் வசனத்தைப் பார்ப்போம். அதில் ஒரு அறிவிப்பு அடங்கியுள்ளது. “ இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்....” 302. ஓ! நமக்கு இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது? அங்கே அது மிகவும் அழகாக உள்ளது. நீங்கள் இன்னும் 30 அல்லது 20 நிமிடங்கள் இதற்காகத் தர முடியுமா? உங்களால் முடியுமா? நல்லது. இன்றிரவிலே, பத்மு தீவு தரிசனத்தில் உள்ளதை நாம் படிப்போம். இன்று நாம் இந்த அறிவிப்பைக் குறித்து படித்து முடிப்போம். 303. ஓ! உங்களுக்கு நல்லுணர்வு தோன்றுகிறதா? இந்த பழமை வாய்ந்த வேதாகமத்தை நேசிக்கிறீர்களா? இது எதைப் பற்றிய வெளிப்படுத்துதலாயிருக்கிறது? அது என்னவாயிருக்கிறது? தேவன் தாழ இறங்கி வந்து, இப்புத்தகத்தை எடுத்து அதிலுள்ள திரையை நீக்கம் செய்து, “ இதோ அவர் அங்கே இருக்கிறார், தீர்க்கதரிசி, ஆசாரியன், இராஜா, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, அவர் இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர், இவையெல்லாம் அவரே, அவர் தேவன் தாமே'' என்பதை வெளிப்படுத்துகிறார். 304. கர்த்தருடைய உதவியைக் கொண்டு, நாம் தானே, சில நிமிடங்களுக்கு திரையை நீக்கம் செய்வோம். நம்முடைய மனக் கண்களை மறைத்திருக்கிற திரையை நீக்கிவிட்டு விடுவோமாக. "... இதோ மேகங்களுடனே வருகிறார்....' 305. இப்பொழுது, அவர் எவ்வாறு வருகிறார்? “ மேகங்களுடனே வருகிறார்''. என்னவிதமான மேகங்கள்? மகிமையின் மேகங்கள். இடி மின்னலுடன் வரும் இந்த மழை மேகங்கள் அல்ல இவை. ஆனால் மகிமையின் மேகங்கள், மறுரூப மலையின் மேல் பேதுருவும் மற்றும் ஏனையோர்களும் அவரது தோற்றத்தைக் காண்கையில், என்னவிதமான மேகத்தால் அவர் சூழப்பட்டிருந்தார் என்பதை நீங்கள் காண்பீர்களானால், அதைப் புரிந்து கொள்வீர்கள். ஒரு மேகம் அவரை சூழ்ந்து கொண்டது, அவர் வஸ்திரமானது பிரகாசித்தது. அவர் ஒரு மேகத்தினால் சூழப்பட்டிருந்தார். அது தேவனுடைய வல்லமையாயிருந்தது. 306. இந்த சபைக் காலங்களைப் பற்றிய செய்தியில் அதைப் பற்றி நாம் பார்ப்போம். அதைப் பற்றி சிந்திக்கையில், என் உள்ளான மனிதனில் ஒரு பேருவகை ஏற்படுகிறது. நாம் வாழ்கிற நாளை நான் பார்க்கையில், அதில், அவருடைய வருகையைப் பற்றிய நம்பிக்கையைத் தவிர வேறு எதுவும் நமக்கு இல்லை. 307. இப்பொழுது விரைவாக இந்த வசனத்தைப் பார்ப்போம். “ கண்கள் யாவும் அவரைக் காணும்...” 308. கண்கள் யாவும் அவரைக் காணும் என்று சொன்னால், அது சபை எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறிக்கவில்லை என்றாகிறது. அது எடுத்துக் கொள்ளப்படுதல் அல்ல. அது எடுத்துக் கொள்ளப்படுதல் அல்ல. அவர் இங்கே எதைக் குறித்துப் பேசுகிறார்? இரண்டாம் வருகையைக் குறித்துப் பேசுகிறார். "... அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள். பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்...” 309. இப்பொழுது நாம் சற்று, முந்தைய கால சரித்திரத்திற்குத் திரும்பிப் போய் பார்ப்போம். நாம் சகரியா தீர்க்கதரிசியின் புத்தகம் 12ம் அதிகாரத்திற்குத் திருப்புவோம். 310. “இரட்சிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டு வந்தார்''. இயேசு கிறிஸ்துவைப்பற்றிய அந்த நல்ல வெளிப்படுத்துதலுக்காக நாம் எவ்வளவாக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்! அவரைக் குறித்து நீங்கள் மகிழ்ச்சியுள்ளவர் களாயிருக்கவில்லையா? இச்செய்திகளை நாம் ஒரு புத்தகமாக கூடிய விரைவில் ஆக்கிக் கொடுப்போம். அப்பொழுது நீங்கள் உங்கள் அறையில் அமைதியாக படித்து ஆராயலாம். 311. சகரியா 12ம் அதிகாரத்திற்கு வருவோம். இப்பொழுது நாம் இதை மிகுந்த ஜெப சிந்தையோடு எடுத்துக் கொள்ள விரும்புகிறோம். தேவனுடைய மகிமைக்காக இதை எடுத்துக் கொள்ள நான் விரும்புகிறேன். இப்பொழுது சகரியா 12ம் அதிகாரம் 9ம் வசனத்தை எடுப்போம். கவனமாகக் கேளுங்கள். சகரியா 12ம் அதிகாரம் 9ம் வசனத்தில் ஆரம்பிப்போம். இங்கே வருகையைக் குறித்து தீர்க்கதரிசி பேசுகிறார். சகரியா 12:9 - கிறிஸ்துவின் வருகைக்கு 487 ஆண்டுகளுக்கு முன்பாக சகரியா இந்தத் தீர்க்கதரிசனத்தை உரைக்கிறான். "அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன். (அதைக் குறித்து எண்ணிப் பாருங்கள்!) நான் தாவீதின் குடும்பத்தாரின் மேலும் எருசலேம் குடிகளின் மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து..." 312. எப்பொழுது சுவிசேஷமானது யூதர்களுக்குத் திரும்பிச் செல்கின்றது? புறஜாதிகளின் காலம் முடிவடைந்த பிறகு, சுவிசேஷமானது யூதருக்கு திரும்பிச் செல்ல ஆயத்தமாயிருக்கும். இங்கே தானே, நடைபெறப் போகிற ஒரு காரியத்தை நான் உங்களுக்கு முன்னுரைக்க முடியும். இந்நாளில் தானே அது நடைபெற ஆயத்தமாக இருக்கிறது. நாம் அதை சபைக் காலத்தில் பார்க்கிறோம். நடைபெறவிருக்கிற அதற்காக தயாராயிருக்கிற அந்த மகத்தான காரியம், வெளிப்படுத்தின விசேஷம் 11ம் அதிகாரத்திலுள்ள அவ்விரு தீர்க்கதரிசிகளாகிய எலியா, மோசே ஆகியோரை யூதர்களுக்காக திரும்பக் கொண்டு வருகிறது. நாம் அதற்காக ஆயத்தமாயிருக்கிறோம். எல்லாமே கிரமமாக, ஆயத்தமாக இருக்கிறது. இந்த புறஜாதிகளுக்கான செய்தியானது, முதலில் புறஜாதிகளண்டைக்கு யூதர்கள்தான் கொண்டு வந்ததாகும். புறஜாதிகள் அதை மீண்டும் யூதர்களிடம் எடுத்துச் செல்வார்கள்; எடுத்துக் கொள்ளப்படுதல் அப்பொழுது வரும். 313. மகா உபத்திர காலத்திற்கு பிறகு உள்ள இந்த வருகையைப் பற்றி மனதில் வையுங்கள். மகா உபத்திரவ காலத்திற்குள் சபையானது போவதில்லை. வேதம் அவ்வாறே கூறுகிறது என்று நாம் அறிவோம். அது சரிதான். 314. ''... இஸ்ரவேல் வீட்டார் மேல் அவர் ஊற்றுவார்...'' எதை ஊற்றுவார்? அதே பரிசுத்த ஆவியைத் தான் ஊற்றுவார். எப்பொழுதென்றால், புறஜாதி சபையை எடுத்துக் கொண்ட பிறகு தான். “ .... அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறது போல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக் காகத் துக்கிக்கிறது போல எனக்காக மனங்கசந்து துக்கிப் பார்கள். அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப் போல எருசலேமின் புலம்பல் பெரிதாயிருக்கும். தேசம் புலம்பிக் கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித் தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், நாத்தான் குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்... ஒவ்வொரு குடும்பத்தாரும்... புலம்புவார்கள். சகரி.2:11-14 315. அவர்கள் நோக்கிப் பார்க்கையில் என்ன சம்பவிக்கும்? இயேசுவின் இரண்டாம் வருகையில் மகிமையின் மேகங்களுடன் அவர் வருகையில் என்ன சம்பவிக்கும்? யூதர்கள் தாங்கள் குத்தினவரை நோக்கிப் பார்ப்பார்கள். இன்னொரு வேத வாக்கியத்தில் அவர்கள் (யூதர்கள்) அவரை நோக்கி இவ்வாறு கேட்கிறதாகச் சொல்லப்பட்டுள்ளது. "... ஒருவன் அவரை நோக்கி இந்த வடுக்கள் ஏதென்று கேட்டால்...'' எங்கே இந்த காயங்கள் அவருக்குக் கிடைத்தன என்று கேட்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. 316. ''என் சிநேகிதரின் வீட்டில்'' என்று அவர் கூறுகிறார். 317. அவரை மேசியாவாக ஏற்றுக் கொள்ளாத யூதருக்கு மட்டும் அது ஒரு புலம்பலின் வேளையாக இருக்கப் போவதில்லை. இந்த நாளுக்கென உள்ள மேசியாவாக அவரை ஏற்றுக் கொள்ளாத புறஜாதியாரும் அழுது புலம்புவார்கள்; அவர்கள் அப்பொழுது எடுத்துக் கொள்ளப்படுதலில் எடுத்துக் கொள்ளப்படாமல் கைவிடப்பட்டிருப்பார்கள். தங்கள் விளக்குகளில் எண்ணெய் பெற்றுக் கொள்ள மறுத்த அந்த சபையாகிய நித்திரை செய்த புத்தியில்லாத கன்னிகைகள் அழுது புலம்புவார்கள். 318. அங்கே பத்து கன்னிகைகள் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அனைவருமே நல்லவர்கள்தான், ஆனால் அவர்களில் ஐந்து பேருக்கு மட்டுமே தங்கள் விளக்குகளில் எண்ணெய் இருந்தது. நல்லவர்களாயிருந்த மற்ற ஐந்து பேர்களும், தங்கள் விளக்குகளில் எண்ணெயைப் பெற்றுக் கொள்ளத் தவறிவிட்டார்கள். அவர்கள் புறம்பான இருளில் தள்ளப் படுவார்கள்; அங்கே அவர்களுக்கு அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும். “ அங்கே அழுது புலம்புவார்கள்'' என்று சொல்லப்பட்டுள்ளது. வேதாகமம், ''அவர்கள் இருதயம் நொறுங்கி மனங்கசந்து அழுது புலம்புவார்கள்'' என்று இங்கே கூறுகிறது. 319. இங்கே ஆதியாகமம் 45ம் அதிகாரத்தில் நான் இன்னொரு வசனத்தை உங்களுக்குத் தருகிறேன், நீங்கள் அதை அறிந்து கொள்ள விரும்பினால், சிறிது நேரத்தில் அவ் வசனத்தை எடுத்துக் கொண்டு அதையும் வாசிப்போம். அது ஆதியாகமம் 45ம் அதிகாரம் என்று நான் நம்புகிறேன். இங்கே யோசேப்பு தன் ஜனங்களுக்கு தன்னை தெரியப்படுத்துகிறான். வரப்போகும் அந்நாளில் என்ன நடக்கப் போகிறதோ அதற்கு சாயலாக மாதிரியாக ஆதியாகமம் 45ம் அதிகாரத்திலுள்ள யோசேப்பின் காரியத்தை எடுத்துக் கொண்டு, பின்பு இரண்டையும் ஒன்று சேர்த்துப் பார்ப்போம். "அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக் கொண்டிருக்கக் கூடாமல்; யாவரையும் என்னை விட்டு வெளியே போகப் பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். (இப்பொழுது இங்கே நினைவில் கொள்ளுங்கள், யோசேப்பு தன்னை யார் என்று தெரியப் படுத்திக் கொண்டிருக்கிறான். அப்பொழுது “ யாவரையும் என்னை விட்டு போகப் பண்ணுங்கள்'' என்று கதறினான்). யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை. அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள். (யோசேப்பு மிகவும் கதறி சப்தமிட்டு அழுதிருக்க வேண்டும்) யோசேப்பு தன் சகோதரரைப் பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர் அவனுக்கு முன்பாகக் கலக்கமுற்றிருந்ததினாலே, அவனுக்கு உத்தரம் சொல்லக் கூடாமல் இருந்தார்கள். அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப் போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப் போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான் தான். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப் போட்டதினால், நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார் (ஓ! எவ்வளவு அழகாயிருக்கிறது.) தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும். பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்” ஆதி.45:1-7 320. ஒரு க்ஷணம் நான் மேற்கூறியவற்றை, சகரியா 12ம் அதிகாரத்தோடு ஒப்பிட்டுக் காண்பிக்கிறேன். நாம் அதை மாதிரியாகப் பார்க்கிறோம். நீங்கள் எப்பொழுதும் மாதிரிகளைக் கொண்டு போதித்தால் விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள உதவியாயிருக்கிறது. நான் மாதிரியைக் கொண்டு சிந்திக்கிறேன். 321. யோசேப்பு பிறந்த பொழுது அவனது சகோதரர்களால் அவன் பகைக்கப்பட்டான். அது சரிதானே? இப்பொழுது நான் உங்களுக்கு, யோசேப்பு ஆவியினால் நிரப்பப்பட்ட சபைக்கு உதாரணமாகத் திகழ்கிறான் என்பதை காண்பிக்க விரும்புகிறேன். யோசேப்பு தன் சகோதரரால் பகைக்கப்பட்டான். ஏன்? ஏனெனில் அவன் ஆவிக்குரியவனாக இருந்தான். தரிசனங்கள் காண்பதை அவனால் நிறுத்த முடியவில்லை. அவன் சொப்பனங்கள் கண்டான், அதை அவனால் நிறுத்த முடியவில்லை. சொப்பனங்களை வியாக்கியானம் செய்யவும் செய்தான். அவனோடு இருந்த காரியம் அதுதான். தனக்குள் இருப்பதைத் தவிர வேறெதையும் அவனால் காண்பிக்க முடியவில்லை. 322. அப்பொழுது, அவனது சகோதரர்கள் முகாந்திரமின்றி அவனைப் பகைத்தார்கள். ஆனால் அவன் தந்தை அவனை நேசித்தார், ஏனெனில் அவன் தந்தை ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். இயேசுவின் காரியம் எப்படியிருந்தது என்பதைப் பாருங்கள். தேவன் தன் குமாரனை நேசித்தார். ஆனால் அவரது சகோதரராகிய பரிசேயரும் சதுசேயரும் அவரை பகைத்தார்கள்; ஏனெனில் அவரால் வியாதியஸ்தரை குணமாக்க முடிந்தது, வரப்போகிற வைகளை முன்னுரைக்கவும், தரிசனங்கள் கண்டு அவற்றை வியாக்கியானிக்கவும் முடிந்தது. நான் கூறியதை புரிந்து கொண்டீர்களா? "... முகாந்திரமின்றி அவரைப் பகைத்தார்கள்...'' 323. யோசேப்புக்கு அவனது சகோதரர்கள் என்ன செய்தார்கள்? அவன் இறந்துவிட்டதாக கதை கட்டி, அவனை ஒரு குழியில் போட்டு விட்டார்கள். அவன் தந்தை அவனுக்கு அன்புடன் அளித்திருந்த ஏழு நிறங்களிலான அந்த அங்கியை இரத்தத்தில் தோய்த்து எடுத்தார்கள். 324. வானவில்லில் ஏழு நிறங்கள் தான் உள்ளன. வான வில்லானது என்ன என்பதை நாம் அறிவோம். அதைப் பற்றி இன்றிரவில் பார்ப்போம். இயேசுவைச் சுற்றிலும் வானவில் லிருந்தது. அவர் பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத் துக்கும் ஒப்பாய் இருந்தார். வானவில்லானது உடன் படிக்கைக்கு அடையாளமாயிருக்கிறது. எனவே, யோசேப்பின் ஏழு நிறமுள்ள ஆடையானது, யோசேப்போடு தேவன் ஏற்படுத்தியிருந்த உடன்படிக்கையாயிருக்கிறது. 325. யோசேப்பின் சகோதரர்கள் அவனது பல வருண அங்கியை இரத்தத்தில் தோய்த்து அதை அவன் தந்தையிடம், அவன் செத்துப் போய்விட்டதாகக் காண்பிக்கக் கொண்டு வந்தார்கள். ஆனால் யோசேப்பு அந்த குழியிலிருந்து தூக்கியெடுக்கப்பட்டு, எகிப்தியரிடம் விற்கப்பட்டான். அவனை ஒரு தளபதி விலைக்கு வாங்கியிருந்தான். அவன் அந்த மனிதனின் வீட்டில் இருக்கையில், அவன் பேரில் பொய்யான குற்றச்சாட்டு ஏற்பட்டு, அவன் சிறைச்சாலையில் தள்ளப்பட்டான். அச்சிறைச் சாலையில் தானே தன்னோடு சிறைப்பட்டிருந்த பார்வோனின் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் கண்ட வெவ்வேறு சொப்பனங்களுக்கு தீர்க்கதரி சனத்தினால் வியாக்கியானம் செய்து, ஒருவன் என்ன நிலைக்கு உயர்த்தப்படுவான் என்றும் மற்றவன் கதி எவ்வாறாயிருக்கும் என்பதைப் பற்றியும் கூறினான். 326. அச்சிறையிலிருந்து தானே யோசேப்பு பார்வோனின் வலது பாரிசத்திற்கு உயர்த்தப்பட்டான். யோசேப்பு மூலமாயல்லாமல் எவரும் பார்வோனை நெருங்க முடியாது என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டான். 327. யோசேப்பு எகிப்தியரிடம் விற்கப்பட்டது முதல் அவனுக்கு நேர்ந்த யாவற்றையும் சற்று கவனித்துப் பாருங்கள்; அவன் அவைகளிலெல்லாம் கிறிஸ்துவுக்கு முன்னடையாளமாயிருந் ததைப் பாருங்கள். பார்வோனின் பானபாத்திரக்காரனும், சுயம்பாகியும் சிறையில் இருந்ததையும், அவர்கள் கண்ட சொப்பனங்களைக் குறித்தும் கவனியுங்கள். இயேசு தனது சிறைவீட்டில் இருக்கையில்... யோசேப்பு சிறையில் இருந்ததை நினைவு கூருங்கள். அதே போல் இயேசுவும் தன் சிறையில் இருந்த பொழுது... அவர் எவ்வாறு சிறைப்படுத்தப்பட்டிருந்தார்? இயேசு சிலுவையிலறையப்பட்டது சிறைப்படுத்தப்பட்டதாகும். அவ்வாறான சிறையில் இயேசுவும் இருந்த பொழுது, அவரோடு அருகே சிலுவையில் (சிறையில்) அறையப்பட்டிருந்தவர்களில் ஒருவன் இரட்சிக்கப்பட்டான், ஒருவன் ஆக்கினைக் குள்ளாகினான். யோசேப்பும் சிறையில் இருந்த பொழுது ஒருவன் இரட்சிக்கப்பட்டான், மற்றவன் ஆக்கினைக் குள்ளானான். 328. இயேசு சிலுவை மரணத்திற்குப் பிறகு, உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, மகத்தான ஆவியாகிய யேகோவாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். “ ... என்னை யல்லாமல் ஒருவனும் தேவனிடத்தில் வரான்...'' என்றார். “ மரியாளே வாழ்க'' அல்லது “ இன்னாரே வாழ்க'' என்பது போன்ற கோஷங்களினால் தேவனிடம் அணுக முடியாது; ஆனால் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள அந்த இயேசு கிறிஸ்துவாகிய ஒரே மத்தியஸ்தர் மூலமாகத்தான் தேவனை அணுக முடியும். தேவன் நம்மிடையே வாசம் பண்ணத்தக்கதாக எடுத்துக் கொண்ட கூடாரமாகிய, தேவனுடைய நாமம் இடப்பட்டிருந்த (இயேசுவாகிய) பரிசுத்த சரீரத்தின் மூலமாகத்தான் தேவனை அணுக முடியும். மனுஷீக பெயரை தேவன் எடுத்தார். தேவன் எடுத்தார்... 329. இங்கு கவனியுங்கள். ஆதியிலே ஆதாம்... இந்த விஷயத்தி லிருந்து நான் மேற்கொண்டும் தொடர்ந்து செல்ல முடியவில்லை, ஏனெனில் சிலர் இவைகளை புரிந்து கொள்ளாமலிருப்பது போல் நான் உணருகிறேன். எனவே நான் மீண்டும் உங்களுக்கு இவைகளை எடுத்துக்கூறட்டும். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் நான் இவ்வாறு செய்ய என்னை எச்சரிக்கிறார். நான் என்னுடைய பொருளை விட்டு ஒரு நிமிடம் விலகிச் செல்கிறேன். ஆதாமாகிய தேவகுமாரன் வீழ்ந்து போனது பற்றி மகிமைக்கு முதல் செய்தி எட்டுகையில், தேவன் ஒரு மைந்தனை அனுப்பினாரா? வேறு யாரையாகிலும் அனுப்பினாரா? வீழ்ந்து போன தனது மைந்தனை மீட்க தாமே புறப்பட்டு வந்தார். அல்லேலூயா! இதைச் செய்வதற்காக தேவன் தாமே வந்தார். அதைச் செய்ய வேறு யாரையும் தேவன் நம்பவில்லை. தேவன் மாமிசமானார் (மனுஷனானார்) நம்மிடையே வாசம் பண்ணினார், அவரே மனிதனை மீட்டுக் கொண்டார். “ நாம் தேவனுடைய சொந்த இரத்தத்தினால் இரட்சிக்கப்பட்டோம்'' என்று வேதம் கூறுகிறது. நமது பாவத்தை போக்குவதற்காக, அழியாமையுள்ளவரான தேவன் அழிவுள்ள சரீரத்தை எடுத்துக் கொண்டு, அவர் தாமே நமது பாவ நிவாரண பலியான ஆட்டுக்குட்டியானார், நாம் காண முடியாதபடி திரை போட்டு மூடப்பட்டிருக்கும் தேவ மகிமைக்குள் நாம் பிரவேசிப்பதற்காக, அவர் தனது சொந்த இரத்தத்துடன் திரைக்கப்பால் தேவனுக்கு முன்பாக பிரவேசித்திருக்கிறார். 330. எகிப்தில் கொண்டு போகப்பட்ட யோசேப்பு, சிறைச் சாலையிலிருந்து, பார்வோனின் வலது பாரிசத்திற்கு உயர்த்தப்பட்டு நாட்டையே ஆளக்கூடியவனாக ஆக்கப்பட்டான். யோசேப்பின் நாட்களில் எகிப்தில் யாவும் செழித்தோங்கின. 331. அதே போல், இயேசு திரும்பி வருகையில், பாலைவனமும், சோலைவனமாகும். இயேசு கிறிஸ்து செழிப்பின் குமாரன், அவருக்கு யோசேப்பு முன்னடையாளமானவன். 332. அவர்கள் யோசேப்பை சிறையில் தள்ளினார்கள்... அந்த எகிப்திய தளபதியின் வீட்டில் யோசேப்பு இருக்கையில், அவன் வீட்டில் யாவும் விருத்தியடைந்ததாக இருந்தது. பின்பு அவனை சிறையில் போட்டார்கள். சிறையில் யாவும் விருத்தியுள்ளதாக ஆயிற்று. இறுதியாக அவன் பார்வோனின் வலது பாரிசத்திற்கு உயர்த்தப்பட்ட போது, உலகில் எங்கும் காண முடியாதவாறு, எகிப்தில் அனைத்தும் விருத்தியடைந்த நிலைமைக்கு முன்னேற்ற மடைந்தது. 333. அது போலவே, இயேசுவும் உலகுக்கு திரும்பி வருகையில், இது செழிப்பின் பூமியாக மாறும். பழைய பாலைவனங்கள் யாவும் சோலையாக மாறும். எங்கும் உணவு தாராளமாக உண்டாயிருக்கும். நாம் ஒவ்வொருவரும் தத்தமது சொந்த அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து மகிழ்ந்து களிகூர்ந்து, அவரது பிரசன்னத்தில் என்றென்றும் வாழ்ந்திருப்போம். அவர் இராஜாவாக திரும்பி வருகையில் இது சம்பவிக்கும். 334. அவர் மனுஷகுமாரனாயிருந்தார், அதாவது தீர்க்கதரிசியாயிருந்தார். ஆமென்!. அவர் மனுஷகுமாரனா யிருந்தார். பலியாக, ஆசாரியனாக. அவர் இராஜாவான மனுஷகுமாரனாயிருக்கிறார். தமது மகத்துவமுள்ள சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் தாவீதின் மைந்தனாயிருக்கிறார். மனுஷகுமாரன்! மனுஷகுமாரனாக வெளிப்பட்ட தேவன் இவரே. சர்வலோகத்தின் பாவங்களைத் தொலைக்க அவர் தாழ இறங்கி மனிதனானார். அவர் மானிடன் தீர்க்கதரிசியானார். அவர் ஆசாரியனான மனிதனானார். அவர் இராஜாவான மனிதனானார். பரலோகத்தின் இராஜா அவர், பரிசுத்த வான்களின் இராஜா அவர். அவர் நித்திய இராஜா, அவர் நேற்றும் இன்றும் என்றும் இராஜா, நித்திய இராஜா! 335. யோசேப்பு தேசமெங்கும் புறப்பட்டுச் செல்லுகையில், அவன் வரும் முன்பாக, அவன் வருகையை அறிவிக்கும் முகமாக எக்காளத்தை முழங்கினர். அதைக் கேட்ட ஜனங்கள் யாவரும், ''யோசேப்புக்கு முன்பாக முழங்கால் யாவும் முடங்கட்டும்'' என்று சப்தமிட்டனர். யோசேப்பு புறப்பட்டு வருகையில், வழியில் ஒருவன் எதைச் செய்து கொண்டிருந்தாலும் சரி, ஒருவன் எந்தப் பொருளையாவது விற்றுக் கொண்டிருந்தாலும் சரி, எக்காளம் முழங்கியதும் அவன் தன்னுடைய தொழிலையும் நிறுத்தி விட்டு, யோசேப்புக்குத் தன் முழங்காலை முடக்குவான். ஒருவன் தனக்குச் சேர வேண்டிய பணத்தை வாங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் எக்காளம் முழங்கினால், உடனே அவனும் தன் முழங்காலை முடக்குவான். அண்ணகனும் தன் பணிகளைச் செய்ய ஆயத்தமாகையில், எக்காளம் முழங்கினால், தன் வேலையை நிறுத்திவிட்டு, முழங்காலை முடக்குவான். யோசேப்பு வருகிறார் என்ற எக்காள முழக்கத்திற்கு யாவரும் தம் பணிகளை நிறுத்திவிட்டு முழங்காலை முடக்க வேண்டும். 336. வரப்போகும் நாட்களிலொன்றில், அனைத்தும், நாழிகையும் கூட அசைவற்று நிற்கும், ஏனெனில் அப்பொழுது தேவ எக்காளம் தொனிக்கும், அப்போது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள், பிரகாசமும் அழகுமுள்ள நித்தியத்திற்குள் அக்காலைப் பொழுது விடியும். “ எல்லா முழங்கால்களும் முடங்கி, நாவுகள் யாவும் அவர் நாமத்தை அறிக்கை பண்ணும்''. இப் பொழுதே அதைத் தொடங்குங்கள், "சிலருடைய பாவங்கள் முந்திக் கொள்ளும், சிலருடைய பாவங்கள் அவர்களை பின் தொடரும்'. 337. ஆனால் இப்பொழுது, என்ன சம்பவித்தது, அது எவ்வளவு மகிமையாயிருந்தது என்பதைக் கவனியுங்கள். யோசேப்பு புறஜாதியிலிருந்து தனக்கு ஒரு பெண்ணை விவாகம் செய்து கொண்ட பிறகு, எப்பிராயீம், மனாசே என்ற இரு மைந்தர்கள் அவனுக்குப் பிறந்தார்கள். யாக்கோபின் அந்திமக் காலத்தில் நடந்ததைக் கவனியுங்கள். அவன் எப்பிராயீம், மனாசே ஆகியோரை ஆசீர்வதிக்க இருந்தபோது, யோசேப்பு மூத்தவனாகிய மனாசேயை தந்தையின் வலது கரத்திற்கு நேராகவும், எப்பிராயீமை தன் தந்தையின் இடது கைக்கு நேராகவும் வைத்தான், ஏனெனில் மூத்தவன் வலது கரத்தின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டுமென்று விரும்பினான். ஆனால் யாக்கோபு ஜெபம் பண்ணுகையில், யாக்கோபின் கைகள் மாறின, அதினால் வலது கரத்தின் ஆசீர்வாதங்கள் மூத்தவன் மேல் வருவதற்குப் பதிலாக இளையவன் மேல் வந்தது. 338. “ ... அப்படியல்ல தகப்பனே'' என்று யோசேப்பு கூறினான். ''மனாசேயின் மேல் வைக்க வேண்டிய ஆசீர்வாதத்தை எப்பிராயீமின் மேல் வைத்து விட்டீர்'' என்றான். 339. அதற்கு யாக்கோபு, “ தேவன் என் கைகளை மாறிப் போகச் செய்தார்'' என்றான். 340. என்ன நேர்ந்தது? தேவனால் முதலில் தெரிந்து கொள்ளப்பட்ட பழம்பெரும் மக்களாகிய யூதர்கள் மேல் வரவிருந்த ஆசீர்வாதமானது, சிலுவையின் மூலமாக மணவாட்டியைப் பெற்றுக் கொள்ளும்படி புறஜாதிகள் மேல் வந்து விட்டது. யூதர்களிடத்திலிருந்து ஆசீர்வாதமானது, புறஜாதிகள் மேல் சிலுவையின் மூலம் வந்தது. அவர்கள் சிலுவையை புறக்கணித்தனர். எனவே, அவர் தனக்கென புறஜாதி மணவாட்டியைப் பெற்றுக் கொண்டார். 341. இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னர், யோசேப்பு தன் சகோதரரால் தள்ளப்பட்டு, அநேகமாண்டுகள் ஒருவருக்கொருவர் தொடர்பற்று இருந்தார்கள். அதே போல் யூதர்களும் அநேக ஆண்டுகளாக தம் சகோதரரான இயேசுவோடு ஐக்கியமின்றி இருக்கிறார்கள். 342. நாம் இப்பொழுது, மீண்டும் சகரியா தீர்க்கதரிசியின் புத்தகத்திற்கு திருப்புவோம். அங்கே கவனியுங்கள். யூதர்கள் குடும்பம் குடும்பமாக பிரிந்து நின்று அழுது புலம்புகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே புலம்பி, “ நாம் எவ்வாறு இந்தத் தீங்கை செய்து விட்டோம்? நாம் எவ்வாறு இந்தத் தீங்குக்கு உடன்பட்டோம்?'' என்று கூறுவார்கள். “ உம் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று'' கேட்பார்கள் - அவரைக் குத்தினவர்களும் கூட. அவர் மேகங்களுடன் வருவார், அப்பொழுது அவரைக் குத்தினவர்களும் நோக்கிப் பார்ப்பார்கள். யூதர்களின் ஒவ்வொரு குடும்பத்தாரும் தனித்தனியே புலம்பி அழுவார்கள். செய்வதறியாது அவர்கள் திகைப்பர். 343. யோசேப்பு தன் சகோதரருக்கு முன்பாக நிற்கையில், தனக்கு எபிரெய பாஷை தெரியாதது போல் காண்பித்துக் கொண்டு, அவர்களோடு பேச ஒரு மொழிபெயர்ப்பாளனை அமர்த்திக் கொண்டான். அவ்வரலாறு உங்களுக்குத் தெரியும். அவன் எபிரெய மொழி பேசத் தெரியாதவன் போல் காண்பித்துக் கொண்டான். அவன் கண்டு கொள்ள இவ்வாறு செய்தான். அதன் பிறகு, இறுதியாக ஒரு நாளில் அவர்கள் தங்களெல்லாரிலும் இளையவனான தம்பி பென்யமீனை யோசேப்பின் முன்பாக கொண்டு வந்துவிட்டு போது, யோசேப்பின் உள்ளம் தன் சகோதரன் பென்யமீனுக்காகப் பொங்கினது. அதைக் கவனித்தீர்களா? 344. அவ்வாறே இயேசுகிறிஸ்து திரும்பி வருகையில் அவரது உள்ளத்தை மிகவும் பொங்கச் செய்யப் போகும் காரியமானது என்ன? யோசேப்பைப் போல் உள்ள நமது இயேசு யார் நிமித்தமாக அவரது உள்ளம் பொங்கியெழப் போகிறது? தனதல்லாத தூர தேசங்களில் சிதறிக் கிடந்து, தற்போது, புதிதாகப் பிறந்தவர்கள் போல் பாலஸ்தீனாவில் கூட்டிச் சேர்க்கப்பட்டு தன் ஆதி ஸ்தானத்தில் திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ள, தேவனுடைய கற்பனைகளை கைக்கொண்டு வந்த அவ்விளம் சபையாகிய அந்த யூதர்களினிமித்தம் தான் இயேசுவின் உள்ளம் பொங்கியெழும். ஆறு முனைகளைக் கொண்ட தாவீதின் நட்சத்திரம் பொறித்த உலகிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த அக்கொடியுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அத்தேசம் பிறந் துள்ளது. அங்கே இஸ்ரவேல் என்னும் தேசம் உதித்துள்ளது. தேசங்கள் உடைகின்றன; இஸ்ரவேலோ விழித்தெழுது பார் தேவன் வேதத்தில் முன்னுரைத்த அடையாளங்களின்படி புறஜாதியார் நாட்கள் எண்ணப்படுது, திகில்கள் அதிகரிக்குது சிதறிப் போனவரே, உம் சுய தேசம் திரும்புவீர், மீட்பின் நாள் சமீபம் மானிட உள்ளம் பயத்தினால் சோருது (உன் திராட்சைச் செடி ஒளியிடம் வருவதைப் பார்) ஆவியினால் நிறைவீர், உம் விளக்குகளை தூண்டி எரிய விடுவீர், தலை நிமிர்ந்து பாரீர், உமது மீட்பு சமீபம். கள்ளத் தீர்க்கர் பொய்யுரைக்கின்றனர், தேவ சத்தியம் அவர்கள் மறுக்கின்றனர். கிறிஸ்துவாகிய இயேசு நமது தேவன் என்பதை மறுக்கின்றனர் மகிமை! ஆனால் வெளிப்படுத்துதலானது வந்திருக்கிறது! எனவே நாம் அப்போஸ்தலர் நடந்த அதே பாதையைப் பின்பற்றி நடப்போம் தேவ ஆவியினால் நிறைந்து உம் விளக்குகளை தூண்டி தெளிவாக எரியவிடுவீர் ஏனெனில் மீட்பின் நாள் சமீபம் மானிட உள்ளம் பயத்தினால் சோருது தேவ ஆவியினால் நிறைந்து உம் விளக்குகளை தூண்டி தெளிவாக எரிய விடுவீர் தலை நிமிர்ந்து பாரீர், உமது மீட்பு சமீபம் (ஓ) 345. ஓ! யோசேப்பு தனது தம்பியாகிய பென்யமீனை அங்கு நிற்கப்பார்க்கையில்! அது அவனது சின்னத்தம்பி, தன் தம்பியாகிய பென்யமீனை இளைஞனாக நிற்கக் கண்டான். யூதர்களின் பன்னிரண்டு கோத்திரங்களிலும் இருந்து ஒரு இலட்சத்து நாற்பத்தி நாலாயிரம் பேர்கள், கிறிஸ்துவின் வருகையில் அவரைக் கண்டு அவரை ஏற்றுக் கொள்ள திரும்பி வருவார்கள். அவர்கள், ''...இதோ இவரே நம்முடைய தேவன், இவருக்காக காத்திருந்தோம்...'' என்று கூறுவார்கள். அவருடைய காயப்பட்ட கரத்தைப் பார்த்த அவர்கள், “ ... உம் கைகளில் வடுக்கள் ஏதென்று'' கேட்பார்கள். 346. ''... என் சிநேகிதரின் வீட்டில்...'' என்று கூறுவார். 347. அவர்கள் அழுது புலம்புவார்கள். அவர் ஆகாயத்தில் நிற்கக் கண்டு, ஒவ்வொரு குடும்பமும், தாவீதின் குடும்பத்தார் தனியேயும், நப்தலியின் குடும்பத்தார் தனியேயும், அழுது புலம்பு வார்கள். தாங்கள் குத்தினவரை நோக்கிப் பார்த்துப் புலம்புவார்கள். 348. அப்பொழுது அவருடைய செய்தி என்னவாயிருக்கும்? யோசேப்பு கூறியதைக் கவனியுங்கள். அவன் அவர்களிடம் பேசியபோது... 349. மற்றுமொரு காரியத்தைக் கவனியுங்கள். யோசேப்பின் முன்பாக இஸ்ரவேல் புத்திரர் சேர்ந்து வந்திருந்த பொழுது, அவன் அவர்களை நோக்கிப் பார்த்தான். தன் தம்பியாகிய பென்யமீனை பார்த்தான். அவன் எப்பிராயீமைப் பார்த்தான். மற்ற யாவரையும் பார்த்தான். காத் முதற்கொண்டு அவர்கள் யாவரையும் பார்த்தான். அந்த பன்னிரண்டு கோத்திரங்கள், இல்லை, அங்கே பத்துக் கோத்திரங்கள் அப்பொழுது அவன் முன்பாக நின்று கொண்டிருந்தனர். அவர்கள் யாவரும் அங்கே நிற்கக் கண்டான். அவர்கள் யாவரும் தன் சகோதரர்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். அவர்களோடு நின்றிருந்த தன் தம்பியாகிய பென்யமீனை அவன் ஏறெடுத்துப் பார்த்தபோது, அவன் தொண்டை துக்கத்தால் அடைத்தது. அவர்கள் அவனது சகோதரர்கள் தான் என்று அவன் அறிந்திருந்தான். அவன் அப்பொழுது என்ன கூறினான்? ''எல்லாரும் என்னை விட்டு அகன்றுபோங்கள்'' என்று கூறினான். அப்பொழுது யோசேப்பின் மனைவியும், பிள்ளைகளும் எங்கிருந்தனர்? அவர்கள் தங்கள் அரண்மனைக்குள் போய் விட்டனர். 350. புறஜாதி சபையானது எடுத்துக் கொள்ளப்பட்டு எங்கு செல்லும்? அரண்மனைக்குச் செல்லும். மணவாட்டியானவள், எடுத்துக் கொள்ளப்படுதலில் இப்பூமியை விட்டு மேலே அழைத்துக் கொண்டு போகப்படுவாள். அல்லேலூயா! அவரைக் குத்தினவர்களும், அவரைப் புறக்கணித்தவர்களுமான யூதர்களாகிய தன் சொந்த சகோதரர்களுக்கு இயேசு தன்னை அறியப்படச் செய்யும் போது, அதற்காக இயேசு திரும்பி வருகையில், மணவாட்டி இப்புவியில் இருக்க மாட்டாள். ஆனால் அவரது மனைவியாகிய சபையும், அவருக்குப் பிரியமானவர்களும், அவரது நெருங்கிய சிநேகிதரும், அவருடைய சொந்தமான தேவன் அனுப்பிய அவரது துணையும் ஆலயத்தில் அமர்ந்திருப்பார்கள். 351. அவன் அவர்களை நோக்கிப் பார்த்த போது, அவர்கள் அவன் யாரென்று அறியாமல் அந்த தேசத்தின் அதிபதியின் முன்பாக நின்று கொண்டு, தங்களுக்குள் ஒருவரோடொருவர் யோசேப்புக்கு தாங்கள் செய்த தீங்கைக் குறித்துப் பேசிக் கொண்டார்கள். 352. அது எப்பிராயீம் என்று நினைக்கிறேன். இல்லை, அது எப்பிராயீம் அல்ல, நான் மறந்து விட்டேன், யார் இவ்வாறு கூறியது: '... நம் சகோதரனாகிய யோசேப்பை நாம் கொன்றிருக்கக் கூடாது...... இப்பொழுது இதோ அவன் இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது...'' என்றான். ரூபன் தான் இதைக் கூறினான். 'அப்பொழுது ரூபன் அவர்களைப் பார்த்து; இளைஞனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா? நீங்கள் கேளாமற்போனீர்கள்; இப்பொழுது இதோ அவன் இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது'' என்று கூறினான். 353. அவர்கள் இவ்வாறு பேசிக் கொள்கையில், யோசேப்பு அங்கு நின்று கொண்டிருந்தான். யோசேப்பு ஒரு மொழி பெயர்ப் பாளனின் உதவியைக் கொண்டு தன் சகோதரரோடு பேசினதினால், அவனுக்கு எபிரெய பாஷை தெரியாது என்று நினைத்து அவர்கள் இவ்வாறு தாராளமாக அவனுக்கு முன்பாக பேசிக் கொண்டார்கள். ஆனால் யோசேப்பு அவர்கள் பேசிய யாவற்றையும் அறிந்தேயிருந்தான். 354. சிலர் நினைக்கிறார்கள், “ அந்நிய பாஷையில் பேசுவது புரிந்து கொள்ள முடியாது'' என்று. ஆனால் அவர் அதைப் பற்றிய யாவையும் அறிந்தேயிருக்கிறார். ஆம், அவர் அறிந்துள்ளார். புறஜாதி இராஜ்யங்களின் வரிசையில் முதலாவதான தாயாகிய பாபிலோனிய இராஜ்யம் வந்தபோது, அது விழுந்து போவதற்கு முன்பாக, அந்நிய பாஷையில் பேசுதலும், வியாக்கியானித்தலும் உண்டாயிருந்தது. முதலாவதான புறஜாதி சாம்ராஜ்ய யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது எது? எவரும் அறிந்திராத அந்நிய பாஷையில், ஒரு கையுறுப்புத் தோன்றி, சுவற்றில் எழுதியது. அவற்றை, அங்கேயிருந்த ஒரு மனிதன் அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை, வியாக்கியானித்துக் கூறினான். எனவே, எவ்வாறு புறஜாதி சாம்ராஜ்யம் அதின் துவக்கத்தில் அந்நிய பாஷையில் பேசுதல் உண்டாகி முடிவுற்றதோ, அவ்வாறே, புறஜாதி இராஜ்யத்தின் யுகமானது அந்நிய பாஷை பேசுதலோடு முடிவடையும். ஆமென். எவ்வாறு ஆரம்பித்ததோ, அவ்வாறே முடிவும் இருக்கும். 355. இஸ்ரவேல் புத்திரர் தாங்கள் பேசும் பாஷை யோசேப்புக்கு தெரியாது என்று எண்ணினர், ஆனால், அவனோ அவர்கள் பேசுவதை அறிந்தேயிருந்தான். அவர்கள் தங்களுக்குள், “ இப்பொழுது நமக்கு நேரிட்டதைப் பார்த்தீர்களா?'' என்று கூறினார்கள். 356. அப்பொழுது, யோசேப்பு அவர்கள் தங்கள் செயலைப் பற்றி வருந்தியதை கண்டபோது... 357. இப்பொழுது, அவரைப் புறக்கணித்ததற்காக அவர்கள் தங்களில் மனங்கசந்து வருந்துவதைக் காணும்போது, அவரது தொண்டை துக்கத்தால் அடைக்கும். அவர் தன் சபையை இப்பூமியிலிருந்து கிளப்பி, மகிமைக்குள் கொண்டு செல்வார். அதன் பின்பு, திரும்பி வருவார், அப்பொழுது பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் புலம்புவார்கள். 358. எகிப்தில் இஸ்ரவேல் புத்திரர் என்ன செய்தார்கள்? ரூபன் முதற்கொண்டு, அவர்கள் அனைவரும், யோசேப்பை அடையாளங்கண்டு கொண்ட போது, அவர்கள் கதறினர், பயந்தனர். “ இதோ யோசேப்பு” என்று அவர்கள் சப்தமிட்டனர். “ நாம் செய்த செயலுக்கு உரிய பலனை அடைந்தோம், யோசேப்பு நம்மைக் கொன்று போடுவான், இப்பொழுதே நாம் யாவரும் அவனால் அழிக்கப்பட்டுப் போவோம். ஏனெனில் யோசேப்பு நம்மை விட்டு அகன்று அநேக காலமாக இருந்து விட்டான். இவன் நம்முடைய சகோதரனாகிய யோசேப்பு ஆயிற்றே, எனவே நாம் செய்ததற்கு தக்க பலன் நமக்கு வந்துவிட்டது'' என்று அழுதார்கள். 359. ஆனால் யோசேப்போ, “ நீங்கள் உங்கள் செய்கைக்காக வருத்தப்பட வேண்டாம், நம் யாவரையும் உயிரோடே காப்பதற்காக தேவன்தான் இதைச் செய்தார்'' என்றான். 360. தேவன் என்ன செய்தார்? இயேசுவை யூதர்கள் ஏன் புறக்கணித்தனர்? தமது நாமத்தினிமித்தமாக, தாம் பிரித்தெடுத்த புறஜாதி சபையாகிய மணவாட்டியாகிய நம்மை ஜீவனோடு காக்கும்படியாக தேவன் இப்படிச் செய்தார். 361. அவரைப் புறக்கணித்த பூமியின் கோத்திரத்தா ரெல்லாரும் புலம்புவார்கள். அவர்கள் குகைகளிலும் மலையிடுக்குகளிலும் தங்களை மறைத்துக் கொள்ளுவார்கள். இந்த மலையின் மேல் ஓடி ஒளிந்து கொள்வார்கள். அவர்கள் அவரை புறக்கணித்தனர். அவர் நிமித்தமாக பூமியின் கோத்திரத்தார் யாவரும் அழுது புலம்புவார்கள். இஸ்ரவேலருக்குள்ளே அவர்கள் கோத்திரம் கோத்திரமாக பிரிந்தும், குடும்பம் குடும்பமுமாக பிரிந்தும், அழுது புலம்பி, “ நாம் ஏன் இதைச் செய்தோம், அவரைப் புறக்கணிக்கிற இக்காரியத்தை நாம் எப்படிச் செய்து விட்டோம்? இதோ அவர் நிற்கிறார், இவரே நம் தேவன், இவருக்காக காத்திருந்தோம். அங்கே அவர் தன் கைகளில் ஆணி கடாவப்பட்டதினால் உண்டான காயத்தழும்புகளுடன் நிற்கிறார், நாமே அவருக்கு அப்படிச் செய்தோம்'' என்று புலம்புவார்கள். 362. இதே போல் தான் எகிப்திலும், “ இதோ யோசேப்பு, நாம் அவனை விற்றோம்'' என்று யோசேப்பின் சகோதரர்கள் திரும்பி வந்து கூறினார்கள். 363. அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி, "எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப் போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான் தான்'' என்று கூறினான். 364. “ ஓ'' என்று அவர்கள் திகைத்து, ஒருவரையொருவர் நோக்கி, அழுது புலம்பி, “ நாம் இப்பொழுது என்ன செய்ய முடியும்?'' என்றார்கள். 365. “ நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம்: தேவனே இதைச் செய்தார்... தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்'' என்று யோசேப்பு கூறினான். 366. தேவன் தான் எல்லா மனிதரையும் சிருஷ்டித்தார். அவர்கள் வெள்ளையராயினும், கறுப்பு மனிதராயினும், பழுப்பு நிறத்தவ ராயினும், மஞ்சள் நிறத்தவராயினும், எல்லோரையுமே தேவன் சிருஷ்டித்தார். அவரே புறஜாதியினரையும், யூதரையும் படைத்தார். யாவரையும் அவரே படைத்தார், தன் மகிமைக்காக. புறஜாதியிலிருந்து மணவாட்டியைத் தெரிந்து கொள்ள அவர் யூதர்களை புறக்கணிக்க வேண்டியதாயிருந்தது. 367. இவைகளை முன்னிட்டுத்தான், இந்த எல்லா முன்னடையாள மான திருஷ்டாந்தங்கள் உள்ளன. எனவே, புறஜாதியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மணவாட்டியானவளும் அவளுடைய சந்ததியும் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் கழுவப்பட்ட மகிமையால் நிறைந்த பெந்தெகொஸ்தே அனுபவம் பெற்ற சபையாய், ஒரு நாளில் எடுத்துக் கொள்ளப்படுதலில், ஒரு க்ஷணப் பொழுதில், ஒரு இமைப் பொழுதில், இயேசுவின் சமூகத்தில் போகும்படி அவர்களுக்குள் வாசம் பண்ணும் உயிர்த்தெழுதலின் வல்லமையினால் எடுத்துக்கொள்ளப் படுவாள். இது அவர் திரும்பி வந்து யாவற்றையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வருகையில் சம்பவிக்கும், அப்பொழுது அவர் தன் சகோதரருக்கு தன்னை வெளிப்படுத்துவார். 368. முடிவாக, வேதவாக்கியம் இங்கே என்ன கூறுகின்றது என்பதைக் கவனியுங்கள். “ இதோ மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும் (இங்கே அவர் இரண்டாம் வருகையைக் குறித்துக் கூறுகிறார். எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்தல்ல) அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்: 369. வெளிப்படுத்தின விசேஷம் 1ம் அதிகாரம். “ ... கண்கள் யாவும் அவரைக் காணும்: அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள். பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும். ஆமென்.'' 370. இதன் பிறகு இங்கே அவர் அந்த மகத்தான மேற்கோளைத் தருகிறார். இவர் யார்? அவர்கள் நோக்கிப் பார்க்கப் போகிற இவர் யார்? 371. “ நான் அல்பாவும் ஓமெகாவுமாயிருக்கிறேன். நான் "A" முதல் "Z" முடிய. எல்லாம் அவரே (கிரேக்க மொழியின் அகர வரிசையில் “ அல்பா'' முதலெழுத்தும் “ ஒமெகா'' கடைசி எழுத்துமாகும்). அப்போஸ்தலர் 2:36ல் பேதுரு கூறினான், “ மனுஷர் இரட்சிக்கப்படும்படி வானத்தின் கீழே வேறொரு நாமமும் கட்டளையிடப்படவில்லை''. நான் உங்களின் மன்னிப்பைக் கோருகிறேன். நான் வசனத்தை தவறாக குறிப்பிட்டு விட்டேன். “ ஆகையினால் நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாக அறியக்கடவர்கள்'' என்றான். பேதுரு இவ்வாறு தான் கூறினான். 372. யோவான் 14:8ல் பிலிப்பு அவரை நோக்கி, “ ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும்'' என்றான். 373. யோவான் 14:9ல், ''அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" என்றார். 374. ஒரு சமயம் ஒரு நபரிடம் இந்த வசனத்தைக் குறிப்பிட்டேன். அதற்கு அந்த பெண்மணி கூறினாள்: “ ஒரு நிமிடம் பொறுங்கள், திருவாளர் பிரன்ஹாமே, நீங்களும் உங்கள் மனைவியுங்கூட ஒன்றுதான். "அது அதைப் போலுள்ளது அல்ல” என்று நான் பதிலளித் தேன்.) “ அது எப்படி'' என்றாள் அவள். “ இப்பொழுது என்னை நீ பார்க்கிறாயா?'' என்று நான் கேட்டேன். “ ஆம்'' என்றாள் அவள். “ என்னை பார்க்கையில் என் மனைவியையும் பார்க்கிறாயா?'' என்று நான் கேட்டேன். “ இல்லை '' என்றாள் அவள். 375. அப்படியாயின் அவர் கூறியது வித்தியாசமானது அல்லவா?'' என்றேன் நான். இயேசு, “ என்னைக் காணும்போது, நீ பிதாவைக் கண்டுவிட்டாய்'' என்று கூறினார். எனவே அது இயேசு யார் என்று அறிந்து கொள்ளப் போதுமானதாக உள்ளது. 376. எனவே யோவான் எழுதிய முதலாம் நிருபம் 5ம் அதிகாரம் 7ம் 8ம் வசனங்களைக் குறித்துக் கொள்ளுகிறவர்கள் குறித்துக் கொள்ளலாம். இயேசு தந்த வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதிய அதே யோவான் இங்கே கூறுகிறார். “ பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை (வார்த்தை தான் குமாரன்), பரிசுத்த ஆவி இந்த மூன்றும் ஒன்றுதான்... பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப் பட்டிருக்கிறது''. இவை மூன்றும் ஒன்றல்ல, இவை மூன்றும் ஒருமைப் பட்டிருக்கின்றன. 377. குமாரனையுடையவர்களாக இல்லாது, நீங்கள் பிதாவை மட்டும் உடையவர்களாக இருக்க முடியாது. பரிசுத்த ஆவியன்னியில், நீங்கள் பிதாவையோ, அல்லது குமாரனையோ மட்டுமே உடையவர்களாக இருக்க முடியாது. ஆனால் நீங்கள்... தண்ணீர், இரத்தம் மற்றும் ஆவி இவை மூன்று மூலமான காரியங்களைக் கொண்டுதான் நீங்கள் அவருடைய சரீரத்திற்குள் இடம் பெற முடியும். 378. இயற்கையான பிறப்பு நேரிடுகையில், ஒரு பெண்மணி, தன் குழந்தைப் பேற்றில், அங்கே அவளிடமிருந்து முதலாவதாக வெளிப்படுவது என்ன? முதலாவதாக தண்ணீரும், இரண்டாவதாக இரத்தமும் (அது சரியா?) மூன்றாவதாக ஜீவனும் அதாவது ஆவியும் வெளிப்படுகின்றன. குழந்தை வெளியே வந்ததும், தன் சுவாசத்தை இழுத்து சுவாசிக்க ஆரம்பித்து ஜீவிக்கிறது. 379. இயற்கைப் பிறப்புக்கு மூல காரணமாக அமையும், தண்ணீர், இரத்தம், ஆவி இவை மூன்றையும் போலத்தான் ஆவிக்குரிய பிறப்புக்கும் இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தண்ணீர் ஞானஸ்நானம், விசுவாசத்தினால் நீதிமானாகுதல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசம் வைத்தல், தண்ணீரில் ஞானஸ்நானம் பெறுதல். அடுத்தது என்ன? இரத்தம்; பரிசுத்தமாகுதல், அதாவது இரத்தத் தினால் சுத்திகரிக்கப்பட்டு குழந்தை வெளியேறுகிறது. 380. அந்தக் கட்டத்தில் தான் நசரேய சபைக்காரர்களே, நீங்கள் தவறிவிட்டீர்கள். முதலிரண்டு கட்டம் வரைக்கும் மட்டும் போன நீங்கள், அதற்கு மேற்கொண்டு உள்ள கட்டத்திற்குச் செல்லவில்லை. பரிசுத்தமாக்கப்பட்ட பாத்திரம் பலிபீடத்தின் மேல் தகனிக்கப்பட அல்லது பலிசெலுத்தப்பட வேண்டியது அவசிய மாகும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. “ நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்தியடைவார்கள்''. பரிசுத்தமாக்கப்பட்ட பாத்திரமாக உள்ளது, அது உண்மைதான். 381. அது 'கன்னி'' என்ற சொல்லைப் போலுள்ளது, 'கன்னி'' என்ற சொல்லுக்கு, ''சுத்தமான, பரிசுத்தமான, கலப்படமில்லாத, பரிசுத்தமாக்கப்பட்ட'' என்று பொருள்படும். ஐந்து கன்னியரிடம் எண்ணெய் இருந்தது, ஏனைய ஐந்து கன்னியரிடம் எண்ணெய் இருக்கவில்லை. முதல் ஐந்து பேர்களும் ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தனர். ஏனைய ஐந்து பேர்களும் பரிசுத்தமாக்கப் படுதலோடு நின்று போய்விட்டனர். ஆவியினால் நிரப்பப்படுதலுக்கு கடந்து செல்லவில்லை. ஓ! பாப்டிஸ்டுகளே, ஓ! பிரஸ்பிடேரியன்களே, நீங்கள் 'விசுவாசிகளான பிறகு, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா? 382. ''பரிசுத்த ஆவி உண்டென்று நாங்கள் கேள்விப்படவே யில்லை” என்று அவர்கள் (எபேசுவிலிருந்து சீஷர்கள்) கூறினார்கள். 383. ''அப்படியென்றால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?'' 384. அல்லாமலும் பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்த போது, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார்... அதாவது அவர்கள் இரட்சிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்ட பிறகு, அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். 385. தண்ணீர், இரத்தம், ஆவி. இயேசு, தான் வந்து வாசம் பண்ணும்படி, ஒரு சபையைக் கழுவி, சுத்தம் செய்து, பரிசுத்தமாக்க வந்தார். அவர் தன் சொந்த இரத்தத்தினால், தேவனால் பரிசுத்தமாக பிறப்பிக்கப்பட்ட அந்த மனித சரீரத்தில் இருந்த தேவ இரத்தமான தன் சொந்த இரத்தத்தை, மாம்ச இச்சையில் பிறந்த நம்மை கழுவி சுத்திகரித்திடவும், நமக்கு பரிசுத்தமாக்கப்பட்ட, பரிசுத்த பாத்திரத்தை ஈந்து, அதில் வந்து அவர் தாமே வாசம் பண்ணவும், ஈந்தார். 386. “ இன்னும் கொஞ்சக் காலத்தில் உலகம் என்னைக் காணாது, ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் உங்களுடனும், உங்களுக்குள்ளும் (நான் என்பது இந்த இடத்தில் இடப் பிரதி பெயராக உள்ளது) உலகத்தின் முடிவு பரியந்தமும் இருக்கிறேன்'' ஆமென். சகல நாட்களிலும் நான் உங்களோடும் உங்களுக்குள்ளும் இருக்கிறேன் என்று கூறினார். ''நான் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'', என்று கூறினார். ''விசுவாசிக்கிறவர்களை இவ்வடையாளங்கள் பின் செல்லும்'' என்றும் கூறினார். சபையினுள் தேவன் வாசம் பண்ணுகிறார். தெய்வீகம் எவ்வளவு அருமையாக உள்ளது. ''பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை (குமாரன்), பரிசுத்த ஆவி. இம்மூன்றும் ஒருவர்தான். 387. பரிசுத்தமாக்கப்படுதலுக்குள் வராமலே நீங்கள் ஒருவேளை இரட்சிக்கப்பட முடியும். மேலும், இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த மாக்கப்பட்டு இருந்தும், ஒருவேளை பரிசுத்த ஆவியைப் பெறாமலும் இருக்கக் கூடும். பரிசுத்தமாக்கப்பட்டிருந்தும் இன்னும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படாத நிலையில் இருக்கக் கூடும். உங்கள் இருதயத்தை கழுவி, சுத்திகரித்து இருந்தும் இன்னமும் ஏதோ ஒன்றால் நிரப்பப்படாத நிலை உள்ளது. இந்த நிலையில் தான் வேதத்தில் சொல்லப்படும் பின்வரும் காரியம் சம்பவிக்கிறது. ''அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல், நான் விட்டு வந்த என் வீட்டுக்குத் திரும்பி போவேன் என்று சொல்லி, அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப் பட்டிருக்கக் கண்டு திரும்பி போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக் கொண்டு வந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலை மையிலும், அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும் என்றார்'' 388. அவ்வாறு தான் உங்களுக்கும் சம்பவித்துள்ளது. ஓ, யாத்திரீகப் பரிசுத்த சபையோரே (Pilgrim Holiness), மற்றும் நசரேய சபையோரே (Nazarenes)மற்றும் ஏனைய அதைப் போன்ற சபையோரே! நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் வந்து நிரப்பியதால், மக்கள் அந்நிய பாஷைகளில் பேசவும், ஆவியானவர் அடையாளங்களையும் அற்புதங் களையும் செய்தபோது, நீங்கள் அதை “ பிசாசு'' என்றழைத்து, தேவனுடைய கிரியைகளுக்கெதிராகப் பேசி தேவதூஷணம் கூறினீர்கள். தேவனுடைய கிரியைகளை "அது அசுத்தமான காரியம்' என்றழைத்தீர்கள். அதினால் உங்களது சபையானது எங்கே போய் நிற்கிறது என்பதை பார்த்தீர்களா? அவைகளை விட்டு வெளியே வாருங்கள்! அந்த வேளையானது வந்து விட்டது இங்கே. இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடு போதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளை வந்திருக்கிறது. பரிசுத்த ஆவியின் வல்லமையினால் உண்டாகும் அவர் கிரியை நடப்பித்தல் மூலமாக தேவன் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆமென். மீட்பின் நாள் சமீப மாயிருக்கிறது. 389. 1 தீமோத்தேயு 3:16ல் அவரின் தெய்வீகம் விவரிக்கப்பட்டுள்ளது. "அன்றியும் தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்கிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கிப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக் கொள்ளப்பட்டார். 390. நாம் இப்பொழுது எந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். 8ம் வசனத்தில் இறுதிப் பகுதிக்கு. 391. இன்றிரவிலே நாம் பத்மு தீவு தரிசனம் என்ற தலைப்பில் 9ம் வசனத்திலிருந்து படிப்போம். நமக்காக மகத்தான காரியங்கள் ஆயத்தமாக உள்ளன. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நான் அவரை நேகிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனெனில் அவர் என்னை முந்தி நேசித்தாரல்லோ என் இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே கிரயத்திற்குக் கொண்டாரன்றோ 392. நீங்கள் உண்மையிலே அதைச் செய்கிறீர்களா? தேவன் தம்மை உங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளாரா? இயேசு கிறிஸ்துவாகிய அவர் தேவ குமாரனென வெளிப்படுத்தப் பட்டுள்ளாரா? பாவத்தைப் போக்க தேவன் மாம்சத்தில் தோன்றினார். அவர் தனது சபைகளிலே இக்கடைசி நாட்களில் தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் தன்னை அறியப்படுத்துகிறார். 393. வேதத்தில் சொல்லப்பட்டுள்ளபடி சபையில் காரியங்கள் அப்படியே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். அதை இச்செய்தியின் முடிவில் கவனியுங்கள். அப்படியே நடைபெறுகிறது. வேதத்தில் கூறப்பட்டுள்ளபடியே எபேசு சபைக் காலத்திலும், பெர்கமு சபைக் காலத்திலும், தீயத்தீரா சபைக் காலத்திலும், மற்றும் ஒவ்வொரு சபை காலத்திலும் நடைபெற்றிருக்கிறது. 394. லூத்தர் என்ன செய்வார், வெஸ்லி என்ன செய்வார் என்பதைப் பற்றியும், எவ்வாறு இந்த பெந்தெகொஸ்தே சபை ஸ்தாபனமானது லவோதிக்கேயா சபைக் காலத்திற்குரிய வெது வெதுப்பான நிலைமைக்குள் போகும் என்பதைக் குறித்தும் சரியாக உரைக்கப்பட்டுள்ளது. அதுவுமல்லாமல், அதன் நடுவிலிருந்து தேவன் தன் ஜனங்களை வெளியே இழுப்பார் என்பதையும் குறித்து உரைக்கப்பட்டுள்ளது. அது சரிதான். அது மிகவும் சரியாக அமைந்துள்ளது. நாம் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எல்லாம் உடைந்து போவதையும், மற்றும் என் நண்பர்களையும், உலகம் இருக்கிற நிலையையும், உலகம் பெற்றுள்ள குழப்பமான நிலையையும் நான் பார்க்கிறேன். கர்த்தருடைய வருகை மிகவும் சமீபமாயிருப்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். காலத்தின் முடிவில் நாம் இருக்கிறோம். 395. மனுஷருடைய இருதயங்கள் பயத்தினால் சோர்ந்து போகிறது. எங்கும் யாவரும் அந்த நிலையில் உள்ளனர். அடிக்கடி வானொலியில், விமானத் தாக்குதல் பற்றி எச்சரிக்கப்படுகிறோம்; அவர்கள், ''வான் ஊர்தி தாக்குதல் வரப்போகிறது, நிலவறைக்குள் போய் ஒளிந்து கொள்ளுங்கள்'' என்று எச்சரிக்கின்றனர். அந்த விதமான அணு ஆயுதத் தாக்குதல் வந்தால் அதினின்று தப்பும்படி எவரும் தன்னை மறைத்துக் கொள்ள முடியாது. பூமிக்கடியில் 150 அடி ஆழத்திற்கு அந்த குண்டுத் தாக்குதல் போய் எட்டும். 150 சதுர மைல் விஸ்தீர்ணத்திற்கு அத்தாக்குதல் போய் சேதம் விளைவிக்கும். அதன் தாக்கம் அல்லது அதினால் ஏற்படும் அதிர்ச்சி இண்டியானா போலிஸ் போன்ற இடத்தை தரைமட்டமாக்கும். லூயிவில்லையும் தாக்கும். அவைகளிலொன்றின் தாக்குதலைப் பற்றி பாருங்கள். அதன்னியில் இன்னும் என்னென்ன பயங்கர ஆயுதங்கள் இருக்கின்றனவோ, அதை சொல்ல கஷ்டமாக உள்ளது. 396. ருஷியா போன்ற மாவல்லரசு அதைச் செய்ய வேண்டு மென்றில்லை. கியூபா போன்ற சிறு நாடு அதைச் செய்து விட முடியும். மிகச் சிறிய ஒரு பிரதேசம், சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாவிலுள்ள சிறிய தீவாகிய அல்கெட்ராஸ் போன்றதொரு மிகச் சிறிய பிராந்தியம் உலகத்தையே அழிக்கக் கூடிய அந்த குண்டை செய்துவிட முடியும். அதற்காக செய்ய வேண்டிய தெல்லாம், எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்திவிட்டு, ஒரு பொத்தானை அழுத்தினால் போதுமானது. உலகமனைத்தும் அழிக்க ஒரு பெரிய சைன்யம் தேவையில்லை. அதைச் செய்ய பிசாசின் கைகளில் கருவியாகவுள்ள ஒரு பைத்தியக்காரன் அதற்கு போது மானது. அப்படித்தான் காரியமானது உள்ளது. அவன் அதை செய்வான், அப்பொழுது உலகமனைத்தும் முடிந்து போகும். 397. ஆனால், நான் இப்பொழுது, இந்த ஆசீர்வதிக்கப்பட்ட காரியத்தை உங்களுக்கு கூறட்டும். அந்தப் பயங்கர அழிவு சமீபமாகும் போது, காலைப் பொழுது வருவதற்கு முன்பாக, அந்தப் பயங்கர அழிவு சம்பவிக்கும் முன்னர், எடுத்துக் கொள்ளப்படுதல் உண்டாகும். அதற்கு முன்பாக எடுத்துக் கொள்ளப்படுதல் சம்பவிக்கும். 398. நீங்கள் இந்தக் காரியத்தில் குழப்பமடையாமல் இருக்க இயேசு கூறியதை நினைவு கூருங்கள்; “ நோவாவின் நாட்களில் நடந்ததைப் போல்...' '...லோத்தின் நாட்களில் சம்பவித்ததைப் போல...'' மழை பெய்வதற்கு முன்னர் நோவா பேழைக்குள் போய்விட்டான் என்பதை நினைவு கூருங்கள். ஜலப் பிரளயத்தினூடே அவன் பேழை மூலமாக எடுத்துச் செல்லப் பட்டான். நோவா யூதருக்கு முன்னடையாளமாயுள்ளான். ஆனால், ஏனோக்கு மரணத்தைக் காணாமல் போய்விட்டான். ஏனோக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை நோவா உணர்ந்தான். ஏனோக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதானது, நோவாவுக்கு ஒரு அடையாளமாயிருந்தது. புறஜாதி சபையானது எடுத்துக் கொள்ளப்பட்டவுடன், அவர் தன்னை இஸ்ரவேலருக்கு வெளிப்படுத்துவார். பார்த்தீர்களா? அது சரியாக இருக்கிறது. 399. லோத்தின் நாட்களைப் பற்றி இயேசு கூறியதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு துண்டு நெருப்புத்தணல் சோதோமின் மேல் விழுமுன், தூதன் லோத்தை நோக்கி, “ இங்கிருந்து சீக்கிரம் புறப்படு, நீ இங்கிருந்து புறப்படும் வரைக்கிலும் என்னால் இந்த ஸ்தலத்தை அழிக்க முடியாது'' என்று கூறினான். அக்கினி விழுமுன், லோத்தும் அவனது குடும்பத்தினரும் சோதோமை விட்டு வெளியேறினர். எனவே, எடுத்துக் கொள்ளப்படுதல், உபத்திரவக்காலம் வருவதற்கு முன்னர் நேரிடும். 400. உபத்திரவக் காலத்தைக் குறித்து அநேகர் தவறான அபிப் பிராயத்தில் இருக்கின்றனர். ஆனால், கர்த்தருக்கு சித்தமானால், இந்த வாரத்தில், கர்த்தருடைய உதவியைக் கொண்டு, அதைப் பற்றிய தவறான கருத்தை நீக்கி, தெளிவான - சரியான கருத்தைக் காண்போம். மகா உபத்திரவ காலத்தைக் குறித்து ஒரு முன்னடை யாளத்தை நீங்கள் வேதத்தில் காண்பீர்களாயீன், அதற்கு யாக்கோபின் இக்கட்டின் நாட்களைத் தான் சாயலாகக் கொள்ள முடியும். யாக்கோபின் இக்கட்டுக்கும், புறஜாதிகளுக்கும் எந்த வித சம்பந்தமுமில்லை. புறஜாதிகளுக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. அவ்வாறாக வேதத்தில் முன்னடையாள மில்லை. உபத்திரவ காலத்திற்கு முன்பாக புறஜாதி சபையானது எடுத்துக் கொள்ளப்படுகிறது. 401. தண்ணீர் இரத்தமாக மாறுதல் போன்ற அற்புதத்தை நீங்கள் எதிர்நோக்குவீர்களாயின், இஸ்ரவேலருக்கு வருகிறது, மோசேயும் எலியாவும் அவர்களுக்காக வரும்போது. எலியா நான்காவது தடவையாக தோன்றும் போது, அது சம்பவிக்கிறது. அவர்களிரு வரும் மரித்தவர்களாயிருக்கவில்லை. இல்லை, மோசே மரித்தான், அவனை புதைத்த இடம் யாருக்கும் தெரியாது. மறுரூபமலையின் மேல் அவன் இயேசுவோடு பேசிக் கொண்டிருந்தான். ஆகவே இந்த சம்பவத்திற்கு முன்பாக எப்பொழுதோ அவன் உயிரோடு எழுப்பப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறில்லையா? பார்த்தீர்களா? 402. எனவே அவர்கள் திரும்ப வந்து கொல்லப்படுவார்கள், அவர்கள் உடல்கள், நமது கர்த்தர் சிலுவையிலறையப்பட்ட, “ சோதோம்'' என்று ஞானார்த்தமாய் அழைக்கப்பட்ட எருசலேமின் வீதிகளில் கிடக்கும். அவர்கள் யூதர்களுக்கு பிரசங்கிப் பார்கள்; அவர்கள் பூமியை வாதைகளால் அடித்து, மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைப்பார்கள். அப்பொழுது புறஜாதிகளின் ஊழியமானது முடிவடைந்து, புறஜாதி சபையானது எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும். புறஜாதி சபையானது தன் வீட்டிற்கு திரும்பிப் போய்விடும். எல்லாவற்றின் அழிவும் அப்பொழுது உண்டாயிருக்கும். பூமியில் மூன்றில் இரண்டு பங்கினர் கொல்லப்படுவார்கள். அவ்விரு சாட்சிகளின் பிரேதங்கள் மூன்று நாட்கள் அத்தெருவில் கிடக்கும் பொழுது, அது எவ்விதமாக இருக்கும் என்பதைப் பாருங்கள். 403. தென் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட, எனக்கு அங்கிருந்து கிடைத்த அந்த புகைப்படங்களைப் பாருங்கள். அது ஒரு பெந்தெகொஸ்தே மிஷனரியும், அவரது மனைவியும், இரு குழந்தைகளும் கொல்லப்பட்டு, அவர்களது பிரேதங்கள் தெருக்களில் கிடக்கிறதைக் காண்பிக்கிற புகைப்படமாகும். அதில் ஒரு பெண் குழந்தை வயிறு வீங்கிப்போன நிலையில் கிடக்கிறது. அவர்களை கொன்றவர்கள், அவர்களை புதைக்கக் கூடவில்லை. அப்பிரேதங்களின் பக்கமாக மக்கள் நடந்து சென்று, அதில் துப்பினர். இவ்வாறான நிலையில் அப்பிரேதங்கள் மூன்று அல்லது நான்கு நாட்கள் கிடந்தன. சகோதரன் கோப் என்பவர் அந்த புகைப் படத்தை எடுத்தார். அது என்னிடம் என் வீட்டில் உள்ளது. எவ்வாறு அவர்கள் செய்தார்கள் என்பதைப் பாருங்கள். இவ்வாறு செய்து விட்டு அவர்கள் ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புகிறார்கள். 404. வேதத்தில் இக்காரியமானது எவ்வாறு முன்னடை யாளமாக குறிக்கப்பட்டிருக்கிறது என்பதை பாருங்கள். எந்த சபையானது அதைச் செய்யப் போகிறது என்பதை பாருங்கள். அது சரிதான். இப்பொழுது ஒரு பாம்பைப் போல் அது மிகவும் தந்திரமாக அசைந்து, மிகவும் நெருக்கமாக அது வந்து கொண்டிருக்கிறது. அதற்கான அடையாளங்கள் தோன்றியுள்ளன. 405. 1933ம் ஆண்டில் கர்த்தர் எனக்குத் தந்த தீர்க்கதரிசனத்தைப் பாருங்கள். அதில், ''எவ்வாறு பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப் படுவார்கள், எவ்வாறு தங்களின் வாக்குரிமையினால் தவறான நபரைத் தேர்ந்தெடுப்பார்கள்'' என்பதைப் பற்றியெல்லாம் கூறப்பட்டது. ஏழு காரியங்கள் முன்னுரைக்கப் பட்டிருந்தது. அவற்றில் ஐந்து ஏற்கனவே நிறைவேறிவிட்டன. அடுத்த காரியமானது, பெரிய சக்தி வாய்ந்த ஒரு பெண்மணி எழும்புகிறாள். அது ஒரு அதிகாரம் படைத்த சபையாக இருக்கலாம், அது இந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளை ஆண்டு கொள்ளும். அதற்கு அடுத்ததாக, அமெரிக்க தேசமே அப்படியே சாம்பலாக ஆகி விட்டதாக கண்டேன். அங்கே தான் முடிவுண்டாகிறது. அது தான் முடிவு காலம். 406. "அவர்களுக்கு ஒரு வாகனம் உண்டாயிருக்கும், ஆனால் அதை ஓட்டிச் செல்ல அதற்கு ஒரு ஓட்டுநர் தேவையேயில்லை'' என்பதாக எனக்குத் தரிசனத்தில் காண்பிக்கப்பட்டது. இப்பொழுது அப்படியொரு வாகனத்தை அவர்கள் ஆயத்தம் செய்து விட்டார்கள். பரிசுத்த ஆவியானவர், மாகினாட் அரண் கட்டப்படுவதற்கு பதினொரு ஆண்டுகளுக்கு முன்னரே ஜெர்மானியர் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி தெளிவாக முன்னுரைத்தார். அதை யாரும் மறுக்க முடியாது, அது சம்பவிக்கும் முன்னரே கூறப்பட்டது, அது சம்பவித்த பிறகு அதைப் பற்றி பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. பரிசுத்த ஆவியானவர் உரைத்தபடியே நடந்துள்ளது. ஜனாதிபதி ரூஸ்வெல்ட் அந்த விஷயத்தில் பெரும் பாதகனாயிருப்பான் என்று நான் கூறினேன். அவ்வாறே அது நடந்தது. ஜனநாயகக் கட்சியினரே, நான் உங்கள் உணர்வுகளை புண்படுத்த இவைகளைக் கூறவில்லை. நான் உங்களுக்கு கூறுகிறேன், அது ஜனநாயகக் கட்சியினனோ, அல்லது குடியரசுக் கட்சியினனோ, அவர்களைப் பற்றி நான் பேசவில்லை, நம் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். நான் ஜனநாயகக் கட்சியையோ, அல்லது குடியரசுக் கட்சியையோ சார்ந்தவனல்ல, நான் ஒரு கிறிஸ்தவன். ஆகவே அப்பொழுது அவர்கள்... அது என்னவாயிருந்த போதிலும், ஆனால் நீங்கள் அங்கே கவனியுங்கள். 407. எவ்வளவு பயங்கரமான நம்பிக்கை துரோகிகள் உள்ளனர் என்பதைப் பாருங்கள். ஒவ்வொரு தடவையும், நிக்சனுக்கு வாக்களிக்கும் பொழுது, அந்த மற்ற வேட்பாளருக்கும் உங்கள் வாக்குகள் விழும்படி இரகசியமாக அந்த இயந்திரத்தை அவர்கள் அங்கே அமைத்தனர் என்பதைப் பற்றி பத்திரிகைகளில் படித்தீர்களா? எல்லாப் பத்திரிகைகளிலும் அதைப் பற்றிய செய்தி வெளியாகியது. நாம் எங்கே இருக்கிறோம் என்பதை இதிலிருந்து நீங்கள் அறிந்து கொண்டீர்களா? 408. கிறிஸ்துவை தவிர வேறு எதுவும் உண்மையானதாக இருக்கவில்லை. ஆமென். ஓ! ஆசீர்வதிக்கப்பட்ட அந்த பழமை வாய்ந்த புத்தகம் தான், நீங்கள் யார் என்றும், நீங்கள் எங்கிருந்து வந்தீர்களென்றும், எங்கே போகிறீர்களென்றும் உங்களுக்குக் கூறுகிறதாயிருக்கிறது. ஆம், ஐயா! இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பழமையான புத்தகம் நான் அவரை நேசிக்கும்படி செய்கிறது. உங்களுக்கும் அப்படியில்லையா? பிதாவில் விசுவாசம், குமாரனில் விசுவாசம், பரிசுத்த ஆவியில் விசுவாசம் இம்மூன்றும் ஒன்றுதான். பிசாசுகள் நடுங்கும்; பாவிகள் உணர்வடைவார்கள், யேகோவாவில் வைக்கும் விசுவாசம் எதையும் அசைக்கும் (ஆமென்) 409. எத்தனை மகத்துவமான நாளானது நமக்கு முன்பாக உள்ளது, நண்பர்களே, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலை தேவன் தம் தூதனுக்கு அளித்து, அவன் வந்து யோவானுக்கு அளித்து வெளிப்படுத்தினதினால், சபைக் காலங்கள் வழியாக நமக்காக ஆயத்தம் பண்ணி வைக்கப்பட்டுள்ளவைகள் என்ன வென்று அறியப்பட்டுள்ளது. 410. நாம் எழுந்து நிற்கையில், கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. பியானோ வாசிப்பவரே, “ இயேசுவின் நாமத்தை உங்களோடு எடுத்துச் செல்லுங்கள்'' என்ற பாட்டுக்கு எங்களுக்கு சுருதி கொடுங்கள். 411. இப்பொழுது கவனியுங்கள். இக்கூடாரத்தில் நம் மத்தியில் இக்காலையில், புதியவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களோடு நீங்கள் கைகுலுக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். உங்கள் இல்லங்களுக்கு அவர்களை அழையுங்கள், யாவருக்கும் நல்வரவு கூறிடுங்கள். இதை நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் செய்ய விரும்புகிறேன். 412. இன்றிரவு ஆராதனை ஏழு மணிக்கெல்லாம் ஆரம்பித்து விடும். ஏழரை மணிக்கு நான் 'பத்மு தீவு தரிசனம்'' என்ற தலைப்பில் பிரசங்கிப்பேன். நாளையிரவு, நான், கர்த்தருக்கு சித்தமானால், முதலாம் சபைக் காலமாகிய எபேசு சபைக் காலத்தைக் குறித்து பேசுவேன். 413. நாம் இப்பொழுது, நமது கூடாரத்தின் ஆராதனை முடிவின் பாடலாகிய 'இயேசுவின் நாமத்தை உம்மோடு ஏந்திச் செல்லுங்கள்'' என்ற பாடலை பாடப் போகிறோம். நல்லது, யாவரும் இப்பாடலை பாடுவோம். இயேசுவின் நாமத்தை ஏந்திச் செல்வீர் துன்பமும் நிந்தையும் சுமந்த மைந்தரே அவர் நாமம் மகிழ்வும் ஆறுதலும் அளிக்கும் உமக்கு, எனவே ஏந்திச் செல்வீர் அந்நாமத்தை எங்கணும் விலையேறப் பெற்ற இனிய நாமம் அது. இப்பூவின் நம்பிக்கையும், பரத்தின் மகிழ்ச்சியும் அதுவே, விலையேறப் பெற்ற இனிய நாமம் அது, இப்பூவின் நம்பிக்கையும், பரத்தின் மகிழ்ச்சியும் அதுவே. 414. இப்பொழுது நாம் அடுத்த அடியை பாடு முன், உங்களுக்கு முன்னும், பின்னும், பக்கத்திலும் இங்குள்ள மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பெந்தெகொஸ்தேயினர், கத்தோலிக்கர், நசரேய சபையினர், யாத்திரீக பரிசுத்த சபையினர் ஆகியவர்களோடு கை குலுக்கி, “ கிறிஸ்தவ யாத்தீரீக நண்பரே, இக்காலையில் நீங்கள் இருப்பதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். உங்களோடு தேவ காரியங்களில் ஐக்கியங் கொண்டதற்காக மகிழ்ச்சியடைகிறேன். நமக்கு ஒரு மகத்தான வேளை உண்டாயிருந்தது, இன்றிரவும் உங்களை மீண்டும் சந்திப்பேன் என்று நம்புகிறேன்'' என்று கூறுங்கள். இவ்விதமாக நீங்கள், உங்களுக்கு முன்னாலும், பின்னாலும், பக்கத்திலும் உள்ளவர்களைப் பார்த்துக் கூறுங்கள். இயேசுவின் நாமத்தில் அவர் பாதத்தில் முழங்கால் முடங்கட்டும் (சகோதரன், இன்றிரவு உம்மை மீண்டும் சந்திப்பேன்) பரத்தில் இராஜாதி இராஜாவாக அவரை நம் பயணத்தின் இறுதியில், முடிசூட்டுவோம் விலையேறப் பெற்ற இனிய நாமமது, இப்பூவின் நம்பிக்கையும், பரத்தின் மகிழ்ச்சியும் அதுவே. இயேசுவின் பாதத்தில் நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை, நாம் மீண்டும் சந்திக்கும் வரை நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை, நாம் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உம்மோடிருப்பாராக. 415. நாம் தலைவணங்குகையில், நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை! (சகோ. நெவில் அவர்கள் ஜெபம் செய்து முடிக்கிறார்ஆசிரியர்). ******* இரண்டாம் அத்தியாயம் பத்மு தீவில் தரிசனம் THE PATMOS VISION அன்றொரு நாளில் சகோ.நெவில் அவர்கள் ஒரு காரியத்தைக் குறித்து அறிவிப்புகளைச் செய்கையில், கர்த்தருடைய ஆவியானவர் இக்கட்டிடத்திற்குள் வல்லமையாக இறங்கியதைக் குறித்துக் கூறினார். அவர், ''எடுத்துக் கொள்ளப்படுதல் வந்து விட்டதோ என்று நினைக்குமளவுக்கு ஆவியானவர் பிரசன்னம் அவ்வளவு மகத்துவமாக இருந்தது'' என்று கூறினார். மேலும் அவர், “ நான் சுற்றுமுற்றும் பார்க்கையில் மற்றவர்கள் யாவரும் உட்கார்ந்திருந்ததைக் கண்டேன். 'இல்லை, இவர்கள் எல்லாம் இன்னும் இங்கே அமர்ந்திருக்கிறார்கள், அப்படியெனில் நானும் இங்கு தான் இருக்கிறேன், எனவே எடுத்துக் கொள்ளப்படுதல் வரவில்லை' என்று கூறினேன்'' என்று குறிப்பிட்டார். எனவே, சில வேளைகளில், கர்த்தருடைய ஆவியானவர் அவ்வாறாக நல்லவராக இருக்கிறார். 2. இப்பொழுது இக்கட்டிடத்தில் நம்முடைய நண்பர்கள் அநேகர் வந்திருப்பதை நாம் காண்கிறபடியால் மகிழ்ச்சியடைகிறோம். அவர்கள் அநேகராயிருக்கிறபடியால், யாவரையும் குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை. எனக்கும் என் மனைவிக்கும் திருமணத்தை நடத்தி வைத்த சகோ.கார்ப்பெண்டர் அவர்கள் இதோ இப்பொழுது இவ்வாயிலின் வழியாக உள்ளே நுழைந்ததை நான் கவனிக்க நேர்ந்தது. இங்கே சபையில் சகோ.கார்ப்பெண்டர் அவர்கள் எங்களுக்கு ஊழியத்தில் மிகவும் ஒரு ஆசீர்வாதமானவராக இருந்து வருகிறார், எங்கும், எல்லா ஊழியக் காரர்களுக்குமே, அவர் ஒரு ஆசீர்வாதமானவராக இருக்கிறார். அவரோடு இன்னும் ஏனையோரும் இங்கு நம் மத்தியில் இருப்பதைக் குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். 3. நேற்று மாலையில் என்னிடம் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கேள்வி இதோ இங்கே இருக்கிறது: “ சகோ. பிரன்ஹாம் அவர்களே! மத்.25ம் அதிகாரத்தில் காணப்படும் ஐந்து புத்தியில்லாத கன்னியர் புறஜாதிகளில் உள்ள மீதியானவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? ஐந்து புத்தியில்லாத கன்னியர் இரட்சிக்கப்பட்டவர்கள்தான் என்றும், ஆயினும் அவர்கள் மகா உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன். அது சரிதானா? அப்படி யாயின் அவர்களுடைய இறுதி முடிவு என்னவாயிருக்கும்? மத்.23:33,34 ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ள, வெள்ளாடுகளினின்று பிரிக்கப்பட்ட செம்மறியாடுகள் என்று அவர்களைக் குறித்து கருதலாமா? 4. சரியான வேதசாஸ்திரி போலத் தெரிகிறது இக் கேள்வி கேட்பவர்... (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி)... நித்திரை செய்த புத்தியில்லாத கன்னியர் ஐந்து பேர்களும், வெளிப்படுத் தின விசேஷத்தில் கூறப்பட்டுள்ள மீதியாயிருப்பவர்கள் தான் என்பது என்னுடைய கருத்தும் கூட. வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த மீதியானவர்கள் ஸ்திரீயின் வித்தானவர்கள், அவர்கள், தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவின் சாட்சியை உடையவர்களுமாவர். உதாரணமாக, ஒரு பெண் துண்டுத் துணியை எடுத்து அதை விரித்து வைத்து, அதின் மேல் எந்த அளவு அல்லது மாதிரிப்படி துணியை வெட்ட வேண்டுமோ அதை விரித்து வைத்து, துணியை வெட்டுவாள்; ஆனால், அவள் தன் விருப்பப்படி, எந்த இடத்தில் வெட்ட வேண்டுமோ அதை வெட்டியெடுக்கிறாள், வெட்டியெடுத்தது போக மீதமாகும் துணி, மீதியானது என்று அழைக்கப்படும். அதைப் போலத்தான் மீதியாயிருப்பவர்கள் என்பதும். 5. அங்கே ஐந்து பேர்கள் புத்தியுள்ள கன்னியரும், ஐந்து பேர்கள் புத்தியில்லாத கன்னியருமாயிருந்தனர் என்பதைக் கவனியுங்கள். பத்து பேர்களுமே ஒரேவிதமான தன்மையுள்ள மக்களாகத்தான் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் மாசில்லாத கன்னியரே, ஆனால் தேவனோ தெரிந்து கொள்ளுதலில் மூலமாக உலகத் தோற்றத்திற்கு முன்னரே, தன் மணவாட்டியைத் தெரிந்து கொண்டு, அவர்களுடைய பெயர்களை, உலகத் தோற்றத்திற்கு முன்னரே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் எழுதியுள்ளார். ஏனெனில் தேவன் முடிவற்றவராய் இருப்பதினால், உலகத் தோற்றத்திற்கு முன்னரே அவருடைய சிந்தையில் இது இருந்தது. 6. நாம் சில சமயங்களில் "முன்குறித்தல்' என்ற வார்த்தையை உபயோகிக்கிறோம். நாம் வாழும் இச்சபையின் காலத்தில் முன் குறித்தல் என்பது மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக இருக்கிறது. இரத்த சாட்சிகளின் காலத்தில் முன்குறித்தலானது அவர்களால் உறுதியாக விசுவாசிக்கப்பட்டு, அக்காலத்தில் மகத்தானதொரு உபதேசமாக இருந்தது. அதன் பின்பு, நல்ல கிரியைகளினால் இரட்சிப்படையலாம் என்ற லீகலிஸ்டுகளின் போதகம் வந்தது. அப்பொழுது முன் குறித்தலினால் இரட்சிக்கப்பட்டோம் என்ற உபதேசத்தை விட்டு விட்டார்கள். அது ஒரு விதத்தில் நல்லது தான். ஏனெனில் இங்கிலாந்தில் யாவரும் கால்வினிஸ்ட் போதகத்தை பின்பற்ற ஆரம்பித்து பிறகு எழுப்புதலே இல்லாமற் போயிற்று. அதன்பிறகு வந்த ஜான் வெஸ்லி அர்மீனிய உபதேசத்தை பிரசங்கித்தார். வெஸ்லி உபதேசித்தவைகள் கால்வின் உபதேசத்தை சீரான நிலைக்குக் கொண்டு வந்தது. தேவன் எப்பொழுதும் சமன்படுத்துகிறார். 7. புத்தியில்லாத கன்னியரிடம் அவர்களது விளக்குகளில் எண்ணெய் இருக்கவில்லை. அவர்கள் புறம்பான இருளில் தள்ளப் படுவார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். அங்கே அவர்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அவர்கள் மகா உபத்திரவ காலத்திற்குள் செல்வார்கள். அதைப் பற்றி உங்களது வேதாகமங்களின் அடிக்குறிப்புகளில் (Foot notes) பார்த்தால் அறிந்து கொள்வீர்கள். அது மீண்டும் மகா உபத்திரவ காலத்திற்குள் கொண்டு செல்லும். புத்தியில்லாத ஐந்து கன்னியரும் கைவிடப்பட்டு, மகா உபத்திரவத்தினுள் செல்பவர்கள். நமக்கு நேரம் இருந்தால் இதில் நமக்கு ஒரு பெரிய பாடம் உள்ளது. 8. ஒலிநாடாக்களில் செய்தியைக் கேட்கையில் நான் துவக்கத்தில் “ இச்செய்திகள் யாவும், நான் எந்த விதத்தில் அவைகள் சரியானவையாக உள்ளது'' என்று கூறிய வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள். மற்றவர்கள் தவறு என்றால் எனக்கு அதைப் பற்றி தெரியாது. நான் என்ன விசுவாசிக்கிறேனோ அதையே தான் நான் உரைக்க முடியும். எவருடைய உணர்வு களையும் புண்படுத்த நான் விரும்பவில்லை. நாம் இங்கே உள்ளே வருகையில், ஏனையோர் என்ன கூறினர் என்பதை யெல்லாம் தள்ளி வைத்து விட்டு, இங்கே சொல்லப்பட்ட காரியங்கள் வேதத்தின் படி சரியாக இருக்கிறதா? இல்லையா என்பதை ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். இவ்வாறு செய்வது தான் மிகச் சிறந்த வழியாயிருக்கும். ஏனெனில் நாம் வாழும் இவ்விதமான நாளில், இந்த தேசத்தில் மக்களால் பலவிதமான உபதேசங்கள் திரும்பத் திரும்ப கேட்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில், சத்தியத்தை மக்கள் கிரகித்துக் கொள்ளச் செய்வதென்பது மிகவும் கடினமாக இருக்கிறது. ஆனால் பல விதமான உபதேசக் குழப்பங்கள் எட்டியிராத கன்னிப் பிரதேசங்களில் சத்தியம் பிரசங்கிக்கும் போது, அங்கே மக்கள் உடனே கிரகித்துக் கொள்வார்கள். அவ்வாறு தான் அது சென்று கொண்டிருக்கிறது. 9. ஆனால் இப்பொழுதோ, ஒருவர் ஒரு உபதேசத்தையும், இன்னொருவர் இன்னொரு உபதேசத்தையும் கொண்டு வருவார். உலகில் நமக்கு இப்பொழுது சுமார் 900 மத ஸ்தாபனங்களும் அதற்கு மேலும் உள்ளன. ஒவ்வொருவரும் ஏனைய உபதேசங்கள் தவறு என்று கூறிக் கொண்டு தங்கள் தங்கள் உபதேசங்களைக் கொண்டு வந்துள்ளனர். ஆனால், ஏதாவது ஒன்றுதான் சரியான தாகவும், ஏனையவைகளெல்லாம் தவறானதாகவும் இருத்தல் வேண்டும். எனவே, இவை யாவற்றின் மத்தியிலும் சத்தியத்தை நிரூபிக்க, நாம் வேதத்திற்கு திரும்பிச் செல்லுதல் வேண்டும். வேதம் தான் குறிப்பிட்ட உபதேசம் சரி அல்லது தவறு என்பதை நிரூபிக்க வேண்டும். அநேக சமயங்களில் மக்கள் சொந்த வியாக்கியானத்தை வேத வாக்கியங்களுக்கு அளிக்கின்றனர். ஆனால் நாமோ, எந்தவித மனுஷீக வியாக்கியானத்தையும் அதற்கு அளிக்காமல், வேதத்தின் சத்தியங்களை அறிய மிகச் சிறந்த வழியை நாடுகிறோம். வேதத்தை அது எழுதியிருக்கிறபடியே அப்படியே வாசித்து, ''அது எவ்வாறு கூறுகிறதோ அவ்வாறே இருக்கிறது'' என்று கூறுகிறோம். 10. தேவன் கூறியவைகளையெல்லாம் அப்படியே நீங்கள் எடுத்துக் கொண்டு பார்த்தால், அவை ஒவ்வொன்றும் வேத வாக்கியங்களில் அதனதன் இடத்தில் சரியாக பொருந்துகிறதாயிருக்கிறது என்பதை நான் எப்பொழுதும் கவனித்துப் பார்த்திருக்கிறேன். அது எவ்வாறு இருக்கிறதென்றால், ஒரு ஜிக்-சா பசில் போல் உள்ளது (ஜிக்-சா பசில் Jig Saw Puzzle என்றால் ஒரு உருவம் காகிதத்திலோ அல்லது மரத்திலோ அல்லது உரிய எந்தப் பொருளிலோ வரையப்பட்டிருக்க, அதை ஒழுங்கில்லாமல் பல துண்டுகளாக பிய்த்து வைத்துவிட்டு, ஒருவரிடம் கொடுத்து, மீண்டும் அந்த உருவம் ஒழுங்காக அமையும்படி அத்துண்டுகளை ஒழுங்காக இணைக்க வேண்டும். இதற்குத்தான் ஜிக்-சா பசல் (Jig Saw Puzzle என்று பெயர் - மொழி பெயர்ப்பாளர்). ஆகவே, இவ்வாறாக பல துண்டுகளாக பிய்க்கப்பட்டிருக்கிற ஒரு சித்திரத்தை ஒழுங்காக அடுக்கி, காது இருக்க வேண்டிய இடத்தில் காதும், கண் இருக்க வேண்டிய இடத்தில் கண்ணையும் பொருத்தி, இவ்வாறாக அவையவை இருக்க வேண்டிய இடத்தில் அதைப் பொருத்திச் சேர்த்து அது எந்த ரூபத்தில் கொண்டு வரவேண்டும் என்பதற்காக உள்ள மாதிரியைப் பின்பற்றிட வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யாவிடில், மாடு மரத்தின் கீழ் புல்லை மேய்வதாக இருப்பதற்குப் பதிலாக, மரத்தின் மேல் நின்று கொண்டு புல் மேய்வதாக இருக்கும். இவ்வுதாரணத்தை நான் அடிக்கடி கூறுவதுண்டு. எனவே இவ்வாறு செய்வது சரியாக காட்சியை அமைத்துத் தராது. 11. எனவே, நாம் வேதத்தை அறிந்து கொள்ள பரிசுத்த ஆவியானவருக்கு இடங்கொடுத்தால்... வேதாகமத்தை எழுதியது யார்? தேவ மனிதர்கள் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு வேதாகமத்தை எழுதினார்கள். அப்படியிருக்கையில், நீங்கள் எவ்வளவுதான் உயர்கல்வி கற்றிருந்தாலும், பரிசுத்த ஆவியை உடைவர்களாயில்லாவிட்டால், நீங்கள் ஒருபோதும் வேதத்தைப் புரிந்து கொள்ள மாட்டீர்கள். ஏனெனில் இயேசுவும் கூட, வேத சத்தியங்களை தேவன், ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, அவைகளைக் கற்றுக்கொள்ளக் கூடிய பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் அவரை ஸ்தோத்தரித்தார். பவுலைத் தவிர ஏனைய சீஷர்கள் யாவரும் ஏறத்தாழ கல்வியறிவு அற்றவர்களாக இருந்தனர். பவுலுங்கூட, கிறிஸ்துவை அறிந்து கொள்வதற்காக, தான் பெற்றிருந்த கல்வி ஞானம் இவற்றையெல்லாம் மறக்க வேண்டியிருந்தது. எனவே தான் கொரிந்து சபைக்கு எழுதும் போது, ''..... நான் உங்களிடத்தில் வரும்போது சிறந்த வசனிப்போடாவது மனுஷ ஞானத்தோடாவது வரவில்லை...'' என்று கூறுகிறான். ஏனெனில், மனுஷ ஞானத்தோடு செய்தி வந்திருந்தால், அச்சபையினரின் விசுவாசமும் மனுஷ ஞானத்தின் படி அமைந்து விடும். ஆனால் அவர்களது விசுவாசம் வேத வாக்கியங்களின்படி பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளின் பேரில் சார்ந்திருக்கத்தக்கதாக, பவுலின் ஊழியம் கொரிந்தியருக்கு பரிசுத்த ஆவியின் வல்லமையினால் தேவனுடைய செயல் பிரத்தியட்சப் படுத்தப்பட்டதாக இருந்தது. அத்தகைய விசுவாசத்தில்தான் நாம் நெருக்கமாக சார்ந்திருக்க இப்பொழுது விரும்புகிறோம். ஏனெனில் இந்த வாரம் முடியும் முன்னர், காலம் பூராவும் எவ்வாறு பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட்ட மேற்கூறிய ஊழியமானது, தொடர்ச்சியாக அறுபட்டுப் போகாமல், வந்து கொண்டேயிருந்தது என்பதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். 12. இக்கரும்பலகையை சற்று உயரமாக பொருத்தி யமைத்தமைக்கு நன்றி. இப்பொழுது அதில் வரையப்படுபவைகளை நன்கு பார்க்க முடிகிறது. 13. இச்சீதோஷண நிலையானது இன்னும் தொடர்ந்து குளிர் காலமாகவே இருந்து விட்டால் நலமாயிருக்கும் என எண்ணுகிறேன். ஏனெனில் அவ்விதமான சூழ்நிலையில் நாம் களைப்பின்றி தொடர்ந்து அப்பருவ கால முழுவதிலும், வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை எடுத்து படிக்கலாம். மிக அருமையான உபதேசங்கள் அடங்கிய புத்தகம் அது. இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக என்று நினைக்கிறேன்; அப்போது நமது சபையானது இன்னும் அதின் ஆரம்ப நிலையிலேயே இருக்கையில், ஒரு இலையுதிர் காலத்தில் ஆரம்பித்து ஏறத்தாழ அடுத்த இலையுதிர் காலம் முடிய வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை படித்தோம். 14. யோபு புத்தகத்தை எடுத்து நான் பிரசங்கித்ததை நினைத்துப் பார்க்கிறேன். ஓ சகோ.ரைட் அவர்களே! யோபின் புத்தகத்திலிருந்து நீண்ட நாட்கள் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். இறுதியில் ஒரு சகோதரி, ''சகோ. பிரான்ஹாமே, யோபுவை நீங்கள் சாம்பலிலிருந்து எடுத்து விடப்போவதில்லையா'' என்று கேட்டு எழுதுமளவுக்கு அது நீண்ட காலத்துக்கு நீடித்தது. நான் அவ்வாறு நீண்ட காலத்திற்கு யோபு சாம்பல் குவியலின் மேல் இருந்ததைப் பற்றி பிரசங்கித்த காரணம் ஒரு முக்கியமான கருத்தை மக்கள் அறியச் செய்வதற்காகத்தான். ஏனெனில் அந்த இடத்தில் தான், கர்த்தருடைய ஆவியானவர் யோபுவின் மேல் வந்தார். அப்பொழுது மின்னல்கள் அடித்தன, இடி முழக்கங்கள் முழங்கின. ஆவியானவர் தீர்க்கதரிசியின் மேல் வந்து அதினால் அவன் கர்த்தருடைய வருகையை கண்டான். இத்தனை மகத்துவமான காரியங்களும் மக்கள் காண வேண்டுமென்ற நோக்கில் தான் யோபு சாம்பல் குவியலின் மேல் துன்பத்தோடு உட்கார்ந்த காட்சியில் யோபுவை நிலைநிறுத்தி அதைக் குறித்து நீண்ட காலம் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அவ்வாறு செய்வது களைப்படையச் செய்து விடக்கூடும் என்று அறிந்திருந்தேன். யாராவது வேறு ஏதாவதின் பேரில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் நானுங்கூட சற்று உணர்ச்சிவசப்பட்டு விடுவேன். ஒரு நோக்கத்திற்காக தேவன் ஒருவேளை அந்த நபரை அவ்வாறு நடத்தியிருக்கக்கூடும். 15. இப்பொழுது, இந்த மீதியாயிருப்பவர்கள் யார் என்பதைப் பற்றிய கேள்விக்கு தெளிவான விடையை அளிக்க முடியும் என்று நம்புகிறேன். இந்த மீதியாயிருப்பவர்கள் உண்மையிலேயே தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். இந்த மீதியாயிருப்பவர்களை தேவன் முன்னறி வின்படியே உலகத் தோற்றத்திற்கு முன்னரே தெரிந்து கொண்டிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். முன்குறித்தல் என்ற வார்த்தையை கவனியுங்கள். ஏனெனில், இது ஜனங்களுக்குள் மிகவும் அற்பமாக எண்ணப்படுகிற ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் தேவனோ, உலகத் தோற்றத்திற்கு முன்னரே, தனது முடிவில்லாத, எல்லையற்ற சிந்தையில், சபையைத் தெரிந்து கொண்டார், இயேசுவைத் தெரிந்து கொண்டார், சபையைத் தெரிந்து கொண்டார். அதினால், அச்சபையானது முடிவில் எவ்வாறிருக்கும் என்று அவரால் முன்னுரைக்க முடிந்தது. அவர் முடிவற்றவராக, காலம், தூரம் இவைகளுக்கு கட்டுப்படாதவராக, எல்லையற்றவராக, நித்தியமானவராக இருப்பவராயின் அவருக்குத் தெரியாதது ஒன்றுமே இருக்க முடியாது. பூமியின் மேல் எத்தனை அற்ப தெள்ளுப்பூச்சிகள் உண்டாயிருக்கும் என்பதையும் அவை எத்தனை தடவை கண் சிமிட்டும் என்பதைக் கூட நன்கு அறிந்துள்ளவர். அவை ஒவ்வொன்றும் எவ்வளவு நிணத்தை (கொழுப்பை) உற்பத்தி செய்கின்றன, பூமியிலுள்ள லட்சோப லட்சம் தெள்ளுப் பூச்சிகள் அனைத்தும் சேர்த்து ஒரே நேரத்தில் எந்த அளவு நிணத்தை உற்பத்தி செய்துவிட முடியும் என்பதை யெல்லாம் கூட அவர் அறிவார். அவருடைய அறிவு எல்லையற்றது. அதை நம்மால் விவரிக்கவே முடியாது. அவர் தேவனாயிருக்கிறார், அவர் சகலத்திலும் எல்லையற்ற அறிவுள்ளவர். 16. எனவே, கடைசி நாட்களில் பூமியின் மேல் வரப்போகும் அந்திகிறிஸ்துவைப் பற்றி வேதம் கூறியுள்ளதை நீங்கள் கவனிப்பீர்களானால்.... 17. இப்பொழுது கவனமாக கேளுங்கள். ஒரெயொரு பிழை அதுவே... என்னுடைய பிழைகள் லட்சக்கணக்கில் அவரால் கண்டு பிடிக்கப்படக் கூடும். ஆனால் நம்முடைய விலையேறப் பெற்ற சகோதரனாகிய பில்லி கிரகாம் அவர்கள் அன்றொரு நாளில் மிகவும் குறிப்பிடத்தக்க பிரசங்கத்தை கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று நிகழ்த்தினார், அது சரியான நேரத்திற்குரிய செய்தி என்று நான் நிச்சயமாக நினைத்தேன். ஆனால் ஒரு காரியம் அவர் கூறினார், அது என்னவெனில், ''தெரிந்து கொள்ளப்பட்டவர்களைக் கூட சாத்தான் வஞ்சித்துக் கொண்டிருக்கிறான்'' என்று அவர் கூறினார். 18. வேதம் அவ்வாறு கூறவில்லை .... வேதம் கூறுகிறது, ... கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அவன் வஞ்சிப்பான்...''. தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்க முடியாது, ஏனெனில் அவர்கள் தேவனால் உலகத் தோற்றத்திற்கு முன்னரே தெரிந்து கொள்ளப்பட்டிருக் கிறார்கள். இயேசு கிறிஸ்து உலகத் தோற்றத்திற்கு முன்னரே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாயிருக்கிறார். தேவன் அதைக் குறித்து தன் சிந்தையில் தீர்மானிக்கையில், தேவன் அதைக் குறித்து வார்த்தையை பேசுகையில், அது ஒருபோதும் மாற முடியாது, ஒரு போதும் அதை மாற்றி அமைக்க முடியாது. அவர் முடிவற்றவராக இருப்பதினால், அவருடைய வார்த்தைகள் நிறைவேறியே ஆகவேண்டும். 19. சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம் அமர்ந்திருக்கிற இந்த பூமியே தேவனுடைய வார்த்தை பிரத்தியட்சப்படுத்தப் பட்டதாகும். உலகமானது காணப்படாதவைகளினால் தோற்றுவிக்கப்பட்டது. “ இன்னது உண்டாகக்கடவது'' என்று மாத்திரமே அவர் உரைத்தார், அவை அவ்வாறு உண்டாயின. அவரால் எத்துணை பெரிய சிருஷ்டிகளையும் வெறுமனே வார்த்தை உரைத்தலினால் உண்டாக்கக் கூடுமானால், வியாதியுள்ள ஒரு சரீரத்தை சொஸ்தமாக்குவது அவருக்கு எவ்வளவு எளிதானது! அவருடைய வார்த்தையைப் பாருங்கள். அவருடைய வார்த்தையானது எத்தகையது என்பதை காண நமக்கு மட்டும் போதுமான விசுவாசம் இருக்குமென்றால் அது எப்படியிருக்கும்! ஓ நாம் மிகவும் மண்ணானவைகளோடு ஒட்டிக் கொண்டு நம் சிந்தையில் பூமிக்குரிய காரியங்களில் சிக்கிக் கொண்டு இருக்கிறோம், ஓ, எனக்கு தெரியவில்லை. பல்வேறு விதமான போதகங்கள் நமக்குள் திணிக்கப்பட்டிருக்கிறது, இந்தப் போதகத்தின் தாக்கம், அந்தப் போதகத்தின் தாக்கம் என்று இவ்வாறாக பலவிதமானவைகளின் தாக்கம் நம்மேல் உண்டாகி, அதினால், முற்றிலும் கோணல் மாணலாக யாவும் ஆகிவிட்டது. ஆனால் நீங்கள் இவைகளை யெல்லாம் உதறியெறிந்து விட்டு திரும்ப வந்து, அவரே தேவன் என்றும், அவரது வார்த்தைகள் ஒருபோதும் தவறுவதில்லையென்றும், அதுபோல் அவரும் தவறுவதில்லை யென்றும் அறிந்து கொள்ளுங்கள். அவரது வார்த்தை தவறுமென்றால், அப்பொழுது தேவனும் தவறிவிடுவார். அவர் தவறுவாராயின் அவர் தேவனல்லவே. எனவே இதை நினைவில் கொள்ளுங்கள். இங்கே ஒன்றைக் கூறிவிட்டு, வேறு ஒரு இடத்தில் வேறொன்றைச் சொல்ல அவரால் முடியாது. அவர் தேவனாயிருக்க வேண்டுமெனில், துவக்கத்தில் அவர் கொண்டிருந்த தீர்மானத்தில் அவர் நிலைத்திருக்க வேண்டும். 20. அவர் நம்மிடம் கேட்டதெல்லாம், அவர் கூறியவை சத்திய மென்றும், அவற்றை அவர் நிச்சயமாக நிறைவேற்றுவார் என்பதையும் விசுவாசிக்க வேண்டுமென்பதே. ஓ, இது எவ்வளவு அழகாயிருக்கிறது! நீங்கள் உடனடியாக ஒன்று சம்பவிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தீர்கள். சில வேளைகளில் ஏதாவது சம்பவிக்க உங்களிடத்தில் சிறிதளவு விசுவாசம் தேவைப்படுகிறது. அது ஒரு அற்புதத்தை நிகழ்த்தாது; ஆனால் நீங்கள் அந்த விசுவாசத்தில் நிலைத்திருப்பீர்களாயின், அது உங்களை வெளியே கொண்டு வருகிறது, அதோடு அப்படியே நிலைத்திருங்கள். அவர் கூறியது போல், '...எல்லா விதைகளிலும் கடுகு விதையானது மிகவும் சிறியதாயிருக்கிறது...''. கடுகு விதையானது வேறு எந்த விதையோடும் கலக்க முடியாது என்பதைக் கவனித்தீர்களா? கடுகு விதையை இனக்கலப்பு செய்யவே முடியாது. நீங்கள் விசுவாச முடையவர்களாக இருந்தால், அதுவும் சிறிதளவு விசுவாசம் இருந்தால், அது ஒருபோதும் அவிசுவாசத்துடனோ, அல்லது, சபைக் கொள்கையுடனோ, அல்லது கோட்பாடுகளுடனோ கலப் படையாது. விசுவாசம் தேவனோடு நிலைத்திருக்கும். உங்களை விசுவாசமானது பனிமூட்டங்களினின்றும் வெளியே விடுவித்துக் கொண்டு வரும். விசுவாசத்தில் நிலைத்திருங்கள். 21. ஆதியில் தேவனானவர்... வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவன் கூறினார், ''கடைசி நாட்களில் அந்தி கிறிஸ்து...'' இப்பொழுது இந்த சபைகள் யாவும் ஒன்று சேர்ந்து கொண்டிருப்பதைக் கவனியுங்கள். உலகத் தோற்றத்திற்கு முன்னர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் பெயரெழுதப்படாத இப்பூமியிலுள்ளவர்கள் யாவரையும் அந்திகிறிஸ்து வஞ்சித்துப் போடுவான். ஜீவ புத்தகத்தில் எப்பொழுது உங்களுடைய பெயர் எழுதப்பட்டது? உலகம் என்று ஒன்று உண்டா யிருப்பதற்கு முன்னரே, நீங்கள் இந்தக் காலத்தில் பரிசுத்த ஆவியைப் பெறும்படி தெரிந்து கொள்ளப்பட்டீர்கள். 22. எடிப்ரூயிட் என்பவருடன் சேர்ந்து நான் அவருடைய இப்பாடலை பாடுகிறேன்: இளைப்பாறும் துறைமுகத்தில் நான் என் ஆத்து நங்கூரத்தை பாய்ச்சினேன் இனி கொந்தளிக்கும் கடலலைகள் மேல் நான் பயணம் செய்ய வேண்டியதில்லை கடும் புயற்காற்று கொந்தளிக்கும் ஆழ்க்கடலில் வீசினாலும் இயேசுவில் எப்போதும் பத்திரமாக என்றும் இருப்போம் 23. தேவனை விட்டு நம்மை ஒன்றும் பிரிக்க முடியாது. அவருடைய வார்த்தையை விட்டு பின்வாங்கிப் போகாதீர்கள். தேவன் முடிவற்றவராக இருப்பாராயின், உங்களுக்கு பரிசுத்த ஆவியை அளிப்பாராயின், உங்களை அவர் எவ்வாறு கை விட்டு விடுவார்? அப்படிச் செய்வாராயின் அவர் என்னவிதமான காரியம் இங்கே நடத்திக் கொண்டிருக்கிறார்? உங்கள் அனுபவத்தில் நீங்கள் வஞ்சிக்கப்படவில்லையெனில், பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றிருந்தால்! எபேசியர் 4:30ல் வேதம் என்ன கூறுகிறது என்பதைக் கவனியுங்கள்: ''அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்''. எதுவரைக்கும் இருக்கும்படி பரிசுத்த ஆவியாகிய முத்திரை உங்களுக்கு போடப்படுகிறது? அடுத்த எழுப்புதல் வரையில் மட்டும்தானா? மீட்கப்படும் நாள் வரையிலும் இருக்கும்படி நீங்கள் பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப் பட்டிருக்கிறீர்கள். அடுத்த எழுப்புதல் வரையிலும் தான் முத்திரையிடப்பட்டிருக்கிறீர்களா? அப்படியாக இருக்கு மென்றால், அது முறையாக இருக்கிறதா?''... நீங்கள் மீட்கப்படும் நாள் வரைக்கிலும் முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள்'' எவ்வளவு காலம் வரையிலும்? உங்கள் மீட்பு உண்டாகிற வரைக்கிலும் முத்திரை நிலைத்திருக்கும். 24. சரக்குகளை ஏற்றிச் செல்லும் இரயில்வே பெட்டி பற்றி சிந்தியுங்கள். அந்த பெட்டியில் சரக்குகள் முழுவதும் ஏற்றப்பட்டு இருக்கும் நிலையில், அது சரியாக சரக்குகள் ஏற்றப்பட்டு, முறையாக இருக்கிறதா, அல்லது இடைவெளிகள் உண்டா யிருந்து, வண்டி ஓடிக்கொண்டிருக்கையில், இடைவெளிகளினால் சரக்குகள் அசைந்து விழுந்து சேதம் விளைதல் உண்டாக்கி விடுமல்லவா, அதை பற்றி சோதிக்க அதற்குரிய ஆய்வாளர் வரும் வரையிலும் பெட்டியின் கதவுகளை அவர்களால் மூட முடியாது. ஆய்வாளர் வந்து, ஏதாவது இடைவெளிகள் இருந்தால், பொருட்கள் அசையாதபடி மேற்கொண்டும் சரக்குகளை ஏற்றி, பொருட்கள் அசைந்து விழுந்து விடுதல் ஏற்படாதபடி நெருக்கமாக வைத்து இருக்கிறார். அதன் பிறகே கதவுகள் மூடப்படுகிறது. அதே விதமாகத்தான் நம்மில் அநேகருடைய காரியமும் உள்ளது. நம்மில் அநேகர் இடைவெளிகள் இல்லாதபடி முழுவதுமாக பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது இல்லை. பரிசுத்த ஆவியான வராகிய ஆய்வாளர் வந்து, நம்மில் அநேகம் இடைவெளிகள் காணப்பட்டால், அதை இன்னமும் அவர் முத்திரையிடுவது இல்லை . 25. ஒரு சமயம், அதாவது மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு பெரிய வேத பண்டிதர் என்னிடம் வந்து, ''நான் உம்மை ஒன்று கேட்க விரும்புகிறேன், அதாவது, ‘ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது' அல்லவா?'' என்று கேட்டார். 26. அதற்கு நான், ''ஆம், அது உண்மையிலே சரிதான்'' என்றேன். 27. "மனிதன் விசுவாசித்தலைத் தவிர வேறு கூடுதலாக என்ன தான் செய்திட முடியும்?'' என்று கேட்டார். 28. நான், ''அவ்வளவே அவன் செய்ய முடியும்'' என்றேன். 29. அந்த மனிதர் ஒரு பாப்டிஸ்டு ஆவார். அவர் மீண்டும்: "அப்படியென்றால், இந்த பரிசுத்த ஆவியைப் பெறுவது என்கிற விஷயமும் அப்படித்தானே இருக்க வேண்டும், அதற்கு மிஞ்சி நீங்கள் இந்த விஷயத்தில் சிந்திக்கிறீர்களே? ஒரு மனிதன் விசுவாசித்தார்! நீங்கள் விசுவாசிக்கும் அந்த நிமிடமே பரிசுத்த ஆவியைப் பெறுகிறீர்களே'' என்று சொன்னார். 30. நான் சொன்னேன்: இல்லை, இல்லை. வேதவாக்கியங்களில் நீங்கள் முரண்பாட்டை உண்டாக்குகிறீர்கள். ஆனால் வேத வாக்கியங்களோ ஒன்றுக்கொன்று முரண்படுவதில்லையே. ''நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்களா என்று தானே பவுலும் கேட்டான்'' என்று நான் கூறினேன். 31. அவர் “ நல்லது...'' என்று கூறினார். 32. நான், “அது உண்மைதான், விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை உடையவனாயிருந்து, தேவனை விசுவாசித்தான். அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆனால் தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக ஆபிரகாமுக்கு விருத்தசேதனமாகிய முத்திரையைக் கொடுத்தாரே'' என்றேன். 33. அவர் இன்னமும் உங்களை பரிசுத்த ஆவியினால் நிரப்பியிருக்க வில்லையென்றால், அவர் இன்னமும் அவருக்குள்ளாக உங்களுடைய விசுவாசத்தை ஏற்றுக் கொள்ளவில்லையென்றும், உங்களுக்குள் இன்னமும் சில இடைவெளிகள் நிரப்பப்படாமல் உள்ளன என்பதையும் காட்டுகிறது. நீங்கள் விசுவாசித்திருக்கக் கூடும், ஆனால் இன்னமும் நிறைய குறைகள் உள்ளன. உங்களிலுள்ள இடைவெளிகள் யாவும் சரியானபடி அடைக்கப் பட்டிருக்குமானால், அப்பொழுது அவர் உங்களை உங்களது மீட்பின் நாள் வரைக்கிலும் இருக்கும்படியாக பரிசுத்த ஆவியினால் முத்திரையிடுகிறார். அவருக்குள்ளாக நீங்கள் அறிக்கையிட்ட அந்த விசுவாசத்தை அவர் ஏற்றுக் கொண்டதற்குரிய தேவனுடைய உறுதிப்படுத்துதலாக நீங்கள் பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்படுதல் இருக்கிறது. 34. ஆபிரகாம் தன் விசுவாசத்தை அறிக்கையிட்டான். தேவன், ''நான் உன் விசுவாசத்தை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக இப்பொழுது உனக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பேன்'' என்று கூறினார். அவர் அவனுக்கு விருத்தசேதனமாகிய ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். 35. இப்பொழுது கிறிஸ்துவை உங்களது சொந்த இரட்சகராக நீங்கள் ஏற்றுக்கொள்ளும் பொழுதும், அவரை விசுவாசிக்கும் பொழுதும், மேலும் உங்கள் வாழ்க்கையை சுத்தமாக்கும்படி நீங்கள் அவரைக் கேட்கும்பொழுதும், அதன்பேரில் அவர் பரிசுத்த ஆவியானவருடன் திரும்ப வந்து உங்களுக்கு பரிசுத்த ஆவியாகிய அடையாளத்தைக் கொடுக்கையில், அப்பொழுது, நீங்கள் உங்களுடைய மீட்பு உண்டாகிற நாள் வரையிலும் முத்திரையிடப்படுகிறீர்கள். 36. இங்கே இந்த சரக்கு ஏற்றிச் செல்லும் இரயில் பெட்டியைப் பற்றிப் பார்த்தோம். அதில் ஏதாவது இடைவெளிகள், சந்துகள் இருந்தால்... அந்த இடைவெளிகளெல்லாம் நீக்கும்படி சரியான படி அந்த பெட்டி, சரக்குகள் இட்டு நிரப்பி ஒன்று சேர்த்து அசையாதபடி உறுதிப்படுத்தப்பட்டு, அதன் பிறகு அதனுடைய கதவு மூடப்பட்டு, அது போய்ச் சேர வேண்டிய இடம் மட்டும் இருக்கும்படி ஒரு முத்திரை அதற்கு போடப்படுகிறது. அந்த முத்திரையை நீங்கள் உடைத்தால், அதற்காக இரயில் போக்கு வரத்து நிறுவனம் ஆயுட்கால சிறைத்தண்டனை உங்களுக்கு கிடைக்கும்படி செய்துவிடும். அம்முத்திரைகளை உடைக்க முடியாது. அது போய்ச் சேர வேண்டிய இடமட்டும் இருக்கும்படி அம்முத்திரை போடப்பட்டுள்ளது. சரக்கு இரயில் பெட்டி ஒவ்வொரு ஊரிலும் வழிகளில் நிறுத்தப்பட்டு, முத்திரையை உடைத்து, திறந்து சோதித்துப் பார்க்கவும், ஏதாவது சாமான்களை உள்ளே போடவுமாக, அவ்வாறாக ஊருக்கு ஊர் அந்தப் பெட்டி திறக்கப்படமாட்டாது. அவ்வாறு செய்யப்பட முடியாது. 37. குறிப்பிட்ட இன்ன சபை, "அந்த கோட்பாடு, அது சரி யல்ல, இது சரியல்ல" என்று கூறலாம். தேவன் பரிசுத்த ஆவியை உங்களுக்கு அளிக்கும் பொழுது அத்துடன் அது முடிவு பெறு கிறது! அப்பொழுது நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்றும், என்ன நேரிட்டுள்ளது என்றும் அறிந்து கொள்கிறீர்கள். நீங்கள் உங்கள் மீட்பின் நாள் வரைக்கிலும் இருக்கும்படியாக, அந்தக் காலம் வரைக்கிலுமாக முத்திரையிடப்படுகிறீர்கள். இப்புவி யாத்திரையின் முடிவு பரியந்தமும் அம்முத்திரை தொடர்ந்து உங்கள் வாழ்க்கைப் பாதையெல்லாம் நீடித்து இருந்து வருகிறது. ஓ, என்னே! இப்படிப்பட்ட விஷயம், எந்தவொரு நபரையும், விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ளவும், தேவனை விசுவாசிக்கவும், பரிசுத்த ஆவியின் வல்லமையில் எழும்பவும் செய்ய வேண்டும். 38. இப்பொழுது, இக்கன்னியர்கள் பரிசுத்த ஆவியைப் பெறாதவர்களாயிருந்தனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களிடமிருந்த ஒரே குறை தங்களுடைய விளக்குகளில் எண்ணெய் இல்லாமலிருந்ததே. அது சரியா? “ எண்ணெய்'' என்பது பரிசுத்த ஆவியைக் குறிக்கும் என்று வேதாகமம் உரைக்கிறது. எனவே தான் வியாதியஸ்தர்கள் மேல் எண்ணெய் பூசி ஜெபிக்கிறோம், ஏனெனில் அது பரிசுத்த ஆவிக்கு அடையாளமாக உள்ளது. பரிசுத்த ஆவியானவர் அப்பொழுதும் இப்பொழுதும் அவர்கள் மேல் வரவில்லை என்றால், அவர்கள் அதைப் பெற்றிருக்கவில்லை. மணவாளன் வந்தபொழுது, தங்கள் விளக்குகளில் எண்ணெயைப் பெற்றிருந்த கன்னியர்களிடம் அவர்கள் கூறினார்கள். 39. அவர்கள் சபையின் காலத்தில் இருந்தார்கள் என்பதை பாருங்கள். அவர்கள் சிலர் நல்லவர்களாயிருந்தனர். ஆனால் அவர்கள் நட்சத்திர ஒளியில் இருக்கவில்லை. அதாவது, அவர்களின் திரிகள் எண்ணெயில் மூழ்கியிருக்கவில்லை. அவர்கள் புறம்பாகப் போய்விட்டனர், அவர்கள் தங்களை பிரித்துக் கொண்டுவிட்டனர். ''விசுவாசமில்லாமல் அவர்கள் நம்மைவிட்டுப் போய் விட்டார்கள்'' என்று பவுல் தன் நாளில் கூறினான். அவர்கள் நம்முடையவர்கள் அல்லவென்று வெளியாகும்படிக்கே நம்மை விட்டுப் பிரிந்து போனார்கள். இவ்வாறு இக்காரியம் முதலாவதாக எபேசு சபைக் காலத்தில் சம்பவிக்க ஆரம்பித்து, அதேவிதமாக இக்காலம் முடிய தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. அந்த காரியம் அந்த ஒவ்வொரு காலங்களிலும் நடை பெற்று வந்துள்ளது. அந்த காரியம் அந்த ஒவ்வொரு காலங்களிலும் நடைபெற்று, அடுத்து வந்த காலங்களிலும் தொடர்ந்து சம்பவித்து, கடைசியில் இக்காலத்திற்கும் அதே சம்பவம் வந்து விட்டது. சிறிது நேரத்தில் இதைப் பற்றி நாம் ஆழமாக சிந்திக்கப் போகிறோம். 40. இப்பொழுது கவனியுங்கள், இவர்கள் கறைபடாத கன்னி யராயிருந்த போதிலும், அவள் அழுகையும், புலம்பலும், பற்கடிப்பும் உள்ள ஸ்தலத்திற்குப் போகிறாள். 41. எனது விலையேறப்பெற்ற பிரிய நண்பரே, நான் இப்பொழுது இதைச் சொல்லட்டும்: இங்கே இந்த சபையிலே நான் வருகையில், சுகமளிக்கும் ஆராதனையை நடத்த வியாதியஸ்தருக்காக ஜெபித்து, பிறகு வெளியிடங்களுக்கும் செல்வதுண்டு. ஆனால் இந்தக் குறிப்பிட்ட வேளை, நான் உங்களிடம் நீண்ட காலமாக கூறிக் கொண்டு வந்திருக்கிறேன், உங்களுடைய மனச் சாட்சியை சரியானபடி செயல்படவிடுங்கள். நாம் தானே இப்பொழுது ஒருவருக்கொருவர் உத்தமத்தோடும் உண்மை யோடும் இருக்க விரும்புகிறோம்; ஏனெனில் நாம் கடைசிக் காலத்தில் இருக்கிறோம். 42. பரிசுத்தமாகுதல் என்ற உபதேசத்தைக் கொண்டிருக்கிற விலையேறப் பெற்ற “ நசரேய சபைக்காரர்கள்'' மற்றும் “ யாத்திரீக பரிசுத்தர் சபையார்'' ஆகிய நீங்கள் அங்கேதான் தவறு செய்து விட்டீர்கள். யூதாஸ்காரியோத் அந்தக் கட்டம் வரைக்கிலும் சரியாக ஜீவித்தான் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? யூதாஸ் கர்த்தராகிய இயேசுவில் இரட்சகராக விசுவாசம் கொண்டு, அவரை இரட்சகராக ஏற்றுக் கொண்டிருந்தான். அவன் பரிசுத்தமாக்கப்பட்டும் இருந்தான். யோவான் 17:17ல் "... பிதாவே உம்முடைய சத்தியத்தினால் அவர்களை பரிசுத்தமாக்கும், உம்முடைய வசனமே சத்தியம்'' என்று இயேசு கூறியபொழுது, அவனும் (யூதாஸும்) பரிசுத்தமாக்கப்பட்டானே. இயேசுவே வார்த்தையாக இருக்கிறார். சரி. 43.மத்தேயு 10ம் அதிகாரத்தில் சீஷர்களுக்கு வியாதியஸ்தரைக் குணமாக்கவும், மரித்தோரை எழுப்பும் பிசாசுகளைத்துரத்தவும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் தேசத்தின் எல்லாப் பாகங்களிலும் சென்று, பிசாசுகளைத் துரத்தி விட்டு, மிகுந்த மகிழ்ச்சியோடு தேவனைத் துதித்து ஆர்ப்பரித்துக் கொண்டு திரும்பி வந்தார்கள். இயேசு அவர்களிடம் "ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் ஜீவ புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதற்காக சந்தோஷப்படுங்கள்'' என்றார். அது சரியா? யூதாஸும் அவர்களில் ஒருவனாக இருந்தான். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக இந்தச் சம்பவம் நடந்தது. அப்போது யூதாஸும் அவர்களோடு இருந்தான். 44. பிறகு பெந்தெகொஸ்தே நாளில், யூதாஸ் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு முன்பாக, அவன் யார் என்ற தன்னுடைய உண்மையான நிறத்தை காண்பித்தான். அவன் இயேசுவை மறுதலித்து, அவரைக் காட்டிக் கொடுத்த துரோகியாக மாறினான். அப்படியே தான் அங்கே அந்த ஆவியானது வருகின்றது. லூத்தர், வெஸ்லி ஆகியோரின் காலங்கள் வழியாக சபையானது பரிசுத்தமாகுதல் வரைக்கிலும் வந்த பிறகு, அது கறைபடாத கன்னியர் வாழ்வை கொண்டு வந்தது. நீங்கள் சந்தித்தவர்களிலேயே மிகவும் சுத்தமான; தெளிவான, பரிசுத்தமான, அருமையானவர்களாக அவர்கள் காணப்படுகின்றனர். அதுவரைக்கிலும் வந்தவர்கள், பின்பு, அந்நிய பாஷைகளில் பேசுதலும், பரிசுத்த ஆவியைப் பெறுதலையும் பற்றி வரும்பொழுது, 'நசரேய சபைக்காரர்களும் ''யாத்திரீக பரிசுத்தர்'' சபைக்காரர்களும் ஃப்ரீ மெத்தோடிஸ்டுகளும், 'அது பிசாசினால் உண்டாயிருக்கிறது'' என்று கூறிவிடுகின்றனர். அவ்வாறு சொல்லுகையிலேயே அவர்கள் பரிசுத்த ஆவிக்கெதிராக தூஷணம் பேசி, தங்களையே நித்தியமாக புறம்பாக்கிக் கொள்கின்றனர். ஏனெனில், ''எவனாகிலும் மனுஷ குமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை''. 45. சீஷர்கள் அனைவரும் அந்நிய பாஷைகளில் பேசினார்கள். இயேசுவும் சிலுவையில் அந்நிய பாஷையில் பேசிக் கொண்டே மரித்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே நீங்கள் அவர்களோடு இடைபட முடியவில்லையெனில், அவர்களோடு நட்புக் கொள்ள இயலவில்லையெனில், அங்கே எப்படியிருக்கப் போகிறது? இங்கே இவர்கள் அந்நிய பாஷையில் பேசினால் அது பிசாசு என்று நீங்கள் கூறுவீர்களானால், அவர்களும் அப்படியே. எனவே அவர்கள் தாங்கள் இன்ன நிறத்தையுடைவர்கள் என்பதை காண்பிக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். மற்ற ஐவருக்கிருந்தது போல எண்ணெய் இல்லாத ஐந்து கன்னியரும் பரிசுத்த வாழ்வையுடைவர் களாயிருந்தனர். பழமை நாகரீகம் கொண்ட அந்த நசரேய சபை, மற்றும் யாத்திரீக பரிசுத்தர் சபையினரையும் நான் எடுத்துக் கொள்கிறேன். அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு எதிராக உங்களுடைய விரலைக் கூட நீங்கள் நீட்ட முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் சுத்தமானவர்களாக இருக்கின்றனர். நாமும் அதைப் போலத்தான் ஜீவிக்க வேண்டும். அவ்வாறு தான் நீங்களும் வாழ வேண்டும். 46. இப்பொழுது, விசுவாசிகளைப் போல நடிக்கிற அநேகமான பெந்தெகொஸ்தேயினரை நமக்கும் தெரியும். அது உண்மைதான். ஆனால் நீங்கள் ஒரு கள்ள டாலர் நோட்டைக் காண்கையில், அக்கள்ள டாலரானது ஒரு உண்மையான டாலரைப் போலவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது உண்மை. அங்கே உண்மையான பரிசுத்த ஆவி, அந்நிய பாஷையும் அற்புதங்களையும் அடையாளங்களையும் காட்டுகிறவராகிய உண்மையானவர் இருக்கிறார், அது பெந்தெகொஸ்தே நாள் முதல் இது வரைக்கிலும் இருந்து வந்திருக்கிறது. எனவே, உண்மையைப் போல நடித்துக் காட்டும் போலியானவனும் நமக்கு இருக்க வேண்டும். ஒரு உண்மையான ஸ்திரீ இருக்கிறாள் என்பதைக் காட்டும்படி, அதற்கு நேரெதிராக பொல்லாங்கான ஸ்திரீயும் இருக்க வேண்டும். சூரிய ஒளி மகிமை பொருந்தியது என்று எடுத்துக்காட்ட, நமக்கு கருமையான இருளான இரவு நேரமும் இருக்க வேண்டும். அது உண்மை . நல்ல ஆரோக்கியம் எப்படி என நாம் அனுபவித்திட, நீங்கள் வியாதிப்பட வேண்டும். நன்மைக்கும் தீமைக்குமுரிய பிரமாணமாக அது இருக்கிறது. அவ்வாறே அது காலமெல்லாம் இருந்து வந்திருக்கிறது. காலம், அல்லது வேளை என்று ஒன்று இருக்கும் வரையிலும், அது அவ்வாறே இருந்து வரும். 47. சபையானது அந்த இடத்திற்கு நகர்ந்து வந்துள்ளது. 48. மத்தேயு 24ல், “ கடைசி நாட்களில் கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக...'' என்ற அளவுக்கு இரு ஆவிகளும் ஒன்றையொன்று ஒத்திருப்பதுபோல் காணப்படும் என்ற அர்த்தத்தில் இயேசு நமக்கு கூறவில்லையா? உலகத் தோற்றத்திற்கு முன்னே தெரிந்து கொள்ளப்பட்டவன் எவனோ, அவனுக்குள் நித்திய ஜீவன் உண்டு. நித்திய ஜீவன் உங்களுக்குள் இருந்தால் அதை விட்டு உங்களால் விலகி ஓட முடியாது. தேவனைப் போல் நித்திய ஜீவனும் நித்தியமாயுள்ளது. தேவன் எப்படி முடிந்து போனவராக இருக்க முடியாதோ, அவ்வாறே நித்திய ஜீவனைப் பெற்ற எவரும் முடிந்து போக முடியாது. அது உண்மை . நீங்கள் தேவனின் ஒரு பாகமாக இருக் கிறபடியால், நீங்கள் தேவனுடைய புத்திரனும், புத்திரியுமாக இருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை அதினால் மாற்றம் பெற்றுள்ளது, நீங்கள் தேவனின் ஒரு பாகமாக இருந்து நித்திய ஜீவனைப் பெற்றுள்ளீர்கள். ஓ நான் தேவனை நேசிக்கிறேன், நீங்களும் அவரை நேசிக்கிறீர்களா? 49. இப்பொழுது இன்னொருவர் ஒரு சிறு கேள்வியைக் கொடுத்திருக்கிறார். அதற்குப் பதிலளிக்க நாம் அதிக நேரம் எடுக்கப் போவதில்லை. நீங்கள் ஒரு சிறு கேள்வியைக் கொடுக்கும் போதெல்லாம், அதற்குரிய பதிலை அளிக்க நான் என்னால் முடிந்த அளவு செய்வேன். ஆனால் மேற்கூறிய கேள்வி ஒரு முக்கியமான தொரு கேள்வியாகும். "சபையில் பெண்கள் சாட்சிக் கொடுப்பதோ, பாடுவதோ, அந்நிய பாஷையில் செய்தி கொடுப்பதோ, செய்திகளை வியாக்கியானம் செய்வதோ, தீர்க்கதரிசனம் சொல்லுவதோ தவறாகுமா” என்பதை அறிய விரும்பி ஒருவர் கேள்வி ஒன்றைக் கேட்டிருக்கிறார். 50.ஒழுங்கின்படி அது இருக்கும் வரையிலும், அது தவறல்ல. சபையானது ஒழுங்குக்குள் இருக்கிறது. ஒழுங்கை விட்டு விலகும் போது மாத்திரமே... பிரசங்க பீடத்திலிருந்து பிரசங்கம் நிகழ்த்தப்படும் முன்னர் தான் அந்நிய பாஷைகளில் பேசுதலும் அவைகளை வியாக்கியானம் செய்வித்தலும் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதுதான் உண்மையான வழியாகும். பிரசங்கம் நடக்கும் போது அந்நிய பாஷைகள் பேசுதலும், வியாக்கியானம் செய்தலும் இருக்கக் கூடாது. ஏனெனில் பவுல் கூறிய வண்ணமாக, ஆவியானவர் ஒரு சமயத்தில் ஒரு இடத்திலிருந்து தான் கிரியை செய்கிறார். பெண்கள், தீர்க்கதரிசனம் உரைக்கவும், அந்நிய பாஷைகளில் பேசவும், வியாக்கியானம் செய்யவும் வரமளிக்கப் பட்டுள்ளனர்; ஆயினும் பிரசங்கிகளாக இருக்க அவர்களுக்கு உத்தரவில்லை. அவர்கள் பிரசங்கிகளாக இருத்தல் கூடாது. சபைகளில் பிரசங்கிக்க அவர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர் என்பது சரிதான். சபையில் பெண்கள் முதன்மை ஸ்தானத்தை வகிக்கவும், போதகர்களாயிருக்கவும் தடை செய்யப் பட்டுள்ளனர். ஆனால் எல்லா வரங்களைப் பொருத்தமட்டில், பெண்களுக்கு, 1 கொரிந்தியர் 12ம் அதிகாரத்தின்படி, எல்லா வரங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்; ஒன்றோ அல்லது ஒன்பது வரங்களில் எதையாகிலும் பெற்றுக் கொள்ளவோ இயலும். அவளுடைய வரங்கள் உரிய நேரத்தில் உரிய ஸ்தானத்தில் அதற்குரிய செய்தியைத் தெரிவிக்கக் கூடாதபடிக்கு அவளுக்கு கட்டு ஏதும் இல்லை. ஒவ்வொரு செய்தியும் அதனதன் வேளைக்காக காத்திருக்கிறது. அதாவது அந்தந்த வேளையில் உரிய செய்தியானது வருகிறது. 51. சபையில் அந்நிய பாஷையில் பேசுகிறவன் ஒருவனுண்டாயிருந்தால், பாஷையை வியாக்கியானம் செய்கிறவன் அங்கே இல்லையெனில், அவன் பேசும் பாஷையை வியாக்கியானம் செய்பவன் ஒருவன் இருக்கிற வரையிலும், பாஷையில் மட்டும் பேசுபவன் அமைதியாக இருக்கக்கடவன். இந்த செய்திகள் ஆராதனையில் பிரசங்கத்திற்கு முன்பாக வந்துவிட வேண்டும். அதன்பிறகு தீர்க்கதரிசியானவள்... அதாவது பிரசங்கியார், பிரசங்கியார் தான் புதிய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியாக இருக்கிறான், அவன் பிரசங்கிக்க வருகையில் தேவன் அவன் மூலமாக கிரியை செய்ய ஆரம்பிக்கிறார் என்பதைப் பாருங்கள். ஆகவே பிரசங்கம் துவங்குவதற்கு முன்பாக, அந்நிய பாஷைகளில் பேசுதலும், வியாக்கியானம் செய்தலும் உண்டாயிருக்கிறது. அதற்குப் பிறகு செய்திகள் அளிக்கப்படுதல் உண்டாகிறது. எப்பொழுதும் இவ்வாறான ஒழுங்குகள் யாவும் நடைபெற வேண்டும். ஆனால் ஒரு பெண்ணுக்கு வரங்களைப் பெற்றுக் கொள்ள உரிமையுண்டு. 52. இதற்குப் பதிலளிக்க நான் சிறிது நேரம் எடுத்துக் கொள் கையில், அடுத்ததாக, பின்வரும் தலைப்புச் செய்தியை, செய்தித் தாளிலிருந்து நான் வாசிக்கப் போகிறேன். “ மூன்று மாதங்களில் ஒருங்கிணைந்த ஒரே வேதாகமத்தின் மொழி பெயர்ப்பு ஆரம்பமாகிறது. அக்டோபர் 15 : கத்தோலிக்கர், பிராடெஸ்டெண்டுகள், மற்றும் யூத மத அறிஞர்கள் ஒரு குழுவாக இயங்கி, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட, ஆதார வேதப் புத்தகம் என அழைக்கப்படும் வேத வாக்கியங்களின் புதிய மொழி பெயர்ப்புக்காக கூட்டாகச் சேர்ந்து வேலை ஆரம்பித்துள்ளார்கள். 53. இதைப் பற்றி நான் அறிவிப்புச் செய்யும் முன்னர், சில விஷயங்களை பற்றி நான் இன்னும் கொஞ்சம் இங்கே ஆராய விரும்புகிறேன. அதாவது, நாம் எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோமோ, அவைகள் இந்நாட்களில் நடக்கும் என்று சரியாக வேதவாக்கியங்கள் முன்னுரைத்துள்ளன. இவைகள் யாவும் ஒருங்கிணைந்து, மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கும் என்று வேதம் முன்னுரைத்துள்ளது. அது அப்படியே இருக்கிறது. அவர்கள் அதை முயன்றிருக்கிறார்கள், அதற்காக அவர்கள் கிரியை செய்து கொண்டிருக்கிறார்கள், அதை இந்த வேளையில் முன்னிலைப்படுத்துவதற்கு வேறு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இப்பொழுது அவர்களுக்கு சரியான தருணம் வாய்த்துள்ளது. ஏனெனில் அது அவர்கள் கையில் தயாராக இருந்து கொண்டிருக்கிறது. இதுவே ஏற்ற வேளை என்று நான் கருதுகிறபடியால் தான், இந்த தீர்க்கதரிசன செய்திகளை நான் இங்கே கொண்டு வருகிறேன். 54. ஒவ்வொரு இரவிலும் திரும்பி வருகிறவர்கள் யாராகிலும் இருந்தால், சீக்கிரமாக ஆரம்பித்து, சீக்கிரமாகவே கூட்டத்தை முடித்துவிடுவோம். நான் எடுத்துக் கொண்ட பொருளில் உள்ள செய்தியை நான் அந்தந்தக் கூட்டத்தில் முடிக்காவிடில், அடுத்த நாள் காலையில் நான் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுப்பேன். வெளிப்படுத்தின விசேஷம் 9ம் வசனம் முதல் 20ம் வசனம் முடிய உள்ள வசனங்களை நாம் இன்றிரவில் முடிக்க இயலாமற் போனால், நாளை காலை 10 மணிக்கு மீண்டும் ஆரம்பிப்போம். நாம் எவ்வாறு தொடரப் போகிறோம் என்பதை ஒவ்வொரு ஆராதனையின் முடிவிலும் முன்கூட்டியே அறிவித்து விடுவோம். 55. நாளை இரவு எபேசு சபையில் துவங்கி; ஏழு இரவுகள் எபேசு சபைக் காலம், சிமிர்னா சபைக் காலம், பெர்கமு சபைக்காலம், தீயத்தீரா சபைக்காலம், சர்தை சபைக்காலம், பிலதெல்பியா சபைக்காலம், மற்றும் அடுத்த ஞாயிறன்று, லவோதிக்கேயா சபைக்காலம் என்று வரிசையாக பிரசங்கிக்கப்படும். 56. நமது பாதையில் கிடக்கின்ற இந்த மகத்தான விலையுயர்ந்த ஆபரணங்களைப் போன்று இருக்கின்ற இச்செய்திகளை நாம் அறிந்திருக்கையில், உரிய வேளை வருகின்ற வரையிலும், அதைப் பற்றி பேசாமலிருக்க என்னால் முடியாது. இந்த மகத்தான செய்திகளை நான் கண்டு, ஆவியானவர் ஜனங்களின் மத்தியில் போஷிப்பதை உணரும்போது, அவைகளைப் பற்றி, விரைவாக ஆவியில் குதித்தெழும்பி பிரசங்கித்துவிட வேண்டும் என்று விழைகிறேன். ஆயினும், அந்தந்த காலத்தை அதினதின் காலத்திலும், வேளையிலும் பொருத்தி வைக்க வேண்டியுள்ளது. எனவே, இரவு ஆராதனைக்கு நீங்கள் வர இயலாது போனால், ஒலிநாடாக்கள் மூலமாவது அல்லது வேறெந்த வகையிலாகிலும் இச்செய்தி எங்கும் சென்றடைய வேண்டும் என்று நான் விழைகிறேன். பரிசுத்தாவியானவரால் நடத்தப்பட்டபடியினால் நான் இதை பிரசங்கித்திருக்கிறேன். அதினால் நான் இதை பிரசங்கித்துள்ளேன். சபைக்கு இது உதவியாக இருக்காது என்று நான் நினைத் தேயானால்... மேலும் இந்நாளிலே, நினைவில் கொள்ளுங்கள், இம்மாதிரியான கூட்டங்களை நாம் நடத்த முடியாதபடி அப்படிப்பட்ட வேளையானது விரைவில் வரும். எனவே, இக்கூட்டங்களை நடத்துவதற்குரிய வேளையானது நமக்குக் கிடைத்திருக்கையில் அதை நடத்தியாக வேண்டும். எப்பொழுது அவர்கள் இக் கூட்டங்களைத் தடை செய்வார்கள் என்பது நமக்குத் தெரியாது. 57. எனவே, சபைகள் யாவும் ஒன்று கூடும், அவ்வாறு ஒன்றிணைந்து, சபைகளின் சம்மேளனத்தின் தலைமையை உருவாக்குவார்கள். ஏற்கனவே பெரிய ஐ.நா. சபை ஸ்தாபனம் உள்ளது, அதில் எல்லா சபைகளும் அங்கம் வகிக்கின்றன. அதில் உள்ள சபைகளிலொன்றில் நீங்கள் உறுப்பினராக இருத்தல் வேண்டும்; அப்படி இருக்க மறுத்தால், நீங்கள் வெளியே தள்ளப்படுவீர்கள். அந்த வேளையில்தான் நாம் நமது நிறங்களை (நாம் யார் என்பதை) காட்ட வேண்டியவர்களாக இருப்போம். நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கிறது. அது அனுமானத்தினால் அறிந்து கொள்ள வல்லது அல்ல. அந்த சிறிய சபையானது, எப்பொழுதுமே சிறுபான்மையாகத்தான் இருந்து வந்துள்ளது. அது மிகவும் சிறிய ஒரு குழுவாகும்... வேதாகமத்தை சுற்றி நிற்கும் சிறிய சிவப்பு நூலைப் போல அது உள்ளது. எப்பொழுதும் அதுவே அந்த உண்மையான சபையாக இருந்து வருகிறது. நாம் அதை நினைவில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். 58. மீண்டும் வாசிக்க ஆரம்பிக்கும் முன்னர், ஒரு சிறிய கருத்துரையைக் கூற விரும்புகிறேன். இன்று காலையில் இயேசு கிறிஸ்துவே அந்த உன்னதமான தெய்வம் என்பதை பற்றிய வெளிப்பாட்டை எடுத்துக் கொண்டோம். அவரைத் தேவன் நமக்கு இன்று காலை வெளிப்படுத்தினார். மகத்தான இருக்கிறேன் என்பவர் அவர். (இருந்தேன் அல்லது இருப்பேன் என்று அல்ல) அவர் எப்பொழுதும் இருக்கிறேன் என்பதாகவே இருக்கிறார். வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதிகாரத்தில் வெளிப்படுத் தலைப் பற்றிப் பார்க்கிறோம். யாரைப் பற்றிய வெளிப்படுத்துதல் அது? இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல் அது. முதலாவதாக அவர் தன்னைப் பற்றி என்ன வெளிப்பாட்டைத் தருகிறார்? அவர் பரலோகத்தின் தேவன் என்பதாக வெளிப் படுத்துகிறார். தன்னை திரித்துவக் கடவுள் என்று அவர் வெளிப்படுத்தவில்லை, தன்னை ஒரே தேவனாகவே வெளிப்படுத்துகிறார். வெளிப்படுத்தின விசேஷத்தில் துவக்கத்திலேயே அவர் தன்னை ஒரே தேவன் என்று தான் வெளிப்படுத்துகிறார். முதலாம் அதிகாரத்தில் அந்த வெளிப்பாட்டை அவர் நான்கு தடவைகள் உரைக்கிறார், ஏனெனில் அதைப் பற்றி ஒரு தவறான கருத்தும் இருக்கக் கூடாது என்பதினால்தான். முதலாவதாக நீங்கள் அறிய வேண்டியது என்னவெனில்; அவர் வெறும் தீர்க்கதரிசியல்ல, அவர் ஒரு இளைய தேவன் அல்ல, அவர் இரண்டாவது தெய்வம் அல்ல, அவர் தேவனே! அவர் தேவனாக இருக்கிறார். எனவே தான், வெளிப்படுத்துதலானது வந்தது. நாம் அந்த வெளிப் படுத்துதலோடு இன்றிரவிலும் தொடர்ந்து, அவரது ஏழு விதமான மகிமையான தோற்றங்களை பெறுகிற வரையிலும் அதனுடன் செல்கிறோம். 59. இந்த வார்த்தைகளை நாம் போதிக்கையில் தேவன் நமக்கு உதவி செய்வாராக. நான் இவைகளின் வரலாற்றுப் பூர்வ அடிப்படையை ஆராய்ந்துள்ளேன். ஆயினும், நான் பிரசங்க பீடத்திற்கு வந்து ஆவியின் ஏவுதலைப் பெறுகிற வரையிலும் காத்திருக்க வேண்டும். ஏனெனில் நாம் யாவரும் ஒருமித்து கிறிஸ்து இயேசுவுடன் உன்னதங்களில் வீற்றிருக்கிறோம் என்பதை உணருகிறேன். உங்களிலுள்ள உங்களுடைய பாகமான ஆவியானது, அந்த அக்கினிமயமான நாவானது (பரிசுத்து ஆவியானவர்) உங்களிலிருந்து இன்னொருவருக்கு பரவுகிறது, அவரிலிருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது; இப்படியாக மகத்தான தேவனுடைய சரீரம் முழுவதுக்கும் பரவி, அதை அக்கினிமயமாக்குகிறது, அங்கேதான் வெளிப்படுத்துதல் உண்டாகிறது. 60. ''ஸ்திரீகள் இன்னின்ன காரியங்களை சபையிலே செய்யலாமா'' என்பதான கேள்வியைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருந்தோம். அந்தக் காரியம் தான் சபையை ஆதியில் அதினுடைய குழப்பத்தில் ஆழ்த்த ஆரம்பித்தது. பரிசுத்தமான எல்லாக் காரியங்களையும் அவர்கள் எடுத்துப் போட்டு, பிரசங்க பீடத்தில் தகாத காரியத்தைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். ஆனால் தேவனோ தான் பேசுகிறதைக் கேட்கிறவர்களாகிய சபையின் தேவனாயிருக்கிறார். ஒவ்வொரு மனிதனிலும் அவர் கிரியை செய்கிறார். தேவன் வசிப்பதற்கு இடம் கொடுக்கும் எந்த இதயத்திலும் அவர் ஜீவிக்கிறார். வரம்பெற்ற மக்களை அவர் கண்டு, அவர்கள் மூலம் கிரியை செய்கிறார். பிசாசினால் அவர்களை எந்தவொரு காரியத்திலும் குறை கண்டுபிடிக்க முடியவில்லை யெனில், அப்பொழுது அவன் வந்து ஒன்றுக்கும் உதவாத காரியத்தின் மேல் ஒரு பெரிய கூட்டத்தைக் கூட்டி, அதினால் மக்களை விலகி ஓடிப் போகப் பண்ணுவான். '...சபையாரெல்லாரும் ஏகமாய் கூடி வந்து, எல்லாரும் அந்நிய பாஷைகளிலே பேசிக் கொள்ளும் போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?'' என்று பவுல் கூறியது போல, சிலர் அந்நிய பாஷைகளில் அப்படியும், இப்படியுமாக தாறுமாறாக பேசிக் கொண்டிருந்தால் அது ஒன்றுக்கும் உதவாது. ஆனால் பவுல் கூறினான்; ...யாராவது தீர்க்கதரிசனம் சொல்லி இருதயத்தின் இரகசியம் வெளிப்படுத்தப்பட்டால், அப்பொழுது, அவர்கள், “ மெய்யாகவே தேவன் உங்களுக்குள் இருக்கிறார்'' என்று கூறுவார்கள். ஆனால் ஒருவர் அந்நிய பாஷைகளில் வெளிப்படுத்துதலினால் பேசி, சபையை பக்தி விருத்தியடைச் செய்யும்படி அதனுடைய வியாக்கியானத்தைக் கொடுக்கும் பொழுது, முழு சபையும் அதினால் பக்திவிருத்தியடைகிறது. நாம் அறியாத பாஷைகளில் தேவன் பேசுதல் யாராவது ஒருவர் மூலம் உண்டாகி, அதனுடைய வியாக்கியானமானது இன்னொருவருக்குக் கொடுக்கப்பட்டு, அவ்வாறு உரைக்கப்பட்டு, அவ்வாறு உரைக்கப்பட்ட காரியம் உரைத்த வண்ணமாக சம்பவிக்கும் போது, அப்பொழுது, உங்கள் நடுவில் கர்த்தருடைய ஆவியானவர் இருக்கிறார் என்பது தெரிகிறது. அவ்விதமான காரியத்திற்காக நாம் முயற்சி செய்வோமாக, நண்பர்களே, அந்த அக்கினியானது நம்மில் பற்றியெரியச் செய்வோமாக. 61. மகத்தான பிரமாணமாகிய வேத வாக்கியங்களை வாசிக்க நாம் நிற்கும் முன்பாக, சில நிமிடங்கள் நாம் யாவரும் எழுந்து நின்று, நமது நிலைகளை சற்று மாற்றிக் கொண்டு, ஜெபம் பண்ணுவோமாக. அது நமக்கு கஷ்டமான காரியமல்ல என்று எண்ணுகிறேன். 62. கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பி, இந்த 1900 ஆண்டுகள் கழித்து இன்னமும் எங்களுக்கு பிழையேதுமில்லாத பரலோகத்தின் தேவனாக அவரை அளித்த சர்வ வல்லமையுள்ள தேவனே, இதற்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம். அவரது பிரசன்னம் எங்களோடு, தினந்தோறும், எங்களது அன்றாட வாழ்க்கையில் இருக்கிறதற்காகவும் நன்றி செலுத்துகி றோம். இந்த குழப்பமான வேளையில் உலகமானது செய்வதறியாது திகைத்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பூமிக்கடியில் பதுங்கு குழிகளையும், காங்க்ரீட்டினால் ஆன பாதுகாப்பரண்களையும் அவர்கள் கட்டிக் கொண்டிருக்கையில், ஓ, தேவனே! தேவனுடைய கோபத்தினின்று அவர்களால் தப்பமுடியாது. ஆனால் ஒரேயொரு நிவாரணம் மட்டுமே உண்டு. அதை நாங்கள் அறிந்து கொள்ள முடிந்ததற்காக மகிழ்ச்சியாயிருக்கிறோம்: ''...இரத்தத்தை நான் காண்கையில் உங்களை நான் கடந்து செல்வேன்...''. இந்த இராத்திரியிலே, எவ்வகையிலும் போதுமானதாயிருக்கிற தேவ ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் உண்டான பாதுகாப்புக்காக நாங்கள் எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறோம்! அந்த மகாபிரதான ஆசாரியர் இன்று இரவிலே, மகிமையில் நின்று கொண்டு, நமது அறிக்கையின் பேரில் நமக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். நமது மத்தியில் இன்றிரவில், அந்த மகத்தான பேச்சாளரை, மகத்தான பரிசுத்த ஆவியானவரை, மகத்தான அபிஷேகத்தை தருபவரை, மகத்தான ஜீவனை அளிப்பவரை, நாம் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். 63. இப்பொழுதும், தேவனாகிய கர்த்தாவே! இன்றிரவில் இக்கூரையின் கீழே இந்த ஜனங்களை நான் எந்த மனிதனின் பேரிலுமாக அழைத்திருக்கவில்லை; ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவர்களை அழைத்திருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் சரீரத்தையும் அவரது சிந்தையையும் ஆண்டு கொண்டிருந்ததும், அவரை நிரப்பி ஆண்டு கொண்டிருந்ததுமான அந்த ஆவியானவர் இன்றிரவில் எங்களுக்குள் வந்து, தேவ வசனத்தை வியாக்கியானித்து, அதை அவருக்காக காத்திருக்கிறதான எங்களுடைய பசியுள்ள இருதயங்களுக்கு பிரசங்கித்து, அளிப்பாராக. அவருடைய நாமத்தினால் அவருடைய மகிமைக்காக இதைக் கேட்கிறோம். ஆமென். (நீங்கள் அமரலாம்). 64. வேதாகமத்தை வைத்திருக்கிற நீங்கள், வெளிப்படுத்தின விசேஷம் 1ம் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு, அதில் 9ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போமாக. நான் பிரசங்கித்துக் கொண்டே போகையில், சில தேதிகளை நான் கொடுப்பேன். அவைகளை நீங்கள் உங்களுடைய காகிதங்களில் எழுதுகோல்களைக் கொண்டு குறித்துக் கொள்ளலாம். 65. இப்பொழுது, இது உண்மையிலேயே... இன்று காலையில் உள்ள செய்தி அதிகமும் பிரசங்க நடையில் இருந்தது, கிறிஸ்துவில் தேவன் வெளிப்படுத்தலாகிய தெய்வத்துவத்தைப் பற்றிய வெளிப்பாட்டிற்குரிய அஸ்திபாரத்தைப் போடுகிறதாக இருந்தது. அதை எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? கிறிஸ்துவில் தேவன் வெளிப்பட்டார், யேகோவா கிறிஸ்துவில் வெளிப்பட்டார். தேவன் இப்பொழுது எங்கே வெளிப்பட வேண்டும்? அவர் தன்னுடைய சபையில், அவரது ஜனங்களுக்குள், நம்மில் வெளிப்பட வேண்டும். அதே ஆவியானவர், அதே கிரியைகள், அதேவிதமான பிரத்தியட்சப்படுதல், அதே அன்பு, அதே மன்னிக்கும் தன்மை, அதே நீடிய பொறுமை, நற்குணம், அதே பொறுமை, சமாதானம், இரக்கம் ஆகிய இவை முதலானவை கிறிஸ்துவில் இருக்கிறவை, இப்பொழுது அவரது சபையில் காணப்படுகிறது. நினைவில் கொள்ளுங்கள், இதை சிந்தையில் வையுங்கள், தேவனுடைய தன்மை யாவும் அப்படியே கிறிஸ்துவில் ஊற்றப்பட்டது (சரீரப் பிரகாரமாக தேவத்துவத்தின் பரிபூரண மெல்லாம் அவருக்குள் வாசமாயிருந்தது). கிறிஸ்துவின் தன்மை யாவும் அப்படியே சபையில் ஊற்றப்பட்டது. தேவன் நமக்கு மேலாகவும், தேவன் நம்முடனும், தேவன் நமக்குள்ளும் இருக்கிறார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய இம்மூன்றும் ஒரு சேர தன்னகத்தே கொண்டுள்ள ஒரே தேவன், இம்மூன்று வித்தியாசமான விதங்களில் பிரத்தியட்சமானார். 66. வெளிப்படுத்துதலானது, அவர் மூன்று தேவர்கள் அல்ல வென்றும், அவர் மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டவரும் அல்ல என்பதையும் காண்பித்தது. அவர் ஒரே தேவன் தான். பிதாத்துவத்தின் நாட்களில் இருக்கிற தேவனும் அவரே, குமாரத்துவத்தின் நாட்களில் உள்ள தேவனும் அவரே, அதேதேவன் தான். மூன்று வித்தியாசமான நபர்கள் அல்ல, மூன்று நபர்கள் அல்ல, மூன்று தனித்தனி ஆள்தத்துவம் உள்ளவருமல்ல. அவர் ஒரே நபர்தான், ஒரே ஆள்தத்துவமுள்ளவர் தான் நீங்கள் ஒரு ஆளாக இருந்தால்தான் உங்களுக்குள் ஆள் தன்மை (அல்லது ஆள் தத்துவம்) இருக்க முடியும். சிலர், “ அவர் மூன்று நபர் களல்ல, ஆனால் அவர் மூன்று ஆள் தத்துவங்களைக் கொண்டவராக இருக்கிறார்'' என்று கூறுகின்றனர். நீங்கள் ஆள், ஆள் தத்துவம் என்பனவற்றை வெவ்வேறாக பிரிக்க முடியாது. ஏனெனில், அவர் ஒரு ஆள் தத்துவமுடையவராக இருக்கிறாரென்றால், அப்பொழுது அவர் ஒரு ஆளாக இருக்கிறார். ஒரு ஆளாக இருந்தால் தான் ஆள் தத்துவத்தைக் கொண்டிருக்க முடியும். எனவே, அவர் ஒரு நபர் (ஆள்) தான், ஒரு ஆள் தத்துவத்தையுடைவர் தான். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர், அல்பா, ஒமெகாவாக இருக்கிறார். இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமானவர். ஓ! அவரே எல்லாமுமாயிருக்கிறார். அதை நான் நேசிக்கிறேன். 67. அவருடைய தன்மையையும், அவர் ஜீவியத்தையும், அவருடைய கிரியைகளையும் கவனியுங்கள். அவைகள் அவருடைய நாளில் இருந்தது போலவே, இங்கே இப்பொழுதே இந்தக் கூடாரத்திலும் பிரத்தியட்சமாக வேண்டும். (இதை நான் விருப்பு வெறுப்பின்றி உள் நோக்கமில்லாமல் கூறுகிறேன், தேவன் அதை அறிவார்). இங்கு மட்டுமல்ல, உலகம் பூராவிலும் அவ்வாறே பிரத்தியட்சமாக வேண்டும். அவ்வாறே காரியமானது உள்ள படியால் நான் மகிழ்ச்சியடைகிறேன். அப்பொழுது நாம் எங்கே நிற்கிறோம் என்பதை அறிகிறோம், ஏனெனில், அதே ஆவியான வரை நாம் கொண்டிருக்கிறோம், அவர் நம்மோடு அசைவாடி, தாம் அங்கே இருக்கிறதை காண்பித்துக் கொண்டு இருக்கிறார். நாம் இவைகளைச் செய்யவில்லை, அவர் தான் கிரியை செய்கிறார், நம்மால் அவைகளை செய்ய முடியாது. அது தேவன் தான். அது மட்டுமல்லாமல், இந்த விஞ்ஞான உலகில் அவருடைய புகைப்படத்தை எடுக்க அவர் அனுமதித்துள்ளார். அவர் நம்மோடு, நம்மில் இருந்து, நமக்கு மேல் இருந்து, நம் மூலமாகவும், நம்மில் உள்ளிலும் புறம்பிலும் கிரியை செய்து வருகிறார். ஓ! இது எவ்வளவு அருமையாயிருக்கிறது. 68. இந்தச் சிறிய பாடலை அவர்கள் பாடுவது வழக்கம். எரியும் முட்செடியிலிருந்து மோசேயுடன் பேசி இருக்கிறவர்நான் தானே ஆபிரகாமோடு பேசினவரும், விடிவெள்ளி நட்சத்திரமுமாய் இருக்கிறவர் நான்தானே சாரோனின் ரோஜாவாய் இருக்கிறவர் நான்தானே ஓ! நான் எங்கிருந்து வந்தேன் என்பதை நீ உரைத்தாயா என் பிதாவை நீ அறிவாயா? அல்லது அவரது நாமத்தைஉன்னால் கூற முடியுமா? ஓ!நான் யார் என்பதை நீ கூறுவாயா?அல்லது நான் எங்கிருந்து வந்தேன் என்பதை நீ கூற முடியுமா? என் பிதாவை நீ அறிவாயா அல்லது அவரது நாமத்தை நீ கூற முடியுமா? நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும், அந்த முமாயிருக்கிறேன், சர்வ சிருஷ்டியும் நானே, இயேசு என்பது எனது நாமமாகும். 69. ஓ! வெளிப்படுத்துதலானது எத்தனை ஆச்சரியமா யிருக்கிறது. ஒருக்காலும் வேதபண்டிதர்கள் மூலமாக உங்களுக்கு கிட்டாது, அந்தவிதமாக அது வராது என்பதை நீங்கள் இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். அது ஒரு வெளிப்படுத்துதலாகத் தான் வரும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படுகிற தண்ணீர் ஞானஸ்நானம், வெளிப்படுத்தல் மூலமாக மட்டுமே நீங்கள் அறிந்து கொள்ள முடியும். இயேசுவும் தேவனும் ஒரே நபர்தான் என்பது வெளிப்படுத்துதல் மூலமாகத் தான் அறிந்து கொள்ள முடியும். முழு வேதாகமும் வெளிப்படுத்தல் மேல் தான் கட்டப்பட்டுள்ளது. மத்தேயு 17ல் '... நான் உனக்குச் சொல்லுகிறேன்.... இந்தக் கல்லின் மேல் (ஆவிக்குரிய வெளிப்பாடு) என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை'' என்று கூறப்பட்டுள்ளது. கத்தோலிக்க சபையைத் தவிர, மார்ட்டின் லூத்தர் காலம் வரையிலும் அதன் பிறகு பிராடெஸ்டெண்ட் சபையிலும் தவிர ஆதியில் எப்பொழுதாவது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் எவருக்காவது ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதா என்பதை வரலாற்றுப் பூர்வமாகவும் வேத பூர்வமாகவும் யாராவது நிரூபியுங்கள் பார்க்கலாம் என்று நாங்கள் சவால் விடுக்கிறோம். 70. மேலும் ஒவ்வொரு தீய காரியமும்.... சபைக் காலங்களைக் குறித்து நாம் படிக்கையில், நீங்கள் கவனியுங்கள். முதல் சபையில் காணப்பட்ட ஒவ்வொரு தீதான காரியமும், அப்படியே தனக்கடுத்ததான சபையின் காலத்திற்குள்ளும் கடந்து சென்றது. இவ்வாறு அது தொடர்ந்து ஒவ்வொரு சபைக் காலத்திற்குள்ளும் வளர்ந்து கொண்டே போய், முடிவில் கடைசிக் காலத்தில் அது ஒரு விசுவாசத் துரோகமாக முடிவடையும் அளவுக்கு வந்திருக்கிறது. ஒவ்வொரு தீமையும் இவ்வாறு அடுத்தடுத்து வந்த சபைக் காலத்திற்குள்ளும் நீண்டு கொண்டே வந்துள்ளது. ஒவ்வொரு தவறான போதகமும் ஆரம்பித்து, அடுத்தடுத்து வந்த காலங்களுக்குள்ளும் தொடர்ந்தது. ஆதியாகமத்தில் உள்ளது போல, அந்த கள்ள திராட்சச் செடியானது வளர ஆரம்பித்து, பின்பு, சபைக் காலத்திற்குள்ளாக படர்ந்து கொண்டே போய் இந்தக் கடைசி நாட்களில் புறப்பட்டு வெளியே வருகிறது. 'அந்த நாளுக்குத் தப்புகிறவர்கள் பாக்கியவான்கள்'' என்று வேதம் கூறியது ஒன்றும் ஆச்சரியமல்லவே. ஆம், இவற்றினின்று அது தப்பித்துக் கொள்கிறது. 71.இப்பொழுது, தேவனிடம் கேளுங்கள்... வெளிப்படுத்தலைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கையில், இதைப் பற்றிய வெளிப்பாட்டை உங்களுக்கு அளிக்கும்படி அவரிடம் கேளுங்கள். ஏனெனில் இது வெளிப்பாட்டினால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். நீங்களும் வெளிப்படுத்துதலினால் தான் இரட்சிக்கப் பட முடியும். அதைப் பற்றிய ஒரு அறிவு உங்களுக்கு மூளையின் அறிவினால் உண்டாயிருந்தாலும், அது வெளிப்படுத்தப்பட வில்லையெனில், நீங்கள் இரட்சிக்கப்பட முடியாது. "பரிசுத்த ஆவியினாலேயன்றி, ஒருவனும் இயேசுவை கிறிஸ்து என்று அழைக்க முடியாது''. வேதம் அவ்வாறுதான் கூறுகிறது. ஒருவர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தால் மட்டுமே, இயேசுவை கிறிஸ்து என்று அழைக்க முடியும். “ போதகர் அவ்வாறு கூறினார், வேதம் அவ்வாறு கூறுகிறது'' என்று அவர் கூறலாம். அவர்கள் சொன்னது உண்மைதான். “ சபை அவ்வாறு கூறுகிறது'' எனலாம். அது உண்மைதான். ஆனால், பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு அதை வெளிப்படுத்தி அவர் உங்களில் வாசம் செய்கிற வரைக்கிலும், நீங்களாக அதை அறிய மாட்டீர்கள். “ பரிசுத்த ஆவியினாலேயன்றி ஒருவர் இயேசுவை கிறிஸ்து என்று அழைக்க முடியாது''. அறிவினாலல்ல, விவேகத்தினாலல்ல. 72. பகலும் இரவும் எவ்வாறு ஒன்றுக்கொன்று பொருந்தாமல் இருக்கிறதோ, அவ்வாறே, தங்களுக்குள் ஒரு வகையிலும் பொருந்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ள யூதர்கள், கத்தோலிக்கர், பிராடெஸ்டெண்டுகள் ஆகிய இவர்கள் மூவருக்கும் பொருந்தும்படியான ஒரு வேதாகமத்தை அவர்கள் எவ்வாறு உருவாக்கப் போகிறார்கள்? யூதர்கள் அதை விட சரியாக அறிந்துள்ளார்கள் என்றே நான் நினைத்தேன். இவ்வாறு உருவாவதற்குரிய வேளை இதுவே என்று நான் அனுமானிக்கிறேன். அங்கே தான் அந்த பெரிய விசுவாசத் துரோகத்திற்குள் யாவும் ஒன்றுபட வேண்டும். ஆகவே யாவும்... அவ்வாறு அது உருவாவதை நம்மால் தடுக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் நம்மால் செய்யக் கூடியது என்னவெனில், அங்கே நாம் ஒளியை வீசச் செய்ய வேண்டும், அதற்காக நாம் நம்மையே இரத்த சாட்சியாக கொடுக்க வேண்டியதிருக்கலாம். அவ்வாறு செய்து அதை விட்டு நாம் கடந்து செல்லலாம். அவ்வாறுதான் நாம் செய்ய முடியும். ஆனால் அநேகர் அதைச் செய்ய வேண்டியதிருக்கிறது. அந்த விதத்தில்தான் வேதமானது அமைக்கப்பட்டுள்ளது, நாம் ஈடுபட வேண்டிய காரியங்களும் அமைந்துள்ளது. நான் அதை கவனிக்காவிடில், நான் அதற்குள் போய்விடுவேன். 73. இப்பொழுது இந்த வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில் முதலாவது காரியமானது என்னவெனில், இயேசு கிறிஸ்து யார் என்பதைப் பற்றி காண்பிக்கும், இயேசு கிறிஸ்துவைப் பற்றின வெளிப்பாடாக அது முதலாவதாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவே சர்வ வல்லமையுள்ள தேவனாவார். அதை நாம் அறிவோம். எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறீர்கள்? ''ஆமென்'' என்று சொல்லுங்கள். (சபையோர் ''ஆமென்'' என்று கூறுகின்றனர் -ஆசி). அவர் சர்வ வல்லமையுள்ள தேவன், அவருக்கு ஒரே நாமம் (பெயர்) மட்டுமே உண்டு. இயேசு கிறிஸ்து என்பதே அந்த நாமம். வானத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ள அந்த ஒரே நாமத்தினால் மட்டுமே நீங்கள் இரட்சிக்கப்பட முடியும். தண்ணீரண்டை வருகையில் மட்டும் அவர்கள் ஏன் அதற்குப் பயப்படுகிறார்கள் என்பதைப் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாருங்கள்? ஏனெனில், சிமிர்னா சபையின் காலத்தில் அந்த ஆவியானது உள்ளே நுழைந்து, பிறகு, அது அந்தப் பெரிய இருள் காலத்திற்குள்ளும் படர்ந்து, இலங்கி, பின்பு அது உபதேசமாக ஆக்கப்பட்டு, இப்பொழுது இந்தக் கடைசி காலத்திற்குள்ளும் பரந்து விரிந்து நிற்கின்றது. இப்பொழுது இந்த வாரத்தில் நாம் வேதத்தையும், வரலாற்றையும் ஆராய்கையில், எவ்வாறு அந்த தவறான உபதேசமானது புறப்பட்டு வந்தது என்பதை கவனியுங்கள். 74. அடுத்த காரியத்தைப் பார்ப்போம். அது கிறிஸ்துவினால் யோவானுக்கு ஒரு தூதன் மூலமாக, அவருடைய (என்ன?) சபைகளுக்கு கொடுக்கப்படும்படியாக, அதை அவருடைய சபைகளுக்கு வெளிப்படுத்திக் கொடுக்கும்படியாக கொடுக்கப்பட்டது. அவருடைய கரத்திலிருக்கும் அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளுக்குரிய ஏழு தூதர்களாவர். அந்தச் செய்தியை பெற்றிருக்கிறவன் எவனோ, அவன் அதைப் பெற்றுக் கொள்ளுவான்; அச்செய்தியானது ஆதியில் ஆரம்பித்து அதே உண்மையான செய்தியாகவே இருக்கும். 75. நாளை, தேவன் எவ்வாறு இக்காரியங்களை அசைத்தார் என்பதைக் காணும்படி, நாம் அந்த ஆழமான இடங்களில் இறங்குகையில், அது ஆச்சரியமாக இருக்கும், உங்களை அது ஆர்ப்பரிக்கச் செய்யும். நான் இதைப் பற்றி படிக்கையில், அதைப் படித்துவிட்டு, பின்பு சற்று சுற்றிலும் நடந்து, சப்தமிட்டு, திரும்ப வந்து உட்கார்ந்து, பின்பு மீண்டும் சற்று நடந்தேன். அதைப் பற்றி அறிந்ததினால் இவ்வாறு நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். நாம் வாழ்கிற இக்காலத்தில் அதைப் பற்றி நாம் அறிந்து கொள்ளும்படி அருளியதற்கு தேவன் எவ்வளவாய் நம்மேல் இரக்கமுள்ளவராய் இருந்திருக்கிறார்! ஏன்? 'ஒரு விலையேறப் பெற்ற முத்தைக் கண்டு, போய் தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக்கொள்ளுகிறான்'' என்று இயேசு சொன்னதற்கு ஒப்பாக அது இருக்கிறது. இந்த மகத்தானதை அடையத்தக்கதாக, நீங்கள் உலகின் காரியங்கள் யாவையும் உலகுக்கே விற்றுவிடுகிறீர்கள். அது உண்மை. உங்களுடைய முழு நங்கூரத்தையும் அந்த மகத் தானதின் மேல் பாய்ச்சி விடுங்கள். அவருடைய வார்த்தையைப் பற்றிய அவருடைய வெளிப்பாட்டைப் பார்க்க உதவும் ஆத்தும நங்கூரமாயுள்ளது அது. 76. இதை வாசிக்கிற எவனும் பாக்கியவான். அது சரிதானே? இன்று காலையில் நாம் கூறினோம். உங்களால் இதை வாசிக்க முடியவில்லையெனில், அதை வாசிக்கக் கேட்டால் பாக்கிய வான்கள் என்று. இப்பொழுது, இது, அமர்ந்து வாசிக்கக் கேட்கிற வர்களுக்கு ஆசீர்வாதத்தைக் கூறி துவங்குகிறது. இதோடு எதையாவது எவனாவது கூட்டினாலோ, அல்லது இதிலிருந்து எடுத்துப் போட்டாலோ, அவன் மேல் சாபத்தை உரைத்து முடிகிறது. இயேசுவே சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதாக வேதாகமம் வெளிப்படையாக வெளிப்படுத்துகிறதென்றால், அதை வேதத்திலிருந்து எடுத்துப் போடுகிறவன் எவனோ அவனுக்கு ஐயோ! ஆம், அது வெளிப்படுத்துதலாக இருக்கிறது. இதோடு எந்த ஒன்றையும் கூட்டுகிற எவனும்... அது வெளிப்படுத்துதலின் முழு பிரமாணமாக உள்ளது. அது தேவனுடைய கடைசிப் புத்தகமாக உள்ளது. அவருடைய கடைசி வசனங்கள்... அவருடைய கடைசி... அதற்கு முரண்பட்டதாக வரும் எந்தவொரு வெளிப்பாடும் கள்ளத் தீர்க்கதரிசனமாக இருக்கிறது, அது தேவனல்ல. ஏனெனில் இதுவே சத்தியமாயிருக்கிறது. 77. வேதம் முழுவதிலும், கிறிஸ்து தாமே அங்கீகாரத்தைத் தந்து உறுதிப்படுத்தும் ஒரே புத்தகம் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதைப் பற்றி எண்ணிப் பாருங்கள். அவரைப் பற்றிய வெளிப்பாட்டைத் தருகிற ஒரே புத்தகம். அவர் தனது முத்திரையைப் பதித்திருக்கிற ஒரே புத்தகம் இது, அவருடைய ஆசீர்வாதங்கள், அவருடைய சாபங்கள் இரண்டையும் இதில் வைத்திருக்கிறார். இதை ஏற்றுக் கொள்ளுகிறவர்களுக்கு ஆசீர்வாதங்களும், ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு சாபங்களும் கிடைக்கப் பெறும். 78. இப்பொழுது, நாம் துவக்கமாக, பத்மு தீவுக்குப் போவோம். 9ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். முதலாவதாக, இச்செய்திக்கு நாம் "பத்மு தீவு தரிசனம்'' என்று தலைப்புக் கொடுப்போமாக. கி.பி.95 முதல் கி.பி.96 முடிய உள்ள காலத்தில் இது சம்பவித்தது. பத்மு என்னும் தீவு தான் இது நடந்த ஸ்தலம். இத்தீவு இருந்த இடம். ஏஜியன் கடலில், எபேசு சபை இருந்த பட்டிணத்திற்கு எதிரே கடலில், ஆசியா மைனரின் கடற்கரைக்கு மேற்கே 30 மைல்கள் அப்பாலும், மத்திய தரைக் கடலை எல்லையாகக் கொண்டும் இருக்கிறது. அந்த ஸ்தானத்தில் தான் அத்தீவு உள்ளது. 79. எண்ணிப் பாருங்கள்! பத்மு என்னும் இத்தீவானது, ஏஜியன் கடலில், ஆசியா மைனர் கடற்கரைக்கு அப்பால் 30 மைல்கள் தூரத்திலுள்ளதாகும். முதல் செய்தி கொடுக்கப்பட்டதும், அச் சமயத்தில் யோவான் மேய்ப்பனாக இருந்ததுமான எபேசு சபை இருந்த எபேசு பட்டிணத்திற்கு எதிர்திசையில் இத்தீவு அமைந் திருந்தது. அதாவது, யோவான் பத்மு தீவில் இருந்து கொண்டு கிழக்கு நோக்கி, தன்னுடைய சபையை நேராக நோக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தான். முதல் செய்தியானது அவனது சபைக்குரியதாக இருந்தது, அச்சபை, ஒரு சபைக் காலத்திற்கு முன்னடையாளமாக இருந்தது. அது சரியே. அவ்வேளையில், எபேசு சபைக்கு மேய்ப்பனாக இருந்த திவ்விய வாசகனாகிய பரிசுத்த யோவானுக்கு தரிசனமாக அருளப்பட்டது. 80. என்னவிதமான நிலையில், அந்த வேளையானது இருந்தது? அத்தீவு எங்கே இருந்தது, என்ன நிலையில் அது இருந்தது? சரி, வரலாற்றிலிருந்து அத்தீவு, பாறைகளால் நிறைந்ததொரு தீவு என்றும், அங்கே விஷ ஜந்துக்களான சர்ப்பங்களும், தேள்களும், பல்லிகளும் நிறைந்ததுமான தீவு என்றும் அறியப்படுகிறது. அது 30 மைல்கள் சுற்றளவு உள்ளதாகும். முழுவதும் பாறைகளால் நிறைந்திருந்தது. யோவானின் நாட்களில் அது அல்கேட்ராஸைப் போல் உபயோகிக்கப்பட்டது (Alcartraz). அல்கேட்ராஸ் என்பது, அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாவில் உள்ள பெலிக்கன் தீவில் அமைந்திருந்த ஒரு சிறைச்சாலை இருந்த ஸ்தலத்திற்குப் பெயர் ஆகும். ரோமச் சக்கர வர்த்தியின் அரசானது, சாதாரண சிறைச் சாலைகளில் வைக்க முடியாத மிகக் கொடுங்குற்றவாளிகளை பத்மு தீவுக்கே நாடு கடத்தினார்கள். அத்தீவுக்கு நாடு கடத்தி, அக் குற்றவாளிகள் அங்கேயே மரிக்கட்டும் என்று விட்டு வந்தார்கள். 81. யோவான் ஏன் அங்கே அனுப்பப்பட்டான் என்று கேள்வி எழும்புகிறது தேவபக்தியுள்ள ஒரு மனிதன் அவன், நீதியுள்ள மனிதன், நல்ல கீர்த்தியுள்ள மனிதன், நல்ல குணமுடையவன், ஒருபோதும் தொல்லையில் சிக்கிக் கொள்ளாதவன், இப்படிப்பட்ட மனிதன் ஏன் இங்கே இருந்தான்? “ தேவ வசனத்தினிமித்தமும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும்'' யோவான் பத்மு என்னும் தீவில் இருந்தான் என்று வேதம் கூறுகிறது. 82. இப்பொழுது நமக்கு காட்சியமைப்பு கிடைத்துவிட்டது. ஏஜியன் கடலில், கடற்கரையிலிருந்து ஏறத்தாழ 30 மைல்கள் தூரத்தில், பத்மு என்னும் தீவு அமைந்துள்ளது, அங்கே முழுவதும் பாறைகள் நிறைந்திருந்தது. முழுவதும் பல்லி, தேள்கள் மற்றும் இன்னபிற விஷ ஜந்துக்கள் நிறைந்தவையாயிருந்தது. அல்கேட்ராஸைப் போல அது ஒரு சிறைச்சாலையாயிருந்தது. அல்கேட்ராஸ் என்ற இடத்தில், சிறைச்சாலையில் வைக்க முடியாத அளவுக்கு உள்ள மிகக் கொடுங் குற்றவாளிகளைக் கொண்டு போய் போட்டு விடுவார்கள். 83. அவர்கள் இந்த திவ்விய வாசகனாகிய பரிசுத்த யோவான் என்ற இந்த சீஷனை இங்கே கொண்டு வந்து போட்டு விட்டார்கள். சீஷர்களிலேயே கடைசியாக மரணமடைந்த சீஷன் யோவானே. அவன் இயற்கை மரணமெய்தினான். யோவான் இந்த தீவில் கொண்டு போடப்படும் முன்னதாக, ஒரு “ பில்லி சூனியக்காரன்'' என்று குற்றஞ்சாட்டப்பட்டான். அவனை அவர்கள் ஒரு கொதிக்கிற எண்ணெய் கொப்பரையில் போட்டு 24 மணி நேரம் கொதிக்க வைத்தார்கள். ஆனால் அந்தக் கொதிக்கிற எண்ணெய் அவனை சுட்டுப் பொசுக்கி அழித்துவிடவில்லை. ஒரு நபருக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியை உங்களால் வேக வைக்க முடியாது. அது தேவன் தாமே. அவனை எண்ணெய் நிறைந்த கொப்பரையில் போட்டு இருபத்தி நான்கு மணி நேரம் கொதிக்க வைத்தார்கள். ஆனால் அவனுக்கு எத்தீங்கும் அணுகவில்லை. இவ்வாறு யோவான் கொதிக்கிற எண்ணெயில் போடப்பட்டும் அவனுக்கு தீங் கொன்றும் அணுகாததைக் கண்ட ரோமானியர்கள், ''யோவான் சூனியக்காரனானதினால், எண்ணெய்க்கு மந்திரம் போட்டு விட்டான்'' என்ற காரணத்தைக் கூறினார்கள். மாம்ச சிந்தை என்ன விதமாக அதைப் பற்றி சிந்திக்கிறது பாருங்கள்! அவ்வாறே அவர்கள் “ மனோவசியத்தின் மூலம் சிந்தையைப் படிக்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்கள் மற்றும் பெயல்செபூல்'' என்று நம்மைக் குறித்தும் அவர்கள் கூறுகையில், எங்கிருந்து அந்த பழைய ஆவியானது வந்துள்ளது என்பதைப் பார்த்தீர்களா? ஆனால் அந்த உண்மையான ஆவியானது எங்கிருந்து வந்துள்ளது என்பதைக் கண்டீர்களா? அது சபைக் காலங்களிலிருந்து வந்தது. பாருங்கள்? தள தள என்று கொதிக்கும் எண்ணெயில் இருபத்து நான்கு மணி நேரம் போட்டு அவனைக் கொதிக்க வைத்தும், அது அவனை தொடவேயில்லை. ஓ! எவ்வளவாய் தேவன் அவருடைய பரிசுத்த ஆவியானவரை அரணாக வைத்து அவனைப் பாதுகாத்தார்! அவனுடைய வேலை இன்னமும் முடியவில்லை. 84. பின்பு அவனை அவர்கள் அத்தீவில் இரண்டு ஆண்டுகள் போட்டிருந்தார்கள். இவ்வாறு அவன் தேவனுக்கென்று தேவனால் தனிமைப்படுத்தப்பட்ட போது, கர்த்தருடைய தூதன் வெளிப்படுத்திய பிரகாரம், அவன் இந்த வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை எழுதினான். அது முடிந்தவுடன், தன் சொந்த நாட்டிற்கு வந்து, எபேசுவில் இருந்த சபைக்கு அவன் மேய்ப்பனானான். திவ்விய வாசகனாகிய யோவான் எபேசுவில் மரித்து, அங்கேயே அடக்கம் பண்ணப்பட்டான். 85. இப்பொழுது ஓ! என்னே ஒரு அருமையான காட்சியமைப்பு உள்ளது! யோவான் 9ம் வசனத்தில், அப்பொழுது உள்ள சபையானது உபத்திரவத்தில் இருந்து வந்துள்ளதாக எழுதியிருக்கிறான். “ உங்கள் சகோதரனும், இயேசு கிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன் பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவ வசனத்தினிமித்தமும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்”. வெளி.1:9 86. அதாவது அவன் தேவனுடைய வார்த்தையை எடுத்து, அது தேவனுடைய வார்த்தை தான் என்பதை நிரூபித்து கொண்டிருந்தான். கிறிஸ்துவும் அவன் மூலமாக திரும்பி வந்து அவன் சொல்வது சரியே என்பதை சாட்சியிட்டார். தேவனுடைய வார்த்தை யோவானில் பிரத்தியட்சமாகி, அவன் தேவனுடைய ஊழியக்காரன் தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது அவர்களால் அதை மறுக்க முடியவில்லை. எனவே அவர்கள் வேறு காரணம் கூற முடியாமல், அவனை ஒரு “ சூனியக்காரன்'' என அழைத்தார்கள். 'அவன் எண்ணெயை மந்திரம் செய்து விட்டான், அது அவனுக்கு ஒரு கெடுதியும் செய்யவில்லை. மக்களை அவன் சூனிய சக்தியினால் மயக்கிப் போட்டான், அவர்கள் சுகமடையவில்லை, அவன் குறி சொல்லு கிறவனாயிருந்தான், அதனால் முடியவில்லை...'' என்று இவ்வாறெல்லாம் அவனைக் குறித்து கூறினார்கள். “ ஒருவிதமான தீய ஆள் அவன், கெட்ட, வஞ்சக ஆவியைப் பெற்றவன்'' என்றெல்லாம் அவனைக் குறித்துக் கூறியிருப்பார்கள். அவன் மக்கள் சமுதாயத்துக்கு அபாயம் விளைவிக்கக் கூடியவன் எனக் கருதி அவனைக் கொண்டு போய் இத்தீவில் போட்டுவிட்டார்கள். ஆனால் அவனோ, இத்தீவில் போடப்பட்டதில் தேவனுடைய சித்தத்தை நிறை வேற்றுகிறவனாகவே இருந்தான். அந்த மோசமான நிலையிலும் யோவானைப் பற்றி தேவனுக்கு ஒரு நோக்கம் இருந்தது. 87. அவனுக்கு உபத்திரவங்களும் மற்றும் வேறு காரியங்களும் இருந்தன. தேவனால் அங்கே அவனை உபயோகிக்க முடிய வில்லை. ஏனெனில் பரிசுத்தவான்கள் அவனிடம் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அவனிடம், “ ஓ! சகோதரன் யோவானே! இதைப் பற்றி நாம் என்ன செய்யலாம், நாம் என்ன செய்யலாம்?'' என்று வினவிக் கொண்டிருந்தார்கள். 88. யோவான் ஒரு தீர்க்கதரிசி என்பதை நாம் அறிவோம். எனவே அவர்கள் அவனிடம் வந்து இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே தான் தேவன் ரோம சாம்ராஜ்யத்தைக் கொண்டு அவனை எடுத்து அந்த தீவில் போடச் செய்தார். அவர் அவனிடம், “ யோவானே வா, நான் சம்பவிக்கப் போகிற ஒரு காரியத்தை காண்பிக்கப் போகிறேன்'' என்றார். இதை எழுதுவதற்கு அப்பொழுது அப்போஸ்தலர்களில் யோவானைத் தவிர வேறு யாரும் உயிரோடிருக்கவில்லை. எனவே அவர்கள் அவனை கி.பி.95 முதல் 96 முடிய பத்மு தீவில் போட்டு வைத்திருந்தார்கள். அவன் அதை எழுதி இவ்வாறு கூறுகிறான். ".... உங்கள் சகோதரனும் உபத்திரவத்தில் உங்கள் உடன் பங்களானுமாயிருக்கிற...'' 89. இப்பொழுது இங்கே யோவான் மகா உபத்திரவத்தைக் குறித்து பேசவில்லை. யோவான் கூறுகிற உபத்திரவம் மகா உபத்திரவ காலம் அல்ல, அது சபைக்கு நேரிடாது. மகா உபத்திரவம் யூதருக்குத் தான் நேரிடப் போகிறது; அது சபைக்கு நேரிடப் போகிறதில்லை. எனவே, எனவே அது மகா உபத்திரவ மல்ல, உபத்திரவம் மட்டுமே. 90. இப்பொழுது 10ம் வசனம்: “ கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காள சத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்" “ கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்...'' 91. நீங்கள் முதலாவதாக ஆவிக்குள்ளாகாமல் உங்களால் நன்மையான தொன்றையும் செய்ய முடியாது. தேவனால் அது வரைக்கிலும் உங்களை உபயோகிக்க முடியாது. ஆவிக்குள்ளாக நீங்கள் முதலில் எதையும் செய்யும் வரையிலும், உங்கள் முயற்சிகளெல்லாம் வீணாக இருக்கிறது. ''நான் பாடினால் ஆவிக்குள்ளாகப் பாடுவேன், நான் ஜெபித்தால் ஆவிக்குள் ஜெபிப்பேன்'' என்று பவுல் கூறினான். நன்மையான எந்தவொன்றும் உங்கள் மூலமாக வருகிறதென்றால், அது எனக்கு ஆவியால் வெளிப்படுத்தப்பட்டு, (வார்த்தையினால் உண்டாகிற விளைவுகளினால் வார்த்தை பிரத்தியட்சமாகி), வார்த்தையினால் அது உறுதிப்படுத்தப்பட வேண்டும். 92. இதையே இன்னொரு விதமாகக் கூறுவோமெனில், “ இயேசு கிறிஸ்து தன் வார்த்தையில், நான் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவேனெனில், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவேன்'' என்று வாக்களித்துள்ளார் என்று நான் கூறுவேனாகில், அப்பொழுது, நான் செய்ய வேண்டிய முதல் காரியமென்னவெனில், நான் மனந்திரும்ப வேண்டும். அது உண்மையானது தான் என்பது எனக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்பிறகு நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். அப்பொழுது ஏற்படும் விளைவு என்னவெனில், நான் பரிசுத்த ஆவியைப் பெறுதலேயாகும். 93. நான் சுகவீனமாயிருக்கிறேனென்றால், எனக்கு அவர் செய்துள்ள வாக்குத்தத்தம் என்னவெனில், நான் விசுவாசித்து, சபையின் மூப்பர்களை வரவழைத்து, அவர்கள் எனக்கு எண்ணெய் பூசி ஜெபித்தால், விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் என்பதேயாகும். "கர்த்தாவே, நான் உம்முடைய கட்டளையைப் பின்பற்றுகிறேன், மூப்பன் ஒருவன் எனக்காக எண்ணெய் பூசி ஜெபிக்கட்டும்'' என்று நீங்கள் கூறுவீர்களானால், அப்பொழுது அதுவே போதுமான தாயிருக்கிறது, தொடர்ந்து அவ்வாறு செல்லுங்கள், எல்லாம் சரியாகிவிடும். 94. நீங்கள் ஒருவேளை, 'ஓ! எவ்விதத்திலும் ஒரு வித்தியாசத்தையும் உணரவில்லை'' என்று கூறலாம். தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசுவை தேவன் உலகத்தோற்றத்திற்கு முன்னரே பலியிட்டு விட்டார். தேவனுடைய சிந்தையில் இயேசு பலியிடப்படுவது ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. நானோ அல்லது நீங்களோ அப்பொழுது இங்கே இருக்கவில்லை. ஆனால் தேவனுடைய புத்தகத்தில் நம்முடைய பெயர்கள் எப்பொழுதாகிலும் இடம் பெற்றிருந்திருக்குமானால், அது உலகத்தோற்றத்திற்கு முன்னரே இடம் பெறும்படி செய்யப்பட்டு விட்டது. 95. தேவன் எதையாகிலும் உரைக்கிற பொழுது, அது சம்பவித்தாக வேண்டும். ஆகவே, தேவன் விதிக்கிற யோக்கிய தாம்சங்களை நீஙகள் பூர்த்தி செய்வீரென்றால், தேவன் தாமே பிரத்தியட்சமாகி, மீதமுள்ளதை அவர் பொறுப்பெடுத்துக் கொள்வார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்களோ, அது முடிந்து போன ஒரு கிரியை என்று முன்னேறிச் செல்லலாம். ஓ! இது அற்புதமாக இல்லையா? ஓ, என்னே! எண்ணிப் பாருங்கள்! தேவனிடம் கூறுங்கள்... தேவன் கூறினார், ''நீங்கள் இன்னின்னதைச் செய்யுங்கள், நான் இதைச் செய்வேன்'' என்று. நல்லது, நான் போய் இதைச் செய்தால், தேவனும் அதைச் செய்தாக வேண்டும். 96. இப்பொழுது பிசாசு கூறுகிறான், “ பார்த்தாயா, அவர் தாமதிக்கிறாரே'' என்று. 97. அது எந்த வித வித்தியாசத்தையும் ஏற்படுத்தி விடப் போகிறதில்லை. தானியேல் ஒரு தடவை ஜெபித்த பொழுது, தூதன் அவனிடம் வந்து சேருவதற்கு 21 நாட்கள் தாமதமாயிற்று. ஆயினும் தானியேலோ மனம் தளர்ந்துவிடவில்லை. எப்படியும் அவர் வருவார் என்று அவன் அறிந்திருந்தபடியினால், அவன் அவர் வருகிற வரையிலும் காத்திருந்தான். அது உண்மை . ஓ! அப்பொழுது தான் நீங்கள் விசுவாசத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இதை நாம் பெற்றுக் கொண்டால், உடனே சுகமளித்தல் ஆராதனை வைத்துக் கொள்வோமல்லவா? அது விசுவாசத்தினால் உண்டானது. ஆனால் நமக்கு ஆத்துமாவை குணமாக்கும் ஆராதனை, உள்ளான மனிதன் குணமடைவதற்காக தேவையாயிருக்கிறது. ஏனெனில், அதுதான் நிலைத்திருக்கப் போகிறது. நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறீர்கள், நித்திய ஜீவனானது மறைந்து போவதில்லை, அது முதுமை அடைவதும் இல்லை. அது மாறாமல் நிலைத்திருக்கிறது. 98. எதுவும் சம்பவிக்கும் முன்பு யோவான் ஆவிக்குள்ளானான். முதலாவது அவன் செய்ததென்னவென்றால், அவன் பத்மு என்னும் தீவில் இருந்தான். (அவன் செய்ததெல்லாம் இது தான்) “ நான் ஒரு சத்தத்தைக் கேட்டேன்'' என்று கூறினான். மற்றும் ஏனைய காரியங்களை அவன் செய்தான். ஆனால் எதுவும் சம்ப விக்கும் முன்பாக அவன் முதலில் ஆவிக்குள்ளானான். உங்களு டைய வேதாகமத்தில் நீங்கள் கவனிப்பீர்களானால், ஆவி (ஆங்கில வேதாகமத்தில் Spirit என்பது கொட்டை எழுத்துக்களில் உள்ளது - மொழி பெயர்ப்பாளர்) என்பது பெரிய எழுத்துக்களில் எழுதப் பட்டுள்ளது - பரிசுத்த ஆவியானவர். ஆமென்! அவன் ஆவிக்குள்ளானான். ஓ! அது அற்புதமானது என்று கருதுகிறேன். '... கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்...' 99. எந்த நாளில்? கர்த்தருடைய நாளில், இப்பொழுது, ஒரு பெரிய விவாதம் இதைப் பற்றி உள்ளது? ஒரு நிமிடம் நாம் அதை வாயடைப்போம். 100. இன்று காலையில் நாம் கூறியபடி, சிலர் மத்தேயு சுவிசேஷம் 16ம் அதிகாரத்தின் வெளிப்பாடு “ பேதுரு'' என்பதாகும் என்று கூறுகிறார்கள். கத்தோலிக்க சபையானது, “ அவர் தன் சபையை பேதுருவின் மேல் கட்டினார்; பேதுரு தான் முதலாவது போப் ஆவார்'' என்று கூறுகிறது. பேதுரு போப்பாக இருந்து கொண்டு எவ்வாறு திருமணம் செய்தவராக இருக்க முடியும்? பார்த்தீர்களா? ''பேதுரு ரோமாபுரிக்குச் சென்று, அங்கே மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்'' என்றும் கூறுகிறார்கள். வரலாற்றிலோ அல்லது வேறு எதிலோ பேதுரு ரோமாபுரிக்குச் சென்றான் என்பதை நிரூபிக்கும் சான்று ஒன்றை நீங்கள் எனக்குச் சொல்லுங்கள் பார்க்கலாம். பேதுரு ரோமாபுரிக்கு செல்லவில்லை, பவுல் தான் சென்றான். அது தான் சரி. 101. எனவே இந்த எல்லா தவறான போதகங்களும் உள்ளே நுழைந்தவைகளாகும். பாருங்கள்? ஆனால் இன்றைக்கு ஜனங்கள்... நீங்கள் போகிற இடமெங்கும் அவர்கள்... ஏதோ ஒரு சபையானது, அவருடைய கையில் கடாவப்பட்டிருந்த ஆணிகளில் ஒன்று தன்னிடம் இருப்பதாக கூறிக் கொள்ளுகிறது. இவ்வாறான ஆணிகள் எத்தனை தங்களிடம் உள்ளன என்று அவர்கள் இன்று கூறிக் கொள்ளுகிறார்கள்? பத்தொன்பது ஆணிகள். அவர்களிடம் எலும்புகள் உள்ளன. அவருடைய அங்கியின் துண்டுகள் தங்களிடம் உள்ளன என்று கூறுகிறார்கள். அவைகளெல்லாம் நம்மிடம் இல்லை. நமக்கு அவைகள் தேவையுமில்லை. கிறிஸ்து உயிரோடிருக்கிறார்! அவர் நமக்குள் இருக்கிறார். அவர் ஒன்றும் ஏதோ ஒரு ஆணியிலோ, ஒரு துண்டுத் துணியிலோ, அல்லது அவருடைய எலும்பு என்று அவர்கள் உரிமைப் பாராட்டும் ஒரு எலும்புத் துண்டிலோ இருக்கவில்லை. அவர் ஜீவிக்கிற தேவனானவர், அவர் இப்பொழுது நமக்குள் ஜீவித்து, தம்மை பிரத்தியட்சப்படுத்திக் கொண்டிருக்கிறார். நினைவுச் சின்னமாக நம்மிடையே ஒரேயொன்று தான் உள்ளது, அதுவே அவருடைய மரணத்தை நினைவு கூருதலுக்காக உள்ள கர்த்தருடைய இராப்போஜனமாகும். ஆனால் கிறிஸ்துவைப் பொருத்தமட்டில், அவர் நம்முடன் இருக்கிறார், அவர் நமக்குள் இருக்கிறார். அதைத் தான் நாம் உலகுக்கு (பரிசுத்த ஆவியானவரின் மகிமை) அசைவாட்டிக் காண்பிக்க விரும்புகிறோம். ஒளியானது மறைந்து போகிற வரையிலும் அதை அசைவாட்டிக் கொண்டிருங்கள். அது சரிதான். 102. எனவே, நாம் சாலையின் வேறு பக்கத்தை எடுத்துக் கொண் டோம் என்பதை நீங்கள் பாருங்கள். இவ்வாறே இருக்க நான் எப்பொழுதும் முயன்றதுண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். கர்த்தர் எப்பொழுதும் அதை எனக்கு வெளிப்படுத்தியே இருக்கிறார். சாலையின் தீவிர வலது ஓரமும், தீவிர இடது ஓரமும் உள்ளன. ஆனால் சாலையின் நடுவில் சத்தியமானது இருக்கின்றது. பெருவழி ஒன்று உண்டாயிருக்கும் என்பதாக அவர் கூறியதைப் பற்றி ஏசாயாவில் நீங்கள் கவனித்தீர்களா? அது ஏசாயா 35ல் உள்ளது. ''பரிசுத்தத்தின் பெருவழிப்பாதை, பரிசுத்தத்தின் பெரு வழிப்பாதை” என்ற பாடலை நமது மதிப்பிற்குரிய நசரேய சபைச் சகோதரர்கள் பாடுவது உங்களுக்கு ஞாபகமிருக்கும். சரியானபடி உங்கள் வேதத்தை நீங்கள் வாசிப்பீர்களானால், அங்கே, பரிசுத்தத்தின் பெருவழி'' (Highway of holiness) என்று சொல்லப் படவேயில்லை. வேதம் கூறுகிறது: ''... இங்கே பெருவழி ஒன்று உண்டாயிருக்கும், ஒரு வழியும் உண்டாயிருக்கும்; அது (அது “ பரிசுத்தத்தின் பெருவழி'' என்னப்படும் என்றில்லாமல்) பரிசுத்த வழி என்னப்படும்'' பெரு வழி உண்டாயிருக்கும் என்ற வார்த்தைக்குப் பிறகு கூட்டிடைச் சொல் வந்து அந்த வார்த்தை முடிவடைகிறது. அதற்கு பிறகு, “ ஒரு வழி'' என்பது வருகிறது. “ அங்கே பெருவழி ஒன்று உண்டாயிருக்கும்; ஒரு வழியும் உண்டாயிருக்கும், அது பரிசுத்த வழி என்னப்படும்...''. அது பரிசுத்தத்தின் பெருவழி என்று கூறப்படவேயில்லை. 103. ஒரு வழியானது, ஒரு சாலையானது போடப்படுகிறது. .... ஒரு நல்ல சாலையானது உருவாக்கப்படுகிறது. அச்சாலையின் உயர்ந்த பாகமானது அதின் நடுவில் தான் உள்ளது. ஏனெனில், அது எல்லா குப்பைகூளங்களும் கழுவப்பட்டு சாலையில் இரு ஓரங்களுக்கும் போய்விடும்படி செய்துவிடுகிறது. அது மனிதன் உண்மையிலேயே கிறிஸ்துவண்டை வருகையில், அவன் தனது கண்கள் கிறிஸ்துவில் மாத்திரம் மையம் கொள்ளும்படி பார்த்துக் கொள்கிறான். அவன் சற்று உணர்ச்சிவசப்பட்டவனாக இருந்தால், அவன் ஒரு மூடபக்தியுள்ளவனாக ஆகிவிடுகிறான். அவனோ சற்று குளிர்ந்து போன நிலையில் இருப்பானென்றால், சாலையின் இன்னொரு ஓரத்திற்கு போய்விடுவான், அவன் குளிர்ச்சியான ஒரு வெள்ளரிக்காயாக ஆகிவிடுவான், சாலையின் மற்ற ஓரத்திற்குப் போய்விடுவான். அவனது லௌகீக ஞானம், பாருங்கள். ஆனால் பிரதானமான காரியமானது சாலையின் நடுமையத்தில் உள்ளது, அங்கே, உங்களை அனலுள்ளவர்களாய் வைத்து அசையச் செய்ய போதுமான அளவுக்கு உங்களுக்குள் ஆவியானது உள்ளது. ஆமென்! அது தானே ஆவியானவரின் கீழ்ப்படிதலுக்குள் உங்களை நீங்கள் வைத்துக் கொள்ள போதுமானபடி அறிந்து கொள்ளச் செய்கிறது, அவர் ஆவியானவர் அசைகிறபடி நீங்கள் அசையும்படி செய்கிறார். அவர் அசைவாடப் போகும் வரையிலும் அல்ல, அல்லது அதற்குப் பிறகு அல்ல, ஆவியானவர் அசைகிறபடி நீங்களும் அப்பொழுது அசைவதற்காக. 104. கத்தோலிக்க சபையானது, “ வெளிப்பாடானது பேதுரு வாகும்'' என்று கூறியது. 105. பிராடெஸ்டெண்ட் சபை, 'அது கிறிஸ்துவாயிருக்கிறது'' என்று கூறியது 106. ஆனால் வேதமோ, 'தேவன் கிறிஸ்துவைப் பற்றி அளிக்கும் வெளிப்பாட்டின் மேல் அது கட்டப்பட்டுள்ளது'' என்று உபதேசிக்கிறது. 107. ''நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து". 108. “ யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, ஒரு மனிதனோ, ஒரு வேதக்கல்லூரியோ, அல்லது ஒரு குருமடமோ அல்லது வேறு எதுவுமோ இதை உனக்குப் போதிக்கவில்லை. ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப் படுத்தினார். நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற் கொள்வதில்லை". 109. இரண்டு வித்தியாசமான கருத்துக்கள் ஏற்படுகிற இன் னொரு இடத்திற்கு நாம் வருகிறோம். நான் ஒருவேளை தவறாயிருக்கலாம். நான் தவறாயிருந்தால் தேவன் என்னை மன்னிப்பாராக. ஆனால் நான் ஏழாம் நாள் சபைக்காரர்களோடு கருத்தொருமித்துப் போகவில்லை. அச்சபையார் ''கர்த்தருடைய நாளில் என்று யோவான் கூறியது வாரத்தின் ஏழாம் நாளைக் குறிக்கிறது'' என்று கூறுகிறார்கள். யோவான் கர்த்தருடைய நாளில் என்று குறிப் பிடுவது ஓய்வு நாளைக் குறித்துத்தான் என்று ஏழாம் நாள் சபைச் சகோதரர்கள் மற்றும் அவர்களைச் சேர்ந்த அநேகரும் கூறுகிறார்கள். கிறிஸ்தவ சபையானது, “ வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக் கிழமை'' தான் கர்த்தருடைய நாள் என்று கூறுகிறார்கள். பிராடெஸ்டெண்டு சபையினர், இன்றளவும், ஞாயிற்றுக் கிழமையைத் தான் கர்த்தருடைய நாள் என்று குறிப்பிடுகிறார்கள் என்பதை நாம் அநேக தடவைகளில் கவனித்திருக்கிறோம். அவ்வாறு கூறுவதெல்லாம் வேத பூர்வமானதல்ல. வேதத்தின்படி, ஞாயிற்றுக்கிழமையானது வாரத்தில் முதல் நாள் தான், அது கர்த்தருடைய நாளல்ல. அது ஏழாம் நாளாகிய ஓய்வு நாளுமல்ல. கர்த்தருடைய நாள் என்பது ஞாயிறு அல்லது சனி ஆகிய இவ்விரண்டு நாட்களில் ஒன்றாக இருப்பது கூடாத காரியம். ஏனெனில் யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷித்தப் புத்தகத்தை எழுத இரண்டு ஆண்டுகள் பிடித்தது. ஏழாம்நாளோ அல்லது வாரத்தின் முதல் நாளோ என்று இருக்குமானால், அக்காலக் கட்டத்திற்குள் அநேகமான ஏழாம் நாட்களும், வாரத்தின் முதல் நாட்களும் வந்து போயிற்றே. 110. வேதத்தின் வெளிப்படுத்தின விசேஷமானது கி.பி. 95 முதல் 96 முடிய உள்ள இரண்டாண்டுக் காலத்தில் எழுதப்பட்டது. அது தான் கர்த்தருடைய நாளாகும். கர்த்தருடைய நாள் என்பது வசனம் என்ன கூறுகிறதோ அதின்படியேயாகும். அது அப்படியேதான் இருக்க வேண்டும். யோவானானவன் கர்த்தருடைய நாளுக்குள் ஆவியில் கொண்டு செல்லப்பட்டான். இது மனிதனின் நாளாகும். ஆனால் கர்த்தருடைய நாளானது இனி வருகிறதாயிருக்கிறது. வேத வாக்கியங்களை படிக்கையில், அவன் கர்த்தருடைய நாளில் இருந்தான் என்றும், அவன் ஆவியில் எடுத்துக் கொள்ளப்பட்டு, கர்த்தருடைய நாளுக்குள் கொண்டு செல்லப்பட்டான் என்பதாகப் பார்க்கிறோம். ஆமென்! அது சரியே. அவன் கர்த்தருடைய நாளில் இருந்தான் என்பதைப் பாருங்கள். வேதமானது கர்த்தருடைய நாளைப் பற்றி பேசுகிறது. அது சம்மந்தமான அநேக வாக்கியங்களை நாம் சிறிது பார்க்கலாம். 111. முதலாவதாக, ஓய்வு நாளானது, நாம் அதைப் பற்றி பேசுகையில், ஒரு குறிப்பிட்ட நாளை ஒய்வு நாளாக ஆசரித்தல் அல்ல என்று பார்க்கிறோம். சனிக்கிழமையை ஓய்வு நாளாக ஆசரிக்க நமக்கு கட்டளையேதுமில்லை. புதிய ஏற்பாட்டில், வாரத்தின் முதலாம் நாளை ஓய்வு நாளாக ஆசரிக்க நமக்கு கட்டளையேதுமில்லை. எபிரேயர் நிரூபம் 4ம் அதிகாரத்தில், வேதமானது, "யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட் படுத்தியிருந்தால், பிறகு அவர் வேறொரு நாளைக் குறித்து சொல்லியிருக்க மாட்டாரே'' என்று கூறுகிறது. அது சரிதான். தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுதல் அல்லது ஓய்வு ஆசரித்தல் காலம் இனி வருகிறதாயிருக்கிறது. விசுவாசித்த நாமும் கூட அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்து, யோவான் செய்தது போல, நம்முடைய கிரியைகளிலிருந்து ஓய்ந்திருக்கிறோம். 112. கவனியுங்கள்! ஓ, கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள். நான் மிகவும் குதூகலமான உணர்வைப் பெறுகிறேன். 113 . ஓய்வு நாளைக் குறித்து கவனியுங்கள். அவர் பூமியை ஆறு நாட்களுக்குள் உண்டாக்கி, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். அதன் பிறகு ஒருபோதும் அவர் இனிமேலும் பூமியில் கட்டி உண்டாக்க அவர் திரும்பி வரவேயில்லை. பின்பு அவர் மக்களிடம் ஒரு நினைவு கூருதலாக அதை அளித்தார். இப்பொழுது அதை நீங்கள் ஆசரிக்க முடியாது. ஏனெனில், இங்கே நீங்கள் அதை ஆசரிக்கையில், பூமியின் மறு பக்கத்தில் அப்பொழுது ஞாயிற்றுக்கிழமையாகி விடுகிறது. பாருங்கள்? இஸ்ரவேல் என்ற ஒரு தேசத்திற்குள், ஒரே பிரதேசத்திற்குள், ஒரே மணி வேளையில் இருந்த மக்களுக்கே அது அளிக்கப்பட்டது என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது. ஆனால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது. “ விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலகத்தோற்ற முதல் முடிந்திருந்தும்... (நான் இங்கே எபிரேயர் 4ம் அதிகாரத் திலிருந்து குறிப்பிடுகிறேன்). "...ஏழாம் நாளைக் குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார்”. "... தாவீதின் சங்கீதத்திலே.... பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்....'' (குறித்துக் கொள்கிறவர்கள் எபிரேயர் 4 குறிக்கவும்) இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களை கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகு காலத்திற்குப் பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்”. “ யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், வேறொரு நாளைக் குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே” “ ... இளைப்பாறுகிற (ஓய்வு நாளை ஆசரித்தல்) காலம் இனி வருகிறதாயிருக்கிறது." 114. "இளைப்பாறுதல்' என்ற வார்த்தை . “ சாபத்'' (Sabbath) நமக்கு ஒரு விசித்திரமான வார்த்தையாயிருக்கிறது, அதற்கு, “ ஒய்வு'' என்று அர்த்தம்; அது எபிரெய பதமாகும், அதற்கு “ ஓய்வு'' நாள் என்பதாகும். ஒரு சாபத் நாள், வேலைச் செய்யாமல், ஓய்வு கொள்ளுதல். யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட் படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக் குறித்துச் சொல்லியிருக்க மாட்டாரே" தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது. ஏனெனில் அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்தது போல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான். 115. நாம் இளைப்பாறுதலில் பிரவேசித்து விடுகிறோம். எனவே, நாம் மீண்டும் வாரத்தின் முதல் நாளுக்கு திரும்பிச் சென்று, மீண்டும் நமது கிரியைகளை ஆரம்பிக்கிறதில்லை. இயேசுவும் மலைப் பிரசங்கத்தில், ''கொலை செய்யாதிருப்பாயாக என்று பூர்வத் தாருக்கு உரைக்கப்பட்டது, ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்பவன் அவனை ஏற்கனவே கொலை செய்து விட்டான். விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்''. ஓ, அது கட்டளையாயிருக்கிறது. ''நான் உங்களுக்கு சொல்லுகிறேன், ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று'' என்கிறார். அது சரியல்லவா? 116. எனவே ஓய்வு நாள் போன்றதெல்லாம் நினைவு கூருதலான காரியங்கள் ஆகும். அவைகள் யாவும் அடையாளங்களுக்காக இருந்தவை, உண்மையானது வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. இயேசுவும் மலைப்பிரசங்கத்தை முடித்துவிட்டு, மத்தேயு 11ம் அதிகாரத்தில் இவ்வாறு கூறுகிறார். “ வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். (அது உண்மைதானே). மத். 11:28-29 ''வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல் லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு ஆத்துமாவில் இளைப்பாறுதல் தருவேன்'' (ஒரு நாள் அல்லது பத்து நாட்கள், அல்லது ஐந்து ஆண்டுகள், 35 ஆண்டுகள் அல்லது 50 ஆண்டுகள், அல்லது 90 ஆண்டுகள் வருத்தப்பட்டு பாரஞ் சுமந்திருந்தால், அதினால் நீங்கள் களைப்படைந்து சோர்ந்து போயிருந்தால், நீங்கள் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். பாவ பாரங்கள் யாவையும் நான் உங்களை விட்டு அகற்றி விடுவேன். நான் உங்களில் பிரவேசித்து, உங்களுக்கு பரிபூரண இளைப்பாறுதலையும், திருப்தியையும் தருவேன்'' என்கிறார்). 117. அந்த இளைப்பாறுதலானது அல்லது ஓய்வானது என்ன? இது என்ன என்பதைப் பற்றி நாம் சிறிது தீர்மானிப்போமாக. சிலர் இவ்வாறு கூறுகிறார்கள்; “ ஏன்? நீங்கள் போய் ஒரு சபையில் சேர்ந்து கொள்ளுங்களேன்'' என்கிறார்கள். அது சரியல்ல. சிலர், “ உன் பெயரை சபையின் புத்தகத்தில் பதிவு செய்து கொள்'' என்கிறார்கள். அதுவும் சரியல்ல. “ நல்லது, ஒரு குறிப்பிட்ட விதமான தண்ணீர் ஞானஸ்நானத்தை எடுத்துக் கொள்'' என்கிறார்கள். அதுவும் சரியல்ல. எனவே நாம் முதலில் இது என்ன என்பதைப் பற்றி தீர்மானிப்போமாக. நாம் இங்கே காத்திருக் கையில் சற்று இதைப் பற்றி இங்கேயே பார்த்து விடுவோமா? யோவான் எங்கே சென்றான் என்பதைப் பற்றி பார்ப்போம். எந்த விதமான நாளுக்குள் அவன் சென்றிருந்தான்? 118. பூமியில் இயேசு மரித்த பொழுது, பூமியில் அவரது கிரியைகள் முடிவுற்ற பொழுது, அவர் எங்கே பிரவேசித்தார். 119. நாம் இப்பொழுது ஏசாயா 28ம் அதிகாரம் 8ம் வசனத்திற்குப் போவோம். அது ஏசாயா 28:8 என்று நான் நம்புகிறேன். தீர்க்கதரிசி 28ம் அதிகாரத்தில் கூறியுள்ளவைகளைப் பற்றி படிப்போம். அதில் எழுதியுள்ள காரியம் சம்பவிக்கிறதற்கு 720 ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்கதரிசி இவைகளை முன்னுரைத்தான். உண்மையான ஓய்வு நாள் அல்லது இளைப்பாறுதலானது என்ன என்பதைப் பற்றி எத்தனை பேர் அறிய விரும்புவீர்கள்? இங்கே அது உள்ளது. இங்கே தான் தீர்க்கதரிசி அதைப் பற்றி பேசியுள்ளான், அது எங்கே நிறைவேறிற்று என்பதை நான் உங்களுக்கு காண்பிப்பேன். கவனியுங்கள், ஏசாயா 28:8. ''.... எல்லாம்... (தீர்க்கதரிசி இந்நாட்களைப் பற்றி தீர்க்க தரிசனமாக கூறுகிறான்) "போஜன பீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத் தினாலும் (புகைக்கிறவர்களும், மது அருந்துகிறவர்களும், பொய் சொல்லுகிறவர்களும், திருடுகிறவர்களும் கர்த்தருடைய இராப்போஜனத்தை எடுக்கிறார்கள்) நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை. “ அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்?” இந்நாளில் நீங்கள் யாருக்கு அறிவைப் போதிப்பீர்கள்? 120. இன்று எத்தனைப் பேர் பில்லி கிரகாமின் பிரசங்கத்தைக் கேட்டீர்கள்? அவர் அருமையானதொரு பிரசங்கத்தைச் செய்தார். எவ்வாறு மக்கள் ஒரு பொய்யை விசுவாசித்து, அப்பொய்யிலேயே தொடர்ந்து நிலைத்திருந்து, தாங்கள் செய்வது சரியானது என்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறதைப் பற்றித்தான் அவர் பிரசங்கித்தார். அமெரிக்காவில் சிகரெட்டைப் பற்றி, ''சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி, புகைப்பிடிக்கும் மனிதனின் சிகரெட்'' என்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது; இது பிசாசின் பொய்களில் ஒன்றாக இருக்கிறது, இதை அமெரிக்க மக்கள் நம்பி, அதனால் அவர்கள் மடையராகி, தங்கள் நுரையீரலைக் கெடுத்துக் கொள்கிறார்கள் என்று பில்லிகிரகாம் பிரசங்கித்தார். அப்படிப்பட்ட மனிதன் ஒரு மடையன். சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி என்று ஒன்றும் இருக்கவில்லை. ஒரு சிந்திக்கும் மனிதன் அப்படிப் பட்டவைகளை உபயோகிப்பதில்லை. 121. “ ஓயர்டெல்'ஸ் 92க்கு வெளியே ஜீவன் இல்லை என்று ஒரு மதுவைக் குறித்துக் கூறுகிறார்கள். கிறிஸ்துவுக்கு வெளியே ஜீவன் இல்லவே இல்லை, அதுவே உண்மையான ஜீவனாக உள்ளது. ஆடவரும், பெண்டிரும் அதை அருந்தத்தக்கதாக அவர்களை தூண்டுவது எது? ஏனெனில், தேவனால் தாகந்தீர்த்துக் கொள்ளத்தக்கதாக, தேவனைப் பற்றிய தாகத்தை தேவன் அவர்களுக்குள் வைத்திருக்கிறார், ஆனால் அவர்களோ, அத் தாகத்தை உலகத் துக்குரிய காரியங்களினால் தீர்த்துக் கொள்ள முயலுகிறார்கள். எனவே தான் நமக்கு அவ்வகையான காரியங்கள் உள்ளன. அவர்களில் காணப்படும் தேவனுக்காக உள்ள தாகத்தை, அவர்கள் தவறான வழிகளில் தீர்த்துக் கொள்ள முனைவதால், அவர்கள் அவ்வாறு செயல்படுகிறார்கள், பிசாசும் அவர்களுக்கு ஜீவனுக்குப் பதிலாக மரணத்தையே கொடுக்கிறான். ....போஜன பீடங்களெல்லாம் வாந்தியினால் நிறைந்திருக்கிறது.... 122. மதகுருமார்களும் மற்றும் சம்மந்தப்பட்ட ஏனையோரும், அதைப் பற்றி பேசி, “ மனமகிழ்வுக்காக சிறிதளவு சுத்தமான வேடிக்கை விளையாட்டு நமக்கு இருக்கலாம்” என்று கூறுகிறார்கள். அவ்வாறான ஒரு காரியம் இருக்கலாகாது. “ அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால் மறந்தவர்களுக்கும், மூலை மறக்கப் பண்ணப்பட்டவர்களுக்குமே (நாம் இனி குழந்தைகளல்ல) கற்பனையின் மேல் கற்பனையும், கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள். பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப் பண்ணத்தக்க இளைப்பாறுதல்; (எது? ஓய்வு நாள் ஆசரித்தல்!) (வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்...) இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள். 123. எப்பொழுது அது சம்பவித்தது? இது உரைக்கப்பட்டு 720 ஆண்டுகள் கழித்து, பெந்தெகொஸ்தே என்னும் நாளில், மக்கள் மேல் பரியாச உதடுகள் வந்தமைந்து, அவர்கள் யாவரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, அந்நிய பாஷைகளில் பேசிய பொழுது, பரிசுத்த ஆவியானவர் அவர்களது ஜீவியங்களை ஆட்கொண்ட போது, அவர்கள் லௌகீக கிரியைகளிலிருந்து ஓய்ந்திருந்தார்கள். பவுல் எபிரெயர் 4ம் அதிகாரத்தில் “ தேவன் தனது சிருஷ்டிப்பின் கிரியை முடிந்த பிறகு தனது ஓய்வில் பிரவேசித்தது போல, நாமும் லௌகீக கிரியைகளிலிருந்து விடுபட்டு அவரது ஓய்வுக்குள் பிரவேசித்திருக்கிறோம்'' என்று கூறியுள்ளான். அங்கே தான் உங்களுடைய உண்மையான சரியான ஓய்வு நாளானது உள்ளது. 124. எனவே பவுல் கூட அந்த இளைப்பாறுதலின் ஆவிக்குள்ளாக பிரவேசித்தான். அவன் பரிசுத்த ஆவியினாலே கர்த்தருடைய நாளுக்குள்ளாக எடுத்துச் செல்லப்பட்டான். 125. நமக்கு ஏன் யுத்தங்கள் உண்டாயின? நமக்கு ஏன் தொல்லைகள் உண்டாயின? ஜாதிக்கு விரோதமாக ஜாதி ஏன் இருக்கின்றன? ஜீவாதிபதியாக இயேசு வருகிறார், அவர்கள் அவரைக் கொன்றனர். 126. இங்கே சில வாரங்களுக்கு பிறகு, ஏன் இப்பொழுதும் கூட, அங்கே ரெயின்டீர்களும் (ஒரு வகை மான் - மொழி பெயர்ப்பாளர்) சாண்டா கிளாஸ்களும், ஜிங்கிள் பெல்ஸும் மற்றும் அங்கே தொங்கிக் கொண்டிருக்கிற ஏனைய காரியங்களும் உள்ளன, அவைகள் அஞ்ஞானப் பண்டிகையாகும். அது கத்தோலிக்க சபையின் கோட்பாடுகளில் ஒன்றாகும். மக்கள் பெரிய விலைகள் கொடுத்து, அன்பளிப்புகளை வாங்கி, ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை கொடுக்கிறார்கள். அவ்விதமான காரியங்கள் அஞ்ஞான கொள்கையாகும். கிறிஸ்துமஸ் என்பது உண்மையில் ஒரு தொழுகையின் நாளாகும். 127. இப்படியாக, கிறிஸ்துவானவர் டிசம்பர் 25ம் தேதியில் பிறக்கவில்லை. அந்நாளில் அவர் பிறந்திருக்க முடியாது. யூதேயாவுக்கு நீங்கள் எப்பொழுதாவது போனால், அங்கேயுள்ள மலைகள் (டிசம்பர் மாதத்தில்) இந்நாட்டில் உள்ளதை விட மிக மோசமான அளவில், முழுவதும் பனியினால் நிறைந்திருக்கும். இயேசு, இயற்கையானது பூத்துக் குலுங்கும் ஏப்ரல் மாதத்தில் தான் பிறந்தார். 128. ஆனால் அது அவர்களுடைய சடங்காச்சாரமாக உள்ளது. நாம் ஏன் இக்காரியங்களைச் செய்கிறோம்? ஏனெனில், நாம் தேவனுடைய கற்பனைகளை விட்டுவிட்டு மனுஷனுடைய பாரம் பரியங்களை பின்பற்றுகிறோம். அப்பொழுது அவ்விதமான ஒரு காரியம் பொருட்டாக இருக்கிறதில்லை. ஆனால் அவர்கள் அப்பண்டிகை நாளை ஒரு வியாபார ரீதியிலான நாளாக ஆக்கிவிட்டார்கள். அவ்விதமானதொரு காரியத்தைச் செய்வது அவர்களுக்கே அவமானகரமானதாகவும், வெட்கக் கேடானதாகவும் உள்ளது. அது ஒரு அஞ்ஞானப் பண்டிகை! சாண்டா கிளாஸுக்கும் இயேசுவுக்கும் என்ன சம்மந்தம்? ஈஸ்டர் முயலுக்கும், அல்லது ஒருவிதமானமை அல்லது ஏதோ ஒன்று பூசப்பட்ட கோழிக்கும், அல்லது ஒரு சிறிய வெள்ளை முயலுக்கும், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும் என்ன சம்மந்தம்? எவ்வாறு வியாபார உலகமானது உள்ளது என்பதை பார்த்தீர்களா? 129. எனவேதான், அவர்கள் இந்த பழைய ராக் அண்டு ரோல் புத்தகங்களையும், அசிங்கமான ஆபாசமான படங்களையும் விற்கிறார்கள். ஏனெனில் மக்களின் சுபாவமானது அவ்விதமான மூடத்தனமான காரியங்களுக்காக இச்சிக்கிறது. அவர்களுடைய உள்ளங்களில் ஏதோ தவறு இருக்கிறது, அவர்கள் ஒரு பொழுதும் தேவனோடு அந்த இளைப்பாறுதலில் பிரவேசித்து இவை களிலிருந்து ஓய்ந்திருக்கவில்லை. அவர்கள் அதற்குள் பிரவேசித்து, பரிசுத்த ஆவியைப் பெறும்போது, உலகத்தோடுள்ள சம்மந்தம் முடிவடைந்து, உலகிற்குரிய காரியங்களிலிருந்து பந்தமற்றுப் போகிறார்கள். 130. தேவன் அவனை மாற்றினார் (transmitted). பவுலைப் போல அவன் மூன்றாம் வானத்திற்குள் எடுக்கப்பட்டு அங்கேயுள்ளவைகளை அவன் கண்டான் என்று நான் நினைக்கவில்லை. விலையேறப்பெற்ற பரிசுத்த ஆவியானவர் சில வாரங்களுக்கு முன்பாக நாம் காணும்படியாக செய்ததை... அதாவது, நான் மரணத்தைப் பற்றி பயங்கொண்டிருந்தேன். பரிசுத்த ஆவியானவர் என்னை அங்கே எடுத்துக் கொண்டு போய் அது என்ன என்பதை காண்பித்தார். அதைக் குறித்த சாட்சியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். பின்பு நான் திரும்பி வந்தபோது, ''மரணமே உன் கூர் எங்கே?'' திரைக்கப்பால் என்ன இருக்கிறது என்பதைக் காண எடுத்துக் கொள்ளப்பட்டேன். திரைக்கப்பால் நாம் அங்கே வெறும் ஆவிகளாகவோ, அல்லது பூதங்களாகவோ இருக்கிற தில்லை; திரைக்கப்பால் ஒருபோதும் மரிக்காத, ஒருபோதும் வியாதிப்படாத இளமையான ஆண்களும், பெண்களுமாகவே இருப்போம் என்பதை கண்டு உங்களுக்குச் சொல்ல வேண்டி தேவன் என்னை திரும்பி வரப் பண்ணினார். அவ்விடத்திற்குள் நீங்கள் இழுத்துக் கொள்ளப்படுவீர்கள். மரணம் இனிமேல் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. 131. யோவான் பத்மு என்னும் தீவிலிருந்து, ஆவியினால் கர்த்தருடைய நாளுக்குள் எடுத்துச் செல்லப்பட்டான். இது மனிதனின் நாளாகும். இந்நாளில் மனிதன் சண்டையிடுகிறான், ஆனால் கர்த்தருடைய நாளானது வரப்போகிறது. அப்பொழுது, இந்த இராஜ்யங்களெல்லாம், கர்த்தருடையதும், அவருடைய கிறிஸ்துவுடையதுமான இராஜ்யமாகிவிடும். அப்பொழுது அந்த மகத்தான ஆயிரமாண்டு அரசாட்சி உண்டாயிருக்கும். கர்த்தருடைய நாள், அவருடைய வருகையின் நாள், அவருடைய நியாயத் தீர்ப்பு, அது கர்த்தருடைய நாளாயிருக்கும். 132. இது மனிதனுடைய நாளாயிருக்கிறது, எனவே தான் அவர்கள் உங்களை கடுமையாகக் கண்டனம் செய்து, தாங்கள் விரும்புகிறபடியெல்லாம் உங்களுக்குச் செய்து கொண்டிருக் கிறார்கள். ஆனால் ஒருவேளையானது வரப்போகிறது, அப்பொழுது .... இப்பொழுது அவர்கள் உங்களை உருளும் பரிசுத்தர் என்றும், மதவெறி பிடித்தவர்கள் என்றும் அழைக்கிறார்கள். ஆனால் ஒரு வேளையானது வருகிறது. அப்பொழுது அவர்கள் உங்களை அப்படியெல்லாம் கூப்பிடமாட்டார்கள். அவர்கள் அலறி, புலம்பி, உங்கள் பாதங்களில் விழுவார்கள். வேதத்தில் மல்கியா 4ம் அதிகாரத்தில், நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய், துன்மார்க்கர் எரிக்கப்பட்ட பிறகு உண்டாகும் அவர்களுடைய சாம்பலின் மேல் நடப்பீர்கள் என்றும், அந்த நாள் அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற் போகும் என்றும் கூறப் பட்டுள்ளது. “ நீதிமான்கள் வெளியே புறப்பட்டுப் போய் துன்மார்க்கரின் சாம்பலின் மேல் நடப்பார்கள்'' என்று வேதம் சரியாகவே கூறுகிறது. அது அவ்விதமாகத்தான் இருக்கிறது. திரும்பி அவர்கள் முளைத்தெழும்பாதபடி, அவர்களுக்கு அந்நாள் வேரையும் கொப்பையும் வைக்காமற் போகும். அவர்களுக்கு அவ்வாறு நிச்சயமாக சம்பவிக்கும். இப்பொழுது, இது மனிதனின் நாளாயுள்ளது (மனிதனின் செயல்கள், மனிதனின் கிரியைகள், மனிதனின் சபை, மனிதனின் யோசனைகள்). ஆனால் கர்த்தருடைய நாளானது வருகிறது. 133. யோவான் கர்த்தருடைய நாளில் ஆவிக்குள் இருந்தான். கர்த்தருடைய நாளில் அவன் ஆவிக்குள்ளாகியிருந்த போது, முதலாவதாக அவன் ஒரு சப்தத்தைக் கேட்டான். இப்பொழுது 10ம் வசனத்தை பார்ப்போம். "....கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்.... எக்காள சத்தம் போல பெரிதான ஒரு சத்தத்தை அவன் கேட்டான்...'' 134. இப்பொழுது நாம் ஒரு உவமையையும் விட்டு விட வேண்டாம். நாளை அதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்குமானால், எடுத்துக் கொள்ளலாம், பாருங்கள். நான் அதிகம் தாமதித்து விடாதபடிக்கு, யாராகிலும் ஒருவர் கடிகாரத்தைக் கவனித்துக் கொண்டிருங்கள். 135. நல்லது, இப்பொழுது, “ கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்'' என்பதை எடுத்துக் கொள்வோம். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். முதலாவதாக நீங்கள் செய்ய வேண்டிய காரியமானது என்ன? ஆவிக்குள்ளாகுங்கள்! இவ்வெளிப்படுத்து தல்களெல்லாம் உங்களுக்கு எவ்வாறு வரப்போகின்றது? ஆவிக்குள்ளாகுங்கள்! பரிசுத்த ஆவியை எவ்வாறு பெற்றுக் கொள்ளப்போகிறீர்கள்? ஆவிக்குள்ளாகுங்கள், ஆவிக்குள்ளாகுங்கள். 136. நீங்கள் பாவியாயிருந்த போது, நீங்கள் ஒரு நடன நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தால் அங்கு அந்தவிதமான ஆவிக்குள்ளா னீர்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் கைகளைத் தட்ட ஆரம்பித்து, பாதங்களை தரையில் தட்டி, முழங்காலுக்குக் கீழே கைகளால் தொட்டு, உங்கள் தொப்பியை தரையில் எறிந்து, சுற்றி சுற்றி வந்து, அவ்வாறு மூடத்தனமாக நடந்து கொண்டீர்கள். அவ்விதமான ஆவிக்குள்ளாக இருந்தீர்கள். நடனத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிராத ஒருவன் நடன நிகழ்ச்சிக்குப் போய், “ நல்லது, உங்கள் யாவருக்கும் அருமையான நல்ல தருணம் உண்டாயிருக்கிறது என நான் கருதுகிறேன்'' எனக் கூறுவதை உங்களால் கற்பனைச் செய்து பார்க்க முடிகிறதா? 137. அவர்கள் அவனைப் பார்த்து, 'நீ ஒரு வால்ஃப்ளவர், இங்கிருந்து வெளியேறு'' என்பார்கள். (வால்ஃப்ளவர் (Wall Flower) என்றால் 'ஒரு நடன நிகழ்ச்சிக்குச் செல்லும் ஒரு நபர், வெட்கத்தினால் அதில் கலந்து கொள்ள தயங்கி நிற்பது, அல்லது நடனமான ஒரு துணை இல்லாதிருப்பதினால் ஒதுங்கியிருந்தால், அவரை 'வால்ஃப்ளவர்' என்று மேலை நாடுகளில் அழைப்பர்மொழி பெயர்ப்பாளர்). 138. பந்து விளையாட்டுக்குப் போய் சும்மா உட்கார்ந்து கொண்டு, வேடிக்கை பார்த்து, அவ்விளையாட்டில் விளையாடுபவர் ஒரு ஓட்டத்தை எடுக்கையில், ''ஓ, அது ஒரு மிகவும் நல்ல ஒன்றுதான் எனக் கருதுகிறேன்'' என்று கூறினால், அந்த நபர் ஒரு பேஸ்பால் விளையாட்டில் ஆர்வம் கொண்டவரல்ல. அது பேஸ்பால் விளையாட்டிற்குரிய ஆவியில் இறங்குதல் அல்ல. யாரோ ஒருவர் பேஸ்பால் களத்தில் மட்டையாளர் எல்லா பேஸ்களையும் தொட்டு ஒரு ஓட்டத்தை எடுக்கும்படி பத்திரமான மட்டையடியைக் கொடுக்கையில், “ வ்யூ, என்னே! வெல்க!'' என்று எழும்பி கத்தினால், வேறு ஒருவருடைய தலையில் இருக்கும் தொப்பியை தட்டிக் கீழே தள்ளினால், ஒருவரும் ஒரு வார்த்தையும் அதைப் பற்றி சொல்ல மாட்டார்கள். 139. பின்பு, சபையில், நீங்கள் ஆவிக்குள்ளாகும் போது, எழும்பி நின்று, “ மகிமை, அல்லேலூயா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று சப்தமிட்டால், அப்பொழுது உட்கார்ந்திருக்கிற யாரோ ஒருவர், உங்களைப் பார்த்து, “ உருளும் பரிசுத்தர்'' என்று சொல்லுகிறார். 140. கர்த்தர் நம் யாவரையும் ஆசீர்வதிப்பாராக! ஒரு கேள்வியை நான் உங்களிடம் கேட்கப் போகிறேன். நாம் இவ்வாறு செய்கிறபடியினால், உருளும் பரிசுத்தர் எனப்படுவோமானால், அவ்வாறு நம்மை கேலி செய்கிறவர்கள் உருளும் அசுத்தராக இருக்கிறார்கள். உருளும் அசுத்தராக நான் இருப்பதை விட உருளும் பரிசுத்தராக இருப்பதையே நான் விரும்புகிறேன். (நீங்களும் அவ்வாறு இருக்க விரும்பவில்லையா?) நிச்சயமாக அவர்கள் உருளும் அசுத்தர்தான். 141. அவன் ஆவிக்குள்ளாய் இருந்தான். அவன் ஆவிக்குள்ளான போது, காரியங்கள் சம்பவிக்க ஆரம்பித்தது. பிறகு, அவன் அங்கு அடைந்த போது, ஒரு எக்காள சப்தத்தைக் கேட்டான். எப்பொழுதும் எக்காள சப்தமானது, ஏதோ ஒன்று நெருங்கி வருவதை அறிவிப்புச் செய்கிறதாயிருக்கிறது. ஒரு ராஜா வருவதற்கு முன்பாக, அவன் வருவது சமீபித்து விட்டால், அப்பொழுது எக்காளம் ஊதி அதை அறிவிப்பார். இயேசு நெருங்கி வருகையில் அவர் எக்காள சப்தமிடுவார். அது சரிதானே, யோசேப்பு புறப்பட்டுச் சென்ற போது, அவர்கள் அதற்கு முன்பாக எக்காள சப்தமிட்டார்கள். இப்பொழுது ஏதோ ஒன்று முன்னோக்கி வந்து கொண்டிருக்கிறது. யோவான் ஆவிக்குள்ளான போது, ஒரு எக்காளம் சப்தமிடுவதைக் கேட்டான். அவன் ஆவிக்குள்ளான பிறகு, எக்காள சப்தத்தை கேட்டபோது தனக்குப் பின்னாக கேட்டிருந்த சப்தம் என்ன என்று பார்க்கும்படி யோவான் திரும்பிப் பார்த்தான். 142. ஒருவேளை அவன் அந்த தீவைச் சுற்றி ஓடி, நடனமாடி, குதித்திருப்பான். அவன் ஆவிக்குள்ளாக இருந்தபடியினால் அவனுக்கு ஒரு நல்லவேளை உண்டாயிருந்தது. அவ்வாறு கூறுவது அவபக்தியான காரியம் போல் தோன்றக்கூடும். ஆனால் நான் அவ்வாறு உள்ள அர்த்தத்தில் கூறவில்லை. அவ்வாறு அவன் செய்திருக்கக் கூடும். ஆம், அவன் அவ்வாறு செய்து கொண்டிருந்திருக்கக் கூடும். அவனுக்கு ஆவிக்குள்ளாக ஒரு அருமையான வேளை உண்டாயிருந்ததென்றும், அதினால் அவன் தேவனைத் துதித்துக் கொண்டிருந்திருப்பான் என்றும் நான் நம்புகிறேன். ஏனெனில், ஆதியில் அவர்கள் மேல் ஆவியானது வந்திறங்கிய போது, அதே விதமாகத் தான் சம்பவித்தது. பரிசுத்த ஆவி அவர்கள் மேல் விழுந்தபோது, குடித்தவர்களைப் போல், ஆணும் பெண்ணும் தள்ளாடினர். குடித்தவர்களைப் போல் அவர்கள் நடந்து கொண்டு பேசினர். அவர்கள் தொடர்ந்து அவ்வாறு செய்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து, ஜனங்கள், “ இவர்கள் மது பானத் தினால் நிறைந்திருக்கிறார்கள்'' என்று கூறினார்கள். ஆதியில் அவர்கள் அவ்வாறு தான் நடந்து கொண்டார்கள். எனவே ஆவியானவர் மீண்டும் வருகையில், அவனும் (யோவானும்)கூட அவ்வாறு தான் நடந்து கொண்டிருக்கக் கூடும். இது புதியது ஒன்றுமில்லை, இது பழங்காலத்து மார்க்கமாகும். ஆம். 143. “ கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளாதல்''. இப்பொழுது நாம் அதைக் கேட்கிறோம். இப்பொழுது என்ன? அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? அவன் இப்பொழுது அத்தீவிலிருந்து ஆவிக்குள்ளாக மாற்றப்பட்டு கர்த்தருடைய நாளுக்குள் கொண்டு செல்லப்பட்டான். கர்த்தருடைய நாளுக்குள் அவன் சென்றவுடன், அவன் ஒரு எக்காள சப்தத்தை கேட்டான். அது என்னவாக இருக்கிறது? யாரோ நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். மகத்தான ஒருவர் நெருங்கி வந்து கொண்டிருக்கிறார். எக்காளம் முழங்கினால், யாரோ வந்து கொண்டிருக்கிறார் என்பதாகும். அவன் பார்த்தான், அல்லேலூயா! எக்காள சப்தம். "அது: நான் அல்பாவும், ஓமெகாவும், முந்தினவரும், பிந்தினவருமாயிருக்கிறேன்.... (இரண்டாவது நபரைப் பற்றியோ, அல்லது மூன்றாவது நபரைப் பற்றியோ உள்ள அறிவிப்பல்ல இது, ஒரே நபரைப் பற்றியதான அறிவிப்பு தான் இது)... நான் அல்பாவும் ஒமெகாவுமாயிருக்கிறேன் (''நான் எதையாகிலும் உங்களுக்கு காண்பிக்கும் முன்னர், நான் யார் என்பதை நீங்கள் அறியும்படி விரும்புகிறேன்'') 144. வெளிப்பாடுகள் எல்லாவற்றிலும் மகத்தானது தேவத் துவத்தைப் பற்றியதாகும். அதாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வினுடைய உன்னத தேவத்துவத்தைப் பற்றிய தேயாகும். அதை நீங்கள் விசுவாசிக்காமல் முதலாவதான தளத்திற்குச் செல்ல முடியாது. அதைத்தான் பேதுருவும், “ மனந்திரும்பி, தேவத்துவத்தைப் பற்றி பாருங்கள்'' என்றான். ''பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது ஆவிக்குள்ளாகப் போவதற்கு நீங்கள் ஆயத்தமாக இருப்பீர்கள்'. கிறிஸ்துவின் தேவத்துவத்தைப் பற்றி நீங்கள் முதலாவதாக அறிந்து கொள்ள வேண்டும். “ நான் அல்பாவும் ஒமெகாவுமாயிருக்கிறேன்.'' ''A'' முதல் 'Z'' வரை யாவும் நானே. என்னைத் தவிர, வேறு தேவன் இல்லை. நான் ஆதியில் இருக்கிறேன். முடிவிலும் நானே இருக்கிறேன். இருக்கிறவரும், இருந்தவரும், வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ளவர்.'' அதைப் பற்றி எண்ணிப் பாருங்கள். அதைத்தான் அந்த எக்காளம் கூறியது. 145. கவனமாக இரு, யோவானே! நீ ஆவிக்குள்ளாகி விட்டாய், உனக்கு ஒன்று வெளிப்படுத்தப்படப் போகிறது. அது என்ன? எக்காளம் முதலாவதாக கூறியது என்னவெனில், ''நான் அல்பாவும் ஒமெகாவுமாயிருக்கிறேன்'' என்பதே. எல்லா வெளிப்படுத்துதல் களிலும் முதன்மையானது இது. (ஓ! பாவியே, நேரமானது கடந்து செல்லுமுன்னர், தலைவணங்கி மனந்திரும்பு) “ நான் அல்பாவும் ஒமெகாவுமாயிருக்கிறேன்.'' அவர் யார் என்பதை முதலாவதாக யோவான் அறிந்து கொள்ளும்படி செய்தார். (யார் இப்பொழுது விரைந்து வந்து கொண்டிருக்கிறார்? அது இயேசு இராஜாவா? தேவனாகிய இராஜாவா? பரிசுத்த ஆவியாகிய இராஜாவா?) “ நான் எல்லாமுமாயிருக்கிறேன். “ A'' முதல் “ Z'' முடிய யாவும் நானே. நான் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். நான் அழியாமையுள்ளவரும் நித்தியமானவருமானவர்!'' 146. சற்று நேரத்திற்குப் பின்பு நாம் அவரை, அவரது ஏழு விதமான தோற்றங்களில் அவர் என்னவாயிருக்கிறார் என்பதை கவனிப்போம். “ நான் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். நான் அல்பாவும் ஒமெகாவுமாயிருக்கிறேன். நானே முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். முந்தையது என்ற ஒன்று ஏற்படும் முன்னரே நான் இருக்கிறேன், கடைசி என்ற ஒன்று இல்லை என்பதற்குப் பிறகும் இருக்கிறவர் நானே. அதாவது “ முந்தின வரும், பிந்தினவருமாயிருக்கிறேன்''. "...நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங் களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.'' 147. சரி, வெளிப்படுத்துதல்களிலெல்லாம், முதன்மையானது இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உன்னதமான தேவத்துவத்தைப் பற்றியதேயாகும். அந்த சப்தத்தை நீங்கள் கேட்கையில் அவர் யார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சீனாய் மலையின் மேல் பேசிய அதே சப்தம்தான், மறுரூப மலையிலும் பேசியது. அவரேதான், “ மனுஷகுமாரனுடைய சாயலுக்கொப்பானவர்'' 148. அடுத்த வசனத்தை கவனியுங்கள். “ நான் திரும்பினேன்” (12ம் வசனம்) 149. ஒரு நிமிடம் நாம் இந்த சபைகளை விட்டு விட்டு, கடந்து செல்லப் போகிறோம், ஏனெனில் இந்த வாரம் முழுவதும் இந்த சபைகளைப் பற்றித்தான் படிக்கப் போகிறோம். 150. அவர் கூறினார், “ நான் உனக்கு காண்பிக்கப் போகிற இச் செய்தியை நீ அனுப்பும்படி உனக்குச் சொல்லப் போகிறேன்.'' அவர் யார்? “ நானே முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நானே எல்லாரிலும் பெரியவர். நானே சர்வவல்லமையுள்ளவர். ஏழு சபைகளுக்குக் கொடுக்கும்படியான ஒரு செய்தியை நான் கொடுக்க வந்துள்ளேன். நீ அதை எழுதி ஆயத்தம் செய்யும்படி விரும்புகிறேன். அவைகளை ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்ப வேண்டும்''. அக்காலத்தில் அப்பிரதேசத்தில் இருந்த அந்த ஏழு சபைகளின் தன்மையானது வரவிருக்கும் ஏழு சபைக்காலத்தின் தன்மையை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தன. 151. ''அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத்திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு மெழுகுவர்த்தி விளக்குத்தண்டுகள் கண்டேன்" 152 . “ ஏழு மெழுகுவர்த்தி விளக்குத்தண்டுகள்'' (Seven Candle sticks) (இவ்வாறு ஆங்கில வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் ஏழு குத்து விளக்குகள் என்று எழுதப்பட்டுள்ளது - மொழி பெயர்ப்பாளர்). உங்களிடம் ஒருவேளை ஜேம்ஸ் மன்னனின் பதிப்போ, அல்லது ஸ்கோஃபீல்ட் வேதாகமமோ அல்லது தாம்ப்ஸன்ஸ் செயின் ரெபரன்ஸ் வேதாகமமோ இருக்கக்கூடும். அங்கே அவ்வாறு எழுதப்பட்டுள்ளது தவறானதாகும். மூல வேதத்தில், மெழுகுவர்த்தி விளக்குத் தண்டுகள் என்று கூறப்பட வேயில்லை. அது “ விளக்குத் தண்டுகள்” என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. மூல மொழிபெயர்ப்பில் கூறப்பட்டுள்ள இதுவே சரியானது என நான் விசுவாசிக்கிறேன். ஏழு பொன் குத்து விளக்குகள் என்றால் ஏழு சபைகளாகும். 20ம் வசனத்தில், ''நீ கண்ட ஏழு மெழுகுவர்த்தி விளக்குத் தண்டுகளும் ஏழு சபைகளாம்'' என்று கூறுகிறார். எனவே, அது (ஆங்கில வேதாகமத்தில் உள்ளது போல்- மொழி பெயர்ப்பாளர்) ஒரு மெழுகுவர்த்தி என்று இருக்குமானால், ஒரு மெழுகு வர்த்தியானது விரைவாக எரிந்து அழிந்து விடும். ஆனால் அது மெழுகு வர்த்தியல்லவேயல்ல. அது ஒரு விளக்குத் தண்டு. விளக்குத் தண்டு என்று தான் அது கூறுகிறது. ''திரும்பின போது... அந்த ஏழு குத்து விளக்குகளின் மத்தியிலே... மனுஷகுமாரனுக் கொப்பானவரையுங்கண்டேன்.'' 153. இப்பொழுது பாருங்கள். ஒரு மெழுகுவர்த்தியானது சில மணிநேரங்களுக்குள் விரைவாக எரிந்து முற்றிலும் ஒன்றுமில்லாமற் போய்விடும். ஆனால் ஒரு விளக்குத் தண்டோ , ஒரு விளக்குத் தண்டு இவ்வாறு உள்ளது... 154. ஒரு வேதவாக்கியத்தை நாம் இங்கே எடுத்துக் கொள்வோம். சகரியா 4ம் அதிகாரம் 1ம் வசனத்தைப் பார்ப்போம். சகரியாவின் புத்தகத்தில் நமக்கு தேவையானதை நாம் எடுத்துக்கொள்ள முடியும். சகரியா 4:1 நமக்கு தேவைப்படுவதை இங்கிருந்து நாம் எடுத்துக்கொண்டு அதனுடன் ஒன்று சேர்க்க முடியும் என்று நம்புகிறேன். சகரியாவை செப்பனியாவில் என்னால் காண முடியாது. அல்லவா? சரி, சரி. எனது பழைய வேதாகமம் கிழிந்து போயுள்ளது. சகரியா 4:1ல் மிகவும் அழகானதொரு காட்சியைப் பார்க்கிறோம். அந்த தூதன்... 155. கிறிஸ்துவுக்கு 519 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த தீர்க்கதரிசி இருந்தான். “ என்னோடே பேசின தூதன் திரும்பி வந்து: நித்திரை பண்ணுகிற ஒருவனை எழுப்புவது போல் என்னை எழுப்பி: (இப்பொழுது இந்த தீர்க்கதரிசி ஒரு தரிசனம் காண்கிறான்). நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட மெழுகுவர்த்தி விளக்குத் தண்டை காண்கிறேன். (இப்பொழுது இதே வார்த்தைதான் விளக்குத் தண்டு என்று மூல வேதத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) அதின் உச்சியில் அதின் கிண்ணமும் அதின்மேல் அதின் ஏழு அகல்களும், (அதுவே விளக்காயிருக்கிறது) அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப் போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது. (அதே சபைக்காலங்கள் வந்து கொண்டிருக்கிறதை இப்பொழுது பாருங்கள்). அதின் அருகில் கிண்ணத்திற்கு வலது புறமாக ஒன்றும், அதற்கு இடது புறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன். (வேதாகம நாட்களில் என்ன விதமான எண்ணெயை அவர்கள் எரித்தார்கள்? யாருக்காவது தெரியுமா? என்ன எண்ணெய்? ஒலிவ எண்ணெயை உபயோகித்தார்கள்). இரண்டு ஒலிவ மரங்கள்.... (அது என்ன? புதிய ஏற்பாடும், பழைய ஏற்பாடும் அதின் இருபுறமும் நின்று கொண்டிருக் கின்றன). நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன். என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்ன தென்று உனக்குத் தெரியாதா என்றார். ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன். அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்”. (அவர் எருசலேமை மீட்டுத்தருவார்) .சகரியா 4:1-6. 156. இப்பொழுது இந்த மெழுகுவர்த்தி தண்டு என்பது என்ன? அது விளக்குத் தண்டு ஆகும். இங்கே இது எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதைக் கவனியுங்கள். அவன் பார்க்கும்படி திரும்பிய போது, வரவிருக்கும் ஏழு காலங்களை அர்த்தப்படுத்தும் அந்த ஏழு விளக்குத் தண்டுகளின் நடுவில், மனுஷக்குமாரனுக் கொப்பானவரைக் கண்டான். ஒவ்வொரு விளக்குத் தண்டும் பிரதான பெரிய எண்ணெய் ஊற்றிவைக்கும் கலசத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணெயில், வினோதமான அமைப்புக் கொண்ட விளக்கிலிருந்து தொங்கும் திரியானது மூழ்கி இருக்கும். அவர்கள் எண்ணெயை பிரதான குழாயின் வழியாக ஊற்றுவார்கள், பிரதான தண்டிலிருந்து பிரிந்து செல்லும் கிளை தண்டுகளின் வழியாக எண்ணெயானது பரவிச் செல்லும். திரியோடு கூடிய விளக்கானது எண்ணெயில் மூழ்கிய நிலையில் இருந்து கொண்டு, இரவும் பகலும் எரிந்து கொண்டேயிருக்கும். நீங்கள் அதை எரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. அது அணைந்தே போகாது. பிரதான குழாயில் அவர்கள் எப்பொழுதும் எண்ணெயை ஊற்றிக் கொண்டேயிருப்பார்கள் இந்த விளக்குத் தண்டுகள் இவ்வாறு ஒவ்வொன்றும் வெளியே வந்து, அவைகள் மேலே விளக்கைக் கொண்டதாக இருக்கும். விளக்கில் உள்ள திரியானது எண்ணெயில் மூழ்கின நிலையில் இருக்கும். இங்கிருந்து அது தனது ஜீவனைப் பெற்றுக் கொள்கிறது. எனவே, இதிலிருந்து, ஒரு மெழுகுவர்த்திக்கும் இதற்கும் உள்ள பெரிய வேறுபாட்டைப் பார்க்கிறோம். எவ்வளவு வித்தியாசமாக இது உள்ளது! அது ஒரு விளக்குத் தண்டுதான், அது எண்ணெயை இழுத்துக் கொண் டிருக்கிறது. 157. இப்பொழுது இந்த விளக்குத் தண்டுகளிலிருந்த நெருப் பானது பழைய ஏற்பாட்டுக்காலத்தில் எப்படியிருந்ததென்றால்: அவர்கள் ஒரு விளக்கைக் கொளுத்துகையில், அடுத்ததைக் கொளுத்த தங்கள் கையிலிருந்த நெருப்பைக் கொண்டு கொளுத்த முடியாது. ஒரு விளக்கைக் கொளுத்தி, அதிலிருந்த நெருப்பைத் கொண்டுதான் அடுத்த விளக்கை அவர்கள் கொளுத்த வேண்டும். இவ்வாறு அடுத்தடுத்துள்ள விளக்குகளை முதலில் கொளுத்தப் பட்ட விளக்கின் அதே முதல் நெருப்பைக்கொண்டு தான் கொளுத்த வேண்டும். நான் உங்களைப் புரிய வைத்துள்ளேன் என்று நம்புகிறேன். "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்''. பரிசுத்த ஆவியாகிய அதே அக்கினி, காலங்கள் தோறும் ஒவ்வொரு சபையையும் எரிய வைத்தது. 158. யோவான் 15:5ல் இயேசு, “ நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள்'' என்று கூறவில்லையா? அவரே பிரதான திராட்சைச் செடி, நாம் கொடிகளாயிருக்கிறோம். கொடிகள் தானாக கனி கொடுப்பதில்லை. 159. (ஒலிநாடாவில் காலி இடம் -ஆசி). ஆரஞ்சைப் போல உள்ள எலுமிச்சை வகையைச் சேர்ந்த ஒரு செடியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஆரஞ்சு செடியில் சிறிது பிளந்து, அதில் ஒரு கிரேப் ஃப்ரூட்செடியை (Grapefruit Tree) ஒட்டுச் சேருங்கள், அந்த செடியும் வளரும். எலுமிச்சை கிளையை வெட்டி இந்த ஆரஞ்சுச் செடியோடு ஒட்டுச் சேருங்கள். அதுவும் வளரும். அல்லது ஒரு மாதுளைக் கிளையை எடுத்து அதனோடு ஒட்டுங்கள். அல்லது எந்தவொரு எலுமிச்சை வகை மரக்கிளையையோ அல்லது டாஞ்ஜெரீன் என்னப்படும் ஒரு வகை ஆரஞ்சு கிளையையோ, இந்த மரத்தோடு ஒட்டுப் போடுங்கள். இவைகள் யாவும் அந்த ஆரஞ்சு மரத்தின் ஜீவனைக் கொண்டு செழித்து வளரும். ஆனால் அது ஆரஞ்சுப் பழத்தைக் கொடுக்காது. அது கிரேப் ஃப்ரூட் பழங்களைக் கொடுக்கும். ஒரு வகை ஆரஞ்சுப் பழத்தைக் கொடுக்கும், எலுமிச்சையானது தனது கனியைக் கொடுக்கும். ஆனால் இவைகள் யாவும் உண்மையான செடியின் ஜீவனைக் கொண்டே வாழ்கின்றன. ஆனால் அந்த உண்மையான செடியானது தன்னுடைய சொந்தக்கிளை இன்னொன்றை படரவிடுமானால், அதிலுள்ள அதே ஜீவனைக் கொண்டதாகவே அது இருக்கும். அது ஆரஞ்சுப் பழத்தையே கொடுக்கும். ஏனெனில், ஆதியில், அதனுடைய வேரில் அது ஆரஞ்சு மரத்தின் ஜீவனாக உள்ளது. ஆனால் ஒட்டுப் போடப்படும் ஏனைய மரக்கிளைகள், ஆரஞ்சு மரத்தின் ஜீவனைக் கொண்டு ஜீவித்துக்கொண்டு இருக்க முடியும். ஆனால் அது தன்மையில் சிட்ரஸ் மரத்தின் தன்மையையே கொண்டிருக்கும். ஆனால் மூல மரமாகிய ஆரஞ்சு மரத்தின் கனியை சிட்ரஸ் மரத்தினால் கொடுக்க முடியாது. ஏனெனில் மூல மரத்தின் தன்மையை அது கொண்டிருக்கவில்லை. 160. அவ்விதமாகத்தான் சபையும் இருக்கிறது. அவர்கள் மெய்யான திராட்சைச் செடியோடு பிரஸ்பிடேரியன், மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு மற்றும் இன்ன பிறவற்றை ஒட்டுச் சேர்த்து விட்டார்கள். பாப்டிஸ்டு, பாப்டிஸ்டு கனியையும், பிரஸ்பிடேரியன் சபை, பிரஸ்பிடேரியன் கனியையும், மெத்தோடிஸ்டு சபையானது, மெத்தோடிஸ்ட் கனியையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் எப்பொழுதாகிலும் அந்த மூலச் செடியானது தன்னுடைய இன்னொரு கிளையை படரவிடுமானால், அது அதே மரமாகத்தான் இருக்கும், அது பெந்தெகொஸ்தே நாளில் கொண்டு வந்த அதே கொடியை தான் மீண்டும் கொண்டு வரும். அதுவே மெய்யான மூல திராட்சைச் செடியாயிருக்கிறது. அது அந்நிய பாஷைகளில் பேசும், அதனிடம் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமையும் அடையாளமும் உண்டாயிருக்கும். ஏன்? ஏனெனில், அது தன்னுடைய சுபாவ சக்தியிலிருந்து பிழைத்துக் கொண்டிருக்கிறது. வாஸ்தவமாக அந்தக் கிளை மூலச் செடியோடு ஒட்டப்படவில்லை. அது மூலச் செடியிலிருந்தே பிறந்ததாக இருக்கிறது. ஓ என்னே! அப்பொழுது இந்த ஒன்றைப் பற்றி சிந்திக்க வில்லை . 161. மற்ற கிளைகளோ ஒட்டப்பட்டவைகள் என்பதைப் பாருங்கள். இந்த மரத்தோடு இவைகள் ஒட்டப்பட்டபோது, அவைகள் தங்கள் தங்கள் கனிகளையே கொடுத்தன. அவைகள் மெய்யான மூலச் செடியின் தன்மையை எடுத்துக்கொள்ள இயலாது. மெய்யானதை அவர்கள் விசுவாசிக்கிறதில்லை. ஏனெனில் அவர்களுக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் அந்த மரத்திலிருந்து புறப்பட்டு வரும் ஜீவனிலிருந்து பிறந்தவைகளாக அவைகள் இருப்பின், அப்பொழுது அந்தக் கனியைத்தான் அவைகளால் கொடுக்க முடியும். அது மூல மரத்தின் தண்டிலிருந்து புறப்பட்டு வரும் ஜீவனாகும். 162. இந்த ஏழு விளக்குத் தண்டுகளும் ஒரு பெரிய கலசத்தோடு பொருந்துகிறதாயிருக்கும். இந்த ஒரு பெரிய கலசத்திலிருந்துதான் இந்த ஏழு விளக்குத்தண்டுகளும் புறப்பட்டு வரும். அவ்வேழு விளக்குகளும் ஒவ்வொன்றும் பிரதான கலசத்திலிருந்து தான் தங்களுடைய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும். பிரதான எண்ணெய் கலசத்தில் ஒவ்வொரு விளக்கின் திரியும் எண்ணெயில் மூழ்கி இருப்பதினால், அவை ஒவ்வொன்றும் எரிகின்றன. அவ்வேழு நட்சத்திரங்களில் ஒவ்வொன்றும் பரிசுத்த ஆவியாகிய அக்கினியோடு உள்ளதாக உள்ள இக்காட்சி எவ்வளவு அழகாயிருக்கிறது! விசுவாசத்தினால் அவன் பரிசுத்த ஆவியைக் கொண்டு எரிந்து கொண்டிருக்கிறான். அவனுடைய ஜீவியமானது ஒரு மெழுகு வர்த்தியாக இருக்கிறது... இல்லை, மெழுகுவர்த்தி அல்ல, கிறிஸ்துவாகிய பரிசுத்த ஆவிக்குள் மூழ்கிக்கிடக்கிற விளக்குத் திரியாக இருக்கிறது. அத்திரியின் மூலமாக தேவனுடைய ஜீவனாகிய எண்ணையை உறிஞ்சி, அதின் மூலம் தன்னுடைய சபைக்கு ஒளியைக் கொடுக்கத்தக்கதாக அவன் இருக்கிறான். ஓ! ஒரு உண்மையான விசுவாசியின் சித்திரமானது எவ்வாறு உள்ளது! என்னவிதமான ஒளியை அவன் கொடுத்துக் கொண்டிருக்கிறான்? முதல் விளக்கில் இருக்கும் அதே ஒளியைத் தான் கொடுக்கிறான். 163. முதல் சபைக் காலமானது ஆரம்பித்தபோது, அது எபேசு சபைக்காலமாயிருந்தது. ஏழு நட்சத்திரங்களில் ஒன்றானவனான பவுலே அச்சபைக்குரிய தூதனாயிருந்தான். இவ்வேழு நட்சத்திரங் களும் ஏழு தூதர்கள் என்று அர்த்தமாகும். அவர்கள் ஏழு "செய்தியாளர்களாவர்.'' இவ்வாரத்தில் நான் வேதவாக்கியங்களைக் கொண்டும், வரலாற்றைக் கொண்டும், குறிப்பிட்ட ஒவ்வொரு மனிதர்தான் அந்த ஒவ்வொரு சபைக் காலத்திற்கும் உரிய உண்மையான தூதன் என்றும், அவர்கள் ஒவ்வொருவரிலும் ஒரே ஒளி தான் இருந்தது என்பதையும் நான் உங்களுக்கு நிரூபிக்க முடியும். அது அவ்வாறு தான் உள்ளது. இந்த சபை காலங்களில் மத்தியில் தான் அந்த மகத்தானவர் வரவேண்டும். 164. கவனியுங்கள், ஒவ்வொரு விளக்கும் இந்த பிரதான எண்ணெய் குழாயிலிருந்து தான் தங்களுக்குத் தேவையான எண்ணெயை, அதாவது ஒளியை, கிறிஸ்துவில் மூழ்கி இருப்பதன் மூலம் எடுத்துக் கொள்கின்றன. நீங்கள் மரித்தவர் களாயிருக்கிறீர்கள். உங்கள் ஜீவனானது கிறிஸ்துவில் மறைந்திருக்கிறது, அல்லது தேவனுக்குள் கிறிஸ்துவின் மூலமாக மறைந்திருந்து பரிசுத்த ஆவியினால் முத்திரை யிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து விலகி யிருக்க உங்களுக்கு எந்தவிதமான வழியும் இல்லை. எவ்வாறு நீங்கள் அதைச் செய்ய முடியும்? யாரும் உங்களை வழி விலகச் செய்ய எதுவும் உங்களுக்குள் ஊடுருவ முடியாது. உங்கள் ஜீவனின் இந்த நுனி வரையும் பரிசுத்த ஆவியினால் எரிந்து கொண்டிருக்கிறது, ஒளி கொடுத்து எரிந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய ஜீவனின் மற்றைய நுனியானது எங்கே மூழ்கிக் கிடக்கிறது? கிறிஸ்துவில் மூழ்கிக்கிடக்கிறது. நீங்கள் அவருக்குள் அடக்கம் பண்ணப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவாகிய பரிசுத்த ஆவியானவர் பிசாசு உங்களைத் தொட முடியாதபடி அவனுக்கு வழியை அடைத்துக் கொண்டிருக்கிறார். ஆமென்! அவன் உங்களுக்கெதிராக சப்தமெழுப்பக் கூடும், மரணம் கூட உங்களைத் தொட முடியாது. ''மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்'. 165. இந்த வசனத்தின் கடைசியை வாசிப்போம். திரும்பினபோது ஏழு பொன் மெழுகுவர்த்தி விளக்குத்... அந்த ஏழு மெழுகுவர்த்தி விளக்குத் தண்டுகளையும் மத்தியிலே... மனுஷகுமாரனுக் கொப்பான வரையுங் கண்டேன். 166. என்னே ! நட்சத்திரங்கள், விளக்குத்தண்டுகள், விளக்குகள்! இவைகளைக் கவனித்தீர்களா? அவைகளுடைய அர்த்தம் தான் என்ன? நாம் வாழ்கிற கால நியமமானது இரவுக் காலமாக உள்ளது. விளக்குத் தண்டுகள், விளக்குகள், நட்சத்திரங்கள் ஆகிய இவைகள் யாவும் இரவு நேரத்திற்குரியவைகளானதால், இது இரவு வேளை என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஒரு நட்சத்திரமானது என்ன செய்கிறது? சூரியனானது திரும்பி வருகிற வரையிலும், இரவில் சூரியனின் ஒளியை பிரதிபலிப்பதாக நட்சத்திரம் இருக்கிறது. கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக! தேவனுடைய ஒரு உண்மையான ஊழியக்காரனானவன் ஏதோ ஒரு எரிகின்ற ஒளிவிளக்குகளின் ஒளியையோ, அல்லது ஒரு நெருப்புக் குச்சியின் வெளிச்சத்தையோ அல்லது பதரை எரித்து அதின் ஒளியையோ பிரதிபலிக்காமல், கிறிஸ்துவின் பொன்னிற கதிர் ஒளியையே சபைக்கு பிரதிபலித்து, “ அவர் மாறாதவர், அவர் ஜீவிக்கிறார், அவர் என் மேல் பிரகாசிக்கிறார்'' என்பதை எடுத்துக் காட்டுகிறான். ஆமென்! அவ்வொளியைத் தான் அவன் பிரதி பலிக்கிறான். நட்சத்திரமானது சூரியனின் ஒளியையே பிரதிபலிக்கிறது. பாருங்கள், எனவே நாமும் தேவனுடைய குமாரனுடைய ஒளியையே பிரதிபலிக்கிறோம். அவர் ஒளி கொடுப்பது போலவே நாமும் செய்கிறோம். என்னவிதமான ஒளியைக் கொடுக்கிறோம்? அவர்களுக்கு சுவிசேஷ ஒளியைக் கொடுக்கிறோம். 167. அவரை நாம் இன்னும் கூடுதவாக கவனிப்போம். அதற்காக நாம் 13ம் வசனத்தின் எஞ்சிய பகுதியையும் பார்ப்போம். "அந்த ஏழு மெழுகுவர்த்தி விளக்குத் தண்டுகளையும் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக் கொப்பானவரையுங் கண்டேன். 168. கர்த்தருடைய நாளைப் பற்றிய இந்த உபதேசம் சரியானது தான் என்பதை காண்பிக்கும்; இன்னும் கூடுதலான அத்தாட்சி இப்பொழுது இங்கே இருக்கிறது. அவரை நீங்கள் கவனித்தீர்களா? இந்த வேளையில் அவர் ஒரு ஆசாரியனாக இல்லை, அல்லது அவர் ஒரு ராஜாவாகவும் இல்லை. அவர் ஒரு நியாயாதிபதியாக இருக்கிறார். ஒரு ஆசாரியன், ஒரு பிரதான ஆசாரியன், பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனைக்காக ஊழியம் செய்ய உள்ளே பிரவேசிக்கையில், அவனுடைய இடுப்பைச் சுற்றி ஒரு கச்சையைக் கட்டிக் கொள்வான். அவனுடைய இடுப்பைச் சுற்றி ஒரு கச்சையைக் கட்டியிருக்கிறான் என்றால், அவன் இன்னமும் ஊழியம் செய்து கொண்டிருக்கிறான் என்று பொருள். அவ்வாறு ஊழியம் செய்கையில் அவன் ஒருபோதும் அதை தோளில் கட்டியிருக்க மாட்டான். இங்கோ அவர் மார்பருகே பொற்கச்சை கட்டியவராக, அதாவது இடுப்பிலே அல்ல, இடுப்புக்கு மேலே தோளிலே மார்பருகே இருக்குமாறு கச்சையைக் கட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டு வருகிறார். பொற்கச்சையை மார்பருகே கட்டியிருக்கிறார் . இது என்ன? ஒரு வழக்குறைஞர், ஒரு நீதிபதி. ஒரு நீதிபதியானவர், ஆசாரியனைப் போல் இடுப்பில் கச்சையைக் கட்டுகிறதில்லை, மார்பருகே தோளைச் சுற்றி அக்கச்சையைக் கட்டிக் கொள்கிறார். எனவே, அவர் இந்தக் காட்சியில் இப்பொழுது தனது ஆசாரிய ஊழியத்தில் நீடித்திருக்கவில்லை என்றும், யோவான் அவர் நியாயாதிபதியாக வருகிற கர்த்தருடைய நாளுக்குள்ளாகத் தான் எடுத்துக் செல்லப்பட்டான் என்பதையும் காண்பிக்கிறது. 169. நீங்கள் அவர் ஒரு நியாயாதிபதி என்பதை விசுவாசிக்கிறீர்களா? யோவான் 5:22ஐ விரைவாக வாசிப்போம். அங்கே அவர் ஒரு நியாயாதிபதியா இல்லையா என்பதைப் பார்ப்போம். யோவான் 5:22. “ பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறார்.” 170. அது சரிதானே? அவர் நீதிபதி, உன்னதமான நீதிபதி அவர். இங்கே யோவான், இயேசுவானவர் அவரது தீர்க்கதரிசன நாளில் ஒரு தீர்க்கதரிசியாக இன்னமும் இல்லையென்றும், அல்லது அவரது இராஜரீகத்தின் நாட்களில் அவர் இல்லையென்றும், அவர் கர்த்தருடைய நாளில் ஒரு நீதிபதியாக இருக்கிறார் என்பதையே நமக்குக் காண்பிக்கிறான். இப்பொழுது எத்தனை பேருக்கு, ஆசாரியன் தன் இடுப்பிலே கச்சையைக் கட்டியிருக்கக் காண்கையில், அவன் தன் ஊழிய வேளையில் தான் இருக்கிறான் என்பதை அது காட்டுகிறது என்பதை அறிந்திருக்கிறீர்கள்? பழைய ஏற்பாட்டை வாசித்திருக்கிறவர்கள் அதை அறிவார்கள். ஒரு ஆசாரியனானவன் தன் இடுப்பிலே கச்சையைக் கட்டியிருந்தால், அப்பொழுது அவன் ஒரு ஊழியக்காரனாக, தனது ஊழியத்தில் இருக்கிறான் என்பதை அது காட்டுகிறது. ஆனால் ஆண்டவரோ இடுப்பில் அல்ல, மேலே கச்சையைக்கட்டியிருக்கிறார், எனவே அவர் ஒரு நியாயாதிபதி இப்பொழுது. 171. இன்னும் தொடர்ந்து வாசிப்போம். '... மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த...” 172. மார்பருகே அவர் கச்சையைக் கட்டியிருந்தபடியால் அவர் ஒரு நீதிபதி என்பது சரிதான். 173. இப்பொழுது நாம் அவருடைய ஏழு விதமான மகிமையான தோற்றத்தைப் பற்றி படிக்கப் போகிறோம். ஓ, என்னே! இதைப் படிக்கப் போகுமுன்னரே என்னை இது ஆரவாரிக்கச் செய்கிறது. இதைக் கவனியுங்கள். இது இவ்வளவு அருமையானதாக இருக்கிறதே. சற்று கவனியுங்கள். "... அவரது சிரசு...'' 174. அவரைப் பற்றி ஏழு காரியங்களை யோவான் குறிப்பிடு வதைக் கவனியுங்கள். அவரது சிரசு, அவரது தலைமயிர், அவரது கண்கள், அவரது பாதங்கள், அவரது சப்தம்... ஆக ஏழு காரியங்கள் அவரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் ஏழு விதமான மகிமைத் தோற்றம். அதை நான் வாசிக்கட்டும். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப் போலவும், உறைந்த மழையைப் போலவும் வெண்மையாயிருந்ததது; அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது. அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெரு வெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது. தமது வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப். போலிருந்தது. வெளி.1:14-16 175. என்னே ஒரு தரிசனம் இது. இங்கே அவன் எதைக் காண்கிறான்? மகிமைப்படுத்தப்பட்ட தேவகுமாரன் மற்றும் ஒரு அடையாளச் சின்னம். இப்பொழுது நாம் சற்று ஆயத்தமாயிருப்போம். 176. ஓ என்னே! இப்பொழுது மணி ஒன்பது என்று நினைத்தேன். ஆனால் மணி எட்டுதான் ஆகிறது. இன்னமும் நான் ஆரம்பிக்க வேயில்லை. அது நல்லது. இப்பொழுது... இந்த சகோதரர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அதற்காக வருந்துகிறேன் அவர்கள் நின்று கொண்டிருக்கிறபடியினால் கால் வலிக்கும் என்பது எனக்குத் தெரியும், அது என்னை பதற்றமடையச் செய்கிறது. இதற்காக ஏதாகிலும் செய்யக் கூடுமானால் நான் நிச்சயமாக செய்வேன், சகோதரர்களே! இச்செய்தியை நீங்கள் சரியாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்காக நீங்கள் சிறிது நேரம் நிற்பதற்கு தேவன் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக என்பதே என்னுடைய ஜெபமாயிருக்கிறது. 177. அவரது சிரசும் மயிரும் பஞ்சைப் போல் வெண்மையாயிருந்தது என்ற முதலாவதான காரியத்தை இப்பொழுது கவனி யுங்கள். அவரது சிரசும் மயிரும் பஞ்சைப் போல் வெண்மையாயிருந்தது. அவரது இத்தகைய தோற்றம், அவர் முதிர் வயதை எய்திவிட்டார் என்பதைக் காட்டவில்லை. இவ்வாறான தோற்றத் தின் காரணம் முதிர்வயது என்பதினால் அல்ல. அவர் முதிர் வயதை எய்திடவில்லை. அவரது அனுபவம், அவரது யோக்கிய தாம்சம், அவரது ஞானம் இவைகளையே இத்தோற்றம் எடுத்துக் காட்டுகிறது. அவர் நித்தியமானவராக இருக்கிறபடியினால், நித்தியருக்கு வயது என்பது கிடையாது. நீங்கள் புரிந்து கொண்டீர்களா? 178. அவரது தோற்றத்தைக் கொண்டு அவர் என்னவாக இருக்கிறார் என்பதை நாம் இப்பொழுது முதலாவதாக காண்போமாக. நாம் இப்பொழுது தானியேலின் புத்தகம் 7:9ல் நீண்ட ஆயுசுள்ளவராக அவர் வருவதை, இங்கே உள்ளது போலவே உள்ள அவரது தோற்றத்தை ஒரு நிமிடம் பார்ப்போம். எந்த வேதபண்டிதரும் நாம் இப்பொழுது என்ன விஷயத்தைப் பார்க்கச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை சரியாக அறிவர். தானியேல் 7:8. நான் 8ம் வசனத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். “ அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று. அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்று பிடுங்கப் பட்டது; இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமை யானவைகளைப் பேசும் வாயும் இருந்தது.” நான் பார்த்துக் கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது. 179. இப்பொழுது கவனமாகக் கேளுங்கள். பின்னால் இருப்ப வர்களுக்கு நான் பேசுவது கேட்கிறதா? அப்படியாயின் ''ஆமென்'' என்று சொல்ல முடியுமானால் சொல்லுங்கள். பின்னால் இருக்கும் என் மனைவியை நான் கேட்டேன். இங்கிருக்கும் இந்த மைக் மிகவும் சரியாகவே வேலை செய்கிறது என்று நான் எண்ணுகிறேன். நான் இதில் சற்று கூடுதலாக சப்த மிடுகிறேன் என்று கருதுகிறேன். 180. சரி, இப்பொழுது தானியேல் 7:9. “ நான் பார்த்துக் கொண்டிருக்கையில் சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப் போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப் போலத் துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினி ஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது. அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிர மாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடி பேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாய சங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது." 181. வெண் முடி! பண்டைய காலங்களில் நீதிபதிகள் இவ்வாறு உடுத்தியிருந்தனர் என்பதை யாராவது அறிவீர்களா? ஆங்கிலேய நீதிபதிகள் வெண்பனியைப் போல வெண்மை நிறமுள்ள குல்லாயை அணிவதுண்டு. எத்தனை பேருக்கு அது நினைவிருக்கிறது? முன் காலங்களிலுள்ள நீதிபதிகள் அவ்வாறான வெண்மையான, தலையில் போட்டுக் கொள்ளும் வெண்முடியைப் போல உள்ள தொப்பியை அணிந்து கொள்வார்கள். ஏனெனில் அவர்கள்... இங்கே யோவானுக்கு அவன் கர்த்தருடைய நாளில் நிற்கிறான் என்பதை, இக்காட்சியில் அவர் நீதிபதியாக தோற்ற மளிப்பதன் மூலம் மறுபடியும் காண்பிக்கிறார். ஆமென்! அவர் இங்கே ஒரு ஆசாரியனாக அல்ல, அல்லது ஒரு இராஜாவாக அல்ல, ஒரு தீர்க்கதரிசியாகவும் அல்ல, ஆனால் நீதிபதியாக தோற்றமளிக்கிறார். யோவான் 5:22ல் கூறப்பட்டுள்ள வண்ணமாக, பிதாவானவர் நியாயத் தீர்ப்பு செய்யும் அதிகாரம் முழுவதையும் இயேசுவுக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறார். அவரது சிரசின் மயிர் வெண்பனியைப் போல் வெண்மைாயிருந்தது. தானியேல் அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடம் மட்டும் வருவதைக் காண்கிறான். இவையிரண்டும் ஒன்றாக இணைகிறது. அவரைக் கவனியுங்கள். .... நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தங்கள் திறக்கப்பட்டது. அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துக் கொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசின... நான் தவறான வசனத்தை எடுத்துக் கொள்ளவில்லை, அல்லவா?) 182. தானியேல் 7:9. இதோ அது. அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடி பேர் அவருக்கு முன்பாக நின்றார்கள். நியாய சங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது. அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துக் கொண்டிருக் கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலை செய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது (ஊ!) மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால் (அதாவது எல்லா புறஜாதி ராஜ்யங்களும் விழுந்துபோம்). அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகு மட்டும் அவைகள் உயிரோடே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது. இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக் கொண்டிருக் கையில், இதோ மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; (இன்று காலையில் அவர் எவ்வாறு வருகிறார் என்று 3ம் வசனத்தில் பார்த்தோம்? வானத்து மேகங்களுடனே மனுஷகுமாரன் வருகிறார்) அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டு வரப்பட்டார். சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்." தானி. 7:10-14 183. வெண்பஞ்சைப் போல் வெண்மையான முடியை உடைய நீண்ட ஆயுசுள்ளவர் இடம் மட்டும் அவர் வருகிறார். இங்கே யோவான் திரும்பிப் பார்த்து மனுஷகுமாரனுக்கொப்பான ஒருவர் ஏழு மெழுகுவர்த்தி விளக்குத் தண்டுகளையும் மத்தியிலே, வெண்மையான முடியை உடைய ஒரு நீதிபதியாக நிற்பதைக் கண்டான். ஒரு ஆசாரியனைப் போல் இடுப்பில் கச்சை கட்டியவராக அவர் அங்கே நிற்கவில்லை, ஆனால் ஒரு நீதிபதி செய்வதைப் போல் இடுப்புக்கு மேலே மார்பருகே கச்சையைக் கட்டினவராக அவர் காணப்படுகிறார். நீதிபதிகள் தோளிலே போட்டுக் கொள்ளும் கச்சையோடு அவர் நிற்கிறார். அவர் பொன்னான, சுத்தமான, பரிசுத்தமான, சுத்தி கரிக்கப்பட்ட, அவருடைய நீதியைக் கொண்டிருந்த கச்சையைக் கட்டினவராக நின்றிருந்தார். அவரை பாதம் வரைக்கிலும் முழுவதும் மூடுகிறதான நிலையங்கியை அவர் தரித்திருந்தார். அவரது ஆள்தத்துவத்தின் மகிமையான ஏழுவித பிரத்தியட்சமாகு தலைக் கவனியுங்கள். 184. 14ம் வசனம் என்று நம்புகிறேன். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப் போலவும் உறைந்த மழையைப் போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது. 185. அவருடைய சிரசும் மயிரும்; 'கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது''. அதைப் பற்றி எண்ணிப் பாருங்கள். அந்தக் கண்கள் ஒரு காலத்தில் மனுஷ கண்ணீரால் மங்கிப் போய் விட்டிருந்தது. ஆனால் இப்பொழுதோ அக்கினி ஜுவாலையாக ஆகியிருக்கிறது. கோபமான... அங்கே அவர் கோபமுள்ள நீதிபதி யாக நிற்கிறார்! ஏன் அவரை நீ புறக்கணிக்கிறாய்? ஓ பாவியே, இதைப் பற்றி எண்ணிப்பார். இதைப் பற்றி, வெது வெதுப்பான சபை உறுப்பினரே, சிந்தித்துப் பார்! அதைப் பற்றி கத்தோலிக்க, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தே சபையினரே, எண்ணிப் பாருங்கள்! கத்தோலிக்கரே, அதைப் பற்றி எண்ணிப் பாரும்! உங்களுடைய கன்னி மரியாளுங்கூட பெந்தெகொஸ்தேயில் சென்று, பரிசுத்த ஆவியைப் பெற்று, குடித்த ஒரு பெண்மணியைப் போல தள்ளாட வேண்டியிருந்தது. கிறிஸ்துவின் தாயார் கூட பரலோகத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவதற்கு முன்னர், பரிசுத்த ஆவியைப் பெறுவது அவளுக்கு அவசியமாயிருந்தது. ஸ்திரீகளாகிய நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறாமல் எப்படி அங்கே பிரவேசிக்கப் போகிறீர்கள்? மனிதர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பற்றி எண்ணிப் பாருங்கள். 186. அவரது முடியும், ஒரு காலத்தில் அவரது கண்கள் மனுஷீக கண்ணீரினால் மங்கிப் போயிருந்தன. ஆயினும் அவரது கண்களைப் பற்றி நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டு மென நான் விரும்புகிறேன். அவர் பூமியில் இருந்தபொழுது, லாசருவின் கல்லறையில் கண்ணீர்விட்டார், ஒரு மனிதனைப் போல் கண்ணீர் சிந்தியதால் அவரது கண்கள் மங்கலாக இருந்தன. உண்மை! முழுவதும் இரக்கத்தினால் அவர் நிறைந்திருந்தார், அவர் மனுஷீகத்தினால் போர்த்தப்பட்ட தேவனாயிருந்தார். ஏனெனில் பாவத்தை நீக்க அது தேவையாயிருந்தது. ஆனால், அவர் மனுஷீகத் தன்மையில் இருந்தபோதிலும், அதற்குப் பின்னால், மனுஷனுடைய இருதயத்திற்குள் பார்க்கவும், அவனைப் பற்றி அறியவும் கூடும் ஒரு காரியம் அவருக்குள் இருந்தது. ஏன்? அவர் அழிவுக்குரிய மாம்சசதையைப் போர்த்தியிருந்தவராக இருந்த போதிலும், அதற்குப் பின்னால் ஏதோ ஒன்று மகத்தானது அவருக்குள் இருந்தது. 187. ஆனால் அவர்களுக்கு அவர் யார் என்று தெரியவில்லை. “ நானே அவர் என்று விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்'' என்று இயேசு கூறினார். அது உண்மை. 'என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள்''. ஓ! அவர் எவ்வளவாக அச்செய்தியை, அந்த வெளிப்பாட்டை, அவர்கள் பெற்றுக் கொள்வதற்காக முயற்சி செய்தார்! அவரால் ஒரு மனிதனின் உள்ளத்திற்குள் ஊடுருவிப் பார்த்து அவனைப் பற்றி யாவும் அறிந்து கொள்ள முடிந்தது. அவரது கண்களைப் பற்றி நான் எவ்வளவாக சிந்திக்கிறேன்! ஓர் சமயம், மலைகளிலிருந்து அழுது கொண்டே இறங்கிய அவரது கண்கள், துன்பப்படுபவரின் முகத்தை பார்த்த கண்கள், ஒரு மனிதனைப் போல் அழ முடிந்த கண்கள், ஆயினும் அம்மனுஷீக பார்வையின் பின்னால் தேவ ஆவியைக் கொண்டு, அவரால் இருப்பவைகளையும், இருந்தவைகளையும், இருக்கப் போகிறவைகளையும் ஆகியயாவற்றையும் பார்க்க முடிந்தது. இயேசுவில் இருந்த மனுஷீகக் கண்களுக்குப் பின்னால் இருந்தது தேவனாகையால், துவக்கம் முதல் முடிவு வரையிலும் யாவற்றையும் முன்னுரைக்க அவரால் முடிந்தது. தேவன் தாமே உங்களுடைய ஜீவியத்தில் வருவாராக! அவர் உங்களுடைய ஜீவியத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவாராக! அதின் மூலம் அவர் உங்களுக்கு வரப்போகிறவைகளை காண்பிப்பார். ஏனெனில், அது முதற்கொண்டு இனிமேல் அது நீங்களல்ல, அது உங்களுடைய ஜீவியத்தில் இருக்கும் பரிசுத்த ஆவியானவர்தாமே உங்களுடைய மாம்சக் கண்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு பார்த்துக் கொண்டு காரியங்களை தெளிவுபடுத்து கிறவராயிருக்கிறார். 188. ஓ! தேவனுக்கு மகிமையுண்டாவதாக! ''நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களையும் உங்கள் மூப்பர் சொப்பனங்களையும் காண்பார்கள்''. அல்லேலூயா! சில வேளைகளில் அவர் உங்களை உறக்கத்திலாழ்த்தி, உங்கள் மூலமாக அவர் பார்க்கிறார், ஆனால் அவர் நிச்சயமாக அநேக சமயங்களில் உங்களுக்கு காண்பிப்பார். ''உங்கள் வாலிபர் தரிசனங்களைக் காண்பார்கள். உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள், ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள் மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்''. ''என்னுடைய உதவிக்காரர்கள் மேலும் என்னுடைய போதகர்கள் மேலும் ஊற்றுவேன்'' என்று சொல்லப்படவில்லை. ''விரும்புகிற எவன் மேலும், மாம்சமான யாவர் மேலும் என்னுடைய ஆவியை ஊற்றுவேன்'' என்றே கூறியுள்ளார். நான் இதைப் பற்றி ஏன் சப்தமிட்டு கூறுகிறேன் என்பதைப் பற்றி நீங்கள் வியக்கிறீர்கள். ஆனால் இவைகள் இந்த சபைக் காலங்களில் வருகின்றன. 189. அக்கண்களோடு அவர் இங்கே இருக்கிறார். முன்னொரு நாளிலே அதே கண்கள் கண்ணீரினால் மங்கியதாயிருந்தது. இப்பொழுது அதே கண்கள் தான் நியாயத்தீர்ப்பில் நிற்கும். அவரது கண்கள் அக்கினி ஜுவாலையாக நிறைந்ததாக பூமியெங்கும் உலாவுகிறது. சம்பவிப்பவைகள் யாவும் அவருக்கு தெரிந்தேயிருக்கிறது. ஓ, என்னே ! யாவும் பதிவு பண்ணப் பட்டிருக்கிறது. எல்லா அசைவுகளையும் கண்காணித்து எல்லா யோசனைகளையும் வகையறுத்து, நீங்கள் செய்யும் யாவற்றையும் அறிந்துகொண்டு, நீங்கள் செய்ய விரும்பும் காரியங்களுக்கான உங்கள் விருப்பங்களையும் அறியத்தக்கதாக அவரது கண்கள் பூமியெங்கும் உலாவுகிறது. யாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா என்பதை அவர் அறிவார். அவரை சேவிப்பதற்காக உங்கள் விருப்பங்கள் சரியாக இருக்கிறதா என்பதையும் அவர் அறிவார். அதைப் பற்றிய யாவையும் அவர் அறிவார். அவர் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில் நிற்கையில், நீங்களும் அங்கே நிற்கையில் அவருக்கு முன்பாக எல்லாப் பாவமும் வெளியரங்கமாகுமே, அது எவ்வாறிருக்கும்! 190. தேவனே, அவ்விடத்திலிருந்து என்னை விடுவித்தருளும்! அதை நான் காண விரும்பவில்லை. கோபமடைந்துள்ள தேவன், அவரது கண்களில் அக்கினி ஜுவாலிக்க நீதியோடு, தலையில் நீதிபதிக்குள்ள வெண்முடியோடு நடந்து வரும்போது, அவரது கண்கள் அக்கினி மயமாக ஜுவாலித்ததாயும், உங்கள் இருதயத்தின் ஒவ்வொரு சிந்தனையையும் முழுவதும் அறிந்தத தாய், நீங்கள் செய்ய விரும்பினவைகள் யாவையும் அறிந்ததாகவும் இருக்கிறது. ஓ! எனக்காக பிளவுண்ட கன்மலையில் என்னை மறைத்துக் கொள்ளுமே! அந்த முதியவர் இவ்வாறு பாடுவது வழக்கம்; "இவ்வுலகமானது நெருப்புக்கிரையாகுகையில், என்னோடிரும்! என்னோடிரும்! அப்பொழுது உமது மடி எனது தலையணையாய் இருக்கட்டும்! பிளவுண்ட மலையினுள் என்னை மறைத்துக் கொள்ளும்'' தேவனே, உம்முடைய நியாயத் தீர்ப்பானது எனக்கு வேண்டாம். எனக்கு வேண்டாம்... கர்த்தாவே, எனக்குத் தேவையானது உம்முடைய இரக்கமே, உம்முடைய நியாயப் பிரமாணங்களை அல்ல அவைகளில் ஒன்றும் அல்ல... கர்த்தாவே, உம்முடைய இரக்கத்தை மட்டுமே தாரும். அதற்காக மட்டுமே நான் வேண்டுதல் செய்ய முடியும். என் கரங்களில் ஒன்றும் கொண்டு வரவில்லை. (நான் நல்லவன் அல்ல, கணக்கில் எனக்கு ஒன்றுமில்லை) உம்முடைய சிலுவையை மட்டுமே நான் பற்றிக் கொள்கிறேன். கர்த்தாவே, எனக்குத் தெரிந்ததெல்லாம் அதுவே. என்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள ஒருவர் வருகிறார். 191. அவரது ஆள் தத்துவத்தின் ஏழுவிதமான ரூபகாரத்தை கவனியுங்கள். அப்பொழுது அவர் என்ன செய்தார் என்பதை நீங்கள் காண்பீர்கள். அவருடைய சிரசும்... வெண்பஞ்சைப் போலவும் உறைந்த மழையைப் போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது." 192. இப்பொழுது கவனியுங்கள். நாம் இப்பொழுது அவர் தலையில் எவ்வாறு மூடியிருந்தார் என்பதைப் பார்த்தோம். இப்பொழுது கவனியுங்கள். அவரது சிரசு, அவரது கண்கள், இப்பொழுது அவரது பாதங்களைக் கவனிக்கையில் அது வெண்கலம் போலிருந்தது. யோவான் இயேசுவைப் பார்த்தபோது இருந்த சாயலுக்கும், தானியேல் இவ்வுலக சாம்ராஜ்யங்களைப் பற்றி விவரிக்கும் பொன் மற்றும் இன்ன பிற உலோகங்களிலான அச்சிலைக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனியுங்கள். 193. . இங்கே நிற்கிற இவருடைய பாதங்கள் எவ்வாறிருந்தன என்பதைக் கவனியுங்கள், அவை வெண்கலம் போலிருந்தன. வெண்கலமானது எதைக் குறிக்கிறது? வெண்கலமானது தெய்வீக நியாயத்தீர்ப்பை எடுத்துக் காட்டுகிறதாயிருக்கிறது. வெண்கல மானது, தேவனாயிருக்கிற அவர் இப்பூமிக்கு மாம்சத்தில் வந்து, நமக்காக மரித்து, நியாயத் தீர்ப்பை - தெய்வீக நியாயத் தீர்ப்பை தன் மேல் எடுத்துக் கொண்டு, உறுதியான, அசையாத தன்மையுள்ள வெண்கலத்திற் கொப்பானதொரு இராஜ்யத்தைப் பெற்றுக் கொள்ளுகிற அவருடைய நோக்கத்தை எடுத்துக் காட்டுகிறதாயிருக்கிறது. வெண்லகத்தைவிட கடினமானது வேறொன்றுமில்லை; அதை கடினப்படுத்த வேறு ஒன்றும் இது வரைக்கிலும் கண்டு பிடிக்கப்படவில்லை. 194. நியாயத்தீர்ப்பு! வெண்கலமானது நிறைவேற்றப்பட்ட தெய்வீக நியாயத் தீர்ப்பைப் பற்றி எடுத்துரைக்கிறது. வனாந் தரத்தில் இருந்த அந்த வெண்கல சர்ப்பத்தை பாருங்கள். வெண்கல சர்ப்பமானது எதற்கு அடையாளமாயிருக்கிறது? சர்ப்பமானது பாவத்திற்கு அடையாளமாயிருக்கிறது. ஆனால் வெண்கல சர்ப்பம் என்பது பாவத்தின் மேல் ஏற்கனவே நியாயத் தீர்ப்பானது செலுத்தப்பட்டதை எடுத்துக்காட்டுகிறது. 195. எலியாவின் நாட்களையும் குறித்து இப்பொழுது கவனியுங்கள். அவன் நாட்களில் அவனை தீர்க்கதரிசி என்ற முறையில் புறக்கணித்தார்கள். ஆதிகாலத்து சபைக் காலத்திற்குரிய தொடர்ச்சியை அங்கே காணலாம். இந்நாட்களில் ஒன்றில், இஸ்ர வேலுக்கும் ஏழு சபைக் காலங்கள் இருந்தன என்றும், அவையும், இக்காலத்திய சபைக் காலங்களுக்கு முன்னடையாளமாயிருந்தன என்பதையும் நான் உங்களுக்குக் காண்பிப்பேன். அவர்களுடைய சபைக் காலத்தில், எலியாவின் நாட்களில், எலியாவை அவர்கள் புறக்கணித்தார்கள், அப்பொழுது மூன்று வருடம் ஆறு மாத காலத்திற்கு மழையே பெய்யவில்லை. அந்தப் பண்டைய காலத்து தீர்க்கதரிசி, ''ஆகாயம் வெண்கலம் போலிருந்தது'' என்று கூறுகிறான். தேவனைப் புறக்கணித்து, யேசபேலுக்கு செவி கொடுத்த ஜாதிகள் மேல் தெய்வீக நியாயத் தீர்ப்பானது வந்தது. 196. பலி மிருகம் பலியிடப்பட்ட பலிபீடத்தில் உள்ள வெண்கலமும் கூட தெய்வீக நியாயத் தீர்ப்பை எடுத்துக் காட்டுகிறது. அதின் அஸ்திபாரமே வெண்கலம்தான்; அது நியாயத்தீர்ப்பை காட்டுகிறது. தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை அவர் மிதித்து, நம்மேல் வரவிருந்த நியாயத் தீர்ப்பை தன்மேல் எடுத்துக் கொண்டார். வெளிப்படுத்தின விசேஷம் 19:15க்கு ஒரு நிமிட நேரம் திருப்புங்கள். அங்கே அவர் என்ன செய்தார் என்பதைப் பாருங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 19:15ஐ நான் கண்டு பிடிக்க முடிந்தால், நாம் அதை சற்று வாசிக்கலாம். 12ம் வசனத்திலிருந்து பார்ப்போம். அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தன, அவருடைய சிரசின் மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே (அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை அல்ல, அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்று அழைக்கப்பட்டது என்பதை இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள்). அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்று அழைக்கப்பட்டது. (ஆங்கில வேதாகமத்தில் "அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்று அழைக்கப்பட்டது'' என்றுதான் உள்ளது. தமிழலோ ''அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே” என்று உள்ளது - மொழி பெயர்ப்பாளர்). பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின் மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள். புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக் கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். வெளி.19:12-15 197. அவர் என்ன செய்தார்? நாம் பாவிகளாயிருந்தபடியால், தேவனுடைய கோபம் நம்மேல் இருந்தது. அது சரிதானே? ஒருவரும் தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ள முடியவில்லை. நம்மால் ஒன்றும் செய்ய முடியாதிருந்தது. நாம் யாவரும், “ பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, இவ்வுலகுக்கு பொய் பேசுகிறவர்களாக வந்து சேர்ந்தோம்'. அவர் என்ன செய்தார்? அவர் இவ்வுலகுக்கு வந்து, அல்லேலூயா, தேவ னுடைய உக்கிர கோபமுள்ள மதுவாகிய ஆலையை மிதித்தார்! சர்வ வல்லமையள்ள தேவனுடைய முழு உக்கிர கோபமும் அவர் மேல் ஊற்றப்பட்டது. ''நீர் அடிக்கப்பட்டதினால், ஓ தேவனுடைய ஆட்டுக்குட்டியானவரே, நீரே பாத்திரராயிருக்கிறீர்'' சர்வலோகத்தின் பாவங்களையும் அவர் தன்மேல் எடுத்துக் கொண்டு, நமது பாவங்களை அவர் சுமந்தார், தேவன் தன்னுடைய உக்கிர கோபம் யாவற்றையும் அவர் மேல் ஊற்றிவிட்டார். ''நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்'' (ஏசா.53:5). அவரைப் போல ஒரு மனிதனும் ஒருக்காலும் மரிக்கவில்லை! அவருடைய சரீரத்தி லிருந்து கடைசிச் சொட்டு இரத்தமும், நீரும் வெளியே சிந்தித் தீருமட்டும் அவர் பாடுபட்டார். "... சர்வ வல்லமையுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை... 198. ஓர் நாளில், அந்த வெண்கலம் போன்ற நீதியின் பாதங்கள், (மகிமை!) அவர் நியாயாதிபதியாக வருகையில், அந்திக் கிறிஸ்துவையும், தம் சத்துருக்கள் அனைவரையும் மிதித்துப் போடுவார். அல்லேலூயா! அவர் பூமி முழுவதும் தன் கரத்தில் இருப்புக் கோலுடன் நடந்து செல்வார். ஆமென்! ஓ! பாவியான நண்பனே! மனந்திரும்புவதற்கு தருணம் இருக்கையில் மனந்திரும்புவாயாக! சொல்லப்படுகிற இவ்விஷயங்கள் யாவும் ஒரு சிறுகதைதான் என்றும், அவைகள் நிறைவேறப் போகிறதில்லையென்றும் எண்ணிக் கொண்டு, மனந்திரும்புவதை தள்ளிப்போட முயற்சித் துக் கொண்டேயிருக்கிறாய். அது நிச்சயம் சம்பவிக்கும். ''எனக்கு அது நேரிடாது!'' என்று சொல்லாதே. உனக்கு அது சம்பவிக்கும். 199. அவரது வெண்கலம் போன்ற பாதங்கள் அவருடைய சத்துருக்களை மிதித்துப் போடும். ஏனெனில் அவர் நமது பாவங் களுக்கு கிரயம் செலுத்தும்படி பாடுபட்டு, நம்மேல் வரவேண்டிய தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை அவர் மிதித்தார். பின்பு நாமோ, குற்றமுள்ளவர்களாயும், தரித்திரராயும், பரிதாபப்படத்தக்கவர்களாயும் புழுக்களைப் போல் இருந்து, நமது சிறிய மூக்கை உயர்த்திக் கொண்டு, ஏதோ நாத்திகவாத புத்தகத்தைப் படித்துவிட்டு, “ தேவன் ஒருவர் இல்லை'' என்று எண்ண முயற்சித்தோம். ''அவ்வாறு ஒன்றில்லை, நியாயத்தீர்ப்பு நம்மேல் வரமுடியாது'' என்று கூறினோம். அவர் தன்னுடைய வெண்கலம் போன்ற பாதங்களைக் கொண்டு அவருடைய சத்துருவை உதைத்து எறிந்து விடுவார். அந்தி கிறிஸ்துவின் மேல் பலமாக தன் பாதங்களைக் கொண்டு உதைத்து எறிந்து விடுவார். அவர் அந்த கள்ளச் சபைகளை எடுத்து, காலாகாலங்களாக எரியும் பட்சிக்கும் அக்கினிக் கடலில் வீசியெறிந்துவிடுவார், அங்கே அவள் அந்த பட்சிக்கும் அக்கினியால் முற்றிலும் எரித்து அழிக்கப்பட்டு இல்லாமற் போவாள். அவரும் அவருடைய சபையும் சதாகாலமும் பூமியிலே அரசாளுவார்கள். மகிமை! 200. ''வெண்பஞ்சைப் போன்று சிரசு வெண்மையாயிருத்தல்'' என்பது நீதி, அனுபவம், நாவன்மை நிறைவையும், ஞானத்தையும் குறிக்கிறது. வெண்மை ஞானத்தைக் குறிக்கிறது, வயதைக் குறிக்கிறது. அவர் செய்கிறதைக் குறித்து அவர் அறிந்திருக்கிறார். அவரே ஞானத்தின் ஊற்று. அவரே அனுபவத்தின் ஊற்று. நன்மையான யாவற்றுக்கும் உரிய ஊற்று அவரே. எனவே அவர், சிரசும் மயிரும் வெண்பஞ்சைப் போன்று இருக்கும். முடி தொங்கிக் கொண்டிருப்பவராக மனுஷகுமாரனுக்கொப்பானவரைப் போல் காட்சியளிக்கிறார். தானியேல் அவரை அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னர், அதாவது எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே, கண்டு, “ நீண்ட ஆயுசுள்ளவர்'' என்று கூறினான். மனுஷகுமாரனுடைய சாயலுக்கொப்பானவர் வல்லமையோடு வந்து, நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து இணைந்தார், நியாய சங்கம் உட்கார்ந்தது" என்று தானியேல் எழுதினான். 201. அனலுமின்றி குளிருமின்றி வெது வெதுப்பாயிருக்கும் சபையே, உன்னிடம் நான் பேசுகிறேன், உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். பத்துக் கன்னியர் கர்த்தரைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்களும், ஐந்து பேர்கள் புத்தியில்லாதவர் களுமாயிருந்தனர்; அது ஒட்டுச் சேர்க்கப்பட்ட மரமாயுள்ளது. இன்று காலையில் அதைக் குறித்துப் பார்த்தோம். அவர்கள் தேவனைச் சந்திக்க வெளியே புறப்பட்டுச் செல்கையில், இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள்.... இப்பொழுது கவனியுங்கள், புத்தகங்கள் திறக்கப்பட்டன'' என்று வேதம் கூறுகிறது. தானியேல் 7:9ல் “ புஸ்தகங்கள் திறக்கப்பட்டது''. அது பாவிகளைப் பற்றி கூறும் புத்தகமாகும். “ வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது'' அவருடன் வந்தது யார்? எடுத்துக் கொள்ளப்பட்ட அவருடைய சபை வந்தது. “ ஓ!''ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள், கோடாகோடி பேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்'' அவருடைய மனைவியாகிய மணவாட்டி தான் அது. ஓ, மகிமை! அவருடைய மனைவியாகிய சபை அவருடன் வந்தாள். 202. நியாய சங்கம் உட்கார்ந்தது. புத்தகங்கள் திறக்கப்பட்டன. வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. அது தானே புத்தியில்லாத நித்திரை செய்த கன்னியரைப் பற்றியது, ஒவ்வொரு மனிதனும் அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின் படியே நியாயந் தீர்க்கப்பட்டான். நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை என்று கேட்கப்படுவீர்கள், அதற்கு பிறகு, என்ன? நீங்கள் இப் பொழுது இதை மிகவும் நன்றாக அறிந்து கொண்டு வீட்டீர்கள். இதற்கு முன்பாக அறிந்திருக்க மாட்டீர்கள், ஆனால் இப்பொழுது அறிவீர்கள். நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பாவியும் பக்தியில்லாதவனும் எங்கே நிற்பார்கள்? புறக்கணிக்கிறவன், இதைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டே, அதைப் புறக்கணிக்கிறான். அவர்கள் எங்கே வந்து நிற்பார்கள்? அவரது பாதங்கள் வெண்கலம் போன்று பிரகாசித்தது, அது தெய்வீக நியாயத் தீர்ப்பை எடுத்துரைக்கிறது. 203. இந்தப் பக்கத்தின் கடைசிப் பகுதி வரைக்கும் நாம் இப் பொழுது பார்ப்போம். "... அவருடைய கண்கள் அக்கினி ஜூவாலையைப் போலிருந்தது. அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெரு வெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது." 204. ''பெரு வெள்ளத்து இரைச்சல்'' (the sound of many waters) தண்ணீர்கள் எதைக் குறிக்கிறது? இதை நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், வெளிப்படுத்தின விசேஷம் 17:15க்கு திருப்புங்கள். அங்கே வேதம் தண்ணீர்கள் என்பது எதற்கு அடையாளமாயிருக்கிறது என்று கூறுவதை நீங்கள் காணலாம். தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்”. “ சப்தம்'' - ஜீவ சமுத்திரத்திலே பாதை தவறுகிற ஆத்துமாவுக்கு அது எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! அவனை வழி நடத்திச் செல்ல ஒரு மாலுமி அவனுக்கு இல்லை; அவனது ஜீவிய படகு அச்சமுத்திரத்தின் கோர அலைகளில் கட்டுப்பாடின்றி மிதந்து, அவன் பெருவெள்ளத்து இரைச்சலைக் கேட்பான். பாதை விலகிச் செல்லும் ஆத்துமாவுக்கு அது எத்தனை பயங்கரமாயிருக்கிறது! 'பெருவெள்ளத்துச் இரைச்சல்'. அவருடைய சப்தமானது என்ன? அது நியாயத் தீர்ப்பாயிருக்கிறது; பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவ ஊழியக்காரர்கள் ஒவ்வொரு காலத்திலும் ஜனங்களை நோக்கி சப்தமிட்டு கூறிய வைகள் அங்கே நின்று கொண்டிருக்கின்றன. திரளான ஜனங்கள் மத்தியிலே அதிகமான தண்ணீர்களின் சப்தம் புறப்பட்டுச் சென்றது. அவருடைய கரத்திலிருக்கிற ஏழு நட்சத்திரங்களாகிய ஏழு தூதர்கள் ஒவ்வொரு சபைக் காலத்திலும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்தும், இயேசுவின் நாமத்தில் உள்ள ஞானஸ்நானத்தைக் குறித்தும், தேவனுடைய வல்லமை யினால் அந்நிய பாஷைகளில் பேசுதலும், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பற்றியும், இரண்டாம் வருகையைப் பற்றியும், தெய்வீக நீயாயத்தீர்ப்பைப் பற்றியும் சப்தமிட்ட அவர்களுடைய சப்தமது. மனுஷகுமாரனுடைய சாயலுக் கொப்பான வரிடத்திலிருந்து பெருவெள்ளத்து இரைச்சலைப் போல சப்தமானது புறப் பட்டு வந்தது. 205. நீங்கள் கூட்டங்களில் உட்கார்ந்து, தேவனோடு நீங்கள் உங்களை ஒப்புரவாக்கி கொள்ள வேண்டும் என்றும், பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டு அறிந்து கொள்வது எப்படியாயிருக்கிறது? நீங்கள் உட்கார்ந்திருக்கிற அதே கூட்டத்தில், பாதை தவறிச் செல்லுகிற ஒரு ஆத்துமா அதே சப்தத்தை தன்னோடு பேசக்கேட்டும், தேவனுடைய நியாயத் தீர்ப்புகளைப் பற்றி பேசக்கேட்டும், அதை நிராகரிப்பது அவ்வாத்துமாவுக்கு எப்படியிருக்கும்! உனக்கு சற்றுக் கீழாக அந்த பயங்கரமான பெருவெள்ளமானது இருந்து கொண்டிருக்கிறது, அது உன்னை நித்திய அழிவுக்கு நேராக கொண்டு செல்லும்! 206. பெருவெள்ளத்து இரைச்சல் என்பது அவரது நான்காவதான தோற்றமாயிருக்கிறது. பெருவெள்ளத்து இரைச்சல். மகிமையில் இந்த இராத்திரியிலே இந்த சப்தமானது பதிவு செய்யப் படுகையில், நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களுடைய சப்தமானது பதிவு செய்யப்படுகிறது. உங்களுடைய எண்ணங்கள் பதிவு செய்யப்படுகிறது. 'ஒரு மனிதன் எண்ணுகிறது போலத் தான் அவனும் இருக்கிறான்.'' பூமியில் உங்கள் நினைவுகளைவிட உங்கள் சப்தமானது அதிகம் கேட்கிறது. ஆனால் பரலோகத்திலோ உங்கள் சப்தத்தைவிட உங்கள் நினைவுகளே அதிகமாக உரத்து ஒலிக்கிறது என்பதைக் கவனியுங்கள். நிச்சயமாக அவ்வாறுதான் உள்ளது. உங்கள் எண்ணங்களையும் இருதயத்து விருப்பங்களையும் தேவன் அறிவார். அவை யாவற்றையும் பற்றி அவர் அறிகிறார். 207. அவர் பரிசேயரிடம், "மாய்மாலக்காரரே, நீங்கள் பொல் லாதவர்களாயிருக்க நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்'' என்று கூறினார். ''என்னை நல்ல போதகரே என்று நீங்கள் அழைத்தாலும், உங்கள் உள்ளத்தை ஆராய்ந்து பார்த்து, நீங்கள் மாய்மாலக்காரர் என்றே நான் காண்கிறேன், நீங்கள் மனப்பூர்வமாக என்னை அவ்வாறு அழைக்கவில்லை'' என்று அவர்களிடம் கூறினார். 208. அநேக சபைக் காலங்களினூடே ஒலித்த அந்த சப்தங்கள் ஒன்று சேர்ந்து அந்நாளில் இடிமுழக்கம் போல் முழக்கமிடும் போது அது எவ்வாறு இருக்கும்? 209. இப்பொழுது நான் உங்களை சில விஷயங்களைக் குறித்து கேட்கட்டும். இரட்சிக்கப்பட்ட மக்களே! உங்களுக்கு ஒரு விஷயத்தை நான் கூறட்டும். 210. இப்பொழுது, பாதை விலகிச் செல்கிற வறிய ஆத்துமாவே, அப்பெருவெள்ளத்திற்குள் அலைந்து செல்கிற ஆத்துமாவே, ஜாக்கிரதையாயிரு. அப்பொழுது உன்னை இரட்சிக்க ஒன்றுமில்லை என்பதை நீ அறிய வரும்போது அது மிகவும் பயங்கரமாயிருக்கப் போகிறது. அப்பொழுது நீ இரட்சிக்கப்பட முடியாது, உனக்கு முன்பாக உன்னுடைய அழிவானது இருக்கிறது என்பதை நீ அப்பொழுது அறிவாய். அதை நீ அறிந்த சில நிமிடங்களுக் குள்ளாகவே, 'அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று, பிசாசுக்காகவும், அவனது தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய அக்கினிக்குள் போய் மாளுங்கள்'' என்ற சப்தமானது கேட்கும். இந்த மகத்தானதை விட்டு விலகிச் செலவதால், அந்நாளில், நீங்கள் இவ்விதமான அநேகக் கூட்டங்களின் சப்தங்களையெல்லாம் ஒருசேர பெரிய நீர்வீழ்ச்சியின் பெரு வெள்ளத்து இரைச்சலைப் போல் கேட்பீர்கள். ஓ, எவ்வளவு பயங்கரமானதாக அது இருக்கப்போகிறது! அது திகில் சூழ்ந்ததாக இருக்கப் போகிறது. அவ்வாறு உங்களுக்கு சம்பவிக்க இடம் கொடுக்க வேண்டாம், ஜனங்களே! மனந்திரும்புங்கள், உங்களுக்கு சமயமிருக்கும்போதே, இப்பொழுதே ஒப்புரவாகுங்கள். 211. நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். எப்பொழுதும் பசுமையாயிருக்கும் மரத்தின் கீழ் அமர்ந்து, சலசலவென அமைதியாக ஓடிவரும் நீரோடையின் இனிய ஓசையைவிட கேட்பதற்கு இனிமையானது வேறென்ன உண்டு, நங்கூரமிட்ட ஒரு மனிதனுக்கு? அது தேவனுடைய சப்தத்தோடு உன்னதங்களில் வீற்றிருக்கும் அந்த சபைதான், அது அவ்வாறு இனிமையாக அவர்களோடு பேசுகிறதாயிருக்கிறது, அது என்னவென்று கண்டீர்களா? அது பாவிக்கு ஆக்கினையாகவும், இரட்சிக்கப் படுகிறவருக்கு ஆசீர்வாதமாகவும் உள்ளது. கிறிஸ்து இயேசுவாகிய கன்மலையிலே பாதுகாப்பாக தன் படகை நங்கூரமிட்டுக் கொண்டவன் அமர்ந்து செவி கொடுக்கிறான், அவன் இளைப்பாறுகிறான். அந்த இளைப்பாறுதலுக்குள் பிரவேசியுங்கள். 212. தண்ணீர்கள் ஓடி வருகிற இடங்களருகில் செல்ல நான் எவ்வளவாய் விரும்புகிறேன். நாங்கள் மீன் பிடிக்க அல்லது வேறு எதற்காவது சென்றால், நான் வழக்கமாக, இனிமையான சத்தத்தோடு சலசலவென மெதுவாக ஓடிவரும் இடத்தை எனக்கென தெரிந்து கொள்வேன், ஏனெனில் அது உங்களை இளைப்பாறச் செய்கிறது. அது உங்களோடு இரவு முழுவதுமாக பேசுவதை நீங்கள் கேட்கிறீர்கள். ஓ, என்னே! 213. கிறிஸ்துவுக்குள்ளாக உங்கள் ஆத்துமாவை நீங்கள் உண்மையாகவே நங்கூரமிட்டுக் கொள்வது அழகாக இருக்குமல்லவா? அவ்வாறான இடத்தில் நீங்கள் அவருக்கு முன்பாக அமைதி கொள்ள முடியுமே. அங்கே அவருடைய சத்தம் உங்களோடு “ நான் உன் பரிகாரியாகிய கர்த்தர், உனக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறவர் நானே, நான் உன்னை நேசிக்கிறேன், உலகத்தோற்றத்திற்கு முன்பே உன்னை நான் அறிந்தேன், புத்தகத்தில் உனது பெயரை நான் பதிந்துள்ளேன். நீ என்னுடையவன், பயப்படாதே, நான் தான், பயமடையாதே, நான் உன்னோடு இருக்கிறேன்'' என்று பேசுகிறது? பின்பு நீங்கள் பாடலாம் : இளைப்பாறுதல் ஈந்திடும் துறைமுகத்தில் நான் என் ஆத்துமாவை நங்கூரமிட்டுள்ளேன் இனி சீறும் கடலினில் பயணம் செய்யேன், கடும்புயற்காற்று கொந்தளிக்கும் ஆழத்தில் வீசினாலும், நான் என் இயேசுவிலே என்றென்றும் பத்திரமாயுள்ளேன். 214. உங்களோடு இனிமையாக பேசும் அதே சத்தம், பாவியை ஆக்கினைக்குள்ளாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நோவாவை காப்பாற்றிய அதே ஜலப்பிரளயம், பாவியை அழித்தது. நான் கூறுவதை புரிந்து கொண்டீர்களா? திரளான தண்ணீர்களின் சத்தம். 215. இப்பொழுது கவனியுங்கள்; ''சிரசும் மயிரும் வெண் பஞ்சைப் போல் இருந்தது, அக்கினி ஜூவாலையைப் போல் பிரகாசிக்கும் கண்கள், வெண்கலம் போன்ற பாதங்கள், அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது”. "... தமது வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்". 216 . “ ஏழு நட்சத்திரங்கள்''. இங்கே நாம் 20ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். “ என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த எழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.'' வெளி.1:20 217. இதை யோவானுக்கு ஆண்டவரே, அது என்ன என்பதை அவன் தவறாக அர்த்தம் கொள்ளக் கூடாதபடி, உரிய வியாக்கியானத்தை கொடுக்கிறார். ஒவ்வொரு சபைக் காலத்திற்குமுரிய ஒவ்வொரு தூதன். இவ்வாரத்தில் நாம் அத்தூதர்களைப் பற்றி வரலாற்றில் பின்னால் திரும்பிப் பார்த்து, அவர்களுக்கு எவ்வாறு சரியாக அவரவர்களுக்கு உரிய ஊழியமானது இருந்தது என்பதைக் காணும்போது, அது அழகாக இருக்கப் போகிறது. வேதத்தில் கூறியபடியே அவர்களுக்கு ஊழியமானது இருந்தது என்பதை வரலாற்றில் நாம் காணலாம். அச்சிறிய சபையில் சபைக் காலங்கள் தோறும் ஊழியமானது அவ்வாறு சரியாக இருந்தது. 218. சில காலத்திற்கு முன்னர் ஒருவர் கூறினார், “ கத்தோலிக்க சபையானது எல்லாக் காலங்களிலும் நிலையாக நிலைத்து நிற்பதால், அதுவே உண்மையான சபை என்னும் ஒரு கூற்று கத்தோலிக்க சபையைக் குறித்து உண்டே , நீர் அறிவீரா?'' என்று. 219. நான் அதற்கு பதிலளிக்கையில், ''அது ஒன்றும் பெரிய இரகசியமல்ல, ஏனெனில் அச்சபைக்கு அரசாங்கமும் மற்றும் யாவும் ஆதரவாக இருந்தபடியால், அது நிலைத்து நின்று, புயல்களை சமாளித்தது. ஆனால் எனக்கு மிகவும் இரகசியமானதாக இருப்ப தென்னவெனில் எவ்வாறு அச்சிறிய சிறுபான்மையினரான சபை யானது வாளால் அறுப்புண்டு, சிங்கங்களுக்கு இரையாக போடப்பட்டு, அக்கினிக் கிரையாக்கப்பட்டு, மற்றும் எல்லாவித உபத்திர வங்களுக்கும் உட்படுத்தப்பட்டபோதிலும், சீறும் புயல்களை யெல்லாம் சமாளித்து பிழைத்து நின்றது என்பதுதான்'' என்று கூறினேன். அவர்களோடு தேவனுடைய கரம் இருந்தது என்பதை அது காட்டுகிறது. அவ்வளவுதான் இன்றும் அவளது வெளிச்சமானது எரிந்து கொண்டிருக்கிறது. ஆமென்! ஆம் ஐயா! 220. “ எனது வலது கரத்திலுள்ள ஏழு நட்சத்திரங்கள்'' என்ப தைப் பற்றிப் பார்ப்போம். அவருடைய வலது கரத்தில் ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார். ஏழு நட்சத்திரங்களும், ஏழு காலங்களிலுள்ள ஏழு ஊழியக்காரர்கள் என்று அர்த்தமாகிறது. ஓ, இது அழகாக உள்ளது. நாம் பின்னால் திரும்பிப் பார்த்து, எபேசு சபைக்கு செய்தியைக் கொண்டு வந்த ஊழியக்காரன் யார் என்பதை தெரிந்து கொண்டு, பிறகு அடுத்து உள்ள சிமிர்னா சபைக்கு உள்ள தூதன் அதே செய்தியை தன் காலத்து சபைக்கு கொண்டு வந்து மரணபரியந்தம் அதில் நிலைத்திருந் தான் என்றும், இவ்வாறு தொடர்ந்து பெர்கமு, தீயத்தீரா சபைக் காலங்கள்தோறும், கடைசியாக இந்தக் காலம் வரையிலும் செய்தியானது தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது என்பதையும் பார்க்கலாம். அந்த மகத்தான ஒளியைக் கொண்டிருந்த அத்தூதர்கள் அதை தங்கள் காலங்களுக்கு கொண்டு வந்தபோது, அவ்வொளியானது, ஆதியில் இருந்த வண்ணமாகவே மாறாமல் இருந்தது. அதைக் காலங்கள் தோறும் அவர்கள் கொண்டு வந்தார்கள். 221. ''அவர் தமது வலது கரத்திலே இந்நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார்''. இதை எண்ணிப் பாருங்கள்! இந்த இடத்தில் வலது கரம் என்பது, அப்படியே தேவனுடைய வலது பாரிசத் திலே கிறிஸ்து அமர்ந்திருக்கிறார் என்பதைப் போல அர்த்தம் உடையது அல்ல. தேவனுக்கு ஒரு வலது கரம் உண்டு என்பதாக இதன் மூலம் அர்த்தம் உண்டாகாது. ஏனெனில் தேவன் ஆவியாயிருக்கிறாரே. ஆனால் கிறிஸ்துவோ வல்லமையின் வலது கரமாயிருக்கிறார். உங்களுடைய வலது கரத்தின் மனிதன் ஒருவன் இருக்கிறானென்றால், அப்படிப்பட்டவன் உங்களுக்கு நெருக்க மாக உங்கள் அருகாமையில் இருப்பவன். 222. அவருடைய வலது கரத்திலே அவ்வேறு நட்சத்திரங்களும் இருந்தன என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் தங்களுக்குரிய மின்னோட்டத்தை, தங்களுக்குரிய ஒளியை அவரிடத்திலிருந்து கிரகித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அவருடைய வலது கரத்தில், முழுவதும் அவருடைய ஆளுகைக்குள் உட்பட்டிருந்தார்கள். ஓ! ஒவ்வொரு உண்மையான தேவனுடைய ஊழியக்காரனும் அவ்வாறே இருக்கிறான். அவருடைய கரத்தில் இருக்கிறார்கள்... யார் அவர்களுக்கு தீங்கிழைக்க முடியும்? யார் தீங்கிழைக்க முடியும்? தூதன் என்றால் “ செய்தியாளன்'' என்று பொருள்படும். “ கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?'' என்று பவுல் கூறினான். “ வியாதி பிரிக்கக் கூடுமோ? நாசமோசமோ? நிர்வாணமோ, பட்டயமோ, மரணமோ? கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய அன்பைவிட்டு எதுவும் நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்'' என்று பவுல் கூறினான். ஏனெனில் நாம் முழுவதுமாக அவருடைய வலது கரத்திற்குள் அடங்கியிருக்கும்படி ஒப்புக் கொடுத்திருக்கிறோம். 223. சிலர், ''உருளும் பரிசுத்தர், உருளும் பரிசுத்தர்'' எனப் பரிக சிக்கலாம். அது ஒன்றும் அவர்களை சிறிது கூட பாதிப்பதில்லை. “ நீ ஒரு மத வெறியன்'' என்று ஏசலாம். ஆனால் அவ்வார்த்தையை அவர்கள் கேட்கக் கூடச் செய்வதில்லை. அவர்கள் முழுவதும் அவருடைய வல்லமையின் வலது கரத்தில் அடங்கியிருந்து, அங்கிருந்து தங்களுடைய ஒளியை கிரகித்துக் கொண்டு, சாந்தத்திலும், தயவிலும், மனத்தாழ்மையிலும், பொறுமையிலும் நடந்து கொண்டு, அவருடைய ஜீவனை அடைந்து கொண்டு, அடையாளங்களையும், அற்புதங்களையும் உடையவர் களாயிருக்கிறார்கள். உலகமானது, ''அது பில்லிசூன்யம்'' என்று வேண்டுமானாலும் அழைக்கட்டும், அது நமக்கு எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தாது. ஏனெனில், நாம் அவருடைய வலது கரத்தினுள் அடங்கியிருக்கிறோம் என்பதை அறிவோம். அது அற்புதமல்லவா? என்னே ! 224. நாங்கள் உங்களை களைப்படையச் செய்ய விரும்பவில்லை, எனவே, நாம் விரைவாகச் செல்லுவோம். ''அவருடைய வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்கள்'' இப்பொழுது ஏழாவதும் கடைசியுமான அவருடைய தோற்றம்: ''.... அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது" (ஓ, இது ஆறாவதான அவரது தோற்றம் என்று தான் நான் கூற விழைந்தேன்). ".... அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது.” 225. இப்பொழுது, அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது. அவருடைய வாயிலிருந்து... அவருடைய வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார். ".... அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது". 226. இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என்பது வேதாகமத்தையே குறிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் அதைப் பற்றி அறிந்து கிரகித்துக்கொள்ளத்தக்கதாக எபிரெயர் 4:12ஐ எடுத்துக் கொள்வோம். வெளிப்படுத்தின விசேஷத்திற்கு ஓரிரண்டு பக்கம் சற்று முன்னால் எபிரெயர் உள்ளது. யூதா, பிறகு எபிரெயர். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள்.... எபிரெயர் 4ம் அதிகாரம், இதோ உள்ளது. சரி, எபிரெயர் 4ம் அதிகாரம் 12ம் வசனம். தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்கு களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. 227. தேவனுடைய வார்த்தையானது அவருடைய சபையில் பிரத்தியட்சமாகிறது. ஆனால் அவர்கள் “ எண்ணங்களைப் படித்தறியும் மனோவசியக்காரர்கள்'' என்று கூறுகிறார்கள். தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள பட்டயமாயிருக்கிறது. 228. அதிலிருந்து ஒன்றைக் குறித்து நான் சிந்திக்க நேரிட்டது. ஒரு குறிப்பிட்ட வேதவாக்கியத்தை நான் இங்கே எழுதி வைத்துள்ளேனா இல்லையா என்பது தெரியவில்லை... வெளிப்படுத்தின விசேஷம் 19ம் அதிகாரத்தை எடுங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 19:11 முதல் 13 முடிய. “ பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக் குதிரை காணப்பட்டது, அதின் மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவ ரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந் தீர்த்து யுத்தம் பண்ணுகிறார். (அவர் யாரென்று நீங்கள் அறிவீர்கள், இல்லையா?) (இங்கே வெண்மை மீண்டும் வருகிறது, அது நியாயத் தீர்ப்பைக் குறிக்கும்). அவருடைய கண்கள் அக்கினி ஜூவாலையைப் போலிருந்தன, (இவர் யார்?) அவருடைய சிரசின் மேல் அநேக கிரீடங்கள் இருந்தன (ஊ ஊ... இப்பொழுது அவர் இராஜ்யத்தில் வந்து விட்டார்) அவருக்கேயன்றி வேறொருவருக்குந்த தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. வெளி.19:11-13 229. அவருடைய வாயிலிருந்து என்ன புறப்பட்டுச் சென்றது? என்ன புறப்பட்டுச் சென்றது? வெள்ளைக் குதிரையின்மேல் செல்லுகிறவர்? வெளிப்படுத்தின விசேஷம் 6ம் அதிகாரத்தில் அங்கே ஒரு வெள்ளைக் குதிரையின்மேல் ஏறிப்போகிறவன் இருந்தான், அவனிடம் வில் கொடுக்கப்பட்டிருந்தது, அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். 230. இவருடைய வாயிலிருந்தோ ஒரு பட்டயம் புறப்பட்டுச் சென்றது. அவர் என்னவாயிருந்தார்? வெளிப்படுத்தின விசேஷத்தின் வெள்ளைக் குதிரையின் மேல் ஏறிப் போகிறவர்? பட்டயத்தைக் கவனியுங்கள். ''அவருடைய வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டுச் சென்றது''. அது வார்த்தையாகும். இறுதியாக, அவருடைய வார்த்தையினாலே, அது எல்லா தேவ புத்திரருக்கும் பிரத்தியட்சமாகும் போது, அவர் கருக்குள்ள பட்டயமாகிய அவருடைய வார்த்தையினாலே, எல்லா ஜாதிகளையும் அவருடைய பாதத்தின் கீழ் நசுக்கிப் போடுவார். இவ்வசனத்தை நாம் படிக்கையில் என்ன நேரிட்டது என்பதைக் கவனியுங்கள். ".. அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது. அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது". 231. “ இருபுறமும் கருக்குள்ள ஒரு பட்டயம்''. இந்த நபரின் வாயிலிருந்து என்ன புறப்பட்டுச் சென்றது? தேவனுடைய வார்த்தை . அது இருபுறமும் கருக்குள்ள பட்டயமாகும். அது என்ன செய்தது? இருதயத்தின் யோசனைகளையும் எண்ணங்களையும் வகையறுக்கிறதாயிருக்கிறது. அது சதையையும், இரத்தத் தின் திசுக்களையும், எலும்பினுள் இருக்கும் கணுக்களையும் ஊனையும் ஆழமாக ஊடுருவிப் பாய்ந்து, அதற்கும் ஆழமாக உள்ளே கடந்து சென்று, இருதயத்தின் யோசனைகளையும், எண்ணங்களையும் வகையறுக்கிறது. அதை தான் தேவனுடைய வார்த்தையானது செய்கிறது. 232. ''அந்த தேவனுடைய வார்த்தையானது மாம்சமாகி நமக்குள் (நமது மத்தியில்) வாசம் பண்ணினார்''. இப்பொழுது, தேவனு டைய வார்த்தையானவர் தமது சபையில் மாம்சமாகி நமது மத்தியில் வாசம் பண்ணுகிறார். அவருடைய கையில் இருக்கிற தூதர்கள் ஊழியம் செய்கிறார்கள். தேவன் தனது சபையை நம்பியிருக்கிறார். தேவன்தாமே, இந்த சுவிசேஷ ஒளியை, மரித்துக் கொண்டிருக்கிற, பிசாசினால் கட்டப்பட்டிருக்கிற, சாஸ்திர சம்பிரதாயங்களினால் நிறைந்த இவ்வுலகின் மக்களுக்குக் கொண்டு போக வேண்டும் என்பதற்காக, இக்காலத்திலுள்ள நம்மைச் சார்ந்திருக்கிறார். தேவன் அதற்குண்டான பாரத்தை என் மேலும் உங்கள் மேலும் வைத்திருக்கிறார். ஒரு அஞ்ஞானி சுவிசேஷத்தை அறியாமல் மரித்தால், நமக்கு ஐயோ! அவர்கள் (ஸ்தாபனங்கள்) அஞ்ஞானிகளுக்கு படிக்கவும், எழுதவும், கணக்குப் போடவும் கற்றுக் கொடுத்து, அவர்களுக்கு சில துண்டு பிரதிகளைக் கொடுத்து, வெறுமனே தங்களது மார்க்கத்தை தழுவிக் கொள்ளும்படி மட்டுமே செய்ததேயல்லாமல் வேறொன்றும் செய்யவில்லை. நானோ சுவிசேஷத்தைக் குறிப்பிடுகிறேன். சுவிசேஷம் வெறும் வார்த்தையல்ல. பவுல் அவ்வாறு கூறினான். பவுல், “ சுவிசேஷமானது நம்மிடத்தில் வெறும் வார்த்தையாக மட்டும் வரவில்லை, அவ்வார்த்தையானது வல்லமையாக பிரத்தியட்சமாகியது. பரிசுத்த ஆவியைப் பெற்ற ஒரு இருதயத்தினுள் பரிசுத்த ஆவியின் வல்லமையால் வார்த்தையானது விதைக்கப்படும் போது, வார்த்தை என்ன செய்யும் என்று கூறப்பட்டுள்ளதோ அதையே உருவாக்குகிறது. வார்த்தையானது இருதயத்தின் எண்ணங்களை வகையறுக்கிறது. மகிமை! ஓ, என்னே! ஓ! வார்த்தை யானது இருதயத்தின் யோசனைகளையும் எண்ணங்களையும் வகையறுக்கிறதா யிருக்கிறது. 233. அவருடைய வாயிலிருந்து புறப்பட்டுச் சென்ற இரு புறமும் கருக்குள்ள பட்டயமானது புறஜாதிகளை விழிப்படையச் செய்கிறது. இந்நாட்களில் ஒன்றில் ஏதோ ஒன்று சம்பவித்தாக வேண்டும். ஆம்! தேவனுடைய வார்த்தை, அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை, பிரத்தியட்சமான வார்த்தை. பாருங்கள், “ உலகம் முழுவதும் புறப்பட்டுப் போங்கள்'' என்று இயேசு கூறினார். மாற்கு சுவிசேஷம் 16ம் அதிகாரத்தில், சபைக் காலத்தில் தன்னை வெளிப்படுத்துவதற்காக அவர் திரும்புவதற்கு முன்னர், சபைக்கு தன்னுடைய இறுதியான கட்டளையை அவர் கொடுப்பதை அங்கே பார்க்கிறோம். “ உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' என்று அவர் தன் சபைக்கு அதிகாரம் கொடுத்தார். அது என்ன? சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும். மாற்கு எழுதின சுவிசேஷம் 16ம் அதிகாரம். “ சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' என்று அவர் தன் சபைக்கு அதிகாரம் கொடுத்தார். அது என்ன? சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும். மாற்கு எழுதின சுவிசேஷம் 16ம் அதிகாரம். ''சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும்.'' சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல் என்றால் என்ன? அதற்கு அர்த்தம் என்னவெனில், “ பரிசுத்த ஆவியின் வல்லமையை அதன் அற்புதக் கிரியைகள் மூலமாக வெளிப் படுத்திக் காண்பிப்பது'' என்பதாகத்தான் அது இருக்க முடியும். 234. இப்பொழுது கவனியுங்கள். அப்படியாயின், அது வெறுமனே வார்த்தையைப் போதித்தல் மட்டுமல்ல. அவர் ஒரு போதும், வார்த்தையைக் குறித்து போதியுங்கள் என்று கூறவில்லை. “ சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' என்றே அவர் கூறினார். வார்த்தையை உபதேசியுங்கள் என்பதாக அல்ல, சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் என்பதாகவே அது உள்ளது. “ சுவிசேஷத்தை விசுவாசிப்பவர்கள் இவ்வடையாளங்கள் பின் தொடரும்: என் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள், சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்''. 235. இயேசு இவ்வாறு அவர்களுக்கு கட்டளையிட்ட பின்பு, வேத வாக்கியத்தில் தொடர்ந்து, இவ்வாறு கூறப்பட்டுள்ளது.''... அவர்கள் புறப்பட்டுப் போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனே கூடக் கிரியை நடப்பித்து, அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்'' அது தான் சுவிசேஷம், சுவிசேஷமானது அவ்வாறுதான் ஒரு காட்சியாக இருக்கிறது. வெறும் வார்த்தையல்ல. 236. எவ்வளவு காலம் இவ்வடையாளங்கள் பின் தொடரும்? உலகத்தின் ஒவ்வொரு காலத்தினூடே, அதன் முடிவு பரியந்தமும் இருக்கும். ஒவ்வொரு காலத்தினூடேயும் அந்த சிறு கூட்டமானது அவ்வொளியை விடாமல் பற்றிக் கொண்டவாறே தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. ''பயப்படாதே, சிறு மந்தையே, உனக்கு ராஜ்யத்தைக் கொடுக்க பிதா பிரியமாயிருக்கிறார்'' என்று இயேசுவானவர் கூறியதில் ஒன்றும் வியப்பில்லை. அது எப்பொழுதுமே சிறு மந்தையாகத்தான் இருந்து வந்துள்ளது, அது ஒரு போதும் பெருங்கூட்டமல்ல. 237. இன்னும் ஒரு வேதவாக்கிய மேற்கோள். நாம் 20ம் வசனத்தை பார்த்தோம். இப்பொழுது 16ம் வசனத்தைப் பார்ப்போம். "... அவருடைய வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார்”. 238. இப்பொழுது அவருடைய முகச்சாயலைப் பற்றியுள்ள வசனத்தை நாம் எடுத்துக் கொள்வோம். ".... அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது.... அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது...'' 239. மத்தேயு எழுதிய சுவிசேஷம் 17ம் அதிகாரத்தைப் பார்ப்போம். இவ்வதிகாரத்தை நாம் எடுத்துக் கொள்வோம். இதில் உள்ள வசனங்களை குறித்துக் கொள்கிறவர்கள் குறித்துக் கொள்ளட்டும், நாம் இதை வாசிப்போம். மத்தேயு 17:1-2. "ஆறு நாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும், அவனுடைய சகோதரனாகிய யோ வானையும் கூட்டிக் கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின் மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப் போலப் பிரகாசித்தது. அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. 240. அவர் மறுரூபமானார். அவர் என்ன செய்தார்? அவர் தம்முடைய வருகையின் நாளுக்குள்ளாக அப்போது இருக்கப் போகும் அவரது ரூபத்திற்குள்ளாக மறுரூபமானார். இப்பொழுது கவனியுங்கள். இந்தக் காட்சிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக இயேசுவானவர் இதற்கு முந்தைய அதிகாரத்தில், கடைசி வசனத்தில், “ இங்கே நிற்கிறவர்களில் சிலர்...'' நான் என்ன சொல்லப் போகிறேன் என்பதை உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள்? “ இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம் முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசி பார்ப்பதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.'' அது சரிதானே? பழைய ஏற்பாட்டில், எந்தவொரு காரியமும், வார்த்தையும், மூன்று சாட்சிகளினால் உறுதிப்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டதற்கேற்ப, இயேசு, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூன்று சாட்சிகளையும் மலையின் மேல் கூட்டிக் கொண்டு போனார். 241. முதலாவதாக என்ன வருகிறது என்று பாருங்கள். ஓ, என்னால் இங்கு நிறுத்த முடியவில்லையே, இதைப் பெற்றுக் கொண்டாக வேண்டும். பாருங்கள்! அவர்கள் கண்ட முதல் காரியம் என்ன? அவர் அவர்களை மலையின் மேல் அழைத்துக் கொண்டு போனார், அவர்களுக்கு முன்பாக அவர் மறுரூபமானார். சூரியன் தன் வல்லமையோடு பிரகாசிக்கையில் இருக்கும் பிரகாசத்திற்கொப்பாக அவரது வஸ்திரம் பிரகாசித்தது. மோசேயும் எலியாவும் அவருக்கு முன்பாக தோன்றினர். இப்பொழுது மனுஷகுமாரன் எந்த ரூபத்தில் வந்து கொண்டிருக் கிறார்? முதலில் தோன்றுபவர்கள், மோசேயும், எலியாவுமாகும். 242. இப்பொழுது கவனியுங்கள். இயேசு பூமிக்கு திரும்பி வருவதற்கு முன்னர், அந்த வேளைக்கு முன்பாக, எலியாவின் ஆவி பூமிக்குத் திரும்பி வந்து, பிள்ளைகளின் இருதயத்தை பிதாக்களின் இருதயத்திற்கு திருப்பும். வேதம் அவ்வாறு கூறியுள்ளது. இயேசு அவரைப் பார்த்தார், அப்போஸ்தலர்களும் அவரை இங்கே பார்த்தார்கள். அதுவே மகிமைப்படுத்தப்பட்ட மனுஷ குமாரன் வருகையின்போது உள்ள நிகழ்வுகளின் ஒழுங்காகும். அவர் மகிமைப்படுத்தப்பட்டு திரும்பி வருவார். அவரைப் பார்ப்பதற்கு முன்பாக அவர்கள் கண்டது என்ன? எலியாவைக் கண்டார்கள். அதன் பிறகு என்ன? மோசே வருகிறான். அங்கே நியாயப் பிரமாணத்தை கைக் கொள்ளுகிற இஸ்ரவேலானது திரும்பி வந்து கொண்டிருக்கிறது. அதன் பிறகு மகிமைப்படுத்தப்பட்ட மனுஷகுமாரன் வருகிறார். அல்லேலூயா! அவருடைய வருகையின் போது நடக்க வேண்டிய காரியங்களின் ஒழுங்கைப் பார்த்தீர்களா? எலியாவின் ஆவி அல்லது கடைசி சபைக் காலத்தினுடைய சாட்சி, பாருங்கள், அவரை பிரத்தியட்சப்படுத்த வல்லமையோடு வருகிறார். 243. அதன் பிறகு சீனாய் மலையின் மேல் அந்த இலட்சத்து நாற்பத்தி நாலாயிரம் பேர் கூடி வருகிறார்கள். அங்கே இஸ்ரவேல் ஒரு தேசமாக ஆகிவிட்டது. உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த ஜாதியினர் அவர்கள்; உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த கொடியையுடையவர்கள் அவர்கள்தான். அவர்களுக்கென சொந்த தேசம், சொந்தக் கொடி, சொந்த இராணுவம், சொந்த நாணயம், மற்றும் யாவும் அவர்களுக்கென உண்டாயிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் சபையில் அவர்களுடைய நாடும் ஒரு உறுப்பினராகி விட்டது. ஏனெனில் அவர்களும் ஒரு தேசமாகிவிட்டனர். இவையாவும் நிறைவேறும் வரையிலும் இந்த இஸ்ரவேல் என்னும் ஜாதியினர் ஒழிந்து போவதில்லையென்று இயேசு கூறியிருக்கிறாரே. 244. புறக்கணிப்பின் காலங்களிலே எவ்வாறு புதிய ஏற்பாட்டுச் சபையானது இக்காலங்கள் தோறும் இருந்து வந்துள்ளதோ, அதே நிலையில் காணப்பட்ட இந்த யூதர்களும் எங்கு சென்றாலும் துன்புறுத்தப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, துரத்திவிடப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டு, தூக்கி யெறியப்பட்டு இருந்த நிலையைப் பார்க்கையில் அவர்கள் இன்னும் இருப்பது ஒரு இரகசியமானதாகக் காணப்படுகிறது. இவ்வாறு இருந்த போதிலும், இயேசு கூறினார், ''அத்தி மரமானது துளிர்விடுவதை நீங்கள் காண்கையில், அந்த ஜாதியினர் மீண்டும் ஒரு தேசமாக மலரும்படி தங்கள் சுயதேசத்திற்கு திரும்பி வருவதை நீங்கள் காண்கையில் நேரமானது வாசல் வரைக்கும் நெருங்கிவிட்டது'' என்று. 'இவையெல்லாம் நிறை வேறும் வரைக்கிலும், இந்த சந்ததி ஒழிந்து போவதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்று இயேசு கூறினார். இந்த ஜனங்கள் ஒழிந்து போகமாட்டார்கள். ஹிட்லர் அவர்களை ஒழித்துக் கட்ட முயற்சித்தான், முஸோலினி இவர்களை கருவறுக்க முயற்சித்தான். ஸ்டாலின் இவர்களை சர்வ நாசம் செய்ய முயற்சித்தான். மற்றும் பலரும் முயன்றனர். ஆனால் இவர்கள் ஒழித்துக்கட்டப்பட முடியாதவர்கள், தேசமாக மலர்ந்திடுவார்கள். ஆமென்! 245. மோசேயும் எலியாவும் வருவார்கள். அதை நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள் என நம்புகிறேன். 246. ''வல்லமையாய்ப் பிரகாசிக்கும் சூரியன்''. அவ்வாறு அவரது முகரூபம் மறுரூபமாகியது. வெளிப்படுத்தின விசேஷம் 21:23 - விரும்பினால் குறித்துக் கொள்ளுங்கள். வெளி.21:23ல் , புதிய ஏருசலேமில், நகரத்தில், அவர் ஆட்டுக்குட்டியானவராக இருப்பார், அதின் வெளிச்சமும் அவரே, எனவே அவர்களுக்கு நகரத்தில் ஒளியேற்ற வேறு எந்த வெளிச்சமும் தேவையில்லை, சூரியனும் அவர்களுக்கு பிரகாசிக்க வேண்டியதில்லை; ஏனெனில் நகரத்தின் மத்தியில் இருக்கும் ஆட்டுக்குட்டியானவரே நகரத்திற்கு வெளிச்சமாயிருப்பார். இரட்சிக்கப்பட்ட ஜனங்கள் ஆட்டுக்குட்டியானவரின் வெளிச்சத்தில் நடப்பார்கள்! ஆமென்! அவரே ஒளியாயிருக்கிறார். அதைக் குறித்து நீங்கள் மகிழ்ச்சியடையவில்லையா? 247. அது மாத்திரமல்ல, அவருடைய வருகையிலே (யோவான் அவரை கர்த்தருடைய நாளில் கண்டான்) அவர் நீதியின் சூரியனாகவும் இருப்பார். மல்கியா புத்தகத்தை எடுத்துக் கொள்வோம். பழைய ஏற்பாட்டின் கடைசி தீர்க்கதரிசியாகிய மல்கியாவின் புத்தகம் 4ம் அதிகாரம். 248. அங்கே பின்னால் அமர்ந்திருக்கிற என்னுடைய அருமையான மனைவியைக் குறித்து கூற என்னிடம் ஒரு சிறு கதை உண்டு. நாங்கள் விவாகம் செய்து கொள்வதற்கு முன்பு, நான் அவளுக்கு ஒரு கடினமான சூழ்நிலையைக் கொடுத்தேன். நாங்கள் திருமணம் செய்து கொண்டதற்குப் பின்பு, அவள் அதை மறந்து விடச் செய்ய நான் முயன்றிருக்கிறேன். நான் மீண்டும் திருமணம் (சகோ.பிரான்ஹாம் அவர்களின் முதல் மனைவி இறந்த பின்னர்மொழி பெயர்ப்பாளர்) செய்து கொள்ள வேண்டுமா வேண்டாமா என்பதைப் பற்றி எனக்கு தெளிவாகத் தெரியவில்லை. அதனால் அவள் மனமுடைந்து போனாள். அவள் மிகவும் நல்லவளாயிருந்தாள், அவளை ஏதாவது ஒரு நல்ல மனிதன் மணந்து கொள்ளட்டுமே, அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்வான் என்றெண்ணினேன். நான் அவளை விவாகம் செய்து கொள்ளத் தகுதியுள்ள வனல்ல, அவளைப் போல் தயவு உள்ளவன் அல்ல நான் என்று எண்ணினேன். இதையறிந்த அவள் மிகவும் மனமுடைந்து போனாள், என்ன செய்வது என்றறியாது இருந்தாள். இது அநேக ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பாக, நடந்த சம்பவம். அவள் இதனால் மனம் நொறுங்கி, இரவும் பகலும் கதறிக் கொண்டிருந்தாள். நான் அவளை விவாகம் செய்து கொள்ளாமல் அவளை விட்டுப் பிரிந்து செல்ல முயன்றேன். நான் அவளை நேசிக்கவில்லையென்பதினால் இவ்வாறு செய்யவில்லை; ஆனால் நான் அவளது சமயத்தை வீணாக்க விரும்பவில்லை, ஏனெனில் அவள் மிகவும் நல்ல பெண்ணாக இருந்தபடியினால், அவளே என்னைவிட ஒரு நல்ல மனிதனை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என்றெல்லாம் எண்ணினேன். அவள் என்னை நேசித்தாள் என்று நான் அறிந்திருந்தேன். 249. அப்பொழுது நான், ''நல்லது, இவள் என்னைக் குறித்து வெறுப்பாக எண்ணும்படி, அவளுக்கு முன்பாக இன்னொரு பெண்ணை அழைத்துக் கொண்டு செல்வேன்'' என்றெண்ணினேன். இவ்வாறு செய்வதினால் அவளை நான் கிட்டத்தட்ட கொன்றவனைப் போல் ஆகிவிட்டேன். இதைப் பற்றி நான் பின்னால் எண்ணிப் பார்க்கையில், என்னைப் பற்றி நானே அருவருப்பாக உணர்ந்து கொண்டேன். அவள் மிகவும் மனமுடைந்து போனாள். நான் அவளிடம், ''நீ மிகவும் நல்லவள், நான் உன்னுடைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை'' என்று கூறினேன். அதற்கு அவள், “ பில், நான் உம்மை நேசிக்கிறேன், நான் நேசிக்கத்தக்கதெல்லாம் நீர் ஒருவர்தான், நான் எப்பொழுதும் உம்மையே நேசித்திருக்கிறேன்'' என்று கூறினான். 250. “ நான் அதை மெச்சுகிறேன்; ஆனால், நானோ ஒரு துறவி, ஒரு துறவியாகவே வாழ்ந்து விடப் போகிறேன், இனி நான் விவாகமே செய்து கொள்ளப் போவதில்லை'' என்று பதிலளித் தேன். 251. ஆனால் சிறுமைப்பட்ட அந்த எளிய பெண்ணோ இந்தக் காரியத்தில் பிடிவாதமாக இருந்தாள். அவள் வெளியே சென்று அங்கிருந்த கொட்டகையினுள் முழங்கால்படியிட்டு, “ கர்த்தாவே, என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. நான் உமக்கு கீழ்ப்படியாமற்போக விரும்பவில்லை; ஆயினும் நான் பில்-ஐ நேசிக்கிறேன், என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. ஆண்டவரே, ஒரு சிறு ஆறுதல் எனக்கு அளிப்பீரா? ஒரு சிறிதளவு உதவி எனக்குச் செய்வீரா? என் வாழ்க்கையில் இதற்கு முன்பு இவ்வாறு இதைக் குறித்து உம்மிடம் கேட்டதில்லை. மீண்டும் இதைக் குறித்து நான் உம்மிடம் கேட்கத் தேவையும் இருக்காது என்று நான் நம்புகிறேன், கர்த்தாவே நீர் எனக்கு உதவி செய்வீரானால், அப்பொழுது நான் இந்த வேதாகமத்தை திறக்கையில், ஒரு வேதவாக்கியத்தை எனக்குத் தாரும், அவ்வாறு நீர் ஜனங்களுக்கு தந்ததைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன்'' என்று ஜெபித்திருக்கிறாள். அவ்வாறு ஜெபித்துவிட்டு அவள் வேதாகமத்தை திறக்கையில் அவளுக்கு மல்கியா 4ம் அதிகாரம் கிடைத்தது. "... கர்த்தருடைய பயங்கரமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களுக்கு கொடுப்பேன்... அல்லது நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்...'' 252. “ நான் அங்கிருந்து ஜெபித்து விட்டு, நிச்சயமாக நாம் விவாகம் செய்து கொள்ளப் போகிறோம் என்று உறுதியான திருப்தியோடு எழுந்தேன்'' என்று என்னிடம் கூறினாள். பார்த்தீர்களா? “ இதோ சூளையைப் போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ் செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற் போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்...'' மல்.4:1-2 253. “ சூரியன் தன் வல்லமையில் பிரகாசித்தல்'' ஓ! தேவ குமாரனின் வல்லமை இன்று நம் மத்தியில் இவ்விரவில் பிர காசித்துக் கொண்டிருக்கிறது. அவர் தம்முடைய ஏழுவிதமான ரூபங்களுடன், நியாயாதிபதியாக, ஏழு குத்து விளக்குகளின் மத்தியில் நின்று கொண்டிருக்கிறார். நமக்காக பாடுபட்டு மரித்தவராக, தெய்வீக நியாயத்தீர்ப்பை தன் மேல் எடுத்துக் கொண்டவராய், தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை அவரே மிதித்தவராயிருக்கிறார். வாழ்க்கை என்னும் சமுத்திரத்தில், பாவிக்கும், உறுதியில்லாத ஆத்துமாவுக்கும், அவர் நாசத்தை உண்டாக்கும் அதிபயங்கர ஜலப்பிரள மாயிருக்கிறார். ஆனால் தன் சபைக்கோ, அவர் ஒரு இனிமையான இரட்சகராயிருக்கிறார். அவரது சபையானது கிறிஸ்துவுக் குள்ளாக நங்கூரமிடப்பட்டு, கிறிஸ்துவுக்குள்ளாக முழுவதும் பரிபூரணமான திருப்தியுடன் இளைப்பாறிக் கொண்டு, சலசலவென அசைந் தோடும் அமைதியான மெல்லிய நீரோடைகளின் இனிய ஓசையைக் கேட்டு கொண்டிருப்பவளாக இருக்கிறது. என்னே ஒருவேளை! அவர் தன்னுடைய இன்பமான கதிர்களினால் நம் மேல் பிரகாசித்து, “ பயப்படாதே, நான் இருந்தவரும், இருப் பவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ளவர், என்னையன்றி வேறே தேவர்கள் இல்லை, நான் அல்பாவும் ஓமெகாவுமாயிருக்கிறேன், தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத் தண்ணீரூற்றிலிருந்து இலவசமாக குடிக்கக் கொடுப்பேன்'' என்று கூறுகிறார். என்னே அற்புதமானதொரு வாக்குத்தத்தம் இது! என்னே ஒரு அருமையான தேசத்தின் காரியம் இது! ஆட்டுக்குட்டியானவர் நகரத்தின் மத்தியில் இருப்பதால், நகரத்திற்கு வேறு வெளிச்சம் தேவையில்லை, அவரே நீதியின் சூரியனாக இருக்கிறார், அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும். பள்ளத்தாக்கின் லீலி அவர்; பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரம் அவர், அவர் எனது ஆத்துமாவுக்கு பதினாயிரம் பேரிலும் அழகிற் சிறந்தவர். என் துக்கத்தில் ஆறுதலும் அவரே என் துன்பத்தில் ஆதரவும் அவரே. என் கவலையெல்லாம் தன் மேல் போடு என்கிறார், அல்லேலூயா! அவரே பள்ளத்தாக்கின் லீலி, பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமும் அவரே என் ஆத்துமாவுக்கு அவர் பதினாயிரம் பேரிலும் அழகிற் சிறந்தவர் 254. ஆம், ஐயா! ஓ, அந்த மகத்தான விடிவெள்ளி நட்சத்திரம் பிரகாசிக்கும்படி புறப்பட்டு வருகையில், வரப்போகும் பகற் காலத்தை முன்னறிவிக்கையில், ''பகற்காலமானது விடியப் போகிறது, குமாரன் (அல்லது நீதியின் சூரியன்) நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்'' என்று அறிவிக்கிறார். அவர் வருகையில், மற்றெல்லா நட்சத்திரங்களையெல்லாம் ஒளிவிடுவதில் தன் பின்னுக்குத் தள்ளி, மற்ற யாவையும் விட தானே மிஞ்சி பிரகாசிக்கிறவராயிருக்கிறார். அவருடைய செட்டைகளின் கீழ் ஆரோக் கியம் உண்டாயிருக்கும். 255. நம்முடைய செய்திக்கு திரும்புவோம். நாளை இரவுக் கூட்டத்திற்கு ஆயத்தப்படும்படி, நாம் இப்பொழுது முடிக்கிறோம், ஏனெனில் இப்பொழுது நேரமானது இரவு ஒன்பது மணியாக இன்னும் 15 நிமிடங்களே உள்ளன. எவரையும் அதிக நேரம் இங்கு காத்திருக்க வைக்க நாம் விரும்பவில்லை. 256. நீதியின் சூரியனானவர் தன் செட்டைகளின் கீழ் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். இப்பொழுது அவரது முக ரூபத்தைப் பற்றி பார்ப்போம். அவர் ஒரு நியாயாதிபதியாகத் தோற்றமளிக்கிறார். அதாவது, யோவான் வரப்போகும் கர்த்தருடைய நாளுக்குள் கொண்டு செல்லப்பட்டான் என்பதை அவனுக்குக் காண்பிக்க இத்தோற்றம் உள்ளது. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? யோவான் கர்த்தருடைய நாளுக்குள் சென்று, அங்கே கர்த்தரை, ஒரு ஆசாரியனாக அல்ல, ராஜாவாக அல்ல, ஒரு நியாயாதிபதியாகத் தான் கண்டான். அவர் நியாயாதிபதியாக இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? வேதம், அவர் நியாயாதிபதியாக இருக்கிறார் என்று கூறுகிறது. இங்கே அவர் முழுவதும் நியாயாதிபதியின் தோற்றத்திற்கேற்றவாறு உடுத்தியிருக்கிறார். இதன்மூலம் அவர், தான் என்ன செய்தார் என்பதையும், அவர் எவ்வாறாக இருந்தார் என்பதையும், பாவிக்கு அவர் எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதையும், கிறிஸ்தவனுக்கு அவர் எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதையும் எடுத்துக் காண்பித்துக் கொண்டிருக்கிறார். இங்கே அவர், பெரு வெள்ளத்து இரைச்சலைப் போல் சத்தமுடையவராய், வல்லமை யோடே பிரகாசிக்கும் சூரியனைப் போன்ற முகத்தையுடையவராயும் நின்று கொண்டிருக்கிறார். 257. யோவான் இக்காட்சியை கண்டதினால் ஏற்பட்ட விளைவை இப்பொழுது பார்ப்போம். 16ம் வசனம், இல்லை, மன்னிக்கவும் 17ம் வசனம். “ நான் அவரைக் கண்டபோது செத்தவனைப் போல் அவருடைய பாதத்தில் விழுந்தேன்..." 258. தீர்க்கதரிசியினால் அவ்விதமான தரிசனத்தைக் கண்டு நிற்க முடியவில்லை. அவன் பெலமிழந்தவனாக அவரது பாதத்தில் செத்தவனைப் போல் விழுந்தான். இப்பொழுது கவனியுங்கள். "... அப்பொழுது அவர் தம்முடைய வலது கரத்தை என் மேல் வைத்து, என்னை நோக்கி; பயப்படாதே, நான் முந்தினவரும்; பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்.” 259. ஓ, என்னே ! ஒரு தீர்க்கதரிசியல்ல, அவர் தேவன். “ நான் முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். வெளிப்படுத்தலின் ஆதியாக நான் இருக்கிறேன். வெளிப்படுத்தலின் முடிவாகவும் நானே இருக்கிறேன். இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமாய் இருக்கிறேன்''. இப்பொழுது பார்ப்போம். ... அப்பொழுது அவர் தம்முடைய வலது கரத்தை என் மேல் வைத்து, என்னை நோக்கி; பயப்படாதே, நான் முந்தினவரும்; பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன். மரித்தேன், ஆனாலும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், (இப்பொழுதும்) (அதன்பிறகு அவர் சப்தமிடுகிறார்) ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத் திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். 260. நீங்கள் கலக்கமடைய வேண்டாம். நாம் ஏன் அஞ்ச வேண்டும்? சபையானது ஏன் அவருடைய வார்த்தையைக் குறித்து சிந்திக்கவும், அதைக் கைக்கொள்ளவும் தவறிப் போகிறது? நாம் முடிக்கப் போகிறோம், எனவே சற்று நிறுத்தி இதை கவனிப்போம். ஏன் இந்த சபையானது பயப்படப் போகிறது? அவர் வாக்குரைத்த எதை அவர் நிறைவேற்றாதிருந்தார்? நீங்கள் ஏன் ஒரு தண்டனையைக் குறித்தோ, அல்லது இந்த ஜீவனுக்குப் பின்னால் வரப்போகும் காரியத்தைக் குறித்தோ அஞ்ச வேண்டும்? ''பயப்படாதே! நான் இருந்தவரும், இருப்பவரும், வரப்போகிற வருமாயிருக்கிறேன். நான் முந்தினவரும், பிந்தினவருமாயிருக்கிறேன். நான் இப்பொழுது இங்கேயே மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்'' என்று கூறுகிறார். ஏன்? “ மரணம், பாதாளம் இவற்றை நான் மேற்கொண்டு, அதின்மேல் ஜெயங்கொண்டுமிருக்கிறேன் (இது கல்லறை மற்றும் பாதாளத்தையுமே குறிக்கும். மரணம் என்பது பாதாளமே). உங்களுக்காக. அவை யாவையும் நான் ஜெயித்தேன். நான் கல்லறை, மரணம், பாதாளம் இவைகளை ஜெயித்தேன்'' என்று கூறுகிறார். அவர் பூமியில் இருக்கையில், அவர் மட்டுமே ஜெயங் கொண்டவராயிருந்தார். 261. அநேக மனிதர்கள் ஜெயிக்க வேண்டும் என்று புறப்பட்டார்கள். நீங்கள் அதை அறிவீர்களா? நெப்போலியன் தன் 33ம் வயதில் உலகத்தை ஜெயிக்க வேண்டும் என்று புறப்பட்டான். அவன் தன் 17வது வயது முதல் 25 வயது முடிய மது அருந்துவது மற்றும் அது போன்ற ஏனைய பழக்க வழக்கங்களை கடைப்பிடிக் காதவனாக இருந்து வந்தான். அவன் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றான். (நெப்போலியன் ஒரு அசல் பிரெஞ்சுக்காரன் அல்ல, அவன் ஒரு தீவிலிருந்து வந்தவன். அவனுக்கு பிரான்ஸை பிடிக்காது. ஆயினும், பிரான்ஸை வெல்லவே அவன் அங்கு சென்றான். அவன் பிரான்ஸை வென்றான், பின்பு பிரெஞ்சுக் காரர்களைக் கொண்டு உலகத்தை வென்றான்.) அவனது 33ம் வயதில், அவன் உட்கார்ந்து, இனிமேல் ஜெயிப்பதற்கு உலகில் ஒன்றுமே இல்லையே என்று வேதனைப்பட்டான். ஆனால் அவன் குடியை வெல்ல முடியாதவனாக, ஒரு குடிகாரனாகவே மரித்தான். தோல்வியடைந்தவனாக அவன் இருந்தான். அவன் தன்னையே ஜெயிக்க முடியாதவனாக ஆகிவிட்டான். அவன் தனது "வாட்டர் லூவை' வாட்டர்லூவில் எதிர்கொண்டான். (அவன் தனது வாட்டர்லூ என்று இங்கு குறிப்பிடக் காரணம், வாட்டர்லூ என்ற மத்திய பெல்ஜியத்தில் உள்ள ஒரு நகரத்தில் தான் நெப்போலியன் அவனுக்கெதிராக சண்டையிட்ட நேசநாடுகளிடம் தோற்றுப் போனான். எனவே வாட்டர்லூ சண்டை நெப்போலியனுக்கு தோல்வியைத் தந்தபடியால், வழக்கில், "ஒருவரது வாட்டர்லூ' என்று குறிப்பிடுவது ஒருவன் அடைந்த மோசமான தோல்வியை எடுத்துக் காட்ட உபயோகிக்கப்படுகிறது - மொழி பெயர்ப்பாளர்). நெப்போலியன் வாட்டர்லூவில் தனது முடிவை அடைந்தான். நான் அங்கே சென்றிருக்கிறேன், அந்த பண்டைக்காலத்து அடையாளங்களையும், ஞாபகச் சின்னங்களையும், அத்தேசத்திற்கு சென்ற போது கண்டேன். நாம் இந்த ஜெயிக்கிறவனை எடுத்துக் கொள்வோம். அவன் ஒரு இளைஞனாக இருக்கையில், ஜெயிப்பதற்கு தவறானதொன்றை தெரிந்து கொண்டான், அவன் அவமானகரமாக மரித்தான். 262. ஆனால் ஓர் காலத்தில் உலகில் தோன்றிய, இன்னொரு இளைஞர், தனது 33ம் வயதில் மரணமடைந்து, ஜெயிக்கப்பட வேண்டியவைகளையெல்லாம் ஜெயித்தார். அவர் இவ்வுலகில் இருக்கையில், ஆசை இச்சைகளையும், கர்வத்தையும் வியாதிகளையும் ஜெயித்தார். அவர் பிசாசுகளை ஜெயித்தார். அவர் மரித்த போது, மரணத்தை ஜெயித்தார். அவர் உயிர்த்தெழுந்த போது, பாதாளத்தையும் ஜெயித்தார். அவர் உள்ளே போய், மனுக் குலத்திற்கெதிராக நின்ற அனைத்தையும் ஜெயித்து, தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதித்து, மரணத்தை ஜெயித்து, பாதாளம், கல்லறை, வியாதிகள், சடங்காச்சாரங்கள் மற்றும் அனைத்தையும் ஜெயித்தார். இவ்வாறு அவர் இவை யாவையும் மேற்கொண்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே தடையாக நின்ற பனி மூட்டத்தை நீக்கி, பூமியையும் பரலோகத்தையும் ஒருசேர இணைத்தார். மகிமை! ஓ, என்னே ! வ்யூ! 263. அங்கே அவர், தேவாலயத்து திரைச்சீலையை இரண்டாக கிழித்தது முதற்கொண்டு அதோ அவர் வல்லமையான ஜெய வீரராக நிற்கிறார். "மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவு கோல்கள் என் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருக்கின்றன, பயப்படாதே'' என்று கூறினார். அவர் அவன்மேல் தனது வலது கரத்தை வைத்து (வலது கரம் என்பது அவரது வல்லமையைக் குறிக்கும்) தனது வலது கரத்தின் வல்லமையினால் அவனை எழுப்பி, அவனிடம், “ பயப்படாதே, இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமாகியவர் நானே; நான் முந்தினவரும், பிந்தினவருமாயிருக்கிறேன், மரித்தேன், ஆனாலும் இதோ, சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன் ஆமென்'' என்று கூறினார். இதோ! இந்த ஜெயவீரரைப் பாரீர், இதோ! அவரை தெளிவாகப் பாரீர், அவர் உள்திரையை இருகூறாய் கிழித்தது முதற்கொண்டு, ஜெயவீரராய் அங்கே நிற்கிறார். 264. ஆமென்! ஏதேன் தோட்டத்திலிருந்தது போல, மனிதன் தேவனுடன் இணைக்கப்படும்படி, மனுகுலத்திற்கு இருந்த தடைக்கல்லை யெல்லாம் அவர் தகர்த்தெறிந்தார். இப்பொழுது மனிதனானவன்... நான் இப்பொழுது சொல்லப் போவதைக் குறித்து உணர்ச்சிவயப்பட்டதினால், சொல்ல முடியாமல் தடைப்பட்டேன், ஆயினும் நான் அதைப் பற்றி சொல்லிவிடப் போகிறேன். என்னவெனில்; மனிதன் சர்வ வல்லமை படைத்தவன். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லை, ஆயினும், மனிதன் அவ்வாறு தான் இருக்கிறான். தேவனுக்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித்துள்ள மனிதன், சர்வ வல்லமையுள்ளவனாக இருக்கிறான். மாற்கு சுவிசேஷம் 11:22ல் இயேசு இவ்வாறு கூறவில்லையா? ''...தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால் அவன் சொன்னபடியே ஆகும்...'' 265. சர்வ வல்லமையுள்ள இரு நபர்கள் சந்தித்தால் என்ன நடக்கிறது? சர்வ வல்லமையினாலே தேவனும் மனிதனும் ஒன்றுசேரும் போது, ஏதோ ஒன்று அசைவை உண்டாக்கத்தான் வேண்டும். சிருஷ்டிக்கும் வல்லமையுள்ள தேவனுடைய சர்வ வல்லமையைக் கொண்டு, நீங்கள் ஒன்றை உரைத்தால், அவர் அதை வாக்குரைத்திருக்கிறார் என்றும், அவருடைய வார்த்தையில் அதைக் குறித்து கூறியிருக்கிறார் என்றும் அறிந்திருக்கும்போது, அப்பொழுது அது வெளியே புறப்பட்டுச் செல்லுகிற ஒரு வல்லமையை சிருஷ்டிக்கிறது, அது உரைக்கப்பட்டவைகளை நிறைவேறும்படி செய்கிறது, இல்லாதவைகளை இருக்கிறவைகளாக இருக்கும்படி செய்கிறது அவ்வல்லமை. ஏனெனில் இரு சர்வ வல்லமைகளும் சந்தித்திருக்கின்றன. அங்கே அவர் நிற்கிறார்! ஓ! அவர் அற்புதமானவராக இல்லையா? 266. இன்னும் நல்ல விஷயங்கள் நமக்கு உள்ளனவா என்று பார்ப்போம். 18ம் வசனம். இப்பொழுது 19ம் வசனம். அவருடைய முகரூபத்தை யோவான் கண்டபோது என்ன நேரிட்டது? அதன் விளைவு என்ன? அவருடைய பாதத்தில் அவன் விழுந்தான்; அவருக்கு முன்பாக அவனால் நிற்க முடியவில்லை, அவனுடைய மானிட ஜீவனானது அந்த வல்லமைக்கு முன்பாக நிற்கமுடியாமல் வலுவிழந்து போனது. அவர் ஜெயமெடுத்தவாயிருந்தார். அவர் ஏற்கனவே ஜெயங் கொண்டுவிட்டார். 267. இப்பொழுது ஒரு கட்டளையை அவர் கொடுக்கிறார், இந்த அதிகாரத்தை முடிப்பதற்காக 19ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். “ நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது”. 268. நாம் ஏற்கனவே 20ம் வசனத்தைப் படித்தோம் : “ என் வலது கரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத் தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இகரசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்து விளக்குகளும் ஏழு சபைகளாம்" 269. ஓ! நண்பரே, இக்காட்சி நம்மை மிகவும் சிலிர்க்கச் செய்கிறது. அவர் அங்கே தனது தெய்வீக மேன்மையான வல்லமையோடு திகழ்கிறார். அவரே நியாயாதிபதி, ஆசாரியன், இராஜா, கழுகு, ஆட்டுக்குட்டி, சிங்கம், அல்ஃபா, ஒமெகா, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி; அவர் இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர். தேவனுடைய உக்கிரகோபமாகிய மது வுள்ள ஆலையை அவர் மிதித்தார், தேவனை எல்லாவற்றிலும் பிரியப்படுத்தினார். சிலுவையில் தேவன் அவ்வாறு கூறுகிற வரையிலும்... அவரை எழுப்பியபோது, “ முடிந்தது'' என்று கூறினார். அவர் தேவனைப் பிரியப்படுத்தியதால், அவரை விட்டுப் போன ஆவி உயிர்த்தெழுதல் காலையில் அவரிடம் திரும்பி வந்தது. நாம் நீதியை அடையும்படி, அவரை தேவன் மீண்டும் உயிர்த்தெழும்படி செய்தார். 270. அங்கே யோவான் அவரை உற்று நோக்கி, அவர் அங்கே பிரகாசமான வெண்கலம் போன்ற பாதங்களுடனும், அக்கினி ஜுவாலையைப் போலுள்ள, பூமியெங்கும் உலாவும் கண்களையுடையவராயும் நின்று கொண்டிருக்கக் கண்டான். யோவான் இக்காட்சியைக் கண்டதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பாக, தானியேல் தீர்க்கதரிசி அதேவிதமான மனிதனைக் கண்டான். யோவான் பார்த்தவிதமாகவே அவனும் அவரை அதே நிலையில், அதே மாதிரியில் அங்கே நின்று கொண்டிருக்கக் கண்டான். நீண்ட ஆயுசுள்ளவரையும், மனுஷகுமாரனுடைய சாயலுக்கொப்பான வரையும், இவர் அவரோடு சேர்ந்துவிடுவதையும், இவரிடம் நியாயத் தீர்ப்பு அதிகாரம் முழுவதும் கையளிக்கப்படுவதையும், வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில் நிற்பதையும் கண்டான். 271. சிநேகிதரே! இப்படிப்பட்ட காரியங்களெல்லாம் பார்த்த பிறகு, என்னவிதமான மக்களாக நாம் இருந்தாக வேண்டும்! தேவன் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்பதே என்னுடைய வேண்டுதலாகும். பார்த்தீர்களா? நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அவரை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவரில் உங்களது ஆத்துமாவை நங்கூரமிட்டுள்ளீர்களா? 272. நாம் மெதுவாக “ இளைப்பாறுதலின் துறைமுகத்தில் என் ஆத்துமாவை நங்கூரமிட்டிருக்கிறேன், எனவே நான் இனி நாசகரமான கொந்தளிக்கும் கடலின் பேரிரைச்சலை கேட்க மாட்டேன். ஆனால் என் ஆத்துமாவுக்கு இனிய சமாதானத்தையே பேசுவேன்'' என்ற பாடலை பாடும்போது, மென்மையாகவும், நளினமாகவும் பியானோ இசைக்கட்டும். ஒவ்வொருவரும் மெது வாகவும் பயபக்தியோடும் பாடுவோம். இளைப்பாறுதலின் துறைமுகத்தில் என் ஆத்துமாவை நங்கூரமிட்டேன் இனி கொந்தளிக்கும் கடலில் நான் பயணம் செய்யேன் ஆழ்ந்த ஆழியில் கொந்தளிக்கும் கடலில் கடும் புயற்காற்று வீசிடினும் இயேசுவில் நான் எப்போதும் பத்திரமாயுள்ளேன். இளைப்பாறுதலின் துறைமுகத்தில் என் ஆத்துமாவை நங்கூரமிட்டேன் இனி கொந்தளிக்கும் கடலில் நான் பயணம் செய்யேன் ஆழ்ந்த ஆழியில் கொந்தளிக்கும் கடலில் கடும் புயற்காற்று வீசிடினும் இயேசுவில் நான் எப்போதும் பத்திரமாயுள்ளேன். என் மேல் பிரகாசியும். (ஆண்டவரே! மகிமையின் கதிர்கள்) ஆண்டவரே! என் மேல் பிரகாசியும் கலங்கரை விளக்கத்தினின்றும் ஒளியானது என் மேல் பிரகாசிக்கட்டும் என் மேல் பிரகாசியும், ஆண்டவரே, என் மேல் பிரகாசியும் (அவருக்கு நேராக நம் கரங்களை உயர்த்துவோமாக) கலங்கரை விளக்கத்தினின்றும் ஒளியானது என்மேல் பிரகாசிக்கட்டும் இயேசுவைப் போல் ஆகிட (ஆம், கர்த்தாவே!) இயேசுவைப் போல் ஆகிட, பூமியில் நான் அவரைப் போல் ஆக வேண்டும்; புவி முதல் மகிமை வரையுள்ள என் வாழ்க்கைப் பயணத்தில் நான் அவரைப் போல் ஆகிடவேண்டும் என்று மட்டுமே வேண்டுகிறேன். (சகோ.பிரன்ஹாம் பல்லவியை மௌனமாக இசைக்கிறார் (ஆசி)புவியில் நான் அவரைப் போல் ஆகிட வாஞ்சிக்கிறேன் புவி முதல் மகிமை வரையுள்ள என் வாழ்க்கைப் பயணத்தில். 273. அவருடைய ஜீவனானது உங்களில் ஜீவிக்கவும், அதினால் அவருடைய பிரசன்னத்தை பிரதிபலித்திடச் செய்யவும் நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் அவ்வாறு விரும்பினால், இதுவரையிலும், அதை நீங்கள் பெற்றுக் கொண்டிருக்காவிடில், அதற்காக ஜெபிக்கும்படி ஜெபத்திற்காக எழுந்து நிற்பீர்களா? ஜெபத்தில் நினைக்கப்பட வேண்டும் என்று விரும்புபவர்கள் நிற்கலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பெத்லகேமின் முன்னணையிலிருந்து... (இப்பொழுது நின்று கொண்டேயிருங்கள்) நாம் அறியாதவர் ஒருவர் வந்தார் (நீங்களும் உலகுக்கு அவ்வாறே ஆகிவிடுவீர்கள்) பூமியில் நான் அவரைப் போல் ஆகிடவே வாஞ்சிக்கிறேன் புவி முதல் மகிமை பரியந்தமும் உள்ள எனது வாழ்வின் பயணத்தில் நான் அவரைப் போல ஆகிடவே வேண்டுகிறேன் இயேசுவைப் போல் ஆகிட, இயேசுவைப் போல் ஆகிட (அதுவே எனது வாஞ்சை) பூமியில் நான் அவரைப் போல் ஆகிட வாஞ்சிக்கிறேன். புவி முதல் மகிமை வரையுள்ள வாழ்க்கைப் பயணம் முழுவதும் நான் அவரைப் போல் ஆகிடவே வேண்டுகிறேன். (சகோ. பிரன்ஹாம் பாடலின் பல்லவியை மௌனமாக இசைக்கிறார் - ஆசி) எளிமையும், மனத்தாழ்மையுமாக. 274. இப்பொழுது, பரம பிதாவே! உம்மை ஏற்றுக் கொள்ள விரும்பி அநேகர் நின்று கொண்டிருக்கிறார்கள். இவ்வாழ்வின் அலைகடலில் தாங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல், இதில் அலைந்து திரிவதினால் அவர்கள் களைப்படைந்து போயிருக்கிறார்கள். இவ்வாறு இருக்கையில், பகலொளி தோன்றுமுன்னர் இருதயமானது துடிக்காமல் நின்று விடக்கூடும், அப்பொழுது இந்த அலைந்து திரிகிற ஆத்துமாவானது, முடிவில் தண்ணீர்கள் போய் விழுகிற பேரிரைச்சலோடு கூடிய அழிவின் நீர்வீழ்ச்சியிலே போய் மாண்டு விடுமே என்பதை அவர்கள் அறிவர், அவர்கள் அவர்களைப் போலவே இருந்து வந்துள்ளார்கள். உலகத்தைப் போலவே இருந்து வந்துள்ளார்கள். ஆனால் இப்பொழுதோ, கர்த்தாவே, அவர்கள் உம்மைப் போலவே ஆகிட வாஞ்சிக்கிறார்கள். உம்முடைய இராஜ்யத்தில் அவர்களை ஏற்றுக் கொள்ளும். அவர்கள் உம்முடையவராயிருக்கிறார்களே, பிதாவே. ஏனெனில், அவர்கள் இருதயத்தின் எண்ணங்களையும், யோசனைகளையும் நீர் அறிந்திருக்கிறீரே. நீர் அவ்வாறு எழுதிவைத்திருக்கிறீர், உம்முடைய உதடுகளாலேயே நீர் இவ்வாறு கூறியிருக்கிறீர்; ''என் வசனங்களைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு' ''இந்த தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், இதைக் கேட்கிறவனும் பாக்கியவான், காலம் சமீபமாயிருக்கிறது'' என்றும் கூட நீர் கூறியிருக்கிறீர். அவர்கள் காலம் சமீபமாயிருக் கிறது என்பதை உணர்ந் திருக்கிறார்கள். இனிமேலும் அவர்கள் அலைந்து திரிய முடியாது, கர்த்தாவே. ஜீவக்கயிற்றை அவர்களிடமாக தூக்கியெறிந்து அவர்களை உம்மிடமாக இழுத்துக் கொள்ளும், கர்த்தாவே! இயேசு கிறிஸ்துவினுடைய ஒளியை பிரதிபலித்துக் கொண்டு அவர்கள் இன்றிரவில் இங்கிருந்து செல்லட்டும். பிதாவாகிய தேவனே! நான் அவர்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உம்மிடம் ஒப்படைக்கிறேன். அவர்கள் இங்கே சபையில், ஞானஸ்நானத்தில், கர்த்தரை தாழ்மையுடன் பின்செல்லட்டும். மீதமுள்ள அவர்களுடைய ஜீவிய காலமெல்லாம் இயேசுவைப் போல் இருக்கும்படி, அவர்களுடைய ஜீவியத்தில் பரிசுத்த ஆவியை அவர்களுக்கு அருளும். அவருடைய நாமத்தினால் அதை நாங்கள் கேட்கிறோம். இயேசுவைப் போல் ஆகிட... 275. ஒப்புக் கொடுத்த ஆத்துமாக்களின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிற கிறிஸ்தவர்களாகிய உங்களில் சிலர், அவர்களிடம் நெருங்கி, அவர்களுடைய கரத்தைப்பிடித்து, கை குலுக்குங்கள். அவர்கள்மேல் உங்கள் கைகளை வைத்து, அவர்களுடைய ஆத்துமாக்களுக்காக தேவனை துதியுங்கள். நம்முடைய பீடங்கள் இங்கே குழந்தைகளால் நிறைந்துள்ளது, அவர்களை நாம் இங்கே கொண்டு வர முடியாது. புவி முதல் மகிமை வரையுள்ள வாழ்வின் பயணம் முழுவதிலும் நாம் அவரைப் போல் ஆகிடவே வேண்டுகிறேன். என் மேல் பிரகாசியும், என் மேல் பிரகாசியும் கலங்கரை விளக்கத்தினின்றும் ஒளியானது என் மேல் பிரகாசிக்கட்டும் என் மேல் பிரகாசியும், என் மேல் பிரகாசியும் ஆண்டவரே, கலங்கரை விளக்கத்தினின்றும் ஒளியானது என்மேல் பிரகாசிக்கட்டும். 276. உங்களுக்கு நல்லுணர்வு தோன்றுகிறதா? உங்களுக்கு நல்லுணர்வு தோன்றுகிறதல்லவா? கிறிஸ்தவனாக இருப்பதற்காக நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கவில்லையா? நாம் இப்பொழுது ஒரு பாடலை பாடப் போகையில், உங்கள் அருகில் அமர்ந்திருக்கிறவரோடு கைகுலுக்குங்கள். “ ஒளியில் நடப்போம், அழகான ஒளியது, அது மாம்சத்தில் தோன்றிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒளியாகும்'' என்ற பாடல். ஒளியிலே நடப்போம், அவ்வளவு அழகான ஒளியது, பிரகாசமாயுள்ள இரக்கத்தின் பனித்துளிகளிலும் வாரீர், இது இரவும் பகலும் நம்மைச் சுற்றிலும் பிரகாசிக்கிறது, இயேசுவே உலகின் ஒளியாயிருக்கிறார். 277. யாவரும் பாடுங்கள்: ஒளியிலே நடப்போம், அவ்வளவு அழகான ஒளியது, பிரகாசமாயுள்ள இரக்கத்தின் பனித்துளிகளிலும் வாரீர், இது இரவும் பகலும் நம்மைச் சுற்றிலும் பிரகாசிக்கிறது, இயேசுவே உலகின் ஒளியாயிருக்கிறார். இயேசுவே உலகின் ஒளியென ஒளியின் பரிசுத்தரே பிரசித்தம் செய்வீர் அப்பொழுது பரலோகத்தின் மணியோசை இயேசு உலகின் ஒளியாயிருக்கிறார் என்று ஒலித்திடுமே. 278. இப்பொழுது உங்களது கரத்தை உயர்த்துங்கள் ஒளியிலே நடப்போம், அவ்வளவு அழகான ஒளியது, பிரகாசமாயுள்ள இரக்கத்தின் பனித்துளிகளிலும் வாரீர், இது இரவும் பகலும் நம்மைச் சுற்றிலும் பிரகாசிக்கிறது, இயேசுவே உலகின் ஒளியாயிருக்கிறார். நாம் தொடர்ந்து இவ்வொளியில் நடப்போம், அது அவ்வளவு அழகான ஒளியாம், இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு அது வருகிறது, இது இரவும் பகலும் நம்மைச் சுற்றிப் பிரகாசிக்கிறது, இயேசு, அவரே உலகின் ஒளியாயிருக்கிறார். இவ்வொளியில் நாம் நடப்போம் (சுவிசேஷ ஒளி) அது அழகான ஒளியாம்! இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு அது வருகிறது, அது இரவும் பகலும் நம்மைச் சுற்றிப் பிரகாசிக்கிறது, இயேசு, அவரே உலகின் ஒளியாயிருக்கிறார். 279. ஆதியில் பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானது சபையின் மேல் விழுந்த முதற்கொண்டு, செய்தியானது தொடர்ந்து, அடுத்து வந்த சபைக்காலமாகிய சிமிர்னாவுக்குள்ளும் வந்தது. அங்கே ஐரேனியஸ் நின்றார். அவர் தேவனுடைய மகத்தான பரிசுத்தவான் ஆவார். அவர் அந்நிய பாஷையில் பேசி, தேவனுடைய வல்லமையால், மரித்தோரை உயிரோடெழுப்பி, பிணியாளிகளை சொஸ்தமாக்கினார். அவர் ஒளியிலே நடந்து கொண்டிருந்தார். அவருக்குப் பிறகு, மகத்தான வல்லமையுள்ள தேவனுடைய பரிசுத்தவானாகிய கொலம்பா வந்தார். அதன் பின்பு வந்த ஏனைய மகத்தான பரிசுத்தர்கள் யாவரும், தொடர்ந்து செய்தியையுடையவர்களாயிருந்து, சுவிசேஷ ஒளியிலே நடந்து வந்தார்கள். அவ்வொளியானது பெந்தெகொஸ்தே நாளில் பிரகாசித்த அதே ஒளிதான். கிறிஸ்துவானவர் தமது ஜனங்களின் மத்தியில் நின்று கொண்டிருக்கிறார், அந்த ஏழு குத்துவிளக்கு களும் நடுப்பகலில் உள்ள சூரியனைப் போல அவருடைய பிரகாசத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன. 280. இங்கே நாம் 1962ம் ஆண்டில் இருக்கிறோம்: இவ்வொளியில் நாம் நடப்போம், அது அவ்வளவு அழகான ஒளியாம், பனிபோல் பொழியும் இரக்கத்தின் வெளிச்சம் வருகிறது, இரவும் பகலும் எம்மைச் சுற்றிலும் பிரகாசியும், ஓ இயேசு, நீர் உலகத்தின் ஒளியாமே. 281. நாம் எழுந்து நிற்போமாக. நாம் தொடர்ந்து இவ்வொளியில் நடப்போம், அது அவ்வளவு அழகான ஒளியாகும், பனிபோல் பொழியும் இரக்கத்தின் வெளிச்சம் அங்கிருந்து வருகிறது, இரவும் பகலும் எம்மைச் சுற்றிலும் அது பிரகாசிக்கிறது இயேசுவே உலகின் ஒளியாயிருக்கிறார். 282. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், ஏனெனில் அவரே என்னை முந்தி நேசித்து கல்வாரி சிலுவையில் என் இரட்சிப்பை கிரயத்திற்குக் கொண்டார். 283. இனி ஒருபோதும் உலகத்தின் காரியங்களுக்குத் திரும்பக் கூடாது. உலகத்துக்கு நான் மரித்தவனாயிருக்கிறேன், உலகம் எனக்கு மரித்ததாயிருக்கிறது. பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட்டு நான் கிறிஸ்துவுக்குள்ளாக மட்டுமே நடக்கிறேன். அவரை நான் நேசிக்கிறேன், ஏனெனில், அவர் என்னை நேசித்து, அவரது ஆசீர்வாதங்களை என் மேல் பிரகாசிக்கச் செய்து, தனது இராஜ்யத்தில் எனது ஐக்கியத்தின் வலது கரத்தைக் கொடுத்திருக்கிறார். இப்பொழுது நாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கிறோம். முடிவில் நாம் எவ்வாறு இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆயினும், அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரை தரிசிப்பதினால், அவருடைய சொந்த மகிமையின் சரீரத்தைப் போலவே ஒரு சரீரத்தையுடையவர்களாக நாம் இருப்போம். அப்பொழுது நாம் ஒளியிலே நடந்து கொண்டிருப்போம் அது அழகான ஒளியாகும் பனிபோல் பொழியும் இரக்கம் பிரகாசமாயுள்ளது, அதிலிருந்து அது வருகிறது, எம்மைச் சுற்றிலும் அது இரவும் பகலும் பிரகாசிக்கிறது, இயேசுவே, உலகத்தின் ஒளியாயிருக்கிறார். 284. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? செய்தியளிக்கப்பட்டு, அது மக்களை உடைத்து நொறுக்கிய பிறகு, ஜனங்கள் பாடிக்கொண்டே, ஆவிக்குள் தொழுது கொண்டும், பாடிக் கொண்டும் இருக்கவே நான் விரும்புகிறேன். நல்ல பழமையான பாடுதலைப் போல் அழகானது வேறொன்றுமில்லை. அது சரிதான். பழமை வாய்ந்த பெந்தெகொஸ்தே அனுபவம் வாய்ந்த பாடல் பாடுவதை நான் நேசிக்கிறேன். மிகவும் நீண்ட பயிற்சியெடுத்து, நீளமாகப் பாடி, கீச்சிட்டுப் பாடி, அதினால் முகமெல்லாம் நீலமடைந்து, தாங்கள் பாடுவது என்னவென்றே தெரியாது பாடுகிறார்களே, அவ்விதமான பாடலை நான் விரும்பவில்லை. யாராவது ஒருவர் பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தோடு, ஒருவேளை சரியான இனிமையான இராகமில்லாவிடினும், பரவாயில்லை, ஆனால் பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தோடு பாடுவதை நான் விரும்புகிறேன். சிலுவையைப் பற்றிய அவ்வினிமையான பாடல்கள் எத்தனை மகிமையாயிருக்கின்றன. 285. ஆராதனையின் முடிவாக இதோ இந்தப் பாட்டு : இயேசுவின் நாமத்தை ஏந்திச் செல்வீர் உம்மோடு ஓ துக்கம், வேதனையில் துவளும் பிள்ளையே, அந்நாமம் உனக்கு ஆனந்தத்தையும், தேறுதலையும் அளிக்குமே நீர் செல்லுமிடமெல்லாம் அதை ஏந்திச் செல்லுவீர் 286. நாளை இரவு சரியாக ஏழு மணிக்கெல்லாம் ஆராதனை துவங்குகிறது. நமது யாத்திரையின் முடிவில், இயேசுவின் நாமத்தில் பணிந்து, சாஷ்டாங்கமாக அவர் பாதத்தில் நாம் வீழ்ந்து பரலோகில் இராஜாதி இராஜாவுக்கு நாம் கிரீடம் சூட்டுவோம். 287. நாம் யாவரும் இப்பொழுது பாடுவோம் : இயேசுவின் நாமத்தை ஏந்திச் செல்வீர் உம்மோடு ஓ துக்கம், வேதனையில் துவளும் பிள்ளையே, அந்நாமம் உனக்கு ஆனந்தத்தையும், தேறுதலையும் அளிக்குமே நீர் செல்லுமிடமெல்லாம் அதை ஏந்திச் செல்லுவீர். விலையேறப்பெற்ற நாமமது, எத்தனை இனிமையானது அது பூலோகத்தின் நம்பிக்கையும், பரலோகத்தின் மகிழ்ச்சியுமது விலையேறப்பெற்ற நாமமது, எத்துணை இனிமையானது (எத்தனை இனிமையானது!) பூலோகத்தின் நம்பிக்கையும், பரலோகின் மகிழ்ச்சியுமது. 288. இன்றிரவு இப்பொழுது நாம் இதை முடித்து விட்டோம். நாளை காலை ஆராதனை உண்டா என்று என்னிடம் கேட்கப்பட்டது. இல்லை, நாளைக்கு இல்லை, நாளை நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ளுங் கள். நாளை இரவு ஒரு வேளை நான் அந்தச் செய்தியை எடுக்க முடியவில்லையெனில், அடுத்த நாள் எடுப்பேன். ஒரு நாளில் இந்தத் தொடர் செய்தியை நான் கொடுக்கத் தவறினால், அடுத்த நாளில் கொடுத்துவிடுவேன். ஆனால், இந்தச் செய்தித் தொகுப்பு நமக்கு இருக்கிறது, நீங்கள் ஏற்கனவே, சபைக் காலங்கள் செய்திக்காக இருக்கிறீர்கள் என்று விசுவாசிக்கிறேன். அப்படித் தானே? சரி. 289. இப்பொழுது மெதுவாக நாம் பாடுகையில் தலைகளை வணங்குவோம். இயேசுவின் நாமத்தில் பணிகையில் (எல்லா நாவுகளும் அதை அறிக்கை செய்யும்) அவர் பாதத்தில் சாஷ்டாங்கமாக வீழ்கையில் நம் யாத்திரையை முடித்திருக்கையில், அவரை நாம் இராஜாதி இராஜாவாக முடிசூட்டுவோம் விலையேறப் பெற்ற நாமமது, எத்தனை இனிமையானது பூலோகத்தின் நம்பிக்கையும், பரலோகத்தின் ஆனந்தமும் அதுவே, விலையேறப் பெற்ற நாமமது, ஓ எத்தனை இனிமையானது அது(எத்தனை இனிமையானது!) பூலோகத்தின் நம்பிக்கையும், பரலோகத்தின் ஆனந்தமும் அது. ******* மூன்றாம் அத்தியாயம் எபேசு சபையின் காலம் THE EPHESIAN CHURCH AGE கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இங்குள்ளவர்களில் யாராவது ஒரு புதிய டாட்ஜ் மோட்டார் வாகனத்தை... லைசென்ஸ் நம்பர் டபுள்யு.எக்ஸ்.2129 “ (W.X. 2129)’’ உள்ள வண்டியை தெருவுக்கு அப்பால் நிறுத்தி வைத்துள்ளீர்களா? அவ்வண்டியில் ஹெட்லைட் உட்பட அனைத்து விளக்குகளும் அணைக்கப்படாமல் எரிந்து கொண்டிருக்கின்றன. அந்த வண்டியை ஓட்டி வந்தவர்கள் யாராவது இங்கு இருப்பின், வெளியே போய் விளக்குகளை அணைத்துவிட்டு வாருங்கள். எட்டாம் தெருவில் இடது கை பக்கத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அது நியூ ஆல்பனியில் பதிவு செய்யப்பட்டலைசென்ஸ் நம்பர் என்று எண்ணுகிறேன், அது டபுள்யு.எக்ஸ்.2129 ஆகும். அது ஒரு சிவப்பு நிற டாட்ஜ் வண்டியாகும். 59ம் ஆண்டு அல்லது 60ம் ஆண்டு மாடல் வண்டியாக இருக்க வேண்டும். இங்குள்ளவர்கள் யாராவது எங்கிருந்தாவது அதை ஓட்டி வந்தார்களோ என்னவோ எனக்குத் தெரியாது. எனவே அது ஒரு நல்ல காரியம் தான். பெண்கள் இவ்வாறு மறந்துவிட்டு வந்துவிடுவார்கள் என்று நான் கூறப் போவதில்லை. நானுங்கூட இவ்வாறு செய்வதுண்டு. 2. நல்லது, இன்றிரவில் மீண்டும் இவ்வாராதனைக்காக கூடி வந்து, தேவனுடைய வார்த்தையின் பேரில் யாவரும் ஒன்று சேர்ந்து ஐக்கியங்கொள்ளும் வேளையானது நிச்சயமாக நன்றாகவே உள்ளது. அதை நீங்கள் மகிழ்வுடன் அனுபவிக்கிறீர்களா? (சபையோர் “ ஆமென்'' என்று கூறி பதிலளிக்கின்றனர் - ஆசி). ஓ! நமக்கு ஒரு அற்புதமான, அற்புதமான வேளை உண்டாயிருக்கிறது என்றால் அது சரிதான். இப்பொழுதும், நாம் தொடர்ச்சியாக இதைக் கேட்க தேவன் நமக்கு உதவியளிப்பார் என்று நம்புகிறோம். 3. இப்பொழுது, என்னுடைய சகோதரன் போய் ஒரு கரும்பலகையை இங்கே கொண்டு வந்திருக்கிறார், ஆனால் அது போதுமான அளவு உயரத்தில் அமைக்கப்படாமல், மிகவும் குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நல்லது; எனவே நாளை, நான் சில வெவ்வேறு விஷயங்களை கரும்பலகையில் வரைந்திட விரும்புகிறேன், அதினால் நீங்களும் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும், எனவே அதற்கேற்றவாறு நான் கரும் பலகையை சற்று உயர்த்தி அமைத்திடுவேன். 4. நேற்றிரவில் நானும் என் மனைவியும் ஒரு சிறிய பேப்பரை பார்த்துக் கொண்டிருந்தோம். புத்திகூர்மையுள்ள எனது சிறிய மகள் சாரா என்னுடைய பிரசங்கத்திலிருந்து குறிப்புகளை அதில் எழுதி வைத்திருந்தாள். அதில் அவள் ஏசாயா மற்றும் மத்தேயு மற்றும் ஏனைய அதிகாரங்களையெல்லாம் சரியாக குறித்தே வைத்திருந்தாள். அத்தாளின் முடிவில் “ பாதாளத்திற்கு இனிமேல் எந்த வெற்றியும் கிடையாது, மரணத்தின் கூர் அல்லது கொடுக்கு பிடுங்கப்பட்டுவிட்டது'' என்று எழுதி வைத்திருந்தாள், அவளுக்கு ஏறக்குறைய ஏழு வயதாகின்றது. அதன்பிறகு, “ வெளிப்படுத்தல்'' ("Revelation”) என்று எழுதுவதற்குப் பதிலாக “ புரட்சிகளின் புத்தகம்'' (Book of Revolutions) என்று எழுதி வைத்து விட்டாள். நல்லது, இவ்வாறு அவள் எழுதியதின் மூலம், சிறுவர்களும் ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க முயலுகிறார்கள் என்பதையே காண்பிக்கிறது. அப்படியில்லையா? சகோ.காலின்ஸ் அவர்களுடைய சிறிய மகளும் பின்னால் அங்கே உட்கார்ந்து இருக்கிறாள். அவர்கள் “ புரட்சி'' (Revolution) என்றே எழுதி விட்டார்கள். சகோ.நெவில் அவர்கள், “ புரட்சிகளின் நாள்'' என்று கூறுகிறார். சாரா எழுதியவற்றோடு சகோ. நெவில் தன் ஒப்புதலைத் தெரிவிக்கிறார். நாம் யாவரும் அதையே செய்ய வேண்டும் என்று நானும் கருதுகிறேன். 5. நல்லது, நாம் உண்மையிலேயே மகத்தான வேளையை உடையவர்களாய் இருக்கிறோம். என்னே, கர்த்தர் ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார். பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விட்டு வந்த பின்னர், இக்காலையில் நான் ஓர் அறைக்குள் படிப்பதற்காகச் சென்று விட்டு சற்று முன்னதாகத்தான் வெளியே வந்தேன். அற்புதமானதொரு சமயம் எனக்கு உண்டாயிருந்தது. நேற்றிரவிலும் வெகு நேரம் படித்துக் கொண்டிருந்தேன். 6. அதிகாலையில் 2.30 மணியளவில் வடக்குப் பிரதேசத்தி லிருந்து சிலர் வந்து, என்னை எழுப்பி, மரித்துக் கொண்டிருக்கிற ஒரு சிறு பெண்ணுக்கு ஜெபிக்கும்படி கேட்டார்கள். அப்பெண் நிச்சயம் நலமடைய கர்த்தர் செய்வார் என்று நான் நம்புகிறேன். அச்சிறு பெண்ணுக்கு ஜெபிக்கும்படி அவர்கள் இண்டியானா விலுள்ள பெட்ஃபோர்ட் என்ற அவ்வளவு தூரமான இடத்தி லிருந்து வந்திருக்கிறார்கள். இரண்டு மனிதர்கள் அவ்வளவு தூரத்திலிருந்து நேற்றிரவு ஆராதனைக்காக வந்துவிட்டு, பிறகு மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பிப் போய்விட்டு, மீண்டும் வந்திருக்கிறார்கள், மறுபடியும் அவ்வளவு தொலைவான தங்கள் ஊருக்கு திரும்பிப் போயாக வேண்டும். இரவு முழுவதும் காரோட்டிக் கொண்டேயிருந்திருக்க வேண்டும். மக்களுக்கு இத்தகைய நம்பிக்கை உண்டாயிருந்து, தேவனை அவர்கள் விசுவாசிப்பதை அறிய நன்றாக இருக்கிறது. 7. நாம் வாழும் இந்நாள் மகத்தானதாகும். இப்பொழுது இச் சபைக்காலங்களின் செய்திகளில் மேலும் மேலும் நாம் பெற்றுக் கொள்ளப்போகிறோம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 8. ஒவ்வொரு இரவிலும் நாம் சீக்கிரமாகவே ஆராதனையை ஆரம்பித்துவிட முயன்று கொண்டிருக்கிறோம். அப்படிச் செய்தால், சீக்கிரமாகவே உங்களை திரும்பி போக விட்டு விடலாம். அது நல்லது என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படிச் செய்தால், வேலைக்குப் போகிறவர்கள், சீக்கிரமாக வீடு திரும்பி, தங்கள் அலுவல்களுக்கு இடையூறின்றி போக வசதியாக இருக்கும். கடந்த இரவில், ஒன்பது மணி கடந்து 5 அல்லது 10 நிமிடங்கள் கழித்து, நாம் வெளியேறினோம், அதாவது நான் கூட்டத்தை அப்பொழுது முடித்து விட்டேன். இன்றிரவில் நம்மிடையே வெளியூர்களிலிருந்து இங்கு விஜயம் செய்யும் அனைத்து ஊழியக்காரர்களும் இருப்பது குறித்து நாம் மகிழ்ச்சியாயிருக்கிறோம். நான் சகோ. ஜூனியர் ஜாக்சனையும், சகோ. கார்பெண்டரையும், அங்கிருக்கும் சபையிலுள்ள நம்முடைய சகோதரனையும், மற்றும் இங்கே மேடையிலும் மற்றும் கூட்டத்திலும் ஏனைய அநேகரையும் காண்கிறேன். 9. என்னோடு மிஷனரி ஊழியங்களில் இருந்து வந்த என்னுடைய விலையேறப்பெற்ற சிநேகிதர் ஒருவர், அதாவது சகோதரன் ஆண்ட்ரூ , மற்றும் சகோதரி ஆண்ட்ரூ ஆகியோர் நேற்றிரவு கூட்டத்திற்கு வந்திருந்ததாக என்னிடம் கூறப்பட்டது. அவர்கள் சீனா தேசத்தின் மிகவும் உட்பிரதேசத்தில் இருந்து வருகிறார்கள். கடந்த வருடத்தில் ஜமெய்க்கா நாட்டில் எங்களுக்கு அருமையானதொரு சமயம் உண்டாயிருந்தது. எங்களுக்கு ஒரு மகத்தான வேளை உண்டாயிருந்தது. நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். இன்றிரவுக் கூட்டத்தில் சகோதரன் ஆண்ட்ரூ மற்றும் சகோதரி ஆண்ட்ரூ ஆகியோர் பிரசன்னமாயிருக்கிறார்களா என்று அறிய விரும்புகிறேன். இக்கட்டிடம் சரியாக அமைக்கப் படவில்லை. எனவே... ஆம் அவர்கள் அங்கே கடைசியில் அமர்ந்திருக்கிறார்கள். நீங்கள் சற்று எழுந்து நின்று உங்களைக் காண்பிக்க முடியுமா என்று அறிய விரும்புகிறேன். சகோதரன் ஆண்ட்ரூ, சகோதரி ஆண்ட்ரூ அவர்களே, ஒரு க்ஷணம் சற்று எழுந்து நில்லுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோ. ஆண்ட்ரூ , மற்றும் சகோதரி ஆண்ட்ரூ அவர்களே! உங்களிருவரையும் காண நாங்கள் மகிழ்வெய்துகிறோம். சென்ற வருடம் அவர்கள் தேசத்திற்கு நான் சென்றிருந்தபோது, இங்கு வரும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். 10.இப்பொழுது அவர்களுக்கு முன்பாக முகஸ்துதியாக இதை நான் கூறவில்லை, ஆனால், அவர்கள் தான் உண்மையான மிஷனரிமார்கள் என்று நான் அழைப்பதுண்டு. (இன்னும் கூடுதலாக நல்ல காரியங்களை அவர்களைப் பற்றி நான் சொல்ல விரும்பினேன், ஆனால் இப்பொழுது நான் அவற்றை அவர்களுக்கு முன்பாக சொல்ல விரும்பவில்லை). நாளை இரவு அவர்கள் இங்கிருந்தால், நாங்கள் வருவதற்கு முன்னர் அவர்கள் பேசட்டும். மிஷனரி ஊழியக்களங்கள் உண்மையிலேயே எப்படிப்பட்டது என்பதைக் குறித்து அவர்கள் கூற நீங்கள் கேட்க விரும்புகிறேன். சீனாவின் மிகவும் உள்ளார்ந்த பகுதிகளில் தூரமான இடங்களில் அவர்கள் இருந்திருக்கிறார்கள். அங்கே அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இருந்திருக்கவில்லை. அநேகம் அநேகமாண்டுகளாக அவர்கள் அங்கே இருந்திருக்கிறார்கள். ஒரு மோட்டார் வாகனத்தையோ, ஒரு இரயில் வண்டியையோ, அநேகமாண்டுகளாக அங்கே அவர்கள் பார்த்திருக்க வேயில்லையாம். சகோதரி எவ்வாறு அவர்களுடைய ரொட்டியை... அவர்கள் மாவைப் பிசைந்து அடிப்பார்களாம். இவ்வளவு சிரமங்கள் மத்தியில் அவர்கள் செய்த ஊழியம் தான் உண்மையான மிஷனரி ஊழியமாகும். அங்குள்ள ஜனங்கள் காயமடைந்து இரணங்களோடு வரும் போது, அங்கே மருத்துவராகவும் விளங்கிய சகோ.ஆண்ட்ரூ அவர்கள் கையில் ஊசியையும் நூலையும் கொண்டு இரணங்களை தைத்து விட வேண்டியிருக்கும். அவ்வளவு தூரம் அடிப்படை வசதிகளின்றி இருந்திருக்கிறது. அங்கே மக்கள் பிள்ளைகளைப் பெறும்போது, சகோதரி ஆண்ட்ரூ செவிலியாகவும் பணிபுரிந்திருப்பார்கள். சகோதரர் ஆண்ட்ரூ மருத்துவராக இருந்திருக்கிறார். அம்மக்கள் இவர்களை சார்ந்து இருந்திருக்கிறார்கள். 11. இங்கிலாந்து தேசத்திலுள்ள “ பெந்தெகொஸ்தே மிஷன் ஆஃப் இங்கிலாந்து'' என்று மிஷனரி ஊழிய நிறுவனமானது, “ களத்திற்குத் திரும்பிச் செல்ல இவர்கள் இருவரும் இயலாத அளவுக்கு வயது சென்றவர்களாகிவிட்டனர்'' என்று கூறிவிட்டது. அவர்கள் வசதியாக சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருக்கவில்லை. (அவர்கள் எவ்வளவாக சிறந்த மிஷனரிகளாக விளங்கினார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுவேன்). அவர்கள் வேறு யாரையும் சாராமல் சுயமாகவே அங்கே திரும்பிச் சென்றார்கள். இப்பொழுது ஜமெய்க்காவுக்கு திரும்பிப் போய் அப்பகுதிகளில் மிஷனரி ஊழியத்தைச் செய்து வருகிறார்கள். சகோதரர் ஃப்ரெட் சாத்மன் அவர்களும் நானும் அவர்களுடைய இல்லத்திற்குச் சென்று அவர்களை சந்திக்கும் சிலாக்கியம் எங்களுக்கு கிட்டியது. எத்தனை இன்பமான வேளையை அவர்கள் எங்களுக்குக் கொடுத்தார்கள் தெரியுமா? இனிமையான கிறிஸ்தவர்களாக அவர்கள் எங்களுக்கு இருந்தார்கள். அவர்கள் போன பிறகு அவர்களுக்கு ஒரு பெரிய மலர்வளையத்தை நான் சூட்டுவதைக் காட்டிலும், இங்கே அவர்கள் இருக்கையிலே அவர்களுக்கு ஒரு சிறு ரோஜா மொட்டைக் கொடுக்க விரும்புகிறேன். அவர்கள் உண்மையாகவே கிறிஸ்தவர்களாயிருக்கிறார்கள் என்று நான் உங்களுக்கு கூறுகிறேன். நான் என் மனைவியிடம், சகோதரி ஆண்ட்ரூ அவர்களைப் போல் ஒரு அருமையான, இனிய கிறிஸ்தவ பெண்மணியை பார்க்க முடியாது என்று கூறினேன். கிறிஸ்துவுக்குள்ளாக அச்சகோதரியின் வாழ்க்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. சகோதரன் ஆண்ட்ரூ அவர்களும் அப்படித்தான். ஆகவே இப்பொழுது உங்கள் நடுவில் எழும்பி நின்ற அவர்களை நீங்கள் பார்த்து விட்டீர்கள் என்று உறுதியுள்ளவனாயிருக்கிறேன். அவர்கள் இங்கிருந்து கிளம்பிச் செல்லும் முன்னர், இந்த முழுச்சபையும் அவர்களுடன் கைகுலுக்கி, அவர்கள் உங்களிடம் பேசுவதைக் கேட்க வேண்டுமென விரும்புகிறேன். 12. நாளை இரவு கர்த்தருக்கு சித்தமானால், நாம் இரண்டாவது சபைக் காலத்தைக் குறித்த செய்தியைத் துவக்குவோம். இன்றிரவில் நாம் முதலாம் சபைக் காலத்தைக் குறித்த செய்தியை ஆரம்பிக்கிறோம். கர்த்தர் நமக்கென ஒரு ஆசீர்வாதத்தை வைத்து வைத்திருக்கிறார் என்று நான் நிச்சயித்திருக்கிறேன். 13. நான் ஏற்கனவே கூறியதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது, வேதசாஸ்திரத்தைப் பொறுத்த மட்டில், அதைக் கூறுகிற வர்களோடு நாம் சில வேளைகளில் ஒத்துப் போகாமலிருக்கக் கூடும். வரலாற்று ரீதியான வருடம் மாதம் தேதிகளை, நான் அதிகாரபூர்வமான - நம்பத்தகுந்த வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகளிலிருந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன். அவர்களுடைய குறிப்புகள் ஒருபோதும் எந்தக் கட்சியையும் ஒருதலைப் பட்சமாக எடுத்துக்கொள்ள ஆர்வம் கொள்ளாமல், அந்தந்தக் காலங்களில் சபைகள் என்ன செய்தனவோ, அது என்னவாயிருந்தாலும் சரி, நடந்தவற்றை மறைக்காமல், அவ்வுண்மைகளை அவர்கள் அப்படியே எழுதி வைத்துள்ளார்கள். அவர்கள் எந்த அணியையும் சாராமல் உள்ளதை உள்ளபடியே எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் தெய்வீக வியாக்கியானத்தைப் பொறுத்த மட்டில், எனக்குத் தெரிந்த வரையில், அதை நான் அளிக்கிறேன். சில சமயங்களில் நான் சற்று கடுமையாக பேசுவதைப் போல் இருந்தால், அவ்வாறு பேச வேண்டுமென்று நான் விரும்பி செய்வது கிடையாது. என்னைப் பற்றி அறிந்த எவரும் நான் அவ்வாறு செய்வதில்லை என்றறிவர். நான் விரும்புவது என்ன வெனில்... ஆனால் ஒரு கருத்தைச் சரியாக விளங்க வைக்க வேண்டுமெனில், அதை ஆணித்தரமாகத் தான் எடுத்துரைக்க வேண்டும். ஒரு பலகையில் ஒரு ஆணியை வெறுமனே அமுக்கிவைத்தால், அது அதில் உறுதியாகப் பிடிப்புக் கொண்டிருக்காது. ஆனால் ஆணியைப் பலகையில் நன்கு சுத்தியால் அடித்து இறுக்கி அதை மடக்கி விட்டால் தான் அது பலகையில் உறுதியாக நிலைத்திருக்கும். அவ்விதமாகத்தான் நானும் செய்ய முயன்று கொண்டிருக்கிறேன். எல்லாவித ஸ்தாபனங்களையும் குறித்து நான் பேசுகிறேன், எனவே நான் எல்லாவற்றிலும் முரண்பட்டே முயற்சிக்கிறேன் என்பதல்ல. 14.மாட்டு மந்தைகளை இனம் பிரிப்பதைக் குறித்து நான் அடிக்கடி கூறியுள்ளேன். அநேகமாண்டுகளுக்கு முன்பாக, நான் மாட்டு மந்தையை மேய்ச்சல் கருகளுக்கு ஒட்டிக் செல்வதில் ஈடுபட்டிருந்ததுண்டு வசந்த காலத்தில் இவ்வாறு மாடுகளை அதனதன் இனமாக ஒன்று சேர்த்து மந்தையாக ஆக்குவதற்காக ஓரிடத்தில் சேர்ப்பதற்காக இவ்வாறு ட்ரிஃப்ட் எஃபன்ஸ் (Drift Fence) என்று குறிப்பிட்ட ஓரிடத்தில் ஓட்டிச் சேர்ப்பதுண்டு. ஹியர்ஃபோர்ட் அசோஸியேஷன் என்ற நிறுவனத்திற்காக நான் இந்த வேலையைச் செய்தேன். அவர்கள் தங்கள் மந்தைகளை ட்ரபிள்சம் ரிவர் வெலி (Troublesome River Valley) என்ற இடத்தில் மேய்த்தனர். நான் அப்பொழுது குதிரையின் சேணத்தின் முகப்புப் பகுதியில் என் காலை தொங்க வைத்துக் கொண்டு மாட்டு மந்தைகள் அவ்வாறு அப்பிரதேசத்திற்குள் பிரவேசிப்பதை, அம்மாட்டுப் பண்ணையின் ரேஞ்சர் கவனித்துக் கொண்டிருப்பதை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். 15.அரசுக்குச் சொந்தமான ஒரு நிலத்தில் உங்கள் மாடுகளை மேய்க்க வேண்டுமானால், புல்வெளியில் மேய்ப்பதற்கு ஒரு மாட்டுக்கு ஒரு டன் (1000 கிலோ) அளவுக்கு அந்நிலத்தில் நீங்கள் புல்லை வளர்த்திருக்க வேண்டும். அப்படியிருந்தால் தான் அங்கே மேய்க்க முடியும். இத்தனை மாடுகளை நீங்கள் மேய்க்க வேண்டுமானால் அதற்கேற்ற அளவுக்கு அங்கு புல்லை வளர்த்து, அறுத்து அதைக் காய வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாட்டுப் பண்ணை நிலத்திலும் எந்த அளவுக்கு புல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு சரியாகத்தான் அதினுள் மாடுகளை மேய்க்க உள்ளே கொண்டு செல்ல முடியும். 16. அங்கே அம்மாடுகள் பலவிதமான சூட்டு அடையாளக் குறிகளோடு உள்ளே சென்று கொண்டிருந்தன. சிலவற்றிற்கு “ பார் எக்ஸ்'' (Bar X) என்ற அடையாளக் குறி இருந்தது. எங்கள் பண்ணைக்கு அடுத்தாற்போல் இருந்த திருவாளர் க்ரீம்ஸ் என்பவருடைய மாடுகளுக்கு “ டயமண்ட் டி'' என்று குறி இருந்தது. ஒரு முனையில் "டி' என்றும், மற்ற முனையில் 'டயமண்ட்' என்றும் இருந்தது. ட்ரபிள்சம் ரிவர் என்ற இடத்திற்கு முன்னால் “ லேஸி கே'' (Lazy K) என்று பெயரிடப்பட்டவைகள் இருந்தன. எங்களுடைய மாடுகளுக்கு பெயர் 'டர்க்கி ட்ராக்'' (Turkey Track) என்பதாகும். எங்கள் மேய்ச்சல் நிலத்திற்கு கீழ்ப் பக்கத்தில் மேய்ந்தவைகளுக்கு ட்ரைபாட் (Tripod) என்ற பெயருள்ளவைகள் இருந்தன. ஆகவே இவ்வாறு பல்வேறு விதமான அடையாளப் பெயர்க்குறிகள் கொண்ட மாடுகள் உள்ளே சென்று கொண்டிருந்தன. 17. இவ்வாறு வெளி நிலங்களில் மேய்ச்சலுக்காக பிரவேசிக்கும் மாடுகளை உற்றுக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ரேஞ்சர் (ரேஞ்சர் என்றால் மாடுகள் மேய்வதற்காக உள்ள வெளி நிலங்களில் அவைகளை கண்காணித்து ரோந்து சுற்றி மேற்பார்வையிடும் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்பவர் - மொழி பெயர்ப் பாளர்) ஒருபோதும் மாடுகளுக்கு சூடுபோட்டு இடப்பட்டுள்ள அவற்றின் அடையாளப் பெயர் குறிகளைப் பற்றி கவனம் செலுத்தவேயில்லை. சில மாடுகளுக்கு அவ்வடையாளப் பெயர் குறிகள் அவற்றின் இடது பக்கத்தில் இடம் பெற்றிருந்தன. எனவே அவரால் அது என்ன பெயர்குறி இடப்பட்டுள்ளது என்பதை கவனிக்க இயலாது. ஆகவே அவர் அதற்கு என்ன பெயர்குறி இடப்பட்டுள்ளது என்பதை கவனித்துக் கொண்டிருக்கவில்லை. எந்த மாட்டிற்கும் அதன் இனத்தைக் காட்டும் அதன் இரத்தத்தின் அடையாளச் சீட்டு அதின் காதில் இருந்தாலொழிய, உள்ளே பிரவேசிக்காமல் இருக்கும்படி நிச்சயப்படுத்தினவராக இருந்தார். ஒவ்வொரு மாடும் சுத்தமான ஹியர்ஃபோர்ட் என்ற இனத்தைச் சேர்ந்தவைகளாக மட்டுமே இருக்க வேண்டும், அல்லாவிடில் அவைகள் அந்த காட்டுக்குள் மேயப் போக முடியாது. அதற்கு என்ன பெயர்கள் வேண்டுமானாலும் கொடுக்கப் பட்டிருக்கலாம். அதனால் எந்த வேறுபாடும் ஏற்படுவதில்லை. ஆனால் அதன் காதில் கோர்த்து தொங்கவிடப்பட்டுள்ள என்ன இரத்தத்தையுடையது என்பதைக் காட்டும் அடையாளச் சீட்டே அங்கு முக்கியம். நியாயத்தீர்ப்பிலும் காரியமானது அவ்வாறே இருக்கும் என்று எண்ணுகிறேன். என்ன வித்தியாசமான பெயர்கள் நமக்கு இருக் கிறது என்பது ஒரு பொருட்டல்ல. ஆண்டவர் இரத்த அடையாளச் சீட்டு இருக்கிறதா என்பதை மட்டுமே கவனித்துப் பார்ப்பார். “ இரத்தத்தை நான் காண்கையில் நான் உங்களை கடந்து செல்லுவேன்'' (சகோ.பிரான்ஹாம் அவர்கள் மைக்ரபோனைப் பற்றி ஒரு சகோதரனிடம் பேசுகிறார் - ஆசி) 18. இன்றிரவு கூடிய வரை முன்கூட்டியே முடித்துவிட நாங்கள் முயற்சி செய்கிறோம், அதனால், நாளை இரவுக் கூட்டத்திற்கு வந்து இந்த சபைக்காலங்களைப் பற்றிப் பார்க்க, நமக்கு இயலும். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பொதிந்து சாலையின் தொங்கலில் கிடக்கிற சில மகத்தான காரியங்களை நான் முழுவதும் கூறாமல், தேக்கி வைக்க எனக்கு கஷ்டமாக இருக்கிறது. யாவற்றையும் ஒரே இராத்திரியில் கொடுத்துவிட வேண்டும் என்று கூட விழைகிறேன். அதுவே என்னுடைய இயல்பு என்று அறிவீர்களாக. ஆனால் ஒவ்வொரு இரவிலும் கொடுக்கத்தக்கதாக சிலவற்றை தேக்கி வைத்திருந்து ஒவ்வொன்றாகத்தான் கொடுக்க வேண்டியுள்ளது. 19. இப்பொழுது, இந்த மகத்தான புத்தகத்தை நாம் திறக்கும் முன்னர், நாம் தலைகளை வணங்கி, பயபக்தியுடன் ஜெபிப்பதற்காக நாம் சற்று நேரம் எழுந்து நிற்போமாக. அப்பொழுது இயன்றவரை நமது இடங்களை மாற்றிக்கொள்வோமாக. 20. எங்கள் பரம பிதாவே, நாங்கள் மீண்டும், உம்முடைய மகத்தான பரிசுத்த சிம்மாசனத்தை, விசுவாசத்தில் தள்ளாட்டமில்லாமலும், நாங்கள் வரும்படி, அழைக்கப் பட்டபடியாலும் அணுகுகிறோம். நாங்கள் இங்கே, ஒரு குறிப்பிட்ட சபையின் பெயராலோ அல்லது ஒரு மதஸ்தாபனத்தின் பெயராலோ, அல்லது இங்கிருக்கிற இந்த சபையின் பெயரைக் கொண்டோ , அல்லது எங்களது சொந்தப் பெயரிலோ, உமது சமுகத்தில் வருகிறோம் என்று எங்களால் சொல்ல முடியாது. அந்தப் பெயர்களைக் குறித்து நாங்கள் நிச்சமற்றிருப்பதோடு, தேவனுடைய சமுகத்தில் அவர் பேசுவதைக் கேட்க எங்களுக்கு சமுகமளிப்பீரோ என்பதும் உறுதியல்ல. ஆனால், “ என் நாமத்தினால் பிதாவை நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ, நான் அதை செய்வேன்'' என்று இயேசு கூறியுள்ளபோது, நாங்கள் இயேசுவின் நாமத்தினாலே தான் உம்மிடம் வருகிறோம். எங்களுக்கு நீர் செவி கொடுக்கப் போகிறீரென விசுவாசிக்கிறோம். 21. கடந்து போன காலங்களில் வாழ்ந்த இரத்த சாட்சிகளைக் குறித்து நாங்கள் படிக்கையில், அவர்கள் அக்காலங்களில் எவ்வாறு தங்கள் சாட்சியை தங்களுடைய சொந்த இரத்தத்தால் முத்திரையிட்டார்கள் என்பதை அறிய நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களைப் பற்றி படிக்கும் பொழுது, இக்காலத்தில் வாழும் நாங்கள் அவர்களை விட மிகவும் குறைவாகவே செய்கிறோம் என்பதாக உணருகிறோம். நாங்கள் உமக்கடுத்தவைகளிலே செயல்படுகையில், எங்களில் காணப்படுகிற அசட்டையான போக்கை எங்களுக்கு மன்னித்தருள வேண்டுமென நான் உம்மிடம் ஜெபிக்கிறேன், கர்த்தாவே! உம்முடைய வசனத்தை நாங்கள் படிக்கையில், புதிய அபிஷேகத்தை எங்களுக்குத் தாரும், அதினால் கடந்த காலத்தில், கிரயம் கொடுத்து மீட்கப்பட்ட, ஜீவனுள்ள தேவனுடைய இந்த மகத்தான சபைக்குரிய பரிசுத்த வேத பிரமாணத்தை அதற்கு உருவாக்கிக் கொடுப்பதற்காக எப்பேர்ப்பட்ட துன்பங்கள் உண்டாயிருந்தன என்பதை நாங்கள் கண்ணுறும்படி எங்களுக்குச் செய்தருளும். 22. பரம பிதாவே, நாங்கள் என்ன பேச வேண்டுமென்பதை அறியவில்லை. எனவே எங்கள் மூலமாக நீர் பேசியருளும் என்று நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். அவருடைய சபையில் நாங்கள் தேவனுடைய சமுகத்தில் இருந்து, உமக்கு காத்திருந்து இதே ஜெபத்தை ஏறெடுக்கிறோம். இந்த ஜனங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர், இவர்களுக்குள் இருக்கும் வல்லமைகளை யெல்லாம் இன்றிரவில் ஒன்றிணைத்து, யாவருடைய இருதயங்களிலும் சுவிசேஷத்தை விதைத்து, அதினால் நாங்கள் புதியதொரு நிலையை எடுத்துக் கொள்ளவும், வரப்போகும் காலத்திற்கான ஒரு புதிய நம்பிக்கையைப் பெற்றுக் கொள்ளவும் உதவி செய்யுமாறு வேண்டுகிறோம் இதை எங்களுக்கு அருளும், கர்த்தாவே. ஏனெனில், அத்திமரமானது துளிர்விட்டுக் கொண்டிருப்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்; இஸ்ரவேல் ஒரு தேசமாக ஆகிக் கொண்டிருக்கிறது; புறஜாதிகளின் நாட்கள் எண்ணப் பட்டுக் கொண்டிருக்கிறது; எங்களுடைய மீட்பராகிய இயேசு கிறிஸ்துவினுடைய வருகைக்காக நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 23. கர்த்தாவே, எங்கள் மத்தியில் உலாவியருளும். நேற்றிரவில், “ நீர் குத்துவிளக்குகளின் மத்தியில் உலாவுகிறீர்'' என்று கூறப்பட்டபடி, கர்த்தாவே, இன்றிரவில் எங்கள் மத்தியில் உலாவியருளும். வரப்போகிற தீங்கைக் குறித்து எங்கள் இருதயங்களுக்கு எச்சரிக்கையருளி, உம்முடைய வசனத்தைக் குறித்து புரிந்து கொள்ளும் அறிவை எங்களுக்கு தந்தருளும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென். (நீங்கள் அமரலாம்). 24. இப்பொழுது, நான் ஏற்கனவே கூறியபடி, ஒவ்வொரு நாளிலும், சம்பவங்கள் நடந்த காலத்தைக் குறித்தும், இடங்களைக் குறித்தும் மற்றும் தேவையான குறிப்புகளை, நான் குறித்து வைத்தவைகளிலிருந்து, எவ்வளவு அதிகமாக கொடுக்க முடியுமோ கொடுக்க முயலுவேன். ஏனெனில் நாம் படிக்கப் போகிறவைகள் வரலாற்று ரீதியாக சம்பவித்தவைகளாகும். சபைக்காலங்களில் நடந்தவைகள் இப்பொழுது வரலாறாக ஆகிவிட்டது, இப்பொழுது இக்காலத்தில் நாம் அவைகளை உற்று நோக்கி, காலத்திற்கு ஒரு மாதிரியாக ஆக்கிக் கொள்கிறோம். 25. ஞாயிறு காலை மற்றும் ஞாயிறு மாலைக் கூட்டங்களில் நமக்கு மகிமையானதொரு வேளை உண்டாயிருந்தது. நிச்சயமாக அப்படித்தானிருந்தது. எனக்கே அவ்வாறுதான் இருந்தது. மேலும் வெளிப்படுத்தலைக் குறித்து... 26. இப்பொழுது எதைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம்? இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாட்டைப் பற்றியே. தேவன் அளித்த அந்த வெளிப்பாட்டில் அவர் யார் என்பதைப் பற்றி வெளிப்படுத்தினார் என்று கண்டோம்? வெளிப்படுத்துதல் களியெல்லாம் முதன்மையாக அவர் யார் என்பதைப் பற்றி நாம் கண்டதென்னவெனில், இயேசுவானவர் திரித்துவத்தின் மூன்றாம் ஆள் என்றல்ல, திரித்துவம் என்று சொல்லப்படுகிறதே, அதிலுள்ள மூன்றுமே பரிபூரணமாக அவராகத்தான் இருக்கிறது என்பதாக பார்த்தோம். அவரே பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பதாக உள்ளார். அப்படித்தான் நமக்கு வெளிப்படுத்துதல் உண்டாயிருந்தது. அதே அதிகாரத்தில் நான்கு இடங்களில், அவரே சர்வ வல்லமையுள்ள தேவன் என்பது உரைக்கப்பட்டுள்ளது. இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர்; தாவீதின் வேரும் சந்ததியுமானவர். 27. இந்தக் காரியங்களைப் பற்றியுள்ள முழு விஷயத்தையும் நாம் தெளிவுபடுத்த முயற்சி செய்கிறோம். ஏனெனில், மீண்டும் அதைப் பற்றி இப்பொழுது இனி கேட்கப் போகிறோம் என்பதை நான் அறியேன், “ இனி காலம் செல்லாது'' எனக் கூறப்படும் காலம் வந்து, நித்தியத்திற்குள் இக்காலங்களும் வேளைகளும் அஸ்தமனமாகிவிடப் போகிற வேளை நெருங்கிக் கொண்டிருக்கிற படியால், இனிமேல் ஒருவேளை இவைகளைக் குறித்து பேசவும், கேட்கவும் இயலாதபடி ஆகிவிடக்கூடும். இங்கே நான் கூறியபடி, இதைக் குறித்து பேசவும், சரியானபடி வியாக்கியானம் கொடுக்கவும், என்னைவிட மிகச் சிறந்த அநேக சகோதரர்களும், போதகர்களும் இருக்கக்கூடும். ஆயினும், இதைச் செய்யும்படி தேவன் என் இருதயத்தில் அருளியுள்ளார். எனவே எது சரியென நான் பார்க்கிறேனோ, அதை அப்படியே சரியாக நான் கூறாமற்போனால் நான் ஒரு மாய்மாலக்காரனாக ஆகிவிடுவேன். பாருங்கள்? எனவே நான், “ நான் எதையும் மறைத்து வைக்கவில்லை....'' என்று பவுல் கூறியபடி நான் எல்லா வேளைகளிலும் தேவனுக்கு முன்பாக குற்றமின்றி இருக்கவே விரும்புகிறேன். "இரவும் பகலும் கண்ணீரோடே எச்சரித்துக் கொண்டு, அப்படியாக சபையானது நிலை நிற்கும்படியாக செய்து வந்தேன்'' என்று பவுல் கூறுகிறான். உங்களில் யாராவது இழந்து போகப்பட்டால், என்னுடைய கைகளில் அந்த இரத்தம் இல்லாது இருக்கும்படியாக, அந்த நேரத்தில் நான் எல்லா மனிதருடைய இரத்த பழிக்கும் நீங்கலாயிருக்க விரும்புகிறேன். எனவே, என்னோடு நீங்கள் முரண்படுவீர்களாயின், அருமையான சிநேக பாவத்தோடு அதைச் செய்யுங்கள். அது நன்றாக இருக்கும். யாவருக்கும் சேர்த்து உதவிகரமாக இருக்கத்தக்கதாக இப்பொழுது கர்த்தர் நமக்கு சிலவற்றை வெளிப்படுத்தக் கூடும். 28. முதலாவதாக அவர் தன்னைத்தானே யார் என்பதை வெளிப்படுத்தினதாக பார்த்தோம். இப்பொழுது அவர் யார் என்பதை நாம் அறிவோம். 29. நான் ஏற்கனவே பிரசங்கித்ததில், தெளித்தல், மற்றும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் உள்ள ஞானஸ்நானத்தைப் பற்றி குறிப்பிட்டு, அது ஒரு கத்தோலிக்க ஞானஸ்நானம் என்றும், பிராடெஸ்டெண்ட் அல்லது புதிய ஏற்பாட்டு ஞானஸ் நானம் அல்ல என்றும் எடுத்துரைத்தேன். அவ்விஷயத்தை நான் தெளிவுபடுத்தி விட்டேன் என்று நம்புகிறேன். கத்தோலிக்க சபை உருவாக்கப்படுவதற்கு காரணமாக அமைந்த நிசாயா ஆலோசனை சங்கம் கூடுகிற காலம் வரையிலும் அதற்கு முன்பாக எவராது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்களா என்பதை எனக்கு வேதவாக்கியங் களிலிருந்து, ஒரு வேதவாக்கியத்தின் மூலம் தயவு செய்து எடுத்துக் காண்பியுங்கள் பார்க்கலாம் என்று அறைகூவல் விடுத்திருந்தேன். அப்படிக் காண்பித்துவிட்டால், என் முதுகில் “ நான் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி'' என்று எனக்கு நானே முத்திரை குத்திக் கொண்டு தெருவில் கடந்து செல்லுவேன் என்றும் கூறியிருந்தேன். நான் கூறுவது சத்தியமானது என்பதைக் காண்பிக்கத்தக்கதாகத்தான் நான் அவ்வாறு கூறினேனே தவிர, கடினமாகப் பேச வேண்டும் என்ற நோக்கத்திலல்ல. பாருங்கள்? 30. தமது மாமிசத்தில் வந்த சர்வ வல்லமையுள்ள தேவன் அவர் என்பதாக இங்கே வேதமானது அவரைப் பற்றி வெளிப்படுத்துகிறது. பாருங்கள், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்றல்ல. அது மூன்று தேவர்களல்ல. அல்லது ஒரே தேவன் வெட்டப்பட்டு மூன்று ஸ்தானங்களில் வைக்கப்பட்டதல்ல. மூன்று உத்தியோகங் களில் அல்லது பதவிகளில் ஒரே தேவன் கிரியை செய்தார். பிதா ஸ்தானம், குமாரத்துவம், மற்றும் பரிசுத்த ஆவி. ஏதேன் தோட்டத்திற்குப் பிறகு மீண்டும் மானிட உள்ளங்களில் திரும்பி வந்து வாழத்தக்கதாக வழியை உண்டாக்கி அதினால் மானிடர் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாக மீண்டும் அவரோடு ஆகும்படி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார். தேவன் நமக்கு மேல் இருக்கிறார், தேவன் நம்மோடு இருக்கிறார், தேவன் நமக்குள் இருக்கிறார் என்பதாக அது இருக்கிறது. அது தான் அதிலுள்ள வேறுபாடாகும். பாருங்கள்? 31. வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதிகாரத்தில் இவ் விஷயங்கள் வெளிப்படுத்தப்பட்டு, தீர்க்கமாக உரைக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டில், வேதத்தில், வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம் ஒன்றுதான், இயேசு தன்னுடைய சொந்த முத்திரையைப் போட்டிருக்கிற புத்தகமாக விளங்குகிறது. அதில் முதலாவதாக, “ இதை வாசிக்கிறவனும், கேட்கிறவனும் பாக்கியவான்'' என்று அவர் கூறியுள்ளார். இப்புத்தகத்தின் முடிவாக “ இதிலிருந்து ஒருவன் எதையாகிலும் எடுத்துப் போட்டால், அல்லது இதனோடு எதையாகிலும் கூட்டினால், ஜீவ புத்தகத்தி லிருந்து அவனுடைய பங்கு எடுத்துப் போடப்படும்'' என்று அவர் கூறியுள்ளார். எனவே இதிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போடுபவனுக்கு அது ஒரு சாபமாக இருக்கும். இப்புத்தகம் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய முழுவதுமான வெளிப்பாட்டைக் கொண்டிருக்கிறது. எனவே, அவரை மூன்று கூறாக்கினால், என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய பெயர் நீக்கப்படுகிறது என்பதைப் பாருங்கள். 32. ஆதிகாலத்து சபையோ, அக்காலத்தில் இருந்த எந்தவொரு பிராடெஸ்டெண்டோ , எந்த ஒருவருமே, மூன்று தேவர்கள் உண்டு என விசுவாசிக்கவில்லை. நிசாயா ஆலோசனை சங்கத்தில் தேவத் துவத்தைப் பற்றிய விஷயம் ஒரு பெரிய விவாதத்திற்குரிய பிரச்சினையாக ஆகிவிட்டது. அதைப் பற்றி இரு வெவ்வேறான கருத்துக்களை கொண்ட ஒரு சாராராக அவர்கள் அங்கே பிரிந்து கொண்டு, ஒருவர் வலது புறமாகவும், ஒருவர் இடது புறமாகவும் சாய்ந்து போனார்கள். திரித்துவம் உண்டு என்று நம்புகிற திரித்துவவாதிகள் இறுதியாக கத்தோலிக்க சபையை ஏற்படுத்தினார்கள். அவர்கள் முழு திரித்துவ உபதேசக்காரர்களாக ஆகி, தேவனை மூன்று நபர்கள்'' என்று ஆக்கிவிட்டார்கள். இன்னொரு சாரார், “ ஒருத்துவக்காரர்கள்'' என்று அழைக்கப்படும்படி, தேவனை “ ஒருத்துவம்'' எனறு ஆக்கி இப்படியாக எதிர்த்திசையில் சென்றார்கள். இரு சாராருமே தவறாகத்தான் இருக்கிறார்கள். தேவன் அவ்வாறிருக்க முடியாது. 33. இயேசு தாமே, தனக்குத் தானே தன்னுடைய பிதாவாக இருக்க முடியாது. இயேசுவுக்கென ஒரு பிதா இருந்து, அவர்.. அப்படியாயின் மூன்று தேவர்கள் இருக்கிறார்கள் என்றாகிவிடுமே. அவ்வாறிருக்க முடியாது. அவருக்கு ஒரு பிதா உண்டு என்றால், இவரைத் தவிர வேறொருவர் இருக்கிறார் என்றாக வேண்டும்... பரிசுத்த ஆவி என்று வேறொருவர் அவ்வாறிருந்தால், அவர் முறை கேடான குழந்தை என்றாகிவிடும். வேதமானது பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் பிதா என்று கூறுகிறது. நமக்குள் பரிசுத்த ஆவி இருக்கிறதென்றால், பரிசுத்த ஆவி என்ற பெயரில் அந்த உத்தியோகத்தில் பிதாவானவரே நமக்குள் இருக்கிறார் என்று அறிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே ஒரு மனிதனுக்குள் ஆவியாக இருந்த அதே யேகோவா தேவன் தான் மீண்டும் நமக்குள் இப்பொழுது வந்திருக்கிறார். 34.மூன்று தேவர்கள் இல்லை. மூன்று தேவர்கள் உண்டு என்பது, அஞ்ஞான மற்றும் விக்கிரக வழிபாட்டுக்காரர்களுடைய கொள்கையாகும். அது அப்படியே உள்ளே புகுந்து விட்டது. இவ்வாரம் முழுவதும் இச்செய்தியை விடாமல் தொடர்ந்து கேளுங்கள். உண்மைகளை சரியாகக் கேட்டு அறியும் முன்பே அதைப் பற்றிய தப்பபிப்ராயத்தை ஏற்படுத்திக்கொள்ளாமல், கவனமாகக் கேட்டு, வரலாற்றுப் பூர்வமாக எடுத்துக்கொள்ளுங்கள். நான் மேற்கோள் காட்டும் அதே வரலாற்றை எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது வேறுயாருடைய வரலாற்றுக் குறிப்புகளை எடுத்துக் கொண்டாலும் சரி, எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அனைத்து வரலாற்றாளர்களும் இவைகளையே கூறுகின்றனர். அந்த வரலாற்றாளர்கள் யாவரும், எந்த ஒரு பட்சத்திலோ அல்லது கொள்கையின்பாலோ சார்ந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களல்ல, ஆனால் நடந்ததென்னவோ அந்த உண்மைகளை வரலாற்றில் பொறிப்பதில்தான் ஆர்வமுள்ளவர்கள். அந்த “ பிதா, குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தினால் ஞானஸ் நானம்' என்பதானது, எவ்வாறு லூத்தரின் காலத்திலும், பிறகு வெஸ்லியின் காலத்திலும் அப்படியே உள்ளே ஊடுருவி வந்தது என்றும், இப்பொழுது இக்கடைசி காலத்தில் எவ்வாறு அதன் முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது என்பதையும் கவனியுங்கள். இக்காலங்களில் கத்தோலிக்க சபையில் எப்பொழுது அது உள்ளே நுழைந்தது என்பதையும், பிறகு லூத்தரின் காலத்தில் ஊடுருவி வெஸ்லியின் காலத்திலும் ஊடுருவியது என்பதையும், ஆனால் வெஸ்லியின் காலத்திற்கும் லவோதிக்கேயாவின் இறுதிக் கட்டத்திற்கும் இடையில் அதன் போலித்தன்மை அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். அது உண்மை . இதெல்லாம் வரலாற்றுப் பூர்வமானவைகள். வரலாற்றுப் பூர்வமானவைகள் மட்டுமல்ல, வேதப்பூர்வமானவையும் ஆகும். 35. நாம் இப்பொழுது இன்றிரவில் ஏழு சபைக் காலங்களை அணுகப்போகிறோம். இப்புத்தகம் எழுதப்பட்ட சமயத்தில் ஆசியாமைனரில் உள்ள ஏழு ஊர்களில் இவ்வேழு சபைகளும் உண்டாயிருந்தன. இச்சபைகள், எதிர்வரும் காலத்தில் வரப் போகும் ஏழு சபைக்காலங்களுக்குரிய அதே குணாதிசயத்தை கொண்டவைகளாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில்... அக்காலத்தில் இன்னும் அநேகமான சபைகள், கொலோசே சபை மற்றும் இன்ன பிற சபைகளும் உண்டாயிருந்த போதிலும், தேவன் இவ்வேழு ஊர்களில் இருந்த இவ்வேழு சபைகளையே அவைகளின் குணாதிசயங்களினிமித்தம் தெரிந்து கொண்டார். 36. இப்பொழுது, அவர் ஏழு பொன்குத்து விளக்குகளின் மத்தியில் நிற்கக் காண்கிறோம். அவருடைய கரத்தில் அவர் ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார். இவ்வேழு நட்சத்திரங் களைப் பற்றி அவர், “ வெளிப்படுத்தின விசேஷம் 1ம் அதிகாரம் 20ம் வசனத்தில், "ஏழு சபைகளுக்குரிய ஏழு தூதர்கள்'' என்று கூறியுள்ளார். 37. வேதத்திலுள்ள இந்த வெளிப்பாட்டை அக்காலத்திலுள்ள வர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில், இயேசு திரும்பி வருவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பு அவர்கள் விழிப்புடன் காத்திருப்பதினால் அவர்களுக்கு என்ன நன்மை உண்டாயிருக்கும்? எனவே அது அவர்களுக்கு அருளப்பட வில்லை. 38. இங்கு இருக்கிறவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன், கத்தோலிக்கரே, லூத்தரன்களே, மெதோடிஸ்டுகளே, ஏனையோரே, உங்களுக்கு நான் கூறுகிறேன்; இன்றைக்கு வேதவாக்கியத்தின் பேரில் கிடைத்துள்ள வெளிச்சமானது மார்ட்டின் லூத்தருக்கு கொடுக்கப்படவில்லை. ஜான் வெஸ்லிக்குங் கூட கொடுக்கப்படவில்லை. லூத்தர் பிரசங்கிக்காமல் விட்ட பரிசுத்தமாகுதலைப் பற்றி ஜான் வெஸ்லி பிரசங்கித்தார். ஒளியானது நமக்கு அவசியமாயிருக்கிறபடியால், ஒளிவருகிறது. தேவன் அதைக் கூறுகிறார். தேவன் அதைத் திறந்து கொடுக்கிற நாள் வரையிலும், அது நம்முடைய கண்களுக்கு மறைவாகவே இருந்து வந்துள்ளது. நாம் போன பிறகு என்ன நடக்குமோ என்று வியக்கிறேன். ஆம், நாம் இன்னும் ஒன்றுமே அறிந்து கொள்ள இயலாத இன்னும் மிகமிக அதிகமான விஷயங்கள் இருக்கின்றன என்றே நான் கருதுகிறேன். அது உண்மை. வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தின் முழுவதையும் நாம் எடுத்துக் கொண்டால்... புறம்பாக முத்திரையிடப்பட்ட ஏழு முத்திரைகள் உள்ள புத்தகம் அங்கே உள்ளது. அது இப்புத்தகத்தில் எழுதப்பட வேயில்லை. இந்தச் சபைக்காலத்தில் தான் அம்முத்திரைகள் திறக்கப்பட்டு, தேவனுடைய கடைசியான ஏழு இரகசியங்களும் தெரியப்படுத்தப்பட வேண்டும். குளிர்காலம் முழுவதிலும் அதைப் பற்றி தொடர்ந்து பிரசங்கிக்க நான் விரும்புவேன். ஆம், ஐயா! ஏழு சபைக் காலங்கள். 39. ஏழு இடிமுழக்கங்களை தானியேல் கேட்டபொழுது, அவைகளை எழுதாதபடி அவன் தடுக்கப்பட்டான். யோவான் அச்சப்தங்களைக் கேட்டான். இந்தப் புத்தகம் முத்திரையிடப் பட்டது. புத்தகத்தின் புறம்பாகவும் ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டிருந்தது. ஆனால் இந்நாட்களிலோ, இம்முத் திரைகள் திறக்கப்பட்டு ''தேவ இரகசியம் நிறைவேறும்''. வேறு விதமாகக் கூறினால், தேவன் தன்னுடைய சபைக்கு அறியப்படுவார். மூன்று நபர்களாக அல்ல, ஒரே நபராகத்தான் அறியப் படுவார். தேவனுடைய இரகசியம் வெளிப்படுத்தப்படும். அது முழுவதுமாக வெளிப்பட்டிருக்கும் பொழுது, ஏழு இரகசியங் களும் சபைக்கு திறந்து கொடுக்கப்படும். ஏனெனில், அப் பொழுது சபையானது பரிசுத்த ஆவியானவரின் ஊக்குவிக்கும் அசைவில் வாழ்ந்து கொண்டிருக்கும்; அவர் அப்பொழுது தாம் உயிரோடிருப்பதையும், நமக்குள் அவர் ஜீவிப்பதையும் அடையாளம் காண்பிப்பவராக உள்ளும் புறம்பும் அசைவாடிக் கொண்டிருப்பார். அப்பொழுது நாம் நமக்குள் இருக்கும் ஜீவனுள்ள கிறிஸ்துவை தொழுது கொண்டிருப்போம். 40. பெரிய சபைக்களுக்காகவும், பெரிய காரியங் களுக்காகவும் எதிர்நோக்கியிருக்க வேண்டாம். இந்தப் பெந்தெகொஸ்தேயின் காலத்தைப் பற்றி நாம் படிக்கையில் அவர்கள் எங்கே வழுவிப் போனார்கள் என்பதை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள். அந்த சபைக்காலத்தின் பெயராகிய லவோதிக்கேயா என்பதின் பொருள். என்னவெனில், “ ஒன்றிலும் குறைவில்லாத ஐசுவரியம் உள்ளது'' என்பதாகும். ஆயினும், அது நிர்வாணமாயும், நிர்ப்பாக்கியமுள்ள தாகவும், குருடாகவும், பரிதபிக்கப்படத்தக்க நிலையிலும் இருந்து வருகிறது; ஆயினும் அவ்விதமான நிலையிலிருப்பதை அறிய மாட்டாமல் இருக்கிறது. பார்த்தீர்களா? அவர்கள் மிகுந்த பணத்தின் பின்னாலும், பெரிய கட்டிடங்களின் பின்னாலும் சென்று விட்டார்கள். 41. உண்மையான சபையோ எப்பொழுதும் இந்த உலகத்திற்கு துடைத்துப் போடப்பட்டவர்களாயிருந்தார்கள். யாவராலும் வெறுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, சந்திகளில் துரத்திவிடப்பட்டு, எங்கெல்லாம் வாழ முடியுமோ அங்கு வாழ்ந்து கொண்டிருந்தனர். எபிரெயர் 11ம் அதிகாரத்தின் கடைசி 6 அல்லது 8 வசனங்களை எடுத்துப் பாருங்கள். அங்கே, “ அவர்கள் வனாந்திரங்களிலேயும், அலைந்து திரிந்தார்கள். அவர்கள் செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக் கொண்டு திரிந்து குறைவையும் உபத்திரவத்தையும் அனுபவித்தார்கள்'' நியாயத்தீர்ப்பின் நாளில் அவர்களுடைய இத்தகைய சாட்சிகளுக்கு முன்பாக நம்முடைய சாட்சி எவ்வாறு அதற்கு நிகராக நிற்கப் போகிறது? அந்நாட்களில் இருந்த ஜனங்களைப் பாருங்கள். 42. இப்பொழுது இந்த சபைக்காலத்திலோ... நமக்கு ஏழு சபைக் காலங்கள் உண்டு. நான் அவைகளை வரைந்து உங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன். இங்கிருந்து நீங்கள் அவைகளை சரியாக கண்ணுற முடியாதென நினைக்கிறேன். ஒருவேளை உங்களில் சிலர் அதைக் காணக்கூடும். உங்களுக்கு பார்ப்பதற்கு இயலாதபடி உள்ளது என்றே நான் ஐயுறுகிறேன். எப்படியும் முயலுகிறேன். இங்கே உட்கார்ந்திருக்கிறவர்களால் இதை சரியாக பார்க்க முடியாதென நினைக்கிறேன். ஆகவே நீங்கள் பார்த்து புரிந்து கொள்ளும்படியாக என்னுடைய கையில் இந்த சபைக் காலங்களைப் பற்றிய அச்சித்திரத்தை ஏந்திக் கொள்கிறேன். 43. பெந்தெகொஸ்தே நாளில்தான் சபையானது தன் துவக்கத்தையுடையதாக இருக்கிறது. அப்படியல்லவென்று யாராவது மறுக்க முடியுமா? அவ்வாறு செய்ய இயலாது, ஐயா! பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதத்தோடு சபையானது பெந்தெ கொஸ்தே என்னும் நாளிலிருந்து துவங்கியது. அது இயேசு கிறிஸ்துவால் அவர்களில் கிரியை செய்கிற அதே செய்தியுடனும் ஆசீர்வாதத்துடனும் கடைசி நாள் வரைக்கிலும் தொடர்ந்து செல்ல குறிக்கப்பட்டது. மாற்கு சுவிசேஷத்தில் 16ம் அதிகாரத்தில் சபைக்கு அவர் இட்ட அவரது கடைசிக்கட்டளையானது: “ உலக முழுவதிலும் நீங்கள் புறப்பட்டுப்போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள், விசுவாசிக்கிறவர்களை இவ்வடையாளங்கள் தொடரும்'' என்பதாகும். எங்கே போய் பிரசங்கிக்க வேண்டும்? “ முழு உலகத்திற்கும்.'' யாருக்கு பிரசங்கிக்க வேண்டும்? “ சர்வ சிருஷ்டிக்கும்.'' கருப்போ , பழுப்பு நிறமோ, மஞ்சள் நிறமோ, வெள்ளை நிறமோ, எப்படிப்பட்ட சிருஷ்டியாயினும் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும். “ விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன” என்று கூறப்பட்டது. ஒவ்வொரு இரவிலும் ஒரு பெரிய துண்டை , நல்ல இறைச்சி போன்றிருக்கிற இச்செய்தியின் பேரிலிருந்து வெட்டி எடுத்துக் கொண்டு, இறுதியாக நாம் வாழும் நமது சபைக் காலத்துக் குரியதை எடுத்துக் கொள்வோம். இன்றிரவில் அதின் ஓரத்தில் உள்ளதை, துவக்கத்தில் உள்ளதை எடுத்துக் கொள்வோம். அதுவே அவருடைய கட்டளை என்று நாம் காண்கிறோம். 44. முதலாவது சபைக் காலமானது எபேசு சபையாகும். இரண்டாவது சபைக்காலம் சிமிர்னாவாகும். மூன்றாவது சபைக்காலம் பெர்கமுவாகும். நான்காவது தீயத்தீரா சபைக்காலமாகும். ஐந்தாவது சர்தை சபைக் காலமாகும். ஆறாவது பிலதெல்பியா சபைக்காலமாகும். ஏழாவது சபைக்காலம் லவோதிக்கேயா வாகும். 45. முதலாவது சபைக்காலமானது கி.பி.53ல் துவங்கியது; அப்பொழுது எபேசு பட்டணத்தில் பவுல் சபையை ஏற்படுத்தினான். கி.பி. 66ம் ஆண்டில் பவுல் சிரச்சேதம் செய்யப்படும் வரையிலும், சுமார் 22 ஆண்டுக்காலம் பவுல் எபேசு சபையின் மேய்ப்பனாக இருந்து வந்தான். பவுல் தனது மிஷனரி யாத்திரையின்போது, எபேசுவில் சபையை நிறுவினான். பவுலின் மரணத்திற்கு பிறகு பரிசுத்த யோவான் இந்தச் சபைக் காலத்தில் சில காலம் எபேசு சபையின் மேய்ப்பனாக இருந்து வந்தான் என்று கூறப்படுகிறது. எபேசு சபைக் காலம் கி.பி.170ம் ஆண்டு வரைக்கிலும் நீடித்தது. 46. பிறகு, கி.பி.53 முதல் கி.பி. 170 முடிய உள்ள எபேசு சபைக் காலத்திற்கு பிறகு, கி.பி.170 முதல் கி.பி. 312 முடிய நீடித்திருந்த சிமிர்னா சபைக்காலமானது ஏற்பட்டது. அதன்பிறகு, பெர்கமு சபைக் காலமானது கி.பி.312 முதல் கி.பி. 606ம் ஆண்டு வரையிலும் நீடித்திருந்தது. அதைத் தொடர்ந்து தீயத்தீரா சபைக் காலமானது வருகிறது. அதினுடைய காலம், கி.பி.606ல் துவங்கி கி.பி. 1520 ஆம் ஆண்டு வரை நீடித்தது. அக்காலம் தான் இருண்ட காலங்கள் என அழைக்கப்படுகிறது. அடுத்ததாக சர்தை சபைக் காலமானது கி.பி.1520ல் துவங்கி, கி.பி.1750 வரை நீடித்தது. அது தான் லூத்தரின் காலமாகும். கி.பி.1750 முதற்கொண்டு, அடுத்த சபைக்காலமாகிய பிலதெல்பியா சபைக் காலமானது வருகிறது; அதுவே வெஸ்லியின் காலமாகும். அது 1750ல் ஆரம்பித்து, 1906ம் ஆண்டு வரைக்கிலும் நீடித்திருந்தது. 1906ம் ஆண்டில் லவோதிக்கேயா சபைக் காலமானது ஆரம்பித்து, அது எப்பொழுது முடிவுறும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அச்சபைக் காலம் 1977ம் ஆண்டில் முடிவடையும் என நான் முன்னுரைக்கிறேன். நான் முன்னுரைக்கிறேன், கர்த்தர் என்னிடம் அவ்வாறு கூறவில்லை, ஆனால் நானே, சில ஆண்டு களுக்கு முன்பாக எனக்குக் காண்பிக்கப்பட்ட ஒரு தரிசனத்தின் அடிப்படையில் இவ்வாறு முன்னுரைக்கிறேன். அந்த ஏழு தரிசனங்களில் ஐந்து ஏற்கனவே சம்பவித்து நிறைவேறிவிட்டது. 47. இங்கே சபையில் எத்தனை பேர்கள் அந்த தரிசனத்தை நினைவில் வைத்திருக்கிறீர்கள். நிச்சயமாக, அவைகள் சொல்லப்பட்டன. எவ்வாறு கென்னடி கூட கடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதும் முன்னுரைக்கப்பட்டது. எவ்வாறு பெண் களும் வாக்களிக்க உரிமையளிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. அந்த ரூஸ்வெல்ட் எவ்வாறு உலகை யுத்தத்திற்கு நேராக நடத்திச் செல்வார் என்றும் முன்னுரைக்கப்பட்டது. முஸோலினி எத்தியோப்பியா மேல் தனது முதல் படையெடுப்பை எடுத்து, அதை வென்றெடுத்து, பின்பு அதுவே அவனது முடிவை ஏற்படுத்தும் என்றும், அதன் பிறகு அவன் மரணமடைந்து விடுவான் என்று முன்னுரைக்கப்பட்டது. எவ்வாறு இந்த பெரிய கொள்கைகள் தோன்றும் என்றும், அவைகள் முடிவாக வீழ்ந்து, அதைத் தொடர்ந்து கம்யூனிஸம் எவ்வாறு தோன்றும் என்றும் கூறப்பட்டது. ஹிட்லரிசம் முஸோலினியின் நாசிசம் ஆகியவைகள் தோன்றி, இறுதியாக கம்யூனிசம் தோன்றும் போது இவ்விரு கொள்கை பின்னுக்குத் தள்ளப்பட்டு மறைந்து போய்விடும் என்று கூறப்பட்டது. “ ஜெர்மனி தேசத்தோடு நாம் யுத்தத்திற்கு செல்லுவோம், ஜெர்மனி தேசம் காங்க்ரீட் சுவர்களால் ஆன மாகினோட்லைன் என்று கூறப்படும் பலத்த அரணை அமைத்துக் கொள்ளும்'' என்று அச்சம்பவம் சம்பவிப்பதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பாக முன்னுரைக்கப்பட்டது. அதன்படியே அது நிறைவேறவும் செய்தது. அதன்பிறகு உரைக்கப்பட்டதென்ன வெனில், விஞ்ஞானமானது மிகப் பெரிய அளவில் முன்னேறி விடும் என்றும், அப்பொழுது, மோட்டார் வண்டிகள் முட்டை வடிவத்தில் அமைந்திருக்கும் மோட்டார் வாகனங்களை கண்டு பிடிப்பார்கள் என்றும் உரைக்கப்பட்டது. முன்பு அனாதை சாலையாக இருந்ததும் தற்போது சர்ச் ஆஃப் கிரைஸ்ட் என்ற ஸ்தாபனமானது இருக்கிறதுமான அந்த இடத்தில்தான் அத்தரி சனம் உண்டாயிற்று. சார்லி கெர்ன் என்பவர் அப்பொழுது அங்கு வாழ்ந்து வந்தார், அவர் ஒருவேளை இங்கு இக்கட்டிடத்தில் இருக்கக்கூடும் என்று கருதுகிறேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஏழு மணிக்கு அது நேரிட்டது. “ ஒரு வாகனத்தை அவர்கள் கண்டு பிடிப்பார்கள்; அதற்கு ஸ்டியரிங் இல்லாமலே ஏதோ ஒரு சக்தியினால் அது செல்லுவதாக இருக்கும்'' என்று தரிசனத்தில் கூறப்பட்டிருந்தது. இப்பொழுது அவர்கள் அதை கண்டுபிடித்து விட்டார்கள். காந்த சக்தியினால் இயக்கப்பட்டு, ரேடாரினால் கட்டுப்படுத்தப்பட்ட தாக அது உள்ளது. நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு உங்கள் ரேடரை நீங்கள் அமைத்துவிட்டால் போது மானது. நீங்கள் ஸ்டியரிங்கைப் பிடித்து ஓட்ட வேண்டிய தேயில்லை, அது தானாகவே உங்களை, நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்லும். 48. மேலும் அத்தரிசனங்களில், “ அக்காலத்தில், அமெரிக்க ஐக்கிய நாடுகளில், ஒரு பெரிய பெண்மணி எழும்புவாள்'' என்று உரைக்கப்பட்டது. அவள் மிகவும் நன்கு உடுத்தி யிருந்தவளாகவும், சௌந்தர்யமுள்ளவளாகவும், ஆனால் இருதயத்தில் கொடூரம் கொண்டவளாகவும் அத்தரிசனத்தில் காணப்பட்டாள். அத்தரிசனத்தைப் பற்றிய விவரக்குறிப்புக் கூட நான் வைத்துள்ளேன். அப்பெண்மணி ஒருவேளை கத்தோலிக்க சபையைக் குறிக்கக் கூடும் என்று கூறினேன். பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அளிக்கப்படுவதினால், அவர்கள் தவறான நபரை இத்தேசத்தின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க ஏதுவாயிருக்கும். அதைதான் அவர்கள் செய்து விட்டார்கள். “ அதுதான் அதன் ஆரம்பம்'' என்று உரைக்கப்பட்டது. 49. இன்னொரு விஷயம் அதில் என்னவெனில்... இதையடுத்து உடனடியாக இத்தேசமானது எரிந்து சாம்பலாகி சிதறிப் போனதைக் கண்டேன். இத்தரிசனங்களில் ஏற்கனவே சில நிறைவேறிவிட்டபடியால், மீதமுள்ளவைகளும் நிச்சயமாக நிறை வேறும். அதினால்தான் ஜெபர்ஸன்வில்லில் உள்ள இம்மக்களுக்கு இந்த இராத்திரியில் இச்செய்தியை தாமதமின்றி கொடுத்து, ஒழுங்குபடுத்த நான் முயன்று கொண்டிருக்கிறேன். ஏனெனில், நான் வெளிநாட்டு ஊழியங்களுக்கு விரைவில் மீண்டும் சென்று விட ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறேன். நான் எப்பொழுது ஆண்டவரால் அழைக்கப்படுவேன், அல்லது எடுத்துக் கொள்ளப்படுவேன் என்பது எனக்குத் தெரியாது... நாம் அதை அறியோம். சபையானது அவர்கள் வாழும் நேரத்தைக் குறித்து அறிந்து கொண்டு விட வேண்டுமென்ற விஷயத்தில் நான் நிச்சயமாக இருக்க விரும்புகிறேன். ஏனெனில், இக்காரியத்தைக் குறித்து, சர்வவல்லமையுள்ள தேவன் என்னை பொறுப்பாளியாக்கி விடுவார். 50. வேத வாக்கியங்களின்படி, இந்த சபைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தூதன் உண்டு. தூதன் என்னப்பட்டவன்... தூதன் என்றால் அர்த்தம் என்ன என்பதை எத்தனை பேர்கள் அறிவீர்கள்? தூதன் என்றால் “ செய்தியாளன்'' அல்லது “ செய்தியைக் கொண்டு வருபவன்'' என்று அர்த்தமாகும். “ ஏழு சபை களுக்கும் ஏழு தூதர்கள்'' என்றால், ஏழு செய்தியாளர்கள் என்று பொருள்படும். அவருடைய வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்கள் இருந்தன. அவர் கரத்திலிருந்த இவ்வேழு நட்சத்திரங்களும் அவரு டைய சமுகத்தின் ஒளியை, நாம் வாழும் இந்த இராக்காலத்தில் பிரதிபலிக்க வேண்டியவர் களாயிருக்கிறார்கள். இரவில் நட்சத்திரங்கள் சூரியனின் ஒளியை பூமிக்கு பிரதிபலிக்கிறபடியால், இரவு வேளையில் அவ்வெளிச் சத்தில் நம்மால் நடக்கவும், அசை வாடவும் முடிகிறது. 51. அத்தூதர்களில் ஒவ்வொருவரும், தங்கள் தங்கள் காலங்களில், அவரவர்களுக்குரிய ஸ்தானத்தையும், உத்தியோகத்தையும் உடையவர்களாயிருக்கின்றனர். மேலும், சகோதரரே, இந்த இராத்திரியில் நாம் அதற்குள்ளாக பார்க்கப் போகிறதில்லை, ஏனெனில், நாம் முதல் சபையின் இந்த தூதனைப் பற்றி அறிவோம்; ஆனால் ஏனைய சபைகளுக்குரிய தூதர்கள் யார், யார் என்பதைப் பற்றி காணப்போவதும், வரலாற்றிலிருந்து அதின் நிரூபணங்களை எடுத்துக் காணப்போவதும் உங்களுக்கு இரகசியமானதாகவும், மகிமை பொருந்தினதாகவும் இருக்கப் போகிறது. முதலாம் சபைக் காலத்தின் செய்தியாளன் பரிசுத்த பவுல். அவன் அதை நிறுவினான். அவன் தேவனுடைய செய்தியைக் கொண்டு வந்தவன். எபேசு சபையின் தூதன் பரிசுத்த பவுல். இப்பொழுது, நான் இக்காரணத்தைக் கொண்டு... 52. இப்பொழுது, ஏனைய தூதர்களைப் பற்றி நீங்கள் என்னோடு முரண்படக்கூடும். பரிசுத்த ஆவியானவர் என்னை நிரப்பி, அசைத்து, அத்தூதர்கள் ஒவ்வொருவரும் யார், யார் என்பதைப் பற்றி நான் அறிந்து கொள்ள வைக்கிற வரைக்கிலும், நான் நாட்கணக்கில் அவரது அசைவின் கீழ் அமர்ந்திருந்தேன். எனவே தான் நான் இதைப் பற்றி திட்டவட்டமாக அறிந்துள்ளேன். நீங்கள் ஒரு வரலாற்றாளராக இருப்பின், ஒவ்வொரு காலத்திற்கும் தெரிந்து கொள்ளப்பட்ட தூதர்களான இம்மனிதர்களை கவனித்துப் பாருங்கள். அவர்கள்... இன்னின்னார் தான் அத்தூதர்கள் என்று நான் சொல்லும் தூதர்களை வெளிப்படுத்துதலினால் தான் அறிந்து கொண்டுள்ளேன். அவர்கள் தத்தம் காலத்திய சபைகளுக்கு தூதர்களாயிருந்தார்கள். ஆதியில் இருந்தவர்களுக்கு இருந்த அதே ஊழியத்தைப்போலவே இவர்களுக்கும் உண்டாயிருந்தது. அவ் ஊழியமானது ஒருக்காலும் மாறிப்போகாது. எல்லாக் காலங்களிலும் அது பெந்தெகொஸ்தேயாகத்தான் இருக்க வேண்டும். 53. சிமிர்னா சபையின் காலத்திற்கு ஐரேனியஸ் என்பவர்தான் தூதன் என்று நான் அறிவேன். ஆனால் இங்கே அமர்ந்திருக்கும் வரலாற்றாளர்கள் அதை ஒத்துக் கொள்ளப் போவதில்லை. அவரல்ல, பாலிகார்ப் தான் தூதர் என்று உங்களில் அநேகர் ஒரு வேளை சொல்லக் கூடும். ஆனால் பாலிகார்ப் அவர்கள் மத சம்பந்தமான ஸ்தபான வழியில் அதிகமாக சாய்ந்து போனவராகக் காணப்பட்டார். மேலும் அப்பொழுது வளர்ந்து கொண்டு வந்திருந்த கத்தோலிக்க மதஸ்தாபனத்திடமும் சார்புடையவராகவும் காணப்பட்டார். ஆனால் ஐரேனியஸோ, தேவனுடைய வல்லமையை யுடையவராயிருந்து, அந்நிய பாஷையில் பேசி, ஊழியத்தின் அடையாளங்கள் பின் தொடரப் பெற்றவராகக் காணப்பட்டார். ஐரேனியஸ் தேவனுடைய தூதனும் ஒளியாகவும் இருந்தார். பாலிகார்ப் சிலுவையில் அறையப்பட்டு அல்லது கொலை செய்யப்பட்ட பிறகு, தொடர்ந்து ஒளியை சுமந்து சென்றார். ஐரேனியஸ், பாலிகார்ப்பின் மாணாக்கர்களில் ஒருவராவார். பாலிகார்ப், பரிசுத்த பவுலின்... பரிசுத்த யோவானின் மாணாக்கராவர். பாலிகார்ப் மரித்த பிறகு, அவருடைய இடத்தை ஐரேனியஸ் எடுத்துக் கொண்டு, தொடர்ந்து ஒளியைக் கொண்டு வந்தார். 54. பெர்கமு சபையின் காலத்திற்கு அந்த மகத்தான பரிசுத்த வானாகிய மார்ட்டின் தூதனாகவும், அக்காலத்திற்குரிய ஒளியாகவும் இருந்தார். இயேசு கிறிஸ்துவைத் தவிர்த்து, மனிதர்களுக் குள்ளே பரிசுத்த மார்ட்டினை விட மகத்தான மனிதர்கள் இருந் தார்கள் என்பதை நான் விசுவாசிக்கவில்லை. வல்லமை? ஐரேனியஸ் அற்புத அடையாளங்களிலும், பெந்தெகொஸ்தே ஆசீர்வாதங் களிலும் விசுவாசம் கொண்டவராயிருந்தார். அவரை சிரச்சேதம் செய்தவற்காக கொலைகாரர்கள் அவரிடம் வந்த பொழுது அவர் கழுத்து வரையிருந்த தன் அங்கியை தளர்த்தி, அவர்கள் தன்னை வெட்டுவதற்கு வசதியாக கழுத்தை நீட்டிக் கொடுத்தார். கொலைகாரன் அவர் தலையை சீவி எறியும்படியாக பட்டயத்தை உருவியபோது, தேவனுடைய வல்லமையானது அக்கொலைகாரனை மார்ட்டினை விட்டு தூரத்தில் தூக்கி எறிந்தது. அக்கொலைக்காரன் முழங்காலிலேயே ஊர்ந்து வந்து, அவரிடம் மனந்திரும்புதலை பெற்றுக் கொள்ள வேண்டினான். ஆமென். மார்ட்டினே இச்சபைக் குரிய தூதனாவார். 55. அவர் செய்த ஏனைய காரியங்கள். அவர் எவ்வாறு.... அவருடைய சகோதரர்களில் ஒருவர் தூக்கிலிடப்பட்ட போது, என்ன நடந்தது என்பதை மார்ட்டின் அறிய முயன்று, அதற்காக சாலையில் சென்று கொண்டிருந்தார். அவர் அங்கு போனபொழுது, அவரது சகோதரனை அவர்கள் ஏற்கெனவே தூக்கில் தொங்க விட்டிருந்தார்கள். அவரை தூக்கிலிருந்து இறக்கி தரையில் நீட்டி படுக்க வைத்திருந்தார்கள். அவர் மரித்து, கண்கள் தலையிலிருந்து வெளியே பிதுங்கிய நிலையிலிருந்தது? மார்ட்டின் முழங்கால் படியிட்டு, பிறகு, தன் சரீரத்தை மரித்தவருடைய சரீரத்தின் மேல் கிடத்தி, ஒரு மணிநேரம் தேவனிடம் ஜெபித்தார். தேவனுடைய வல்லமை அம்மனிதர் மேல் வந்தபோது, அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார், அவரது கையைப் பிடித்துக் கொண்டு மார்ட்டின் அங்கிருந்து நடந்து சென்றார். ஜார்ஜ் வாஷிங்டன், ஆபிரகாம் லிங்கன், இன்னும் வரலாற்றில் கூறப்பட்டுள்ள ஏனையோரைப்போல, மார்ட்டினைப் பற்றிய இவ்விஷயங்களும் உண்மையான வரலாறாக இருக்கிறது. அது சரித்திரம். 56. ஆம், ஐயா! பரிசுத்த மார்ட்டின் தான் பெர்கமு சபையின் தூதனாவார். அச்சபையின் காலம் தான் மார்ட்டின் மறைவிற்குப் பிறகு கத்தோலிக்க கொள்கைகளுக்கு விவாகம் செய்து கொண்டு, அவர்களை அதற்குள் கொண்டு சென்றது. 57. தீயத்தீரா சபையின் காலத்திற்கு கொலம்பா என்பவர் தான் தூதனாவார். 58. மரித்துப் போன சபையாகிய சர்தைக்குரிய தூதர்... சர்தை என்றால் “ மரித்தவன்'' என்று பொருளாகும். அவருடைய பெயரில்லாத ஒரு பெயரோடு புறப்பட்டு அச்சபை வருகிறது. “ உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்தாலும், மரித்த வனாயிருக்கிறாய்...'' என இச்சபையைக் குறித்துக் கூறப்பட்டது. அந்த நாளில் ஞானஸ்நானத்தை அவர்கள் எவ்வாறு கொண்டு வந்தார்கள் என்பதைப் பாருங்கள். பாருங்கள், கத்தோலிக்க மார்க்கத்திலிருந்து அதைக் கொண்டு வந்தார்கள். முதல் சீர்த்திருத்தக் காரரான மார்ட்டின் லூத்தர் இக்காலத்திற்குரிய சபையின் தூதனாவார். 59. பிலதெல்பியா சபைக்கு ஜான் வெஸ்லி என்பவர் தான் தூதனாவார். 60. லவோதிக்கேயா சபைக்குரிய தூதன் யார் என்பது இன்னமும் தெரியவில்லை. என்றாவது ஒரு நாள் அவர் யார் என்பது தெரியவரும். ஆனால் அவர் இப்பொழுது இப்புவியில் இருப்பார். “ காதுள்ளவன் எவனோ...'' அவன் அந்தக் காலத்தில்தான் நாம் ஜீவிக்கிறோம் என்பதை அறிவான். அதைக் குறித்த நிதானிப்பை தேவனே செய்வார். 61. இப்பொழுது கவனியுங்கள், வேத வாக்கியங்களில் நாம் முதலாம் சபைக்காலத்தைக் குறித்து பார்க்க திரும்பிச் செல்லுவோம். சில விஷயங்களை நான் இங்கே எழுதிவைத்திருக்கிறேன்; நீங்கள் அவைகளை மிகவும் கவனமாக செவிமடுக்க வேண்டு மென்று நான் விரும்புகிறேன். 62. முதலாம் சபையாகிய எபேசு சபையானது தேவனால் எதற்காக கடிந்து கொள்ளப்பட்டதென்றால், அவர்களிடம் அன்பில்லாத கிரியைகள் காணப்பட்டனவே, அதினால்தான். அச்சபைக்கு அவர் அளிக்கும் பலன் ஜீவ விருட்சமாகும். 63. சிமிர்னா சபையானது உபத்திரவப்படுத்தப்பட்ட சபை யாகும். அது உபத்திரவங்களின் வழியாக கடந்து சென்றது. அதற்குரிய பலன் ஜீவ கிரீடமாகும். 64. மூன்றாம் சபையான பெர்கமு, அதின் காலமானது கள்ள உபதேசம், சாத்தானின் பொய், போப்பு மார்க்கத்தின் ஆட்சியின் அஸ்திவாரமிடுதல், சபையயும் அரசும் விவாகம் செய்து கொள்ளல் ஆகியவைகளின் காலமாக விளங்குகிறது. அதற்கு அளிக்கப்படும் பலனானது, மறைவான மன்னாவும், வெண் குறிக்கல்லுமாகும். 65. தீயத்தீரா சபையானது, போப்பின் வஞ்சனையைக் கொண்டதாக இருந்தது. அதுவே இருண்ட காலங்களாகும். இசசபையின் காலத்தில் ஜெயங்கொள்ளுகிறவனுக்கு அளிக்கப் படுவது, ஜாதிகளின் மேல் அதிகாரமும், விடிவெள்ளி நட்சத்திரமுமாகும். இதைப் பெறுபவர்கள், இவ்விருண்ட காலங்களின் வழியாகச் சென்ற அந்த உண்மையான சிறு கூட்டமே. 66. சர்தை சபையானது சீர்திருத்தத்தின் காலமாக விளங்கியது, அந்த மகத்தான மிஷனரி காலம்... மிஷனரி காலம் அல்ல, எவரும் அறிய முடியாத இரகசியமான பெயர்கள், அவர்களுக்கு சொந்த மான பெயர்கள் இருந்தன. அவர்களுக்கு அளிக்கப்படும் பலன் வெண்வஸ்திரமும், ஜீவ புத்தகத்தில் அவர்கள் பெயர்கள் இடம் பெறுதலாகும். (அப்புத்தகம் நியாயத்தீர்ப்பில் வரவேண்டியதாயுள்ளது). ஜீவ புத்தகத்தை பற்றி அன்றொரு நாள் நாம் பார்த்தோம். ஜீவ புத்தகத்திலிருந்து தான் நீங்கள் நியாயந்தீர்க்கப்படுவீர்கள். பரிசுத்தவான்கள் மறுரூபப் படுத்தப்பட்டு, நியாயத் தீர்ப்புக்குட்படுத்தப்படாமல் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் நியாயத் தீர்ப்படைவதில்லை. 67. பிலதெல்பியா சபையின் காலமானது, சகோதர சிநேகத்தின் காலமாகும். மகத்தான கட்டளையின் காலம், மகத்தான மிஷனரி ஊழியத்தின் காலமாகும். திறந்த வாசலின் காலமாகும். வாக்குரைக்கப்பட்ட பலன் என்னவெனில், தேவாலயத்தில் தூனாக ஆக்கப்படுதல், தேவனுடைய நாமங்கள் வெளிப்படுத்தப்படுதல் இக்காலத்தில். இச்சபைக் காலமானது 1906ம் ஆண்டில் முடிவுற்றது. சரி. 68. லவோதிக்கேயா சபைக்காலமானது வெதுவெதுப்பான சபையாகும். அது ஐசுவரியமுள்ளதாகவும், திரவிய சம்பன்னராகவும், ஒன்றும் குறைவில்லையென்றும் சொல்லிக் கொண்டாலும், நிர்ப்பாக்கியமுள்ளதாகவும், தரித்திரமாயும், குருடாயும், பரிதபிக் கப்படத்தக்கதாயும், நிர்வாணியாகவும் இருக்கிறது. இக்காலத்தில் ஜெயங்கொள்கிறவனுக்கு கர்த்தரோடு அவருடைய சிங்காசனத்தில் உட்காருவதாகும். இதுதான் அவர்களுடைய பலன். 69. இத்தோடு இதை முடித்துக்கொண்டு, முதலாம் சபைக் காலத்தைப் பற்றி படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 2-ம் அதிகாரத்தை நாம் எடுத்துக் கொள்வோம். 70. அவர், தாம் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளபடியால், நாம் அவரை அறிவோம். அவர் தேவன்! 71.நான் ஏற்கனவே கூறினபடி, இச்சபைக் காலமானது ஏறத் தாழ கி.பி. 53 முதல் கி.பி.170ம் ஆண்டு வரையிலும் நீடித்திருந்தது. எபேசு பட்டணமானது : 1. ஆசியாவிலுள்ள பெரிய மூன்று பட்டணங்களிலொன்று ஆகும். 2. கிறிஸ்தவ விசுவாசத்தின் மூன்றாவது பட்டணம் என்று அழைக்கப்பட்டதுண்டு. (முதலாவது எருசலேம், இரண்டாவது அந்தியோகியா, மூன்றாவது எபேசு) 3. பெரிய அளவில் வாணிபம் மற்றும் வர்த்தகம் செழித்த ஒரு பட்டணம்; 4. அதன் அரசு ரோமானிய அரசாகும். 5. அதில் பேசப்பட்ட மொழி கிரேக்கமாகும். யோவான், மரியாள், பேதுரு, அந்திரேயா, பிலிப்பு ஆகிய இவர்கள் யாவரும் இங்கே தான் அடக்கம் பண்ணப்பட்டனர் என்று வரலாற்றாளர்கள் நம்புகிறார்கள். எபேசு பட்டணம் அதின் அழகுக்கு பெயர் பெற்றது ஆகும். 72. எபேசுவில் கிறிஸ்தவம் தழைத்திருந்த போது, யூதர்களும் அப்பட்டணத்தில் இருந்தார்கள். எபேசுவில் கிறிஸ்தவமானது கி.பி.யில் சுமார் 53 அல்லது 55ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பரிசுத்த பவுல், கிறிஸ்தவத்தை நட்டான். அதன் பிறகு பரிசுத்த பவுல், எபேசுவில் மூன்று ஆண்டுகள் இருந்தான் எபேசுவிலுள்ள விசுவாசிகள் மத்தியில் பவுலின் போதகமானது பெரிய செல்வாக்கைப் பெற்றதாக இருந்தது. அடுத்ததாக, தீமோத்தேயு, எபேசுவிலுள்ள சபையின் முதலாவது கண்காணியாக விளங்கினான். பவுல் எபேசு சபைக்கு நிருபம் எழுதினான். பவுலின் காலத்தில் எபேசுவிலுள்ள சபையானது மிகச் சிறந்து விளங்கியது. 73. “ எபேசு'' என்ற பெயருக்கு அர்த்தம் என்னவெனில், “ போகவிடு, தளர்த்து, பின்மாற்றம் அடைந்தது'' என்பதாகும். "பின் மாற்றம் அடைந்த சபை' என்று தேவனால் அழைக்கப்படுகிறது. தேவன், அவர்களுடைய கிரியைகளையும், அவர்களுடைய பாடுகளையும், அவர்களுடைய பொறுமையையுங் குறித்து பிரதானமாக அறிக்கை செய்கிறார். அவர்கள் ஆதி அன்பை விட்டுவிட்டு, பின் மாறிப்போய், ஒளியை மேலும் சுமந்து செல்லாதபடி, இருந்து ஜீவிப்பதைக் குறித்து, அவர்கள் பேரில் தேவன் கடிந்து கொள்ளு கிறார். எபேசு சபையானது வஞ்சிக்கப்பட்டதொரு சபையல்ல; பரிபூரண அன்பில் நிலைத்திருக்காமல் இருப்பதைக் குறித்த விஷயத்தில்தான் அது வழுவிப் போனது. 74. எபேசு சபையின் கனிகளைப் பற்றிய சுருக்கவுரை: அன்பில் லாமற்போனது, விசுவாசத்தை விட்டு வழுவிப் போகுதலுக்கு நடத்தப்படுதல். அதற்குரிய வாக்குத்தத்தங்கள், இச்சபையின் காலத்தில் ஜெயங்கொள்ளுகிற பரிசுத்தருக்கு, பரதீசின் மத்தியிலுள்ள ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பார். 75. இங்கு அழகானதொரு விஷயம் உள்ளது. ஜீவ விருட்சத்தைப் பற்றி ஆதியாகமத்தில் மூன்று தடவைகளும், வெளிப்படுத்தின விசேஷத்தில் மூன்று தடவைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் ஆதியாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதேன் தோட்டத்தில் அது இருந்ததைத்தான். கிறிஸ்துவே அம்மரமாயிருக்கிறார். வெளிப்படுத்தின விசேஷத்தில் மூன்று தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது, கிறிஸ்து பரதீசில் உள்ளதை. ஓ, அது ஆழமானது. கர்த்தர் ஆசீர்வதிப்பார். 76. இப்பொழுது, நாம் எபேசு சபைக் காலத்தைப் பற்றிக் கூறும் வெளி. 2ம் அதிகாரம் 1ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம்: எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்; ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கரத்தில் ஏந்திக் கொண்டு, ஏழு பொன் குத்து விளக்குகளின் மத்தியிலே உலாவிக் கொண்டிருக்கிறவர் சொல்லுகிறவதாவது வெளி.2:1 77. அந்நேரத்தில் யோவான் அந்த தூதனாயிருக்கிறான். ஏழு பொன் குத்து விளக்குகளின் மத்தியில் உலாவுகிறவர். சர்வ வல்லமையுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவாகும். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவர் ஒரு குத்துவிளக்கின் மத்தியில் உலாவிக் கொண்டிருக்கிறார் என்று கூறவில்லை; அவைகள் யாவற்றின் மத்தியிலும் அவர் உலாவுகிறார். அது எதைக் காட்டுகிறது? ஒவ்வொரு சபைக்காலத்திலும் உள்ள ஒவ்வொரு விசுவாசிக்கும் அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதையே. அவர் ஒவ்வொரு நபரிடம் பரிசுத்த ஆவியோடு ஒவ்வொரு காலத்திலும் வருகிறார். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகவே இருக்கிறார். 78. “ வலது கரத்தில் ஏந்திக் கொண்டிருந்தார்'', “ வலது கரம்'' என்பதற்கு அவருடைய “ அதிகாரமும் வல்லமையும்'' என்று அர்த்தமாகும். ஏழு சபைக்காலங்களுக்கும் உரிய ஏழு தூதர்களையும் தனது வலது கரத்தில் ஏந்திக் கொண்டிருக்கிறார்; அதாவது, அவர்களை தனக்குக் கீழ், தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார். ஓ! அது எனக்கு விருப்பம். கிறிஸ்துவானவர் தன்னை தன் ஜனங்களுக்கு, அது இருண்ட காலமானாலும் சரி, எல்லா காலங்களிலுமே அறியப்படுத்திக் கொண்டு, இச்சபைகளின் காலங்களின் நடுவில் உலாவி வருவதைக் காணுங்கள். ஒவ்வொரு காலத்திலும், சபையானது வெறும் சடங்காச்சார ரீதியில் ஆகி விழுந்து போய், சிலர் இப்படியும், சிலர் அப்படியுமாக வழி விலகிச் சென்றனர், ஆனால் அந்த சிறு கூட்டமான உண்மையான சபையானது, தொடர்ந்து நிலைத்து நின்றது, கிறிஸ்துவும் அவர்களோடிருந்து கிரியை செய்து, தன் வார்த்தையை உறுதிப்படுத்தினார். அவ்வாறே எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. 79. இதை நாம் படிக்க ஆரம்பிக்கையில், இன்று நமக்குள்ளதை நாம் எவ்வாறு பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை மிகவும் சுலபமாகக் கண்டு கொள்ளலாம். துவக்கத்தில்... நீங்கள் யாவரும் இதை இவ்வளவு உயரத்தில் காண முடிகிறது என்று நான் நம்புகிறேன். (சகோ. பிரான்ஹாம் கரும்பலகையை வைத்து அதிலிருந்து விளக்கிக் கூறுகிறார் - ஆசி). இங்கே ஒரு சபைக் காலம் பெந்தெகொஸ்தேயாக ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது சபைக் காலங்கள் வருகின்றன. இதை கவனமாக பார்ப்பீர்களானால், முதல் சபையானது பெந்தெகொஸ்தே நாளில் துவங்கியது. எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறீர்கள்? பெந்தெ கொஸ்தேயில் என்ன சம்பவித்தது என்பதை பாருங்கள், அதன் பிறகு, சபையானது தொடர்ந்து போய்க் கொண்டிருப்பதை நாம் கவனிக்கிறோம். அடுத்தடுத்து வந்த காலங்களில், படிப்படியாக அது மங்கலாகிக் கொண்டே வந்து, உண்மையான சபையானது புறப்பட்டுச் சென்று விடுகிறது. 80. இப்பொழுது, கிறிஸ்து... சபையானது எவ்வளவு சிறியதாக இருப்பினும் அதைப் பற்றிக் கவலையில்லை. “ எங்கே இரண்டு அல்லது மூன்று பேர்கள் என் நாமத்தினால் கூடியிருக்கிறார்களோ, அவர்கள் நடுவில் நான் இருப்பேன்'' என்று இயேசு கூறியுள்ளார். எதன் பேரில் அவர்கள் கூடிவரும்பொழுது? மெதோடிஸ்ட் என்ற பெயரில் கூடி வரும்பொழுதா? பாப்டிஸ்ட் என்ற பெயரில் கூடி வருகையிலா? பெந்தெகொஸ்தே என்ற பெயரில் கூடி வருகையிலா? இயேசுவின் நாமத்தில் கூடி வருகையில்! எங்கே இரண்டு அல்லது மூன்று பேர்கள் அவர் நாமத்தில் கூடியிருக்கிறார்களோ, அவர்கள் நடுவில் வருவார். அது எத்துனை சிறியதாயினும் சரி, அதைப் பற்றி அக்கறையில்லை. அவரது சபையானது கடைசி நாட்களில் மிகவும் சிறிய கூட்டமாக ஆகிவிடும். அது இன்னும் குறைந்து கொண்டே போகும். கர்த்தர் தனது கிரியையை முன் கூட்டியே முடித்துக்கொண்டு விரைந்து வந்துவிடுவார். இல்லை யெனில், எடுத்துக் கொள்ளப்படுவதற்கு மாம்சமான எவருமே இருக்கமாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். “ எங்கே இரண்டு அல்லது மூன்று பேர்கள் என் நாமத்தினால் கூடியிருக்கிறார்களோ'' 81. முதலாம் சுற்று அதில் அப்போஸ்தலர்கள். இதுவே சபையின் துவக்கம் என்று நாம் காண்கிறோம். அதுவே பெந்தெ கொஸ்தே. அதே மகத்தான தேவன் அவர்கள் நடுவில் அதே மகத்தான அடையாளங்களோடு உலாவுகிறார். ஒவ்வொரு சபைக் காலத்திலுமே அவர் உலாவுகிறபடியினால், அதே மகத்தான அடையாளங்கள் எல்லாக் காலங்களிலுமே தொடர்ந்து வந்து கொண்டிருக்க வேண்டும். யாரை அவர் ஆசீர்வதிக்கிறார்? அவருடைய நாமத்தினால் கூடிவருகிற அவருடைய ஜனங்களையே. 82. சபைக் காலத்தைக் குறித்து நாம் பார்த்துக் கொண்டு போகையில், நீங்கள் இந்த ஒரு விஷயத்தைக் கவனிக்க விரும்பு கிறேன். இந்த சபை (முதல் சபை) இயேசுவின் நாமத்தைப் பெற்றிருந்தது. இந்த சபையும் (இரண்டாவது சபை) இயேசுவின் நாமத்தைப் பெற்றிருந்தது. இந்த சபையும் (மூன்றாவது சபை) இயேசுவின் நாமத்தைப் பெற்றிருந்தது. இந்த சபை (நான்காவது சபை) இயேசுவின் நாமத்தை இழந்துவிட்டது. இந்த சபை (ஐந்தாவது சபை) லூத்தரின் காலமாக வெளி வருகிறது, அது “ உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்தும் மரித்தவனாயிருக்கிறாய்'' என்று அழைக்கப்பட்டது. இவ்வாறான நிலைமை இந்த சபையின் காலத்தின் முடிவு (ஆறாவது சபைக்காலம்) வரைக்கிலும் நீடித்தது. இந்த சபையின் காலத்திற்கும் (ஆறாவது சபைக்காலம்) இந்த சபையின் காலத்திற்கும் (ஏழாவது சபையின் காலம்) இடையில் திறந்தவாசல் வைக்கப்படுகிறது, அதுவே நாமத்தை சபைக்கு திரும்ப கொண்டு வருகிறது. வேத வாக்கியங்களை நாம் படித்த பிறகு, அது சத்தியம்தானா என்பதை கவனித்துப் பாருங்கள். அது அந்த காலங்களுக்கு இடையில். 83. நாளை இரவு இவ்விளக்கப்படத்தை நான் இங்கு பொருத்தி வைக்க முயலுவேன், அதினால் நாம் யாவரும் அதை பார்த்துத் தெரிந்து கொள்ளமுடியும். நாளை பிற்பகல், இங்கு வந்து, நான் பேசப் போகிறவைகளைப் பற்றிய திட்டங்களைப் பற்றி வரைந்து வைப்பேன். உங்களில் எவரிடமாவது வரலாற்றுப் புத்தகங்கள் இருந்தால் உங்களுடன் கொண்டு வாருங்கள். அல்லது உங்களு டைய குறிப்புக்களை நூலகங்களுக்கு எடுத்துச் சென்று, அங்குள்ள வரலாற்றுப் புத்தகங்களை வைத்துக் கொண்டு படித்து, இது சரிதானா என்று பாருங்கள். 84. இப்பொழுது முதலாம் வசனம்; இங்கே அவர் என்ன செய்கிறார்? அவர்களை வாழ்த்துகிறார். “ எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்ன வெனில்; (யோவானுக்கு) ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கரத்தில் ஏந்திக் கொண்டு, ஏழு பொன் குத்து விளக்குகளின் மத்தியிலே உலாவிக் கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது,” 85. இரண்டாம், மூன்றாம் வசனங்களில் அவர்களை அவர் புகழுகிறார். “ உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக் கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்... அறிந்திருக்கிறேன்” 86. முதலாம் சபைக்காலத்திலேயே விசுவாசத்துரோகமானது ஏற்பட ஆரம்பித்துவிட்டது என்பதைப் பாருங்கள். அங்கே அது ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. ஏனெனில், இயேசு தமது சாட்சியில் உரைத்தபடி, வேத நெறிகளையும், வேத வார்த்தை களையும் கடைபிடிக்க விரும்பின தெரிந்து கொள்ளப்பட்டதும், உண்மையானதுமான சபையானது ஏற்கனவே பிரிந்து போக ஆரம்பித்தனர். அப்பொழுது ஏதோ ஒன்று சம்பவிக்க ஆரம் பித்தது; வேத வாக்கியத்திற்கு முரணானவைகளையும், தவறானவை களையும், வேதத்தோடு ஒன்றைக் கூட்டவோ, குறைக்கவோ முயற்சி செய்து உபதேசிக்கும் கள்ளப் போதகர்கள் அப்பொழுது எழும்ப ஆரம்பித்தார்கள். 87. எனவே தான் அவர் இந்த வெளிப்பாட்டை சபைக்குக் கொடுத்து, இவ்வாறு கூறினார்; “ இதிலிருந்து ஒன்றை எவன் எடுத்துப் போடுகிறானோ அல்லது இதோடு ஒன்றை எவன் கூட்டு கிறானோ, இவனுடைய பங்கு ஜீவ புத்தகத்திலிருந்து எடுத்துப் போடப்படும்'' அப்படிச் செய்தால், சகோதரனே, நீ இழக்கப் படுவாய். தேவனுடைய வார்த்தையில் அனாவசியமாய் தலை யிடாதே. அது யாரை புண்படுத்தினாலும் சரி, அல்லது எதைப் புண்படுத்தினாலும் சரி, அது உரைக்கப்பட்ட வண்ணமாகவே அதை உரை. அங்கே அது எழுதப்பட்ட வண்ணமாகவே உரைக்க வேண்டும். அதுதான் வழி. வேத வாக்கியத்தை நமக்கு வியாக்கியானிக்க பிரபலமான ஒரு நபரோ, அல்லது எந்தவொரு மத குருவோ தேவையில்லை. பரிசுத்த ஆவியாகிய தேவனே நமக்குரிய வியாக்கியானியாயிருக்கிறார். அவரே உரிய வியாக்கியானத்தை தருகிறவராயிருக்கிறார். 88. ஏற்பட்ட தீமைகளைப் பற்றியும், கள்ளத் தீர்க்கதரிசிகளைப் பற்றியும் பார்த்த பிறகு, அவர்கள் பொய்யானவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டது; தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்தவர்களா யிருந்தார்கள் என்பதை கவனித்துப் பாருங்கள். எவ்வாறு சபையானது வெறும் சடங்காச்சார ரீதியில் ஆகியது என்பதைப் பாருங்கள். பரிசுத்த ஆவியின் அசைவின் கீழ் இருந்த ஜனங்களை அவர்கள் உள்ளம் உடைந்து நொறுங்கும்படி செய்தார்கள், அதினால், பார்க்கிற மற்ற ஜனங்கள் அவர்களை கேலி செய்தார்கள். 89. “ நீதியினிமித்தம் துன்பப்பட்டால் நீங்கள் பாக்கிய வான்களாயிருப்பீர்கள்'' என்று இயேசு கூறவில்லையா? துன்பப் படுத்தப்பட்டால், அதற்குப் பயந்து கொண்டு, நீங்கள் வெறும் குளிர்ந்து போன நிலையில் ஆகிவிடுங்கள் என்று அவர் சொல்ல வில்லையே. “ மகிழ்ந்து களிகூருங்கள். உங்களுக்கு முன்பிருந்த தீர்க்கதரிசிகளையும் அவர்கள் அவ்வாறே துன்பப்படுத்தினார்கள்'' என்று கூறினார். மத்தேயு எழுதிய சுவிசேஷம் 5ம் அதிகாரத்தில் மலைப் பிரசங்கத்தில் “ பாக்கியவான்களாயிருப்பீர்கள்'' என்று கூறியுள்ளார். கர்த்தராகிய இயேசுவை நீங்கள் நேசிக்கிறபடியினால் மக்கள் உங்களை பரிகசித்தால், அது உங்களுக்கு ஆசீர்வாத மாகவே இருக்கும். அவர்கள் உங்களை சபித்தால் அதின்மூலம் அவர்கள் உங்கள்மேல் தேவனுடைய ஆசீர்வாதங்களையே கொண்டு வருகின்றனர். அக்காலத்தில் பிலேயாமுக்கு நேர்ந்ததது போல், அவர்கள் போடும் சாபம் அவர்கள் மேலேயே திரும்பி விடுகிறது. நீங்கள் கிறிஸ்தவனாக இருப்பதினிமித்தம் அவர்கள் உங்களைப் பரிகசித்தால், அது அவர்கள் மேலேயே திரும்பிவிடும், உங்களையோ தேவன் ஆசீர்வதிக்கிறார், ஏனெனில், “ என் நாமத்தினிமித்தம் மனிதர் உங்களைத் துன்பப்படுத்தினால் நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்'' என்று கூறியுள்ளார். அவருடைய நாமத்தினிமித்தம் “ நீங்கள் பாக்கியவான் களாயிருப்பீர்கள்'' 90. அவர்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரிக்கிறவர்களாக ஆக ஆரம்பித்தார்கள் என்று நாம் கண்டோம். 91. இப்பொழுது நான் இந்த இடத்தில் சற்று நிறுத்தி விட்டு, ஒரு காரியத்தை சொல்ல முடியும். நான் அவ்வாறு செய்வேன் என்று நம்புகிறேன். ஊழியக்காரரான சகோதரர்களே, இதை நீங்கள் சோதித்துப் பாருங்கள்; அதாவது, ரெபெக்காள் ஏசா, யாக்கோபு என்ற இரட்டையரை பிறப்பித்தது போல, எந்தவொரு எழுப்புதலும் இரட்டையர்களைப் பிறப்பிக்கிறது. ஈசாக்கும் ரெபெக்காளும் இரட்டையர்களைப் பிறப்பித்தார்கள். தந்தையும் பரிசுத்தமானவன், தாயும் பரிசுத்தமானவள், அப்படியிருக்க, அவர்களுக்கு ஏசா, யாக்கோபு என்ற இரட்டையர்கள் பிறந்தனர். 92. அவர்கள் இருவருமே தேவ பக்தியுள்ளவர்களா யிருந்தனர். ஆனால் ஏசாவோ நற்கிரியைகளைப் பொறுத்தமட்டில் பிரமாணங்களை மிகவும் கண்டிப்பபுடன் பின்பற்றுபவன் என்ற ரீதியில், ஒருவேளை எல்லாவகையிலும், யாக்கோபைவிட மேலானவனாக இருந்திருப்பான், நீங்கள் அதை அறிவீர்களா? எப்பொழுதும் தன் தாயையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பவனாக சிறுவன் யாக்கோபு காணப்பட்டான். ஆனால் ஏசாவோ, வெளியே போய் வேட்டையாடி, அதின் மூலம் கிடைத்த மான் இறைச்சியை சமைத்து, வயதானவரும், குருடானவரும், தீர்க்கதரிசியுமான தன் தந்தைக்கு உணவளித்து, அவரை நன்கு கவனித்துக் கொண்டான். ஆனால் யாக்கோபுக்கோ, ஒரே ஒரு காரியம் தான் எப்பொழுதும் அவன் சிந்தையில் இருந்து வந்தது; அது தான் சேஷ்டபுத்திர பாகம்! எவ்வளவு காலம் வேண்டுமாலும் காத்திருந்து, எதைச் செய்தாகிலும், அவனுடைய வாழ்க்கையின் பிரதான இலக்காகிய சேஷ்டபுத்திர பாகத்தை அடைய அவன் மிகவும் கவனமாயிருந்தான். ஏசாவோ அதை அலட்சியம் செய்தான். 93. நீங்கள் அந்த மாம்சப்பிரகாரமான மனிதனை இங்கே காண வில்லையா? ஒரு எழுப்புதல் வரும்பொழுது, அதிலிருந்து இரண்டு விதமான வகுப்பினர் தோன்றுகின்றனர். அவ்வாறு தோன்றும் இருவரில் ஒருவனாகிய மாம்சப்பிரகாரமான சுபாவ மனிதன் பீடத்தண்டையில் வந்து, “ ஆம் ஐயா, நானும் கிறிஸ்துவை எனது இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன்'' என்கிறான். அவன் அதன் பிறகு புறப்பட்டுச் செல்லுகையில், அவனுக்கு என்ன சம்ப விக்கிறது? அவன் செய்யும் முதல் காரியம், நல்ல குளிர்ந்த, சடங்காச்சார சபையொன்றில் தன்னை இணைத்துக் கொள்கிறான். ஏனெனில், “ நல்லது, நான் சபையுடன் சேர்ந்து கொண்டால், அடுத்தவனைப் போலவே நானும் நல்லவன் தானே, ஒரு சபையில் சேர்ந்து என்னுடைய அறிக்கையை நான் செய்யும் வரைக்கும், அதனால் என்ன வித்தியாசம்?'' என்று எண்ணுகிறான். நிச்சயம் அது பெரிய அளவில் வித்தியாசமானது தான். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். உங்களுக்கு சேஷ்ட புத்திரபாகம் கிடைத்திருக்க வேண்டும். 94. யாக்கோபு எவ்வளவாக பரிகசிக்கப்பட்டாலும் அதைக் குறித்து அவன் கவலைப்படவில்லை. அவனுக்கு அந்த சேஷ்டபுத்திர பாகம் தேவையாயிருந்தது. அவன் அதை எவ்விதத்தினாலாவது பெற்றுக்கொள்வதைக் குறித்து கவலைக் கொள்ளவில்லை. 95 . அநேக மக்கள் சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறதேயில்லை. ஏனெனில் சேஷ்ட புத்திரபாகம் என்பது, அவ்வளவு ஒன்றும் கௌரவம் மிக்கது அல்ல என்று அவர்கள் எண்ணுகின்றனர். அவர்கள் பீடத்தண்டை வந்து, முழங்கால்படியிட்டு, கொஞ்சம் அழுது ஜெபிக்கவோ, அல்லது சில வேளை உணவுகளை வெறுத்திடவோ விரும்பவில்லை. அதைச் செய்ய அவர்கள் விரும்பவில்லை. அநேகம் பெண்கள், தாங்கள் அழுது கண்ணீர்விட்டு ஜெபித்துவிட்டால் தங்களுடைய முகத்தில் பூசிக் கொண்டுள்ள அழகுபடுத்தும் சாதனங்கள் கண்ணீரில் கரைந்து போய்விடுமே என்றும், அதினால் திரும்ப பூசிக் கொள்ள வேண்டியது வருமே என்றும் அஞ்சி, பீடத்தண்டை வருவதேயில்லை. பரிசுத்தகுலைச்சலான ரீதியில் நான் இவ்வாறு சொல்ல வில்லை. அந்த அர்த்தத்தில் நான் சொல்வது தொனிக்காது என்று நம்புகிறேன், ஆனால் அதுதான் சத்தியம். அவர்களுக்கு அது பிரியமில்லை. புதிய பிறப்பை (மறுபிறப்பு) அடைய அவர்கள் விரும்புவதேயில்லை. ஏனெனில் புதிய பிறப்பு என்பது சற்று அருவருப்பு ஊட்டக்கூடியது போல் அவர்களுக்கு காணப்படுகிறது. எந்தவொரு இயற்கை பிறப்பைப் போலவே அதுவும் இருக்கிறது. எந்தவொரு பிறப்பும் சற்று அசிங்கமாகத்தான் இருக்கும். பிரசவித்து பிறத்தல் எங்கு நேரிட்டாலும் சரி அக்கறையில்லை. அது ஒருவேளை பன்றி அடைக்கும் பட்டியில் நடந்தாலும் சரி, அல்லது ஒரு பண்டகசாலையில் நடந்தாலும் சரி, அல்லது அலங்கரிக்கப்பட்ட ஒரு மருத்துவ மனையிலாகட்டும், அது ஒரு சுத்தமில்லாத அருவருப்பான காட்சியாகத்தான் இருக்கும். 96. எனவே, புதிய பிறப்பும் அவ்வாறே இருக்கிறது. ஆமென். புதிய பிறப்பு உங்களுக்கு நேரிடும் போது, நீங்கள் செய்வோம் என்று நினைத்துப் பார்க்காத காரியங்களை செய்வீர்கள். நீங்கள் ஒரு மூலையில் நின்று கொண்டு, தம்புரூவை அடித்து பாட்டுப் பாடி, “ தேவனுக்கு மகிமை, அல்லேலூயா, தேவனுக்கு ஸ்தோத்திரம், தேவனுக்கு மகிமை'' என நீங்கள் ஆர்ப்பரிக்கிறீர்கள். நீங்கள் ஒரு புத்தி சுவாதீனமில்லாதவனைப் போல் நடந்து கொள்கிறீர்கள். அப்போஸ்தலர்களுக்கும் அதுதான் நேரிட்டது; கன்னி மரியாளுக்கும் புதிய பிறப்பு நேரிட்டபொழுது, குடித்தவளைப் போல் பிறருக்கு காணப்பட்டாள். மரியாள் சமுதாயத்தில் ஒரு அசிங்கமானவளாக காணப்பட்டாள். ஆனால் ஜீவனானது பிறப்பின் மூலம் வெளியே வருவதென்றால் அப்படித்தான் அருவருப்பாகக் காணப்படும். ஆமென்! 97. ஏதாவது ஒன்று செத்து அழுகிப் போகாவிட்டால், அதிலிருந்து ஜீவனானது புறப்பட்டு வர முடியாது. ஒரு மனிதன் தன் சிந்தையில் மரித்து அழுகிப் போகாவிட்டால், கிறிஸ்து அவனது இருதயத்தினுள் பிரவேசிக்க முடியாது. ஆனால் நீங்களோ, “ இப்பொழுது நான் பீடத்தண்டை போய், “ ஆம் ஆண்டவரே, நான் அருமையானவன், நான் உம்மை ஏற்றுக் கொள்வேன். என்னுடைய தசமபாகங்களைச் செலுத்துவேன், இதைச் செய்வேன், அதைச் செய்வேன் என்று தனக்குள் எண்ணிக் கொண்டிருப்பதை விட, நீங்கள் உங்களுடைய சிந்தைகளுக்கு மரித்து, அச்சிந்தைகள் அழுகிப்போக விடவேண்டும். பரிசுத்த ஆவியானவர் உங்களை தன் கையிலெடுத்து, உங்களுடன் அவர் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறாரோ அதைச் செய்யும்படி நீங்கள் விட்டுவிட வேண்டும். பரிசுத்த ஆவி உங்களுக்குள் வந்து அதினால், பிறர் உங்களை அருவருப்பாக எண்ணினாலும் பரவாயில்லை, அது கடுமையாக தொனிக்கக்கூடும், ஆனால் அது பரிசுத்த குலைச்சலான பேச்சல்ல, அது சத்தியமாக இருக்கிறது. நீங்கள் புரிந்து கொள்வதற்கு ஏற்றபடி அழுத்தம் திருத்தமாக சொல்வதற்கு எனக்குத் தெரிந்திருக்கிற முறை அதுவே. 98. அந்நாளில், அந்த அந்தஸ்து மிகுந்த யூதர்கள் கூட்டத்திற்கு முன்பாக அவர்கள் வெளியே வந்து பரியாச உதடுகளினால் பேசினார்களே, அப்பொழுது அந்த யூதர்களுக்கு அதைவிட அருவருப்பான காட்சி வேறு என்ன இருந்திருக்க முடியும்? தெற்றி அல்லது குழறி குழறிப் பேசுதல் என்றால் என்னவென்று நீங்கள் அறிவீர்களா? (சகோ.பிரான்ஹாம் குழறிப் பேசுதல் என்றால் எப்படியிருக்கும் என்பதை செய்து காட்டுகிறார் - ஆசி). அந்நிய பாஷைகளில் பேசுதல்... குடித்தவர்களைப் போல் நடந்து கொள்ளுதல். (சகோ.பிரான்ஹாம் எவ்வாறு குடித்தவன் நடந்து கொள்வான் என்பதை செய்து காட்டுகிறார் - ஆசி). அப்படித்தான் அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பிறர் பார்வைக்கு அசிங்கமானவர்களாகத் தோற்றமளித்தார்கள். 99. “ இந்த மனிதர்களெல்லாம் புதுத் திராட்சரசத்தினால் வெறித்திருக்கிறார்களா?'' என்று கேட்டனர். 100. ஆனால் அவர்களிலொருவன் ஆவியினால் அந்நிய பாஷையில் பேசுவதை நிறுத்திவிட்டு, அவர்களை நோக்கி, “ நீங்கள் நினைக் கிறபடி அவர்கள் வெறிகொண்டவர்களல்ல'' என்று கூறிவிட்டு, உடனே வேத வாக்கியங்களை மேற்கோள் காட்டுகிறான். “ கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்” என்று தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப் பட்டபடியே இது நடந்தேறுகிறது. 101. அவ்விதமாகத்தான் சபையானது ஆதியில் பிறந்தது. தேவன் முடிவில்லாதவர் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? அப்படியாயின் அவர் மாறாதவராயிருக்க வேண்டும். எப்படிப் பட்ட சபை ஆதியில் உண்டாக வேண்டும் என்று தேவன் சிந்தை கொண்டிருந்தாரோ, அதைப் போலவே கடைசியிலும் அதே விதமான சபையைத்தான் அவர் உடையராயிருப்பார். அவர் மாற முடியாது. ஆகவே, ஆதியில் நடந்ததை பெற்றுக் கொள்ளாமல், அவைகளை நீக்கிவிட்டு அந்த இடத்தில், அதற்கு பதிலாக இப்பொழுது நீங்கள் கைகளை குலுக்கிக் கொள்ளுதல், தெளித்தல் மற்றும் இன்ன பிற காரியங்களை எப்படி கொண்டுவர முடியும்? ஒவ்வொரு அப்போஸ்தலர்களும் பெந்தெகொஸ்தேக்குப் பிறகு செய்த ஊழியங்களிலெல்லாம், ஆதியில் உள்ள மாதிரியையே விடாமல் பின்பற்றினார்கள். 102. அவர்கள் மேல் பரிசுத்த ஆவி விழுந்த போது, பேதுரு, “ நம்மைப் போல் பரிசுத்த ஆவியைப் பெற்ற அவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா!'' என்று சொல்லி, “ கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டான்''. அது உண்மை . 103. பவுல் ஒரு சமயம், ஆர்ப்பரித்து, தேவனை மகிமைப்படுத்தி மிகவும் ஆரவாரமான வேளையைக் கொண்டிருந்த ஒரு கூட்டம் பாப்டிஸ்ட்களை கண்டான். அப்போஸ்தலர் 19ல் பவுல் இவ்வாறு கூறுகிறான்; “ நீங்கள் விசுவாசிகளானது முதற்கொண்டு இது வரையில், பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?'' 104.“ பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவேயில்லை'' என்றார்கள். 105. “ அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?'' என்று பவுல் கேட்டான். 106. அதற்கு அவர்கள், “ இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத் தானே யோவான் ஸ்நானன், அதே மனிதன் கொடுத்த ஞானஸ்நானத்தைத் தான் நாங்களும் பெற்றோம்'' என்றார்கள். 107. “ ஆம், அந்த ஞானஸ்நானம் இனிமேல் கிரியை செய்யாது'' என்று பவுல் கூறினான். பாருங்கள், பேதுரு திறவுகோலை உடையவனாயிருந்து பெந்தெகொஸ்தேயில் செய்ததை அவன் அறிந்திருந்தான். பேதுருவினிடம் திறவு கோல் இருந்தது, பாருங்கள். 108. "இது இனிமேல் கிரியை செய்யாது'' என்றும், “ நீங்கள் மீண்டும் ஞானஸ்நானம் எடுத்தாக வேண்டும்'' என்றும் பவுல் கூறினான். எனவே, அவன் அவர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தான். பிறகு, அவன் அவர்கள் மேல் கைகளை வைத்த போது, ஆதியில் அவர்கள் மேல் எப்பேர்ப்பட்ட அனுபவங்கள், விளைவுகள் ஏற்பட்டதோ, அதேவிதமான அனுபவம் இவர்களுக்கும் ஏற்பட்டது. அவர்கள் மேல் பரிசுத்த ஆவி வந்து, அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசி தீர்க்கதரிசினம் உரைத்தார்கள். 109. ஆதியில் இவ்வாறு சபையானது ஆரம்பித்தது, அதைப் போலவே சபைக் காலங்கள் தோறும் சபையானது இருந்து வந்துள்ளது. 110. “ உன் பொறுமையை அறிந்திருக்கிறேன். நீ மிகுந்த நீடிய பொறுமையை உடையவனாய் இருந்து வந்திருக்கிறாய். அது எனக்குத் தெரியும். குத்துவிளக்குகளின் மத்தியில் உலாவுகிறவர் நானே என்பதை நினைவில் கொள்வாயாக. உன்னுடைய பொறுமையையும், உன்னுடைய கிரியைகளையும், உன்னுடைய பாடுகளையும், உன்னுடைய அன்பையும் நான் அறிந்திருக்கிறேன். நீ செய்திருக்கிற யாவற்றையும் நான் அறிவேன். தங்களை “ தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள்' என்று தாங்களே அழைத்துக் கொள்ளும் இந்த நபர்களை நீ சோதித்து அறிந்து, அவர்கள் பொய்யரென்று கண்டறிந்ததையும் நான் அறிந்திருக்கிறேன்''. ஓ! மிகவும் பட்டவர்த்தனமாகக் கூறப்பட்டுள்ளதல்லவா? இதற்கு நான் பொறுப்பாளியல்ல, அவரே பொறுப்பாளி. அவர்கள் பொய்யர்கள் என்று அவர் கூறியுள்ளார். 111. வேதமோ “ எந்தவொரு மனிதனையும் சோதித்துப் பார். உங்களுக்குள் ஒரு தீர்க்கதரிசி இருந்தால் அல்லது அவன் தான் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக் கொண்டால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன். அந்த தீர்க்கதரிசி சொல்லும் காரியம் நிறைவேறினால், அப்பொழுது அவனுக்கு செவி கொடுங்கள். ஏனெனில் நானே அவனோடிருக்கிறேன். ஆனால் அவன் கூறிய வைகள் நிறைவேறாமற்போனால், நீங்கள் அவனுக்கு செவி கொடுக்கவோ, அஞ்சவோ வேண்டாம். என்னுடைய வார்த்தை அவனிடம் இல்லை'' என்று கூறுகிறது. பாருங்கள், அது அவருடைய வார்த்தையானால் அது அப்படியே நிறை வேறும். 112. முதலாம் சபையின் காலத்தில் அவர்கள் சிலர் தேவனுடைய வார்த்தையின்படியே காரியங்களைச் செய்வதில்லை என்பதை கண்டு பிடித்தனர். பாருங்கள், வேறெதோ ஒன்றை அடைய அவர்கள் முயன்று கொண்டிருந்தார்கள். (இன்னும் சில நிமிடங்களில் இவ்விஷயத்தில் உள்ள தங்கக்கட்டி போன்றதொரு கருத்தை நாம் பார்க்கப் போவதால், சொல்லப்படுகிற விஷயங்களின் பேரில் உங்கள் கருத்தோட்டத்தை தீர்க்கமாக பாயவிடுங்கள்). நீங்கள் நீடிய சாந்தமுள்ளவர்களாயும், பொறுமை யுள்ளவர்களாயும், அவர்களைச் சகித்துக் கொண்டிருக்கிறதையும், அவர்களைச் சோதித்து, அவர்கள் அப்போஸ்தலரல்ல என்று கண்டறிந்ததையும் நான் அறிந்திருக்கிறேன், அவர்கள் அப்போஸ்தலரல்ல'' என்று கூறுகிறார். 113. நாம் மீண்டும் இதை துவங்கு முன்னர், ஒவ்வொரு எழுப்புதலும் ஒரு ஜோடி இரட்டையரைப் பிறப்பிக்கிறது என்று நான் கூறினேன். அதில் ஒருவன் ஆவிக்குரியவனாகவும், மற்றவன் பூமிக்குரிய மாம்ச சுபாவ மனிதனாகவுமிருந்தான். “ நான் இன்ன சபையைச் சேர்ந்து விட்டேன், எல்லோரைப்போல நானும் நல்லவன்தான்'' என்று கூறுகிறார்கள். எழுப்புதல் இதையுந்தான் பிறப்பித்திருக்கிறது. ஒவ்வொரு எழுப்புதலும் இந்தவிதமான நபர்களை பிறப்பித்து விடுகிறது. அவ்விதமான ஒரு இனத்தை லூத்தரின் காலத்தில் ஏற்பட்ட எழுப்புதலும் பிறப்பித்தது. ஐரேனியஸின் காலத்து எழுப்புதலும் அப்படிப்பட்ட சாராரைப் பிறப்பித்தது. பரிசுத்த மார்ட்டினின் ஊழியத்தினால் ஏற்பட்ட எழுப்புதலும் அப்படிப்பட்ட சாராரைப் பிறப்பித்தது. கொலம் பாவினுடையதும் அப்படியே பிறப்பித்தது. வெஸ்லியினுடையதும் அப்படியே. பெந்தெகொஸ்தேயின் எழுப்புதலும் இந்த வகையான நபர்களை பிறப்பித்துள்ளது. 114. அவர்கள் எவ்வாறு சீர்கெட்டுப் போனார்கள் என்பதைப் பார்த்தீர்களா? அவர்கள் தங்களுக்கென பெரிய கட்டிடங்களையும் ஆலயங்களையும் கட்டிக் கொண்டு, இன்னும் வழுவிக் கொண்டே சென்றார்கள். எழுந்து நின்று 'அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம்' என்று ஒன்றை திரும்பக் கூறி, “ பரிசுத்த ரோமன் கத்தோலிக்க சபையை விசுவாசிக்கிறேன். பரிசுத்தவான்களுடன் கொள்ளும் ஐக்கியத்தையும் விசுவாசிக்கிறேன்'' என்று அறிக்கையிடுகிறார்கள். பரிசுத்தவான்களுடன் கொள்ளும் ஐக்கியத்தை விசுவாசிக்கிறேன் என்று ஒருவர் சொன்னால் அந்நபர் செத்துப் போன ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் கொள்கையை உடைய நபராவார். செத்துப்போன ஆவிகளோடு பேசுகிறேன் என்று கூறி அதில் விசுவாசம் வைக்கும் செய்கையானது பிசாசினால் உண்டா யிருக்கிறது. அதைப் பற்றி சந்தேகமேயில்லை. மனிதனுக்கும் தேவனுக்கும் மத்தியில் ஒரேயொரு மத்தியஸ்தர்தான் உண்டு. அவர் மனிதனாகிய இயேசு கிறிஸ்துவே. அது உண்மை . பேதுரு அதைத் தான் சொன்னான். அருமையான கத்தோலிக்க மக்களே, இயேசுவோடு நடந்த பேதுருவைப் போய் நீங்கள் முதலாவது போப்பு என்று அழைக்கிறீர்கள். 115. “ மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே வேறு எந்த மத்தியஸ்தரும் இல்லை'' என்று அவர் கூறுகிறார். நீங்கள் இன்றைக்கு, இன்னும் 10000 பரிசுத்தவான்களை மத்தியஸ்தர்களாக கொண்டுள்ளீர்கள். சபையானது மாறாத, பிழையே செய்யமுடியாத தன்மை கொண்டதாக இருக்குமானால், ஏன் நிறைய மாற்றம் ஏற்பட்டது? உங்கள் பூசைப்பலிகள் எல்லாம் இலத்தீன் மொழியில் உச்சாடனம் செய்யப்படுவதால் மாறாது என்று எண்ணுகிறீர்களா? என்ன நடந்தது? அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம் வேதத்தில் எங்கே யிருக்கிறது? அப்போஸ்தலர்களுக்கு விசுவாசப் பிரமாணம் என்று ஒன்று இருந்திருக்குமானால், அது “ மனந்திரும்பி ஒவ்வொரு வரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங் கள்'' என்ற அந்த பிரமாணம் தவிர வேறெதுவும் அவர்களிடம் இல்லை. இதைத் தவிர வேறு எதையும் அவர்கள் அறியவோ உச்சரிக்கவோ இல்லை. 116. "பரிசுத்த ரோம சபைகள்' என்பதும், மற்றும் கத்தோலிக்க மதத்தின் ஏனைய இந்த உச்சாடனங்களும் “ வானத்தையும் பூமியையும் காப்பாற்றுகிற சர்வ வல்லமை பொருந்திய பிதாவாகிய தேவன்'' என்பதும், அபத்தமானது. இவைகள் வேதத்தில் இல்லை. அப்படிப்பட்ட காரியம் வேத வாக்கியங்களில் காணப்படவில்லை. அவர்களாகவே கற்பனையாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு கோட்பாடு இது. கத்தோலிக்கர் உச்சாடனம் செய்யும் அவர்களுடைய ஜெபங்கள் யாவும் கற்பனையாக புனைந்து ஏற்படுத்திக் கொண்டவைகளாகும். 117. இன்றைக்கு நம்முடைய ப்ராடெஸ்டெண்டுகளை நாம் பார்க்கையில், அவர்களும் சத்தியத்தை விட்டு தூர விலகிப் போனார்கள். சென்ற ஞாயிற்றுக்கிழமை பில்லிகிரகாம் “ மக்கள் ரொம்பவும் தவறானதில் இருந்திருக்கிறார்கள், அவர்கள் இவ்வாறு தவறில் இருக்கையிலேயே, தாங்கள் சரியாகத்தான் இருக்கிறோம் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார். அவர் கூறியது சரிதான். அது சத்தியமானது தான். இவ்வாறு அவர் கூறியதைப் பற்றி மகிழ்ச்சியடைகிறேன். ஜார்ஜ் ஜெஃப்ரீஸ் என்பாரின் ஊழியத்தில் பில்லிகிரகாம் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார் என்று எனக்குத் தெரியும். ஆதலால் இந்நாட்களில் ஒன்றில் அவர் அதை விட்டு வெளியே வந்து விடுவார். தேவன் அவரை இப்பொழுது உபயோகித்துக் கொண்டு இருக்கிறார். எனவே அவரால் அந்த இராஜ்யத்தை அசைக்க முடியும், வேறு யாரும் அவரைப் போல் அதனுள்புக முடியாது. ஆனால் அவருடைய பிரசங்கத்தை நீங்கள் கவனித்தீர்களானால், அதன் பின்னால் ஏதோ இருக்கிறது. ஏனெனில் அவரோடு கை குலுக்கிக் கொள்கிறதினால் ஐக்கியங் கொள்ளலாம் என நம்பும் இந்த பாப்டிஸ்டுகள் அவர் பின்னால் அவர் மேல் செல்வாக்குச் செலுத்திக் கொண்டு இருந்து வருகிறார்கள். ஆம் ஐயா! 118. இப்பொழுது; உன்னுடைய கிரியைகளையும்... உன் பொறுமையையும்... எவ்வாறு நீ அவர்களை.... 119. இப்பொழுது இவ்வசனத்தைப் பார்ப்போம். “ உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக் கூடாமலிருக் கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தல ரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும் அறிந்திருக்கிறேன்.” வெளி. 2:2 120. அவர்களை பொய்யரென்று கண்டறிந்துள்ளனர். எவ்வாறு அவர்கள் அதைக் கண்டுபிடித்தனர்? வேதவாக்கியத்தை சரியாக அவர்கள் மேற்கோள் காட்டாத காரணத்தால். 121. ஒரு மனிதன், “ வேதமானது எபிரெயர் 13:8ல் 'இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று கூறுகிறது'' என்று சொல்லிவிட்டு, தொடர்ந்து, 'ஆ, அற்புதங்களின் காலம் கடந்து போய்விட்டது'' என்று சொல்வானாகில் அவன் ஒரு பொய்யனாயிருக்கிறான். 122. வேதமானது, “ நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ் நானம் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று கூறுகையில், வேதத்தில் ஒவ்வொரு இடத்திலும் அதே காரியத்தைத்தான் ஆண்டவர் கூறியிருக்கிறார், வேதாகம காலத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயே ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். அப்படியிருக்கையில், எவனாவது இதற்கு முரணாக தெளித்தல் மூலமோ அல்லது வேறு எந்த விதத்திலோ ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டால், அம்மனிதன் ஒரு பொய்காரன், அவன் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கண்டுகொள்ளலாம். 123. நான் உங்கள் உணர்வுகளை புண்படுத்தவில்லை என்று நம்புகிறேன். சகோதரனே, இக்காரியத்தில் நீங்கள் குழந்தையைப் போல இதை கொஞ்சிக் குலாவ முடியாது. நீங்கள் கையுறைகளைக் கழற்றி விட்டு, சுவிசேஷத்தை கையாள வேண்டும். பாருங்கள்? அதுதான் சத்தியம். 124. இதற்கு மாறாக எதையாவது காண்பியுங்கள் பார்க்கலாம். இயேசுவின் நாமத்தினாலேயன்றி, வேறு எந்த நாமத்தினாலும், எவராவது ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டார்களா என்பதை எனக்குக் காண்பியுங்கள், பார்க்கலாம். கத்தோலிக்க சபைதான் அதை ஏற்படுத்தியது. ஆகவே அப்படிப்பட்ட ஞானஸ்நானத்தை நீங்கள் பெற்றிருந்தால், நீங்கள் கிறிஸ்தவ சபையில் அங்கம் வகிப்பவர் அல்ல; நீங்கள் கத்தோலிக்க சபையில்தான் இருக்கிறீர்கள். ஏனெனில் கத்தோலிக்க சபை ஏற்படுத்திய முறையில்தான் நீங்கள் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறீர்கள். கத்தோலிக்கருடைய “ சண்டே விசிட்டர்'' என்ற செய்தித்தாளில் அவர்களுடைய உபதேசப் புத்தகத்தைப் பொறுத்த இவ்வாறான ஒரு கேள்வி காணப்பட்டது. “ ப்ராடெஸ்டெண்டுகள் இரட்சிக்கப்படுவார்களா?” இது கேள்வி. இதோ இதற்கு அவர்களே அளிக்கும் பதில்; “ அவர்கள் அநேகர் அடைவார்கள். ஏனெனில் அவர்கள் நம்முடைய ஞானஸ் நானத்தையும் நம்முடைய மற்ற காரியங்களையும் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் வேதத்தைக் குறித்து உரிமை கொண்டாடு கிறார்கள். வேதமோ இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ் நானம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது. நாமோ அதை அதிலிருந்து அகற்றிவிட்டு, “ பிதா குமாரன் பரிசுத்த ஆவி" யின் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று ஆக்கிவிட்டோம். இதை ப்ராடெஸ்டெண்டுகள் முழுப்பெலத்தோடு பின்பற்று கிறார்கள்''. நிச்சயமாக பார்த்தீர்களா? அது கிறிஸ்தவ ஞானஸ்நானம் அல்லவே அல்ல, அது கத்தோலிக்க ஞானஸ்நானமே. 125. அன்றொரு இரவில், “ கிறிஸ்தவ ஞானஸ்நானம் எடுத்தீர்களா?'' என்று கூறப்பட்டதைக் கேட்டீர்களா? கிறிஸ்தவ ஞானஸ்நானம். கிறிஸ்து, “ இயேசு கிறிஸ்து'' ஏதோ சில பட்டங்களில் அல்ல. 126. இப்பொழுது மூன்றாம் வசனம். “ நீ சகித்துக் கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக் கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப் பட்டதையும் அறிந்திருக்கிறேன். வெளி.2:3 127. “என் நாமத்தினிமித்தம்" அவர்களுக்கு பொறுமை யிருந்தது என்பதை கவனித்தீர்களா? எதற்காக பிரயாசப்பட்டார்கள்? அவருடைய நாமத்திற்காக . அந்த சபைக்காலத்தில் அவர் நாமத்தைப் பற்றிக் கொண்டிருந்தார்கள். இந்த வாரத்தில் நாம் தொடர்ந்து படிக்கையில், எவ்வாறு அவர் நாமத்தைப் பற்றிக் கொள்ளுகிற விஷயத்தில், அது மங்கிக் கொண்டே போய், முடிவில் வேறு நாமத்தில் போய் முடிந்தது என்பதைக் கவனித்துப் பாருங்கள். “ என் நாமத்தினிமித்தம் பொறுமையாயிருக்கிறதையும், இளைப் படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்'' அவருடைய நாமத்தினிமித்தம் பிரயாசப்பட்டார்கள். 128. எந்த சபையின் நாமத்தையும் விட மேலாக இயேசு கிறிஸ்து வின் நாமத்தை உயர்த்திட வேண்டும், அதுவே பிரதானமானதாக இருக்கட்டும். “ எதைச் செய்தாலும்... வார்த்தையினாலும், கிரியை யினாலும், நீங்கள் எதைச் செய்தாலும், அதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயே செய்யுங்கள்'' என்று வேதம் கூறுகிறது. அது சரிதானே? “ வார்த்தையினாலும் கிரியையினாலும் நீங்கள் எதைச் செய்தாலும்'' நீங்கள் விவாகத்தை செய்து வைப்பதாயிருந்தால், மணமக்களைப் பார்த்து, “ இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நீங்களிருவரும் கணவனும் மனைவியுமாக இருக்கிறீர்கள்'' என்று சுதந்திரமாக அறிவிக்க உங்களுக்கு இயலாது போகுமானால், அந்த அளவுக்கு அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தைக் குறித்து சொல்ல, உச்சரிக்க தயக்கமுள்ளவர்களாக இருப்பின், அவர்களைப் போகவிடுங்கள். அவர்களுக்கு நீங்கள் விவாகம் செய்து வைக்க வேண்டாம். சரி, அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டுமானால் இயேசுவின் நாமத்தில் கொடுங்கள். 129. இயேசுவின் நாமத்தில் எந்தக் காரியத்தையாவது செய்ய இயலாதபடி இருக்குமானால், அதைச் செய்ய வேண்டாம்! எவரோ கூறினாராம், “ சிறிது மதுவை உட்கொள்ளுங்கள்'' என்று இயேசுவின் நாமத்தில் நீங்கள் அதைச் செய்யவே முடியாது. நீங்கள் அதைச் செய்ய வேண்டாம். “ கொஞ்சம் சீட்டு விளையாடுங்கள்'' என்று யாராவது சொன்னால், நீங்கள் அதை இயேசுவின் நாமத்தில் செய்யவே முடியாது, ஆகவே அதையும் விட்டுவிடுங்கள். சீட்டுக் கச்சேரிகளில் அசிங்கமான ஹாஸ்யத் துணுக்குகளைக் கூறுவது, அதை நீங்கள் இயேசுவின் நாமத்தில் செய்யவே முடியாது, ஆகவே அதையும் விட்டு விடுங்கள்! இவ்வாறு நான் கூறிக்கொண்டே போக முடியும், ஆனால் நான் கூறுவது என்ன என்று நீங்கள் அறிவீர்கள். சரி, நீங்கள் அவ்வாறு செய்ய முடியாது. அவர் நாமத்தினால் எதையெல்லாம் நீங்கள் செய்யக் கூடாதோ அவைகளை விட்டுவிடுங்கள். ஏனெனில், “ வார்த்தையினாலும் கிரியையினாலும் நீங்கள் எதைச் செய்தாலும், அதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயே செய்யுங்கள்'' என்று அவர் கூறியிருக்கிறார். 130. மேற்சொன்ன வசனங்களில் அவர் அவர்களை அவர்களுடைய கிரியைகளுக்காகப் புகழுகிறார். இப்பொழுது நான் 4ம் வசனத்தில் அவர் குறைகூறுதலின் பேரில் பேசப்போகிறேன். "ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன் பேரில் எனக்குக் குறை உண்டு" ஓ, உனக்கு விரோதமாக எனக்கு ஒரு காரியம் உண்டு. 131. “ நீ பொறுமையாயிருந்திருக்கிறாய், என் நாமத்தை விடாமல் பற்றிக் கொண்டிருந்திருக்கிறாய்''. இவ்விஷயத்தில், இன்று இங்குள்ள இக்கூடாரத்திற்கும் இது பொருந்துமல்லவா? ஆம், ஐயா! "நீ சரியாக இருந்திருக்கிறாய், நீ மிகவும் பொறுமையோடிருந்திருக்கிறாய்; நீ நீண்டகாலம் சகித்துக் கொண்டிருக் கிறாய். இதைவிட இன்னும் முக்கியமானது, “ என் நாமத்தைவிடாமல் பற்றிக் கொண்டிருந்தாய்'' என்பதுதான். இவையாவற்றையும் நான் மெச்சுகிறேன். அதற்காக நான் உன்னைப் புகழுகிறேன். அதெல்லாம் சரிதான். வேதத்திற்கு முரணாகப் போதித்துக் கொண்டு, தங்களைத் தாங்களே அப்போஸ்தலர்கள் என்று அறிவித்துக் கொள்ளும் நபர்களை, நீ சோதித்து அறிந்து அவர்களை பொய்யரென்று நீ கண்டறிந்ததையும் நான் அறிந்திருக்கிறேன். அச்செயலையும் நான் மெச்சுகிறேன். ஆனால் உனக்கெதிராக நான் கொண்டிருக்கிற ஒரு காரியம் உண்டு. அதென்ன வெனில், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டு விட்டாய். அந்த அருமையான பழங்காலப் பாணியிலான பரிசுத்த ஆவிக் கூட்டங்களின் மேல் கொண்டிருந்த அன்பை விட்டு விட்டாய். இப்பொழுதோ, நீ அவற்றினின்று ஒருவாறு பின்வாங்கிப் போய், வெறும் சம்பிரதாய ரீதியில் ஆகிவிட்டு "பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே...' என்று வெறும் உச்சாடனங்களில் இறங்கி விட்டாய்'' அவைகள் அபத்தம்! பாருங்கள்? 132. ஓ! இந்த சமுதாயம், இவர்களிடம் ஒருவர் பெரிய அங்கியை அணிந்து கொண்டு வரவேண்டும், ஆலய பாடகர் குழுவில் பாடுவதற்கு. அவர்கள் தங்கள் விரல் நகங்களை பள பளவென தீட்டிக் கொண்டும், சிகை அலங்காரம் செய்து கொண்டும், முகத்தில் எக்கச்சக்கமான ஒப்பனைகளுடனும் வந்து இருந்து கொண்டு, பாடகர் குழுவில் அங்கம் வகித்து எப்படியோ பாடுகிறார்கள். அது என்னவென்றே எனக்குத் தெரியவில்லை. 133. சமீபத்தில் நான் வியாபாரிகளால் நடத்தப்படும் ஒரு கன்வென்ஷனுக்குப் போயிருந்தேன். அது மட்டும் ஓரல் ராபர்ட்ஸ் அவர்களின் கூட்டமாக இல்லாதிருந்தால், அங்கிருந்து ஒரு கூட்டம் மக்களை நான் வெளியே வரும்படி அழைத்திருப்பேன். நான் அங்கே பிரசங்கிக்க இருந்தேன். ஹோட்டலில் அதை அவர்கள் நடத்த முடியவில்லை. அவர்கள் என்னை ஓரல் ராபர்ட்ஸ் அவர்களுடைய கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே நான் என்னை ஓரல் அவர்களின் படிக்கும் அறையில் அமர்ந்திருக்கையில், அங்கே பெந்தெகொஸ்தே பிள்ளைகள் நின்று கொண்டி ருந்தார்கள். பதினாறு, பதினேழு மற்றும் பதினெட்டே வயது நிரம்பிய ஆண் பிள்ளைகள் மற்றும் பெண்பிள்ளைகள் அடங்கிய முப்பது அல்லது நாற்பது பேர்கள் அடங்கிய ஒரு குழு ஒரு விதமான பாடலை பாட இருந்தார்கள். அது சைகோவ்ஸ்கி அல்லது வேறு யாரோ ஒருவர் எழுதின பாடல் போல் எனக்குத் தோன்றியது. அதைக் குறித்து பெக்கி பேசுவது வழக்கம். இலக்கிய காவிய நடையிலான பாடலாக அது இருந்தது என்று நான் நினைக்கிறேன். அப்பொழுது சகோதரர்கள் கூட்டத்தில் காணிக்கை எடுக்கவிருந்தார்கள். அவர்கள் கையில் சிறு கிண்ணம் இருந்தது. அவர்கள் குருடரைப் போல் நடித்தார்கள். எல்லாவித ஹாஸ்யத் துணுக்குகளையும் பேசிக்கொண்டு, நீங்கள் கேட்டிருக்க முடியாத அளவுக்கு பேசிக்கொண்டும் சென்றார்கள். அப்பெண் பிள்ளைகள், ஓரல் அவர்களின் கட்டிடத்தின் சுவர்களில் பூசப் போதுமான அளவுக்கு வர்ணத்தை, தங்கள் முகங்களில் பூசியிருந்தார்கள். இப்படியெல்லாம் நடந்து கொண்டும் அவர்கள் தங்களை “ பெந்தெகொஸ்தேயினர்'' என்று அழைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களிலிருந்த ஆதி அன்பை இழந்து விட்டார்கள். 134. “ தேவனுக்கு பேரப்பிள்ளைகள் கிடையாது'' என்று கூறிய டேவிட் டூப்ளெஸ்ஸிஸ் அவர்களின் கருத்தை நான் ஆமோதிக் கிறேன். நம்மிடையே மெதோடிஸ்டு பேரப்பிள்ளைகள் உண்டு. நமக்கு பாப்டிஸ்ட் பேரப்பிள்ளைகள் இருக்கின்றனர். நமக்கு பெந்தெகொஸ்தே பேரப்பிள்ளைகள் உண்டு. ஆனால் தேவனுக்கோ பேரப்பிள்ளைகள் கிடையாது. நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள். உங்களுடைய தாய் தந்தையர் நல்லவர்களாக இருக்கிறபடியினால், அவர்களினிமித்தம் நீங்கள் உள்ளே வந்துவிட முடியாது. அவர்கள் இந்த சிலாக்கியத்தைப் பெற என்ன கிரயத்தைச் செலுத்தினார்களோ, அதே கிரயத்தை நீங்களும் செலுத்தியாக வேண்டும். அவர்களைப் போலவே நீங்களும் மறுபடியம் பிறக்க வேண்டும். தேவனுக்கு பேரப் பிள்ளைகள் கிடையாது. நீங்கள் குமாரனாகவோ அல்லது குமாரத்தியாகவோ தான் இருக்கிறீர்கள். பேரப்பிள்ளையாக அல்ல, அது மட்டும் நிச்சயம். 135. ஒரு அருமையான பெந்தெகொஸ்தே சபையில் நடந்த கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே குட்டைப்பாவாடை அணிந்து தலைமுடியை வெட்டி, அறைகுறை ஆடை அணிந்து, ஏறத்தாழ வீனரைப் (wiener) போல சதையெல்லாம் வெளியே தெரியும்படி (வீனர் என்றால், மாட்டிறைச்சி அல்லது மாட்டிறைச்சியும் பன்றியிரைச்சியும் கலந்து, மிகவும் பொடியாக நறுக்கி ஆவியில் வேக வைத்து அதை சவ்வு போன்ற உறையில் அடைத்து வைத்திருக்கும் ஒரு வகை சாஸேஜ் பண்டம் - அந்த சவ்வு போன்ற உரைக்குள் வைக்கப்பட்டிருக்கும் அம்மிருகத்தின் இறைச்சி அல்லது சதை வெளியே நன்கு தெரியும். உடுத்தியிருந்த, மிகவும் பால் உணர்வுகளைத் தூண்டத்தக்கதான முறையில் உடையுடுத்தியிருந்த பெண்கள் நான் உள்ளே நுழைவதைக் கண்டவுடனே சிதறி ஓட ஆரம்பித்தார்கள். 136. நியாயத்தீர்ப்பின் நாளில் நீங்கள் இச்செய்கைக்காக பதில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். விபச்சாரப் பாவத்தைப் பற்றி குற்றமுள்ளவர்களாக இருக்கப் போகிறீர்கள். “ ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் அவளோடு தன் இருதயத்தில் விபச்சாரம் செய்தாயிற்று'' என்று இயேசு கூறினார். எனவே, ஒரு மனிதனின் கண்களுக்கு முன்பாக, இப்படிப்பட்ட கீழ்த்தரமான உடையில் நீங்கள் உங்களை காண்பித்து கொண்டால், யார் குற்றமுள்ளவர்கள் இதில்? நீங்களா அல்லது அந்த மனிதனா? சரியாக இருங்கள்? பொல்லாங்காய் தோன்றுகிற யாவையும் விட்டு விலகுங்கள். பாருங்கள்? அதைப் புரிந்து கொள்ளுங்கள். 137. நீங்கள் என்ன செய்தீர்கள்? ஆதி அன்பை விட்டு விட்டீர்கள். அப்படிப்பட்டவர்களை, அவர்கள் கையில் ஒரு தம்புரூ கொடுத்து இசைக்கச் செய்து தெரு மூலையில் நின்று, கைகளைத் தட்டி தேவனை பாடித் துதிக்க வைக்க முடியாது. ஓ, முடியாது. அவர்களால், அங்கிகளை அணிந்த சிலரோடு சேர்ந்து கொண்டு, ஒருவிதமான "க்ளாஸிக்கல்' இசையில் பாடல்களை பாட மட்டுமே தெரியும். அவர்கள் ஆதி அன்பை இழந்து விட்டார்கள். முதலாம் சபையின் காரியமும் அப்படித்தானிருந்தது. 138. அவர்களுக்கு உலகத்தைப் போல நடக்க வேண்டியதா யிருந்தது. அவர்களுக்கு, உலகத்தைப் போல் உடையுடுக்கவும், உலகத்தைப்போல் தோற்றமளிக்கவும், உலகத்தைப்போல் நடந்து கொள்ளவும் வேண்டியதாயிருந்தது. அவர்களுக்கு அவர்களுடைய அபிமான தொலைகாட்சி நட்சத்திரம் உண்டு. தொலைக் காட்சியை பார்க்காமல் அவர்களால் இருக்க முடியாது. "நாங்கள் சூசியை நேசிக்கிறோம்' போன்ற நிகழ்ச்சிகளெல்லாம் அவர்களுக்கு உண்டு. அதையெல்லாம் அவர்கள் பார்த்தேயாக வேண்டி உள்ளது. அந்நிகழ்ச்சியை கண்ணுற, அவர்கள் ஜெபக் கூட்டங்களைக் கூடத் துறந்து வீட்டில் தங்கிவிடுகின்றனர். அல்லது அப்படியே அவர்கள் ஜெபக்கூட்டத்திற்குப் போய்விட்டால், அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வீடுகளுக்கு சீக்கிரமாக திரும்ப வசதியாக ஜெபக்கூட்டத்தை சீக்கிரமே முடித்துவிட வேண்டுமென தங்கள் போதகரை நோக்கி கூச்சலிடுகின்றனர். தேவ பிரியராயிராமல் உலகத்தின் மேல் பிரியராயிருக்கிறார்கள். 139. அவர்கள் மிகவும் சடங்காச்சாரக்காரர்களாக மாறி, “ ஆமென்'' சொல்ல இயலாத அளவுக்கு ஆகிவிட்டார்கள். அது அவர்களுடைய ஒப்பனைகளையெல்லாம் உடைத்துவிடும். அவர் களிடம் பெந்தெகொஸ்தே அனுபவம் இல்லை. அது பாப்டிஸ்ட் அனுபவமும் அல்ல. ப்ரெஸ்பிடேரியன்களுக்கும் தொடக்கத்திலிருந்தே அவ்வனுபவம் கிடையவே கிடையாது. நான் பெந்தெகொஸ்தே அனுபவத்தைப் பற்றிக் கூறுகிறேன். நான் கூறுவது சலிப்புண்டாக்கும் என்றறிவேன். ஆனால் இவற்றி லிருந்து நமக்கு ஒரு பிறப்பு உண்டாக வேண்டும். பிறப்பை அடைய ஒரு மரணம் அவசியமாயிருக்கிறது. பாருங்கள்? பாருங்கள்? அது சத்தியமாயிருக்கிறது. ஆனால், நீங்கள் ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டீர்கள். 140. இந்த சபைக்கெதிராக தேவன் இத்தகைய குறை கூறுதலை கூறினால், அதற்கெதிராகவும் அவர் அதே குறைகூறுதலை கூறுகிறவராயிருக்கிறார். “ ஆதி அன்பை விட்டுவிட்டாய் என்று உன் பேரில் எனக்கு குறை உண்டு. உனக்கெதிராக நான் கூறும் குறை ஒன்றுண்டு. முன்பு நீ மகத்தான வேளையை உடையவனாய் இருந்தாய். ஆனால் இப்பொழுதோ லௌகீகம் உன்னிடத்தில் ஊடுருவ இடம் கொடுத்து விட்டாய், அதினால் வெறும் சடங்காச்சார ரீதியில் நடந்து கொள்ள வேண்டியவனாய் இருக்கிறாய். இன்னும் நீ என்னுடைய நாமத்தை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறாய், சரியான காரியங்களை நீ இன்னும் செய்து கொண்டிருக்கிறாய்; உனக்கு மிகுந்த பொறுமை உண்டு, நீ பாடுபடுகிறாய், கோவேறு கழுதையைப் போல், மிகுந்த பாடுபட்டு, களைப்படையாமல் பிரயாசப்படுகிறாய். 141. என்னே! என்னே! என்னே! பார், நீயோ கிருபையையும் விசுவாசத்தையும், வல்லமையையும் பாடுபடுதலுக்காகவும், கிரியைகளுக்காகவும் மாற்றாக விட்டுக் கொடுத்துவிட்டாய். “ நல்லது, சகோ.பிரான்ஹாமே, நான் ஒவ்வொரு விதவைப் பெண்மணிக்கும் என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்கிறேன்'' என்று நீங்கள் கூறலாம். நல்லது, அது நல்ல காரியம்தான். அதற்காக நான் உன்னை மெச்சுகிறேன். ஆனால் நீ முன்பு கொண்டிருந்த ஆதி அன்பு எங்கே? நீ முன்பு வழக்கமாகக் கொண்டிருக்கும் அந்த மகிழ்ச்சி எங்கே? “ ஓ கர்த்தாவே, உம்முடைய இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்பவும் எனக்குத் தாரும்'' என்று தாவீது ஒரு சமயம் கதறினான். கன்னங்களில் கண்ணீர் வடிய நீங்கள் ஜெபிக்கும் இந்த முழு இரவு ஜெபக் கூட்டங்கள் எங்கே? உங்களுடைய வேதமானது தூசி படிந்து, சிலந்தி வலை பின்னிய நிலையில் கிடக்கிறது. நீங்கள் உங்களின் பிரிய காதல் கதைகளை வாசிப்பதிலும், செய்திகளை வாசிப்பதிலும், பிரசுரிக்கவே தகுதியில்லாமல் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட வேண்டியவை களையெல்லாம், அழுகிப்போன உணவுகளைக் கொண்ட தொட்டியின் மேல் மொய்க்கும் ஈக்களைப் போல் மொய்த்து, வாங்கி வாசிக்கிறீர்கள். அது உண்மை , தேவனே இரங்கும்! நமக்கு தேவையானதெல்லாம் ஆதி அன்புக்குத் திரும்புவதே! பெந்தெ கொஸ்தேயின் அனுபவத்திற்கு திரும்புவதே! ஓ, இதைப் பற்றி நான் பேசாமல் நீங்கிச் செல்வது நலமாயிருக்கும். சரி, இப்பொழுது ஆதி அன்பை விட்டு விட்டதைக் குறித்து புரிந்து கொண்டீர்களா? 142. இப்பொழுது 4ம் 5ம் வசனங்கள், 5ம் வசனத்தில் ஒரு எச்சரிக்கை; “ நினைத்து, மனந்திரும்பு.'' ? “ ஆகையால் நீ இன்ன நிலையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து (எங்கிருந்து நீ விழுந்து விட்டாய்? பெந்தெகொஸ்தே அனுபவத்திலிருந்து, தற்போது நீ இருக்கும் பின்மாற்ற நிலைக்குள் விழுந்து விட்டாய்) மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக: (பெந்தெகொஸ்தே அனுபவத்திற்கு திரும்பிப்போ): இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாத பட்சத்தில் உன் விளக்குத்தண்டை (அது யாரென்று நீங்கள் கண்டு கொண்டீர்கள் இல்லையா?) அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்,” 143. இதையே இன்னொரு விதமாகச் சொல்வோமானால், உங்களுக்கு தேவனால் நிரம்பின, பரிசுத்த ஆவியினால் நிரம்பின போதகர் இருப்பாரெனில் அவரை உங்களுடைய விரல் நுனியில் கட்டுபடுத்தி வைக்க நீங்கள் எண்ணி நல்லது. அவர்கள் நமக்கு அங்கியணிந்த பாடகர் குழு இருப்பதைப் பற்றியோ, நாம் போட்டுக் கொள்ளும் அழகுபடுத்தும் சாதனங்களைப் பற்றியோ பிரசங்கித்தால், நாம் அவரை சபையை விட்டு வெளியே தள்ளி விடுவோம்'' என்று சொல்லுவீர்கள். நீங்கள் கவலையேபட வேண்டாம். நீங்கள் அதைச் செய்வதற்கு முன்னால் தேவனே அதைச் செய்து விடுவார். அப்போதகர் அவ்விதமான வேத விரோத காரியத்தோடு ஒத்துப் போவதற்குப் பதிலாக வெளியே புறப்பட்டுப் போய், கல்லுகளுக்கு பிரசங்கிப்பார். சத்தியத்தை உண்மையாகவே உரைக்கும் ஒரு போதகர் உங்களுக்கு இருந்தால், நீங்கள் தேவனை கனம் பண்ணி, ஆவியில் நிலைத்திருந்து, தேவனை தொழுது கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் நீங்கள் இழந்து போகப்படுவீர்கள் என்பதையும் உணரவேண்டும். 144. ஆனால் மக்களோ, இன்றைக்கு, “ இவ்வுலகில் வாழ்ந்து விடு, அதற்குப் பிறகு ஒன்றுமேயில்லை' என்பது போல் ஜீவிக்கிறார்கள். ஒரு ஆத்துமா உங்களுக்கு உண்டு என்றும், அது இங்கிருந்து கிளம்பி எங்கோ செல்லுகிறது என்பதையும் நீங்கள் உணருகிறதில்லை. நீங்கள் அழுக்காறு கொண்டு, அற்பமாகவும் மற்றும் இன்னும் வேறு சில காரியங்களையும் செய்கிறீர்கள். நீங்கள் வாழும் விதத்திலும், நீங்கள் செய்யும் செய்கையினாலும், உங்களுடைய போக்கிடத்தை இங்கேயே நீங்கள் முத்திரையிட்டுக் கொண்டு விடுகிறீர்கள். இப்படியெல்லாம் செய்து கொண்டும் ஆலயத்திற்கும் ஓடிப்போகிறீர்கள். ஓ! உங்களுக்கு இரக்கம் கிடைக்கட்டும், வ்யூ! உங்களுக்கு வெட்கக்கேடு! 145. கிறிஸ்துவுக்குரிய மேலான நோக்கத்தின் மேல் நீங்கள் நிந்தையைக் கொண்டு வருகிறீர்கள். அப்படித்தானே? நாம் அவ்வாறு செய்யவில்லையா? கள்ளச் சாராயம் காய்ச்சுகிறவர்கள் கூட சபையை இழிவுபடுத்தவில்லை. அவர்களல்ல. விபச்சாரி சபையை பாழ்படுத்தவில்லை. கிறிஸ்தவர்கள் என அறிக்கை செய்து வரும் மக்கள் தான் சபையை பாழ்படுத்துகிறார்கள். ஒரு கள்ளச் சாராயம் காய்ச்சுபவன் யார், ஒரு விபச்சாரியானவள் யார் என்பதை நாம் அறிவோம். ஆனால் நம்முடைய சகோதரிகளே விபச்சாரிகளைப் போல் ஆடையாபரணம் தரித்தால், அது மாறுபாடானது. அதுவே சபையை பாழ்படுத்துகிறது. சகோதரனொருவன் சாராயம் விற்கிறவனைப் போல் குடித்துக் கொண்டிருந்தால், அதுவே சபையை பாழ்படுத்துகிறது. அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டே இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறார்கள். மக்கள் உங்களை அந்த நாமத்தைக் கொண்டே கவனித்துப் பார்க்கிறார்கள். “ இயேசு கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக் கடவன்'' அதைவிட்டு விலகுங்கள். 146. சகோதரரே, நாம் மிகவும் குறைவுள்ளவர் களயிருக்கிறோம். நான், நீங்கள் நாமெல்லோருமே எந்த அளவு இருக்க வேண்டு மென்று கிறிஸ்து விரும்புகிறாரோ, அதைவிடக் குறைவாகவே நாம் இருக்கிறோம். இந்நாளில், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தைத் தள்ளிவிட்டு, நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கிற இப்பந்தய ஓட்டத்தில் பொறுமையோடே ஓட வேண்டிய வேளையாயிருக்கிறது. பிரசங்கிகளாகிய சகோதரரே, அது உண்மை , அது முற்றிலும் உண்மை . 147. “ நினைத்து, மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் வந்து, நட்சத்திரத்தின் ஒளியை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்''. அதனிடத்தினின்று என்றால் என்ன? சபையில் அது இருக்கும் இடத்தினின்று என்பதாகும். “ நீ மனந்திரும்பி, ஆதியில் நீ இருந்து வந்த ஸ்தானத்திற்குத் திரும்பி போகாவிடில், நான் உன் போதகரை உன் மத்தியிலிருந்து அகற்றி, வேறு எங்கு என்னுடைய ஒளியை பிரதிபலித்து பிரகாசிக்கச் செய்ய முடியுமோ, அங்கு வைத்து விடுவேன்''. ! இது மிகவும் பயபக்திக்குரியதாக இல்லையா? 148. சபைகள் மனந்திரும்ப வேண்டிய வேளையாயிருக்கிறது இது. பெந்தெகொஸ்தேயினரே! இவ்வேளையில், நாசூக்கான அந்த நவீன அறிஞர்கள் அநேகரை உங்களுடைய பிரசங்க பீடங்களை விட்டு அகற்றிவிட்டு, அவ்விடத்தில், பழமைப் பாணியிலான சத்தியத்தையே பிரசங்கிக்கும் பிரசங்கியை வைக்க வேண்டியதாயிருக்கிறது. ஒரு உணவு அனுமதிச் சீட்டுக்காகவும், மிகுந்த கூலிக்காகவும் மற்றும் அவ்வாறான காரியங்களுக்காகவும் வேண்டி, சபையை உபயோகப் படுத்தவும், உங்களை முதுகில் தட்டிக் கொடுத்து, நயங்காட்டிடும் போதகர்கள் உங்களுக்கு வேண்டாம். மனோதத்துவத்தை பிரசங்கிப்பதும், சில குதிரை பந்தயங்களை நடத்துவதும், சபையில் மாலைநேர சமுதாய விருந்துகளை ஏற்பாடு செய்வதுமான போதகர்கள் வேண்டாம். சுவிசேஷத்திற்குத் திரும்பிப் போக வேண்டிய வேளை வந்துவிட்டது. நீங்கள் எவ் வளவு சிறு கூட்டமாய் இருந்தாலும் பரவாயில்லை. “ எங்கே இரண்டு அல்லது மூன்று பேர்கள் என் நாமத்தில் கூடியிருக்கிறார்களோ, அவர்கள் நடுவில் நான் இருக்கிறேன்'' என்கிறார். 149. “ மனந்திரும்பாவிட்டால், நான் வந்து விளக்குத்தண்டை அதனிடத்தினின்று அகற்றிவிட்டு, அவனை வேறு எங்காவது பிரகாசித்துக் கொண்டிருக்கும்படி அனுப்பி விடுவேன்.'' 150. 6ம் வசனம். இங்கேயுள்ள இந்த நபரோடு தான் நமக்கு தொல்லை உள்ளது. மனந்திரும்பாவிட்டால், அவர் வந்து போதகரை அவர்களைவிட்டு அகற்றிவிடுவார். “ இது உன்னிடத்திலுண்டு” 151. இப்பொழுது இதை நினைவில் கொள்ளுங்கள். இதை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட வேண்டாம். இப்பொழுது நாம் பார்க்கப் போகிற விஷயம், நாம் இப்பொழுது வாழ்கிற இந்தக் காலம் வரைக்கிலும் உள்ள ஏனைய காலங்களை இணைக்கிறது. யாவரும் உற்சாகமாக இருக்கிறீர்களா? (சபையார் “ ஆமென்'' என்று சொல்லுகிறார்கள் - ஆசி). நீங்கள் அவசரமாக போக வேண்டுமா? (சபையார் “ இல்லை'' என்று கூறுகிறார்கள் - ஆசி). சரி, அப்படியானால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். (சபையிலிருந்து ஒரு சகோதரர், இரவு முழுவதும் தங்கித்தரிக்கலாம்” என்கிறார் - ஆசி). இப்பொழுது, உங்களுக்கு நன்றி. இது உன்னிடத்திலுண்டு.... (அப்படியானால் அவர்களிடம் ஏதோ ஒன்றிருந்தது, இல்லையா? அவர்களிடம் என்ன இருந்தது?).... நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய். வெளி.2:6 152. “ நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய்". நான் இன்று இதைக் குறித்து படித்துக் கொண்டிருக்கையில், இரண்டு பக்கங்களுக்கு ஒரு குறிப்பை எழுதி வைத்தேன், அதை நீங்கள் கவனமாகக் கேட்க வேண்டுமென்று விரும்புகிறேன். 6ம் வசனத்தில் புகழ்ச்சி இருக்கிறது. ஒரு விஷயத்தில் தேவனும் சபையும் கருத்தொருமித்து இருக்கிறார்கள். எபேசு சபைக் காலத்தில் இருந்து வந்த உண்மையான சபையாகிய அந்த மெய்யான திராட்சைச் செடி, தேவன் வெறுத்த நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை தானும் வெறுத்தது''. 153. ஒவ்வொரு சபைக்காலத்திலும் சபையில், ஆவிக்குரியவர்களும், வெறும் சடங்காச்சார ரீதியிலானவர்களும் இருந்தே வந்துள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு எழுப்புதலின் போதும் இவ்வாறான இரட்டையர்கள் ஒவ்வொரு சபையிலும் பிறந்து ஜீவித்து வந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த சபையின் காலத்திலேயே ஆரம்பித்து, இந்த சபையின் காலத்தில் முடிவடைகிறார்கள். இறுதியாக தீயத்தீரா சபையின் காலத்தில், மாம்சத்துக்குரியவர்கள் தங்கள் கையில் சபையை எடுத்துக் கொண்டார்கள். லூத்தர் தன் காலத்தில் அதை வெளியே மீண்டும் இழுத்துப் போட்டார். இப்பொழுது சடங்காச்சார மார்க்கமானது மீண்டும் வந்துவிட்டதை உங்களால் பார்க்க முடிகிறதா? அதற்கும் கத்தோலிக்க கொள்கைக்கும் வேறுபாடு ஏதுமில்லை. எல்லாம் ஒன்றேதான். ஒவ்வொரு ஸ்தாபனமும் அதற்குள்ளாகத் தான் அடித்துப் போடப்பட்டுள்ளது. தேவன் ஒருபோதும் தன் சபையை ஒரு மதஸ்தாபனமாக ஆக்கவில்லை. ஆனால் அதைத் தான் அவர்கள் இங்கே செய்ய முயன்று கொண்டிருந்தார்கள். அது அவ்வா றில்லையா என்பதை கவனியுங்கள். எவ்வாறு ஒரு மத ஸ்தாபனமானது சபிக்கப்பட்டது என்பதை உங்களுக்குக் காண்பிப்பேன். புதிய ஏற்பாட்டு உண்மையான சபைக்கும், ஸ்தாபனத்திற்கும் சம்மந்தமே இல்லை பாருங்கள்? “ நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு" 154. மெய்யான திராட்சைக் கொடி, நிக்கொலாய் மதஸ்தரின் சம்பிரதாய கிரியைகளை தேவன் வெறுக்கிறது போல தானும் வெறுத்தது. எபேசு சபையின் காலத்தில் நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளாக இருந்தவை. பெர்கமு சபையின் காலத்தில் உபதேசமாக மாறியது. எபேசுவாகிய முதலாம் சபையில், அது ஒரு கிரியையாக இருந்தது. பின்பு அடுத்து வந்த சபைக் காலத்தில் அது ஒரு போதகமாக மாறியது. நீங்கள் இதை அறிந்து கொள்கிறீர்களா? இப்பொழுது நீங்கள் அதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? எபேசுவில் கிரியையாக இருந்தது, பெர்கமுவில் ஒரு போதகமாக மாறியது. முதலில் அது சிறு குழந்தை வடிவில் ஆரம்பித்தது. இன்னும் சில நிமிடத்தில் அது என்ன என்பதைப் பார்ப்போம். பவுல் அதை “ ஓநாய்கள்'' என்று குறிப்பிடுகிறார். “ நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள்''. 155. மேற்கொண்டு நாம் செய்தியைக் கேட்பதற்கு முன்னால், நிக்கொலாய் என்ற வார்த்தையை பதம் பிரித்து பார்ப்போமாக. நிக்கொலாய் என்ற வார்த்தை எனக்கு அந்நியமான ஒன்றாகும். என்னால் பார்க்க இயன்ற அளவுக்கு அநேக கிரேக்க மொழி அகராதிகளைப் பார்த்துவிட்டேன். நிக்கொலாய்டேன்ஸ் (ஆங்கில வேதாகமத்தில் இவ்வாறுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் வேதாகமத்தில் நிக்கொலாய் என்று மொழி பெயர்த்துப் போட்டுள்ளார்கள் - மொழிபெயர்ப்பாளர்) என்ற வார்த்தை யானது நிக்கோ (Nicko) என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. "நிக்கோ' என்றால் "ஜெயங்கொள்ளுதல்' அல்லது "தூக்கியெறிதல்' என்று பொருள். 'நிக்கொலாய்டேன்ஸ் (Nicolaitanes) என்றால், "லெய்டி'யை (லெய்டி என்றால் மக்கள் அல்லது சபை என்று அர்த்தம் - மொழி பெயர்ப்பாளர்) வென்று, "தூக்கி யெறிதல்' என்று அர்த்தமாகும். ஜீவனுள்ள தேவனுடைய சபையிலே தேவ ஆவியானவர் வரங்களினால் அசைவாடி, அதற்கு தேவனே மேய்ப்பர்களை தந்து நடத்தி வந்தார். அதை மாற்றி, அதற்குப் பதிலாக, சபையை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு, சில பாதிரிமார்கள், பிஷப்புகள், போப்புகள் இவர்களை சபை பெற்றிருக்கும்படியாக உபதேசத்தை மாற்றியமைத்துக் கொள்ளும் ஒரு காரியத்தைத்தான் அவர்கள் செய்ய ஆரம்பித்தார்கள். தேவன் இதை வெறுப்பதாகக் கூறுகிறார். இன்றைக்கும் அதை அவர் வெறுக்கிறார். “ நிக்கொலாய்டேன்ஸ்'' என்றால் “ லெய்டியை வென்று கீழ்ப்படுத்தல்'' என்று பொருள். லெய்டி என்றால் சபை என்று பொருள். லெய்டி என்றால் சபை என்று எத்தனை பேருக்குத் தெரியும்? “ சபையை வென்று அதைக் கீழ்ப்படுத்தி அதின் இடத்தை எடுத்துக் கொள்ளுதல்'' என்பதுதான் இதன் அர்த்தம். 156. இதையே இன்னொரு விதமாகச் சொல்வதென்றால், சபை யிலிருந்து எல்லா பரிசுத்தத்தையும் அகற்றி, அதிலிருந்து எல்லா வல்லமையையும் அகற்றிவிட்டு, பாதிரிமார்களுக்கு அதிகாரம் கொடுத்து “ சபையானது தான் விரும்புகிறபடி வாழ்ந்து கொள்ளட்டும். ஆனால் பாதிரிமார்களே பரிசுத்தமானவர்கள்'' என்று அறிவித்து விட்டார்கள். ஜனங்களை விட்டு பரிசுத்த ஆவியையும், அதோடு தொடரும் அற்புத அடையாளங்களையும் அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக பரிசுத்த குருத்துவ ஆளுகை முறையை ஏற்படுத்தினார்கள். குருத்துவ ஆளுகை முறையை பரிசுத்த ஆவிக்கு மாற்றாகக் கொண்டு வந்தார்கள். அது என்ன என்பதை பார்த்தீர்களா? முதலாம் சபையின் காலத்தில் அது கிரியைகளாக இருந்து, பின்பு மூன்றாம் சபையின் காலத்தில் அது போதகமாக மாறியது. தியத்தீரா சபையின் காலத்தில் அது முழுவதும் மேற்கொண்டு விட்டது. லூத்தர் அதை விட்டு வெளியேறிய பொழுது, இவ்வுபதேசம் சிறிது காலம் தான் வலுவிழந்திருந்தது. கொஞ்சக் காலத்திற்குப் பிறகு அது மீண்டும் வலுப் பெற்று திரும்பவும் போய் அது தன் ஸ்தானத்தை வென்று எடுத்துக் கொண்டது. பிஷப்புகளும், கார்டினல்களும், ஆர்ச் பிஷப்புகளும் தலைமை ஸ்தானங்களை எடுத்துக் கொண்டார்கள். ஆனால் தேவனுடைய சபைக்கு தேவனைத் தவிர வேறு எவர் தலைவராக இருக்க முடியும்? ஆமென்! வ்யூ! நான் இப்பொழுது பக்திப் பரவசமடைகிறேன்! சபையை ஆளுகை செய்ய பரிசுத்த ஆவியானவர் அனுப்பப்பட்டார். பிரசங்கியாரை மட்டுமல்ல, முழுச் சபையையும் ஆளுகிறவர் அவரே. பிரசங்கியார் மட்டும் பரிசுத்தமாயல்ல, சபை முழுவதும் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறது. 157. தேவ ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் ஒரு அப்பத்துண்டை அல்லது பிஸ்கோத்தை, சிறிது திராட்சைரசத்தோடு எடுத்துக் கொண்டு அதை, “ பரிசுத்த யுக்காரிஸ்ட்' என்றழைக்கிறார்கள். அதற்கு பரிசுத்த ஆவி' என்று பொருள். சிறிது திராட்சைரசமும், ஒரு பிஸ்கோத்தும் எவ்வாறு ஒரு ஆவியாக இருக்க முடியும்? அப்படித்தான் இருக்கும் என்றால், அப்பொழுது நீங்கள் அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தை இவ்வாறுதான் படிக்க வேண்டும்; “ பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அங்கே ஒரு ரோமன் சாமியார் வந்து, சபையினரின் நாக்கில் ஒரு வட்டவடிவ அப்பத்துண்டை வைத்து, “ இதைப் புசியுங்கள்'' என்று கூறிவிட்டு, சாமியார் தானே அந்த இரசத்தை பருகி, “ இப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டு விட்டீர்கள்'' என்று கூறினார். அது மிகவும் பயங்கரமானதாக நமக்கு காணப்படுகிறது. அது அப்படித்தான் இருக்கிறது. 158. தொடர்ந்து பார்ப்போம். “ நான் ஒரு பாப்டிஸ்ட் சபையில் குருப்பட்டம் பெற்றேன். நாம் பாப்டிஸ்டுகளை தெரிந்து கொள்வோம்'' என்கின்றனர். மெதோடிஸ்டுகள் என்ன கூறுகிறார்கள்? “ இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று நீங்கள் விசுவாசித்தால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள்'' என்கிறார்கள். பிசாசு கூட இயேசு தேவனுடைய குமாரன் என விசுவாசித்து, நடுங்குகின்றன. சபை அங்கத்தினர்களைவிடக் கூடுதலாக அவன் விசுவாசிக்கிறான். பிசாசும் அதையே விசுவாசித்து, நடுங்குகிறான். ஏனெனில் தான் நாசமடையப் போகிறதை அவன் அறிவான். 159. இப்பொழுது மெதோடிஸ்டுகளின் வழியைப் பார்ப்போம். “ யோவான் முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை, தெளித் தலையே செய்தான்'' என்று கூறுகிறார்கள். மேலும், 'அந்நாட்டில் நிலத்தில் வளைகளைத் தோண்டி வாழும் ஒரு வகை ஆமைகள் ஏராளம் உண்டு. அவ்வளைகளில் தண்ணீர் வந்துவிடும் போது, ஆமையின் சதையை சுரண்டி எடுத்துவிட்டு, அவ்வோட்டை எடுத்து விட்டு, அவ்வோட்டை எடுத்து வைத்துக்கொண்டு, அதில் தண்ணீர் நிரப்பி யோவான் ஜனங்களுக்கு ஞானஸ்நானத்தை தெளித்தல் முறையில் கொடுத்தான்'' என்று மெதோடிஸ்டுகள் பிரசங்கிக்கக் கூட செய்கிறார்கள். அது அபத்தமானது, ஓ சகோதரனே! 160. நல்லது, இப்பொழுது இவ்வாறாக இதைப் பற்றிச் சொல்லுவோம். “ பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்கள் யாவரும் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் கூடிவந்திருந் தார்கள். அப்பொழுது போதகர் அங்கே வந்து ஒரு அருமையான பிரசங்கத்தை நிகழ்த்தி விட்டு, “ எனக்கு ஐக்கியத்தின் வலது கரத்தைக் கொடுங்கள். உங்கள் பெயர்களை புத்தகத்தில் எழுதி விடுவோம்'' என்று கூறினார். அது சரியாக தொனிக்கிறதா? வசனம் அவ்வாறா இருக்கிறது? ஒரு பஞ்சாங்கம் கூட இப்படியான ஒரு காரியத்தைக் கொண்டிருக்காது, அது கூட இவர்கள் சொல்வதை விட சரியாக இருந்துவிடும். வயோதிப பெண்மணிகளின் பிறந்த நாள் பஞ்சாங்கம் கூட இதை விட சரியான தாயிருக்கும். 161. இப்படியாக இவர்கள் நடந்து கொள்வதற்கு காரணமாக அமைந்தது எது? இந்த நிக்கொலாய் மதத்தினர், வேத வாக்கியங்களைப் புரட்டவும், ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கவும், அதினால் தேவன் அங்கே அசைவாட முடியாதபடி செய்யவும், அதற்காக ஒரு கூட்டம் மனிதர்களை உள்ளே கொண்டு வந்தனர். அங்கேயே அது மரித்துவிட்டது! அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து, “ உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்தும் நீ மரித்தவனாயிருக்கிறாய்'' என்று கூறினார். அவர்களில் அநேகர் மரித்தவர்களாயிருக்கின்றனர். ஆயினும் அதை அவர்கள் அறியவில்லை. 162. நானும் எனது சகோதரனும் சிறுவர்களாயிருக்கையில், ஒரு சமயம், மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். நான் அப்பொழுது தூண்டிலில் ஒரு வயதான பெரிய ஆமையைப் பிடித்தேன். இந்த வகை ஆமை மிகுந்த வலுவுடன் தூண்டிலை இழுக்கக் கூடியது. எனவே அது என்னை ஏமாற்றிவிடாதபடி இருக்க, உடனே நான் தூண்டிமுள்ளைக் கவ்விய அதன் தலையைக் கிள்ளி ஆற்றுக் கரையில் எறிந்துவிட்டேன். என்னுடைய தம்பி அங்கே வந்து, “ சற்று முன்னர் நீ எதைப் பிடித்தாய்?'' என்று கேட்டான். நான், “ ஒரு ஆமை'' என்று கூறினேன். “ அதை என்ன செய்தாய்? என்று கேட்டான். 163. “ அதை நான் அங்கே போட்டு விட்டேன். அதோ அதன் தலை அங்கே கிடக்கிறது'' என்று கூறினேன். 164. அவன் அதனிடமாகப் போய், “ அது செத்துவிட்டதா?" என்று கேட்டான். 165. “ நிச்சயமாக! அதன் தலையை அதன் சரீரத்திலிருந்து வெட்டி எறிந்து விட்டேன், அது மரித்துதான் இருக்க வேண்டும்'' என்று நான் பதிலளித்தேன். 166. எனவே, அப்பொழுது அவன் ஒரு குச்சியை எடுத்து, அந்த ஆமைத்தலையை மீண்டும் நதியில் போட்டுவிட எத்தனித்து, குச்சியை அதனருகில் கொண்டு சென்றான். அவ்வாறு அவன் செய்த பொழுது, அந்த ஆமை அக்குச்சியை கவ்வியது. இவ்வகை ஆமையானது, அதன் சரீரத்தினின்று தலையைப் பிய்த்து எறிந்து விட்டாலும், ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு அது உயிரோடிருக்கும். என் தம்பி, செத்துப் போனதாக எண்ணப்பட்ட ஆமைத் தலையானது அக்குச்சியைக் கவ்வியதைக் கண்டதும், துள்ளிக்குதித்து, “ ஹேய், இதென்ன அது செத்துவிட்டது என்று சொன்னாயே” என்று கத்தினான். “ அது மரித்தே விட்டது'' என்று நான் கூறினேன். ''நல்லது, ஆமைக்கு தான் மரித்து விட்டது தெரியவில்லையா'' என்று பதிலளித்தான். 167. அவ்விதமாகத்தான் அநேகர், தாங்கள் மரித்தவர் களாயிருந்தாலும் அதை அறிய மாட்டாதவர்களாயிருக்கிறார்கள். நிக்கொலாய் மதஸ்தர் இவர்கள். ஓ, என்னே ! ஓ, “ நீயும் அதை வெறுக்கிறாய்'' என்று அவர் கூறுகிறார். “ எல்லாவற்றையும் எடுத்து விட்டு, பரிசுத்த குருக்கள், பரிசுத்த கார்டினல்கள், பரிசுத்த பிஷப்புகள் என்று அழைத்துக் கொள்பவர்களை தங்களுக்குள் கொண்டிருக்கிறார்கள். 168. பெந்தெகொஸ்தேயினரே, உங்களில் சிலர், “ தலைமை கண்காணிப்பாளர் வந்து, நீங்கள் சுகமளிக்கும் ஆராதனையை இங்கே நடத்தலாமா வேண்டாமா என்பதைப் பற்றி உங்களுக்குச் சொல்லுவார்'' என்கிறீர்கள். தேவனுடைய நித்திய வார்த்தையாகிய பரிசுத்த ஆவியானவர்கள்தான், நீங்கள் இதைச் செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பதைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும், வேறு யாருமல்ல. அல்லேலூயா! 169. “ நல்லது, சகோ. பிரன்ஹாம் அவர்களே, "இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுங்கள்' என்று வேதம் போதிக்கிறது என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆனால் எங்களுடைய சபையின் பொதுக் கண்காணிப்பாளர் அவர்கள், எங்களுடைய சபையில் இதை நாங்கள் செய்ய ஆரம்பித்தால், எங்களை வெளியே தள்ளிவிடுவதாகக் கூறியிருக்கிறாரே'' என்கிறீர்கள். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். தேவனுடைய நகரத்தினின்று நான் உதைத்து தள்ளப்படுவதைப் பார்க்கிலும், இங்கே இவர்களால் உதைத்து வெளியே தள்ளப்படுவதையே நான் விரும்புவேன். இங்கே, வேதத்திலிருந்து நீங்கள் எதையாகிலும் எடுத்துப் போட்டால், அங்கே, தேவனுடைய நகரத்தில் நீங்கள் உள்ளே நுழையாதபடி உதைத்துத் தள்ளப்படுவீர்கள். எனவே அங்கே யிருந்து உதைத்து வெளியே தள்ளாதபடிக்கு, இங்கே உதைத்து வெளியே தள்ளப்படுங்களேன். இங்கே இவர்கள் உங்களை உதைத்து வெளியே தள்ளினால், அங்கே உள்ளே தள்ளப்படுவீர்கள். அதுதான் நடக்கும், எனவே வார்த்தையோடு நிலைத்திருங்கள். 170. நாம் சரியாகவே இருக்க விரும்புகிறோம். ஓ என்னே, சகோதரனே, அது ஒரு மிகவும் முக்கியமான காரியமாகும். நாம் இந்த காரியத்தை சரி பண்ணிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். தேவன் தன் சபையை கட்ட ஒரு உறுதியான அஸ்திபாரம் அவருக்கு கிடைக்க வேண்டும். அது இல்லாதவரையில் நமக்கு ஒரு சபை இருக்காது. ஒரு சில அபத்தங்களை அஸ்திபாரமாகக் கொண்டு, தேவன் ஒருபோதும் தன் சபையை கட்டமாட்டார். அவர் தன்னுடைய வார்த்தையின் பேரில்தான் வரவேண்டும். அல்லாவிடில், அவர் வரவே மாட்டார். சரியானபடி அவர் தன் வார்த்தையில் தான் இருக்கிறார். 171. சமீபத்தில் சிலர், “ சகோ.பிரன்ஹாமே, நீங்கள் சாடாகு வாவுக்கு வாருங்கள்'' என்று அழைப்பு விடுத்திருந்தனர். சாடாகுவாவுக்கு எத்தனை பேர்கள் வந்திருந்தீர்கள்? ஏன், இங்கு பாருங்கள், சபையின் மூன்றில் ஒரு பங்குக்கு மேலானவர்கள் சாடாகுவாவுக்கு வந்திருந்தார்கள். அப்பொழுது, அந்த பிற்பகலில் அந்த மனிதன் எழும்பி நின்று, அவன் பேசுவது எனக்குத் தெரிய வரும் என்று அறியாமல் பேசினான். நீங்களும் அதைக் கேட்டீர்கள். அங்கே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை எனக்கு என்னுடைய அறையில் தேவன் வெளிப்படுத்த முடியும். அவர் அவ்வாறே செய்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அம்மனிதன் அங்கே எழும்பி நின்று, “ சகோ.பிரன்ஹாம் ஒரு கர்த்தருடைய ஊழியக்காரர். ஆவியானவர் அவர்மேல் இருக்கையில், அவர் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு தீர்க்கதரிசியாக இருக்கிறார். என்ன நடக்கிறது என்றும், என்ன நடக்கப் போகிறது என்றும், தேவன் அவருக்கு சொல்லுகிறபடியினால் அவர் நிச்சயமாக அதைப்பற்றி அறிந்திருக்கிறார். ஆனால் அவருடைய வேத சம்மந்தமான போதகமோவென்றால், அதற்கு நீங்கள் செவிகொடுக்க வேண்டாம்'' என்று கூறினார். 172. என்னே இது ஒரு குழப்பமான கருத்து! ஒரு மனிதன் எவ்வாறு அதை சொல்ல முடியும்? உடைக்கப்பட்ட “ பீன்ஸ்களுக்கும் காப்பிக் கொட்டைக்கும் உங்களுக்கு வித்தியாசனம் தெரியாமல் போனால்; இதைப் பற்றி நீங்கள் நன்றாக அறிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டதொரு காரியத்தை எவ்வாறு உங்களால் எண்ண முடிகிறது? தீர்க்கதரிசி என்ற சொல்லுக்கு, “ வார்த்தையின் தெய்வீக வெளிப்படுத்துதலைக் கூறுவோன்'' என்று பொருள். தீர்க்கதரிசிக்கு கர்த்தருடைய வார்த்தையானது வருகிறது. நானும் ஒரு போதும் என்னை அவ்வாறு அழைத்துக் கொள்ளவில்லை. அவர்களே அவ்வாறு என்னை தீர்க்கதரிசி என்று அழைத்தனர். ஆனால் அவர்களோ அவர் களுடைய கூற்றுக்கே முரண்படுகிறார்கள். பாருங்கள்? 173. எவ்வாறு ஒரு மனிதன்... அவர்களுடைய ஸ்தாபனமானது இதை ஒத்துக் கொள்ளாதபடியினால், ஒரு சிறு சபை போதகத்தை அவர்கள் விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதினால் பரிதாபமான மாய்மாலக்காரனே! ஏசாவைப் போல், உன்னுடைய சேஷ்டபுத்திர பாகத்தை ஒரு பானை கூழுக்காக விற்றுப் போடுகிறாய். அது உண்மை . ஒரு பானை கூழுக்காக. தேவன் வெறுக்கிற மதஸ்தாபனத்திற்காக, உங்களுடைய சேஷ்ட புத்திரபாகத்தை விற்றுப் போடுகிறீர்களே! நீங்கள் “ ஸ்தாபனம்'' என்று அழைப்பதை தேவன் வெறுக்கிறார். அக்காரியமே, சகோதரர்களை பிரிவினைக்குள்ளாக்கியது. இன்றிரவில், தேவனுடைய பந்தியில் ஐக்கியங்கொள்ள வாஞ்சிக்கும் அநேக மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், ப்ரெஸ்பிடேரியன்கள் இருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு செய்தால், அதைச் செய்ய ஆரம்பிக்கும் முதல் தடவையிலேயே அவர்கள் வெளியே தள்ளப்படுவார்கள். 174. “ அம்மா அதைச் சேர்ந்தவர்களாக இருந்தார்'' என்று கூறுகிறார்கள். அப்படியானால் அவர்கள் முதற்கண் பேரப்பிள்ளைகளாக ஆகிவிடுகின்றனர். அம்மா எதைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள் என்பதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. அவர்கள் தன் நாளில் உண்டாயிருந்த ஒளி முழுவதிலும் நிலைத்திருந்து ஜீவித்தார்கள், நீங்களோ வேறொரு நாளில் ஜீவிக்கிறீர்கள். 175. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு, விஞ்ஞானமானது ஒரு பந்தை பூமியைச் சுற்றி சுழலவிட்டு, ஒரு வாகனம் 30 மைல்களுக்கு மேல் உள்ள பயங்கர வேகத்தில் ஓடுமானால் அப் பொழுது, அது புவியின் ஈர்ப்பு சக்தியை விட்டு விடுபட்டு, விண் வெளியில் எடுத்துச் செல்லப்பட்டுவிடும்'', என்றுரைத்தது. இன்று விஞ்ஞானம் அக்கூற்றை நம்புகிறது என்று நினைக்கிறீர்களா? இப்பொழுது விண்வெளியில் மணிக்கு 1900 மைல்கள் வேகத்தில் பறக்க ஆரம்பித்துவிட்டார்கள். தாங்கள் என்ன சொன்னோம் என்று அவர்கள் பின்னால் திரும்பிப் பார்க்கிறதில்லை. எதிர்வரும் காலத் தில் என்னத்தை தாங்கள் காண முடியும் என்று முன்னோக்கிப் பார்ப்பதற்காக பின்னால் திரும்பி பார்த்துக் கொள்கிறார்கள். 176. ஆனால் சபையோ, எப்பொழுதும் பின்னால் பார்த்து, வெஸ்லி என்ன கூறினார் என்பதையும், மூடி என்ன கூறினார் என்பதையும், சாங்கி என்ன கூறினார் என்பதையும் காண விரும்புகிறார்கள். “ விசுவாசிக்கிறவனுக்கு யாவும் கைகூடும்'' முன்னோக்கிப் பாருங்கள். வேதத்தில் கூறப்படும் பின்னால் திரும்பிப் பார்க்கும் தன்மை கொண்ட ஒரே ஜந்து எது? எந்த ஜந்து எப் பொழுதும் பின்னால் திரும்பிப் பார்க்கும் தன்மை கொண்டது என்ற உங்களுக்குத் தெரியுமா? மிகவும் கீழான ஒரு ஜந்து அது. ஊர்வனவற்றில் மிகவும் கீழான தன்மை கொண்ட அந்த ஜந்து எது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? தவளைதான் அது. தவளை தான் மிகவும் கீழ்த்தரமான ஜந்து. மனிதன் தான் மேன்மையான ஜீவன். தவளை பின்னால் திரும்பிப் பார்க்கிறது. நான் அந்த கீழ்த்தரமான ஜந்துவை விரும்பவில்லை. நான் முன்னோக்கிப் பார்த்து, விசுவாசித்துக் கொண்டு, அவர் ஒளியிலிருக்கிறது போல, நானும் ஒளியில் நடந்துகொண்டு, அவர் காண்பிக்கும் ஒளியில் நடந்து வாழவே விரும்புகிறேன். ஆமென். 177. ஒரு தடவை கென்டக்கியில் நான் ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கையில், வயது முதிர்ந்த ஒரு மனிதன் அங்கே வந்தார். அவர் “ நான் அந்த சுகமளித்தலை விசுவாசிக்கவில்லை'' என்று கூறினார். “ நல்லது, அது சரி, நீங்கள் ஒரு அமெரிக்கர்'' என்றேன் நான். “ நான் எதையும் காணாமல் விசுவாசிக்க மாட்டேன்'' என்று கூறினார். “ அதெல்லாம் சரிதான்'' என்றேன் நான். 178. அதற்கு அவர், “ உங்களுக்கெதிராக எனக்கு ஒன்றுமில்லை. ஆனால் நீங்கள் கூறுவதை நான் விசுவாசிக்கவில்லை'' என்று கூறினார். 179.“ நீங்கள் அமெரிக்கர் என்பதனால் உமக்கு உண்டாயிருக்கும் சிலாக்கியம் அது. நீங்கள் விரும்பாவிடில் விசுவாசிக்கத் தேவை யில்லை'' என்று பதிலளித்தேன். 180. “ தெளிவாக ஒன்றை என் கண்களினால் காணாமல் நான் ஒருபோதும் எதையும் ஏற்றுக் கொள்வதில்லை'' என்று கூறினார். 181. “ நல்லது, அது நன்றாக இருக்கிறது, நீங்கள் மிஸ்ஸௌரியி லிருந்து வந்தவராக இருக்க வேண்டும்'' என்றேன் நான். 182. அவர், “ இல்லை, நான் கென்டக்கிக்காரன்'' என்றார். 183. “ உங்கள் பேச்சு கெண்டக்கியின் பேச்சு போல் தொனிக்கவில்லையே, எனினும் நீங்கள் அவ்வாறு கருதினால், அப்படியே செய்யுங்கள். நீங்கள் எப்படி வீட்டுக்குப் போகப் போகிறீர்கள்?'' என்று கேட்டேன்.) 184. “ நான் அந்த மலைக்கு அப்பால் போகப் போகிறேன், அங்கே தான் வாழ்கிறேன். நல்லது, என்னுடன் என் வீட்டிற்கு வாருங்கள், இரவில் என்னுடன் தங்குங்கள் சகோ.பிரன்ஹாம் அவர்களே'' என்று அந்த அருமையான மனிதர் கூறினார். 185. “ எனக்கும் விருப்பம் தான் சகோதரரே, ஆனால் நான் என்னுடைய மாமா வீட்டிற்கு இந்தப் பக்கம் போகப் போகிறேன், என்னுடைய வாகனத்தில் வருகிறீர்களா?'' என்று நான் கேட்டேன். 186. “ இல்லை, நான் இந்த மலைக்கப்பால் இந்தப் பக்கம் செல்ல வேண்டும், அங்கே ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து மறுபடியும் மலையேறி, செல்ல வேண்டும்'' என்றார் அவர். 187. “ நல்லது, எவ்வாறு அந்த இடத்திற்கு போகப் போகிறீர்கள்?'' என்று கேட்டேன். 188. அவர், “ அங்கே பாதை உண்டு, அதிலே நான் நடந்து செல்லவேண்டும்'' என்றார். 189. “ ஏன், இவ்விரவில், உங்களுக்கு முன்னால் உங்கள் பாதையைக்கூட பார்க்க முடியாதே, எப்படி அங்கே போகப் போகிறீர்கள்?'' என்று நான் கேட்டேன். 190. "என்னிடத்தில் ஒரு கைவிளக்கு உண்டு' என்றார் அவர். 191. நான் சரி அவ்விளக்கைக் கொளுத்தி அதை கொண்டு நடந்து செல்லப் போகிறீர்களா? என்ற கேட்டேன். 192. "ஆம் ஐயா'' என்றார் அவர். 193. நான் அவரிடம், “ நீங்கள் அவ்விளக்கை கொளுத்தி எரிய வைத்து, சற்று உயரத்தூக்கி இப்படிப் பிடிக்க முடியுமா? அவ்வொளியில் நான் உங்கள் வீட்டைக் காண விரும்புகிறேன்'' என்றேன். 194. “ உங்களால் அதைக் காணமுடியாது'' என்று பதிலளித்தார் அவர். 195. “ அப்படியென்றால், எவ்வாறு நீங்கள் அங்கே செல்லப் போகிறீர்கள்?'' என்று கேட்டேன். 196. அவர் கூறினார்; “ ஓ! நான் எனது கைவிளக்கை பற்ற வைப்பேன், நான் விளக்கின் ஒளியில் பாதையில் நடந்து செல்வேன்'' 197. “ அப்படித்தான் அது உள்ளது. ஆமென், ஒளியில் நடவுங்கள்'' என்றேன். 198. நடந்து கொண்டேயிருங்கள். நிலையாக நின்று விடாதீர்கள். அப்படிச் செய்தால் நீங்கள் போய்ச் சேரமுடியாது. நீங்கள் இரட்சிக்கப்பட்டிருந்தால், பரிசுத்தமாகுதலை நோக்கி நடந்து செல்லுங்கள். “ எப்படி அங்கே போக வேண்டும்?'' என்று கேட்கிறீர்கள். நடந்து கொண்டேயிருங்கள். “ பரிசுத்தமாகுதலுக்குப் பிறகு, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமா? அதை நான் எப்படிப் பெறுவேன்?'' ஒளியில் நடந்து கொண்டேயிருங்கள். “ அப்புறம், அடையாளங்களும், அற்புதங்கள், அதிசயங்களுமா?'' தொடர்ந்து ஒளியில் நடந்து கொண்டேயிருங்கள். பாருங்கள்? விடாமல் அதைச் செய்யுங்கள். நீங்கள் உங்கள் காலடியை முன்னே எடுத்து வைக்கும் ஒவ்வொரு தடவையும், ஒளியானது உங்களுக்கு சற்று முன்னே வழிகாட்டிக் கொண்டே முன் செல்லும், ஏனெனில், அவர் எப்பொழுதும் உங்களுக்கு முன்னே போகிறார். அவர் உங்களை பின்னால் இருந்துகொண்டு தள்ளிவிடுவதில்லை. அவர் உங்களை வழி நடத்திச் செல்லுகிறார். அவரே ஒளியாயிருக்கிறார். அதைக்குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் மகிழ்ச்சியடைய வில்லையா? அவரில் இருளேதும் இல்லை. 199. “ நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய்'' அக்கிரியை போதகமாக மாறியது. இப்பொழுது பவுல் என்ன சொல்லுகிறான் என்று... இப்பொழுது, யாருடைய சபை... இந்த சபையை நிறுவியது யார்? பவுல், எபேசு சபையை. 200. நாம் இப்பொழுது அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தில் 20ம் அதிகாரத்திற்கு ஒரு நிமிடம் போவோம். அங்கே பவுல் என்ன கூறுகிறான் என்று பார்ப்போம். பவுல் ஒரு தீர்க்கதரிசி என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக அவன் ஒரு தீர்க்கதரிசிதான். ஒரு இரவில், அந்த கொந்தளிக்கும் கடலில், பவுலுக்கு உண்டான தரிசனம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்பொழுது அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகம் 20 அதிகாரம் 27-ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். நாம் இவ்வசனத்தை வாசிக்கையில் மிகவும் கவனமாகக் கேளுங்கள். இப்பொழுது, இங்கே, இந்த பவுல் தீர்க்கதரிசியானபடியால், வரப்போகும் காரியத்தை முன்னுரைக்கிறான். “ தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே.” 201. ஆசீர்வதிக்கப்பட்ட அந்த மனிதன்! ஓ, அந்நாளில் நான் அங்கே நின்று, இரத்த சாட்சிகளுக்குரிய அந்த கிரீடமானது அவனது சிரசில் சூடப்படுவதை காண வேண்டுமென்று வாஞ்சிக்கிறேன். அங்கே அழுகை என்ற ஒன்று இருக்குமானால் நானும் அழுவேன். நான் அப்பொழுது பவுலைப் பார்த்து ஆர்ப்பரித்திடுவேன். பிரகாசமும், அழகுள்ளதுமான அங்கியணிந்து, மகத்தான அப்போஸ்தலனும், பரிசுத்தனுமாகிய பவுலைப் பாரீர், நாம் அங்கே செல்லுகையில், நிச்சயம் ஆர்ப்பரிப்பு உண்டென்று கருதுகிறேன். (நீங்கள் அப்படிச் செய்வீர்களா?) 202. இப்பொழுது, “ தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்கவில்லை.'' 203. அது சரியா? கிறிஸ்தவர்களே, இந்தப் பக்கம் பாருங்கள். நான் உங்களை ஒன்று கேட்கப் போகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அல்லாமல் வேறுவிதமாக ஞானஸ்நானம் பெற்ற வர்களை, மீண்டும் சரியானபடி ஞானஸ்நானம் பெறும்படி மக்களுக்கு கட்டளையிட்டது யார்? (சபையார், “ பவுல்'' எனறு பதில் அளிக்கின்றனர் - ஆசி). அவன் தேவனுடைய முழு ஆலோசனையையும் பிரசங்கித்தான். அப்படித்தானே? 1தெச லோனிக்கேயர் 1ம் அதிகாரம் 8ம் வசனம் என்று எண்ணுகிறேன், எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை, அங்கே பவுல் என்ன கூறுகிறான்? “ நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத் தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், வானத்திலிருந்து ஒரு தூதன் நாங்கள் பிரசங்கித்ததையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால்...'' “ இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் மீண்டும் எடுக்கும்படி மனிதருக்கு கட்டளையிடாமலும், பவுல் பிரசங்கித்த சுவிசேஷத்தை அல்லாமல் வேறு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தாலும்) அது வானத்திலிருந்து வருகிற தூதனாயிருந்தாலும் சரி'' (ஏன், அது ஒரு பிஷப்போ, கார்டினலோ, அல்லது ஒரு பொதுக் கண்காணிப்பாளரோ, அல்லது ஒரு போதகராயினும் சரி, அவர் எப்படிப்பட்டவராயினும் சரி, அக்கறையில்லை) வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது நாங்கள் பிரசங்கித்ததையல்லாமல், வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப் பட்டவனாயிருக்கக்கடவன்'' அது அப்படித்தான் இருக்கிறது. பவுல் கூறிய மேற்சொன்ன வசனம் கலாத்தியர் 1ம் அதிகாரம் 8ம் வசனத்தில் உள்ளது. இப்பொழுது அது என் நினைவுக்கு வருகிறது. நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால் அது கலாத்தியர் 1ம் அதிகாரம் 8ம் வசனமாகும். அங்கே பவுல் என்ன சொன்னான் என்பதைப் பாருங்கள். 204. அப்போஸ்தலர் 20:27ல் பவுல் இவ்வாறு கூறினான். “ தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்கவில்லை" 205. இப்பொழுது இவ்வசனத்தை கவனியுங்கள், இது ஒரு தீர்க்கதரிசனம். ஆகையால், உங்களைக் குறித்தும், தேவன் தம்முடைய சுய ரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங் குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள். அப்.20:28 206. யார் சம்பாதித்தது? யாருடைய இரத்தம் அது? அது தேவனுடைய இரத்தம் என்று வேதம் கூறுகிறது. தேவன் தம்முடைய சுய இரத்தத்தினால். அது சரிதானே? “ தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு " 207. நாம் தேவனுடைய இரத்தத்தினாலே இரட்சிக்கப்பட்டிருக் கிறோம் என்று வேதம் கூறுகிறது. அதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? நிச்சயமாக அப்படித்தான். தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்டார். “ நான் போன பின்பு, மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, (வரப்போகிற காலத்திற்குள் உற்று நோக்கி, சம்பவிக்கப் போகிற காரியத்தை அம்மனிதன் பார்க்க முடிந்தது என்பதை கவனியுங்கள்) சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார் களென்று அறிந்திருக்கிறேன்.” அப்.20:29-30 208. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி) அநேக ஆண்டுகள் கழித்து, ஒரு கூட்டம் மனிதர்கள் எழும்பி, ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்க விரும்பினார்கள். அவர்கள் பரிசுத்தமானதை அகற்றி, பரிசுத்த ஆவியை சபையைவிட்டு தள்ளிவிட்டு, பிஷப்புகள், போப்புகள், சாமியார்கள் இவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்து, அவர்கள் பரிசுத்தமானவர்கள் என்று அறிவித்து, சபையார் தங்கள் இஷ்டப்படியெல்லாம் வாழ்ந்து கொள்ளலாம் என அனுமதித் தார்கள். அவர்களை நரகத்தின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டி, சபைக்குருவானவர் அவர்களுக்காக வேண்டுதல் செய்ய அதற்குரிய கட்டணமான, குருக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும், இன்னும் பல அபத்தங்களை எல்லாம் உள்ளே கொண்டு வந்தார்கள். அதுவே நிக்கொலாய் மதஸ்தரின் போதகம், “ நான் அதை வெறுக்கிறேன்'' என்று தேவன் உரைத்தார். இப்பொழுது கவனியுங்கள். 209. “ தேவன் அதை வெறுப்பதாகக் கூறினாரா? நானும் அதைப் பார்க்கட்டும்'' என்கிறீர்கள். 210. இப்பொழுது அவர் அவ்வாறு சொன்னாரா இல்லையா என்று பார்ப்போம்: “ நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய். இது உன்னிடத்திலுண்டு.'' 211. தேவன் ஒரு மதஸ்தாபனத்தை வெறுக்கிறார். சரியா? அவர்கள் அங்கே என்ன செய்யவிருந்தார்கள் என்றும், என்ன செய்து விட்டார்கள் என்பதையும் அப்படியே காணலாம். தொடர்ந்து வந்த ஒவ்வொரு சபைக்காலத்திலும் அவர்கள் அதையே செய்தார்களா இல்லையா என்பதை கவனியுங்கள். தேவன் ஒரு மதஸ்தாபனத்தை வெறுக்கிறார். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன். வெளி.2:7 212. இப்பொழுது, பவுல், ஓநாய்கள் வரும் என்று எச்சரித்தான். அதுதான் நிக்கொலாய் மதஸ்தரின் போதகமாக ஆகியது. அவர்கள், பழைய ஏற்பாட்டிலுள்ள லேவிய முறைமையின் படியான குருத்துவ (ஆசாரியத்துவ) முறையை உண்டாக்க முயன்று கொண்டிருந்தார்கள். அம்முறையானது புதிய ஏற்பாட்டு உபதேசத்திற்கு முற்றிலும் அந்நிய காரியமானதாகும். ஆமென்! கிரேக்க மொழியில் “ நிக்கோ'' என்ற வார்த்தைக்கு, “ வென்று மேற்கொள்ளுதல்'' என்று பொருள். எதை மேற்கொள்ளுதல்? சபையை, பரிசுத்த ஆவியை மேற்கொள்ளுதல். உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவையும், விசுவாசிகள் மத்தியில் உண்டாயிருக்கும் அற்புத அடையாளங்களையும் சபையை விட்டு அகற்றி விட்டு, அதற்குப் பதிலாக, ஒரு மனிதனை போப், அல்லது மாம்சீக கார்டினல், அல்லது ஒரு கண்காணி ஆகிய பதவிகளுக்கு, தங்கள் வாக்குகளினால் தேர்ந்தெடுத்து, அவர்களை சபையின் மேல், பரிசுத்த மனித ஒழுங்கு என்ற மனித ஒழுங்கின்படி, அதிகாரிகளாக வைத்து விட்டார்கள். அதனால் பரிசுத்த ஆவியை சபையைவிட்டு நீக்கி விட்டார்கள். அவர்களை அவர்கள் “ மேய்ப்பர்கள்'' என்று அழைப்பதற்குப் பதிலாக, “ பிதாவே” (Fatherஃபாதர்). ஆனால் இயேசு, “ பூமியின் மேல் எந்த மனிதனையும் பிதா என்று அழைக்காதிருங்கள்'' என்று சொன்னார். அந்த தீமையான காரியத்தைப் பார்த்தீர்களா? நாம் என்ன செய்து விட்டோம்? 213. ஓ, நாம் முடிக்க முடிந்தால், இவ்வாறு இந்த இரவுகளிலெல்லாம், நாம் எல்லாவற்றையும் ஒரேயடியாக சேர்த்து வைத்துப் பார்க்காமல் இருப்பது நலமென்று எண்ணுகிறேன். நாளை இரவு வெளிப்படுத்தின விசேஷம் 12ம் அதிகாரத்தை படித்து, அதிலுள்ள அந்த பழைய மகாவேசி உட்கார்ந்திருக்கிறதை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். அவ்வாறு அவள் அழைக்கப்பட்டதற்குக் காரணம், அவள் தேவனுக்கெதிராக வேசித்தனம் செய்தாள், அவன் தன்னை விதவை என்று அழைத்துக் கொண்டாள். அவள் தானே வேசிகளுக்கெல்லாம் தாயானவள். அது சரிதானே? நாம் அது ரோமாபுரியை குறிக்கிறது என்று அறிவோம். வருந்தத்தக்க காரியம் என்னவெனில், அவள் வேசிகளுக்கெல்லாம் தாயானவள் என்பதுதான். இங்கே ரோமாபுரியில் அவள் ஆரம்பித்ததன் காரியம் இதுதான், அவர்கள் கிறிஸ்தவர்கள் என்றே தங்களை அழைத்துக் கொண்டார்கள். அப்படித்தான் துவங்கினார்கள். 214. கவனியுங்கள்! இதை மெய்ப்படுத்த, தேவன் எனக்கு உதவி செய்யட்டும். கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்ட ஒரு கூட்டம் மக்கள் ஒரு சபையில் இருந்துகொண்டு, அவர்கள் சடங்காச்சாரன ரீதியில் மாறினார்கள். அவர்கள் மாறுபாடானவர்களாக ஆகி, தங்களுக்கென ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டார்கள். இருண்ட காலத்தில், அவர்கள் சபையை அரசுடன் ஒன்றாக இணைத்துவிட்டனர். அரசும், சபையும் ஒன்றாக இணைந்த நிலையில் அது எவ்வாறு ஆகியது? கிறிஸ்தவ சபையாக இருக்க வேண்டியது, “ பரிசுத்த கத்தோலிக்க திருச்சபை'' என்று அழைக்கப்பட்டது. (கத்தோலிக்கம் என்றால், “ அகில உலக'' அல்லது சர்வவியாபகமான'' என்று பொருள்) "மகத்தான அகில உலக கிறிஸ்தவ சபை' அந்நிய பாஷைகளில் பேசுபவர்களையும், ஆர்ப்பரிக்கிறவர்களையும், பிணியாளிகளை சொஸ்தமாக்கு கிறவர்களையும், அவர்கள் "பதிதர்கள்' (வேதப்புரட்டர்கள்) என்று அழைத்தனர். இறுதியாக, யாராவது அந்த முறையில் தேவனைத் தொழுது கொள்ளுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களை பலாத்காரமாக மிரட்டி, கத்தோலிக்க மதத்தை தழுவிக் கொள்ள அவர்கள் வற்புறுத்தப்பட்டனர். அதற்கு இணங்க மறுத்தால் அவர்கள் சிங்கக்கெபியில் தூக்கியெறிப்பட்டனர். சபைக்குண்டான உபத்திரவ காலத்தின் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் உபத்திரவம் தொடர்ந்தது. ஆனால் சபையோ மரிக்கவேயில்லை. அதை நீங்கள் கொல்ல முடியாது. அது இறுதி வரை ஜீவிக்கும், முடிவில் அதற்கு ஜீவக்கிரீடம் கொடுப்பதாக தேவன் கூறியுள்ளார். அது அந்த உபத்திரவங்களின் காலங்களின் வழியாக வந்தது. 215. அதன்பிறகு மார்ட்டின் லூத்தர் வந்து சபையின் காலத்தை தொடரச் செய்து, நீதிமானாகுதல் என்பதன் கீழ் சபையைத் திருப்பினார். லூத்தர் இறந்த பிறகு என்ன நேரிட்டது? லூத்தரன் சபையை அவர்கள் ஸ்தாபிதம் செய்த பொழுது, என்ன செய்தார்கள்? தங்கள் பிறப்புரிமையை அல்லது சேஷ்ட புத்திர பாகத்தை ரோமானியக் கொள்கையிடம் மீண்டும் விட்டுக் கொடுத்தனர். அது முற்றிலும் உண்மை. 216. அப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் அதைவிட்டு வெளியேறினார், வெஸ்லி அதைக் கண்ணுற்றார். ஜார்ஜ் விட்ஃபீல்ட், ஆஸ்பரி மற்றும் இவர்களைப்போல் இன்னும் அநேகர் மகத்தான எழுப்புதல் பிரசங்கிகளாக இருந்தார்கள். அந்நாளில் இவர்கள் உலகம் இரட்சிப்படைய காரணமாயிருந்தார்கள். அந்த பிலதெல்பியா சபையின் காலத்தில் அவர்களுக்கு ஒரு எழுப்புதல் உண்டாயிற்று. இங்கிலாந்தும் அமெரிக்காவும் இரட்சிப்பைக் கண்டடைய அவ்வெழுப்புதல் காரணமாயிற்று. அவர்கள் கூட்டங்களில், புறம்பே தள்ளப்பட்டு, “ உருளும் பரிசுத்தர்'' என்று அழைக்கப்பட்டனர். மெதோடிஸ்டுகளே, நீங்கள் அதைச் செய்திருக்கிறீர்கள். அக்காலத்திய மெதோடிஸ்டுகள் மேல் தேவனுடைய வல்லமை இறங்கி, அவர்கள் தரையில் வீழ்ந்த போது, அவர்கள் மேல் தண்ணீர் தெளித்து, அவர்களுக்கு விசிறி விட்டிருக்கின்றனர். தேவனுடைய வல்லமையின் கீழ் அவர்கள் இருந்தபோது அவர்கள் மிகவும் துள்ளிக்குதித்தனர். அவர்களிடம் துள்ளிக்குதித்தல்கள் உண்டாயிருந்தன. பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அசைக்கப்பட்ட பொழுது, அந்நாட்களில் அவர்கள் இவ்வாறு துள்ளி சாடியிருக்கின்றனர். இப்படியாக இருக்கிறது. மெதோடிஸ்டுகளின் வரலாறு. அதிலிருந்து க்வேக்கர்ஸ் வந்தனர். 217. ஆனால் இப்பொழுது அவர்கள் ஒரு மதஸ்தாபனமாக ஆகிவிட்டனர். அவர்கள் இந்த மெதோடிஸ்டு, ப்ரிமிடிவ் மெதோடிஸ்டு, அந்த மெதோடிஸ்டு, இந்த மெதோடிஸ்டு என்றெல்லாம் ஏற்படுத்திக் கொண்டு, இறுதியில் இப்பொழுது மெதோடிஸ்டுகள் தங்களுடைய பாடல் புத்தகங்களிலிருந்து, “ இரத்தம்'' என்ற வார்த்தையையே அகற்றிவிட விரும்புகிற அளவுக்கு வந்துவிட்டார்கள். 218. அன்றொரு நாள் இரவில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண என் தாயார் என்னைக் கூப்பிட்டார்கள். அதில் தோன்றிய இண்டியானாவிலுள்ள மெதோடிஸ்டு போதகர் ஒருவர், சபையில் ராக் அண்டு ரோல் நடனத்தை கற்பித்துக் கொடுக்கிறாராம். அவர் அந்த நிகழ்ச்சியில் “ சபைக்குள் இருக்க வேண்டிய இந்த கலையை நாம் காணத் தவறிவிட்டோம்'' என்று கூறினார். 219. ஒரு கள்ளத் தீர்க்கதரிசிக்குள் இருக்கும் பிசாசு அது! ஆம் அப்படித்தான்! நான் இவ்வாறு சொல்வதின் மூலம் உங்களுடைய உணர்வுகளை புண்படுத்த விரும்பவில்லை. ஆனால் நான் கூறுவது தேவனுடைய சத்தியமாயிருக்கிறது. இவ்வாறு கூறுவதினால் நான் ஒருவேளை உங்களை கோபமடையச் செய்தாலும், உங்களை வேத வாக்கியங்களை படிக்கச் செய்து, தேவனோடு உங்களை சரி பண்ணிக் கொள்ளும்படி செய்வேனேயல்லாமல், இதை உங்களுக்குக் கூறாமலிருப்பதினால், நீங்கள் முடிவில் கைவிடப்பட்டிருக்க நான் விரும்ப மாட்டேன். இப்பொழுது நீங்கள் என்னை விரும்பாம லிருக்கக் கூடும். ஆனால் ஒரு நாளில், நீங்கள் என் தோளில் உங்கள் கையைப்போட்டு, “ சகோ. பிரன்ஹாமே, அது சத்தியமாயிருக்கிறது'' என்று கூறுவீர்கள். இங்கே இப்பொழுதே, அவர்கள் அதற்குள் போய்க் கொண்டிருக்கிறார்கள். அது அங்கேதான் இருக்கிறது. வேதம் அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று கூறியிருக்கிறது. 220. வெஸ்லிக்கு பிறகு; வெஸ்லி அதைச் செய்தாரென்றால், அதற்குப் பிறகு பெந்தெகொஸ்தேயினர் வந்தார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம், அதினால் வரங்கள், அந்நிய பாஷைகளில் பேசுதல் போன்றவற்றை திரும்பக் கிடைக்கப் பெற்றார்கள். 221. எவ்விதமாக தானிய விதையானது நிலத்திலிருந்து முளைத் தெழும்பி வருகிறதோ, அது போல, முதலாவதாக அவ்விதை பூமியில் விதைக்கப்பட்டதும், அழுகுகிறது. அதன்பிறகு இரண்டு முளைகள் வருகின்றன. நீங்கள் ஒரு தானிய வயலுக்குச் சென்று பாருங்கள். அந்த முளையானது வளர்ந்து பயிரில் பட்டுக் குஞ்சம் போன்ற அமைப்பு உண்டாகிறது. இது முதலில், லூத்தரனாக இருந்தது. மணிக்குஞ்சம், இது என்ன? அதில் மகரந்தம் உள்ளது. சகோதர சிநேகத்தைப் பற்றிக் கூறுகிறது. அதுதான் மெதோ டிஸ்டுகள். இக்காலத்தில் சுவிசேஷ ஊழியம் பலமாய் நடந்தது. அதாவது குஞ்சத்தில் இருக்கும் மகரந்தபொடி தேன் சேகரிக்க வரும் வண்டுகளின் கால்களில் ஒட்டிக்கொண்டு, அவைகள் பின்பு இன்னொரு பூவில் போய் உட்காரும்போது மகரந்தச் சேர்க்கை உண்டாகி அதினால் தானியம் உருவாகக் காரணமாகிறதோ, அதுபோல் அக்காலம் இருந்தது. சகோதர சிநேகம் மகரந்தத்தைப் போல் மற்றவர்களுக்குள் செல்கிறது. 222. இயற்கையே இந்தச் சபைக் காலங்களைப் பற்றிக் கூறுகிறது. லூத்தரின் காலத்தின் குழப்பமான நிலையிலிருந்து மெதோடிஸ்டு காலம் வெளிவருகிறது. வந்து, சகோதர நேசத்தாலே, சுவிசேஷமய காலத்திற்குள் பிரவேசிக்கிறது. மிஷனரி ஊழியத்தின் காலம் அது. மெதோடிஸ்டுகளின் காலம்தான் உலகம் இது வரை அறிந் திராத மகத்தான மிஷனரி ஊழியத்தின் காலத்தை அளித்தது. அது தன் மகரந்தப்பொடியை எங்கும் தெளித்தது. 223. அதிலிருந்து என்ன புறப்பட்டு வந்தது? பயிரின் குஞ்சத்திலிருந்து தானியத்தின் கதிரானது வந்தது. அதுதான் பெந்தெ கொஸ்தேயினர். பூமியில் விதைக்கப்பட்ட தானியத்தைப் போலவே மேலே வருவதும் இருக்கிறது. இலையல்ல, குஞ்சம் அல்ல, ஆனால் ஒரு தானிய மணி. பெந்தெகொஸ்தேயினர் தற்போது, அந்த தானிய மணியின் மேல் பூஞ்சாணம் பிடித்துப் போனதாக ஆக்கிவிட்டார்கள். அதினால் அந்த மணியையே பார்க்க இயலாதபடி ஆகிவிட்டது. இப்போது, அதை சுத்தம் பண்ண வேண்டிய வேளையாக இருக்கிறது. ஆமென்! பெந்தெ கொஸ்தேயினர் என்ன செய்தார்கள்? மெதோடிஸ்டுகளைப் போலவே இவர்களும் செய்தனர். ஸ்தாபனம் ஏற்படுத்திக் கொண்டு ஒரு சாரார் தங்களை நாங்கள் “ அசெம்பிளீஸ் ஆஃப் காட்'' என்று அழைத்துக் கொண்டனர். இன்னொரு கூட்டத்தினர் “ நாங்கள் பெந்தெகொஸ்தே பரிசுத்தம்'' என்று அழைத்துக் கொண்டனர். பிறிதொரு கூட்டத்தினர் “ நாங்கள் ஒருத்துவக் கூட்டத்தினர்'' என்றனர். “ நாங்கள் இருத்துவ கூட்டத்தினர்'' என்றனர். ஏனையோர் இப்படியாக அவர்களில் அநேக பிரிவினர் தோன்றி விட்டனர். ஒன்று ஒரு திமில் ஒட்டகம், இன்னொன்று இருதிமில்கள் உள்ள ஒட்டகம், மற்றது மூன்று திமில்கள் உள்ள ஒட்டகம், இப்படியாக பல்வேறு கூறாக உள்ளனர். இப்படிப்பட்ட வெவ்வேறு வகையான ஸ்தாபனங்கள் அறுபது அல்லது முப்பது அல்லது நாற்பதுக்கு மேல் உள்ளனர் 224. அவர்கள் என்ன செய்தனர்? மறுபடியும் ரோமானியக் கொள்கைக்குள் போய், ரோமன் கத்தோலிக்க ஞானஸ்நானத்தை கொடுத்தனர். வேதத்தில் எவராவது “ பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” யின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டனரா என்பதை எனக்கு காண்பிக்கும்படி பெந்தெகொஸ்தேயினரை நான் கேட்கிறேன். கத்தோலிக்க சபையைத் தவிர அதற்கு வெளியில் அதற்கு முன்பு, வேறு எவராவது எப்பொழுதாவது இவ்வாறு ஞானஸ்நானம் கொடுத்தனர் என்பதை எனக்கு எந்த பிஷப்பாவது, கார்டினலாவது, எந்தப் போதகராவது காண்பிக் கட்டும் என்று நான் கேட்கிறேன். லூத்தர் கத்தோலிக்க மதத்தை விட்டு வெளியேறும் பொழுது, தன்னுடன் அந்த ஞானஸ் நானத்தையும், (Catechism) மற்றும் கத்தோலிக்க மதத்தின் ஞான உபதேசம் மற்றும் ஏனைய காரியங்களையும் கொண்டு வந்தார். அதன்பின்பு வந்த மெதோடிஸ்டுகள் அதில் தொடர்ந்து நீடித்தனர். பெந்தெகொஸ்தேயினரே, நீங்கள் வெட்கமடைய வேண்டும்! உங்களைச் சுத்தப்படுத்துங்கள். தேவ வார்த்தைக்கு திரும்பிச் செல்லுங்கள்! மனந்திரும்புங்கள், இல்லாவிடில் தேவன் உங்கள் நடுவிலிருந்து விளக்குத்தண்ணடை அகற்றிவிடுவார். உங்கள் நடுவில் நீங்கள் பெற்றிருக்கும் ஒளியும் அகன்றுவிடும். ஆமென்! சரி. 225. சபைக்கு தலைவராயிருந்த பரிசுத்த ஆவியை அவர்கள் அகற்றிவிட்டு, மனிதனுடைய ஒழுங்காகிய பரிசுத்த ஒழுங்கு என்னப்பட்டதை கொண்டு வந்து அதை சபையின் மேல் வைத்தனர். ஊழியக்காரர்கள் பாஸ்டர்கள், என்றழைக்கப்பட வேண்டும். பாஸ்டர்கள் என்றால் மேய்ப்பர்கள் என்று அர்த்தமாம். ஆனால் அவர்கள் பாஸ்டர்கள் அல்லது மேய்ப்பர்கள் என்றழைக்கப்படாமல் ஃபாதர் (பிதா), கார்டினல், ஆர்ச்பிஷப், ஜெனரல் ஓவர்சீர் (பொது கண்காணி) என்றெல்லாம் அழைக் கப்படலாயினர். இதையெல்லாம் உண்மையானவர்கள் வெறுத்தனர். அவர்கள் இவ்விதமான கிரியைகளை வெறுப்பதைக் குறித்து தன்னுடைய அங்கீகாரத்தை தெரியப்படுத்தும்படி தேவன், “ நானும் இதை வெறுக்கிறேன்'' என்றார். ஏனெனில், சபைக்கு ஜெனரல் ஓவர்சீர். ஆர்ச் பிஷப், போப் ஆகியவற்றை தேவன் தாமே வகிக்கிறதாக இருக்க வேண்டும். அவர் தனிப்பட்ட நபரோடு கிரியை செய்து இடைபடுகிறார். ஒரு ஸ்தாபனத்துடன் அல்ல, ஒரு தனி நபரிடம் தான் தேவன் கிரியை செய்கிறார். 226. இப்பொழுது விசித்திரமான ஒரு காரியம்... முடிக்கப் போகிறோம், கவனியுங்கள். நமக்கு இன்னும் ஒரு வசனம் உள்ளது. 227. இங்கே தான் கத்தோலிக்க சமயத்தின் கோட்பாடு ஆரம்பமாகிறது. அதாவது, அப்போஸ்தலப் பட்டத்திற்கு வம்சா வழியில் வாரிசு முறை. எத்தனை பேர்கள், அதை அறிவீர்கள்? அப்போஸ்தல உத்தியோகத்திற்கு வம்சவழியில் வாரிசாக ஏற்படுதல். கத்தோலிக்க சமயத்தவர், “ இன்றைக்கு இருக்கும் போப் அப்போஸ்தலனாகிய பேதுருவின் வாரிசு'' என்கின்றனர். அப்போஸ்தல உத்தியோகத்திற்கு வம்சாவழியாக வாரிசாக வந்திருக்கிறவர் என்கின்றனர். அப்படியொரு காரியம் கிடையவே கிடையாது. எவ்வாறு உங்களுடைய மாம்சீக, பால் உணர்வினால்.... பரிசுத்தமான ஒரே தாய், தந்தைக்குப் பிறந்த இரட்டையர்கள் ஏசாவும், யாக்கோபும் ஆவார்கள். ஆனால் அவர்களில் இளையவன் கிறிஸ்தவனாகவும், மூத்தவன் பிசாசாகவும் இருந்தானே? பார்த்தீர்களா? அது எப்படி முடியும்? ஏனெனில் பாவம் பாவம் தான், பாலுணர்வு பாலுணர்வுதான். ஆனால் தேவனோ புதிய பிறப்பைக் கொடுக்கிறார். 228. தேவன் நம்மை உலகத்தோற்றத்திற்கு முன்னரே தெரிந்தெடுத்தார். அதை நீங்கள் அறிவீர்களா? வரலாற்றாளர்கள் எழுதியுள்ளதை நாம் வாசிக்கும் வரைக்கும் காத்திருங்கள். ஐரேனியஸ் எவ்வாறு உலகத் தோற்றத்திற்கு முன் தேவன் அவரை தெரிந்து கொண்டதற்காக எவ்வாறு தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார். பரி. மார்டினும் மற்றவர்களும் அதற்காக எவ்வாறு அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள் என்று. அவர், “ ஏனென்றால் ...'' என்றார். மக்கள் அவரைக் குறித்து பேசுகையில், “ அவர் உலகத் தோற்றத்திற்கு முன்பே தெரிந்து கொள்ளப்பட்டார்'' என்றனர். அது வேத பூர்வமானது. அச்சகோதரர்கள் தேவனோடு ஓரணியில் நின்றிருந்தனர். 1500 ஆண்டுக்கால இருண்ட யுகத்தின் வழியாக வந்த இந்த சபையானது, விளக்கில் கரும்புகை பிடித்தல் எவ்வாறு விளக்கொளியை மறைக்குமோ, அதுபோல ஒளியை மறைத்த நிலையில் இருக்கிறது. ஆனால், “ சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும்'' என்று கர்த்தர் கூறினார். 229. வம்ச பரம்பரையாக அப்போஸ்தலப் பட்டத்திற்கு வாரிசு உருவாகுதல், ஒருவன் பின் ஒருவராக வருகிறார்கள். ஒருவர் போப்பாக ஆக வேண்டுமென்றால் போப்புகளின் வம்சாவழியில் நீங்கள் வந்தவராக இருக்க வேண்டும். ஓ, என்னே, என்னே! அது அபத்தம். சபையின் ஜனங்கள், தங்கள் பாவத்தை விட்டு வெளியே வரவும், அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படவும், சாமியாரிடம் பாவ அறிக்கை செய்யவும், அதற்காக சபையின் குருவானவர் ஜெபிக்க வேண்டுமானால் அவருக்கு பணம் கட்ட வேண்டும். 230. ப்ராடெஸ்டெண்டுகளும் அதேபோல செய்கின்றனர். தங்கள் மேய்ப்பரை முதுகில் தட்டிக் கொடுத்து, உலகத்தாரைப் போல் ஜீவிக்கிறார்கள். மேய்ப்பர் எப்படி தேவனை அறிந்திருக்கவில்லையோ, அதே போல் சபையாரும் தேவனை அறிந்திருக்கவில்லை. இந்த விதமான நிலையில், அந்த மேய்ப்பனுடைய சபையில் தங்கியிருக்க அனுமதித்து, அவர்களை சபையின் அங்கத்தினர்கள் என்று அவர் அழைக்கிறார்; அவர்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அவர் அவர்களுக்கு அறிவித்துவிடுகிறார். அவர்கள் மறுபடியும் பிறவாதபடியினால், அந்த நாளில் எந்த அளவுக்கு ஏமாறப்போகிறார்கள்! பரிசுத்த ஆவியைப் பெறாமல் இருந்தால் நீங்கள் இழக்கப்படுவீர்கள். பரிசுத்த ஆவியினாலேயல்லாமல் ஒருவனும் “ இயேசுவே கிறிஸ்து'' என்று கூறமுடியாது. 231. எபேசு சபைக்காலத்தில் இருந்த உண்மையான சபையானது, இப்படிப்பட்ட நளினமான, புத்திசாலித்தனமான நயவஞ்சகப் பேச்சுகளினால் ஏமாறவில்லை, வஞ்சிக்கப்படவில்லை. அதை அவர்கள் வெறுத்தனர். அவர்கள் வஞ்சிக்கப்படவில்லை. உண்மையான சபை வஞ்சிக்கப்பட முடியாது என்று அவர்கள் அறிந்திருந்தனர். 232. இந்த நபர்கள் கொண்டிருந்த கள்ள வெளிப்படுத்துதல் தான் நிக்கொலாய் மதஸ்தரின் போதகமாயிருந்தது. அது தேவனுடைய வார்த்தைக்கு முரண்பட்டதாயிருந்தது. "பாவ சங்கீர்த்தனம் கேட்கும் குருவானவர்' என்றொரு காரியம் போதிக்கப்பட்டுள்ளது என்பதை வேதத்தில் எங்கு கண்டீர்கள் என்பதை எனக்குச் சொல்லுங்கள் பார்க்கலாம். பாவமன்னிப்புக்காக “ தெளித்தல்'' என்றொரு போதகம் வேதத்தில் நீங்கள் எங்கே வாசிக்கிறீர்கள் என்பதை எனக்குச் சொல்லுங்கள்? யாராவது, தங்களது பாவ மன்னிப்புக்கென, "பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்களா என்பதை வேதத்திலிருந்து எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம் “ ஐக்கியத்தின் வலது கரத்தைக் கொடுத்து, பெயரை சபையின் புத்தகத்தில் பதிந்து விட்டால் எல்லாம் முடிந்தது'' என்ற போதகம் வேதத்தில் எங்கே பார்த்தீர்கள்? அது என்ன? தேவ வார்த்தையோடு சரியாக இல்லாத நிக்கொலாய் மதஸ்தராகிய குருத்துவம் தான் அது. “ நான் அவைகளை வெறுக்கிறேன்'' என்று தேவன் கூறினார். தேவ வார்த்தைக்கு திரும்பி வாருங்கள்! இது மிகவும் கடினமாக இருக்கிறது என்று நான் அறிவேன். நான் அதற்கு பொறுப்பல்ல, வாக்குவாதம் செய்வதாயிருந்தால் தேவனிடத்தில் அதைச் செய்யுங்கள். 233. வார்த்தைக்கு முரணாக உள்ள கள்ள வெளிப்படுத்துதல்கள், அவர்களை தேவன் “ பொய்யர், கள்ள அப்போஸ்தலர்கள் கள்ளத் தீர்க்கதரிசிகள்'' என்றே அழைக்கிறார். ஆனால், உண்மையான சபையோ, பரிசுத்த பவுலுடைய மூல உபதேசத்தையும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தையும், பவுல் போதித்த தேவனுடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படி தொடர்ந்து வரும் அற்புத அடையாளங்களையும் விடாமல் பற்றிக் கொண்டவர் களாயிருந்தனர். ஆமென்! தெளித்தல் என்ற வார்த்தையை தேவன் எங்காவது உறுதிப்படுத்தியுள்ளாரா என்பதை எனக்கு காட்டுங்கள் பார்க்கலாம். வெறுமனே கைகளை குலுக்கிக் கொள்வதையும், சபையின் பதிவேட்டில் தன் பெயரை பதிந்து கொள்வதையும், தேவன் எங்காவது உறுதிப்படுத்தி, அந்நிய பாஷைகளில் பேசுதலையும் மற்றும் மகத்தான காரியங்களையும் செய்திருக்கிறாரா என்பதை எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். வெறுமனே கைகுலுக்கிக் கொண்டு, சபையின் புத்தகத்தில் பெயரை பதிவு செய்து கொண்டு, இருந்தால் அதுவே போதும் என்றெண்ணி, இன்னமும், வெற்றிலை பாக்கு புகையிலைமென்று கொண்டு, புகைத்து கொண்டும், மது அருந்திக் கொண்டும், பொய்களை ஊதிக்கொண்டும், சீட்டாடிக் கொண்டும், கொஞ்சம் களியாட்டும் உடையவர்களாக இருக்கிறார்கள். ஓ, இரக்கம் வேண்டுமே! அது மாம்சீகமானது, நண்பரே, இது கள்ளத் தீர்க்கதரிசிகளின் காரியம். ஆம், ஐயா! 234. தேவனுடைய வழி பரிசுத்தமானது. இங்கிருக்கிற கிறிஸ்துவின் சரீரத்தின் உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் இவ்விஷயம் தெரிந்திருக்கட்டும்! நீங்கள் ஒரு பரிசுத்த ஜீவியத்தைச் செய்கிற வரைக்கிலும், தேவன் உங்கள் பலியை ஏற்றுக் கொள்கிறதில்லை. பலியானது, பரிசுத்தமான கரங்களினால் படைக்கப்படவேண்டும். அது உண்மை . பிரதான ஆசாரியனானவன், தேவ சமுகத்தில் பலி செலுத்துவதற்கு முன்னால், அதற்காக அங்கு அவன் நடந்து உள்ளே வருவதற்கு முன்பே, பரிசுத்தமாக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப் பட்டு, அபிஷேகிக்கப்பட்டு, பரிமள தைலம் பூசப்பட்டு இருக்க வேண்டும். காரியமானது, அப்படித்தானே உள்ளது? அப்படியெல்லாம் இல்லாமல், உங்கள் அயலகத்தாரோடு சண்டையிட்டுக் கொண்டும், ஏமாற்றி, திருடிக்கொண்டும், வாக்குவாதம் செய்து கொண்டும் இருந்துவிட்டு, இங்கே உள்ளே வந்து, 'ஓ தேவனாகிய கர்த்தாவே! இயேசுவுக்கு துதி! அல்லேலூயா!'' என்றெல்லாம் எவ்வாறு கூறமுடியும். 235. “ அவர்களில் அந்நிய பாஷைகளில் பேசுவதை நான் பார்த்திருக்கிறேன்'' என்று மக்கள் கூறுகிறார்கள். அதினால் அவர்கள் பரிசுத்த ஆவியினைப் பெற்றிருக்கிறார்கள் என்றாகிவிடாது. “ அவர்கள் சப்தமிடுவதை நான் கேட்கிறேன்'' என்று சொல்லலாம். அதுவும்கூட அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதற்கு அடையாளமாக இருக்காது. பரிசுத்த ஆவி என்பது ஜீவனாகும். 236. எபிரெயர் 6ம் அதிகாரத்தில் வேதம் இவ்வாறு கூறுகிறது; “ தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலம்... ஆனால் முட்செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ... சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு'' 237. “ சூரியனானது நல்லோர் மேலும், தீயோர் மேலும் உதிக் கிறது. மழையானது நீதியுள்ளவர்கள் மேலும், அநீதியுள்ளவர்கள் மேலும் பொழிகிறது''. மழையானது கோதுமைப் பயிரை (அப்படி நாம் வைத்துக் கொள்வோம்) முளைக்கச் செய்ய வருகிறது. நிலத்திலுள்ள ஒவ்வொரு களைக்கும் கூட அம்மழை வருகிறது. கோதுமைப் பயிர் தாகமாயிருக்கிறது. அதே போல களையும் தாகமாயிருக்கிறது. கோதுமைக்கு நீர் பாய்ச்சுகிற அதே மழைதான் களைக்கும் நீர் பாய்ச்சுகிறது. அந்த சிறிய கோதுமை பயிரானது, தன் தலையை உயர்த்தி, “ கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா! இந்த மழை கிடைத்ததற்காக நான் மகிழ்கிறேன்!'' என்று சொல்லுகிறது. பக்கத்தில் இருக்கும் களையுங்கூட, “ தேவனுக்கு மகிமை! தேவனுக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா! மழை கிடைத்ததற்காக நான் மகிழ்கிறேன்'' என்று கூறுகிறது. 238. ஆனால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை நீங்கள் அறியலாம் அது சரி. அவர்களுடைய கனிகளினாலே நீங்கள் அவர்களை அறியலாம். 239. 7ம் வசனம் - அதோடு முடித்துக் கொள்வோம். இது தான் இச்சபைக் காலத்தின் முடிவுப் பாகம். இன்னும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் தான். “ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன் என்றெழுது." வெளி.2:7 240. ஜெயங்கொள்ளுகிறதற்கு உங்களுக்குள்ள வழி இதுவே என்பதைப் பாருங்கள், நண்பர்களே. முதலில் நீங்கள் ஜெயங்கொள்ள வேண்டும். அதன்பிறகு தான் நீங்கள் கனியைப் புசிக்க முடியும். ஜெயங்கொள்ளுகிறவனுக்கு கனி புசிக்கக் கொடுக்கப்படுகிறது. கடந்த இரவில் உண்டாயிருந்த நம்முடைய உபதேசத்தை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா? யோவான் எந்த ஒன்றையும் காணும் முன்னர், அவன் முதலில் ஆவிக்குள்ளாக வேண்டியதாயிருந்தது. அவர் ஒரு பாப்டிஸ்ட் அல்லவென்றால், நான் அவர் பிரசங்கத்தைக் கேட்கமாட்டேன்'' என்றும், “ நீங்கள் என் சபை போதிக்கிறதற்கேற்ப போதிக்காவிடில் உங்கள் பிரசங்கத்தை நான் கேட்கமாட்டேன்'' என்றெல்லாம் நீங்கள் சொல்லுகிறீர்களே, அது எப்படி? நீங்கள் ஜெயங்கொள்ளப் போகிறதில்லை. நீங்கள் இன்னும் ஆவிக்குள்ளாகவில்லை. நீங்கள் யாவரும் ஒழுங்கற்றுக் காணப்படுகிறீர்கள். 241. தேவனுடைய ஆவிக்குள்ளாகி, “ கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன். நீர் சரியென்று காண்கிற எதையும் எனக்கு வெளிப்படுத்தி அதை என்னிடம் கொண்டு வாரும்'' என்று அவரிடம் கூறுங்கள். அப்பொழுது நீங்கள் சரியான வழியில் வந்துவிடுவீர்கள். 242. வேதாகமத்தில் ஆதியாகமத்தில் மூன்று இடங்களிலும், வெளிப்படுத்தின விசேஷத்தில் மூன்று இடங்களிலும் ஜீவ விருட்சத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைக்கு அதைக் குறித்து நாம் பார்த்தோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஞாயிற்றுக்கிழமை... நேற்று பார்த்தோம். பிசாசானவன் வேத வாக்கியங்கள் யாவையுமே வெறுக்கிறான். ஆதியாகமம் மிகவும் நம்பத்தகுந்ததால், அவன் அதை எதிர்க்கிறான். அதில் கூறப்பட்டுள்ளவைகள் உண்மையல்ல என்று மக்கள் நம்பும்படி செய்ய அவன் விரும்புகிறான். “ ஆதியாகமத்தில், ஆதியில் அவர்களுக்கு என்ன நேரிட்டது என்று தேவன் கூறினாரோ அதன்படி காரியம் நடக்கவில்லை, சிருஷ்டிப்புக்கு காரணம் தேவனொன்று தான்'' என்று அவன் கூறுகிறான். அந்த விதமாக அவன் அப்புத்தகத்தை எதிர்த்து தாக்குகிறான். வெளிப்படுத்தின விசேஷத்தை விட்டு மக்களை சாத்தான் விலகிப் போகச் செய்கிறான், ஏனெனில் அப்புத்தகம், இயேசுவே தேவன் என்றும், சாத்தான் தான் அந்த பிசாசு, அவன் நாசமடைகிறான் என்றும், தேவனுடைய வாசஸ்தலத்திற்கு போகப்போகும் பரிசுத்தமாக்கப் பட்ட சபையின் மகிமையைப் பற்றியும், கள்ளத் தீர்க்கதரிசிக்கு ஏற்படப் போகும் முடிவைப் பற்றியும், மற்றும் பொய்யையும், தீங்கானவைகளையும் நடப்பிக்கிற அனைவரும் அக்கினிக்கடலில் தள்ளப்படப் போகிறதைப் பற்றியும் வெளிப்படுத்துகிறது. அவர்களை இப்புத்தகத்தைவிட்டு பிசாசானவன் விலக்கியே வைத்திருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. இவ்விரு புத்தகங்களும் பரதீசியிலுள்ள ஜீவவிருட்சத்தைக் குறிப்பிடு கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். 243. இப்பொழுது, “ மரம்'' என்பதைப் பற்றி ஒரு நிமிடம் பார்ப்போம். யோவான் எழுதிய சுவிசேஷம் 6ம் அதிகாரம் - வேண்டுமானால் குறித்துக் கொள்ளுங்கள். இயேசு, “ நானே ஜீவ அப்பம்'' என்று கூறினார். இப்பொழுது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 244. இதோ இங்குள்ள இவ்விரு கம்பங்களையும் நமது பாடத்திற்கு அடையாளக் குறிப்பாகப் பயன்படுத்திக் கொள்வோம். எனவே, இப்பொழுது முடிக்கும் முன்னர், இங்கே எனது வலது பக்கத்தில் உள்ளது தோட்டத்தில் இருந்த “ ஜீவ விருட்சம்'' என்ற மரமாகும். எனது இடது பக்கத்தில் உள்ள மரம், தோட்டத்தில் இருந்த “ அறிவின் விருட்சம்'' என்ற மரமாகும். அங்கே “ ஜீவ விருட்சம்'' என்று ஒரு மரமும், “ அறிவின் விருட்சம்'' என்று ஒரு மரமும் இருந்ததாக வேதம் கூறுவதை எத்தனை பேர்கள் அறிவீர்கள்? மனிதனானவன், இந்த ஜீவ விருட்சத்தைக் கொண்டு தான் பிழைக்க வேண்டும் என்று இருந்தது; அவன் அறிவின் விருட்சத்தை தொடக்கூட வேண்டாம் என்று சொல்லப்பட்டிருந் தான். அது சரிதானே? அறிவின் விருட்சத்தை முதன் முதலாக தொட்ட அந்த க்ஷணமே அவன் தன்னுடைய சிருஷ்டிகரிட மிருந்து தன்னைத் தானே வேறு பிரித்துக் கொண்டுவிட்டான். அவன் முதன் முதலாக அறிவின் கனியை கடித்த அதே வேளையில் தானே, தேவனோடு தனக்கு இருந்த ஐக்கியத்தை இழந்து விட்டான். அதைப் பற்றி தீவிரமாக சிந்தித்துப் பாருங்கள். குறிப்புக்களை எழுதி கொண்டிருக்கிறவர்களுக்கு, நீங்கள் அதை சரியாகப் புரிந்து கொள்ள தருணம் அளிக்கிறேன், ஏனெனில் நீங்கள் இதை இழந்து போகக்கூடாது என்று நான் விரும்புகிறேன். 245. யோவான் 6ம் அதிகாரத்தில், இயேசு, யூதர்கள் ஒரு கிணற்றிலிருந்து தண்ணீர் குடித்து, தங்கள் கைகளை உயர்த்தி, தங்கள் பிதாக்கள் ஆவிக்குரிய கன்மலையிலிருந்து தண்ணீர் குடித்ததாகக் கூறி, அதை ஒரு பரிகாசமான செயலாக செய்து கொண்டிருந்தனர். இயேசு, “ வனாந்தரத்தில் இருந்த அந்தக் கன்மலை நானே'' என்றார். 246. அவர்கள் அவரிடம், “ ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்'' என்று சொல்லுகிறாயே, உனக்கு ஐம்பது வயது கூட ஆகவில்லையே, அப்படியிருந்தும், ஆபிரகாமை நீ கண்டதாகக் கூறுகிறாயே? இப்பொழுது நாங்கள், நீ ஒரு பைத்தியம் பிடித்தவன் என்றும், பிசாசென்றும் அறிந்திருக்கிறோம்'' என்று கூறினார்கள். பாருங்கள்? 247. “ ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்'' என்றார். இருக்கிறேன் என்பவர் எரிகின்ற முட்செடியில் மோசேக்கு தரிசனமானார். “ ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னே நான் இருக்கிறேன்'' என்றார். “ இருந்தேன்'' என்று அவர் கூறவில்லை. “ இருக்கிறேன்'' 248. அற்புதங்களின் காலம் கடந்து போய்விட்டது என்று கூறுகிறவர்களே, அப்படியென்றால், வேதத்தில் இருந்தவராகிய நான், அந்த மகத்தான இருந்தவராகிய நான்'' என்று வேத வாக்கியத்தை உங்களுக்கென நீங்கள் திருத்தியே வாசித்துக் கொள்ள வேண்டும். 249. “ இருந்தேன்'' என்பதாக அல்ல, “ இருப்பேன்'' என்ப தாகவும் அல்ல, “ இருக்கிறேன்'' என்ற வார்த்தை நித்தியத்தைக் குறிக்கும். அவர் எல்லாக் காலங்களிலும், எல்லா வேளையிலும், அந்த எல்லா ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலும், ஒவ்வொரு சபைக்காலத்தின் சபையிலும், ஒவ்வொரு ஸ்தலத்திலும், ஒவ்வொரு இருதயத்திலும், ''இருக்கிறேன்'' என்பவராக இருக்கிறார். (“ இருந்தேன்'' என்பதாக அல்ல, “ இருப்பேன்'' என்பதாகவும் அல்ல.) “ நான் எப்படி கடந்த காலத்தில் இருக்கிறவராக இருந்தேனோ அதைப் போலவே இப்பொழுதும் இருக்கிறேன்'' என்கிறார். பாருங்கள்? “ எக்காலத்திலும் இருக்கிறேன்'' என்பதாகவே இருக்கிறார். 250. “ எங்கள் பிதாக்கள்... "நாங்கள் உன்னை அறியோம் நீ ஒரு பிசாசென்று அறிவோம்'' என்று யூதர்கள் கூறினார்கள்... “ வனாந்தரத்தில் எங்கள் பிதாக்கள் நாற்பதாண்டுக் காலம், மன்னாவைப் புசித்தார்கள்'' என்று கூறினர். 251. இயேசு “ அவர்கள் ஒவ்வொருவரும் வனாந்தரத்தில் மரித்தார்கள்'' என்று கூறினார். அவர்கள் யாவரும் மரித்தார்கள். “ ஆனால், நானோ... ஓ! நானே பரலோகத்திலுள்ள தேவனிடமிருந்து இறங்கி வந்த ஜீவ அப்பம். அந்த அப்பத்தை புசிக்கிறவனெவனும் மரிப்பதில்லை'' என்று இயேசு கூறினார். 252. “ இந்த மனிதன் தன் சரீரத்தையே புசிக்கக் கொடுப்பானோ? நிச்சயம் இவனுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது'' என்று அவர்கள் கூறினார்கள். 253. ஜீவ அப்பமானது, ஜீவ விருட்சத்திலிருந்து உள்ளதாகும். அதிலிருந்து தான் ஏதேன் தோட்டத்தில் அவர்கள் புசிக்க வேண்டுமென்று இருந்தது. அவரே ஜீவ விருட்சமாயிருக்கிறார். ஜீவ விருட்சம் என்பது ஒரு நபராக இருக்கிறதென்றால், அறிவின் விருட்சம் என்பதும் ஒரு நபரைத்தான் குறிக்கிறது. இது இப்படி யிருக்கிறதென்றால், சர்ப்பத்திற்கு ஒரு வித்து இருக்கவில்லை என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்? ஜீவனானது மனிதனால் வருகிறது என்றால், ஸ்திரீயினால் மரணம் வருகிறது. ஆகவே, இவள் தான் மரண விருட்சமாயிருந்தாள். 254. சர்ப்பமானது ஸ்திரீயானவளை கெடுத்த பிறகு, அவள், “ சர்ப்பமானது என்னை வஞ்சித்தது'' என்று கூறினாள். அது உண்மை . அவன் தரையில் ஊர்ந்து செல்லும் வெறும் ஒரு பாம்பல்ல. மிருகங்கள் எல்லாவற்றிலும் சர்ப்பமானது மிகவும் தந்திரமுள்ளதாயிருந்தது, அவன் மனிதனுக்கும், மனிதக் குரங்குக்கும் நடுவில் இருந்து வந்த ஒரு மிருகம். ஒரு மிருகத்தின் வித்தானது ஒரு ஸ்திரீக்குள் சென்று கருத்தரிக்க முடியாது. ஆனால் இவனுக்கோ முடிந்தது. இவன் மனிதனுக்கு அருகாமையில் இருந்த ஒருவனாயிருந்தான். தேவன் அவன்மேல் ஒரு சாபத்தைப் போட்டு, அவனுடைய வயிற்றினால் ஊர்ந்து செல்லவும், கால்கள் இல்லாமற்போகவும், அவனிலுள்ள எல்லா எலும்புகளையும் அகற்றிவிட்டு, மனிதனைப்போல் தோற்றம் தரும் அவனது தோற்றத்தையெல்லாம் மாற்றிப் போடவும் செய்தார். விஞ்ஞானமானது அதை நிலத்தில் தோண்டியெடுக்க முயன்று கொண்டிருக்கிறது. தேவனுடைய பரதீசின் மத்தியில் உள்ள தேவனுடைய இரகசியங்களில் மறைந்து கிடக்கிற ஒன்றாகும் இது. அங்கே தான் உங்களுடைய வெளிப்படுத்துதல் இருக்கிறது. 255. அவள், காயீன் என்ற தனது முதல் மகனை பிறப்பித்தாள். அது சரியா? அவன் சாத்தானின் மகன், சாத்தானின் மகன் அவன். காயீனை சாத்தானின் மகன் அல்லவென்று நீங்கள் கூறினால், அவனில் வெளிப்பட்ட அந்த தீங்கு எங்கிருந்து வந்தது? தேவனுடைய குமாரனாகிய ஆதாமிடத்திலிருந்தா வந்தது? காயீனுடைய தந்தையாகிய சாத்தானிடத்திலிருந்து தான். காயீன் கொலை செய்தான். முதல் கொலைகாரன் பிசாசானவன், பிசாசின் மகன் அதைச் செய்தான். 256. அதன் பிறகு என்ன நடந்தது என்பதைப் பாருங்கள். காயீனின் வம்ச வரலாற்றைக் கவனித்துப் பாருங்கள். அந்த சந்ததியில் உதித்த ஒவ்வொருவரும் பெரிய அறிவாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் விளங்கினர். அதைப் பற்றி வேதத்தில் படித்துப் பாருங்கள். அவர்கள் கட்டிடங்களைக் கட்டினார்கள். உலோக வேலை செய்தார்கள். அவர்கள் விஞ்ஞானிகளாக விளங்கினார்கள். ஆனால், சேத்திலிருந்து வந்த அவனது வம்சத்தினரோ, (ஆபேல் மரித்தான், அவன் இயேசுவுக்கு மாதிரியாக இருக்கிறான், இயேசு மரித்தார். ஆபேல் மரித்தான், சேத் அவனது ஸ்தானத்தை எடுத்துக் கொண்டான். மரித்தல், அடக்கம் பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல்) சேத்திலிருந்து, தாழ்மையான பயிர்த்தொழில் செய்வோர், ஆடு மேய்க்கிறவர்கள் ஆகிய இத்தொழில்களைச் செய்யும் சந்ததியினர் உதித்தனர். 257. “ உங்கள் பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவைப் புசித்தார்கள். ஆனால் அவர்கள் யாவரும் மரித்தார்கள். ஆனால் நானோ ஜீவ அப்பமாயிருக்கிறேன்'' என்று இயேசு கூறினார். (ஜீவ அப்பம் - அது என்ன? அது ஏதேனிலிருந்து வந்ததாகும்.) “ இந்த அப்பத்தைப் புசிக்கிற எவனும் மரிப்பதில்லை'' ஜீவ விருட்சத்தின் கனியை மனிதன் புசித்து என்றென்றைக்கும் உயிரோடிராத படிக்குக் செய்ய, ஜீவவிருட்சத்தை யாரும் தொடாதபடிக்கு, அதற்குப் போகும் வழியை காவல் செய்ய தூதனை தேவன் வைத்தார். அது சரியா? 258. ஏனெனில் அவர்கள் இந்த மரத்தின் பேரிலேயே தொடர வேண்டியிருந்து மரிக்க வேண்டியவர்களாக இருந்தார்கள். இந்த மரத்தின் கனியை புசிக்கிற வரைக்கிலும் அவர்கள் மரித்துக் கொண்டேயிருக்கத்தான் வேண்டும். அறிவின் விருட்சத்திலிருந்து நீங்கள் புசித்துக் கொண்டிருக்கிற வரையிலும், நீங்கள் மரிப்பது நிச்சயமே.... இப்பொழுது நாம் இந்த அறிவின் விருட்சம் என்னவென்று பார்ப்போம். அது என்ன செய்தது என்று பார்ப்போம். அது என்ன செய்கிறது என்று நாம் பார்ப்போம். அது வெடி மருந்தைக் கண்டுபிடித்தது. அது நமது தோழர்களைக் கொன்று குவிக்கிறது. அது உண்மை. ஒருவரையொருவர் கொல்லத்தக்கதாக இருக்கும் வெடிமருந்தானது, அறிவின் விருட்சத்தின் கனிதான். அடுத்ததாக, அறிவின் விருட்சத்தைக் கொண்டு, மோட்டார் வாகனத்தை கண்டு பிடித்தோம். அது வெடி மருந்தைக் காட்டிலும் கூடுதலாக மனிதரைக் கொல்லுகிறது. ஆம், அப்படித்தான். இப்பொழுது நமக்கு ஹைட்ரஜன் குண்டுகள் உள்ளது. தேவன் எதையும் அழிப்பதில்லை. மனிதன் தன்னுடைய அறிவினாலேயே தன்னையே அழித்துக் கொள்ளுகிறான். 259. ஆனால் தேவனுக்குச் சொந்தமானவை எவைகளோ, அவற்றையெல்லாம் தேவன் மீண்டும் எழுப்புவார். தேவன் தன்னுடைய தொன்றையும் இழப்பதில்லை. இயேசு அவ்வாறு கூறினார், அது உண்மை . “ இந்த அப்பத்தைப் புசிச்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்'' என்று இயேசு கூறினார். அது அவருடைய வாக்குத் தத்தமாயிருக்கிறது. இப்பொழுது தேவன்... 260. அவர்கள் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்திலிருந்து புசித்துக் கொண்டு, மிகவும் தொலைவில் இருந்து கொண்டு மரித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதை விட்டு விட்டு, இந்த ஜீவ விருட்சத்தினிடத்தில் வந்து விட்டால் அவர்கள் என்றென்றும் ஜீவிப்பார்கள். 261. எனவே இப்பொழுது, ஒரு தூதனானவன் ஜீவவிருட்சத் தினிடத்தில் யாரும் நெருங்கி வராதபடிக்கு துரத்திக் கொண்டிருந் ததற்குப் பதிலாக, சபைகளின் தூதர்கள், “ இது யாவர்க்கும் உரியது'' என்று கூறி, ஜீவவிருட்சத்தினிடம் நெருங்கிப் போகத் தக்கதாக மனிதரை ஜீவவிருட்சத்தை நோக்கி துரத்திக் கொண்டிருக்கிறார்கள். அதினால் அவர்களை தேவனுடைய பரதீசின் மத்தியில் நிற்கிற ஜீவ விருட்சமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினிடத்தில் திரும்பி வரச் செய்து கொண்டிருக்கிறார்கள். வ்யூ! என்னே! நீங்கள் அதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். பரதீசின் மத்தியில் இருக்கிற ஜீவ விருட்சமானது, நீங்கள் அதின் கனியைப்புசித்து, தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாகி, என்றென்றும் ஜீவிப்பதற்காக இருக்கிறது. “ என்னுடைய வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தினின்று நீங்கி ஜீவனுக் குட்பட்டிருக்கிறான்.'' 262. சகோதரனே, சகோதரியே, நான் நிச்சயமாக உங்கள் மனதை புண்படுத்தியிருக்கிறேன். ஆனால் நான் அவ்விதமாகச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் கொண்டிருக்கவில்லை. தேவன் அதை அறிவார். ஆனால் நான் இவ்விதமாகத்தான் இதைச் செய்ய வேண்டியதாயிருக்கிறது. ஏனெனில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை உண்மையாக நீங்கள் கண்டு கொள்ளச் செய்ய அது தான் சரியான வழியாகும். இன்னும் நீண்டகாலம் நாம் தங்கியிருக்க வேண்டியதிருக்கும் என்று நான் நம்பவில்லை. நீங்கள் ஒரு மத ஸ்தாபனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால், நீங்கள் கிறிஸ்தவரல்லாதவர் என்பதாகச் செய்ய நான் முயற்சிக்கவில்லை. அது அவ்வாறு இல்லை. மக்கள் சூழ்நிலைகளுக்கு பலியானவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. அவர்கள் பெற்றோர் யாவரும் அவர்களை ஒரு ஸ்தாபனத்தில் போய் சேரும்படி செய்து விட்டனர். 263. ஆனால் சகோதரனே, நாம் இங்கிருந்து கடந்து செல்லும் முன்னர் இன்னும் ஒரு மேற்கோளை உங்களுக்குத் தருகிறேன். தீர்க்கதரிசி கூறினார்... நீங்கள் தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீர்களா? வேதமானது தீர்க்கதரிசிகளுக்கு செவிகொடுக்க வேண்டுமென கூறியுள்ளது. “ ஒரு நேரமானது வரும், அது பகலுமல்ல, இரவு மல்ல, அது ஒரு விதமான மப்பும் மந்தாரமுமான நாளாக இருக்கும். ஆனால் சாயங்கால வேளையில், சூரியனானது அஸ்தமிக்கிறதற்கு முன்பு, வெளிச்சம் உண்டாகும்'' என்று தீர்க்கதரிசியானவன் கூறியிருக்கிறான். 264. நமக்கு என்ன கிடைத்ததென்று பார்ப்போம். இப்பொழுது, பாருங்கள். பூளோக ரீதியாக சூரியனானது எப்படி, எங்கே எழும்புகிறது? அது கிழக்கில் உதிக்கிறது. அது மேற்கில் போய் மறைகிறது. நாளை இரவு நான் ஒரு பூளோகப்படத்தை கொண்டு வந்து உங்களுக்கு காண்பிப்பேன். எருசலேமில் பரிசுத்த ஆவி விழுந்தபோது, அது தன் ஓடு பாதையில் ஒரு பூரணமான எட்டு எனும் எண் வடிவத்தைப் போட்டது. அங்கிருந்து நேராக அயர்லாந்து தேசத்தின் வழியாகக் கடந்து சென்று, அங்கிருந்து மேற்குக் கடற்கரைக்கு வந்தது. அது மீண்டும் அப்படியே பாதையை திருப்பிக் கொண்டு வருகிறது. பூமி முழுவதிலும் அது சென்ற பாதை எட்டு என்ற எண் வடிவத்தில் போனது. அப்பாதையில் சுவிசேஷமானது சென்றது. சூரியனுடன் நாகரீகமும் பிரயாணம் செய்து வந்துள்ளது. எத்தனைப் பேர் அதைப் பற்றி அறிவீர்கள்? நீங்கள் அதைக் குறித்து போதிக்கப்பட்டு அதை அறிந்தவர்களாக இருக்கிறீர்கள். மிகவும் பழமையான நாகரீகம் சீனாவில் இருந்தது, அங்கிருந்து அது கிழக்கத்தி தேசங்களுக்குப் பிரயாணம் செய்தது. பரிசுத்த ஆவியானது இவ்வாறு குமாரனின் ஓடு பாதையில் (SON) சென்றது. சூரியனின் (Sun) ஓடுபாதையில் அல்ல. 265. சூரியனானது (Sun) பனி மூட்டத்தினூடாக, பனித்துளிக் கொண்டு இருக்கையில், அதன்வழியாக பிரகாசிக்கையில், வித்தானது எங்கிருந்தாலும் சரி, அது பிழைக்கும். ஏனெனில் அனைத்து தாவர உயிர்களும் சூரியனால் தான் பிழைக்கின்றன. நாம் அதை அறிவோம். நீங்கள் ஒரு புல்லின்மேல் கொஞ்சம் காங்க்ரீட் கலவையை போட்டுவிட்டாலும், அடுத்த வசந்தத்தில் அடர்த்தியாக வளர்ந்துள்ள புற்கள் எங்கே உள்ளன? காங்ரீட்டின் முனையிலிருந்து புற்கள் வெளிக்கிளம்பி வருகிறது. ஏன்? அடியில் அந்த ஜீவனானது இருக்கிறது. உண்மையான ஜீவனை நீங்கள் மறைத்து வைத்து விட முடியாது. அச்சிறிய ஜீவனானது, சூரியன் அங்கே ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்த உடனேயே, அது பாதியளவான நகரத்தின் சதுக்கத்தின் பரப்புக்குள் உள்ள அந்த காங்ரீட்டினூடே நெளிந்து வளர்ந்து பரவி, வெளியே தலையை தூக்கி தேவனை துதிக்கிற அளவுக்கு வளர்ந்து விடுகிறது. 266. உங்களால் ஜீவனை மறைத்து வைக்க முடியாது. அது உண்மை. ஜீவனைப் பற்றிய விஷயம் அப்படித்தான் உள்ளது. நீங்கள் மறுபடியும் பிறந்தவர்களாக ஆகிவிட்டால், உங்களால் அதை மறைத்து வைக்க முடியாது. நீங்கள் ஜீவனைப் பெற்று விட்டால், அப்பொழுது ஏதோ ஒன்று உங்களுக்குள் இருந்து ஆர்ப்பரிக்கத்தான் செய்கிறது. 267. இப்பொழுது, இந்த வேளையில் யாவும் மரித்த நிலையில் இருக்கின்றன. விதைகள் வெடித்து வெளிவருகின்றன. உள்ளேயுள்ள சதையெல்லாம் போய்விட்டது, அது மரித்த நிலையில் உள்ளது. ஆயினும் அதனுள் ஜீவன் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இப்பொழுது, சூரியன் வசந்த காலத்தில் பிரகாசிக்க ஆரம்பிக்கிற போது, சிறுசிறு பூக்கள் பூக்கின்றன, யாவும் மீண்டும் தலையைத் தூக்கிப் பார்க்கின்றன (மரக்கட்டைகளின் அடியிலிருந்தும், பாறைகளின் அடியிலிருந்தும்). அவைகள் மீண்டும் எழும்பி, ஜீவிக்க ஆரம்பிக்கும். அது சரியா? ஏனெனில் சூரியன் (Sun) பிரகாசித்துக் கொண்டிருக்கிறான். 268. ஒரு நாளில் குமாரன் (SON) பிரகாசிப்பார். அவரே நித்திய ஜீவனின் ஊற்று. நித்திய ஜீவனுக்காக அவரிடத்தில் முளைப் பிக்கப்பட்டிருக்கிற யாவையும், அவர் “ நான் கடைசி நாளில் அவர்களை எழுப்புவேன்'' என்று சொன்னபடி உயிரோடெழுப்புவார். நான் கூறுவதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? நித்திய ஜீவனையுடையவர்கள் கடைசி நாளில் எழுப்பப்படுவார்கள். அவர்கள் உங்களை கடலில் புதைத்து விட்டாலும், உங்கள் சரீரத்தை எரித்து சாம்பலாக்கி, அதை பூமியின் நான்கு திசைகளிலும் பறக்கடித்து விட்டாலும், கடைசி நாளில் தேவன் உங்களை எழுப்புவார். பசியோடிருக்கும் ஒரு சிங்கத்தின் வயிற்றை நிரப்பும் ஆகாரமாக நீங்கள் இருக்க வேண்டியதாயிருந்தாலும் அல்லது உங்கள் சரீரத்தில் இருக்கும் பதினாறு வகையான பெட்ரோ இரசாயனங்கள் மற்றும் காஸ்மிக் ஒளி இவையெல்லாம் சரீரத்தினின்று அற்றுப் போக வைக்கும் அக்கினிச் சூளையில் உங்களைப் போட்டுவிட்டாலும், தேவன் உங்களை எழுப்புவார். “ உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது''. ஆமென்! தேவன் அதை எழுப்புவார். 269. இப்பொழுது கவனியுங்கள். ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயினால் மரிக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு மனிதனும், ஒரு மனிதனால் பிழைத்திடுவான். அந்தவிதமான ஜீவனில் ஸ்திரீயினிடத்தில் பங்கு பெற்றவன், மரித்திட வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். மரிப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியேயில்லை. பங்கு பெற்றுக்கொள்வது எந்த அளவுக்கு உங்களுக்கு நிச்சயமாக இருக்குமோ, அந்த அளவுக்கு அதாவது, ஜீவவிருட்சத்தில் நிச்சயமாக நீங்கள் பங்கு பெற்றால், அதின் கனியைப் புசித்தால், நீங்கள் ஜீவனோடிருப்பீர்கள். ஜீவனை அடை வதைத் தவிர உங்களுக்கு வேறு வழியேயில்லை. ஆமென்! அது மரணத்தைப் பிறப்பிப்பது எவ்வளவு நிச்சயமானதோ, அதே போல் இது ஜீவனைப் பிறப்பிப்பதும் நிச்சயமானதாகும், நிஜமானதாகும். ஜீவனைப் பெற்றுக் கொள்ள இது ஒன்றே வழியாயிருக்கிறது. 270. “ சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்'' என்று தீர்க்க தரிசி கூறினான். இப்பொழுது பாருங்கள். வெளிச்சமின்றி இருளுமின்றி, மந்தாரமான நாளாக அது இருக்கும். இது பகலு மல்ல, இரவுமல்ல, அது தானே ஒரு வகையான மேக மந்தாரமான, பனிமூட்டமுள்ள, குளிர்ந்த நாளாக இருக்கும். ஆயினும், சூரியன் (Sun) ஒளியைத் தந்து கொண்டிருக்கும். பனிமூட்டம், மேகங்கள் இவற்றிற்கு மேலாக குமாரனானவர் ஒளியைத் தந்து கொண்டிருக்கிறார். நடக்கவும், எவ்வாறு நடந்து கொள்வது என்பதை காணவும் அவர் உங்களுக்கு போதுமான ஒளியைத் தந்து கொண்டிருக்கிறார். ஆனால், அந்நாளோ, பிரகாசமான, அழகான நாளல்ல, பாருங்கள்? எந்த ஒன்றும் அந்நாளில் பிழைத்திருக்க முடியாது. 271. சூரியன் தன் ஒளிக்கிரணங்களை பாய்ச்ச முடியாத எந்த இடத்திலும் நீங்கள் எதையும் நட்டு வைக்கலாம். அப்படிச் செய்தால் அதன் வளர்ச்சி குன்றிப்போகும். நான் சொல்லுவது சரியா? விவசாயிகள் அறிவீர்கள். தானிய விதையை நிழலில் எங்காவது விதைத்து விட்டுப் பாருங்கள், அதன் வளர்ச்சி குன்றிப் போகிறது. ஃப்ரெட் அவர்களே! உங்களுடைய கோதுமைப் பயிரிலிருந்து நீங்கள் அதைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். நீங்கள் விதைத்திருக்கிற பொழுது, அது குளிரும் மழையும் கொண்ட மோசமான கோடைகாலமாக இருந்துவிட்டால், பயிரின் வளர்ச்சி குன்றிப் போய்விடுகிறது. 272. இச்சபை சாலங்கள் தோறும் சபையைக் குறித்த காரியமும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. இதன் வளர்ச்சி குன்றிப் போனதாக இருந்தது. ஸ்தாபனங்களினால் சபையின் வளர்ச்சி குன்றிப் போனது. “ உங்கள் பெயரை சபையின் புத்தகத்தில் எழுதிக் கொண்டு விட்டால் போதுமானது, கடவுள் ஒருவர் உண்டு என்பதைப் பற்றி அறிய நமக்கு போதுமான வெளிச்சம் கிடைத்து விட்டது'' என்கிறார்கள். அதைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். “ கிறிஸ்து ஒருவர் இருக்கிறார் என்பதை அறியவும், நியாயத்தீர்ப்பு ஒன்று வருகிறதாயிருக்கிறது என்பதைப் பற்றி அறியவும் நமக்கு போதுமான வெளிச்சம் இருந்தது. எனவே நாம் நமது பெயர்களை புத்தகத்தில் எழுதி, நம்முடைய போதகரோடு கைகளைக் குலுக்கி, இன்னும் ஏனைய காரியங்களையும் செய்துவிட்டோம், அது போதும்'' என்கிறார்கள். சரி, ஆனால் இப்பொழுதோ சாயங்கால வேளையாயிருக்கிறது. 273. நாகரிகமானது கிழக்கிலிருந்து கிளம்பி, மேற்கு நோக்கி நகர்ந்து வந்துள்ளது. நாம் இப்பொழுது மேற்குக் கடற்கரையில் இருக்கிறோம். இதற்கு மேல் போக நமக்கு முடியாது. நாம் கடத்தல், மறுபடியும் கிழக்குச் செல்வோம். நாம் மேற்குக் கடற்கரையில் இருக்கிறோம். 274. “ சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்” என்று வேதம் கூறுகிறது. சாயங்காலத்தில் பிரகாசிக்கும் சூரியன் எத்தகையதா யிருக்கிறது? காலையில் உதிக்கும் சூரியனைவிட அது வேறுபட்டதா? அது அதே சூரியன்தான். நல்லது அப்படியானால், தேவன் என்ன வாக்குத்தத்தம் கொடுத்தார்? நாம் தற்போதைய காலத்தைக் குறித்து பேசுகையில், அதைக் குறித்து பேசப் போகிறோம். அதை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். வேதம் அவ்வாறு கூறியுள்ளது. 'சாயங்கால நேரத்தில் மேற்குத் திசையில் வெளிச்சம் உண்டாகும்'' என்றும், “ அது நீதியின் சூரியனை தன் செட்டைகளின் கீழ் ஆரோக்கியத்தோடு திரும்பக் கொண்டு வரும்'' என்றும், இந்த சபைக்காலங்களைப் பற்றி நாம் படித்துக் கொண்டே வருகையில் நான் உங்களுக்கு நிரூபித்துக் காண்பிப் பேன். கிழக்கில் நடைபெற்ற அதே அற்புத அடையாளங்கள் யாவும், கடைசி நாளில் பரிசுத்த ஆவியின் இன்னுமொரு ஊற்றப்படுதலோடு மேற்கிலே நடைபெறும். சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும், அவ்வொளியில் மகிமைக்குப் போகும் பாதையை நிச்சயம் காண்பீர் அந்தத் தண்ணீர் வழியில் இன்று ஒளி உள்ளது வே வாலிபரே வயோதிபரே உம் பாவங்களைவிட்டு மனந்திரும்பி இயேசுவின் நாமத்தில் அடக்கம் பண்ணப்படுவீர் பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் உங்களை நிரப்புவார் சாயங்கால வெளிச்சம் வந்துவிட்டதால் தேவனும் கிறிஸ்துவும் ஒருவரே எனும் உண்மை தெரிந்ததுவே. ஓ, சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும், மகிமைக்குப் போகும் பாதையை அவ்வொளியில் காண்பீர், இத்தண்ணீரின் வழியில் இன்று ஒளி உள்ளதுவே, வாலிபரே வயோதிபரே மனந்திரும்புவீர் பாவங்களைவிட்டு இயேசுவின் நாமத்தில் அடக்கம் பண்ணப்படுவீர் பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் உங்களை நிரப்புவார் அச்சாயங்கால ஒளியானது வந்துவிட்டது. 275. இதைத்தான் பேதுருவும், “ நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும், கிறிஸ்துவு மாக்கினார்'' என்று கூறினான். மேலும், “ நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்றும் அவன் கூறினான். 276. நான் உங்களுக்கு சில விஷயங்களை கூறட்டும். டாக்டர் கொடுக்கும் மருந்துச் சீட்டைப் பற்றி அன்றொரு நாளில் நான் குறிப்பிட்டுப் பேசினேன். டாக்டர் கொடுக்கும் மருந்து சீட்டின் படி மருந்து எடுத்துக்கொள்ள மக்கள் விரும்புகிறதில்லை. ஒரு மருத்துவர் உங்களுடைய பிணியிலிருந்து உங்களை சொஸ்த மாக்கத்தக்கதான ஒரு நிவாரணத்தை, ஒரு மருந்தை கொடுத்தால், நீங்கள் அதை எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டால், அதினால் நீங்கள் மரித்தால், அதற்கு மருத்துவர் பொறுப்பாளியல்ல. இல்லை ஐயா, டாக்டர் கொடுத்த மருந்தை எடுத்துக் கொள்ளாதது உங்க ளுடைய குற்றம்தான். 277. இப்பொழுது, ஒரு மருத்துவர் மருந்துச் சீட்டு ஒன்றைக் கொடுத்தால், நீங்கள் அதை ஒரு போலி மருந்தாளுனரிடம் (மருந்துச் சீட்டைப் பார்த்து கொடுப்பவர்) எடுத்துச் சென்றால், மருத்துவர் எழுதிக் கொடுத்துள்ள மருந்தோடு சேர்க்கக்கூடாத வேறு எதையோ ஒன்றைக் கலக்கி அதோடு அவன் சேர்த்துக் கொடுத்து விடுகிறானென்றால், அது உங்களைக் கொன்று விடும். உங்கள் சரீரத்திலுள்ள கிருமிகளைக் கொல்வதற்கான விஷமுள்ள மருந்துகளைப் பற்றியும், அவ்விஷ மருந்துகளுக்கு மாற்றாக, உங்களைக் கொல்லாமல் தடுக்கிற விஷ முறிவான மருந்துகளைப் பற்றியும், டாக்டர் தன்னுடைய படிப்பின்மூலம், ஆராய்ச்சியின் மூலமும் நன்கு அறிந்திருக்கிறார். அவ்விரண்டும் சமச்சீராகக் கொடுக்கப்பட வேண்டும். அளவுக்கதிகமாக 'ஆண்டிடோட்' என்று கூறப்படும் முறிவான மருந்தை கொடுத்துவிட்டால், அதனால் நோயாளிக்கு பயனேதும் இல்லை. அதிக விஷமுள்ள மருந்தைக் கொடுத்துவிட்டாலும், அது நோயாளியைக் கொன்று போடும். எனவே, சமச்சீரான அளவில் மருந்துகள் கொடுக்கப் பட வேண்டும். 278. 'கீலேயாத்தில் பிசின் தைலம் இல்லையோ? அங்கே இரண வைத்தியனும் இல்லையோ'' என்று தீர்க்கதரிசி கேள்வி கேட்கிறான். அவன் மேலும், 'அப்படியிருந்தும் ஏன் இன்னும் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?'' என்று கேட்கிறான். சபையின் நிலைமை என்ன? நமக்கு ஏன் அநேகம் வியாதிப்பட்டுள்ள சபைகள் உண்டாயிருக்கின்றன? காரணம் என்ன? ஏனெனில், நமக்கு சில போலியான மருந்தாளுனர்கள் இருந்து கொண்டு தவறான மருந்துச் சீட்டு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது உண்மை . ''பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' என்று அவர் சொல்லவில்லை. 279. டாக்டரின் மருந்துச் சீட்டு என்ன சொல்கிறது? இங்கே பேதுரு இருக்கிறான். அவனிடம் இராஜ்யத்தின் திறவுகோல்கள் இருந்தன என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இயேசுவே அவ்வாறு கூறியுள்ளார். அவர் என்ன கூறினார்? அதாவது, மருந்துச் சீட்டு கொடுப்பதற்காக, அதை எழுதுவதற்காக, பேதுருவிடம் நிரப்பிய பேனா இருந்தது. 280. அவர்கள் ஆர்ப்பரித்து, சப்தமிட்டு, அந்நிய பாஷைகளில் பேசிக் கொண்டிருக்கையில், இச்சப்தம் மக்களுக்கு கேட்டது. ஜனங்கள் சீஷர்களைப் பார்த்து, ''இவர்கள் மதுபானத்தினால் வெறி கொண்டிருக்கிறார்கள்'' என்று பரிகசித்தார்கள். 281. அதற்கு பேதுரு அவர்களைப் பார்த்து, “ நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறி கொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே, தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. கடைசி நாட்களில் இது சம்பவிக்கும் என்று தேவன் கூறியுள்ளார். நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும், குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள், உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; என்னுடைய ஊழியக்காரர் மேலும், என்னுடைய ஊழியக்காரிகள் மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழப் பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்'' என்றான். 282. மேலும் பேதுரு “ கோத்திரப் பிதாவாகிய தாவீதும் இதை முன்பே கண்டு கூறினான். ''அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது; என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்'' என்று தாவீதைக் குறித்து கூறினான். மேலும் பேதுரு, ''சகோதரரே, கோத்திரத் தலைவனாகிய தாவீதைக் குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள். அவன் மரணமடைந்து அடக்கம் பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள் வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது'' என்றான். தாவீது தீர்க்கதரிசியாக இருந்தபடியால், கிறிஸ்து உயிர்த்தெழுவதைக் கண்டான். “ நீங்கள் சிலுவையில் அறைந்த அந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள்'' என்றான். 283. “ இதை அவர்கள் கேட்டபொழுது இருதயத்திலே குத்தப் பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து, சகோதரரே...'' என்றார்கள். ''டாக்டர் சீமோன் பேதுரு அவர்களே, நாங்கள் எவ்வாறு இதைப் பெற முடியும் என்பதை தெரிவித்து, அதற்குரிய சீட்டு எழுதிக்கொடுங்கள். பாவத்தி லிருந்து எங்களுக்கு சுகமடைதல் வேண்டும்'' என்றார்கள். ஓ! 284. இப்படி இவர்கள் கேட்டதற்கு பேதுரு என்ன கூறினான் என்பதைப் பாருங்கள். பேதுரு “ சற்றுப் பொறுங்கள், நான் உங்களுக்கு ஒரு மருந்துச் சீட்டு எழுதித்தரப் போகிறேன், அது தானே நித்திய காலமாக விளங்கும் மருந்துச் சீட்டாகும், அது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' என்றான். 285. அவன் என்ன கூறினான்? எவ்வாறு அதை அவன் நிர்ணயித்தான்? கத்தோலிக்கர் பெற்றுள்ளது போல் இருந்ததா அது? பாப்டிஸ்டுகளின் காரியத்தைப் போல் அது இருந்ததா? அவர்கள் ஒவ்வொருவரும் அதனோடே ஒன்றைக் கூட்டினார்கள், அல்லது ஒன்றை அதிலிருந்து எடுத்துப்போட்டார்கள். பெந்தெ கொஸ்தேயினரைப் போல் அது இருந்ததா? அவர்களும் கூட்டினார்கள், இதிலிருந்து எடுத்துப் போட்டார்கள். பேதுரு என்ன கூறுகிறான்? “ நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்'' என்றான். நித்தியமான நிவாரணச் சீட்டு இதுவே. ''அது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் உரியது, இது ஒவ்வொரு சபைக்காலத்திலும் கொடுக்கத்தக்கதாக இருக்கிறது, அவர்கள் ஒவ்வொருவருக்கும் அதைக் கொடுங்கள்.'' 286. ஓ தேவனே, என் கைகளை சுத்தம் செய்யும், என் இருதயத்தை சுத்தம் செய்யும், கர்த்தாவே. என் சிநேகிதர் ஒவ்வொருவரையும் நான் இதன் காரணமாக இழக்க நேரிட்டாலும் அந்தப் பரம வைத்தியர் என்னவிதமாக இந்த நிவாரணச் சீட்டை கொடுக்கச் சொன்னாரோ, அதேவிதமாக நான் இதைக் கொடுக்கட்டும். 287. அநேக சபைகளில், நிறைய முறிவு மருந்துகளை அளவுக்கு மேல் எடுத்துக் கொண்டும், கொடுக்கப்பட்டுள்ள நிவாரண மருந்தாகிய தேவனுடைய வார்த்தையிலிருந்து அநேகத்தை நீக்கிப் போட்டும் விடுகிறார்கள். அதினால் அந்த மருந்துச் சீட்டினால் எந்தவித பயனும் அற்றுப்போய், எவரையும் குணமடையச் செய்யவில்லை. கை குலுக்கி சபையில் சேர்ந்து கொள்ளுதல், மற்றும் தெளித்தல் இன்னும் ஏனைய தவறான மருந்தைச் சாப்பிடுதலினால் தான், இன்றைக்கு அநேக சபைகள் செத்தவைகளாக இருந்து வருகின்றன. அவைகளின் உறுப்பினர்கள் கூட மரித்தவர்களாக இருக்கிறார்கள். ஓ, இரக்கம் வேண்டும், அது பாவ வியாதிக்கு நிவாரணத்திற்கான மருந்துச் சீட்டு அல்லவே அல்ல, அது மரணமாயிருக்கிறது. உங்களுக்கு ஜீவன் வேண்டுமானால், பரிசுத்த ஆவியைப் பெற வேண்டுமானால், தேவன் கூறியவைகளைப் பின்பற்றுங்கள். அதனோடு ஒன்றையும் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம். இங்கே தானே, வெளிப்படுத்தலின் புஸ்தகத்தில், “ இதனோடே ஒன்றை எவராவது கூட்டினாலோ குறைத்தாலோ, ஜீவ புத்தகத்திலிருந்து அவனுடைய பங்கு எடுத்துப் போடப்படும்'' என்று சொல்லப்பட்டுள்ளது. ஓ, இதைக் கூறியவர் பிரதான வைத்தியராவார். நான் அவரை நேசிக்கிறேன். நீங்கள் நேசிக்கவில்லையா? 288. ஓ அந்த மகத்தான எபேசு சபைக்காலத்தில், இந்த வேதப் புரட்டு, ஸ்தாபனங்களை உண்டாக்க உள்ளே மெதுவாக நுழைய ஆரம்பித்த போது, சபைக்கு தேவன் ஏற்படுத்திய மேய்ப் பர்களுக்கு பதிலாக, கார்டினல்கள், பிஷப்புகள், போப்புகள், ஓவர்சீயர் சபைக்கு நியமிக்கப்பட்டனர். பரிசுத்த ஆவியைக் குறித்து அவர்கள் சபையாரிடம், “ நீங்கள் அதை இனிமேல் இங்கே கொண்டிருக்க முடியாது'' என்றார்கள். யார் தலைவர் சபைக்கு. 289. “ இயேசுவின் நாமத்தில் இனிமேல் நீ பிரசங்கிக்கக் கூடாது'' என்று ஒரு தடவை பேதுருவுக்குக் கூறப்பட்டது. “ நீ பிரசங்கிக்கிற தாயிருந்தால் பிரசங்கிக்கலாம், ஆனால் இயேசுவின் நாமத்தினால் அதைச் செய்யக்கூடாது'' என்றார்கள். ஓ, பிசாசு அந்த நாமத்தை வெறுக்கிறான். 290. பேதுரு முழுவதும் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் இருந்தான் என்று (ஸ்தாபனத்தினால் நிறைந்திருந்தானா?) வேதம் கூறுகிறது. அவன் “ பொறுங்கள், நான் போய் ஜெனரல் ஓவர்சீர் அவர்களைப் பார்த்து, இந்தப் பரிசுத்த ஆவியைப் பற்றி அவர் என்ன சொல்லுகிறார் என்று பார்க்கிறேன்'' என்று கூறினானா? 291. நான் உங்களுக்கு ஒரு விஷயம் கூறுவேன். அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் என்ற சபையில், எந்த ஒரு மனிதனையும் மிஷனரியாக அனுப்புவதற்கு முன்னால், அவர் மிஷனரியாக இருப்பதற்கு மனோநிலைரீதியாக அவரது தகுதி போதுமானதுதானா என்பதை சோதித்தறிய அவரை ஒரு மனோதத்துவ நிபுணரிடம் கொண்டு செல்லுகிறார்கள். அம்மனோதத்துவ நிபுணர் அவரை சோதித்து அவர் தகுதியுள்ளவர்தானா என்பதை நிதானிக்க வேண்டுமாம். இந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா? பெந்தெகொஸ்தே அசெம்பிளீஸ் ஆஃப் காட் சபையில் அவ்வாறு நடக்கிறது. அதைப் பற்றி எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? நீங்கள் யாவரும் அறிந்திருக்கிறீர்கள் என்பது தெரிய வருகிறது. மிஷனரியை சோதித்து, அவரைத் தேர்ந்தெடுக்க நீதிபதியாக இருப்பது யார்? மனோதத்துவ நிபுணரா அல்லது பரிசுத்த ஆவியா? மனித ஆளுகைக்குள் சபையை வைத்திருக்கையில், அப்படிப்பட்ட காரியம் தான் நடக்கும். மனிதன் உண்டாக்கிய கொள்கைள், மனிதனால் உண்டாக்கப்பட்ட உபதேசங்கள் இருப்பதைப் பாருங்கள். பெந்தெகொஸ்தேயின் காலத்திற்குள் நாம் வரும் வரை காத்திருந்து அதில் நடப்பதைப் பாருங்கள்! தேவன் உலகத்தை அக்கினிக்கிரையாக்குவது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக அதையும் சுட்டெரிப்பார். ஆம், ஐயா. நிச்சயம் அப்படித்தான். காலம் முழுவதிலும் அந்த அக்கினி பற்றியெரிகிறதை நீங்கள் பார்ப்பீர்கள். மிகவும் சரியாக நீங்கள் அதைக் காணலாம். 292. ஆனால், மகிமை பொருந்திய ஓர் நாளில் அவர் வருவார். நினைவில் வைத்து கவனியுங்கள். ஏழு சபைக்காலங்கள் உள்ளன. மணவாளனை எதிர்கொள்ள அவர்கள் புறப்பட்டுப் போனபோது, சிலர் முதலாம் ஜாமத்தில் நித்திரையடைந்தனர். (அது சரியா?) சிலர் இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் ஜாமங்கள் மட்டும் நித்திரையடைந்தார்கள். கவனியுங்கள், (அவர்கள் மரிக்க வில்லை, நித்திரையாயிருந்தார்கள்). ஏழாம் ஜாமத்தில் “ இதோ மணவாளன் வருகிறார், அவரை எதிர்கொள்ள புறப்பட்டுப் போங்கள்'' என்ற ஒரு சப்தம் உண்டாயிற்று. நித்திரையாயிருந்த கன்னியர் யாவரும் விழித்தெழுந்தனர்! பிரகாசமான மந்தாரமில்லாத அக்காலையில் கிறிஸ்துவுக்குள் மரித்தோர் எழும்பொழுது, (மேகமில்லாத சாயங்கால வெளிச்சம் பிரகாசிக்கும்) பிரகாசமுள்ள, அழகான காலைப்பொழுது நித்தியத்திற்குள் விடியும் வானங்களுக்கப்பால் உள்ள தங்கள் வீடுகளுக்கு பூமியிலுள்ள இரட்சிக்கப்பட்டோர் கூடிச் சேருவர். அத்தேசத்தில் பெயர்ப்பட்டியல் வாசிக்கும் போது நான் அங்கிருப்பேன். புத்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்கள் பெயர்கள் வாசிக்கையில், புத்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்கள் பெயர்கள் வாசிக்கையில் புத்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்கள் பெயர்கள் வாசிக்கையில் புத்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்கள் பெயர்கள் வாசிக்கையில்,நான் அங்கிருப்பேன் காலை முதல் மாலை வரை நமது எஜமானுக்காய் உழைப்போம் அவரது அற்புதமான நேசத்தையும், பராமரிப்பையும் குறித்து பேசுவோம். வாழ்வெல்லாம் முடிந்து, பூமியில் நம் கிரியை முடிவு பெறுகையில், தூர தேசத்தில் பெயர் வாசிக்கப்படுகையில் 293. ஒவ்வொரு தேவ பிள்ளையும் இப்பொழுது தன் கரங்களை உயர்த்துவோமாக. தொலைதூர தேசத்தில் பெயர் கூப்பிட்டு அழைக்கையில், தொலைதூர தேசத்தில் பெயர் சொல்லி அழைக்கையில், தொலைதூர தேசத்தில் பெயர் சொல்லி அழைக்கையில், தொலைதூர தேசத்தில் பெயர் சொல்லி அழைக்கையில், நானும் அங்கிருப்பேன். இனிமையான அந்த வரப்போகும் நாளில் அந்த அழகான அக்கரைத் தேசத்தில் நாம் சந்திப்போம் இனிமையான அந்த வரப்போகும் நாளில், அவ்வழகான அக்கரைத் தேசத்தில் நாம் சந்திப்போம் 294. சபையின் இப்பழங்கால பாடலை நீங்கள் நேசிக்கிறீர்களா? சம்பூர்ணரான நம் பரம பிதாவுக்கு நம் துதியின் காணிக்கையைச் செலுத்துவோம் அவரது அன்பின் மகிமையான ஈவுக்காகவும், நம்நாளை பரிசுத்தமாக்கும் அவர்தம் ஆசிகளுக்காகவும், இனிமையான வரப்போகும் அந்நாளில் அந்த அழகான அக்கரைத் தேசத்தில் நாம் சந்திப்போம். 295. இனிமையான அந்த வரப்போகும் அந்நாளில், (''சகோதரனே, நான் உன்னை சந்திப்பேன்'' என்று சொல்லுங்கள்). அந்த அழகான அக்கரைத் தேசத்தில் நாம் சந்திப்போம் இனிமையான அந்த வரப்போகும் அந்நாளில் அந்த அழகான அக்கரைத் தேசத்தில் நாம் சந்திப்போம் அந்த மனங்குளிர வைக்கும் பாடலைப் பாடுவோம் (யாவரும் பாடுங்கள் இப்பொழுது) நமது ஆவி இனி துக்கமாயிராது பெருமூச்செறிவதில்லை, ஏனெனில் இளைப்பாறுதலின் ஆசிகள் உண்டெமக்கே 296. ஒவ்வொருவரும் கரங்களை உயர்த்தியவாறே இனிமையான அந்த வரப்போகும் நன்னாளில் ஓ நாம் அந்த அழகான அக்கரைத்தேசத்தில் சந்திப்போம், இனிமையான அந்த வரப்போகும் நன்னாளில் நாம் அந்த அழகான அக்கரைத் தேசத்தில் சந்திப்போம். 297. நம்முடைய தலைகளைத் தாழ்த்தியவாறே இப்பொழுது நாம் இதைச் சொல்லுவோம் (சகோ.பிரன்ஹாம் அவர்கள் சொல்லச் சொல்ல சபையார் சொற்றொடர்களை திரும்பச் சொல்லுகிறார்கள்) “ கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன். இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன். என் பாவத்தைப் போக்க மாம்சத்தில் தோன்றிய தேவனே அவர். என்னுடைய தகுதிகளின் பேரில் நான் நம்பிக்கை கொண்டிருக்க வில்லை. என்னில் ஒன்றுமில்லை. ஆனால் நான் பயபக்தியுடன், என்னுடைய இரட்சகரும், என்னுடைய தேவனும், இராஜாவுமாய் இருக்கிற இயேசு கிறிஸ்துவின் தகுதிகளின் பேரிலேயே விசுவாசம் கொண்டுள்ளேன். நான் அவரை நேசிக்கிறேன். ஆமென். 298. நாளை இரவு 7 மணிக்கு, கர்த்தருக்கு சித்தமானால், நாம் சிமிர்னா சபையின் காலத்தைக் குறித்துப் பார்ப்போம். இனிமையான அந்த வரப்போகும் நன்னாளில் (நம்முடைய தலைகள் கவிழ்ந்திருக்கட்டும் இப்பொழுது) அந்த அழகான அக்கரைத் தேசத்தில் நாம் சந்திப்போம் இனிமையான அந்த வரப்போகும் அந்நாளில் நாம் அந்த அழகான அக்கரைத் தேசத்தில் சந்திப்போம். 299. இப்பொழுது ஒவ்வொருவரும், மெதுவாக, இனிமையாகப் பாடுவோம். ஒ, சம்பூர்ணரான நம் பரம பிதாவுக்கு அவரது மகிமை பொருந்திய அன்பின் ஈவுக்காக அவருக்கு நமது துதியின் காணிக்கையைச் செலுத்துவோம் (சகோ. பிரன்ஹாம் அவர்கள், சபையோர் பல்லவியை தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கையில் புறப்பட்டுச் செல்லுகிறார் – ஆசி) ******* நான்காம் அத்தியாயம் சிமிர்னா சபையின் காலம் THE SMYRNAEAN CHURCH AGE மிகுந்த மகிமை பொருந்திய பிதாவே, எங்களுடைய ஜீவனில் நாங்கள் அழியாமையைப் பெற்றிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் தேவனின் ஜீவனானது, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அக்கினி மயமான நாவுகளாகப் பிரிந்து அமர்ந்து, அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள்; அதினால் ஆவியானவர் அவரவருக்கு தந்தருளினதின்படியே அவர்கள் வெவ்வேறு பாஷைகளில் பேசத் தொடங்கினார்கள். ஓ, பிதாவே, நீர் உம்மையே சபையின் நடுவில் பங்கிட்டுக் கொடுத்தீர் என்பதற்காக நாங்கள் எவ்வளவாய் நன்றி செலுத்துகிறோம். “ நான் என் பிதாவிலும், பிதா என்னிலும், நான் உங்களிலும், நீங்கள் என்னிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்'' என்று எங்கள் கர்த்தர் கூறியதில் வியப்பொன்றுமில்லை. எவ்வளவாய் பரலோகத்தின் தேவன் தன் ஜனங்களுக்குள் ஜீவிக்கிறார். “ இன்னும் கொஞ்சம் காலத்தில் உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள், ஏனெனில் நான் உங்களோடும், உங்களுக் குள்ளும், உலகத்தின் முடிவுபரியந்தமும் சகல நாட்களிலும் இருக்கிறேன்'' என்று கூறினீர். ஒவ்வொரு சபைக்காலத்திலும் நீர் இங்கே, நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராக இருந்து வந்திருக்கிறீர். நீர் நடப்பிக்கிற கிரியைகளின் மூலமாக நாங்கள் உம்மை அறிகிறோம். “ விசுவாசிக்கிறவர்களை இவ்வடையாளங்கள் தொடரும்''. 2. கர்த்தாவே, அனைத்துக் காலங்களின் உச்சக்கட்டத்தை நாங்கள் காண்கையில், காலமானது ஓடி முடிவடையப் போகிறது, அப்பொழுது நித்தியமானது உதிக்கிறது. பிதாவாகிய தேவனே, இன்றைக்கு, அந்த மீதியானவர்களுக்குள் நாங்கள் ஜீவித்துக் கொண்டிருப்பதைக் குறித்து அறிந்து கொள்வதில் மகிழ்வெய்துகிறோம். எங்களுடைய ஜீவியத்தை கருத்தாய் காவல் செய்து, நாங்கள் கொண்டிருக்கும் நோக்கங்களையும், இலக்கையும் பார்த்து, பரிசுத்த ஆவியானவர் எங்களை கையிலெடுத்துக் கொண்டிருக் கிறதையும் பார்க்கிறோம், தேவனே, தெய்வீக பிரசன்னத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரும் இன்றிரவில், நாங்கள் வாழும் இச்சபைக் காலங்களைப் பற்றி உணர்ந்து கொள்ளவும், கர்த்தராகிய இயேசுவினிடத்தில் வேகமாக ஓடிப் போகவும் செய்யும், ஏனெனில், “ கர்த்தருடைய நாமம் பலத்த துருகம், நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்'' என்று மிகவும் தெளிவாக எழுதப்பட்டுள்ளதே. 3. ஓ தேவனே, இன்றிரவில் வந்து எங்களை அபிஷேகியும், கர்த்தாவே, மனங்குழம்பி, அலைந்து திரிகிறவர்களை கொண்டு வாரும், ஓ, கர்த்தாவே, இந்த எளிய ஆடுகளைக் கண்ணோக்கிப் பாரும், அவர்களுக்கு எவ்விடங்களிலிருந்தும் மேய்ப்பர்களின் அழைப்புகள் வரப்பெற்று கொண்டிருக்கிறார்கள். எனவே எதை விசுவாசிப்பது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஆடுகளின் பெரிய மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அவர்கள் செவி கொடுக்கச் செய்ய வேண்டுமென ஜெபிக்கிறேன், பிதாவே. அவருடைய மகத்தான ஆவியானவர் இன்றிரவில், “ என் பிள்ளையே, என்னிடம் ஓடி வா, நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன், அது உன்னை உன்னுடைய நித்திய ஊருக்கு போவதற்காக முத்திரையிட்டு விடும்'' என்று அவர்களிடம் பேசட்டுமே. நேரமானது விரைவாக முடிந்து விடப்போவதை நாங்கள் காண்கையில், அவர்கள் அடிபட்டு, அலையுண்டு ஓடுகிறதாக இருக்க வேண்டாம். இதை அருளும், பிதாவே. பிரசங்கியின் மூலம் பேசியருளும், கேட்கிறவர்களுடய செவிகள் வாயிலாக செவி கொடுத்தருளும், நாங்கள் யாவருமே செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம். ஆமென். (அமருங்கள்). 4. இன்றிரவில் நாம் இரண்டாவது சபைக் காலத்தைப் பற்றி படிக்கப் போகிறோம். அநேகர் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். எனவேதான் இவைகளை ஒவ்வொரு தடவையும் தெளிவாகக் கொடுக்க விரும்புகிறேன். 5. இரண்டாவது சபைக் காலமானது, சிமிர்னா சபைக் காலம் என்று அழைக்கப்பட்டது. எபேசு சபைக் காலம் முடிந்த வுடனேயே சிமிர்னா சபைக் காலம் ஆரம்பித்து விட்டது. எபேசு சபைக் காலம் கி.பி.55 முதல் 170 வரை நீடித்தது. சிமிர்னா சபைக் காலம் கி.பி.170 முதல் 312 முடிய நீடித்தது. இந்தச் சபை உபத்திரவப்படுத்தப்பட்ட சபையாகும். உபத்திரவத்திலிருந்து வந்து இந்த சபை இரத்த சாட்சிகளின் கிரீடத்தை அணியும். அந்தக் காலத்தில் தெரிந்து கொள்ளப்பட்ட சபைக்கு ஜீவ கிரீடத்தைத் தருவதாக தேவன் வாக்களித்துள்ளார். 6. ஒவ்வொரு சபைக்காலத்திற்கும் தேவன் தம் கரத்தில் ஏந்தியள்ள ஒரு நட்சத்திரம் உண்டு. அந்த நட்சத்திரம் அந்தந்த சபைக்கு அளிக்கப்பட்ட செய்தியாளனுக்கு (தூதனுக்கு) அடையாளமாகத் திகழ்ந்தது. எபேசு சபைக் காலத்திற்குரிய தூதன், நான் நன்கு அறிந்திருக்கிறதின்படி, பவுல் அப்போஸ்தலன்தான். (அந்த ஒவ்வொரு தூதர்கள் இன்னார் என்று வேதத்தில் பெயர் குறிப்பிடப்படவில்லை). எபேசுவில் சபையை நிறுவியவன் பவுல்தான், அவனே அந்த சபைக் காலத்திற்குரிய ஊழியக்காரனுமாவான். அவனுடைய ஊழியம் சபைக்கு ஒளியைக் கொண்டு வந்தது. அப்பொழுது பரிசுத்த யோவான் பவுலுக்குப் பிறகு ஊழியத்தை மேற்கொண்டான். அதன் பிறகு, பாலிகார்ப் என்பவர் தொடர்ந்து உள்ள காலத்தில் வந்தார். 7. சிமிர்னா சபையின் காலத்திற்கு, நான் அறிந்து கொண்ட அளவுக்கு, ஐரேனியஸ் என்பவர் தான் தூதன். ஏன் பாலிகார்ப்பை நான் இச்சபைக்குரிய தூதனாக தெரிந்து கொள்ளாமல், ஐரேனியஸை தெரிந்து கொண்டேன் என்பதற்கான காரணத்தை நான் உங்களுக்குக் கூற விரும்புகிறேன். அநேக சபை குருமார்களும், வேதபோதகர்களும், அந்த தூதன் பாலிகார்ப்தான் என்று எண்ணுகிறார்கள். பாலிகார்ப் பரிசுத்த யோவானின் சீஷன் என்பது உண்மையே. பாலிகார்ப் தன்னுடைய சாட்சியை, தான் இரத்த சாட்சியாக மரித்ததின் மூலம் முத்திரையிட்டார், அவரை அவர்கள் அவரது இருதயத்தின் கீழ் கத்தியால் குத்திக் கொன்றார்கள். அவர் ஒரு மகத்தான மனிதர்தான், குறிப்பிடத்தக்க மனிதர்கள்தான், தேவமனிதர்கள்தான், இனிமையானவர் கூட. நமக்குக் கிடைத்த மகத்தான கிறிஸ்தவர்களுக்குள் அவர் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. அவருடைய வாழ்க்கைக்கு எதிராக நீங்கள் ஒன்றும் சொல்ல முடியாது. 8. ஐரேனியஸை நான் தெரிந்து கொண்டதின் காரணம் என்ன வெனில், பாலிகார்ப்பைவிட, ஐரேனியஸ் பரிசுத்த வேதத்திற்கு மிகவும் அதிகமாக நெருக்கமாக இருந்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஸ்தாபனத்தை உண்டாக்குகிறதான ரோமானிய யோசனைக்கு பாலிகார்ப் இணக்கமாக இருந்தார். ஐரேனியஸோ மிகவும் உறுதியுடன் அதை எதிர்த்தார். அவர் முழுவதுமாக அதை வெளிப்படையாகக் கண்டித்தார். அதன்பிறகு, நிசாயா ஆலோசனை சங்கம் கூடிய பொழுது, நாம் யாவரும் அறிந்திருக்கிறபடி, அங்கே அந்த விஷயம் விவாதத்திற்கு வந்தது; மிகப் பெரிய தீர்வு செய்து கொள்ள வேண்டிய விஷயமாக அவர்களுக்கு இருந்தது என்னவெனில், தேவன் மூன்று நபர்களா, அல்லது ஒருவரா என்பது தான். தேவன் தேவனாகவே இருக்கிறார், அவர் ஒரு ஆள்தான் என்ற அந்தக் கருத்தின் பட்சத்தில் ஐரேனியஸ் நின்றார். 9. நான் இப்பொழுது “ நிசாயாவுக்கு முந்தின காலத்தின் பிதாக்கள்'' (Ante-Nicene Fathers) என்ற புத்தகத்தின் வால்யூம் 1ன் பக்கம் 412ல் இருந்து ஒரு சிறிய மேற்கோளை வாசிக்கட்டும். நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், அது “ நிசாயாவுக்கு முந்தின காலத்தின் பிதாக்கள்'' என்ற புத்தகத்தின் 1வது வால்யூம் 412வது பக்கம். இப்புத்தகத்திற்கு மூன்று வால்யூம்கள் உண்டு. நீங்கள் அவை முழுவதையுமே வாசிக்கலாம். அநேக அத்தியாயங்கள் அதில் உண்டு. நான் இப்பொழுது இதின் கடைசிப் பாகத்தில், கடைசி இருபது, முப்பது வசனங்களை வாசிக்கிறேன். அவைகள் யாவும் நான் வாசிக்காமல் அதன் ஒரு பாகத்தை மட்டும் வாசிப்பேன். “ அவர் வேறு என்னவெல்லாமாக அழைக்கப்பட்டாரோ, அவையெல்லாம், அந்த ஒருவருக்கே கொடுக்கப்பட்ட பட்ட மாகும். (பாருங்கள், அவர்கள் அவரை பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று அழைத்தனர் அவை யாவும் பட்டங்களே தவிர, நாமங்கள் அல்ல என்று இவர் இங்கே கூற முற்படுவதைப் பாருங்கள். இன்றைக்கு நாம் போதிப்பதற்கு அது சரியாக இருக்கிறதே), “ உதாரணத்திற்கு'' (அதன்பிறகு விவரக் குறிப்பு காணப்படுகிறது) (ஆங்கிலத்தில்) : “ வல்லமையுள்ள ஆண்டவர், யாவர்க்கும் பிதாவாகிய கர்த்தர், சர்வ வல்லமையள்ள தேவன், உன்னதமானவர், சிருஷ்டிகர், உருவாக்கியவர் போன்றவை. இவைகள் யாவும் தொடர்ந்து வருகிற வெவ்வேறு நபர்களுக்குரிய பட்டங்களும், பெயர்களும் அல்ல, இவை ஒருவராயிருக்கிற அவருக்கே உரித்ததாகும்'' (ஆமென்). “ ஒரே நாமத்தினால் ஒரே தேவனாகிய பிதாவானவர், பிழைத்திருக்கும்படியான தயவை யாவற்றுக்கும் அளித்திருக்கிறார்.'' 10. ஐரேனியஸும், “ இந்தப் பட்டங்கள் யாவும் ஒரே நாமத்திற்குள்ளாக அதற்குரியதாகவே இருக்கிறது; அது ஒரு தேவனுக்குரியதாகும், அவைகள் யாவும் பட்டங்களாக மாத்திரம் இருந்து, அவர் என்னவாக இருக்கிறாரோ அதைப் பற்றிக்கூறுபவைகளாக மட்டுமே இருக்கின்றன'' என்று கூறியுள்ளார். அவர் சாரோனின் ரோஜா, அது அவருக்குரிய பட்டமாகும். அவர் என்னவாக இருக் கிறாரோ அதைப் பற்றி கூறுகிறது இப்பட்டம். அவர் விடிவெள்ளி நட்சத்திரம், அவர் அல்பாவும், ஓமெகாவுமாயிருக்கிறார். இவைகளெல்லாம் அவர் என்னவாக இருக்கிறாரோ அதைப் பற்றிக் கூறும் அவருடைய பட்டங்கள் மட்டுமே. அவர் பிதா, அவரே குமாரன், அவரே பரிசுத்த ஆவியானவர். ஆனால் ஒரே யொரு தேவன்தான் உண்டு. ஒரேயொரு தேவன், அவர் நாமமும் ஒன்றே. இவ்வாறாக ஐரேனியஸ் வேதவாக்கியத்தைக் குறித்த சரியான வியாக்கியானத்தைப் பெற்றிருந்தார். இந்தக் காரணத்தினால் தான் நான் ஐரேனியஸ் சரியாக இருந்தார் என்று கருதுகிறேன். 11. இன்னொரு விஷயத்தையும் நான் உங்களுக்கு வாசித்துக் காட்ட விரும்புகிறேன். அது, “ எவ்வாறு அது சம்பவித்தது?'' என்ற புத்தகத்திலிருந்து இப்புத்தகம் வரலாற்றாளர்களால் எழுதப் பட்டதாகும். ஆர்.சி.ஹேஸல்டன் என்பவர் ஆதிகாலத்து சபைகளைப் பற்றி எழுதிய சரித்திரம்தான், “ எவ்வாறு இது சம்பவித்தது'' என்ற புத்தகமாகும். அப்புத்தகத்தின் 180ம் பக்கத்தில், “ கி.பி.177 முதல் கி.பி.202 முடிய உள்ள ஐரேனியஸின் காலத்தில் இருந்த ஆவிக்குரிய வரங்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நான் மேற்கோள் காட்டுவதன் நோக்கம் என்னவெனில், இச்செய்தி ஒலிநாடாவில் பதியப்பட்டுக் கொண்டிருக்கிறது, பாருங்கள். மேலும் புத்தக வடிவிலும் இது வரப்போகிறது. “ ஐரேனியஸின் காலத்தில், பிரான்ஸ் தேசத்தில் இருந்த அநேக அப்போஸ்தல சபைகளில், பரிசுத்த ஆவியின் எல்லா வரங்களுமே இருந்தன''. ஐரேனியஸ் அவர்களுக்கு போதித்து வந்திருந்தபடியினால் நிலைமை அவ்வாறு இருந்தது, பாருங்கள். பிரான்ஸில் உள்ளலையான் பட்டணத்தில், “ லையான் பட்டணத்தில் இருந்த ஐரேனியஸின் சபையின் உறுப்பினர்கள் யாவருமே அன்னிய பாஷைகளில் பேசினார்கள். யாராவது மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பப்படுவது காண்பது ஏதோ அசாதாரணமான நிகழ்ச்சியல்ல. எல்லாவிடங்களிலும் சுவிசேஷ சபைகளில் பிணியாளிகள் சொஸ்தமடைதல் என்பது அன்றாட நிகழ்ச்சியாக இருந்தது.'' ஐரேனியஸ் எப்படி போதிக்க வேண்டுமென்று அறிந்திருந்தார். “ அற்புதங்கள் அடிக்கடி நடைபெற்றன. உண்மையில், ஐரேனியஸ் காலத்து சபைகள், தேவனுடைய அதியற்புத பிரத்தியட்சமாகுதலைப் பெற்றிராமல் ஒருபோதும் இருக்கவில்லை. அப்பிரத்தியட்சமாகுதல், ஒன்று தரிசனத்தில் மூலமாகவோ, அல்லது இயற்கையின் பூதங்கள் செயல்படுவது நிறுத்தி வைக்கப்படுவதின் மூலமாகவோ அல்லது ஒரு அற்புதத்தின் மூலமாகவோ நடைபெற்றன. இவையெல்லாம், அன்றைக்கு இருந்த சுவிசேஷக் கிறிஸ்தவர்களுக்கு, தாங்கள் தேவனுக்குப் பிரியமான சீஷர்கள் என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டவே நடைபெற்றன. ஆனால் கடந்தகால வரலாற்றைப் பார்க்கையில், முதலாவது ரோமச் சபையில், எப்பொழுதாகிலும் மரித்தவனை உயிரோடெழுப்பிய ஒரு சம்பவத்தைப் பற்றிய நிரூபணம் கூட சேகரிக்க நம்மால் முடியவில்லை'' என்று கூறுகிறார். 12. இவ்வரலாற்றை எழுதினவர்கள் எந்தவொரு அணியைச் சார்ந்து கொள்ள ஆர்வம் கொண்டவர்களல்ல, அவர்கள் வரலாற்றாளர்களானபடியால், உண்மைகளைத் தெரிவிப் பதிலேயே நாட்டம் கொண்டவர்கள். 13. எனவேதான் நான் ஐரேனியஸ் சிமிர்னா சபைக்குரிய தூதன் என்று விசுவாசிக்கிறேன். ஏனெனில், பவுலும் ஏனைய அப்போஸ்தலர்களும் ஒப்படைத்துச் சென்ற அதே விசுவாசத்தையும், அதே வேத உபதேசங்களையும் கொண்டவராக ஐரேனியஸ் இருந்தார். வேதவாக்கியத்தின் அடிப்படையைக் கொண்ட அதே வேத உபதேசங்களைப் போதித்தல் ஒவ்வொரு தடவையும், அதே விதமான கிரியைகளையே பிறப்பிக்கும். தேவனுடைய நியமத்தை எளிமையாக விசுவாசித்து, அதை அப்படியே எழுத்துக்கு எழுத்து நிறைவேற்றினீர்களானால், சபைகள் என்ன சொல்லுகின்றன என்பது பற்றி அக்கறையில்லை, அது கூறுகிறதின்படி அப்படியே பின்பற்றினால், ஆதியில் நடந்த அதே கிரியகைள் இப்பொழுது ஏற்படும். அதைத்தான் ஐரேனியஸும் செய்தார். 14. பாலிகார்ப் அருமையான மனிதர் என்று நான் உணருகிறேன். ஆனால், நிக்கொலாய் மதஸ்தர் எவ்வாறு ஸ்தாபன முறைமைகளை உண்டாக்கிட முனைந்தார்களோ, அதேபோல் இவரும் அவ்விதமான கிரியைகளின் பட்சத்தில் மிகவும் அதிகமாக சார்ந்தவராக இருந்தார் என்பதை நான் உங்களுக்கு கூறுகிறேன். சபையை அவர்கள் ஸ்தாபன ரீதியாக ஆக்கி, அவ்விதமான முறையில் சகோதரத்துவத்தைக் கொண்டு வந்து யாவரையும் ஒன்றாக இணைக்க அவர்கள் கிரியை செய்தனர். இது மனித ஞானத்தின்படி சரியாக தோன்றலாம். ஆனால், பாருங்கள், ஆவியானவர் மானிட அறிவுக்கு மிகவும் தொலைவில் இருக்கிறார். அறிவு பூர்வமாக நீங்கள் சிந்தித்தால் ஆவியின் சிந்தைக்கு விரோதமான சிந்தை கொண்வடர்களாக ஆகிவிடுவீர்கள். “ என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல...''. எனவே, அவரை திட்ட வரைபடத்திற்படி (Blueprint) பின்பற்றுவது ஒன்று தான் நாம் செய்ய வேண்டியதாயிருக்கிறது. 15. நான் இங்கிருந்து இன்றிரவில் சிக்காகோ போகிறதாக வைத்துக் கொள்வோம். நான் இங்கிருந்து வெளியேறி, ஒரு திசை காட்டும் கருவியை வைத்துக் கொண்டு “ சிக்காகோ இந்தத் திசையில் இருக்கிறது, சரி நான் புறப்படுவேன்'' என்று சொன்னால், ஜெபர்சன்வில்லை விட்டுக்கூட புறப்பட முடியாது. பாருங்கள்? நான் சரியாக சிக்காகோ போக வேண்டுமானால் வழிகாட்ட எனக்கு ஒரு சாலை வரைப்படம் தேவை. அதின்படி போனால் அங்கே பாதையானது ஒழுங்காக தன் வழியே செல்லும், அதில் ஒரு மோட்டார் வாகனத்தில் பயணம் புறப்பட்டுப் போனால், ஆறு அல்லது ஏழு மணி நேரத்தில் சிக்காகோ போய் சேர்ந்து விடலாம். ஆனால் உள்ள பாதையை சுருக்கிக் கொண்டு போக முடியாது. விமானமும் தன் ஆகாய மார்க்கத்தில் தன் பாதையை சுருக்கிக் கொள்ள முடியாது, அதற்குரிய உயரத்தில், அதற்குரிய பாதையில், அதற்குரிய மார்க்கதிதில்தான் பறந்திட வேண்டும். 16. ஒருவழியானது உண்டாக்கப்பட்டிருக்கிறது, தேவனுக்கு ஒரு வழி உண்டு. தேவன், தன் சபைக்கென, தன் ஜனங்களுக்கென, ஒரு வழியை வைத்திருக்கிறார். அவ்வழியானது, ஒரு போதம், போப்புகள், கார்டினல்கள், ஆர்ச் பிஷப்புகள், அல்லது ஜெனரல் ஓவர்சீர்கள் ஆகிய மனிதர்களால் ஆளுகை செய்யப்பட வேண்டுமென்று அவர் நோக்கங் கொள்ளவில்லை. ஜீவனுள்ள தேவனுடைய சபையை எழுப்பிக் கொண்டு வர, பரிசுத்த ஆவியானவரே அதற்கு போதகராக இருக்கிறார். பரிசுத்தமெல்லாம் ஒரு கார்டினல், அல்லது ஒரு மதகுருவுக்கு ஏகபோகமாக உரிமையாகி, அவர்களை பரிசுத்த மனிதர்கள் என்று சபையில் அழைப்பதற்காக அது இல்லை. பிரசங்கியார், மேய்ப்பர், டீகன்மார், தர்மகர்த்தா ஆகியோருக்கு எந்த அளவுக்கு பரிசுத்த ஆவியினிடத்தில் உரிமை உள்ளதோ, அதே அளவுக்கு சபையின் ஜனங்களுக்கும் உள்ளது. 17. அது நிக்கொலாய் மதஸ்தர் என்று அழைக்கப்பட்டதன் காரணம் என்னவெனில்... நேற்று இரவு அதைப் பற்றிப் பார்த்தோம். அவ்வார்த்தையை பதம் பிரித்து பொருள் கண்டோம். அது கிரேக்க மொழியிலுள்ள. “ நிக்கோ'' என்றால் வென்று கீழே தள்ளுதல்'' என்று பொருள். எதை வென்று கீழே தள்ளுதல்? நிக்கொ -லெய்டேன் லெய்டி - அதாவது, “ சபையின் ஜனங்களை வென்று மேற்கொண்டு விடுதல்'' என்று பொருள். அவ்வாறு அவர்களை வென்று கீழே தள்ளி, அவர்களுக்குள் ஒரு மனித ஒழுங்கை, நியமத்தை திணித்து, மதகுருமார்கள் அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தி, இவர்கள் ஒன்று கூடி எவ்வாறு போதிக்க வேண்டுமென்று முடிவு கட்டுகிறார்களோ, அதற்கேற்ப ஜனங்களுக்கு போதிப்பது என்ற விதமாக நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள் ஆரம்பித்தன. நிசாயா ஆலோசனை சங்கத்தில் இவ்வாறு தான் இவ்விஷயம் அரங்கேறியது. ஏனெனில் அதேவிதமான மக்கள் நிசாயாவில் நடந்த ஆலோசனை சங்கத்தில் இவ்வாறுதான் இவ்விஷயம் அரங்கேறியது. ஏனெனில் அதேவிதமான மக்கள் நிசாயாவில் நடந்த ஆலோசனை சங்கத்தில் ஒன்றுகூடி இவ்வாறு ஒருமனிதன நியமத்தை நிர்ணயித்தார்கள். வியாழக்கிழமை இரவில் நிசாயா ஆலோசனை சங்கத்தைப் பற்றி பார்க்கப் போகிறதினால், நான் இதைப் பற்றி இன்று அதிகம் பேசப் போகிறதில்லை. 18. ஆனால் அங்கே தான் ரோமன் கத்தோலிக்க சபையானது உருவாக்கப்பட்டது. பவுல், ஐரேனியஸ், பரிசுத்த மார்ட்டின் ஆகியோரின் ஊழியத்தில் கிடைத்த ஆத்துமாக்களைக் கொண்ட குழுவிலிருந்து சிலரை வேறு பிரித்துக் கொண்டு கத்தோலிக்க சபை உருவாயிற்று. அவர்கள் அஞ்ஞான மார்க்கத்திலிருந்து மனந்திரும்பி கிறிஸ்தவர்களானார்கள். அவர்கள் சபைக்கு பழைய ஏற்பாட்டு முறைமையிலான ஊழிய முறைமைக்குள் மீண்டும் இழுத்துக் கொண்டு வர விரும்பினர். பழைய ஏற்பாட்டில் எப்படி, பிரதான ஆசாரியர்கள் வம்சவழி ரீதியாக தேர்ந்தெடுக் கப்படுகின்றனரோ, அதே போல் அப்போஸ்தலப் பட்டத்திற்கு வாரிசு தேர்ந்தெடுத்தல் என்று கொண்டு வந்து, போப்பை அந்த ஸ்தானத்தில் வாரிசாக வைத்து, ஒரு போப்பிற்குப் பிறகு அடுத்த போப்பை வாரிசு முறையில் தேர்ந்தெடுத்து, இவ்வாறாக அடுத்தடுத்து போப்புகளை தேர்ந்தெடுக்கிற முறையைக் கொண்டு வந்தனர். இவ்வேதாகமம் முழுவதிலும் நாம் ஆராய்ந்து பார்த்தால், அது எப்படி வேத விரோதமானது என்றும், தேவன் அதை ஆரம்பமுதலே எவ்வாறு கடிந்து கொண்டு கண்டனம் செய்தார் என்பதையும் நீங்கள் காணலாம். இது சத்தியமாயிருக்கிறது. “ நான் இதை வெறுக்கிறேன்'' என்று தேவன் கூறுவதைப் பற்றி, நேற்றிரவில் பிரசங்கித்த சபைக் காலத்தைப் பற்றிய செய்தியில் கேட்டோம். சபையும் இதை வெறுத்தது. 19. சபையானது மனிதனால் நடத்தப்பட வேண்டும் என்பது தேவனுடைய நோக்கம் அல்ல. தேவனே தன் சபையை நடத்திச் செல்கிறார், அவர் ஆவியின் வரங்களைக் கொண்டு சபையை நடத்திச் செல்கிறார். ஆவியில் சீர்திருத்தம் கொண்டு வரவே தேவன் சபையில் ஆவிக்குரிய வரங்களை அளித்திருக்கிறார். அவருடைய சபையில் ஐந்து ஊழிய உத்தியோகங்கள் அவருக்கு உள்ளது. அவைகளில், முதலாவது, அப்போஸ்தலர்கள், அதாவது மிஷனரிகள் ஊழியம். மிஷனரி அல்லது அப்போஸ்தல ஊழியமானது, இருக்கிற அழைப்புகளிலேயே மிக உயர்ந்த ஒன்றாகும். "மிஷனரி' என்ற வார்த்தைக்கு அனுப்பப்பட்டவன்' என்று அர்த்தமாம். "அப்போஸ்தலன்' என்ற வார்த்தைக்கும் "அனுப்பப்பட்டவன்' என்னும் அதே அர்த்தம்தான். அவர்கள் ஏன் தங்களை மிஷனரி என்று அழைக்கப்படுவதையே தெரிந்து கொண்டார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. எப்படியாயினும், அவர்கள், அப்போஸ்தலர்களே. அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், போதகர்கள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள் ஆகிய இந்த ஐந்தும் அவருடைய சபைக்கென தேவனுடைய தெரிந்து கொள்ளப்பட்ட உத்தியோகங்களாகும். 20. அதன் பின்பு, ஒவ்வொரு உள்ளூர் சபையிலும் ஒன்பது வரங்கள் மக்கள் மத்தியில் வருகிறது, அவை, விவேகம், ஞானம், சுகமளித்தல், அற்புதங்களைச் செய்தல், அன்னிய பாஷைகளில் பேசுதல், பாஷைகளை வியாக்கியானம் செய்தல் போன்றவை... இவ்வரங்கள் யாவும் உள்ளூர் சபைகளில் இயங்குகின்றன. சபையி லுள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் உரிய தனிப்பட்ட ஊழியம் ஒன்றுண்டு. அந்த தனிப்பட்ட ஊழியமானது மற்ற ஊழியத்தோடு இணைந்தே போகிறது. இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய சபை பக்திவிருத்தியடைவதற்காகவே இவ்வூழியங்கள் உள்ளன. 21. இந்த கோடுகளை நான் இங்கே வரைந்துள்ளேன். முதல் சபை எபேசு, பிறகு சிமிர்னா, பெர்கமு, தியத்திரா, சர்தை, பிலதெல்பியா, லலோதிக்கேயா. இவை தொடர்ந்து செல்கையில், இந்த முதலாம் சபைக்கு ஆவியின் பரிபூரணம் உண்டாயிருந்தது, ஆனால் இந்த சபைக்காலத்தின் முடிவில் அவையெல்லாம் வெளியே தள்ளப்பட்டது என்று நாம் காண்கிறோம். அடுத்த சபைக்காலம் கொஞ்சம் வெளித்தள்ளியது; அடுத்தது இன்னும் கொஞ்சம், அதற்கடுத்து இன்னும் கொஞ்சம், இவ்வாறு கடைசியில் ஒரு சிறு துளி மட்டுமே இருக்கக் கூடிய அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது. தியத்தீரா சபையின் காலத்தைப் பற்றி நாம் பார்க்கப் போகிறோம், ''உன்னிடம் சில காரியங்கள் உண்டு'' என்று அவர் கூறினார். 22. தியத்தீராவுக்குப் பிறகு, தேவன், மார்ட்டின் லூத்தர் என்ற பெயருள்ள ஒரு ஜெர்மானியரை எழுப்பினார், அவர் சபையை மீண்டும் தன் நிலைக்கு திருப்பினார். அது மீண்டும் கொஞ்சம் சரியாக இயங்க ஆரம்பித்தது. அவர் விசுவாசத்தினால் நீதிமானாகுதல் என்பதைப் பற்றி பிரசங்கித்தார். அதற்குப் பிறகு, ஜான்வெஸ்லி வந்து, பரிசுத்தமாகுதல் பற்றி பிரசங்கித்தார். இப்பொழுது இங்கேயுள்ள ஏழாவது சபைக் காலத்தில் மீண்டும் அவர்கள் அற்புத அடையாளங்களைக் கொண்டிருந்த பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெறுதல் என்ற நிலைக்கு நேராக திரும்பி வந்தார்கள். 1500 ஆண்டுக்காலம் சபையானது இருண்ட காலங்களுக்குள் இருந்து வந்திருக்கிறது. சபைக் காலத்தில் மிகவும் நீளமான, மிகவும் இருண்டதாக சபைக்காலம் அங்கே இருக்கிறது. நீதிமானாகுதல், பரிசுத்தமாகுதல், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெறுதல் ஆகியவற்றின் காலங்களில் தான் முறையே படிப்படியாக சபையானது இருண்ட காலங்களிலிருந்து வெளியே வர ஆரம்பித்தது. “ இந்த காலத்தின் முடிவில், சிறுபான்மையோர் பிழிந்தெடுக்கப்படுவார்கள். ஏனெனில், பெந்தெகொஸ்தேயில் இருந்ததுபோலுள்ள அதே சபையானது கடைசியில் தோன்றி, ஆதியில் செய்தது போலவே கிரியை செய்வார்கள். (ஓ தேவனே, நான் அந்த விஷயத்திற்குப் போகிற வரையிலும், பேசாதபடி என் வாயை மூடிக் கொண்டிருக்கட்டும்). நீங்கள் பார்த்தீர்களா? ஆனால் அதை நான் காண முடிகிறது. நீங்கள் அதைக் காணும் வரை பார்த்திருங்கள். இக்கடைசி சபைக் காலத்திற்குரிய தூதன் ஸ்தாபனங்களை வெறுக்கிறவனாக இருப்பான் என்பதை நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். ஆவியானவர் பிள்ளைகளை எழுப்புவார். அது எப்பொழுதும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. இப்பொழுது நமக்கு.... 23. நீங்கள் இங்கே கவனித்துப் பாருங்கள். ஆதியில் அது எவ்வளவு மகத்தானதாக இருந்தது, போகப்போக அடுத்து வந்த காலங்களில் எப்படி அது ஒடுங்கிப் போய் கடைசியில் (இருண்ட காலத்தில்) முற்றிலும் அற்றுப் போகிற நிலைக்கு வந்தது. பிறகு, மீண்டும் அது ஆரம்பிக்கிறது. ஐந்தாவது சபைக்காலத்தில் லூத்தர் அதை வெளியே இழுத்தார்; நீதிமானாகுதல் என்ற செய்தியின் மூலம் அதன் பிறகு, பரிசுத்தமாகுதல், பரிசுத்த ஆவியின் ஞானஸ் நானம் ஆகிய செய்திகள் வந்தன. கடைசி சபைக் காலத்தில், ஒளியானது முழுவதும் நீங்கிப் போகிறது போலுள்ள அளவுக்கு நிலைமை மிகவும் மோசமடைகிறது. அங்கே மிகச் சிறிய அளவுக்கு உண்மையான சபை சுருங்கிப் போய், அதினால் தேவன், எங்கே உள்ளதும் போய்விடக்கூடாதே, இரட்சிப்பதற்கு மாம்சமானவர் ஒருவரும் இல்லாமற் போகக்கூடாதே என்று கருதி, அதற்காக அவர் தன்னுடைய கிரியையை தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் நிமித்தம் சீக்கிரமாகவே முடித்துக் கொண்டு விடுவார். அப்பொழுதுதான் நீங்கள் சரியாக கடைசி காலத்தில் இருப்பீரகள். இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 24. நாம் இப்பொழுது சிமிர்னா சபையின் காலத்தைப் பற்றி பார்க்க துவங்கப் போகிறோம். முதலாவதாக, நான் இதைப் பற்றி சற்று பாகம் பாகமாக பிரித்து தாளில் எழுதி வைக்க விரும்பு கிறேன். இரண்டாவது சபைக் காலத்தின் பெயர் சிமிர்னா ஆகும். இந்த இரண்டாவது சபைக்காலத்தின் நட்சத்திரமாக, அதாவது அச்சபைக்குரிய தூதனாக, ஐரேனியஸ் விளங்கினார் என்று நான் விசுவாசிக்கிறேன். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். (நீங்கள் அதை அரை மனதோடு நம்பினாலும் சரி, முழுவதுமாக நம்பினாலும் சரி). ஐரேனியஸ் தூதனாக இருந்தார், ஏனெனில், அவரது ஊழியம் ஃப்ரான்ஸ் (கோல்) தேசத்தையே அசைத்தது. அங்கே சபைகளை அவர் நிறுவினார், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் கொண்டு அச்சபைகள் அந்நிய பாஷைகளில் பேசவும், மரித்தோரை எழுப்பவும், பிணியாளிகளை குணமாக்கவும், மழையை நிறுத்தவும், தினந்தோறும் அற்புதங்களை செய்து கொண்டும் இருந்தன. ஜீவனுள்ள தேவன் தங்கள் மத்தியில் ஜீவிக்கிறார் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். ஐரேனியஸ் தேவனுடைய மனுஷனாயிருந்தார்; அதினால்தான் அப்பேர்ப்பட்ட கிரியைகளை செய்தார். நிக்கொதேமு இயேசுவைப் பற்றி “ ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்ய மாட்டான்'' என்றான். 25. சிமிர்னா பட்டணத்தில் வாணிபம் சிறப்புற்றிருந்தது. மேற் கத்திய நாடுகளுக்கும், லீதியாவுக்கும், அவற்றின் பொருட்களுக்கு சிமிர்னா ஒரு வர்த்தகச் சந்தையாக விளங்கியது. ஆசியாவிலுள்ள மூன்றாவது பெரிய நகரமாகவும், பெரிய துறைமுக நகரமாகவும் சிமிர்னா விளங்கியது. சிமிர்னா பட்டணத்தின் செல்வம், ஆலயங்கள், கட்டிடங்கள், கல்விச் சாலைகள், மருத்துவம், விஞ்ஞானம் இவை குறிப்பிடத்தக்க அளவுக்கு இருந்தது. சிமிர்னாவில் வாழ்ந்த யூதர்கள், அப்பட்டணத்து மக்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள். பாலிகார்ப்தான் சிமிர்னாவின் முதல் கண்காணியாவார் (பிஷப்). பாலிகார்ப்பும் ஏனைய உத்தம ஊழியக்காரர்களும், சிமிர்னாவின் விசுவாசிகளுக்குள் தேவனைப் பற்றும் ஆழமான விசுவாசத்தை நிலைநாட்டினார்கள். ஆதிகாலத்து சபையின் பிதாக்கள் சிமிர்னாக்காரர்களுக்கு சத்தியத்தைப் பற்றி நல்லா ஆலோசனைகளைக் கூறினார்கள். இச்சபைக் காலத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயர் சிமிர்னா, சிமிர்னா என்றால் “ கசப்பு'', “ வெள்ளைப்போளம்'' என்று அர்த்தமாம். கசப்பு மரணத்தை எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில் அச்சபைக் காலத்து மக்கள் உபத்திரவப்படுத்தப்பட்டு மரித்தனர். 26. அச்சபை உபத்திரவத்தை அனுபவித்த ஒன்றாகும். “ உபத்திரவப்படுத்தப்பட்டவர்கள்'' என்று தேவன் அவர்களை அழைத்தார். தேவன் அவர்களுடைய உபத்திரவங்களைப் பார்த்துக் கொண்டிருந்து, அதைத் தாங்கிக் கொள்ள கிருபை அளித்தார். அவர்களுடைய உபத்திரவங்களை பார்த்துக் கொண்டிருந்து, மரணத்தின் மேல் ஜெயங்கொடுத்தார். அவர்களுடைய வறுமையைப் பார்த்து விட்டு, தன்னிடத்தில் ஐசுவரியவான்களாய் விளங்கச்செய்தார். சிமிர்னா சபையானது, உபத்திரவம் என்னும் அக்கினி சூளையினுள் கடந்து சென்று பலியாக எரிந்து, அதினால் தேவனுக்கு சுகந்த வாசனையாக திகழ்ந்தனர். சிமிர்னாவின் சபையிலுள்ள மீதியாயிருக்கிறவர்களைப் பற்றியே நான் கூறுகிறேன். அந்த பழைய சிமிர்னா சபையையல்ல, அதிலுள்ள மிதியாயிருக்கிறவர்களைப் பற்றி கூறுகிறேன். அவர்கள் 10 நாட்கள் உபத்திரவப்படுவார்கள் என்று சொல்லப்பட்டிருந்தது. அப்பத்து நாட்கள் உபத்திரவம் என்பது, அவர்களுக்கு ஏற்பட்ட “ இரத்த ஆறு ஓடிய பத்தாண்டுக்கால உபத்திவரங்கள்'' ஆகும். 27. அக்காலத்தில் ரோமச் சக்கரவர்த்தியொருவன் இருந்தான். அவனது பெயரைக்கூட என்னால் சரியாக உச்சரிக்கக் கூடுமோ என்னவோ தெரியவில்லை. கி.பி.67-ல் இருந்த கொடுங்கோலன் நீரோ மன்னனுக்குப் பிறகு, வந்த மன்னர்களிலேயே மிகவும் இரத்தவெறி பிடித்த கொடுங்கோலனான இம்மன்னன் கி.பி.303 முதல் கி.பி.312 முடிய அரசாண்டான். அவன் பெயர் டயக்னீஷயன். 28. தேவன், மரணபரியந்தம் அவரைப் போல உண்மையாயிருக்கும்படி சிமிர்னாவினருக்கு புத்தி சொல்லுகிறார். “ பிதா எனக்குத் தந்தது போல உனக்கு ஜீவ கிரீடத்தைத் தருவேன்'' என்று கூறினார். உபத்திவரங்களில், ஜெயங்கொள்ளுகிறவனுக்கு இரண்டாம் மரணத்தின் மேல் ஜெயங்கொள்வதற்கான வாக்குத் தத்தத்தை செய்துள்ளார். “ உங்கள் சரீரத்தை கொல்ல வல்லவர் களுக்குப் பயப்படாமல், சரீரத்தையும் ஆத்துமாவையும் கொல்ல வல்லவருக்கே பயப்படுங்கள்''. சிமிர்னாக்காரர்கள் முடிவு பரியந்தமும் நிலைத்திருக்க வேண்டியதாயிருந்தது. “ மனிதனுக்குப் பயப்படாதே, ஜீவ கிரீடம் உனக்குக் கொடுக்கப்படும்'' என்று சொல்லப்பட்டது. சபைக் காலங்கள் தோறும், கிறிஸ்தவத்திற்கு வந்த உபத்திரவங்களுக்கு சிமிர்னா சபைக்காலம்தான் முன்னு தாரணமாகக் குறிப்பிடப்படுகிறது, இது மிகவும் முக்கியமானது. கர்த்தருக்கு சித்தமானால் அதைப் பற்றி இன்னும் சிறிது பார்ப்போம். 29. உங்களில் சிலர், சிலவற்றைக் குறித்துக் கொள்ள விட்டுப் போயிருந்தால்... நீங்கள் எழுதக் கூடாத அளவுக்கு நான் வேகமாக எழுதினால், அக்குறிப்புகளை எங்களிடமிருந்து நிச்சயமாக நீங்கள் பெற்றுக்கொள்ளலாம், அதை உங்களுக்குக் கொடுக்க நாங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறோம். (மன்னிக்கவும்). 30. இன்றிரவு, வெளிப்படுத்தின விசேஷம் 2ம் அதிகாரம் 8ம் வசனத்திலிருந்து நாம் துவங்க இருக்கிறோம். நேற்றிரவில் எந்தக் கட்டத்தில் அவரை விட்டுவிட்டு சென்றோம்? அவர் நிச்சய மாகவே நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை வெறுக்கிறார் என்று பார்த்தோம் அது சரிதானே? இப்பொழுது, தேவன் என்ன செய்கிறார்? வாஸ்தவமாக நாம் முதலில் எதைப் பற்றி பார்த்தோம்? இயேசு கிறிஸ்து யார்? அவர் என்னவாக இருக்கிறார்? என்பதைப் பற்றிய வெளிப்பாட்டினைத்தான் நாம் பார்த்தோம். அதற்கு அடுத்ததாக, நாம் கண்டுகொண்ட மகத்தான காரியம் என்னவெனில், தேவனைத் தவிர, வேறு எதையும் தேவனுடைய சபையின் மேல் ஆளுகை செய்ய ஏற்படுத்துவதை தேவன் வெறுக்கிறார் என்று பார்த்தோம். அவர் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறார். 31. இங்கே நமக்கு நான்கே வசனங்கள் உள்ளன. ஒரு விஷயத் தைப் பற்றிக் குறிப்பிட நான் சற்று இங்கே நிறுத்துகிறேன். இஸ்ர வேல் ஜனங்கள் உலகத்து மக்களைப் போல் தாங்களும் நடந்து கொள்ள விரும்பியபோது, அங்கே நின்று கொண்டிருந்த அந்த நல்ல தீர்க்கதரிசியாகிய சாமுவேல், “ நீங்கள் தவறு செய்கிறீர்கள்'' என்றான். உங்களில் எத்தனை பேர்களுக்கு அது நினைவில் இருக்கிறது? ஆனால் அவர்களோ, பெலிஸ்தியரைப் போலவும், ஏனையோரைப் போலவும் நடந்து கொள்ளவே விரும்பினார்கள். சரிதான், அதே காரியம் தான் இந்த முதலாவது சபைக் காலத்திலும் அப்படியே நடைபெற்றது. தேவன் தங்களை நடத்திச் செல்லுவதை ஜனங்கள் விரும்பாதது விசித்திரமான காரியம்தான். அவர்கள் ஒரு மனிதனைப் பின்பற்ற விரும்பினர். தேவனுடைய கிருபையானது, அவர்களுக்கு ஏற்கனவே ஒரு தலைவனாகிய தீர்க்கதரிசியையும், வானத்திலிருந்து உணவையும், பாவப் பரிகாரத்திற்காக அவர்களுக்கு ஒரு ஆட்டுக்குட்டியையும், மற்றும் இன்னும் எத்தனையோ நல்ல காரியங்களையும் அளித்திருந்த போதிலும், யாத்திராகமம் 19ம் அதிகாரத்தில் ஒரு பிரமாணத்தை அவர்கள் விரும்பினர். அவர்கள் தங்களுக்கு வேத பண்டிதர்களையும், சில மனிதர்களையும் வேண்டுமென்று விரும்பி, அதில் ஏதோ ஒன்றைப் புகுத்த விரும்பினர். 32.மனிதன் எப்பொழுதும் தன்னை உண்டாக்கிய சிருஷ்டிகரை விட புத்திசாலித்தனத்தில் மிஞ்சிவிட வேண்டும் என்று முயலுகிறான், ஆனால் அவன் தன்னையே அழித்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் சாதித்துவிடுவதில்லை. சில ஞாயிற்றுக்கிழமை களுக்கு முன்பாக, நான் “ கலப்பு மார்க்கம்'' என்ற தலைப்பில் பிரசங்கித்தேன். (உரைக்கப்பட்ட வார்த்தை வால்யூம் 2 எண்.13 -ஆசி). அதன்படியே தான் உள்ளது? எந்த ஒரு வித்துடனும் நீங்கள் வித்துக்கலப்பு செய்தால், அத்தோடு அது முடிந்து விடும். அதினால் மறுபடியும் தப்பிக்க முடியாது. ஒரு கோவேறுக் கழுதை மீண்டும் இன்னொரு கோவேறு கழுதையைப் பிறப்பிக்க முடியாது. அது வித்துக்கலப்படம் செய்து பிறப்பிக்கப்பட்ட ஜந்துவாகும். சன்னரக தானியத்தை வீரிய ஒட்டு சன்னரக தானியத்திலிருந்து பிறப்பிக்க முடியாது. அது நன்றாக வளரும், ஆனால் அது நல்லதல்ல. நீங்கள் அதைச் செய்ய முடியாது. இனக்கலப்பு செய்யப்பட்ட எந்த ஒன்றும் நல்லதல்ல. 33. வித்துக்கலப்பு செய்யப்பட்ட மார்க்கம் நல்லதாக இருக்காது. தேவன் கூறியவைகளோடு நீங்கள் எதையாகிலும் கூட் டினாலோ, அல்லது தேவன் கூறியவைகளில் இருந்து நீங்கள் எதையாகிலும் கழித்துப் போட்டாலோ, அப்படிப்பட்ட செய்கையிலிருந்துதான் கலப்பட மார்க்கம் உண்டாகிறது. அது பார்வைக்கு அழகாக இருக்கலாம். வித்துக் கலப்பு மூலம் பிறப்பிக்கப்பட்ட வீரிய ஓட்டுரக தானியம், இயற்கையான தானியத்தை விட மினுமினுவென்று இருக்கும். இரண்டு குதிரைகள் செய்கிற வேலையைவிட கூடுதலாக கோவேறு கழுதை கிரியை செய்யும். கிரியைகளினால் நாம் இரட்சிக்கப்படாமல், கிருபையினால் இரட்சிக்கப்பட்டிருக் கிறோம், சகோதரரே. “ கிரியைகளினால் இரட்சிக்கப்படாமல், கிருபையினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்” இப்படி குறிப்பிடுபவைகளைக் உணர்வோடு உட்கார்ந்திருக்கிறீர்களோ என்று கருதுகிறேன். ஏனெனில், பிரெஸ்பிடேரியன், மெதோடிஸ்டு மற்றும் பல்வேறு சபைகளைச் சேர்ந்தவர்கள் இங்கு இருக்கிறீர்கள். நாங்கள் அதை அறிவோம். நான் அவ்வாறு கருதுகிறேன். அவ்வப்பொழுது சற்று இறுக்கமான நிலையிலிருந்து உங்களை தளர்த்திக் கொள்ளுங்கள், அவ்வித நிலையிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். 34. இப்பொழுது கவனியுங்கள். இனக்கலப்பு அல்லது வித்துக் கலப்பு செய்யப்பட்ட எதுவும் நல்லதல்ல. தேவன் உண்டாக்கிய விதமாகவே இருக்கிற மூல அசல் வித்தையே நீங்கள் எடுத்துக் கொள்ளும்போது, நிஜமானவற்றையே நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். 35. இஸ்ரவேல் என்ற சபையானது யாத்திரை செய்து கொண்டு போகையில், தேவன் அவர்களை போஷித்து, அவர்கள் நலனில் சிரத்தையெடுத்து, அவர்களுக்காக யாவற்றையும் செய்தார். கடைசியில், அவர்கள் சுற்றிலும் இருந்த பெலிஸ்தியரையும், அம்மோனியரையும் மற்றோரையும் பார்த்துவிட்டு, “ அவர்களுக்கு இருப்பது போல் எங்களுக்கு இல்லையே, எனவே எங்களுக்கும் ஒரு இராஜா வேண்டும்'' என்று கேட்டார்கள். 36. அதே காரியத்தைத் தான் இன்றைக்கும் மக்கள் செய்கிறார்கள். நமது சகோதரிகள் தொலைக்காட்சியில், க்ளோரியா ஸ்வான்சன் மற்றும் இன்னும் யார் யாரையேவெல்லாம் நிகழ்ச்சிகளில் பார்த்துவிட்டு, அவர்கள் உடுத்தியிருக்கும் ஒருவிதமான உடைகளை தாங்களும் அணிய வேண்டுமென்று விரும்பி, அதை வாங்குகிற வரைக்கிலும் அவர்களால் அமைதியாக இருக்க முடியாது என்ற அளவில் இருக்கிறார்கள். பாருங்கள்? கடைவீதியில் ஏதாவது ஒரு பெண்மணியைப் பார்த்துவிட்டு, அவள் உடுத்தியிருக்கிறதை நீங்கள் சுட்டிக்காட்டி, “ இது அழகாயில்லையா?'' என்று கேட்பீர்கள். அப்பெண்மணி என்ன உடுத்தவேண்டும் என்று விரும்புவதைக் குறித்து, உங்களுக்கு என்ன அக்கறை தேவை? ஜனங்கள் இன்றைக்கு அவ்வாறுதான் இருக்கிறார்கள். ஒருவரைப் பார்த்து இன்னொருவர் பாவனை செய்ய விரும்புகிறார், இக்காலம் ஒருவர் இன்னொன்றைப் போல பாவனை செய்ய விரும்புகிற காலம். எல்விஸ் பிரெஸ்லியை எடுத்துக் கொண்டால், இன்றைக்கும் அவரைப் போல் பாவனை செய்யும் அநேக எல்விஸ் பிரெஸ்லிகள் இருக்கிறார்கள். அவருடைய நிகழ்ச்சிகளுக்கு வருகிறவர்களை இரயில் வண்டிகளில் நன்கு திணித்தாலும் இடம் போதாது, அவ்வளவு பெருங்கூட்டம் அவருடைய நிகழ்ச்சிகளுக்கு வருகிறார்கள். ஏனெனில் அவர் மாம்சப்பிரகாரமான கூட்டத்தினர் நடுவில் மிகவும் பிரசித்தி பெற்றவராக ஆகிவிட்டார். 37. ஒருவரைப் போல் இன்னொருவர் பாவனை செய்தல்! மார்க்கத்தில் நமக்கு இதே காரியம் உள்ளது. நான் அன்றொரு நாள் மார்ட்டின் லூத்தருடைய வரலாற்றை படித்துக் கொண்டிருந்தேன். அதில் கூறப்பட்டுள்ளதென்னவெனில், லூத்தர் கத்தோலிக்க சபையை எதிர்த்து நிற்பவராக நின்றதும், அசைக்க முடியாதபடி அவர் நிலை நின்றதும் ஒரு பெரிய இரகசியமல்ல, ஆனால் அவருடைய ஊழியத்தில் ஏற்பட்ட எழுப்புதலைத் தொடர்ந்து ஏற்பட்ட மதத்தீவிரவாதம், மூடபக்தி இவைகளின் நடுவில் அவர் தன் தலையை நிமிர்த்தி தேவ வார்த்தையோடு நிலை நின்றது தான் மிகப் பெரிய இரகசியம். இவ்வாறு வரலாற்றாளர்கள் கூறுகின் றனர். இங்குள்ள வரலாற்றாளர்களும் அதைப் பற்றி அறிவீர்கள். தேவன் இப்படிப்பட்ட சூழ்நிலையில் லூத்தரை தெளிவுற்றவராகவும் உத்தமமாகவும் இருக்கும்படி காத்துக் கொண்டாரே, அது பெரிய அற்புதம் தான். 38. இஸ்ரவேலர் இந்த சாமுவேல் தீர்க்கதரிசியினிடம் வருகிறார்கள். வந்து, “ எங்களுக்கு ஒரு வல்லரசை உண்டாக்கும்'' அதாவது, “ ஒரு இராஜாவை ஏற்படுத்தும்'' என்று கேட்டார்கள். அப்போழுது கர்த்தர் சாமுவேலிடம், அந்த யோசனையை நிராகரிப்பதாகக் கூறினார். தேவன் இக்காலத்தில் ஸ்தாபனங்களைப் பற்றிய காரியத்தை எப்படி நிராகரிக்கிறாரோ, அதைப் போலவே அப்பொழுதுள்ள காரியமும் இருக்கிறது. 39. சாமுவேலின் காலத்தில் தேவன் எப்படி அதை நிராகரித் தாரோ, அப்படியே ஸ்தாபனத்தையும் நிராகரிக்கிறார். அவர் ஜீவனையுடைய, இசைவாய் இயங்கிடும் உறுப்புக்களை நிராகரிப்பதில்லை. ஆனால் அவர் சபை ஸ்தாபனத்தை நிராகரிக்கிறார். நமக்கு ஆர்கனிசம் வேண்டும் (ஆர்கனிசம், ஜீவனோடு இயங்கும் அமைப்பாகும் - மொழிபெயர்ப்பாளர்), ஆனால் நமக்கு ஆர்கனி சேஷன் (ஜீவனற்ற ஸ்தாபன சபை - மொழிபெயர்ப்பாளர்) தேவையில்லை. ஏனெனில் அது நமக்கிடையில் பிரிவினை உண்டாக்குகிறது. “ நாங்கள் இன்னார், நாங்கள் இன்னார்'' என்கிறது. நீர் ஒரு கிறிஸ்தவரா என்று கேட்டால், “ நான் மெதோடிஸ்ட்'' என்று பதில் வருகிறது. “ நீர் ஒரு கிறிஸ்தவரா?'' என்று கேட்டால் “ நான் பாப்டிஸ்டு'' என்கிறார்கள். இவையெல்லாம் பன்றிக் கொட்டிலுள்ள பன்றிக் கொப்பானது என்பதைத் தவிர வேறு விசேஷமான அர்த்தம் கொண்டவை அல்ல. இவ்விதப் பெயர்களும் கிறிஸ்தவன் என்ற அழைப்புக்கும் சம்மந்தமே இல்லை. ஒரு கிறிஸ்தவன் என்பது தான் அர்த்தமுள்ளது! 40. அன்றொரு இரவில், ஒரு பெண்ணிடம் மேடையிலிருந்து கேட்டேன்; "நீ கிறிஸ்தவளா?'' என்று. 41. அதற்கு அவள், “ ஏன், நான் உங்களிடம் கூற விரும்புவது என்னவெனில், நான் ஒரு மெழுகுவர்த்தியை கொளுத்தி வைக்கிறேன்'' என்றாள். கிறிஸ்தவத்திற்கும் இதற்கும் என்னவோ சம்மந்தம் உள்ளது போல். 42. இன்னொரு மனிதன், “ நான் நிச்சயமாக ஒரு அமெரிக்கன்'' என்று கூறினான். அது நல்லதுதான். ஆனால் கிறிஸ்தவத்திற்கும் அதற்கும் சம்மந்தமேயில்லை. நீங்கள் வேறொரு இராஜ்யத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால், நீங்கள் கிறிஸ்வதராக இருக்கிறீர்கள். அது சரிதான். நீங்கள் உன்னதத்தில் இருக்கும் இன்னொரு இராஜ்யத்தில் உள்ளவர்களாக இருக்கிறீர்கள். 43. சாமுவேல் என்ன செய்தான்? இங்கே தேவன் என்ன செய்தாரோ அதே தான் சாமுவேல் செய்தான். சாமுவேல் இஸ்ரவேலரையெல்லாம் கூடிவரச் செய்து, “ இப்பொழுது நான் சொல்வதைக் கேளுங்கள், நான் உங்களை ஒன்று கேட்கப் போகிறேன், எப்பொழுதாவது நான் உண்மையல்லாத எவற்றையாவது உங்களுக்கு கூறினதுண்டா? உங்கள் மத்தியில் முன்னுரைத்தவை ஏதாவது நிறைவேறாமல் போனதுண்டா ?'' என்று கேட்டான். அவன் மேலும் “ தேவன் உங்களைப் போஷித்து, உங்களை காப்பாற்றி, உங்களுக்கு இந்தக் காரியங்களையெல்லாம் செய்ய வில்லையா? மற்ற புறஜாதிகளைப் போல் நடந்துகொள்ள நீங்கள் முயலுவதனால், நீங்கள் பாவம் செய்கிறீர்கள்'' என்று கூறினான். 44. அவர்கள், “ ஓ...'' என்றார்கள். 45. அவன், “ இன்னொரு காரியத்தை நான் உங்களிடம் கேட்கப் போகிறேன். உங்களிடத்திலிருந்து நான் எப்பொழுதாவது ஏதாவது பணம் பறித்துக் கொண்டதுண்டா? எப்பொழுதாவது உங்களிடம் காணிக்கைக்காக கையேந்தினதுண்டா? அல்லது கர்த்தருடைய நாமத்தினால் உங்களிடம் உரைத்த எந்தக் காரியமும் நிறை வேறாமல் போனதுண்டா ?'' என்றான். 46. அவர்கள், “ இல்லை, நீர் ஒருபோதும் எங்களுடைய பணத்தை பறித்துக் கொண்டதில்லை என்பது உண்மைதான். நீர் கர்த்தருடைய நாமத்தினால் எங்களுக்கு உரைத்த எதுவும் நிறைவேறாமற் போனதில்லை'' என்றார்கள். 47. “ அப்படியானால் எனக்குச் செவிகொடுங்கள்! ஏனைய ஜனங்களைப் போல் நடந்து கொள்ள விரும்புவதன் மூலம் நீங்கள் பாவம் செய்கிறீர்கள்'' என்று சாமுவேல் கூறினான். ஆனால் அவர்களோ, எப்படியாயினும் ஒரு ராஜா வேண்டுமென்று பிடிவாதமாக விரும்பினார்கள். அது சரியோ, தவறோ, அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல், பிடிவாதமாக தங்கள் யோசனையை செயல்படுத்த அவர்கள் விரும்பினர். 48. அதேவிதமான காரியத்தைத்தான் எபேசுவிலும் மக்கள் விரும்பி, நிக்கொலாய் மதஸ்தரின் போதனையை ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் அதைச் செய்தபொழுது, அது அவர்களை, சடங்காச்சார ரீதியில் மதமாறிய அஞ்ஞானிகள் கூட்டமும் கிறிஸ்தவர்களின் கூட்டமும் சங்கமமாகிய ஒரு சமஷ்டிக்குள் தள்ளிப்போட்டது, அச்செயல், 1500 ஆண்டுக்கால இருண்ட காலங்கள் ஏற்பட காரணமாக அமைந்தது. லூத்தர் வந்தபோது, அவர்களை அதிலிருந்து வெளியே இழுத்துவிட்ட போதிலும், லூத்தரன்கள் இரண்டாவது சுற்றில், எபேசுவில் அவர்கள் செய்தது போலவே மீண்டும் வழுவிப் போனார்கள். 49. இப்பொழுது நீங்கள் கவனித்துப் பார்த்தால், இந்த குத்து விளக்கு அவ்வாறு அமைந்திருக்கவில்லை. அவை இவ்வாறு தொடங்கி மேலே மேலே வருகின்றன. அவர் நின்று கொண்டிருக்கும் இடத்தில் உயரமாக இருக்கும் அகல் இங்கே உள்ளது. சிலுவையைப் போல் தோற்றமளிக்கும் இதில் அவர் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து அகன்ற பொழுது, கிறிஸ்தவமானது மங்கிப் போயிற்று. இவ்விளக்கை சிலுவையைப் போல் பார்த்தால், அவருடைய வலது கரம் விளக்கின் முதல் அகலிலும், அவரது இடம் கரம் ஏழாவதாக கடைசி அகலிலும் அமைந்திருக்கிறது. 4ம் அதிகாரத்தில் அவரை இவ்வாறு நாம் பார்த்தோம். அவருடைய கரம் முதல் சபையின் மேலும் கடைசி சபையின் மேலும் அமைக்கப்பட்டிருக்கிறது. அவர் அல்பாவும் ஓமெகாவு மாயிருக்கிறார். அல்பா மற்றும் ஓமெகாவாகிய இவ்விரு எழுத்துக்களுக்கிடையில் உள்ளதெல்லாம் மற்ற எழுத்துக்கள். ஆனால் அவர் “ அல்பாவும் ஓமெகாவும்'' என்று சிறப்பித்துக் கூறியுள்ளார். அவரது சிரசின் மேல் அவருடைய உடன் படிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வானவில் உள்ளது. 50.பெந்தெகொஸ்தேயில் ஏற்பட்ட ஒளியானது, அது துவங்கிய இடத்திலிருந்து நீங்கள் அதைக் கவனித்தால், அது படிப்படியாக மங்கிக்கொண்டே வந்துள்ளது என்பதைக் காணலாம், பாலிகார்ப் மற்றும் ஏனையோரும், தங்கள் சாட்சிகளை தங்களுடைய இரத்தத்தினால் முத்திரையிட்டார்கள். இக்காலத்தில் உண்டான உபத்திரவம் கிறிஸ்தவத்தை மிக இருண்ட நாட்களுக்குள் கொண்டு சென்றது. 51. இப்பொழுது பாருங்கள், குத்துவிளக்கின் அந்தப் பெரிய வளைவில் முதல் சபையையும், மறுபக்கத்தில் இருந்த சபையையும், முதலில் சிறிது ஒளியும் பிறகு ஒளி அதிகரித்துக் கொண்டேயும் வந்துள்ளது. அந்த நாள் வரைக்கிலும் வந்து அது எவ்வாறு பிரகாசிக்கிறது என்பதைப் பாருங்கள். இப்பொழுது இந்த காலத்தில் முடிவில், “ லவோதிக்கேயா என்ற வெது வெதுப்பான'' காலத்திற்குள் அது வரும் என்று முன்னுரைக்கப் பட்டிருக்கிறது. ஆகவே, அவர்களை அந்த நிக்கொலாய் மதஸ்தரின் போதகமானது அந்தக் கேட்டுக்குள் கொண்டு போய் விட்டுவிட்டதென்றால், பெந்தெகொஸ்தேயில் இருக்கும் நமக்கு ஏன் அது வேண்டும்? 52. “ ஒரு மிருகம் இருக்கும்'' என்று வேதம் கூறியதை நீங்கள் அறிவீர்கள். அதுதானே ரோமாபுரியின் போப்பு மார்க்கமாகும் என்பதை நாம் அறிவோம். அது முற்றிலும் உண்மை. அப்பொழுது அவர்கள் அம்மிருகத்திற்கு ஒரு சொருபத்தை உண்டாக்குவார்கள். சொரூபம் என்பது என்ன? ஒன்றைப் பார்த்து அதைப் போலவே செய்தல். அதுதான் சபைகளின் மகா சம்மேளனம், அல்லது சமஷ்டி. பெந்தெகொஸ்தே ஸ்தாபனமும் அதில் உள்ளது. ஒருவேளை வருகிறது, அப்பொழுது நீங்கள் ஒன்று ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும், அல்லது உங்களது கதவுகளை நீங்கள் திறந்து வைத்துக் கொண்டிருக்க முடியாது. அது உண்மையாயில்லையா என்பதைப் பாருங்கள். எனவே தான் அந்த காரியத்திற்கு நாம் மரண அடி கொடுக்கிறோம். ஆம், ஐயா. அவர்கள் ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டு, அதில் நீங்கள் சேராவிட்டால், அதாவது அந்த ஸ்தாபன அடையாளத்தை உங்கள் மேல் போட்டுக் கொள்ளாவிடில், நீங்கள் விற்கவோ கொள்ளவோ இயலாது என்ற நிலைமை வரும். 53. அந்நாட்களில் அவர்கள் சுட்டெரிக்கப்பட்டு அழிக்கப்பட் டார்களே, அதைப்போலவே அது இருக்கும். நான் அந்த அரங்க சாலைக்குள் நின்றேன். அங்கே அந்த க்ளேடியேட்டர்ஸ் நிற்கும் இடத்திலும் நின்றிருந்தேன். (அக்காலத்து ரோமாபுரியின் மிகப் பெரிய விளையாட்டரங்களில், கேளிக்கைக்காக அவ்வரங்கத்தினுள், சிங்கங்களுடன் கைதிகள், அடிமைகள், சன்மானம் பெற்றவர்கள் போரிடுவர். அவர்களைத் தான் க்ளேடியேட்டர்கள் என்று அழைப்பர். அப்படிப்பட்ட அரங்கத்தினுள் தான் கிறிஸ்துவை மறுதலிக்காத மெய்க்கிறிஸ்தவர்கள், அவிழ்த்து விடப்பட்ட பசித்திருக்கும் சிங்கங்களுக்கு முன்பாக நிறுத்தப்படு வார்கள் - மொழி பெயர்ப்பாளர்). நான் அங்கே ஒரு சிறு குழந்தையைப் போல் அழுதேன். அங்கே என்னுடைய கிறிஸ்தவ சகோதரர்கள், சகோதரிகள் சிறு குழந்தைகள் அநேகர் சிங்கங்களினால் கிழித்து, கொன்று புசிக்கப் பட்டதைக் குறித்து நான் அறிந்தேன். அவர்கள் யாவரும் விசுவாசத்திற்காக அவ்வாறு கொல்லப்பட்டுப் போயிருந்தால், நான் இப்பொழுது அவர்களை கைவிட்டுவிடுவேனோ? இல்லை, ஐயா, இல்லை சகோதரனே பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்தற்காக நான் தைரியமாக நிற்கட்டும். அதனால் எவ்வளவாய் புகழ்ச்சிக் குறைவாக எண்ணப்பட்டாலும் பரவாயில்லை. 54. சிலர் என்னிடம் ஒரு விஷயத்தைப் பற்றி கூற விரும்பிய துண்டு. சமீபத்தில் ஒருவர் என்னிடம் அதைப் பற்றி கேட்டும் விட்டார். எத்தனையோ பெரிய ஊழியக்காரர்களில் அநேகர் என்னைக் கூப்பிட்டு, “ சகோ.பிரன்ஹாமே, நீங்கள் அதைக் குறித்து பிரசங்கிப்பதை நிறுத்தாவிட்டால், எல்லா ஸ்தாபனங்களுமே உங்களுக்கெதிராக ஆகிவிடும்'' என்று கூறினார்கள். 55. “ என் ஒரேயொருவர் மட்டும், பரலோகத்தில் இருக்கிற அந்த ஒருவர் மட்டும், எனக்கெதிராக இருக்க மாட்டார், நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஒருவர் அவரே'' என்றேன். பாருங்கள்? ஒவ்வொரு ஸ்தாபனத்திலும் உள்ள மக்களை நான் நேசிக்கிறேன். நிச்சயமாக. ஆனால் நிறைவேறாத எந்த வார்த்தை யையாவது நான் கர்த்தருடைய நாமத்தினால் உங்களுக்கு எப்பொழுதாவது உரைத்ததுண்டோ ? பாருங்கள்? உரைத்தவைகளெல்லாம் சரியாக நிறைவேறியதுண்டா? உங்களிடம் எப்பொழுதாவது நான் பணத்திற்காக கெஞ்சியது உண்டா? அப்படியானால் ஸ்தாபனத்தை விட்டு வெளியே நில்லுங்கள். கிறிஸ்துவுக்குள் சுயாதீனராக நிலைத்திருங்கள். பரிசுத்த ஆவியானவர் தாமே சபைக்கு உள்ளும் புறமும் அசைவாடட்டும். 56. முக்கியமான ஒரேயொரு காரியம் என்னவெனில், உங்களுக்குள் நிலவும் சிறு சிறு வேறுபாடுகளையெல்லாம் களைந்து போடுங்கள். சிறு சிறு இஸம்கள் (அதாவது கொள்கைகள்), சகோதரர்களைப் பற்றி சிறிய விசித்திரமான எண்ணங்கள், மேலும் அதைப் போலுள்ள காரியங்கள் இவற்றை உதவி எறியுங்கள். உங்கள் ஆத்துமாவுக்குள் ஒருபோதும் கசப்பான வேர் முளைத் தெழும்பவிட வேண்டாம். அப்படி அனுமதித்தால், அது உங்களை அரித்துப்போடும். அது உண்மை. அன்பில் நிலைத்திருங்கள். அன்பில் நிலைத்திருங்கள். மக்கள் உங்களை எவ்வளவாய் வெறுத்தாலும், அதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. நீங்கள் எப்படியாயினும் அவர்களை நேசியுங்கள். அதை உங்களால் செய்ய முடிய வில்லையென்றால் இன்னும் உங்களிடத்தில் சந்து பொந்துகள் உள்ளன. நீங்கள் இன்னும் முத்திரையிடப்படவில்லை. எனவே திரும்பி வந்து கிறிஸ்துவின் இரத்தத்தினால் சரியாக முத்திரையிடப்படுங்கள். அதுதானே உங்களை உங்களுடைய எல்லா கசப்பான வேரிலிருந்து கழுவிப்போடும். 57. இப்பொழுது, பாருங்கள், நாம் அதை மறுபடியும் முயற் சித்துக் கொண்டிருக்கிறோம். பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதம் 1906ம் ஆண்டில் விழுந்தது. திபெத்து நாட்டிலிருந்து வந்திருக்கிற ஒரு மிஷனரி இன்றிரவில் அங்கே அமர்ந்திருக்கிறார். அவர் இங்கிருக்கிறபடியால் நான் இதைப் பற்றிச் சொல்லவில்லை. அவர் இன்னும் வீடு திரும்பவில்லை என்று எண்ணுகிறேன். அவர் இன்னமும் இங்கே தான் இருக்கிறார் என்று எண்ணுகிறேன். நான் இறங்குவதற்கு முன்னால் அவர் நம்மிடையே பேசப் போகிறார். 1906ல் விழுந்த அந்த பெந்தெகொஸ்தே எழுப்புதலை அவர் நினைவில் வைத்துள்ளார். அப்பொழுது எந்தவொரு ஸ்தாபனமும் ஏற்படவில்லை. யாவரும் எல்லாவற்றையும் பொதுவாக வைத்து அனுபவித்தார்கள். ஓ, தவறான அடியை, நடையை எடுப்பது அப்போது எவ்வளவு சுலபமானதாகவும், அறிவாளிகளுக்கு அது எவ்வளவு நல்லதாகவும் காணப்பட்டிருக்கும். 58. இஸ்ரவேல் அந்நதிக்கரையில் நின்று ஆர்ப்பரித்த போது, அவர்களுக்கு என்ன தெரியவில்லை என்றால்... “ இந்த விதமான மார்க்கம் ஏதோ புதிதாக இருக்கிறதே'' என்று நீங்கள் கூறுகிறீர்கள். இது மிகவும் பழமையான மார்க்கம். நிச்சயமாக. உலகமானது உண்டாவதற்கு முன்பே, அவர்கள் ஆர்ப்பரித்து, தேவனை ஸ்தோத் தரித்துக் கொண்டிருந்தார்கள். தேவன் அவ்வாறு கூறினார். அவர் யோபைப் பார்த்து, “ விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே அப்பொழுது நீ எங்கிருந்தாய்?'' என்று கேட்டார். உலகமானது உண்டாக்கப் படுவதற்கு முன்னரே அது நடந்தது. 59. ஆனால் இப்பொழுது இஸ்ரவேலரைப் பாருங்கள். அவர்கள், அற்புதங்களைப் பார்த்திருக்கின்றனர். அது ஆதிகாலத்து பெந்தெகொஸ்தேயாக இருந்தது. இஸ்ரவேல் அந்நாளைய பெந்தெகொஸ்தேயாக திகழ்ந்தது. அவர்கள் எகிப்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர். தேவன் அவர்களை ஆசீர்வதித்து, அவர்களுக்கு எல்லாவிதமான அற்புதங்களையும், அடையாளங்களையும் அளித்து, அவர்களை விடுவித்தார். அவர்கள் அந்த செங்கடலின் கரையில் நின்றபோது, அவர்களுக்கு ஒரு பெந்தெகொஸ்தே கூட்டம் உண்டாயிருந்தது. இப்பொழுது கவனியுங்கள். மோசே ஆவியில் பாடினான், மிரியாமும் ஒரு தம்புருவை எடுத்துக் கொண்டு அதை அடித்து, கடற்கரை முழுவதும் ஓடியாடிப்பாடி, ஆவியில் நடனமானடினாள், இஸ்ரவேலின் குமாரத்திகளும் அவளைப் பின்பற்றி, ஆவியில் நடனமாடினார்கள். அது பெந்தெகொஸ்தே கூட்டம் இல்லை என்றால், நான் அவ்விதமான கூட்டத்தையே பார்த்திருக்கவில்லை என்று தான் அர்த்தம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமானது, இன்னும் நாற்பதாண்டுகள் யாத்திரை மேற்கொண்ட பிறகுதான் வரும் என்பது அவர்களுக்கு அப்போழுது ஒன்றுமே தெரியாது. ஆனால் அத்தேசம் சுமார் நாற்பது மைல்கள் தூரத்தில் தான் இருந்தது. ஆனால், அவர்கள் தவறான பாதையைத் தெரிந்து கொண்டபடியினால், நாற்பது மைல்கள் தூரத்தில் இருந்த அத்தேசத்தைப் போய் சேர்ந்திட நாற்பதாண்டுகள் பிடித்தது. பரிசுத்த ஆவி தங்களை நடத்தவிடுவதற்குப் பதிலாக, அக்கினி ஸ்தம்பம் அவர்களை அழைத்துக் கொண்டு போய் நடத்தட்டும் என்பதற்குப் பதிலாக, அவர்கள் ஒரு பிரமாணத்தையே பெற்றிருக்க விரும்பினர். தாங்கள் கிரியை செய்வதற்கு வசதியாக அவர்களுக்கு ஏதோ ஒன்று வேண்டுமென்று அவர்கள் விரும்பினர். தாங்கள் கிரியை செய்வதற்கு வசதியாக அவர்களுக்கு ஏதோ ஒன்று வேண்டு மென்று அவர்கள் விரும்பினர். அவர்கள் சில மத குருமார்கள் தங்களுக்கு இருக்க வேண்டுமென்றும், சில பிரசித்தி பெற்ற நபர்கள் இருக்க வேண்டுமென்றும், தாங்கள் ஜம்பம் அடித்துக் கொள்வதற்கு வசதியாக தங்களுக்கு ஒரு வேத சாஸ்திரம் இருக்க வேண்டுமென்றும் விரும்பினார்கள். பரிசுத்த ஆவியானவர் தங்களை நடத்துவதற்கு பதிலாக இவைகளையே அவர்கள் தெரிந்து கொண்டனர். அவர்கள் ஆவியில் பாடினர், தேவன் அவர்களுக்கு யாவற்றையும் அளித்திருந்தார், ஆனால் தாங்கள் அதற்குள் கிரியை செய்ய வசதியாக அவர்களுக்கு ஏதோ வேண்டுமென்று விரும்பினர். 60. இனக்கலப்பு செய்தல் மீண்டும் ஏற்பட்டது. பசுவானது பசுவாகவே இருந்துவிட்டு போகட்டும், குதிரையானது குதிரையாகவே இருந்து விட்டு போகட்டும், உணவையும் இனக் கலப்பு அதை விட்டுவிடுங்கள். "ரீடர்ஸ் டைஜ்ஸ்ட்' என்ற பத்திரிகையில் ஒரு விஞ்ஞானக் கட்டுரையில், உணவுப் பொருளில் இனக்கலப்பு செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறது, மக்களும் அவற்றை புசித்துக் கொண்டேயிருக்கிறார்கள் என்று எழுதப்பட்டிருந்தது.... கோழிகளை எடுத்துக் கொண்டால், அவைகளையும் இனக்கலப்பு மூலம் புதிய ரக இனங்களை அவர்கள் உற்பத்தி செய்து கொண்டே போகிறார்கள். இறுதியில் அவைகள் இறக்கைகளும், கால்களும் இல்லாத ஒரு வகை இனமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவைகள் மிகவும் மென்மையானவைகள், முட்டை போட முடியாதவை, அதன் ஆயுட்காலம் ஒரு வருடம்தான். அவைகளின் திசுக்கம் மிகமிக மென்மையானவை, எனவே நீங்கள் கடித்து மென்று தின்னவே வேண்டியதில்லை. அப்படியே கரைந்து விடும். அதை புசிக்கிற மக்களை, அது தாறுமாறான நிலையில் ஆக்கிவிடுகிறது. அது உண்மை. 61. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சென்ற வருடத்தில், ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுவோர் நாற்பது சதவிதமாக அதிகரித்திருக் கிறதாம், தற்காலத்தில் பெண்களின் தோள்கள் விரிவடைந்தும், அவர்கள் இடுப்பு குறுகிக் கொண்டும், ஆண்களின் தோள்கள் குறுகிக் கொண்டும், இடுப்பு விரிவடைந்து கொண்டும வருகிறதாக விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? காரணம் என்னவெனில், நீங்கள் புசிக்கும், விதை மற்றும் பொருட்கள் யாவும் இனக்கலப்பு மூலம் பிறப்பிக்கப் பட்ட வீரிய ஒட்டு இனமாக இருக்கின்றன. அவைகளெல்லாம் ஒழுங்கற்ற தாறுமாறான, புரட்டான உணவுகளாகும். இயற்கையான அசலான பொருட்களை உண்டு வாழவே உங்கள் சரீரம் உண்டாக்கப்பட்டிருக்கிறது. இந்த புரட்டான உணவு என்ன செய்கிறது? ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் உள்ள இயற்கையான தன்மையையே மாற்றிவிடுகிறது. அதனால், நமக்கு ஹாலிவுட், நமது அரசாங்கம் உள்பட அனைத்து விஷயங்களிலும் முழு வதும் கோணல்மாணலான தாறுமாறான ஆட்கள் நிரம்பியிருக்கிறார்கள். அவன் என்ன செய்கிறான்? அவர்கள் தங்களுடைய சொந்த மரமான அறிவடையச் செய்யும் மரத்தின் மூலம் இத்தீங்குகளையெல்லாம், தங்கள் மேல் வருவித்துக் கொண்டு, தங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். 62. ஆதிக்கு திரும்பிச் செல்லுங்கள்! இயற்கையை அதன் போக்கிலேயே விட்டு விடுங்கள்! தேவனுடைய வழியில் குறுக்கிடாதீர்கள். சபையானது பரிசுத்த ஆவியினால் நிறைந்திருக்கட்டும். தேவன் இந்த பிஷப்புகள் மற்றும் போப்புகளில் ஒருவர் அல்ல, அவர்களின் உபதேசம் என்னவாயிருந்தாலும் அதன்படி நடக்க. நாம் எங்கே துவங்கினோமோ, அதற்குத் திரும்பிச் செல் லுங்கள். திரும்பிச் செல்லுங்கள். இயேசு திரும்பி வரும்போது, அவர்கள், “ நான் ஒரு மெதோடிஸ்ட்'' என்று சொன்னால், 63. “ ஆதி முதலாய் அப்படியிருக்கவில்லை'' என்று அவர் கூறுவார். 64. “ நான் பிரெஸ்பிடேரியன்'' என்று இன்னொருவர் கூறக் கூடும். 65. “ ஆதி முதலாய் அப்படியிருக்கவில்லையே'' என்று பதிலளிப் பார். ஆதியில் என்ன இருந்தது? பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் உண்டான பெந்தெகொஸ்தே அனுபவம் தான் உண்டாயிருந்தது. அவ்வாறு தான் அது ஆரம்பித்தது. 66. ஆனால் நாம் அதை தாறுமாறாக்கிப் போட்டோம் என்பதைப் பாருங்கள். ஓ, தாறுமாறாக்குதல் அதை அதிக அழகுள்ளதாகச் செய்கிறது, நிச்சயமாக. அந்த சிறிய சபை ஆவியில் நடனமாடி தெருக்களில் ஆர்ப்பரித்துக் கொண்டு சென்றனர். மக்கள் அவர்கள் மேல் கற்களை வீசியெறிந்தனர், அவர்களைக் குறித்து பரிகசித்தனர், இன்னும் அது போன்ற ஒவ்வொரு காரியத்தையும் அவர்களுக்குச் செய்தனர். “ ஆனால் எங்களுக்கு பெரிய டாக்ஸாலஜியும் அப்போஸ்தல விசுவாசப் பிரமாணமும் உண்டு , எங்களது மேய்ப்பர், டாக்டர், பி.எச்டி., எல்.எல்.டி, இரட்டை எல்.எல்.டி, ஆகிய பட்டங்களைப் பெற்றவர்'' என்று பெருமையடித்துக் கொள்கிறார்கள். (பெரிய டாக்ஸாலஜி என்றால், “ க்ளோரியா இன் எக்ஸல்சிஸ் டியோ (Gloria in Excelsis Deo) என்ற ஒருவகை பாடல் இது. இதை ஸ்தாபனங்களில் சடங்காச்சாரமாக பாடுவார்கள். "உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையுண்டாவதாக' என்று இராகத்தோடு சொல்லுவார்கள்). இப்படியெல்லாம் செய்து “ ஆமென்'' என்பதற்குப் பதிலாக கிண்டலாக “ ஆமென்'' (அதாவது “ ஆ மனிதன்'') என்று கூறுகிறார்கள். பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட கன்றுக்குட்டியை போல் இருக்கிறது இது. 67. நான் இவ்வாறு கூற வேண்டுமென நோக்கங் கொண்டிருக்கவில்லை. என்னை மன்னியுங்கள். நான் தவறான நோக்கங்கொண்டு இவ்வாறு செய்யவில்லை. அப்படிச் செய்வது தேவனுடைய ஊழியக்காரனுக்குரிய இலட்சணம் அல்ல. 68. ஆனால் அப்படிப்பட்ட செயல்களைப் பாருங்கள்... அது என் நினைவுக்கு வந்தது, இப்படிப்பட்ட அபத்தமான காரியங்களையெல்லாம் அவர்கள் கூறி, செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். “ ஆ-மேன்' (ஆமென் என்றல்ல - ஆ-மேன் என்றால் ஆ- மனிதனே என்று பொருள் - மொழி பெயர்ப்பாளர்). “ ஆ மனிதனே'' என்று கூறாதீர்கள். நான் நல்ல, பழமையான ஒரு பெந்தெகொஸ்தே ஆராதனையையே விரும்புகிறேன், ஏனெனில் அங்கே, தேவனுடைய வல்லமையானது விழுந்து, சப்தமிட்டு, ஆர்ப்பரித்து, தேவனை ஸ்தோத்தரித்துக் கொண்டு ஆராதிக்கிற ஒரு மகத்தான வேளை உண்டாயிருக்கிறது. ஆவியானவர் அவ்வாறு தான் மக்களை பற்றிக் கொள்ளுகிறார். ஆனால் இவர்கள் மத்தியிலோ ஒரு “ ஆமென்'' ஐக் கேட்க முடிவதில்லை. அவர்கள் கூறுவது, “ ஆ மனிதனே'' ("Ah-man") என்பதுதான். ஸ்தாபனங்களில் இப்படிப்பட்ட காரியத்தைத்தான் பார்க்க முடியும். அவர்கள் அவ்விதமான தவறுகளை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். 69. இதைப் பற்றி ஏதாவது தீர்க்கதரிசனம் உள்ளதா? கடந்த இரவில் நாம் பவுலின் தீர்க்கதரிசனத்தைப் பார்த்தோமே, நினைவிருக்கிறதா? “ நான் போன பின்பு, மந்தையைத் தப்பவிடாத கொடிய ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும், உங்களிலும் சிலர் எழும்பி, (அவர்கள் நடுவிலிருந்து தான் ரோமக் கத்தோலிக்க சபை ஏற்பட்டது) சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக் கொள்வார்கள்''. பவுல் முன்னுரைத்த ஓநாய்கள் தான் நிக்கொலாய் மதஸ்தரின் போதகர் உண்டாகக் காரணமாயிருந்தன. 70. தீர்க்கதரிசியிடம் ஆவியானவர் மறுபடியும் பேசுவதைக் கவனியுங்கள்; “ கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வரு மென்று அறிவாயாக, எப்படியெனில் மனுஷர்கள் தற்பிரியராய் (நான் டாக்டர் பட்டம் பெற்ற இன்னார், வேதத்தை குறித்து நீ எனக்கு சொல்ல வேண்டியதில்லை, நான் ஒரு பிரெஸ்பிடேரியன் என்பதை உனக்கு கூற விரும்புகிறேன். அல்லேலூயா!'' அல்லது “ நான் ஒரு பெந்தெகொஸ்தேகாரன்'' என்றெல்லாம் தற்பிரியராய் பேசுகிறார்கள்) நீங்கள் சுபாவ ரீதியாக பெந்தெகொஸ்தேகாரராக இல்லாவிடில், அதனால் என்ன வித்தியாசம்? பெந்தெகொஸ்தேயின் அனுபவம்தான் காரியம், பாருங்கள். ஆம் ஐயா! “ நான் அசெம்பிளீஸ் ஆஃப் காட் சபையை சேர்ந்தவன்'' என்கிறார்கள். “ நான் சர்ச் ஆஃப் காட் சபையை சேர்ந்தவன்'' என்கிறார்கள். தேவனுக்கு இந்தப் பெயர்கள் எல்லாம் எந்தவொரு வித்தியாசத்தை ஏற்படுத்தி விடப்போகின்றது? ஆனால் நீங்களோ, உன்னதத்தின் இராஜ்யத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அது உண்மை . 71. இந்த ஸ்தாபனக் கூட்டங்கௌல்லாம், களியாட்டுமிக்க கதம்பக் கூட்டாகும். வேதம் கூறுகிறது; “ அவர்கள் துணிகரமுள்ள வர்களாவும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவபிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும் இருப்பார்கள்''. தொலைக்காட்சியில் அவர்களுக்கு நல்லதாகப் படும் ஒரு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்துவிட்டால், சபைக்கு கூட செல்லமாட்டார்கள். ஓ, என்னே! எப்பொழுதும் அவர்கள். சபைகளில் கூட நடனக் குழுக்கள், சமுதாய இரவு விருந்துகள், கிரிக்கெட் பார்ட்டிகளும் இருக்கின்றன. “ தேவ பிரியராயிராமல் சுகபோகப் பிரியராவும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், நல்லோரைப் பகைக் கிறவர்களாயும் இருப்பார்கள்''. இவர்கள் அவர்களை ஒடுக்குகிறார்கள். இவர்கள் அவர்களைப் பகைக்கிறார்கள். நல்லோரைப் பகைக்கிறவர்களா யிருப்பார்கள். 72. நீங்கள், மேற்சொன்ன வசனங்களில் கூறப்பட்டுள்ளவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று கூறலாம். இல்லை, இல்வே இல்லை. 73. “ துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல், சுகபோகப்பிரியராயும், இணங்காதவர் களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து (அது தான் ஸ்தாபன அனுபவம் என்பதைப் பாருங்கள்) அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்''. 74. இந்த நாளில் இது யாரைக் குறிக்கும்? “ தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து” ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமையில் போய் அங்கே மிகவும் பக்தியாக காண்பித்துக் கொண்டு, பிறகு, மத்தியானத்தில் குட்டையான உடையை அணிந்து கொண்டு, புல்வெளியில் புல்வெட்டி விட்டு, பிறகு ஓர்டெல்ஸ் 92 என்ற மதுவை உறிஞ்சுகிறார்கள். அவர்களுடைய மேய்ப்பர் வெளியே போய் ஒரு சிகரெட்டைப் புகைத்து விட்டு வருகிறார். தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக் கொள்கிறார்கள். 75. “ நல்லது, மேய்ப்பரே, அங்கே ஒரு சபை இருக்கிறதாம், அங்கே ஒரு பெண்மணி சென்று புற்றுநோயிலிருந்து சுகமடைந்தாளாம்”. 76. “ அபத்தம், அற்புதங்களின் நாட்கள் முடிவடைந்து விட்டன'' என்று மேய்ப்பர் கூறுகிறார். 77. “ உங்களுக்குத் தெரியுமா? நான் அன்றிரவு அந்த சிறிய சபைக்குச் சென்றேன், அந்த மூலையில் இருக்கிற சபை அது, யாரோ ஒருவர் எழும்பி நின்று ஏதோ பிரசங்கித்தார்''. 78. “ ஓ, இனியவனே, இப்படிப்பட்டவைகளை நீ நெருங்கவே செய்யாதே, அவர்களெல்லாம் பைத்தியம் பிடித்த நாய்கள், அதனிடம் போய் நீ ஏமாறாதே, அவர்களெல்லாம் உருளும் பரிசுத்தர். நீ அங்கே ஒரு போதும் போகாதே''. 79. “ தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாயிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு. பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக் கொள்கிறார்கள்''. அது முற்றிலும் உண்மை. ஸ்திரீகளுக்கான இந்த சங்கம், அந்த சங்கம், என்று பல்வேறு அமைப்புக்கள் ஸ்தாபனங்களில் இருந்து வருகிறது. சபைகளில் இவ்வாறாக பெண்களுக்காக பல அமைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு அவைகளிலேயே நேரத்தை செலவிடுவதால், சுவிசேஷத்தை இனிமேல் பிரசங்கிக்கவே இயலாதபடி நிலைமை ஆகிவிட்டது. போதகருக்கு 20 நிமிடங்கள் மேல் பிரசங்கிக்க அனுமதிகிடையாது. அந்த வேளையில் அவர் வேறு எதையாவது தான் பிரசங்கித்தாக வேண்டும். பாருங்கள்? அவர் அதற்கு மேல் பிரசங்கித்தால், அவரை உதவிக்காரர்களின் (டீக்கன்) குழு போய் சந்திப்பார்கள். ஆம் ஐயா. 80. ஓ,சகோதரனே, இன்றைக்கு ஒரு நல்ல பாஸ்டர் என்பவர் என்ன செய்ய வேண்டும்? எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முடியுமோ அந்த அளவுக்கு செய்ய வேண்டும். தேவையற்றவைகளை என்ன நேரிட்டாலும் வெட்டிவிட வேண்டும், விளைவுகள் என்னவாக இருந்தாலும் சரி, தேவையற்றைவைகளை அகற்றிவிட வேண்டும். அவ்வளவுதான். ஆம் ஐயா. அது தான் சரியானது. யாரை பாதிக்கிறதாயிருந்தாலும் சரி, அதைப் பற்றி கவலைப் படாமல், வார்த்தையை பிரசங்கித்து, வார்த்தையோடு நிலைத்து நிற்க வேண்டும். வார்த்தையை, ஆணியை சுத்தியினால் நன்றாக அடித்து இறுக்குவது போல் உரைக்க வேண்டும். அவர்கள் உங்களை சிறையில் தள்ளினாலும், சிறையிலும் பிரசங்கியுங்கள். அவர்கள் உங்களை வெளியே தள்ளினால், நீங்கள் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் பிரசங்கியுங்கள். பிரசங்கித்துக் கொண்டே யிருங்கள். அதுவே சரி. அவ்வாறுதான் சம்பவித்துள்ளது. அவர்கள் உங்களை செயல்பட முடியாதபடி செய்கிறார்கள். 81. நாம் இப்பொழுது சிமிர்னா சபையின் காலத்திற்கு வருகிறோம். 8ம் வசனம். சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்ன வெனில்; முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது: வெளி.2:8 82. அவர் ஒவ்வொரு சபைக் காலத்திலும், முதலாவதாக, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அவ்விதமான ஒவ்வொரு அறிமுகத்திலும், அவர் தன்னுடைய தெய்வீகத்தைப் பற்றி ஏதாவது குறிப்பிடவே செய் கிறார். அவர் செய்யும் பிரதானமான காரியம் என்னவெனில், சபையானது அவரது தெய்வீகத்தைப் பற்றி அறிந்து, அதாவது அவர் தேவன் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார். ஐரேனியஸின் காலத்தில் சர்ச்சைக்குரிய பிரச்சினையாயிருந்து, அவர்கள் வாக்குவாதம் செய்த விஷயம் என்னவாக இருந்தது? அவர்கள் தேவன் மூன்று நபர்களில் இருக்கிறார் என் றனர். ஆனால் ஐரேனியஸோ, “ அப்படியொரு காரியம் இல்லை. அவைகள் ஒருவராய் இருக்கிறவருடைய மூன்று பட்டங்கள், அவரே சர்வல்லமையுள்ள தேவனாயிருக்கிறார்'' என்று கூறினார். அது தான் சரி. தேவன் துவக்கத்தில் தன்னுடைய தெய்வீகத் தன்மைகளில் ஒன்றைப் பற்றி சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறார். அவர் இங்கே தன்னைப் பற்றி அறிமுகப்படுத்துகையில், “ இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ளவர்'' என்று கூறுகிறார். இங்கே சிமிர்னா சபையின் காலத்தை ஆரம்பிக்கிறார் இப்பொழுது; 83. இப்பொழுது நாம் அவருக்கு செவிகொடுப்போம்: சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்.... (அத்தூதன் ஐரேனியஸ் தான் என்று நாம் விசுவாசிக்கிறோம்)... முந்தினவரும் பிந்தினவரும், மரித் திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது... (“ இந்தச் சபைக் காலத்தின் தேவன் நானே. இங்கே நான்கைந்து வெவ்வேறு தேவர்கள் இருப்பதை நான் விரும்புவதில்லை. நானே தேவன், பாருங்கள், அவ்வளவுதான்'' என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். 84. அதுதான் அறிமுகம் செய்தல். சிமிர்னா என்ற வார்த்தைக்கு "கசப்பு' என்று அர்த்தமாம். இது வெள்ளைப்போளம் என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. முதலாம் சபையான எபேசு சபை தங்களின் ஆதி அன்பை இழந்துவிட்டார்கள். இந்த சபையோ, அதின் துவக்கத்தில் “ கசப்பான வேரை'' தங்களில் முளைத்தெழும் பத்தக்கதாக அவர்கள் நிலைமை இருந்தது. ஏனெனில் இந்த சபையானது, பிரதான சபையில் உள்ள பெரும்பான்மையோர், எப்பொழுதும் சபையை பரிசுத்த ஆவி ஆளுவதை விரும்பாமல், தங்களை தாங்களே ஆள வேண்டுமென விரும்பியவர்களாக இருந்தனர். அவர்கள் உருவழிந்துபோன ஆசாரிய முறைமையின் படியே, தங்களுக்கும் அப்படிப்பட்ட குருக்களாட்சி முறையை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினர். அவர்கள் தங்களுக்கு மதகுரு மார்கள் இருக்க வேண்டுமென விரும்பினர். அவர்கள் கிறிஸ்தவர்களாக ஆவதற்கு முன்பு, அஞ்ஞானிகளாக இருக்கையில், அவர்களுடைய அஞ்ஞான தேவர்களாகிய ஜூபிட்டருக்கும், வீனஸுக்கும் மதகுருமார்கள் இருக்கப் பெற்றிருந்தனர். அதே முறையை மதம் மாறிய பிறகும், இங்கும் கொண்டுவந்துவிட விரும்பினர். பாருங்கள், ஆரம்பமே அஞ்ஞான முறைமையின் படியாக அமைந்தது. பொய்யான அஞ்ஞானிகள் தங்களுக்கு மதகுருமார்களை உடையவர்களாக இருந்தனர். ஆனால் ஜீவனுள்ள தேவனுடைய சபைக்கோ இந்தக் காரியங்களெல்லாம் அந்நிய காரியமாயிருந்தன. கிறிஸ்துவே நமது மகாபிரதான ஆசாரியராக இருக்கிறார். நமக்கு ஒரு பிரதான ஆசாரியன் உண்டு. நாம் புசிக்கத்தக்கதான பீடமும் நமக்கு உண்டு. 85. இப்பொழுது இந்த சபையானது “ கசப்பான வேர்'' தன்னகத்தே கொண்டதாக ஆரம்பித்தது. பரிசுத்த ஆவியின் ஆளுகையை தொடர்ந்து கொண்டிருக்க விரும்பியவர்கள் கசப்புடன் எதிர்க்கப்பட்டனர். அன்பானது மங்கிப் போய் விட்டது, அன்புக்கு பதிலீடாக, மாற்றாக, மதக்கோட்பாடுகளுக்கும், ஸ்தாபன முறைமைகளுக்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து, பரிசுத்த ஆவியானவரின் தலைமையைவிட்ட அகன்று போய்க் கொண்டிருந்தனர். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! எனவே தான் அவர்களுக்குள் கசப்பானது காணப்பட்டது. சரி. 86. முதலாவது சபையிலேயே கசப்பானது மெல்ல ஊடுருவ ஆரம்பித்தது. இரண்டாவது சபையில் இன்னும் கூடுதலாக அது அதிகரித்தது. இறுதியாக அது நன்றாக உள்ளே ஊடுருவி முழுவதும் வியாபித்து நின்றது, ஏனெனில், “ அவர்கள் இன்னும் சிறந்த சபையை உருவாக்கிவிட்டோம்'' என்று நினைத்தார்கள். அவர்களுக்குள் மிகுந்த மதிப்புக்குரிய காரியங்கள் இருந்தன, உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் ரோமானியர்கள் எல்லாம் இப்பொழுது சபைக்குள் வர அவர்களுக்கு பிரவேசம் கிடைத்து விட்டது. ஏன்? அவர்களுக்கு ஒரு போப் உண்டு, பெரிய மனிதர்கள் மற்றும் கார்டினல்கள், எல்லாம் அவர்களுக்கு உண்டு, அவர்கள் உயர் ஸ்திதிக்கு ஏற்ப உடுத்தியிருந்தார்கள். மிகுந்த ஆர்ப்பரிப்போடும் சப்தத்தோடும் ஆராதிக்கிற கூட்டங்களை விட்டு தூர வந்துவிட்டார்கள். இப்பொழுது அமைதியாக இருக்கிறது. அவர்கள் மரித்துக் கொண்டிருக்கிறதையே அது காட்டியது. அவர்கள் மரித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் கனம் பொருந்தியதொரு நிலையை அடைந்துவிட்டார்கள், அவர்களுக்கு இன்னும் மேன்மையுள்ள ஒரு அமைப்பை கண்டுவிட்டார்கள். முதலாவதாக, அவர்கள் ரோமன் கத்தோலிக்க சபையை, குருக்களாட்சியில் நடத்தப்படுகிற ஒரு பெரிய ஸ்தாபனமாக, இருண்ட காலத்தில் ஏற்படுத்தினார்கள். இப்பொழுது அவர்களுக்குள் மேட்டுக்குடியினரும், கனவான்களும் இருந்தார்கள். 87. பவுல் எபிரெயர் நிருபம் 11ம் அதிகாரத்தில், “ செம்மறியாட்டுத் தோலையும், வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக் கொண்டு அலைந்து திரிந்து, வாளால் அறுப்புண்டு, பரிகசிக்கப்பட்டு, கேலி செய்யப்பட்டு, விசுவாசிகள் இருந்தார்கள்'' என்று கூறியுள்ளானே, அதைப் போல் சபையானது இப்பொழுது இருக்க வேண்டிய சிரமமே இல்லை. அது முன்போல், தெருக்களில் நிற்க வேண்டியதில்லை. அந்த சிரமம் எல்லாம் இப்பொழுது இல்லை, சபையானது இப்பொழுது மிகவும் கனம் பொருந்திய நிலையில் ஆகிவிட்டது. 88. சபையானது, உயர்வான நிலையில், பெரியதாக இருக்கிறது. அருமையான அங்கிகளும், உள்ளாடைகளும் அணிந்து மற்றும் ஏனைய உயர்தரமான காரியங்களும் உடையவர்களாக இருக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் கனம் பொருந்தியவர்களாக காட்சியளித்தார்கள். “ சங்கைக்குரிய டாக்டர் ஃபாதர் இன்னார் இன்னார்'' என்று போட்டுக் கொள்கிறார்கள். அவர்களால் சரியானபடி, “ டாக்'' (டாக்டர் என்பதற்கு சுருக்கமாக - மொழிப் பெயர்ப்பாளர்) என்று போட்டுக் கொள்ள முடிகிறது. அதாவது, அது “ டாக்'' (நாய்) என்று தான் உண்மையிலேயே இருக்கிறது. 89. ஆனால் அது ஒரு இனக்கலப்பு முறையில் பிறப்பிக்கப்பட்ட ஒன்றுதான். பாருங்கள், அது தன்னுள் ஜீவனைப் பெற்றிருக்கவில்லை. அவர்களால் ஆதிக்கு திரும்பிப் போக முடியவில்லை. எனவேதான் அவர்கள் திரும்ப எழும்ப முடியவில்லை. லூத்தரன் எழுப்புதல் திரும்ப எழும்ப முடியவில்லை. அதே போல் வெஸ்லி காலத்து எழுப்புதலும், மீண்டும் உயிர்ப்பிக்கப்பட முடியவில்லை. நசரீன்கள் எழுப்புதலும் மீண்டும் உயிர்பெறவில்லை. அதேபோல் பெந்தெகொஸ்தே எழுப்புதலும் திரும்ப உயிர்ப்பிக்கப்பட்டு எழும்பப் போவதில்லை. ஏன்? ஏனெனில், அவர்கள் அதைக் கொன்றுவிட்டார்கள். உண்டான எழுப்புதலை, உலகத்தோடும், நிக்கொலாய் மதஸ்தரின் போதகத்தோடும், இனக்கலப்பு செய்தும், பரிசுத்த ஆவியானவர் தன் விருப்பம் போல் கிரியை செய்ய அனுமதிக்காமலும் செய்து விட்டார்கள். அது உண்மை. சபையை இனக்கலப்பு செய்துவிட்டபடியால், அதனால் இன விருத்தி செய்து கொள்ள முடியாமற் போய்விட்டது. அசல் வித்தைப் பிறப்பிக்க முடியாமல் அதற்குப் பதிலாக, மெதோடிஸ்ட் தன்னிலிருந்து மெதோடிஸ்ட்டையே பிறப்பிக்கிறது, பாப்டிஸ்ட் விதை இன்னும் அதிகமாக பாப்டிஸ்டுகளையே பிறப்பிக்கின்றது. கத்தோலிக்கம், மீண்டும் கத்தோலிக்கத்தையே இன்னும் கூடுதலாக பிறப்பிக்கிறது. தானியத்தை அதன்மேல் தோட்டைவிட்டு பிரிக்கையில் அதேவிதமான விதைதான் கிடைக்கும். ஆனால் நான் ஒன்று உங்களுக்குச் சொல்லட்டும், பரிசுத்த ஆவி திரும்பி வருகையில், அது புதிய பிறப்பையும் புதிய ஜீவனையும் கொண்டு வருகிறது. ஆவியின் ஞானஸ்நானம் சபையை மீண்டும் அதன் ஆதி ஸ்தானத்திற்கே கொண்டு வந்து, அதற்குள் மீண்டும் ஜீவனை வைக்கிறது. 90. இனக்கலப்பு செய்யப்பட்ட தானிய விதை தன்னில் ஜீவனை கொண்டதாய் இருப்பதில்லை. அதில் என்னதான் ஜீவன் உள்ளது? உள்ளதெல்லாம் சாரமற்றுப்போயிற்றே. இருண்ட காலத்தில் அதைப் பற்றி நாம் பார்ப்போம். “ உனக்குள்ளதை நான் வரும் வரை பற்றிக்கொள்'' என்று கூறினார். ஆனால் உள்ளதையெல்லாம் பிழிந்து வெளியே எறிந்து விட்டார்கள். ஆனால் இப்பொழுது அதினால் தன்னை மீண்டும் பிறப்பித்துக் கொள்ள முடியாதபடி மரித்துப் போன நிலையில் உள்ளது. 91. ஆனால் இயேசு கிறிஸ்துவின் சரீரமானது ஒரு ஸ்தாபன சபை அல்ல. இயேசு கிறிஸ்துவின் சரீரமான சபை, ஒரு புத்திக்கெட்டாத மறைபொருளானதொரு சரீரமான சபையாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து தாமே பூமியில் ஏற்படுத்தி வைத்துள்ள ஒரு ஆவிக்குரிய இராஜ்யமாக அது இருக்கிறது. இந்த இராஜ்யத்திற்கு இயேசு கிறிஸ்துவே இராஜாவாக இருக்கிறார். இந்த இராஜ்யத்தில் பரதேசியாய் திரிகிறவர்களுக்கு, பலி செலுத்துவதற்காக பிரதான ஆசாரியனாக அவரே இருக்கிறார். அவரே வார்த்தையாகிய தீர்க்கதரிசியாக இருந்து, இந்த இராஜ்யத்தில் சத்தியத்தை பிரசங்கித்து, தேவனுடைய ஒளியைக் கொண்டு வருகிறவராயிருக்கிறார். இந்த இராஜ்யத்தில் அவரே தீர்க்கதரிசியாகவும், ஆசாரியனாகவும், இராஜாவாகவும் இருக்கிறார். எவ்வாறு இந்த இராஜ்யத்தில் நாம் பிரவேசிக்கிறோம்? ஸ்தாபனத்தினாலா? கடிதத்தினாலா? கைகுலுக்கிக் கொள்வதினாலா? இல்லை, “ அந்த ஒரு ஆவியினாலே நாம் யாவரும் அந்த ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம்''. அச்சரீரம் காணக் கூடாத இயேசு கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறது. நாம் அந்த ஒரே சரீரத்திற்குள், தண்ணீரினால் அல்ல, தெளித்தலினால் அல்ல, தலையில் நீரை ஊற்றுவதினால் அல்ல, எந்தவிதமான தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானத்தினாலும் அல்ல, அந்த ஒரே ஆவியாகிய பரிசுத்த ஆவியினாலேயே, நாம் யாவரும் அந்த ஒரு சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம். 1கொரிந்தியர் 12ம் அதிகாரம் 13ம் வசனம்; ஆம், நாம் அந்த ஒரே சரீரத்திற்குள்ளாக அந்த ஒரே ஆவியினாலே, பரிசுத்த ஆவியினாலே, ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம். அப்பொழுது நாம் கிறிஸ்துவைத் தவிர வேறு எதனிடத்திலும் ஓடமாட்டோம். நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாக இருக்கிறீர்கள். அது இரகசியமான புத்திக்கெட்டாத தேவனுடைய இராஜ்யமாயிருக்கிறது. அதனுள் நாம் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் உள்ளே பிரவேசிக்கிறோம். நான் அதை நேசிக்கிறேன். பெந்தெகொஸ்தில் விழுந்த அக்கினியால், சுத்திகரிக்கப்பட்டு, சுத்தமான மக்கள் எங்கும் உள்ளனர் அவர்தம் இதயங்கள் அவ்வக்கினியால் ஜூவாலிக்கிறது ஓ, இப்பொழுது அது என் இதயத்தில் கொழுந்து விட்டெரிகிறது. ஓ அவர் நாமத்திற்கே மகிமையுண்டாகட்டும். நானும் அவர்களில் ஒருவன் என கூறிட முடியும் அதனால் நான் மகிழ்கிறேன் நானும் அவர்களின் ஒருவன் நானும் அவர்களில் ஒருவன் என கூறிட முடிந்ததால் நான் மகிழ்கிறேன். இம்மக்கள் கல்லாதோர் ஆயினும் (டி.டி.டி. பிஎச்.டி. பட்டங்கள் இல்லையென்றாலும்) உலக கீர்த்தியடைந்தோம் என்று பெருமைப்பட ஏதுவில்லை ஆயினும், அவர்கள் யாவரும் தங்கள் பெந்தெகொஸ்தை பெற்றவர்கள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் இவர்கள் அவரது வல்லமை மாறாதது என்று எங்குமுள்ள யாவர்க்கும் முழங்குகிறார்கள் இவர்களில் நானும் ஒருவன் என்று கூற இயன்றதால் நான் மகிழ்கிறேன் . 92. நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கவில்லையா? ஆம் ஐயா, அவர்களில் ஒருவராக இருங்கள். அதுவே எல்லாம். 93. மெம்ஃபிஸ் பட்டணத்தின் வழியாக நான் நடந்து சென்ற போது அந்த வயதான நீக்ரோ பெண்மணியைச் சந்தித்ததை நான் நினைத்துப் பார்க்கிறேன். அந்த அம்மாள் தன் தலையை சாய்த்து வைத்துக் கொண்டு என்னைப் பார்த்து, “ காலை வணக்கம், போதகரே'' என்றாள். 94. “ நான் ஒரு போதகர் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று நான் கேட்டேன். 95. அவள், “ கர்த்தர் என்னிடம், “ தெருவழியாக போதகர் வருகிறார், தலையில் அவர் பழுப்பு நிற தொப்பியை அணிந்து, ஒரு சூட்கேஸை கையில் வைத்துக் கொண்டு வருவார்” என்று கூறியிருந்தார். நீங்கள் வருவதை நான் கண்டபோது, நீங்கள்தான் கர்த்தர் சொன்ன அந்த போதகர் என்று அறிந்து கொண்டேன்'' என்றாள். பாருங்கள்? அவளும் அப்படிப்பட்ட ஜனங்களுள் ஒருவள். ஓ தேவன் எவ்வளவாய் நல்லவராயிருக்கிறார். 96. இப்பொழுது நான் ஒன்றை விசுவாசிக்கிறேன்... (சகோ. பிரன்ஹாம் அவரிடம் கொடுக்கப்பட்ட ஒரு குறிப்பை வாசிக்கிறார், “ பெட்ஃபோர்ட் “ என்று இடத்திலிருந்து வந்திருந்த அச்சிறு பெண்ணுக்கு நீங்கள் ஞாயிறு இரவு ஜெபித்தீர்கள். அவள் சற்று முன்பு இறந்துவிட்டதாக கருதப்படுகிறது. இவ்வாறு இருக்க முடியாது... தயவு செய்து ஜெபிக்கவும் - ஆசி) பெட்ஃபோர்ட்டில் இருந்து இங்கு வந்த ஒரு சிறு பெண்ணுக்கு கடந்த ஞாயிறு இரவு ஜெபித்தோமே, அவள் சற்று முன்பு மரித்து விட்டாள் என்று அவர்கள் கூறுகிறார்கள். நாம் ஜெபிப்போம். 97. கர்த்தராகிய இயேசுவே, எப்படியாவது அந்த பிள்ளைக்காக நாங்கள் ஏறெடுக்கும் ஜெபம் ஏற்றுக் கொள்ளப்படட்டும். பிதாவாகிய தேவனே, உம்மிடத்தில் அச்சிறுமியை ஒப்படைக்கிறோம். அச்சிறு பெண்ணுக்காக ஜெபிக்கும்படி கேட்டுக் கொண்டு, இங்கிருந்து ஜெபித்துக் கொண்டு இருந்த அந்த மனிதர்களை நாங்கள் எண்ணிப்பார்க்கிறோம். பிதாவாகிய தேவனே, நாங்கள் கேள்விப்படுகிற இச்செய்தியின்படியே இருக்க வேண்டாம். பிதாவே, எங்களுக்கு தெரியாது, ஆனால் நீர் இரக்கமும், பெலனும் அளித்து, அதினால் அச்சிறுமி உயிரோடெழுந்து தேவனுடைய மகிமைக்காக ஜீவிக்கட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நாங்கள் கேட்கிறோம். ஆமென். கர்த்தராகிய இயேசு தாமே தன்னுடைய ஆசீர்வாதங்களை கூட்டித் தருவாராக. 98. ஒவ்வொரு சபையின் பெயர், அதனுடைய சுபாவ குணாதிசயத்தோடு சம்பந்தமுள்ளதாகவே இருக்கிறது. சிமிர்னா என்றால் “ கசப்பு” என்ற அர்த்தத்தை கவனித்தீர்களா? ஒவ்வொரு சபைக்கும் இருக்கும் பெயரானது, அந்தந்த சபைக்கு உள்ள சுபாவத்தையும் குணாதிசயத்தையும் பற்றிய அர்த்தத்தோடு இருக்கிறது. நான் ஒன்றை இங்கே கூற முடியும். ஆனால் நீங்கள் என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளாதபடி நான் அதைச் சொல்லாமலிருந்தால் நல்லது. பாருங்கள்? 99. உங்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயர்கள் கூட அவ்வாறே உள்ளது? நீங்கள் அதைப் பற்றி அறியாமலிருக்கலாம். ஆனால் அது அப்படித்தான். “ அது எண்கணித அடிப்படையில் ஆனது'' என்று நீங்கள் கூறலாம். இல்லை, அப்படியல்ல. யாக்கோபு பிறக்கையில், “ ஏமாற்றுகிறவன்'' என்று அர்த்தமுள்ள யாக்கோபு என்ற பெயர் அவனுக்கு வைக்கப்பட்டது. ஆனால் அவன் தேவனுடைய தூதனானவரோடு போராடுகையில், தேவன் அவன் பெயரை “ இஸ்ரவேல்'' என்று மாற்றினார். ''அதிபதி'' என்பது அதன் அர்த்தம். அது சரிதானே? சவுல் “ தர்சு பட்டணத்து சவுல்'' என்றழைக்கப்பட்டான். அவன் ஒரு அற்பமானவன். ஆனால் அவன் இயேசுவிடம் வந்தபொழுது, “ பவுல்'' என்றழைக் கப்பட்டான். சீமோனின் பெயர் ''சீமோன்'' என்றிருக்கையில், அவன் இயேசுவிடம் வந்தபோது, “ ஒரு சிறிய கல்'' என்று அர்த்தம் உள்ள “ பேதுரு'' என்று பெயரிடப்பட்டான். நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அவற்றோடு உங்கள் பெயருக்கும் சம்பந்தமுண்டு. உங்களுடைய குணாதிசயத்தின் பிரதிபலிப்பாக அது இருக்கிறது. 100. இந்த சபைக்காலமானது சிமிர்னா என்றழைக்கப் பட்டது. ஏனெனில் அது மரித்துக் கொண்டிருந்தது. சிமிர்னா என்றால், “ கசப்பு'' என்று அர்த்தமாம். அதாவது, ஒரு கசப்பான வேர் முளைத்தெழும்பி, அதை எழும்பவிடாமல் அமுக்கி கொண் டிருந்தது. அது தானே வெள்ளைப் போளத்தைப் போல் உள்ள நிலைமைக்கு நேராக போய்க் கொண்டிருந்தது. வெள்ளைப் போளத்தைக் கொண்டு மரித்த சரீரங்களை சுகந்தவர்க்கமிட்டு, அபிஷேகிப்பார்கள். மரித்தவர்களை, பரிமளதைலம் தயாரித்து அவர்களை சுகந்தவர்க்கமிட, வெள்ளைப்போளம் உபயோகிக்கப்படுகிறது. ஆகவே வெள்ளைப்போளம் என்றால் மரணத்தோடு சம்மந்தமுள்ளது என்று அறிந்து கொள்ள வேண்டும். சபையானது மரித்துக் கொண்டிருந்தது. 101. சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஜீவனோடிருந்த அந்த பெந்தெகொஸ்தே அசைவானது இப்பொழுது மரித்துப் போய், அதற்கு வெள்ளைப் போளத்தால் சுகந்த வர்க்கமிடப்பட்டுக் கொண்டேயிருக்கிறது என்பதை உங்களால் இன்று காண முடியவில்லையா, நண்பர்களே? பாருங்கள்? மரணத்திற்கு அடையாளமாயிருக்கும் அதே பரிமளதைலம் இங்கே இந்த சபையிலும் இருந்தது, அது தொடர்ந்து அடுத்து வந்த சபைக்கும் உண்டாயிருந்தது. அவர்கள் பரிசுத்தவான்களுக்குரிய வெண்வஸ்திரத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் குருக்களாட்சியின் அழுக்கான கந்தையை போர்த்துக் கொண்டதினால், மரணத்திற்கு அடையாள மாயிருக்கிற வெள்ளைப் போளத்தால் அவர்கள் பூசப்பட்டுள்ளனர். மெய்யான பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்து, அந்நிய பாஷைகளில் பேசி, அக்காலத்தில் வாழ்ந்த அந்த சிறு மந்தையோவெனில், தங்கள் ஜீவியங்களில் தேவனை பிரத்தியட்சமாக்கிக் காண்பித்தனர். அவர்கள் மிகவும் உத்தமாயிருந்தார்கள். அவர்கள் முழுக்க முழுக்க உண்மையாகவே, எங்கும் நம்பக்தகுந்தவர்களாய் இருந்தார்கள். ஆனால் இன்றோ, எதை நம்புவது, யாரை நம்புவது என்பது உங்களுக்கு தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறீர்கள். பாருங்கள்? அந்த அளவுக்கு ஏதோ நடந்து விட்டது. அது என்ன? அவர்களுக்கு கசப்பான வெள்ளைப் போளம் பூசப்பட்டுள்ளது. ஒரு காரியம் எழும்பி வருகிறது... 102. அதற்கு என்ன காரணம்? நாம் வாழும் இக்காலத்தில் ஒரு பிரிவார் எழும்பி, முதலில் சபையை ஜெனரல் கவுன்சில் என்று அழைத்தார்கள். பின்னால் அதையே அசெம்பிளீஸ் ஆஃப் காட் (தேவ சங்கம்) என்று அழைத்தார்கள். அந்த அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் சபையிலிருந்து தான் தேவசபை என்னப்பட்ட சர்ச் ஆஃப் காட் ஸ்தாபனம் பிறந்தது. சர்ச் ஆஃப் காட் சபையிலிருந்து கொண்டே வெளியே பார்த்து, “ நீங்கள் அசெம்ப்ளீஸ் ஆஃப் காட்'' என்று மட்டமாகப் பேசினார்கள். இவர்கள் அவர்களைப் பார்த்து, “ நீங்கள் சர்ச் ஆஃப் காட்'' என்றார்கள். அதிலிருந்து “ யுனைடெட் பெந்தெகொஸ்தே சர்ச் ஆஃப்காட்'' என்ற பெயர்கொண்ட சபையானது, ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சனையின் பேரில் வெளியேறி ஏற்படுத்தப்பட்டது. அதன்பிறகு, முதலாவதாக நீங்கள் அறிய வேண்டியது என்னவெனில், அவர்கள் வெளிச்சத்தை ஏற்றுக்கொண்டு, அதில் நடப்பதற்குப் பதிலாக, ஒளியை முற்றிலும் புறக்கணிக்கக்கூடிய அளவுக்கு தங்களை ஸ்தாபனமாக ஆக்கிக் கொண்டுவிட்டார்கள். 103. “ பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம்'' பெறுவது சரியல்ல, அதற்குப் பதிலாக “ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே'' ஞானஸ்நானம் பெறுவது தான் சத்தியம் என்று அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் சபைக்கு சத்திய மானது உரைக்கப்பட்டபோது, அவர்கள் ஏற்கனவே தங்களை பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஞானஸ்நான உபதேசத்தில் நங்கூரமிட்டுக் கொண்டு விட்டபடியினாலே, அதை மாற்றிக் கொள்ள அவர்களால் இயலவில்லை. அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பது தான் சத்தியமென்று நன்கு தெரியும். வேதத்தின்படி அது சரியல்ல என்பதை அவர்கள் எவராவது காண்பிக்கட்டும் என்று நான் அவர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன். அதுவோ முழுவதுமாக சத்தியமாய் இருக்கிறது. ஆனால் அவர்களால் என்ன செய்ய முடியும்? அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், அதை ஏற்றுக்கொண்டால், அவர்களுடைய மதக்கோட்பாட்டை அவர்கள் தகர்த்தெறிந்துவிட வேண்டியது வந்துவிடும். ஆகவே அவர்களால் இயலாது. 104. பின்பு, ஒருத்துவக் கொள்கைக்காரர் என்ன செய்தார்கள்? சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, முன்னேறிச் செல்வதற்குப் பதிலாக, அவர்கள் ரொம்பவும் வெளியாசாரமுள்ளவர்களாக ஆகி, “ தேவன் என்றென்றும் துதிக்கப்படுவாராக! எங்களிடம் வெளிச்சம் உள்ளது. உங்களிடம் வெளிச்சம் இல்லை. நாங்கள் தான்...'' என்று கூறினார்கள். அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டார்கள். தேவனை நீங்கள் ஸ்தாபனமாக ஆக்க முடியாது. தேவனுக்கு உருவ அமைப்பு கிடையாது என்று வேதம் கூறுகிறது. தேவனைக் குறித்த ஒரு புறம்பான அமைப்பு ஒன்றும் இல்லை . 105. பின்பு, அசெம்ப்ளீ ஸ் ஆஃப் காட் சபையார், தேவனை ஸ்தாபனமாக ஆக்க முயன்று, தங்களையே எல்லாவற்றுக்குள்ளும் சிறந்த சபையென்று பறைசாற்றிக் கொள்ள முயன்றனர். அதன் பிறகு, ஒருத்துவக் கொள்கைக்காரர் ஸ்தாபனம் உண்டாக்க முயன்று, “ தங்களுக்கு கூடுதல் வெளிச்சம் உள்ளது'' என்று கூறினர். இப்படியாக அவர்கள் என்ன செய்துவிட்டார்கள்? அவர்கள் தங்களுடைய சொந்த சுயநலமான, கசப்பான வழியில் சென்று, தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டனர். சாரமேற்றிட உப்பையும், மகிழ்விக்க இனிப்பையும் வழங்குவதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் விரோதங் கொண்டு, ஐக்கியத்தை குலைத்துக் கொண்டனர். அதுதான் நடந்தது. இவ்விதமான காரியம் வேகமாக நடந்தது. அதன்பிறகு இன்னொரு குழுவினர் பிரிந்து வெளியே வந்து, அவர்கள் இன்னொரு சபையை ஸ்தாபிதம் செய்தனர். ஒரு பிரிவார், “ அவர் வெள்ளைக் குதிரையின் மேல் வருகிறார்'' என்றார்கள். இன்னொரு பிரிவினர், “ அவர் வெண் மேகத்தின் மேல்தான் திரும்ப வருகிறார். தேவனுக்கு ஸ்தோத்திரம். நான் இந்த உபதேசத்தின் மேல் ஒரு ஸ்தாபனத்தை ஆரம்பிப்பேன்'' என்றார்கள். எந்தவிதமாக அவர்கள் செயல்பட்டார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் கசப்பை பரவச் செய்தனர். சகோதர சிநேகத்திற்கு கதவை அடைத்துக் கொள்ளுதல் நடைபெற்றது. 106. இன்றிரவில், அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் சபையைச் சேர்ந்தவர்களில் அநேக ஆண்களும், பெண்களும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள முன் வர விரும்புவர். ஏனெனில் அதுவே தேவனுடைய சத்தியம் என்று அவர்கள் அறிவர். ஆனால் அப்படி செய்தால், தங்கள் சபையைவிட்டு அவர்கள் வெளியே தள்ளப்படுவார்கள். 107. அநேக ஒருத்துவக்காரர்கள் ... நான் ஒருத்துவக் காரன் அல்ல. ஒருத்துவக்காரர் கூறுகிற விதமான “ இயேசு'' வில் நான் விசுவாசம் கொள்ளவில்லை, ஏனெனில் “ இயேசு'' என்னப் பட்டவர்கள் அநேகர் இருந்தார்கள். நானோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டுள்ளேன். அதுதான் சரி. அவர்கள் விசுவாசிக்கிற வண்ணமாக நான் விசுவாசிக்கிறதில்லை. அதிலிருந்து மாறுபட்டது எனது விசுவாசம். அவர்கள் மறு பிறப்பையடைவதற்காக இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். “ ஞானஸ்நானம் பெறுவதால் அது மறுபிறப்பை உங்களுக்குள் கொண்டு வந்து, உங்கள் தண்ணீர் ஞானஸ்நானத்தினால், கிறிஸ்துவை உள்ளே கொண்டு வருகிறது'' என்று அவர்கள் நம்புகிறார்கள். நான் அவ்வாறு விசுவாசிக்கவில்லை. மறுபிறப்பானது, பரிசுத்த ஆவியினாலே, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைக் கொண்டு, கிடைக்கிறது. அது தான் சரி. தண்ணீர் ஞானஸ்நானமானது, ஏற்கனவே உள்ளே நடைபெற்றுள்ள மறு பிறப்புக்கான கிரியைப்பற்றி புறம்பே நிகழ்த்தப்படுகிற ஒரு செயல் தான். ஆகவே, நான் அதை ஒத்துக் கொள்கிறதில்லை. இதெல்லாம் இப்படி இருந்தாலும், அவர்களும் என்னுடைய சகோதரர்கள் தான். 108. நான் முதலில் பாப்டிஸ்ட் ஊழியக்காரனாக ஊழியத்தைத் துவங்கிய போது, இரு சாராருமே என்னிடம் வந்து, “ சகோ. பிரன்ஹாம் அவர்களே, எங்களிடம் வாருங்கள். எங்களிடம் அந்த அனுபவம் உள்ளது, நாங்கள் தான் இதைத் தொடர்ந்து கொண்டு வந்தோம்” என்றார்கள். 109. “ நான் உங்களிருவரில் எவரையும் சேர்ந்தவனல்ல. உங்கள் இருவருக்கும் நடுவில் நான் இருக்கிறேன். நாம் சகோதரர்கள். எந்த ஒரு மனிதனாவது என்னுடன் முரண்பட்டால் அதைப் பற்றி நான் அக்கறைப்படவில்லை. அது எந்தவித ஒரு சிறு துளி வேறுபாட்டையும் உண்டாக்கிவிடாது. தொடர்ந்து அவர் என்னுடைய சகோதரனாகவே இருப்பார்'' என்று நான் அவர்களுக்கு கூறினேன். 110. ஆப்பிளும் இறைச்சியும் சேர்த்து ரொட்டி அடுப்பில் சமைக்கப்பட்ட “ ஆப்பிள் பை'' சாப்பிட விரும்பும் ஒரு சகோதரன் இருந்தால் அவர் தன் விருப்பப்படியே அதை சாப்பிடட்டும். எனக்கு "செர்ரி பை' (செர்ரி பழமும், இறைச்சியும் சேர்த்து ரொட்டி அடுப்பில் சமைக்கப்பட்ட ஒரு வகை உணவு - மொழி பெயர்ப்பாளர்) நன்கு பிடிக்கும். எனவே நான் அதையே சாப்பிடுவேன். இதற்காக என் சகோதரனுடன் உள்ள ஐக்கியத்தை நான் குலைக்கப் போவதில்லை. நான் செர்ரி பை-யின் மேல் நன்கு அடிக்கப்பட்ட ஒரு வகை க்ரீமை தடவிக் கொள்ள விரும்புவேன். நான் அதைச் சாப்பிடுவதற்கு இப்போழுது எனக்கு வயதில்லை. ஆனால் எனக்கு அது விருப்பமானது. என் சகோதரனுக்கு அது விருப்பமில்லையெனில், அவர் அதை சாப்பிட வேண்டியதில்லை. நான் எனக்கு விருப்பமானதைச் சாப்பிட்டுக் கொள்வேன். ஆனால் அவர் இன்னும் என் சகோதரன் தான். 111. ஆகவே, அதைப்போல, நான் ஐக்கியத்தை விரும்புகிறேன். ஆனால் நமக்கிடையே பிரிவினைகளை உண்டாக்கிக் கொண்டு, “ இல்லை, இது எங்களுடைய ஸ்தாபனம்” என்று கூறிக்கொண்டு, அடுத்த மனிதனிடம் கையை நீட்டி அவரோடு கைகுலுக்கிக் கொண்டு, “ தேவனுக்கு ஸ்தோத்திரம், சகோதரனே'' என்று சொல்லாவிட்டால், சிமிர்னாக்காரர்கள் அன்றைக்குக் கொண்டிருந்தைப் போல் கசப்பான வெள்ளைப் போளத்தையுடையவர்களாக ஆகிவிடுவார்கள். ஆனால் ஐக்கியத்தைக் கொண்டிருக்க வேண்டும். சிமிர்னா சபையாருக்கு கசப்பு என்று பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. அதே போல் இன்றைக்கும் இருக்கிறது. 112. நிக்கொலாய் மதஸ்தர், இருண்ட காலம் வரையிலும் அவர்களை எழும்பவிடாமல் அழுத்திக் கொண்டே இருந்தனர். லூத்தரின் காலத்தில், கிருபை என்ற முதல் அடியைக் கொண்டு அதை விட்டு வெளியே வந்தார்கள். அப்பொழுது ஒரு சிறு அளவுக்கு ஒளியானது பிரகாசிக்கத் தொடங்கியது. அதன்பிறகு, ஜான் வெஸ்லி பரிசுத்தமாகுதல் என்ற அடுத்த அடியை வெளியே எடுத்துவைக்க வந்தார். அப்பொழுது ஒளியானது இன்னும் கூடுதலாக பிரகாசித்தது. அதன்பிறகு, பெந்தெகொஸ்தேயின் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் வந்தது. அதனால், பிதாக்களுடைய விசுவாசம் திரும்பக் கொண்டு வருவதற்கு வழி கோலியது. ஆனால் அவர்களால், அதை அதேவிதமாக நீடித்து வைத்துக் கொண்டிருக்க முடியவில்லை. இவர்களும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, மீண்டும் நிக்கொலாய் மதஸ்தரின் போதகத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தார்கள். இவ்வாறு அவர்கள் செய்வார்கள் என்று வேதம் கூறியதற்கேற்ப சரியாக அவ்வாறே நடந்தது. 113. அதிக நேரம் இது வரையிலும் ஆகிவிட்டது. நாம் இப்பொழுது வசனத்திற்குப் போவோம். இதில் உபத்திரவத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளது. உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும், உனக்கிருக்கிற தரித்திரத்தையும்... (இங்கே அவர் நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை வெறுக்கும் உண்மையான சபையிடம் பேசுகிறார், மற்ற கூட்டத்திடம் அல்ல)... தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன். வெளி.2:9. 114. அவர்கள் முறையிட்டார்கள். அவர்கள் வறுமையில் வாடினர். அவர்களுக்கு இருந்தவைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டன. அவர்கள் இது போன்ற ஒரு சிறிய சபையைக் கட்டி எழுப்பியிருந்தனர். அவர்கள் சிறு கூட்டமாக இருந்தபடியால், பெருங்கூட்டமாக இருந்த மற்ற சபை அவர்களை வெளியே தள்ளி, அவர்களை ஒடுக்கியது. “ நீங்கள் அந்த மூலையிலும், ஒதுங்கிய தெருக்களிலும், மற்றும் உங்களுக்கு கிடைத்த இடங்களிலும் ஆராதிக்க கூடிவருகிறீர்கள் என்பதை நான் அறிவேன்'' என்று தேவன் கூறினார். நான் "காட்டகோம்' எனப்படும் இடத்திற்கு சென்றிருக்கிறேன். (Catacomb என்றால், பூமிக்கடியில் இருக்கும் அடக்க ஸ்தலமாகும். இது ரோமாபுரியில் அப்பியு சாலை என்ற நெடுஞ்சாலையில் 2 மற்றும் 3ஆவது மைல்கற்களுக்கு நடுவில் அமைந்துள்ளது - மொழி பெயர்ப்பாளர்). அங்குள்ள பூமிக்கடியிலான கல்லறைத் தோட்டத்திற்குள் போய் தான் அவர்கள் கூடி ஆராதித்தனர். வேறு இடம் அவர்களுக்கு இல்லை. “ உனக்கு இருக்கிற உபத்திரவத்தையும், உனக்கு உண்டாயிருக்கிற தொல்லைகளையும் அறிந்திருக்கிறேன். ஆனால் உனக்கு ஏற்பட்டுள்ள உபத்திரவங்களே உன்னை ஐசுவரியவானாக்கியிருக்கிறது'' என்று தேவன் கூறுகிறார். ஓ, என்னே ! சபையின்மேல் உபத்திரவமானது வரும்போது, அது சபையை பெலப்படுத்துகிறது. உபத்திவரங்களில் அகப்படும் சபையானது அதினால் அப்பொழுதும் பெலப்படவே செய்கிறது. “ உனக்கிருக்கிற உபத்திரவத்தை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் நீ ஐசுவரியவானாயிருக்கிறாய்'' என்கிறார். ஏனெனில், “ நீ விடாமல் என்னைப் பற்றிக் கொண்டிருக்கிறாய், நீ ஐசுவரியவானாயிருக்கிறாய், உபத்திரவங்கள் உன்னை ஒன்றிலும் சேதப்படுத்தவில்லை'' என்று கூறுகிறார். 115. இங்கே பார்க்கையில், நிக்கொலாய் மதத்தினருக்கு இப்பொழுது ஒரு ஜெப ஆலயம் கிடைத்திருக்கிறது. வேதம் அவ்வாறு கூறுகிறது. அதை நீங்கள் 9ம் வசனத்தில் பார்த்தீர்களா? “ இராமல், சாத்தானுடைய கூட்டமாயிருக்கிற...'' (இவ்வசனம் தமிழ் வேதாகமத்தில், “ சாத்தானுடைய கூட்டம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கில வேதாகமத்தில் “ சாத்தானுடைய ஜெப ஆலயம்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது - மொழி பெயர்ப்பாளர்) 116. உ, ஊ, உண்மையான சபையானது புறம்பாக்கப்பட்டது. நிக்கொலாய் மதஸ்தர் இப்பொழுது சபையை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு விட்டனர். பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்த அந்த மக்களை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டனர். அவர்கள் இவர்களுக்கு உபயோகமில்லாதவர்களாக ஆகிவிட்டது. ஆசிய மைனரிலுள்ள சிமிர்னாவானது, இரத்த சாட்சிகளுக்கு உரிய ஜீவ கிரீடமானது தங்களுக்கென காத்துக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் அறிந்திருந்தால், அது அவர்களை அசைத்திருக்கும். பாருங்கள்? அதாவது, இந்த தீர்க்கதரிசனமானது எழுதப்பட்டு, இந்த சபைக்கு அனுப்பப்பட்டு, இந்த சபை அதைப் பற்றிக் கொண்டு, இத்தீர்க்கதரிசனத்தில் கூறப்பட்டுள்ளபடி, இரத்த சாட்சிகள் அணியும் கிரீடம் பெறப்போவது தாங்கள் தான் என்று அறிந்தபோது, அது அவர்களை மரணத்திற்கேதுவாக அச்சுறுத்தினது. அவர்கள் அதை எந்த வேளையிலும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது அவர்களுடைய காலத்தில் வரவில்லை. அவர்களில் யாராவது சிலர், “ அந்த தீர்க்கதரிசியாகிய யோவான் தவறாக இருந்திருக்கிறான், ஏனெனில் அவன் உரைத் தவைகள் ஒன்றும், நமக்கு சிமிர்னாவில் நிறைவேறவேயில்லை'' என்று கூறியிருக்கக்கூடும். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழித்துத்தான் அது நிறைவேற வேண்டும். பாருங்கள்? தேவன் உரைத்தவை எவையும் நிறைவேறியே தீரும். 117. நாம் நம்முடைய விசுவாசத்தை தேவனுடைய வார்த்தையின் பேரில் தான் அஸ்திபாரமிடுகிறோம். தேவன் ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் தவறாமல் நிறைவேற்றுகிறார். என்னவானாலும் சரி... ஒரு குறிப்பிட்ட வாக்குத்தத்தம் நிறைவேற வேண்டிய வேளை இதுவே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது சம்பவிப்பதற்குரிய தேவனுடைய வேளை அதுவாக இல்லாமலிருக்கக் கூடும். “ அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்''. தேவன் எப்பொழுதும் தன்னுடைய வசனத்தை கனம் பண்ணி, அதற்குரிய வேளையில் அது பலனளித்தக்கதாக செய்வார். 118. இரத்த சாட்சிகளாக மரிக்க வேண்டியவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் இந்த சபையினர் தான். அவர்கள் காலத்துக்குரிய சுபாவம் அல்லது இயல்பு சிமிர்னா சபையின் காலத்தில் வெளிப்பட்டது. அவர்கள் இரத்த சாட்சிகளுக்குரிய கிரீடத்தை அணிய வேண்டியவர்கள். எனவே அவர்களில் அநேகர் கொல்லப்பட்டனர். 10ம் வசனத்தை இப்பொழுது எடுத்துக் கொள்வோம். “ நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே; (சாத்தானின் கூட்டம்) இதோ, நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன்' (வெளி.2:10) 119 . ஓ, என்னே! தங்களுடைய நம்பிக்கைக்காக அவர்கள் மரிக்க வேண்டியிருந்த பொழுது, அவர்கள் அஞ்ச வேண்டாம் என்று அவர்களுக்கு கூறப்பட்டது. இப்பொழுது சகோதரி உட் அவர்களே, நீங்கள் எங்கிருந்தாலும், நான் இப்பொழுது கூறுவது உங்களுக்கு உதவியாயிருக்கும் என்று நம்புகிறேன். அன்றொரு நாளில், சகோதரி உட் அவர்கள், சிலர் மட்டும் விடுவிக்கப்பட்டிருக்க, ஏன் வேறு சிலர் மட்டும் விடுவிக்கப்படாமல், ஒப்புக் கொடுக்கப்பட்டனர், என்பது புரியாத புதிராக தனக்கு இருக்கிறதாக கூறினார்கள். சில வேளைகளில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்... இந்த மக்களிடம் தேவன், “ நீங்கள் அஞ்ச வேண்டாம், சாத்தான் உங்களை அதற்குள் தள்ளிவிடுவான், ஏனெனில் இந்த நிக்கொலாய் மதஸ்தர் அனைத்து ஆயத்தங்களுடன், முஸ்தீபுகளுடன் வந்திருக்கிறதால், உங்களை உபத்திரவத்திறகுள் தள்ளி விடுவார்கள், என்னுடைய காரியமாக நீங்கள் மரிக்க நான் உங்களை விட்டு விடுவேன். ஆனால் நான் உங்களுக்கு ஜீவ கிரீடத்தை தருவேன்'' என்று கூறினார். 120. வெளி.2:10ம் வசனத்தை நான் மீண்டும் வாசிக்கிறேன். நீங்கள் அதைக் கவனியுங்கள். “ நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரண பரியந்தம்... (மரணம் வருகிற வேளை வரைக்கிலும் என்று அல்ல, மரணம் முடிய என்பதை பார்த்தீர்களா?)... உண்மையாயிரு. (அவர்கள் அவ்வாறே அது முடிய உண்மையாயிருந்தார்கள்.) 121. அவர் யாரை “ சாத்தானுடைய ஜெப ஆலயத்துக்காரர்கள்'' என்று அழைத்தார்? (தமிழ் வேதாகமத்தில் இந்த வசனம் “ சாத்தானுடைய கூட்டம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கில வேதாகமத்தில் சாத்தானுடைய ஜெப ஆலயத்தைச் சேர்ந்தவர்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது - மொழி பெயர்ப்பாளர்). நிக்கொலாய் மதஸ்தினரைத் தான் தேவன் அவ்வாறு அழைக்கிறார். அதை நாம் அறிவோம். அது அப்படித்தானே உள்ளது? இந்த நிக்கொலாய் மதஸ்தர், அங்கே ஒரு ஸ்தாபனமாக இருந்தார்கள். அதில் குருக்களாட்சி ஏற்பட்டு அது எழும்பி, இந்த மக்களை துன்புறுத்தவும் செய்தபொழுது, இவர்கள் மரணம் ஏற்படுகிற வரைக்கிலும் சுவிசேஷத்திற்கு உண்மையாயிருக்க வேண்டுமென்று கூறப்பட்டனர். திருமண விழாவில் மணமக்களை வாக்குக் கேட்கையில், “ மரணத்திற்கு முன்னால் வரையிலும்'' என்று கேட்பதில்லை, “ மரணத்தில் நாம் பிரிகிறவரையிலும்'' என்று தான் கேட்கப்படுகிறது. “ மரணம் நேரிடுகிறதற்கு முன்னால் வரையிலும், என்பதற்கும், “ மரணத்திலும்'' என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. மரணத்திலும் அவர்கள் கிறிஸ்துவுக்கு உண்மையாயிருக்க வேண்டியதாயிருந்தது. “ அதனுடன் நீங்கள் மரணத்திற்குள் செல்லுங்கள். அஞ்ச வேண்டாம். ஏனெனில் நான் உங்களுக்கு ஜீவ கிரீடத்தைத் தருவேன்'' என்று வாக்குரைத்திருக்கிறார். 122. இப்பொழுது, இங்கே "பத்து நாட்களைப்' பற்றி கூறப் படுகிறது, வேதத்தில் ஒரு நாள் என்பது ஒரு வருடத்தைக் குறிக்கும். பத்து நாட்கள்'' என்று வேதம் கூறியது, “ பத்து ஆண்டுகள்'' ஆகும். அதாவது ரோமச் சக்கரவர்த்தியாகிய “ டயக்ளீஷன்'' என்பவனின் முடியாட்சிக் காலத்தின் இறுதிப் பத்தாண்டுக்கால ஆட்சியாகும். சிமிர்னா சபைக் காலத்தின் இறுதிக் கட்டத்தில், பெரிய சக்கரவர்த்தியாக இம்மன்னன் அரசாண்டான். எபேசு சபைக்காலம் முதல் சிமிர்னா சபைக்காலம் முடிய உள்ள காலங்களில் பல மன்னர்கள் அரசாண்டார்கள். அவர்களில் நீரோ என்பவன் ஒருவன் என்று நினைக்கிறேன். இந்த டயக்னீஷயன் என்பவன் சபையின் உத்திரவ காலத்தின் இறுதிக் கட்டத்தில் அரசாண்ட கடைசி மன்னன் ஆவான். இவனது ஆட்சிக் காலத்தின் இறுதிப் பத்தாண்டுக்கால ஆட்சியின்போது தான், இவன் எல்லோரையும் மிஞ்சுகிற அளவுக்கு பயங்கரமான, இரத்த வெறிபிடித்த உபத்திரவம் கொடுத்தவனாக இருந்து வந்தான். அவன் இந்த நிக்கொலாய் மதஸ்தர் குழுவினரின் சார்பில் இருந்தான். அவர்கள் கிறிஸ்தவர்களைக் கொன்றனர், எரித்துப் போட்டனர்; மற்றும் இன்னும் எத்தனையோ கொடுமைகளும், இரத்த ஆறு ஓடுமளவுக்கு 10 ஆண்டுக்கால உபத்திரவமும் உண்டாயிருந்தது. அவனது இந்த கொடுமைவாய்ந்த அரசாட்சி கி.பி.301 முதல் 312 முடிய நீடித்தது. அத்தோடு சிமிர்னா சபைக் காலமும் முடிவுக்கு வந்தது. கி.பி.312ல் கான்ஸ்ட ன்டைனின் ஆட்சி மலர்ந்தது. கான்ஸ்டன்டைன் கி.பி.312ல் ஆட்சிக்கு வந்தான். ஆக கி.பி.302 முதல் கி.பி.312 முடிய உள்ள அந்தப் பத்தாண்டுக்கால உத்திரவம்தான், “ பத்து நாட்கள் உபத்திரவப்படுவீர்கள்'' என்று சொல்லப்பட்டதன் பொருளாகும். நீரோ மன்னன் கி.பி.64ல் ஆட்சிக்கட்டில் ஏறிய பொழுது கிறிஸ்தவ சபைக்கு உபத்திரவமம் ஆரம்பித்தது, கி.பி.312ல் டயக்ளிஷயனின் ஆட்சி முடிவடைந்ததோடு, உபத்திரவம் முடிவடைந்தது. 123. 11ம் வசனம் ஒரு வாக்குத்தத்தத்தைக் கொண்டதாக இருக்கிறது. இதைப் பார்த்துவிட்டு நாம் முடிப்போம். “ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்கிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.” வெளி.2:11 124. இந்த இடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டியனாக இருக்கிறேன். நான் இருதயத்தில் சரியென்று காண்கிறதை உங்களிடம் சொல்லாமல் மறைத்தால் நான் ஒரு மாய்மாலக் காரனாக இருப்பேன். பாருங்கள்? இந்த வேத வாக்கியத்தில் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அது என்ன என்று நான் கண்டுகொள்ளுகிற வரையிலும், வெகு காலமாக அது எனக்கு புரியாத மிகப் பெரிய புதிர்களில் ஒன்றாக இருந்தது. இப்பொழுது நாம் இந்த வசனத்தை மிகவும் கவனமாக வாசிப்போம். “ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன்.... (காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றால், ஆவியானவர் சொல்வதைக் கேட்க காதுகள் திறந்திருக்க வேண்டும். ஒவ்வொரு சபையிலும் காணப்பட்ட அதே காரியங்கள், உபத்திரவங்கள் யாவும், மற்றும் ஒவ்வொரு காரியமும், அனைத்து சபைகளிலுமே காணப்பட்டது. எனவே தான் ஒவ்வொரு சபைக்கு என்று சொல்லப்பட்டிருப்பதிலும் சபைகளுக்கு என்றும் சொல்லப்பட்டிருக்கிற படியால், அது எபேசுவுக்கு சொல்லப்பட்டது. எபேசுவுக்கு மட்டும் உரியதல்ல, சிமிர்னாவுக்கு சொல்லப்பட்டவை, சிமிர்னாவுக்கு மட்டும் உரியதல்ல, ஒவ்வொரு சபைக்கும் சொல்லப்பட்டது அனைத்து சபைக்காலங்களுக்குமே பொருந்தும் என்பதைக் கவனியுங்கள்)... ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது. (எந்த சபைக்காலத்தில் ஜெயங்கொள்கிறவன்? எபேசுவின் காலத்தில் ஜெயங்கொள்கிறவனுக்கா? அல்லது சிமிர்னாவின் காலத்தில் ஜெயங்கொள்கிறவனுக்கு மட்டுமா? எல்லா சபைக் காலங்களிலுமே ஜெயங்கொள்ளுகிறவனை இரண்டாம் மரணம் சேதப்படுத்துவதில்லை. 125. லவோதிக்கேயா சபையின் காலத்தில் ஜெயங்கொள்ள வேண்டியவன் எதன் மேல் ஜெயங்கொள்ள வேண்டும்? நிக்கொலாய் மதஸ்தரையும், உலகத்தின் காரியங்களையும், இந்த ஸ்தாபனங்களையும், இந்த குருக்களாட்சி முறைகளையும், அகற்றி விட்டு, அதன்மேல் ஜெயங்கொண்டு கிறிஸ்துவை நேசிக்க வேண்டும். அப்படிச் செய்தால், இரண்டாம் மரணம் உங்களைச் சேதப்படுத்துவதில்லை. ஏன்? அவரிடம் நித்திய ஜீவன் இருக்கிறது. நித்திய ஜீவன் மரிக்க முடியாது. “ எனக்கு செவி கொடுப்பவன் மரியாமல் நித்திய ஜீவனை உடையவனாயிருப்பான்; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்''. 126. இப்பொழுது நான் ஒன்றைச் சொல்லப் போகிறேன். நீங்கள் நான் சொல்லப் போகிற விஷயத்தை ஒத்துக் கொள்வதில்லை. ஆனால் அதின் பேரில் உங்கள் இறுதியான தீர்மானத்திற்கு நீங்கள் வரும் முன்னர், அதைப்பற்றி நீங்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டுமென விரும்புகிறேன். 127. நரகம் நித்தியமானது என்பதை நான் விசுவாசிக்கவில்லை. நித்தியமானதொரு நரகம் இருக்கவே முடியாது. ஏனெனில், நித்தியமான நரகம் என்று இருக்குமானால், அப்பொழுது, அந்நரகமானது முடிவே இல்லாதபடி நித்தியமாக இருக்கும் என்று ஆகிவிடும். எப்படியெனில், ஒரெயொரு வகையான நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு. அதை அடையவே நாம் பாடு படுகிறோம். நீங்கள் நித்திய காலமாக நரகத்தில் எரிந்து கொண்டிருப்பீர்களானால், அப்பொழுது நித்திய ஜீவனோடு அக்கினியில் வேகுதல் உங்களுக்கு உண்டாயிருக்கும். அப்படியாயின் தேவன் நித்தியரானபடியினால், ஒரேயொரு வகை நித்திய ஜீவன்தான் உண்டு என்பதாலும், தேவனும் நித்தியமாக வெந்து கொண்டிருப்பார் என்று ஆகிவிடுமே. எனவே, நித்தியமான நரகம் என்று ஒன்று இருக்க முடியாது. எப்படியெனில், “ பாதாளம் உண்டாக்கப்பட்டது'' என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படி “ சிருஷ்டிக்கப்பட்டது' என்றால், அப்பொழுது அது நித்தியமானது அல்ல. நித்தியமானது எதுவும் சிருஷ்டிக்கப்பட்ட ஒன்றல்ல. அது எப்பொழுதுமே இருந்து வருகிறது. அது நித்தியமானதாக இருக்கிறது. “ பிசாசுக்கும் அவனுடைய தூதர்களுக் காகவும் நரகம் உண்டாக்கப்பட்டது'' என்று வேதம் உரைக்கிறது. நரகபாதாள மானது உண்டாக்கப்பட்ட ஒன்று. எனவே அது நித்தியமானதல்ல. ஒரு மனிதன் நித்தியமாக ஆக்கினைக்குட் படுத்தப்படுவான் என்பதை நான் விசுவாசிக்கவில்லை. 128. “ ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை'' என்று இங்கே வேதமானது தெளிவாகக் கூறுகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். ''மரணம்'' என்ற வார்த்தை “ பிரிவு'' என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. நாம் பாவத்தினால் தேவனை விட்டு பிரிக்கப்படும் பொழுது, நாம் ஏற்கனவே மரித்தவர்களாயிருக்கிறோம். வேதம் அவ்வாறு கூறுகிறது. நாம் தேவனைவிட்டு பிரிக்கப்படுகிறோம், நாம் அறுப்புண்டு போகிறோம்; நாம் பாவத்திலும், அக்கிரமங்களிலும் மரித்தவர்களாயிருக்கிறோம். அதினால் தேவனுக்கும் அவருடைய காணியாட்சிக்கும் அந்நியராகிவிடுகிறோம். நாம் தேவனை ஏற்றுக் கொள்ளும் பொழுது நித்திய ஜீவனைப்பெற்று, அவருடைய பிள்ளைகளாகவும், அவருடைய பாகமாகவும் ஆகிறோம். 129. என்னுடைய இளைய மகன் ஜோசப், என்ன செய்திட்ட போதிலும், அவன் என்னில் ஒரு பாகமாக இருக்கிறான். நான் ஒரு பெரிய ஐசுவரியவானாயிருந்து, ஏராளம் ஆஸ்தி இருக்கிறது என்று இருக்குமானால், அவன் அவைகளை சுதந்தரித்துக் கொள்ளாது போய்விட்டாலும், அவன் என்னில் ஒரு பாகமாக இருக்கிறான். அவன் என்னுடைய மகனாகவே இருந்து வருகிறான். நிச்சயமாக அவன் என்னுடைய பாகமாக இருக்கிறான். நான் என்னையே எப்படி மறுதலிக்க முடியாதோ, அதே அளவுக்கு அவனையும் நான் மறுதலிக்க முடியாது. ஏனெனில் அவன் என்னுடைய பாகமா யிருக்கிறான். அவனில் நடத்தப்படும் இரத்தப் பரிசோதனை அவன் என் மைந்தன் தான் என்பதைக் காட்டிவிடும். 130. அந்த இரத்தப் பரிசோதனை, நீங்கள் தேவனுடையவர்களா இல்லையா என்பதையும் காண்பித்துவிடும். நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறீர்கள், எனவே உங்களுக்குள் நித்திய ஜீவன் இருக்கிறது. ஆனால் பாவஞ்செய்கிற ஆத்துமாவோ தேவனை விட்டு பிரிந்து போய்விடும். அது சரிதானே? அதன்பிறகு இனி மேல் அது இருக்காது. இப்பொழுது பாருங்கள். சிருஷ்டிக்கப்படும் எந்தவொன்றும் தன்னில் ஒரு துவக்கத்தைக் கொண்டதாக இருக்கிறது. அவ்வாறு துவக்கத்தையுடைய எந்தவொன்றும் நிச்சயம் முடிவையும் உடையதாகவே இருக்கிறது. ஆனால் தேவன் சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல. அவர் எப்பொழுதும் தேவனாகவே இருக்கிறார். அவர் சிருஷ்டிக்கப்பட்டார் என்பதற்கு இடமேயில்லை. நித்திய ஜீவன் நாம் பெற்றுக் கொள்வதற்காக உள்ள ஒரேயொரு வழி என்னவெனில், அந்த சிருஷ்டிப்பின் ஒரு பாகமாக நீங்கள் இருக்க வேண்டும். மகிமை! ஓ, நாம் இதை கண்டு கொள்ள முடிந்தால்! பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு என்ன செய்கிறார்? பரிசுத்த ஆவியானவர் என்பவர் பிதாவாகிய தேவனாகிய சிருஷ்டிகர் தானேயாவார். அவரே ஆவியின் ரூபத்தில் இருந்து, “ பரிசுத்த ஆவி'' என்றழைக்கப்பட்டார். ஏனெனில், அவருடைய குமாரனாகிய இயேசு என்று அழைக்கப்பட்ட சரீரத்திற்குள் அவர் இருந்தார். அவர் அந்த சரீரமாகிய இயேசுவை சிருஷ்டித்தார், அக்காரணத்தினால் தான் அச்சரீரம் மரிக்க வேண்டியதாயிருந்தது. தேவன் அந்த மாம்ச சரீரத்தில் வாசம் செய்தார். அதிலுள்ள ஜீவனும் இரத்த ஜீவ அணுக்களும் மனிதர் மேல் திரும்பி வந்தது. 131. எனவேதான், பழைய ஏற்பாட்டின் காலத்தில் இருந்த தேவனைத் தொழுது கொள்ளுகிறவர்கள் மிருகத்தை பலி செலுத்திய பிறகும் கூட, அவன் பிராயசித்தத்திற்காக பலி செலுத்துவதற்கு முன்னால் அவன் உள்ளத்தில் தன்னில் பாவம் உண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி இருந்ததே, அதே உணர்வுடன் தான் பலி செலுத்திய பிறகும் புறப்பட்டுப் போகிறான். ஆனால் புதிய ஏற்பாட்டிலோ, எபிரெயரில் கூறப்பட்டுள்ளபடி, “ ஒருதரம் சுத்தமாக்கப்பட்ட பின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால்'' என்ற நிலைமை இருக்கிறது. 132. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஆராதனை செய்கிறவன், ஒரு ஆட்டுக்குட்டியை கொண்டு வந்து அதன் மேல் தன் கைகளை வைக்கிறான், ஆசாரியன் அப்பலிமிருகத்தின் தொண்டையில் அறுக்கிறான், இரத்தத்தை கீழே வடியவிடுகிறான், அவ்வாட்டுக் குட்டியின் கதறல் சப்தத்தை ஆராதனை செய்கிறவன் கேட்கிறான். பின்பு அது மரித்து விடுகிறது. அது விறைத்துப் போன பொழுது அது மரித்ததை அவன் உணருகிறான். தான் அடைய வேண்டிய அம்மரணத்தை அவ்வாட்டுக்குட்டி எடுத்துக்கொண்டு விட்டது என்பதை உணருகிறான். அப்பொழுது ஆசாரியன் இரத்தத்தை பலிபீடத்தின் மேல் தெளிக்கிறான், பலிமிருகம் தகனிக்கப்படும் போது, அதிலிருந்து எழும்பும் புகையானது, ஆராதனை செய்கிறவனுக்காக ஏறெடுக்கப்படும் பாவமன்னிப்புக்கான ஜெபமாக இருக்கிறது. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி). பலியான அம் மிருகத்தின் ஜீவனானது, மீண்டும் மனிதனுக்குள் வந்து, மனிதனின் ஆவியோடு சங்கமிக்க முடியாது. ஏனெனில் அது மிருகத்தின் ஆவியாயிருக்கிறது. மிருகத்தின் ஆவியும், மனிதனின் ஆவியும் இணைய முடியாது. ஆகவே தான், மிருகத்தைப் பலி செலுத்தியவர்கள், பலி செலுத்திய பிறகும்கூட பாவத்தின் மேல் உள்ள அதே இச்சையோடு வெளியே செல்லுகிறார்கள். விபச்சார பாவத்தைப் பற்றி குற்ற உணர்வுள்ளவன், அதிலிருந்து மன்னிப்புக்கோரி பலிசெலுத்த உள்ளே வருகிறான், செலுத்தி முடித்த பிறகும், அதே உணர்வுடன் தான் வெளியேறுகிறான். 133. ஓ! தேவனுடைய சபையே, நான் கூறப் போவதை பெற்றுக் கொள்ளத் தவற வேண்டாம்! ஆனால் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இப்பொழுதோ, ஆராதனை செய்கிற ஒருவன், தேவனுடைய குமாரனிடத்தில் உண்மையாக நடந்து வந்து, விசுவாசத்தினால் அவர் மேல் தன் கைகளை வைக்கிறபோது, முகத்தில் துப்பப்பட்டவராக தொங்கிக் கொண்டிருக்கிறதையும், அவருடைய முகத்தில் இரத்தம் வடிந்து கொண்டிருக்கிறதையும் வலியின் வேதனையில், “ என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?'' என்று கதறுகிற அவரது முகத்தைப் பாருங்கள். ஓ சகோதரனே, அவர் மரித்ததினால் என்னே ஒரு மகத்தான கிரயத்தை அவர் உனக்காகக் கொடுத்து மரித்தார் என்பதைப் பாருங்கள். அவர் யார், அவர் தான் உன்னுடைய ஸ்தானத்தில், உனக்குப் பதிலாக, மரிக்கிற இம்மானுவேல் என்ற தேவன். 134. அப்பொழுது என்ன நடந்தது? தேவனுடைய குமாரனில் இருந்த இரத்த அணுக்கள் பிளந்தபோது... அந்த இரத்த அணுக்களை உண்டாக்கியது எது? 135. நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்? நீங்கள் உங்கள் தந்தையிலிருந்து ஒரு மிகச்சிறிய ஜீவ அணுவாகத்தான் புறப்பட்டு வந்திருக்கிறீர்கள். அவ்விதமான ஒரு அணு பெண்ணிடம் கிடையாது அவள் சினைமுட்டையை மாத்திரமே உடையவளாயிருக்கிறாள். ஆணிடமிருந்து வரும் ஜீவ அணுவை கருத்தரிக்கச் செய்து, தன்னகத்தே, அதை குழந்தையாகப் பிறப்பிப்பதை மாத்திரமே செய்கிறாள். ஆனால் இரத்தமானது தந்தையிடமிருந்து தான் வருகிறது. எனவே தான், பிறக்கும் குழந்தை தந்தையின் பெயரையே எடுத்துக் கொள்கிறது. ஒரு மனிதனை விவாகம் செய்து கொள்ளும் பெண்ணானவள், அவனுக்கு தான் பெற்றெடுக்கும் குழந்தைகளினிமித்தம், அவனது பெயரையும் தனக்கு சூட்டிக் கொள்கிறாள். அவள் தானே அவனுக்குப் பெற்றுக் கொடுக்கப் போகும் குழந்தைகளுக்காக அவயங்காக்கிறவளாக ஆகிறாள். ஆனால் நான் கூறியபடி, ஒரு பெட்டைக்கோழி ஒரு சேவலுடன் சேராமலேயே முட்டையிடலாம், ஆனால் சேவலோடு சேராமல் போடப்பட்ட முட்டையோ, அடையில் வைத்து குஞ்சு பொறிக்கப்பட முடியாத முட்டையாக இருக்கும். 136. அதைப்போலவே, நான் ஏற்கனவே கூறியபடி, இன்றைக்கு நமக்கு அநேக ஜீவனற்ற, புறம்பான ஆசாரங்களையுடைய, குளிர்ந்து போன நிலையிலுள்ள, கிழடுதட்டிப்போன ஏராளம் சபைகள் உள்ளன. அவர்கள் இந்த நிக்கொலாய் மதஸ்தரின் போதனைகளை கைக்கொண்டு, அதினால் அவர்களுடைய கூடுகள் முழுவதும் அழுகிப்போன முட்டைகளால் நிறைந்ததாய் இருக்கின்றன; அவைகள் ஒருபோதும் குஞ்சு பொறிக்க முடியாதவையாகும். நீங்கள் என்னென்ன பிரயத்தனங்கள் மேற்கொண்டாலும் ஒன்றும் நடக்காது. அவர்களை பிஷப்புகள், டீக்கன்கள் என்றெல்லாம் நீங்கள் அழைத்தாலும் பயனில்லை. விசுவாசிகளை தொடரக் கூடிய அடையாளங்களை அவர்கள் ஒருபோதும் விசுவாசிக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவோடு இணைந்திருக்க வில்லை. அந்த மணவாளனால் தேவனுடைய வல்லமையைக் கொண்டு அவர்கள் சினைப்பட்டிருந்தால்... 137. அந்த இரத்த ஜீவ அணுக்கள் கல்வாரி சிலுவையில் பிளக்கப்பட்டபோது, அந்த சிறிய யேகோவாவில் இருந்த அந்த ஜீவன்... ஓ! இவ்விஷயம் உங்களை அசைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்! 138. ஒவ்வொருவரும் ஒரு அடையாளத்திற்காகப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவ்வாறில்லையா? “ ஒரு அடையாளத்தைக் காண்பியும்'' என்று ஒவ்வொருவரும் கேட்கிறார்கள். யூதன் கூறினான், “ எனக்கொரு அடையாளத்தைக் காண்பியும்'' என்று. 139. நான் ஒரு அடையாளத்தை உங்களுக்கு கொடுக்கட்டும். தேவன் ஒரு சமயம் ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். அவர்கள் அவரிடம் ஒரு அடையாளத்தைக் கேட்டார்கள். இஸ்ரவேல் ஒரு அடையாளத்தைக் கேட்டது. அவர் தீர்க்கதரிசியிடம், “ நான் உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கேட்டது. அவர் தீர்க்கதரிசியிடம், “ நான் உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பேன். இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் (ஆமென்), அவருக்கு இம்மானுவேல் என்று பேயரிடுவாள்'' என்று கூறினார். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். கொடுக்கப்பட்ட அடையாளங்களியெல்லாம் மிகப்பெரிய அடையாளம் இதுவே. 140. வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்த தேவன், இந்த சூரியக் குடும்பத்தையும் உண்டாக்கினார். பலோமர் என்ற அந்த மலையின்மேல் நின்று கொண்டு தொலை நோக்கியின் மூலம் தூரத்தில் பார்த்தால், அங்கிருந்து 120 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது பத்து இலட்சம் - மொழி பெயர்ப்பாளர்) ஒளி ஆண்டுகள் தூரத்தில் (ஒரு ஒளி ஆண்டு என்றால் 6,000,000,000,000 (6000 பில்லியன்) மைல்களுக்குச் சமம்) விண்வெளியில் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அதை மைல்கணக்கில் கொண்டு வந்து பாருங்கள். அதற்கு அப்பாலும், நிலவுகளும், நட்சத்திரங்களும், உலகங்களும் இன்னும் ஏராளம் உண்டு. அவரே அவையாவையும் உண்டாக்கினார். அவைகள் யாவும் அவருடைய கரத்திலிருந்து வெடித்துப் புறப்பட்டன. 141. அத்தனை மகத்துவமான சிருஷ்டிகர் என்னுடைய இரட்சகரானார். அந்த மகத்துவமுள்ளவர் ஓர் சிறிய இரத்த ஜீவ அணுவினுள் பிரவேசித்து, அவ்வணாவானது, ஒரு மனிதன் மூலமாக அல்ல, கறைப்படாமல் பரிசுத்தமான முறையில், ஒரு ஸ்திரீயினுள் வைக்கப்பட்டு, அவர் தனக்கென ஒரு சிறிய வாசஸ்தலத்தை உருவாக்கிக் கொண்டு அதனுள் அவர் ஜீவித்தார். ஒரு அது அசைக் கக்கூடியதாக இருக்கிறது. யேகோவா! யேகோவா வைக்கோல் நிறைந்த முன்னணையில் தொழுவத்தின் சாணம் குவிக்கப்பட்டுள்ள இடத்தில், குழந்தையாக அழுது கொண்டு இருக்கிறார். இதுவே இந்த சிலு பெருந்தலைகளான மக்களுக்குக் கொடுக்கப் பட்ட நித்திய அடையாளமாயிருக்கிறது. யேகோவாவாகிய தேவன் நாற்றமெடுக்கும் முன்னணையில் குழந்தையாக கிடத்தப் பட்டிருக்கிறார். (அல்லேலூயா!) அப்படியிருக்க, நாம் பெரியவர்கள் என்று நம்மை நினைத்துக் கொண்டு ஆணவத்தால் தலை நிமிர்ந்து நடக்கிறோம். அடைமழை பெய்தால், அது உங்களை மூழ்கடித்து விடும். ஆனால் நீங்களோ உங்களைப் பெரியவர்கள் என்று நினைத்துக் கொள்கிறீர்கள். யேகோவா! சாணக்குவியலின் மேல் ஒரு முன்னணையில் அழுது கொண்டிருக்கும் குழந்தையாக கிடத்தப்பட்டிருக்கிறார். அது எவரையும் அசைக்கக் கூடியதாக இருக்கிறது. அதுவே அடையாளம். “ நான் உங்களுக்கு நித்திய அடையாளத்தைக் கொடுப்பேன்'' என்று தேவன் கூறினார். அதுவே மெய்யான அடையாளமாயிருக்கிறது. விளையாடிக் கொண்டு இருக்கிற ஒரு சிறுவனாக யேகோவா இருந்தார். யேகோவா ஒரு பணிமனையில் மரத்தை அறுத்து பணி செய்யும் ஒரு தச்சராக இருந்தார். அல்லேலூயா! என்னே, ஓ, என்னே! மீன்பிடிக்கிறவர்களின் கால்களை யேகோவா கழுவினார். “ ஒரு அடையாளத்தை நான் தருவேன்'' என்றாரே, அது இதுதான். 142. ஆனால் தேவன் இந்த மகத்தான அடையாளத்தைக் கொடுத்திருக்கையில், மனிதருக்கோ கழுத்துப்பட்டை யணிந்த, அங்கி தரித்த குருக்கள் வேண்டும் என்கிறார்கள். பாருங்கள்? ஓ! 143. “ நான் உங்களுக்கு அடையாளத்தைத் தருவேன்'' என்றார். யேகோவா அரண்மனை முற்றத்தில் முகத்தில் காரிதுப்பப்பட்ட நிலையில் நின்று கொண்டிருக்கிறார். யேகோவா நிர்வாணமாக, வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கிக் கொண்டிருந்தார். சிலுவையின் அவமானத்தை அவர் துச்சமாக எண்ணினார். நாம் அவருக்கு ஒரு சிறு துணியை இடுப்பில் சுற்றிய நிலையில் சிலை செய்து வைத்துள்ளோம். ஒரு சிற்பி அவ்வாறு செதுக்கினான். ஆனால் அவர்கள் அவரை நிர்வாணமாக்கி அவரை இக்கட்டான சூழ்நிலையில் வைத்தனர். ஒரு கூட்டம் மாய்மாலக்காரர்கள், நேரம் வந்தபோது, கிரியை செய்தார்கள். இது மனிதனின் நாளாக இருக்கிறது. கர்த்தரின் நாள் வந்து கொண்டிருக்கிறது. யேகோவா மரித்துக் கொண்டிருந்தார், ஆம், ஒன்றும் நடைபெறவில்லை, யேகோவா ஜெபித்துக் கொண்டிருந்தார். ஒன்றும் சம்பவிக்க வில்லை. அது உண்மை. அது உங்களை அசைக்க வேண்டும். அது நித்திய அடையாளமாயிருக்கிறது. எல்லா மனிதரும் அறிய வேண்டிய அடையாளம் அதுவே. அப்பொழுது அவர் மரித்தார். அப்பொழுது பூமி அசைக்கப்பட ஆரம்பித்த? ஓ, என்னே! 144. மரித்தோரிலிருந்து அவர் உயிரோடெழும்பி, உன்னதத்திற்கு ஏறினார். தன் ஜனங்களாகிய தன் சபையில் வாசம் பண்ணும்படி, யேகோவா பரிசுத்த ஆவியாக திரும்பி வந்தார். மகிமை! யேகோவா அவர்களுடைய சபை வழியாக நடந்து சென்று, அவர்களது இருதயத்தின் சிந்தைகளை பகுத்தறிந்தார். யேகோவா பிணியாளிகளை குணமாக்கினார். யேகோவா மனிதனின் உதடுகளை உபயோகித்து பேசினார், அப்பொழுது அவ்வுதடுகளை தேவன் பேச ஒப்புக் கொடுத்ததால், மனிதனின் கட்டுப்பாட்டில் அவன் உதடு இல்லை. அதே யேகோவா, தான் இன்னொரு மனிதனின் மூலம் பேசியவைகளை இங்கே, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வியாக்கியானிக்கிறார். ஒரு அடையாளம் தேவையா? ஆமென்! அதே யேகோவா ஒரு வேசியினிடத்தில் இறங்கி வந்து அவளை எழுப்புகிறார். அவளை நாய்கள் கூட ஏறிட்டுப் பார்க்கக்கூடாத அளவுக்கு மிகவும் கீழ்த்தரமான நிலையிலிருந்தபோது, அவர் அந்தவிதமான நிலையிலிருந்து அவளை தூக்கியெடுத்து, அவளை கழுவி, உறைந்த வெண்பனியிலும் வெண்மையாக ஆக்கி, லீலி புஷ்பத்தைப் போன்ற சுத்தமான இருதயத்தை அவளுக்குக் கொடுக்கிறார். ஒதுக்கமான சந்துகளில் குடித்து வெறித்து, ஈக்கள் வாயைச் சுற்றிலும் மொய்க்கும் அளவுக்கு மயங்கி கிடக்கிறதான குடிகாரனை யேகோவா தூக்கியெடுத்து, சுத்தமாக்கி, அவனை சுவிசேஷத்தைப் பிரசங்சிக்கும்படி செய்கிறார். 145. அவர் பூமியில், இருந்தபொழுது, உலகிலேயே மிகவும் தாழ்வான நகரத்திற்கு, மிகவும் தாழ்வான மக்களிடத்திற்குச் சென்றார். அவருக்கு அவர்கள் மிகவும் கீழ்த்தரமான பெயரை சூட்டினர். அவர்கள் அவரை மிகவும் கேவலமாக நடத்தி, அவரை “ பெயல்செபூல்'', பிசாசுகளின் தலைவன்'' என்ற மிகமிக மட்டமான நாமத்தை சூட்டி அழைத்தனர். மனிதன் அவரை மிகவும் கீழ்த்தரமான நாமத்தினால் அழைத்தான். 146. அவனால் தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, மிகவும் உன்னதமான சிங்காசனத்தை அவருக்குக் கொடுத்தார். அவர் மிக உன்னத நிலைக்கு உயர்த்தப்பட்டதால், மிக மிக உயரத்தில் இருக்கும் வானமே அவரால் குனிந்து பார்க்க வேண்டிய அளவில் இருக்கிறது. வானத்திலும் பூமியிலும் உள்ள எல்லா நாமங்களுக்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். அந்த நாமத்தினால் தான் பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ள முழுக் குடும்பத்திற்கும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மனிதன் அவரைக் குறித்து இவ்வாறு தாழ்வாகத்தான் சிந்தித்தான். அவரைக் குறித்து இவ்வாறு தாழ்வாகத்தான் சிந்தித்தான். அவரைக் குறித்து தேவன் மிகவும் உயர்வாக சிந்தித்தார். ஓ தேவனே, என் சிந்தனைகள் யாவும் உம்முடைய சிந்தனைகளைப் போல் இருக்கட்டும், பிதாவே. ஆம் ஐயா, ஓ, விலையேறப் பெற்ற நாமம்! 147.“ என்னை விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனா யிருக்கிறான்''. ஒரேயொருவிதமான நித்திய ஜீவன் தான் உண்டு என்றால், அதையே பெற்றுக் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவின் மூலமாக அந்த ஜீவனை அடைய நாம் நாடிக் கொண்டிருக்கிறோம். அது தேவனுடைய ஜீவனாயிருக்கிறது. தேவனுடைய குமாரனில் இருந்த ஜீவ அணுக்கள் பிளக்கப்பட்டபோது, இயேசு என்ற இந்த மனிதனில் அந்த சிறு யேகோவா அடங்கியிருந்தார் (அவரில் தேவத்துவத்தில் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக வாசமாயிருந்தது) இப்பொழுது அந்த இரத்தத்தை நாம் நம்முடைய பாவ நிவர்த்திக்காக விசுவாசிப்போமெனில். அந்த ஆவி, அது மனிதனில் இருந்த ஆவியல்ல, தேவனில் இருந்த அந்த ஆவி, நம்மேல் வருகிறது. மகிமை! அது “ தேவனுடைய இரத்தம்'' என்று வேதம் கூறுகிறது. 148. “ யூதர்களை பற்றி நீங்கள் என்னிடம் சொல்ல வேண்டாம், அவர் ஒரு யூதன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்'' என்று ஒருவர் கூறினார். இயேசு ஒரு யூதனல்ல. அவர் யூதனுமல்ல, புறஜாதியானுமல்ல. அவர் தேவன். அதுதான் சரி. அவர் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட இரத்தம். தேவன் விசேஷித்த விதமாக அதை உண்டாக்கினார். அந்த இரத்தம் அவரது சொந்த இரத்தமாகும். சிருஷ்டிக்கப்பட்ட அந்த இரத்தத்தின் மூலமாக நாம் அதை நம்முடைய பாவ மன்னிப்புக்காக ஏற்றுக்கொள்கிறோம். ஏனெனில் நமக்காக அவர் அந்தவிதமான மரணத்தில் மரித்தார். அந்த இரத்த ஜீவ அணுவானது பிளக்கப்பட்டு, அதிலிருந்து பரிசுத்த ஆவி திரும்ப நம் மேல் வந்து, ஆவியினால் உண்டாகும் புதிய பிறப்பின் மூலமாக நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமானோம். இப்பொழுது ஆதியும் அந்தமுமில்லாத தேவனுடைய ஜீவனானது, இயேசு கிறிஸ்து மூலமாய் உண்டான தேவனுடைய கிருபையினாலே, எனக்கும் உங்களுக்கும் உரியதாய் இருக்கிறது. 149. இப்பொழுது மீண்டும் “ நரகம்'' என்ற வார்த்தைக்கு சிறிது நேரம் திரும்பிப் போவோம். எரிகிற நரகம் உண்டென்று நான் விசுவாசிக்கிறேன். ஆம், ஐயா! வேதம் அக்கினிக் கடலைப் பற்றி கூறியுள்ளது. ஆனால் அது ஒருக்காலும் நித்தியமானதாக இருக்க முடியாது. வேதம் அவ்வாறு கூறவில்லை. “ சதாகாலங்களுக்கு இருக்கும் நரகம்'' என்று கூறுகிறது (It is not ETERNAL but EVERLASTING - மொழி பெயர்ப்பாளர்). நரகம் பிசாசுக்காகவும், அவனது தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட தொன்றாகும். அது சதாகாலங்களுக்கும் இருக்கும், ஆனால் நித்தியமான தாக இருக்காது. நான் அறிந்த வரையில், ஆத்துமாவானது அதன் செய்கைக்கா, ஒருவேளை, பத்து மில்லியன் ஆண்டுகள் நரகத்தில் வாதிக்கப்படக் கூடும். தேவனுடைய பார்வையில் சதாகாலம் என்பது எப்படியிருக்கக் கூடும் என்பது எனக்குத் தெரியாது. அது ஒரு வேளை ஐந்து நிமிடங்களாக இருக்கலாம். அல்லது ஒருவேளை ஒரு மில்லியன் ஆண்டுகள் என்றிருக்கலாம். அது ஒருவேளை 10 மில்லின் ஆண்டுகளுக்குக் கூட இருக்கலாம். ஆனால், எப்படியும் அந்த ஆத்துமா இல்லாமல் போகிற ஒரு வேளை வரும். 150. வேதம் இங்கே இவ்வாறு கூறுகிறது. “ ...ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை " 151. முதல் மரணமானது நமக்குப் பிரியமானவர்களிடமிருந்து நம்மை பிரிக்கக் கூடியதாக இருக்கிறது. நாம் மரித்தாலும், தேவனுடைய சமூகத்திற்குள் செல்லுவோம். அவருடைய பிரசன்னத்தை விட்டு அகலமாட்டோம். இரண்டாம் மரணம் என்ற ஒன்று இருக்குமானால், அது நிச்சயமாக ஆத்துமாவின் மரணமாகத்தான் இருக்க வேண்டும். உலகத்தை ஜெயங்கொள்ளுகிறவன் அல்லது உலகத்துக்குரிய காரியங்களை ஜெயிக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருப்பான்; இரண்டாம் மரணமானது அவனைத் தொடுவதில்லை. நித்திய ஜீவன் என்பது அதுதான். “ சுகபோகமாக வாழ்கிற ஸ்திரீ உயிரோடு செத்தவள்'' என்று வேதம் கூறுகிறது. அது சரிதானே? “ பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்'' சாவதென்றால் என்ன? “ முழுவதுமாக பிரிக்கப்படுதல்''. “ இனி இல்லாதிருத்தல்'', பாருங்கள்? “ முழுவதும் அறுப்புண்டு போகுதல்''. இனிமேல் இல்லை என்றுள்ள கட்டம் எப்பொழுது ஏற்படும்? அது எவ்வாறு இங்கு ஏற்பட்டதோ, அதே நடை முறையில் தான் அது, இனி ஒன்றுமே இல்லை என்கிற நேரம் வரைக்கிலும் போகும். அது எதிலிருந்து உண்டாக்கப்பட்டதோ அங்கே அது திரும்பிச் செல்லுகிறது. 152. அந்த ஜீவ அணுவை எடுத்துக் கொண்டால், அதைப் பிளந்து பார்த்தால், அதை ஆராய்ந்து கொண்டே போனால், இறுதியில் முதல் ஜீவ அணுவுக்கு வருகிறோம். அந்த ஜீவ அணுவை நீங்கள் பிளந்தால், அப்பொழுது, இரத்தத்தின் பல்வேறு வேதிப் பொருட் களுக்குள் வருகிறீர்கள். கடைசியாக அந்த ஜீவ அணுவின் மிகவும் நுண்ணியமானதொரு பாகத்துக்கு வருகிறீர்கள். அதுதான் ஜீவன் ஆகும். விஞ்ஞானிகள் அதைக் கண்ணுற முடியாது. அதைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அந்த ஜீவனானது, ஒன்றுமே இல்லை என்று கருதுகிற அளவுக்கு உள்ள கட்டத்திற்கு வருகிறது. அந்த ஜீவனின் வேதியியல் பண்பு என்ன? அதற்கு எந்த வேதிப்பொருளும் உள்ளது என்பதை நான் விசுவாசிக்கவில்லை. அது ஆவிக்குரியதாக இருக்கிறது. 153. அதன் பிறகு, அக்கட்டத்தில், இறுதியாக அது முழுவதும் பிரிக்கப்பட்ட, இனிமேல் இல்லாமல் இருக்கிற ஒரு கட்டத்தை அடைந்து விடுகிறது. “ பாவஞ் செய்கிற ஆத்துமா சாகவே சாகும்'' என்று வேதம் கூறுகிறது. ''இந்த சபைக் காலங்களில் ஜெயங்கொள்ளுகிறவர்கள் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை''. சரீரம் முதலில் மரித்துவிடுகிறது, அடுத்து ஆத்துமா மரிக்கிறது, அதன்பிறகு அது இனி இல்லாமற்போய் விடுகிறது. பாருங்கள்? இவ்வாறு வேதம் கூறியிருக்கிறது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 154. இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள்: நரகம் நித்திய மானது என்று இருக்குமானால், அப்பொழுது வேதம் தவறான தாகப் போய்விடும். ஏனெனில், வேதத்தில் “ நரகம் சிருஷ்டிக்கப்பட்டது'' என்று கூறப்பட்டுள்ளது. ஒரு மனிதன் நரகத்தில் நித்தியமாக எரிந்து கொண்டிருப்பான் என்றால், அவன் உயிரோடு எரிய அவனுக்குள் நித்திய ஜீவன் இருக்க வேண்டும். அது சரி தானே? நல்லது, எத்தனைவிதமான நித்திய ஜீவன்கள் உண்டு? ஒரேயொரு நித்திய ஜீவன்தான் உண்டு. அது உண்மை. ஒரேயொரு நித்திய ஜீவன் மட்டுமே. 155. இப்பொழுது நீங்கள் புறப்பட்டுப் போய், “ சகோ. பிரன்ஹாம் நரகம் உண்டென்று விசுவாசிக்கவில்லை'' என்று சொல்லிவிடாதீர்கள். சகோ.பிரன்ஹாம் நரகம் உண்டென்று தான் விசுவாசிக்கிறார். நரகம் ஒன்று உண்டென்று வேதம் போதிக்கிறது. இளைப்பாறுதலுக்கென ஒரு வாஸ்தலம் உண்டு என்பது எவ்வளவு நிச்சயமானதோ, அதே அளவு, தண்டனைக்கு ஒரு ஸ்தலம் உண்டு என்பதும் நிச்சயம். தனக்கெதிராக பாவம் செய்கிற ஆத்துமாவை தேவன் நிச்சயமாக தண்டனைக்குட்படுத்துவார். இயேசு கிறிஸ்துவை உன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிப்பதினிமித்தம், நீ நிச்சயமாக தண்டிக்கப்படுவாய். ஆனால் நீ முற்றிலுமாக இனிமேல் இல்லாமற் போகும் வேளை வரப்போகிறது. ஆனால் அதற்கு எத்தனை மில்லியன் ஆண்டுகள் பிடிக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு காலவரையரை உண்டு, நித்தியமாக அல்ல. 156. நீங்கள் மறுபடியும் பிறக்கிற வரையிலும், நேரம், காலத்திற்கு கட்டுப்பட்ட வரையறைக்குப்பட்ட பிறவிகளாக இருப்பீர்கள். மறுபிறப்படைந்ததும் நீங்கள் முடிவில்லாத நித்திய பிறவிகளாக இருப்பீர்கள். நித்திய ஜீவனையுடையவர்களாக இருப்பதற்கு உங்களுக்கு இருக்கிற ஒரே வழி என்னவெனில், நீங்கள் உங்களில் தேவனின் பாகத்தையுடையவர்களாக இருத்தல் வேண்டும். அதை உங்களால் காண முடிகிறதா? நிச்சயமாக. “ ....ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்." 157. நான் அவரை நேசிக்கிறேன். நீங்கள் அவரை நேசிக்க வில்லையா? நித்திய ஜீவனை அடைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அது என்னை இனிமேல் வருத்தப்படுத்துவது இல்லை, ஏனெனில் இப்பொழுது நமக்கு நித்திய ஜீவன் உண்டாயிருக்கிறது. நான் அதை அறிந்திருக்கிறேன். நாம் யாவரும் அதைப் பெற்றிருப்போம் என்று நான் நம்புகிறேன். 158. நான் இங்கே ஐரேனியஸைப் பற்றி ஒரு குறிப்பு எழுதி வைத்துள்ளேன். அது சம்மந்தமாக “ இந்த வரலாற்றுக் குறிப்பை வாசிக்கவும்'' என்று எழுதி வைத்துள்ளேன். ஐரேனியஸ் தன் ஊழியத்தில் அந்த பெந்தெகொஸ்தே சபைக்குரிய அடையாளங்களையெல்லாம் பெற்றிருந்தார். 159. சபையானது பெந்தெகொஸ்தேவில் துவங்கியது என்பதை எத்தனை பேர்கள் விசுவாசிக்கிறீர்கள்? சரி. எத்தனை பேர், பெந்தெகொஸ்தேவில் ஏற்பட்ட சபையை தேவன் அங்கீகரித்து உறுதிப்படுத்தினார் என்பதை விசுவாசிக்கிறீர்கள்? சரி, ஐயா. அது தேவனுடைய முதல் சபை என்றிருந்ததென்றால், “ சபை" என்று அதை தான் அவர் அழைத்தார். இப்பொழுது அவர் திராட்சைச் செடியாக இருக்கிறார். நாம் அதன் கொடிகள். அந்தத் திராட்சைச் செடி இன்னொரு கொடியை படரவிட்டால், அது எப்படியிருக்கும்? அதுவும் பெந்தெகொஸ்தேவாக இருக்கும். ஆம்! பெந்தெகொஸ்தே என்று பெயர் போட்டுக் கொள்வதினால் அப்படியாக முடியாது. இப்பொழுது நம்மிடையே பெந்தெ கொஸ்தே என்று பெயர் போட்டுக் கொண்டுள்ளவைகள் உண்டு, அதுவும் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, ப்ரெஸ்பிடேரியன் ஆகிய வைகளைப் போலுள்ளவைகள் தான். அது வெறும் பெயர் தான். அதினால் ஒரு பயனும் இல்லை. அதில் எந்த அர்த்தமும் இல்லை, பாருங்கள். ஆனால் பெந்தெகொஸ்தே அனுபவத்தை உங்கள் இருதயத்திலும், உங்கள் ஆத்துமாவிலும் பெற்றிருந்தால், நீங்கள் நித்திய ஜீவனை உடையவர்களாக இருப்பீர்கள், அப்பொழுது தேவன் உங்களுக்கு வாக்குத்தத்தமாக, “ இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை'' என்று உரைத்திருக்கிறார். ஏனெனில் நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறீர்கள். அதினால், இரண்டாம் மரணம் உங்களை தொட முடியாது. பாருங்கள்? உங்களுக்கு... நீங்கள்.... 160. “ தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப் படுத்தாதிருங்கள்''. அதை நீங்கள் துக்கப்படுத்தாதிருங்கள் (தவறான காரியங்கள் செய்வதின் மூலம்). நீங்கள் அப்படிச் செய்தால், அதற்கு உரிய தண்டனையை அடைந்திட வேண்டியது வரும். ஏனெனில் வேதம் கூறுகிறது: “ நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்'' அது சரிதானே? “ பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்'' 161. எதிர் வரும் காலங்களில் உள்ள ஒரு காலையில், அந்த நாளானது அற்புதமான நாளாக இருக்கப் போகிறது. உயிர்த் தெழுதல் அகில உலகத்திலும் ஒரே நேரத்திலேயே நடை பெறும் என்பதைக் காண்பிக்கும் முகமாக, “ இரண்டு பேர் வயலிலிருப்பார்கள், ஒருவன் ஏற்றுக் கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு பேர் படுக்கையிலிருப்பார்கள். அதில் நான் ஒருவரை எடுத்துக் கொள்வேன்'' என்று கூறியுள்ளார். பாருங்கள், பூமியில் ஒரு இடத்தில் பகலாயிருக்கையில், இன்னொரு தேசத்தில் அப்பொழுது இரவாயிருக்கும்; ஆகவே உயிர்த்தெழுதலும், எடுத்துக் கொள்ளப்படுதலும் உலக முழுவதிலும் ஒரே நேரத்தில் நடைபெற்றுவிடும். தேவ எக்காளம் தொனிக்கும், அப்பொழுது இந்த ஏழு சபைக்காலங்களிலும் இருந்த அந்த சிறுமந்தையான ஒவ்வொரு சபையும், இருண்ட காலங்களுக்குள் சென்ற அந்த மிகச்சிறிய சபையும், அதைவிட்டு வெளியே வந்த சபையும், அதற்கடுத்த சபையும் அதற்கடுத்த சபையும், உயிரோடெழுந்திருப்பார்கள். 162. ஏழாவது சாமத்தில் காணப்பட்ட அந்த பத்து கன்னியரும் கர்த்தரை சந்திக்க எதிர்கொண்டு போனார்கள். அவர்களில் ஐந்து கன்னியர் புத்தியுள்ளவர்கள். ஐந்து பேர்களோ புத்தியில்லாதவர்கள். அது சரிதானே? அங்கே ஏழு சாமங்கள் உண்டாயிருந்தன, ஏழாவது சாமத்தின் இறுதியில் (சிலர் 'இந்த' சாமத்தில் உறங்கச் சென்றார்கள். சிலர் "இந்த' சாமம், சிலர் அந்த சாமம்) ஏழாவது சாமத்தில் “ இதோ மணவாளன் வருகிறார், அவரை எதிர்கொள்ளப் புறப்பட்டுப் போங்கள்'' என்ற சத்தம் உண்டாயிற்று. அவர்கள் எழுந்து தங்கள் தீவட்டிகளைக் கொளுத்தினார்கள். மற்றவர்கள் யாவரும் இங்கிருந்து எழும்பினார்கள். ஓ, ஒரு அற்புதமான வேளையாக அது இருக்குமல்லவா? 163. நான் ஒரு சிறு பாடலை பாடுவதுண்டு. அது உனக்கும் ஒரு அற்புதமான வேளையாயிருக்கும் அது எனக்கும் ஓர் அற்புதமான வேளையாயிருக்கும் நம் இராஜனாம் இயேசுவை சந்திக்க நாம் ஆயத்தமானால் என்னே ஓர் அற்புதவேளையது. 164. நாம் இதைப் பாடுவோம். உமக்கு ஓர் அற்புத வேளையது எனக்கும் ஓர் அற்புத வேளையது நாமெல்லாரும் நம் இராஜனாம் இயேசுவை சந்திக்க ஆயத்தமானால் என்னே ஓர் அற்புத வேளையாய் இது இருக்கும். (அது அற்புதமாயிருக்குமல்லவா?) அங்கே அது அற்புதமாயிருக்கமல்லவா, சுமக்கவோ பாரம் ஏதுமில்லையங்கே இதயத்து மணியோசை அனைத்தும் ஒலிக்க மகிழ்வுடன் பாடுவோம் ஓ அது அற்புதமாயிருக்கமல்லவோ அங்கே? 165. அந்த பரமவீட்டை அடைவோம் என்று உங்களில் எத்தனை பேர்கள் அறிந்துள்ளீர்கள்? அவ்வாசலைவிட்டு புறம்பே போய் விடுவீர்கள் என்று எத்தனை பேர்கள் அறிவீர்கள்? உங்களுக்குத் தெரியாது. உங்களில் எத்தனை பேர்கள், வெளியே போய்விட்டால் திரும்பி வந்துவிடுவோம் என்பதை அறிந்துள்ளீர்கள்? உங்களால் சொல்ல முடியாது. ஆகவே, இந்த இராத்திரியைத் தவறவிட வேண்டாம். இந்த இராத்திரியில் தேவனை விட்டு விடாதீர்கள். ஏனெனில் இந்த இராத்திரி ஒருவேளை உங்களுக்கு தருணம் அல்லது சமயம் கிடைக்கும் கடைசி இராத்திரியாக இருக்கக்கூடும். நீங்கள் யார்? நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? எங்கே போகப் போகிறீர்கள்? அதைப்பற்றி உங்களுக்குச் சொல்ல முடிந்த, உலகில் உள்ள ஒரேயொரு புத்தகம் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பழமையான வேதாகமம் மட்டுமே. அந்த வேதத்தைத் தான் நாம் விசுவாசிக்கிறோம். அந்தத் தேவனைத் தான் நாம் விசுவாசிக்கிறோம். 166. நீங்கள் அந்த மணவாட்டியில் இல்லாவிட்டால், சிறுபான்மையான அந்தச் சிறு குழுவினுள் நீங்கள் இல்லாவிடில், ஸ்தாபனக் கோட்பாடுகளினாலும், ஸ்தாபனங்களினாலும் கசக்கிப் பிழியப்பட்டு புறம்பாக்கப்பட்ட அந்த சிறு மந்தையில் நீங்கள் இல்லாவிடில், அந்த சிலாக்கியத்தைப் பெறுவதற்காக நீங்கள் இந்த கூடாரத்தைச் சேர்ந்து கொள்ள வேண்டியதில்லை. அந்த இராஜ்யத்தினுள் நீங்கள் பிறக்க வேண்டும். மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரெஸ்பிடேரியன் ஆகியவற்றில் நீங்கள் ஐக்கியங் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அது உங்களுடைய விருப்பத்தைப் பொறுத்தது. நீங்கள் விரும்புகிற எவரோடும் உங்கள் ஐக்கியத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு காரியத்தை நான் உங்களுக்குக் கூறுகிறேன். நீங்கள் மறுபடியும் பிறந்து விட்டால், அப்பொழுது, “ ஒரேவிதமான சிறகுள்ள பறவைகள்'' என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னே! 167. ஒருவர் என்னிடம் ஓர் சமயம் கேட்டார்; “ சகோ. பிரன்ஹாமே, ஜனங்களை மெதோடிஸ்டு சபைக்கு திரும்பிச் செல்லுங்கள் என்று கூறுகிறீர்களே?'' என்றார். 168 . நான் கூறினேன்; “ நிச்சயமாக. அவர்கள் இவர்களை தூக்கியெறிட்டும், அப்பொழுது அவர்களுக்கு போவதற்கு வேறு இடமே இருக்காது. அப்பொழுது நீங்கள் பாருங்கள்'' என்றேன். 169. அதெல்லாம் சரிதான். திரும்பிச் செல்லட்டும், நீண்ட காலம் அங்கு இருக்கப் போவதில்லை. பாருங்கள், அங்கு நீடித்து இருக்க முடியாது, மீண்டும் வருவார்கள். 170. பெரிய ஜலப்பிரளயத்திற்கு பிறகு, பாதுகாப்பான இடமாகிய நோவாவின் பேழையிலே, நோவா ஓர் சமயம், பேழையை விட்டு காகத்தை வெளியே அனுப்பினான். காகம் கரைந்துவிட்டு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுச் சென்றது. அது அழுகின மாம்சத்தைத் தின்னும் பறவையானதால், அது மிகவும் திருப்தியோடு இருந்தது. அது ஒரு மரித்துப்போன உடலைவிட்டு இன்னொன்றுக்கு பறந்து சென்று, செத்துக்கிடக்கும் கோவேறு கழுதையின் அழுகிப்போன மாம்சத்தை வயிறு புடைக்க உண்டு விட்டு, அங்கிருந்து பறந்து, செத்து அழுகிக்கிடக்கும் ஆட்டின் மாம்சத்தை வயிறு புடைக்க உண்டுவிட்டு, பிறகு அங்கிருந்து இன்னொன்றின் மாம்சத்தை தின்னப் போயிற்று. பல வகையான அழுகிப்போன உடல்கள் அதற்கு கிடைத்துவிட்டது. 171. எனவே இந்தக் காகம் இவ்வாறு அந்த அழுகிய உடல்கள் மேல் உட்கார்ந்து தின்று கரைந்து கொண்டேயிருந்தது. “ ஓ எனக்குள்ளே குதூகலம் கரை புரண்டு ஓடுகிறது'' என்று காகம் கரைந்து கொண்டே சென்றது. 172. ஆனால் அவர்கள் இந்த சிறிய புறாவை வெளியே திறந்து விட்டபொழுது, அது வித்தியாசமான சுபாவத்தையுடையதாயிருந்தது. அழுகிய மாம்சத்தின் நாற்றம் அதினால் பொறுத்துக் கொள்ளவே முடியாது. ஏன்? புறாவுக்கு பித்தம் கிடையாது. பித்தம் இல்லாத ஒரே பறவை புறா தான். அவற்றையெல்லாம் அதினால் ஜீரணிக்க முடியாது. ஆகவே எங்கும் நாற்றம் எடுத்துக் கிடந்தபடியினால், அதைத் தாங்க முடியாத புறா, நேரே பேழைக்கு திரும்பிப்போய் கதவை தட்டுவது தான் அதற்கிருந்த ஒரே மார்க்கமாக இருந்தது. 173. நீங்கள் போக விரும்பும் இடமெங்கும் செல்லுங்கள். நான் உங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், இராஜ்யத்திற்குள் வாருங்கள். அப்பொழுது நீங்கள் எங்கே போவீர்கள் என்பதை நான் அறிவேன். உங்களால் இனிமேல் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது, சகோதரனே! நான் வேறு பிரிக்கும் கோட்டை கடந்து விட்டேன். உலகம் என் பின்னால் போய்விட்டது'' என்பீர்கள். ஆம், ஐயா, நிச்சயமாக அது தான். அவர்கள் மேல்வீட்டறையில் கூடி வந்து யாவரும் அவர் நாமத்தினால் ஜெபித்துக் கொண்டிருந்தனர் அவர்கள் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர் ஆராதனைக்கான வல்லமை வந்தது அந்நாளில் அவர்களுக்கு அவர் என்ன செய்தாரோ அதையே உங்களுக்கும் அவர் செய்வார் நானும் அவர்கள் ஒருவன் என்று நான் கூறமுடிந்ததால் மகிழ்ச்சியுறுகிறேன். (நீங்கள் மகிழவில்லையா?) அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் அவர்களில் நானும் ஒருவன் என கூறிட முடிந்ததால் நான் மிகவும் மகிழ்ச்சியாயுள்ளேன் அல்லேலூயா அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் அவர்களில் நானும் ஒருவன் எனக்கூறிய முடிந்ததால் நான் மிகவும் மகிழ்ச்சியாயுள்ளேன். 174. அதைக் குறித்து எத்தனை பேர்கள் மகிழ்ச்சியாயிருக்கிறீர்கள்? வாரும் என் சகோதரனே, இவ்வாசீர் நாடிடுவீர் அது உன் இருதயத்தை பாவத்திலிருந்து சுத்திகரிக்கும் அது ஆனந்த மணியோசை உன்னில் ஒலித்திடச் செய்யும் ஓ அது என் இருதயத்தினுள் கொழுந்து விட்டெரிகிறது ஓ அவர் நாமத்திற்கே மகிமை நானும் அவர்களுள் ஒருவன் என்று கூறிட முடிந்ததால் நான் மிகவும் மகிழ்கிறேன். நானும் அவர்களுள் ஒருவன், நானும் அவர்களுள் ஒருவன் நானும் அவர்களுள் ஒருவன் என நான் கூறிட முடிந்ததால் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன், அல்லேலூயா அவர்களுள் ஒருவன், நானும் அவர்களுள் ஒருவன் அவர்களுள் நானும் ஒருவன் எனக் கூறிட முடிந்ததால் நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். 175. பாடலின் அடுத்த அடிகளை பாடுகையில், பின்னால் உங்களை கைகளை நீட்டி, மெதோடிஸ்ட்டுகள், பாப்டிஸ்ட்டுகள், ப்ரெஸ் பிடேரியன்கள் ஆகியவர்களுடன் உங்கள் கைகளை குலுக்குங்கள், ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்ளுங்கள். முடிந்தால் ஒருவர் மெல்லும் பசையை (Chewing gum) இன்னொருவர் வாங்கி சுவைத்துக் கொள்ளுகிற அளவுக்கு சிநேக பாவத்தைக் காட்டுங்கள். நாம் பாடுகையில், ஒருவருக்கொருவர் உண்மையான சிநேகத்தை காட்டுங்கள். அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் எனக் கூறிட முடிந்ததால் நான் மகிழ்கிறேன். அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் எனக் கூறிட முடிந்தால் நான் மகிழ்கிறேன். இந்த ஜனங்கள் கல்லாதவராயினும் உலகக் கீர்த்தியில்லாதவராயினும் அவர்கள் யாவரும் தங்கள் பெந்தெகொஸ்தேயை பெற்றுவிட்டனர் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றனர் அவர்கள் இப்போது அறிவிக்கின்றனர் அவரது வல்லமை மாறாமல் உள்ளதென்று நானும் அவர்களில் ஒருவன் என்று கூறிட முடிந்ததால் நான் மகிழ்கிறேன். 176. இப்பொழுது நாம் கருத்துடன் பாடுவோம் : அவர்களில் ஒருவன் அவர்களில் ஒருவன் நானும் அவர்களில் ஒருவன் எனக் கூறிட முடிந்ததால் நான் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் அல்லேலூயா அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் எனக் கூறிட முடிந்ததால் நான் மிக்க மகிழ்ச்சி கொள்ளுகிறேன். 177. அவருக்காக அடிக்கப்பட்டு இரத்த சாட்சியாக ஆகிட நீங்கள் விரும்புவீர்களா? மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்ற கட்டம் வந்தால், அதை எதிர்கொள்ளுவீர்களா? கிருபையினாலே; ஆம், ஐயா, ஓ தேவனே, அது எனக்கு இன்பமாயிருக்கும். ஆம், அந்த விதமாகத்தான் இந்த பிரசங்க பீடத்திலிருந்தே, நான் போக விரும்புகிறேன். சமீபத்தில் ஜெர்மனி தேசத்தில் எனக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கப் போகிறது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். என்னைக் கொல்லவிருந்தவர்கள். இரவிலும் இலக்கு தவறாது சுட வசதியுள்ள தொலை நோக்கிப் பொருத்திய துப்பாக்கியால் சுட்டுவிட இருந்தனர். ஜெர்மன் இராணுவம் என்னைச் சுற்றிலும் காவலிருந்து என்னைக் காத்தனர். “ இங்கே இந்த ஊழியக்களத்திலேயே என்னுடைய ஆண்டவருக்காக நான் மரிப்பது எத்தனை அற்புதமான காரியமாயிருக்கும்'' என்று நான் எண்ணினேன். ஓ அது எவ்வளவு அற்புதமான காரியமாயிருக்கிறது. 178. நான் ஒரு சிறிய பாடலை பாடட்டும். நான் பாடலாமா? ஒரு சிறிய பாடலுக்கு உங்களுக்கு நேரம் இருக்கிறதா? நான் பாடலை பாடுவதில்லை, அதை நான் பேசுவது போலத் தான் பாடுகிறேன். ஓ, நான் எப்பொழுதும் பாட விரும்புகிறேன். வரும் நாட்களிலொன்றில், நீங்கள் பரதிசீலுள்ள உங்களுடைய இனிமையான அந்த பெரிய வீட்டிற்குப் போகும் போது, அந்த காடுகளுக்குள்ளாக நானும் ரஸ்ஸல் க்ரீச்சும் இந்த வேட்டைக்காக போவோம், அங்கே தானே ஒரு சிறிய மர வீடு மூலையில் அமைந்திருக்கும். அதைப் பற்றி சகோ.நெவில் பாடுவதுண்டு. மகிமை வாழும் தேசத்தில், அம்மூலையில் எனக்கு ஒரு மர வீட்டை கட்டுமே' என்ற பாடலை அவர் பாடுவார். (அவர் என்னுடைய இடத்தைப் பற்றித்தான் பேசுகிறார் என்று நான் நினைக்கிறேன்)... வரும் நாட்களில் ஒன்றின் காலைப்பொழுதில், நீங்கள் அந்த மகத்தான முகப்பு மண்டபத்தினுள் நடந்து செல்லுகையில், சுற்றும் முற்றும் பார்க்கையில், அங்குள்ள மூலையில் ஒருவர் இவ்வாறு பாடுவதை நீங்கள் கேட்பீர்கள். ஆச்சரியமான கிருபை, எத்தனை இனிமை அதன் தொனி, அதுவே ஈனனான என்னை இரட்சித்தது! 179. “ நல்லது, தேவனுக்கு ஸ்தோத்திரம், “ ஓ, சகோ.பிரன்ஹாம் இதைப் பாடினார். அதோ அவர் அங்கே இருக்கிறார். அங்கே அவர் இப்பொழுது நின்றுகொண்டு “ ஆச்சரியமான கிருபை'' என்று பாடுகிறதை நான் கேட்க முடிகிறது'' என்று கூறுவீர்கள். 180. என்னை அங்கே கொண்டு போய்ச் சேர்ப்பது அந்த ஆச்சரியமான கிருபைதான். ஆனால் இது இரத்தம் சொட்ட சொட்ட இருக்கிறது, ஆம் (அதனால்தான் நான் அதை பிரசங்கித்தேன்) அது இரத்தம் சொட்டிக்கொண்டு இருக்கிறது பரிசுத்த ஆவி சுவிசேஷம் இரத்தத்தால் சொட்டிக்கொண்டு இருக்கிறது சத்தியத்திற்காய் மரித்த சீஷர்களின் தொடர்ந்து இரத்தம் சொட்ட சொட்ட இருக்கிறது இந்த பரிசுத்த ஆவியின் திட்டத்திற்காக உயிர் நீத்த முதலாமவர் யோவான் ஸ்நானன்தான். ஆனால் அவர் ஒரு மனிதனைப்போல் மரித்தார் பின்பு கர்த்தராகிய இயேசு வந்தார், அவரை சிலுவையிலறைந்தனர். ஆவியானவர் மனிதனை பாவத்தி லிருந்து இரட்சிப்பார் என்று அவர் போதித்தார் அங்கே பேதுருவும், பவுலும், திவ்விய வாசகனாகிய யோவானும் இருந்தனர் இந்த சுவிசேஷம் பிரகாசிக்கப்பதற்காக அவர் தம் உயிரை துறந்தனர் பண்டைய தீர்க்கர்களின் இரத்தத்தோடு தங்கள் இரத்தத்தையும் இவர்கள் கலந்தனர். அதினால் உண்மையான தேவனுடைய வார்த்தையை உத்தமமான உரைக்க முடிந்தது. பலிபீடத்திற்குக் கீழேயுள்ள ஆத்துமாக்கள் (இந்த இரத்த சாட்சிகள்) எது வரைக்கிலும்? என்று கதறினர் தீங்கிழைத்தவர்களை கர்த்தர் தண்டிப்பதற்கான காலம் இன்னும் எவ்வாறு காலம்? (கவனியுங்கள்! விரைவாக!) இன்னும் அநேகர் தங்கள் ஜீவனின் இரத்தத்தைக் கொடுக்க விருக்கின்றனர் இந்தபரிசுத்த சுவிசேஷத்திற்காகவும் அதின் ஜீவநதிக்காகவும் அது இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, ஆம் அதில் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது. பரிசுத்த ஆவி சுவிசேஷம் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது சத்தியத்திற்காக மரித்த சீஷர்களின் இரத்தம் அது இந்த பரிசுத்த ஆவி சுவிசேஷம் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது 181. ஒரு சகோதரி அந்நிய பாஷைகளில் பேசுகிறார், ஒரு சகோதரன் அதற்கு வியாக்கியானம் அளிக்கிறார். ஒரு சகோதரன் அந்நிய பாஷையில் பேசுகிறார். ஒரு சகோதரி அந்நிய பாஷையில் பேசுகிறார். ஒரு சகோதரன் ஒரு வியாக்கியானத்தைத் தருகிறார் - ஆசி) ஆமென். 182. “ .... ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்''. நான் அவரை நேசிக்கிறேன்... (அவரை தொழுது கொள்ளுங்கள், அவர் என்ன செய்வார் என்று பாருங்கள்.) (நீங்கள் இதற்கு முன்னால் ஒரு போதும் அவரை நேசித் திருக்காவிடில், இப்பொழுது நீங்கள் அவரை நேசிக்க விரும்புகிறீர்களா? அப்படியாயின், நீங்கள் எழும்பி நின்று அவரை அடையாளம் கண்டு கொண்டு, உங்கள் இரட்சகராக அவரை ஏற்றுக்கொள்வீர்களா?)... (தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே). என் இரட்சிப்பை கிரயத்திற்கு வாங்கினார் (யாராவது எழும்பி நின்று, “ இப்பொழுதே அவர் எனக்குத் தேவை, நான் அவரை நேசிக்க விரும்புகிறேன்'' என்று கூற விரும்புவீர்களா?). கல்வாரி சிலுவையிலே... (தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே, தேவன் பின்னால் இருக்கிற அந்த வாலிபமான பெண்மணியை ஆசீர்வதிப்பாராக) நான் அவரை நேசிக்கிறேன்... (ஆவியானவர் சபைக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன்) அவர் என்னை முந்தி நேசித்தார் என் இரட்சிப்பை கல்வாரி சிலுவையில் கிரயத்திற்கு வாங்கினார். 183. எங்கள் பரம பிதாவே, இங்கே நின்று கொண்டிருக்கிற இம்மூவரையும் நீர் பார்க்கிறீர். ஓ தேவனே, நித்தியமானவரே, நீர் இரக்கமாயிருக்கும் என்று ஜெபிக்கிறேன். அவர்களுடைய ஒவ்வொரு பாவத்திற்கும் மன்னிப்பையருளி, இரட்சிப்பையும், அவர்கள் ஜீவியத்தில் பரிசுத்த ஆவியையும் அருளும், இதினால் அவர்களை இரண்டாம் மரணம் தொடாமலிருக்குமே. இன்றிரவில், அவர்கள் இங்கே நின்று கொண்டிருக்கையில், ஏதோ ஒன்று சமீபமாயிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் எச்சரிக்கையைக் கொடுத்திருக்கிறார். தேவனுடைய ஆவியானவர் மக்களுக்குள் இறங்கி, வேதவாக்கியங்களின்படியே அது கிரியை செய்து, மூன்று செய்திகள் இங்கு நின்றிருக்கும் மூவருக்கும் தலா ஒவ்வொன்றாக, உரைக்கப்பட்டு முடிந்தது, ஓ தேவனே. 184. பிதாவே, நீர் இரக்கமாயிருக்க வேண்டுமென ஜெபிக் கிறோம். அந்த விலையேறப் பெற்ற ஆவியானவர் எங்கள் மத்தியில் நிலைத்திருக்கட்டும். அதை நாங்கள் பயபக்தியோடு கனம் பண்ணட்டும். தேவனே அதை அளித்தருளும். இந்த ஆத்து மாக்களை உம்முடைய பாதுகாப்பில் வைத்துக் கொள்ளும், பிதாவே. இந்த இராத்திரியில் கொடுக்கப்பட்ட செய்தியின் கனிகள் இவர்கள்; எங்கள் மத்தியில் பேசப்பட்ட, பரிசுத்த ஆவியினிடத்திலிருந்து வந்த செய்தியின் கனிகள் இவர்கள். பிதாவாகிய தேவனே, நீர் அவர்கள் ஜீவிய காலம் முழுவதிலும் அவர்களோடு கூட இருக்க வேண்டும் என்று கேட்கிறோம். நாங்கள், கிறிஸ்துவின் இரத்தத்தாலும், கிருபையாலும் இரட்சிக்கப்பட்ட அவர்களை அந்த “ முடிவில்லாத உலகில்'' சந்திக்க உதவி செய்யும். நாங்கள் அவர்களை உம்மிடம் கொடுக்கிறோம், பிதாவே, அவர்களை உமது பரிசுத்த ஆவியினாலே நிரப்பும். இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம். ஆமென். 185. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரர்களே. அவர்களுக்கு அருகாமையில் நின்று கொண்டிருக்கிற கிறிஸ்தவர்களே, அவர்கள் அமருகையில் அவர்களோடு கைகுலுக்கி, அவர்கள் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற வாழ்த்துங்கள். 186. பரிசுத்த ஆவி எவ்வளவாய் ஒழுங்குள்ளதாய் இருக்கிறது பாருங்கள். சரியானபடி, ஆராதனையின் முடிவில், கிரியை செய்கிறது. “ யாராவது அந்நிய பாஷையில் பேசுகிறதுண்டானால் அது இரண்டு பேர் மட்டில் அல்லது மிஞ்சினால் மூன்று பேர் மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய் பேசவும்'' என்று வேதம் கூறுகிறது. நான் செய்தி கொடுத்துக் கொண்டிருக்கும் போது அல்ல, அது முடிந்த பிறகே பேச வேண்டும். அவ்விதமாகத்தான் அக்காரியம் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் உண்மையான பயபக்தியோடு ஆவியானவர் என்ன சொல்லுகிறாரோ அதற்கு செவி கொடுக்க வேண்டும். அப்பொழுது என்ன நடக்கிறது? பாவிகள் உணர்த்துவிக்கப்பட்டு, மனந்திரும்ப எழும்புகிறார்கள். எண்ணிப் பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் கூட, வார்த்தை வெளிப்பட்டுக் கொண்டிருக்கையில், அடங்கியே இருக்கிறோர். உரிய நேரத்தில் வந்து, பிரத்தியட்சமாகிறார். 187. அந்நிய பாஷைகளில் பேசுகிற இங்கிருக்கிற சிலரை நான் நன்கு அறிவேன். இன்று அந்நிய பாஷைகளில் பேசிய மூவரையுமே நான் அறிவேன். பாஷைகளுக்கு வியாக்கியானம் கொடுத்தவர்களையும் நான் அறிவேன். அவர்கள் வாழ்க்கை தேவனுக்கு முன்பாக பாவமற்று இருக்கிறதை நான் அறிவேன். சகோதரன் நெவில் அவர்கள், அவர் நம்முடைய மேய்ப்பன், மெதோடிஸ்டு சபை ஊழியக்காரராயிருந்தார். மெதோடிஸ்டு சபை ஊழியக்காரராயிருந்த சகோதரர் ஜூனியர் ஜாக்சன் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார் இங்கே. இவர்களுக்கு அந்நிய பாஷைகளில் பேசுதலும், பாஷைகளின் வியாக்கியானித்தலும் உண்டு . 188. அவர்கள் எவ்வாறு தங்கள் சபைகளை பயபக்தியோடு, தேவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருக்குமாறு பெற் றிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர் எவ்வாறு வேதத்தின்படியே பேசுகிறார் என்பதை பாருங்கள். செய்தியானது சரியாக மக்களை போய் எட்டவில்லையென்றால், அவர் மீண்டும் பேசுகிறார். ஆனால் மூன்று தடவைகள் பேசுவதில்லை. இது வேத வாக்கியங்களின்படி உள்ளதாகும். அவர் அந்த செய்தியைக் கொடுப்பார். ஆனால் பிரசங்கத்தினூடே குழப்பிவிடுவதாக அது இருக் காது. “ ஏனெனில், தீர்க்கதரிசிகளின் ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே'', “ ஒவ்வொருவரும் அமைதியாக கேட்கவும்...'' 189. அந்த விதமாகத் தான் சபையானது ஒழுங்குக்குள் இருக்க வேண்டும். வெளியில் இருந்து இங்கு வந்திருக்கிற ஜனங்களே, நான் உங்களிடம் கூறுவது என்னவெனில், இதைப் பற்றி நான் கூறுவதை கேட்டிருக்கிறீர்கள், அந்த விதமாகத்தான் காரியமானது இருக்க வேண்டும். பாருங்கள், செய்தியானது புறப்பட்டுப் போகிறது. அதற்குரிய பலன் அப்பொழுதே நடக்கிறது. பகுத்தறிதல், அல்லது வேறு ஏதாவது ஆவி அதைப் போலவே ஏதாவது சம்பவிக்கிறது. அவர் அற்புதமானவராக இல்லையா? ஓ, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பரிசுத்த பவுலினால் ஏற்படுத்தப்பட்ட அதே காரியம் இன்னும் ஒழிந்து போகவில்லை. அது அப்படியே இங்கேயும் தொடருகிறது. மாறாமல் அப்படியே இருக்கிறது. நான் அவர்களில் ஒருவன் என்று கூறிக் கொள்ள முடிந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீங்கள் அவ் வாறில்லையா? 190. நாளை இரவு 7 மணிக்கு நாம் லவோதிக்கேயாவின் காலத்தை எடுத்துக் கொள்ளப்போகிறோம். அது விவாகம் நடந்த காலம். உங்களுக்கு இயலுமானால் வரப்பாருங்கள். இன்றிரவில் நான் சற்று தாமதமாக வந்தேன். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் பேசுவதினால். ஆனால் இன்றிரவில் முந்தியே முடிந்துவிட்டது. 9.20 மணிக்கெல்லாம் முடிந்துவிட்டது. வழக்கமாக நான் பத்து அல்லது பதினொரு மணி வரைக்கிலும் இங்கிருப்பதுண்டு. ஆகவே இன்றிரவு சற்று முன்கூட்டியே முடித்துள்ளோம். கர்த்தருடைய செய்தியை நீங்கள் அனுபவித்தீர்களா? உண்மையாகவே அனுபவித்தீர்களா? அது உங்கள் ஆத்துமாவைப் போஷிக் கிறதாயிருக்கிறது. 191. என் பிள்ளைகளே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் உங்களை என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன். சில வேளைகளில் ஆவியானவர் என்னை பற்றிக் கொள்ளும் போது, இரு பக்கங்களிலுமே அது வெட்டுகிறது. அவ்விதமாகத்தான் வார்த்தையானது இருக்கிறது. அது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாய் இருக்கிறது. அது உள்ளும் புறமும் வென்று வெட்டுகிறது. அவ்விதமாகத்தான் வார்த்தையானது இருக்கிறது. அது இருபுறம் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாய் இருக்கிறது. அது உள்ளும் புறமும் சென்று வெட்டுகிறது. எல்லாத் திசைகளிலும் வெட்டுகிறது. ஆனால் அதுவே நம்மை விருத்தசேதனம் செய்கிறது. விருத்தசேதனம் செய்தல், தேவையற்ற உபரி மாம்சத்தை, நாம் பெற்றிருக்கக் கூடாத வைகளை, அகற்றிப் போடுகிறதாயிருக்கிறது. 192. நீங்கள் இன்று பாஷைகளின் வியாக்கியானத்தில் ஆவியானவர் கூறியதை கேட்டீர்களா? அதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அதில், “ அந்த மதியீனத்தை நிறுத்துங்கள்'' என்று கூறப்பட்டது. அது நம்மை விருத்தசேதனம் செய்கிறது. உண்மையாயிருங்கள்! நாம் யாவரும் பாதையைவிட்டு தவறிப் போய்விட்டோம். ஆனால் தேவன் எவ்வாறு நம்மை சரியான பாதையில் கொண்டுவர வேண்டு மென்பதை அறிந்திருக்கிறார். அவ்வாறே நிச்சயம் அவர் செய்கிறார். அதற்கான நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நீங்கள் நன்றியோடு இருக்கிறீர்களா? 193. நீங்கள் தான் பியானோ வாசிக்கிறவரா? டெடி இருக்கிறாரா, அவரை நான் எங்கும் பார்க்க முடியவில்லை. நீங்கள் விரும்பினால் வாசியுங்கள், சகோதரி சகோ.டால்ட்டன் அவர்களே, அது உங்களுடைய மருமகளா? பெலம்வாய்ந்த அருமையான இளம்பெண் மணி. நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருப்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். நம்முடைய ஆராதனைக்கு முடிவாக நாம் பாடும் அழகான நல்ல அந்தப் பாடல் என்ன? முடிக்கும் முன்னர் ஒரு பாடலை பாட முயற்சிப்போம். பாடும் முன்னர் ஒரு நிமிடம் பொறுங்கள், சகோதரி. "இயேசு என்னும் நாமத்தை உங்களோடு எடுத்துச் செல்லுங்கள்' என்ற பாடல். 194. "குடும்ப ஜெபத்தை மறக்கவேண்டாம்' என்ற அந்தப் பாடலை எத்தனை பேர் அறிவீர்கள்? எத்தனை பேர்கள் குடும்பமாக ஜெபிக்கிறீர்கள்? ஓ, அது நல்லது. பழங்காலத்தில் பாடப்படும் பாட முயற்சிப்போம். குடும்ப ஜெபத்தை மறக்க வேண்டாம் இயேசு அங்கே உங்களை சந்திக்க விரும்புகிறார் அவர் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார், எனவே குடும்ப ஜெபத்தை மறக்கவேண்டாம். 195. நீங்கள் அதை விரும்புகிறீர்களா? மீண்டும் அதை முயற்சிப்போம். குடும்ப ஜெபத்தை மறக்க வேண்டாம் இயேசு உங்களை அங்கே சந்திக்க விரும்புகிறார் (அவரை சந்தித்து அளவளாவ ஒரு நேரம் உங்களுக்கு கிடைத்துவிட்டது). உங்கள் கவலைகளையெல்லாம் அவர் தீர்ப்பார் ஓ குடும்ப ஜெபத்தை மறக்கவேண்டாம். 196. (ஒரு சகோதரி, “ சகோ.பிரன்ஹாமே, நான் ஒன்றைக் கூறலாமா?'' என்று கேட்கிறார் - ஆசி). நிச்சயம் கூறலாம், சகோதரி. (அச்சகோதரி பேசுகிறார். ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி) சகோதரி நாஷ், அது மிகவும் அருமையானது. நாம் சந்தேகமின்றி நம்புவோமானால், அவர் நிச்சயம் விடுவிப்பார் உங்கள் பாரத்தை கர்த்தரிடம் கொண்டு சென்று அங்கே விட்டுவிடுங்கள். அங்கே விட்டுவிடுங்கள், நாம் சந்தேகமின்றி நம்புவோமானால் அவர் நிச்சயம் விடுவிப்பார் எனவே உங்கள் பாரத்தையெல்லாம் கர்த்தரிடம் எடுத்துச் சென்று அவைகளை அங்கே விட்டுவிடுங்கள், நாம் சந்தேகமின்றி நம்புவோமானால் அவர் நிச்சயம் விடுவிப்பார் எனவே உங்கள் பாரத்தையெல்லாம் கர்த்தரிடம் எடுத்துச் சென்று அவரிடம் விட்டுவிடுங்கள். 197. நீங்கள் இந்த பழங்காலத்து ஞானப்பாட்டுகளை விரும்பவில்லையா? அப்பாடல்களை பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு தங்கள் பேனாக்களை எடுத்து எழுதியுள்ளார்கள் என்பதை அவை களைப் படித்துப் பார்க்கையில் தெரிகிறது. 198. பேஃனி க்ராஸ்பி என்ற அந்த குருடான பெண் கவிஞரை, அந்நாட்களில் இருந்த உலகப் பிரகாரமான மக்கள் அணுகி, அவளை லௌகீகமான பாடல்களை தங்களுக்கு எழுதும்படி செய்ய முயன்றனர். “ நீ ஒரு ஒரு ஐசுவரியமான பெண்ணாகலாம்'' என்று கூறினார்கள். 199. அந்த பெண்மணி, “ நான் என் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கென அர்ப்பணித்துள்ளேன். என்னுடைய தாலந்துகளையும் அவருக்கே நான் உபயோகிப்பேன்'' என்றாள். அப்பெண்மணி குருடாயிருந்தாள். “ என்னுடைய ஜீவியம், மற்றும் என்னுடைய தெல்லாம் கிறிஸ்துவுக்கே சொந்தம்'' என்றாள். 200. அந்த உலகப்பிரகாரமான மக்கள் அவளுக்கு அளித்த அந்த வாய்ப்பினை அவள் தள்ளிவிட்டபடியினால், அவளிடம் கடுகடுப்பாகப் பேசினர். அவள் தன்னுடைய சேஷ்டபுத்திர பாகத்தை, திரு.ப்ரெஸ்லி அவர்களைப்போல் விற்றுப் போடவில்லை. ஆனால் அவன் தன் உத்தமத்தைக் காத்துக் கொண்டாள். அவர்கள் அவளிடம், “ நீ பரலோகத்திற்குப் போகும்போது, இங்கு இருக்கிறது போலவே இருக்கும்படியான ஒரு இடமாக அது இருந்தால், அப்பொழுது நீ இங்கிருப்பது போலவே குருடாகவே இருப்பாய், அப்படியிருக்கும் நிலையில் அங்கே உன்னால் இவ்வாறு இயேசுவைக் காண முடியும்?'' என்று கேட்டனர். 201. “ அவரை நான் அறிவேன், அவரை நான் அறிவேன்'' என்றாள். 202. “ நீ அங்கும் குருடாகவே இருந்துவிட்டால், நீ அங்கும் குருடாகவே இருந்து விட்டால்?'' என்று கேட்டனர். 203. அதற்கு அவள், “ அவருடைய கரத்திலுள்ள ஆணி கடாவப் பட்டதின் காயத் தழும்புகளை தடவிப் பார்த்து அறிந்து கொள் வேன்'' என்றாள். இவ்வாறு கூறிவிட்டு, அவர்களை விட்டகன்று, இதைப் பாடினாள். அவரை நான் அறிந்திடுவேன், அவரை நான் அறிந்திடுவேன், மீட்கப்பட்டு அவர் பக்கத்தில் நான் நிற்பேன், அவரை நான் அறிவேன், அவரை நான் அறிவேன், ஆணிகடாவப்பட்ட கைகளில் உள்ள காயத் தழும்புகளினால் 204. ஓ என்னுடைய இயேசுவே, அந்த ஐந்து விலையேறப் பெற்ற இரத்தம் கசிந்து கொண்டிருக்கிற காயங்களைப் பார்க்கையில், நான் எவ்வாறு விலையேறப் பெற்ற அவரை மறுதலிக்க முடியும்? நான் மரிக்கட்டும், நான் அங்கே எனக்காக மரித்து இரத்தம் கசிந்த நிலையில் இருக்கும் விலையேறப்பெற்ற அவரை மறுதலிப்பது எனக்கு வேண்டாம். ஆம். 205. நீங்கள் இங்கிருந்து கிளம்பிச் செல்லுகையில், இயேசுவின் நாமத்தை உங்களோடு எடுத்துச் செல்லுங்கள். அதை வாசியுங்கள் சகோதரி. சபையோரே நாம் எழுந்து நிற்போமா! இயேசுவின் நாமத்தை உம்மோடு எடுத்துச் செல்வீர் வருத்தமும், துக்கமும் அனுபவிக்கும் பிள்ளையே அது உனக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும் செல்கின்ற இடமெங்கணும் அதை எடுத்துச் செல்வீர் விலையேறப்பெற்ற நாமம் அது (விலையேறப்பெற்ற நாமம்) ஓ எத்தனை இனிமை (ஓ எத்தனை இனிமை) பூமியின் நம்பிக்கையும், பரத்தின் மகிழ்ச்சியும் அவர் விலையேறப்பெற்ற நாமம் (விலையேறப்பெற்ற நாமம்) ஓ எத்துனை இனிமை (ஒ எத்தனை இனிமை) பூமியின் நம்பிக்கையும், பரத்தின் மகிழ்ச்சியும் அவர் விலையேறப்பெற்ற நாமம் (விலையேறப்பெற்ற நாமம்) ஓ எத்துனை இனிமையானது அது பூமியின் நம்பிக்கையும் பரத்தின் மகிழ்ச்சியும் அவரே. 206. நாம் தலைகளை வணங்கி மெதுவாக இப்பாடலை பாடுவோம்: இயேசுவின் நாமத்தில் பணிந்து, அவரது பாதத்தில் முகங்குப்புற விழுந்து வணங்கி, பரலோகில் இராஜாதி இராஜாவாக அவருக்கு முடிசூடுவோம் நம் யாத்திரை முடிவடையும்போது விலையேறப் பெற்ற நாமம் அது ஓ அது எத்தனை இனிமை! பூமியின் நம்பிக்கையும், பரத்தின் மகிழ்ச்சிமாவார் விலையேறப்பெற்ற நாமம் அது, எத்தனை இனிமை பூமியின் நம்பிக்கையும், பரத்தின் மகிழ்ச்சியும் அவரே (சகோ.நெவில் ஆராதனையை முடித்து வைக்கிறார் – ஆசி. ******* ஐந்தாம் அத்தியாயம் பெர்கமு சபையின் காலம் THE PERGAMEAN CHURCH AGE நல்லது, என்னைப் பொறுத்தமட்டில் அதை அணைத்து விடுவது நல்லது. நல்லது. 2. கர்த்தருடைய ஆராதனையில் மீண்டும் இங்கே இருப்பதற்காக நாம் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறோம். நேற்றிரவில் நான் ஆயிர வருட அரசாட்சி வந்துவிட்டது போல உணர்ந்தேன். இங்கே சில கேள்விகள் உள்ளன என்று நான் நம்புகிறேன். அவைகளை என்னுடைய பாக்கெட்டில் வைத்துக் கொள்வேன். இதோ இது ஜெப உறுமால் என நினைக்கிறேன்... ஜெபிப்பதற்காக. இக் கேள்விகளுக்கு என்னால் முடிந்த அளவுக்கு பதில் அளிப்பேன். 3. டாக் அவர்களிடம், என் முகத்தில் கண் கூசும்படி அடித்துக் கொண்டிருக்கிற அவ்விளக்கை அணைத்துவிடும்படி கூறுங்கள். நான் இவ்விதமான ஸ்பாட்லைட்டுகள் என் மேல் அடித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. நான் இந்த ஸ்பாட்லைட் பிரசங்கிகளில் ஒருவன் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். இவ்வித விளக்குகள் இல்லாமல் இருப்பது நல்லது என்று கருதுகிறேன். 4. நான் தான் அதைச் செய்யச் சொன்னேன் டாக் அவர்களே. நான் அதைப்பற்றி என் மனதை மாற்றிக் கொண்டு விட்டேன். ஓ சற்றுப் பொறுங்கள். நீங்கள் அந்தப் பக்கமாக அதைத் திருப்பி விட்டு, அதில் வேலை செய்ய வேண்டியுள்ளதா? (சகோ. பிரன்ஹாம் அவர்கள் தன் சகோதரன் டாக் அவர்களோடு உரையாடுகிறார் - ஆசி). ஓ, நல்லது, அப்படியே விட்டுவிடுங்கள். ஓ இல்லை, அதை அப்படி விட்டு விடாதீர்கள். அவ்விதமாக இருப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன். நேராக நம் முகத்தில் கூசுகிற அளவுக்கு மிகவும் பிரகாசமான விளக்கு அடித்துக் கொண்டிருப்பதை நான் சில சமயங்களில் விரும்புவதில்லை. இப்பொழுது என் முகத்தில் அடிக்காமல், திருப்பி விடப்பட்டதால், என்னால் சரியாக பார்க்க முடிகிறது. நன்றி ஐயா! அது அவருக்கு நிறைய வேலையைக் கொடுத்துவிட்டது. 5. இந்த சபைக்காலங்களைப் பற்றி நாம் படிப்பதில், அதை முடிக்கவே முடியாத அளவுக்கு அது இருக்கிறது. இன்றைக்கு நான் இதின்பேரில் படித்துக் கொண்டிருக்கையில், என் மனைவியிடம், “ இதிலிருந்து 50 பிரசங்கங்கள் செய்கிற அளவுக்கு இதில் விஷயங்கள் அடங்கியிருக்கின்றன'' என்று கூறினேன். பாருங்கள்? எனவே அவைகளில் உள்ள மிக முக்கியமான சாரமான விஷயங்களைப் பற்றி மட்டும் தொட்டுவிட்டு பின்னால் இதை புத்தக வடிவில் தயாரிக்கையில் இன்னும் கூடுதல் விஷயங்களை அதில் சேர்த்துவிடுவோம். 6. சகோதரன் வெஸ்ட் அவர்களே, நான் உங்களை இங்கே காணவில்லை, தாங்கள் எப்படியிருக்கிறீர்கள்? நான் ஒரு நல்ல செய்தியைக் கேள்விப்பட்டேன்; அதாவது சகோ.டால்டன் அவர்களின் குடும்பத்தில் கடைசி மகள் கர்த்தருக்குள் வந்து விட்டதாக அறிந்தேன். அப்பெண் பத்தாவதானவள் தானே. ஒன்பது. புதிய ஊழியத்தின் கீழாக அவரிடம், கர்த்தர் அவரது குடும்பம் இரட்சிக்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். நான் அங்கே நின்றுகொண்டு அக் குடும்பத்திற்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன். நான் என்ன சொல்லப் போகிறேன் என்பது உனக்குத் தெரியாது. பரிசுத்த ஆவியானவர் கூறினார், “ உன் குடும்பத்தை நான் உனக்குத் தருகிறேன்'' என்று பாருங்கள்? அவ்வாறே, அவர்கள் ஒவ்வொரு வரும் வந்துவிட்டனர். கர்த்தர் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதைப் பார்த்தீர்களா? பாருங்கள், அவருடைய வார்த்தைகள் பரிபூரணமாக இருக்கின்றன. அவைகள் ஒருபோதும் தவறுவதில்லை. ஒரு தீர்க்கதரிசன பாகத்தை நாம் எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலத்திற்கு படித்துக் கொண்டிருப்போம். அந்த சமயத்தில் நாம் தெய்வீக சுகமளித்தல் ஆராதனையை நடத்த விரும்பவில்லை. 7. இன்றிரவில் நாம் இந்த பெரிய மூன்றாவது சபைக் காலத்தைப் பற்றி படிக்கையில், அதைப் பற்றி வரலாற்றுக் அதைப் பற்றி வரலாற்றுக் குறிப்புகளை எடுத்து பேசப்போகிறேன். அதை நீங்கள் ரசிக்கிறீர்களா? நான் இப்பொழுது நிறைந்து இருக்கிறேன். நான் உண்மையிலேயே எண்ணுவது என்னவெனில், கர்த்தர் எவ்வள வாய் நம்மை ஆசீர்வதித்து, இந்தக் காரியங்களையெல்லாம் நமக்கு அளித்துள்ளாரே, அது எத்தனை அற்புதமாயுள்ளது என்று எதிர்வரும் காலத்தில் என்ன சம்பவிக்கப் போகிறது என்பதைப் பற்றி முன் கூட்டியே நாம் அறியும்படி செய்த அவரை நாம் நம்முடைய முழு இருதயத்தோடும் போற்றுகிறோம். அவர் துவக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் அறிந்திருக்கிறார். அதைப்பற்றி நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆகவே, நம்மை அவர் ஆசீர்வதிப்பதற்காக, கர்த்தரை நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். 8. நேற்றிரவில், ஆராதனைக்குப் பிறகு, பரிசுத்த ஆவியானவர் நமக்கு மூன்று செய்திகளையும், மூன்று ஆத்துமாக்களையும் கொடுத்தார். சரியாக அவ்வாறே உள்ளது. ஆவியானவர் பேசிக் கொண்டிருந்த போது, பிறகு கடைசி வியாக்கியானத்தில் திரும்பவும் வந்து, “ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன்'' என்று வார்த்தைகளை திரும்பவும் உரைத்தார். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன்'' என்ற வார்த்தைகளை திரும்பவும் உரைத்தார். ஆவியானவர் சபையிலுள்ள வரங்களின் மூலம் அதையே கூறுகிறார். ஓ சபையானது அதை பயபக்தியுடன் இப்பொழுது கைக்கொள்ளட்டும். அதை பயபக்தியோடு காத்துக் கொள்ளுங்கள். கவனமாக இருங்கள்! சாத்தான் உங்கள் பக்கமாக வந்து, உங்களை அதினுடைய தீவிரமான ஓரங்களுக்கு விரட்டிவிடுவான். எப்பொழுதும் அது பரிசுத்த ஆவியானவர் தானா என்பதை ஒவ்வொரு தடவையிலும் நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். பேசுவது பரிசுத்த ஆவியாக இருக்கிறதென்றால், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அந்தக் காரியத்தைப் பற்றி நேரடியாகவே பேசுவார். அது சபையின் பக்தி விருத்திக்காக கொடுக்கப் பட்டுள்ளது. பாருங்கள்? இவைகளில் நீங்கள் பயபக்தியோடு இருப்பீர்களானால், தேவன் இன்னும் கூடுதலாக உங்களுக்குக் கொடுப்பார். பாருங்கள், இன்னும் கூடுதலாக தேவனிடமிருந்து பெற்றுக்கொண்டே போங்கள். 9. இன்று சிலர் தொலை பேசியில் அழைத்த, சுகமளிக்கும் ஆராதனைகள் இனி எப்பொழுது நடத்தப்படும் என்று கேட்டார்கள். இந்த ஆராதனைகளுக்குப் பிறகு அவை முடிந்த உடனேயே, அடுத்த ஞாயிறு மாலையில், நான் சில நாட்களுக்கு வெளியே சென்று தொண்டைக்காக கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்வோம். அது என்ன தேதியில் வருகிறது என்று தெரியவில்லை... 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில். அது சரிதானே, சகோதரன் நெவில் அவர்களே? (சகோதரன் நெவில் அவர்கள் “ ஆம் ஐயா'' என்கிறார் - ஆசி). 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில், வியாதியஸ்தருக்காக ஜெபித்தல் இருக்கும். 10. இங்கேயுள்ள நமது மேய்ப்பன் அவர்களைப் பற்றி நான் அதிகம் கூறுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் இல்லை. ஆனால் நீங்கள் யாவரும் அவரைச் சந்திக்கும்படி விரும்புகிறேன். நிச்சயமாகவே அவர் கிறிஸ்துவுக்குள்ளாக மிகவும் உண்மையான சகோதரராவார். மெதோடிஸ்டு பின்னணியில் பரிசுத்தத்தை கடைப்பிடிக்கிற குடும்பத்தில் வளர்த்து ஆளாக்கப்பட்டவர். அவ்விதமான ஒரு சகோதரரை நாம் பெற்றிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இங்கிருக்கிற நாம் யாவருமே ஆர்மன் நெவில் அவர்களை நன்கறிவோம். அவருடைய வாழ்க்கை குற்றஞ்சாட்டப்படாததாக இருக்கிறது. நான் இவ்வாறு அவரைக் குறித்து கூறுவது அவருக்கு பிடிக்காது. ஆனால், அவர் உலகைவிட்டு போனபிறகு, அவருக்கு ஒரு மலர் வளையத்தை சாற்றுகிறதைவிட, அவர் இங்கு இருக் கையில் அவருக்கு ஒரு ரோஜா மொட்டையாவது அளிப்பதையே நான் விரும்புவேன். பாருங்கள்? இதுவே அதற்குரிய வேளையா யிருக்கிறது. 11.ஓரிரவில் நான் சபைக்கட்டிடத்தைவிட்டு புறப்பட்டு வெளியே செல்லுகையில், ஒருவர், “ ஓ சகோ.பிரன்ஹாம் அவர்களே, நான் நிச்சயமாக அப்பிரசங்கத்தை மெச்சுகிறேன்” என்றார். 12. நான் அதற்கு, “ தங்களுக்கு நன்றி'' என்று பதிலளித்தேன். 13. அப்பொழுது வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு ஊழியக்காரர் (இதே கூடாரத்தில் அநேக ஆண்டுகளுக்கு முன்பாக இது நடந்தது) “ நல்லது, தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. எவரும் என்னிடம் அவிவிதமாகக் கூறுவதை நான் விரும்புவதில்லை. எல்லா மகிமையுமே தேவனுக்குப் போவதையே நான் விரும்புகிறேன்'' என்றார். 14. “ நல்லது, அது அவருக்குத் தான் போகிறது'' என்றேன் நான். மேலும் நான், ''அதை நான் விரும்புகிறேன், நான் உண்மையிலேயே அதை விரும்புகிறேன். நான் உண்மையைக் கூறியாக வேண்டும்'' என்றேன். 15.“ நல்லது, மக்கள் என்னைக் குறித்து அவ்வாறு கூறுவதை நான் விரும்பவில்லை. தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக'' என்றார் அவர். 16. “ இந்த விஷயத்தில் எனக்கும் உங்களுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கிறது. நான் இந்த விஷயத்தில் நேர்மையோடு உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அவ்வாறு இல்லை'' என்று கூறினேன். 17. எவரும் அதை விரும்புவர்... ஒரு சிறு குழந்தையை நீங்கள் எடுத்துக் கொண்டால், அதை நீங்கள் மெச்சினால், அப்பொழுது அது நன்றாக செயல்படும். பாருங்கள்? கொஞ்சம் மெச்ச வேண்டும். பாருங்கள்? தேவனும் எப்பொழுதும், தன் பிள்ளை சரியானதைச் செய்யும்பொழுது, அதை அவர்களிடம் சொல்லவே விரும்புகிறார். தன் பிள்ளை தவறிழைக்கும் போது தேவன் அதைச் சுட்டிக் காட்டுகையில், அவர்கள் சரியானதைச் செய்யும் பொழுது, ஏன் அதை அவர்களுக்குச் சொல்லக் கூடாது? பாருங்கள் 18. ஆகவே, நிச்சயமாகவே, நான் இங்கிருக்கிற இந்தக் கூடாரத்திலுள்ள மந்தையின் மேல் சகோதரன் நெவில் அவர்கள் மேய்ப்பராக இருப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுகிறேன். அவர் மெதோடிஸ்டு பின்னணியிலிருந்து வந்தவர். தவறான இடத்தில் புசிக்க விரும்பின பொழுது, பரிசுத்த ஆவியினாலே அதைக் கண்டு பிடித்தார். இப்பொழுது இவ்வரங்களைப் பெற்று இயங்குகிறார். எவ்வளவு ஸ்பஷ்டமாக பாஷைகளை அவர் பேச பரிசுத்த ஆவியானவர் அவரை உபயோகப்படுத்துகிறார் என்பதை கவனியுங்கள். அப்பொழுது அவர் தன் சொந்த சிந்தையை உபயோகிப்பதேயில்லை. அதேவிதமான லயத்தோடு வியாக்கியானம் பண்ணுதல், பிழையின்றி, சரியான ஏற்ற இறக்கத்தோடு வருவதை கவனியுங்கள். 19. இந்த எளிய சகோதரர் ஜூனியர் ஜாக்சன் அவர்கள், ஜூனியர் ஜாக்சன் அவர்கள், ஜூனி உங்களை நான் புகழாமல் அமைதியாயிருப்பேன். ஜூனி ஜாக்சன் அவர்களுக்காக நான் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். அச்சகோதரர் நிச்சயமாகவே கர்த்தரிடத்திலிருந்து ஒரு பெரிய வரத்தைப் பெற்றிருக்கிறார். 20. எப்பொழுதும் தாழ்மையாகவே இருங்கள். சபையில் ஒவ்வொருவருக்குமே செய்ய வேண்டிய பணி ஏதாவது இருக்கத் தான் செய்கிறது. ஆனால் அப்பணியை வேறு ஏதாவது ஒன்றிற்காக தள்ளி வைத்து விடாதீர்கள். உங்களுக்கு இருக்கும் ஊழியம் சபையின் ஏனையோருக்கிருக்கிற ஊழியத்தோடு சரியாக இணைந்து செல்லட்டும். தேவனுக்காகவே அனைத்து காரியங்களும். எல்லோருமே அந்நிய பாஷைகளில் பேசுகிறார்களா? எல்லோருமே வியாக்கியானம் செய்கிறார்களா? 21. ஏதாகிலும் நன்மையானதையே செய்ய முயலுங்கள். எப்பொழுதும் நல்லவர்களாகவே இருங்கள். பொறாமைப் படாதிருங்கள், உட்பகை சொள்ளாதிருங்கள், எந்த வித கசப்புக்கும் இடங்கொடாதிருங்கள், ஒருவர் உங்களைக் குறித்து எவ்வளவு கெட்டதாக பேசினாலும் சரி, அவர் எவ்வளவு கெட்டவராயிருந்தாலும் சரி, அவருக்கெதிராக நீங்கள் ஒரு போதும் உங்கள் உள்ளத்தில் தீமையாக எண்ணாதீர்கள். ஏனெனில், அவ்வாறு நீங்கள் எண்ணினால் பிசாசு உள்ளே புகுந்து ஏதாவது வேலை செய்து விடுவான். தெய்வீக அன்பினாலும் அறிக்கையி னாலும் அதை மூடிப்போங்கள். ஒப்புரவாகுதலை நாடி, உங்களுக்கு தீங்கு செய்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். “ உங்களுக்கு நன்மை செய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் நீங்கள் விசேஷித்து செய்கிறது என்ன? ஆயக்காரர்களும் அப்படியே செய்கிறார்களே,'' என்று இயேசு கூறினார். பாவிகளும் மற்ற யாவருமே, தங்களிடம் நல்லபடியாக நடந்து கொள்கிறவர்களிடம் நல்லபடியாக நடந்து கொள்ள முடியும். உங்களுக்கு நன்மையே செய்யாதவர்களுக்கு நீங்கள் நன்மை செய்ய வேண்டும், உங்களுக்கு எந்த உதவியுமே செய்யாதவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்யுங்கள். உங்களைப் பற்றி தீதாகப் பேசும் ஒரு மனிதனுக்கு, ஒரு நல்ல வார்த்தையையே அவரைப் பற்றி பேசுங்கள். அதின் மூலமாக உங்கள் இருதயத்திலிருந்து கசப்பையெல்லாம் அகற்றி விடுங்கள். அன்பிலே நிலைத்திருக்கிற வரையிலும், நீங்கள் எல்லோரிடத்திலும் அன்பு கூருவீர்கள். 22. நீங்கள் சொல்லலாம், “ நல்லது, அவர்கள் அதைச் செய்தார்களே'' என்று. நாம் நியாயாதிபதி அல்ல. தேவனே நியாயாதிபதியாவார். நீங்கள் அந்த நபரை தள்ளிப் போட விரும்புவீர்களோ? நீங்கள் அப்படிச் செய்வீர்களா? அவர்கள் யாராயிருந்தாலும், நீங்கள் அவ்வாறு செய்ய விரும்பமாட்டீர்கள். நீங்கள் அவ்வாறு நடந்துகொள்ள விரும்பமாட்டீர்கள், எனவே அவர்களிடம் தயவு காட்டுங்கள். “ அன்பு திரளான பாவங்களை மூடும்'' ஆம், ஐயா. அன்பு, அந்த சிறந்த, கிறிஸ்தவ, தெய்வீக அன்பு. 23. ஒரு மனிதன் உங்களிடம் வந்து, உங்களை “ உருளும் பரிசுத்தர்'' என்றும், இன்னும் பல்வேறுவிதமான பெயர்களை உங்களுக்கு சூட்டி அழைத்தால், கோபமாக நடந்து கொள்ள வேண்டாம். அவ்வாறு உங்களால் செய்ய முடியாவிடில், அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லுங்கள். ஆனால் அந்த நபரிடம், “ சகோதரனே, ஒருவேளை நான் இதைப் புரிந்த கொண்ட வண்ணமாக நீங்களும் புரிந்து கொண்டிருப்பீர்களானால், அப்பொழுது நான் உணருகிற வண்ணமாக நீங்களும் உணருவீர்கள்'' என்று அவரிடம் மிகவும் இனிமையாக பேசும் நிலைக்கு வர வேண்டும். பாருங்கள்? அந்த அளவுக்கு உங்கள் இருதயத்தின் தன்மை இருக்க வேண்டும். இவ்வாறு செய்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். கிழக்கு மேற்கிலிருந்து எப்படி தூரமாயிருக்கிறதோ, அதுபோல் ஒருவேளை நாம் வேறுபட்டிருந்தாலும், அது எந்தவித வித்தியாசத்தையும் ஏற்படுத்திவிடுவதில்லை. 24. நான் அன்றிரவில் என் சகோதரன் மெல்வின் என்பவனைப் பற்றி கூறினேன், அதைப்போல் இது உள்ளது. அவன் நல்ல கட்டுமஸ்தான ஆள், உயரமானவன், மஞ்சள்நிற தலைமுடியை உடையவன். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உடன் பிறப்புக்கள் என்று கண்டு கொள்ளுகிறதற்கு ஏதுவாக அவன் தோற்றம் இருக்காது. நாங்கள் உருவத்தில் ஒத்திருக்க மாட்டோம். எங்களுக்குள் வேறுபட்ட நாட்டங்களும், விருப்பங்களும் உண்டு. இருந்த போதிலும், அவனுடைய தாயார் எனக்கும் தாயார் தான். அவனுடைய தந்தையார் எனக்கும் தந்தைதான், பாருங்கள்? ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் தான் நாங்களிருவரும். 25. நாங்கள் வித்தியாசமானவர்களாக இருக்கிறோம். மெல்வின் கிறிஸ்தவனல்ல. அவன் பேஸ்பால் விளையாடவும், குதிரை பந்தயத்தையும் விரும்புகிறவன். அவனுக்கு சாக்லேட் பை என்றால் ரொம்ப பிடிக்கும். நான் நிச்சயமாக அவனிலிருந்து வேறுபட்டவன். எனக்கு மீன்பிடித்தல், மற்றும் வேட்டை ஆடுதல் முதலியவை விருப்பமானவை. அவன் நான் விரும்புகிறவைகளையே திரும்பிக்கூட பார்க்க மாட்டான். அவனுக்கு விருப்பமான வைகளில் நான் ஈடுபடமாட்டேன். நான் "செர்ரி பை' -ஐ விரும்புகிறேன். அவனோ "சாக்லேட் பை" - ஐ விரும்புகிறான். 26. நான் ஜாடையாக இதைக் கூறுவதாக எண்ண வேண்டாம், எங்கோ ஓரிடத்தில், ஒரு கூட்டத்தில் நான், சாக்லேட் பை பிடிக்கும் என்று கூறிவிட்டேன். அடுத்த நாள் இரவில் சுமார் ஐந்து சாக்லெட் பை - வந்துவிட்டன, அல்லது செர்ரி பை நான்கைந்து வந்துவிட்டது. சகோதரிகள் அவைகளை தயார் செய்து, எனக்குக் கொண்டு வந்து விட்டனர். என்னே! அன்றிரவில் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஆனால் நான் அந்த விதமான அர்த்தத்தில் சொல்லவில்லை. பாருங்கள்? 27. எனவே, உங்களுக்கு வித்தியாசத்தைக் காண்பிக்கவே இதை சொல்லுகிறேன். ஆனால் அவன் எப்படியிருந்தாலும், என்னுடைய சகோதரனாக இருக்கிறபடியினாலே, நான் அவனை நேசிக்கிறேன். அவன் கிறிஸ்தவனாக இல்லை, ஏனெனில் காரியங்களை வேறொரு வெளிச்சத்தில் பார்க்கிறான். நானோ கிறிஸ்துவின் ஒளியிலே காரியங்களைப் பார்க்கிறேன். இருந்தபோதிலும் கூட அவன் என்னுடைய சகோதரன் அல்ல என்று என்னால் கூற முடியாது. ஏனெனில் நாங்கள் ஒரே குடும்பத்தில் உடன் பிறந்த சகோதரர்கள். 28. நேற்று மாலை, நான் கடைசியாக ஒரு மேற்கோளைக் கொடுத்தேன். இந்தக் கூட்டத்தில் மர்மமான இரகசியமான, அநேகரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் காரியங்கள் கிடைக்கும் என்று கெண்டக்கியில் வந்த முதல் செய்தியில் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு உள்ளவைகளை நீங்கள் அறிவீர்கள். ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களா? அது ஒலி நாடாவில் உள்ளது. நேற்றிரவில் அவைகளில் ஒன்று வெளிப்படுத்தப்பட்டது. எனவே, ஒரு விநாடி நேரத்திற்கு அப்படியே நின்றுவிட்டது போல் ஆகிவிட்டது. ஆனால் நீங்கள் அதைக் கிரகித்துக் கொண்டீர்கள் என்று நிச்சயமாயிருக்கிறேன். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் தாமே அந்த விஷயத்தைக் கொண்டு வந்தார். “ வேதத்தில் நித்தியமான நரகம் என்பது இல்லை” என்பது தான் அது. 29. நித்தியமான நரகம் என்பது ஒன்று கிடையாது. நித்தியமாக நீங்கள் நரகத்தில் எரிந்து கொண்டிருப்பீர்களானால், அப்பொழுது, அங்கே நீங்கள் முற்றிலும் ஒழிந்து போகாமல் இன்னும் உயிருடன் நித்தியமாக எரிந்து கொண்டேயிருப்பதற்காக, நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்க வேண்டும். ஒரேயொரு நித்திய ஜீவன் தான் உண்டு, அதுதான் தேவனுடையது. பாருங்கள்? ஆகவே, நித்தியமான நரகத்தைக் குறித்து வேதம் போதிக்கவேயில்லை. ஆனால் வேதமோ “ சதாகாலங்களிலும் எரியும் நரகம்'' பற்றித்தான் போதிக்கிறது. சதாகாலமும் என்றால், அது ஒருவேளை 10,000 மில்லியன் ஆண்டுகளுக்கு இருக்கலாம், எனக்குத் தெரியாது. ஆனால் அது காலவரையறைக்குட்பட்டது. அது முற்றிலும் இல்லாமல் ஒழிந்து போகத்தான் வேண்டும். 30. நான் இந்த செய்தியை இங்கே தான் முதலில் கொண்டு வர வேண்டியது உள்ளது. எனவே மற்ற சபைகளில் இதைப் பற்றி நான் உரைக்கவில்லை. இன்னும் பல விஷயங்கள் நான் உரைப்பதற்காக என்று உள்ளன, அவைகளை நாம் ஒவ்வொரு இரவிலும் பார்ப்போம். 31. ஆனால் இப்பொழுது, இன்றிரவிலிருந்து, உங்களுடைய ஆவிக்குரிய சிந்தையைத் தரித்துக் கொள்ள ஆரம்பியுங்கள். பாருங்கள், பரிசுத்த ஆவியானவரில் உங்கள் சிந்தை தோய்ந்ததாக இருக்கட்டும். சத்தியத்தை நீங்கள் கேட்டு, அதை நீங்கள் ஒத்துக் கொள்ள முடியாமற்போனால், நீங்கள் போய், “ பாவம் சகோ.பிரன்ஹாம். நிச்சயமாக அவருக்கு தெரியவில்லை, நான் அவருக்காக ஜெபிக்கப் போகிறேன்'' என்று சொல்லுங்கள். நீங்கள் அதைச் செய்தால், அப்பொழுது எது சத்தியம் என்பதை கர்த்தர் எனக்குத் தெரியப்படுத்துவார். நீங்கள் எனக்காக அனுதாபப்படுங்கள், என்னை புறம்பே தள்ளி விடாதீர்கள். அதுவும் ஒருவேளை உண்மையாக இருக்கக் கூடும். ஆனால், ஓ, இந்தவிதமாக நான் சிந்திப்பதில் மிகவும் நல்ல அருமையான வேளையை உடையவனாக நான் இருக்கிறேன். ஆகவே நான் இவ்வாறு கூறுவதன் காரணம் என்னவெனில், இருதுருவமாக இருப்பவர்களை சௌஜன்யமாக இருக்க வைப்பதற்காகத்தான். நான் ஒரு வேளை தவறாக இருக்கக் கூடும். ஏதாவது ஒன்றில் தொடர்பற்ற பாகங்கள் இருக்கக்கூடும். அதை நான் முற்றிலுமே அறிந்திராமல் இருக்கக்கூடும். ஒருவேளை நீங்கள் அதை அறிந்திருக்கக் கூடும். கர்த்தர் அதை எனக்குக் காண்பிக்கும்படி எனக்காக ஜெபியுங்கள். 32. இப்பொழுது, எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவருக்காக ஒருவர் ஜெபித்துக் கொண்டேயிருங்கள்; பிசாசானவன் ஏதாவது கசப்பை எங்காவது காண்பிக்கும்படி அவனுக்கு இடங்கொடுத்து விடாதீர்கள். பாருங்கள்? இந்த வேளையில் உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாயிருக்கும்படி காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இவ்வுலக வரலாற்றின் இறுதிக்கட்டமான வேளைகளில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். பாருங்கள்? எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி, நாம் கடைசிக் காலத்தில் இருக்கிறோம். நண்பர்களே. 33. நாம் இந்த சபைக் காலங்களைப் பற்றி படித்துக் கொண்டு வருகையில், ஒரு வேளை இன்றிரவில், அவைகளில் அநேக காரியங்களை, வெகு விரைவில் பார்க்கப் போகிறோம். ஏறத்தாழ, நாம் கடந்த காலத்திற்குள் திரும்பிச் சென்று, இவற்றின் பின்னணியை நாம் பெற்றுக் கொள்வோம். அதை வைத்துக் கொண்டு இதை முடிவுக்குக் கொண்டு வரலாம். இன்றிரவில் சில உண்மையான ஆவிக்குரிய காரியங்களை நாம் வெளிப்படுத்துவோம். இக்காரியத்தில் உங்களுடைய ஆவிக்குரிய சிந்தையை தரித்துக் கொள்ளுங்கள் என்று நான் கூறியதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் வேத வாக்கியங்களை கவனியுங்கள். அது வேத வாக்கியத்தில் இருக்க வேண்டும். வேத வாக்கியங்களின் மூலமாக இருத்தல் வேண்டும். பாருங்கள்? “ நான் உயர்நிலைப் பள்ளி யில் கல்வி கற்றேன், நான் வேதக் கல்லூரியில் கற்றேன், நான் கல்லூரியில் கற்றேன்'' என்றெல்லாம் கூறிக்கொண்டு, வேத வாக் கியத்தின் வெறும் அறிவை மட்டும் பெற்றிருந்தால் போதாது. அதினால் எந்தவிதப் பயனும் இல்லை. பரிசேயர் மற்றும் வேதபாரகர் அனைவரும் அதையே செய்தார்கள். அதின் மூலம் அவர்கள் இயேசுவைப் பற்றி அறிகிற அறிவில் ஒரு மில்லியன் மைல்கள் தூரமாய் இருந்தார்கள். பாருங்கள்? 34. வேதவாக்கியங்கள், வேதவாக்கியங்களைப் பற்றிய வெளிப்பாடு “ ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் மறைக்கப்பட்டு, கற்றுக் கொள்ள விரும்பும் பாலகருக்கு வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.'' எனவே, நீங்களும் நானும், நாம் யாவரும் பாலகராக ஆகி, நம்முடைய இருதயங்களை காலியாக வைத்து, அவரிடம், “ கர்த்தாவே, எங்களுக்குச் சொல்லும், நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம்'' என்று சொல்லுங்கள். அதன்பிறகு, ஆவிக்குரிய கண்ணோட்டத்தை பிடித்துக் கொள்ளுங்கள். இதை நினைவில் கொள்ளுங்கள். இன்றிரவிலிருந்து கூறப்படும் வார்த்தைகளின் பேரில் உள்ள ஆவிக்குரிய கண்ணோட்டத்தை பிடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நாம் மிகவும் பெரிய இரகசியமான சபைக் காலத்திற்குள் வந்து கொண்டிருக்கிறோம். 35. அவ்வளவு தான் என்று எண்ணுகிறேன். நாளை இரவு அடுத்த சபைக் காலத்தைப் பற்றி பார்ப்போம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாளைக்கு நமக்கு இவைகளைப் பற்றி பார்க்க ஏராளமான நேரம் இருக்கிறது என்று நான் நிச்சயமாக உள்ளேன். அதன்பிறகு நாளை இரவும் கூட. ஆனால், அநேகர் வேலை செய்து கொண்டு இருப்பார்கள் என்பதைப் பாருங்கள். எனவே நான், இச் செய்தியின் மிகவும் குறிப்பிடத்தக்க முக்கியமானவைகளை நீங்கள் பெற்றுக் கொள்ள நான் முயலுவேன். மேலும், இங்கே பேசப்பட்டவைகளில் முக்கியமான அம்சங்களை தொட்டுக் காண்பித்து விடுவேன். நீங்கள் அவைகளை குறிப்பெடுத்துக் கொண்டு அவைகளை வீட்டில் போய் ஆராயுங்கள். நான் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருப்பேன். நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொண்டிருங்கள். அவருடைய விசுவாசிக்கும் பிள்ளைகளாகிய நம்மை தேவன் ஆசீர்வதிப்பாராக. 36. நாம் இப்பொழுது துவக்குவதற்கு முன்பாக, நீங்கள் எழுந்து நிற்பது உங்களுக்கு கடினமாக இருக்காது என்று நினைக்கிறேன். ஏன் எழும்பி நின்று ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்பது உங்களுக்கு தெரியுமா? இயேசு சொன்னார்: "நீங்கள் நின்று ஜெபிக்கையில், “ பரமண்டலங்களி லிருக்கிற எங்கள் பிதாவே... எங்களுக்கு மன்னியும்' என்று ஜெபியுங்கள்'' என்று பார்த்தீர்களா? கிதியோன் ஒரு தடவை, தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிகிறவர்களான ஒரு கூட்டத்திற்கும், அப்படிக் குனியாமல் நின்று கொண்டு தண்ணீரைக் குடிக்கிறதான ஒரு கூட்டத்திற்கும் இடையே தனக்கென ஒரு சேனையைத் தெரிந்து கொண்டான். பார்த்தீர்களா? விக்கிரகங்களுக்கு முன்பாக முகங்குப்புற வீழ்ந்து வணங்கினவர்கள் குனிந்து தண்ணீரை எடுத்துக் குடித்தார்கள். அவர்கள் தனக்கு சேனையாக இருப்பதற்கு உரியவர்கள் அல்ல என்று கிதியோன் அறிந்து கொண்டான். மற்றொரு கூட்டத்தினர், நிமிர்ந்து நின்று, எப்பொழுதும் தங்கள் கண்களால் ஜாக்கிரதையாக கவனித்துக் கொண்டிருக்கிற வர்களையே தனக்கு சைன்யமாக இருக்கத் தெரிந்து கொண்டான். அவ்விதமாகத்தான், நாமும் நின்று கொண்டு ஜெபிக்கிறோம். முழங்கால்படியிட்டு ஜெபிப்பதையும் நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நின்று கொண்டு ஜெபிப்பதில் நமக்கு ஏதோ உள்ளார்ந்த அர்த்தமுள்ளதாக இருக்கிறது. நாம் இப்பொழுது தலைகளை வணங்கி, இருதயங்களிலும் வணங்கி ஜெபிப்போமாக. 37. கிருபையுள்ள பரம பிதாவே, நாங்கள் இப்பொழுது பய பக்தியுடன் உமது நீதியின் சிங்காசனத்தை அணுகுகிறோம். நாங்கள் நீதியை அருளும்படி கேட்டுக் கொண்டு உம்மிடம் வரவில்லை. ஏனெனில், அப்படிக் கேட்டால், நாங்கள் யாவரும் பட்சிக்கப் பட்டு விடுவோம். ஆனால் நாங்களோ, “ இரக்கம் தாரும், ஓ கர்த்தாவே'' என்று கெஞ்சிக் கொண்டு உம்மிடம் வருகிறோம். இன்றிரவில் எங்கள் மேல் உம்முடைய பரிசுத்த ஆவியை ஊற்றியருளும். ஏனெனில், நாங்கள் தகுதியுள்ளவர் களாயிருக்கிறோம் என்று அல்ல, நாங்கள் தகுதியற்றவர்கள் என்பதை உணர்ந்தும், அதை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்பதினிமித்தமாகவே. இவ்விண்ணப்பத்தை எங்களுடைய நாமத்தினாலே கொண்டு வரவில்லை (ஏனெனில் எங்களுடைய நாமம் அதற்குப் போதுமானது அல்ல). எங்களிடம் நியாயம் இல்லை, எங்களிடம் எதுவுமேயில்லை. எங்களுடைய அதிகபட்ச நீதியெல்லாம் உமது பார்வையில் அழுக்கான கந்தையாவே இருக்கும். எனவே நாங்கள் பணிவுடன் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே வருகிறோம்; அவரை எங்களுக்கு முன்பாக கொண்டு வந்து, அவருடைய உடன்படிக்கையின் இரத்தத்தை எங்கள் இருதயங்களில் பூசிக் கொண்டவர்களாய், “ தேவனே, துன்பவேளையில் இரக்கத்திற்காக கெஞ்சும் பாவிகளாகிய எங்களிடம் இரக்கமாயிரும்'' என்று கேட்கிறோம். ஒரு நாளில் கடைசி பிரசங்கமானது பிரசங்கிக்கப்பட்டிருக்கும், அந்த நாள் எப்பொழுது என்று எங்களுக்குத் தெரியாது. கடைசி நேரத்தில், ஆகாயத்தில் ஒரு ஆரவாரம் உண்டாகும், பிரசங்க பீடத்தில் வேதப்புத்தகமானது மூடப்பட்டிருக்கும், கரங்கள் குவிக்கப்பட்டிருக்கும், எக்காளமானது தொனிக்கும், சூரியன் அஸ்தமித்து போகும். ஓ தேவனே! அப்பொழுது என்னை, நித்திய கன்மலையே, அந்த வேளையில் மறைத்துக் கொள்ளும். 38. இப்பொழுது உமது மூலமாய் அல்லாமல் வேறு எவ்விதத்திலும் நாங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. நாடுகள் உடைந்து கொண்டிருக்கின்றதை நாங்கள் காண்கிறோம். வேதம் நிறைவேறுகிறதை நாங்கள் பார்க்கிறோம். இஸ்ரவேல் விழித்துக் கொண்டிருக்கிறதை நாங்கள் காண்கிறோம். சபைக்கு வந்துள்ள செய்தியை பார்க்கிறோம். மகத்தான காரியங்கள் வெளிப்படுத்தப்படுகிறதும், ஏழு முத்திரைகள் திறக்கப் படுகிறதுமான வேளையில் நேரமானது ஏறத்தாழ முடிவடைந்து இருக்கிறது. 39. தேவனே, தேவனே, ஓ தேவனே, எங்களிடம் இரக்கமா யிரும், இரக்கத்திற்காக நாங்கள் கெஞ்சுகிறோம். மேலும் உம் முடைய ஊழியக்காரன் என்னும் முறையில், இன்றிரவில் தெய்வீக பிரசன்னத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்காகவும் இரக்கம் வேண்டி கெஞ்சுகிறேன். எங்களுக்குள், தங்கள் ஆத்துமாவில் பாவத்தையுடைய ஒரு நபர் கூட இங்கு இருக்க வேண்டும், தேவனே, இப்பொழுதே அவ்வாத்துமா கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தாலே சுத்திகரிக்கப்பட்டு, அதினால், நாங்கள் யாவரும் ஆகாயத்திற்கு அப்பால் தொலைவில் உள்ள அந்த பரம சந்தோஷ வாசஸ்தலத்தில் சந்திக்கட்டும். 40. பிதாவே, இன்றிரவில், இவ்வேதவாக்கியத்தை நான் அணுகுகையில், ஓ நான் பாத்திரவனாக இருக்கவில்லை. எங்களில் எவரும் பாத்திரவான்களல்ல, தேவனே. நாங்கள் ஒன்றும் அறியாதவர்கள் என்பதை அறிக்கையிடுகிறேன், பிதாவே. ஆனால் நாங்கள் பயபக்தியுடன், பரிசுத்த ஆவியானவர் தாமே வெளிப்படுத்திக் கொடுக்க வேண்டி, அவரையே சார்ந்து கொள்ளுகிறோம். நாங்கள் எங்களுக்கு நீர் அளித்திருக்கும் மூளை அறிவின்படி, சரித்திரத்தை திறந்து பார்க்கையில், பரிசுத்த ஆவியானவர் எங்கள் இருதயங்களில் ஆவிக்குரிய கண்ணோட்டத்தை அளிப்பாராக. பிதாவே, இதை அருளும். உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தினால் உமக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ஆமென். (நீங்கள் அமரலாம்.) 41. வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தின் இரண்டாம் அதிகாரத்தில் மூன்றாம் சபைக்காலத்தை... (ஒரு சகோதரி அந்நிய பாஷைகளில் பேசுகிறார் - ஆசி). என்னை மன்னிக்கவும். 42. பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய இராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல் பூமியிலேயும் செய்யப்படுவதாக. நீர் எங்களோடிருந்து, எங்களை ஆசீர்வதித்து, மக்கள் மத்தியில் உள்ள இந்த துன்பமான வேளையில், நாங்கள் ஞானமுள்ளவர்களாகவும், சிறந்த சிற்பாசாரிகளாகவும் இருக்க எங்களுக்கு உதவி செய்யும், பிதாவே. குழப்பமும் மற்றும் இன்னபிற காரியங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், கர்த்தாவே, உம்முடைய தலை சிறந்த ஊழியக்காரர்களாக இருக்க, கிறிஸ்துவின் நாமத்தினால், எங்களுக்கு உதவி செய்யும். ஆமென். 43. நீங்கள் அறிந்து கொள்ளத்தக்கதாகத் தான் நான் அதை முதலிலேயே கூறிவிட்டேன். வார்த்தைக்கு உரிய வியாக்கியானம் வரவில்லை என்பதைக் கவனித்தீர்களா? நம்முடைய சகோதரி சந்தேகத்துக்கிடமின்றி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். வார்த்தையானது வந்ததற்குப் பிறகு, அவர்கள் செய்தியைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அச்செயல், அதற்குரிய ஒழுங்கை விட்டு விலகிய செயலாக இருக்கிறது. சகோதரியே, நீங்கள் யாராயிருந்தாலும் சரி, உங்கள் மேல் பரிசுத்த ஆவியானவர் வந்திருக்கையில், உங்களால் அடக்கி வைத்திருக்க இயலாது என்பதை நான் அறிவேன், அது சரிதான், அது எப்படியிருக்கிறதென்றால்... அல்லது, நீங்கள் ஒன்றைக் கூறிக் கொண்டிருக்கையில் இன்னொருவர்... பாருங்கள் அது சரிதான். ஆனால் ஒரு வேளை, நாங்கள் ஆரம்பிக்கிறதற்கு முன்பாகவே, நீங்கள் அதைப் பற்றி உணர்ந்து கொண்டிருக்கக் கூடும். அதனால் தான், ஆவியானவர் கிரியை செய்யும்போது, அது திரும்ப வருகிறது, தீர்க்கதரிசிகளின் ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கி யிருக்கிறதே. அது நீங்கள் தான். 44. மறுபடியும், உங்களை அவர் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கக் கூடும், பாருங்கள், (அவர் அவ்வாறு செய்கிறார் என்று நான் நம்புகிறேன்.) ஆராதனையானது முடிந்த பிறகு, பாஷை பேசியதன் வியாக்கியானம் வருவதற்காக அப்பொழுது பார்த்திருங்கள். ஏனெனில், அப்பொழுது அது, சரியாக, அதற்கான ஒழுங்கின்படி இருக்க வேண்டும். ஆனால் நாம் இப்பொழுது வார்த்தையை அணுகிக் கொண்டிருக்கிறோம் என்பதை இங்கே பாருங்கள். எனவே, அது உண்மையிலேயே தேவனிடத்திலிருந்து வந்ததாகத் தான் இருந்தது. அதை நான் என் முழு இருதயத்தோடும் விசுவாசித்து உணருகிறேன். பின்னால் வரவேண்டியது முன்பாகவே வந்துவிட்டது. ஆனால் பரிசுத்தாவியானவர்... அதற்குரிய வேளை அதுவல்ல. சபைக்கென ஒரு செய்தியை தேவன் சகோதரிக்குக் கொடுத்தால், ஆனால் இப்பொழுது அவர் தனது செய்தியை கொடுக்க கிரியை செய்து கொண்டிருக்கிற வேளையாக வல்லவோ இருக்கிறது. அவர் தன்னைத்தானே குழப்பிக்கொள்ளமாட்டார் என்பதைப் பாருங்கள். அவர் எல்லாவற்றையும் ஒரு ஒழுங் குக்குள் வைக்கிறார். அதுவே சரி என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்கிறீர்கள் என்பதை நிச்சயமாக அறிகிறேன். 45. வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில் இரண்டாம் அதிகாரத்தில், பெர்கமு சபையினை நாம் இன்றிரவில் ஆரம்பிக்கிறோம். 12ம் வசனத்தைப் பார்ப்போம். நேற்றிரவில் 11ம் வசனத்தோடு விட்டிருந்தோம். “ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது." வெளி.2:11. 46. நாம் முதலாவது சபையின் காலத்தில் தான் நிக்கொலாய் மதஸ்தரின் போதகமானது ஆரம்பித்தது என்று பார்த்தோம். தேவன் தன்னையே வெளிப்படுத்தினார்... இயேசு தன்னை சர்வ வல்லமையுள்ள தேவனாக வெளிப்படுத்தினார். தேவனுடைய எந்தவொரு பாகமாகவோ, துண்டாகவோ தன்னை வெளிப்படுத்த வில்லை. அவரே தேவனாயிருக்கிறார், அவரைத் தவிர வேறுயாரும் இல்லை என்பதை வெளிப்படுத்தினார். 47. கடந்த இரவில் நாம் பார்த்த அச் சபைக்காலத்தைப் பற்றிய செய்தியில், அவர் வாசலில் நின்று, சபைக்கு இக்காரியங்களை எழுதினார் என்று பார்த்தோம். அவர்களிருக்கும் வறுமையைப் பற்றி அவர் அவர்களுக்கு சொன்னார். ஆனால் அவர்கள், தேவன் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் போதகக்காரர்கள் மத்தியில் இருப்பதைக் குறித்து அவர்களுக்குச் சொன்னார். 48. கடந்த இரவில், அவர்கள் அணிந்து கொள்ள இரத்த சாட்சிகளின் கிரீடத்தை பெறுவதைப் பற்றிப் பார்த்தோம். அவர்கள் மரணமடையப் போகிறதைக் குறித்து அஞ்ச வேண்டாம் என்றும், தான் அவர்களுடன் இருப்பதாகவும் உரைத்தார். முடிவில் அவர், “ ஜெயங் கொள்ளுகிறவன்!'' என்றார். “ ஜெயங் கொள்ளுகிறவன் எவனோ அவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை'' என்று கூறினார். 49. ஒரு மரணம் இருக்கிறதென்று நான் அறிந்திருந்தால், அப்பொழுது எங்கோ இன்னொரு மரணமும் இருக்கத்தான் வேண்டும். ஏனெனில் நாம் அடைகிற ஒரு மரணம் இப்புவியில் மாம்சத்தில் அடைவதாகும். இரண்டாவது மரணம், ஆவியில் ஆத்துமாவில் அடைகிற மரணமாகும். “ பாவஞ்செய்கிற ஆத்துமா சாகவே சாகும்''. மரிப்பது என்றால், முழுவதுமாக எல்லாவற்றிலிருந்துமே அகன்று ஒன்றுமில்லாமற்போய், ஒழிந்து போகுதல் என்பதாகும். மரணம் என்றால் முழுவதும் நீங்கிப் போதல், முழுவதும் அகற்றப்படுதல், மறைந்து போதல், நமக்குப் பிரியமானவர்கள் மரிக்கும் பொழுது, அவர்கள் நாம் அறிந்திருக்கிற மட்டில், நிலைத்திருக்காமற் போகிறார்கள். அதை நாம் மரணம் என்றழைக்கிறோம். 50. ஆனால் ஒரு கிறிஸ்தவன் மரிப்பதில்லை. கிறிஸ்தவன் மரிக்கிறான் என்பதற்கான ஒரு வேதவாக்கியமும் இல்லை; ஏனெனில் அவன் நித்திய ஜீவனை உடையவனாய் இருக்கிறான். முடிவாக அவனது ஆத்துமா ஒரு நாளில் மரிக்கும். ஆனால் ஒரு கிறிஸ்தவன் மரிக்கையில், அவன் தானே திரும்ப வருவதற்காக இயேசுவோடு காத்துக் கொண்டிருக்கிறான். ஓ, இன்று இராத்திரியில் இத்தரிசனத்தின் இறுதியில் அதைப் பற்றி பார்ப்பதற்கு எனக்கு நேரம் இருக்கும் என்று நம்புகிறேன். அதைப் பற்றி பார்ப்பதற்கு நாம் திரும்ப வருவோம். அதில் நீங்கள், எவ்வாறு அந்த இரண்டாம் மரணத்தின் காரியமானது கொண்டுவரப்படுகிறது என்பதை காணலாம். இன்று இராத்திரியில் நாம் படிக்கப் போகும் இதே அதிகாரத்திலேயே அதே காரியமானது கொண்டு வரப்படுவதை காணலாம், அது மிகவும் அழகான முறையில் பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது. 51. இவ்விரவில், விரைவாக இக்கடிதத்தை நாம் படிக்கப் போகிறோம். ஏனெனில் என்னிடம் வரலாற்று ரீதியான சில தகவல்கள் உள்ளன, அவைகளை நாம் முதலில் காண விரும்புகிறோம், உங்களை வெகு நேரம் இங்கே வைத்துக் கொள்ளாமல் இருக்க முயலுவோம். இந்த ஆராதனைகள் முடிவுற்ற பிறகு, எந்த நேரத்திலும், எவ்வாறு அவைகள் பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் காணும்படியாக, நான் உங்களுக்காக விரைவாக வாசிப்பேன். சகோ.மெர்ஸியர் அவர்களிடம் அவைகள் யாவும் உள்ளன. நான் அவைகளை அவரிடம் ஒப்படைத் திருக்கிறேன். அவர் அந்த புத்தகத்தை எழுதிக் கொண்டிருப்பதினால், அதில் உங்களுக்கு தேவையானதை உங்களுக்கு அவர் கொடுக்க முடியும். அது சரியாக இருக்குமல்லவா, சகோ. மெர்ஸியர் அவர்களே? 52. வெளிப்படுத்தின விசேஷம் 2ம் அதிகாரம் 12ம் வசனம் முதல். “ பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்ன வெனில்; இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடி கொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்தியப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன். ஆகிலும், சில காரியங்களைக் குறித்து உன் பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை, இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்ப வனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு. அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக்... (எபேசுவில் கிரியைகளாயிருந்து, இங்கே போதகமாக ஆகி விட்டது, நான் அன்று இரவில் எவ்வாறு அது அதனிடம் அணுகி வந்து விட்டது என்று கூறிக் கொண்டிருந்தேனே, ஞாபகம் இருக்கிறதா? கிரியைகளாக எபேசுவில் இருந்தது, இப்பொழுது போதகமாக ஆகிவிட்டது)... கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன். நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத் தில் வந்து, என் வாயின் பட்டயத்தால்... (உண்மையான சபையோடு அல்ல)... அவர்களோடே யுத்தம் பண்ணு வேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுத்த அவனுக்கு (அவனுக்கு!) வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின் மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி, வேறொருவனும் அறியக் கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது." வெளி.2:12-17 தேவன் தாமே இதனுடன் தம்முடைய ஆசீர்வாதங்களை கூட்டித் தந்து, நமக்கு உதவி செய்வாராக. 53. இந்த சபையின் பின்னணியைப் பார்ப்போம். இது மூன்றாம் சபைக்காலம் ஆகும். இது பெர்கமு என்றழைக்கப்படுகிறது. இச் சபைக்காலம், கி.பி.312 முதல் 606 முடிய நீடித்திருந்தது. 54. இக்காலம் கள்ளப் போதகம், சாத்தானின் பொய், போப்பு மார்க்க ஆட்சியின் அஸ்திவாரமிடுதல், சபையும் அரசும் விவாகம் செய்து கொள்ளல் ஆகியவை இடம் பெற்ற காலமாகும். 55. இச்சபையின் காலத்தில் அளிக்கப்படும் பலன்; மறைவான மன்னாவும், வெண்மையான குறிக்கல்லும் ஆகும். 56. இந்த சபைக் காலத்திற்குரிய தூதன், நட்சத்திரம் யாரெனில், பரிசுத்த ஆவியானவர் எல்லா வகையிலும் அதைச் செய்வதற்காக என்னை அனுமதித்ததின் பேரில், நான் பரிசுத்த மார்ட்டின் என்பவரை தேர்ந்தெடுத்துள்ளேன். அக்காலத்தில் வாழ்ந்த ஏனைய பரிசுத்தவான்களைப் பற்றியும் நான் அச்சமயத்தில் படித்ததில், அவர்கள் யாவருக்குள்ளும் இவரை தெரிந்துகொள்ள, அதற்கான வெளிப்பாடு எனக்கு அளிக்கப்பட்டது. பரிசுத்த மார்ட்டின் ஒரு தேவ மனுஷனாயிருந்ததால் நான் அவரை தெரிந்து கொண்டேன். என்னுடைய கருத்துப்படி, அதே காலத்தில் வாழ்ந்த பரிசுத்த பேட்ரிக் என்ற அப்போஸ்தலரை விட, பரிசுத்த மார்ட்டின் பத்து மடங்கு சிறப்பான அளவுக்கு அப்போஸ்தலனாயிருந்தார். 57. பரிசுத்த பேட்ரிக் பரிசுத்த மார்ட்டினுடைய மருமான் ஆவார். பரிசுத்த மார்ட்டினுடைய சகோதரி, பரிசுத்த பேட்ரிக்கின் தாயார் ஆவார். எனவே, பரிசுத்த மார்ட்டின் பரிசுத்த பேட்ரிக்கின் மாமன் ஆவார். 58. பரிசுத்த மார்ட்டின் கி.பி.315 முதல் கி.பி.399 வரையில் வாழ்ந்து வந்தார். அந்நாட்களில் வாழ்ந்த வந்த ஏனைய பரிசுத்த வான்கள் எல்லாரிலும், பரிசுத்த மார்ட்டினை நான் தெரிந்து கொண்டதற்கான காரணம் என்னவெனில், அவர் உறுதியாக நிலை நின்று, விட்டுக் கொடுக்காமல் இருந்தது தான். தேவனுடைய ஆவியின் அசைவின் கீழ், நான் அதை... 59. கத்தோலிக்க சபை மார்ட்டினை பரிசுத்தவானாக நியமிக்கவில்லை. அவர்கள் அங்கீகரிக்கவில்லை. மார்ட்டினை நாம் தேர்ந்தெடுப்பதற்கு அதுவே இன்னொரு காரணமாகும். ஹூம் ஹூம் நாம் பார்க்கிற இவர்கள் யாவரையும், அவர்கள் ஆவிக்குரிய ஊழியத்தை உடையவர்களாக இருந்ததினால், ஆதியில் இருந்த நிக்கொலாய் மத சபை நிராகரித்தது. நான் இங்கு வரைந்திருக்கிற சித்திரத்தின்படி, சபையானது நெருக்கப்பட்டது, நிக்கொலாய் மதஸ்தரின் போதகத்தை பெரும்பான்மையினர் கைக்கொள்வதாக இருந்தனர். உண்மையான சபையானது சிறுபான்மையினராகவே எப்பொழுதும் போல் இருந்தது. 60. நாம் துவக்கத்திலிருந்தே குறிப்பிட்டு வந்தது போல, இயேசு கூறினார்: “ பயப்படாதே, சிறு மந்தையே, உனக்கு இராஜ்யத்தைக் கொடுக்க உன் பிதாவானவர் பிரியமாயிருக்கிறார்'' என்று. எனவேதான், நான் இராஜ்யத்தை, ஆவிக்குரிய இராஜ்யம் உண்டு. அதைப் பற்றி நாம் மிகவும் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம். இந்த இராஜ்யத்திற்கு ஒரு இராஜா இருக்கிறார். அவர் பரிசுத்தவான்களின் (பரிசுத்தமாக்கப்பட்டவர்களின்) இராஜாவாக இருக்கிறார். அவரே அவர்களை வழி நடத்துகிற இராஜாவாக இருக்கிறார். 61. சபைக் காலங்களிலேயே மிகவும் மகத்தான அற்புதங்கள் நிறைந்த வாழ்க்கையை உடையவர்களுள் பரிசுத்த மார்ட்டினுடையதும் ஒன்று. பரிசுத்த பவுல் முதற்கொண்டு தொடர்ந்து வந்த காலங்களில் வாழ்ந்த மகத்தான ஆவிக்குரிய மனிதர்களுள் பரிசுத்த மார்ட்டினும் ஒருவர் ஆவார். அவர்... 62. அவருடைய ஜீவியத்தில் நடந்த முதலாம் அற்புதங்களில் ஒன்று என்னவெனில்... அவர் ஒரு இராணுவ வீரராக இருந்தார் என்று நம்புகிறேன். ஒரு நாள் அவர் நடந்து வந்து கொண்டிருக்கையில், சாலையில் ஒரு மனிதன் குளிரினால் நடுங்கிக் கொண்டு படுத்துக்கிடந்தான். நல்ல சமாரியன் உவமையில் ஆசாரியனும், லேவியர்களும் காயமடைந்தவனைப் பார்த்துவிட்டு, ஒதுங்கிச் சென்றது போல், இந்த மனிதனைப் பார்க்கிறவர்கள் யாவரும், விருப்பமுள்ளவர்களும், விருப்பமில்லாதவர்களும், உதவிடாமல் ஒதுங்கிப்போனார்கள். ஆனால் பரிசுத்த மார்ட்டின் வந்தபோது, ஒரு கிறிஸ்தவ விசுவாசி என்ற முறையில் தனக்குள்ள கடமையை உணர்ந்து கொண்டவராய், தான் அணிந்திருந்த மேலங்கியை தன் பட்டயத்தால் இரண்டாக வெட்டி, ஒரு பாகத்தை அப்பிச்சைக்காரனிடம் போர்த்திக் கொண்டு போனார். அந்த இராத்திரியிலே, மார்ட்டின் பிச்சைக்காரனுக்கு போர்த்தி விட்ட தனது பாதி மேலங்கியை இயேசு கிறிஸ்து போர்த்திக் கொண்டு இருக்கிறவராய், தரிசனத்தில் காட்சியளித்தார். அன்று முதல் அவரது ஊழியம் தொடங்கியது. இவரது இச்செயல், “ இந்தச் சிறியரில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை நீங்கள் எனக்கே செய்தீர்கள்'' என்ற வேத வாக்கியத்தின் நிறைவேறுதலாக இருக்கிறது. 63. எனவே அதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் யாருக்காவது எதையாவது செய்தால், அதை நீங்கள் கிறிஸ்துவுக்கே செய்கிறீர்கள். இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் யாவரும் இதை சேர்ந்து சொல்லுவோம். (சகோ. பிரன்ஹாமும், சபையாரும் சேர்ந்து ஒருமித்து இதைச் சொல்லுகிறார்கள் - ஆசி.) “ நீங்கள் மற்றவர்களுக்கு எதைச் செய்கிறீர்களோ, அதை கிறிஸ்துவுக்கே செய்கிறீர்கள்''. பிறன் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறாரோ, அது ஒரு பொருட்டல்ல. நீங்கள் உங்கள் பிறனைப் பற்றி என்ன நினைக்கிறீர்களோ, பாருங்கள், அதுவே ஆசீர்வாதத்தை கொண்டு வருகிறது. 64. அதுவே அவரது வாழ்க்கையில் நடந்து முதலாம் அற்புத மாகும். அதுவே அவரது ஊழியத்தின் துவக்கமுமாகும். அவரைப் பற்றி கூற வேண்டிய காரியங்கள் அநேகம் உண்டு. ஆனால் எனக்கு நேரமில்லை. ஏனெனில் நாளை இரவும் நீங்கள் இங்கே வந்துவிட வேண்டும் என்றும், ஒவ்வொரு இரவிலும் தவறாது நீங்கள் வந்து விட வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். எனவே உங்களை அதிக நேரம் இங்கே தாமதிக்க வைக்க விரும்பவில்லை. 65. சரி, அவரது வாழ்க்கையில் நடந்த அடுத்த அற்புதத்தை நாம் இந்த இரவில் பேசத் தெரிந்து கொண்டேன். 66. அவர் முழுவதுமாக அஞ்ஞானத்தை இடித்து கீழே தள்ளினார். மேலும் அவர் ரோமன் சபையை உறுதியுடன் எதிர்த்து நின்றார். முதல் ரோமன் சபையின் பிஷப்புகளோடு அவர் முழுவதுமாக ஒவ்வாதிருந்தார். அவர்... அவர்கள் லௌகீகமாக நடந்து கொண்டு வந்தனர். எனவே அவர்களை அவர் எதிர்த்து நின்றார். அவர் உறுதியாக அவர்களுக்கு எதிர்த்து நின்றார். அந்தப் பயங்கரமான காலத்தில் மார்ட்டின் உயிரோடிருந்தது ஒரு அற்புதமாகும். 67. ஒரு நாள் மார்ட்டின் அஞ்ஞான தேவர்களின் விக்கிரகத் தோப்பு ஒன்றை வெட்டி அழித்துக் கொண்டிருந்தார். ஒரு அஞ்ஞான பலிபீடத்தை வெட்டி கீழே சாய்த்தார். அந்த அஞ்ஞான பலிபீடத்திற்கருகில், அஞ்ஞானிகள் புனிதமென்று கருதிய ஒரு மரம் இருந்தது. அதை அவர் வீழ்த்துவதற்காக வெட்டி கொண்டிருந்தார். அப்பொழுது அதனருகில் நின்றிருந்த அஞ்ஞானிகள் ஆத்திரமடைந்து கொதித்தெழுந்தனர். அவர் அவர்களிடம் ஒரு சவால் விடுத்தார்: ' “ என்னை இந்த மரத்தில் கட்டுங்கள். பின்பு, இம்மரத்தை வெட்டி சாயுங்கள். இந்த மரத்தை வெட்டினால் எந்தப் பக்கம் சாயுமோ அந்தப் பக்கத்தில் என்னைக் கட்டிவிடுங்கள். நான் தேவனுடைய மனிதனாக இல்லையென்றால், அப்பொழுது மரமானது வெட்டப்படும் பொழுது என் பக்கமாக சாய்ந்து என்னை நசுக்கிக் கொல்லட்டும், நான் தேவனுடைய மனிதனானால், அப்பொழுது, மரம் வெட்டப்படும் போது, இயற்கையின் பிரமாணத்திற்கு எதிராக, என் தேவனால் மரமானது எதிர்திசையில் சாயும்படி சுற்றிவிடப்பட்டுவிடும்'' என்றார். சரியானதொரு சவால் இது! அதை ஏற்றுக் கொண்ட அஞ்ஞானிகள், மார்ட்டினை மரத்தோடு வைத்துக் கட்டி, அது விழும்போது, மார்ட்டின் பக்கமாக விழுந்து அவரை நசுக்கிக் கொல்லட்டும் என்று எண்ணி அதற்கேற்றவாறு, மரத்தை வெட்டினார்கள். வெட்டப்பட்ட மரமானது சாய ஆரம்பித்தபொழுது, இயற்கைக்கு மாறாக எதிர்த்திசையில் திருகிக் கொண்டு சாய்ந்து, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வர்களை நசுக்கிக் கொன்றது. தேவன் மலையின் மேல் மரத்தை திருகிவிட்டார். இது ஓர் அற்புதம், அவரது கூட்டத்தில் எப் பொழுதும் அற்புதம் நிகழ்ந்தது. 68. நான் பேச நினைத்த இன்னொரு அற்புதம் என்னவெனில்; இறந்துபோன குழந்தையின் மேல் தன் உடலைக் கிடத்தி, அதற்காக சிறிது நேரம் ஜெபித்துக் கொண்டிருந்தபோது, அக்குழந்தை உயிரோடு எழுப்பப்பட்டது. 69. மிகவும் தலைசிறந்ததாக எனக்கு விளங்கும் இன்னொரு அற்புதம் என்னவெனில்: ஒரு அரசனுக்கு முன்பாக இது நடந்தது. அவ்வரசன் தேவனுடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட மக்களை கொல்வதற்கு இருந்தான். அம்மன்னன் முதல்ரோமன் சபையின் அத்தியட்சகருடைய வலதுகரமாக விளங்கினான். முதல் ரோமச் சபையின் அத்தியட்சகர் (bishop) என்பது போப்தான். போப் என்று அழைக்கப்படுவதற்கு முன்னால், ரோமன் சபையின் அத்தியட்சகர் என்றே ஆதியில் அழைக்கப்பட்டார். அவன் பெயர் டமசுர் (Damasur) என்பதாகும். அம்மன்னன் கிறிஸ்தவர்களில் யாரையெல்லாம் பிடித்துக் கொலை செய்ய முடியுமோ, அவர்களை யெல்லாம் கொன்று குவித்தான். இம்மன்னனின் மனைவி ஒரு அஞ்ஞானியாயிருந்தாள். அவளுடைய இருதயத்தின் மேல் அந்தகாரம் குடிகொண்டிருந்தது. 70.அப்பொழுது இந்த, பரிசுத்தமாக்கப்பட்ட பரிசுத்த மார்ட்டின், கிறிஸ்தவர்களை கொல்வதை நிறுத்த வேண்டுமென அவர்களுக்காக பரிந்து பேச வந்தார். அக்கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்படக் கூடாது என்று அவர்களுக்காக பரிந்து பேசுவதற்காக இம்மன்னனை காணச் சென்றபோது, அவனுடைய மனைவி அதை அவனுக்கு அறிவித்தாள். அவன் ஒன்றும் செய்ய மறுத்துவிட்டான். ஏனெனில் இவன் இந்த போப்புக்கு வலதுகரமாக விளங்கினான்; எனவேதான் அவன் பரிசுத்த ஆவியால் நிரப்பப் பட்ட கிறிஸ்தவர்களைக் கொன்று குவித்தான். 71. ஆனால் பரிசுத்த மார்ட்டின் மன்னனை நேரில் கண்டு பேச விரும்பினார். காவலாளிகள் வாயிலில் அவரை தடுத்து நிறுத்தினார்கள். பரிசுத்த மார்ட்டின் முகங்குப்புற விழுந்து, அங்கேயே கிடந்து, உள்ளே போ என்று தேவன் தன்னிடம் சொல்லும் வரைக்கிலும் ஜெபித்துக் கொண்டிருந்தார். அவர் எழும்பிய பொழுது, அவருக்கு முன்பாக பூட்டப்பட்டிருந்த கதவுகள் தாமாகவே திறந்து கொண்டதால், அவர் அதினுள்ளே நடந்து சென்றார். 72. இது உண்மையான வரலாறு ஆகும். யாரோ கண்டவர்களெல்லாம் இதை எழுதிவிடவில்லை. அதில் ஏதாவது உண்மையைக் கண்டறியாமல் தப்பபிப்பிராயமாக எழுதி இருந்தால் அப்பொழுது, அது சபையால் சொல்லப்பட்ட விஷயம் என்று தள்ளிவிடலாம். போப்பு மார்க்க சபையினரால் எழுதப்பட்டிருந்தால் அவர்கள் இவைகளை குறிப்பிடவே மாட்டார்கள். ஆனால், வரலாறு சத்தியத்தையே குறிப்பிடுகிறது. 73. ஆக, இந்த மனிதன், பரிசுத்த மார்ட்டின், திறவுண்ட கதவுகள் வழியாக அரண்மனைக்குள் காவலாளிகளைக் கடந்து சென்று, நேரே அம்மன்னனுக்கு முன்பாகவே போய் நின்றார். தேவனுடைய ஊழியக்காரனை கனம் பண்ண அம்மன்னன் விரும்பவில்லை. அவ்விதம் செய்வது முறையானது அல்ல. எனவே அம்மன்னன் மார்ட்டினுக்கு மரியாதை செலுத்தாமல் தன் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். தேவன் அப்பொழுது என்ன செய்தார் தெரியுமா? மார்ட்டின் மன்னனோடு பேச முயன்று கொண்டிருந்தார். அரசனோ, தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு விட்டான். எனவே தேவன் தன்னுடைய ஊழியக் காரனுக்கு அந்த அஞ்ஞானி மரியாதை கொடுக்கும்படி செய்தார். அவன் உட்கார்ந்திருந்த சிங்காசனத்தில் திடீரென்று தீப்பிடித்து, அமர்ந்திருந்த அரசனின் மேல் சுட்டு விட்டதால், அது அவனை எழுந்திருக்கப் பண்ணினது. 74. இது "நைசீன் கௌன்சில்' (Nicene Council) என்ற புத்தகத்தில் எழுதப்பட்ட வேதகால வரலாறு ஆகும். அம்மன்னன் தேவனுடைய ஊழியக்காரனை கனம் பண்ண வேண்டியதாயிருந்தது. தேவன் அவனை எழுந்து நிற்கச் செய்தார். அரசன் அமர்ந்திருந்த சிங்காசனத்தை அது சுட்டெரித்துவிட்டது. அக்கினி அவருடைய சரீரத்திலிருந்து புறப்பட்டு இருக்கையின் அடிப்பாகம் தீப்பிடித்துக் கொண்டதால், உட்கார்ந்திருந்த மன்னன் குதித்து எழுந்து நிற்க வேண்டியதாயிற்று. தேவனுக்கென்று ஒரு வழியுண்டு, அவ்வழியில் தான் அவர் செயல்புரிவார் என்று அறிந்து கொள்ளுங்கள். “ இந்தக் கல்லுகளினாலே தேவன் ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்'' அதே தேவன் இன்று இரவில் நம் மத்தியிலும் வாசம் பண்ணுகிறார் . அதே தேவன் தான். சரி. 75. இன்னொரு அற்புதத்தைப் பற்றி சொல்லிவிட்டு அத்தோடு முடித்துக் கொள்கிறேன். என்னிடம் இன்னும் சில உள்ளன. இந்த ஒரு குறிப்பிட்ட அற்புதமானது எனக்கு மிகவும் பிடித்தமானது ஆகும். ஒரு நாள் மார்ட்டின் தன் சபையின் ஜனங்களுக்காக செய்தி கொடுக்க தேவ சமூகத்தில் காத்திருந்து தன்னுடைய படிக்கும் அறையில் ஜெபித்துக் கொண்டு இருந்தார். 76. மார்ட்டின் ஒரு பெரிய மனிதனாயிருந்தார். அவர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட இந்த சபையை, வழி நடத்தி... ஓ அவர் ஒரு... அவர்கள் யாவரும் ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கும் படி செய்தார்; தன் முழு சபையாரும் அதைப் பெற்றிருக்கச் செய்தார். தேசம் முழுவதிலும் கிறிஸ்தவர்கள் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்கள். 77. பாருங்கள், தேவன் தன் தூதனிடம் பேசுகிறார். தூதன் சபையின் ஜனங்களிடம் பேசுகிறார். அப்பொழுது அது தான் நடக்கிறது. பாருங்கள். அவர் ஜனங்களையும், தூதனையும் தேவனுக்குள்ளாக ஒரேவிதமாக வைக்கிறார். பாருங்கள், அந்த குழுவினரின் பரிசுத்த ஆவியானவர் நிரம்பி வழிகிறார். 78. கிறிஸ்தவர்களை அவர்கள் அநேக வேளைகளில் கொலை செய்த போது, அவர்களிலிருந்து தனியாக அவர்களது ஊழியக்காரரை நிறுத்தி, ஒரே நேரத்தில் அவர்கள் அனைவரையும் கொன்றார்கள். என்னென்ன கொடுமை களையெல்லாம் அவர்கள் கிறிஸ்தவர் களுக்குச் செய்தார்கள்! அவர்களை சுட்டெரித்தனர். மரக்கட்டைகளில் அவர்களை ஆணியறைந்து, காட்டு நாய்களை அவிழ்த்து விட்டு அவர்களை பின்புறப் பகுதியிலிருந்து கடித்து மாம்சத்தை தின்னும் படி செய்தனர். அவர்கள் மரிக்கும் முன்னரே அவர்களது குடல்கள் வெளியே இழுக்கப்பட்டு விடுமாறும் செய்தனர். பெண்களை எடுத்து, வலது மார்பகத்தை அறுத்து விட்டு, அப்படியே நின்றபடியே இருக்க வைத்து இதயம் துடிதுடிக்க, இரத்தம் சொட்ட சொட்ட, பதைபதைக்க அப்படியே தலைகீழாக விழுந்து மரித்துப் போகும்படி செய்தனர். நிறைகர்ப்பிணிகளின் வயிற்றைக் கீறி, குழந்தைகளை வெளியே எடுத்து, தாய்மார்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கச் செய்து, அந்த சிசுக்களை பன்றிகளுக்கு இரையாகக் கொடுத்தார்கள். இவ்வாறு எல்லா விதமான கொடுமைகளையும் அவர்களுக்கு இழைத்தார்கள். 79. கிறிஸ்தவத்தை பின்பற்றுவதாக அறிக்கை செய்கிற மக்கள் இவ்விதமான கொடுமைகளையெல்லாம் செய்வார்கள் என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்க்க மாட்டீர்கள். ஆனால் கவனியுங்கள்; “ உங்களைக் கொலை செய்கிறவன் தான் தேவனுக்கு தொண்டு செய்கிறேன் என்று நினைக்குங் காலம் வரும்'' என்று வேதத்தில் இயேசு கூறினாரே. இதைச் சொன்ன அதே இயேசுவானவர், மீண்டும் கடைசிக் காலத்தில் இப்படியிருக்கும் என அதை ஆவியினால் முன்னுரைத்திருக்கிறார். அது வந்தாக வேண்டும் இந்த மற்ற காரியங்கள் வேதத்தோடு பூரணமாக சரியாக ஒத்து இருக்கையில், இது வரலாற்றின் மூலமாக மிகவும் சரியாக வேத வாக்கியங் களோடு பொருந்துகிறதா இல்லையா என்பதைக் கவனித்துப் பாருங்கள். இவ்வாறு நடக்கும் என்று தேவன் கூறினார். அது அவ்வாறே நடைபெற்றது என்பதைக் கூற வரலாறு இங்கே உள்ளது. பாருங்கள், மிகவும் சரியாக இருந்திருக்கிறது. அப்படியானால், நாம் வாழ்கிற இந்த லவோதிக்கேயா சபைக்காலத்தில் அதற்கெதிராக உரைக்கப்பட்டுள்ள ஆபத்துகள் மற்றும் காரியங்களைப் பற்றி நாம் என்ன செய்யப் போகிறோம்? 80. ஒரு நாள் மார்ட்டின் அறையில் ஜெபித்துக் கொண்டிருக் கையில், சபையார் காத்திருந்தனர். அச்சமயத்தில் ஒரு பிச்சைக்காரன் வந்து அவரது கதவைத் தட்டினான். அவர் ஜெபிக்கிற அலுவலாக இருந்த போதிலும் அவனுக்கு கதவைத் திறந்தார். அப்பிச்சைக்காரன் தனக்கு தன் நிர்வாணத்தை மறைக்கவும், குளிருக்கு உடுத்தவும், ஒரு ஆடை வேண்டும் என்று வேண்டினான். மார்ட்டின் அவனை தலைமை உதவிக்காரரிடம் (Chief Deacon) அனுப்பினார். தலைமை உதவிக்காரர் அப்பிச்சைக் காரனிடம் எரிச்சலைக் காண்பித்து, அவனை வெளியே துரத்தினார். அப்பிச்சைக்காரன் மீண்டும் பரிசுத்த மார்ட்டினிடமே திரும்பி வந்து, உதவிக்காரர் தன்னை துரத்தி விட்டதைப் பற்றிக் கூறினான். 81. அந்த சமயத்தில் தலைமை உதவிக்காரர் அங்கு வந்து, மார்ட்டினிடம், “ உங்கள் சபையார் உங்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீர் அவர்களை காக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்களே!'' என்று சற்று காட்டமாகக் கூறினார். ஆனால் மார்ட்டின் ஜெபத்தில் தரித்திருந்தார். தேவனால் நடத்தப்பட்டு, பிரசங்கிக்க அவர் புறப்படுகிற வரைக்கிலும், அவர் ஜெபத்தில் தரித்திருப்பதே நல்லது. 82. இந்தப் பிச்சைக்காரன் மீண்டும் மார்ட்டினிடம் வந்தபோது, பரிசுத்த மார்ட்டின் தன்னுடைய சொந்த நல்ல ஆடையை கழற்றி அப்பிச்சைக்காரனுக்கு கொடுத்துவிட்டு, தலைமை உதவிக்காரரை அனுப்பி தனக்கு இன்னொரு ஆடையைக் கொண்டு வரும்படி சொன்னார். ஆகவே தலைமை உதவிக்காரர் வேறு வழியில்லாமல், ஒரு ஆடையைக் கொண்டு வந்து, அதை பரிசுத்த மார்ட்டினுக்கு அணிவித்தார். மார்ட்டின் தான் கொடுத்து விட்ட தன்னுடைய நல்ல உடைக்குப் பதிலாக, அதைவிட சாதாரண ஒரு உடையையே உடுத்திக் கொண்டு மக்களின் முன்னால் வந்தார். 83. இது உணர்த்துவது என்னவெனில், உங்களிடத்திலிருக்கும் மிக நல்லதையே கொடுங்கள். உங்களுடைய ஜீவனைக் கொடுங்கள். உங்களுடைய நேரத்தைக் கொடுங்கள். உங்களுடைய எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்கு கொடுங்கள் என்பதைத் தான் கிறிஸ்துவில் ஜீவித்த அதே ஆவியானவர் உங்களிலும் ஜீவிக்கிறார். அது உங்களுடைய அயலகத்தாரிடமும் நீங்கள் இடைபடுகிற மக்களிடமும் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணவேண்டும். அப்பொழுது கிறிஸ்துவைப் போலவே உங்கள் வாழ்க்கை அமைந்து, கிறிஸ்து செய்த அதே கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். 84. கடைசியாக, நிழல்களில் கிடத்தப்பட்டிருந்த மக்கள் சுகமடைந்தனர். அவர்களைச் சுற்றி தேவனுடைய அன்பின் வல்லமை அவ்வளவாய் சூழ்ந்திருந்தது. சபையோர் கூறினார்கள். “ பரிசுத்த மார்ட்டின் அந்த சாதாரண அங்கியை உடுத்திக் கொண்டு வந்து பிரசங்கித்த போது, அவரைச் சுற்றிலும் ஒரு ஒளி பிரகாசிப்பதைக் கண்டோம்'' என்று. பார்த்தீர்களா? பாருங்கள், அவர் சரியான காரியத்தைச் செய்தபடியினால் இவ்வாறு நடந்தது. 85. எப்பொழுதும் சரியானதையே செய்யுங்கள். தேவனுக்கென உள்ள எங்களுடைய கடமையைச் சரிவர செய்யுங்கள். சரியானதையே சிந்தியுங்கள். உங்களுக்கென உள்ள கடமை அதுவே. நீங்கள் பிழையற்ற விதத்தில் இயங்க வேண்டும். 86. இப்பொழுது இதை நாம் ஆரம்பிக்கப் போகிறோம். இதன் பேரில் வேதபூர்வமான விளக்கங்களை நாம் பெறுவோம். இங்கே இது மிகவும் வலுவான காரியமாக உள்ளது. “ பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்ன வெனில், இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது'' வெளி.2:12 87. இன்றிரவில் அவர் மீண்டும் தன்னுடைய தெய்வீகத்தைக் குறித்து தெரியப்படுத்த கூறுவதை நீங்கள் கவனிக்க வேண்டு மென்று நான் விரும்புகிறேன். ஒவ்வொரு சபைக் காலத்திலும், அவருடைய மகிமையான நிலை விவரிக்கப்பட்டுள்ளது. ஏழு நட்சத்திரங்களைக் கையில் ஏந்திக் கொண்டிருந்தவர் இந்த சபைக் காலத்தில், “ இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர்'' என்று கூறப்பட்டுள்ளதைப் பாருங்கள். “ வெண்கலம் போன்ற பாதங்களை உடையவர்'', “ அக்கினி ஜுவாலையைப் போன்ற கண்கள்'' இவ்வாறெல்லாம் அவர் தன்னுடைய தேவத்துவத்தைப் பற்றி தெரியப்படுத்துகிறார். 88. “ இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர்'' என்ற வசனத்தில், தேவத்துவத்தைப் பற்றிய விஷயம் எங்கே இருக்கிறது?'' என்று நீங்கள் கேட்கலாம். 89. “ பட்டயம்'' என்பது வார்த்தையைக் குறிக்கும். நாம் ஆரம்பத்தில், அவருடைய தெய்வீகத்தைக் குறித்து படிக்கையில் எபிரேயர் 4ம் அதிகாரத்தில் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைப் பற்றிப் பார்த்தோம். “ தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும் இருக்கிறது'' என்று எபி.4:12ல் பார்த்தோம். அதுவே தேவனுடைய வார்த்தை. அப்படித்தானே? இப்பொழுது இதற்கான வியாக்கியானங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். "வார்த்தை'யைப் பற்றி யோவான் எழுதின சுவிசேஷம் 1ம் அதிகாரத்தில் பார்ப்போம். “ ஆதியிலே வார்த்தை இருந்தது'' அது தான் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தது. அது சிருஷ்டித்தது. அது சரிதானே? “ அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது'' “ அந்த வார்த்தையாகிய தேவன் மாம்சமாகி நம் மத்தியில் வாசம் பண்ணினார்.'' அது சரிதானே? அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள் வாசம் பண்ணினார்'' 90.ஆதியில் இருந்தவர் இதோ இங்கே நின்று கொண்டிருக்கிறார். “ நான் தான் தேவனுடைய வார்த்தை என்பதை இந்த பெர்கமு சபையின் தூதனுக்குச் சொல்லுங்கள்'' என்கிறார். ஓ, நாம் அவரை வெளிப்படுத்தின விசேஷத்தில், இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தை உடுத்தியவராய், சிரசில் கிரீடம் சூட்டியவராய் வெள்ளைக் குதிரையின் மேல் ஏறினவராய், அவரது தொடையில் “ தேவனுடைய வார்த்தை'' என்ற நாமம் எழுதப்பட்டவராய் வருகிறதை காண்கிறோம். ஓ, நான் அதை விரும்புகிறேன். அவரே வார்த்தை, அவரே தேவனுடைய வார்த்தை. அவர் தானே வார்த்தை என்பதை, ஆதியில் இருந்த இந்த தேவன் தன்னைப்பற்றி தெரியப்படுத்துவதை நாம் காண்கிறோம். 91. அவர் ஜீவிக்கிற வார்த்தையானவர் என்றால், அப்பொழுது இந்த வேதாகமத்தில் எழுதப்பட்ட வார்த்தை அவரது பாகமாகும். நீங்கள் இந்த எழுதப்பட்ட வார்த்தையை அவருக்குள்ளாக ஏற்றுக் கொள்வீர்களானால், அப்பொழுது வார்த்தையானவர் விசுவாசத்தினால் உங்களுக்கு வருகிறார் (எழுதப்பட்ட வார்த்தை ஜீவிக்கிற வார்த்தையாக உங்களுக்குள் வாசம் பண்ணுகிறது). ஓ! அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். வார்த்தையானது உங்களுக்குள் வருகிறது. இப்பொழுது உடனே பரிசுத்த ஆவியானவரால் அது உயிர்ப்பிக்கப்பட்டு, ஒவ்வொரு வாக்குத்தத்தமும் உங்களுக்கு உண்மையாக ஆகிறது. இந்த மலையைப் பார்த்து “ பெயர்ந்து போ'' என்று சொல்லி, உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அது பெயர்ந்து போகும்'' அது என்ன? ஏனெனில், தெய்வத்துவம் உள்ள நீங்கள் இப்பொழுது பேசுகிறீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? வேதம் அவ்வாறு கூறுகிறது. நீங்கள் சந்தேகப்படாமலிருந்தால், நீங்கள் உரைப்பது நிறைவேறியே தீரும். உங்களிலிருந்து லௌகீகமான காரியங்கள் அனைத்தையும் முழுவதுமாக கழித்து வெளியே தள்ளி விட்டால், அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் ஒரு முழுமையான தேவனுடைய குமாரனும், தேவனுடைய குமாரத்தியுமாக ஆவீர்கள் (உள்ளே லௌகீகம் இல்லை, அல்லது ஆக்கினை இல்லை, சந்தேகம் இல்லை). அந்தவிதநிலை என்னவாயிருக்கும்? இனி நீங்களல்ல, உங்களிலுள்ள தேவன் என்ற நிலை உண்டாகும். அப்பொழுது அவருடைய வார்த்தையை எடுத்துக் கொண்டு, அது ஒரு வாக்குத்தத்தமாக இருக்கிறது. “ பிதாவே, இது உம்முடைய வாக்குத்தத்தம்'' என்று கூறுகையில், ஏதோ ஒரு அசைவு உண்டாக வேண்டும். பாருங்கள்? பாருங்கள்? 92. அந்த விவகாரம் எப்படியிருக்க வேண்டும் என்று தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துகிற வரையிலும், நீங்கள் அதைச் செய்ய முடியாது. பாருங்கள்? அது என்னவிதமான விவகாரம் என்று வெளிப்படுத்தப்பட்டு அறியும் பொழுது, அப்பொழுது நீங்கள் இயேசுவைப் போல் உரைக்க முடியும். அவரே வார்த்தையாயிருக்கிறார் அல்லவா? ஆனால் இயேசுவாகிய மனிதன், தேவன் வாசம் செய்த அக்கூடாரமாகிய அவர், “ பிதா எனக்குக் காண்பிக்கிறதெதுவோ அதையே நான் செய்கிறேன்'' என்று கூறினார். 93.உங்களுக்கு வார்த்தையானது முதலில் பிரத்தியட்சமாகாமல் இருக்கிற வரையிலும் நீங்கள் வார்த்தையைப் பெற்றிருக்க வில்லை. நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? “ அற்புதங்களின் காலம் கடந்து போய்விட்டது'' என்று மக்களில் சிலர் கூறுவது ஆச்சரியமல்ல, ஏனெனில் அவர்களுக்கு வார்த்தையானது பிரத்தியட்சப் படவில்லை. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உள்ள ஞானஸ்நானத்தைப் பற்றிய வெளிப்பாட்டை அவர்களால் கண்டு கொள்ள முடியாதது ஆச்சரியமல்ல, ஏனெனில் வார்த்தையானது அவர்களுக்கு இன்னமும் பிரத்தியட்சப்படவில்லை. வேறுவிதமாக மக்கள் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டார்கள் என்பதற்கு ஒரு வேதவாக்கியம் கூட அவர்களுக்கு இல்லை. 94. பரிசுத்த ஆவியைப் பொறுத்தமட்டில், வேதம் கூறுகிற தென்னவெனில், “ பரிசுத்த ஆவியினாலேயேயன்றி, ஒருவனும் இயேசுவை கிறிஸ்து என்று அழைக்க முடியாது'' என்று அப்படியிருக்க, மக்கள் பரிசுத்த ஆவி சரியென்று விசுவாசிப்பதே இல்லை. பாருங்கள்? அவர்களுக்கு அது அருளப்படவில்லை. ஏனெனில் இயேசு கூறினார்: “ என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுத்தவை யாவும் (கடந்த காலம்) என்னிடத்தில் வரும்''. ஓ இது அழகாக இருக்கவில்லையா? “ என் பிதா எனக்குத் தந்தவர்கள் யாவரும் என்னிடத்தில் வருவார்கள். கேட்டின் மகன் கெட்டுப் போனானேயல்லாமல் வேறு எவரும் கெட்டுப் போவதில்லை. நான்... (கேட்டின் மகன் அதற்காகவே பிறந்தான்). என் பிதா எனக்குத் தந்தவர்களை நான் கடைசி நாளில் எழுப்புவேன்'' என்றார். 95. ஓ, என்னே! உலகத்தோற்றத்திற்கு முன்னரே, அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியின் ஜீவபுஸ்தகத்தில் நமது பெயர்கள் எழுதப்பட்டுள்ளதை அங்கே காண்கிறோம். ஓ, இது அழகாக இல்லையா? நாம் எவ்வாறு சந்தேகப்பட முடியும்? 96. ஓ தேவனே, எங்கள் நடுவிலிருந்து சந்தேகத்தை எடுத்துப் போடும். பெலவீனமான எங்களுடைய மனுஷீக இருதயங்களை, கொஞ்சம் கூட அங்கே சந்தேகம் என்பதே இல்லாத அளவுக்கு, விருத்தசேதனம் செய்தருளும். அதுவே என்னுடைய வேண்டுதலாயிருக்கிறது. எல்லா சந்தேகங்களையும் நீக்கிப் போடும், கர்த்தாவே. நான் இனிமையானவனாக, பணிவுள்ளவனாக, தேவனுடைய ஒரு ஆட்டுக்குட்டியாக இப்பூமியில் நடமாட எனக்கு அருள்புரியும். அவர் நடந்தது போல் நானும் நடக்கட்டும். அவர் பேசுகிறது போல் நானும் பேசட்டும். அவரது நோக்கங்களைப் போலவே எனது நோக்கங்களும் இருக்கட்டும். மற்றவர்கள் என்னில் இயேசுவை காணட்டும். நான் என்னையே இழந்து, அதை உம்மில் நான் காணட்டும், கர்த்தாவே. நான் என்னையே முற்றிலுமாக இழந்து போய், அதை நான் கிறிஸ்துவுக்குள்ளாக காணச் செய்யும். சந்தேகம் என்பதற்கு கொஞ்சம் கூட இடமேயில்லாதபடி, அவர் கூறுவதை விசுவாசிக்கும்படி என்னை கிறிஸ்துவுக்குள்ளாக முழுவதுமாக மறைத்துக் கொள்ளும். 97. இங்கிருந்து புறப்பட்டுச் சென்று, நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு, “ தேவனுக்கு மகிமை! அல்லேலூயா! தேவனுக்கு ஸ்தோத்திரம்! நான் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்த்தீர்களா? தேவனுக்கு மகிமை!'' என்று கூறாதிருங்கள். நீங்கள் இன்னும் அதைப் பெறவில்லை என்பதைத் தான் அது காண்பிக்கிறது. அவர் அவ்விதமாகச் செய்யவில்லை. அவர் தன் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு, “ நான் என்ன செய்வேன் தெரியுமா? ஆம் ஐயா, நான் தான் குமாரன்'' என்று கூறவில்லை. அவர் எதற்கும் புகழ்ச்சியை எடுத்துக் கொள்ளவில்லை. அவர் எல்லாப் புகழையும் தேவனுக்கே கொடுத்தார். அவர் மிகவும் பணிவுடனும், இனிமையாகவும் நடந்து கொண்டார். மக்கள் அவரைச் சூழ எப்பொழுதும் இருக்க விரும்புகிற அளவுக்கு, அவரைச் சுற்றி அவ்வளவு இனிமையான சூழ்நிலை இருந்தது. அவர் தன் சத்துருக்களை மிகவும் நேசித்தார். அவர்களுக்காக அடிக்கடி ஜெபித்தார். அவர் செய்தது போல நாம் மற்றவர்களுக்கு செய்வதற்காக, உங்களுக்கும் எனக்கும் அவர் முன்மாதிரியாக இருக்கிறார். 98. இப்பொழுது நாம் பெர்கமு சபையைப் பற்றிய இரண்டாவது வசனமாகிய 13ம் வசனத்தைப் பார்ப்போம். “ உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறதையும்... என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் நான் அறிந்திருக்கிறேன்." வெளி.2:13 99. சாத்தானின் சிங்காசனம் இருக்கிற இடத்தில் அவர்கள் குடியிருந்த போதிலும், அவர்கள் இயேசுவின் நாமத்தை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். “ என்னைப் பற்றும் விசுவாசத்தை மறுதலியாமலிருக்கிறதை'' என்பதைப் பாருங்கள். என்னவிதமான விசுவாசத்தை தேவன் அவர்களுக்குக் கொடுத்தார்? ஆதியில் உள்ள பெந்தெகொஸ்தேயின் விசுவாசத்தையே கொடுத்தார். அக்காலத்தில் நிக்கொலாய் மதஸ்தரின் விசுவாசம் உடையதாயிருந்தது. அதினால் ஒரு ஸ்தாபன சபையானது எழுப்பப்பட்டுக் கொண்டு இருந்தது. ஸ்தாபனக் கட்டுப்பாட்டுடன் ஒரு சபையானது உருவாகியது. ஆனால் உண்மையான சபையைப் பார்த்து தேவன், “ நீ அவர்களைவிட்டு விலகி இருக்கிறாய். நான் அவர்களுடைய கிரியைகளை வெறுப்பதுபோல் நீயும் வெறுக்கிறாய், என்னுடைய நாமத்தை நீ மறுதலிக்கவில்லை. அவர்களுடைய அந்த கோட்பாடுகளின் பின்னால் நீ சென்றுவிடவில்லை. நீ ஒழுங்கானபடி என்னுடைய நாமத்திற்காக உறுதியாக நின்றாய், ஆதியில் இருந்தது போல, இன்னமும் நீ அந்த விசுவாசத்தைக் கொண்டவளாய் இருக்கிறாய்'' என்று கூறினார். ஓ, நான் அதை விரும்புகிறேன். “ சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.'' வெளி.2:13 100. “ சாத்தானின் சிங்காசனம்'', இந்த இடத்தில் நான் ஒரு நிமிடம் நிறுத்தப் போகிறேன். இந்த விஷயங்களின் பேரில் நாம் நமது முழுக் கவனத்தையும் செலுத்தி இதை ஆராய்வோம். நீங்கள் அதை கிரகித்துக் கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்பொழுது நீங்கள் அதைப் பற்றி நிச்சயமுடையவர் களாயிருங்கள். “ சாத்தானின் சிங்காசனம்''. சாத்தானின் சிங்காசனம் எங்கேயுள்ளதென்று தேவன் ஆதியாகமத்தில் அறிவித்தார். அங்கே அது பாபிலோனிலிருந்தது. அது எப்பொழுதும் சாத்தானின் சிங்காசனமிருந்த இடமாக இருந்தது. மேலும் வெளிப்படுத்தின விசேஷத்திலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது. ஆனால், பாபிலோனானது, தன்னை “ அஞ்ஞான மார்க்கம்'' என்றிருப்பதை “ போப்பு மார்க்கம்'' என்று மாற்றிக் கொண்டு விட்டது என்பதை நீங்கள் காணலாம். 101. சாத்தானுடைய சிங்காசனம் பெர்கமுவில் ஒரு பெரிய ஒன்றை ஸ்தாபிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக இது நடந்தது. பாபிலோனில், பெர்சியர்கள் மேற்கொள்ளும் முன், இருந்த கடைசி மன்னனின் பெயர் அட்டாலஸ் என்பதாகும். கல்தேய மன்னர்கள் இராஜாவும் ஆசாரியனுமாக இரு பதவிகளை வகித்தவர்களாக இருந்தார்கள். பெர்சியர்கள் படையெடுத்து, பாபிலோனைக் கைப்பற்றி, அட்டாலஸ் என்ற பாபிலோனிய மன்னனை துரத்தியபோது, அவன் பாபிலோனிலிருந்து பெர்கமுவுக்கு ஓடி வந்தான். ஆகவே பாபிலோனிய குருக்களாட்சியானது தனது சிங்காசனத்தை பாபிலோனிலிருந்து இப்பொழுது பெர்கமுவுக்கு குடிபெயர்ந்து விட்டு அட்டாலஸ் என்ற அந்த பாபிலோனிய கல்தேய மன்னன், அவர்களுக்கு இராஜா - மதகுரு என்ற ஸ்தானத்தை வகித்தான், பெர்சியர்கள் வந்து பாபிலோனை கைப்பற்றிய போது, அங்கிருந்து கல்தேயர்களும், அவர்களின் அரசன் அட்டலாஸும் துரத்துண்டு ஓடிப் போய் பெர்கமுவில் தங்கள் சிங்காசனத்தை ஸ்தாபித்தார்கள். “ சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும்''. இப்பொழுது புரிந்துகொண்டீர்களா? 102. “ சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் நீ குடி யிருக்கிறதையும்" என்று ஆண்டவர் கூறிய பொழுது, வரலாற்றுரீதியாக இவ்வசனத்தின் நிறைவேறுதலாக எங்கே, என்ன நடந்தது என்பதைக் காணவே நான் சபைச் சரித்திரத்திற்குள் நுழைந்து இவ்வரலாற்று குறிப்புக்களை கண்டெடுத்தேன். 103. “ சாத்தானின் சிங்காசனம்'' என்ற அக்குறிப்பிட்ட இடம் எங்கே இருக்க முடியும் என்று நான் எனக்குள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது தான் நான், இந்தப் பாபிலோனின் பெரிய அரசன் தன் நாட்டை வென்றெடுத்து பெர்சியர்களுக்கு முன்பாக துரத்துண்டு ஓடிப்போன பொழுது (இது தானியேலின் தரிசனத்தின்படி நடந்த ஒரு காரியமாகும்) அவன் ரோமாபுரியிலுள்ள இந்த கரமாகிய பெர்கமுவுக்கு வந்து, அங்கே தனது தலைமைப் பீடத்தை ஏற்படுத்திக் கொண்டான். சாத்தான் தனது தலைமைப் பீடத்தை பாபிலோனிலிருந்து பெர்கமுவுக்கு மாற்றிக் கொண்டான். அங்கே தானே (எதிர்காலத்து) புதிய பாபிலோனை சாத்தான் ஸ்தாபிக்கப் போகிறான். நாம் இப்பொழுது எங்கே இருக்கிறோம் என்பதற்கான ஒரு பின்னணியை பெற்றுக் கொண்டு விட்டோம். 104. அந்தியப்பா என்ற இந்த அருமையான சகோதரனை அங்கே தான் அவன் கொன்றான். 105. பின்பு அவன் தன்னுடைய செயல்முறையை மாற்றிக் கொண்டான். முதலில் அவன் கிறிஸ்தவர்களை உபத்திரவப் படுத்துகிறவனாக இருந்தான். ஓ, கிறிஸ்தவ வழியை அவன் எவ் வளவாய் வெறுத்தான். அவன் தானே ஒரு மதகுரு - இராஜாவாக இருந்தான். சுபாவத்தில் விக்கிரக தேவர்களை வணங்கும் தேவனற்ற அஞ்ஞானியாக இருந்தான். பிறகு அவன் தன்னுடைய போக்கை மாற்றிக் கொண்டு கான்ஸ்டன்டைன் என்ற அரசனுடன் இணைந்து கொண்டு கிரியை செய்ய ஆரம்பித்தான். 106. கான்ஸ்டன்டைன் அரசன் எப்பொழுதும் நைட்ஸ் ஆஃப் கொலம்பஸ் (Knights of Colombus) என்ற ஸ்தாபனத்தின் மூலகர்த்தா என்று கருதப்படுகிறான் (இப்பொழுது அது முழுவதும் போப்பு மார்க்கத்தின் ஆளுகைக்குட்பட்டிருக்கிறது), அது தான் அந்த இரத்தம் சிந்தத்தக்கதான ஒரு பிரதிக்ஞையைக் கொடுத்தது. நான் பயபக்தியோடும், மரியாதையோடும் சொல்லுவது என்னவெனில், வரலாற்றில் நான் படித்த வரைக்கிலும், எனக்குத் தெரிந்தவரை, கான்ஸ்டன்டைன் ஒருபொழுதும் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்ட மனிதன் அல்லவே அல்ல. 107. ஓர் இரவில் அவன் ஒரு சொப்பனங் கண்டான். அதில் அவன் ஒரு சிலுவையை கண்டான். இதன் காரணமாக அவன் யுத்தத்தில் வெற்றி பெற்றுவிடுவான் எனக் கூறினான். அவன் கிறிஸ்தவர்களிடம், தான் யுத்தத்தில் ஜெயிப்பதற்காக ஜெபித்துக் கொள்ளும்படியும், தான் ஜெயித்தால் தானே கிறிஸ்தவனாக ஆகி விடுவதாகவும், கிறிஸ்தவர்களுக்கு அதுவரை கொடுக்கப்பட்டு வந்த உபத்திரவங்களை நிறுத்தி அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதாகவும் வாக்குறுதி கொடுத்திருந்தான். அவன் அன்றிரவில் படுத்து நித்திரை செய்து சொப்பனங் கண்ட அந்த பாலத்தின் கரையிலிருந்து எதிர்ப் பக்கத்து முனையில் நான் நின்று பார்த்தேன். அவன் அங்கு சொப்பனங்கண்டு விழித்து, எழுந்து, தன் கேடயத்திலும், தனது வீரர்களின் கேடயங்களிலும் வெண்மை நிறத்தில் சிலுவையை வரைந்தான். அங்கே தான் நைட்ஸ் ஆஃப் கொலம்பஸ் என்ற நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. அது ரோமன் கத்தோலிக்க ஆதிக்கத்திற்குப்பட்டிருக்கிறது. ஆனால் அவன் ஒருபோதும் பக்தி மார்க்கத்துக்குகந்த எந்தவொரு காரியமும் செய்யவில்லை. அவன் மார்க்க சம்மந்தமாக செய்ததாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரேயொரு காரியம் பரிசுத்த சோஃபியா ஆலயக் கட்டிடத்தின் மேல் ஒரு சிலுவையைப் பொறித்ததே. ஆனால் அவன் ஒரு அரசியல்வாதியாக இருந்தான். அவன் ரோமாபுரியில் அரசனாக இருந்தபொழுது, அவனும் இந்த அஞ்ஞான மதகுருவும் சேர்ந்து கொண்டு, குருக்களாட்சியின் பட்சமாய் சாய்ந்து கொண்ட கிறிஸ்தவ மார்க்கத்தையுடைய நிக்கொலாய் மதஸ்தர் என்றழைக்கப்பட்டு அவ்வேளையில் வெது வெதுப்பாய் இருந்த சபையை ஒருங்கிணைத்து உருவாக்கினார்கள். நாம் தானே, எபேசு மற்றும் சிமிர்னா சபைக் காலங்களில் நிக்கொலாய் மதஸ்தரைப் பற்றி ஏற்கனவே படித்தோம். 108. நிக்கொலாய் மதஸ்தருடைய “ கிரியைகளாக' முந்தின சபைக் காலங்களில் விளங்கியவை. இப்பொழுது இச்சபை காலத்தில் நிக்கொலாய் மதஸ்தருடைய 'போதகமாக' ஆகி விட்டது. ஆதியில் அது 'கிரியைகள்' என்றிருந்தது. அங்கே அவர்கள் உள்ளே நுழைய முயற்சி செய்தார்கள். ஆனால் இங்கே இந்த மூன்றாம் சபையின் காலத்தில் அது “ போதகமாக'' ஆகிவிட்டது. இப்பொழுது அவர்களுக்கு தலைமை மதகுரு மற்றும் பிரபலமானவர்களெல்லாம் உண்டு. இந்த சபைக்காலத்தில் தலைமை மத குருவை போப் என்று இன்னமும் அழைக்கவில்லை. ஆனால் அவர்கள் பிரதான அத்தியட்சகர் (Archbishop) மற்றும் பல கீர்த்தி வாய்ந்த பட்டங்களை சூட்டி அழைத்தார்கள். அவர்களுடைய உபதேசமானது சம்பிரதாய ரீதியில் உள்ளதாக இருந்தது. 109. அவர்கள் ஆவியினால் நிறைந்த, பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்பட்ட சபையினைவிட்டு தூரமாய் விலகிக் கொண்டே போனார்கள். ஆவியினால் நிறைந்திருந்த சபையை அவர்கள் அப்படியே சிறு கூட்டமாக போக விட்டுவிட்டார்கள். அவர்கள், இவர்களைப் போல் பெரிய ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொள்ள ஒத்துக் கொள்ளாததால், அவர்களை “ மததுரோகிகள்'' என்று அழைத்தனர். ஆனால் உண்மையான சபையோ, பரிசுத்த ஆவியின் வல்லமையின் ஆளுகை வரம்புக்குள் சுயாதீனராக இருக்கவே விரும்பினர். ஏனெனில் கிறிஸ்து, அவர்களுக்கு இராஜா என்றும், அவர்களோடு இருப்பேன் என்றும் வாக்குத்தத்தம் செய்திருந்தார். ஓ! அவரே அவர்களின் இராஜா. 110. உண்மையான சபையானது ஒரு போதும் தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. தான் ஒரு குழுவினரால் ஆளப்படவோ... இப்பொழுது நீங்கள் அவர்களை எப்படி அழைக் கிறீர்களோ எனக்குத் தெரியாது. அவர்கள் கார்டினல்கள், அத்தியட்சர்கள், போப்புகள், பிழையே செய்ய முடியாதவர்கள் என்பதாக இருக்கிறார்கள். பிழையே செய்ய முடியாதவர் ஒரேயொருவர் தான் உண்டு என்று நாம் விசுவாசிக்கிறோம். அவர் நமது இராஜாவாக இருக்கிறார்; இப்பொழுது பரிசுத்த ஆவியின் ரூபத்தில் நம்மோடு இருக்கிற இயேசு கிறிஸ்து தாமே அவர். தேவன் நம்மில் இருக்கிறார். நமது மத்தியில் வாசமாயிருக்கிறார். நம்மை வழிநடத்திச் செல்லுகிறார். அவர் நம்மை ஜீவத் தண்ணீரண்டையில் கொண்டுபோய் விடுகிறார். அவர் தம்மை யாரென்று வெளிப்படுத்துகிறார். ஆதிகாலத்து பரிசுத்தர்களுக்கும், இரத்த சாட்சிகளுக்கும், தாமே சிருஷ்டிப்பின் தேவனாகிய கர்த்தர் என்றும், பிணியாளிகளை சொஸ்தமாக்குகிறவர், மரித்தோரை உயிரோடு எழுப்புகிறவர், தரிசனங்களை காண்பிக்கிறவர், பிசாசுகளைத் துரத்துபவர் என்று காண்பித்துக் கொண்டிருந்தது போல, நமக்கும் காண்பித்துக் கொண்டிருக்கிறார். 111. வரலாற்றில் எந்தவொரு இடத்திலும், நிக்கொலாய் மதஸ்தரின் சபை அத்தியட்சகர்கள் எவரும், எந்த ஒரு சமயத்திலும், எங்காவது மரித்தோரை உயிரோடு எழுப்பியதுண்டா என்ற சான்றை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஏனெனில் உயிர்த்தெழுந்த கிறிஸ்து அவர்களின் இருதயத்தில் வாசம் பண்ணவில்லை. இந்த நிக்கொலாய் மதஸ்தரின் சபை மதகுருக்கள் தான், பின்னால் ரோமன் சபையின் போப்பின் குருக்களாட்சி முறையை ஏற்படுத்தினார்கள். அவர்கள் தங்களுடைய வழிகளில் தங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டு, ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்குவதற்காக விலகிப் போய், அதின் மூலம் தங்களுடைய சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப் போட்டார்கள். ஆனால் ஜீவனுள்ள தேவனுடைய சபையோ தன்னில் கிறிஸ்துவின் வல்லமையைப் பெற்று இருந்தது. ஆனால் உண்மையான சபை ஆவியானவரோடு நிலைத்து நின்றது. நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? சரி. 112. இந்த கான்ஸ்டன்டைன் அரசன் தன் இராஜ்யம் பிளவுபடாமல் இணைந்து இருப்பதற்காக இந்த ஒரு காரியத்தைச் செய்தான். அவன் இந்த நிக்கொலாய் மதஸ்தரைத் தெரிந்து கொண்டு, அவர்களிடம் போனான். (இவர்கள் தான் கிறிஸ்தவ வழியின் வேஷத்தைத் தரித்துக் கொண்டவர்கள்). நீங்கள் அதை தெளிவாக புரிந்து கொண்டீர்களா? அவர்கள் வெறும் பெயர்க் கிறிஸ்தவர்கள். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறாமலேயே தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டார்கள். ஓ, உங்களுக்குள் இந்தக் காரியம், நீங்கள் இதை அசட்டையாக விட்டு விடாதபடி, ஆழமாகப் பதிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாருங்கள்? அது, பரிசுத்த ஆவியைப் பெறாத கிறிஸ்தவ பெயர் சூட்டிக் கொண்ட மதஸ்தாபனமாகும். அவர்கள் பெயரளவில் கிறிஸ்தவர்களாயிருந்தனர். அவர்கள் கூடிய வருதலால் கிறிஸ்தவர்கள் என்று காண்பித்துக் கொண்டனர். அவர்கள் இராப்போஜனம் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் நியமங்களை ஆசரித்தார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் தலைமையை, அவருடைய வழிநடத்துதலை அவர்கள் நிராகரித்தனர். அவர்கள் மத்தியில் அற்புத அடையாளங்கள் இருக்கவில்லை, அவைகள் கடந்த காலத்தில் நடந்ததாக அவர்கள் கூறிக்கொண்டனர். ஒரு ஆளுகைக்காகவே தாங்கள் ஒரு சபையை நிறுவிட வேண்டியுள்ளது என்று கூறினர். என்னவிதமான ஆளுகை என்பதைப் பற்றி இன்னும் ஒரு நிமிடத்தில் பார்ப்போம். பாருங்கள்? 113. எனவே பரிசுத்த ஆவியைப்பெற்ற சபையானது, அவ்விதமான காரியங்களில் இருந்து தன்னை விலக்கியே வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், பெர்கமுவில், அக்காலத்துக்கென்று சொல்லப்பட்டவைகள் யாவும், அச்சபைக் காலத்துத் தூதனுக்கே சொல்லப்பட்டிருக்கிறது. ஏனெனில் இதைச் செய்வது தூதனுக்குரிய பொறுப்புதான். 114. ஆனால் கான்ஸ்டன்டைன் மெய்க் கிறிஸ்தவ வழியைப் பற்றி கொஞ்சமேனும் அக்கறையுள்ளவனாய் இருக்கவில்லை. அவன் தன்னுடைய அஞ்ஞான முன்னோர்களின் வழியையும், அவனது அஞ்ஞான சபையையும் கொண்டுவர விரும்பினான். நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள் மற்றும் போதகங்கள் ரோமா புரியில் ஆழமாக வேரூன்றிப் போய் ஒரு பெரிய ஆடம்பரத் தோற்றத்தையுண்டாக்கியது. அதில் இருந்த மக்கள் அநேகர் பெயரளவில் தான் கிறிஸ்தவ விசுவாசிகளாக, வெறும் ஆசார ரீதியில் இருந்தார்கள். உண்மையான சபை சிறுபான்மையினராக இருந்தது. எப்பொழுதும் அப்படியே இருந்தது. எப்பொழுதும் அப்படியே இருக்கும். அது ஆழமாக உங்களுக்குள் ஊறிப் பதியட்டும். அதற்காக ஒரு நிமிடம் காத்திருக்கிறேன். 115. ஞாபகத்தில் வைத்திருங்கள். உண்மையான சபை எப்பொழுதும் சிறு கூட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. அது மற்ற சபைகளிலிருந்து வெளியே தள்ளப்பட்டவர்களின் கூட்டம். உண்மையான சபை ஒரு போதும் சடங்காச்சார மத ஸ்தாபனமாக ஆகவில்லை. அது புவியில் வாழும் காணக்கூடாத இயேசு கிறிஸ்துவின் சரீரமாகும். அதன் உறுப்பினர்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் அசைவாடிக் கொண்டிருக்கிறார். எனவே, கிறிஸ்துவை நீங்கள் இயக்கமற்ற ஒரு ஸ்தாபனமாக ஆக்க முடியாது. நீங்கள் அவரை அவ்வாறு செய்ய முடியாது. இப்பொழுதுள்ள லவோதிக்கேயா சபையின் காலத்திற்கும் இதே நிலையை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டு மென்று நான் விரும்புகிறேன். இவைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் உரைக்கிற ஒவ்வொரு வார்த்தையும், ஒலிநாடாவில் பதியப்பட்டிருக்கிறது. தேவனுடைய உண்மையான சபை ஒரு போதும் ஸ்தாபனமாக ஆக்கப்பட வில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதை சிந்தையில் வைத்திருங்கள். 116. கத்தோலிக்க சபை தான் உலகிலேயே முதலாவதாக ஏற்பட்ட ஸ்தாபனமாகும். அதற்கு முன்பாக ஸ்தாபனம் ஏதுமில்லை. கத்தோலிக்கர்கள் இன்று கூறுகிறபடி, அதுதான் "தாய்ச்சபை' ஆகும். அதுதான் “ தாய்'' சபையாகும். ஸ்தாபன சபைகளுக்கெல்லாம் தாய் அவள்தான். வேதம் அவளை அவ்வாறே அழைக்கிறது. எனவே நீங்கள் அதைக் குறித்து சர்ச்சை செய்ய முடியாது. அவர்கள் “ அதுவே தாய்ச்சபை" என்று சொல்லும் பொழுது, அது சரிதான். அவள் தான் தாய்ச்சபை. வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரத்தில் அவளை சித்தரித்து காண்பிக்கப்பட்டுள்ளது. நாம் நேரடியாகவே அவளைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். சரி. 117. கான்ஸ்டன்டைன், தன் இராஜ்யபாரத்தை பெலப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தை மனதில் கொண்டவனாய், (ரோமாபுரி எப்பொழுதும் அவ்வாறே செய்கிறது, உலகத்தின் திறவுகோல்களை தன்னிடம் பெற்றிருக்க அது விரும்புகிறது) தன் அஞ்ஞான மதத்தின் கொள்கைகளை கொண்டு வந்து, கிறிஸ்தவ போதனைகளை அகற்றிவிட விரும்பினான். இவ்வாறு செய்து எப்படியாயிலும் அவர்களை ஒருங்கிணைத்து, அதன்மூலம் தனது இராஜ்யபாரத்தை பிளவுபடாமல் பலப்படுத்திக் கொள்ளவும், தன் இராஜ்யம் எல்லாவற்றிலும் முதன்மையாக விளங்கவும் விரும்பினான். அது கான்ஸ்டன்டைன் அரசனை உலகிலேயே தலை சிறந்த அரசன் என்று ஆக்கிவிடும். 118. மனந்திரும்பின விஷயத்தில் அவன் ஒரு அரசியல் வாதியாகவே இருந்தான். ஆனால் அவன் தேவனுடைய பரிசுத்தவான் அல்லவே அல்ல. (ஆனால் சிலர் அவனை அவ்வாறு ஆக்க முயற்சிக்கிறார்கள்). அவன் அவ்வாறு இல்லை. அவன் ஒரு போதும் கிறிஸ்தவ சத்திய வழிக்குக் கொஞ்சமாவது ஒத்து இருக்கும் எந்தவொரு கிரியையும் செய்ததாக எனக்குத் தென் படவில்லை. அவன் நிக்கொலாய் மதஸ்தரின் சபை ஒன்றில் ஒரு சிலுவையை ஸ்தாபித்தான். கிறிஸ்தவத்திற்கு சம்மந்தம் உள்ளது போல் காண்பித்த அந்த கிரியை ஒன்றுதான் அவன் செய்ததாகும். ஆனால் அது எனக்கு கிறிஸ்தவமாக தென்படவில்லை. அன்றிரவில் அவன் சிலுவையை சொப்பனத்தில் கண்டபோது, அவன் வீரர்களின் கேடயங்களில் சிலுவை அடையாளத்தைப் பொறித்தான். கிறிஸ்தவர்கள், அவன் யுத்தத்தில் ஜெயிக்க வேண்டும் என ஜெபித்துக் கொண்டிருந்தார்கள், அதனால் அப்படிச் செய்தான். 119. அவன் அப்படிச் செய்தது, அவனது இராஜ்ய பாரத்தை பெலப்படுத்தும் என்பதினால் தான். இதை அவன் செய்வதற்காக, அவன் இந்த நிக்கொலாய் மத கிறிஸ்தவ சபையினுள், அஞ்ஞான வழிபாட்டு முறைகளைக் கொண்டு வந்தான். அவன், உருவாகிட்ட அதை, சடங்காச்சார சம்பிரதாய முறைகளைக் கொண்ட ஸ்தாபன சபை என்று தான் அழைப்பேன். அவன், இந்த நிக்கொலாய் மதஸ்தரின் சபைக்குள் அஞ்ஞான வழிபாடுகளை கொண்டு வந்தான். அதுவே கத்தோலிக்க மதம் பிறக்க அடிகோலியது. 120. சகோதரனே, நான் இப்பொழுது வரலாற்றிலிருந்து மேற்கோள் காட்டிக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஆயிரக்கணக் கான கத்தோலிக்க சிநேகிதர்கள் உண்டு. பிராடெஸ்டெண்டுகள் எனக்கு நண்பர்கள் போல இவர்களும் நண்பர்கள். ஆனால் ப்ராடெஸ்டெண்டுகள் அவர்களைப் பார்த்து சப்தமிட முடியாது. இன்றிரவு முடிகிற வரையிலும் பொறுத்துக் கொள்ளுங்கள். பாருங்கள்? ப்ராடெஸ்டெண்டுகளும் அதே காரியத்தைத்தான் செய்தார்கள் என்பதை நீங்கள் காணப்போகிறீர்கள். பானையானது கொப்பரையைப் பார்த்து, எண்ணெய் பிசுக்காய் இருக்கிறது என்று சொல்ல முடியாது. இதுவும் அப்படித்தான் இருக்கிறது. அதே ஆவிதான் அவர்கள் மத்தியிலும் நிலவி வருகின்றது. நான் ஏன் ஸ்தாபனத்தை கண்டனம் பண்ணி வருகிறேன் என்பதைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளப் போகிறீர்கள். ஏனெனில் அது தவறாக இருக்கிறது. என்னிலிருக்கிற ஆவியானவர் அவைகளுக்கெதிராக சப்தமிடுகிறார், அப்பொழுது என்னால் அதைப்பற்றி வாயை மூடிக்கொண்டு இருக்க முடியவில்லை. 121. பெரிய ஊழியக்காரர்களும், மதத் தலைவர்களும் என்னிடம், “ நீங்கள் உங்கள் ஊழியத்தைக் கெடுத்துக் கொள்வீர்கள். உங்க ளுக்கு சம்மந்தமில்லாததை எல்லாம் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். அது உங்களுடைய வேலையல்ல. தேவன் உங்களை வியாதிப்பட்டவர்களுக்கு ஜெபிக்கத்தான் அழைத்தார், சகோ.பிரன்ஹாம் அவர்களே'' என்று கூறியிருக்கிறார்கள். 122. தேவன் பிணியாளிகளுக்கு ஜெபிப்பதற்காக என்னை அழைத்ததுவுமல்லாமல் அதைவிட மேலான காரியத்திற் காகவும் என்னை அழைத்திருக்கிறார். பிணியாளிகளுக்காக ஜெபிப்பதன் மூலம் மக்களுடைய கவனத்தை ஈர்த்துக் கொள்ள முடிகிறது. அது அவ்வளவுதான். அதோடு அது முடிந்து விடுகிறது. பிணியாளிகளுக்காக ஜெபிப்பது ஒரு சிறு காரியமாகும். செய்தி இருக்கிறதே, அது தான் நாம் முக்கியமாக பேசிக் கொண்டிருக்கிற காரியம் ஆகும். மற்ற காரியங்களெல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு விடும். வியாதிப்பட்டிருக்கும் ஒரு மனிதன் வியாதியிலிருந்து குணமடைந்து, பிறகு மீண்டும் அவன் மரிக்கலாம். ஆனால் தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒரு மனிதனோ, நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறான். ஆகவே, தேவன் வெறுமனே சுற்றித் திரிந்து வியாதியஸ்தரை குணமாக்கிக் கொண்டு மட்டும் செல்லுவதில்லை. அந்த வரமானது சபையிலே, உள்ளூர் சபையிலே உள்ள ஒன்று. வரங்கள் சபையின் வழியாக கிரியை செய்து கொண்டே போகிறது. பாருங்கள்? ஆனால் நித்திய ஜீவனோ அதைவிட மேலானது. நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். சரி. 123. கிறிஸ்தவர்களைக் கவரவும், அஞ்ஞானிகளைக் கவரவும் வேண்டி அவர்களை ஒன்று சேர்த்து இணைத்து, ஒரு சபையாக உருவாக்கி, கத்தோலிக்க சமயம் பிறந்தது. 124. என்னுடைய அறையில் யாரோ ஒருவர் கொடுத்த ஒரு தாளில் குறிக்கப்பட்ட குறிப்பொன்றை மறந்து வைத்து விட்டு வந்துவிட்டேன். ஓ, அதை நான் கொண்டு வந்திருக்க வேண்டு மென்று விரும்புகிறேன். அதில், இதேவிதமான காரியத்தை இன்றைக்கும் எவ்வாறு செய்து வருகிறார்கள் என்பது விவரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த தேர்தலில் நீங்கள் அந்த மனிதனை தேர்ந்தெடுத்ததின் மூலம் அதைச் செய்ய ஆரம்பித்தீர்கள். இப் பொழுது அவர்கள், கத்தோலிக்கரைப் பாதிக்காத வரையிலும், யூதரைப் பாதிக்காத வகையிலும், ப்ராடெஸ்டெண்டுகளைப் பாதிக்காத வகையிலும் இருக்கத்தக்கதான, எல்லோரும் ஒத்துக் கொள்கிற மாதிரி உள்ள ஒரு வேதாகமத்தை தயாரித்துக் கொண்டு இருக்கிறார்களாம். எல்லோருக்கும் ஏற்ற மாதிரி உள்ள ஒரு வேதாகமம் அவர்கள் தயாரிக்கப் போகிறார்கள். இன்னொரு கான்ஸ்டன்டைனின் தந்திரத்தைக் கண்டீர்களா? வரலாறு திரும்புகிறது. அதைப் பற்றி அன்றொரு இரவில் நான் ஒரு குறிப்பை படித்துக் காட்டினேன். அதை நீங்கள் கேட்டீர்களல்லவா? அக்குறிப்பை நான் வீட்டில் விட்டு வந்து விட்டேன். அவர்கள் நீண்ட காலமாக அம்முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறார்கள். 125. 22-வது போப் யோவான், அனைத்து மகள் சபைகளையும், தாய்ச்சபையிடம் திரும்பி வந்துவிடும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் கவலைப்பட வேண்டாம். மகள் வந்து விடுவாள். அவர்கள் வந்துவிடுவார்கள். மகள் ஏற்கனவே திரும்பி வந்து விட்டாள். அவள் அங்கே உள்ளே வந்துவிட்டாள். அவர்கள் திரும்பி போக வேண்டிய தேவையில்லை. ஏனெனில் ஏற்கனவே, அவர்கள் அம்மாவிடம் திரும்பிப் போய் விட்டார்கள். 126. நான் கூறியது போல, “ இந்த தேசம் கூறியது: திருவாளர் கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டால், கத்தோலிக்கர்கள் மேற்கொண்டு விடுவார்கள்'' என்று. மேற்கொண்டு விடுவார்களா? நீண்டகாலத்திற்கு முன்பாகவே அவர்கள் அதைச் செய்துவிட்டார்கள். ஆனால் நீங்கள் தான் அதை அறியவில்லை. அவர்களுடைய ஆசிரியர்களுக்கு யார் சம்பளம் கொடுக்கிறார்கள்? எவ்வாறு அவர்கள் தங்களுடைய பள்ளிகளுக்கு இதெல்லாம் கிடைக்கும்படி செய்து கொண்டு, கத்தோலிக்க சமயாசாரக் கோட் பாடுகளை எவ்வாறு தங்கள் பள்ளிகளில் கற்பிக்கிறார்கள்? வரி செலுத்துகிற நீங்கள் அதற்காகவும் செலுத்துகிறீர்கள்? தேவையற்ற ஒன்றுக்கு வரி செலுத்துகிறீர்கள். உங்கள் கண்களுக்கு முன்பாக இக்காரியம் நடைபெறுகிறது என்பதைப் பாருங்கள். ஓ, அவன் எவ்விதமாய் கிரியை செய்திருக்கிறான்! வேதம் கூறுகிறது; அவன் முகஸ்துதிகளினால் அதை எடுத்துக் கொள்வான் என்று. அவன் அவ்வாறே செய்தான். இன்னும் அநேக காரியங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். நான் இத்தோடு நிறுத்திக் கொண்டு விஷயத்திற்கு திரும்பிப் போக வேண்டும். 127. கான்ஸ்டன்டைன், தான் ஏற்படுத்தின காரியங்கள் தடையின்றி தொடர்ந்து நடந்துகொண்டே போக, அவன் சபைக்குள்ளாக, அஞ்ஞானிகள் மற்றும் கிறிஸ்தவர்களின் கவனத்தை கவரும்படியாக, ஏராளமான உலகப் பிரகாரமான பொழுது போக்கு அம்சங்களை ஏற்படுத்தினான். நீங்கள் ஆவிக்குரிய சிந்தையைக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் சிந்திக்கிறீர்களா? இது இவ்வேளைக்குரிய செய்தியாக இல்லையா? சபையில் சூதாட்ட சீட்டு விளையாட்டு, விருந்துகள், கார்சாவி மாற்றிக்கொள்ளும் களியாட்டு, என இப்படியாக அவர்கள் ஒன்றாக கலக்க, இவை யெல்லாம் உள்ளன. அந்த வல்லரசை இப்படியாக மீண்டும் ஒன்று சேர்த்து, ஒரு குறிப்பிடத்தக்க ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள கிரியை நடக்கிறது. இப்பொழுதே நடக்கிறது. 128. அது வரலாறாக இருக்கிறது. இதில் எவருக்கும் எந்தவித சுயநலமும் இலாப நோக்கும் கிடையாது. என்ன நடந்ததோ அதை பாரபட்சமில்லாமல் வரலாற்றாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். நிக்கொலாய் மதஸ்தருடைய சபையை ஒருங்கிணைக்க, சபை ஐக்கியமாக இருப்பதற்காக, அவன் உலகப் பிரகாரமான உல்லாசப் பொழுதுபோக்குகளை சபையில் கொண்டு வந்தான். ஆனால் அவனால் மறுபடியும் பிறந்த சபையைத் தொடவே முடியவில்லை. ஆனால் மத ஆசாரங்களைக் கொண்ட நிக்கொலாய் மதஸ்தரின் சபையோ அதற்கு பலியாகியது. 129. நமது ப்ராடெஸ்டெண்டு சபைகளில் இன்று என்ன இருக்கிறது? இரவுநேர சமுதாய விருந்துகள், களியாட்டுகள், சறுக்கி விளையாடுதல், (ஓ, என்னே !), துணி விற்றல் மற்றும் இன்ன பிற காரியங்கள் உள்ளன. அது உண்மையென்று நீங்கள் அறிவீர்கள். அனைத்து ப்ராடெஸ்டெண்டு சபைகளும் அதைப்பற்றிய விஷயத்தில் குற்றமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். அது தேவனுடைய வார்த்தையாயிருக் கிறதென்றால், அது சத்தியமாயிருக்கிறது. 130. இவ்விதமான இரவு நேர சமுதாய விருந்துகளையும், நடன நாட்டிய நிகழ்ச்சிகளையும் அடித்தளத்தில் நடத்துகிறார்களே, இதெல்லாம் தங்களுடைய சபைப் போதகருக்கு, தசமபாகம் கொடுப்பதற்குப் பதிலாக, அதற்குப் பிரதியாக ஏதாவது கொடுத்துத் தீர்ப்பதற்காகத்தான். இவையெல்லாம் தேவனுடைய திட்டம் அல்ல. மக்கள் தங்கள் தசமபாகங்களை செலுத்த போதிக்கப்பட்டிருந்தால் அதுவே சிறந்தது ஆகும். அது தேவனுடைய திட்டமாயிருக்கிறது. தேவனுக்கு ஒரு திட்டம் இருக்கிறது. ஆனால் மனிதனோ, தன்னுடைய திட்டத்தை தேவனுடைய திட்டத்தோடு கலப்படம் செய்துவிடுகிறான். 131. இவ்வாறெல்லாம் அக்காலத்தில் அவர்கள் செய்து, தங்களை ஒருங்கிணைத்து, ஆதிக் கத்தோலிக்க சபையை உருவாக்கினார்கள். அதன்பிறகு அந்த முதலாவதான நிசாயா ஆலோசனை சங்கத்தில் அதைப் பற்றி நான் படிக்கையில், நான் முழங்கால்படியிட்டேன். மகத்தான நிசாயா ஆலோசனை சங்கம் கி.பி.325ல் கூடிய பொழுது, யாவரும் ஒன்றாக இணைக்கப்பட்டனர். அத்தியட்சகர்கள், கிறிஸ்தவ விசுவாசப் பிதாக்கள் எனப்பட்டவர்களும் நிசாயாவில் கூட்டி சேர்க்கப்பட்டனர். அது கி.பி.325ல் நிசாயா என்ற இடத்தில் நடந்ததால் தான் நிசாயா ஆலோசனை சங்கம் என்றழைக்கப்படு கிறது. 1500 பிரதிநிதிகள் இந்த மாபெரும் மகாசபைக்கு வந்து கலந்துகொண்டனர். வந்திருந்த பிரதிநிதிகளில் சபையின் மக்கள் அத்தயிட்சர்களைவிட அதிகமாக இருந்தனர். அதாவது ஐந்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் சபை ஜனங்களும், அத்தியட்சகர்களும் முறையே இருந்தனர். ஆனால நிக்கொலாய் மதத்தினராகிய குளிர்ந்துபோன, சடங்காச்சார சபை மற்றும் கான்ஸ்டன்டைனின் அரசியல் ரீதியிலான வஞ்சகத் திட்டத்தின் மூலமாக உண்மையான சபையானது தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் வென்றார்கள். அதின் பேரில், (மனிதன் பரிசுத்த குருத்துவ ஒழுங்கின் மூலம்) எல்லா அதிகாரமும் அத்தியட்சர்கள், கார்டினல்கள், போப்புகள் ஆகியவர்களுக்கு கையளிக்கப்பட்ட, பரிசுத்த ஆவியானவர் கூட்டத்தைவிட்டு அகற்றப்பட்டார். 132. கடந்த தேர்தலில் இதேவிதமான வஞ்சகச் செயலை ஜனநாயகக்கட்சி செய்தது. அது உண்மை. குடியரசுக் கட்சியினருங்கூட அதேவிதமாக கீழ்த்தரமாக நடந்து கொள்வார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட காரியத்தைப் பற்றி நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கலிபோர்னியா மற்றும் ஏனைய இடங்களிலும் ஒரு விதமாக ஓட்டுப் போடும் இயந்திரங்களை நிறுவியிருந்தார்கள். அதில் நீங்கள் நிக்சனுக்கு வாக்களித்தால், கென்னடிக்கும் ஒரு வாக்கு பதிவாகிவிடுமாம். அந்த அளவுக்கு வஞ்சகமாக அதைச் செய்திருந்தார்கள். அதைப்பற்றி நிரூபித்து விட்டார்கள். (எட்கர் ஹூவர் என்பர்). இப்பொழுது அந்த தவறு நிரூபிக்கப்பட்டு விட்டது. அப்படியிருந்தும் ஏன் இன்னமும் அவர்கள் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை? நாம் அப்படிப்பட்டதான ஒரு வேளையில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். அவர்கள் மோசடியாக இதைச் செய்தார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு விட்ட போதிலும், அதைப்பற்றி ஏதும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். 133. அது அன்றைக்கு இருந்த வஞ்சக திட்டமாக இருந்தது. இன்றைக்கு அதன் மறுபிறப்பையும் இக்காலத்தில் பார்க்கிறோம். ஒரு குறிப்பிட்ட மனிதனை தேர்ந்தெடுக்கவும், ஒரு போதகத்தை நம்பவைத்து ஏற்றுக்கொள்ள வைக்கவும். இவ்வஞ்சகம் கிரியை செய்கிறது. நிக்கொலாய் மதஸ்தருடைய போதகம், முன்பு “ கிரியை''களாக மட்டுமே இருந்து வந்தது. இப்பொழுது அது “ போதகம்'' ஆகிவிட்டது. ஆனால் ஸ்மித்தின் நாட்களில் ஒரு கிரியைகளாக இருந்தது, இப்பொழுது போதகமாக ஆகிவிட்டது. அல் ஸ்மித்தின் நாட்களில் ஒரு கிரியைகளாக இருந்தது, இப்பொழுது போதகமாக ஆகிவிட்டது. உ-ஊ, உ-ஊ. இப் பொழுது இங்கே நம்மேல் வந்து இருக்கிறது. “ ஓ அவன் ஒரு கவர்ச்சிகரமான ஜனாதிபதியாக திகழுவான்'' என்கிறார்கள். அதைப் பற்றி என் மனதில் எந்த சந்தேகமுமில்லை. அடுத்த பதவிக் காலத்திற்காக, அவன் இந்த அஞ்ஞானிகளையும் சடங்காச்சார கிறிஸ்தவர்களையும் ஒன்று சேர்த்து இணைத்து வைப்பான். 134. கார்டினல்களையும், போப்புகளையும் ஒன்று சேர்ப்பதற்காக, அவர்கள் ஒரு வேதாகமத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ஆங்கிலிகன் சபையின் ஆர்ச் பிஷப் அவர்களை, இங்கிலாந்தில் இருந்தபொழுது சந்தித்தேன். அவருடன் நான் கைகுலுக்கினேன், சம்பாஷித்துக் கொண்டிருந்தேன். ஒரு விதமான விசித்திரமான அங்கியுடுத்தியவராக அவர் இருந்தார். ஆனால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் முதல் முறையாக இந்த ஆங்கிலிகன் சபை ஆர்ச் பிஷப் தான் போய் போப்பை சந்தித்தார். அது என்ன? நாம் கடைசி நேரத்தில் இருக்கிறோம். 135. எனவே தான் நான் எங்கே ஒரு மேடையில் நின்றிருந்து, பிரசங்கித்து, வியாதியஸ்தரக்காக ஜெபிக்கிறதற்குப் பதிலாக, இங்கே நான் நின்று கொண்டிருக்கிறேன். அவர்கள் யாவரையும் நான் இங்கே இந்த மேடையில் இருந்து சந்திக்க இயலாது. (இந்த செய்திகள் ஒவ்வொன்றாக வருகின்றன). எனவே தான் நாம் இச் செய்திகளை ஒலி நாடாவில் பதிவு செய்து உலகம் முழுவதும் அனுப்பி, அவர்களை எச்சரித்து, விசுவாசத்திற்கு திருப்புவதற்காக செய்து கொண்டிருக்கிறோம். 136. ஆதி கிறிஸ்தவ காலத்தின் இறுதியில், வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்திற்கு முன்னால் உள்ள யூதாவின் நிருபம் எழுதப்பட்டது. பரிசுத்த யூதா இயேசுவின் வளர்ப்பு சகோதரன், அதாவது இயேசுவோடு உடன் வளர்க்கப்பட்ட சகோதரன் என்று கருதப்படுகிறது. “ பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக தைரியமாக போராட வேண்டும்'' என்று யூதா எழுதினான். கர்த்தராகிய இயேசுவின் மரணத்திற்குப் பின்னால் அவர்கள் விசுவாசத்தை விட்டு வழி விலகிப் போனார்கள். இப்பொழுதோ அவர்கள் இன்னும் எவ்வளவு அதிதூரமாக விலகிப் போய்விட்டார்கள்! பாருங்கள்? 137. இந்த முதலாவதாக நிசாயா ஆலோசனை சங்கம் கி.பி.325ல் நடைபெற்றது. சுமார் 1500 பிரதிநிதிகளும் அத்தியட்சகர்களும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் சபையை, ஜனங்களை, அந்தக் குழப்பமான, கொந்தளிப்பான நிலையில் இருந்த அந்த ஆலோசனை சங்கத்தில், மதகுருக்கள் கை ஓங்கி, அவர்கள் இவர்களை கட்டப்படுத்தி விட்டார்கள். அவர்கள் மக்களை தடுத்தாட்கொண்டு, நிக்கொலாய் மதஸ்தர் சபையை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதற்கு வசதியாக, அந்த சார்பாக வாக்களித்தார்கள். இதனால் சபைக்கு இருந்த அதிகாரமானது அத்தியட்சகர்களிடம் கையளிக்கப்பட்டு, அவர்கள் தான் சபையை ஆளவேண்டும் என்றும், அவர்கள் தான் வார்த்தையின் பேரில் எந்தவொரு வியாக்கியானமும் செய்ய வேண்டும் என்றும் ஆக்கப்பட்டது. 138. இன்றைக்கு கத்தோலிக்க சபையில் உள்ள நிலையை நீங்கள் கவனித்தீர்களா? “ வேதத்தை வாசிக்க உங்களுக்கு அனுமதி கிடையாது. அதற்கு வியாக்கியானம் கொடுப்பது உங்களுக்கு அடுத்தது அல்ல. அத்தியட்சகர் தான் செய்ய வேண்டும்'' என்ற நிலை உள்ளது. அது எங்கிருந்து வந்தது என்று பாருங்கள். இப்பொழுது நிக்கொலாய் மதஸ்தர் எவ்வாறு தந்திரமாக மெல்ல தவழ்ந்து ஊர்ந்து உள்ளே நுழைவதற்கு முன்னால், எப்படியிருந்தார்கள் என்பதை நீங்கள் காண முடியும். அங்கேயே தான் அது பிறந்தது. அது உண்மை . அது கிறிஸ்தவ வேஷம் போட்டது. இன்னமும் அப்படியேதான் உள்ளது? 139. அதன்பிறகு ப்ராடெஸ்டெண்டுகள் அதே மாதிரியாக இருக் கிறார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரத்தில், வேதம் கூறுகிறது, “ தாயும் அவளுடைய குமாரத்திகளும்'' என்று. கர்த்தருக்கு சித்தமானால் கொஞ்ச நேரத்தில் அதைப் பற்றி பார்ப்போம். இன்றைக்கும் அதேவிதமாகத்தான் உள்ளது. அவர்கள் கைவசப்படுத்திக் கொண்டு விட்டார்கள். கான்ஸ்டன்டைன் பிலேயாமின் உத்தியையே கடைப்பிடித்தான். 140. இப்பொழுது நீங்கள் உங்களால் முடிந்த அளவு இதை மிகவும் கவனமாக கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இங்கே, தேவன் வேதத்தில் இவ்வாறு கூறுகிறார்; “ என் விசுவாசத்தை நீ பற்றிக்கொள்'' என்று. “ ... சில காரியங்களைக் குறித்து உன் பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போகதத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு”. (அப்படிப் பட்டவர்கள் இங்கே இல்லை, அங்கே இருந்தார்கள். "பெர்கமு சபையில் அங்கே உன்னிடத்தில் இருக்கிறார்கள்'') வெளி.2:14 141. பிலேயாம் கையாண்ட அதே உத்தியைத் தான் கான்ஸ்டன்டைனும் கையாண்டான். நிசாயா ஆலோசனை சங்கம் கூட்டத் திற்குப் பிறகு, அவர்கள் ஒரு கூட்டத்தை கூட்டினார்கள். நிசாயா கூட்டத்தில், அத்தியட்சகர்களை சபைகளின் மேல் ஆதிக்கம் செலுத்த வைத்து, சபையிடமிருந்து அனைத்து அதிகாரத்தையும் பறித்துவிட்டார்கள். “ சபையார் தங்களுக்கென சிந்தித்துப் பார்க்க தேவையில்லை. வேதவாக்கியங்களை வியாக்கியானிக்கவும் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை'' என்று ஆக்கப்பட்டது. வேத வாக்கியங்களைப் பற்றி வியாக்கியானிக்கவும் மற்றும் இன்ன பிற காரியங்களையும் செய்யயும் மதகுருவுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. 142. இறுதியாக, சிறிது காலத்திற்குப் பின்பு, அவர்கள் ஒரு பிரதான குருவை ஏற்படுத்தினார்கள். அவன் தான் போப், பிரதிகுரு. ஆனால் இப் பொழுது, “ எல்லா ஞானமும் அறிவும் மதகுருவுக்கே உரித்தான தாகும். எனவே சபையார் வேதத்தைப் படிக்க வேண்டியதில்லை; அவர்கள் ஒன்றும் செய்யத் தேவையில்லை'' என்ற அளவுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். வெளிப்படையாகச் சொன்னால், வேதபுத்தகம் அவர்களிடத்திலிருந்து தங்களுக்கென எடுத்துக் கொண்டு விட்டார்கள். அது நல்லதாக காட்சியளித்ததால், சபையின் மக்களுக்கென அவர்களே இதைத் தெரிந்துதெடுத்து விட்டார்கள். 143. அவர்கள் ஐசுவரியவான்களாக இருந்தபடியால், அந்தக் காரியம் நல்லதுபோல் தோன்றியது. அந்தப் பெரிய நிசாயா ஆலோசனை சங்கம் கூட்டத்தில் கான்ஸ்டன்டைன் அத்தியட்சகர்களுக்கு அருமையான கட்டிடங்களைக் கொடுத்தான். அவனிடம் ஏராளமான பணமும் பெரிய பெரிய கட்டிடங்களும் இருந்தன. அவன் அவைகளிலிருந்து சபைக்கென, அவர்கள் சபை வீடுகளாக உபயோகிக்கும்படி கொடுத்தான். ஓ, அவை அருமையான கட்டிடங்கள். அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவைகளை அவன் சபைக் கென்று கொடுத்தான். 144. அதுவுமல்லாமல், அவ்வரசன், அந்த அத்தியட்சகர்களை மகத்தான பெரிய அங்கிகளினால் உடுத்துவித்து, நல்ல உள்ளாடைகளையெல்லாம் செய்வித்தான். அதுவுமன்னியில், பெரிய கட்டிடத்தை கட்டி, அதில் அவர்களை விக்கிரகம் போல் அமர வைத்தான். அவர்கள் அமர்ந்திருக்கிற இடத்திற்குக் கீழாக, சலவைக் கற்களால் ஆன பீடங்களையும் உண்டாக்கினான். அஞ்ஞான வழிபாட்டில் காணப்படும் முறைமைகளை அப்படியே கடைப் பிடித்து, அவற்றிற்கு கிறிஸ்தவ சாயம் பூசி, அதில் அத்தியட்சகரை வைத்துவிட்டான். பாருங்கள். அவர்கள் விக்கிரகத்தை அகற்றி விட்டு அந்த இடத்தில் அத்தியட்சகரை வைத்துவிட்டனர். பாருங்கள், அவனுக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, அதே காரியம், அவனை தேவனாக ஆக்கிவிட்டனர். அத்தியட்சகரை அங்கே ஏற்படுத்தி, அவன் சொல்வதே சட்டம் என்று ஏற்படுத்தி, அவன் சொல்வதே சட்டம் என்று ஏற்படுத்தி, அவனை மிக அலங்காரமாக உடுத்தி, ஒரு தெய்வம் போல் மக்களுக்கு காட்சியளிக்கத்தக்கதாக வைத்தார்கள். அவர்களுடைய அஞ்ஞான தேவர்களைப் போல் அத்தியட்சகர் காட்சியளிக்க வைப்பதை செய்யாமல், இயேசு அணிந்திருந்தது போல ஒரு அங்கியை அவனுக்கு உடுத்துவித்தனர். பாருங்கள்? அத்தியட்சகரை ஒரு விக்கிரகத்தைப் போல் தோற்றமளிக்கும் படி உட்கார வைத்தனர். 145. ஓ, அன்றைக்கு இருந்த அஞ்ஞானி ஒருவன் என்ன சொல்லியிருப்பான் என்பதை கற்பனை செய்து கொள்ளலாம். “ நல்லது, அங்கே நம்மோடு பேசி நமக்கு பதிலளிப்பதற்கு ஒருவர் இருக்கிறார், எனவே அந்த ஆலயத்திற்குப் போவோம். நாம் இது வரைக்கிலும் பேசமாட்டாத ஒரு விக்கிரகத்தோடு மட்டும் பேசிக் கொண்டிருந்தோமே'' என்று. 146. கிறிஸ்தவர்கள் எவ்வாறு எண்ணியிருப்பார்கள் என்பதை கற்பனை செய்யுங்கள்; “ நல்லது, அது ஒரு அருமையான காரியம் தான். நாம் விரும்பும் எந்தவொரு காரியத்தையும் நாம் செய்து கொள்ளலாம். ஏனெனில் நம்முடைய தேவன் அங்கிருக்கிறார். அவரிடத்தில் நாம் பேசலாம். அவரும் நமக்கு மறுமொழி கொடுப்பார், நாம் என்ன செய்ய வேண்டுமென்பதைச் சொல்ல. நாம் பாவம் செய்தால் நாம் அதைப்பற்றி அவரிடம் போய் அறிக்கை செய்துவிடலாம். ஏதாவது கொஞ்சம் அவருக்கு நாம் கொடுத்தால் போதும், அல்லது சிறிது நோவீனோ செய்தாலும் போதும் இவைகளையெல்லாம் செய்து விட்டால் அப்பொழுது நாம் சுத்தமாகி விடுகிறோமே. எனவே மறுபடியும் புறப்பட்டுச் சென்று, விருப்பப்படி நாம் செய்து கொள்ள நாம் விடுதலைடையந்திருக்கிறோம். எதைப்பற்றியும் நாம் கவலைப்படத் தேவையில்லை'' என்று கூறியிருப்பார்கள். 147. மாம்ச சிந்தையுள்ள மனிதனுக்கு இன்னமும், “ ஓ, அது நன்றாகத் தான் காணப்படுகிறது, நிச்சயமாக'' என்று சொல்லுகிற அளவுக்கு அது இருக்கிறது - ஆனால் மறுபடியும் பிறந்த தேவ பிள்ளையிடம் நீங்கள் அதை நுழைத்துவிட முடியாது. உங்களால் மறுபடியும் பிறந்த தேவபிள்ளையை அந்த வழிக்கு மாற்ற முடியாது. அவன், தான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிந்திருக்கிறான், அவரிடத்தில் அவன் ஒப்புக் கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறான். பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கி அவன் தொடருகிறான். ஆமென்! ஓ, நான் எவ்வளவாய் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்! 148. சலவைக்கல் பலிபீடம் அவனுக்கு கீழாக அமைக்கப்பட்டது. பிரமாதமாக உடுத்தியிருந்த, சொகுசான சபை. ஓ, என்னே, எல்லாம் நேர்சீராயிருந்தது. இந்த பலிபீடம் சலவைக் கற்களால் கட்டப்பட்டு, மிகவும் அழகாக இருந்தது. நீங்கள் அதைப் பார்க்க வேண்டும். அதேவிதமாகத்தான் இருக்கிறது. பொன்னினாலும், முத்துக்களினாலும், ஆபரணங்களினாலும் பலிபீடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அது அழகாயிருந்தது! நிக்கொலாய் மதஸ்தருக்கும், அஞ்ஞானிகளுக்கும் ஏற்றதாக அது அமைந்திருந்தது. அவன் என்ன செய்தான் என்று பார்த்தீர்களா? அவன் அஞ்ஞானிகளின் அனுஷ்டான ஆசாரங்களையும், அஞ்ஞான கொள்கைகளையும் எடுத்துக் கொண்டான், கிறிஸ்தவ மார்க்கத்தையும் எடுத்துக் கொண்டான். நிக்கொலாய் மதத்து கிறிஸ்தவர்களோ, வெறும் சடங்காச்சாரமானவர்களாகவும், அறியாமையுள்ளவர்களாகவும் வித்தியாசமாக நடத்தப் படுவதற்காக பரிசுத்த ஆவியைப் பெற்றிராதவர்களாகவும் இருந்தார்கள். இரண்டையும் ஒன்றாகக் கலந்து, அவர்களுக்கென ஒரு தேவனை பூமியில் உண்டாக்கி, அவர்களுக்கென்று ஒருபலி பீடத்தையுண்டாக்கி, அவர்கள் பாவங்களை மன்னிக்க அங்கே அமரத்தக்கதான ஒரு தேவனையும் உண்டாக்கிக் கொடுத்தான். நீங்கள் ஆவிக்குரியவர்களா? நான் சொல்லுவதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? அது என்னவென்று பாருங்கள். பாவமானது பூமியில் பாவமன்னிப்பை கொடுத்துக் கொண்டிருந்தது. நான் இதை என்னுடைய சிந்தையிலிருந்து எடுத்துக் குறிப் பிடவில்லை. அது வரலாறாக இருக்கிறது. ஜார்ஜ் வாஷிங்டன், ஆபிரகாம் லிங்கன் மற்றும் கெட்டிஸ்பெர்க் யுத்தத்தைப் பற்றியும் நான் குறிப்பிட்டால் அது எந்த அளவுக்கு உண்மையாக இருக்குமோ அதை போல் இதுவும் இருக்கிறது. வரலாற்றில் பக்கம், எண் இவைகளை நான் குறிப்பிட்டுக் கூற முடியும். தூய்மையானதாக வரலாறும் இருக்கிறது. நான் குறிப்பிடுகிற இவைகளெல்லாம் வரலாற்று ரீதியாக இருக்கிறது. 149. சபையில் ஏற்படுத்தப்பட்ட இக்காரியங்கள் ஜனங்களுக்கு மிகவும் ஏற்படையதாய் இருந்தது. ஆனால் மறுபடியும் பிறந்த சபைக்கு அல்ல. இல்லை, ஐயா! அவர்கள் அங்கே ஒரு மனிதனை அத்தியசட்கராக நியமித்து, அவன் அனுஷ்டான ஆசாரங்களுக்கான மந்திரங்களை உச்சாடனம் செய்யும்படி செய்தார்கள். அதினால் பூரண சுவிசேஷம் முழுவதும் வெளியே தள்ளப்பட்டது. இன்றைக்கும் அவ்வாறே அது செய்யப்படுகிறது. அந்த காலங்களில் நடந்த காரியங்கள்யாவும் அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு காலத்திற்குள்ளும் நீடித்து பரவி வந்தது, பாருங்கள். வேறு ரூபத்தில், வேறு நாளுக்குள் என்று இருந்தது. ஓ, அவர்கள் அங்கே ஒரு பெரிய கனவானை தேவனைப் போல் வைத்த போது, அவன் சில ஆசாரமான ஜெபங்களை சொல்லி வந்தான். 150. அஞ்ஞானிகள் தங்களுடைய இறந்து போன முன்னோர் களிடம் வேண்டுதல் செய்து வந்தார்கள் என்பதைக் கவனியுங்கள். ஒரு ப்ராடெஸ்டெண்டு சபையானது நின்று கொண்டு, “ நான் பரிசுத்த ரோமன் கத்தோலிக்க சபையையும், பரிசுத்தவான்களின் ஐக்கியத்தையும் விசுவாசிக்கிறேன்'' என்று கூறுகிறது. மெதோடிஸ்டுகளே, ப்ரெஸ்பிடேரியன்களே, லூத்தரன்களே, உங்கள் முகங்களை மூடிக் கொள்ளுங்கள். மரித்த ஆவியோடு பரிந்து பேசுகிறதாகச் சொல்லுகிற எச்செயலும், செத்த ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் பிசாசுக்கடுத்த உபதேசமாகும். ஆனால் இப்பொழுது ப்ராடெஸ்டெண்டுகள் கத்தோலிக்கரைப் பார்த்து பரிகசிக்க முடியாது. ஏனெனில் அவர்களும் இதே காரியத்தையே செய்கிறார்கள். கத்தோலிக்கரின் இந்த சர்வ பரிகார சர்வ பிரயோஜன அறிக்கையை இவர்களும் விசுவாசித்து அதைச் செய்கிறார்கள்; கத்தோலிக்க முறையிலேயே தண்ணீர் ஞானஸ்நானத்தையும் கொடுக்கிறார்கள். சரியான ஒழுங்கிலே வாழ முயலும் மக்களை இவர்கள் புறக்கணித்து, அவர்களை கேலி செய்கிறார்கள். தேவனுடைய வல்லமையால் ஆரவாரிக்கும் மக்கள் நிறைந்த ஒரு சபைக்குச் சென்று, அங்கே வெளியே நின்று கொண்டு அவர்களை பரிகசிக்கிறார்கள். இவையனைத்தும் செய்கிறார்கள். 151. பாருங்கள், ஆவிகள் மரிப்பதில்லை. மக்கள் மரிக்கிறார்கள். ஆனால் ஆவிகள் மரிப்பதில்லை பாருங்கள். பரிசுத்த ஆவி மரிக்க முடியாது. அது இயேசுவிலே இருந்தது. இப்பொழுது அவரது சபையில் இருக்கிறது. அது தொடர்ந்து, அவர் தமது சபைக்காக திரும்ப வருகிற வரைக்கிலும், அவர்களில் நீடித்தும் இருக்கும். ஏனெனில் அவருடைய ஒரு பாகமாக அவர்கள் இருப்பதினால் தான். பாருங்கள்? கிறிஸ்தவர்களை அன்றைக்கு துன்பப்படுத்தினார்கள், அவர்களை அந்நாட்களில் பரிகசித்தார்கள். அப்படிப்பட்டவர்கள் இன்றைக்கு ஜீவிக்கிறார்கள். தேவன் தன்னுடைய மனிதனை பூமியிலிருந்து எடுக்கிறார், ஆனால் தன்னுடைய ஆவியை பூமியை விட்டு எடுத்துக் கொள்ளவில்லை. பிசாசு தன்னுடைய மனிதனை எடுத்து விடுகிறான். ஆனால் ஆவியையோ பூமியிலிருந்து எடுப்பதில்லை. 152. இயேசுவின் மரணத்தை தீர்ப்பளித்த அந்த ஆசாரியர்கள், அவரை குறிசொல்லுகிறவர் அல்லது பிசாசு என்று அழைத்தார்கள்; அவர்கள் பெரிய பக்திமான்கள். அது உண்மை . அவர்கள் வேத வாக்கியத்தை எழுத்தின்படியே அறிந்திருந்தார்கள். ஆனால் அதற்குரிய உண்மையான வியாக்கியானத்தையோ அறியாதிருந்தார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த அபிப்பிராயத்தை உடையவர்களாய் இருந்தார்கள். எனவே அவர்கள் வேறு எதற்கும் செவி கொடுக்க மாட்டாதவர்களாய் இருந்தார்கள். அவர்கள் அவரைக் கண்டபொழுது, இயேசுவைக் குறித்து ஒவ்வொரு தீர்க்கதரிசியும் கூறினவைகளை நிறைவேற்றத்தக்கதாக இயேசு அப்படியே சரியாக இருந்தபோதிலும், அதை எவ்வாறு அவர்கள் காண தவறினார்கள்! அவர்கள் குருடாயிருந்தார்கள். நாம் இரட்சிப்புக்கான தருணத்தை அடையும்படி, தான் அவர்களை ஒரு நோக்கத்திற்காக குருடாக்கினார் என்று தேவன் கூறினார். 153. இப்பொழுது வேதம் மீண்டும் இதை முன்னுரைத்துள்ளது; பெந்தெகொஸ்தேயின் யுகத்தில் நாம் இருக்கிறோம். இக்காலத்தைப் பற்றி, “ நிர்வாணி, நிர்ப்பாக்கியமுள்ளவன், குருடன், அதை அறியாமலிருக்கிறான்'' என்று சொல்லப் பட்டுள்ளது. பிலதெல்ஃபியா சபையில், சபை சடங்காச்சாரம் இருந் தது. ஓ, சடங்காச்சாரமான பாப்டிஸ்டுகளே, பிரஸ்பிடேரியன்களே, பெந்தெகொஸ்தேயினரே, நீங்கள் அங்கே இருப்பதைப் பாருங்கள். சில சமயங்களில் இங்கே உட்கார்ந்து இருக்கிற உங்களை நான் குறிப்பிடுகிறதில்லை. என் செய்தி ஒலி நாடாவில் பதியப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அது எங்கே போகிறது என்பதை நான் அறிவேன். பாருங்கள்? மனந்திரும்புங்கள்! வேதத்திற்குத் திரும்புங்கள்! கிறிஸ்துவிடம் திரும்பி வாருங்கள்! 154. சரி, பூரண சுவிசேஷம் வெளித்தள்ளப்பட்டது. சபையில் இருந்த அடையாள அற்புதங்கள் இல்லாமற் போய்விட்டன. தங்கள் நடுவிலிருந்து பரிசுத்த ஆவியைப் பெற்ற மக்களை அவர்கள் வெளியே தள்ளிய பொழுது, அற்புத அடையாளங்கள் இருந்த அப்படியொரு நாளே இருந்ததில்லை என்று மறுதலிக்கவும் செய்தார்கள். இன்றைக்கும் அதே காரியத்தைத் தான் செய்கிறார்கள். அவ்வாறே இன்னும் செய்கிறார்கள். அதனுடைய ஆவியை உங்களால் காண முடியவில்லையா? நான் ஆரம்பத்தில் கூறியவாறு, நீங்கள் உங்களுடைய ஆவிக்குரிய சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள். தேவன் தாமே உங்களது இருதயத்தை திறப்பாராக. முன் கூட்டியே ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டாம். உட்கார்ந்து செவி கொடுத்து, “ பரிசுத்த ஆவியானவரே, எனக்கு வெளிப்படுத்தும், நான் காண்கிறேன். அதோ அது அவ்வாறேயுள்ளது'' என்று கூறுங்கள். 155. மத அனுஷ்டானங்கள், எங்கே அவையுள்ளன? பாப் டிஸ்டுகள், ப்ரெஸ்பிடெரியன்கள், ஏன் பெந்தெகொஸ்தேயினர் கூட, மதசடங்குகளை உடையவர்களாக ஆகிவிட்டார்கள். ஒரேயொரு காரியம் என்னவெனில், பியானோவை அடித்து வாசித்து, மேலும் கீழும் குதித்து ஆரவாரிக்கிறார்கள். பியானோ இசை நின்றதும், வெளியே போகிறார்கள். அங்கிருந்து வெளியே புறப் பட்டுப் போய், திருடி, ஏமாற்றி, பொய் சொல்லி மற்றும் இன்ன பிறகாரியங்களைச் செய்கிறார்கள். ஆனால் உண்மையான வர்களோ அப்படியில்லை. இவர்களுக்கு வம்புச் சண்டை போடவும், போதுமான முன்போகம் உண்டு. மற்றவர்களைப் பற்றியும், மற்ற காரியங்களைப் பற்றியும் பேசிக் கொண்டே யிருப்பார்கள். பாருங்கள்? மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரெஸ்பிடேரியன்கள், கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல, ஆனால் இந்த லவோதிக்கேயாவின் காலத்தில் உள்ள பெந்தெகொஸ்தே சபையுங்கூட அவ்வாறுதான் உள்ளது. 156. ஓ, உங்களுடைய முற்பிதாக்ககள் பெற்றிருந்த அந்த உன்னத நிலைக்கு நீங்கள் ஏன் திரும்பி செல்லக்கூடாது? நம்மை சுத்தி கரித்து, பரிசுத்த ஆவியால் நம்மை நிரப்பக் கூடியதும், கிறிஸ்துவை நம்மண்டை கொண்டு வரக்கூடியதுமான உண்மையான பெந்தெகொஸ்தே அனுபவத்திற்கு நாம் ஏன் திரும்பி வரக் கூடாது? அதுவே நமக்குத் தேவையாயிருக்கிறது. அதே அனுபவம்தான் இன்றைக்கும் நமக்குத் தேவை. 157. பெர்கமு என்ற வார்த்தைக்கு, ''விவாகம் செய்து கொண்ட என்று அர்த்தமாம். சடங்காச்சார ரீதியில் இருந்து வந்த நிக்கொலாய் மதஸ்தருடைய பெயர்க் கிறிஸ்தவ மதமானது, அரசியல் ரீதியிலான அரசாங்கத்துடன், அஞ்ஞான சடங்காச்சாரங்களுக்குள் விவாகம் செய்து கொண்டுவிட்டது. அஞ்ஞான சமய அனுஷ்டானங்கள், அந்நாளில் அவ்விவாகம் தான் கத்தோலிக்க சபையின் பிறப்பைக் கொண்டு வந்தது. 158. கத்தோலிக்க சபை நிசாயா ஆலோசனை சங்கத்தில் தான் தோன்றியது என்பதை எவரும் அறிவர். அதற்கு முன்பாக அது தேனால் நிக்கொலாய் மதஸ்தர் என்று அழைக்கப்பட்டது. அதனுடைய அர்த்தம் “ சபையை வென்று அடக்கியாளுதல்'' என்பதாம். அவர்கள் அதைச் செய்த பொழுது, மக்கள் மத்தியில் ஆவியானவரும், பாஸ்ட்ர்களும் இருக்க அவர்கள் விரும்பவில்லை. பாஸ்டர்கள் என்றால் மேய்ப்பர்கள் என்று அர்த்தமாம். 159. “ ஏன் மதகுரு ஒரு மேய்ப்பனாக இருக்க முடியாது-'' என்று நீங்கள் கேட்கலாம். என்னவிதமான உண்வை அவர் உங்களுக்கு தருகிறார்? பெந்தெகொஸ்தே நாளில் உண்டானது போன்ற அதே விளைவுகளை நீங்கள் பெற்றுள்ளீர்களா? நிச்சயமாக இல்லையே. “ மரியே வாழ்க'' என்ற கோஷம் பெந்தெகொஸ்தே நாளில் எங்கே காண்கிறீர்கள்? நோவீனோக்களும், தெளித்தலும், ஊற்றுதலும், திரித்துவ தேவ நாமத்தினால் (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியினால்) செய்கின்றார்கள். அவைகளை நீங்கள் பெந்தெகொஸ்தே நாளில் எங்காவது காண் கிறீர்களா? “ நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவை தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார் என்பதை இஸ்ரவேல் வீட்டார் அறியக்கடவர்கள்'' என்று இயேசு கூறினார். இப்படியிருக்க, இந்த போதகங்களை எங்கே நாம் பெற்றோம்? அது துவக்கத்தில் நிக்கொலாய் மதஸ்தருடைய கிரியைகள், பிறகு போதகமாக ஆகி, பிறகு கத்தோலிக்கம் உருவாகிட காரணமாகியது. 160. “ நான் அவர்களில் ஒருவனாக இருக்கவில்லை என்பதற்காக மகிழ்ச்சியடைகிறேன்'' என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். இப்பொழுது நீங்கள் அதைப்பற்றி ரொம்பவும் உறுதியாக இருக்க வேண்டாம். பாருங்கள்? இப்பொழுது நீங்கள் நிக்கொலாய் மதஸ்தரின் கிறிஸ்தவ மார்க்கத்தை நினைவில் கொள்ளுங்கள். அந்த கதையை நீங்கள் அறிந்து கொண்டீர்களா? இதற்கு மேற் கொண்டும் நாம் பார்க்கும் முன்னர், கவனமாக செவி கொடுங்கள். இன்றிரவில் நாம் நடு இராத்திரி வரை தங்கியிருக்க வேண்டி யிருந்தாலும், அதை நீங்கள் கிரகித்துக் கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஏனெனில் அது உனது ஆத்துமாவைப் பற்றிய விஷயமாயிருக்கிறது. “ ஓ, நான் இன்ன சபையைச் சேர்ந்தவன்'' என்று கூறக்கூடும். அது அதுவல்ல. நீங்கள் பரிசுத்த ஆவியையே பெற்றிருக்கவில்லை, சகோதரனே. நீங்கள் எத்தனை சபைகளைச் சார்ந்திருந்தாலும் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. நீங்கள் இழந்து போகப்பட்டு இருக்கிறீர்கள். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் நீங்கள் மறுபடியும் பிறந்திருக்காவிடில், நீங்கள் இழந்து போகப்படுவீர்கள். ஏனெனில் உங்களுக்கு நித்திய ஜீவன் இல்லை. நித்திய ஜீவனைப் பெற்றவர்களை மாத்திரமே தேவன் எழுப்புவார். ஏனெனில் அந்த ஒரு ஜீவன் மட்டுமே ஒழிந்து போகாமல் நிலைத்திருக்கும். 161. ஒரு சோள விதையானது... நான் ஏற்கனவே இங்கே வானொலியில் விவசாய நேரத்தில் செய்யப்பட்ட ஒரு ஒலி பரப்பைப் பற்றி கூறியிருக்கிறேன். ஹென்றிவில் என்ற இடத்திலிருந்து உள்ள மெதோடிஸ்டு பிரசங்கியாராகிய அந்த பழங்காலத்து சகோதரன் ஸ்பர்ஜனை எத்தனை பேர் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்கள்? ஒரு அற்புதமான குணாதிசயம் படைத்தவர் அவர். நாங்கள் ரெட் ஃபர்னிஷ்-ன் அங்காடியில் ஐஸ்கிரீம் விற்கும் கடையில் அமர்ந்து ஐஸ்க்ரீம் சுவைத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது எனக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு கூட்டத்தைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது வானொலியில் விவசாய ஒலிபரப்பின் நேரமாக இருந்தது. ரெட் கடையில் இருந்த வானொலிப் பெட்டியை அவர்கள் திருப்பிய பொழுது, ஒலிபெருக்கியின் வாயிலாக விவசாயம் சம்மந்தமான அந்த ஒலிபரப்பு லூயிவில்லில் இருந்து ஒலிபரப்பப்பட்டதாக இருந்தது. இயந்திரத்தின் மூலமாக செயற்கையாக, தேவையான பெட்ரோலியம், கால்ஷியம் இவைகளை செலுத்தி, செயற்கை சோளமானது உற்பத்தி செய்யப்பட்டதைப் பற்றி அதில் கூறினார்கள். அதை 4-ஹெச் க்ளப் என்ற நிறுவனம் கண்டு பிடித்ததாக கூறினார்கள். அந்த இயந்திரத்தைக் கொண்டு, செயற்கையான முறையில் சோளத்தை உருவாக்கி, அது இயற்கையான சோளத்திலிருந்து சிறிதுகூட வேறுபடாமல் அதைப் போலவே இருக்கும்படி செய்திருக்கிறார்களாம். 162. 4-ஹெச் என்ற விவசாய விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடமானது அதை உருவாக்கியுள்ளது. அவர்கள் உருவாக்கிய அந்த சோளத்தை, இயற்கையாக நிலத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட சோளத்தைப் போலவே, சோள அவல் மற்றும் சோள ரொட்டி செய்யப் பயன்படுத்தலாம். நீங்கள் அதை ஆராய்ச்சிக் கூடத்திற்கு எடுத்துச் சென்றால், அங்கே இந்த செயற்கையான வித்தையும், இயற்கையான சோளத்தையும் நீங்கள் உற்று நோக்கினால் ஒன்றிலிருந்து மற்றதை வேறுபடுத்திக் காண முடியாதபடி இரண்டும் ஒன்றுபோல் இருக்கின்றனவாம். செயற்கையிலும் இயற்கையிலுள்ளதைப் போலவே, அதே அளவு பெட் ரோலியம், கால்ஷியம், ஈரப்பசை மற்றும் இன்னும் என்ன வெல்லாம் இயற்கையான ஒரு தானிய மணியில் இருக்குமோ, அவைகள் யாவும் அப்படியே செயற்கையான வித்திலும் இருக்கின்றன. 163. வானொலி நிகழ்ச்சியில் பேசியவர் கூறினார்; நிலத்தில் இயற்கையாக விளைந்தது எது என்றும், இயந்திரம் உற்பத்தி செய்த வித்து எது என்றும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டு மென்றால், இரண்டிலுமே கைப்படி அளவு எடுத்த அதை பூமியில் விதையுங்கள். இரண்டுமே அழுகி, அதில் இயந்திரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட விதை முளைத்து மண்ணுக்கு மேலே கிளம்பி வராது'' என்றார். ஆனால் தேவன் வளர்த்த அந்த விதையோ மீண்டும் ஜீவிக்கும். ஏன்? ஏனெனில் செயற்கையான வித்து உயிர்ப்பிக்கப்பட்டு, முளைப்பிக்கப்படவில்லை. அதாவது அதனுள் ஜீவன் இல்லை. 164. நீங்கள் கிறிஸ்தவராக காட்சியளிக்கலாம், கிறிஸ்தவரைப் போல் நடந்து கொள்ளலாம்; மற்றும் உங்களால் முடிந்த அளவு நற்கிரியையும் செய்யலாம். உங்கள் சபைக்கு உண்மையாகக் கூட நீங்கள் இருக்கலாம். ஆனால் தேவனுடைய ஜீவனாக இருக்கும் நித்திய ஜீவனானது உங்களுக்குள் வந்து, பரிசுத்த ஆவியினால் நீங்கள் உயிர்ப்பிக்கப்பட்டு முளைப்பிக்கப் பட்டாலொழிய, மற்றபடி பயனில்லை. பாவ சங்கீர்த்தனம் பண்ணுதலினால் அல்ல, ஆனால் பரிசுத்த ஆவி என்னும் வரத்தினால் தான் முளைப்பிக்கப் பட முடியும். நீங்கள் அதை எவ்வாறு பெறுகிறீர்கள்? பெந்தெ கொஸ்தே நாளில் மருத்துவர் மருந்து சீட்டு எழுதிக் கொடுத்தார், அது என்னவெனில்... “ நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்'' என்பது தான் அது. பரிசுத்த ஆவியின் வரம் தான் நித்திய ஜீவன் ஆகும். தேவன் பரிசுத்த ஆவியாகிய நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டவர்களைத் தான் மீண்டும் எழுப்புவார். ஜீவனோடிருக்கிறது அது ஒன்று மாத்திரமே, அதை மட்டுமே தேவன் எழுப்ப முடியும். பார்த்தீர்களா? அது ஒன்று மாத்திரமே தேவனிடம் போக முடியும். அது தெளிவாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். தேவன் அதை அருளுவாராக. அது தெளிவாக இருக்கிறது. 165. நிக்கொலாய் மதத்தினர் சடங்காச்சார ரீதியிலாக இருந்தார்கள். அவர்கள் அஞ்ஞான சபையை விவாகம் செய்து கொண்டு, அஞ்ஞான பலிபீடங்களை உள்ளே கொண்டு வந்து அதை கிறிஸ்த வேடம் பூண்ட பீடங்களாக ஆக்கினார்கள். ஒரு அஞ்ஞான கடவுளை உள்ளே கொண்டு வந்து, பேசவும், சொல்வுமான ஒரு அத்தியட்சகரின் ரூபத்தில் அதை வைத்தார்கள். அதை அங்கே அமரவைத்து, அதற்கு அங்கியணிவித்து, ஒரு தேவனைப் போல் காட்சியளிக்க ஆவன செய்தார்கள். பார்த்தீர்களா? அது வெளியே இருக்கிறதான தாக அல்ல, அது உள்ளே இருக்கிறதாகவே இருந்தது. அதாவது இயற்கையும், செயற்கையுமான இருவித வித்துக்கள் புறத்தோற்றத்தில் ஒன்று போலவே தோற்றமளித்தன. ஆனால் வேறுபாட்டை உண்டாக்கியது எதுவென்றால், உட்புறம் தான். பாருங்கள், ஒன்றின் உள்ளே ஜீவன் இருந்தது. ஆதி கத்தோலிக்க சபையின் பிறப்பிடம் நிக்கொலாய் மதத்தினரின் கிரியைகள் மற்றும் போதகத்திலிருந்து தான், அவளே ஸ்தாபன சபைகளின் தாய் ஆவாள். 166. இப்பொழுது நீங்கள் கூறலாம்: “ நல்லது சகோ.பிரன்ஹாம் அவர்களே, நான் கத்தோலிக்கனாக இல்லாத வரைக்கிலும்...'' என்று. 167. இப்பொழுது ஒரு நிமிடம், நாம் இங்கே ஒரு வினாடி நிறுத்துவோம், வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரத்தை நாம் எடுத்துக் கொள்வோம். ஒரு நிமிடம்... நேராக அந்தப் பகுதிக்குத் திருப்புங்கள். இது யாரைப்பற்றிய வெளிப்பாடாக இருக்கிறது? இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடு அவரது சபைகளுக்கு அளிக்கப்படுதலாக இருக்கிறது. நான் வாசிக்கையில் கவனமாக கேளுங்கள். ஏழு கலசங்களையுடைய அந்த எழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிற மகாவேசியோடே பூமியில் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறி கொண்டிருந்தார்களே; வெளி.17:1 168. இந்தக் காரியத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட சாட்சியை பெற்றிருக்க நான் கேட்கிறேன்; வேதத்தில் “ ஸ்திரீ'' என்று அடையாளமாகக் கூறப்பட்டது சபையைக் குறிக்கிறது என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? நல்லது. இதே அதிகாரத்தில் கூறப் பட்டுள்ள “ மகாவேசி'', “ ஏழு மலைகள் மேல் அமைந்திருக்கிற நகரம்' தான் அவள் என்று எத்தனை பேர் அறிவீர்கள்? சரி. 169. “ தண்ணீர்கள்'' என்னப்படுவது வேதத்தில் யாரைக் குறிக்கும் என்பதை எத்தனை பேர்கள் அறிவீர்கள்? அவள் இங்கே “ திரளான தண்ணீர்கள்'' மேல் அமர்ந்திருக்கிறாள், “ தண்ணீர்'' என்று அல்ல, “ தண்ணீர்கள்'' என்று கண்டிருக்கிறது. தண்ணீர்கள் என்பதற்கு ''ஜனங்கள்'' என்று அர்த்தம். 15ம் வசனத்தில் நீங்கள் அதைப் பற்றி பார்க்கலாம். “ ... அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்கள் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக் காரருமாம்'' (பாருங்கள்? பாருங்கள்?) வெளி.17:15 170. இந்த ஸ்திரீயானவள் விசுவாசத்தை விட்டு விட்டவள் ஆவாள். அப்படிப்பட்டவளாக அவள் இல்லையா? இது உபதேசமாக இருக்கிறது. எனவே, நீங்கள் இப்பொழுது உங்களுடைய மனச்சாட்சியை உங்களுக்குப் பின்னால் நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். பாருங்கள்? அவ்வருவருப்பான ஸ்திரீ எப்படி அழைக்கப்படுகிறாள்? “ வேசி'' என்று அவள் அழைக்கப்படுகிறாள். தன்னுடைய திருமண பிரதிக்கினைக்கு உண்மையில்லாதவள் தான் ஒரு வேசி என்னப்பட்டவள். சபையானது, கத்தோலிக்க சபையானது, கத்தோலிக்க சபையானது, தான் கிறிஸ்துவின் மணவாட்டி, கிறிஸ்துவின் மனைவி என்று உரிமை கொண்டாடுகிறாள். கன்னியாஸ்திரீகள் கூட தங்கள் தலைமயிரை முழுவதும் வெட்டிவிட்டுக் கொண்டு, பந்தபாசமே இல்லாதவர்களாக இருக்கிறார்கள். “ கிறிஸ்துவுக்கே அவர்கள் பந்தபாசமுள்ளவர்கள்'' என்று கூறப்படுகிறது. அது சரி தானே? நிச்சயமாக. அல்லது வேறு யாராகிலும்... 171. நானுங்கூட ஒரு கத்தோலிக்க பின்னணியைக் கொண்டவன் ஆவேன். என்னிடம், “ நமது விசுவாசத்தைப் பற்றிய உண்மைகள்'' என்ற கத்தோலிக்கப் புத்தகம் உள்ளது. அவர்களுடைய மற்ற புத்தகங்களும் உள்ளன. ப்ராடெஸ்டெண்டுகள் மற்றும் பாப்டிஸ்டுகள், ஆகியோரே! நீங்கள் என்ன விசுவாசிக்கிறீர்கள் என்பதைப் பற்றிய புத்தகங்கள் என்னிடம் உள்ளன. நான் அவைகளை படிக்கிறேன், ஏனெனில், அவர்கள் யாராவது வந்து என்னிடம் ஏதாவது கூறினால், “ போ! உங்களுடைய புத்தகத்திலிருந்தே எடுத்து சுட்டிக் காட்டுவேன்'' என்று சொல்ல முடியும் அல்லவா? எனவே இது வெளியேறுவதற்கான வேளையானது வந்துவிட்டது. 172. முதலாவதாக, தேவன், மக்கள் அறிந்து கொள்ளும்படி செய்ய, தேசம் முழுவதிலும் அசைவாடி, அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்து காண்பிக்க வேண்டும். தேவனுடைய ஆடுகள் அவருடைய சத்தத்தை அறியும். அவர்கள் அறிவார்கள். அவர்கள் சரியாக அறிவார்கள். நீங்கள் முதலில் கண்டு பிடிக்க வேண்டும்... அறிந்து கொள்ளாமலேயே நீங்கள் புறப்பட்டுச் சென்றால்... அப்பொழுது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் அப்பொழுது முன்னைவிட இன்னும் அதிகமாக தீங்கு உண்டாக்குகிறீர்கள். அதை தேவன் தாமே கவனித்துக் கொள்வாராக. பாருங்கள்? 173. “ அந்த மகாவேசிக்கு வரப்போகும் நியாயத்தீர்ப்பை நான் உனக்கு காண்பிப்பேன்', அவள் தான் அந்த ஸ்திரீ என்று இருந்தால், அப்பொழுது அவள் இல்லாத ஏதோ ஒன்றை தான் விசுவாசிப்பதாகக் கூறிக்கொள்ள வேண்டுமே. அவள் விபச்சாரம் செய்து கொண்டிருந்தாள்! அது சரிதானே? அது சபை என்றால், அவள் தேவனுக்கு எதிராக விபச்சாரம் செய்கிறாள் என்பது புலப்படுகிறது. அது சரிதானே? விபச்சாரம் என்பது இங்கே ஆவிக்குரிய வேசித்தனம் ஆகும். அவள் தேவனுடைய வார்த்தை யல்லாத ஒரு காரியத்தைக் குறித்து மக்களுக்கு போதித்துக் கொண்டிருக்கிறாள். அது சரிதானே? உண்மையல்லாத ஒரு காரியத்தை அவள் போதித்துக் கொண்டிருக்கிறாள். அதுவே நிக்கொலாய் மதத்தினரின் காரியமாகும். இங்கேயும் அது வருவதைக் கண்டீர்களா? போப்புகளை நியமித்து, மதகுருமார்களை நியமித்து, பரிசுத்த ஆவியானவரை அகற்றிவிட்டு, “ அற்புதங் களின் நாட்கள் கடந்து போய்விட்டன'' என்று கூறுகிறார்கள். வேதம் கூறுகிறது: “ இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்று. வேதம் கூறுகிறது: “ நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று. ஆனால் அவர்களோ, “ பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' என்று கூறி, தெளிக்கிறார்கள். சுற்றிலும் ஊற்றுகிறார்கள். ஓ, என்னே! பார்த்தீர்களா? 174. இப்பொழுது இந்த ஸ்திரீ என்ன செய்கிறாள் என்பதைப் பாருங்கள்; ' “ .... பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறி கொண்டிருந்தார்களே'' 175. “ குடித்து வெறி கொண்டிருந்தார்களே'! உங்களைக் கொலை செய்வார்கள், மரணாக்கினைக்குள்ளாக்குவார்கள். சுட்டுக் கொல்வார்கள். எதையும் அவர்கள் செய்வார்கள், சகோதரரே. அவர்கள் அந்தவிதமாக காரியத்தால் குடித்து வெறித்திருக்கிறார்கள். 176. “ மது''. அதை தான் அவள் பூமியின் குடிகளுக்கு ஊற்றிக் கொடுக்கிறாள். நான் ஒரு காரியத்தை உங்களுக்குச் சொல்லட்டும்! என்னுடைய தாயும் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவள் தான். “ நானும்...'' என்று நீங்கள் கூறலாம். சரி. 177.“ அது பயங்கரமானது'' என்று நீங்கள் கூறலாம். ப்ராடெஸ்டெண்டுகளே, ஒரு நிமிடம் பொறுங்கள். ஹு (நான் இந்த ஒலிநாடாவைக் கேட்கப் போகிறவர்களுக்காகப் பேசுகிறேன், பாருங்கள்). ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டு போனான். அப் பொழுது.. சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன். வெளி.17:3 178. சிவப்பு நிறம் எதைக் காண்பிக்கிறது? அது “ ராஜரீகத்தைக் குறிக்கிறது. இராஜாக்களின் ராஜஸ்திதிக்கு உரிய நிறம் அது. “ ....தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான... ஏழுதலைகளையும் பத்து கொம்புகளையும் உடைய'' 179. இந்த ஏழு தலைகளும், ஏழு “ மலைகளாம்'', அதின் மேல் தான் அந்நகரம் அமைந்துள்ளது. அந்த ஸ்திரீதான் அந்த நகரமாகும் என்பதை நாம் அறிவோம். “ ... அந்த ஸ்திரீ இரத்தாம்பர ஆடை தரித்திருந்து...'' 180. “ ஸ்திரீ''. மிருகம் சிவப்பு நிறமுள்ளதாக இருந்தது. ஆனால் அந்த ஸ்திரீ இரத்தாம்பர ஆடை தரித்திருந்தாள். நான் அன்றொரு நாளில் மூன்று விதமான திரைகளைக் குறித்து உங்களை எச்சரிக்க வில்லையா? இன்னும் எவ்வளவு காலம் நான் உயிரோடிருப்பேன் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இதை நினைவில் கொள்ளுங்கள். “ ருஷியாவை கவனியுங்கள்'' என்று நான் அநேகம் ஆண்டுகளுக்கு முன்பாகக் கூறியது போல்... அங்கே மூன்று விதமான திரைகள் உள்ளன. ஒன்று இரும்புத்திரை (iron) மூங்கில் திரை (Bamboo) நாடு ஒன்றுள்ளது. அதுவே செஞ்சீனம் ஆகும். இந்திர நீலத்திரை (Purple) ஒன்றும் உள்ளது. அந்த திரையை கவனித்திருங்கள். அதுவே வஞ்சிக்கிறவன் ஆகும். அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு (நிக்கொலாய் மதஸ்தரின் முதல் பலிபீடம் எப்படிப்பட்டதாயிருந்தது என்று நான் ஏற்கனவே பேசியுள்ளதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துள்ளீர்களா? ஸ்திரீ சபைக்கு அடையாளமாய் இருக்கிறாள்) தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள் (உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? பலிபீடம் பொன்னினால் மூடப்பட்டிருந்தது. இங்கு பொற்பாத்திரம் உள்ளது. அதிலிருந்து அவள் வேசித்தனமாகிய மதுவை ஜனங்களுக்கு ஊற்றிக் கொடுத்தாள்). வெளி.17:4 181. அவள் ஜனங்கக்கு அதைத்தான் கொடுத்துக் கொண்டிருக்க, அவர்கள் அதை விழுங்கிக் கொண்டே இருந்தார்கள். நிச்சயமாக! அவர்கள் அவளது வேசித்தனமாகிய மதுவால் குடித்து வெறித்திருக்கிறார்கள். ஐரிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் இன்னும் மற்றவர்கள், அந்த சபைக்கெதிராக ஒரு காரியத்தை நீங்கள் சொல்லிவிட்டால் உங்களது தொண்டையை அறுத்துவிடுவார்கள். நிச்சயமாக அவர்கள் அவ்வாறே செய்வார்கள். மேலும், இரகசியம், மகா பாபிலோன் .... என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. 182. பாபிலோன் எங்கே இடம் மாறி வந்தது? பாபிலோனி லிருந்து அது பெர்கமுவுக்கு வந்தது. சாத்தான் தன்னுடைய சிங்காசனத்தை பாபிலோனிலிருந்து பெர்கமுவுக்கு இடமாற்றம் செய்து விட்டான். நீங்கள் இதை கண்டு கொள்ளத்தக்கதாக வெளிப்படுத்தின விசேஷம் முழுவதிலும் நான் ஆராய வேண்டு மென விரும்புகிறேன். மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய். 183. அவள் என்னவாயிருந்தாள்? வேசிகளுக்கு தாயாயிருந்தாள். அவர்கள் புத்திரர்களாயிருக்கவில்லை. அப்படியாயிருந்தார்கள். 184. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி)... அவர்களுடைய சபை. ஆம் ஐயா, அவர்களுடைய சொந்த புத்தகத்திலேயே, “ வேதத்தில் சபையானது "பாபிலோன்' என்று அழைக்கப்பட வில்லையா?'' என்று எழுதப்பட்டுள்ளது. சரி. 185. அவள் ஒரு வேசியாயிருந்தாள், விபச்சாரியாயிருந்தாள், அவள் வேசிகளுக்கு தாய் ஆகவும் இருந்தாள். அப்பொழுது அவளுக்கு குமாரத்திகள் இருக்க வேண்டும். அவர்கள் தாய் வேசிக்கு குமாரத்திகள் என்றால், அப்பொழுது அவர்கள் பெண்கள் என்று தெரிகிறது. அப்படியென்றால் அவர்கள் சபைகளாக இருக்கிறார்கள். ப்ராடெஸ்டெண்ட் சபை எங்கிருந்து வந்தது? அது சரிதானே? ஒரு விபச்சாரிக்கும், வேசிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இரண்டும் ஒன்று தான். 186. மார்ட்டின் லூத்தர் வெளியே வந்து, அதின் மூலம் சபையை வெளியே வந்த அவர்கள் ஒவ்வொருவரும் மீண்டும் அதே நிக்கொலாய் மதஸ்தரின் போதகத்திற்கு உள்ளே சென்று அக் கொள்கையின்படி, ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். இப்படி ஆனவுடன், அவர்களுக்கு ஜெனரல் ஓவர்சீர்கள் மற்றும் இன்னபிற மனித ஆளுகைக்காரர்கள் உண்டாயினர்; அதே ஞானஸ்நானத்தைக் கடைப்பிடித்தனர். அதேவிதமான சடங்குகள், ஆச்சாரங்கள், மற்றும் கத்தோலிக்க ஞானோபதேசம், “ மரியே வாழ்க'' ... “ மரியே வாழ்க". அல்ல, அதன் பெயர் என்ன? அதற்கு ஒப்பானது, அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணம்'' ஆகிய காரியங்களையும் பின்பற்றினார்கள். இது என்ன? ப்ராடெஸ்டெண்டுகள் பின்பற்றின இவை உண்மையாக கத்தோலிக்க உபதேசம் தான். அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம்'' - இதை வேதத்தில் எங்காவது காண்பியுங்கள். அப்போஸ்தலர்களுக்கு என்று ஏதாவது பிரமாணம் ஒன்று இருந்திருக்குமானால், அது அப்போஸ்தலர் 2:38 தான். யாவரும் அதைக் கைக்கொள்ள வேண்டும் என்று அது கட்டளையிட்டது. எந்த வொரு அப்போஸ்தலனாவது, எப்பொழுதாவது, “ நான் பரிசுத்த ரோமன் கத்தோலிக்க சபையை விசுவாசிக்கிறேன், பரிசுத்தவான்களின் ஐக்கியத்தை விசுவாசிக்கிறேன்'' என்று சொல்லும் பிரமாணத்தை உருவாக்கினார்களா? 187. திறவு கோல்களையுடையவனாயிருந்த பேதுருவும், “ தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் கிறிஸ்து இயேசுவைத் தவிர வேறு யாரும் இல்லை'' என்று கூறினான். 188. ஆனால் ப்ராடெஸ்டெண்டு சபையினரை பாருங்கள்.அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் திருப்தியடைந்திருக்க வில்லை. வெளியே வந்த ஒவ்வொருவரும், தங்களுடன் ஒரு பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்துடன் வெளியே வந்தார்கள். அது முற்றிலும் உண்மை. மார்ட்டின் லூத்தர் கூட அன்னிய பாஷைகளில் பேசியுள்ளார். அது உண்மையான காரியம். அவர், “ தேவனே, இது என்ன நான் உதிர்த்த இந்த பயங்கரமான வார்த்தைகள், அவை என்னவென்று எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார். நிச்சயமாக அவர் அதை விசுவாசித்தார். 189. காலங்கள் தோறும் அவர்கள் ஆவியைப் பெற்றிருந்தார்கள். ஆனால் தங்களுடைய எழுப்புதலுக்குக் காரணமானவர்கள் மறைந்த பிறகு, அவர்கள் எப்பொழுதும் விலகிப் போய் ஸ்தாபனத்தைத் தான் ஏற்படுத்திக் கொண்டார்கள். லூத்தரன் சபையை ஸ்தாபனம் ஆகவிடாமல் பார்த்து அதே எழுப்புதலோடு தொடர்ந்து நீடித்திருக்க விட்டிருந்தால் அப்பொழுது, அது பெந்தெகொஸ்தேயாக இருந்திருக்கும். பெந்தெகொஸ்தே சபையானது என்ன? நான் உண்மையான பெந்தெகொஸ்தே அனுப வத்தைப் பெற்றவர்களைத் தான் குறிப்பிடுகிறேன். இப்பொழுது உள்ள பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தை நான் குறிப்பிடவில்லை. அது மீண்டும் இப்பொழுது, “ பானையும், கிண்டியும்'' என்று நிலையில் உள்ளது. பாருங்கள்? ஆனால் பெந்தெகொஸ்தேயினரும், ஆதியில் நிக்கொலாய் மதத்தின் கிரியைகள் வந்தபோது சபை அதின் வழியில் சென்றது போல், இவர்களும் செய்கிறார்கள். எத்தனைபேர் அதை கண்டு கொண்டீர்கள்? அப்படியெனில், “ ஆமென்'' என்று கூறுங்கள். (சபையார் “ ஆமென்'' என்று சொல்லுகிறார்கள் - ஆசி). நீங்கள் புரிந்து கொண்டதாக கூறும் வார்த்தையை நான் கேட்பதற்காகவே... 190. “ வேசிகளின் தாய்'' என்பதைப் பாருங்கள். அவர்கள் எவ்வாறு வேசிகளாக ஆகினர்? தேவனுடைய வார்த்தைக் கெதிராக சோரம் போனதால் அவ்வாறு ஆனார்கள். தேவனுடைய வார்த்தையானது, “ மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று உரைத்துள்ள போது, ஒவ்வொருவரும் அப்படியே ஆதியில் ஞானஸ்நானம் பெற்றிருக்க, இவர்களோ, “ பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால்'' என்று கொடுத்த ஆரம்பித்தார்கள். வார்த்தையை விட்டு சோரம் போய் விபச்சாரம் செய்தல் அச்செய்கை! அது சரிதானே? பாப்டைஸோ (Baptizo) என்ற கிரேக்க வார்த்தைக்கு முழுக்குதல் என்று அர்த்தமாகையால், வேதத்தில் ஞானஸ்நானத்திற்கு பாப்டைஸோ என்ற வார்த்தையே உபயோகிக்கப்பட்டிருக்க, நீங்கள் எங்கிருந்து இந்த தெளித்தலையும், தலையில் ஊற்றுதலையும் செய்து அதுவே ஞானஸ்நானம் என்று போதித்து அவ்வாறு செய்கிறீர்கள்? அது எங்கிருந்து உள்ளே வந்தது? பரிசுத்த ஆவியைப் பெறுவதற்குப் பதிலாக, அதற்கு பதிலீடாக அந்த இடத்தில் கைகளைக் குலுக்கி கொள்ளுதல். பரிசுத்த நற்கருணையில் மொறுமொறுப்பான பிஸ்கட்டை விழுங்குதல் மற்றும் இன்னபிற காரியங்களை செய்தலை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்க முண்டாகி, பரிசுத்த ஆவி இறங்கி வந்து ஜனங்களை நிரப்பி, அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசவும் ஆர்ப்பரிக்கவும்படி செய்தது. ஆவியினால் நிறைந்திருந்த பொழுது, அவர்கள் பிறர் பார்வைக்கு குடித்தவர்களைப் போல காணப்பட்டார்கள். ஆவியைப் பெறுவதற்குப் பதிலீடாக, கைகளைக் குலுக்குதல், ஒரு சபையில் தன் பெயரைப் பதிவு செய்து கொள்ளல் மற்றும் அதுபோல ஏனைய காரியங்களையும், இவ்வாறு வார்த்தையைவிட்டு சோரம் போய் நீங்கள் செய்துள்ள ஆவிக்குரிய வேசித்தனங்களை விட்டு நீங்கள் எப்படி விலகப்போகிறீர்கள்? 191. அதைப்பற்றி நீங்கள் உங்களை வினவிப் பாருங்கள். உங்கள் சுய சிந்தையை நீங்கள் இடித்து கீழே தள்ளி, உங்கள் இருதயத்தை திறந்து உத்தமமாக இருங்கள். சகோதரரே, நாம் சாலையின் முடிவில் இருக்கிறோம். இக்கூட்டங்கள் வீணாக ஏற்பாடு செய்யப்படவில்லை. இவைகள் தேவனால் கட்டளையிடப் பட்டவையாகும். இது நிச்சயமாக அப்படித்தான் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அவருடைய ஊழியக்காரன் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இங்கே வந்து இக்கூட்டங்களை நடத்துவதற்குரிய நடத்துதலை தேவன் என் இருதயத்தில் வைத்தார் என்பதை நான் இயேசுவின் நாமத்தினால் கூறுகிறேன். இதைச் செய்வதற்காக நான் ஒரு பைசா கூட வாங்கிக் கொள்ளவில்லை. நான் வேறு எங்காவது இந்த சமயத்தில் வியாதியஸ்தருக்காக ஜெபித் துக் கொண்டு, அல்லது மீன்பிடிக்கப் போய்விடவோ சென்று, என் சம்பளத்தை வாங்கிக் கொள்ளலாம். சபையிடமிருந்து நான் சம்பளம் பெற்று வருகிறேன். ஆனால் தேவன் அதைப்பற்றி என் உள்ளத்தில் பேசினார். அவர் என் உள்ளத்தில் அதைப் பற்றி கூக்குரலிட்டுக் கொண்டேயிருந்தார். எனவே என்னால் அதை விட்டு விலகமுடியவில்லை. என்னால் முடிந்த அளவு நான் அதைச் செய்து வருகிறேன். நான் கர்த்தருடைய நாமத்தினால் இங்கே இருந்து கொண்டு, எனக்குச் செய்யத் தெரிந்த யாவற்றையும் செய்து கொண்டிருக்கிறேன். அது உங்களை கடந்து செல்ல விட்டு விடவேண்டாம். 192. இப்பொழுது ப்ராடெஸ்டெண்டுகளே! கத்தோலிக்க மற்றும் பிராடெஸ்டெண்டுகள் சபை என்று நான் குறிப்பிடுகையில் அதில் என் கருத்து என்ன? ஒன்றைப்போலவே தான் மற்றதும் உள்ளது என்பதுதான். அது மிகவும் சரியாக அப்படியே உள்ளது. 193. பெர்கமு என்றால் “ விவாகம் செய்து கொண்ட'' என்று அர்த்தமாகும். 194 . “ பிலேயாமின் போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு'' என்ற வசனத்தை எடுத்துக் கொள்வோம். 195. நமக்கு நேரம் இருக்கிறதா? இயன்ற அளவு விரைவாக நான் முடிப்பேன்; அல்லது நீங்கள் கொஞ்சம் காத்திருந்து, காலையில் மீண்டும் வர இயலுமா என்று பார்ப்பீர்களா? அல்லது இப்பொழுது இன்னும் சிறிது நேரம் காத்திருந்து தொடர்ந்து படிப்போமா? சரி. இங்கே உஷ்ணமாக இருக்கிறது. நீங்கள் இந்த வெப்பத்தில் அமைதியாக அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்? இந்த உஷ்ணமாக இடத்தை விட்டு சீக்கிரமாக புறப்பட்டுவிட நாம் முயன்று கொண்டு இருக்கிறோம். இங்கு இவ்வாறு தான் இருக்கும். ஆனால் நித்தியத்தில்... 196. அவ்வாறு அவர்கள் அப்படிப்பட்ட சபையை நிறுவிய போது என்ன நடந்தது? என் பிள்ளைகளே, மிகவும் கவனமாகக் கேளுங்கள். என்ன நடந்தது? அவர்கள் சபையை விட்டு பரிசுத்த ஆவியை அகற்றினர். அவர்களுடைய அத்தியட்சகர்கள் எவரும், மரித்தோரை உயிரோடெழுப்புவதையோ, அற்புதங்கள் செய்வதையோ செய்யவில்லை என்பது ஆச்சர்யமல்ல. இந்த பரிசுத்தவான்களில் சிலரை, தங்களுடைய சபையில் இருந்தவர்கள் என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அந்த பரிசுத்தவான்கள் பெற்றிருந்த அனுபவத்தை அவர்கள் எதிர்த்தனர், ஆனால் அவர்கள் கடந்து சென்ற பிறகு, அவர்களை தங்கள் சபையின் பரிசுத்தவான்கள் என்று சொந்தம் கொண்டாடுகின்றனர். 197. அந்த வாலிபப் பெண்ணாயிருந்த ஜோன் ஆஃப் ஆர்க் என்பவள் பற்றி, கத்தோலிக்கரே, ப்ராடெஸ்டெண்டுகளே, நான் உங்களைக் கேட்கிறேன். அவள் தன்னுடைய நாளில் பிரான்ஸில் ஒன்றும் இல்லை. கத்தோலிக்க சபை அப்பொழுது பரிசுத்தவான்களை ஒடுக்கியது. ஆனால் தேவன் அப்பெண்ணின் மேல் அசை வாடினார். அவள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தாள். அவள் என்ன செய்தாள்? கர்த்தர் அவளுக்கு நடக்கப் போகிறவைகளை பற்றி தரிசனங்களைத் தருவதுண்டு, அதினால் அவள் வரப்போகிற காரியங்களைப் பற்றி முன்னுரைக்கக் கூடியவளாக இருந்தாள். வியாதியஸ்தருக்காக அவள் ஜெபித்தாள். ஒரு தடவை மரித்துப் போன ஒரு குழந்தைக்காக அவள் ஜெபித்தபோது, உயிர் அதற்குள் திரும்பவும் வந்தது. அதுதான் பெந்தெகொஸ்தேயாகும். பாருங்கள்? கத்தோலிக்க சபையை அவள் எதிர்த்தபடியினால், கத்தோலிக்க சபையை அவள் எதிர்த்தபடியினால், கத்தோலிக்க சபை அவளுக்கு என்ன செய்தது? அவளை ஒரு விசாரணை மன்றத்தின் முன்னால் கொண்டு வந்து, அவளை “ சூனியக்காரி'' என்று நியாயந்தீர்த்து, கம்பத்தில் கட்டி வைத்து எரித்துக் கொன்றனர். 198. இப்பொழுதோ நீங்கள் அந்தப் பெண்மணியை, “ பரிசுத்த ஜோன் ஆஃப் ஆர்க்'' என்றும் பரிசுத்தவாட்டி பட்டம் போட்டு அழைக்கிறீர்கள். ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பின்னால், சபை தாங்கள் செய்தது தவறு என்று கண்டு கொண்ட போது, அவர்கள் மனமாறுதல் அடைந்து, அவளை பரிசுத்தவாட்டி ஆக்கிவிட்டார்கள். அவளுக்கு மரண தண்டனை விதித்த குருமார்களின் உடல்களை கல்லறையிலிருந்து தோண்டியெடுத்து, அவைகளை நதியில் வீசியெறிந்து விட்டார்கள். இப்படியெல்லாம் செய்து விட்டபடியினால், கத்தோலிக்க சபையின் கரங்கள் இரத்தப்பழிக்கு நீங்கலாகி இருக்க முடியுமோ? “ ஒவ்வொரு இரத்த சாட்சியின் இரத்தமும் அவளது கைகளில் காணப்பட்டது'' என்று வேதம் கூறுகிறது. “ ஒவ்வொரு கொலையும், கொன்று குவிக்கப் பட்ட ஒவ்வொரு இரத்த சாட்சிகள் மற்றும் பரிசுத்தவான்களின் இரத்தமெல்லாம் நிக்கொலாய் மதஸ்தரின் காலம் முதற்கொண்டு, பாபிலோனில் காணப்பட்டது'' என்று கர்த்தருடைய தூதனானவர் கூறினார். அதைப்பற்றி எண்ணிப்பாருங்கள். (நன்றி சகோ.பென் அவர்களே). அதைப் பற்றி எண்ணிப் பாருங்கள். 199. இன்னும் கொஞ்சம் இருக்கிறது. கிறிஸ்தவ சபையானது பாபிலோனுக்கு விவாகம் செய்து வைக்கப்பட்டது. பெர்கமு என்றால் “ விவாகம்''. 200. இப்பொழுது “ பிலேயாமின் போதகம்'', ' “ பிலேயாமின் போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.'' 201. ஓ, நான் இவைகளை நேசிக்கிறேன். அவை ஒன்றில் நீங்கள் இன்னும் தங்கித்தரித்து ஆராய்ந்து பார்த்தால்... நீங்கள் இதைக் கண்டு களித்து, அடுத்து ஏதாவது ஒன்றை ஆராய கடந்து செல்ல வேண்டும். ஏனெனில் அவை முழுவதும் தங்கக் கட்டிகளாக இருக்கின்றன. நான் தங்கத்தை தேடிக் கொண்டு போகிறவன். நான் தங்கச் சுரங்கத்திற்குச் சென்று, அதிலிருந்து இந்த தங்கக் கட்டிகளை வெட்டியெடுத்து, அவைகளை பாலிஷ் செய்து, பிரகாசிக்கச் செய்ய விரும்புகிறேன். அவைகள் ஒவ்வொன்றும் இயேசு கிறிஸ்துவை பிரதிபலிக்கிறவையாக இருக்கின்றன. அவரே அல்பாவும் ஒமெகாவுமாயிருக்கிறார். அவரே இத் தங்கத்தின் முழு மச்சமாக இருக்கிறார். என்னே, நமக்கு மாம்சத்தில் தோன்றிய தேவன் ஆவார். 202. இப்பொழுது ஒன்பது மணி ஆகிவிட்டது. ஆகவே நான் இதற்கு நேரம் எடுத்துக் கொள்ளப் போகிறதில்லை. இன்னொரு காரியமும் உள்ளது, அதை இன்றிரவில், நாம் தேவனுக்கு சித்தமானால், பார்க்க விரும்புகிறேன். எண்ணாகமம் 22 முதல் 25 முடிய. நீங்கள் இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நாளை நீங்கள் வாசியுங்கள். என்னோடு சேர்ந்து இதை இப்பொழுது வாசியுங்கள். எண்ணாகமம் 22 முதல் 25 முடிய. 203. இஸ்ரவேல் ஜனங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள் என்பதை நாம் அறிவோம். அது சரி தானே? அவர்கள் பெந்தெகொஸ்தேயினராக இருந்தனர். அவர்கள் மத்தியில் ஆவியானவர் இருந்தார். நேற்றிரவில் அளிக்கப்பட்ட செய்தியை ஞாபகத்தில் வைத்துள்ளீர்களா? மோசே சிவந்த சமுத்திரத்தை கடந்த பிறகு, அவன் பின்னால் திரும்பிப் பார்த்த போது அச்சிவந்த சமுத்திரத்தில் இரத்தமாக இருக்கக் கண்டான். எகிப்தில், தன்னையும் இஸ்ரவேலரையும், அடித்துத் துன்புறுத்தி கொடுமையாக வேலை வாங்கிய ஆளோட்டிகளின் இரத்தத்தை உயர்த்தி ஆவியில் பாடித் துதித்தான். நாம் ஒவ்வொருவரும் ஒரு மோசேயாகி ஆகி, கர்த்தராகிய இயேசு நமக்காய் சிந்தின சிவப்பான இரத்தத்தை நாம் திரும்பிப் பார்த்து, அதில் மரித்துக் கிடக்கிற ஒவ்வொரு பழைய குடிகாரனையும், பழைய பாட்டில் களையும், பழைய அருவருப்பான ஸ்திரீயையும், மற்றும் நாம் செய்த பழைய அழுக்கான கிரியைகளையும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் அவை மரித்துக் கிடக்கிறதாக காணலாம். அது நம்மை ஆவியில் பாடி களிகூரச் செய்கிறது. சிகரெட்டுகளும், புகையிலையும், கெட்ட பழக்க வழக்கங்களும், மற்றும் இன்னபிற காரியங்களும் கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்திற்குள் மரித்துக்கிடக்கிறதை நாம் காணலாம். அப்பொழுது நாம் நமது கைகளை உயர்த்தி ஆவியில் பாடிக் களிகூறலாம். 204. தீர்க்கதரிசினியாகிய மிரியாம் செய்ததைப் பாருங்கள். அவள் ஒரு தீர்க்கதரிசி என்பதை நீங்கள் நினைவில் வைத்திருங்கள். அவள் தம்புரூவை கையில் எடுத்து அடித்துப் பாடி, ஆவியில் நடனமாடினாள். இஸ்ரவேலின் குமாரத்திகளும், சிவந்த சமுத்திரக்கரையில், மிரியாமைப் பின்பற்றி, தம்புரூவை அடித்துக் கொண்டு, பாடி ஆவியில் நடனமாடினார்கள். அது உண்மையான பெந்தெகொஸ்தேயாக இருந்தது. 205. பிறகு அவர்கள் மோவாபுக்கு வருகிற பொழுது நடந்ததைக் கவனியுங்கள். நாம் இப்பொழுது பிலேயாமின் போதகம்'' என்ற விஷயத்திற்கு வருகிறோம். அதைப் பற்றி வேத வாக்கியங்களில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம். மோவாபியர் இஸ்ரவேலின் சகோதரர் தான். மோவாப் எங்கிருந்து வந்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? சரி. மோவாபியரை நான் கலப்பின வித்து என்று அழைக்கிறேன். ஏனெனில் மோவாப் லோத்தின் குமாரத்திகளிடமிருந்து பிறந்தவர்களில் ஒருவன். லோத்துக்கு அவனுடைய இரு குமாரத்திகள் மூலம் இரு புத்திரர்கள் பிறந்தனர். அவ்விருவரில் மோவாப் ஒருவன். அந்த மோவாபியரின் கோத்திரந்தான் மோவாப் தேசத்தை உருவாக் கியது. ஆபிரகாம் லோத்தின் சிறிய தகப்பனார் ஆவார். இருவரும் ஒரே வம்சத்தில் பிறந்தவர்கள்தான். நாம் அதை அறிவோம். நம்முடைய நாடகங்கள் சிலவற்றில், சமீபத்தில் கூட அவை நடத்திக் காண்பிக்கப்பட்டன. அதில் மோவாபியர் அஞ்ஞானிகளாக சித்தரிக்கப்பட்டனர். அப்படியல்ல, அவர்கள் அஞ்ஞானிகளல்ல என்பதை நீங்கள் அறிய வேண்டுகிறேன். அவர்கள் விசுவாசிகள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இஸ்ரவேல் மக்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அணிவகுத்து வரும் பணியில் கிரமமாக நடந்து கொண்டு வருகையில், அவர்களுடைய மோவாபின் தேசம் இருந்தது. அவர்கள் மோவாபியருக்கு தூதர்களை அனுப்பி, “ நாங்கள் உங்கள் சகோதரர், உங்களுடைய தேசத்தின் வழியாக கடந்து செல்ல விடுங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்கள். 206. இப்பொழுது, இங்கே, மோவாப் நிக்கொலாய் மதத்தினருக்கு அடையாளமாய் இருக்கின்றனர். அதை நீங்கள் இன்னும் சிறிது நேரத்தில் காணலாம். இஸ்ரவேலானது உண்மையான சபைக்கு அடையாளமாயிருக்கிறது. பிலேயாம் என்பவன், அவர்களுடைய அத்தியட்சகர்களில் ஒருவனாக, போப்புகளில் ஒருவனாக (இப்பொழுது கவனியுங்கள்), அவர்களுடைய மாம்ச சிந்தையுள்ள கிறிஸ்தவ மதத்திற்கு என்று இருந்தான். அவன் வரம் பெற்று இருந்தான் என்பதை நாம் காணலாம். அதில் சந்தேகமேயில்லை. அவர்களில் அநேகர் வேத தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள், மற்றும் அருமையான பேச்சாளர்கள், மற்றும் பெரிய மனிதர்கள் ஆவர். உங்களால் அதை மறுக்க முடியாது. ஆனால் “ தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்கள்''. 207. அந்த மூல பெந்தெகொஸ்தே அனுபவத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள்! அதனிடத்தினின்று விலகிப் போக வேண்டாம். விலகிச் சென்றால், நீங்கள் இழந்து போனவர்களாக ஆவீர்கள். அந்த ஆசீர்வாதத்தோடு நிலைத்திருங்கள். அதுதான், ஆசீர் வாதத்தினால் ஆசீர்வதிக்கிறவர் அவரே. 208. இஸ்ரவேலர் பயணம் செய்து வருகையில் நடந்ததைக் கவனியுங்கள். இந்த சடங்காச்சார, கலப்பட சபையிடமாக அவர்கள் வந்தடைந்து, அவர்களிடம், “ நாங்கள் ஒரு எழுப்புதலை நோக்கி உங்கள் வழியாக கடந்து செல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம். நாங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதொரு தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம். நாங்கள் உங்கள் தேசத்தின் வழியாக கடந்து செல்ல அனுமதிப்பீர்களா? எங்களுடைய கால்நடைகள் புல்லை மேய்ந்துவிட்டாலோ, அல்லது தண்ணீரைக் குடித்து விட்டாலோ, அதற்கு நாங்கள் பணம் செலுத்தி விடுகிறோம்'' என்றார்கள். 209. அதற்கு மோவாபிய இராஜாவாகிய பாலாக் என்ன செய்தான்? அவன் மிகவும் கலவரமடைந்தான். அவன் தன்னு டைய சபையிலோ, அல்லது தனது தேசத்திலோ அவ்விதமான ஒரு கூட்டம் நடைபெற விரும்பவில்லை. எனவே அவன் என்ன செய்தான்? பாலாக் அப்பொழுது போப்பாக இருந்த அல்லது அத்தியட்சகராக இருந்த, கூலிக்காரத் தீர்க்கதரிசியான பிலேயாமுக்கு ஆள் அனுப்பினான். பிலேயாம், தேவனை விட பணத்தையே அதிகம் நேசித்தான். பாலாக் பிலேயாமுக்கு, “ நீர் இங்கே வந்து அவர்களை சபித்தீரென்றால், நான் உம்மை ஒரு பெரிய மனுஷனாக ஆக்கிவிடுவேன்'' என்று சொல்லிவிட்டான். தேவன் பிலேயாமிடம் பேசினார்... இந்த இராத்திரியில் எத்தனை பிலேயாம்கள் இருக்கக் கூடும் என்று நான் அதிசயப்படுகிறேன். மெதோடிஸ்டு ஊழியக்காரர்கள், பாப்டிஸ்டு ஊழியக்காரர்கள், கத்தோலிக்க மதகுருமார்கள், பிலேயாமைப் போலவே தேவனைப் பற்றி அறிந்துவைத்துள்ளார்கள். (இரக்கம் வேண்டும்) நான் படித்திருக்கிற அதே வரலாற்றையும், அதே புத்தகத்தையும் நீங்கள் படித்திருந்தால், பிலேயாமைப் பற்றி நீங்கள் காண முடியும். 210. “ வந்து இந்த ஜனங்களை சபியும்'' என்று பாலாக் பிலேயாமுக்கு சொல்லியனுப்பி விட்டான். அதற்கு பிலேயாம், “ நான் தேவனை கேட்பேன்'' என்றான். தேவன் சொன்னார்: “ நீ போக வேண்டாம்'' என்று. 211. அடுத்த நாள் காலையில் தூதர்கள் திரும்பிச் சென்று இராஜாவிடம் பிலேயாம் சொன்னதை எடுத்துரைத்தார்கள். 212. மறுபடியும் பிரபுக்களை பாலாக் அனுப்பி, “ நான் உன்னை பெரிய மனுஷன் ஆக்கிவிடுகிறேன், நீ வா'' என்று சொல்லி அனுப்புகிறான். 213. எனவே, பிலேயாம் தொடர்ந்து தேவனிடம், மீண்டும் போகலாமா என்று கேட்கிறான். தேவன், “ அப்படியானால் நீ போ'' என்று கூறுகிறார். 214. பாருங்கள், நீங்கள் சத்தியத்தை பின்பற்ற விரும்பாவிடில்... நிக்கொலாய் மதத்தினரே, தேவன் உங்களுடைய விருப்பத்தின்படி அவர் அனுமதிக்கிறாரே என்று எண்ணலாம். தேவனுடைய மூல சத்தியம் இருக்கிறது! ஆனால் நீங்கள் தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்தை தான் எடுத்துக் கொள்கிறீர்கள். “ தேவன் எங்களுக்கு பரிசுத்த ஆவியைத் தருகிறார். அவர் எங்களை ஆசீர்வதிக்கிறார், நாங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுள்ளோம்'' என்று நீங்கள் கூறலாம். நீங்கள் பிலேயாம்கள்! பிலேயாமின் போதகத்தைப் பாருங்கள். பிலேயாம் பிடிவாதமாக இருந்ததால், தேவன் அவனை போகச் சொல்லி விட்டு விடுகிறார். அவன் தன் இஷ்டப்படி நடந்து கொள்ள விட்டுவிடுகிறார். நீங்கள் அஸ்திவாரமான சத்தியத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். வேதத்திற்கு திரும்பிச் செல்லுங்கள். “ ஓ, தேவன் எங்களை ஆசீர்வதித்திருக்கிறார்'' என்றெல்லாம் நீங்கள் கூறலாம். அவர் அதைச் செய்தார் என்று நானும் அறிவேன். 215. தேவன் பிலேயாமிடம், “ நீ போகலாம், நீ போக விரும் பினால், அந்த வழியாக நீ போக வேண்டியது அவசியம் என்றால், நீ அந்த ஸ்தாபன மார்க்கத்தில் போக விரும்பினால், அதை நீயே தெரிந்து கொள். அதில் நீ போகலாம்'' என்று கூறினார். 216. பிறகு, பிலேயாம் தன்னுடைய கோவேறு கழுதையின் மேல்... இல்லை, கழுதையின்மேல் குதித்து ஏறி, புறப்பட்டச் சென்றான். நடந்த முதல் காரியம் என்னவெனில், அவனுடைய வழியில் கர்த்தருடைய தூதனானவர் குறுக்கே நின்றார். அந்த தீர்க்கதரிசி, அல்லது போப், அத்தியட்சகர், கார்டினல், இப்படி யாக இதில் எந்த பதவியை அவன் வகித்தானோ அப்படிப்பட்ட இவன், ஐப்பிராத்து நதிக்கரையில் வாழ்ந்து வந்த இவன், தான் பதவி உயர்வை அடையப் போகிறதைப் பற்றிய சிந்தையில் இருந்ததால், ஆவிக்குரிய காரியங்களுக்கு அவன் குருடனாயிருந் தான். “ இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்'' என்று கூறப்பட்டது, பேதுரு மேல் அல்லது ரோமாபுரியில் உள்ள ஒரு கல்லின் மேல் கட்டப்படுவதாகும் என்று எண்ணப்படுவது போல, பிலேயாமும் அது சுதந்தர வீதம் என்றெண்ணினான். ஆனால் அவன் அந்த இடத்திற்குச் சென்றபோது, உருவப்பட்ட பட்டயத்தோடு கர்த்தருடைய தூதனானவர் அவனது வழியில் அவனுக்கு குறுக்காக நின்றார். அவன் அவரைக் காண முடியாதபடி குருடாக்கப்பட்டிருந்தான். அவன் ஏறியிருந்த கழுதையோ வெனில், அவரைக் கண்டு விட்டபடியினால் மேற்கொண்டும் போகாமல், பிலேயாமின் காலை சுவரோடு வைத்து உரசியது. அவன் மறுபடியும் சென்றான், மறுபடியும் கர்த்தருடைய தூதனானாவர் குறுக்காக நின்றார். தேவன் ஒவ்வொரு வாசலையும் அடைப்பார். இந்த கழுதை இன்னமும் போகாமல் நின்றது. பிலேயாம், கழுதை போகாமல் நின்றுவிட்டபடியினால், அதை அடித்தான். அந்த எளிய கழுதை தன் தலையில் அடிக்கப்பட்டு அங்கே கிடந்துவிட்டது. 217. அவனை மாற்றியது எது, தான் தவறாக இருக்கிறோம் என்று அவனை உணரச் செய்தது எது என்பதை நான் உங்களுக்கு காண்பிப்பேன். அக்கழுதை அந்நிய பாஷைகளில் பேச தேவன் அனுமதித்தார். அது ஒரு கோவேறு கழுதையல்ல. ஒரு கழுதைதான். அவன் ஏறியிருந்தது கோவேறு கழுதை என்று கூறவேண்டாம். கலப்படமாய் பிறந்த கோவேறு கழுதை அந்த அனுபவத்தைப் பெற முடியாது. பாருங்கள், அக்கழுதை மூல வித்தினின்று வந்ததாய் இருக்கிறது. 218. “ அடையாளங்கள் கடந்து போய்விட்டன, அனைத்தும் கடந்து போய்விட்டன'' என்று மோவாப் கூறுகிறது. இஸ்ரவேலுக்கோ அடையாளங்கள் பின்தொடர்ந்தன. 219. ஆனால் இந்த எளிய கழுதையானது பிலேயாமிடம் “ நான் இத்தனை ஆண்டுகளாக உம்முடைய கழுதையாயிருக்க வில்லையா? நான் எப்பொழுதாவது...'' கண் சொருகிப்போன அந்த அத்தியட்சகர், கழுதையின் மேல் உட்கார்ந்து, அதை இன்னும் அடித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அக்கழுதை அவனோடு பேசியது, கழுதை அக்கோவேறு கழுதையிடம் அந்நிய பாஷைகளில் பேசியது. 220. “ ஆம், நீ என்னுடைய கழுதை தான்'' என்று கூறினான். 221. “ உம்மை நான் எப்பொழுதாவது சுமந்து செல்லத் தவறியது உண்டா ?'' என்று கேட்டது. 222. “ இல்லை, நீ அப்படிச் செய்யவில்லை. ஆனால் என்னிடம் பட்டயம் இருந்தால் நான் உன்னைக் கொன்று போடுவேன். இக்கூட்டத்தை நிறுத்திப் போடுகிறேன். நான் அந்த உருளும் பரிசுத்தர் கூட்டத்தை இத்தேசத்தின் வழியாக கடந்து வர விடாமல் தடுப்பதற்காக போகும் என்னுடைய பிரயாணத்தில் இருக்கிறேன். நான் உன்னை கொன்று போடுவேன்'' என்று கூறினான். 223. “ நல்லது, இது விசித்திரமாயுள்ளதே, இக்கழுதை பேச நான் கேட்கிறேன்'' என்று கூறி அவன் சுற்று முற்றும் பார்த்தான். 224. ஓ பிலேயாமே! ஹு! தேவன் எப்பொழுதும் மக்களோடு அந்நிய பாஷைகளில் பேசியிருக்கிறார். “ அவர் பெந்தெகொஸ்தே நாளில் மட்டும் தான் பேசினார்'' என்று நீங்கள் கூறலாம். ஓ, இல்லை. இல்லை, இல்லை. பெல்ஷாத்சார் என்ற பாபிலோனின் இராஜா நடத்திய விருந்தில், அவர் அந்நிய பாஷையில் பேசினார், அதை சுவரில் எழுதினார். அவர்கள் மத்தியில் ஒரு மனிதன் இருந்தான். அவன் அந்நிய பாஷைகளை வியாக்கியானம் செய்யும் வரத்தைப் பெற்றிருந்தான். எனவே அவன், சுவற்றில் கையுறுப்பு எழுதியது என்ன என்பதை வியாக்கியானித்துச் சொன்னான். அதே காரியம் இன்றும் உள்ளது. 225. எனவே, வியாக்கியானம் செய்ய யாரும் அங்கே இல்லாததால், தேவன், இந்த பிலேயாம் (இந்த கார்டினல்) விழிப்படைந்து, அது என்ன என்று உணர்ந்து கொள்ளச் செய்தார். அதன்பிறகும் அந்த குருடான பிலேயாம், மேற்கொண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தான் என்பதை அறிவீர்களா? நிச்சயமாக. அவ்விதமாகத்தான் அவர்கள் இன்றைக்கும் செய்கிறார்கள். மோவாபியர்கள், நிக்கொலாய் மதத்தினர் தொடர்ந்து அப்படியே செய்கிறார்கள். தேவன் அஸ்திவாரமான உபதேசத்தை மட்டும் கொண்டிருத்தனால் கனம்பண்ண வேண்டியராயிருக் கிறாரென்றால், அப்பொழுது அவர் மோவாபையும் ஆசீர்வதிக்க கடமைபட்டவராயிருக்கிறார். ஏனெனில் பிலேயாம் ஏழு பலிபீடங்களைக் கட்டினான். சரியாக அவன் செய்தான். 226. ஏழு என்ற எண்: ஏழு சபை காலங்கள். அதன் ஆவிக்குரிய சம்மந்தத்தைக் கண்டீர்களா? அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆவிக்குரிய சம்மந்தம் என்பதை அதற்கு இன்னும் ஒரு நிமிடத்தில் நான் வரப்போகிறேன். பாருங்கள், ஆவிக்குரிய சம்மந்தம், ஏழு பலிபீடங்கள், ஏழு காளைகள் (சுத்த மிருகங்கள்), ஏழு ஆட்டுக்கடாக்கள், கிறிஸ்து வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அவருடைய வருகையை அறிவிப்பதாய் உள்ளன. 227. அவர்கள் விசுவாசித்தார்கள். அவர்கள் எதை விசுவாசித்தார்கள்? அவர்கள் யேகோவா தேவனில் விசுவாசம் கொண்டிருந்தார்கள். அவர்கள் வேறெதை விசுவாசித்தார்கள்? சுத்தமான மிருகத்தை பலி செலுத்த வேண்டுமென்பதை அறிந்திருந்தார்கள். அது சரியானது தான். மேசியா வருகிறார் என்பதை தாங்கள் விசுவாசிப்பதாக அவர்கள் கூறிக்கொண்டனர். ஏனெனில் ஒரு ஆண் ஆட்டை (ஆட்டுக்கடாவை) அவர்கள் பலியாக செலுத்தினார்கள். 228. இக்காரியத்தை நீங்கள் பாப்டிஸ்ட்டுகளின் செயலோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்களும் சரியாக இப்படிக்கொத்த காரியங்களை செய்யவில்லையா என்பதைப் பாருங்கள். அது முற்றிலும் உண்மை . 229. அப்படியானால், என்ன வேறுபாடு அங்கேயுள்ளது? மலையடிவாரத்தில் இங்கே இஸ்ரவேலர் பாளயமிறங்கியிருந்தனர். மலையுச்சியில் மோவாபியர் எந்த தேவனுக்கு எவ்விதமான பலியைச் செலுத்தினார்களோ, அதே விதமான பலியை, அதே தேவனுக்குத் தான் இஸ்ரவேலர் செலுத்தினார்கள். அதே தேவனிடம் தான் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். கலப்பின வித்தாக இருக்கிற நிக்கொலாய் மதத்தினரை அங்கே உங்களால் காண முடியவில்லையா? அதைக் கண்டீர்களா? உண்மையான ஆவிக் குரியவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? அவர்களுக்கிடையே என்ன வித்தியாசம் காணப்படுகிறது? ஒரு சாராருக்கு அடையாளங் கள் பின் தொடர்ந்து வந்தது, மற்ற சாரார் சடங்காச்சாரக்காரர்களாக இருந்தனர். ஒரு சாராருக்கோ அடையாளங்கள் பின் தொடர்ந்தன. 230. அதேவிதமான காரியம் தான் நிசாயா ஆலோசனை சங்கத்திலும் நடைபெற்றது. நிக்கொலாய் மதத்தினராகிய சடங்காச்சார கிறிஸ்தவ மதத்தினர் அங்கே இருந்தனர். பரிசுத்த ஆவியானவர் திரும்பி வந்து, “ பிலேயாமின் போதகத்தைக் கைக் கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு'' என்று கூறுகிறார். பாருங்கள்? “ நான் நிக்கொலாய் மதத்தினரின் கிரியைகளை, போதகங்களை வெறுக்கிறேன், அது பிலேயாமின் போதகமாயுள்ளது, இஸ்ரவேலருக்கு முன்பாக இடறலை போடும்படி அவன் போதித்தான்''. அதை அவன் எவ்வாறு செய்தான்? 231. பிலேயாம் அந்த ஜனங்களை சபிக்கும்படி புறப்பட்டுச் சென்ற போது, தேவன் சொன்னார்: “ நான் உன் நாவை கட்டிப் போடுவேன், நான் சொல்லுவதைத் தான் நீ சொல்ல முடியும், நான் உரைப்பதற்கு மேலகதிமாக வேறெதையும் நீ உரைக்க முடியாது. நான் ஆசீர்வதித்தவர்களை நீ சபிக்க முடியாது'' என்றார். எனவே அவன் மலையிலிருந்து கீழே உற்றுப் பார்த்தான். 232. இந்த மாய்மாலைக்காரனை பாருங்கள்! ஓ, நாம் இதைப் பற்றி விடாமல் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கலாம், பாருங்கள். அவ்வளவு விஷயம் இதில் இருக்கிறது. இந்த பாலாக் இராஜாவைப் பாருங்கள், அவனே எல்லாவற்றிற்கும் தலைமையாக இருந்தான். அவன் இந்த கள்ளத்தீர்க்கதரிசியிடம், “ நீ அங்கே போய் அவர்களுடைய பின் பகுதியைப் பார்'' என்று கூறினான். 233. அதே விதமாகத்தான், தேவனுடைய சிறு மந்தையிடம் பெரிய சபைகள் சொல்ல விரும்புகின்றன. “ நடந்தது என்ன என்று உனக்குத் தெரியுமா? அவர்களில் ஒருவனை நான் அறியேன். அடேயப்பா! அவன் என்ன செய்தான் தெரியுமா? அவன் இதைச் செய்தான், அதைச் செய்தான். அவர்கள் பெந்தெகொஸ்தே காரர்கள், நிச்சயமாக'' என்று பேசுகிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றிய உண்மையை நீங்கள் அறிந்தால், பத்திரிக்கைகள் அவர்களுடைய காரியங்களைப் பற்றி மூச்சுக் கூட விடாது. ஆனால் எங்காவது ஒரு சிறிய பெந்தெகொஸ்தேகாரர் நல்வழியை விட்டு விலகிவிட்டால் போதும், அப்பொழுது இம் முழுத்தேசம் அதைப் பற்றி எப்படியாக வம்படிப்பார்கள் என்பதைப் பாருங்கள். நிச்சயமாக அப்படித்தான் செய்கிறார்கள். ஆம், ஐயா! 234. ஆனால், பாலாக், பிலேயாமிடம், “ அவர்களுடைய மோசமான பின் பகுதியைப் போய் பார்'' என்று கூறினான். அதற்கு பிலேயாம், “ ஆம் நான் அவர்களுடைய பின்பகுதியைப் போய் பார்ப்பேன். அவர்கள் மோசமாக நடந்து கொள்வதை அந்தப் பின்பகுதி காண்பிக்கும். அவர்களுடைய கீழ்த்தரமான வாழ்க்கையை வெளிக்காட்டும், அவர்களுடைய பின்பகுதியை நான் போய் பார்ப்பேன், அவர்களுடைய கெட்ட பாகத்தை நான் பார்ப்பேன்'' என்று கூறினான். ஏனெனில் அவன் அவர்களுடைய மோசமான பகுதியை பார்த்தால், அவர்கள் அவ்வாறே இருந்தார்கள். அது உண்மை . அட்டவணையில் உள்ள ஒவ் வொரு பாவத்தையும் அவர்கள் செய்திருந்தார்கள். அது சரிதான். ஆனால் பிலேயாம் அவர்களின் மத்தியில் உள்ள அடிக்கப்பட்ட கன்மலை, வெண்கல சர்ப்பம், அவர்களின் மத்தியில் இருந்து வருகிற ராஜாவின் ஜெயகெம்பீரம், சுகமளித்தல், அடையாள அற்புதங்கள் மற்றும் அவர்களுக்கு மேலாக தொங்கிக் கொண்டு இருந்த அக்கினி ஸ்தம்பம் ஆகிய இவைகளை காணத் தவறிவிட்டான். 235. கண் சொருகிப்போன குருடனான அந்த தீர்க்கதரிசியால் அதைக் காண முடியவில்லை. இல்லை ஐயா. அனால் அவனோ இஸ்ரவேலருடைய அசுத்தமான பின்பகுதியைக் காண்பித்துக் கொண்டிருந்தான். “ அவர்களில் ஒருவன் இன்னொருவனின் மனைவியுடன் ஓடிப்போய் விட்டதை நான் அறிவேன். இதைப் பற்றி எனக்குத் தெரியும், அவன் கொஞ்சம் பணம் திருடிவிட்டான்'' என்றெல்லாம் பின்பகுதியைப் பற்றி பேசுகின்றர். அது சரி தான். அது சரிதான். நான் அதை ஒத்துக் கொள்வேன். ஆனால் அவர்கள் மத்தியிலும் அதே காரியங்கள் உள்ளன. ஆனால் அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. பாருங்கள். எனவே பாலாக் அவனுக்கு அவர்களுடைய மோசமான பாகத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தான். 236. ஆனால் தேவன் பிலேயாமிடம், “ நான் என்ன சொல்லு கிறேனோ அதை மட்டுமே நீ உரைக்க வேண்டும்'' என்றார். பிலேயாம் ஆவியினால் நிறைந்து தரிசனங்கண்டான். இஸ்ரவேலரை சபிப்பதற்குப் பதிலாக அவன் அவர்களை ஆசீர்வதித்தான். ஆமென்! அவன் சரியாக செய்தான். 237. தேவன் அடிப்படையான உபதேசங்களை மட்டும் பெற்றிருக்கிறவர்களை ஏற்றுக்கொள்கிறார் என்றால், இந்த வேத பாட சாலைகள், வேதக்கல்லூரிகள், பிஹெச்.டி. பட்டங்கள், டி.எல்.டி. பட்டங்கள், எல்லாவிதமான டி.டி. பட்டங்கள் இவைகளை தேவன் மதிக்க வேண்டுமெனில், அப்பொழுது மோவாபியர் செலுத்திய பலிகளையும் தேவன் அங்கீகரித்தாக வேண்டும். பாருங்கள்? ஆனால் அவரோ, இந்த இஸ்ரவேல் ஜனங்களின் ஆராதனையை ஏற்றுக்கொண்டு அவர்களை ஏறகெனவே ஆசீர்வதித்துள்ளார். ஏனெனில், ஆவியானர், இராஜா, “ இராஜாவின் ஜெய கெம்பீரம் அவர்களுக்குள் இருக்கிறது'' என்று கூறப்பட்டது. என்ன? என்ன? அவர் “ பரிசுத்தவான்களின் இராஜா''. மகிழ்ச்சி ஆராவாரம் அங்கே உண்டு. அதனுடைய இராஜா? இன்னொரு இராஜ்யத்தின் இராஜா. 238. இவர்கள் மதஸ்தாபனங்களாக இருக்கவில்லை யென்பதை நான் உங்களுக்கு நிரூபித்துக் காண்பிப்பேன். நான் உங்களுக்கு நிரூபித்துக் காட்டட்டுமா? அதற்காக ஒரு வேதவாக்கியத்தை நான் இங்கே குறித்து வைத்துள்ளேன் என்று நினைக்கிறேன். ஆம், ஐயா. இஸ்ரவேல் ஒரு மதஸ்தாபனமாக இருக்கவில்லையென் பதை நான் உங்களுக்கு நிரூபித்துக் காண்பிப்பேன். எண்ணாகமம் 23:9ஐப் பாருங்கள். அவர்கள் அவ்வாறில்லை என்பதை நீங்கள் அங்கே காணலாம். மோவாபியரோ ஒரு மதஸ்தாபனமாக இருந் தனர். 8ம் வசனத்தையும் எடுத்துக் கொள்வோம். “ தேவன் சபிக்காதவர்கனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக் காதவனை நான் வெறுப்பதெப்படி? " எண்.23:8 239. அவர் கூறுவதை இப்பொழுது கவனியுங்கள். “ கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, (தேவன் தான் காண்கிறார், பள்ளத்தாக்கிலிருந்து அல்ல, கன்மலைகளின் உச்சியிலிருந்து அவர் பார்க்கிறார். ஓ! அவரது கண்கள் அடைக்கலான் குருவியின் மேலுள்ளது, அவர் என்னை நோக்கிப் பார்க்கிறார் என்று நான் அறிவேன்)... கன்மலை யுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, (ஏதோ ஒரு பள்ளத் தாக்கிலிருந்து அவர்களது மோசமான பின் பகுதியை அல்ல, அவர்கள் முழுவதையும் நான் பார்க்கிறேன்'' என்று தேவன் கூறினார்)... கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்" எண்.23:9 240. இவ்வசனம் அதைத் தெளிவுபடுத்துகிறது. அவர்கள் ஒரு மத ஸ்தாபனமாக இருக்கவில்லை. அவர்கள் தேசாந்திரிகளாக, கூடாரங்களில் வசித்தவர்களாக, மூலைமுடுக்குகளில், முக்கியமில்லாத புறப்பகுதிகளில் வாழ்ந்தார்கள். அவர்களை புறக்கணித்து புறம்பாக்கினார்கள். அவர்கள் வேறு எங்கோ போக வேண்டு மென்று தேவன் விரும்பினார். அவர்கள் அலைந்து திரிந்தார்கள். 241. ஜமெய்காவில் சமீபத்தில், ஒரு அருமையான பெந்தெ கொஸ்தேயைச் சேர்ந்த வேதக்கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்ற ஒருவர் நின்று கொண்டு இருந்தார். நான் அவரிடம், “ ஓ, கர்த்தர் ஆதி பெந்தெகொஸ்தே சபையை எவ்வளவாய் ஆசீர்வதித்தார், அவர்களுக்கு சொந்தமாக ஒன்றுமேயில்லை. அவர்கள் பரதேசிகளாக அலைந்து திரிந்தார்கள்'' என்று கூறினேன். 242. “ ஊ, சகோ.பிரன்ஹாம்?'' என்றார் அவர். 243. “ ஆம் சகோதரனே'' என்றேன் நான். (அவர் ஒரு அருமையான சகோதரர், நான் அவரை நேசிக்கிறேன்). 244. “ நீர் அங்கே அதில் தவறாக இருக்கிறீர் என்பதை நான் உமக்கு காண்பிப்பேன்'' என்று பதிலுரைத்தார் அவர். 245. நான் சொன்னேன். “ நான் எங்கே தவறாக இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ள விரும்புவதால், அதைப்பற்றி சுட்டிக் காட்டினால் எனக்கு மிகவும் சந்தோஷம்தான். ஏனெனில் தேவனும், நான் தவறவிடக் கூடாது என்று விரும்புவதை அறிந்துள்ளார்'' என்று. “ நல்லது நான் தவறாக இருந்தால் அதைப்பற்றி நிச்சயம் அறிந்து கொள்ள விரும்புகிறேன் சகோதரரே, நன்றி உமக்கு'' என்றேன். 246. “ நீர் எப்பொழுதும் அந்த பெந்தெகொஸ்தே மக்களை புகழ்ந்து பேசிக் கொண்டேயிருக்கிறீர்'' என்றார் அவர். 247. நான் “ ஆம்'' என்றேன். 248. அவர் கூறினார்: “ அவர்கள் செய்ததெல்லாவற்றிலும் மிகவும் பயங்கரமான தவறை, தங்கள் ஆஸ்திகளை விற்று விட்டதன் மூலம் செய்து விட்டார்கள் என்றார். அவர் மேலும், “ சபைக்கு உபத்திரவம் வந்து போது, அவர்கள் போய் இருந்து கொள்ளத்தக்க வீடு ஒன்று அவர்களுக்கு இருக்கவில்லை. அவர்கள் வீட்டை யெல்லாம் விற்றுவிட்டபடியினால், அவர்களுக்கு வேறு போக் கிடம் இல்லை, எனவே அவர்கள் அலைந்து திரிந்தார்கள். 249. “ அது சரியானபடி தேவனுடைய சித்தமாயிருந்தது'' என்று கூறினேன். 250. “ ஏன்'' என்றார் அவர். 251. “ அவர்களுக்கு ஒரு வீடு உண்டாயிருந்தால், அவர்கள் திரும்பிப் போய் இருந்திருப்பார்கள். ஆனால் அவர்களோ, இங்குமங்கும் சிதறிப் போய், பரிசுத்த ஆவியானவர் வந்திருக்கிறார் என்னும் செய்தியை பரப்ப வேண்டியவர்களாயிருந்தார்கள்'' என்று நான் பதிலளித்தேன். 252. தேவன் தவறு செய்கிறார் என்று ஒரு போதும் சொல்லாதிருங்கள். அவர் ஒரு போதும் தவறு செய்வதில்லை. எக்காரியத்தையும் எவ்வாறு செய்ய வேண்டுமென்பதை அவர் அறிந்தேயிருக்கிறார். அவர்கள் தங்களுடைய ஆஸ்திகளை விற்று விட்டு, நாடோடிகளைப் போல் ஆகி, எவ்விடத்திலும் செய்தியை பரப்பினார்கள். அப்பொழுது அக்காலத்தில் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வேண்டி, எல்லாவற்றையும் விட்டு விட்டு நாடோடிகளாகத் திரிந்த அவர்களைக் கொண்டு செய்தியானது உலகமெங்கும் பரவி, யாவரும் அதை அறிந்திருந்தார்கள். அந்த மக்கள் ஒரு மத ஸ்தாபனத்தைச் சார்ந்தவர்களாயிருக்கவில்லை. பார்த்தீர்களா? 253. “ பிலேயாமின் போதகத்தால் நிறைந்திருக்கிறது'' என்று தேவன் மதஸ்தாபனத்தின் நிலைமையைக் குறித்து அழைக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிலேயாம், அவர்களை இந்த மதஸ்தாபன அமைப்புக்குள் கொண்டுவர இயலாத பொழுது, என்ன செய்தான் தெரியுமா? நாம் முடிவான கட்டத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம். எனவே இப்பொழுது மிகவும் கவனமாகக் கேளுங்கள். அன்றைக்கு பிலேயாம் என்ன செய்தானோ அதே காரியத்தைத் தான் நிசாயா ஆலோசனை சங்கத்திலும் இவர்கள் செய்தார்கள். எனவேதான் தேவன், “ பிலேயாமின் போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், நிக்கொலாய் மதஸ்தரின் போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு'' என்று கூறினார். 254. நிக்கொலாய் மதஸ்தினரான மக்கள் தான், பின்வாங்கி, மதஸ்தாபன அமைப்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினவர்கள். அது இறுதியாக.... அது சத்தியமானது என்று எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? அதிலிருந்துதான் ஸ்தாபனங்கள் வந்தன. தேவனுடைய சத்தியம் அதைப்பற்றி உரைக்கிறது. முடிவாக அவர்கள் உலகிலேயே மிகப் பெரிய மதஸ்தாபனத்தை உருவாக்கிக்கொண்டார்கள். அவர்கள் உருவாக்கியது என்ன? ஒரு கத்தோலிக்க ஸ்தாபனம். கத்தோலிக்கம் என்றால் என்ன அர்த்தம்? “ யூனிவர்சல்'' என்று அர்த்தம், அதாவது “ சர்வ வியாபகமான'' “ அகில உலக'' என்று பொருள். உலகளாவிய அளவில் ஒரு ஸ்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டது. “ இந்த சிறிய குழுக்களெல்லாம் ஒரே சபை அமைப்புக்குள் வந்து விட வேண்டும்'' என்று கூறப்பட்டது. நீங்கள் இதைக் கவனிப்பீர்களானால். ஓ, நான்... இன்னும் தொடர்ந்து படித்துக் கொண்டேயிருக்கிறோம். 255. கவனியுங்கள்! பாபிலோன் எது? யார் அதை ஸ்தாபித்தது? நிம்ரோது தான் பாபிலோனைக் கட்டினான். அவன் என்ன செய்தான்? அவன் ஒரு பெரிய கோபுரத்தைக் கட்டினான். ஒரு பெரிய நகரத்தை நிர்மாணித்தான். மற்ற பட்டணங்களெல்லாம் பாபிலோனுக்கு கப்பங்கட்டும்படி செய்தான். ஸ்தாபன அமைப்பு! அதுவே இவைகளின் பின்னணியாகும். நிச்சயமாக. அதே காரியம், மறுபடியும் இந்த சபைக்காலத்திற்குள்ளாக வந்து, மீண்டும் ஸ்தாபன அமைப்பை ஏற்படுத்தி, அகில உலக நாடு களையும் அதற்குள் கொண்டுவந்துவிட்டது. வேதவாக்கியத்தில் அதைப்பற்றி சரியாக உரைக்கப்பட்டுள்ளது: “ .... அந்த வேசி யானவள் வேசித்தனமாகிய மதுவை பூமியின் குடிகளுக்குக் குடிக்கக் கொடுத்தாள்'' என்று கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவள்'' என்று கூறிக்கொண்டு, அவள் வேசித்தனம் செய்து, அவர்களுக்கு ஞானோபதேசம், ஜெபப்புத்தகம் மற்றும் இன்னபிற காரியங்களைக் கொடுத்தாள். இது அவளுடைய விபச்சாரக் கிரியையாகும். ப்ராடெஸ்டெண்டுகள் அவ்வண்ணமாகவே வந்து, சரியாக அவளது பாதையை பின்பற்றினார்கள். 256. சரி, இன்னும் சிறிது தொடர்ந்து சென்று பார்ப்போம். சரி, சரி. அவர், “ இவை பிலேயாமின் போதகம்'' என்றார். 257. இஸ்ரவேலரை சபிக்க இயலாது என்பதை கண்ணுற்ற பிலேயாம் மேற்கொண்டு என்ன செய்தான்? பிலேயாம் பாலாக்கிடம், இஸ்ரவேலரை மோவாபியருடைய தேவர்களின் பண்டிகைக்கு அழைப்பது ஒரு பெரிய பண்டிகைக் கொண்டாட்டம் உண்டாயிருந்தது. அப்பண்டிகை, “ பாகால் பேயோரின் பண்டிகை'' என்றழைக்கப்பட்டது. அது அத்தேவனை அவர்கள் வணங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு பண்டிகையாகும். 258. பிலேயாமம் பாலாக்கிடம், “ பாலாக்கே, நான் உமக்கு ஒரு நல்ல யோசனையைத் தருகிறேன். நீர் மட்டும்... தேவன் அவர்களை சபிக்கவே மாட்டார். இதை நான் உனக்கு தெரிவிக்கிறேன். எனவே நாம் என்ன செய்யலாம் என்பதை உமக்குச் சொல்லுவேன். அவர்களிடமிருந்து நாம் தப்ப முடியாது. ஆனால் அவர்களை நீர் விருந்துண்ண அழைத்தால், அப்பொழுது அந்த முழுக் கூட்டத்தையும் உம் வழிக்கு இழுத்துக்கொள்ளலாம்'' என்றான். 259. பாருங்கள், கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் இதை போலத் தான் கான்ஸ்டன்டைனும் செய்தான். எனவே தான் “ பிலேயாமின் போதகம்'' என்று இக்காலத்தில் கூறப்பட்டுள்ளது. 260. அவர்கள் என்ன செய்தார்கள்? பிலேயாமின் போதகமானது பிறகு இஸ்ரவேலருக்குள் வந்துவிட்டது. மோவாபியர் அனைத்து இஸ்ரவேலரையும் இந்தப் பெரிய விருந்துக்கு அழைத்தார்கள். அவ்விருந்துக்கு இஸ்ரவேலர் எழுந்து போனார்கள். அங்கே போன போது, அந்த சௌந்தர்யவதிகளான, மோசமாக உடையுடுத்தின மோவாபிய பெண்களை இஸ்ரவேலர் பார்க்க ஆரம்பித்தார்கள். ஆம், அங்கே அடிவாரத்தில் பாளயமிறங்கின தங்களுக்குள் இருக்கும் சாதாரண பெண்களைப் போல் மோவாபிய பெண்கள் இருக்கவில்லை. “ ஓ, அவர்கள் மிகவும் அழகாக இருக்கிறார்கள், எப்படி அழகாக அவர்கள் தோற்றமளிக்கிறார்கள். அவர்கள் தங்கள் அழகையெல்லாம் வெளியே காண்பிக்கிறார்கள்'' என்றெல்லாம் கூறினார்கள். அவர்கள் அக்காரியத்தில் விழுந்துபோய், விபச்சாரம் பண்ண ஆரம்பித்தார்கள். தேவன் அவர்களை சபிக்காமற்போனால், பிலேயாம் அவர்களை இந்த ஸ்தாபன அமைப்புக்குள் கொண்டு வந்தால், அதின் மூலம் அவர்கள் மேல் தேவனுடைய கோபத்தை தேவன் சொரிய காரணமுண்டாக்கி, அவர்களை தேவனே கொன்று போடச் செய்து விடலாம் என்று பிலேயாம் திட்டமிட்டிருந்தான். தான் அவர்களை சத்திய பாதையை விட்டு வழிவிலகச் செய்து விட்டால், தேவன் தாமே அவர்களைக் கொன்றுபோட்டுவிடுவார் என்பதை அவன் அறிந்திருந்தான். 261. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெறுவதற்கு பதிலாக, புறப்பட்டுச் சென்று ஏதாவது ஒரு சபையைச் சார்ந்து கொண்டு விடுவீர்களாயின், அப்பொழுது நீங்கள் மரித்துப் போனவர்களாயிருக்கிறீர்கள்! உங்களுக்காக அல்ல இது, ஒலிநாடாவின் மூலம் இச்செய்தி சென்றடையப் போகும் மக்கள் உள்ளத்தில் இவைகள் பதிய வேண்டும் என்றே கருதி நான் இவைகளை வலியுறுத்திக் கூறுகிறேன். “ செத்தவனா யிருக்கிறான்''! சர்தை சபையின் காலத்தில் லூத்தரிடம், “ நீ உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்தும்'' என்று பொருள். “ நீ உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்''. அதைத் தான் தேவன் அங்கே கூறினார். 262. சபையானது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்கு விவாகம் செய்வதை விட்டு விலகி, மத ஸ்தாபன அமைப்புக்கு தன்னை விவாகம் செய்வித்துக் கொண்டு விட்டபடியினால், அவர்கள் ஆவிக்குரிய வேசித்தனத்தை செய்து, மரித்துப் போய் விட்டார்கள். உங்கள் நிலைமை அவ்வாறுதான் உள்ளது. சபைகளுக்குப் பேசிய போது தேவன் இவ்வாறு தான் உரைத்தார் என்று வேதம் கூறுகிறது. ஆம், பாருங்கள்? 263. இப்பொழுது நான் ஒன்றை வாசிக்க விரும்புகிறேன். 264. தேவன் என்ன செய்தார்? அவர்கள் இந்த தீமையான காரியத்தைச் செய்தபோது, அவர்கள் விபச்சாரக் குற்றத்தில் அகப்பட்டார்கள். ஒரே நேரத்தில் அவர்களுக்குள் 42,000 பேரை தேவன் கொன்றுபோட்டார். விபச்சாரம் செய்ததற்காக அவர்களில் நாற்பத்திரண்டாயிரம் பேர்களை ஒரேயடியாக தேவன் கொன்று போட்டார். சபைக்காலத்தில் அது எவ்வாறு கூறப்பட்டுள்ளது? “ கிறிஸ்தவன்'' என்று நீங்கள் உங்களை அழைத்துக் கொண்டுவிட்டு, அதே சமயம் உலகப்பிரகாரமாக நடந்து கொள்கிறீர்கள். இதுவே ஆவிக்குரிய விபச்சாரமாக இருக்கிறது. இந்த பழைய, ஒன்றுக்கும் உதவாத கோட்பாடுகளை விட்டு விலகுங்கள். ஓ, சகோதரனே, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். உளுத்துப்போன சடங்காச் சாரியங்களிலிருந்து விலகுங்கள். அவைகள் மரித்தவையாக இருக்கின்றன. (அப்போஸ்தல விசுவாசப் பிரமாணத்தை மனப்பாடமாக ஒப்பித்தல், ஜெபப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள ஜெபங்களை வாசிப்பது, மற்றும் இன்னபிற கோட்பாடுகள்). இயேசு ஒருபோதும் ஜெபத்தை புத்தகத்திலிருந்து வாசித்து ஜெபம் சொல்ல வேண்டுமென தன் ஜனங்களுக்குச் சொல்லவில்லை. “ ஜெபம் பண்ணுங்கள், ஜெபம் பண்ணுங்கள்'' என்றே கூறியுள்ளார். சரி. 265. பிலேயாமைப் போலவே, கான்ஸ்டன்டைனும் விருந்துக் கழைத்தான். இப்பொழுது கவனியுங்கள். பிலேயாமின் அஞ்ஞான பண்டிகை விருந்தைப்போலவே, கான்ஸ்டன்டைனும் அஞ்ஞான விருந்து படைத்தான். சரி, பெர்கமு சபை அவ்விருந்துக்கு வரும்படி அழைக்கப்பட்டது. இந்த விஷயத்தைக் கவனியுங்கள். 266. நான் ஒரு குறிப்பை இங்கே எழுதி வைத்துள்ளேன். நான் இதைக் குறிப்பிடாமல் அப்படியே விட்டுவிடப் போகிறேன். சரி. இக்குறிப்பை கவனித்தில் எடுத்துக்கொள்ள நான் விரும்பினேன். 267. பெர்கமு விருந்துக்கழைக்கப்பட்டது. சரி, நிசாயா ஆலோசனை சங்கத்துக்குப் பிறகு ஒரு விருந்துக்கு அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் “ விண்டர் சொலாஸ்டைஸ்'' என்ற விருந்துக்கு அழைக்கப்பட்டனர். (பூமத்திய ரேகைக்கு மிகவும் தெற்காக சூரியன் சாய்ந்திருக்கையில், அப்பொழுது டிசம்பர் 21ல் பூமியின் வடக்குப் பிராந்தியத்தில் உண்டாயிருக்கிற நேரத்திற்கு இப்படிச் சொல்லப்படுகிறது - அச்சமயம் சூரிய வணக்கக்காரர்கள் ஓர் விருந்து கொண்டாடுவது வழக்கம் - மொழிபெயர்ப்பாளர்). அதனுடைய அர்த்தம், சூரிய வணக்கத்திற்குரியது ஆகும். அது ஒரு அஞ்ஞான கடவுள் வணக்கமாகும். அது டிசம்பர் 21ம் தேதி வருகிறது. ஒரு ஆண்டில் மிகவம் குறைந்த அளவே பகல் இருக்கிற நாள் அதுதான். டிசம்பர் 25ம் தேதி வரைக்கிலும் இந்த நேர அளவு மாறுவதில்லை. அனைத்து அஞ்ஞானிகளும் அதை சூரிய வணக்க நாளாகக் கொண்டாடினார்கள். சூரியக் கடவுளின் பிறந்த நாள் எனக் கொண்டாடப்படட் டிசம்பர் 21ம் தேதி தான் வருடத்தின் மிகக் குறைந்த அளவு பகற்காலம் உள்ள நாளாகும். சபைகளைப் பற்றிய வரலாற்றைப் படித்தறிந்தவர்கள் எவரும், அந்நாளில் விக்கிரக ஆராதனைக்காரர்கள் சூரியக் கடவுளின் பிறந்த நாள் எனக் கொண்டாடினார்கள் என்பதை நன்கு அறிவர். அது ஒரு கொண்டாட்டமாக இருந்தது. 268. ரோமர்கள் தங்களது வட்டவடிவமான விளையாட்டரங் களில் அந்நாளில் பெரிய விளையாட்டுக்களை நடத்துவார்கள். அதைப்பற்றி “ பென் ஹர்'' திரைப்படத்தில் எத்தனை பேர் பார்த்தீர்கள்? ரோமானியர்கள் அவ்விதமான விளையாட்டுக்களை சூரியனின் நாளில் ரோம அரங்கசாலைக்குள், சூரியக்கடவுளின் பிறந்த நாள் கொண்டாட்டமாகக் கொண்டாடினார்கள். பாருங்கள்? 269. அவர்கள் இந்த பெரிய விருந்து கொண்டாடுதலைச் செய்து, அதற்கு நிக்கொலாய் மதஸ்தரை அழைத்தார்கள். ஓ, அது பூரணமாக உள்ளதல்லவா? “ பிலேயாமின் போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு” என்று வார்த்தைக்கேற்ப இது இல்லையா? பாருங்கள், பெர்கமுவிடம் தேவன், அவர்களுக்குக் கிடைத்திருந்த அந்த பெரிய பந்தயங்களைப் பற்றி சொல்லுகிறார். 270. இந்த நிக்கொலாய் மதத்தினர், “ இது நல்லது, அருமையாக இருக்கிறது, இந்த பெரிய பண்டிகை வருடத்திற்கொருமுறை கொண்டாடப்படுகிறது, ஆம்'' என்று எண்ணினர். ஆகவே, இந்த ஆர்ச்பிஷப் மற்றும் இப்படிப்பட்ட பதவிகளை வகித்தவர்களுக்கு வந்த அழைப்பினாலே, அவர்கள் சூரியக்கடவுளுக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடர்ச்சியாக ஆசரிக்க விரும்பினர். இவ்வாறாக அவர்கள் வேசித்தனங்களை, விபச்சாரங்களை உள்ளே கொண்டுவந்தனர், கத்தோலிக்க சபையை உருவாக்கினர். அதில் ஒவ்வொரு ப்ராடெஸ்டெண்ட் சபையுமே அங்கம் வகிக்கின்றன (ஸ்தாபனம்). தேவனுக்கு ஸ்தாபனம் எதுவும் கிடையாது. அவர் அந்தப் பெயரைக் கேட்கவே வெறுப்படைகிறார். வேதம் அவ்வாறு கூறுகிறது. அவர்கள் அதைச் செய்தபொழுது என்ன சம்பவித்தது? இப்பொழுது அந்த அஞ்ஞானப் பண்டிகைக்கு கிறிஸ்தவ நாமகரணம் சூட்டி அதை ஆவிக்குரியதாக சம்பந்தப்படுத்திக் காண்பிக்க விரும்பினர். எனவே அவர்கள் (கர்த்தராகிய இயேசுவாகிய) தேவ குமாரனின் பிறந்த நாளை (Son of God's birthday) அது ஏற்பட்ட ஏப்ரல் மாதத்திலிருந்து டிசம்பர் 25ம் தேதிக்கு மாற்றினார்கள். (எந்த அறிஞரும் அவர் ஏப்ரலில் தான் பிறந்தார் என்றறிவர். ஆவிக்குரிய வெளிப்பாடுகளைப் பெற்ற எந்தவொரு மனிதனும், அவர் பிறப்பு இயற்கையோடு சரியாக ஒத்திருந்தது என்றும், இயற்கை பூத்துக் குலுங்கும் மாதம், ஆட்டுக்குட்டிகள் மற்றும் யாவும் பிறக்க ஏற்றதான இயற்கையின் சரியான வேளையாகிய ஏப்ரலில் தான் அவர் பிறந்தார் என்பதை அறிவர்). அப்படி மாற்றிவிட்டு, அவ்வஞ்ஞானப் பண்டிகைக்கு கிறிஸ்துமஸ் எனப்பெயர் சூட்டிக் கொண்டாடினார்கள். இப்பொழுது அதில் சாண்டா க்ளாஸ் என்பதையும் சேர்த்து விட்டார்கள். ஓ, இரக்கமுண்டாகட்டும். பாருங்கள்? இன்னும் அதிகமான அஞ்ஞான பண்டிகைகளும் கிறிஸ்தவத்தோடு சேர்த்துக்கொள்ளப்பட்டு கொண்டாடப்பட்டது. அவ்வளவுதான். பிலேயாமின் விருந்துக்கழைத்தலை அங்கே காண்கிறீர்கள். “ பிலேயாமின் போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு''. இதுதான் அது. (ஓ தேவனே, அதை வெளிப்படுத்தும், பிதாவே). பாருங்கள்? ஏப்ரலில் இருந்து பிறந்தநாளை மாற்றினார்கள். 271. வரலாற்றாளர்கள் கூறுகின்றனர்: "ஏனைய ஜீவன் களெல்லாம் புறப்பட்டு வரும் மாதமாகிய ஏப்ரலில் தான் இயேசுவும் பிறந்திருக்க வேண்டும் என்பதற்கு அனைத்து சான்றுகளும் உள்ளன'' என்று. ஆனால் அவர்கள் அஞ்ஞான சூரியக் கடவுளின் பிறந்த நாளான டிசம்பர் 21ம் தேதிக்குப் பதிலாக ஐந்து நாட்களை தள்ளிவைத்து, டிசம்பர் 25 என்று வைத்துக் கொண்டு (பாருங்கள்?), அந்நாளில் இக்கொண்டாட்டத்தை ஏற்படுத்தி, அதின் மூலம் கிறிஸ்தவர்களுக்கு ஏற்றவாறும், அஞ்ஞானிகளையும் திருப்திப்படுத்தவும் இவ்வாறு சமரச ஏற்பாடு செய்தார்கள். அஞ்ஞானமும் கிறிஸ்தவமும் கைகோர்த்துக் கொண்டன. கத்தோலிக்க மதம், அஞ்ஞான மூடநம்பிக்கைகள் நிறைந்த ஒரு கூட்டமாகத்தான் உலகில் இருந்து வருகிறது. கிறிஸ்தவத்திற்கு புறம்பாக்கப்பட வேண்டியவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து இருக்கிற ஒரு ஸ்தாபனம் அது. அது சரிதான். அது உண்மை . இதற்கு உட்பட்டு இணங்கி நடந்து கொள்ளும் ப்ராடெஸ்டெண்டுகள், தாய் வேசியின் மகளுக்குரிய எல்லா சிறப்போடும் நடந்துகொள்கிறார்கள். சரியாக அப்படியே நடந்து கொள்கிறார்கள். 272.தெய்வீகத் தன்மைக்கு எதிரானதாக இருக்கும் எந்த வொன்றையும் ஏற்காமல் எதிர்க்கக்கூடியவர்களாக நாம் இருப்பதற்கு தேவன் நமக்கு உதவி செய்வாராக. பாருங்கள்? ஓ! 273. தாங்கள் செய்து கொள்ளும் வேதவிரோத காரியத்தை ஆவிக்குரிய சம்மந்தமுள்ளதாக ஆக்க இந்த பிஷப் என்ன சொன்னார் தெரியுமா? "நமக்கு இவ்வாறு செய்து கொள்ளுவதற்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் இயேசுவும், ' “ நீதியின் சூரியன்'' ஆகத்தானே இருக்கிறார் என்று அந்த அத்தியட்சகர் கூறினார். மத்தேயு 28:19ல் உள்ள “ பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால்” என்று சொல்லப்பட்டதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது போல், தங்கள் வேதப்புரட்டுக்கு சாதகமாக வசனத்தை தவறாகப் பயன்படுத்திக்கொண்டனர். ஆவிக்குரியதான வர்ணம் பூசுவதற்கு அவர்களுக்கு ஒரு சாக்குப்போக்கு, சந்து நிச்சயமாக இருக்கிறது. ஆனால் அது அவ்வாறில்லை. 274. “ இரண்டு அல்லது மூன்று சாட்களின் வாயினால் எந்தவொரு காரியமும் உறுதிப்படும்'' என்று வேதம் கூறுகிறது. தேவன் அதைக் கூறினார். அதை அவர் மூன்று தடவைகள் கூறியிருக்கிறார். எந்த ஒன்றையாவது சாட்சிகளினால் உறுதிப்படுத்த தேவன் விரும்பிய பொழுது, அப்பொழுதெல்லாம் அவர், பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரையும் அழைத்துச் சென்றார். அவர் செய்த காரியங்களிலெல்லாம் அவ்வாறாக இரண்டு அல்லது மூன்று சாட்சிகளை அவர் வைத்துக்கொண்டார். அவர் செய்த வைகளை நிரூபிக்க அவ்வாறு செய்தார். வேதம் முழுவதும் அவர் அவ்வாறே செய்தார். 275. ஆனால், பாருங்கள், இந்த சிறிய காரியங்கள் வரவேண்டிய தாயுள்ளது, அவ்வாறு இருப்பதற்காக அவர்கள் அதை எடுத்துக் கொள்கின்றனர். தேவன் அதை உலகத்தோற்றத்திற்கு முன்னரே அறிந்திருக்கிறார். அங்கே அவர்கள் அந்த ஆவிக்குரிய சாயம் பூசுவதற்கான வழிமுறையைக் கண்டுபிடித்தார்கள். அதாவது, “ அவர் தேவனுடைய குமாரனாக (S-O-N of God) இருக்கிறார். நாம் அந்த அஞ்ஞான சூரியக்கடவுளின் பிறந்த நாளை (S-U-N God's birthday) எடுத்து, அதை தேவ குமாரனின் பிறந்த நாளாக (S-O-N OF GOD'S birthday) ஆக்கிவிடலாம், ஏனெனில் அவரும் நீதியின் சூரியனாக வேறு (S-U-N OF RIGHTEOUSNESS) இருக்கிறார்''. ப்ராடெஸ்டெண்டுகள் இன்னமும் அந்த பிழைக்கு உடந்தையாக இருக்கிறார் கள். அவர்கள் நிச்சயமாக வேதத் திலுள்ளதை தங்களுக்கு சௌகரியமாக உள்ள ஒரு விஷயத்திற்காக புரட்டி மாற்றி விடுவார்கள். ஓ, என்னே ! நான்... ஒரு நிமிடம் இங்கே நிறுத்துவோம். 276. இன்னும் ஒரு சிறு காரியம் இங்கேயுள்ளது. இதையும் நாம் பார்த்து விடுவோம். கடைசியாக உள்ள இந்த வசனங்களை நாம் வேகமாக எடுத்துக்கொள்வோம். நமக்கு இயலுமா? ஆம், நல்லது, நாம் இப்பொழுது மிகமிக விரைவாக இந்த வசனத்தைப் பார்ப்போம். அதிலுள்ள முக்கியமான கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்வோம். நாம் இப்பொழுது எங்கே இருக்கிறோம். “ ஆகிலும் சில காரியங்களைக் குறித்து உன் பேரில் எனக்குக் குறை உண்டு... பிலேயாம்... (நான் அதை ஏற்கனவே எடுத்துக்கொண்டு விட்டேன்) “ ...நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளு கிறவர்களும் உன்னிடத்திலுண்டு...'' “ நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம் பண்ணுவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்...'' வெளி.2:16-17 277. என்னே! கான்ஸ்டண்டைன் அக்காரியத்தைச் செய்த போது... அவர்கள் அந்த பெரிய பண்டிகையை குறித்தபொழுது... நான் அதைவிட்டு விலகிப் போய்விட்டேன். நான் அதைப்பற்றி குறிப்பை படிப்பதற்கு முன்னால், நான் கொஞ்சம் காத்திருக்கப் போகிறேன். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் என்னை பின்னால் உள்ள காரியங்களை எடுத்துப் பேசும்படி செய்தார். “ நீ அதை சொல்லாமல் அடக்கி வைக்க வேண்டாம்'' என்று உரைக்கப்பட்டது. இங்கே அது வருகிறது ஊ - ஹூ, ஊ - ஹூ, நல்லது, அதன் காரணம் என்னவெனில்... 278. அவர்கள் அந்த பெரிய காரியத்தை நியமித்தபோது, (நீங்கள் புரிந்து கொள்ளத்தக்கதாக, என்ன நடந்தது என்பதைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லுவேன்) அது தான் ஆயிரவருட காலத்திற்கு பிந்திய காலம் பிறந்ததாக இருக்கிறது. ஏனெனில் சபையானது ஐசுவரியமடைந்துவிட்டது, அது எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு ஐசுவரியமடைந்துவிட்டது. அது இப்பொழுது என்ன நிலையை அடைந்துவிட்டது? மிகவும் அதிகாரமுள்ளதாக ஆகி விட்டது. அது அரசாங்கத்திற்கும் மேலாக மேலாண்மை உள்ளதாக ஆகிவிட்டது. இப்பொழுது சபையும் அரசும் ஒன்றாக இணைந்து விட்டன. 279. இப்பொழுது தேவனுக்கு ஒரு இராஜ்யம் கிடைத்து விட்டதா? பிசாசானவன் இயேசுவுக்கு உலகத்தின் இராஜ்யங்களையெல்லாம் காட்டி, “ இவை ஒவ்வொன்றும் என்னுடையவை, எனக்குப் பிரியமானதை அவைகளுக்குச் செய்கிறேன்'' என்று கூறினான். அப்படியிருக்க தேவனையும் பிசாசையும் ஒன்றிணைத்து விட முடியுமா? ஓ, நீங்கள் அவ்வாறு செய்ய முடியாது! நிச்சயமாக அவ்வாறு நீங்கள் செய்ய முடியாது. அதனால்தான் அரசானது ஸ்தாபனமாக உள்ளது. தேவன் இந்த ஸ்தாபனம் அல்ல. நீங்கள் தேவனை ஸ்தாபனம் ஆக்க முடியாது. 280. ஆனால் அவர்கள் அன்றைக்கு அவ்வாறு ஆக்கிவிட்டார்கள். கிறிஸ்தவ மதம் என்றழைக்கப்பட்ட தங்களுடைய சபையை ரோமன் இராஜ்யத்தோடு முழுவதும் இணைத்துக் கொண்டார்கள். அங்கு இருந்த ரோம அத்தியட்சகர் தான் எல்லாவற்றிற்கும் மேலாக அதிகாரம் உள்ளவராக இருந்தார். அவரை போப் என்று அழைக்கத் துவங்கினர். ஆனால் அவர் முதலில் அத்தியட்சகராகத்தான் இருந்தார். முதல் போப்பாக ஆனவர் மூன்றாம் போனிபேஃஸ் என்பவர் ஆவார். 281. இவ்வாறாக அவன் ஒரு போப்பை அங்கே ஏற்படுத்திய போது, அவர்களுக்கு மனித உருவில் கிடைத்துள்ள ஒரு கடவுள் என்றே கருதினர். அவர்களுக்கு ஒரு பெரிய பலிபீடம் இருந்தது. அவர்களுக்கு எல்லாச் செல்வங்களும் உண்டாயிருந்தன. அவர்களுக்கு மகத்தான சலவைக்கற்கள், பொருந்திய முத்துக்களினால் அலங்கரிக்கப்பட்ட பீடங்கள் இருந்தன. பெரிய ஆலயக் கட்டிடங்கள் அவர்களுக்கு இருந்தன. அவர்கள் அரசாங்கத்தின் மேலும் ஆதிக்கம் உடையவர்களாக இருந்தனர். என்ன சொன்னார்கள் தெரியுமா? “ அதுவே ஆயிரவருஷ அரசாட்சி'' என்று அவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். “ யூதர்களுக்குள்ள வாக்குத் தத்தங்களெல்லாம் இப்பொழுது அவர்களுக்கு கிடையாது, அவர்களை தேவன் கைவிட்டார்'' என்றார்கள். (தேவன் அவ்வாறு தன்னால் செய்ய இயலாது என்று கூறியிருக்கிறார்). இவ்வாறு கூறி, கர்த்தராகிய இயேசு வருவதற்கு முன்னால், ஆயிர வருஷ அரசாட்சியைக் கொண்டு வந்து விடலாம் என்று முயன்றார்கள். ஆனால் இயேசு வருகிற பொழுதுதான் ஆயிர வருட அரசாட்சி ஆரம்பிக்கிறது. 282.அந்த இடத்தில் தான், “ ஆயிர வருட அரசாட்சிக்குப் பிறகு உள்ள காலம்'' என்ற கொள்கையின் பிறப்பிடமாகியது. அக்காரணத்தினால்தான் கத்தோலிக்கர்கள் இன்று வரையிலும் இயேசுவின் வருகையைக் குறித்து உபதேசிக்கிறதில்லை. “ அதெல்லாம் சபையில் இருக்கிறது. இதுவே ஆயிர வருஷ அரசாட்சி. சபைக்கு யாவும் சொந்தமாக இருக்கிறது. இதுதான் அது'' என்று கூறினர், பாருங்கள், இயேசுகிறிஸ்து திரும்பி வராமலேயே ஆயிரவருட அரசாட்சி நடக்கிறது என்ற அவர்களின் கொள்கையைப் பார்த்தீர்களா? இச்சபையின் காலம் கான்ஸ்டன்டைன் கொலை செய்யப்படும் வரைக்கிலும் நீடித்தது. அது கி.பி.312 முதல் 606 முடிய உள்ள காலம் வரை நீடித்தது. மூன்றாவது போனிபேஃஸ் என்பவன் அகில உலகத்திற்கும் அத்தியட்சகராக, அல்லது அகில உலக சபையின் முதல் போப்பாக ஆக்கப்பட்டான். 283. நாம் இப்பொழுது 17ம் வசனத்தை எடுத்துக்கொண்டு, முடித்துவிடுவோம். தேவனுக்கு ஸ்தோத்திரம். பாருங்கள்? “ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ள வன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப் பட்டதும், அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது"வெளி.2:17 284. இதை நாம் நாளை இரவு வரை காத்திருந்து பார்ப்போமா, அல்லது இப்பொழுதே பார்த்து விடுவோமா? (சபையார், “ இப்பொழுதே'' என்று பதிலளிக்கிறார்கள் - ஆசி.) 285. பரமபிதாவே, இப்பொழுது இந்த ஜனங்களும், இந்த ஒலி நாடாக்கள் போகிற எல்லா இடங்களில் அதைக் கேட்கிற ஜனங்களும் இதைப் புரிந்து கொள்ளும்படி கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் உதவி செய்தருளும். எனக்கு நீரே இந்த தெய்வீக வியாக்கியானத்தை அளித்தீர் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ளச் செய்யும். ஆமென். ....ஜெயங் கொள்ளுகிறவனுக்கு.... 286. நீங்கள் முதன்மையாக இதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய காரியம் என்னவெனில்: ஒவ்வொரு சபைக் காலத்திற்குரிய செய்திகளை தேவன் சபையை விளித்துக் கூறவில்லை. ஆனால் அந்தந்த சபைக் காலத்திற்குரிய தூதனை விளித்தே அவைகளை கூறியுள்ளார். முதல் சபைக்கு என்ன சொல்லப்பட்டது என்று பாருங்கள். “ ...எபேசு சபையின் தூதனுக்கு...'' (அது சரியா?) 287. வெளி. 2:8 “ ஐ எடுத்துக்கொள்ளுங்கள். “ ...சிமிர்னா சபையின் தூதனுக்கு... 288. நல்ல து, 12ம் வசனம்: “ ...பெர்கமு சபையின் தூதனுக்கு...'' (அது சரியா?) 289. செய்தியானது சபையின் தலைவனுக்குத் தான் கொடுக்கப்படுகிறது. அச்செய்தியிலிருந்து விலகிச் செல்லுகிறவனுக்கு தேவன் உதவி புரிவாராக. ஆனால் அது ஒரு தூதனுக்குக் கொடுக்கப்பட்டது. அத்தூதன் அவருடைய கரத்தில், அவருடைய ஆதிக்கத்திற்குள் இருந்துகொண்டு, அவருடைய வலது கரத்திலுள்ள ஒளியையும் வல்லமையையும் கொடுத்துக்கொண்டிருக்கிறதாக இருக்கிறான். அவர்களே அவருடைய வலது கரமாக இருக்கிறார்கள். அதாவது, அவர்கள் இப்பூமியில் இருக்கையிலேயே, அதிசிரேஷ்டமான உன்னத அதிகாரத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் அவரிடத்திலிருந்து வரும் ஒளிகளாக, அந்த சபைக் காலத்திற்கு ஒளியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறவர்களாக இருக்கிறார்கள். “ சபையின் தூதனுக்கு" என்பதைப் பாருங்கள். அந்தந்த சபைக் காலத்திற்கு பொறுப்பாயுள்ள நட்சத்திரமாகிய தூதர்களை அழைத்து அவர் இவைகளை கூறியுள்ளார். சபையின் காலத்திற்குரிய தூதன் வார்த்தையைப் பிரசங்கியா திருந்தால், அவனே அதற்கு பொறுப்பாளியாயுள்ளான். அது உண்மை . நியாயத்தீர்ப்பில் அவன் அதற்கு பதில் சொல்லி யாக வேண்டும். 290. சமீபத்தில் நான் கண்ட அந்த தரிசனத்தைப் பற்றி சொன் னேன். அதை எத்தனை பேர்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? நான் என் படுக்கையில் படுத்திருக்கையில், பரிசுத்த ஆவியானவர் வந்தார். நான் திரும்பிப் பார்க்கையில் அங்கே என் மனைவியைக் கண்டேன். நான் அங்கே கட்டிலில் படுத்திருந்தேன். அதே சமயத்தில் தேவ சமூகத்திற்குப் போனேன். அங்கிருந்த எல்லா மக்களையும் நான் பார்த்தேன். அதைப்பற்றி நான் கூறியதை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களா? நீங்கள் அனைவருமே நினைவில் வைத்துள்ளீர்கள். பாருங்கள்? 291. நான் கேட்டேன்: “ ஏன், அவர்கள்...'' 292. “ அவர்கள் உம்முடையவர்கள்'' என்று அவர் கூறினார். 293. “ அவர்கள் யாவரும் பிரன்ஹாம் குடும்பத்தினரா?" என்று கேட்டேன். 294. அவர், “ இல்லை'' என்றார். அவர்கள் இலட்சக்கணக்கில் இருந்தார்கள். 'அவர்கள் உன்னுடைய ஊழியத்தில் மனந்திரும் பியவர்கள்' என்றார். 295. “ மனந்திரும்பியவர்களா?'' என்றேன் நான். 296. “ இதோ அங்கே நீ பார்த்த ஒரு பெண்மணியை இளவயதும் அழகும் உள்ளவள் என்று நீ மெச்சினாயே. உலகத்தில் அவள் 90 வயதை கடந்தவளாய் இருக்கையில், நீ அவளை கிறிஸ்துவண்டை நடத்தினாய்'' என்றார். 297. ஓ, அப்படியென்றால் எனக்கு இது பயமாக இருக்கிறது'' என்றேன் நான். 298.“ நாங்கள் கர்த்தருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்'' என்றார் அவர். 299 . “ நான் அவரைக் காண விரும்புகிறேன்'' என்றேன். 300. “ அவரை நீங்கள் இப்பொழுது காண முடியாது, ஆனால் அவர் வருவார். நாங்கள் அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அவர் வரும்போது முதலில் உம்மிடம் வருவார். நீர் பிரசங்கித்த சுவிசேஷத்தின்படியே நீங்கள் நிதானிக்கப்படுவீர்கள். நாங்கள் உம்முடைய குடிகளாக இருப்போம்'' என்று அவர் கூறினார். “ இவர்களுக்கெல்லாம் நான் பொறுப்பாளியா?'' என்று கேட்டேன். “ எங்கள் யாவருக்கும்'', என்றார். “ நல்லது, ஒவ்வொருவரும்...?'' என்று சொன்னேன். “ நீர் ஒரு தலைவனாகப் பிறந்தீர்'' என்றார் அவர். “ ஒவ்வொருவரும் பொறுப்புள்ளவர்களா?'' என்று நான் கேட்டேன். “ ஒவ்வொரு தலைவனும்'' என்று பதிலளித்தார் அவர். “ பரிசுத்த பவுலைப் பற்றி என்ன?'' என்று நான் கேட்டேன். “ அவர் தன் காலத்திற்கு பொறுப்பாளியாவார்'' என்றார். “ நல்லது, நான் பவுல் பிரசங்கித்த அதே சுவிசேஷத்தையே பிரசங்கித்தேனே'' 301. அப்பொழுது இலட்சக்கணக்கான சப்தங்கள்: “ நாங்கள் அதின் பேரில் தான் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்'' என்று ஏகமாய் கூறின. (சபையார் களிகூர்ந்து, “ ஆமென்'' என்று கூறுகிறார்கள்-ஆசி). “ இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்'' 302. எனவே தேவனுடைய தூதனாகிய, சபையின் செய்தியாளன், தான் வசனத்தைப் பிரசங்கிக்காமல் இருந்தால், பதில் சொல்ல வேண்டிய பொறுப்புள்ளவனாயிருக்கிறான். சரி. 303. “ மறைவான மன்னா''. அதைப்பற்றி முடிந்த அளவு சிறப்பான வியாக்கியானத்தை நாம் தருவோம். “ மறைவான மன்னா'' என்பது எதற்கு சாயலாக இருக்கிறது? மறைவான மன்னா என்பது, வேதத்தில் சமூகத்தப்பம் எனப்படுவதாகும். அது ஆசாரியர்களுக்கு மட்டும் புசிப்பதற்கென உள்ளதாகும். எத்தனை பேர்கள் அதை அறிந்திருக்கிறீர்கள்? பாருங்கள்? அது சபையாருக்கு அல்ல... சபையாருக்கென உள்ள அப்பம் உண்டு, ஆனால் ஆசாரியனுக்கென்றே பிரத்தியேகமாக உள்ள ஒரு அப்பமும் உண்டு . 304. இது தானே ஒரு சிறப்பான அப்பமாகும், மறைவான மன்னா அது. அது என்ன? நமது மன்னா யார்? கிறிஸ்துவே நமது மன்னா. யோவான் எழுதின சுவிசேஷம் 6ம் அதிகாரம் 48 முதல் 50 முடிய உள்ள வசனங்கள், வேண்டுமானால் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இயேசு கூறினார், “ வானத்திலிருந்து தேவனிடமிருந்து வந்த ஜீவ அப்பம் நானே''. மன்னா. 305. நல்லது, “ மறைவான மன்னா'' என்பது என்ன? சபையார் யாவருக்கும் இந்த மன்னா கொடுக்கப்படுவதில்லை. வார்த்தையைப் பற்றி வெளிப்பாடு சபையின் தூதனுக்குத்தான் ஊற்றப்படுகிறது. பாருங்கள்? வார்த்தையைப் பற்றிய வெளிப்பாடு அந்தந்த காலத்திற்கு உரிய தூதனுக்கு அளிக்கப்படுகிறது. அது மற்றவர்களுக்கு மறைக்கப்பட்டு, (அதுவே மறைவான மன்னா), சபையின் தூதனுக்கு அளிக்கப்படுகிறது. நீங்கள் அதைக் கிரகித்துக் கொண்டீர்களா? கிறிஸ்து யார் என்பதைப் பற்றிய வெளிப்பாடு மற்றவைகளைவிட சற்று மேலானதாக, சற்று மேலான அழைப்பைக் கொண்டதாக இருக்கிறது. 306. லூத்தர் அதை கண்டு கொண்டாரா என்பது தெரியவில்லை. ஓ, பரிசுத்த மார்ட்டின் அதைக் கண்டு கொண்டாரா என்பது தெரியவில்லை. ஐரேனியஸ் பற்றியும் தெரியவில்லை. சபையானது இம்மனிதர்களையெல்லாம் அவர்கள் இறந்த பிறகு பரிசுத்தவான்களாக நியமிக்கவில்லை. அவர்களெல்லாம் இவர்களுக்கு பரிசுத்தவான்கள் அல்ல ஆனால் அவர்களோ அடையாளங்கள் தங்கள் ஊழியத்தில் கொண்டவர்களாக இருந்தனர். கத்தோலிக்க சபையோ, தங்களுடைய அத்தியட்சகர்கள் போன்றவர்களை, அவர்கள் இறந்தபிறகு பரிசுத்தவான்கள் என்று அறிவித்தது. 307. சமீபத்தில் ஒரு பெண்மணி ஒரு ஆங்கில புத்தகக் கடைக்குச் சென்று, “ பரிசுத்த மார்ட்டின் வாழ்க்கை சரிதை” என்ற புத்தகத்தை வாங்கச் சென்றாள். அவள் “ பரிசுத்த மார்ட்டின்'' என்று சொன்னதும். 308. புத்தகக்கடைக்காரர், புத்தக அலமாரியை இழுத்துப் பார்த்து விட்டு, “ அவர் வரலாற்றில் அவ்வளவாய் அறியப்பட்டவரல்ல, அவர் இறந்த பிறகு அவரைப் பரிசுத்தவான் என சபை ஆக்க வில்லையே'' என்றாராம். பாருங்கள்? இன்று வரையிலும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் தேவனோ அவருடைய நாமத்தை அறிந்திருக்கிறார். மார்ட்டின் யார் என்று தேவன் அறிவார். 309. பாருங்கள், அதுவே உள்ள வேறுபாடாகும். சிலர் தங்களுடைய நாமங்களை சில பெரிய ஸ்தாபனங்களில் பதிந்து கொண்டு விடவேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் தேவனுடைய ஜனங்களோ அவ்விதமான காரியத்தை புறக்கணித்து விடுகிறார்கள். அவர்கள் பெரிய ஆடம்பரமான காரியங்களை விரும்புகிறதில்லை. அவர்கள் பணிவாகவே இருக்க விரும்பு கிறார்கள். தாழ்மையையே விரும்புகிறார்கள். மேலே செல்லும் வழி கீழே உள்ளது. “ தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். தன்னைத் தான் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்'' அவர் தன்னைத் தான் தாழ்த்தினார். ஏதோ ஒரு பெரிய ஆளாக உங்களை காண்பித்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் எப்படியிருக் கிறீர்களோ அப்படியே இருங்கள். பாருங்கள்? தாழ்மையாயிருங்கள். தேவனுக்கு முன்பாக எளிமையாக இருங்கள். உங்கள் பார்வையிலும் நீங்கள் எளிமையாக இருங்கள். உங்களைப் பார்க்கிலும் மற்றவர்கள் உயர்ந்தவர்கள் என்று எண்ணிக் கொள்ளுங்கள். “ ...உங்களில் பெரியவனாயிருக்க விரும்புகிறவன் உங்கள் யாவருக்கும் ஊழியக்காரனா யிருக்கக்கடவன்'' என்று கூறப்பட்டுள்ளது. 310. தன் அரையைக் கட்டிக்கொண்டு, சீஷர்களின் பாதங்களைக் கழுவின இயேசு கிறிஸ்துவைவிட உயர்ந்தவர் யார் இருக்க முடியும்? அவர் பாதங்களை கழுவிவிடுகிற ஒரு அடிமையைப் போல் ஆனார். பரலோகத்தின் தேவன், வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவர், அங்கே கால்களில் படிந்த தூசியோடும், சாணத்தோடும் உள்ள பாதங்களோடும், அழுக்கான ஆடைகளோடும் இருந்த அந்த மீன்பிடிக்கிறவர்களின் பாதங்களை (ஓ!) கழுவிவிடுகிற ஒரு அடிமை வேலைக்காரனைப்போல், கழுவி சுத்தம் பண்ணிக்கொண்டிருக்கிறார். அப்படியிருக்க நாமோ, நம்மை ஏதோ பெரிதாக நினைத்துக்கொள்ளுகிறோம். 'நாங்கள் டாக்டர் பட்டம் பெற வேண்டும், பிஹெச்.டி. பட்டம் பெறவேண்டும்'' என்று எண்ணுகிறீர்கள். ஓ, என்னே ! அது கிறிஸ்துவுக்குரிய சிந்தையல்ல. அது அன்புள்ள இயேசு கிறிஸ்துவை காண்பிக்கிறதாக இல்லை. அவர் யாவர்க்கும் வேலைக்காரனாக ஆனார். அது உண்மை . அவர் நமக்குச் செய்தது போலவே நாமும் ஒருவருக்கொருவர் செய்யும்படி நமக்கு அவர் முன்னுதாரணமாக இருந்து நமக்குப் போதித்தார். ஓ அதுவே என்னுடைய கர்த்தர். அவர் பெரியவராக இருப்பதற்கு காரணம் அவர் சிறியவரானதால்தான். பாருங்கள், அதுவே அவரை அந்நிலைக்கு உயர்த்தியது. 311. என் வாழ்க்கையில் சில பெரிய மனிதர்களை நான் சந்திக்கும் சிலாக்கியம் கிடைத்தது. தாங்கள் பெரிய மனிதர்கள் என்று எண்ணிக்கொண்டிருந்த சில மனிதர்களை சந்திக்கும் சிலாக்கியமும் எனக்குக் கிடைத்தது. ஒரு உண்மையான பெரிய மனிதன், நீங்கள் தான் பெரியவர் என்று உங்களை நினைக்க வைக்கிறதற்கேதுவாக செய்து, தன்னை ஒன்றுமில்லாதவராகக் காட்டுகிறார். பாருங்கள்? இராஜாக்களையும், உண்மையிலேயே பெரிய மனிதராயிருக்கிறவர்களையும் சந்தித்திருக்கிறேன். உண்மையான, உறுதியான கிறிஸ்தவர்களை, நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் ஒட்டுப் போடப்பட்ட உடைகளை உடுத்தினவர்களாக இருந்தார்கள். இன்னும் சிலர் பிரசங்க பீடத்திற்கு வருகையில், எளிமையாக உடையுடுத்தியிருப்பார்கள். அப்படியிருக்க... பாருங்கள்? ஓ, என்னே ! நல்லது, இது வரையிலும்... சரி. 312. “ மறைவான மன்னா" என்பது சிறப்பானதொன்றாகும். அதில் என்ன அப்படிச் சிறப்பு உள்ளது. பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களா அவை? இல்லை, அது முழு சபைக்கும் உரியதாகும். ஆனால் “ மறைவான மன்னா'' என்றால், அது தானே ஒரு விசேஷமான வெளிப்படுத்துதலாயிருக்கிறது. ஏனெனில் மற்றவர்களுக்கு அவன் போதிக்க வேண்டியவனாயிருக் கிறபடியால், அது அவனுக்கு கொடுக்கப்படுகிறது. பாருங்கள்? மறைவான மன்னா என்பது, மற்றவர்களுக்கு போதிக்கும்படி, சபையின் தூதனுக்கு, வேதத்தின் பேரில் ஏனையோரைக் காட்டிலும் சற்று கூடுதலான அறிவை தேவன் கொடுத்தலாகும். அவன் அவ்வாறுதான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது சரியா? நீங்கள் உங்களுடைய மேய்ப்பனைவிட (பாஸ்டரை விட) மேலாக இருந்து விடமுடியாது. அதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களைப் போஷிப்பதற்காக தேவன் ஏற்படுத்தியுள்ள மேய்ப்பன் அவன். அவன் மேய்ப்பனாக (பாஸ்டர் ஆக) இருப்பானெனில், ஆடுகளைப் போஷிப்பதற்காக உள்ள மறைவான மன்னா எங்கிருக்கிறது என்பதை அவன் அறிந்திருக்க வேண்டும். அது அப்படித்தானே? சற்று சிறப்பானது அது. இதை ஒரு நிமிடம் கவனித்துப் பாருங்கள். வெளிப்படுத்துதலாகிய மறைவான மன்னா. 313. இப்பொழுது, “ வெண்குறிக்கல்லை அவன் பெற்றுக் கொள்வான்''. இந்த தூதன் ஒரு வெண்குறிக்கல்லைப் பெறுவான். அது ஒரு பாறை அல்லவா... அது உண்மை. வெண்மை “ சுத்தத்தை''க் குறிக்கிறது. 314. அவர் ஓர் சமயம் சீமோன் என்ற பெயரையுடைய ஒரு மனிதனைச் சந்தித்தார். அவனது பெயரை பாறை என்று அர்த்தம் கொள்ளும் “ பேதுரு'' என்ற பெயராக மாற்றினார். ஏன்? அவனிடம் திறவுகோல்கள் கொடுக்கப்பட்டன அல்லவா? அவனது பெயரை பாறை என்று அர்த்தம் கொடுக்கும் பெயராக மாற்றினார். இராஜ்யத்தின் திறவுகோல்களை உடையவனாக பேதுரு இருந்தான். 315. “ இதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக் கூடாத ஒரு புதிய நாமத்தை அவனுக்குக் கொடுப்பேன்'' என்றார். அவன் யார் என்பதை அறிவான். ஆனால் மற்றவர்களுக்கு அவன் சொல்ல முடியாது. பாருங்கள்? பாருங்கள்? அவனைத்தவிர வேறு யாருக்கும் அது தெரியாது. பாருங்கள்? பேதுரு திறவுகோல்களைப் பெற்றிருந்ததை அறிந்திருந்தான். ஆனால் அவன் அதைப் பற்றி பெருமையடித்துக்கொள்ளவில்லை. பாருங்கள்? தங்களைப் பற்றி பெருமையடித்துக்கொள்ளும் இந்த நபர்கள் வாஸ்தவமாக ஒன்றுமேயில்லை. “ ஒரு வெண் குறிக்கல்லும், அதில் குறிக்கப்பட்டுள்ள ஒரு புதிய நாமமும்". அம்மனிதனின் சொந்த பெயரல்ல அது. அப்பெயர் வேறு ஒன்று. அதை அவன் மட்டுமே அறிவான் (வெண்குறிக் கல்லைப் பெறுகிறவன் தான் அந்த நாமத்தை அறிவான்). சபையைப் போஷிப்பதற்காக அளிக்கப்படும் விசேஷித்த மன்னா அது, நினைவில் கொள்ளுங்கள். 316. உண்மையான சபைக்கு இது நடக்கும்பொழுது, அதே காலத்தில்தான் (இது வெளிப்படும் இதே சமயம் தான்) அந்த நிக்கொலாய் மதத்தினர், சபைக்கு மேல் ஒரு தலைமைக் குருவை ஒரு போப்பை ஏற்படுத்தினார்கள். அவனுடைய சிங்காசனத்திற்குக் கீழே ஒரு வெண்மையான பாறையினால் செய்த பீடம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அது சரியா? அது சலவைக் கற்களால் ஆனது. அது அலங்கரிக்கப்பட்டிருந்தது. அது அவனுக்கு விலையேறப் பெற்றதாக இருந்தது. 317. ஆனால் இந்த கர்த்தருடைய தூதன் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாட்டின் மூலமாக, தான் யார் என்பதை, அதாவது அவன் ஒரு தேவபுத்திரன் என்பதை, அறிந்துகொள்ளுகிறான். 318. இந்த நிக்கொலாய் மதத்தினர் தங்களுக்கென ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு, அவனுடைய பாதத்தின் கீழாக சலவைக் கற்களால் ஆன ஒரு பீடத்தை செய்து வைத்தபோது (பாருங்கள்?) தேவன் தன்னுடைய ஆவியினால் நிரப்பப்பட்ட தலைவனை, தன்னுடைய ஆவியால் நிறைந்திருக்கிற குழுவின்மேல் ஏற்படுத்தினார். அவன் அவருடைய தூதனாக இருக்கிறான். ஒரு நாமத்தை அவன்மேல் முத்திரையிட்டு அவர் வைக்கிறார். ஆனால் அவன் அதை யாருக்கும் வெளிப்படுத்தக்கூடாது; அவன் அதை தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும், பாருங்கள், ''அதைப் பெற்றுக் கொள்ளுகிறவனைத் தவிர வேறொருவனும் அறியான்''. 319. “ மறைவான மன்னா, ஒரு வெண்குறிக்கல், ஒரு புதிய நாமம் அதைப் பெறுகிறவனுக்கே தவிர வேறு ஒருவனுக்குந் தெரியாது''. அவ்வாக்குத்தத்தம் அச்சபையின் தூதனுக்கு அழைத்துச் சொல்லப்பட்டது. லூத்தர் அதைப்பற்றி அறிந்திருந்தாரா என்பதைப் பற்றி நான் வியக்கிறேன். வெஸ்லி அதைப் பற்றி அறிந்திருந்தாரா என்று நான் வியக்கிறேன். ஏனைய மகத்தான தூதர்கள் அதை அறிந்திருந்தார்களா என்பதைப் பற்றி நான் வியக்கிறேன். 320. இவ்வுலகத்தில் விரைவில் அந்த மகத்தான ஒளியின் தூதன் நம்மிடத்தில் வரவிருக்கிறார். அந்த மகத்தான பரிசுத்த ஆவி, வரப்போகும் அந்த வல்லமை, அது நம்மை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவண்டை வழி நடத்தும். வரவேண்டிய அத்தூதனுக்கே அதைப் பற்றித் தெரியாமல் இருக்கக்கூடும். ஆனால் அவர் இந்நாட்களில் ஒன்றில் இங்கு இருப்பார். தேவன் அத்தூதன் யார் என்பதை நமக்கு தெரியப்படுத்துவார். அத்தூதன் தன்னைத்தானே யார் என்று தெரியப்படுத்த வேண்டியதில்லை. ஆனால் தேவனே அவனைப்பற்றி தெரியப்படுத்துவார். தேவன் தனக்குச் சொந்தமானவனை நிரூபித்துக் காண்பிப்பார். இயேசு இப்பூமியில் இருக்கையில், அவர்களுக்கு அவர் யார் என்பது தெரியவில்லை. அதைப்பற்றி இயேசு சொன்னார்: “ ...நான் என் பிதாவின் கிரியைகளை செய்யாதிருந்தால் என்னை விசுவாசியாதிருங்கள். ஆனால் நான் என் பிதாவின் கிரியைகளைச் செய்தால், என்னை விசுவாசிக்க முடியாவிட்டால், என் கிரியைகளின் நிமித்தமாவது என்னை விசுவாசியுங்கள்'' என்றார். அது சரிதானே? 321. ஓ அவர் அற்புதமானவராக இல்லையா? வெளிப்படுத்தின விசேஷத்தில், சபைகள் எங்கே என்ன நிலைமையில் உள்ளன என்பதைக் காண்கிறீர்கள் அல்லவா? அவர்கள் எவ்வாறு வெளியே தள்ளப்பட்டார்கள் என்பதை பார்த்தீர்களா? சபையானது எவ்வாறு வெளியே போய்விட்டது என்பதை கண்டீர்களா? நாளை இரவு அடுத்த சபைக்காலத்திற்குப் போகப் போகிறோம், கர்த்தருக்கு சித்தமானால். 322. நான் உங்களை நீண்ட நேரம் இருக்கும்படி வைத்துவிட்டேன் என்பதற்காக வருந்துகிறேன். நீங்கள் ஒன்றைக் கற்றுக்கொள்ளுவீர்கள் என்று நான் நம்புகிறேன். என்னிடம் இன்னும் மூன்று, நான்கு பக்கங்களுக்கு குறிப்புக்கள் உள்ளன, ஆனால் அவைகளை எடுத்துக்கொள்ள எனக்கு நேரம் இல்லை. ஏனெனில், இப்பொழுது மிகவும் நேரமாகிவிட்டது, 9 மணிக்கு 17 நிமிடங்கள் உள்ளன. இதை நாம் புத்தகமாக வெளியிடும் போது அப்போது இக் குறிப்புகள் அதில் இடம் பெற்றுவிடச் செய்வோம். 323. உங்கள் முழு இருதயத்தோடும் அவரை இப்பொழுது எத்தனை பேர்கள் நேசிக்கிறீர்கள்? எத்தனை பேர்கள் அவரை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்கள்? நாம் ஸ்தாபனங்களில் அங்கம் வகிக்கவில்லையென்பதால், நாம் ஒரு ஸ்தாபனமாக இல்லையென்பதால், நான் இங்கே நின்று இவைகளைக் கூற முடிகிறது அல்லவா? சகோதரரே, நான் ஏன் என் வாழ்நாள் முழுவதும் ஸ்தாபனங்களுக்கு எதிராக போராடி வருகிறேன் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? பாருங்கள், அது பரிசுத்த ஆவி. நான் ஏன் இவ்வாறாக இருந்து வந்திருக்கிறேன். என்னாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை. சில நாட்களுக்கு முன்பாக வரைக்கிலும் நான் அறியவில்லை. பாருங்கள்? எது என்னை அவ்வாறு செய்யத் தூண்டியது என்பதை அறியவில்லை. ஏன் நான் எப்பொழுதும் ஸ்திரீகள் தவறாக வாழ்வதைக் குறித்து குரல் கொடுத்துக் கொண்டேயிருந்திருக்கிறேன் என்பதும் எனக்கு தெரியாமல் இருந்தது. எனக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் நான் இப்பொழுது அறிந்திருக்கிறேன். பாருங்கள்? 324. கர்த்தர், இவைகளெல்லாம் தவறாக இருக்கின்றன என்பதை அறிந்திருக்கிறார். அவர்களுடைய காரியம் சரியானபடி வரலாற் றில் இடம் பெற்றுவிட்டது. வேதமானது, சபைக் காலங்களில் இன்னின்னவாறு நடைபெறும் என்று முன்கூட்டியே முன்னுரைத் துள்ளது. இப்பொழுது நாம் நடைபெற்றவைகளைப்பற்றி அறிந்து கொண்டு விட்டோம், அல்லவா? நாம் குறிப்பிட்ட சபைக் காலத்திற்குரிய வரலாற்றை எடுத்துப்பார்க்கையில், வேதம் முன்னுரைத்தபடியே அங்கே சம்பவமானது நிறைவேறி நடந்து விட்டதை நாம் பார்க்கிறோம். அது சரியல்லவா? அதற்குப் பிறகு நாம் வாழ்கிற சபைக் காலத்தைக் குறித்து நாம் பார்க்கையில், நம்முடைய சபைக் காலத்திற்கென அவர் முன்னுரைத்தது என்னவோ, அதே காரியம், தேவன் எவ்வாறு நடக்கும் என்று கூறினாரோ அதேவிதமாக அது சம்பவிக்கும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஓ! நீங்கள் விரும்பவில்லையா...? ஓ நான் அவரைக் காண வாஞ்சிக்கிறேன், அவர் முகத்தை நான் ஏறிட்டுப் பார்ப்பேன் மகிமையின் தெருக்களில் என் குரலை நான் உயர்த்தி, கவலைகள் யாவும் ஒழிந்தன, சதா மகிழ்ந்திட முடிவில் வீடு வந்து சேர்ந்தேன் நான் அவரைக் காண வாஞ்சிக்கிறேன், (எத்தனை பேர் வாஞ்சிக்கிறீர்கள்?) அவரது இரட்சிக்கும் கிருபையை பற்றி சதாகாலம் பாடுவேன் மகிமையின் தெருக்களில் என் குரலை உயர்த்திக் கூறுவேன்: கவலைகள் ஒழிந்தன, என்றும் மகிழ்ந்திட முடிவில் வீடு சேர்ந்தேன். 325. உங்களுக்கு முன்னும், பின்னும், சுற்றிலும் அமர்ந்திருக்கும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்ளுங்கள். அனைத்து மெதோடிஸ்டுகளுடனும், பாப்டிஸ்டுகளுடனும், ப்ரெஸ்பி டேரியன்களுடனும், அவர்கள் யாராயிருந்தாலும், அவர்களோடு கைகுலுக்கிக்கொள்ளுங்கள். நான் இத்தேசத்தில் பயணம் செய்கையில், பாடிக்கொண்டே போவேன், ஆத்துமாக்களை இரத்த ஆறு ஓடும் கல்வாரிக்கு நேராக நடத்துவேன் (சபைக்கு நேராக அல்ல) அநேகம் அம்புகள் ஆத்துமாவை எப்பக்கத்திலும் இருந்து குத்தினாலும், என் ஆண்டவர் என்னை தொடர்ந்து நடத்துகிறார், அவரை நான் பற்றிக் கொள்ளல் வேண்டும். 326. நாம் இப்பொழுது எழுந்து நிற்போமாக: நான் அவரைக் கண்டு, முகத்தை ஏறிட்டுப் பார்த்திட விரும்புகிறேன், அவர் தம் இரட்சிக்கும் கிருபையைப்பற்றி சதாகாலம் பாடுவேன் (நம் கைகளை உயர்த்துவோமாக) மகிமையின் தெருக்களில் நான் என் சத்தத்தை உயர்த்தி, கவலைகள் ஒழிந்தன, என்றென்றும் மகிழ்ந்திட முடிவில் வீடு சேர்ந்தேன் என்று கூறுவேன். 327. நான் எவ்வளவாய் அவரை நேசிக்கிறேன். நான் எவ்வளாய் அவரை நேசிக்கிறேன்! அற்புதம்! அற்புதம்! அற்புதம், அற்புதம், இயேசு எனக்கு, ஆலோசனைக் கர்த்தராம் வல்ல மீட்பராம், பாவம் சாபம் யாவும் நீக்கி என்னை இரட்சித்தார் அற்புதம் என் இயேசுவுக்கு தோத்திரம். நான் முன்பு காணாமற்போனேன், இப்போது கண்டுபிடிக்கப்பட்டேன், ஆக்கினையிலிருந்து விடுதலையானேன் இயேசு விடுதலையையும், முழு இரட்சிப்பையும் தருகிறார், அவர் என்னை இரட்சித்து, எல்லாப் பாவம், நிந்தையினின்றும் என்னைக் காக்கிறார், என் மீட்பர் அற்புதமானவர், அவரது நாமத்திற்கு ஸ்தோத்திரம். 328. யாவரும் நல்ல சப்தமாகப் பாடுவோம். அற்புதம், அற்புதம், இயேசு எனக்கு, ஆலோசனைக் கர்த்தர், சமாதானப்பிரபு, வல்ல தேவனவர், ஒ என்னை இரட்சிக்கிறார், பாவம், நிந்தை யாவற்றினின்றும் அவர் என்னைக் காக்கிறார், என் மீட்பர் அற்புதமானவர், அவரது நாமத்திற்கு ஸ்தோத்திரம். 329. ஓ எவ்வளவு அற்புதமானவராக இருக்கிறார்! அற்புதம், அற்புதம், இயேசு எனக்கு, ஆலோசனைக் கர்த்தர், சமாதானப்பிரபு, வல்ல தேவனவர், இரட்சிக்கிறார், பாவம், நிந்தை யாவற்றினின்றும் அவர் என்னைக் காக்கிறார், என் மீட்பர் அற்புதமானவர், அவரது நாமத்திற்கு ஸ்தோத்திரம். 330.“ அவர் நாமத்திற்கு ஸ்தோத்திரம்'' என்று சேர்ந்து சொல்லுவோமாக. (சகோ. பிரன்ஹாம் அவர்களும் சபையாரும் சேர்ந்து சொல்லுகிறார்கள் - ஆசி.) “ அவர் நாமத்திற்கு ஸ்தோத்திரம்'' என்னுடைய மீட்பர்! நாளை இரவு ஏழு மணிக்கு. நாம் மீண்டும் திரும்பி வரும் வரைக்கிலும், இதைச் செய்யுங்கள். துன்பமும் வருத்தமும் நிறைந்த பிள்ளையே உன்னுடன் இயேசுவின் நாமத்தை எடுத்துச் செல், மகிழ்ச்சியும், ஆறுதலும் அவர் நாமம் கொடுக்கும், செல்லுமிடமெங்கும் அதை எடுத்துச் செல். விலையேறப்பெற்ற நாமம் அது, (விலையேறப்பெற்ற நாமம்) ஓ எவ்வளவு இனிமையது (ஓ எவ்வளவு இனிமையது) பூமியின் நம்பிக்கையும், பரத்தின் சந்தோஷமும் அதுவே விலையேறப்பெற்ற நாமம் அது (விலையேறப்பெற்ற நாமம்) ஓ எத்தனை இனிமையானது அது பூமியின் நம்பிக்கையும், பரத்தின் சந்தோஷமும் அதுவே. 331. ஜெபத்தில் நாம் தலைகளை வணங்குகையில், கடைசி பாட்டை அல்லது கடைசி சரணத்தை நாம் பாடுவோம். இயேசுவின் நாமத்தில் பணிந்து அவர் பாதத்தில் சாஷ்டாங்கமாய் வீழ்ந்து, (தேவனாகிய கர்த்தாவே, இவர்களை குணமாக்கும் கர்த்தாவே!) வணங்குவோம், நம் பயணம் முடிகையில், நாம் அவருக்கு முடிசூட்டுவோம். ******* ஆறாம் அத்தியாயம் தியத்தீரா சபையின் காலம் THE THYATIREAN CHURCH AGE இன்றிரவில், இந்த மகத்தான சபைக்காலத்தில் பிரவேசிக்கும் முன்னர், நமது கர்த்தர் நம்மேல் தம்முடைய ஆவியை ஊற்றி நம்மை மீண்டும் ஆசீர்வதிப்பார் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது இதிலுள்ள மிக முக்கியமான விஷயங்களை மட்டுமே நம்மால் பார்க்க இயலும், ஏனெனில், அந்த மகத்தான வேளை வந்து கொண்டிருக்கிறது, நாம் இவ்வாரம் முழுவதும் இங்கே இருக்கப்போகிறோம். ஓ, நேற்று இரவில் நமக்கு அப்படிப்பட்ட மகிமையான வேளை உண்டாயிருந்தது! 2. நல்லது, இப்பொழுது, நாம் வேதவாக்கியங்களை வாசிப்பதற்கு முன்னால், ஜெபத்திற்காக எழுந்து நிற்போமாக. அப்பொழுது கொஞ்ச நேரம் நமது நிலைகளை மாற்றிக்கொள்வோம், 3. எங்கள் கிருபையுள்ள பரம பிதாவே, எல்லாவற்றிற்கும் போதுமான நாமமாகிய கர்த்தராகிய இயேசுயென்னும் நாமத்தில் நாங்கள் வருகிறோம். ஒரு நாளில் நீர் வருவீர் என்பதை நாங்கள் அறிந்தவர்களாயிருக்கிறோம். நீர் மரித்தவராக அல்ல, சதாகாலமும் ஜீவிக்கிறவராக, ஜீவிக்கிற தேவ குமாரன் நீரே என்ற அந்த மகத்தான வெளிப்பாட்டை மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக, அவர்களுடைய இருதயங்களை ஆயத்தம் பண்ணுவதற்காக நாங்கள் முயன்று கொண்டிருக்கிறோம். நீர் உம்முடைய சபையில் ஜீவித்துக் கொண்டிருக்கிறீர்; பெந்தெகொஸ்தே நாளில் ஏற்பட்ட அனுபவத்திற்கு சாட்சியாக இது இருக்கிறது. மகத்தான வேளையாகிய கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வருவதைக் குறித்தும் அவ்வெளிப்பாடு உண்டாயிருக்கிறது. ஆயிரத்து தொளாயிரம் ஆண்டுகள் கடந்தபிறகும், அந்த மகிழ்ச்சியான வேளைகளை இப்பொழுதும் அனுபவிக்க முடிந்ததற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். 4. பிதாவே, உம்முடைய வலது கரத்திலே, ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தீர், அவர்களை சபைக் காலங்களுக்குரிய தூதர்கள்'' ஊழியக்காரர்கள் என அழைத்தீர்; ஒவ்வொரு காலத்திலும் இலங்கிய அம்மகத்தான மனிதர்களுக்கு மரியாதை செலுத்தும்படி எங்கள் தலைகளை வணங்குகிறோம். எபேசுவின் காலத்தில் வாழ்ந்த மகத்தான பரிசுத்தவானாகிய பவுலுக்காக நாங்கள் எவ்வளவாய் உமக்கு நன்றி செலுத்துகிறோம்! உம்முடைய மகத்தான ஊழியக்காரனாகிய ஐரேனியஸுக்காக, ஓ ஆண்டவரே, நாங்கள் எவ்வளவாய் உமக்கு நன்றி செலுத்துகிறோம்! பரிசுத்த மார்ட்டினுக்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம். இன்றிரவில் பரிசுத்த கொலம்பாவுக்காகவும் நன்றி செலுத்துகிறோம். அந்தகார ரோமானிய கொள்கைகள், சபையில் நுழைந்த அஞ்ஞானக் கொள்கைகள், இவற்றின் மத்தியில், இம்மனிதர்கள் பெந்தெகொஸ்தே செய்திக்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும் மிகுந்த தீரத்துடன் நின்றனரே, இவர்களுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இவர்கள் அந்நிய பாஷைகளில் பேசி, அற்புத அடையாளங்கள் செய்தல், பிணியாளிகளை குணமாக்குதல், மரித்தோரை எழுப்புதல் இவற்றை பெற்றிருந்தார்கள். 5. கர்த்தாவே, அவர்களில் அநேகர் வீணாக குற்றஞ்சாட்டப் பட்டு, கொல்லப்பட்டு, சிங்கங்களுக்கு உணவாக்கப்பட்டனர். இன்னும் பெரிய காரியங்களெல்லாம் நடைபெற்றன. நீதிமான் களின் இரத்தத்தால் பூமியானது நிறைந்திருக்கிறது. பிதாவே, அவர்களது இரத்தம் அந்த துன்மார்க்க, விபச்சார சபைக்கு எதிராக இன்று கதறுகிறது. “ தூதனானவன் தேவனுடைய கோப கலசத்தை ஊற்றினான், ஒவ்வொரு இரத்த சாட்சியின் இரத்தமும் அவனில் காணப்பட்டது'' என்று நீர் கூறியுள்ளீர். 6. கர்த்தாவே, காலமானது முடிவுக்கு வந்துகொண்டிருக்கிற படியால், இப்பொழுது நிலைநிற்க எங்களுக்கு உதவி செய்தருளும். இரண்டு கொம்புகளையுடைய மிருகம் பூமியிலிருந்து எழும்புவதை நாங்கள் காண்கையில், இப்பொழுது எங்களுடைய காலமானது முடிவுக்கு வரப்போகிறது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அம்மிருகம் திரளான ஜனங்களின் நடுவிலிருந்து எழும்பப் போவதில்லை. அது “ ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளை யுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.'' பிதாவே, இந்த சபைகளெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு சமஷ்டியாக ஆகின்ற இவ்வேளையில், அவர்களெல்லாம் சேர்ந்து, மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்குவார்களே, அப்பொழுது, அவர்களோடு கைகோர்த்துக்கொள்ளாத அந்த சிறு மந்தையின் மேல் அது பயங்கரமாயிருக்குமே, கர்த்தாவே உம்முடைய ஜனம் அப்பொழுது பகிஷ்கரிக்கப்படுவார்கள், ஆனால் அவ்வேளையில் உம்முடைய சபையை எடுத்துக்கொள்வதாகவும், எங்களுக்கு உதவி செய்வதாகவும் நீர் வாக்குரைத்திருக்கிறீர், கர்த்தாவே. 7. ஒரு துளி மழை கூட விழாதபோது, நோவா பேழைக்குள் இருந்தான். சோதோமில் அக்கினி விழுவதற்கு முன்னால், லோத்து வெளியேறிவிட்டான். பிதாவே, அணு ஆயுத சக்திகள் வெடித்து இப்பூமியை தூள்தூளாக சிதறிப்போகும்படி செய்வதற்கு முன்னால், சபையானது இப்பூமியைவிட்டு போய்விட்டிருக்கும். அதற்காக நாங்கள் சந்தோஷமாயிருக்கிறோம், கர்த்தாவே. இன்றிரவில், குண்டுகள் ஆயுதக்கிடங்குகளில் ஆயத்தமாக தொங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நாங்கள் அறிந்திருக் கிறோம். 8. நாங்கள் பரலோகத்தை நோக்கிப் பார்த்து, மனுஷ குமாரன் தன்னுடைய சபையை எடுத்துக்கொள்வதற்காக, தனது சிங்காசனத்தை விட்டு எழும்பி பூமியை நோக்கிப் புறப்படுவதை காண முடிகிறது. அவ்வேளையில், இந்த பாவமான பூமியை அவரது விலையேறப்பெற்ற பாதங்கள் தொடாது என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். அது ரெபெக்காள் ஒட்டகத்தின் மேல் வருகையில், தன் மணாளனை தூரத்தில் பார்த்தபோது, ஒட்டகத்தை விட்டு கீழிறங்கி, ஆபிரகாமுடைய வீட்டிற்கும் வயல்வெளிகளுக்கும் நடுவே, தன் மணாளனை சந்திக்கப் புறப்பட்டாளே, அதைப்போல் இது இருக்கிறது. ஓ தேவனே, சபையானது தன்னுடைய மணாளனையும் ஆகாயத்தில் சந்திப்பாள், “ உயிரோடிருக்கிற நாம், நித்தியரையடைந் தவர்களுக்கு முந்திக் கொள்ளுவதில்லை; தேவஎக்காளம் தொனிக்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள் மேல் அவர்களோடே கூட (வெளியிலே) ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம்''. 9. ஓ, இன்றிரவில் எங்களுக்கு உதவி செய்யும், கர்த்தாவே. ஆவியின் இனிமையை எங்களுக்குத் தாரும். எம்மிடமிருந்து எல்லா கசப்பையும், அலட்சியத்தையும் அகற்றியருளும். நாங்கள் பரிசுத்த ஆவியோடு முழுவதும் ஒன்றிப் போய்விடட்டும். தேவனுடைய தூதனானவர் இன்றிரவில் ஆளுகை செய்யட்டும். 10. கர்த்தாவே, இந்த மக்களுக்கு என்ன கூற வேண்டும் என்பதை நான் அறியேன். நீர் என்ன செய்தீர் என்பதைப்பற்றிக் கூறும் வரலாற்றுக் குறிப்புக்களை என்னிடம் நான் கொண்டவனாய் இருக்கிறேன், ஆனால் எதிர்காலத்தைப் பற்றி நீர்தான் வெளிப்படுத்த வேண்டும். எனவே, அதை நீர் எங்களுக்குத் தாரும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் வேண்டுகிறேன். ஆமென். 11. இப்பொழுது நாம் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத் திற்கு திரும்புவோம். இன்றிரவில் நாம் நான்காவது சபைக் காலமாகிய தியத்தீரா சபைக்காலத்தைப்பற்றி படிக்கப் போகிறோம். இக்காலம் ஒரு பெரிய சபைக்காலம், இருண்ட காலம் என்று அறியப்பட்டுள்ளது இக்காலம்தான். இச்சபைக் காலம் கி.பி.606ல் துவங்கி, கி.பி.1520ல் முடிவுற்றது. என்னால் இயன்ற அளவு நான் கண்டு கொண்டது இதுதான். அநேக அறிஞர்கள் இச்சபைக் காலத்திற்கு பரிசுத்த பேட்ரிக்கை அதன் நட்சத்திரமாக தெரிந்துகொள்கின்றனர். 12. ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைக்காலங்களுக்குரிய “ ஏழு தூதர்களாக'' இருக்கின்றனர். நாளை இரவு சந்தேகத்துக்கிடமின்றி லூத்தரை ஐந்தாம் சபையின் தூதராகக் காண்போம் என்று நாம் அறிந்திருக்கிறோம். அதற்கடுத்த இரவில், வெஸ்லியைப்பற்றி பார்ப்போம். லவோதிக்கேயா சபைக்குரிய நட்சத்திரம் யாராக இருக்கும் என்பதை நாம் அறியோம். 1906ம் ஆண்டில் பெந்தெ கொஸ்தே காலம் துவங்கியதிலிருந்து நாம் அச்சபைக்காலத்தில் இருந்து வருகிறோம். ஆனால் ஒரு தூதன் எழும்பி, இவ்வெல்லா வெற்றுக் கோட்பாடுகளையெல்லாம் தகர்த்தெறிவான்; அத்தூதன் சபை தன் வீட்டிற்குப் போவதற்காக, சபையை ஆயத்தம் பண்ணுவான். ஆவிக்குள் போதகனான ஒருவன் அற்புத அடையாளங்களோடு எழும்புவான். நாம் அவனைக் கண்டுகொள்ள தேவன் நமக்கு உதவி செய்யுமாறு இப்பொழுது நான் ஜெபிக்கிறேன். 13. வரலாற்றினூடே உற்றுநோக்கி, தூதனை தெரிந் தெடுக்கையில், பரிசுத்த பேட்ரிக் என்பவர் ஒரு மகத்தான மனிதராக நாம் காண்கிறோம். பண்டைக்காலத்து, தொன்மையான கையெழுத்துப் பிரதிகளை நாம் எடுத்து சரிபார்க்கையில், அங்கே பரிசுத்த பேட்ரிக் ஒரு கத்தோலிக்கர் அல்லவே அல்ல என்ற உண்மையைக் காண்கிறோம். அவர் கத்தோலிக்க சபையை எதிர்த்திருக்கிறார். சீர்திருத்த காலத்தில், பரிசுத்த பேட்ரிக் ஒரு கத்தோலிக்கர் அல்ல என்ற மறைக்கப்பட்ட அவ்வுண்மையானது தோண்டி வெளியே எடுக்கப்பட்டு, அவர் கத்தோலிக்கத்தை எதிர்த்தார் என்பது நிரூபிக்கப்பட்டது. அதுவரையிலும் கத்தோலிக்கர்கள், பரிசுத்த பேட்ரிக் கத்தோலிக்க சபையின் பரிசுத்தவான்களில் ஒருவர் என்ற பொய்யாக ஒரு கோட்பாட்டை பரப்பி வந்திருந்தனர். பரிசுத்த பேட்ரிக் ஒரு ஸ்தாபன மனிதனைப் போல் இருந்தார். அவர் ஒரு வேதகலாசாலையை நடத்தி வந்தார். அவர் ஒரு நாள் தன் இரு சகோதரிகளுடன் நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருக்கையில், சிலரால் அவர்கள் மூவரும் கடத்தப்பட்டனர். இவருடைய சகோதரிகளை பிரித்துக் கொண்டுபோய் விட்டார்கள். அதற்குப் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்று பேட்ரிக் கேள்விப்படவேயில்லை. அவர்கள் ஒருவேளை ரோமாபுரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடிமைகளாக விற்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. பேட்ரிக்கும் கொண்டு செல்லப்பட்டு, ஒரு அடிமையாக விற்கப்பட்டார். விலைக்கு வாங்கினவன் அவருக்கு பன்றிகளை மேய்க்கிற வேலையைக் கொடுத்தான். 14. அவர், தான் மேய்க்கும் பன்றிகளை பார்த்துக்கொள்ள நாய்களை பழக்குவித்தார். பல்வேறுவிதமாக பன்றிகளைப் போல் உறுமி பலவிதமான சமிக்ஞைகளை அவைகளுக்கு அவர் கற்பித்திருந்தார். அச்சமிக்ஞைகளைப் பார்த்து அந்நாய்கள் அவர் விரும்புகிற படியெல்லாம் நடந்துகொள்ளும். அந்த அளவுக்கு அவைகளைப் பழக்கி இருந்தார். ஒருநாள் ஒரு படகில் அவர் படுத்துக்கொண்டு, தன் மேல் நாய்கள் மூடிக்கொண்டு நிற்கும்படி அவைகளுக்கு சமிக்ஞை செய்ய, அவைகளும் அப்படியே செய்து, பேட்ரிக் தன் முதலாளிக்குத் தெரியாமல் தப்பி, கடலில் பயணம் செய்து தன்னுடைய சொந்த தேசமாகிய அழகான அயர்லாந்துக்கு போய் சேர்ந்து, உயிரோடிருந்த பெற்றோர்களை சந்தித்தார். பரிசுத்த மார்ட்டினின் சகோதரியின் மகன் தான் பரிசுத்த பேட்ரிக் ஆவார். 15. இயேசு கிறிஸ்துவின் காலம் முதற்கொண்டு வாழ்ந்த மகத்தான தேவ மனிதர்களுள் நமக்குக் கிடைத்த ஒரு மகத்தான மனிதன் பரிசுத்த மார்ட்டின் ஆவார். பரிசுத்த மார்ட்டினுடைய சபைகள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, அவர்கள் யாவரும் அந்நிய பாஷைகளில் பேசி, அடையாள அற்புதங்களையும் செய்தவர்களாக இருந்தார்கள். கத்தோலிக்கக் கொள்கை களோடு விவாகம் செய்து கொண்டு, அஞ்ஞானமும் நிக்கொலாய் மதஸ்தினரும் விவாகம் செய்து கொண்டு ஸ்தாபனங்களை உருவாக்கிக் கொண்ட அந்த இருண்ட சபைக்காலத்திற்குள்ளாக, மார்ட்டின் பெந்தெகொஸ்தே விசுவாசத்தை காத்துக் கொண்டு வந்தார். நிக்கொலாய் என்றால், “ சபையை அல்லது ஜனங்களை வென்று அவர்களை அதிகாரத்தை இழக்கச் செய்தல்'' என்று பொருள். இதன் மூலம் அவர்கள் சபையின் நடுவிலிருந்து பரிசுத்த ஆவியை அகற்றி விட்டு, ''மதகுரு என்ற மனிதன் பரிசுத்தமானவர்'' என்று கூறிக் கொண்டு, மதகுருக்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்தனர். பாருங்கள்? கத்தோலிக்க சாமியாரிடம் போய் பாவங்களை அறிக்கையிட்டு விட்டால் போதுமானது, அவர்கள் தங்கள் விருப்பம் போல் நடந்து கொள்ளலாம் என்ற அளவுக்கு நீக்குப் போக்காக ஆக்கப்பட்டது. 16. கடந்த இரவில், கான்ஸ்டன்டைன் சபையின்மேல் முதலாவது அத்தியட்சகரை ஏற்படுத்தினான், சபைக்கு பெரிய பெரிய கட்டிடங்களையெல்லாம் கொடுத்தான் என்று பார்த்தோம். இவைகள் நடந்த காலங்களைப் பற்றி தேதிகளையும் மற்ற காரியங்களையும் நீங்கள் ஏற்கனவே குறித்து வைத்துக் கொண்டுள்ளீர்கள். ஆண்டின் மிகக்குறைந்த பகலையுடைய டிசம்பர் 21ம் தேதி கொண்டாடப்பட்ட சூரியனுக்கான பண்டிகையும் அவர்கள் சபையில் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் இந்த வேதப்புரட்டை செய்து, அவரும் நீதியின் சூரியன் என்று இருக்கிற படியால், சூரியனின் பிறந்த நாளை இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளாக ஆக்கி, அதை சபையில் கொண்டு வந்தார்கள். இயேசுவின் பிறப்பு ஏப்ரல் மாதமாக இருக்கையில், அதை டிசம்பர் மாதம் 25ம் தேதி சூரியக்கடவுளின் பிறந்த நாளுக்கு மாற்றினார்கள். 17.டிசம்பர் 25ம் தேதி வரையிலும் ஐந்து நாட்களுக்கு ரோமர் களுக்கு பெரிய கொண்டாட்டங்கள், மற்றும் விளையாட்டரங் கத்தில் கேளிக்கை விளையாட்டுகளும் உண்டாயிருந்தன. அது அஞ்ஞான விக்கிரக ஆராதனைக்காரர்களின் மகாவிருந்தாக இருந் தது. அவர்கள் இம்மனிதனை கடவுள் என்ற அந்தஸ்திலேயே உயர்த்தி வைத்தார்கள். அவனுக்கு அதற்கேற்றவாறு உடையுடுத்தினார்கள். அவர்கள் தங்கள் கடவுளை தங்களோடு இருக்கப் பெற்றிருந்தனர். சபையானது ஆயிர வருட அரசாட்சியில் இருப்பதால், அப்பொழுதே, கிறிஸ்து வருவதற்கு முன்பே, அது ஆயிர வருட அரசாட்சிக் காலம் என விசுவாசிக்கிற கொள்கைக்காரர்கள் அப்பொழுது ஏற்பட்டார்கள். பாருங்கள், ஏனெனில், அவர்கள் ஐசுவரியமுள்ளவர்களாகவும், ஒன்றும் குறைவில்லாததாகவும், அரசாங்கமும் சபையும் ஒன்றாக இணைந்ததாகவும் இருந்தனர். “ ஆயிர வருட அரசாட்சி நடந்து கொண்டிருக்கிறது'' என்ற கத்தோலிக்க உபதேசம் இந்நாள் வரைக்கிலும் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது. பாருங்கள்? இப்பொழுது ஆயிரவருட அரசாட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பது தவறான உபதேச மாகும் என்பதை நாம் அறிவோம். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குப் பிறகு தான் ஆயிர வருஷ அரசாட்சி ஏற்படுகிறது. அதுதான் சரி. பூமியானது இனிமையான விடுதலையின் நாளுக்காக ஏங்கித் தவிக்கிறது; கர்த்தர் பூமிக்கு திரும்பி வருகையில் அவ்விடுதலை கிட்டும். 18. இக்காலத்தில் வாழ்ந்த மகத்தான பரிசுத்தவான் கொலம்பா என்பவர், மகத்தான தேவ மனிதனாக இருந்தார். 19. அவருடைய வரலாற்றை நான் இங்கே எழுதி வைத்திருக்கிறேன். நான்காவது சபைக்காலம் தியத்தீரா சபைக் காலம் ஆகும். தியத்தீரா என்றால், “ தளர்ச்சியான, உறுதியில்லாத'' அல்லது “ நிச்சயமற்ற'' என்று பொருளாகும். பாருங்கள், இச்சபையின் காலம் முறைகேடானதாக, கி.பி.606 முதல் கி.பி.1500 முடிய நீடித்திருந்தது. 20. கொலம்பா என்பவர் தியத்தீரா சபைக்காலத்தின் நட்சத்திரமாக இருக்கிறார். இவர் அயர்லாந்து தேசத்தைச் சேர்ந்தவர். இவர் பரிசுத்த மார்ட்டினின் மருமானான பரிசுத்த பேட்ரிக்கிற்கு சுமார் 60 ஆண்டுகள் கழித்து தோன்றி, வாழ்ந்து வந்தார். எனவே பரிசுத்த பேட்ரிக்கிற்கு 60 ஆண்டுகளுக்கு பிறகு கொலம்பாவின் ஊழியம் துவங்கியது. 21. அவர் ஒருபோதும் ரோமானிய உபதேசத்தை ஏற்றுக் கொள்ளவேயில்லை. அவர் மகத்தான விசுவாச மனிதனாயிருந்தார். ரோமன் கத்தோலிக்க உபதேசத்தை அவர் நிராகரித்தார். அவர் ஒருபொழுதும் ரோமாபுரிக்குப் போகவேயில்லை. அவர் அதை முழுவதுமாக புறக்கணித்தார். கொலம்பா இறந்த பிறகு அவர்கள் அவரை பரிசுத்தவான் ஆக்கினார்களா என்பதைக் காண முடியவில்லை. எவ்வாறு பரிசுத்த மார்ட்டின், ஐரேனியஸ், மற்றும் ஏனையோரையும் அவர்கள் பரிசுத்தவான்கள் ஆக்கவில்லையோ, அதைப்போலவே கொலம்பாவையும் பரிசுத்தவான் ஆக்கவில்லை. ஏனெனில் பெந்தெகொஸ்தேயின் அடையாள அற்புதங்களை பெற்று விசுவாசிக்கும் அந்த சபையில் அவர்கள் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர் ஒருபோதும் ரோமச் சபையின் உபதேசங் களை எடுத்துக் கொள்ளவேயில்லை. பரிசுத்த மார்ட்டினின் சகோதரியாகிய தேவபக்தியுள்ள தன் தாயார் விசுவாசித்திருந்தது போல, அவ்வுபதேசங்களின்படியே வேதத்தை அவர் விசுவாசித்தார். எந்தவொரு சமயத்திலும் ரோமானிய சபையின் உபதேசங்களை அவர் பின்பற்றவேயில்லை. ஒவ்வொரு விசுவாசியையும் மாற்கு 16ம் அதிகாரத்தில் வாக்குரைக்கப் பட்டுள்ள அடையாளங்கள் பின்தொடர வேண்டும் என்று அவர் போதித்தார். ஆமென்! நான்... அவ்விதமான ஒரு நபரைத்தான் நானும் விரும்புகிறேன், விசுவாசிக்கிறவர்களை. ஆம், ஐயா. 22. தேவன் அவரை, காதில் நன்கு விழும்படியான சப்தத்தினால் அழைத்தார். அது அவருக்கு இன்னொரு நல்ல அடையாளம், பாருங்கள். தேவனுடைய சப்தத்தை அவர் தெளிவாகக் கேட்ட பிறகு, ஒன்றும் அவரை தடுத்து நிறுத்த முடியவில்லை, அவர் சென்று கொண்டேயிருந்தார். அவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது தேவனுடைய சத்தத்தைக் கேட்டார். 23. கொலம்பாவின் ஊழியத்தில் நடந்த அநேக அற்புதங்களை நான் இங்கே எழுதி வைத்துள்ளேன். ஆனால் நாம் இந்த ஒன்றை எடுத்துக்கொள்வோம். கர்த்தர் அவரை அனுப்பிய ஒரு நகரத்திற்கு அவர் சென்றபோது, அந்நகரத்தார் அவரை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. நகரத்தின் வாயிலை அவர்கள் அடைத்து விட்டு, இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்களைக் கொண்டு வந்து, கொலம்பாவின் பிரசங்கம் கேட்கக்கூடாதபடி, அவரது சப்தத்தை அடக்கிப்போடும்படி, இசையை மிக உரத்த சப்தத்தோடு இசைக்க வைத்தனர். கொலம்பா அப்பொழுது பிரசங்கிக்க ஆரம்பித்தார். தேவவல்லமையால், அவரது பிரசங்கம் இசைக் கலைஞர்களின் வாத்திய இசைப்பின் உரத்த சப்தத்தை அடக்கிப் போட்டு பிரசங்கத்தை யாவரும் கேட்கும்படி செய்தது மல்லாமல், அடைக்கப்பட்ட நகரத்தின் வாயிற்கதவுகள் தானாகவே திறவுண்டது. கொலம்பாவும் நகரத்தின் உள்ளே சென்று பிரசங்கித்தார். அங்குள்ளவர்கள் யாவருமே இரட்சிக்கப்பட்டனர். 24. நான் இங்கே இன்னொரு அடையாளத்தைப் பற்றி பேச விரும்புகிறேன். கொலம்பா ஒரு நகரத்திற்குள் சென்றார். அந் நாட்களில் நகரங்களை மதில்கள் சூழக்கட்டியிருந்தார்கள். அவர் அந்நகரத்திற்குச் சென்ற போது, அந்நகரத்து மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளாமல், அவரைத் துரத்தி விட்டனர். எனவே அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். அப்பொழுது அந்நகரத் தலைவனின் மகன் மிகவும் கடுமையான அளவில் சுகவீனமுற்றான். அவர்கள் உடனே இந்த நல்ல பரிசுத்தவானை திரும்ப அழைத்து வரும்படி ஆள் விட்டனுப்பினார்கள். கொலம்பா திரும்பி வந்து, அப்பையன் உடலின் மேல் படுத்து ஜெபித்த பொழுது, மரித்துக் கொண்டிருந்த அச்சிறுவன் குணமடைந்து உயிரடைந்தான். 25.அவருடைய சபை பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தது. தன்னுடைய சபையின் ஒவ்வொரு அங்கத்தினரும், கண்டிப்பாக பரிசுத்த ஆவியை பெற்றிருத்தல் வேண்டும் என்றும், அதற்குக் குறைவான எதுவும் அவர்களுக்குத் தேவையில்லை என்பதில் அவர் மிக உறுதியாய் இருந்தார். ரோமானிய சபையின் குருக்களாட்சியை அவர் ஆட்சேபித்து, அதை மிகவும் கடுமையாக வெறுத்தார். கொலம்பா தான் இந்த நான்காவது சபையின் நட்சத்திரம் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அந்நிய பாஷைகளில் பேசி, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்து, மற்றும் இன்னபிற காரியங்களையும் செய்து, ஆதிசபை மக்கள் செய்ததான இக்கிரியைகளை விடாமல் நிறைவேற்றிக் கொண்டே போனார். தேவன் முடிவில்லாதவராக இருப்பாரானால், துவக்கத்தில் தன் சபையை எவ்விதம் நிர்மாணித்தாரோ, அதேவிதமாகத்தான் அது காலங்கள் தோறும், அது சிறுபான்மையாக ஆகினாலும், தொடர்ந்து நீடித்து வரவேண்டும். ஏறத்தாழ அது முற்றிலும் நசுக்கப்பட்டு அற்றுப் போகிற நிலையில், அது மீண்டும் லூத்தர் மூலமாக தோன்றுகிறது. 26. இப்பொழுது நாம் ஆரம்பிக்கப் போகிறோம். 18ம் வசனத் திலிருந்து ஆரம்பிப்போம். “ தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்ன வெனில்...'' வெளி.2:18 27. எழுதப்பட்ட இவைகளைப் பார்த்தீர்களா? அந்த சபைக் காலத்துக்குரிய ஒளியை ஏந்திக் கொண்டிருந்த அச்சபையின் தூதன் அல்லது ஊழியக்காரனுக்குத் தான் இவைகள் எழுதப்பட்டுள்ளன. பாருங்கள்? கடந்த இரவினில் நாம் பார்த்த பெர்கமு சபைக்காலத்தின் தூதனுக்கு, ஜெயங் கொள்ளுகிறவனுக்கு ஒரு கல் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது. அந்த கல்லில்.... 28. நாம் அந்த "கல்' என்ன என்பதையும், அது எதற்கு அடையாளமாக இருக்கிறது என்பதையும் பார்த்தோம். அதன் அர்த்தம் “ பாறை'' என்பதாகும். அத்தூதன் “ கல்'' என்று அழைக்கப்பட்ட பேதுருவைப் போல் இருப்பான். 29. உங்களுடைய பெயர் உங்களுடைய ஜீவியத்துடன் சம்மந்தப்பட்டதாக இருக்கும் என்பதைக் காணலாம். நான் அதைப் பற்றி அளவுக்கதிகமாக பேசக் கூடாது. ஏனெனில் பிசாசானவன் பொய்யான நியூமராலஜி கொண்டவனாக இருக்கிறான். (பிறந்த தேதி, பெயரில் உள்ள எழுத்துக்களுக்குரிய எண்கள் இவைகளைக் கூட்டிப் பார்த்து குறிப்பிட்ட நபருக்கு பலன் சொல்லுவது அல்லது குறிசொல்லுவது தான் நியூமராலஜியாகும் - மொழி பெயர்ப்பாளர்). அதை நாம் அறிவோம். நாம் கூறுவது வேறு அடிப்படையில், ஆனால் மக்கள் நாம் பேசுவதை தவறாக எடுத்துக் கொண்டு, நியூமராலஜி ரீதியில் கருதிக்கொண்டு விடுவார்கள். அது ஒருவிதமான குறிகேட்டலைப் போல் ஆகிவிடும், அது பிசாசினால் உண்டானது. நாம் அதை அறிவோம். அவ்விதமாகத்தான் நீங்கள் அதைப்பற்றி கவனிக்க வேண்டும். 30. இயேசுவை அவர்கள் “ பெயல்செபூல்'', “ பிசாசு'' என்று அழைத்தனர். ஏனெனில், அவர்களுடைய சிந்தைகளை அவரால் அறிந்து சொல்ல முடிந்தது. பாருங்கள், ஆனால் அவரோ தேவனுடைய வார்த்தையாக இருந்தார். எபிரெயர் 4ம் அதிகாரத்தில் “ தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயு மிருக்கிறது'' என்று கூறப்பட்டுள்ளது. பாருங்கள்? அவர் வார்த்தையாயிருந்தார். அவர் ஜீவிக்கிற வார்த்தை யாயிருக்கிறார். ஜீவிக்கிற வார்த்தையானவர் நமக்குள் வந்து, அது என்னவாயிருக்கிறதோ, அதே விளைவை நமக்குள் ஏற்படுத்துகிறது. பாருங்கள், அதே கிரியைகளை, ஏனெனில் வேத வார்த்தையாக அது இருக்கிறது. சில வேளைகளில் அடைப்புகளுக்குள் இல்லாதவர்கள், அந்நிய பாஷைகளில் பேசுகிறார்கள். இன்னொருவர் அதை வியாக்கியானம் செய்கிறார். அது என்னவாக இருக்கிறது? வார்த்தையானவர் மீண்டும் நம்மில் மாம்சமானதையே அது காட்டுகிறது. 31. பெர்கமு சபையின் தூதன் ஒரு கல்லைப் பலனாக பெறுவான் என்று கூறப்பட்டதை நாம் கண்டோம். அக்கல் வெண்மையான குறிக்கல் ஆகும். அவனுடைய சுய நீதியைக் காட்டுவதல்ல அது. ஆனால் தேவனுடைய நீதியைக் காட்டுவதாக வெண்மை உள்ளது. 32. இக்கல்லின் மேல் ஒரு புதிய நாமம் எழுதப்பட்டிருந்தது. “ அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக் கூடாததாக அந்த நாமம் இருந்தது''. அவனைத் தவிர வேறு எவரும் அப்பெயரை அறிந்து கொள்ள முடியாது. அப்பெயர் யோவான் அல்லது பவுல் அல்லது மரியாள், அது அல்லது இது, அது, மற்றது என்று எவராகிலும் சொன்னால், அதை நீங்கள் நம்ப வேண்டாம். ஏனெனில், அது அப்படியிருந்தால், அதைக் குறித்து அவர் ஒன்றும் சொல்லியிருக்க மாட்டார். பாருங்கள்? அது உண்மை. அப்பெயரை பெற்றுக்கொண்ட அவனைத் தவிர வேறு எவருக்கும் அந்நாமம் என்ன என்று தெரியாது. அத்தூதன் அறிந்திருப்பான் அப்பெயர் என்னவென்று. அவன் தன்னோடு அதை வைத்துக் கொள்ள வேண்டும். ஜெயங்கொள்ளுகிற ஒவ்வொரு நபருமே ஒரு புதிய நாமத்தைப் பெற்றுக் கொள்கிறார். 33. ஆபிரகாம், முதலில் ஆபிராம் என்றழைக்கப்பட்டான் என்றும், ஆனால் தேவன் அவனை உபயோகிக்கப் போகிறபொழுது, அவனது பெயரை 'ஆபிரகாம்'' என்று மாற்றியதை கவனித்தீர்களா? அவன் மனைவி முதலில் சாராய் என்று அழைக்கப்பட்டாள். ஆனால் தேவன் அவளை உபயோகிக்கவிருந்தபொழுது, அவளது பெயரை இளவரசி'' என்று அர்த்தம் கொள்ளும் “ சாராள்'' என்று மாற்றினார். யாக்கோபில் வந்த மாற்றத்தைக் கவனித்தீர்களா? யாக்கோபு என்றால், “ வஞ்சிக்கிறவன்'' என்று அர்த்தம். அவ்வாறே அவன் இருந்தான். ஏசா என்றால், "சிவப்பான', "ரோம முள்ள' என்று அர்த்தம். தலை மற்றும் உடல் முழுவதும் சிவப்பான முடியையுடையவனாக ஏசா இருந்தான். அதற்கேற்றபடி அவனது பெயர் இருந்தது. யாக்கோபு என்றால் “ வஞ்சிக்கிறவன்'' என்று அர்த்தம். அந்த அர்த்தத்தின்படியே யாக்கோபு இருந்த படியால்தான், ஏசா, “ அவன் பெயர் யாக்கோபு என்னப்படுவது சரியல்லவா? அவன் வஞ்சிக்கிறவன்'' என்றான். ஆனால் யாக்கோபு கர்த்தரோடு முழுவதும் போராடி மேற் கொண்ட பொழுது, அவன் ஆசீர்வதிக்கப்பட்டு, அவனது பெயர் யாக்கோபு என்னப்படுவதிலிருந்து, இஸ்ரவேல் என்று தேவனால் மாற்றப் பட்டது. இஸ்ரவேல் என்றால், “ தேவனோடு அதிபதியாக அல்லது ஆளுகிறவனாக இருத்தல்' என்று பொருள். பவுல், தன்னை பரிசுத்த ஆவியானவர் ஒளியின் வடிவில் அச்சாலையில் அவன் மேல் அடித்து, அவனை கீழேதள்ளி, அவனது பெயரை மாற்றுகிற வரையிலும் அவனது பெயர் சவுலாகத்தான் இருந்தது. அச்சம் பவத்தில் தான் அவனது பெயர் “ சவுல்'' என்பதிலிருந்து, “ பவுல்'' என்று மாற்றப்பட்டது. சீமோன் இயேசுவை சந்தித்த பொழுது, அவனது பெயர் “ பேதுரு'' என்று மாற்றப்பட்டது. 34. இயேசு ஜெயங்கொண்டபொழுது, அவரது பெயரும் மாற்றப்பட்டது. அவர் தன்னுடைய புதிய நாமத்தை வெளிப் படுத்துவார். “ அவர் ஜெயங்கொண்டது போல் அவரோடுள்ளவனும் ஜெயங்கொள்ளுவான், அவன் ஒரு புதிய நாமத்தைப் பெற்றுக் கொள்ளுவான், “ என்னுடைய புதிய நாமத்தை நான் அவனுக்கு வெளிப்படுத்துவேன்'' என்று கூறுகிறார். பாருங்கள்? தேவனுடைய ஜனங்களை வழி நடத்திச் செல்வதற்காக எழுப்பப்படும் தலைவர்களான மனிதர்கள் யாவரும் ஜெயங்கொள்ளுகிற படியினால், அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு புதிய நாமத்தை பெற்றுக் கொள்கின்றனர். இஸ்ரவேல் புத்திரர் அனைவருமே தங்களின் பழைய நாமம் மாற்றப்பட்டு, புதிய நாமத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. அது உண்மை. ஆனால் தேவ ஜனங்களுக்கென இருந்த அவர்களுடைய பெரிய தலைவர்கள், தாங்கள் ஜெயங்கொண்டபொழுது, ஒரு புதிய நாமத்தைப் பெற்றுக் கொண்டனர். இவை யாவும் சரியாக பிசகாமல் பொருந்து கின்றதைப் பாருங்கள். சரியானபடி பரிபூரணமாக இந்தக் காரியம் உள்ளது. 35. அத்தூதன் “ மறைவான மன்னா''வையும் பெற்றுக் கொள்ளுகிறதை நாம் காண்கிறோம். மறைவான மன்னாவானது ஆசாரிப்புக் கூடாரத்தில் பரிசுத்த ஸ்தலத்தில் மேசையின்மேல் வைக்கப்படும் சமுகத்தப்பதைக் குறிப்பதாகும். சமுகத்தப்பம் ஆசாரிப்புக் கூடாரத்தில் ஊழியம் செய்யும் ஆசாரியனுக்கு மட்டுமே உரியதாகும். சமுகத்தப்பம் ஆசாரியன் மட்டுமே புசிப்பதற்காகும். அது ஆசாரியனுக்கு என்று, அதாவது தலைவராயிருக்கிறவர்களுக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்படுவதாம். அவர்கள் ஜெயங்கொள்ளுகிறவர் களாயிருக்க வேண்டும். முழுச் சபைக்கும் மன்னா கிடைத்தது. ஆனால் தூதனுக்கோ விசேஷித்த மறைவான மன்னா கிடைத்தது. அதாவது இயேசுவானவர் யார் என்பதைப் பற்றியும், அவரைப் பற்றி உள்ள காரியம் அனைத்தும் பற்றிய “ விசேஷித்த மன்னா'' அல்லது “ விசேஷித்த வெளிப்படுத்துதல்" கிடைக்கிறது. பாருங்கள், அத்தூதன் ஜெயங்கொண்டால் அந்த வெளிப்படுத்துதல் கிடைக்கிறது. “ ... அதைப் பற்றிக் கொள். ஏனெனில் ஜெயங்கொள்கிறவன் எவனுக்கும்''. அவன் ஜெயங் கொண்டிருக்கிறான். தூதனுக்கு இவைகள் எழுதப்பட்டன. 36. இன்றிரவு இதை ஆரம்பிப்போம். “ தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில், அக்கினி ஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம் போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது; வெளி.2:18 37. நாம் அவரை துவக்கத்தில், எபேசு சபையின் காலத்தில், அல்லது வெளிப்படுத்தின விசேஷத்தின் துவக்கத்தில், அவருடைய மகிமையடைந்த ஏழுவிதமான தோற்றங்களை யோவான் கர்த்தருடைய நாளில் கண்டதாக நாம் காண்கிறோம். 38. அவர் இப்பொழுது வருகையில், ஒரு ஆசாரியனாயிருக் கிறார். அவர் இப்பூமியில் இருந்தபோது, ஒரு தீர்க்கதரிசியாக, தேவனுடைய தீர்க்கதரிசியாக இருந்தார். அவர் தன்னுடைய சொந்த இரத்தத்தை எடுத்து பிதாவின் சமூகத்திற்குப் போனார், அது அவரை ஒரு ஆசாரியனாக ஆக்குகிறது. அவர் திரும்பி வருகையில் ஒரு இராஜாவாக இருப்பார். அவர் ஒரு தீர்க்கதரிசியாக, ஆசாரியனாக, இராஜாவாக இருக்கிறார். அவர் தேவனுடைய தீர்க்கதரிசியாக இருந்தார். அவர் ஒரு கழுகு. அவர் தேவனுடைய ஆசாரியனாக இருந்தார். அவர் ஒரு ஆட்டுக்குட்டி. அவர் திரும்பி வருகையில், அவர் சிங்கமாக, அதாவது இராஜாவாக (யூதா கோத்திரத்து சிங்கமாக) இருந்து ஆளுகை செய்வார். 39. பரிசுத்த ஸ்தலம் இன்னும் இருந்து கொண்டிருக்கையில், அவரது ஆசாரிய ஊழியமானது இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வேளையில் அவர் அங்கே நின்று கொண்டு இருப்பதை நாம் காண்கிறோம். “ யோவான், தான் கர்த்தருடைய நாளில்'' ஆவிக்குள்ளானதாகக் கூறுகிறான், அது ஏழாம் நாளுமல்ல, ஞாயிற்றுக்கிழமையுமல்ல, அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. வேத வாக்கியங்களையெல்லாம் துருவி ஆராய்ந்து பார்த்து, இது மனிதனின் நாள் என்றும், அது கர்த்தருடைய நாள் என்றும், கர்த்தருடைய வருகையின் நாளே அவருடைய நாளாக இருக்கும் என்றும் பார்த்தோம். 40. யோவானை நாம் கர்த்தருடைய நாளில் காண்கிறோம். அவன் அவரைக் கண்டபோது, அவருடைய “ சிரசும் மயிரும் வெண் பஞ்சைப் போன்று இருந்த "தாகக் கூறுகிறான். அவ்விதத் தோற்றம் ஒரு நீதிபதியைக் குறிக்கிறதாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். 41. மற்றொரு காரியம், அவர் அப்பொழுது ஆசாரியனாக இல்லை. ஏனெனில், ஆசாரியன் கச்சையை, பணிவிடை செய்பவனுக்கு அடையாளமாக இடுப்பில்தான் கட்டியிருப்பான். ஆனால் இங்கே இயேசு கச்சையை மார்பருகே கட்டினவராக இருக்கிறார். எனவே இத்தோற்றம் ஒரு நீதிபதியாக அவர் இருக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது. ஆமென்! அவர் ஏழு குத்து விளக்குகளின் மத்தியில் உலாவிக் கொண்டிருக்கிறார் என்றும் நாம் காண்கிறோம். 42. தானியேலின் புத்தகத்திற்கு நாம் பின்னால் திரும்பிச் சென்று, தானியேல் அவரை வெள்ளை சிங்காசன நியாயத் தீர்ப்பில், “ சிரசும் மயிரும் வெண்பஞ்சைப் போன்று இருந்த நீண்ட ஆயுசுள்ளவர்'' என்ற தோற்றத்தில் காண்கிறான் என்று நாம் கண்டோம். 43. “ வெண்மை ''. பழங்காலத்து ஆங்கிலேய நீதிபதிகள், நீதி வழங்குவதற்காக நீதிபதிகளின் ஆசனத்தில் அமருகையில், தங்கள் தலையின் மேல் நீதிபதிகளுக்கு அடையாளமாக இருக்கும் பெரிய வெண்மையான மயிர் டோப்பாவை அணிந்து கொள்வது வழக்கம். கர்த்தருடைய நாளில் அவர் நீதிபதியாக இருக்கையில், யோவான் அவ்வாறு கண்டான். ஆமென்! 44. “ அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போல்'' இருக்கும். ஒரு காலத்தில் அவருடைய கண்கள் மனுஷீக கண்ணீரினால் மங்கிப் போயிருந்தது. மரித்துக் கொண்டிருக்கிற மனிதனைப் பார்த்து அவனுக்காக அவர் கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பார். அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் அவன் மீண்டும் உயிரடையப் போகிறதை அவர் அறிந்தவராய் இருப்பார். அவர் மனுஷீக பச்சாதாபத்தினால் நிறைந்திருந்தார். ஆனால் அக்கண்களுக்குப் பின்னால், ஒரு மனிதனின் ஜீவியத்திற்குள்ளாக பார்த்து, அவன் யார் என்பதைப் பற்றியும், மற்றும் அவனைப் பற்றி அனைத்து காரியங்களையும் கூறக் கூடிய வல்லமை இருந்தது. அக்கினி ஜுவாலையைப் போன்ற கண்களின் பிரதிபலிப்பாக அது இப்பொழுது வந்தது. என்ன நடக்கிறது என்பதை அறிய பூமி முழுவதும் சுற்றிப் பார்க்கக் கூடிய கண்கள் அவைகள். அப்படியானால் நியாயத்தீர்ப்பின் நாளில் நீ எங்கே நிற்பாய்? அவருக்கு முன்பாக உங்களுடைய பாவங்கள் வெளியரங்கமாக இருக்கும். 45. “ இருபுறமும் கருக்குள்ள பட்டயம் அவருடைய வாயிலிருந்து புறப்பட்டது'' என்பதை கவனியுங்கள். அது தேவனுடைய வார்த்தையென்று நாம் பார்த்தோம். 46. அவருடைய பாதங்கள், “ பிரகாசமான வெண்கலம்'' ஆக இருந்ததை நாம் பார்த்தோம். அது அவருடைய அஸ்திபாரத்தைக் குறிக்கிறது. சர்வ வல்லமையுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை அவர் மிதித்து, பாவங்களை தன் மேல் எடுத்துக் கொண்டு, அதைப் பரிகரித்து, தேவனைப் பிரியப்படுத்தினார். அது உண்மை . அவருடைய அஸ்திபாரமே நமது அஸ்திபாரமுமாகும். நான் நிற்கும் கன்மலை கிறிஸ்துதான் (எடி ப்ரூயிட் இவ்வாறு கூறினார்) மற்றெல்லாம் சரியும் மணல்தான் (அது சரிதான்) 47. ஒவ்வொரு சபைக் காலத்தையும் அவர் சந்திக்கையில், அவ் வேளையில், அவர் தனது தெய்வீக பெயர்களில் ஒன்றைக் குறிப் பிட்டே அத்தூதனுக்கு உரைக்கிறார். இப்பொழுது, நாம் இயேசு கிறிஸ்துவின் உன்னத தெய்வீகத் தன்மையைப் பற்றிய வெளிப்பாட்டை, ஏனைய வெளிப்பாடுகளிலிருந்து முதன்மையாக ஏற்கனவே பார்த்தோம். “ இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமானவர், நானே முந்தினவரும், பிந்தினவருமாயிருக்கிற சர்வ வல்லமையுள்ள தேவனாயிருக்கிறேன்'' என்றார். அந்த முதலாவதான வெளிப்பாட்டைப் பாருங்கள். யோவான் தன்னோடே பேசின சத்தத்தைப் பார்க்கும்படி திரும்பினான். அவர் அவனோடே பேசிய முதல்காரியம் என்னவெனில்... 48. எந்தவொரு அரசனும், “ நான் இன்னார் பேசுகிறேன்'' என்று தெரியப்படுத்துகிறான். தான் யார் என்பதைப்பற்றி முதலில் கூறி விடுகிறான். உதாரணத்திற்கு: “ நான் வில்லியம் பிரன்ஹாம், நான் ஜான் டோ'' இவ்வாறாக முதலில் தெரியப்படுத்துதல். 49. “ நான் முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்'' என்று கூறினார். ஓ, என்னே ! அவருடைய தெய்வீகத் தன்மை! இங்கே நாம், அவருடைய மகிமைப்படுத்தப்பட்ட ஏழுவிதமான தோற்றங்களைக் கொண்டவராய் இருப்பதை அவரில் காண்கிறோம். ஒவ்வொரு சபைக்காலத்திலும், அவர் இந்த ஏழுவிதமான மகிமையான தோற்றங்களில் ஒன்றை தெரியப்படுத்தி, அச்சபைக் காலத்தை அணுகுகிறார். 50. இன்றிரவில், அவர், கண்களில் அக்கினி ஜுவாலையுடன் வருகிறார். அவர் இந்த தீயத்தீரா சபைக்காலத்திற்குள்ளாக அவ்விதமான கண்களுடன் உற்று நோக்குகிறார். இக்காலத்தில் தான் சபையானது கத்தோலிக்க மதக்கொள்கைகளுக்குள்ளும், அஞ்ஞான மதக் கொள்கைகளுக்குள்ளும் விவாகம் செய்து கொண்டது. அதாவது, நிக்கொலாய் மதத்தினரும் அஞ்ஞானிகளும் சேர்ந்து விவாகம் செய்து கொண்டு, முதலாவதாக மதஸ்தாபன சபையைப் பிறப்பித்தது. 51. எபேசு சபை காலத்தில், நிக்கொலாய் மதத்தினரின் கிரியைகளாக இருந்தது, பெர்கமு சபை காலத்தில் போதகமாக மாறியது, அது பிலேயாமின் போதகம் என்று அழைக்கப்படுகிறது. இஸ்ரவேலர் புறப்பட்டுப் போய் மோவாபிய பெண்களோடு வேசித்தனம் செய்வதற்கு பிலேயாம் காரணமாயிருந்தான். (அம் மோவாபியர் இன்றைக்கு இருக்கிற வெதுவெதுப்பான ஸ்தாபன சபை உறுப்பினருக்கு முன்னுதாரணமாக இருக்கின்றனர்). மோவாப் லௌகீக சபைக்கும், மகத்தான ஸ்தாபன சபைக்கும் எடுத்துக்காட்டாய் இருக்கிறது. நிக்கொலாய் மதத்தினர் போதகம், சபையில் இருக்கிற அனைத்து, அதிகாரத்தையும் எடுத்துப் போட்டு, அதை குருக்களின் மேல் வைத்து, அவ்வாறு அதை ஒரு சடங்காச் சார மத ஸ்தாபனமாக ஆக்கிவிட்டது என்று தேவன் கூறினார். அவர் கூறினார், “ நீ இதை வெறுக்கிறாய், நானும் அதை வெறுக்கிறேன்'' என்று. “ நான் அதை வெறுக்கிறேன்! நான் அதை வெறுக்கிறேன்! நான் அதை வெறுக்கிறேன்!'' என்று அவர் தொடர்ந்து கூறிக் கொண்டேயிருக்கிறார். இங்கே அது முழு வேகத்தில் வருகிறது. சபையானது எவ்வாறு நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அது மிகவும் சிறுத்துப் போய், இன்றைக்கு நமது சபைக்காலத்தில் இருக்கிற மிகச்சிறிய அளவுக்கு குறுகிவிட்டது என்பதைப் பாருங்கள். 52. இந்த வெளிப்பாடானது இச்சபைக்கு கிடைத்த நாளில் தான், ரோமாபுரியானது, தனது இடத்திலுள்ள பிரம்மாண்டமான கற்களின் மேல் புல், வைக்கோல் ஆகியவற்றைக் கொண்டு தங்கள் சபையைக் கட்டியிருந்தது. ஆனால் அவர் இந்த சபையினிடம், அவர் அப்பொழுதும் அக்கினி ஜுவாலையைப் போன்ற கண்களுடன் காலங்கள் தோறும் நோக்குகிறார் என்றும், அவரது அஸ்திபாரம் புல், வைக்கோல் அல்ல, உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான, உறுதியான வெண்கலம் என்பதாகக் கூறுகிறார். உறுதியான அஸ்திபாரம் அது. நான் அதை நேசிக்கிறேன். நாம் எங்கே நின்று கொண்டு இருக்கிறோம் என்பதை அறிவோம். 53. “ உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத் தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.'' வெளி.2:19 54. சரி, இச்சபைக்காலத்தில் சபையானது ஏறத்தாழ அறுப்புண்டு போன நிலையில், மிகவும் குறைந்து போன நிலைக்கு ஆகிவிட்டது. இக்காலத்தில் அவர்கள் மகத்தான ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டங்களைப் பெற்றிருப்பதிலிருந்து அகன்று, கிரியைகளைச் சார்ந்து கொள்ளும் நிலைக்குப் போய்விட்டார்கள். நாம் நம்முடைய கிரியைகளை சார்ந்திருப்பதை தேவன் விரும்பவில்லை. 55. அது ஸ்தாபன சபையின் அடையாளமாயுள்ளது. “ நாங்கள் செல்வி ஜோன்ஸுக்கு விறகு கட்டைகளைக் கொடுக்கிறோம். நாங்கள் இன்னாருக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் துணி மணிகளைக் கொடுக்கிறோம்'' என்று சொல்லுகிறார்கள். அது நல்லது தான். ஆனால் நீங்கள், அக்கிரியைகளே உங்களைக் கிறிஸ்தவ ராக்கிடப் போதுமானது என்று அவைகளின் மேல் சார்ந்து கொள்ள வேண்டாம். சகோதரனே, சேவை மனப்பான்மையுடன் கூடிய அக்கிரியைகள் நல்லதுதான். ஆனால் ஒரு கிறிஸ்தவனாக ஆவதற்கு, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் கிடைக்கும் மறு படியும் பிறந்த அனுபவமே தேவை சரி. 56. அச்சபையினர் அன்பு, விசுவாசம் ஆகியவைகளைக் கொண்டிருப்பதை விடுத்து, அதற்குப் பதிலாக கிரியைகளையே சார்ந்து கொள்ளத் தலைப்பட்டனர். காலம் செல்லச் செல்ல அவர்கள் அதில் பெருகிக் கொண்டே போயினர். இதனால் ஆவிக்குரிய விஷயங்களில் அவர்கள் மிகவும் குன்றிப் போனவர்களாக ஆகிவிட்டனர். 57. “ உன் கிரியைகளையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும்... அறிந்திருக்கிறேன். வெளி.2:19 58. நாம் இப்பொழுது 20ம் வசனத்தை எடுத்துக் கொள்ளப் போகிறோம். இதைக் கவனியுங்கள். “ ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடம் கொடுக்கிறாய்.” வெளி.2:20 59. இப்பொழுது, “ ஸ்திரீயானவள்''; நேற்றிரவில் ஸ்திரீ யானவள் எதற்கு எடுத்துக் காட்டாய் இருக்கிறாள் என்று பார்த் தோம்? “ சபை'யை எடுத்துக் காட்டுகிறாள் ஸ்திரீயானவள். இங்கே நாம், அவர்கள் “ நிக்கொலாய் மதத்தினரின் போதகம்'' மற்றும் “ பிலேயாமின் போதகம்'' என்றும் பார்த்தோம். இப்பொழுது அது யேசபேல்'' ஆக மாறிவிட்டது. 60. இப்பொழுது யேசபேலைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். யேசபேலைப் பற்றிய ஒரு பெரிய வரலாறு உண்டு. அதைக் குறித்துக் கொள்ள விரும்பினால், 1 இராஜாக்கள் 16ம் அதி காரத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். யேசபேல் ஒரு போதும் ஆபிரகாமின் குமாரத்தியல்ல. அஞ்ஞான ரோமாபுரியாகிய இந்தக் குழுவினரும் ஆபிரகாமின் குமாரத்தியல்ல. நிக்கொலாய் மதத்தினர் என்பவர்கள் குளிர்ந்து போய்விட்ட, சடங்காச்சாரக் கூட்டமான கிறிஸ்தவர்களாவர். இவர்கள் விசுவாசத்தை விட்டு விலகி, தங்களை உண்மையான கிறிஸ்தவர்களிடமிருந்து வேறு பிரித்துக் கொண்டுவிட்டனர். இன்றைக்கு இருப்பது போல், அவர்கள் ஒரு சபையை ஒரு தங்கும் விடுதியைப் போல் ஆக்க அன்று அவர்கள் விரும்பினர். அதில் பரிசுத்த ஆவியே இல்லை. “ அற்புதங்களின் காலம் கடந்துவிட்டது, அது வேறொரு காலத்திற்குரியது. நமக்கு சகோதர ஐக்கியம் கிடைத்திருக்கிறது'' என்கிறார்கள். மேஸன், ஆட் ஃபெலோ (Mason, Odd Fellow) என்னும் இந்நிறுவனங்கள் (சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ஒருவித சர்வதேச இரகசிய ஸ்தாபனங்களாகும் - மொழி பெயர்ப்பாளர்) அதைத்தான் பிறப்பிக்கின்றன. அதெல்லாம் சரிதான். ஆனால் அவைகள் ஒரு போதும் ஆத்தும இரட்சிப்பை அளிக்கிற இயேசு கிறிஸ்துவிலே நடக்கும் புதிய பிறப்பின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளவே முடியாது. இது சத்தியமாயிருக்கிறது. 61. சரி, இந்த யேசபேல் ஆபிரகாமின் குமாரத்தியல்ல, அது உண்மை . அவள் ஒரு விக்கிரக ஆராதனைக்கார இராஜாவின் மகளாகிய இளவரசியாவாள். அவளது ராஜ குடும்பமானது பாகாலிடத்தில் காட்டுமிராண்டித்தனமான, கொடூரமான முறையில் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தார்கள். அவளுடைய தந்தை அஸ்தரோத்து தேவதைக்கு பூசாரியாக இருந்தான். (அஸ்தரோத்து என்னும் பெயரை எப்படி உச்சரிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. வரலாற்றில் இருந்து அவளைப் பற்றிய குறிப்பை எடுத்தேன்.) கான்ஸ்டன்டைனைப் போலவே உள்ள உத்தியை ஆகாப் ராஜாவும் பின்பற்றினான். யூதா தேசத்திற்கு அருகாமையில் ஆகாபின் வலுவான தேசமானது அமைந்திருந்தது. எனவே... 62. நேற்றிரவில் கான்ஸ்டன்டைன் என்ன செய்தான் என்று பார்த்தோம்? கான்ஸ்டன்டைன் இரட்சிக்கப்பட்டவனல்ல. அவன் ஒரு அரசியல்வாதி. அவன் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தான்? அவன் கிறிஸ்தவர்களை எடுத்துக் கொண்டான். அவர்கள் அவனுக்காக ஜெபிப்பதாகக் கூறினார்கள். (நான் குறிப்பிடும் இக்கிறிஸ்தவர்கள் நிக்கொலாய் மதத்தினர் என்னப்பட்ட ர்களாவர். இவர்களைத் தான் நான் இங்கு குறிப்பிடுகிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்). அவர்கள் ஜெபித்து, அதினால் தான் அந்த யுத்தத்தில் ஜெயித்தால், தானும் ஒரு கிறிஸ்தவனாக ஆகிவிடுவதாக உறுதியளித்தான். அவன் இதைப் பற்றி ஒரு சொப்பனங்கண்டான். அதன்பேரில் அவன் தன்னுடைய வீரர்களின் கேடயங்களை வெண் வர்ணம் பூசி, அந்த இராத்திரியில், சிலுவைச் சின்னத்தைப் பொறித்தான். அச்சமயத்தில் தான் நைட்ஸ் ஆஃப் கொலம்பஸ் (Knights of Columbus) என்ற ஸ்தாபனமானது பிறந்தது. அங்கே தான் அவர்கள் தங்களுடைய நிலையை எடுத்து இருக்கிறார்கள். ஆனால் கான்ஸ்டன்டைன் ஒருபோதும் கிறிஸ்தவர்களுக்குரிய நிலையை எடுத்துக் கொண்டதேயில்லை. செயின்ட் சோஃபியா சபை என்னப்பட்ட ஒரு நிக்கொலாய் மதஸ்தருடைய சபையின் கட்டிடத்தின் மேல் அவன் ஒரு சிலுவைச் சின்னத்தைப் பொறித்தான். நான் நேற்றிரவு கூறியது போல, வரலாற்றின் பக்கங்களில், கிறிஸ்தவம் போல் தோற்றமளிக்கும் இந்த ஒரு காரியத்தைத் தவிர வேறு எதுவும் கிறிஸ்தவத்திற்குரியதாக அவன் செய்தான் என்று சொல்லும் எதையும் என்னால் காண முடியவில்லை. வேறு அநேக அறிஞர்களும் அதையே கூறுகிறார்கள். அவன் இரட்சிக்கப்பட்டான் என்று கூறும் எந்தவொரு சான்றும் நமக்குக் கிடைக்கவில்லை. அவன் எந்தவிதமான நிலைக்குள் சென்றான்? அவன் செய்ய நினைத்ததென்னவெனில், அவன் ரோமாபுரி முழுவதையும் பார்த்தான். 63. இப்பொழுது அவனுடைய உத்தியைப் பாருங்கள். இக்காரியம் சம்பவிப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே வேதத்தில் தேவன் அதைப்பற்றி கூறி உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆகாப் உபயோகித்த அதே உத்தியைத் தான் கான்ஸ்டன்டைனும் கடைப்பிடித்தான். 64. கான்ஸ்டன்டைனின் ஜனங்களில் பெரும்பாலோர் இந்த நிக்கொலாய் மதத்தினரான கிறிஸ்தவர்களாயிருந்தனர். வேறு சிலர் “ பதிதர்கள்'' என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் தான் பெந்தெகொஸ்தே அனுபவத்தை உடையவர்கள். அவர்களோ, “ பதிதர்கள், பரிசுத்த உருளைகள்'' என்றும் இன்னும் இன்ன பிற பெயர்களைக் கூறி, பரிகசிக்கப்பட்டனர். அவர்களிடம்தான் உண்மையான அற்புதங்களும் அடையாளங்களும் உண்டாயிருந்தன. ஆனால் லௌகீக சபையோ ஒரு பெரும் ஸ்தாபன சபையாக உரு வெடுத்துக் கொண்டு வந்தது. கான்ஸ்டன்டைன் என்ன செய்தான்? அவன் மிகவும் சாதுரியமானதொரு வேலையைச் செய்தான். அவன் தன்னுடைய அஞ்ஞான விக்கிரக ஆராதனைக்கார நண்பர் களையும் கிறிஸ்தவ நண்பர்களையும் ஒன்று சேர்த்து இவ்விரு சபைகளையும் இணைத்து, அஞ்ஞானக் கொள்கைகளை கிறிஸ்தவத்திற்குள் கொண்டு வந்தான். அவ்வாறு பெர்கமு சபையின் காலத்தில் கிறிஸ்தவமும், அஞ்ஞான மதமும் விவாகம் செய்து கொண்டன. 65. இந்த சபைக்கு தேவன் இன்றிரவில் என்ன கூறுகிறார்? ஆகாப் தனது இராஜ்யபாரத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டி, விக்கிரக ஆராதனைக்காரியாகிய யேசபேலை மணந்தான். அதே காரியம் தான் இங்கும் நடந்தது. தனது இஸ்ரவேலின் இராஜ்யத்திற்கு பலம் சேர்க்க அவன் இவ்வாறு செய்தான். 66. அதைத்தான் சபைகளும் முயற்சித்துக் கொண்டிருக் கின்றன. அடுத்த ஆண்டில், 1962ல் யாவர்க்கும் ஒத்துப் போகிறதான வேதாகமத்தை அவர்கள் உருவாக்கி வெளியிட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனித்தீர்களா? கத்தோலிக்கரையும், ப்ராடெஸ்டெண்டுகளையும், யூதர் களையும் பிரியப்படுத்தத்தக்கதான ஒரு வேதாகமமாக அது இருக்குமாம். ஓ, சகோதரனே! அதைப் பற்றிய செய்தியை செய்திப் பத்திரிக்கையில் இருந்து கத்தரித்து வைத்திருக்கிறேன். இன்றிரவில் அதை இங்கே கொண்டு வரவில்லை. அன்றிரவு நான் அதிலிருந்து வாசிக்க நீங்கள் கேட்டீர்கள். 67. இவ்வாறான காரியங்களை அவர்கள் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். தங்களை எண்ணிக்கையில் பெருக்கிக்கொள்ள வேண்டி, தேவனுடைய பரிசுத்தமானவைகளை எடுத்து இஷ்டப்படி வீசியெறிந்து விடுகிறார்கள். சபை அதைத்தான் செய்திருக்கிறது. சபையானது தனக்குள் ஆட்களை சேர்த்துக் கொள்வதற்காக, ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கிக் கொள்ளுதலின் அடிப் படையில் ஆட்களை சேர்த்துக் கொண்டு, அதன் மூலம் மறு ஜென்ம அனுபவத்தை அடையாத ஆட்களான துரோகிகளை, விசுவாசமில்லாதவர்களைக் கொண்டதாக அது இருக்கிறது. ஆனால் கிறிஸ்துவின் உண்மையான சரீரமாகிய சபையோ ஒரு மத ஸ்தாபனமல்ல, அது புத்திக்கெட்டாத இரகசியமான கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறது; அதற்குள் நீங்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெறுதல் என்னும் ஒரேயொரு வழியாகத்தான் உள்ளே நுழைய முடியும். அது உண்மை! அப்போஸ்தலர்கள் பெற்றிருந்த அதே அடையாளங்களை உண்மையான சபையானது பெற்றிருக்கிறது. அது முற்றிலும் உண்மை . 68. நாம், “ நல்லது, நாம் அசெம்ப்ளீ ஸ் ஆஃப் காட் சபையோடு சேர்ந்து கொள்வோம். ஒருத்துவ மக்களோடு (Oneness) சேர்ந்து கொள்வோம், அல்லது இந்த சபையோடு சேருவோம், பாப் டிஸ்டோடு சேருவோம், அல்லது மெதொடிஸ்டு சபையோடு சேருவோம்'' என்று கூறி, அவ்விதமாக நாம் தவறோடு ஒத்துப் போக வேண்டியதில்லை. நாம் கிறிஸ்துவோடு சேரக்கடவோம்! இந்த மதஸ்தாபனங்களினின்றும் விலகி சுயாதீனராகுங்கள். அந்த ஸ்தாபனங்கள் ஒவ்வொன்றும் நன்றாகத்தான் காணப்படுகின்றன. ஆனால் அவர்களுக்கென கொள்கைகளும், கோட்பாடுகளும் உள்ளன; நீங்கள் அவர்களுடைய தேசத்திலுள்ள சபையில் ஒரு கூட்டத்தை நடத்த வேண்டுமானால் அவர்களுடைய ஜெனரல் ஓவர்சீயரைப் போய் பார்த்து, அவர் அனுமதிக்கிறாரா என்று முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் என்ன போதிக்கிறார்களோ, அதன்படி சரியாக நீங்கள் போதிக்காவிடில், அவர்கள் உங்களை புறம்பாக்கிப் போடுவார்கள். அவர்கள் விருப்பப்படி போதித்தால் அப்பொழுது நீங்கள் வேதத்தோடு நிலைத்திருக்க முடியாது. தேவன் அதைச் செய்ய இயலாது, அவர் அதை வெறுக்கிறார். எந்தவொரு மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனும் அவ்வாறே செய்கிறான். அங்கிருக்கிறவர்கள் அநேகர் முற்றிலும், ஊழியம் செய்யவும், ஐக்கியங்கள் கொள்ளவும் வாஞ்சிக்கின்றனர். ஆனால் உங்களால் அதைச் செய்ய முடியாது; அவர்களை வெளியே தள்ளிவிடுவார்கள். நல்லது, அவர்கள் உங்களை வெளியே தள்ளினால் தள்ளட்டும், நீங்கள் புறப்பட்டுப் போய் பரிசுத்த ஆவியை எப்படியாகிலும் பெற்றுக் கொள்ளுங்கள். அதைத்தான் செய்ய வேண்டும். ஆனால் பாருங்கள், அவர்களோ அந்த கோட்பாட்டைப் பெற்றுக் கொள்ளவே விரும்புகிறார்கள். ஏராளமாக பணம் கிடைக்கக் கூடிய அளவுக்கு அதற்கேற்ப நிலைக்கு நீங்கள் போய்விட விரும்புகிறார்கள். 1944ம் ஆண்டில் பாப்டிஸ்டுகள் ஒரு கோஷத்தை எழுப்பினார்கள்; “ 1944ம் ஆண்டில் புதிதாக இன்னும் ஒரு மில்லியன் மக்களை சேர்த்து எண்ணிக்கையைப் பெருக்குவோம்'' என்கிற கோஷம் அது. அவர்கள் என்ன பெற்றுக் கொண்டார்கள்? 69. லூயிவில் என்ற இடத்தில் அந்த மகத்தான சுவிசேஷகர் பில்லி கிரகாம் அவர்கள் பேசியபொழுது, “ நான் ஒரு பட்டணத்திற்குப் போகிறேன், அங்கே 30,000 பேர்கள் என் கூட்டத்தில் கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுக்கிறார்கள். நான் அடுத்த ஆண்டில் அதே பட்டணத்திற்கு போகும்போது, அவர்களில் 30 பேர் கூட தேற மாட்டார்கள். ஆனால் பவுல் அப்போஸ்தலன் ஒரு பட்டணத்திற்குப் போனால், ஒரு ஆத்துமா அவனது ஊழியத்தில் இரட்சிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். பவுல் அதே பட்டணத்திற்கு அடுத்த ஆண்டில் திரும்பிப் போகும் போது, அந்த ஒரு ஆத்துமாவிலிருந்து இன்னும் 30 ஆத்துமாக்கள் அங்கே இரட்சிக்கப்பட்டிருக்கிறதை காணலாம். அந்த ஒன்றிலிருந்து நிறைய பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள் என்று எண்ணிக்கை கூடுகிறது'' என்று கூறினார். இவ்வாறு அவர் ஒரு நல்ல அறிக்கையைப் பண்ணியிருக்கிறார். ஆனால் அவர் பின்வருமாறு கூறியதை சரியென்று நான் விசுவாசிக்கவில்லை. பில்லி கிரகாம்; ''சோம்பேறிச் பிரசங் கியார்களே! நான் அவ்வாத்துமாக்களின் பெயர்களையும், முகவரிகளையும் கொடுத்திருந்தேனே, நீங்களோ அவர்களை நேரில் போய் சந்தித்து அவர்களோடு சம்பாஷிக்காமல், அதற்குப் பதிலாக வெறும் ஒரு கடிதத்தை அனுப்பிவிட்டு, உங்கள் காலை மேசையின் மேல் தூக்கிப் போட்டுக் கொண்டு சுகமாக இருந்துவிடுகிறீர்கள்'' என்று கூறினார். 70. இவ்வாறு அவர் வெளிப்படையாகப் பேசியதை நான் மெச்சுகிறேன். ஒரு மனிதன் மாய்மாலக்காரனாக இராமல், தான் என்னவாக இருக்கிறானோ அப்படியே தன்னைக் காண்பித்தால் நான் அப்படிப்பட்டவனையே விரும்புகிறேன். நீங்கள் என்னவாக இருக் கிறீர்களோ, அதைவிட மிஞ்சி எண்ணாமல், உள்ளபடியே எண்ண வேண்டும். அதை நான் விரும்புகிறேன். ஆனால் நான் ஒன்று கூற விரும்புவேன்; “ பில்லி அவர்களே! பவுலின் ஊழியத்தில் இரட்சிக்கப்பட்ட அந்த ஒரு ஆத்துமாவை வழி நடத்திச் செல்ல அவனுக்கு யார் இருந்தார்கள் என்று உங்களை கேட்க விரும்புகிறேன். பில்லி! நீங்கள் அவ்வாத்துமாக்கள் ஸ்தாபனங்களுக்கு திரும்பிப் போய் கைகுலுக்கிக் கொண்டு வாளாவிருந்து விடுவதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் விழித்திருந்து, “ நான் இயேசுவை எனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டேன்' என்று அவ்வனுபவத்தில் நிலைத்திருந்து, அவர் மாம்ச சிந்தைக்கு மரித்து அழுகி, பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறக்க விட்டுவிடுங்கள். அப்பொழுது அவ்வாத்துமா ஆத்தும ஆதாயம் செய்யும்”. 71. சகோதரனே, அப்படிப்பட்ட ஆத்துமா அக்கினிப் பந்தாக இருப்பான். அவனில் உள்ள அக்கினியை உங்களால் அணைக்கவே முடியாது. பெருங்காற்றினால் விசிறி விடப்பட்டு கோரமாக எரியும் ஒரு வீட்டைப்போல் அவ்வாத்துமா இருக்கும். அதை நீங்கள் அணைக்கவே முடியாது. ஒரு உண்மையான இரட்சிக்கப்பட்ட ஆத்துமாவில் உள்ள அக்கினி எங்கும் பரவுகிறது; அவனால் மௌனமாக இருக்க முடியாது. அவன் அசைந்து கொண்டேயிருப்பான். ஓ, நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்! ஓ, என்னே! பழங்காலத்துப் பாணியிலான பரிசுத்த ஆவியின் அபிஷேகம் உங்கள் ஆத்தமாவை அக்கினிமயமாக்குகிறது. பெருத்த முழக்கத்தோடு வீசும் பலத்த காற்று அவ்வக்கினியை மேலும் பற்றியெரியச் செய்கிறது. அது அமைதியாக இருக்க முடியாது. அவ்விதமான நிலையில், நான் கொஞ்சம் விறகை எடுத்து நெருப்பில் வைத்து விட்டுப் போய்விடுகிறேன். ஆம், ஐயா! அது அணையாமல் எரிந்து கொண்டேயிருக்கிறது. பவுலின் ஊழியத்தில் இரட்சிக்கப்பட்ட ஆத்துமாவை யாரும் வழி நடத்திச் செல்ல வேண்டியதில்லை, ஏனெனில், பவுல் அந்நபரை, தன் சுயத்தில் மரித்து, கிறிஸ்து அவருக்குள் ஜீவிக்கத்தக்க அளவுக்கு கிறிஸ்துவுக்குள் ஆழமாக கொண்டு போய்விட்டுவிடுவான். மீதியை அவர் பார்த்துக் கொள்வார். அது உண்மை! அது தான் செய்யப்பட வேண்டிய காரியம். 72. பாப்டிஸ்டு சகோதரர்கள் அருமையானவர்கள் தான். ஆனால் இன்னும் ஒரு மில்லியன் மக்களை புதிதாக சேர்ப்பதனால் என்ன பயன்? உங்களுக்கு இன்னும் கூடுதலாக ஒரு மில்லியன் பெயர்கள் தான் கிடைக்கின்றன. சபைப் பதிவேட்டில் எப்படியாவது யாரையாவது சரிக்கட்டி சேர்த்து, அதில் எழுதிவிடுவது தான் நடக்கிறது. அதெல்லாம் சரிதான், சகோதரரே, ஆனால் தேவையானது என்னவெனில், உலகத்தோற்றத்திற்கு முன்னரே அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்ட பெயர்களே நமக்கு வேண்டும். அவர்கள் இரத்தத் தால் கழுவப்பட்டு, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, அடையாள அற்புதங்கள் தங்கள் ஜீவியத்தில் கொண்டவர்களாக இருப்பார்கள். 73. வரலாற்று நூல்களை ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் யாவருமே "நிசாயா ஆலோசனை சங்கம்' என்ற புத்தகத்தை வாங்கி, எவ்வாறு அந்த இரத்த சாட்சிகள் பெந்தெகொஸ்தேயின் அக்கினியை விடாமல் பற்றிக் கொண்டிருந்தனர் என்பதை வாசித்துப் பார்க்க விரும்புகிறேன். இப்பொழுது சகோதரனே, பாப்டிஸ்ட்டுகளே, மெதோடிஸ்டுகளே, நான் கூறுவது என்னவெனில், உண்மையான சுத்தமான ஒளியானது ஒரு பெந்தெகொஸ்தே ஸ்தாபனம் அல்ல; ஆனால் உண்மையான சுத்தமான ஒளியோ ஒரு பெந்தெகொஸ்தே அனுபவமாயிருக்கிறது. நான் அநேக நாட்கள் இதைப் பற்றி வரலாறுகளை தோண்டி ஆராய்ந்து பார்த்ததில், பெந்தெகொஸ் தேயின் ஜுவாலையானது, பெந்தெகொஸ்தே நாள் முதற்கொண்டு, இந்தக் காலம் வரை அணையாமல் எரிந்து கொண்டேயிருக்கிறது. ஆம் ஐயா! ஆனால் அது தள்ளப்பட்டுவிட்டது. 74.“நல்லது, மகத்தான கத்தோலிக்க சபையானது எதிர்ப்பலைகளையெல்லாம் சமாளித்து நிலைத்து நின்றுவிட்டது; அதுதான் உண்மையான சபை என்பதை இதனால் நிரூபிக்கிறது'' என்று அவர்களில் சிலர் கூறுகின்றனர். அவள் நிலைத்து நின்றது ஒன்றும் ஆச்சர்யமானதாக எனக்குத் தென்படவில்லை, ஏனெனில் அச்சபையின் பின்னால் பக்கபலமாக அரசாங்கமும் மற்றும் ஏனைய சக்திகளும் இருந்தபடியினால் அது நீடித்திருக்க முடிந்திருக்கிறது. ஆனால் மிகவும் அதிசயிக்கத்தக்கதான விஷயம் என்னவெனில், அந்த சிறுபான்மையினரான சிறுமந்தையானது, புறம்பாக்கப் பட்டும், சிறையில் அடைபட்டும், வாளால் அறுப்புண்டும் இருந்தாலும், அது எவ்வாறு இவ்விதமோசமான நிலையிலும் நீடித்து நிலைநின்றது என்பதுதான். அவர்களுக்குள் ஜீவனுள்ள தேவனுடைய ஆவியானவர் அசைவாடிக் கொண்டிருப்பதினால் அது நீடித்து நிற்க முடிந்தது. பாதாளத்தின் அனைத்து பிசாசுகளும் அதை ஜெயிக்க முடியாது. "இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.' அதனிடத்தில் உண்மையான காரியமானது உள்ளது. மெதோ டிஸ்டு பிரசங்கியார்களுக்கும் இந்தப் பரிசுத்த ஆவியானது கொடுக்கப்பட்டால் இதே காரியம் நடக்கும். அது அவர்களை எழுப்பி அதே விதமான காரியங்களைச் செய்யும். அது ஒரு போதும் தவறாது. 75. அந்த மாய்மாலக்காரனான ஆகாப், பாருங்கள், அங்கே போய், “ இப்பொழுது நான் என் இராஜ்யத்தை பெலப்படுத்திக் கொள்ள வேண்டும், அதினால் எனக்கு பெரிய தேசம் உண்டா யிருக்குமே, நான் போய் அந்த இராஜாவின் மகளை விவாகம் செய்து கொள்ளுவேனென்றால், நாம் சிநேகிதராகிவிடலாம்'' என்றெல்லாம் எண்ணினான். அவன் செய்தது என்ன? அவன் தனது சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப் போட்டான். 76. பிராடெஸ்டெண்ட் சபையும் இதே போல் திரும்பிப் போய் கத்தோலிக்க சபையோடு இணைந்து கொண்டு விட்டால், முன்பு நடந்தது போலவே அது இருக்கும். ஆகாப் வாழ்ந்த நாளில் ... 77. நடுநிசி வேளையானது மூன்று தடவைகள் ஏற்பட்டிருக்கிறது. இஸ்ரவேலின் பிரயாணத்தில் ஆகாபுக்கு நடு இரவு அனுபவம் உண்டாயிருந்தது. இங்கே அது மீண்டும் நடுநிசி வேளையாக இருக்கிறது. அடுத்து நாம் மீண்டும் இக்காலத்தில் நடு நிசி வேளைக்குள் வந்திருக்கிறோம். மூன்று சந்ததிகள் இந்த அனுபவத்துக்குள் கடந்து சென்று விட்டன. இங்கே, இங்கே, இங்கே, ஆக இம் மூன்று காலங்கள் இதற்கு முன்பாக உண்டாயிருந்தது. 78.ஆகாப் தன் ஜனங்களை வலுப்படுத்த வேண்டி, யேசபேலை மணந்து கொள்கிறான் என்பதை கவனியுங்கள். சரியாக அதேவிதமான காரியத்தைத்தான் கான்ஸ்டன்டைனும் செய்தான். அவன் ஒரு பெரிய சபையை நிறுவி, சலவைக் கற்களால் ஆன பலிபீடத்தை உண்டாக்கி, போப் என்ற மனிதனை எடுத்து அவனுக்கு சிரேஷ்டமாக உடுத்து வித்து அவனை அங்கே மேலாண்மையுள்ளவனாக ஏற்படுத்தினான். அந்த அனலில்லாத வெதுவெதுப்பான சபையினருக்கு அவன் ஒரு உயிருள்ள தெய்வமாகக் காட்சியளித்தான். அவர்களால் அவனோடு பேசி, அவர்களுடைய பாவங்களை எடுத்துச் சொல்ல முடிந்தது. அதைப் பற்றி அவர்கள் மகிழ்ந்தனர். அதோடு திருப்தியடைந்து அவர்கள் சென்றனர். நிச்சயமாக! அதுதான்! ஆனால் மறுபடியும் பிறந்த மனிதனுக்கோ, அவர்கள் இவ்வனுபவத்தை அகற்றிவிட்டு, ஜெபங்களை வாசித்து சொல்வது, மற்றும் அஞ்ஞான சடங்குகளை உள்ளே கொண்டு வந்தது உவப்பாயிருக்கவில்லை. அவர்கள் என்ன செய்தார்கள். ஜுபிட்டரை விலக்கி அந்த இடத்தில் பேதுருவை வைத்தார்கள். அவர்கள் வணங்கி வந்த வீனஸ் தேவதையே விலக்கிவிட்டு அந்த இடத்தில் மரியாளை வைத்து வணங்க ஆரம்பித்தார்கள். கிறிஸ்தவ மக்களுக்குள் அஞ்ஞான மூட நம்பிக்கைகள் நுழைந்துவிட்டன. 79. ஆகாப் யேசபேலை மணந்து கொண்டபோது, அதே விதமான காரியத்தையே செய்தான். அவன் இஸ்ரவேலுக்குள் விக்கிரக ஆராதனையை கொண்டு வந்தான். யேசபேல் என்ன செய்தாள்? தீர்க்கதரிசிகளில் எவர்மேலெல்லாம் அவளால் கைபோட முடியுமோ, அவர்களையெல்லாம் அவள் கொன்று போட்டாள். அவள் அப்படிச் செய்யவில்லையா? அதே விதமாகத்தான் போப்புகளும் செய்தார்கள். உண்மையான கிறிஸ்தவர்களில் யார் மேலெல்லாம் அவர்களால் கைபோட முடியுமோ, அவர்கள் மேல் கைபோட்டு, அவர்களை கொன்றனர். 80. ஆகாபின் காலத்தில் அக்காலத்திற்குரிய ஒரு நட்சத்திரமாக வயது சென்ற எலியா இருந்தான். ஓ, ஆம், ஐயா! அவர்களுடைய பாவங்களைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்க அவன் கலங்கிடவேயில்லை. அவன் அந்தக் காலத்திற்குரிய தேவனுடைய நட்சத்திரமாக விளங்கினான். ஒரு சமயம், அவன் “ கர்த்தாவே நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்'' என்று சொல்லும் படியான கட்டம் வந்தது. 81. தேவன் அவனுக்கு பிரதியுத்தரமாக, “ ஒரு நிமிடம் பொறு எலியா, நான் எனக்காக 7000 பேர்களை மீதியாக மறைத்து வைத்திருக்கிறேன். பார்? அவர்கள் எங்கேயுள்ளனர் என்பதை நீ அறிவாயா. பரிசேயர், சதுசேயர், பாப்டிஸ்டு கள், மெதோடிஸ்டுகள், ப்ரெஸ்பிடேரியன்கள் ஆகியோர் நடுவில் அவர்கள் மறைந்து உள்ளனர். நான் அவர்களை வெளியே கொண்டு வருவேன். கொஞ்சம் பொறுத்துக்கொள். பார்? அவர்கள் என்னுடையவர்கள், அவர்கள் இது வரைக்கிலும் பாகாலுக்கு முன்பாக முழங்கால்படியிடவில்லை'' என்று கூறினார். வயது முதிர்ந்த எலியாவோ அந்த நாளுக்குரிய தேவனுடைய சப்தமாக இருந்தான். வேதவாக்கியங்களின்படி நிச்சயமாகவே, எலியாவானவன், இயேசு கிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன்பாக வரவேண்டிய தேவனுடைய சப்தத்திற்கும், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக வரவேண்டிய தேவனுடைய சப்தத்திற்கும் முன்னடையாளமான வனாக இருக்கிறான். 82. இந்த சின்னத்தனமான யேசபேல் இஸ்ரவேலின் ராணியான போது, தேவனுடைய பலிபீடங்களையெல்லாம் இடித்துப் போட்டு, தன்னுடைய சொந்த பலிபீடங்களையே நிறுவிட வேண்டு மென்று இருந்தாள். அவள் ஒரு விக்கிரகத்திற்கு முன்பாக இஸ்ரவேலரை பணிந்திடும்படி செய்தாள். கான்ஸ்டன்டைனும் கத்தோலிக்க சபையை நிறுவிய போது, அவனும் சரியாக இதேவித மான காரியத்தையே செய்திட்டான். அவன் அஞ்ஞான விக்கிரக ஆராதனைகளை கிறிஸ்தவ சபைக்குள் கொண்டு வந்தான். அவன் கிறிஸ்தவர்களை விக்கிரகங்களுக்கு முன்பாக பணிந்திடும்படி செய்திட்டான். அது மிகவும் சரியாக மீண்டும் ஒரு இருண்ட காலமாக இருக்கிறது. இஸ்ரவேலின் இருண்டகாலம் ஆகாபின் காலத்தில். இப்பொழுது மீண்டும் கிறிஸ்தவ சபையின் இருண்ட காலம், மக்களை விக்கிரகங்களை பணியச் செய்திடும் காலம். எலியா அந்த நாளுக்குரிய நட்சத்திரமாக விளங்கினான். 83. யேசபேல் அனைத்து இஸ்ரவேலரையும் பாகாலை வணங்கிடச் செய்தாள். அதே காரியத்தைத்தான் தீயத்தீரா சபைக்காலத்திலும் கத்தோலிக்க சபை செய்தது. 84. இங்கே இன்னொரு ஆச்சரியமான காரியத்தை நீங்கள் கண்டுணர நான் விரும்புகிறேன். நான் வரலாற்றையும் பார்த்தேன். இயேசு, அவள் தன்னைத் தானே தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொள்கிறாள் என்று கூறினார். “ தன்னை தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொள்ளும் (தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும்) யேசபேல் என்ற அந்த ஸ்திரீயானவள்'' என்று குறிப்பிடப்பட் டுள்ளது. கத்தோலிக்க சபையானது தன் ஜனங்கள் வேதத்தை வாசிக்க அனுமதிப்பதில்லை என்பதைப் பாருங்கள். ஏனெனில், வேதத்தை வாசித்து, அதற்குரிய தெய்வீக வழியில் வியாக்கியானிக்க மதகுரு ஒருவருக்கு மட்டுமே இயலும் என்று அவர்கள் கூறுகிறார்கள். 85. நல்லது, அதுவே தீர்க்கதரிசி என்ற ஊழியத்தினைப் பற்றிய உண்மையான வியாக்கியானம். ஒரு தீர்க்கதரிசியானவன் தேவனுடைய வார்த்தையைப்பற்றிய தெய்வீக வியாக்கியானத்தை தன்னில் கொண்டவனாயிருப்பான். அது முற்றிலும் சரி, ஒரு நபர் ஒரு மனிதனை “ அவர் ஒரு தீர்க்கதரிசி'' என்று அழைத்துவிட்டு, “ அவருக்கு தவறான வெளிப்பாடு இருக்கிறது'' என்று எப்படிக் கூற முடியும்? இது நித்திய குமாரத்துவம் உண்டு என்பதைப் போல் இருக்கிறது. பாருங்கள்? பாருங்கள் அது... தீர்க்கதரிசி என்றால், 'தேவனுடைய வார்த்தையை சரியாக வியாக்கியானிக்கிறவன்'' என்று பொருள்; அவனுக்கு தேவனுடைய வார்த்தை வருகிறது. அவனுக்கே வார்த்தையைப் பற்றிய வெளிப்பாடு வருகிறது. “ தெய்வீக வார்த்தையின் தெய்வீக வியாக்கியானி” என்பது தான் தீர்க்கதரிசி என்பதன் அர்த்தம். “ உங்களுக்குள் தீர்க்கதரிசி ஒருவன் இருந்தால், கர்த்தராகிய நான் அவனோடு பேசுவேன். அவன் உரைத்தவை சம்பவித்தால் அப்பொழுது அவனுக்கு செவிகொடுங்கள். நான் அவனோடு இருக்கிறேன். அவன் உரைத்தவை சம்பவிக்காவிடில், அப்பொழுது அவனுக்கு செவி கொடுக்க வேண்டாம்'' என்றார். அது தேவனுடைய தெய்வீக வார்த்தையாயிருக்கிறது, கர்த்தருடைய வார்த்தையானது தீர்க்கதரிசிகளுக்கு வருகிறது. 86. அவர்கள் கூறினார்கள்: இந்த சபை "தீர்க்கதரிசினியாக'' இருப்பதாக. இது இப்பொழுது நிக்கொலாய் மதஸ்தினிரிலிருந்து, “ அவள்'' என்று ஆகிவிட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதைக் கண்டுணர்ந்தீர்களா? அது “ யேசபேல்'' ஆகிவிட்டது. நேற்றிரவில் “ பிலேயாமின் போதகம்'' என்பதை பார்த்தோம். நிக்கொலாய் மதத்தினரின் போதகம் பின்பு “ பிலேயாமின் போதகம்'' ஆக ஆனது. 87. இஸ்ரவேலர் வேசித்தனம் பண்ணக் காரணமாயிருந்தவன் பிலேயாம் தான். நிக்கொலாய் மதத்தினர் இங்கே என்ன செய்தனர்? ஒரு ஸ்தாபன சபையை உருவாக்கினார்கள். அவைகள் இரண்டையும் ஒன்றாக சேர்த்துப் பார்த்தால் “ அவள்'' ஆகிய சபை கிடைக்கும். நிச்சயமாக அப்படித்தான்! வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரத்தில் “ திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசி'' என்று கூறப்பட்டது. வேசியான ஸ்திரீயானவள் அவள். அவள் வேசித்தனம் பண்ணிக் கொண்டிருக்கிறாள், ஆவிக்குரிய வேசித்தனம் பண்ணிக் கொண்டிருக்கிறாள், ஜனங்களுக்கு வேதவாக்கியத்தைப் பற்றி தவறாக அர்த்தம் கற் பித்துப் போதிக்கிறாள். அந்தவிதமான அர்த்தமற்ற மதவெறியை விட்டு விலகுங்கள்! அது உண்மையில் மதவெறிதான். அது உண்மை . 88. அவள் தன்னைத் தானே தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொள்வதைப் பாருங்கள். “ நாம் தான் சரியானவர்கள்! நாம் தான் ஆலோசனை சங்கம், நாம் தான் லவோதிக்கேயா ஆலோசனை சங்கம், மனிதனின் ஆலோசனை சங்கம், நானும் இன்னின்னதை தீர்மானித்திருக்கிறோம். எனவே நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்'' என்று அவள் கூறுகிறாள். ஆனால் அவள்.... 89. எலிசபெத் ஃப்ரேசியர் என்ற அந்தப் பெண்ணைப் பற்றி என்னை அந்த கத்தோலிக்க பாதிரியார் பேட்டி கண்டார். 'கார்டினல் அல்லது பிஷப் அவர்கள் நீங்கள் அந்த ஃப்ரேசியர் பெண்ணுக்கு ஞானஸ்நானம் கொடுத்தீர்களா என்று அறிய விரும்புகிறார்'' என்று கூறினார். ''அவள் இப்பொழுது ஒரு கத்தோலிக்களாக ஆகிக் கொண்டிருக்கிறாள்'' என்றார் அவர். “ ஆம் நானும் அதைப்பற்றி கேள்விப்பட்டேன்'' என்று கூறினேன். “ அவளுக்கு நீங்கள் தான் ஞானஸ்நானம் கொடுத்தீர்களா?'' என்று கேட்டார் “ ஆம் ஐயா” என்றேன் நான். “ எந்தவிதமாக நீங்கள் அவளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தீர்கள்?'' என்று கேட்டார். “ கிறிஸ்தவ ஞானஸ்நானத்தில்'' என்று பதிலளித்தேன். (°-ஊ) “ என்ன அர்த்தத்தில் அவ்வாறு கூறுகிறீர்கள்?'' என்று மீண்டும் கேட்டார். 90. “ வேதம் கூறுகிறபடியான கிறிஸ்தவ ஞானஸ்நானம் கொடுத்தேன். ஞானஸ்நானம் கொடுப்பதற்கு ஒரேயொரு வழி தான் உண்டு, அது கிறிஸ்தவ ஞானஸ்நானத்தின் முறையில் தான். வேதத்தில் தண்ணீரில் முழுக்கி ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டவர் ஒவ்வொருவரும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தான் பண்ணப்பட்டிருக்கிறார்கள்'' என்று பதிலளித்தேன். 91. அவர் அதையெல்லாம் எழுதிக் கொண்டே வந்தார். “ கத்தோலிக்க சபையும் அதையே முன்பு செய்து வந்தது தெரியுமா?" என்று அவர் சொன்னார். 92. “ எப்பொழுது'' என்று நான் கேட்டேன். “ என்னிடத்தில் பண்டைக் காலத்திய வரலாற்று நூல்கள் அனைத்தும் உள்ளன. லண்டனிலிருந்தும் இன்னும் வேறு பல இடங்களிலிருந்தும் அவைகளை வரவழைத்து வைத்திருக்கிறேன். இந்த மணி வேளை விரைவில் நெருங்கி வருகையில், ஏதோ ஒன்று சம்பவிக்கப் போகிறது. எனவே இவ்வேளையில் இதைப்பற்றி படிக்க நான் அவைகளை வைத்திருக்கிறேன். எனவே வரலாற்றில் எங்கே நீங்கள் சொல்லுகிற மாதிரி நடந்துள்ளது என்பதை அறிய நான் விரும்புகிறேன்'' என்று நான் கூறினேன். “ ஓ, அது வேதத்தில் கூறப்பட்டுள்ளது'' என்று அவர் பதிலுரைத்தார். “ நீங்கள் அதைச் சொல்லுகிறீர்களா?” என்று கேட்டேன் “ இயேசுவே கத்தோலிக்க சபையை ஸ்தாபித்தார்'' என்று கூறினார். “ அப்படியானால் பேதுரு தான் முதலாவது போப் ஆக இருந்தாரா? என்று நான் கேட்டேன். “ அதிக நிச்சயமாக'' என்று அவர் பதிலுரைத்தார். 93. சபையானது பிழையில்லாதது, அது மாறுவதில்லை என்றும், அனைத்து பூசை பலிகளும் இலத்தீன் மொழியிலேயே கூறப்படுவதால், அது மாற்றமடைய முடியாதது அல்லவா? என்று நான் கேட்டேன். 94. “ அது உண்மைதான்'' என்று பதில் கூறினார். 95. “ ஆனால் அது முதற்கொண்டு நீங்கள் நிச்சயமாக சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். வேதமானது கத்தோலிக்க வேதம் என்கிறதாய் இருக்குமானால், அப்பொழுது நான் ஒரு ஆதி காலத்து பாணியிலான கத்தோலிக்கனாக இருப்பேன்'' என்று கூறினேன். பாருங்கள்? அது உண்மை . “ அப்பொழுது நானும் ஒரு ஆதி காலத்து பாணியிலான கத்தோலிக்கன்'' என்றேன். 96. அவர் கூறினார்: “ நல்லது, இப்பொழுது பாருங்கள், வேதமானது வெறும் கத்தோலிக்க சபை சரித்திரத்தைத் தான் கொண்டதாகும். தேவன் தனது சபையில் இருக்கிறார்'' என்று. 97. நான் சொன்னேன், “ தேவன் தன்னுடைய வசனத்தில் இருக்கிறார்'' என்று. அது உண்மை . 98. “ எந்த மனுஷனும் பொய்யன் - என்னுடைய வார்த்தை மட்டும் உண்மையாய் இருக்கிறது.'' இந்த வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம் இருக்கிறதே, இது ஒன்று தான் அவரே நேரில் தோன்றி உரைத்து யோவானை எழுதச் செய்து, உறுதிப்படுத்திய புத்தகமாகும். அதில் பிரதானமாக, தன்னுடைய தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்துவதையே அவர் செய்திருக்கிறார். அவர் அதை முழுமையாக செய்திருக்கிறார். “ எவராவது இப்புத்தகத்திலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டாலோ அல்லது இதோடு ஒன்றைக் கூட்டினாலோ அவனுடைய பங்கு ஜீவப் புத்தகத்திலிருந்து எடுத்துப் போடப்படும், இப்புத்தகத்தின் வசனங்களை வாசிக்கிறவனும், அதை வாசிக்கக் கேட்கிறவனும் பாக்கியவான்...'' இதிலிருந்து எதையாயிலும் எடுத்துப் போடுகிறவனோ, அல்லது இதோடு எதையாயிலும் கூட்டுகிறவனோ சபிக்கப்பட்டவனாயிருப்பான். அதிலுள்ள அபாயமான விளை – வைப் பற்றிய எச்சரிக்கையைப் பாருங்கள். எனவே அதனோடு எதையும் கூட்டி விடாதீர்கள். அது இருக்கிறவண்ணமாகவே அப்படியே விட்டு விட்டு, தொடர்ந்து செல்லுங்கள். 99. நீங்கள் தாழ்மையாக இருந்தால், ஆவியானவர் அதை உங்களுக்கு வெளிப்படுத்துவார். அதுவே சரியான முறையாகும். அது சிக்கலானதாக ஆக்கி வைக்கப் பட்டிருக்கவில்லை. “ பிதாவே, நீர் இவைகளை யூத போதகர்களுக்கும், பிஷப்புகளுக்கும், கார்டினல்களுக்கும், ஜெனரல் ஓவர்சீயர்களுக்கும் மறைத்து, கற்றுக் கொள்ள விரும்பும் பாலகருக்கு வெளிப்படுத்தியதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்'' என்று கூறி இயேசு பிதாவுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார். எனவே பாருங்கள், உங்களுக்குத் தேவையானதெல்லாம், தேவனைப் பற்றிய வெளிப்படுத்துதல் தான். 100. அது அவர் கூறியபிரகாரம் தான் வர முடியும். அவர் கேட்டார், “ ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்?" என்று. 101. “ நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று பேதுரு கூறினான். 102. இயேசு கூறினார்: “ சீமோனே, நீ இதை ஒரு வேதக் கல்லூரியில் கற்றறியவில்லை. யாரும் அதை உனக்குச் சொல்ல வில்லை. அது பரலோகத்திலிருந்து ஒரு வெளிப்படுத்துதலாகத் தான் வருகிறது. இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை.'' 103. அப்படியே, ஆதியில் ஆபேலும் வெளிப்படுத்து தலைத்தான் பெற்றான். அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி, அது வெளிப்படுத்துதலாகவே இருந்து வந்துள்ளது. அது உண்மை. 104. அது இப்பொழுது ஒரு ''ஸ்திரீ''யாக இருக்கிறதாக நாம் கண்டோம். ஸ்திரீ சபைக்கு அடையாளமாயிருக்கிறாள் (அது சரிதானே? கிறிஸ்து யாருக்காக வருகிறார்? மணவாட்டிக்காகத் தான் - அவளும் ஒரு ஸ்திரீ தான், கற்புள்ள கன்னிகையாக அவள் இருக்கிறாள்). இங்கேயுள்ள இந்த ஸ்திரீயோ தன்னை தேவனுடைய சபை என்று சொந்தம் கொண்டாடிக் கொள்ளுகிறாள். ஆனால் அவளோ ஐசுவரியத்தினாலும், முத்துக்களினாலும் அலங்கரிக்கப் பட்டிருக்கிறாள்; அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் நிறைந்த பொற்பாத்திரத்தை கையில் ஏந்திக் கொண் டிருக்கிறாள். அம்மதுவை, பூமியின் இராஜாக்கள் அனைவரும் உறிஞ்சிக் குடிக்கும்படி செய்தாள். அது சரியா? 105. இந்த சபைக்காலத்தில் அவள் “ யேசபேல்'' என்று அழைக்கப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். யேசபேல், இஸ்ர வேலருடைய இராணியானவுடனே, அவள் இஸ்ரவேலரை அழித்து, தன்னாலான எல்லாவற்றையும் செய்து, தன்னுடைய விக்கிரக தேவர்களின் பலிபீடங்களை எழுப்பினாள். அது சரியா? அதைத் தான் கத்தோலிக்க சபையும் செய்தது. இப்பொழுது இன்னும் மேற்கொண்டும் படிப்போம். இது உங்களை திகைக் வைக்கப்போகிறது, இன்னும் கூடுதலாக நீங்கள் புசிக்கப் போகிறீர்கள். “ ...தன்னைத்தீர்க்கதரிசி என்று சொல்லுகிற... (“ நான் மட்டுமே வார்த்தையின் வியாக்கியானி'' என்று அவள் கூறுகிறாள்) என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும் விக்கிர கங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து..." வெளி.2:20) 106. அந்த சகோதரனொருவர், ஏதேன் தோட்டத்தில் இருந்த “ சர்ப்பம்'' மற்றும் “ ஏதேன் தோட்டத்திலுள்ள கனியைப் புசித்தல்'' என்பது பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தார். எனவே இங்கே இயேசு, “ புசிக்க'' என்று கூறியபொழுது அது என்ன வென்று பார்த்துக் கொள்ளுங்கள், ஆவிக்குரியபிரகாரமாக. “ அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணை கொடுத் தேன்; தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை. இதோ, நான் அவளைக்கட்டில் கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ் செய்தவர்கள் (என்னவிதமான கட்டில்? லௌகீக காரியங்கள். அதையே அவள் எதிர்கொள்ளப் போகிறாள்) தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,(அவர்கள் மகா உபத்திரவத்திற்குள் போகப் போகிறார்கள்) அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்..." வெளி.2:21-23 107. ஓ! அவளுக்கு என்ன இருக்கிறது? இந்த வயதான பெண்ணுக்கு சில குழந்தைகள் உண்டு. வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரம். நேற்றிரவில் இப்பொழுது இங்கிருக்கிற அனைவருமே வந்திருந்தீர்கள் என நினைக்கிறேன். நல்லது, வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரத்தில் இந்த பழங்காலத்து வேசி அதாவது கத்தோலிக்க சபை, 'வேசி'' என்றும், “ வேசிகளின் தாய்'' என்றும் அழைக்கப்பட்டாள். அவர்கள் பையன்கள் அல்ல, சபைகளாகிய பெண்கள் அவர்கள். 108. லூத்தரன் சபை மற்றும் இதைப் போன்ற ஏனைய சபைகளும் எங்கிருந்து வந்துள்ளன? எந்தவொரு சபை ஸ்தாபனமும் எங்கிருந்து வந்தது? லவோதிக்கேயா எதிலிருந்து துவங்கியது? நிக்கொலாய் மதத்தினர் முடிவாக ஸ்தாபன சபையை உருவாக்கி அதற்குள் இணைந்தனர், அதே காரியம் தான் மீண்டும் சம்ப வித்துள்ளது. உங்களால் ஒன்றும் செய்ய முடியாது, சகோதரனே. எலியா தன் நாளில் அக்காரியத்திற்கு எதிராக குரல் கொடுத்தான். யோவானும் தன் நாளில் இப்படிப்பட்ட காரியங்களுக்கெதிராக தன் குரலை யெழுப்பினான். ஆம், ஐயா! “ ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள நினையா திருங்கள், தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்'' என்று யோவான் கூறினான். அவர்கள் இவ்வாறாக இருப்பதை தடுக்கமுடியாது. 109. அவளுக்கு பிள்ளைகள் உண்டாயிருந்தார்கள். உண்மையான யேசபேலுக்கு பிள்ளைகள் இருந்தார்களா? ஆம், ஐயா! கவனியுங்கள். “ ...நான் அவள் பிள்ளைகளைக் கொல்லுவேன்....” 110. என்ன அது? கத்தோலிக்க சபையின் பிள்ளைகள் பிராடெஸ்டெண்டு ஸ்தாபன சபைகளாகும். பாருங்கள்? அது முற்றிலும் உண்மை; ஏனெனில் அவர்கள் இதே காரியத்தைத்தான் செய்கிறார்கள். நடைமுறைக்கு மாறான, வேதவிரோதமான கத்தோலிக்க ஞானஸ்நானத்திற்குள் பிராடெஸ்டெண்டுகளும் அப்படியே ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டுள்ளார்கள். பரிசுத்த ஆவியைப் பெறுவதற்குப் பதிலாக கைகுலுக்கிக் கொள்ளுதல் இடம் பெற்றுவிட்டது. “ இயேசு கிறிஸ்துவுக்கு" பதிலாக “ பிதா குமாரன் பரிசுத்த ஆவி”ஆகிவிட்டது. எல்லாவற்றிலும் வேதத்திற்கு முரணான காரியங்களையே செய்கிறார்கள். இப்பொழுதும் அப்படித்தான்! பிராடெஸ்டெண்டுகள் கூட இதே வழியில்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். 111. அவளுடைய மகள் அத்தாலியாள் என்ற பெயரையுடையவள். யேசபேல், தன் மகள் அத்தாலியாளை, யூதாவின் இராஜா வின் குமாரனாகிய யோராமுக்கு விவாகம் செய்வித்தாள். இதன் மூலம், விரைவாக பாகாலின் பலிபீடங்கள் எருசலேமிலும் கட்டியெழுப்பப்பட்டன. இதை அறிவதற்காக நீங்கள் வரலாற்றை புரட்டிப் பார்க்க வேண்டியதில்லை. வேதமே இதைப் பற்றி கூறுகிறது. பாருங்கள்? யேசபேலின் குமாரத்தி அத்தாலியாள், யோசபாத் இராஜாவின் மைந்தன் யோராமை விவாகம் செய்து கொண்டாள். அவளுடைய குமாரத்தியும் தன் தாய் யேசபேலின் வழியில் சீர்கேடாய் நடந்து கொண்டாள். 112. ஓ, என்னே! இதை உங்களால் கண்டு கொள்ள முடிய வில்லையா? இந்த மதஸ்தாபனங்களெல்லாம் இவ்விதம் நடந்து கொண்டன என்பதைக் கவனியுங்கள், சகோதரரே. இந்த விதமான கிரியை லூத்தரின் காலத்திற்குள்ளாகவும் நுழைந்து, அதேவிதமாக கிரியை செய்து, பரிசுத்த ஆவி வழி நடத்துவதற்கு விட்டுக் கொடுப்பதற்கு பதிலாக, ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள். பெந்தெகொஸ்தேயும் இதேவிதமாகத் தான் நடந்து கொண்டது. பரிசுத்த ஆவியானவரை அவர் சித்தப்படி தங்களை வழி நடத்திச் செல்லவிடாமலும், அவர் தன் வழியை தங்கள் மத்தியில் கொண்டு இருக்கவிடாமலும், ஒளியானது அவ்வப் பொழுது வந்தபொழுது, அதை வார்த்தையைக் கொண்டு சோதித்துப் பார்த்து, தொடர்ந்து முன்னேறிச் செல்லாமலும் இவர்களும் ஆகிவிட்டார்கள். தங்களை வழிநடத்திச் செல்ல பரிசுத்த ஆவியை அனுமதிக்க அவர்களுக்கு இயலவில்லை. அதற்குப் பதிலாக ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொண்டு, தொடர்ந்து வந்த தேவனுடைய காரியங்களிலிருந்து தங்களை கத்தரித்துக் கொண்டு விட்டனர். நேராக திரும்பிச் சென்று, அந்தக் காரியத்துடன் தங்களை விவாகத்தில் இணைத்துக் கொண்டு விட்டனர். அந்த காலத்தை நாம் பார்க்கையில், இங்கே நாம் இருக்கிற காலம் வரையிலும் உள்ள பாதையில் என்ன நேரிட்டிருக்கிறது என்பதையும், அங்கே உங்களுக்கு என்ன காத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் கவனித்துப் பாருங்கள். திரும்பிப் போய் யேசபேலின் மார்க்கத்தோடு விவாகம் செய்து கொண்டு விட்டார்கள்! இயேசு இங்கே கூறுகிறார்; இந்த யேசபேல், “ அவள் தன்னை தீர்க்கதரிசியானவள் என்று அழைத்துக் கொள்கிறாள். நான் அவளை உலகத்துக்குரிய விதத்தில் கட்டில் கிடையாக்குவேன். அவளுடைய பிள்ளைகளை மரணத்தினால் கொல்லுவேன்''. என்னவிதமாக கொல்லுவார்? ஒரு மரணத்தைக் கொண்டு கொல்லுவார்''. (வெளி.2:22ம் வசனத்தில் தமிழ் வேதாகமத்தில், “ கொல்லவே கொல்லுவேன்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கில வேதாகமத்திலோ, “ மரணத்தினால் கொல்லுவேன்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது - மொழி பெயர்ப்பாளர்) 113. என்னவிதமாக கொல்லுவார்? அவளுடைய பிள்ளைகளை மரணத்தினால் கொல்லுவார். அவர்கள் இப்பொழுது மரித்தவர் களாயிருப்பதைப் பாருங்கள். அவர்கள் ஆவிக்குரிய பிரகாரமாக மரித்திருக்கின்றனர். அவர்களுக்கு வெளிப்படுத்தல் இல்லை. அவர்களுக்கு தங்களுடைய ஸ்தாபனம் தான் தெரியும், அவர்களுக்கு தங்களுடைய ஸ்தாபனத்தின் ஞான உபதேசம் தான் தெரியும்; அவர்களுக்கு தங்களுடைய சபையின் போதகத்தைப் பற்றித்தான் தெரியும். ஆனால் தேவனைப் பற்றிய அறிவை அடைந்தாக வேண்டும் என்ற கட்டம் வரும்போது அவர்கள் நிலைமை எப்படியுள்ளதென்றால், எப்படி ஒரு “ ஹாட்டன் டாட்டுக்கு' “ அரேபிய இரவுகள்'' கதையைப் பற்றி தெரிந்திருக் காதோ, அதே போல் இவர்கள் நிலையும் இருக்கிறது (ஹாட்டன் டாட் என்றால், தென்மேற்கு ஆப்பிரிக்காவில், நாடோடியாக அலைந்து திரிந்து ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு திரியும் ஒரு வகை நாடோடிக் கூட்டம் - "அரேபிய இரவுகள்' என்பது அரேபிய, இந்திய மற்றும் பெர்சியக் கதைகளின் தொகுப்பாகும் – மொழி பெயர்ப்பாளர்). பரிசுத்த ஆவியானவரைப் பற்றி அறிந்து கொள்ளுதல் என்ற நிலை வரும் போது, அவர்கள் அவ்வாறே உள்ளனர். ஆவிகளைப் பகுத்தறிதல், பிசாசுகளைத் துரத்துதல் மற்றும் இது போன்ற காரியங்களை தேவனுடைய ஆவியானவர் செய்யும் பொழுது, அதை “ குறி சொல்லுகிறவர்கள்'' என்றும், “ ஒரு பிசாசு'' என்றும் அவர்கள் கூறுவது விந்தையாக இருக்கிறது. "அவர்கள் நமது ஸ்தாபனத்தைச் சேராதவர்கள், அந்த குழுவினரா, ஓ, பூ (Boo)'' என்று கூறி விடுகிறார்கள். அவர்களுக்கு அது என்னவென்று தெரியாது. அதன் பிறகு அவர்கள் நம்மேல் “ இவர்கள் இயேசு நாமக்காரர்கள்'' அல்லது உருளும் பரிசுத்தர்'' என்று பெயர் எழுதி அவ்வாறு பரிகசிக்கிறார்கள். அவர்களுக்கு என்னவென்று தெரியவில்லை. 114. அந்த சங்கதியானது முகத்திரை கிழிக்கப்பட்டு அம்பலப் படுத்தப்படும் நேரம் சமீபமாயுள்ளது. அது முற்றிலும் உண்மை நான் இங்கே இந்த பிரசங்க பீடத்திற்குப் பின்னால் உங்களுக்கு முன்பாக நின்று கொண்டிருப்பது எவ்விதம் உண்மையாக இருக்கிறதோ, அதே போல், தேவன் நிச்சயமாகவே தன் பிள்ளைகளை அதிலிருந்து அசைத்துக் குலுக்கி வெளியே இழுத்து விட்டு விடுவார். பரலோகத்தின் தேவன் அதை அறிவார். நீங்கள் என்னை ஒரு கர்த்தருடைய தீர்க்கதரிசி என்று, கர்த்தருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்கள்; அப்படியெனில், நான் சொல்வதைக் கேளுங்கள். அவர் சமீபமாயிருக்கிறார். ஆம், ஐயா. 115.“ நான் அவளுடைய பிள்ளைகளை ஆவிக்குரிய மரணத்தினால் கொல்லுவேன்'' என்று கூறியுள்ளார். அவர்களைப் பாருங்கள்; அங்கே அவர்கள் குளிர்ந்து போய், வெறும் சடங்காச்சாரமுள்ளவர்களாக ஆகிவிட்டார்கள். பாப்டிஸ்டு களையும், மற்றும் ப்ரெஸ்பிடேரியன்களையும் பற்றி நாம் பேச வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் பல ஆண்டுகளாகவே மரித்தவர்களாயிருக்கிறார்கள். என்ன ...? 116. விசுவாசத்தினால் நீதிமானாகுதல் என்ற செய்தியோடு எழுப்புதலைப் பெற்றிருந்த லூத்தர் அவர்கள், அதில் தொடர்ந்து முன்னேறியிருந்திருப்பாரானால், இப்பொழுதுள்ள பெந்தெ கொஸ்தே எழுப்புதல் லூத்தரன் சபையில் வந்திருக்க வேண்டும். வெஸ்லியின் காலத்தில் பரிசுத்தமாகுதல் செய்தியிலேயே பெந்தெகொஸ்தே எழுப்புதலுக்கான வெளிச்சமும் உண்டாயிருந் திருக்கும். பாருங்கள், லூத்தர் அதை தொடர முடியவில்லை. இல்லை, ஐயா! அவர்கள் ஏற்கனவே லூத்தரன் சபையினராக ஆகி விட்டனர். 117. அவருக்குப் பிறகு வெஸ்லி வந்தார். வெஸ்லி இறந்த பிறகு என்ன சம்பவித்தது? அவர்கள் வெஸ்லியன், மெதோடிஸ்டு, ப்ரிமிட்டிவ் என்றும் இன்னும் பல்வேறு விதமான மெதோடிஸ்டு சபைகளை ஸ்தாபித்துக் கொண்டு விட்டார்கள். பாருங்கள்? மெதோடிஸ்டுகளுக்கு முந்தி மகத்தான எழுப்புதல் உண்டாயிருந்தது. ஆனால் அவர்கள் தங்களை மத ஸ்தாபனங்களாக ஆக்கிக் கொண்டபிறகு, அக்காலத்தைத் தொடர்ந்து, அன்னிய பாஷைகளில் பேசிக் கொண்டும், வரங்கள் யாவும் சபைக்கு திரும்ப அளிக்கப்பட்டும் இருந்த பெந்தெகொஸ்தே எழுப்புதல் வந்த போது, அதைப்பார்த்து இவர்கள் (மெதோடிஸ்டுகள்) அவர்களை “ பிசாசுகள்'' என்றழைத்தனர். அவ்வசைவோடு சேர்ந்து கொள்ள இவர்களால் முடியவில்லை. 118. வெஸ்லியின் காலத்திற்குப் பிறகு வந்த பெந்தெகொஸ்தே என்ன செய்தது? இவர்களும் அதே காரியத்தைத் தான் செய்தார்கள். அவர்கள் இப்பொழுது எங்கேயிருக்கிறார்கள்? சந்தேகத்துக்கிடமின்றி அவர்கள் மரித்தவர் களாயிருக்கிறார்கள். ஆம் ஐயா! சரியாக அவ்விதமாகத்தான் உள்ளது? “ நான் அவளது பிள்ளைகளை மரணப்படுக்கையில் தள்ளி அவர்களை கொல்லுவேன்'' என்று தேவன் கூறியள்ளார். நான் 22ம் வசனத்தைப் படிக்கிறேன், நீங்கள் அதைப் பாருங்கள். “ இதோ நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ் செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி (மகா உபத்திரவ காலத்திலே)...'' 119. அந்தவிதமான நிலைக்குள் தான் அது போய்க் கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் நான் சற்று நிறுத்தி நிதானிக்க விரும்புகிறேன். இந்த மகா உபத்திரவத்தின் காலத்திற்குள்ளாக, தங்கள் தீவட்டிகளில் எண்ணெயைப் பெற்றிராத புத்தியில்லாத உறங்கும் கன்னியர்கள் தள்ளப்படுவார்கள். அவர்கள் நல்லவர்களாக இருப்பினும், ஆலயத்திற்கு ஒழுங்காக போய் வந்தாலும், ஸ்தாபனங்களைச் சார்ந்து கொண்டவர்களாக ஆகி விட்டனர்; எண்ணெய் வாங்க அவர்கள் வருகிறார்கள். ஆனால் அப்பொழுது காலதாமதம் ஆகிவிட்டபடியினால் அவர்களுக்கு எண்ணெய் கிடைக்கவில்லை. எனவே எண்ணெய் இல்லாதபடியினால் அவளை தேவன் மகா உபத்திரவத்திலே தள்ளிவிடுவார். அவள் அதற்குள் செல்வாள். கத்தோலிக்க சபை மகா உபத்திரவ காலத்திற்குள் போகப்போகிறது. அவளுடைய பிள்ளைகள் யாவரும் தங்கள் தாயோடு சேர்ந்து மகா உபத்திரவ காலத்திற்குள் போகப் போகிறார்கள். “....அவர்கள் தங்கள் கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால்...'' 120. அதிலுள்ள பிள்ளைகள் அல்ல; ஆனால் அந்த சபையும், அவளுடைய பிள்ளைகளாகிய ஸ்தாபனங்களும், போவார்கள். அதிலுள்ள அப்பாவிகளாக கத்தோலிக்கர்கள், பாப்டிஸ்டுகள், ப்ரெஸ்பிடேரியன்கள், பெந்தெகொஸ்தேயினர் ஆகியோருக் காக நான் பரிதாபப்படுகிறேன். “ நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?'' என்று கேட்டால், “ நல்லது, நான் ஒரு ப்ரெஸ்பிடேரியன்'' என்று பதிலளிக்கிறார்கள். ஓ! 121. “ ஒரு பன்றிக்கு பந்தயக் குதிரைக்குப் போடப்படும் பக்க வாட்டு சேணத்தைப் போட்டு பார்த்து, அப்பன்றி பந்தயக் குதிரை போலுள்ளதே என்று கூறினால் எப்படி அது சம்மந்தா சம்மந்தமில்லாமல் இருக்குமோ, அது போலத்தான் “ கிறிஸ்தவரா'' என்று கேட்டால் மேற்சொன்ன ஸ்தாபனப் பெயர்களை பதிலாகச் சொல்வதும் இருக்கும். ஸ்தாபனப் பெயர்களுக்கும் கிறிஸ்தவனுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தமே கிடையாது. உலகத்திலுள்ள இந்த நடைமுறையைப் பற்றி உங்களால் என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது. நான் இதை தமாஷாகக் கூறவில்லை. இந்த இடம் தமாஷ் செய்ய உள்ள இடமல்ல, இது சுவிசேஷத்திற்குரிய இடமாகும். பாருங்கள்? இதை விளக்கிக் கூறவே மேற்சொன்ன உதாரணத்தை இங்கே உபயோகித்தேன். பாருங்கள், அது உண்மை. ஆகவே அவர்கள் கூறுவது கிறிஸ்துவத்திற்கு கொஞ்சம்கூட சம்மந்தம் உடையதல்ல. “ நான் பெந்தெகொஸ்தேகாரன்'' என்கிறார்கள். 122. அதுவும் அப்படித்தான். கிறிஸ்தவத்திற்கும் அதற்கும் கொஞ்சமும் சம்மந்தம் இல்லை. நீங்கள் அவர்களுடைய எண்ணிலடங்கா ஸ்தாபனங்களில் ஒன்றைச் சார்ந்தவராக இருக்கக் கூடும். ஆனால் நீங்கள் மறுபடியம் பிறந்த தேவனுடைய பிள்ளையாக இருக்கிறீர்களா? மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்த போதி லும், அதைப் பற்றி அக்கறைப்படாமல், நீங்கள் பிறரை உண்மை யாகவே உங்கள் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமா வோடும் நேசிக்கிறீர்களா? தேவனை நீங்கள் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் நேசிக்கிறீர்களா? நீங்கள் குதிகாலைத் தூக்கிக் கொண்டு கோபத்தோடு ''ஹும்'' என்று கண்டபடி இரைச்சலிட்டுக் கொண்டிருந்தால், பரிசுத்தாவியை எப்பொழுதாவது நீங்கள் பெற்றிருந்தீர்கள் என்றால், அது உங்களை விட்டு அகன்றுவிட்டது என்பதைத்தான் அது காண்பிக்கிறது. 123. கவனியுங்கள்! “ .... அவள் தன் கிரியையைவிட்டு மனந் திரும்பாவிட்டால் நான் அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்" 124. “ அவளுடைய பிள்ளைகள்'' என்பது யேசபேலின் பிள்ளைகள் ஆகும். யேசபேல் இப்பொழுது என்ன செய்தாள்? தன் மகளை பிறிதொரு பிரிவாகிய யூதாவுக்குள் விவாகம் செய்து கொடுத்தாள். அதை ஆவிக்குரிய பிரகாரமாக சம்மந்தப்படுத்திப் பார்ப்போம். நான் இதை வரைந்து காண்பிக்க விரும்புகிறேன். இதை மிகவும் கவனமாக கவனிப்போம். 125. இங்கே யேசபேலும் இஸ்ரவேலும் உள்ளார்கள். மறுபக்கத்தில் இங்கே யூதா கோத்திரம் உள்ளது. இவர்கள் வித்தியாசமானவர்கள். யூதாவுக்கு யோசபாத் இராஜா இருக்கிறான். இந்தப் பக்கம் ஆகாபும், யேசபேலும் உள்ளனர். யேசபேல் உள்ளே வந்து, அனைத்து இஸ்ரவேலரையும் விக்கிரக ஆராதனைக்குள் வழி நடத்தினாள். 126. கான்ஸ்டன்டைன் நிக்கொலாய் மதத்தினரான (இங்குள்ள குளிர்ந்துபோன சடங்காச்சார சபையினர்) அச்சபையை அஞ்ஞான விக்கிரக ஆராதனைக் கூட்டத்தோடு இணைத்தபோது, அஞ்ஞான விக்கிரகாராதனையின் சாயலை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவமாக அது உருவெடுத்து அதினால் உண்டான கத்தோலிக்க மதமானது, அக்காலத்தில் யேசபேல் செய்ததுபோல் செய்தது. கத்தோலிக்க மக்களே, உங்களைப் புண்படுத்த விரும்பவில்லை. நான் தேவனுக்கு முன்பாக பொறுப்புள்ளவனாக இருக்கிறேன். மூடநம்பிக்கைகள், விக்கிரகங்கள் மற்றும் இன்னபிற காரியங்களனைத்தும் கொண்டதாக கத்தோலிக்க சபை உள்ளது. சரியாக அஞ்ஞான விக்கிரக ஆராதனை மார்க்கத்தின் அச்சு அசலாக அது ஆகியது. அது உண்மை யான காரியம். நான் இந்த நிமிடத்தில் மரித்துக் கொண்டு இருந் தாலும், அது சத்தியமாகத்தான் இருக்கிறது. ப்ராடெஸ்டெண்டுகளும், வேறு பிரிவைச் சார்ந்திருப்பது போல் இருந்தாலும், அதே நிலையில் தான் உள்ளார்கள். 127. யேசபேல் செய்ததைக் கவனியுங்கள். பிசாசின் வேலையைப் பாருங்கள். யேசபேல் அவனுக்கு முழுவதும் தன்னை ஒப்புக் கொடுத்திருந்தாள். எனவே அவள் தன் மகள்களை எடுத்து... யேசபேலுக்கு இங்கே ஒரு மகள் பிறக்கிறாள், அவள் மறுபக்கத்தில் உள்ள யூதாவுக்குப் போய் அந்த பரிசுத்த மனிதனாகிய யோசபாத்தின் மகனை மணந்து கொள்ளுகிறாள். அவ்வாறு மணந்து கொண்டு, தன் தாய் ஏற்படுத்திய அனைத்து பாவமான காரியங்களையும், இங்கே யூதாவுக்குள் கொண்டு வந்துவிடுகிறாள். 128. ஸ்தாபன சபையை ஏற்படுத்திக் கொள்ள விரும்பிய அனலில்லாமல் குளிர்ந்து போய்விட்ட சடங்காச்சார கிறிஸ்தவர்களான நிக்கொலாய் மதஸ்தினர், அஞ்ஞான மதத்தோடு விவாகம் செய்து கொண்டு விட்டனர். அங்கு நடந்தது போலவே இங்கும் நடப்பதைக் கவனியுங்கள். அவர்கள் யேசபேலை விவாகம் செய்து கொண்டு கத்தோலிக்க சபையாகின்றனர். இந்தப் பக்கத்தில் யேசபேல் தன் மகளை (அவளுடைய ஸ்தாபனக் குமாரத்திகள்) எடுத்து இங்கே விவாகம் செய்து கொடுத்து விடுகிறாள். அதே காரியம்தான் இங்கும் நடைபெற்றது. “ அவளுடைய பிள்ளைகளை மரணத்தினால் கொல்லுவேன்'' “ ஆவிக்குரிய மரணத்தினால் கொல்லுவார். அவர்கள் மரணத்துக்கேதுவாக ஸ்தாபன சபையை அமைத்துக் கொண்டு விட்டார்கள். அப்பொழுது பிரதானமாக நடந்தது என்னவெனில், ஆவியானவர் முழுவதும் அகன்று விட்டார். 129. இங்கே ஐந்து அல்லது ஆறு வரலாற்றாளர்கள் அமர்ந்திருக் கிறீர்கள். உங்களை நான் ஒன்று கேட்கப் போகிறேன். சபைகளில் ஏதாவதொன்று விழுந்து போய், ஸ்தாபனமாக ஆன பிறகு, ஒரு எழுப்புதல் அதில் மீண்டும் ஏற்பட்டு, அவைகள் எப்பொழுதாவது மீண்டும் எழும்பின என்பதை நிரூபிக்கும் வேதபூர்வமான அல்லது வரலாற்று பூர்வமான சான்று ஒன்றை என்னிடம் கொண்டு வந்து காண்பியுங்கள் பார்க்கலாம். அவைகள் ஸ்தாபனமாக ஆனபிறகு எப்பொழுதாகிலும் அவர்களுக்குள் எழுப்புதல் ஏற்பட்டதா? இல்லை, ஐயா! ஆவியானவர் அவர்களை விட்டு நீங்கி விட்டார். நான் பெந்தெகொஸ்தேயினரையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன். 130. பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதங்கள் விழுந்தபோது, முன்காலத்தவரே, நீங்களெல்லாம் அந்நிய பாஷைகளில் பேசினீர்கள். மகத்தான பெந்தெகொஸ்தே அசைவைப் பெற்றிருந்தீர்கள். ஆயினும் அதுவும் விழுந்து போனது. சிலகாலம் கழித்து, நீங்கள் உங்களுக்கு ஜெனரல் கௌன்சில் என்ற ஒன்றை நிறுவிக் கொண்டீர்கள். ஆர்கனிசம் சரிதான். ஆனால் ஆர்கனிசேஷன் சரியல்ல. (ஆர்கனிசம் என்றால் சரீரத்தின் உறுப்புக்கள் ஒருங்கிணைப்பாக இயங்கி ஜீவனோடிருப்பது ஆகும் - மொழி பெயர்ப்பாளர்) பிரதானமான காரியம் என்னவெனில், உங்களால் நிலைத்து நிற்க முடியாமல், பின்னுக்குப் போய், ஸ்தாபனமாக ஆகி, அதின் மூலம் “ சாத்தானின் பிள்ளையாக'' ஆகிவிட்டீர்கள். 131. பிறகு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினைப் பற்றிய இன்னொரு கூடுதலான வெளிச்சம் வந்தது. அப்பொழுது அவர்கள் யாவரும் அத்தோடு தேங்கிப் போய் நின்றுவிட்டு, “ தேவனுக்கு துதியுண்டாவதாக, "இயேசு'வின் நாமத்தை நீங்கள் பெற்றிராவிடில் நரகத்திற்குப் போவீர்கள். நாங்கள் அதைப் பெற்றுள்ளோம். நீங்கள் பெற்றிருக்கவில்லை'' என்று கூறினார்கள். அந்த வெளிச்சம் தொடர்ந்து சபைக்குள்ளாகப் பரவி வளர்ந்து கொண்டே போவதற்குப் பதிலாக, அது தன்னுடைய ஸ்தானத்தை அடைவதற்குப் பதிலாக, நீங்கள் ஸ்தாபனமாக ஆனீர்கள். பாருங்கள்? அதனால் நீங்கள் உங்கள் பாதைகளிலேயே மரித்துக் கிடக்கிறீர்கள். அதைக் கொண்டு ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டீர்கள். அது என்னவாக இருக்கிறது? அதுவும் யேசபேலின் ஒரு பிள்ளைதான். அவர்கள் யாவரும் ஒருமித்து மரித்துப் போனார்கள். 132. நான் உங்களை ஒன்று கேட்கப் போகிறேன். அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் அல்லது அவர்களைச் சேர்ந்த ஏனையோர் எவராவது, எப்பொழுதாவது, ஒரு பெரிய ஐக்கியமாக இணைந்து எழுப்புதலை பெற்றிருக்கிறார்களா? இல்லவே இல்லை. அந்த கடைசி எழுப்பு தல் சற்று முன்பு ஏற்பட்டது. அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் 1933ல் அந்த நதிக்கரையில் இறங்கி வந்தார். (அங்கேயிருந்தவர்களில் அநேகர் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள்). “ மகத்தான தெய்வீக சுகமளிக்கும் ஆராதனைகள் உலகம் முழுவதையும் அசைக்கப் போகிறது'' என்று தெரியப்படுத்தப்பட்டது. அவ்விதமாக அது நிறைவேறிய பொழுது, அது ஒருபோதும் பல்வேறு ஸ்தாபன சபைகள் மூலம் வரவேயில்லை. தேவன் ஸ்தாபனங்களின் எல்லைகளைவிட்டு, வெளியே, ஏறத்தாழ ஒரு அஞ்ஞானியைப் போலுள்ள ஒருவனை எழுப்பி, எழுப்புதலை ஆரம்பித்துவைத்தார். அது என்ன செய்திருக்கிறது என்பதைப் பாருங்கள். 133. ஸ்தாபனங்கள், அவ்வாறு ஸ்தாபனமாக ஆனது முதற் கொண்டே மரித்து விட்டன. “ நான் அவள் பிள்ளைகளை மரணத்தினால் கொல்லுவேன்'' என்று ஆண்டவர் கூறினார். நான் இதைச் சொல்வதினால் நீங்கள் தயவு செய்து என்னைப் பற்றி மோசமாக எண்ணாதீர்கள். இது சத்தியமென்று நான் அறிந்துள்ளேன். அப்படியிருக்கையில், நான் இதைப்பற்றி கூறாமற்போனால், நான் ஒரு கீழ்த்தரமான மாய்மாலக்காரனாக ஆகிவிடுவேன். அதற்காக தேவன் என்னை பொறுப்பாளியாக்கி விடுவார். பவுல், “ தேவனுடைய ஆலோசனைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்கவில்லை'' என்று கூறிது போல் நானும் இருக்க விரும்புகிறேன். அது தான் சரியானது. சரி. சரி. 134. அவர்கள் எருசலேமிலும் பலிபீடங்களை உண்டாக்கிக் கொண்டார்கள். நீங்கள் இதைக் காணவேண்டுமென்று விரும்புகிறேன்... யேசபேல் ஆகாபை மணந்து கொண்டபோது, அவள் இஸ்ரவேலுக்குள், அவர்கள் பணிந்து கொள்வதற்காக, விக்கிரகங்களைக் கொண்டு வந்தாள். அதேவிதமாகத்தான் நிக்கொலாய் மதத்தினரின் போதகமும் அஞ்ஞான விக்கிரக ஆராதனையோடு விவாகம் செய்து கொண்டு, அஞ்ஞான மார்க்கத்திலுள்ள ஜுப்பிடரை எடுத்துப்போட்டு, அதைப் பேதுருவாக மாற்றி வீனஸ் தேவதையே எடுத்து போட்டு அதை மரியாளாக்கினார்கள். “ இஸ்ரவேலர் எல்லோரும் பாவஞ் செய்வதற்கு காரணமாக அவள் இருந்தாள்'' என்று வேதம் கூறுகிறது. 135. அதைப் போலவே கத்தோலிக்க சபையும் தன்னுடைய குமாரத்திகள் யாவரையும் ஒரு ஸ்தாபன அமைப்புக்குள் விவாகம் செய்வித்தாள். யேசபேல் தன் மகளுக்குச் செய்தது போல, அனைத்தும் பாவமான காரியமாக அமைந்துவிட்டது. சரி. குருக்களாட்சி முறை ஏற்பட்ட போது, மூன்றாம் போனிஃபேஸ் என்பவன் போப்பாக தன்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டான். அவர்கள் சிம்மாசனத்தில் அமர்ந்த ஒரு தேவனைப் பெற்றுக் கொண்டனர். அன்று முதல் அவர்களுக்கு சபையில் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அவசியமில்லாமல் போயிற்று. அது உண்மை. இப்பொழுது அவர்களுக்கு கோட்பாடுகளும், சடங்காச்சாரங்களும் கிடைத்து விட்டன. அதில் அவர்கள் தொடர்ந்து சென்றார்கள். 136. ஸ்தாபன சபைகள் அதே கோட்பாட்டை ஏற்றுக் கொண்டபொழுது, சபைக்கு பரிசுத்த ஆவியினால் அளிக்கப்பட்டிருந்த சுயாதீனமானது காலின் கீழ் மிதித்துப் போடப்பட்டு அழிக்கப் பட்டது. பாப்டிஸ்டு, பிரெஸ்பிடேரியன், மெதோடிஸ்டு மற்றும் இன்ன பிற சபைகள் அந்நிலையில் தான் நிச்சயமாக உள்ளார்கள். இயேசு கூறிய திராட்சைச் செடியைப் போல், அவர்கள் தேவனை விட்டு வெட்டுண்டு போனபோது, வாடி வதங்கி மரித்துப் போய் விட்டார்கள். பரிசுத்த ஆவியினாலே உள்ள அற்புத அடையாளங்களெல்லாம் இப்பொழுது அவர்களுக்கு ஒரு கடந்த கால கதையாக ஆகிவிட்டது. இவர்கள் கத்தோலிக்க சபையை போல் இப்பொழுது ஐசுவரியவான்களாக ஆகிவிட்டார்கள். எனவே அவள் முழு உலகமும் பாவஞ்செய்ய காரணமாகி விட்டாள். ஏனெனில், அவளும் அவளது குமாரத்திகளும் ஒவ்வொரு தேசத்தையும்போய் அடைந்து விட்டார்கள். அது உண்மை. 137. இப்பொழுது இன்னொரு சபைக்காலத்தில் தேவன் அவளை அழைக்கிற விதத்தைக் கவனியுங்கள். அவர் தன்னுடையவளை அழைப்பதைக் கவனியுங்கள். முடிவில் அவர் வழக்காடி, தன்னுடையவளாகிய மீதியானவர்களை வெளியே எடுப்பதைப் பாருங்கள். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால் மாம்சமான எவரும் இரட்சிக்கப்பட முடியாது. எனவே தெரிந்து கொள்ளப் பட்டவர்கள் நிமித்தமாக அவர்களோ எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்களாக இருப்பார்கள். 138. வெளிப்படுத்தின விசேஷம் 13:6ல் எழுதப்பட்டுள்ளதைப் போல். அதை நீங்கள் வாசிக்க விரும்புகிறீர்களா? “ இந்த ஸ்திரீயானவள் யாவரும் ஒரு முத்திரையை (அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளச் செய்தது). (இந்த மிருகம் இதைச் செய்தது) இந்த மிருகம் தரித்திரர் முதற்கொண்டு சிறியோர், பெரியோர் அனைவரும் மிருகத்தின் முத்திரையைத் தரித்துக் கொள்ளும்படி செய்தது'' இதைச் செய்யப் போவது ரோமன் கத்தோலிக்க சபையேயாகும். 139.இதையும் செய்தார்கள். அதுவுமல்லாமல், வெளிப்படுத்தின விசேஷம் 13:14ல் கூறியுள்ளபடி ஒரு மிருகத்திற்கு சொருபத்தையும் உண்டாக்கினார்கள். நீங்கள் அதை வாசிக்கிறீர்கள் என்று நான் கருதுகிறேன். இன்னும் நீங்கள் வாசிக்கவில்லையெனில், நாம் அதை எடுத்து வாசிப்போம். வெளிப்படுத்தின விசேஷம் 13:14. “ மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே (அது தான் சபை களின் மகா சம்மேளனம்) பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு (அஞ் ஞான மார்க்கம், அஞ்ஞான ரோமாபுரி போப்பு மார்க்க ரோமாபுரியாக ஆகியது). ஒரு சொரூபம் பண்ண வேண்டு மென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.” வெளி.13:14. 140. பாருங்கள், “ அவளுக்கு ஒரு சொரூபத்தை உண்டு பண்ண வேண்டியது''. அது என்னவாக இருக்கும்? அவர்கள் இப்பொழுது சரியாக அதையேதான் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சபைகளின் மகா சம்மேளனத்தை உருவாக்கி அதன் மூலம் அந்தக் காரியத்தைச் செய்ய அத்திசையை நோக்கி அசைந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். “ அனைத்து சபைகளும் இந்த ஸ்தாபனத்தையே சார்ந்ததாக இருக்கின்றன. அவைகள் யாவும் இந்த ஒரு குழுவுக்குள் ஒரு சேர போய்விடும்.” இப்பொழுது அவர்கள் அதற்கான வேதாகமத்தை உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள். போப் ஜான் அவர்கள் யாவரையும் திரும்பி வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறார். ஆங்க்லிகன் சபையின் தலைவராகிய ஆர்ச் பிஷப் ஆஃப் காண்டர்பரியும் கூட அங்கே போயிருக்கிறார். முதல் காரியம் என்னவெனில், அவர்கள் அனைவரும் வேசிகளாயிருக்கிறபடியால், தங்கள் தாய் வேசியிடம் திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். பாருங்கள்? அவர்கள் கூறுகிறார்கள்: “ நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பெரியதொரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, கம்யூனிசத்தை எதிர்த்துப் போராடுவோம்'' என்று. தேவனே கம்யூனிசத்தை எழுப்பியுள் ளார் என்பது அவர்களுக்குத் தெரியாது. (நான் இந்த வேதாகமத்தைக் கொண்டு அது அப்படித்தான் என்பதை உங்களுக்கு நிரூபித்துக் காண்பிக்க முடியும்). பூமியின்மேல் சிந்தப்பட்ட பரிசுத்தவான்களின் இரத்தத்திற்காக பழிவாங்க தேவன் அதை எழுப்பியிருக்கிறார் என்பதை அவர்கள் மனதில் பதித்துக் கொள்ளச் செய்வேன். இஸ்ரவேலைத் தண்டிக்க தேவன் எவ்வாறு நேபுகாத் நேச்சாரை எழுப்பினாரோ, அதைப் போலவே, அதே விதமான நோக்கத்திற்காகவே தேவன் கம்யூனிசத்தையும் எழுப்பியுள்ளார். அவர் கம்யூனிசத்தை எழுப்பினார், ஒரு நாளில், கம்யூனிசம் ரோமாபுரியை உலகப்படத்திலிருந்து இராதபடி, அதின் மேல் குண்டைப் போட்டு வெடித்து சிதறிப் போகச் செய்யும். பாருங்கள்? (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி). 141. தரித்திரர், ஐசுவரியவான்கள் முதற்கொண்டு யாவரும் ஒரு அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளச் செய்தாள் என்பதை நாம் இங்கே பார்க்கிறோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட பிரிவினரான மக்களை அவள் தொடக் கூடாது. அதை நீங்கள் அறிவீர்களா? வெளிப்படுத்தின விசேஷம் 13:8. 142. இதைக் கேளுங்கள், நான் இதை வாசிக்கிறேன். “ பின்பு, நான் கடற்கரை மணலின் மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பி வரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் (அதுதான் அந்த எழு மலைகளாம், நேற்றிரவில் நாம் அதைப் பார்த்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்) பத்துக் கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின் மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின் மேல் தூஷணமான நாமமும் இருந்தன. நான் கண்ட மிருகம் சிறுத்தையைப் போலிருந்தது, அதின் கால்கள் கரடியின் கால்களைப் போலவும் அதின் வாய் சிங்கத்தின் வாயைப் போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும் (இந்த வலுசர்ப்பம் தான், அந்த ஸ்திரீயின் குழந்தையைப் பட்சிப்பதற்காக அந்த ஸ்திரீக்கு முன்பாக நின்ற சிவப்பான பிசாசாகும். அது ரோமாபுரியாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்). தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப் பட்டிருக்கக் கண்டேன்; (அஞ்ஞான மார்க்கத்தைப் பாருங்கள்) ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. (போப்பு மார்க்கம் அதன் இடத்தை எடுத்துக் கொள்கிறது. கிறிஸ்தவ மார்க்கத்தின் வேஷம் தரித்த நிக்கொலாய் மதஸ்தினரோடு சேர்ந்து கொள்ளுகிறது) பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி," வெளி.13:1-3 143. கத்தோலிக்க மதமானது வானத்தின் கீழே உலகின் அனைத்து தேசத்திலும் தீவிரித்து பரவிவிட்டது. அது உண்மை. இரும்பும் களிமண்ணும் ஒன்று சேர்ந்திருப்பதைப் பற்றி தானியேல் கூறினானே, அதைப் போல் தான் இது உள்ளது. 144. “ இரும்பும் களிமண்ணும்'' என்கிற காரியத்தைப் பற்றி ஒரு சிறு விஷயத்தை நான் உங்களுக்கு குறிப்பிட விரும்புகிறேன். நான் ஏற்கனவே உங்களுக்கு அதைப் குறிப்பிட்டுள்ளேனோ? ஐக்கியநாடுகளின் மகாசபையின் கடைசிக் கூட்டத்தில், ரஷியப் பிரதமர் குருஷ்சேவ் அவர்கள் தன்னுடைய காலணியைக் கழற்றி அதை மேசையின்மேல் அடித்தார். அங்கே ஐந்து கிழக்கத்திய தேசங்களும், ஐந்து மேற்கத்திய தேசங்களும் முக்கியமாக இருந்தன. குருஷ்சேவ் அவர்கள் கிழக்கத்திய தேசங்களுக்கு தலைமை வகித்தார்; ஐசன்ஹோவர் அவர்கள் மேற்கத்திய தேசங்களுக்கு தலைமை வகித்தார். அவர்கள் இரு பெரும் வல்லரசுகளின் தலைவர்கள். அவர்கள் தான் அந்த இரு பாதங்கள். குருஷ்சேவ் என்ற ரஷ்ய வார்த்தைக்கு 'களிமண்'' என்று பொருள். ஐசன் ஹோவர் என்ற வார்த்தை அமெரிக்காவில், ஆங்கிலத்தில் “ இரும்பு'' என்று பொருள். நாம் கடைசிக் காலத்தில் இருக்கிறோம். “ அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த (இக் கூடாரத்தில் நம்முடைய அடுத்த செய்தி இதுவே என்பதை அறிந்து கொள்ளுங்கள்) வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும், மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம் பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்." ( வெளி.13:4 ) 145. அதாவது, உதாரணத்திற்கு, ஐசன்ஹோவர் இங்கே அமெரிக் காவில் பெயர் பெற்று விளங்குகிறார். ஆனால் ரோமாபுரியில் அவர் ஒன்றுமில்லை; ரஷியாவிலும் அவருக்கு மதிப்பு இல்லை. அதைபோல் குருஷ்சேவுக்கு ரஷியாவில் மதிப்பு உண்டு, ஆனால் அவருக்கு அமெரிக்காவில் மதிப்பு கிடையாது. ஆனால் ஒரேயொரு மனிதன் இருக்கிறார், அவருக்கு எங்கும் மதிப்பு உண்டு. அவர் தான் போப்பு. (அது உண்மை ). “ நாம் தானே ஸ்தாபனமாக நம்மை ஆக்கிக்கொண்டு ஒன்று சேர்ந்து விடுவோம்'' என்கிறார்கள். “ பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம் பண்ண (இது தான் உபத்திரவம் எழும்பி வருகிறதைக் காண்பிக்கிறது) அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது. அது தேவனைத்தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, (“ மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்தல்; துணிகரமுள்ளவர்கள், இறுமாப்புள்ளவர்கள், சுகபோகப் பிரியர், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள்'') அவருடைய நாமத்தையும் (“ கர்த்தராகிய இயேசுகிறிஸ்து) நாமத்துக்குப் பதிலாக “ பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை ஏற்றுக்கொள்ளுதல்) அவருடைய வாசஸ்தலத்தையும் பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்ளையும் தூஷித்தது. மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம் பண்ணி (இதோ உபத்திரவம் எழும்புகிறது) அவர்களை ஜெயிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின் மேலும் பாஷைக்காரர் மேலும் ஜாதிகள் மேலும் ஜாதிகள் மேலும் அதற்கு அதிகாரஞ் கொடுக்கப் பட்டது. உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி யினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்” (ஓ, ஓ, ஓ, ஓ,ஓ) வெளி.13:5-8 146. நம்முடைய நாமங்கள் அப்புத்தகத்தில் இடம் பெற்றிருந்தன என்றால், அவைகள் உலகத்தோற்றத்திற்கு முன்னரே இடம் பெற்று விட்டன. “ என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும். என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கின்றன. (அதுதான் உணவு, பாருங்கள்) “ அன்னியனின் சத்தத்திற்கு”... 147. “ நல்லது, நான் ஒரு சபையை சேர்ந்து கொண்டு விட்டேன். உன் அளவுக்கு நானும் நல்லவனாய் ஆகிவிட்டேன்'' என்று நீங்கள் கூறலாம். இது ஆடுகளுக்குரிய உணவு அல்ல. 148. இங்கே தானே ஆடுகளுக்குரிய உணவு உள்ளது. “ உன்னதங்களிலே கிறிஸ்துவோடு உட்கார்ந்திருத்தல்''. ஓ, அவர் மிகவும் அற்புதமானவர் அல்லவா? 149. இப்பொழுது நேரம் கடந்து விட்டபடியினால் நாம் சீக்கிரம் முடித்து விடுவோம். நாம் இப்பொழுது 23ம் வசனத்தைப் பார்ப்போம். “ அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்து கொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியை களின்படியே பலனளிப்பேன். தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக் கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்து கொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய (என்னவிதமான போதகம் அது? ஸ்தாபனங்கள், பிஷப்புகள், ஆர்ச் பிஷப்புகள், போப்புகள்) உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள் மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்." வெளி.2:23-24 150. "இந்தப் போதகத்தை பற்றிக் கொள்ளாமலும்'. மோவாபிய தேசத்தின வழியாக கடந்துவந்த இஸ்ரவேலர் அப்பொழுது ஒரு தேசமாக இன்னும் ஆகவில்லை என்று நேற்றிரவு பார்த்தோம். அவர்கள் பூமியின் மேல் சுயாதீனமுள்ள ஜாதியாராக வாழ்ந் தார்கள். அது சரிதானே? அது ஒரு முன்னடையாளம். அவர்கள் கூடாரங்களில் வசித்து, பரதேசிகளாய் அலைந்து திரிந்தார்கள். அதேவிதமாக பெந்தெகொஸ்தே குழுவினரும், அதாவது உண்மை யான பெந்தெகொஸ்தே குழுவினரும், இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லும் அலைந்து திரிகிறவர்களாய் இருக்கிறார்கள். “ ...இந்தப் போதகத்தைப் பற்றிக் கொள்ளாமலும், (தங்களுக் கென ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்திக் கொள்ளாதவர்கள்), சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லு கிறார்களே, அந்த ஆழங்களை அறிந்து கொள்ளாமலுமிருக்கிற...” 151. சாத்தானுடைய சிங்காசனம் எங்கேயிருக்கிறது என்று நாம் ஏற்கனவே பார்த்தோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். நேற்றிரவில் இதைப் பற்றிய விஷயத்தின் துவக்கத்திற்கே சென்று கவனமாகப் பார்த்தோம். ஆதியில் அவனது சிங்காசனம் எங்கே வைக்கப்பட்டிருந்தது? பாபிலோனில் தான். இராஜா, மதகுரு ஆகிய இரு பதவிகளையுமே வகித்த அந்த பாபிலோனிய இராஜா வானவன், கல்தேய தேசம் பெர்சியரால், ஜெயிக்கப்பட்ட போது, பெர்சியர் இந்த பாபிலோனிய இராஜாவை துரத்திய பொழுது, இந்த கல்தேய (பாபிலோனிய) அரசன் பெர்கமுவுக்கு ஓடிவந்து விட்டான். வந்தவன் அங்கே தன் சிங்காசனத்தை ஸ்தாபித்தான். பாருங்கள், சிநெயாரின் தேசத்திலிருந்து பெர்கமுவுக்கு அவன் தன் சிங்காசனத்தை மாற்றிக் கொண்டு விட்டான். அதைப்பற்றி வரலாற்றிலிருந்து நேற்றிரவில் நாம் வாசித்து அறிந்து கொண் டோம். அங்கேதான் அவன் அதை உருவாக்கினான். கத்தோலிக்க சபை உருவாகியது அங்கேதான். மகா பாபிலோன், வேசிகளின் தாயாகிய கத்தோலிக்க சபைதான் இன்னமும் இருந்து வருகிறது. “ சாத்தானுடைய சிங்காசனம்'', “ சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே... நான் உங்கள் மேல் வேறொரு பாரத்தையும் சுமத்த மாட்டேன்...'' 152. “ வேறொரு பாரத்தையும் நான் சுமத்த மாட்டேன்; ஏற்கனவே உள்ளதுக்கு மேலாக வேறு எதுவும் இனி இருக்காது'' இந்த சபைக்காலத்திற்குள் இருந்த அந்த சிறுமந்தையானது எவ்வாறு இருண்ட காலத்திற்குள்ளாக ஒடுக்கி நசுக்கப்பட்டது என்பதைப் பாருங்கள். ஏறத்தாழ 1500 ஆண்டுகள் நீடித்திருந்த இருண்ட காலத்திற்குள் அவர்கள் இவ்வாறு நிலைத்து நின்றார்கள். “ உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக் கொண் டிருங்கள்.'' (அதாவது, இன்னமும் உங்கள் இருதயங்களில் பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளீர்கள். நான் வந்து உங்களுக்கு இளைப்பாறுதலை கொடுக்குமளவும் அதைவிடாமல் பற்றிக் கொண்டிருங் கள். ஏனெனில் இதற்கடுத்த காலமானது அடுத்தபடியாக வருகிறது). வெளி.2:25 “ ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு... நான் ஜாதிகள் மேல் அதிகாரம் கொடுப்பேன். “ அவன் இருப்புக் கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப் போல நொறுக்கப்படுவார்கள்.'' வெளி.2:26-27 153. பாருங்கள், அந்த அஞ்ஞான விக்கிரகாராதனை சபைக்கெதிராக, இருண்ட காலத்திற்குள்ளாக வந்த அந்த உண்மையான சபையானது நியாயத்தீர்ப்பில் நிற்கையில், அது எவ்வாறிருக்கும், அவர்கள் மோதி கீழே தள்ளப்படுவார்களா? அந்த வெண்கலப் பாதங்கள் அவர்களை மிதித்து நசுக்கிப் போடும் என்று நான் உங்க ளுக்குச் சொல்லுகிறேன். “ மண்பாண்டங்களைப் போல் அவர்கள் நொறுக்கப்படுவார்கள்'' என்று வேதம் கூறுகிறது. “ விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.'' (அது என்னவென்று நீங்கள் அறிவீர்களா? விடிவெள்ளி நட்சத்திரம் என்பது கிறிஸ்துவைக் குறிக்கும்). ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது. வெளி.2:28-29 154. ஓ, என்னே! நீங்கள் இதைப் பற்றி மகிழ்ச்சியடைய வில்லையா? இப்பொழுது சற்று தாமதமாகிவிட்டது. இன்னும் சில விஷயங்கள் உள்ளன, அவைகளை நான் ஒருவேளை நாளை எடுத்துக் கொள்வேன். இந்த இரண்டாயிரம் வருஷங்களைப் பற்றியது அது. அவர் பள்ளத்தாக்கின் லீலி, பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமவர் ஆயிரம் பதினாயிரம் பேர்களில் சிறந்த என் ஆத்தும நேசரவர் அவர் பள்ளத்தாக்கின் லீலி, அவரில் மட்டுமே நான் காண்கிறேன். என்னை சுத்திகரித்து முழுவதும் சுத்தமாக்கவே நான் வேண்டுகிறேன். வருத்தத்தில் அவர் என் ஆறுதல், தொல்லையில் அவர் என் ஆறுதல் தன்மேல் பாரம் யாவையும் வைத்துவிடச் சொல்லுகிறார். அல்லேலூயா அவர் பள்ளத்தாக்கின் லீலி, பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமவர். என் ஆத்துமாவுக்கு அவர் ஆயிரம் பதினாயிரம் பேரிலும் சிறந்தவர். 155. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஓ, நான் நேசிக்கிறேன். அவரை நான் நேசிக்கிறேன் (நாம் யாவரும் அவரை இப்பொழுது தொழுது கொள்ளுவோம், அவருடைய உடைக்கிற வார்த்தைகளுக்கும், செய்திக்காகவும்) நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முந்தியவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி சிலுவையில். 156. அவர் அற்புதமானவராயிருக்கிறாரல்லவா? நான் அவரை நேசிக்கிறேன். நான் இங்கே கூற இயலாமற்போன விஷயங்கள் யாவும் புத்தகங்களில் இடம்பெறும். ஏனெனில் ஒரு இரவில் சபைக்காலங்கள் அனைத்தையும் பிரசங்கித்துவிட முடியாது. என் தொண்டை சற்று கட்டிவிட்டபடியினால் நான் இன்றிரவில் சற்று பேசுவதைக் குறைத்துக் கொண்டேன். ஆனால், ஓ அவர் அற்புத மானவராயிருக்கவில்லையா? ஓ! எத்திசையினின்றும் மக்கள் கூடி வந்தனர் அவர்தம் இதயங்கள் கொழுந்துவிட்டு எரிந்ததுவே பெந்தெகொஸ்தேயில் விழுந்த அக்கினியால் அது அவர்களை சுத்திகரித்து சுத்தமாக்கியதுவே அது என் இருதயத்திலும் பற்றியெரிகிறது ஓ அவருடைய நாமத்திற்கு மகிமையுண்டாவதாக நானும் அவர்களில் ஒருவன் என்று கூறிட மிகவும் மகிழ்கிறேன் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்று கூறிட முடியும் அவர்களில் ஒருவன் என்று கூறிட முடிந்ததால் நான் மிகவும் மகிழ்கிறேன், அல்லேலூயா! அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் என்று கூறிட முடிந்ததால்நான் மிகவும் மகிழ்கிறேன். (நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறீர்களா?) 157. சாட்டானூகா என்ற இடத்திலிருந்து ஓர் இரவு நான் திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது நடந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் பயணம் செய்த விமானம் டென்னஸியலுள்ள மெம்ஃபிஸ் என்ற இடத்தில் தரையிறங்கியது. “ இனி அடுத்த நாள் காலை ஏழு மணிக்குத்தான் உங்கள் விமானம் புறப்படும்'' என்று என்னிடம் கூறி, அது வரைக்கிலும் நான் தங்கியிருப்பதற்காக எனக்கு ஒரு மிக அருமையான தங்கும் விடுதியை ஒழுங்கு செய்திருந்தார்கள். 158. நான் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபடியால், எனது நண்பர்களுக்கு சில கடிதங்களை எழுதியிருந்தேன். அவை களை அஞ்சலில் சேர்க்கத்தக்கதாக நான் என் ஹோட்டலை விட்டு வெளியே வந்து, அவைகளை அஞ்சல் பெட்டியில் போட்டேன். அவ்வாறு நான் நடந்து கொண்டு செல்லுகையில் பரிசுத்த ஆவியானவர் என்னிடம், “ நடந்து கொண்டேயிரு'' என்றார். நான் தொடர்ந்து நடந்து கொண்டே சென்றிருந்தேன். அவ்வாறு நடந்து, கருப்பு இன மக்கள் வாழும் பகுதிக்குள் வந்துவிட்டேன். 159. நான் அங்கே நின்று கொண்டு, எனக்குள், “ என்னே! இங்கு பார். விமானம் புறப்பட நேரமாகிவிட்டதே'' என்று எண்ணிக் கொண்டிருந்தேன். 160. பரிசுத்த ஆவியானவரோ, “ தொடர்ந்து போய்க் கொண்டேயிரு'' என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். அன்றொரு நாளில் அவர் அந்த காட்டில் “ நடந்து கொண்டேயிரு” என்று சொன்னாரே, அதைப்போலவே இப்பொழுதும் சொன்னார். எனவே நான் நடந்து கொண்டே போனேன். 161. அப்பொழுது நான் அங்கே உள்பகுதிக்குள் ஏழை கருப்பு இன மக்கள் வாழும் மிகச் சாதாரணமான சிறிய வீடுகளில் ஒன்றினைப் பார்க்க நேர்ந்தது. அதன் வாயிலில் ஜெமீமா என்னும் பெயருடைய ஒரு வயதான பெண்மணி, தன் தலையில் பையன்கள் அணியும் சட்டை ஒன்றை தலையில் கட்டிக் கொண்டு சாய்ந்து கொண்டு நின்றிருக்கக் கண்டேன். 162. நான் அங்கே இவ்வாறு பாடிக்கொண்டே போய்க் கொண்டிருந்தேன். நானும் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்று கூறிட முடிந்தால் நான் மிகவும் மகிழ்கிறேன். ஓ அல்லேலூயா! (“ நீர் என்ன விரும்புகிறீர் கர்த்தாவே'' என்று கேட்டேன்) அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் (ஆவியினால் நடத்தப்படுவதை நீங்களும் விசுவாசிக் கிறீர்களா? ஆம் நிச்சயமாக) நானும் அவர்களில் ஒருவன் என்று கூறிட முடிந்ததால் நான் மிகவும் மகிழ்கிறேன். 163. இது நடந்தது 14 ஆண்டுகளுக்கு முன்பாக. அப்பெண்மணி வேலி ஓரமாக நின்று பார்த்துக் கொண்டே நின்றாள். நானோ தூரத்தில் வந்து கொண்டேருந்தேன். அந்த அம்மாய் என் மேலேயே கண்ணை வைத்து உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டிருந் தாள். நான் பாடுவதை நிறுத்தி விட்டு, தொடர்ந்து நடந்து கொண்டே சென்றேன். அந்த அம்மையாரிடம் நான் நெருங்கி விட்டேன். அப்பொழுது அவள் பருத்த கன்னங்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. அவள் என்னை உற்றுநோக்கி, 'காலை வணக்கம், போதகர் அவர்களே'' என்றாள். 164. நான் அந்த அம்மையாரை நோக்கி, “ எப்படியிருக்கிறீர்கள், ஆண்ட்டி ?'' என்று கேட்டேன். என்னைப் பார்த்து மிகவும் சந்தோஷமாக புன்முறுவல் பூத்தாள். “ நான் ஒரு பார்சன் என்று எப்படி அறிவீர்கள்?'' என்று கேட்டேன். தெற்குப் பகுதியில், மக்கள் பிரசங்கியாரை “ பார்சன்'' என்று அழைக்கிறது வழக்கம், என்பதை நீங்கள் அறிவீர்கள். “ நான் ஒரு பார்சன் (போதகர்) என்று எப்படி நீங்கள் அறிவீர்கள்?'' என்று கேட்டேன். 165. “ நீங்கள் வரப்போகிறதாக முன்கூட்டியே நான் அறிந்து கொண்டேன்'' என்று பதிலளித்தாள். 166. “ எப்படி அதை அறிவீர்கள்? என்னை உங்களுக்குத் தெரியுமா?'' என்று நான் கேட்டேன். 167. “ தெரியாது, ஐயா, நீங்கள் வரப்போவது எனக்குத் தெரியும். சூனேமியாளைப் பற்றிய கதை உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டாள். 168. “ ஆம், தெரியும்'' என்றேன். 169. ''நான் அந்தவிதமானதொரு பெண்மணிதான்'' என்று கூறினாள். அவள் மேலும் கூறினாள்; “ கர்த்தர் எனக்கு ஒரு பிள்ளையைக் கொடுத்தார், நான் அவனை சரியானபடி வளர்ப்பேன் என்று அவரிடம் கூறினேன். நான் ஒரு ஏழைப்பெண்மணி. ஜீவனத்திற்காக நான் வெள்ளை நிறத்தவருக்கு வீட்டு வேலைகள் செய்து கொடுக்கிறேன். ஆண்டவர் எனக்கு ஒரு பிள்ளையைக் கொடுப்பதாகச் சொன்னார். நான் அவரிடம், அவனை எனக்குத் தெரிந்த அளவுக்கு சிறப்பாக வளர்ப்பேன் என்று கூறினேன். அவ்வாறே நானும் அவனை எனக்குத் தெரிந்த அளவு சிறப்பாக வளர்த்து வரத்தான் செய்தேன். ஆனால் அவனோ, பார்சன் அவர்களே, தவறான கூட்டாளிகளோடு சேர்ந்து கொண்டு விட்டான். அவனுக்கு ஒரு வியாதியுண்டாயிற்று, அது அவனில் முற்றிப் போகிற வரைக்கிலும் நாங்கள் அது என்னவென்றே அறிந்து கொள்ள முடியவில்லை. அவன் இப்பொழுது அவன் படுக்கையில் மரித்துக் கொண்டிருக்கிறான். அவன் இப்பொழுது நினைவிழந்த நிலையில் உள்ளான் மருத்துவர் வந்து பார்த்து, அவனை வியாதியானது அவனுடைய இருதயத்தைக் கூட தின்று விட்டது, அதில் இரத்தத்தோடு வேறு கலந்துவிட்டது, அதனால் மிகுந்த பாதிப்பை அவனில் அது ஏற்படுத்திவிட்டது என்று சொல்லிப் போனார். அவர்கள் கொடுத்த மருந்து ஒன்றும் அவனுக்கு உதவி செய்யவில்லை. அவன் இப்பொழுது மரித்துக் கொண்டிருக்கிறான். அவன் ஒரு பாவியாக மரிப்பதை என்னால் காண சகிக்க முடிய வில்லை. நான் மீண்டும் மீண்டும் ஜெபித்துக் கொண்டேயிருந் தேன். இரா முழுவதும் ஜெபித்துக் கொண்டேயிருந்தேன். கடந்த இரண்டு நாட்களாக அவன் சுய நினைவிழந்த நிலையில் காணப்படுகிறான். அவனைச் சுற்றி நடப்பதொன்றையும் அவன் அறியாத அளவுக்கு அவன் நினைவிழந்து இருக்கிறான்'' என்று கூறினாள். 170. அவள் மேலும் கூறினாள்; “ நான் ஜெபித்தேன்; ஆண்டவரே நீர் அந்தக் குழந்தையை எனக்குக் கொடுத்தீர், அந்த சூனேமியாளுக்குக் கொடுத்தது போல். எங்கே உமது எலியா? அவர் எங்கே இருக்கிறார்? எனக்கு உதவி செய்யக்கூடிய ஒன்று எங்கேயுள்ளது?'' என்று. 171. "நான் முழங்காலில் நின்று ஜெபிக்கையில் உறக்கத்தி லாழ்ந்தேன். அப்பொழுது கர்த்தர் என்னோடு சொப்பனத்தில் பேசினார். அவர் “ நீ போய் வாசலருகே நின்று கொண்டிரு. அங்கே ஒரு மனிதன் தன் தலையில் பழுப்புநிற தொப்பியணிந்து மங்கல் நிறமுள்ள சூட் அணிந்தவராய் வீதியில் வருவார். அவர் உன்னிடம் பேசுவார்'' என்று என்னிடம் கூறியிருந்தார். 172. “ நான் விடியற்கால முதற்கொண்டு இங்கேயே காத்து நின்று கொண்டிருக்கிறேன்'' என்றாள். பனியினால் அவளது முதுகுப் பாகம் நனைந்திருந்தது. “ நீங்கள் பழுப்புநிற தொப்பியணிந்து வருகிறதைக் கண்டேன். நீங்கள் ஒரு சிறிய பையைக் கூட உங்களுடன் கொண்டு வந்திருக்க வேண்டுமே'' என்று கேட்டாள். 173. “ நான் அதை எனது ஹோட்டலில் விட்டு விட்டு வந்தேன்'' என்றேன். “ உங்களுக்கு மகனுக்கு சுகமில்லையா?'' என்று கேட்டேன். “ அவன் மரித்துக் கொண்டிருக்கிறான்'' என்றாள் அவள். “ என்னுடைய பெயர் பிரன்ஹாம் என்பதாம். என்னை உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டேன். “ இல்லை ஐயா, பார்சன் பிரன்ஹாம் அவர்களே, நான் உங்களைப் பற்றி கேள்விப்பட்டதேயில்லை" 174. “ நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறதுண்டு'' என்று மேலும் கூறினேன். அவளோ அதில் ஆர்வம் காட்டவில்லை. அவள் தன் மகன் பாவியாக மரித்துவிடக் கூடாதே என்பதைப் பற்றித்தான் கவலையாயிருந்தாள். 175. நான் வாயிற்கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந் தேன். அக்கதவை திறந்த பிறகு அது தானே திரும்பிப் போய் மூடிக் கொள்ளும், அவ்விதமான அமைப்பைக் கொண்டது அது. வடக்கே உள்ளவர்களுக்கு அதைப்பற்றித் தெரியாது. இரண்டு அறைகளே கொண்ட ஒரு மிகச் சிறிய வீடாக அது இருந்தது. வரவேற்பறை, படுக்கை அறை எல்லாம் ஒரே இடத் திலேயே இருந்தது. சமயலறை பின்னால் இருந்தது. நான் உள்ளே நுழைந்த போது... சுவர்களில் வெள்ளையடிக்கப்பட்டிருந்தது. பக்கங்களில் மெல்லிய பலகைகள் வைத்து அடைக்கப்பட்டிருந்தது. கூரையில் தார் பூசப்பட்ட கனத்த அட்டையால் வேயப் பட்டிருந்தது. அது பனித்துளியினால் ஏற்பட்டதைப் போல், ஆங்காங்கே நீர்க்குமிழிகள் மேலே தொங்கிக் கொண்டிருந்தன. 176. நான் உள்ளே நுழைந்த பிறகு, கதவுக்கு அப்பால் உள்ளே சுவற்றில், “ தேவன் எங்கள் இல்லத்தை ஆசீர்வதிப்பாராக'' என்ற வாக்கியம் தொங்கிக் கொண்டு இருந்தது. இந்த மூலையில் ஒரு பழைய கட்டில் காணப்பட்டது, அந்தப் பக்கம் இன்னொரு கட்டிலும் காணப்பட்டது. அங்கேதானே ஒரு பெரிய உருவம் படுத்திருந்தது. (தரை விரிப்புக்கூட இல்லை). நல்ல தோற்ற முடைய கட்டுமஸ்தான ஒரு பையன் படுத்திருந்தான். அவன் ஏறத்தாழ ஆறடி உயரமும்,179 அல்லது 180 பவுண்டுகள் எடையுள்ளவனாகவும் இருந்தான் என்று கருதுகிறேன். அவனுடைய கையில் துப்பட்டியை பிடித்துக் கொண்டிருந்தான். அவன் “ ஊ, ஊ'' என்று மெதுவாக முனகிக் கொண்டு இருந்தான். 177. அவள், “ அம்மாவின் குழந்தையே'' என்று அவனை அழைத்தாள். 178. "இவள், அம்மாவின் அருமாந்தப் பிள்ளையே' என அழைக்கிறாளே'' என்று வியந்தேன். ஆயினும் அவன் சிபிலிஸ் என்னும் சமூக வியாதியினால் வருந்தி மரித்துக் கொண்டிருந்தான். 179. அவள் அவனது நெற்றியில் முத்தமிட்டு, “ அம்மாவின் மகனே'' என்று அழைத்து அவனைத் தட்டிக் கொடுத்தாள். 180. என்னுடைய இருதயம் பெரிதாக விரிவடைந்தது. “ ஆம், நீ எவ்வளவு ஆழமாக பாவத்தில் ஆழ்ந்திருந்தாலும், நீ இன்னமும் அவளுடைய பையன்தான்'' என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். பிறகு நான் எண்ணினேன்: “ பார்த்தாயா, அவன் எவ்வளவு கெட்டவனாயிருந்தாலும் அக்கறையில்லை, அவன் அவனது தாய்க்கு இன்னமும் "அம்மாவின் குழந்தை'தான். “ தாய் தன் பிள்ளையை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை. உன்னை என் உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன்'' என்று ஆண்டவர் கூறியதைப் பற்றி நான் எனக்குள் எண்ணிப் பார்த்துக் கொண்டேன். பாருங்கள்? எப்படி முடியும்? 181. அந்த வயதான பரிசுத்தவாட்டி அங்கே நடந்து கொண்டிருந் ததைப் பார்த்தேன். அவளுடைய வீட்டில் ஒன்றுமே இல்லை என்பதை நீங்கள் பார்த்ததும் கண்டு கொள்ள முடியும். சகோதரனே, ஆனால் அவளிடம், அவளுடைய வீட்டில், ஒரு காரியம் இருந்தது. அது இண்டியானாவிலும் மற்றும் ஏனைய பிரதேசங்களிலும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்றாகும். அது தான் தேவன். அவள் வீட்டில் அவர் இருந்தார். ஆபாசமான, அருவருக்கத்தக்க, பாலுணர்வைத் தூண்டும்படி தோற்றமளிக்கும் பெண்களுடைய படங்கள் மாட்டப்பட்ட ஆடம்பரமான படாடோபமான வீடு ஒன்று எனக்கு இருப்பதைவிட, தேவனுடைய அப்படிப்பட்ட எளிய வீடு ஒன்றைப் பெற்றிருப்பதையே நான் விரும்புகிறேன். பழைய வேதாகமம் ஒன்று அங்கே திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதின் பக்கங்கள் உபயோகித்து கசங்கிப் போய் பழையதாகிப் போயிருந்தது. 182. நான் அவளை நோக்கிப் பார்த்தேன். அவள், “ தேனே, பிரசங்கியார் உனக்காக ஜெபிக்க வந்திருக்கிறார்'' என்றாள். 183. அவன் தொடர்ந்து, “ ஊ, ஹூ, இருட்டாயிருக்கிறது'' என்று முனகிக்கொண்டேயிருந்தான். 184. “ அவன் என்ன கூறுகிறான்?'' என்று நான் கேட்டேன். 185. “ அவன் கூறுவது என்னவென்று அவனுக்கே தெரியாது, மருத்துவர் அவன் தன் சுயபுத்தியில் இல்லை என்று கூறிச் சென்றார். அவன் ஏதோ ஒரு கொந்தளிக்கும் ஆழ்கடலில் ஒரு படகை வலித்துக் கொண்டு போகையில், அவ்வலைகடலில் தான் சிக்கிக் கொண்டதுபோல் உணருகிறான். அதைத்தான் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை போதகரே. என் மகன் இழந்து போகப் பட்டவனாக, இரட்சிக்கப்படாமல் மரிக்கிறதை தான் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை, நீங்கள் எனக்கு உதவி செய்ய வருவீர்கள் என்பதை நான் அறிவேன். ஏனெனில் கர்த்தர் என்னிடம் அவ்வாறு கூறினார்'' என்று அவள் கூறினாள். 186. “ நான் அவனுக்காக ஜெபிப்பேன், ஒருவேளை கர்த்தர் அவனை வியாதியிலிருந்து குணமாக்குவார்'' என்று நான் சொன்னேன். 187. வியாதியிலிருந்து மகன் குணமடைய வேண்டு மென்பதைப் பற்றி அவள் சற்றேனும் அக்கறைப்படவில்லை. மகன் எழும்பி நின்று, தான் இரட்சிக்கப்பட்டதாகக் கூற வேண்டும் என்பதைப் பற்றித்தான் அவள் விருப்பங்கொண்டவளாய் இருந்தாள். அவ்வளவுதான், அவன் இரட்சிக்கப்பட வேண்டும். அவன் குணமடைந்தாலும், என்றாகிலும் ஒரு நாள் அவன் போகத்தான் வேண்டும். ஓ, அவ்விதமான ஒரு மனோநிலையை மட்டும் நான் கொண்டிருந்தால் அது எப்படியிருக்கும்! தூரத்தில் நித்திய வீடு ஒன்றுண்டு என்றும், மகன் இரட்சிக்கப்பட்டிருந்தால், அவன் மரித்து விட்டாலும், தான் அங்கே போகும்போது மீண்டும் அவனோடு வாழ்வோம் என்பதையும் அவள் அறிந்திருந்தாள். 188. “ அவன் "இரட்சிக்கப்பட்டேன்' என்று சொல்வதை நான் கேட்க முடிந்தால் நல்லது'' என்று அவள் கூறினாள். 189. நான், “ நாம் தலைவணங்கி ஜெபிப்போம்'' என்றேன். அவள் முழங்கால்படியிட்டாள். நான் அவனது பாதங்களை பற்றிக் கொண்டேன். அவனது பாதங்கள் குளிர்ந்துபோய் பிசுபிசு வென்று இருந்தது. அவன் மேல் மெல்லிய துப்பட்டியை அவனது தாய் போர்த்தியிருந்தாள். அவன் அரைக்கால் நிக்கரை அணிந் தருந்தபடியினால் துப்பட்டியை அகற்ற முடியவில்லை. 190. அவன் ஒரு படகில் இருந்து கொண்டு, படகை துடுப்பைக் கொண்டு வலிக்கிறது போல் எண்ணிக் கொண்டு அவ்வாறு கைகளை அசைத்துக் கொண்டிருந்தான். “ இங்கு மிகவும் இருளாய் இருக்கிறது, ஊ ஊ மிகவும் இருளாய் இருக்கிறது'' என்று அவன் சொல்லிக் கொண்டேயிருந்தான். எனவே அவனது தாய் அவனிடம் பேச முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவனோ தொடர்ந்து, “ இங்கே இருட்டாகவும், குளிராகவும் இருக்கிறது'' என்று சொல்லிக் கொண்டே படகு வலிக்கிறவனைப் போல் செய்து கொண்டேயிருந்தான். 191. பின்பு நான் அவளை நோக்கி, “ ஆண்ட்டி , நீங்கள் நம்மை ஜெபத்தில் நடத்துவீர்களா?'' என்று கேட்டேன். 192. அவளும், “ சரி, ஐயா'' என்றாள். 193. அந்த அறையில், அத்தாயாரும், நானும், அந்தப் பையனும், பரிசுத்த ஆவியானவரும் மட்டும்தான் இருந்தோம். அந்த வயதான பரிசுத்தவாட்டி ஜெபித்தாள். என்னே! அவள் ஆண்டவரிடம் பேசிய பொழுது, ஏற்கனவே அவரிடம் பேசியிருந்தது தெரிய வந்தது. ஆம், ஐயா! தான் யாரிடம் பேசுகிறோம் என்பதை அவள் அறிந்தேயிருந்தாள். “ ஆண்டவரே, நீர் என்ன செய்யப் போகிறீர் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் யாவும் நீர் முன்னுரைத்த படியே இருந்து கொண்டிருக்கிறது'' என்று ஜெபித்தாள். 194. ஓ, என்னே ! ஆதியில் அப்பரிசுத்தவான்களுடன் இருந்த அதே இயேசு இப்பொழுதும் இருக்கிறார் என்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்கும் அதே இயேசுவாக அவர் இருக்கிறார். 195. நான் அந்த அம்மாளை, அவள் பாப்டிஸ்ட்டா , அல்லது பெந்தெகொஸ்தேயினரா என்றெல்லாம் விசாரிக்க வில்லை. அது என்னுடைய வேலையாயிருக்கவில்லை. நான் பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலை பின்பற்றிக் கொண்டிருந்தேன். அந்த அம்மையாரும் அதையே தான் செய்து கொண்டிருந்தாள். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை நாங்கள் காண விரும்பினோம். 196. எனவே நாங்கள் முழங்கால்படியிட்டோம். அந்த அம்மையார் ஜெபிக்க ஆரம்பித்தாள். அவள் ஜெபித்து முடித்த போது, எழும்பி, தன் மகனின் நெற்றியில் முத்தமிட்டு, “ என் குழந்தையே, தேவன் உன்னை ஆசீர்வதிக்கக்கடவர்'' என்றாள். 197. “ இப்பொழுது நீங்கள் ஜெபிப்பீர்களா, பிரசங்கியாரே'' என்று என்னிடம் கேட்டாள். 198. “ சரி, அம்மா'' என்றேன் நான். அப்பொழுது நேரம் எட்டரை மணியாகிவிட்டது. ஒருவேளை ஒன்பது மணியாக இன்னும் கால்மணி நேரம் இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். விமான நிலையத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் நான் இருந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய விமானமோ 7 மணிக்கு புறப்பட்டிருக்க வேண்டும். எப்பொழுது அங்கிருந்து கிளம்பிச் செல்லப் போகிறேன் என்பதும் எனக்குத் தெரியவில்லை. 199. எனவே, நான் என்னுடைய கைகளை அவனுடைய பாதங்களில் மேல் வைத்தேன். நான், “ பரம பிதாவே, இது என்னவென்று எனக்குப் புரியவில்லை. ஏறத்தாழ ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாக நான் விமானத்தில் ஏறிப்போயிருந்திருக்க வேண்டும். நீர் “ தொடர்ந்து நடந்து செல்'' என்று கூறிக் கொண்டேயிருந்தீர். இது வரைக்கிலும் நான் இந்தக் காரியத்தைத் தான் கண்டிருக்கிறேன். நான் வருவதைக் குறித்து நீர் காண்பித்ததாகவும், நான் வருவதைக் கண்டதாகவும் அவள் கூறினாள். கர்த்தாவே, நீர்தான் அதைச் சொன்னீர் என்றால், எனக்கு என்ன செய்வதென்று தெரியாது. நான் என்னுடைய கைகளை இந்தப் பையன்மேல் வைக்கிறேன்'' என்று ஜெபித்தேன். 200. அந்தப் பையன் கூறினான்: “ ஓ, அம்மா , இந்த இடத்தில் இப்பொழுது வெளிச்சம் பரவிக் கொண்டிருக்கிறது'' என்று. சுமார் ஐந்து நிமிடங்களுக்குள்ளாக படுக்கையின் மேல் பக்கத்தில் அவன் அமர்ந்து கொண்டு தன் தாயாரை தன் கைகளினால் அணைத்துக் கொண்டான். 201. அப்பொழுது நான் அங்கிருந்து மெதுவாக நழுவி வெளியே வேகமாக வந்து, ஒரு வாடகை காரைப் பிடித்துக் கொண்டு ஹோட்டல் அறைக்கு வந்து எனது சூட்கேஸை எடுத்துக் கொண்டு, விமான நிலையத்திற்கு விரைந்தேன். நான் எனக்குள் நினைத்தேன், நான் அங்கு போய் அடுத்த விமானத்தைப் பிடிக்க இரண்டொரு நாட்கள் காத்திருக்க நேரிட்டு விடும் என்று. ஏனெனில் அந்நாட்களில் அவ்வாறான நிலைமை இருந்து வந்தது. உலக யுத்தம் முடிந்ததற்கு பிறகு, உடனே அக்காலத்தில் அங்கெல்லாம் ஒரு விமானத்தைப் பிடிக்க வேண்டுமென்றால் மிகவும் கடினமான காரியமாக இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். “ நான் இரண்டு நாட்கள் காத்து இருக்க வேண்டிய தாகுமோ'' என்று எனக்குள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். 202. நான் அங்கே போய்ச் சேர்ந்ததுமே, “ ஃப்ளைட் எண்:196 லூயிவில் கெண்டக்கிக்கு இப்பொழுது புறப்படப் போகிறது'' என்று அறிவிப்பாளர் அறிவித்துக் கொண்டிருந்தார். அவ்வாறாக தேவன் அவ்விமானத்தை எனக்காக தாமதிக்க வைத்திருந்தார். ஓ, அதை நான் விசுவாசிக்கிறேன். 203. அந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, நான் இரயில் வண்டியில் அரிஸோனாவுக்குப் போய்க் கொண்டிருந்தேன். சகோதரன் ஷாரிட் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்திற்காக நான் போய்க் கொண்டிருந்தேன். வழியில் நான் சகோதரன் மூர் மற்றும் ஏனையோரோடும் சேர்ந்து கொண்டேன். வழிப்பிரயாணத்தில் மெம்ஃபிஸில் இரயில் வண்டி நின்றது. மேற்கு நோக்கி செல்லும் வண்டிகள் எவ்வாறு அதற்கென உள்ள “ டர்ன் டேபிளில்” போய் சுற்றி திரும்பி நின்று கொள்ளும் என்பது உங்களுக்குத் தெரியும். (டர்ன் டேபிள் - இரயில் வண்டிகள் வந்த திசையிலிருந்து திரும்பி வேறு ஒரு திசைக்குப் போவதற்காக வண்டிகளை திருப்பிவிடுவதற்காக வசதியாக அமைக்கப் பட்டிருக்கும் வட்ட வடிவமான இரயில் பாதை - மொழி பெயர்ப்பாளர்). அதற்காகத்தான் மெம்பிஸில் வண்டி நின்றது. 204. சாண்ட்விச்சுகளை இரயிலில் வாங்கினால் ஒரு துண்டுக்கு 60 செண்டுகள் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் வெளியில் வாங்கினால் 10 அல்லது 15 செண்டுகள் தான் அதன் விலை. எனவே சாண்விட்சுகள் வாங்குவதற்கு வண்டி நிற்பதற்காக நான் காத்திருந்தேன். பையில் அரைவாசி அளவுக்கு ஹாம்பர்கள் வாங்கி, பயணத்தில் நிச்சயம் படு குஷியடைய எண்ணினேன். எனவே நான் வண்டி நின்றதும், வண்டியைவிட்டு குதித்து இறங்கி விரைவாக ஓடிப்போய் ஹாம்பர்கள் வாங்க கடைகளைத் தேடினேன். அங்கே வண்டி 30 நிமிடங்கள் நிற்கும். 205. எனவே ஹாம்பர்கள் வாங்க நான் ஆரம்பித்தபோது யாரோ ஒருவன், “ ஹெல்லோ , இதோ அங்கே பார்சன் (பிரசங்கியார்) நின்று கொண்டிருக்கிறார்'' என்று கூறும் சத்தம் கேட்டது. நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். அங்கே சிவப்பு நிறத்தொப்பி வைத்த ஒருவன் நின்று கொண்டு கண்ணை சிமிட்டிக் கொண்டு என்னையே பார்த்து, “ உங்களுக்கு என்னைத் தெரியுமல்லவா''? என்றான். 206 . “ மகனே, நீ யார் என்று தெரியவில்லையே'' என்றேன். 207. “ வாருங்கள், வந்து என்னை நன்றாகப் பாருங்கள்'' என்றான் அவன். 208. “ உன்னை எனக்குத் தெரியும் என்பதை நான் நம்பவில்லை'' என்றேன். 209. “ உங்களை எனக்குத் தெரியும், நீங்கள் பிரசங்கியார் பிரன்ஹாம்'' என்று கூறினான். 210. “ ஆம், அது சரிதான். நீ எப்பொழுதாவது என்னுடைய கூட்டமொன்றில் கலந்து கொண்டிருக்கிறாயா?'' என்று கேட் டேன். 211. “ இல்லை, ஐயா. நீங்கள் ஒரு நாள் காலையில் எங்கள் வீட்டிற்கு வந்தீர்களே, என் தாயார் கூட...'' என்றான் அவன். 212. “ ஓ, அந்தப் பையனாக நீ இருக்க முடியாது'' என்றேன். 213. ஆம் ஐயா, நான் தான் அவன், நான் தான் அவன். போதகரே, நான் சுகமானேன். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். அது மாத்திரமல்ல, நான் இப்பொழுது ஒரு கிறிஸ்தவனாகவும் ஆகியிருக்கிறேன்'' என்று கூறினான். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர்கள் யாவரும் மேல் வீட்டறையில் அவருடைய நாமத்தினால் ஜெபித்தார்கள் ஆவியின் அபிஷேகம் அவர்களில் இறங்கியது சேவைக்கான வல்லமையும் வந்தது அந்நாளில் அவர்களுக்குச் செய்ததை அவர் உங்களுக்கு செய்திடுவார் (நீங்கள் அதைப்பற்றி மகிழ்ச்சியாயிருக்கவில்லையா?) அவர்களில் நானும் ஒருவன் என்பதில் நான் மகிழ்கிறேன் அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன், அவர்களின் ஒருவன் என்று கூறிட நான் மகிழ்கிறேன் அல்லேலூயா அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் அவர்களில் ஒருவன் என்று கூறவும் நான் மகிழ்கிறேன். 214. அவர்களுக்கு பெரிய கல்வி முதலியவை இல்லை. இவர்கள் கல்லாதவராயினும் உலகில் புகழ் பெறாவிடினும் அவர்கள் யாவரும் தங்களின் பெந்தெகொஸ்தேயை பெற்றிருந்தனர். இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருந்தனர். அவரின் வல்லமை மாறாமல் உள்ளது என்று எங்கணும் கூறுகின்றனர் அவர்களில் நானும் ஒருவன் என்று கூறிட மகிழ்கிறேன் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் நான் அவர்களில் ஒருவன் என்று கூறிட மகிழ்கிறேன் அல்லேலூயா அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் எனக்கானந்தம் நானும் அவர்களில் ஒருவனானதால் வாரீர் என் சகோதரனே, இவ்வாசீர் பெறுவீர் அது உம் இதயத்தை பாவமகற்றி சுத்தி செய்யுமே உம்மில் ஆனந்த மணியோசை ஒலிக்கச் செய்யுமே உம் ஆத்துமாவை ஜுவாலிக்கச் செய்யும். ஓ அது என் உள்ளில் ஜுவாலிக்கிறது ஓ, மகிமை அவர் நாமத்திற்கே நானும் அவர்களில் ஒருவன் என்று கூறிட மகிழ்கிறேன் 215. யாருடனாவது, உங்கள் முன்னால், பின்னால் சுற்றிலும் உள்ளவரோடு கைகுலுக்கிக் கொள்ளுங்கள். ஓ அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் அவர்களில் ஒருவன் என்பதில் எனக்கானந்தமே அல்லேலூயா அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கானந்தமே அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கானந்தமே அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கானந்தமே அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கானந்தமே அல்லேலூயா! நான் அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கானந்தமே 216. பழங்காலத்து மார்க்கம் எது? அது இங்கே ஆரம்பித்தது. அதன் பாதை முழுவதும் காலங்கள்தோறும், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது. அந்த சுவிசேஷத்திற்காக நான் எவ்வளவாய் மகிழ்ச்சி யாயிருக்கிறேன். ஆம் ஐயா! இரத்தம் வழிந்தோடியதாய், இரத்தம் வழிந்தோடியதாய், பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தம் வழிந்தோடுவதாய் உள்ளது. சத்தியத்திற்காக மரித்த சீஷர்களின் இரத்தம் சிந்தினர் (இரத்த சாட்சிகள் உள்பட யாவருடைய) பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தம் வழிந்தோடினதாய் இருக்கிறது. 217. அது என்னவிதமான சுவிசேஷமாக இருக்கிறது. அது பெந்தெகொஸ்தேயில் ஆரம்பித்தது. பரிசுத்த ஆவியின் திட்டத்தில் முதல் இரத்த சாட்சி யோவான் ஸ்நானன் தான் (அவன் அதை தன் தாயின் கர்ப்பத்திலேயே பெற்றுக் கொண்டான்) மனிதனைப் போல் மரித்தான் பின்பு கர்த்தராகிய இயேசு வந்தார், அவரை சிலுவையிலறைந்தனர் ஆவியானவர் மனிதனுக்கு பாவத்திலிருந்து விடுதலை தருவார் என்று பிரசங்கித்தார். இரத்தம் வழிந்தோடுகிறது, இரத்தம் வழிந்தோடிக் கொண்டே இருக்கிறது. இந்த பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தம் வழிந்தோடினதாய் இருக்கிறது சத்தியத்திற்காக மரித்த சீஷர்கள் இரத்தம் சிந்தினர் இப்பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தம் வழிந்தோடினதாய் இருக்கிறது. 218. அதை உங்களால் ஸ்தாபனமாக ஆக்க முடியாது. அங்கே பேதுருவும், பவுலும், வாசகனாகிய யோவானும் உண்டு இச்சுவிசேஷம் பிரகாசிக்க அவர் தம் ஜீவனை தந்தனர் இரத்தம் சிந்திய ஆதி தீர்க்கர்களின் இரத்தத்துடன் தங்கள் இரத்தத்தை கலந்தனர் அதனால் மெய் தேவவார்த்தை உண்மையாய் பரவியது இரத்தம் வழிந்தோடுகிறது, இரத்தம் வழிந்தோடுகிறது, பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தத்தால் வழிந்தோடுகிறது சத்தியத்திற்காக மரித்த சீஷர் தம் இரத்தம் சிந்தினர் இப்பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தத்தால் வழிந்தோடுகிறது பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள் கூப்பிடுகின்றனர் தீங்கிழைத்தோரை கர்த்தர் தண்டிக்கும் காலம் இன்னும் எது வரைக்கும் என்கின்றனர் ஆனால் அவருக்காய் ஜீவனின் இரத்தம் சிந்த வேண்டுவோர் இன்றும் உள்ளனர். இப்பரிசுத்த ஆவியின் சுவிசேஷத்தில் இரத்தம் வழிந்தோடுகிறது. இரத்தம் பாய்ந்தோடுகிறது, இரத்தம் பாய்ந்தோடுகிறது இந்த பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தத்தால் வழிந்தோடுகிறது சத்தியத்திற்காக இரத்தம் சிந்திய சீஷர் மரித்தனர் இப்பரிசுத்த ஆவியின் சுவிசேஷத்தில் இரத்தம் வழிந்தோடுகிறது. 219. பெந்தெகொஸ்தேயின் நாள் முதல், பெந்தெகொஸ்தேயில் பலியாகிய இரத்தசாட்சிகள் இருந்தனர். எபேசு சபைக்காலம் முதல், தொடர்ந்து வந்த காலங்களில், பெர்கமுவிலும், தியத்தீராவிலும், சர்தையிலும், லவோதிக்கேயாவிலும் அப்படியே இருந்தது. இப்பொழுது முடிவாக என்ன சம்பவிக்கப் போகிறது? வேதம் கூறுகிறபடி யாவும் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த மிருகமானது அமெரிக்காவில் தோன்றும். 220. 1933ம் ஆண்டு ஏற்பட்ட தரிசனத்தைப் பற்றி இங்கே வாசிக்கப்பட்டதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துள்ளீர்களா? அப்பொழுது சபைக்கட்டிடமானது கட்டப்படக்கூட இல்லை. அப்பொழுது தரிசனம் என்றால் என்ன என்று கூட தெரியாது. அது ஒரு “ மெய்மறந்த'' (trance) நிலை என்று அழைத்தேன். நான் அப்பொழுது வெறும் ஒரு பாப்டிஸ்டு பிரசங்கியாராக மட்டுமே இருந்து வந்தேன். 221. என் வாழ்நாள் முழுவதும் அத்தரிசனங்களை கண்டுள்ளேன். அவைகளில் ஏதாவது ஒன்று தவறிப் போனது என்று யாராகிலும் எழும்பி சொல்லுங்கள் பார்க்கலாம். ஒரு பொழுதும் அப்படியாகவில்லை. அது ஒருபோதும் தவறமுடியாது. இனியும் தவறவும் முடியாது. 222. நான் அன்று ஞாயிற்றுக் கிழமை வேதபாடத்தை ஆரம்பிக்கையில், உடனே எனக்குத் தரிசனம் உண்டானது. சபை ஆராதனையை அப்பொழுது, சார்லி கர்ன் என்பவருடைய இடத்தில், மேஸன்கள் கூடி வரும் பழைய அந்த வீட்டில் வைத்திருந்தோம். நாங்கள் ஒரு சிறு கூட்டமாக அங்கே வருவோம். நான் அத்தரிசனத்தில் இந்த ஜனாதிபதி ரூஸ்வெல்ட் உலகை, ஒரு உலகயுத்தத்திற்குள் நடத்திச் செல்வதைக் கண்டேன். அது அப்படியாக முன்னுரைக்கப்பட்டது. ''மூன்று விதமான “ இஸம்”கள் தோன்றும், ஒன்று நாஜிக் கொள்கை, இன்னொன்று பாசிசக் கொள்கை, மூன்றாவது கம்யூனிசக் கொள்கை'' என்று நான் அப்பொழுது சொன்னேன்... (எத்தனை பேர் ஞாபகத்தில் வைத்துள்ளீர்கள்?) நான் கூறினேன்; “ உங்கள் கண்களை கம்யூனிசத்தின் மேல் பதித்துக் கொள்ளுங்கள். அவை யாவும் அதில் தலையெடுக்கும். முஸோலினி எத்தியோப்பி யாவின் மீது படையெடுத்துப் போய், அங்கே வீழ்வான். நாம் முடிவாக ஜெர்மனியோடு யுத்தத்திற்குப் போவோம். ஜெர்மனி மேகினாட்லைன் என்ற உறுதியான காங்க்ரீட் சுவரினால் அரணையேற்படுத்திக் கொள்ளும்'' என்றெல்லாம் முன்னுரைக்கப் பட்டது. மேகினாட்லைன் கட்டப்படுவதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பாகவே அது முன்னுரைக்கப்பட்டது. 223. “ யுத்தத்தின் முடிவில் நாம் வெல்வோம், அந்த யுத்தம் முடிந்த பிறகு விஞ்ஞானம் பெரிய பெரிய புதிய காரியங்களையெல்லாம் கண்டு பிடிக்கும்'' என்று உரைக்கப்பட்டது. அத்தரிசனத்தில் நான், அவர்கள் வடிவமைக்கும் மோட்டார் வாகனம் முட்டையைப்போல் வடிவம் பெற்று, (1933ம் ஆண்டில் ஒரு மோட்டார் வாகனம் எவ்விதமான உருவமைப்பு இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது அவர்கள்...) இருக்கும் என்பதை கண்டேன். அது பெரிய நெடுஞ்சாலையில் ஓடுகையில், அதற்கு ஸ்டியரிங் சாதனம் வண்டியை ஓட்டிச் செல்ல இருக்க வில்லை. அது ஏதோ சக்தியினால் இயக்கப்பட்டது என்று தரிசனத்தில் கண்டேன். இப்பொழுது அவர்கள் அதை உருவாக்கியிருக்கிறார்கள். 224. “ அந்த காலத்தில் பெண்கள் வாக்கு அளிக்க உரிமை அளிக்கப்படுவர், அது முடிவில்...'' இத்தேசம் ஸ்திரீயின் தேசம். அது ஒரு ஸ்திரீக்கு அடையாளமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தீர்க்கதரிசனம் யாவற்றிலும் ரூபத்திலேயே அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறது. ஸ்திரீயினுடைய எண்ணாகிய 13ம் எண் தீர்க்கதரிசனம் யாவற்றிலும் அமெரிக்காவுக்கு அடையாளமாகச் சொல்லப்பட்டுள்ளது. இது ஒரு ஸ்திரீயின் தேசம், அவளுக்கு உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன இத்தேசத்தில். அவள் இத்தேசத்தை பாழ்படுத்திப் போடுவாள். அவளே உலகம் முழுமையும் பாழ்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறாள்'' என்று நான் கூறினேன். 225. (மேலும் ராய் அவர்களே, நான் அந்த மகா ஸ்திரீயை பற்றிய கேள்வியைக் கேட்டிருந்த உங்கள் கடிதம் எனக்குக் கிடைத்துள்ளது. “ ஒவ்வொரு கிரிமினல் குற்றமும் பற்றியும் அதன் பின்னணியைக் கண்டு பிடிக்க அலசி ஆராய்ந்தபோது, அமெரிக்காவில் நிகழும் ஒவ்வொரு கிரிமினல் குற்றத்திற்கும் பின்னால் அதற்கு காரணமாக ஒரு ஸ்திரீயானவள் இருக்கிறாள் என்பதை அரசே கண்டுபிடித்திருக்கிறது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது மிகவும் சரியாக இருக்கிறது. அது துன்மார்க்கமான ஸ்திரீகளினால் ஏற்படுகிறது). 226. “ அந்த சமயத்தில் ஸ்திரீகளுக்கு வாக்களிக்க உரிமையளிக்கப்படும். அதினால் அவர்கள் தவறான நபரை தேர்தலில் தேர்ந்தெடுப்பார்கள்'' என்று நான் கூறினேனே. அவர்கள் கடந்த தேர்தலில் அதையே செய்து விட்டார்கள். அந்த சமயத்தில் ஒரு மிகவும் சௌந்தர்யமாக அலங்கரித்துக் கொண்டுள்ள ஒரு மகா ஸ்திரீ அமெரிக்காவில் தோன்றுவாள்'' என்று கூறினேனே. அதற்கு நான் குறிப்பு ஒன்றைக் கொடுத்துள்ளேன்: (ஒருவேளை அது கத்தோலிக்க சபையாக இருக்கலாம்). “ அந்த ஸ்திரீயானவள் அமெரிக்காவில் அதிகாரத்தை தன் கையில் எடுத்துக் கொள்வாள், நாட்டில் யாவரையும் அவளே அடக்கியாளுவள். அவள் பார்ப்பதற்கு சௌந்தர்யமுள்ளவளாக இருக்கிறாள். ஆயினும் கொடூரம் நிறைந்தவளாய் இருக்கிறாள்'' என்பதாக தரிசனத்தில் கண்டேன். 227. “ அப்பொழுது நான் அமெரிக்காவை நோக்கிப் பார்த்தேன் அது எரிந்து சாம்பலாகி புகைக்காடாக மாறியது. அங்கே ஒன்றும் மிச்சமாக இருக்கவில்லை'' என்று நான் தரிசனங்கண்டு கூறினேன். 228. நான் இவைகளை முன்னுரைத்துவிட்டு. “ இது இப்பொழுது கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால் என்பதாக இருக்கிறது'' என்று கூறினேன் அப்பொழுது. 229. அவ்வேழு தரிசனங்களின் முன்னுரைத்தலில், ஐந்து ஏற்கனவே நிகழ்ந்து விட்டது. 230. கத்தோலிக்க சபையானது அதிகாரத்தை எடுத்துக் கொள்ளும், அதுவே முடிவுகாலத்தின் வருகையாகும். 231. நான் தரிசனங்கண்டு கூறினேன்: “ எங்கும் அடிமரங்கள் எரிந்து கொண்டிருந்தது போல் இருந்தது. பாறைகள் வெடித்துச் சிதறியது. முழு அமெரிக்காவும் வெறுமையாக காணப்பட்டது. நான் நின்ற இடத்திலிருந்து எங்கும் பார்த்தபோது, யாவும் வெறுமையாக காட்சியளித்தது'' என்று. 232. “ அத்தரிசனத்தின் சம்பவங்கள் யாவும் 33ம் ஆண்டு முதல் 77ம் ஆண்டு முடிய உள்ள காலத்தில் ஒரு சமயத்தில் நடைபெற வேண்டும்'' என்று கூறினேன். அது மிகக் தீவிரமாக வந்து நிறைவேறும். 233. நாம் ஒரு வெடிமருந்து பீப்பாய் மேல் உட்கார்ந்திருப்பது போல் இருக்கிறோம். சிநேகிதரே, யாவும் ஆயத்தமாக இருக்கின்றது. 234. ஓ, எங்கள் விலையேறப்பெற்ற பிரமபிதாவே, நீர் எங்களுக்கு வாக்களித்துள்ளீர். வாக்குத்தத்தம் செய்துள்ளீர். கிறிஸ்துவின் சேவகனாயிருப்பது அற்புதமானது அல்லவா? யாவும் எங்களுக்கு வாக்குரைத்திருக்கிறீர்! அவர் எங்கள் நடுவில் ஜீவிக்கிறார். இதை எண்ணிப் பார்க்கையில், நாங்கள் சிலாக்கியம் பெற்றதை அறிகிறோம். அவர் இப்பொழுதே எங்கள் நடுவில் எல்லா இருதயத்தின் இரகசியத்தையும் அறிந்தவராய், உங்களுடைய எல்லாவற்றையும் அறிந்தவராய் உலாவுகிறார். அக்கினிமயமான கண்கள் எங்களுடைய இருதயங்களை ஊடுருவிப் பார்க்கிறது. எங்களைப் பற்றி யாவையும் அறிந்திருக்கிறீர், நீர் எங்களை நேசிக்கிறீர். 235. நீங்கள் அந்த சிறு மந்தைக் குழுவில் இருப்பதைக் குறித்து மகிழ்ச்சியடையவில்லையா? அக்குழு தன் விசுவாசத்தை காத்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் அது அவருடைய கட்டளையாயிருக்கிறது; “ பயப்படாதே, சிறு மந்தையே, உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்'' என்று. “ கர்த்தர் அந்நாட்களை குறைத்திராவிடில், மாம்சமான ஒருவரும் இரட்சிக்கப்படவே முடியாது போய்விடும். நாம் சரியாக கடைசி காலத்தில் இருக்கிறோம். 236. பெந்தெகொஸ்தேயின் ஸ்தாபனங்கள் குளிர்ந்து போய், வெதுவெதுப்பாக ஆகி, தேவனுடைய வாயிலிருந்து வாந்தி பண்ணிப் போடப்பட்டு இருக்கிறது. 237. ஒரு சிறு கூட்டம் வெளியே இழுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்கள், அவர்களில் தான், “ இதோ மணவாளன் வருகிறார்'' என்பது ஏற்படுகிறது. அந்த சத்தம் உண்டாகும் போது, ஒவ்வொரு ஜாமத்திலும் நித்திரை செய்த கன்னியர் எழும்புகிறார்கள். ஆமென்! அவர்களில் இருந்தது அதே பரிசுத்த ஆவிதான். ஏழு ஜாமங்கள் உண்டு என்றும், நாம் இந்த கடைசி ஜாமத்தில் இருக்கிறோம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். 238. சபையானது மணவாளனோடு உள்ளே போய்விட்ட பிறகு... சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவில் நாம், யோசேப்பு எவ்வாறு தன் சகோதரரான இஸ்ரவேலுக்கு தன்னை வெளிப்படுத்திட விரும்பிய போது, தன் மணவாட்டியை வீட்டின் உள்ளே அனுப்பி விடுகிறான். அவன் அங்கே தன் சகோதரரான யூதர்களோடு தனித்து நிற்கிறார். “ நான் தான் உங்கள் சகோதரனாகிய யோசேப்பு'' என்று கூறுகிறார். 239. அவர்கள் ஒரு நாளை ஏற்படுத்தி அதில் அவருக்காக புலம்புவார்கள். அவர்கள் குடும்பம் குடும்பமாக புலம்புவார்கள் என்று திட்டவட்டமாக வேதத்தில் உரைக்கப்பட்டுள்ளது. 240. “ இந்த வடுக்கள் உமக்கு எங்கே கிடைத்தன?'' என்று கேட்பார்கள். “ உம்முடைய கையில் உள்ள இந்த வடுக்கள் யாது.'' என்று கேட்பார்கள். 241. “ என் சிநேகிதரின் வீட்டிலே உண்டானது'' என்பார். 242. “ அவரைக் குத்தினவர்கள் யாவரும் அவரை நோக்கிப் பார்ப்பார்கள்.'' இதோ அங்கே அவர் யோசேப்பைப்போல் தன் சகோதரருக்கு முன்னால் நிற்கிறார். 243. யோசேப்பு கூறினான்: “ நீங்கள் ஒருவருக்கொருவர் கோபப்பட வேண்டாம். ஜீவனைக் காக்கும்படி தேவனே இதைச் செய்தார்'' என்றான். அதைப்போலவே இயேசுவும் கூறுவார். அது என்ன? புறஜாதி சபையின் ஜீவனைக் காக்கும்படியாகத்தான். “ புறஜாதிகளிலிருந்து அவருடைய நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்து கொள்வார்'' 244. ஓ, நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம், சகோதரரே. நாம் இங்கே அதில் தான் இருக்கிறோம். கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. இந்தப் பழைய நல்ல பாடலைப் பாடுவோம். பெந்தெ கொஸ்தே அனுபவம் பெற்ற சகோதர சகோதரிகளாக ஒன்று சேர்ந்து பாடுவோம். “ நான் ஒரு பாப்டிஸ்டு'' என்று நீங்கள் கூறலாம். ஆனால் பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தை நீங்கள் பெற்றிருந்தால், நீங்களும் ஒரு பெந்தெகொஸ்தேயினர் தான். சரி, சரி. கிறிஸ்தவ அன்பில் நம் இதயங்களை பிணைக்கிற அந்த அன்பின்கட்டு ஆசீர்வதிக்கப்படுவதாகஉன்னதத்தில் இருப்பதைப்போல் பல்வேறு மக்களின் ஐக்கியம் அதில் உண்டு. 245. இப்பொழுது செவிகொடுங்கள், சகோதரரே! நம் மத்தியில், யாரிடமாவது தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு சிறிய கசப்புணர்ச்சி உங்கள் இருதயத்தில் வந்திருந்தால் (நான் சொல்வதைக் கேளுங்கள்) அதைக் களைந்து போடுங்கள். அதை வெளியேற்றுங்கள். (ஒரு சகோதரி அன்னிய பாஷையில் பேசுகிறார்). ******* ஏழாம் அத்தியாயம் சர்தை சபையின் காலம் THE SARDISEAN CHURCH AGE இராஜா, எனது சகோதரர் சற்று முன்பு என்னிடம், இந்த கைக்குட்டைகள் புற்றுநோயினால் இறந்து கொண்டிருக்கிற ஒரு மனிதனுக்கு ஜெபிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன என்று கூறினார். இன்னும் சிறிது நேரத்தில் நாம் அவைகளுக்காக ஜெபிப்போம். (சகோ.நெவில், ''இங்கு இரண்டு விண்ணப்பங்கள் உள்ளன'' என்று கூறுகிறார் - ஆசி). இரண்டு ஜெப விண்ணப்பங்களா? சரி, நல்லது, ஐயா. அவைகளுக்காகவும் ஜெபிக்கும்படி நான் அவைகளை இங்கே வைப்பேன். 2. பின்பு, நாளைக்கு உள்ள ஆராதனையைப் பற்றி ஒருவர் இங்கு சுற்றிவந்து ஒரு குறிப்பைக் கொடுத்தார். வெளியிலிருந்து இங்கு எங்கள் மத்தியில் விஜயம் செய்துள்ளவர்கள். நாளை பிற்பகல் இரண்டு மணிக்கு எங்கள் மத்தியில் இங்கு வரவேண்டும். அதைக் குறித்து நிச்சயம் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நாளை பிற்பகலில் ஒலிநாடாக்களை இயக்கி, அதிலுள்ள செய்தியைக் கேட்கும் கூட்டங்கள் உண்டாயிருக்கும். நீங்கள் ஏற்கனவே கேட்டிராத ஒரு செய்தி அக்கூட்டத்தில் போட்டு நாம் கேட்கலாம். அதன்பிறகு ஜெபக்கூட்டம் நமக்கு இருக்கும். நாளை மதியம் உங்களுக்கு வேறு முக்கியமான அலுவல் ஏதுமில்லையெனில், வந்து விடுங்கள். நமக்கு நிச்சயமாக நாளை மதியம் நல்ல அருமையான வேளை உண்டாயிருக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். நாளை இரவும், ஞாயிறு காலை மற்றும் ஞாயிறு இரவுக் கூட்டங்கள் எனக்கு இருப்பதால், மிகவும் அலுவல்கள் உள்ள நாட்களாக அவை எனக்கு இருக்கும். அக்கூட்டங்களில் அந்த சபைக்காலங்களின் வரலாறுகளை எடுத்தியம்ப வேண்டியதுள்ளது. 3. ஞாயிறு காலையில் கர்த்தருக்குச் சித்தமானால், நமக்கு மகத்தான வேளை இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். சனிக்கிழமை இரவிலிருந்தே விடுமுறை போலத்தான். ஞாயிறு காலையில் நான் நித்திரை செய்யும் கன்னியர், உயிர்த்தெழுதல், மற்றும் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் ஆகியவற்றைப் பற்றியும், இந்த செய்தியோடு தொடர்புடைய அதை இணைக்கிற சில துண்டுத் துணுக்குகளையும் பற்றி நாம் எடுத்துக் கொள்வோம். நாளை காலை ஆராதனை ஒன்பது மணிக்கு தொடங்கும். அப்படித்தானே பாஸ்டர் அவர்களே? காலை ஒன்பது மணிக்கு. “ நித்திரை செய்யும் கன்னியருக்கும், புத்தியுள்ள கன்னியருக்கும் என்ன நேரிடுகின்றது? அவர்கள் எப்பொழுது திரும்பி வருகிறார்கள்? அல்லது இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் எங்கே தோன்றுவார்கள்?'' என்று இவ்வாறான அநேக காரியங்களை ஒன்றாக இணைத்து இந்த செய்தியோடு அது சரியாக பொருந்துவதை நாம் ஞாயிறு காலைக் கூட்டத்தில் கண்டு கொள்வோம். அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமை இரவில் லவோதிக்கேயா சபைக் காலத்திற்குரிய அந்த மகத்தான தூதனைப் பற்றியும், அதற்குரிய செய்தியைப் பற்றியும், கர்த்தருக்கு சித்தமானால் எடுத்துக்கொள்வோம். 4. நாளை மதிய ஆராதனையில் ஒலிநாடாவில் பதியப்பட்டிருக்கும் செய்தி ஒன்றினைக் கேட்போம். சகோ.ஜீன் அவர்கள் இப்பொழுது தான் கூறினார், நாளை மதியம் இரண்டு மணிக்கு கூட்டம் ஆரம்பமாகும் என்று, ஒலிநாடாவிலிருந்து செய்தியினைக் கேட்க நாளை மதியம் இங்கு வர விரும்புவோருக்கும் பீடத்தைச் சுற்றி நின்று ஜெபித்துக் கொள்ள விரும்புவோருக்கும், கர்த்தரைத் தேடிட வேண்டி, ஜெபிக்க விரும்பி இங்கே வர விரும்பும் எவருக்கும் எந்த வேளையிலும், இந்த ஆலயமானது அருமையாகவும், உற்சாகத்தோடும் ஆயத்தமாக திறந்தே வைக்கப்பட்டிருக்கிறது. சபை கதவுகள் திறந்தும், உங்களுக்காக காத்துக் கொண்டும் இருக்கிறது. நாளை மதிய கூட்டத்திற்கு உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். 5. எந்தவேளையில் வந்து ஜெபிக்க நீங்கள் விரும்பி வந்தாலும் சபையின் கதவுகள் உங்களுக்கு எப்பொழுதும் ஆயத்தமாக திறந்தேயிருக்கும். சிலவேளையில் ஒருவேளை கதவுகள் சாத்தப்பட்டு இருந்தால், இவ்வாலயத்தின் காபந்து பொறுப்பில் இருக்கும் என் சகோதரன் வீடு இத்தெருவின் நேர் எதிர்மூலையில் 811 கதவிலக்கம் உள்ளதில் வசிக்கிறார், அவரிடமோ அல்லது அவரது மனைவியிடமோ சாவி இருக்கும். கதவுகளை அவர்கள் இழுத்துச் சாத்தியிருந்தால், காலையில் ஒருவேளை திறந்து வைப் பார்கள். இரவில் உள்ள ஆராதனைக்குப் பிறகு, கதவுகள் சாத்தப்படுகின்றன. ஏனெனில், பிள்ளைகள் அங்குமிங்கும் ஓடி விளையாடி, ஜன்னல்களை உடைத்துவிடாமலிருக்கவே அந்த ஏற்பாடு. இந்நாட் களில் சிறு பிள்ளைகள் எவ்வாறு இருக்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே அந்தக் காரணத்திற்காகத் தான் நாங்கள் ஆராதனை முடிந்தபின் கதவுகளை சாத்துகிறோம். எந்த வேளையாயிருந்தாலும் சரி, சபையின் கதவுகளை சாத்திவிடுவதை நாங்கள் வெறுக்கிறோம். வேறொரு கட்டிடம் நாம் கட்டியபிறகு, அதில் நாம் வேறு ஏற்பாடு செய்து, எப்பொழுதும் கவனித்துக் கொள்ள ஒருவரை ஏற்பாடு செய்து, அதினால் ஜனங்கள் எந்த நேரத்திலும் இங்கே வந்து ஜெபித்து, பிணியிலிருந்து விடுதலையடையவும் பரிசுத்த ஆவியைப் பெறவும் தேவனைத் தேடலாம். 6. உங்கள் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியைப் பெற்றிராதவர்கள், இங்கே வந்து இராமுழுவதும் தங்க விரும்பினாலும் தங்கி ஜெபியுங்கள். பரிசுத்த ஆவியைப் பெறும் வரையிலும் தங்கி யிருங்கள். 7. சற்று முன்பு, ''தேவன் என்னில் எங்ஙணும், முழுவதிலும் இருக்கிறார்'' என்ற பாடலை பாடியது யார்? நான் கூட எடுத்துக் கொள்ளப்படுதலே வந்துவிட்டதோ என்றெண்ணி, சுற்றுமுற்றும் பார்த்து, யாவரும் இங்கிருக்கிறார்களோ என்று தேடினேன். அது உண்மையிலேயே அற்புதமானதாயிருந்தது. நான் அதை மெச்சு கிறேன். அதை எவ்வளவு நேரம் கேட்டாலும் நாம் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். ஆம், ஐயா! அதைக் கேட்பதற்காகவே நான் சரியான வேளையில் உள்ளே வந்துவிட்டேன். 8. இந்தக் கூட்டங்களிலெல்லாம் நான் நல்ல பாடல்களை கேட்கத் தவறிவிட்டேன். ஏனெனில் நான் எண்ணினேன், ஒருவேளை அந்த... நான் மிகவும் அதிகமான அலுவலில் இருந்து விட்டேன். அது எப்படிப்பட்டதென்று நீங்கள் அறிவீர்கள். மக்கள் விமானத்திலும், இரயில் வண்டியிலும் வந்து கொண்டேயிருக்கிறார்கள். தொலைபேசியில் கூப்பிடுகிறார்கள். அவர்களையெல்லாம் போய் சந்தித்து, அவர்களுக்காக போய் ஜெபிக்க வேண்டியுள்ளது. இந்தக் காரியம் தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறது. அதுவுமல் லாமல், படிக்கவும் வேண்டியது உள்ளது. அது சரியான பிரச்சினையைத் தோற்றுவிக்கிறது. ஆனால் நாங்கள் எப்பொழுதும், மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஜனங்களுக்குரிய பொது வேலைக்காரனாக இந்நாளில் நாங்கள் இருப்பதால், மக்களுக்கு நம்மால் செய்ய முடிந்ததைச் செய்ய ஆர்வமாயிருக்கிறோம். இப்பொழுது நாங்கள் செய்வதை விட இன்னும் கூடுதலாகவே செய்ய விரும்புகிறோம், ஆனால் இயலவில்லை. 9. இன்று காலையில் ஒரு அருமையான ஊழியக்காரர் அதிக உழைப்பினால் தளர்ச்சியடைந்து, நிலைகுலைந்து போன நிலையில், மயக்க நிலையில் என்னிடம் கொண்டு வரப்பட்டார். அவர் எழும்பியபொழுது, அவரது சிறிய மகள் அறையில் நின்று கொண்டிருந்திருக்கிறாள். அவரது பார்வையில் அவரது மகள் அப்படியே சுழலுவது போல் தெரிந்திருக்கிறது. அவள் சிவப்பு நிற பைஜாமா அணிந்திருந்தாளாம். அவர் மூர்ச்சையடையும் முன்னர், கடைசியாக அவர் பார்வைக்கு ஒரு சிவப்பு நிற புள்ளி மட்டுமே சுழன்று சுழன்று கொண்டிருந்ததாக அவர் கூறினார். அப்படியே அவர் மூர்ச்சையடைந்த நிலையில் ஆகிவிட்டார். உடனே அவர்கள் அவரை விரைவாகக் கொண்டு வந்து விட்டார்கள். அதிகமான உழைப்பு, பாருங்கள். நீங்கள் இன்னும் சரீரத்தில்தான் இருக்கிறீர்கள் என்பதையும், முழு பாரமும் நம்மேல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். தேவன் தம்முடைய ஊழியக்காரரை எங்கும் வைத்திருக்கிறார். முடிந்த அளவுக்கு சிறப்பானதை நாம் செய்கிறோம். ஆனால் அந்த தயவுள்ள ஊழியக்காரர் இக்கடைசிக் காலத்தில் தன்னுடைய கர்த்தருக்காக தன்னால் முடிந்ததையெல் லாம் செய்ய முயற்சிக்கிறார். நானும் நிச்சயமாக... கர்த்தர் அவரை விடுவித்து, அவரை திரும்ப அவரது சகஜ நிலைக்குள் கொண்டு வந்து சரிப்படுத்தினார். அவர் களிகூர்ந்தவராய் தன் வழியே போனார். 10. ஓ, இன்று ஒரு மகத்தான காரியம் சம்பவித்தது. அந்த விஷயங்களைப் பற்றி பேசத் துவங்க நான் விரும்பவில்லை. ஆனால்... நான் என் மனைவியிடம் கூறினேன்: "ஒரு மனிதன் வருவார், அவர் குட்டையாகவும் கனத்த சரீரமுள்ளவராகவும், கருமையான முடியும், கண்களும் உடையவராயிருப்பார். அவர் வந்து அந்த எழுதப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையை வாசித்து விட்டு புறப்படுவார். அப்பொழுது அவரை நீ கூப்பிடு, ஏனெனில் கர்த்தர் அவருக்குக் கொடுக்கத்தக்க ஒரு செய்தியை வைத்திருக்கிறார்'' என்றேன். நான் எழுந்து, வேதத்தை திறந்து வைத்து, “ நான் இந்தக் காரியங்களை இங்கே வைக்கப் போகிறேன், அது தான் அம்மனிதன் செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிற காரியங்களாகும்'' என்றேன். 11. எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக போலந்தில் பிறந்து வளர்ந்த ஒரு போலந்து தேசத்தவர், என்னுடைய ஒரு கூட்டத்திற்கு மேடைக்கு வந்தார். அவர்கள் கூறினார்கள்... பரிசுத்த ஆவி யானவர் அவரைப் பார்த்து, “ நீ குழப்பமடைந்திருக்கிறாய்'' என்று கூறினார். நான் அதைக் கூறினேன் என்று அந்த மனிதர் நினைத்தார். ஆனால் பரிசுத்த ஆவியானவர்தான் அதைக் கூறினார். உரைக்கப்பட்ட அந்த வார்த்தை எவ்வளவு காலம் அவருக்குள் இருந்து கொண்டேயிருந்தது. கடைசியில் கடந்த இரவில் பரிசுத்த ஆவியானவர் அவரை கான்சாஸ் நகரத்திலிருந்து இந்த கட்டிடத்திற்கு இழுத்துக் கொண்டு வந்தார். அதன்பிறகு, அவர் தண்ணீர் ஞானஸ்நானத்தைப் பற்றி கேட்டபோது, உண்மையாகவே அவர் குழப்ப மடைந்துவிட்டார். அவர் தனது ஹோட்டல் அறைக்குத் திரும்பிச் சென்றபோது, பரிசுத்த ஆவியானவர் அவரிடம், "இப்பொழுது எழுந்திருந்து அங்கே செல்' என்று கூறியிருக்கிறார். யாரோ ஒருவர் அவரோடு கூட வர விரும்பியிருக்கிறார். ஆனால் அவரோ, அவரை கூட்டிக்கொண்டு வரவிரும்பவில்லை. ஏனெனில் அந்த போலந்துக்காரர் வரப்போகிறதாக எனக்குக் காண்பிக்கப்பட்ட தரிசனத்தில், அவர் ஒருவர் மாத்திரமே வரப்போகிறதாகக் காண்பிக்கப் பட்டது. அவ்விதமாகவே அவர் வந்துவிட்டார். பாருங்கள்? அவர் கனவானைப் போலக் காணப்பட்டார். அவ்வாசகத்தை வாசித்துவிட்டு, அவர் திரும்பிப் போக முற்பட்டார். அப்பொழுது என் மனைவி என்னை அழைத்தாள். நான் வாசலண்டை சென்று, "அவர் தான் அந்த மனிதர், அவர் இங்கே வரட்டும்'' என்றேன். 12. "நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார். அவர் அதைக் கண்டு கொண்டபோது, “ இப்பொழுது நான் அதைக் காண்கிறேன்'' என்றார். 13. நான் அவரிடம், “ நீர் இதை அறிந்து கொள்ளத்தக்கதாக, இதை நான் விவரித்துக் காண்பிக்க விரும்புகிறேன். நீர் வரப் போவதாக கர்த்தர் முன்கூட்டியே என்னிடம் அறிவித்து விட்டார்'' என்று கூறினேன். நான் மேலும், “ இதோ இந்த வேத வாக்கியம் உள்ளது. போகும் முன் இதை இங்கேயே படித்துவிடும்'' என்று கூறினேன். 14. இப்பொழுது அவர் இங்கே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறும்படி ஆயத்தமாக இருக்கிறார். எனக்குத் தெரிந்தவரை அவர் இங்கே இப்பொழுது அமர்ந்திருக்கக் கூடும் என்று கருதுகிறேன். சகோதரனே, நீர் இங்கேதான் இருக்கிறீரா? போலந்து தேசத்து சகோதரர் அவர். ஆம் பின்னால் அந்த மூலையில் அவர் அமர்ந்திருக்கிறார். உங்களை யாவரும் பார்க்கும்படி தயவு செய்து உங்கள் கரத்தை உயர்த்திக் காண்பியுங்கள். நல்லது. பரிசுத்த ஆவியின் கிரியையைப் பாருங்கள். அது எல்லா நேரங்களிலுமே சம்பவிக்கிறது. தரிசனங்கள் மேடையில் தான் வரும் என்று எண்ணுகிறார்கள். ஓ, அங்கே மட்டும் அது ஏற்படுகிறதில்லை. சகோதரன் லியோ அவர்களே, அதைப் பற்றி என்ன? அது எங்கும் ஏற்படுகிறது என்பதைப் பாருங்கள். நடந்தவற்றில் இது ஒரு சிறு பாகம்தான். ஒரு சிறிதளவு தான் இங்கே நடை பெற்றது. அங்கே அது இரவும் பகலும் நடைபெறுவதுண்டு. என் மனைவியையும், எனது அண்டை வீட்டுக்காரராகிய சகோதரன்வுட் அவர்களையும் கேட்டுப் பாருங்கள். மற்றும் சுற்றியுள்ளவர்களைக் கேட்டுப் பாருங்கள். ஓ, என்னே! இங்கே சிறுசிறு காரியங்கள் தான் நடைபெற்றுள்ளன. ஆனால் அங்கோ பெரிய பெரிய காரியங்கள் நடைபெற்றுள்ளன, அவற்றில் பாதி கூட வெளியில் கூறப்பட வேயில்லை. ஓ! நமது கர்த்தர் சீக்கிரமாக வரப்போகிறார். அப்பொழுது நாம் அவரோடு என்றென்றும் இருப்போம் என்பதை நான் அறிந்து கொண்டதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன். சதாகாலமும் அல்ல, நித்தியமாக இருப்போம். நித்தியமாக இருப்போம். 15. கர்த்தருக்குச் சித்தமானால்; அது ஞாயிற்றுக்கிழமை 18ந் தேதி என்று எண்ணுகிறேன். எனக்கு கடுமையான போராட்டம் உண்டாயிருந்தது. சாத்தான் இந்தப் பகுதியில் எங்கும் காணப்படுகிற ஃப்ளு ஜுரத்தை எனக்குக் கொடுக்க முயற்சித்துக் கொண்டே யிருந்தான். நானோ அதை அவனிடமே திருப்பிக் கொடுத்துக் கொண்டேயிருந்தேன். அவன் மீண்டும் என்னிடமே கொடுக்கப் பார்த்தபோது, நான் அவனிடமே அதை திருப்பிவிட்டேன். எனவே சரியானதொரு போராட்டம் உண்டாயிருந்தது. எனவே நாம் அடுத்த வாரம் போராடி விடுவோம். வரும் ஞாயிற்றுக்கிழமை போக அதற்கடுத்த ஞாயிற்றுக்கிழமையாகிய 18ம் தேதி நமக்கு பிணியாளிகளுக்காக ஜெபிக்கிற கூட்டம் உண்டாயிருக்கும். அப்பொழுது வியாதியஸ்தருக்காக ஜெபிப்போம். உண்மையான, மிகவும் அவசரமான பிணியாளிகளுக்கு மட்டும் நம்மால் முடிந்த வரையிலும் விரைவாக ஜெபித்துவிட முயற் சிப்போம். எந்த இராத்திரியில் வந்து போனாலும் நாம் அவர்களுக்காக அதைச் செய்கிறோம். எனவே 18ம் தேதி நமக்கு வழக்கமான தெய்வீக சுகமளிக்கும் கூட்டம் உண்டாயிருக்கும். உங்களுக்குப் பிரியமானவர்கள் யாருக்காவது ஜெபிக்க வேண்டுமென்றால், அவ்வேளையில் நீங்கள் அழைத்து வரலாம். 16. இந்த ஜெஃபர்சன்வில் நகரத்தைச் சேர்ந்த அநேகம் மக்கள் என்னிடம், தாங்கள் காலை 5 மணிக்கே இங்கே வந்து விடுவதாகவும், ஆனாலும் தங்கள் மோட்டார் வாகனங்களை கொண்டு வந்து நிறுத்துவதற்குக்கூட இடமில்லை என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் “ இவர்கள் வெளியூர்களில் இருந்து விஜயம் செய்துள்ள அநேக சகோதரர்களும், ஊழியக்காரர்களுமாவர். இந்த மகத்தான செய்தியின் உபதேசத்தைத் தீவிரமாகக் கேட்டறிந்து கொள்வதில் இவர்கள் கவனமாக இருக்கிறார்கள்'' என்றேன். 17. நாம் இவற்றின் சாரமான முக்கியப் பகுதிகளை ஆராய முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அதற்குப் பிறகு, சிறிது காலத்தில், இவற்றை புத்தக வடிவில், நீங்கள் படித்துப் பார்க்கத்தக்கதாக, புத்தகமாக வெளியிடுவோம். (கடந்த இரு இரவு நேரங்களில், இங்கே சப்தத்தை மிச்சப்படுத்தும் வகையில் நான் குறைத்துக் கொண்டதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்) புத்தகத்தில் இன்னும் கூடுதலாக சேர்த்து வெளியிடுவோம். ஏனெனில் பெரிய உச்சகட்டமான விஷயம் வரும்போது அதையே நான் முக்கியமாக கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அங்கே தான் கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல் இக்காலத்தில் உண்டாகிறது. அது என்னவென்பதை பாருங்கள். 18. இப்பொழுது வேதவாக்கியங்களை நாம் வாசிப்பதற்கு முன்னர்... நாளையதினம் நாம், நமது சனிக்கிழமை இரவு மளிகைச் சாமான்களை வாங்கும் பெரிய வாணிப நாளாக இருக்கிறது என்பதை அறிவேன். அவைகளை நாம் சனிக்கிழமை காலையிலோ அல்லது மதியத்திலோ வாங்கியாக வேண்டும். அதினால் சனிக்கிழமை இரவுக் கூட்டத்திற்கு நாம் வருவதற்கு வசதியாக இருக்கும். எனவே நாம் இன்றிரவில் சீக்கிரமாக முடித்து அனுப்பி விட முயற்சி செய்வோம். அதினால் நாளை மதியம் ஒலிநாடாவி லிருந்து செய்தி கேட்கும் ஆராதனையில் கலந்து கொள்ளவும், இரவு ஆராதனையில் கலந்து கொள்ளவும் உங்களுக்கு வசதியாயிருக்கும். 19. நீங்கள் விரும்பினால், நாம் இப்பொழுது சற்று ஜெபத்திற்காக எழுந்து நிற்போமாக. நாம் ஜெபிப்பதற்கு முன்பாக, இங்கு யாருக்காவது விசேஷித்த ஜெப வேண்டுகோள் இருப்பின், அதை கைகளை உயர்த்திக் காண்பிப்பதின் மூலம் தெரியப்படுத்தலாம். தேவன் காண்கிறார், சகோதரரே. இங்கு குழுமியுள்ளவர்களில் 95 அல்லது 98 சதவிகித மக்கள் விசேஷித்த ஜெப வேண்டுகோளை தெரியப்படுத்தும் முகமாக, தங்கள் கைகளை உயர்த்திக் காட்டியுள்ளனர். இதன் மூலம் நாம் தேவைகள் உள்ள உலகில் வாழ் கிறோமா இல்லையா என்பதை காண முடிகிறது. தேவன் அறியாமல் உங்களால் அசையவும் கூட முடியாது என்பதை நினைவில் வையுங்கள். அவர் உங்களுடைய விருப்பங்களை அறிவார். நீங்கள் எதற்காக வேண்டிக் கொள்கிறீர்கள் என்பதையும் அவர் அறிவார். நாம் தலைகளை வணங்குவோம். 20. கிருபையுள்ள பரமபிதாவே, நாங்கள் உமது பரிசுத்தத்தை இன்றிரவில் அணுகுகிறோம். எங்கள் ஜெபத்திற்கு செவி கொடுப்பீர் என்று நீர் கூறின உமது வாக்குத்தத்தத்தின் மூலமாக உமது சிங்காசனத்தை நாங்கள் அணுகுகிறோம். நாங்கள் விசுவாசித்தால், நாங்கள் கேட்பவைகளை நீர் தருவீர். எங்களுடைய பிழை யாவையும் உம்மிடம் அறிக்கை செய்கிறோம். உம்முடைய எந்தவொரு ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ள நாங்கள் தகுதியுள்ளவர்கள் அல்ல என்பதை உணர்ந்தேயிருக்கிறோம். நாங்கள் பாத்திரமானவர்கள் அல்ல - நாங்கள் முழுவதும் தகுதியற்றவர்கள். நாங்கள் ஏதோ தகுதியுள்ளவர்கள் என்றும், ஏதோ மகத்தான காரியத்தை செய்துவிட்டோம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு உம்முடைய சமூகத்தில் வரவில்லை. ஓ, பிதாவே, நாங்கள் கல்வாரி சிலுவையை நோக்கிப் பார்க்கையில், அது அனைத்து மேன்மையான சிந்தைகளையும் எங்களை விட்டு அகற்றிப் போட்டு விடுகிறது. அப்பொழுது, நாங்கள் கிறிஸ்துவையும், சிலுவையில் அறையப்பட்ட அவரையும் தவிர வேறு எதையும் அறியமாட்டோம். பின்பு, மூன்றாம் நாளில் வேதவாக்கியத்தின்படி, அவர் மரித்தோரிலிருந்து எங்களை நீதிமான்களாக்க எழும்பி, நாற்பது நாட்கள் கழித்து எங்கள் மத்தியில் வாசம் பண்ணும்படி, அவர் திரும்பி பரிசுத்த ஆவியின் ரூபத்தில் வந்திருக்கிறார் என்றும், அவர் மீண்டும் கடைசி காலத்தில் காணும்படியாக ஆகாயத்தில் தோன்றுவார் என்றும் நாங்கள் காண்கிறோம். இப்பொழுது கடைசி காலமானது மிகவும் தீவிரமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. கர்த்தாவே, நாங்கள் மிகவும் சந்தோஷமான மக்களாக இருக்கிறோம். ஏனெனில் நீர் எங்களுக்கு இந்த மகத்தான சிலாக்கியத்தை தந்திருக்கிறீர். 21. பிதாவே, இருதயங்களை தாழ்த்தினவர்களாக, அமைதியாக செவி கொடுக்கிறவர்களாக உள்ள இந்த செவிகொடுக்கிற சபையாருக்காக உமக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேலும் கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு பிரசங்கிக்க உம்முடைய பிரசங்க பீடத்தண்டை நான் இன்றிரவிலும், ஒவ்வொரு இரவிலும், ஒவ்வொரு நேரத்திலும் வருகையில், என்னுடைய உதடுகளை பரிசுத்தமாக்கும். கர்த்தாவே, நான் ஒரு போதும் பிழையானவைகளை பேச விட்டுவிடாதேயும். சிங்கங்களோடு தானியேல் இருக்கையில் அவைகளின் வாயை அடைத்த நீர், இன்றைக்கும் வாய்களை அடைக்க வல்லவராயிருக்கிறீர். உம்முடைய சித்தத்திற்கு இசைவானதாக இல்லாத எதையாவது நான் எப்பொழுதாவது சொல்லப் போவதாக இருக்குமானால், நான் அதைப் பேசாதபடி, முன்கூட்டியே என் வாயை அடைத்தருளும் கர்த்தாவே. எனது சிந்தைகள் தவிர்க்கப்படட்டும். என்னை சரியான பாதையில் நிலை நிறுத்தியருளும், கர்த்தாவே. அப்பொழுது நான் உமது சத்தியத்தைத் தவிர வேறெதையும் பேசாதிருப்பேன். அந்த மகத்தான நாளிலே இந்த மக்கள் பரம தேசத்தில் காத்திருப்பார்கள்... எனக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத் தின்படி, நான் அவர்களுக்கு பிரசங்கித்ததைப் பற்றிக் கொண்ட தினால் அங்கே காத்திருப்பார்கள் என்பதை நான் அறிவேன். நீர் உம்முடைய நட்சத்திரங்களில் யாரையாவது, அல்லது உமது தூதர்களில் எவரையாவது, அல்லது உம்முடைய ஊழியக்காரர்கள் யாரையாவது அல்லது உமது பணி செய்கிறவர்கள் யாரையாவது எடுக்க வருகிறீரென்றால், முதலாவதாக, இங்கு பிரசங்கிக்கப்பட்டு வரும் இந்த செய்திகளினால் அவர்கள் செய்தியாகிய தூற்றுக் கூடையினால் நன்கு விளக்கப்பட வேண்டும். நீர் உம்முடைய ஊழியக்காரர்களை அதற்காக பொறுப்பாளிகள் ஆக்குவீர். 22. இப்பொழுதும் பிதாவே, மனிதனல்ல, பரிசுத்த ஆவியானவரே பேசிடச் செய்தருளும் என்று நான் வேண்டுகிறேன். அவருக்கு செவி கொடுக்கத்தக்கதாக, எங்கள் இருதயங்களை விருத்தசேதனம் செய்தருளும். நானும் செவி கொடுத்துக் கொண்டிருப்பேன். பிதாவே வியாதிப்பட்டவர்களையும், துன்பப்படுபவர்களையும் குணமாக்க வேண்டுமென ஜெபிக்கிறேன். எங்கணும் தேவையுள்ளவர்களாக இருக்கும் அனைத்து மக்களோடும், உமது கிருபையும் இரக்கமும் இருப்பதாக. கைகளை உயர்த்திக் காண் பித்ததன் மூலம் தங்களது ஜெப வேண்டுகோள்களைத் தெரியப் படுத்திய ஒவ்வொருவரது வேண்டுகோள்களுக்கும் ஏற்றவாறு அருளிச் செய்யும். தேசத்தின் தொலைதூரங்களில் இருக்கிற ஏனைய அநேக துன்புறும் மக்களின் ஜெப வேண்டுதல்களுக்காகவும் நான் ஜெபிக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் அவர்கள் ஜெபத்திற்கு பதிலளித்து, பிதாவே அவர்களைக் குணமாக்கும். எழுதப்பட்ட உம்முடைய வார்த்தையிலிருந்து, உம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக இப்பொழுது எங்களோடு பேசியருளும். இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம். ஆமென். (நீங்கள் அமரலாம்). 23. இன்றிரவில், இப்பொழுது, சபைக் கட்டிடத்தில் சற்று வெப்பமாக இருக்கிறது. லவோதிக்கேயா சபைக்கால செய்தி வந்து கொண்டிருக்கிறது. இன்றிரவில் ஐந்தாம் சபைக் காலமாகிய அந்த மகத்தான சபைக்காலத்தை நாம் அணுகிக் கொண்டிருக்கிறோம். முதலாம் சபைக்காலமாகிய எபேசு சபைக் காலத்தைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இங்கு எழுதி வைத்துள்ள குறிப்புக் களிலிருந்து, ஆரம்பத்தில் சொல்லப்பட்டவைகளை நான் மீண்டும் உங்களுக்கு வாசிக்கப் போகிறேன், அதினால் நீங்கள் உங்கள் தாள்களில் குறித்து வைத்துள்ளவைகளோடு சரிபார்த்துக் கொள்ள வசதியாக இருக்கும். 24. முதலாம் சபைக்காலம் எபேசு சபைக்காலமாகும். அது கி.பி.55 முதல் 170 முடிய நீடித்தது. பவுல் தான் அச்சபைக் காலத்திற்குரிய நட்சத்திரமாக விளங்கினான். அது முதலாம் சபைக் காலமாகும். அவர்களைப் பற்றிய தேவனுடைய குறை என்னவெனில், 'அன்பற்ற கிரியைகள்''. அவர்களுக்குக் கொடுக்கப்படும் பலனானது, ''ஜீவ விருட்சம்'' ஆகும். 25. இரண்டாவது சபைக்காலம் கி.பி.170 முதல் 312 முடிய நீடித்தது. ஐரேனியஸ் தான் அச்சபைக் காலத்தின் தூதனாவார். அச்சபை உபத்திரவங்களின் வழியாக கடந்து சென்றது. அது உபத்திரவப்படுத்தப்பட்ட சபையாக இருந்தது. அதற்கு அளிக்கப்படும் பலன், “ ஜீவ கிரீடம்'' ஆகும். 26. மூன்றாம் சபைக்காலமானது பெர்கமு ஆகும். பரிசுத்த மார்ட்டின் அச்சபைக் காலத்திற்குரிய தூதனாவார். அந்த சபைக் காலம் கி.பி.312 முதல் கி.பி.606 முடிய நீடித்தது. அச்சபைக் காலத்தைப் பற்றி தேவன் காணும் குறை என்னவெனில், “ கள்ள உபதேசம், சாத்தானின் பொய், போப்பு மார்க்க ஆளுகைக்கு அஸ்திவாரமிடுதல், அரசும் சபையும் ஒன்றாக இணைதல்''. ஜெயங் கொள்ளுகிறவனுக்கு அளிக்கப்படும் பலனானது, “ மறைவான மன்னாவும், வெண்குறிக்கல்லும்'' ஆகும். 27. நான்காவது சபைக்காலமானது தியத்தீராவாகும். கொலம்பா தான் அச்சபைக் காலத்திற்குரிய தூதனாவார். இச்சபைக் காலம் கி.பி.606 முதல் 1520 முடிய நீடித்தது. இந்த சபைக்காலத்தில்தான் போப்பு மார்க்க வஞ்சனை ஏற்பட்டது. இருண்ட காலங்கள் என்று அது அழைக்கப்படுகிறது. (கடந்த இரவில் இருண்ட காலங் களைப் பற்றிப் படித்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்). அக்காலத்தில் அளிக்கப்படும் பலனானது, ''ஜாதிகளை ஆளுகை செய்வது, விடிவெள்ளி நட்சத்திரம்,'' தூதனுக்கு கொடுக்கப்படுகிறது. 28. இன்றிரவில் நாம் ஐந்தாம் சபைக்காலத்தைப் பற்றி படிக்கப் போகிறோம். இச்சபைக்காலம், சர்தை சபைக்காலம் என அழைக்கப்படுகிறது. இந்த சபைக்காலத்திற்குரிய தூதன் மார்ட்டின் லூத்தர் ஆவார். இவர் இன்றைக்கு வேத பண்டிதர்களுக்கும், வேத போதகர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் கூட நன்கு அறிமுகமானவர் ஆவார். இந்த சபைக்காலமானது கி.பி. 1520ம் ஆண்டு தொடங்கி கி.பி.1750-ல் முடிவுற்றது. இந்த காலத்தை நாம் “ சீர்திருத்தக்காலம்' என அழைக்கிறோம். இச்சபைக் காலத்தைப் பற்றி தேவனுடைய குறை என்னவெனில், “ தங்களுடைய சொந்த நாமத்தைக் கொண்டிருத்தல்'', இச்சபைக் காலத்தில் சிறுபான்மையினரான அந்த மீதியானவர்களுக்கு அளிக்கப்படும் பலன் என்னவெனில், “ வெண் வஸ்திரம் தரித்து அவருக்கு முன்பாக நடத்தலும், ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் பெயர் காணப்படுதலுமேயாகும்''. நாம் இதை படிக்க எடுத்துக் கொள்கையில் கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. 29. இந்த சபைக்காலத்திற்கு, வெளிப்படுத்தின விசேஷம் 3ம் அதிகாரத்தின் முதலாம் வசனத்திலிருந்து துவங்குவோம். சர்தை சபைக்குரிய செய்தி, சீர்திருத்தத்தின் காலம், விசுவாசிக்கிற ஒரு சிறு மீதியான கூட்டம், ஏறக்குறைய அற்றுப் போகும் நிலை. 30. இதைப்பற்றி நான் மீண்டும் சொல்வதற்குக் காரணம், புதிதாக வந்திருப்பவர்கள் இவ்விஷயங்களில் பின்தங்கியிருக்காமல் இருப்பதற்காகத்தான். இது சற்று மெருகில்லாததாகக் காணப்படுகிறது. சிலவேளையில் நாம் நம்முடைய செய்திகளை மதிய வேளையில் வந்து, அவற்றை வரைந்து வைத்து விடுவோம். ஒரு வேளை ஞாயிற்றுக்கிழமையில் அதைச் செய்வோம். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழு ஆகிய சபைகளைக் குறிப்பாகக் காட்டும்படியான படத்தை வரைவோம். எபேசு சபையில் ஆரம்பிப்பதாக அது இருக்கும். 31. முதலாவதாக உள்ள இந்த சபை, பெந்தெகொஸ்தேயின் வல்லமைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்கிறது. அதாவது, பெந்தெகொஸ்தே நாளில் ஏற்பட்ட ஒரு சபையாகும் அது. ஆனால் அவர்கள் பின் காலத்தில், “ நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள்'' என்று அழைக்கப்படும் ஸ்தாபன ஆவியை உள்ளே அனுமதித்து, சபையை ஸ்தாபனமாக ஆக்கிட முயற்சித்தனர். பின்னால் இருப்பவர்களுக்கு நான் பேசுவது கேட்கிறதா? நல்லது. அது முதலில் “ நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள்'' என்பதாக இருந்தது. அது இன்னமும் அப்பொழுது போதகமாக மாறவில்லை. ''கிரியைகள்'', “ நிக்கொலாய்'' என்ற வார்த்தையை நாம் பிளந்து அது எத்தகையது என்பதைப்பற்றி பார்த்தோம். அது நமக்கு ஒரு அன்னிய பெயரானபடியினால், நான் கிரேக்க மொழி அகராதியை எடுத்துப் பார்த்து அதன் அர்த்தம் என்னவென்பதை உடைத்துப் பார்த்தேன். ''நிகோ'' என்றால், “ ஜெயிப்பது'' அல்லது “ மேற் கொள்ளுவது'' என்று அர்த்தம். அல்லது ஒன்றை "கீழே வீழ்த்துதல்'' என்று பொருள். “ நிக்கொலாய்டேன்'' (இவ்வாறு தான் ஆங்கில வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் வேதத்தில் “ நிக்கொலாய் மதஸ்தினர்'' என்று போடப்பட்டுள்ளது - மொழி பெயர்ப்பாளர்). 'லெய்டேன்'' என்றால் சபையைக் குறிக்கும். “ லெய்டி'' சபையைக் குறிக்கும். “ நிக்கொலாய்டேன்'' அது சபையை அதற்குரிய ஸ்தானத்திலிருந்து கீழே விழத் தள்ளும் ஒரு கிரியையாகும். சபையின் மேல் ஒரு தலைமையான நபரை ஏற்படுத்தி, அல்லது பிஷப் போன்றவரை ஏற்படுத்தி அவர் மேல் அனைத்து ஆசீர்வாதங்களையும் சாற்றி, வேதத்தை அவர் ஒருவர் மாத்திரமே படிக்கலாம், அவர் ஒருவர் மாத்திரமே வேத வாக் கியத்திற்கு வியாக்கியானம் கொடுக்க பாத்திரர் என்று ஏற்படுத்தியது இக்கிரியை. 32. இரண்டாவது சபைக்காலத்தில் சபையானது இன்னமும் ஒடுக்கப்பட்டது என்று பார்த்தோம். முதலாமவது இன்னமும் பெந்தெகொஸ்தேயாகத்தான் இருந்து வந்துள்ளது. ஆனால் இரண்டாவதோ ஸ்தாபனமாக ஆகியது. 33. மூன்றாவது சபைக்காலமாகிய பெர்கமுவில், பெந்தெ கொஸ்தே அனுபவமானது ஏறத்தாழ அற்றுப் போகத்தக்க நிலைக்கு வந்துவிட்டது. ஆனால் ஸ்தாபனத்தைப் பற்றிய போதகமானது, முதல் சபைக்காலத்தில் “ கிரியைகள்'' என்ற கட்டத்திலிருந்து அது நெடுக வளர்ந்துகொண்டு போய், முடிவாக அது மூன்றாம் சபைக் காலத்தில் “ போதகமாக'' ஆகியது. அவர்கள் அங்கே விவாகம் செய்து கொள்ளுகிற கட்டத்துக்கு வந்துவிட்டார்கள். இந்த குழுவானது பெந்தெகொஸ்தே அனுபவத்தைப் பெற்ற குழுவை மேற்கொண்டது. 34. அதைப் பற்றி நான் கூறுகிறதானது முற்றிலும் உண்மை சகோதரரே. பிழையற்ற பரிசுத்தமான வரலாற்று நூல்களை அடிப்படையாகக் கொண்டது எனது கூற்று. “ நிசாயா ஆலோசனை சங்கம்', ஃபாக்ஸ் என்பவர் எழுதிய “ இரத்த சாட்சிகளின் புத்தகம்'' ஆகிய பண்டைக்காலத்து வரலாற்று நூல்களை அடிப்படையாகக் கொண்டவை நான் ஆதாரமாக எடுத்துக் கொண்டவைகளாகும். மிகவும் பழமை வாய்ந்த சில பிரதிகளும் என்னிடம் உள்ளன. அவர்கள் ஒவ்வொருவரும்... இதை, நான், ஒரு பெந்தெ கொஸ்தேகாரன் என்ற ரீதியில் கூறவில்லை. நான் “ பெந்தெ கொஸ்தே'' என்று கூறுகையில், நாம் வாழ்கிற இக்காலத்தில் உள்ள பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தைப் பற்றி கூறவில்லை. (மற்ற சபைகளைப்போலவே பெந்தெகொஸ்தேயும் குற்றமுள்ள தாக இருக்கிறதே). நான் உண்மையான பெந்தெகொஸ்தேயை, உண்மையான தேவ ஆவியைப் பெற்றிருக்கிற, மூல உபதேசத்தையுடைய, மூல ஆசிர்வாதங்களை பெற்றிருக்கிற மூல நாமங்களையுடைய, ஆதியில் ஆரம்பித்தபோது எவ்விதமாக இருந்ததோ அதேபோல் இப்பொழுதும் இருக்கிற ஒன்றைப்பற்றித்தான் குறிப்பிடுகிறேன். அதைப்பற்றி வேதத்தில் கூறப்பட்டுள்ளது. 35. நாம் இப்பொழுது இந்த சபைக்காலத்திற்கு வரும் போது, பெந்தெகொஸ்தே எதுவரைக்கிலும் வந்துள்ளது என்று காண்கி றோம். பின்னால் உள்ளவர்களால் சரியாக இந்த வரையப்பட்டதை காணமுடிகிறதா? நல்லது. நேற்றிரவில் நாம் இந்த பெரிய சபைக் காலத்தை பார்த்தோம். கான்ஸ்டன்டைன் - இவன் பெயரை இங்குள்ள இந்த வரைபடத்தில் நான் சுருக்கமாக 'கான்ஸ்' என்று குறிக்கிறேன். அவன் ஒரு அஞ்ஞான விக்கிரகாராதனைக்காரனாக இருந்தான். அவன் இந்த சபைக்காலத்தில் இருந்த கிறிஸ்தவர்களை (அதாவது நிக்கொலாய் மதஸ்தினரின் போதகத்தைக் கைக் கொண்டிருந்தவர்களை) தான் யுத்தத்தில் ஜெயிக்குமாறு வேண்டிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான். அப்படி இவர்கள் ஜெபித்தால், அதில் தான் வென்றால், தான் ஒரு கிறிஸ்தவனாக மாறி விடுவதாகவும் கூறினான். அவன் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கையில், ஒரு சொப்பனம் கண்டான். அதில் அவனுக்கு முன்பாக வெள்ளை சிலுவை ஒன்று நிறுத்தப்பட்டதாகவும், “ இதைக் கொண்டு நீ ஜெயிப்பாய்'' என்று அதில் கூறப்பட்டதாகவும் அவன் கண்டானாம். அவன் உறக்கத்திலிருந்து விழித்தெழும்பி, தன் இராணுவத்தினரையும் எழுப்பி, அவர்களுடைய கேடயங்களில் வெண்மை நிற சிலுவையை வரைந்திட்டான். கத்தோலிக்க சமயம் தோன்றுவதற்குக் காரணமாக இது தான் அமைந்தது. அது நைட்ஸ் ஆஃப் கொலம்பஸ் (Knights of Columbus) என்று அழைக்கப் பட்டது. 36.வரலாற்றில் எந்த இடத்திலும், கான்ஸ்ட ன்டைன் மனந் திரும்பி இரட்சிக்கப்பட்டான் என்பதற்கான சான்று எதையும் நீங்கள் கண்டெடுக்க முடியாது. அவன் நேர்மையற்ற ஒரு அரசியல்வாதி என்பதைத் தவிர வேறு எவ்விதத்திலும் அழைக்கப்படத் தக்கவனல்ல. அவனுடைய மனதில், தன்னுடைய இராஜ்யத்தை ஒருமைப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதை பலப்படுத்த வேண்டுமென்று எண்ணத்தையுடையவனாக இருந்தான். எனவே, அஞ்ஞானியான அவன் விக்கிரகங்களை தொழுது கொண்டு வந்தவனாக இருந்தபடியால், அப்பொழுது அவன் அக்காலத்தில் இருந்து வந்த சடங்காச்சார கிறிஸ்தவர்களாகிய நிக்கொலாய் மதத்தினரின் போதகத்தைப் பார்த்தான். அது ஏறத்தாழ ஜீவனற்ற நிலைக்கு அப்போது வந்திருந்தது. எனவே அவனும், நாம் நேற்றிரவில் பார்த்த அதே உத்தியைக் கையாண்டான். 37. பிலேயாமின் போதகமானது போதிக்கப்படும் என்பதை இயேசுவானவர், அது நடப்பதற்கு 304 ஆண்டுகளுக்கு முன் பாகவே முன்னுரைத்தார். பிலேயாம் இஸ்ரவேல் புத்திரரை எவ்வாறு வஞ்சித்து, அவர்கள் வேசித்தனம் பண்ணவும், விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டவைகளை புசிக்கும்படியும் செய்தானோ, அதைப் போலவே இங்கும் நடந்தது. “ விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டவைகளைப் புசித்தல்' என்பது உண்மையாகவே அவைகளைத் தொழுது கொள்ளுவதாகும் என்பதை நாமறிவோம். அவர்கள் அதற்குள் போய், விக்கிரகங்களுக்கு முன்பாக பணிந்து கொண்டு, கிறிஸ்தவ சபைக்குள் அவ்விக்கிரகங்களைக் கொண்டு வந்து, அங்கே பிலேயாம் இஸ்ரவேலரை வேசித்தனம் பண்ணவும், விக்கிரகத்திற்கு படைக்கப்பட்ட அந்த பெரிய விருந்துக்கு அவர்கள் போகும்படி செய்தது போலவே, இவர்களும் செய்தார்கள். 38. கான்ஸ்டன்டைன் இதே உத்தியைக் கையாண்டு இதே காரியத்தைச் செய்து, ஒரு சபையை உருவாக்கினான். நிசாயா ஆலோசனை சங்கத்தில், அவன் சபைக்கு ஏராளமானவைகளைக் கொடுத்தான். அவனிடம் இருந்த பெரிய பெரிய கட்டிடங்களை யெல்லாம் அவன் ஆலயங்களாக மாற்றி, சபைக்கு கொடுத்தான். அதன்பிறகு அவன் சலவைக்கற்களால் ஆன ஒரு பெரிய பலி பீடத்தைச் செய்வித்து, அதை பொன்னினாலும், முத்துக்களினாலும் அலங்கரித்தான். அதற்கு மேலே உயரத்தில், அவன் ஒரு சிங்காசனம் போன்றதொன்றை வைத்து, அதின் மேல் உட்கார ஒரு புருஷனை நியமித்து, அவன் தலைமையாக்கி, “ பிஷப்'' என்று அழைத்திட்டான். இந்த சிங்காசனத்தின் மேல் முதல் அத்தியட் சகராக மூன்றாம் போனிஃபேஸ் என்பவனை அரியணையில் ஏற்றினார்கள். அவன் அவ்விதமான ஆடையலங்காரத்துடன் நடந்து திரிந்தான். அவனுக்கு அவர்கள் பெரிய விலையுயர்ந்த அங்கிகளை செய்வித்து, அவனைக் கடவுள் போல் அலங்கரித்து, அவனை அச்சிங்காசனத்தில் அமரப்பண்ணி, அவனை “ வைகார்'' என்றழைத்தனர். அவனை ''வைகாரியஸ் ஃபிலிஐ டிஐ" (Vicarious Filii Dei) என்று அழைத்தார்கள். அதன் அர்த்தம் “ தேவனுடைய குமாரனுக்கு பதிலாள்'' என்பதாம். 39. ஞானமுள்ளவனெவனோ அதை எழுதிக் கணக்குப் பார்க்கக்கடவன்; “ வைகாரியஸ் ஃபிலிஐ டிஐ'' நீங்கள் ஒரு கோட்டை வரைந்து, அதனதற்குரிய எண்களை வரிசையாக எழுதி அதைக் கூட்டிப் பார்த்தால், தேவன் கூறிய மிருகத்தின் இலக்கம் சரியாக வருகிறது. அறுநூற்று அறுபத்தியாறு அதன் இலக்கம். பாருங்கள், வைகாரியஸ் பிலிஐ... நான் ரோமாபுரிக்குச் சென்ற போது வாடிகன் நகரத்திற்கு (Vatican) சென்றிருக்கிறேன். அங்கே போப்பின் தலையில் வைக்கப்படும் முப்பரிமாண கிரீடத்தை நான் பார்த்தேன். அந்த மூன்றும், பரலோகம், நரகம், உத்தரிக்கிற ஸ்தலம் ஆகிய மூன்றின் மேலும் போப்புக்கு ஆளுகை அதிகார வரம்பு உள்ளது என்பதைக் காட்டுகிறதாம். பாருங்கள்? அக்கிரீடத்தையும், போப்பு உடுத்தும் அங்கியையும் அங்கே பார்த்தேன். 40. நான் வாடிகனில் இருந்தபோது, அங்கே ஒரு வியாழக் கிழமையன்று, மதியம் மூன்று மணிக்கு கடைசியாக இருந்த போப்பை நான் சந்திப்பதாக இருந்தது. பேரன் வோன் ப்ளாம் பெர்க் என்பவர் என்னிடம் வந்து, ''சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, நீங்கள் போப்பைச் சந்திக்கச் செல்லும்போது, அவரண்டை வந்ததும் நீங்கள் உங்கள் வலது முழங்காலில் முழங்கால்படியிட்டு, தெண்டனிட்டு, அவரது விரலிலுள்ள மோதிரத்தை முத்தமிட வேண்டும்'' என்று கூறினார். 41. “ அது முடியாத காரியம், அதை மறந்து விடுங்கள்'' என்றேன் நான். ''அந்த மனிதருக்கு எதிராக கருத்து ஒன்றும் எனக்கில்லை. அவர் மிகவும்... ஆனால் ஒரு காரியம், ஒரு மனிதனுக்கு அவனுக் குரிய பட்டத்தைச் சொல்லி நான் அழைப்பேன். அவர் ஒரு “ ரெவரெண்ட்'' என்றிருந்தால் அதைக் குறிப்பிட்டு விடுவேன். அவர் ஒரு பிஷப், அல்லது மூப்பர், டாக்டர் என்றெல்லாம் இருந்தால் அவைகளைக் குறிப்பிட்டு அவர்களை அழைப்பேன். அவ்வாறு அழைத்து அவர்களை நான் வாழ்த்துவேன். ஒரு மனிதனுக்கு தொழுகை செய்ய வேண்டுமா? ஒரேயொரு மனிதனுக்கு மட்டுமே நான் என்னுடைய மரியாதையான பயபக்தியைத் தெரிவிப்பேன். நான் பணிந்து தெண்டனிட்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதனுக்கு மட்டுமே தொழுகை செலுத்துவேன். அவருக்கு முன்பாக மட்டுமே நான் பணிவேன். எனவே போப்பை சந்திப்பதைப் பற்றிய விஷயத்தை மறந்து விடுங்கள். அச்சந்திப்பை இரத்து செய்துவிடுங்கள். நான் அதை ஏற்றுக் கொள்ளமாட்டேன்'' என்று அவரிடம் கூறினேன். 42. நான் தாய்நாடு திரும்பியதும் இன்னொரு மகத்தான அமெரிக்கர் இதே காரியத்தை செய்தார் என்பதை நான் கண்டு கொண்டேன். அவர் தான் டெடி ரூஸ்வெல்ட். அவர் அதைச் செய்ய மறுத்து விட்டார். வரலாற்றில் அதைப்பற்றி கூறப்பட்டுள்ளதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துள்ளீர்களா? போப்புடைய மோதிரத்தை பணிந்து முத்தமிட வேண்டுமென்பதால், போப்பை சந்திக்க அவர் மறுத்துவிட்டார். போப்பின் கால் கட்டை விரலில் கூட ஒரு மோதிரம் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். ஓ, அத்தகையது வேண்டாம். 43. கடந்த இரவில் நாம், பிலேயாம் செய்ததைப்போலவே, அவர்கள் சபையையும், அஞ்ஞானத்தையும் ஒன்று சேர்த்து விவாகம் செய்து, சபைக்குள்ளாக அஞ்ஞான உபதேசங்களையும், அஞ்ஞான விக்கிரகங்களையும் கொண்டு வந்தார்கள் என்று பார்த்தோம். ஜூப்பிட்டர், சூரியன், மார்ஸ், வீனஸ் ஆகிய கடவுள்களையும் அவற்றின் விக்கிரகங்களையும் அஞ்ஞான மார்க்கத்திலிருந்து இரவல் வாங்கி, அவைகளுக்கு, பவுல், பேதுரு, கன்னி மரியாள் என்று பெயர் சூட்டினார்கள். பேதுருவிடம் இயேசு, ''... திறவுகோல்களை நான் உனக்குக் கொடுக்கிறேன்'' என்று கூறியதால், பேதுரு கிறிஸ்துவுக்கு பதிலாள், போப்பு பேதுருவின் வாரிசு என ஆக்கி, அப்போஸ்தலப்பட்டம் வாரிசு பரம்பரையாய் வருகிறது என்று போதித்து, இவ்வாறாக ஒரு மனிதனை, “ இதோ உங்களுடைய கிறிஸ்துவுக்கு பதிலாள்'' என்று அறிமுகப்படுத்தினர். இன்றைய வரைக்கிலும் அது கத்தோலிக்க உபதேசமாக இருக்கிறது. அவர்கள் விக்கிரகங்களை உண்டாக்கிக் கொண்டார்கள். பின்பு அவர்கள் என்ன செய்தார்கள்? கிறிஸ்தவத்திற்குள், போலியான கிறிஸ்தவத்திற்குள் விக்கிரகாராதனையைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் உண்மையான கிறிஸ்தவத்திற்குள் அதைக் கொண்டு வரமுடியவில்லை. ஏனெனில் சிறுபான்மையினராக இருந்தாலும், அவர்கள் பெந்தெகொஸ்தே அனுபவத்தில் நீடித்திருந்தார்கள். 44. நான் இந்த இடத்தில் பாப்டிஸ்டுகள், மெதோடிஸ்டுகள், ப்ரெஸ்பிடேரியன்கள் ஆகியோரைப்பற்றி கூறவில்லை. ஆனால் உண்மையான அசலான தேவனுடைய சபையானது பெந்தெ கொஸ்தேயாக இருக்கிறது. அப்படியே இருந்தது, இருக்கிறது. அப்படியே இனியும் இருக்கும். அங்கே தான் சபையானது ஆரம்பித்தது. முதல் காலத்தில் பெந்தெகொஸ்தேயின் வல்லமை யோடு சபையானது ஆரம்பித்தது. 45. ''அது சரிதானா, சகோதரன் பிரன்ஹாம் அவர்களே'' என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் வரலாறுகளை எடுத்துப் பாருங்கள். அதில் நீங்கள் பார்க்கையில், காலத்தின் நீரோடை வழியாக நீங்கள் கவனித்து வருவீர்களாயின், உண்மையான, அசலான தேவ பிள்ளைகள் அந்த பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதங்களை விடாமல் பற்றிக் கொண்டு, அந்நிய பாஷைகளில் பேசியும், பாஷைகளை வியாக்கியானித்தும், அற்புத அடையாளங்களை ஊழியத்தில் கொண்டிருந்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தும் வந்தார்களா இல்லையா என்பதை பாருங்கள். ஆதி அப்போஸ்தலர்கள் என்னவெல்லாம் செய்தார்களோ, அதையே காலங்கள்தோறும் உண்மையான சபையானது செய்து வந்துள்ளது. எனவேதான், நான் வரலாற்றை ஆராய்கையில், அற்புத அடை யாளங்களைக் கொண்டிருந்த பவுல், ஐரேனியஸ், பரிசுத்த மார்ட்டின், கொலம்பா ஆகிய இவர்கள் ஒவ்வொருவரையும் நான் தெரிந்து கொண்டேன். 46. ஓ நான் கண்டு கொண்டேன். ஒலிபெருக்கியானது சரியாக வேலை செய்யவில்லையென்று தெரிகிறது. இப்பொழுது நான் பேசுவது கேட்கவில்லை போலும், எனவேதான் அவர்கள் தங்கள் தலைகளை அசைத்து அதைத் தெரிவிக்கிறார்கள், பில்! நல்லது, இப்பொழுது நான் பேசுவது கேட்கிறதா? இப்பொழுது எப்படியிருக்கிறது? அது நன்றாகவுள்ளதா? ஆம், இப்பொழுது யாவரும், ''சரியாக இருக்கிறது, பேசுங்கள்'' என்கிறார்கள். நல்லது, பில், உனக்கு ஒரு மதிப்பெண் குறைகிறது. நல்லது சரி. 47. இந்த சபைக்காலத்தில் இந்தப் பெரிய சபையை அவன் உருவாக்கிய பொழுது, இம்மனிதனை சர்வலோகத்தின் அனைத்து சபைகளின் தலைமைக்குரு - அத்தியட்சகராக நியமித்து, ஏராளமான பணத்தை வாரியிறைத்து, இன்னும் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து, சபையையும், அரசாங்கத்தையும் ஒன்றாக இணைத்து, கடைசியில் சபையானது அரசாங்கத்தை கட்டுப்படுத்தி ஆளுகை செய்ய விட்டு விட்டான். கான்ஸ்டன்டைன் செய்த இதே காரியம்தான், பழைய ஏற்பாட்டு சபையிலும் செய்யப்பட்டதாக தேவன் கூறினார். அதாவது, எலியாவின் நாட்களில், இவர்கள் யேசபேல் என்னும் அப்பெண்மணி, கர்த்தருடைய ஜனங்களை கீழ்ப்படுத் தும்படி விட்டுவிட்டனர். அதே சம்பவம் இருண்ட காலத்தில் சம்பவித்தது. இங்கு பெந்தெகொஸ்தேயானது எவ்வாறுள்ளது என்பதைப் பாருங்கள். என்னே, என்னே! அது கருமையடைந்து விட்டது. கொஞ்சங்குறைய 1000 ஆண்டுகள் இந்நிலையில் இருந்தது. கி.பி. சுமார் 500 முதல் கி.பி.1500 முடிய. கி.பி.606 முதல் 1520 முடிய இக்காலம் இருந்தது. இருப்பினும் ஏறத்தாழ 1000 ஆண்டுகள் கணக்காகிறது. இரத்தம் சிந்தும் கொலை வெறியோடு கூடிய உபத்திரவம் நீடித்தது. வரலாற்றைப் படித்துப் பாருங்கள். 48. ஒரு கத்தோலிக்கன் உங்களிடம், தாங்கள் தான் கிறிஸ்தவ சபை என்று கூறுவான். அவர்கள் மதஸ்தாபன சபையாகிய கிறிஸ்தவ சபையினர். ஆனால் உண்மையான பெந்தெகொஸ்தேயினரோ நசுக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர். போப்பு களாலும், அத்தியட்சகர்களாலும் கொலை செய்யப்பட்டனர். முடிந்த அளவு இரத்தம் சிந்தப்பட்டது. 49. அதைக் கூறுவதால், ஒரு நாள் என்னுடைய ஜீவனுக்கும் ஆபத்து நேரிடப் போகிறது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நான் எங்கே போகிறேன் என்பதை அறிந்தேயுள்ளேன். பாருங்கள்? தொடர்ந்து இந்தப் பாதை இரத்தம் வழிந்தோடினதாக இருக்கிறது. இத்தேசத்தில் நடப்பதைப் பார்க்கையில், இனிக்காலம் செல்லாது. அந்த வேளையானது நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் காண்கிறீர்கள். அது சத்தியமாயிருக்கிறது. சத்தியத்தை விட்டு நீங்கள் பின்வாங்காதீர்கள். அதோடு தங்கியிருங்கள்! அந்நாட்களில் அவர்கள் செய்ததைப் போலவே, உங்களுடைய இரத்தத்தை அதோடு கலந்திடுங்கள். 50. இங்கே என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். அதன்பிறகு இங்கே யேசபேலின் போதகமானது உள்ளே வருகிறது. யேசபேல் ஒரு அஞ்ஞான விக்கிரகாராதனைக் காரியான பெண்மணியாவாள். கான்ஸ்டன்டைன் செய்த அதே காரியத்தைத் தான் ஆகாபும் செய்தான்; கான்ஸ்டன்டைன் இங்கே செய்ததை போலவே, ஆகாபும் செய்தான்; தனது இராஜ்ய பாரத்தை பெலப்படுத்திக் கொள்வதற்காக இந்த பெண்மணியை விவாகம் செய்து கொண்டான்; அதன்மூலம், இஸ்ரவேலுக்குள் அவன் விக்கிரக ஆராதனையைக் கொண்டு வந்தான். இதே காரியத்தைத் தான் கான்ஸ்டன்டைனும் சபைக்காலத்தில் செய்திட்டான். பெந்தெகொஸ்தே அனுபவம் ஏறத்தாழ முழுவதும் அற்றுப் போனது போல் ஆகிவிட்டது. 51. தேவன் மார்ட்டின் லூத்தரை எழுப்பினார். எவ்வாறு ஒளியானது ஒவ்வொரு சபைக்காலத்திலும் படிப்படியாக மங்கிக் கொண்டே வந்து இங்கே (நான்காவது சபைக்காலத்தில்) முற்றிலும் மங்கி, அதிகம் இருள் சூழ்ந்து விடுகிறது என்பதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். பின்பு, மீண்டும் ஒளி இங்கே கொஞ்சம் அதிகரித்து இங்கே மீண்டும் மங்கிவிடுகிறது. கர்த்தருக்கு சித்தமானால் ஞாயிறு இரவில் அது பெரியதொரு பாடமாக இருக்கப் போவதால், இங்கே நான் சற்று குறித்திருக்கிறேன். 52.நாம் எந்த சபைக்காலத்தைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறாமோ, அக்காலத்தில் நாம் எடுத்துச் செல்லப்படுவதாக நான் விசுவாசிக்கிறேன். இதிலிருந்து இருண்டகாலம் - கி.பி.606 முதல் கி.பி.1520 முடிய இருண்ட காலத்தில் உள்ள சபைக்காலம் இதுதான். இருண்ட காலங்களுக்குள் சென்ற சபைக் காலத்திலிருந்து, நாம் தொடர்ந்து லூத்தரன் சபைக் காலத்திற்குள் வருகிறோம். 53. கடந்து சென்ற சபைக்காலத்திற்குள் இருந்த ஐரேனியஸ், மார்ட்டின், கொலம்பா ஆகியோர் மற்றும் ஏனையோர் அக்காலங் களில் மரித்து கடந்து சென்றனர். எந்தவொரு நம்பத் தகுந்த வரலாற்று நூலையும், அது எவர் எழுதியிருந்தாலும் சரி, எடுத்துப் பாருங்கள். “ பரிசுத்த பேட்ரிக் ஒரு கத்தோலிக்கன்'' என்று அவர்கள் கூறுகிறார்களென்றால், அவர்கள் தாங்கள் சொல்வது என்ன என்றே தெரியாது. பரிசுத்த பேட்ரிக் கத்தோலிக்க சபையை மறுதலித்தார். அவர் ஒருபோதும் ரோமாபுரிக்குச் சென்றதேயில்லை. மேலும் அவர் உறுதியாக அவர்களுடைய போதகத்தை மறுத்தார். சரியாக அப்படித்தான் செய்தார். இங்கிலாந்தின் வடக்குப் பிரதேசத்தில் போங்கள். அல்லது அயர்லாந்துக்குச் செல்லுங்கள். அதே காரியத்தை நீங்கள் அங்கு காணலாம். பரிசுத்த பேட்ரிக் தேவனுடைய மனிதர். அவர் அயர்லாந்து தேசத்திலிருந்து எல்லா பாம்புகளையும் துரத்தி விட்டார் என்று கூறுப்படுகிறதே, அது வெறும் கட்டுக் கதை தான். 54. வில்லியம் டெல் என்பவர் தன் மகனின் தலையில் ஆப்பிளை வைத்து சரியாகக் குறி வைத்து அந்த ஆப்பிளை சுட்டுத் தள்ளினார் என்ற கதையை எத்தனை பேர்கள் கேட்டிருக்கிறீர்கள்? அது கத்தோலிக்க சமயத்தின் ஒரு கட்டுக்கதையாகும். அதைப்பற்றி எந்தவொரு சான்றும் கிடையாது. அது சம்பவித்தாகக் கூறப்படும் அதே ஸ்தலத்தில் நேரில் போய்ப் பார்த்தேன். அங்கே “ இது வெறும் கதைதான். உண்மையாக அப்படியில்லை'' என்று எழுதப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ளது அவ்விடம். அத் தேசத்தில் லுசர்ன் என்ற ஏரியின் பக்கத்தில் அது நடந்ததாக கதை சொல்லப்படுகிறதே. அதே இடத்தில் நானும் பில்லியும் நேரில் போயிருந்தோம். அவர் ஒரு மனிதனை சுட்டுவிட்டார். அவர் மகனின் தலையில் ஆப்பிளை வைத்து ஆப்பிளை சுட்டதாகக் கூறும் கதை உண்மையல்ல. அது வெறும் புனையப்பட்ட கதைதான். மூட நம்பிக்கை. உண்மையாக அவ்வாறு நடக்கவில்லை. அவ்வாறு அவர்கள் செய்தார்கள் என்பதற்கான நிரூபிக்கும் ஆவணம் ஒன்று கூட கிடையாது அங்கே. அங்கு நடந்தது என்ன என்பதைப் பற்றிய குட்டு உண்மையாக வெளிப்பட்டுள்ளது. எனவே அவர்கள் சொல்வது பொய் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனால் நாம் கையாளும் விஷயங்களோ முற்றிலும் உண்மையாக அவர் நடப்பித்த காரியங்களைக் கூறும் வரலாறு ஆகும். 55. இங்கே இந்த சபைக்காலத்தில் ஒளியானது கொஞ்சங் குறைய முற்றிலும் அற்றுப்போய் விட்ட நிலையில் ஆகிவிட்டது. அதற் கடுத்து வந்த சபைக்காலம் சீர்திருத்த காலமாக வருகிறது. இது முதற்கொண்டு ஏறத்தாழ 1000 ஆண்டுகாலம் இருண்ட காலத்திற்குள் சபை சென்றது. அப்பொழுது ஒளி மங்கி இருட்டாயிற்று. ஐரேனியஸின் காலத்தில் இருந்த பார்வை இங்கே முழுவதும் இல்லாமல் மங்கிப் போய்விட்டது. ஐரேனியஸ் ஒரு மகத்தான தேவ மனிதனாயிருந்தார். இவரைப் போன்ற இன்னும் அநேக நூற்றுக் கணக்கான விலையேறப்பெற்ற பரிசுத்தவான்கள், அந்த அரங்கத்தில் நின்றிருந்து, கிறிஸ்துவினிமித்தம் தங்கள் ஜீவன்களின் இரத்தத்தை, தாரளமாக சிந்தி உயிர் நீத்தனர். அவர்கள் தங்கள் இரத்தத்தை, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உள்ள ஞானஸ்நானத்திற்காகவும், அந்நிய பாஷைகளில் பேசினதற்காகவும் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் ஜீவனை தங்களில் பெற்று தேவ பிரசன்னத்தோடு ஜீவித்ததற்காகவுமே சிந்தினார்கள். அவர்களை கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள்தான் உபத்திரவப்படுத்தினார்கள். 56. ஓ, பாதாளத்தில் உள்ள பிசாசுகளில் லேகியோன் கூட்டம் அவர்களைக் கொடுமைப்படுத்த கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது போலும். இதை இவ்வாறு கூறுவதைத் தவிர வேறு எவ்விதத் திலும் பாத்திரமானவாறு அழைக்க எனக்கு தெரியவில்லை. அவ்விதமாக வந்து, தங்களுக்கென சபையை உருவாக்கி, தங்களைத் தாங்களே பெரிதுபடுத்திக் கொண்டு இருந்தனர். அவள் தன்னைத் தானே தீர்க்கதரிசியானவள், அதாவது வார்த்தையின் தெய்வீக வியாக்கியானி, தன்னைத் தவிர வேறு யாருமில்லை, குருக்களைத் தவிர வேறு யாருக்கும் வேதத்தை வியாக்கியானிக்க முடியாது'' என்றெல்லாம் ஆக்கிக்கொண்டார்கள். அவள் தன்னைத் தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொண்டாலும் அவள் அப்படியல்ல. அவள் பொய் சொல்லுகிறாள். பாருங்கள்? ஆனால் அதே வேளையில், தேவனோ, சத்தியத்தைப் பெற்றிருந்த தன்னுடைய தூதனை அங்கே வைத்திருந்தார். சத்தியமானது எப்பொழுதும் அதற்கு திரும்பிப் போகும். பாருங்கள்? எப்பொழுதும் அது மூலவார்த்தைக்கு திரும்பிப் போகிறதாய் இருக்கிறது. ஏனெனில் தேவனும் கூட அதிலிருந்து மாறுகிறவரல்ல. 57. கடந்த இரவிலும், நாம் இங்கிருந்து கடந்து செல்லும் முன், இதைப் பற்றி பார்த்தோம். எனவே அது உங்கள் இருதயத்தில் ஆழப்பதிந்திருக்கும். முன்னடையாளமாக அந்த யேசபேலுக்கு ஒரு மகள் இருந்தாள். அது உங்கள் நினைவிலுள்ளதா? வெளிப்படுத்தின விசேஷம் 13ம் அதிகாரத்தில், “ இந்தக் கள்ளச்சபையான ரோமுக்கும் குமாரத்திகள் இருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. அவள்தான் வேசிகளின் தாய் ஆவாள். அது உண்மையல்லவா? யேசபேலுக்கு ஒரு மகள் உண்டு. அவளை யேசபேல் என்ன செய்தாள்? பாருங்கள், அவைகள் யாவும், முன்னடையாளமாகவும், சாயலாகவும், நிழலாகவும் இருப்பதைப் பாருங்கள். யூதாவின் இராஜாவாகிய யோசபாத்தின் குமாரன் யோராம் தன் மகளை விவாகம் செய்யும்படி அவள் ஏற்பாடு செய்தாள். 58. அந்நேரத்தில் இஸ்ரவேலானது இரண்டாக பிளவு பட்டிருந்தது. ஒரு பக்கம் இஸ்ரவேலும், இன்னொரு பக்கம் யூதாவும் அதன் தலைநகர் எருசலேமும் இருந்தன. இந்தப் பக்கம் ஆகாபும், மறுபக்கம் யோராமும் இருந்தனர். இப்பக்கத்தில் இஸ்ரவேலை யேசபேல் முழுவதும் வசப்படுத்தி வென்று, அவர்கள் விக்கிரங்களை வணங்கும்படி செய்தாள். (ஆனால் எலியாவும், அந்த சிறிய கூட்டமான உண்மையான ஜனங்களும் இப்பாவத்திற்கு உடன்படவில்லை). சரி, இப்பொழுது மறுபக்கத்தில் யூதேயாவில், யோராம் அரசாண்டான்; யேசபேல் ஆகாபின் மூலம் இம்மகளைப் பெற்றெடுத்து, அவள் பெரியவளானபோது, அவளை யூதாவின் இராஜாவாகிய யோசாபாத்தின் மைந்தன் யோராமுக்கு விவாகம் செய்வித்தாள். இவ்விவாகத்தின் வாயிலாக, யூதாவுக்குள் விக்கிரக வணக்கம், மற்றும் எருசலேமில் அஞ்ஞான பலிபீடங்களும் எழும்பின. 59. சரியாக அதைத்தான் கத்தோலிக்க சபையானது செய்தது. அவள் ஸ்தாபன உபதேசத்தில் நிலைத்திருந்து, பரிசுத்த ஆவி சபையில் இல்லாமல் போகும்படி செய்து, தன் மகள் சபையிலும் அவ்வாறே ஆகும்படி செய்துவிட்டாள். (அவைகள் லூத்தரன் சபை, மெதோடிஸ்டு சபை, பாப்டிஸ்டு சபை, பெந்தெகொஸ்தே மற்றும் இன்ன பிற சபைகள்). அதே காரியத்தையே அவள் செய்தாள். “ அவள் வேசிகளின் தாய்'' என்று வேதம் கூறுகிறது. 60. இப்பொழுது வேதவாக்கியங்களின் வாயிலாக இதைப் பாருங்கள். நான் இங்கே கூறியுள்ளதற்கு மாறாக, வேறுவிதமாக வேதவாக்கியங்களில் உங்களுக்குத் தென்படுகிறதென்றால், அதை எடுத்துக் கொண்டு கண்ணியமாக என்னிடம் வாருங்கள். (வேதம் கூறுகிறபடியே, வரலாற்றிலும் உள்ளது. அதுவும் வேதத்தோடு இணைந்தே செல்லுகிறது). வேதத்தில் வேறு விதமாகச் சொல்லப் படவில்லை. பாருங்கள்? அது உண்மை. 61. பிராடெஸ்டெண்டு மார்க்கமானது இருப்பதி லெல்லாம் அதிகம் விஷம் நிறைந்ததான ஸ்தாபனங்களைக் கொண்டதாக இருக்கிறது. அவைகளில் மனிதன் சபையை ஆளும்படி அவர்கள் செய்கிறார்கள். அங்கே சிங்காசனத்தில் ஒரு மனிதனை தேவன் போல் அமர வைத்தார்களே, அதைப்போலவே இங்கும் இன்னொரு சொரூபத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். பெந்தெகொஸ்தேயின் தலைமை அத்தியட்சகர் அல்லது ஜெனரல் ஓவர்சீர் போன்றவர்கள் என்று கூறுகிறார்கள்? “ நல்லது, அவரது உபதேசம் என்ன என்று நான் பார்க்கட்டும். ஓ, அவர் இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுள்ளாரா? அவர் உள்ளே வர முடியாது. முடியாது ஐயா'' என்று கூறிவிடுகிறார்கள். இவ்வாறு நீங்கள் வார்த்தையை புறக்கணிக்கிறீர்கள். அதைப் போலவே அவர்களும் செய்தாக வேண்டும். அவர்கள் கூறுகிறார்கள்; நான் உங்களுக்கு தெளிவாகக் கூறுகிறேன், நீங்கள் எவரும் அக்கூட்டத் திற்குப் போகக் கூடாது. அதற்கு என் அங்கீகாரம் கிடையாது. நீங்கள் எவ்வளவு அதிகமாக வியாதிப் பட்டிருந்தாலும் சரி, அதை விட்டு விலகியிருங்கள். அங்கே தேவன் என்ன செய்தாலும் அதைப்பற்றி அக்கறையில்லை. நீங்கள் நம்முடைய போதகக் கண்ணாடி வழியாக பார்க்காவிடில், உங்களுக்கு பார்வையில்லை'' என்று. இவ்வாறாக மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டு பண்ணுகிறார்கள். அந்த சொரூபம் பேசும்படி அதற்கு உயிர் கொடுக்கிறார்கள். அப்படித்தான் அது உள்ளது? அவனுக்குப் பேச முடியும் என்று எண்ணாதீர்கள். ஒரு தடவை அவனை சற்று குறுக்கிட்டுப் பாருங்கள். ஊ ஹு, நீங்கள் நிச்சயமாக தொல்லையில் அகப்படுவீர்கள். 62. ஓக்லஹாமாவில் உள்ள டுல்சா என்ற இடத்திற்கு நான் போனதைப் பற்றி நான் எண்ணிப் பார்க்கிறேன். ஓ, அங்கே நான் சங்கடமான குழப்பத்தில் அகப்பட்டுக் கொண்டேன். அந்த ஸ்தாபனங்களெல்லாம் அங்கே வந்து குழுமிவிட்டார்கள். அக் கட்டிடத்தில் நான் அமர்ந்திருந்தேன் ஒரு நாள். அப்பொழுது எனக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று. அதில் நான் ஒரு அழகான சிறிய பூனைக்குட்டி ஒன்றைக் கண்டேன். அப்பூனை பட்டுத் தலையணையில் படுத்திருந்தது. அது மிகவும் அழகாக இருந்தது. நான் அதனண்டையில் சென்றேன். (நான் பூனையைக் கண்டால் பயப்படுகிறவன்) அதை நான் சீண்ட ஆரம்பித்த போது, ''பர்ர்ர் பர்ர்ர்'' என்று சீறியது. அது எவ்வாறு அவ்விதமான விசித்திர மான சப்தத்தை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். “ அழகான பூனைக்குட்டியே'' என்று கூறி நான் அதைச் சீண்டினேன். அது ''பர்ர்'' என்றது. மிகவும் அருமையாக இருந்தது. 63. அப்பூனையின் பின்னால் இருந்த தலையணையை நான் பார்த்த போது, அதில், “ பெந்தெகொஸ்தே பூனைக்குட்டி'' என்று எழுதியிருந்தது. ''இது விசித்திரமானதாக இல்லையா? இது நிச்சயமாக ஒரு தரிசனமாகத்தான் இருக்கவேண்டும்'' என்று நான் கூறினேன். 64. அப்பொழுது ஏதோ ஒன்று என்னிடம் கூறியது: “ நீ இதன் உரோமத்தை இவ்வாறு இழுத்து சீண்டினால் அது ஒன்றும் பாதகமில்லை. ஆனால் இது உண்மையில் எதனால் உண்டானது என்பதை காணவிரும்பினால். அப்பொழுது அதன் உரோமத்தை பின்பக்கமாக சுரண்டி சீண்டிவிடு'' என்றது. பாருங்கள்? எனவே நான் அவ்வாறே அதன் உரோமத்தை பின்பக்கமாக இழுத்து சீண்டி விட்டபோது, அதன் கண்கள் நிலைக்குத்தி வெளியே வந்து, பச்சை நிறம் கொண்டு, அது ஒரு பெரிய ராட்சத மிருகம் போல் ஆகி, என் மேல் கடுயைமாக சீறினது. நீங்கள் அதை பின்பக்கமாக சீண்டிவிட்டால் போதும், அதாவது, அதனுடைய ஞானஸ்நானம், “ பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில்'' அவர்கள் கொடுக்கிற ஞானஸ்நானமானது பிசாசினுடையது, கத்தோலிக்க சபையினுடையது என்றெல்லாம் சொல்லிப் பாருங்கள்; அப்பொழுது என்ன நடக்கிறதென்று பாருங்கள். அது சீறிப் பாய்கிறது. 65. நான் கீழே இறங்கி வந்து, சகோதரன் ஜீன், சகோதரன் லியோ, மற்றும் உள்ளவர்களிடமும், “ நான் பெந்தெகொஸ்தே ஸ்தாபனங்களைப் பற்றிய ஒரு உண்மையான தரிசனத்தைக் கண்டேன்'' என்று கூறினேன். 66. இப்பொழுது நாம் 3ம் அதிகாரத்திலிருந்து படிப்போம். சர்தை சபையானது செத்த சபையாக இருந்தது. அது மரித்ததாயிருந்தது. ஏனெனில், அது இந்தக் காலத்தில் கொல்லப்பட்டிருந்தது. இன்னும் சில நிமிடங்களுக்குள் இக்காலத்தில் ஜீவனானது ஒரு சிறிதளவே இருந்தது என்பதைப் பார்ப்போம். கி.பி.1520 முதல் கி.பி.1750 முடிய சர்தை சபையின் காலம் நீடித்தது. இந்த சபைக் காலத்திற்குரிய நட்சத்திரம் அல்லது தூதன், அல்லது செய்தியாளன் அவரது கரத்தில் இருக்கிறார். அது தெளிவாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதா? அந்த நட்சத்திரம் ஒரு தூதனைக் குறிக்கும். அத்தூதன் அக்காலத்திற்குரிய செய்தியாளன் ஆவார். சரி. 67. நிசாயா ஆலோசனை சங்கத்தைப் பற்றி முடித்து விட்டோம். சபையானது அங்கே மரித்துவிட்டது. சபையும் அரசும் இணைந்த போது, அவர்கள் அதிகாரத்திற்கும், மகிமைக்கும் உயர்ந்தார்கள். கடந்த இரவில் நம்முடைய பாடத்தில், மக்கள் அப்பொழுது என்ன நினைத்தார்கள் என்பதைப் பார்த்தோமே, அது ஞாபகத்தில் இருக்கிறதா? 'ஆயிர வருட அரசாட்சி துவங்கிவிட்டது'' என்றார்கள் அவர்கள். கிறிஸ்து வராமலேயே ஆயிரமாண்டு அரசாட்சி வந்துவிட்டது'' என்று போதித்தார்கள். பாருங்கள்? கிறிஸ்துவின் பிறகுதான் ஆயிரம் வருட அரசாட்சி ஏற்படும். அந்நாட்களில் நடந்ததைப் பற்றி வரலாற்றில் நீங்கள் பார்த்தால், கள்ள இயேசுக்கள் எழும்பினார்கள் என்றும், இன்னும் பலவிதமான இவ்விதகாரியங்கள் ஏற்பட்டன என்றும் அறியலாம். தங்கள் போப்பே இயேசுவானவர் என்று கருதினார்கள். அவரை ''வைகார்'' என்று அழைத்தார்கள். அதற்கு அர்த்தம், “ தேவனுடைய குமாரனுக்கு பதிலாள்'' என்பது. ஆம், அவர்களுடைய பெரிய பரிசுத்த தேவனைப் போலுள்ளவன் அங்கே அமர்த்தப்பட்டிருக்கிறான். 68. நான் ஒரு விஷயத்தை உங்களுக்குச் சொல்லட்டும். இயேசு வருவதற்கு முன்னால், “ கள்ளத்தீர்க்கதரிசிகளும், கள்ள இயேசுக்களும் எழும்புவார்கள்'' என்று வேதம் கூறுகிறது. அது உண்மை . ''இதோ இங்கே...'' சபையானது மகிமையில் எடுத்துக் கொள்ளப் பட்டு போகிற வரைக்கிலும், இயேசுவானவர் இப்பூமியின் மேல் தன் பாதங்களை வைக்க மாட்டார் என்ற விஷயத்தை உங்கள் இருதயங்களில் பதியும்படி போடுகிறேன். இதை நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் கள்ளக் கிறிஸ்துக்கள் எழும்பு வார்கள். ஆனால் இயேசுவானவர் இப்பூமியின் மேல் கால் வைக்க மாட்டார். இயேசு இம்மண்ணின் மேல் கால்வைப்பதில்லை. எக்காளம் தொனிக்கும், நாம் அப்பொழுது அவரை ஆகாயத்தில் சந்திப்போம். அப்பொழுது சபையானது ஏற்கனவே புறப்பட்டு போய்விட்டிருக்கும். பிறகு இயேசு தோன்றும் பொழுது, அவருடைய திரும்பி வருதலாக இருக்கும். புறஜாதி மணவாட்டி, அவரைச் சந்திக்க ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அங்கே அவரை சந்திப்பாள். அது வேத வாக்கியங்களின்படி இருக்கன்றதா? அவர்கள் மேலே எடுத்துக் கொள்ளப்பட்டு அவரை ஆகாயத்தில் சந்திப்பார்கள். நாம் மேலே போய்விடுவோம். அவர் தன் சபையை மகிமையில் எடுத்துக் கொண்டு, தன் வாசஸ்தலத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே ஆட்டுக் குட்டியானவரின் கலியாண விருந்து முடிந்த பிறகு அவர் யூதர்களின் மீதியானவர்களுக்காக பூமிக்குத் திரும்பி வருகிற வரையிலும், அதற்கு முன்னால் இம்மண்ணின் மேல் அவர் பாதங்கள் படுவதேயில்லை. 69. நிசாயா ஆலோசனை சங்கம் முடிவடைந்த பிறகு, சபையானது விழுந்தது. அதன்பிறகு போப்பு மார்க்க ஆளுகையின் கீழ் கொஞ்சங்குறைய ஆயிரமாண்டுக்காலம் சபை உட்பட்டது. அவர்களோடு முரண்படுகிற யாவரையும் அவர்கள் கொன்று தீர்த்தார்கள். யேசபேல் இஸ்ரவேலுக்கு செய்தது போல், ஒன்று கத்தோலிக்க சமயத்தோடு சேர்ந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்ற நிலை நீடித்தது. 70. இஸ்ரவேலில் பாகாலுக்கு முழங்கால்படியிடாத எலியாவும் அவனோடு மீதியான இஸ்ரவேலர் சிலருமாகிய ஒரு கூட்டம் அன்றைக்கு இருந்தது போல், இச்சபைக் காலத்திலும், வெகு சிலரே பரிசுத்த ஆவியைப் பெற்றவர்களாக நீடித்தனர். மற்றபடி, பரிசுத்த ஆவி கொஞ்சங்குறைய முற்றிலும் நீங்கிப் போன நிலை தான் நீடித்தது. அதைப்பற்றி ஒரு வசனத்தை நீங்கள் விரும்பினால் 1 இராஜாக்கள் 19ம் அதிகாரம், 18ம் வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே எலியா ஒரு கெபியின் வாயிலில் நின்று கொண்டு, “ போதும் கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளையெல்லாம் அவர்கள் கொன்று போட்டார்கள். மற்றும் அநேக காரியங்களைச் செய்துவிட்டார்கள். நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்'' என்று கூறினான். ஆனால் தேவனோ எலியாவிடம், சபையில் இன்னும் பாகாலுக்கு முழங்கால்படியிடாத சில நூற்றுக்கணக்கானவர்களை மீதியாக வைத்திருக்கிறதாகக் கூறினார். 71. இப்பொழுது நாம் சர்தை சபையை ஆரம்பிக்கிறோம். முதலாம் வசனத்தில் உள்ள ''சர்தை'' என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில், “ தப்பித்துக் கொண்டவன்'' என்று பொருள். சர்தை என்பதற்கு உண்மையான அர்த்தம் “ தப்பித்துக்கொண்டவன்'' என்பதாகும். 72. நாம் இப்பொழுது முதலாம் வசனத்திலிருந்து துவங்கப் போகிறோம். நாம் இந்தக் காலத்தை “ சீர்திருத்தக் காலம்” என்று அழைக்கப் போவதாக நம்புகிறேன். இவ்வாறு இச்சபைக் காலம் ''சீர்திருத்தக் காலம்'' என்றழைக்கப்படுவது மிகவும் பொருத்த மானதுதான், ஏனெனில், சீர்திருத்தம்தான் ‘தப்பித்துக் கொண்ட ஒன்றாக' இருந்தது. அதிலிருந்து அது தப்பித்து வெளியேறியது. 73. நாம் இப்பொழுது முதலாம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். “ சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்ன வெனில்; தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந் திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்." வெளி.3:1 74. முதலாவது வாழ்த்துதல், ஏழு ஆவிகள் என்னப்பட்ட வைகள்... ''ஏழு ஆவிகளும், எழு நட்சத்திரங்களும்.'' ஆவிகள் ஆகிய தூதர்கள், நட்சத்திரங்களாகிய செய்தியாளரிடம் வந்தன. ''ஏழு ஆவிகள்'' என்றால், ஏழு வித்தியாசமான காலங்களில் ஒரே பரிசுத்த ஆவி அந்தந்தக் காலத்திற்குரிய நட்சத்திரமாகிய செய்தி யாளனை அபிஷேகிக்கிறது. ஆவி நித்தியமானது, குத்துவிளக்கான இந்த சபைக்காலங்களின் இருளான வேளைகளில் ஒளியை பிரதிபலிக்கிற காரியத்தை செய்யும்படி நட்சத்திரமானது உண்டாக்கப்பட்டிருக்கிறது. அதைத்தான் நட்சத்திரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. தூதனாகிய ஆவி நட்சத்திரத்திடம் சென்றது. அப்பொழுது பரிசுத்த ஆவியின் ஒளியை அந்த சபைக்காலத்திற்குரிய நட்சத்திரத்தின் வாயிலாக அது பிரதிபலித்துக் காட்டியது. இந்த ஏழு ஆவிகள் யார் என்று நீங்கள் அறிய ஆவலோடு இருந்திருப்பீர்கள். அது ஏழு சபைக் காலங்களுக்குரிய ஏழு செய்தியாளர் களாகிய தூதர்கள். பாருங்கள்? ஒவ்வொரு காலத்திலும், குறிப்பிட்ட நட்சத்திரமானது காட்சியில் தோன்றிய பொழுது, பரிசுத்த ஆவி இறங்கி வந்து, அந்நட்சத்திரத்தை அபிஷேகித்து, முதலாவது நட்சத்திரம் எவ்வாறு இலங்கியதோ, அதே வண்ணம் இதுவும் இருக்கச் செய்கிறது. 75.இது சரிதான் என்பதை நான் உங்களுக்கு உறுதிப்படுத்தட்டும். அது என்னவிதமான நட்சத்திரம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று பவுல் கூறினான். ஏனெனில், சாத்தானும் ஒரு நட்சத்திரம் தான். அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி அவன் என்பதை மறந்துவிட வேண்டாம். பவுல் கூறினான்... பவுல் எபேசு சபையின் நட்சத்திரம் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவன் கூறினான். அது உண்மையா இல்லையா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். கலாத்தியர் 1:8ல் பவுல் இவ்வாறு கூறினான். அவன் ஏற்கனவே, தான் போனபிறகு, மந்தையை தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் வரும் என்று எச்சரித்திருக்கிறான். ''வானத்திலிருந்து வருகிற தூதன். வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால்'' இங்கே இந்த மனிதன் ஒரு தூதனைப் போல் காட்சியளிக்கிறான். தன்னை இயேசுவின் பதிலி என்பதாகக் காண்பித்துக் கொண்டு வந்தான். பவுல் கூறினான். “ நாங்கள் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை வானத்திலிருந்து வருகிற தூதன் அல்லது வேறு யாராவது பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாய் இருக்கக்கடவன்'' என்று. 76. அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஏற்கனவே ஞானஸ்நானம் பெற்றிராவிடில், மீண்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறும்படி பவுல் தான் எபேசியரை வற்புறுத்தினான். ''பரிசுத்த ஆவியைப் பெறுவதற்காக மீண்டும் சரியானபடி ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று பவுல் கூறினான். அப்போஸ்தலர் 19:5. அவன் அவர்கள் மேல் தன் கைகளை வைத்த போது, அவர்கள் வரங்களைப் பெற்று சபைக்குரிய ஒழுங்கில் நிலைநாட்டப்பட்டு, அற்புதங்களை நடப்பித்தல், வியாதியஸ்தரை குணமாக்குதல், அந்நிய பாஷைகளில் பேசுதல், பாஷைகளை வியாக்கியானம் செய்தல் போன்ற வரங்களையும் பெற்று இலங்கினார்கள். அது சரிதானே? 1 கொரிந்தியர் 12ம் அதிகாரத்தில் பவுல் என்ன கூறுகிறான் என்று பாருங்கள். தேவன் சபையில் இந்த மகத்தான வரங்களை அளித்தார். தேவ மகிமைக்காக அவ்வரங்களை அவர்கள் பயன்படுத்தும்படி, சபையில் அதற்கேற்ற ஒழுங்கை பவுல் ஏற்படுத்தினான். பவுல் அதைப்பற்றி கூறியுள்ளார். ஆகவே எந்தவொரு மனிதனானாலும், அவன் எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, அன்னிய பாஷைகளில் பேசுதலும், பாஷைகளில் வியாக்கியானம் செய்தலும், தெய்வீக சுகமளித்தலும், அற்புதங்களை நடப்பித்தலும், உண்மை யான ஞானஸ்நானத்தைப் பற்றி பரிசுத்த ஆவியானவர் கொடுத்த சாட்சியும், ஆகிய இவற்றின் நாட்கள் கடந்துபோய்விட்டன என்று உங்களிடம் சொன்னால், அப்படிப்பட்டவன் சபிக்கப் பட்டவனாயிருக்கடவன். பவுலின் மேல் இருந்த அதே ஆவியானவர்தான், அடுத்து வந்த சபைக் காலத்திற்குள்ளும் அனுப்பப்பட்டார். அதே ஆவியானவர் தான் அதற்கடுத்து வந்த சபைக் காலத்திற்குள்ளும் வந்தார். இப்படியாக ஓரே ஆவியானவர்தான் அடுத்தடுத்து வந்த சபைக் காலங்களுக்குள்ளும், கடைசியாக சபைக்காலத்தின் முடிவுவரைக்கிலும் அப்படியே வந்து கொண்டிருக்கிறார். அதே ஆவியானவர் தான், பரிசுத்த ஆவியானவர் அவர், நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 77. இங்கு எழுதப்பட்டுள்ளதை நீங்கள் கவனித்துப் பாருங்கள். வேதத்தை எழுதுகிறவர் அறிந்திருக்கிறார். 'ஏழு ஆவிகள் ("Seven Spirits") என்பதில் ''ஸ்பிரிட்ஸ்'' என்ற ஆங்கில வார்த்தையில் முதல் எழுத்து ஆங்கிலத்தில் கேபிடல் S இல் போடப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள். ஓ ஹு ஒரேயொரு பரிசுத்த ஆவியானவர் தான். அதே பரிசுத்த ஆவியானவராகிய அந்த ஒருவர்தான், ஏழு தடவைகளில், ஏழு சபைக் காலங்களுக்குள்ளும், அதே ஒளியை சுமந்து கொண்டு வருகிறார். அதைப் புரிந்து கொண்டீர்களா? ஏழு சபைக் காலங்களின் ஏழு வெவ்வேறு காலங்களுக்குள்ளும், இந்த பரிசுத்த ஆவியானவர் இதே செய்தியை எடுத்துக் கொண்டு செல்லுவார். அதை மாற்றுகிற எவன் மேலும் சாபம் கூறப்பட்டுள்ளது. 78. முழுக்காரியத்தின் வெளிப்படுத்துதலோடு அது பொருந்திப் போகிறதா என்பதைக் கவனியுங்கள். ''எவனாவது இதிலிருந்து ஒன்றை எடுத்துப்போட்டாலோ, இதோடு ஒன்றைக் கூட்டி னாலோ, அவனது பங்கு ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடப்படும்'' என்று அவர் கூறினார். அங்கே தான் எல்லாவற்றையும் அடக்கினதாக அது இருக்கிறது. எனவே நீங்கள் இதிலிருந்து எதை யாவது எடுத்துப்போடவோ, அல்லது கூட்டவோ அங்கே இடமேயில்லை. ஏனெனில், அது அவ்வாறு இருக்கிறது. அதைத் தான் தேவன் கூறினார். அதைத்தான் ஆவியானவர் கூறினார். அதைத் தான் சபைகள் கூறின. பவுல் போதித்தவைகளுக்குப் பதிலாக இன்னும் வேறு எதையாவது நீங்கள் உள்ளே திணிக்க முற்பட்டால், அது பிழையான காரியமாகும். வேதமானது பிழையில்லாததாக இருக்கிறது. இயேசு கூறினார்: ''அவனது பங்கை ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடுவேன்'' என்று. 79. "ஜீவ புஸ்தகத்தின் எந்தப் பகுதியிலிருந்து?" என்று நீங்கள் கேட்கலாம். 80. ஜீவபுஸ்தகத்தில் தங்களுடைய பெயர்கள் எழுதப்பட்டுள்ள மக்கள் அநேகர் உள்ளனர். அவர்கள் நிச்சயம் தவறிடப்போகின்றனர். அதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? அன்றொரு இரவில் கொடுக்கப்பட்ட அதைப் பற்றி உபதேசத்தை நினைவில் வைத்திருக்கிறீர்களா? அதைப் புரிந்து கொண்டீர்களா? அதைப் பற்றி நான் மீண்டும் விளக்குவேன். ஏனெனில் இன்னும் அது சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை போலும் பாருங்கள்? 81. யூதாஸ்காரியோத்து சாத்தானின் மைந்தனாயிருந்தான். அவன் மாம்சத்தில் தோன்றிய பிசாசாவான். அவன் அப்படிப்பட்டவன் என்று வேதம் கூறுகிறது. அவன் கேட்டின் மகனாகப் பிறந்தான்'' என்று வேதம் கூறுகிறது. 82. இதை ஒரு நிமிடம் கவனியுங்கள். இயேசு நடுவில் இருக்க, வலது புறத்தில் ஒருவனும், இடது புறத்தில் ஒருவனுமாக இரு கள்ளர்கள் அங்கே இருக்கிறார்கள். இயேசு தேவனுடைய குமாரனாயிருந்தார். அது சரிதானே? சிலர் மூன்று சிலுவைகளைத்தான் காண்கிறார்கள். ஆனால் நான்கு சிலுவையானது அங்கே இருந்தன. நான்கு சிலுவைகள்! சிலுவைகள் என்ன? அது மரத்தினால் ஆனது. அது சரிதானே? “ மரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்ட வனாயிருக்கிறான்'' என்று வேதம் கூறுகிறது. அவர் நமக்காக சாபமானார். அவர் ஒரு மரத்தில் தூக்கப்பட்டார். அது வெட்டப் பட்டுள்ளது. ஆனால் அது ஒரு மரம் தான். அது சரிதானே? அங்கே மலையின் அடிவாரத்தில், கீழே ஒரு மரத்தில் இன்னொருவன் தொங்கிக் கொண்டிருக்கிறான். யூதாஸ் ஒரு காட்டத்திமரத்தில் நான்றுகொண்டான். அது சரிதானே? 83. பாருங்கள்! இதோ இங்கே பரலோகத்திலிருந்து வந்தவரான தேவகுமாரன் தன்னோடு பாவத்திலிருந்து மனந்திரும்பிய ஒருவனை எடுத்துக்கொண்டு, மீண்டும் பரலோகத்திற்கே திரும்புகிறார். இதோ அங்கே கேட்டின் மகன் தொங்குகிறான். அவன் பாதாளத்தில் இருந்து வந்தான். மீண்டும் பாதாளத்திற்கே, மனந்திரும்பாத பாவியொருவனை அழைத்துக்கொண்டு செல்லுகிறான். அந்த மனந்திரும்பாத பாவி இயேசுவைப் பார்த்து, “ நீர் தேவனுடைய குமாரனேயானால், உம்மையும் எங்களையும் இரட்சித்துக் கொள்ளும்” என்று கேட்டான். 84. ஆனால் இந்தக் கள்ளனோ, (சுவிசேஷம் பிரசங்கிக்கிறவனாக அச்சுவிசேஷகன் இருக்கிறான்). “ நாமோ குற்றம் செய்து அடிக்கப்படுகிறோம். அவரோ ஒரு குற்றமும் செய்யவில்லை'' என்று கூறினான். “ ஆண்டவரே, நீர் உம்முடைய இராஜ்யத்தில் வரும் போது அடியேனை நினைத்தருளும்" என்று கேட்டான். ஓ, அவன் யார்? 85. கடந்த இரவோ, அல்லது அதற்கு முந்தின இரவோ சொல்ல வேண்டியவை விட்டுப்போயிற்று. கொஞ்சம் அதைக் கூறுகிறேன். இந்தப் பக்கம் தேவனின் ஆபேல்; அந்தப் பக்கம் பிசாசின் காயின். காயின் ஆபேலை பலிபீடத்தண்டையில் கொன்றான். யூதாஸும் இயேசுவை பலிபீடத்தண்டையிலே கொன்றான். அது உண்மை. அந்தப் புகையானது ஏதேனில் எழும்பி மீண்டும் இங்கேதான் அமைகிறது, அது முற்றிலும் உண்மை . 86. ஓ, அந்த பண்டைகால பாதை மகிமை பொருந்தினதாய் இருக்கிறது. அது ஆசீர்வதிக்கப்பட்ட பழைய பாதை, அப்படியே முழுவதும் மகிமையால் நிறைந்துள்ளது. 87. இந்த சர்தை சபையின் தூதனுக்கு அவர் கூறுகிறார்: ''ஏழு ஆவிகள், அந்த ஏழு ஆவிகளை உடையவர்'' என்று கூறியதை நாம் கண்டோம். “ சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்ன வெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; வெளி.3:1 88. தேவன் ஒரே ஆவிதான் என்பதை எத்தனைபேர் அறிவீர்கள்? தேவன் தான் பரிசுத்த ஆவியானவர் என்பது உண்மை . பிதாவாகிய தேவனே பரிசுத்த ஆவியானவராக இருக்கிறார். எல்லாம் அவரே. ஏனெனில் மரியாள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியானாள். தேவன் இந்த ஒரே ஆவியானவரை, ஏழு வெவ்வேறு காலங்களில் சுவிசேஷ ஒளிகளாக ஏழு சபைக் காலங்களுக்கு அனுப்பினார். நீங்கள் புரிந்து கொண்டீர்களா? ஏழு சபைக்காலங்கள். 89. “ தேவன் அப்படிச் செய்யமாட்டார்'' என்று நீங்கள் கூறலாம். நிச்சயமாக சகோதரனே, அப்படித்தான். 90. கவனியுங்கள்! எலியா எடுக்கப்பட்ட பிறகு, எலியாவின் ஆவியை தேவன் உபயோகித்தார். எலியா போன பிறகு எலியாவில் இருந்த ஆவியின் இரட்டிப்பு மடங்கை எலிசா பெற்றுக் கொண்டான். எலிசா வியாதிப்பட்டு மரித்துப்போன பிறகு, அந்த ஆவி மீண்டும் யோவான் ஸ்நானகன் மேல் வந்தது. அதே ஆவிதான் இவனையும் அந்த எலியாவைப் போலவே நடந்து கொள்ளச் செய்தது. இவனும் அவனைப் போலவே வனாந்திரத்தில் வாழ்ந்தான். இன்னும் இன்னபிற ஏனைய காரியங்களையும் அவனைப் போலவே யோவான் ஸ்நானனும் செய்தான். அதே எலியாவின் ஆவி இந்தக் கடைசிக்காலத்தில் திரும்பி வரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. பாருங்கள். தேவன் அதே ஆவியை தொடர்ந்து வரும் காலங்களில் உபயோகிக்கிறார். 91. இயேசுவானவர் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, நன்மை செய்கிறவராக சுற்றித் திரிந்தார். அது சரிதானே? இயேசுவின் மேல் இருந்த அதே ஆவியானவர், நேராக சபைக்குள் பெந்தெகொஸ்தே என்னும் நாளில் திரும்பி வந்தார். அடுத்து வந்த காலத்திற்குள்ளும் அதற்கடுத்து வந்த காலத்திற்குள்ளும் பின்னும் தொடர்ந்து வந்த காலங்களுக்குள்ளும் அதே ஆவியானவர் தொடர்ந்து அப்படியே வந்து கொண்டே வந்திருக்கிறார். அது என்ன? அதே ஆவியானவர், ஒரே ஆவியானவர்தான் அது. ஓ, உங்களால் அதைக்கண்டு கொள்ள முடியவில்லையா? தேவன் நமக்கு மேலே, பிதாவாக; தேவன் நம்முடனே, குமாரனாக; தேவன் நமக்குள் பரிசுத்த ஆவியாக, அது மூன்று உத்தியோகங்கள் தான் மூன்று தேவர்களல்ல. அந்த மூன்று பட்டங்களாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இவை யாவும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே நாமத்திற் குரியவையாகும். 92. தொடர்ந்து நாம் படிக்கையில் கவனியுங்கள். “ ஏழு ஆவிகளை'' உடையவர். அதாவது: ''ஏழு செய்தியாளர்களை உடையவர்'' முதலாம் தூதனாகிய பவுலை நிரப்பியிருந்த அதே ஆவிதான், இரண்டு, மூன்று, நான்கு ஐந்து, ஆறு, ஏழு, ஆகிய சபைக் காலங்களின் தூதர்களையும் நிரப்பியிருந்தது. அவர்கள் யாவரும் அவருடைய வலது கரத்தில் இருக்கிறார்கள். அவருடைய வலது கரத்திலிருந்து தங்களுடைய வல்லமையையும், ஒளியையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். 93. அவர் உன்னதத்திற்கு ஏறிப்போனார். பிலிப்பு, இல்லை, ஸ்தேவான் மரித்துக்கொண்டிருக்கையில், “ வானங்கள் திறந்திருக்கிறதையும், இயேசு தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறதையும் காண்கிறேன்'' என்று கூறினான். “ தேவனுடைய வலது கரத்தில்'' என்பது தேவனுக்கு ஏதோ பெரிய வலது கரம் இருப்பதாகவும், அந்தக் கையின் மேல் இயேசு உட்கார்ந்திருப்பதாகவும் அர்த்தமல்ல. வலது கரம் என்றால், ''வல்லமையும் அதிகாரமுமாகிய' வலது கரம் என்றுதான் பொருள். 94. தேவன் சிருஷ்டித்த அந்த சரீரம்... “ என்னுடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர். அவரது ஆத்துமாவை நான் பாதாளத்தில் விடேன். அவரை நான் மூன்றாம் நாளில் எழுப்பி, அவரை பலி பீடத்தின் மேல் ஆவியானவரின் இடத்தில் உட்கார வைத்தேன்'' கவனியுங்கள், பலிபீடத்தின்மேல் உட்கார்ந்திருந்த அவருடைய கரத்தில் ஒரு புத்தகம், பூமியிலுள்ள எந்தவொரு மனிதனோ, பூமிக்கு கீழேயுள்ள ஒருவனோ, அல்லது எங்குள்ளவனாக இருந்தாலும் சரி, அப்புத்தகத்தை திறக்கவோ, அதை நோக்கிப் பார்க்கவோ பாத்திரவனாகக் காணப்படவில்லை; ஆனால் உலகத் தோற்றத்திற்கு முன்னரே அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே; இவரே ஆதிகாலத்தில் மீட்கப்பட்ட இந்த சரீரத்தை துவக்கினார். இவர் வந்து சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்திலிருந்து அப்புத்தகத்தை வந்து வாங்கி அவரே அதன் மேல் உட்கார்ந்து கொண்டார். பார்த்தீர்களா? அது வேத வாக்கியமாயிருக்கிறது. அது மிகவும் அழகாக இருக்கிறது, பாருங்கள்? 95. “ நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடே கூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ, அவனும் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன்.'' அதாவது, நான் என்னுடைய சரீரத்திற்குள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டு, சோதனைகளின் மூலமாக உலகத்தின் காரியங்களையெல்லாம் நான் ஜெயித்தேன். நான் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு விட்டேன். (தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப் பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது). “ வானத்திலும் பூமியிலும் உள்ள சகல அதிகாரமும் என் கரங்களில் ஒப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது'' என்றார். அனைத்து அதிகாரமும்! எல்லா அதிகாரமும் இயேசுவின் கையில் வந்து விட்டது! தேவன் வேறொரு நபர் என்றிருக்குமானால் அப்பொழுது, தேவன் அதிகாரமில்லாதவர் என்றாகிவிடுமே. இயேசு உயிர்த்தெழுந்த பிறகு “ வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது'' என்று கூறினதாக வேதம் கூறுகிறது. 96. இயேசுவானவர் ஆயிரம் பதினாயிரம் பேர்களான தமது பரிசுத்தவான்களோடு வருகிறார். வேதம் கூறுகிறது: ''பரலோகத்தில் அரைமணி நேரமளவும் அமைதல் உண்டாயிற்று'' என்று. அதாவது பரலோகம் காலியாகிவிட்டது. அப்படியானால், தேவன் என்ற இந்தப் பெரியவர் எங்கே? உ-ஊ. பாருங்கள். அவர் கிறிஸ்துவில் இருக்கிறார் நிச்சயமாக! நாமும் அவரைப்போலவே, பரிசுத்த ஆவியினால் ஜெயங்கொள்ளும் பொழுது, நாமும், அவர் பூமிக்குரிய தாவீதின் சிங்காசனத்தை எடுத்துக் கொள்கையில், அவரோடே கூட உட்கார்ந்து, அவர் அங்கே செய்தது போலவே (ஆமென்) வல்லமையோடும், அதி காரத்தோடும், பூமி முழுவதையும் ஆளுகை செய்வோம். தேவ புத்திரர் வெளிப்படுவதற்காக பூமியானது பிரசவ வேதனைப்பட்டு தவித்துக் கொண்டிருக்கிறது. தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்காக. 97. ஏனெனில், இவ்வுலகமானது தேவனால் ஆளுகை செய்யப்படு வதற்கென கொடுக்கப்படவில்லை. அதை அறிந்து கொள்வோமாக. அது உண்மை. இப்பூமியின் தேவன் யார்? மனிதன்! அது அவனுடைய உடைமை. பூமியிலுள்ள அனைத்தும் மனிதனுக்குக் கீழ்ப்பட்டவையாகும். பாவத்தினால் அவன் வீழ்ந்தான். கிறிஸ்துவின் மீட்கும் வல்லமையால், அவன் மீண்டும் அதிகாரத்திற்கு வருகிறான். அது சரிதான். ஏனெனில், பூமியானது மனிதனுக்கு சொந்தமானது ஆகும். அது அவனுக்கு அளிக்கப்பட்டு, அவன் யாவற்றையும் ஆளுகை செய்ய வேண்டு மென்றிருந்தது. இயற்கை யாவும் ஏகமாய் தவிக்கிறது. தேவ புத்திரர் பிரத்தியட்சமாவதற்கான அந்த நாளுக்காக அவைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. ஓ, என்னே! தேவபுத்திரர் வெளிப்படுதல். நாம் இதோடு இதை விட்டு விடுவோம். 98. அந்த செய்தியாளர்கள் அவருடைய வலது கரத்தில் இருந்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாம் அவர் அவர்களை அனுப்புகிறாரோ, அங்கெல்லாம் சென்று, ஒரே காரியத்தையே அவர்கள் பேசுகிறார்கள். கிறிஸ்துவில் இருந்த அதே பரிசுத்த ஆவிதான் இவர்களுக்குள்ளும் இருக்கிறது. ஓ, கிறிஸ்துவில் இருந்த அதே ஆவி! அவர் உலகத்தைவிட்டுப் போவதற்கு முன்னால், “ இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் என்னை காணாது (உலகம் என்பதற்கு கிரேக்க மொழியில் ''காஸ்மோஸ்'' - அதன் அர்த்தம் ''உலக ஒழுங்கு அல்லது அமைப்பு'' என்பதாகும்பூமியல்ல - உலகம்) உலக அமைப்பானது இனி என்னை காணாது. ஸ்தாபனங்கள் முதற்கொண்டு அனைத்து உலக அமைப்புக்களும் என்னைக் காணாது. ஆனால் நீங்களோ என்னைக் காண்பீர்கள் (சபைவிசுவாசி காண்பார்கள்). ''நான் உங்களோடும் உங்களுக்குள்ளும் உலகத்தின் கடைசி பரியந்தம் இருப்பேன்'' என்று கூறிச் சென்றார். (இதில் நான் என்பது இடப்பிரதிப் பெயராக இருக்கிறது). இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவாராயிருக்கிறார். அதைக் கண்டு கொண்டீர்களா? 99. பெந்தெகொஸ்தே நாளில் வந்தது கிறிஸ்துவின் பரிசுத்த ஆவிதான் என்றும், அவரே அக்காரியங்களையெல்லாம் செய்தாரென்றால் இன்னமும் இங்கே பற்றிக் கொண்டிருக்கிறார். அடுத்து இங்கே பற்றிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு உலகத்தின் கடைசி பரியந்தமும்; கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியானவர் விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறார். பவுலை பரிசுத்த ஆவியால் நிரப்பி, அம்மகத்தான காரியங்களைச் செய்யச் செய்த அதே பரிசுத்த ஆவியானவர் தான் ஐரேனியஸையும் முழுவதும் நிரப்பினார். அதே பரிசுத்த ஆவியானவர்தான் மார்டினையும் நிரப்பினார். மற்றும் ஏனையோர்களையும் முழுவதுமாக அதே பரிசுத்த ஆவியானவர் தான் நிரப்பினார். அவர் தான் உங்களையும் என்னையும் முழுவதும் பரிசுத்த ஆவியினால் நிரப்பியுள்ளார். அதுதானே முதல் சபைக்காலம் முதற்கொண்டு முடிவு வரைக்கிலும் உள்ள சபைக்காலம் முடிய கிடைத்த பெந்தெகொஸ்தே ஆசீர்வாதமாயிருக்கிறது. அவர் அல்ஃபாவும் ஓமேகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறார். அவரே எல்லாம்; தாவீதின் வேரும் சந்ததியுமானவர்; விடிவெள்ளி நட்சத்திரம், சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலி, இன்னும் என்ன வெல்லாம் உண்டோ எல்லாம் அவரே, பிதா குமாரன், பரிசுத்த ஆவி. அவர் இருந்தவரும் இருப்பவரும், வருகிறவருமானவர், அல்ஃபாவும் ஓமேகாவுமாயிருக்கிறார். எல்லாவற்றிலும் எல்லாமு மாயிருக்கிறார். அது என்னை ஒரு பாடலைப்பாடச் செய்கிறது. என்னை யாரென்று நீர் சொல்கிறீர் (இயேசு சொன்னார்) நான் எங்கிருந்து வந்தெனென்கிறீர்கள்? என் பிதாவை உங்களுக்குத் தெரியுமா? அல்லது அவரது நாமத்தை நீங்கள் சொல்ல முடியுமா? அவர் சொன்னார்: நான் அல்ஃபாவும் ஓமேகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் முழு சிருஷ்டியும் நானே, இயேசு என்பது எனது நாமம் எரியும் முட்செடியிலிருந்து மோசேயுடன் பேசியது நானே, நானே ஆபிரகாமின் தேவனும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாமே சாரோனின் ரோஜாவும் நானே நான் வந்தது எங்கிருந்து என்று அறிவீரோ? முழு சிருஷ்டியும் நானே, இயேசு இயேசு என்பது எனது நாமம். 100. பூலோகத்திலும் பரலோகத்திலுமுள்ள முழுக் குடும்பமும் அந்த ஒரே நாமத்தினால் கட்டப்பட்டுள்ளனர். (அக்குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, குதித்து, பரிசுத்த ஆவியினால் நாமம் சூட்டப்பட்டு, பரிசுத்த ஆவியினால் பேசி பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்களாயிருக்கிறார்கள்) அது உண்மை . பரலோகத்தின் தேவனுக்கு முன்பாக பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பமும், மற்றும் யாவும், எல்லா முழங்கால்களும் அந்த நாமத்திற்கு முடங்க வேண்டும். 'மனிதன் இரட்சிக்கப்படும்படி வானத்தின் கீழே இயேசுவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவுமில்லை.'' ஓ, நான் அதை நேசிக்கிறேன். அது நன்றாக இருக்கிறது சரி. 101. "அவருடைய வலது கரத்தில்'' அது என்னவென்று கண்டு கொண்டீர்களா? அது பெந்தெகொஸ்தே அனுபவம் பெற்ற சபையாக வல்லமையோடும், அற்புத அடையாளங்களோடும் காலங்கள் தோறும் அதை நடப்பித்து வந்திருக்கிறதாக இருந்து வந்துள்ளது. இப்பொழுது நாம் .... அது இருண்ட காலத்தினூடே சென்றபோது, ஏறத்தாழ அது அவிந்துபோனதாக ஆகிவிட்டது. இப்பொழுது நாம் 2ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். ஓ, இந்த முதலாம் வசனத்திலிருந்து இன்னும் கூட கொஞ்சம் நாம் பார்க்கலாம் என்று நான் நம்புகிறேன். “ உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.” வெளி.3:1 102. இதற்கு அடுத்த சபைக்காலத்தைத் திருப்பிப்பாருங்கள் “ ....என்னுடைய நாமத்தை நீ மறுதலியாமலிருக்கிறதையும் ...'' இதையடுத்து வரும் சபைக்காலத்தில், “ என் நாமத்தை மறுதலிக்கவில்லை'' யென்றும் கூறுகிறார். ஆனால் இந்த சபைக் காலத்திலோ, “ உனக்கு ஒரு பெயர் உண்டு'' என்று கூறப்படுகிறது. இங்கே கவனியுங்கள்! இந்த சபை அவர் நாமத்தைப் பற்றியிருந்தது. (இரண்டாம் சபை - மொழிபெயர்ப்பாளர்). இந்த சபை அவர் நாமத்தைப் பற்றியிருந்தது இந்த சபை இருண்ட காலத்திற்குள் சென்றது. அங்கே அதைப்பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. அச்சபைக் காலத்தைவிட்டு வெளி வந்து, ஜீவனிடம் அவர்கள் இந்தப் பக்கத்தில் வரும்போது - லூத்தர் அவர்களை வெளியே இழுத்தபோது, தப்பியவர்களான அச்சிறு கூட்டம் இருந்தது; “ நீ உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்'' என்ற நிலைமை இயேசுவின் நாமத்தை உபயோகிப்பதை அவர்கள் விட்டுவிட்ட பிறகு, எந்த நாமத்தை அவர்கள் உபயோகிக்க ஆரம்பித்தார்கள்? பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. அப்படிப் பட்ட ஒரு காரியம் அங்கே இல்லை. அது மரித்ததாயிருக்கிறது. அது மரித்துப்போன உபதேசக் கோட்பாடு. 103. பிதா என்பது ஒரு நாமமா என்பதை எனக்குச் சொல்லுங்கள். இங்கே எத்தனை பிதாக்கள் உண்டு? கைகளை உயர்த்துங்கள். உங்களில் யாருக்காவது 'பிதா' 'அல்லது' 'குமாரன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதா? மனிதர்கள் ஆக இருக்கிறோம். அது பெயரல்ல. பரிசுத்த ஆவியின் பெயர் பரிசுத்த ஆவியல்ல. அது பரிசுத்தமான ஆவியாயிருக்கிறது. பரிசுத்த ஆவி என்பது அதன் பெயரல்ல. அது பட்டம் தான். பிதா குமாரன், பரிசுத்த ஆவி. 104. எனவே பாருங்கள், நித்திய குமாரன் என்ற உபதேசத்தைப் போலவே இதுவும் ஆதாரமற்றதாய் இருக்கிறது. நித்திய குமாரத்துவம் என்ற ஒன்று இல்லை. ஒரு குமாரனென்னப்பட்டவன் துவக்கமுள்ளவனாகப் பிறக்கிறான். நித்தியத்திற்கு துவக்கம் ஏதுமில்லை. 105. நான் அன்றிரவு கூறியது போல, நித்திய நரகம் என்ற ஒன்று இல்லை. நித்திய நரகம் என்ற ஒன்று எப்படி உண்டாயிருக்க முடியும்? அப்படியென்றால், நரகமானது எப்பொழுதும் இருந்த ஒன்று என்றாகிவிடும். 'அது பிசாசுக்காகவும், அவனது தூதர்களுக்காவும் உண்டாக்கப்பட்டது'' என்று வேதம் கூறுகிறது. எப்பொழுதும் அங்கே ஒரு நரகம் உண்டாயிருக்கிறது என்றிருக்குமானால், ஆதியிலும் அது இருந்திருக்க வேண்டும். அப்படியானால் அவர், "ஏல், ஏலா, ஏலோஹிம், தானாகவே இருக்கிறவர்'' என்பவராக இருக்கையில், அப்பொழுது ஒன்றுமே சிருஷ்டிக்கப்படாமல், ஒன்றுமற்ற நிலையில், யார் அந்த நரகத்தை உபயோகப் படுத்தினார்கள்? அப்பொழுது நரகமானது அவர் ஆதியில் இருந்ததுபோலவே அதுவும் அவரோடு இருந்திருக்க வேண்டுமே. பாருங்கள்? நரகமானது பிசாசுக்காகவும், அவனது தூதர்களுக்காகவும் உண்டாக்கப்பட்டதாகும். துன்மார்க்கர் யாவரும் அதில் தள்ளப்படுவார்கள். (ஒலிநாடாவில் காலியிடம் -ஆசி). 106. அவர்கள் துவக்கத்திலேயே கண்டனத்திற்காளாகினார்கள். அவர்களுக்கு பார்வையே இல்லை. அவர்கள் ஆரம்பத்திலேயே மரித்தவர்களாயிருக்கின்றனர். அவர்கள் இனி மரிக்க வேண்டியதில்லை. அவர்கள் மரித்தவர்களாகவே துவங்குகிறார்கள். பாருங்கள், அவர்கள் வெளியே பறிக்கப்பட்டவர்கள் 107. இதைக் கவனியுங்கள். அடுத்த வசனத்தை நாம் வாசிப்போம். விழித்திருங்கள்! “ நீ விழித்துக் கொண்டு, சாகிறதற் கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்கு முன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.” வெளி.3:2 108. அவர் இப்பொழுது லூத்தரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நாம் யாவரும் இந்தக் காலம் லூத்தரன் காலம் என்றும், அது சீர்த்திருத்தத்தின் காலம் என்றும் ஒத்துக்கொள்கிறோம். அவர் என்ன சொன்னார்? “ நீ உயிருள்ளவன் என்று பொய்யாக பெயர் ஒன்றினைக் கொண்டிருக்கிறாய், ஆனால் நீயோ மரித்தவனா யிருக்கிறாய்.'' அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் மீண்டும் சபையை ஸ்தாபனமாக்கிவிட்டார்கள். “ கரிச்சட்டி கிண்டியை பார்த்து 'நீ கருப்பாய் இருக்கிறாய்' என்றதாம்.'' அதேபோல் ப்ராடெஸ்டெண்டுகள், “ கத்தோலிக்கர்கள்'' என்று கேலி செய்ய வேண்டாம். பாருங்கள், ஏனெனில் கத்தோலிக்க சமயத்தின் அதே கோட்பாடுகளையும் சடங்காச்சாரங்களையும் அப்படியே நீங்களும் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மேன்மைபாராட்ட ஏதுவில்லை. லூத்தர் வெளியே வந்தபொழுது, அவர் தன்னோடு கத்தோலிக்க சமயத்தின் ஞானஉபதேசம் இன்னும் ஏனைய இன்னபிற சடங்காச்சாரங்களையும் கொண்டு வந்தார். தங்களுக்குத் தாங்களே ஒரு பெயரை சூட்டிக்கொண்டார்கள். பாருங்கள், "நீ உயிருள்ளவன் என்று பெயரைக் கொண்டிருக்கிறாய். அந்த மரணாந்தகார ஆயிர வருடங்களிலிருந்து வெளிவந்து இன்னமும் மரித்ததாகவே இருந்து கொண்டு, இன்னமும் உயிரோடியிருக்கிறதாகக் கூறும் அந்நாமத்தைக் கொண்டிருக்கிறாய்'' இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 109. இதை உறுதிப்படுத்தும் வகையில், ஏனைய சபைகளைப் பற்றி இயேசு, “ நீ என் நாமத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறாய்'' என்று கூறியுள்ளார். இந்த ஐந்தாம் சபைக்காலத்தில் அவர்கள் அந்நாமத்தை இழந்து விட்டார்கள். இருண்ட காலத்திலிருந்து வெளியே வந்தபிறகு, அது உயிருள்ளவன்'' என்று பெயர் கொண்டிருந்தாலும் அது மரித்ததாகவே இருக்கிறது என்று ஆண்டவர் கூறினார். 110. ஓ, மெதோடிஸ்ட்டுகளே, பாப்டிஸ்டுகளே, ப்ரெஸ்பிடேரியன்களே, பெந்தெகொஸ்தேயினரே, நீங்கள் பாவமன்னிப்புக் கென்று மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ் நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அந்த பழைய மரித்ததாயிருக்கிற கத்தோலிக்க சபையின் கோட்பாடுகளைவிட்டு அகன்றுபோங்கள். அவளும் அவளுடைய குமாரத்திகளும் சுட்டெரிக்கப்படுவார்கள். 111. ஒருவரும் “ பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் '' நாமம் சரி என்று சொல்ல முடியாது. அவை வெறும் பட்டப்பெயர்களே. அவை அவர்கள் “ பரிசுத்த திரித்துவம்'' என்று அழைக்கிறார்கள். வேதாகமத்தில் “ திரித்துவம்' என்ற வார்த்தையை எனக்கு எடுத்துக் காண்பியுங்கள் பார்க்கலாம். யாராவது “ திரித்துவம்' என்ற வார்த்தையை வேதாகமத்தில் கண்டால், வந்து என்னிடம் சொல்லுங்கள் பார்க்கலாம். வேதாகமத்தில் அந்த வார்த்தையே கிடையாது. அவ்விதமான ஒன்று கிடையாது. 112. இப்பொழுது, இப்பொழுது “ ... சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை...'' 113. "லூத்தர் உங்களை இருளிலிருந்து பறித்து வெளியே இழுத்து காப்பாற்றினாரே, உங்களுக்கு உள்ளதைப் பற்றிக் கொண்டிருங்கள். அதைப்பற்றிக்கொள்ளுங்கள் ஏனெனில் அது சாகிறதற்கேது வாயிருக்கிறது. அவர்கள் மறுபடியும் உன்னை அதற்குள் இழுத்து விட்டு விடுவார்கள் அதைப்பற்றிக் கொள். அது சாகிறதற்கேதுவாக இருக்கிறது'' 114. '...உன் கிரியைகள் தேவனுக்கு முன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை." (வெளி.3:2.) 115. இது அருமையாக அமைந்துள்ளதல்லவா? ஓ, என்னே! “ நிறைவுள்ளதாக இருக்கவில்லை'' என்று கூறப்பட்டுள்ள காரியத்தை நான் விரும்புகிறேன். ஏன் தெரியுமா? லூத்தர் விசுவாசத்தினால் நீதிமானாகுதல் என்பதை மட்டுமே பிரசங்கித்ததால், அவர்கள் நீதிமானாகுதல் என்ற நிலையோடு நின்று விட்டார்கள். அதனால் அது நிறைவடையவில்லை. நீதிமான் ஆனதன்பிறகு ஒருவன் பரிசுத்தமாக்கப்பட்டு பரிசுத்த ஆவியைப் பெற வேண்டும். அதன் பிறகு அவர்கள் தனக்கே சொந்தமானவர்களல்ல, பரிசுத்த ஆவி யினால் நிறைவுள்ளவர்களாக ஆக்கப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் தங்களில் தாங்களே நிறைவுள்ளவர்கள் அல்ல. அவர்களிலுள்ள பரிபூரணமான பரிசுத்த ஆவியே நிறைவுள்ளதாக இருக்கிறது. பாருங்கள்? நான் ஏற்கெனவே கூறியபடி, ''அந்த மலை பரிசுத்த மலையல்ல, அம்மலையின் மேல் உள்ள பரிசுத்தமான தேவன்தான். சபை பரிசுத்தமான சபை என்றல்ல, பரிசுத்த மக்கள் என்றல்ல, ஆனால் சபையிலும் மக்களிலும் இருக்கிற பரிசுத்த ஆவியானவர்தான்'' அதுவே பரிசுத்தமுள்ள பாகம் ஆகும். 116. 'உன் கிரியைகள் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.'' அவர்கள் பரிபூரண நிலைக்கு வரவில்லை. ஏனெனில் அவர் களுக்கு நீதிமானாகுதல் என்ற நிலை மட்டுமே உள்ளது. லூத்தரின் செய்தியின்கீழ், நீதிமானாகுதல் வந்தது. அடுத்து இங்கே பரிசுத்த மாகுதல், அதற்கடுத்து பரிசுத்த ஆவியின் அபிஷேகம். இம்மூன்று ஆதாரமான விஷயங்களும் முறையே கடைசியான மூன்று சபைக் காலங்களிலும் கிரியை செய்தது. பாருங்கள்? இம்மூன்று மூலக்கூறுகளும் சேர்ந்தால் தான் ஒரு முழுமையான மறுபிறப்பை உண்டாக்க முடியும். அவர்கள் ஒரு சிறு கிருமியான தாயின் கர்ப்பத்தில் உருவானார்கள். அவ்ளவுதான். ஆனால் பிறப்பை ஏற்படுத்த பரிசுத்த ஆவி தான் வரவேண்டும். 117. நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். ஒரு இயற்கையான பிறப்பு ஏற்படும் பொழுது, முதலாவது நடப்பதென்ன? தண்ணீர் வெளிவருகிறது. அடுத்ததாக இரத்தம் வெளிவருகிறது. அதற்கடுத்து என்ன? ஆவி - ஜீவன். அது சரிதானே? 118. இயேசு மரித்த பொழுது அவருடைய சரீரத்திலிருந்து என்ன வெளிவந்தது? அவருடைய விலாவிலே அவர்கள் ஈட்டியால் குத்திய போது, விலாவிலிருந்து, தண்ணீரும் இரத்தமும் வந்தது. ''உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்'' என்றார் அவர். ஆகவே தண்ணீர், இரத்தம், ஆவி மூன்றும் வெளிவந்தன. 119. “ இவ்விதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப் பட்டிருக்கிறபடியால்'' ரோமர் 5:1 “ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்'' நீதிமான்களாக்கப்படுதல், பரிசுத்த மாக்கப்படுதல், எபிரெயர் 13:12-13. “ தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனங் களை பரிசுத்தம் பண்ணும்படி இயேசு நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.'' லூக்கா 24:49, "நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனாக தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத் தில் இருங்கள், பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்பொழுது, நீங்கள் எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள். 120. நீங்கள் அத்தியட்சகராக ஆகும் பொழுது அல்ல, நீங்கள் உதவிக்காரராக ஆகும்பொழுது அல்ல, நீங்கள் மேய்ப்பனாக ஆகும்பொழுது அல்ல, நீங்கள் போப்பாக ஆகும் பொழுது அல்ல, “ பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்பொழுது, நீங்கள் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்'' என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் வெறும் டீக்கனாக (உதவிக்காரர்) மட்டும் இருந்தால், நீங்கள் வெறும் ஒரு மேய்ப்பனாக மட்டும் இருந்தால், நீங்கள் வெறும் ஒரு போப்பாக மட்டும் இருந்தால் உங்களால் உங்களுடைய சபையைக் குறித்துத் தான் சாட்சியாக இருக்க முடியும். நீங்கள் ஒரு சடங்காச்சார கோட்பாட்டிற்கு மட்டுமே சாட்சியாக இருக்க முடியும். ஆனால் பரிசுத்த ஆவி உங்கள் மேல் வரும்பொழுது, அப்பொழுது நீங்கள் அவரைக் குறித்து சாட்சியை உடையவர்களாய் இருப்பீர்கள். அவர் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். ஏனெனில் அவருடைய ஜீவன் உங்களில் இருப்பதால். ஓ, ஓ! என்னே , என்னே ! ஆம் ஐயா, ஓ, இதுபோல் இன்னும் ஏராளமான நல்ல காரியங்கள் என்னிடம் இங்கு வந்த வண்ணமாக உள்ளது. சகோதரர்களே! இதைக் கேட்கையில் நீங்கள் உணருவதை விட நான் மிகவும் அருமையாக உணருகிறேன். 121. “ ... சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து.'' இங்கே இந்த மூன்றாம் வசனத்தில் அவர் இவ்வாறு கூறுகிறார். “ ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக் கொண்ட வகையை (நான் அதை விரும்புகிறேன்) (தமிழ் வேதாகமத்தில் 'கேட்டுப் பெற்றுக்கொண்ட என்று போடப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கில வேதாக மத்தில் “ நீ பெற்றுக்கொண்டதையும் காதால் கேட்ட வகையையும் நினைவு கூர்ந்து'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “ ஆகையால் நீ பெற்றுக் கொண்ட வகையையும், கேள்விப்பட்ட வகையையும் (செவிகொடுத்த வைகளையும்) நினைவு கூர்ந்து, அதைக்கைக் கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன் மேல் வருவேன்; நான் உன் மேலும் வரும் வேளையை அறியாதிருப்பாய்.” வெளி.3:3 122. “ நீதிமானாகுதல் என்பதில் நீ நிலைத்திரு. அதைப் பற்றிக் கொண்டிரு'' என்று அவர்களுக்கு கூறினார். “ நீ பெற்றுக் கொண்டதையும், காதால் கேட்டதையும் உன்னிடமிருந்து அவர்கள் அபகரித்துக்கொள்ள விட்டுவிடாதே'' என்று அவர்களுக்கு கூறுகிறார். அதே வேதாகமத்தைத் தான் அவர்களும் வாசிக்கிறார்கள். பாருங்கள். ஆனால் அவர்களோ அதன் முழுமையையும் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் அது அவர்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. அது அவர்களுடைய காலத்திற்குரியதல்ல. அக்கார ணத்தினால் தான். அவர்கள் உயிர்தெழுதலில் வருவார்கள். அவர்கள் நடப்பதெற்கென எந்த அளவு ஒளி அவர்களுக்குக் கிடைத்ததோ, அவ்வொளியில் அவர்கள் நடந்து வந்தார்கள். எனவே, அவர்கள் உயிர்த்தெழுதலில் வருவார்கள். 123. அபிஷேகத்தைப் பற்றி பிரசங்கிக்கிற அநேக பெந்தேகொஸ் தேகாரர்கள் ''லூத்தர் காலத்து லூத்தரன்கள் மற்றும் ஏனையோர் எழும்பிவரமாட்டார்கள்'' என்று சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். ஓ, ஆம். அங்கேயிருக்கிற டாக்டர் ஹேக்கரி அவர்களை சந்தித்ததைப் பற்றி ஒரு சிறு சம்பவம் உண்டு. நான் அவரிடம் கூறினேன்... அவர் என்னிடம் கேட்டார். “ நாங்கள் என்ன நிலையில் இருக்கிறோம்'' என்று அவர்கள் மினியாபோலிஸ் என்ற இடத்தில் உள்ள பெத்தனியில் அந்தப் பெரிய லூத்தரன் வேதாகமக் கல்லூரியைக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். அவர் கேட்டார். ''லூத்தரன்களாகிய நாங்கள் என்னத்தைப் பெற்றிருக்கிறோம்?'' என்று. 124. “ நான் உங்களுக்கு கூறுவேன், நீங்கள் கிறிஸ்துவைப் பெற்றிருக்கிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன்'' என்று நான் பதிலளித்தேன். 125. அவர் கூறினார்: “ நல்லது, நாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற விரும்புகிறோம். நாங்கள் அதைப் பெற்றுள்ளோம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?'' என்று கேட்டார். 126. "அதை மறைமுகமாக (Potentially) பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் அதைப்பற்றி விசுவாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்'' என்றேன் நான். 127. “ நீங்கள் சொல்வதின் பொருள் என்ன? என்று கேட்டார். 128. அவர்களுக்கு உள்ள வேதாகமக் கல்லூரியைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உண்டு. அங்கே கல்வி பயிலும் மாணவர்களால் கல்லூரிக் கட்டணத்தைக் கட்ட இயலவில்லையெனில், அம்மாணவர்கள் அவ்விளை நிலங்களில், தானியம் விளைவித்தும், அதன்மூலம் தங்கள் கட்டணத்தை ஈடுகட்டிவிட அனுமதிக்கப்படுவார்கள். அங்குள்ள அந்தப்பெரிய வேதக் கல்லூரியில் எனக்கு ஸ்மார்கேஸ்போர்ட் விருந்து கொடுத்தார்கள். (ஸ்மார்கேஸ்பார்ட் என்பது பஃபே முறையில் (In Buffet Style) பசியைத் தூண்டுகிறவைகளும், மிக ருசியான சீஸ், மீன் இறைச்சி, சேலட் ஆகியவைகள் பரிமாறப்படும் ஒரு வகை உயர்ந்த விருந்து - மொழிபெயர்ப்பாளர்) என் அருகில் இந்தப் பக்கத்தில் டாக்டர் ஹேக்கரி அவர்களும், அந்தப் பக்கத்தில் ஜேக் மூர் அவர்களும் அமர்ந்திருந்தனர். ஜேக் மூர் என்பவருக்கு அருகில் நான் உட்கார்ந்திருந்ததன் காரணம், டாக்டர் ஹேக்கரி அவர்கள் பெரிய பண்டிதரானபடியால், அவர் பேசும்பொழுது உபயோகிக்கும் பெரிய பெரிய வார்த்தைகளின் அர்த்தம் என்னவென்று நான் அறியாத படியினால், என் அருகில் அமர்ந்திருந்த ஜாக் மூரின் காலை என் காலினால் அழுத்தி அவர் சொல்லுகிறது என்னவென்றுகேட்டு அறிந்து கொள்ளத்தான், பாருங்கள். 129. அவர் என் அருகில் அமர்ந்திருந்தார். “ நாங்கள் தேவனுக் கென்று பசியுள்ளவர்களாயிருக்கிறோம். எனவே அது சம்மந்தமாக நாங்கள் கண்டுபிடிக்க ஏதாவது செய்தாக வேண்டும்'' என்றார். 'நாங்கள் ‘வரங்கள்' என்ற தலைப்பில் பெந்தெகொஸ்தேகாரர் எழுதின ஒரு புத்தகத்தை படித்தோம் நானும் எங்களில் சில சகோதரர்களும் இது சம்மந்தமாக இப்புத்தகத்தை எழுதின அந்த மனிதரை சந்திக்க கலிஃபோர்னியாவுக்குச் சென்றிருந்தோம். (நான் அம்மனிதரை அறிவேன்). 'நாங்கள் அவ்வரங்கள் எங்கள் மத்தியில் கிரியை செய்வதைக் காண விரும்புகிறோம்' என்று அவரிடம் கேட்டதற்கு 'அம்மாதிரி வரங்களைப் பெற்றவர்கள் யாரும் என் வசம் இல்லை. நான் அப்படிப்பட்டவர்களைப் பற்றி புத்தகம் மட்டுமே எழுதியுள்ளேன்' என்று விடையளித்தார். இதை நாங்கள் கண்ட பிறகு, நாங்கள் அதைப் பற்றி பசியுள்ளவர்களாய் இருக்கிறோம். எங்களுக்கு தேவன் தேவை'' என்றார் அவர். 130. நான் அவரிடம், “ ஒரு சமயம் ஒரு மனிதன் தன்னுடைய சொந்த வயலுக்கு சென்று, அதை பண்படுத்தி சீர் செய்து, அதில் தானியத்தை நட்டான். ஒவ்வொரு நாள் காலையிலும், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து, தானியம் விளைந்துவிட்டதா என்று கவனித்துக் கொண்டே வந்தான். ஒரு நாள் காலையில், முதலாவதாக அப்பயிரில் இரண்டு சிறு துளிர்களை முளைத்தெழும்பி தலை நிமிர்த்தி நின்றன. (மக்காச் சோளத்தை பயிர் செய்தவர்கள் இங்கு யாராவது உண்டா... எங்கே ஜார்ஜ் ரைட் மற்றும் ராய் ஸ்லாட்டர் ஆகியோர்? விதை முளைத்ததும் வரும் இரு துளிர்களை நீங்கள் அறிவீர்கள்) அத்துளிர்களைப் பார்த்த நிலச் சொந்தக்காரன் ‘என்னுடைய தானியம் விளைந்திருக்கும் வயலுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக' என்று கூறினான்'' என்று சொல்லிக் கொண்டு வந்தேன். நான் பண்டிதர் ஹேக்கரி அவர்களிடம், மேற்கண்ட உவமையைக் கூறிவிட்டு, “ இந்த மனிதனுக்கு வயலில் தானியம் விளைச்சல் ஆகிட்டதா என்ன?'' என்று கேட்டான். அவர் ''ஒரு வகையில் அது வந்து விட்டதைப் போலத்தான்'' என்றார். 131. 'அது மறைமுகமாக இருக்கிறது. ஆனால் அது முற்றிலும் தானிய விளைச்சல் என்ற நிலைக்கு இன்னமும் வந்து விடவில்லை'' என்று நான் கூறினேன். ''அதே விதமாகத்தான் லூத்தரன்களாகிய நீங்களும், முதலாவதாக ஏற்பட்ட சீர்த்திருத்தத்தின் காலத்தில், இரு சிறு துளிர்களை விட்டீர்கள். படிப்படியாக அந்த தானியமானது வளர்ந்து கொண்டே வந்தது'' என்று கூறினேன். அதனால் நான் அவரிடம், பயிரின் வளரும் கட்டத்தில் ஏற்படும் ஒரு நிலையான, அந்த துளிர்கள் வளர்ந்து பிறகு அவைகள் பழுத்து அதிலுள்ள ஜீவன் போய் காய்ந்துவிடும் கட்டத்தைப் பற்றிக் கூறவில்லை. தானியம் வளர்ந்தது என்று மட்டும் சொல்லிவிட்டு, மேற் கொண்டு அவரே அதிலுள்ள உட்கருத்தைப் புரிந்து கொள்ளட்டும் என்று அதைப் பற்றி பேசாமல் விட்டுவிட்டேன். 132. நான் மேலும் கூறினேன், “ தானியமானது மேலும் வளர்ந்து, சிறிது காலம் கழித்து பட்டுக் குஞ்சம் என்ற கட்டத்தை அடைந்தது. அப்பொழுது அந்த தானியச் செடியின் மேல்பகுதியில் வந்திருக்கும் மகரந்தப் பொடியையுடைய பட்டுக் குஞ்சம் பகுதி, கீழ் நோக்கி அந்த இலையைப் பார்த்து, 'ஹஹ்ஹஹ்ஹா, உங்களிடம் ஒன்றுமில்லை. நீங்கள் பழைய சடங்காச்சார லூத்தரன்கள்' என்று பரிகசித்ததாம். மேலும் அந்தப் பட்டுக்குஞ்சம், ‘நான் தான் இனப் பெருக்கம் செய்பவன், மகத்தான மிஷனரி ஊழியத்தின் காலம் என்னுடையது தான்' என்றது. காற்று வீசிய பொழுது மகரந்தப் பொடியையுடைய அந்த பட்டுக் குஞ்சப்பகுதி, வீழ்ந்து தன்னிடத் திலுள்ள மகரந்தப்பொடியை சிதறச் செய்தது. அது தான் வெஸ்லியின் “ பரிசுத்தமாகுதல்' என்ற செய்தி பாருங்கள்? எல்லாக் காலத்தையும் விட அக்காலம்தான் மகத்தான மிஷனரி ஊழியத்தின் காலமாகும். அதுதான் வெஸ்லியின் சபையின் காலமாகும். அந்த வெஸ்லியின் காலமானது, இந்தக் காலத்தையும் மிஞ்சியதாக இருந்தது. வெஸ்லி சபைக்காலமானது, ஒரு மிஷனரியுமாக இருந்தது. அது என்ன செய்தது? அது சுவிசேஷத்தை எங்கும் பரவச் செய்தது'' என்றேன். 133. பாருங்கள், இயற்கை கூட இந்த ஆவிக்குரிய மூன்று கட்டங்களைப் பற்றி சாட்சி கொடுப்பவைகளாக இருக்கிறதை இயற்கை கூட அதைச் சாட்சியிடுகிறது. தேவன் ஆதியில் அது அந்த விதமாகவே இருக்கும்படியாக உண்டாக்கினார். வேதாகமம் கூட உங்களுக்கு தேவையில்லை. நீங்கள் இயற்கையை உற்று நோக்கியே, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொண்டு விடலாம். 134. சிறிது காலம் கழித்து, மகரந்தப்பொடியையுடைய பட்டுக் குஞ்சப் பகுதி, தன்னிலுள்ள பொடியை கொட்டித் தீர்ந்தபிறகு, அதிலிருந்து என்ன புறப்பட்டு வந்தது? அதிலிருந்து தானியத்தின் கதிர் புறப்பட்டு வந்தது. அதற்குள் தான் தானியமானது இருக்கும். அக்கதிர்ப்பகுதிதான் பெந்தெகொஸ்தேயாகும். பெந்தெகொஸ்தே குழுவினரும், மற்றவர்களை போலவே இருந்தார்கள். முதலில் இரு முளைகள் முளைத்தெழும்பி வந்தன. அதுதான் லூத்தரின் காலம்; அதற்கடுத்து மகரந்தப்பொடியையுடைய பட்டுக் குஞ்சம் பகுதி யாகும். அது வெஸ்லியின் காலமாகும். அதற்கடுத்து, தானியத்தையுடைய கதிர்ப்பகுதி. ஆதியில் இருந்தது போலவே இங்கும் வந்து விட்டது. அதே தானியம்தான்! 135. பெந்தெகொஸ்தேயினர் என்ன கூறினார்கள்- தனக்குச் கீழே இருக்கிற மெதோடிஸ்டுகளும், லூத்தரன்களும் உபயோகமில்லா தவைகள் என்று கூறினார்கள். ஆனால் இந்த தானியக் கதிர் உண்டாகக் காரணமாக, முதலில் இரு முளைகள் எழும்பி அதிலிருந்து ஜீவன் தான், தனக்கு மேலே அடுத்து வரும் பட்டுக்குஞ்சப் பகுதி உருவாகக் காரணமாயிருந்து. பட்டுக்குஞ்சப் பகுதியில் இருக்கும் ஜீவன்தான், அதற்கடுத்து வரும் கதிர்ப்பகுதி உருவாகக் காரணமாக அமைந்தது. எனவே பாருங்கள், இவை யாவும் தேவனுடைய திட்டமாக இருக்கிறது. லூத்தரன்கள் பரிசுத்த ஆவி பெறுவதற்காக அம்சங்களையெல்லாம் பெற்றிருந்தார்கள்; அவர்களைப் போலவே, பரிசுத்தமாகுதல் செய்தியின் கீழ் வெஸ்லி சபைக்காரர்களும் இருந்தார்கள். ஆனால் இன்று அந்நிய பாஷைகளில் பேசுதலும், வரங்கள் திரும்ப அளிக்கப்படுதலுமான காரியம் நிகழ்ந்திருக்கிறது. அதே பரிசுத்த ஆவியானவர், உண்மையானது திரும்ப வந்திருக்கிறது என்பதைப் பாருங்கள் ஆமென். ஆம். 136. ''நீ கேட்டவைகள் விட்டுவிடாதபடிக்கு, அவைகளைப் பற்றிக்கொள்.'' இப்பொழுது நான்காம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். "ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சில பேர் சர்தையிலும் உனக்குண்டு. அவர்கள் பார்த்திரவான் களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்." வெளி.3:4 137. 'நீங்கள் ஸ்தாபனத்தை உண்டாக்க வேண்டாம். நீங்கள் நல்லது. ''சர்தையில் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர்கள் உள்ளனர்.'' சர்தையில் இன்னும் ஒரு சிறு கூட்டமான மக்கள் அத்தீட்டான காரியத்திற்கு தலைவணங்காமல், தங்களை சுத்தமாகவும் பரிசுத்தமாகவும் இருக்கும்படி காத்துக் கொண்டிக்கிறார்கள். ஆவியால் நிரப்பட்ட ஆதிப் பெந்தெகொஸ்தே அனுபவத்தின் அடிச்சுவடுகள் இங்கும் தென்படுகிறது. லூத்தரின் காலத்தில் அவர்களில் அநேகர் ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர். அவர்கள் என்ன செய்தனர்? வேதம் கூறுவதுபோல் “ அவர்கள் தங்கள் அம்மாவைப் போல் நடந்துகொண்டு.'' அதே போல் திரும்பவும் செய்ய ஆரம்பித் தார்கள். ஆனாலும் அவர்களில் வெகு சிலர் அச்செயல்களுக்கு உடன்படாமல் தனியே ஒதுங்கி, தேவனுக்காக விலகி நின்றார்கள். தேவன் அவர்களைப்பற்றி “ நல்லது, உங்களில் சிலபேர், எனக்கு முன்பாக நடக்க பாத்திரராய் இருக்கிறீர்கள். அவர்கள் வெண் வஸ்திரந்தரித்து நடப்பார்கள். நீங்கள் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். நீங்கள் நிக்கொலாய் மதஸ்தினரின் போதகத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம். மீண்டும் உங்களுடைய ஸ்தாபனத்தை நீங்கள் ஆரம்பிக்க வேண்டாம். தேவனில் சுயாதீனராக தங்கியிருங்கள். நீங்கள் தொடர்ந்து செல்லுகையில் பரிசுத்த ஆவியானவர் உங்களை நடத்துவராக. இன்னும் சிலர் மீதியாக இருக்கிறார்கள்.'' என்கிறார். 138. 5ம் வசனம்: “ காதுள்ளவன் எவனோ அவன்.... 139. இப்பொழுது நாம் இதைப் பார்ப்போம்: “ ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண் வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.”வெளி.3:5 140. ''சிலர் பேர்'' வெகு சிலர், மிகச் சிறிய மீதியானவர்கள் அக்காலத்தில் மீதியாக இருந்தார்கள். அவர்கள் கத்தோலிக்க சமய போதகத்தால் மேற்கொள்ளப்பட முடியவில்லை. 141. நாம் இப்பொழுது சீர்திருத்தத்தைப்பற்றி பேச வந்தோம். லூத்தரைப் பற்றி வரலாற்றை நான் விட்டு, இந்த விஷயத்தை பார்ப்பதற்காக எடுத்துக் கொண்டேன். அடுத்த வசனம் கூறுகிறது. “ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்" வெளி:3:6 142. அவர்கள் நிக்கொலாய் மதத்தினரின் போதகத்தை விட்டு விலகியிருக்கும்படி தேவன் எச்சரிக்கை செய்கிறார். “ அதிலிருந்து அகன்று இருங்கள். உங்களுடைய வஸ்திரங்களை உலகத்தின் காரியங்களினால் அசுசிப்படாமல் வைத்துக் கொள்ளுங்கள்.'' அவரில் சுயாதீனமுடையவர்களாக இருங்கள். அப்பொழுது அவர்களை வழி நடத்தி வழிகாட்டி அழைத்துச் செல்லுவார். அதுவே முதல் துவக்கமாயிருக்கிறது. 143. நான் “ சீர்த்திருத்தம்'' என்னும் போது “ தப்பித்துக் கொண்டவர்களைக் '' குறிப்பிடுகிறேன். சர்தை சபையின் காலத்தில் தப்பித்துக்கொண்டவர்கள். நான் கூறுவதன் கருத்தை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? அந்தப் பயங்கரமான காரியத்தி லிருந்து கூட சிலர் தப்பியிருந்திருக்கின்றனர். நாளை இரவு மீண்டும் இதை எடுத்துக்கொண்டு அதை படிப்படியாக பெந்தெகொஸ்தே காலத்திற்குள் வரைக்கும் ஒப்பிட்டுப் பார்த்து, அது அவ்வாறு இருப்பதைப் பற்றி பார்ப்போம். தப்பித்துக்கொண்ட சில காரியங்களைப் பற்றி நாம் இங்கே பேசினோம். அடுத்த காலத்திற்குள் மீண்டும் இதை எடுத்துப் பார்ப்போம். நாம் இதை மீண்டும் எடுத்துப் பார்க்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஏனெனில் அடுத்து வரும் காலத்தின் காரியமும் இதோடு ஒன்றித்துப் போவதைக் காண்பதற்காகத்தான். அவ்வாறு செய்யாவிடில் அதை தீர்க்கமாக ஆழ மனதில் பதியத்தக்கதாக எடுத்துரைப்பதிலிருந்து தவறிவிடுவோம். இதை அடுத்த காலத்திற்குள் சரியாக இருப்பதைக் காண வேண்டியது அவசியம். வேதம் எவ்வாறு அதைப்பற்றி உரைக்கிறதோ, அதேவிதமாக மக்கள் அதைப் பெற்றுக் கொள்ள செய்யவேண்டும். 144. தப்பித்துக்கொண்டவர்களைப் பற்றித் தான் அவர் பேசுகிறார். இந்த சபைக் காலத்தில் வாழ்ந்து வந்த அந்த சிறு மந்தையான ஜனங்கள் நீதிமானாகுதலினால் ஜீவித்தார்கள். இப்பொழுது பாருங்கள்! அவர்கள் வெளிச்சத்தைக் கண்டு பிழையை விட்டு வெளியேறினர். லூத்தர் அவர்களை சரியான பாதையில் திருப்பினார். லூத்தரின் மரணத்திற்குப் பிறகு, அவரைப் பின்பற்றின ஒரு சாரார் ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டார்கள். லூத்தர் அதைச் செய்யவேயில்லை. அவர் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கவேயில்லை. வெஸ்லி ஒருபோதும் ஒரு ஸ்தாபன சபையை உண்டாக்கிக் கொள்ளவேயில்லை. அதற்குப் பிறகு வந்த, அவர்களுக்குப் பிறகு ஏற்பட்ட அந்த குழுவினர் தான் அதைச் செய்தார்கள். பெந்தெகொஸ்தே அசைவைக் கொண்டு வந்தவர்களும் ஸ்தாபனத்தை உண்டாக்கவேயில்லை. பிறகு ஏற்பட்ட அந்தக் குழுவினர்தான் அதைச் செய்தார்கள். இரண்டாம் சுற்றில் வரக் கூடியவர்கள் தான் அதைச் செய்கின்றனர். பாருங்கள். வெளிச்சத்தின் உண்மையான தூதன் ஒருபோதும் ஸ்தாபன சபையை உருவாக்குவதேயில்லை. அதே காரியத்தை நீங்கள் பெந்தெகொஸ்தேயின் காலத்திலும் அந்த ஸ்தாபனத்தின் முடிவில் என்ன நேரிடுகிறது என்பதையும் காணலாம். பாருங்கள். அதைப்பற்றி பரிசுத்த ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்தித் தருகிறார். 145. தேவன் கூறினார்: “ உங்களுக்கு ஒரு சிறிதளவு ஒளியே மீந்திருக்கிறது. மிகச்சிறிய அளவில் அது உள்ளது. அதுவும் அணைந்து போகப்போகிறது. அது மங்கிக்கொண்டே வருகிறது. நீதிமானாகுதல் என்ற செய்தி மட்டுமே உங்களிடம் உள்ளது. அது உங்களை எந்த பக்கத்திலும் திருப்பிவிட முடியும். நீங்கள் இன்னும் ஜீவனைப் பெறவில்லை ஏனெனில் நீங்கள் தவறான நாமத்தை எடுத்துக் கொண்டீர்கள். ஆனால் நீங்கள் பிழையிலிருந்து பறித்து வெளியே இழுத்துக் கொண்டுவரப் பட்டீர்கள் என்பதைக் குறித்து திருப்தியடைந்துள்ளீர்கள். பாருங்கள் நீங்கள் ரோமன் சபையிடமிருந்து தப்பிவிட்டீர்கள். நீங்கள் கோட்பாடுகளைவிட்டு உங்களைத் தப்பித்துக் கொண்டீர்கள். இந்த அளவாவது வந்திருக்கிறீர்களே'' என்றெல்லாம் கூறினார். அவர்கள் வாசித்த அதே வேதாகமத்தைத் தான் நீங்களும் வாசித்து வருகிறீர்கள். அதே வேதாகமத்தான் பரிசுத்த ஆவியைப் பற்றிப் போதிக்கிறது. ஆனால் அவர்கள் எதைப் பெற்றிருந்தார்களோ அதை நான் வருகிற வரையிலும் விடாமல் பற்றிக் கொள்ளுங்கள். அதைத் தொடர்ந்து பற்றிக் கொண்டேயிருங்கள்'' என்று அவர்களுக்குக் கூறினார். அவர்கள் பெற்றிருப்பது சிறிதளவாக இருந்தாலும், அதற்காக அவர்களை அவர் கண்டனம் பண்ணவில்லை. 146. ரோமனிய அகில உலக சபை தன் முழு வீச்சில் இருந்த போது, இச்சபைக்காலம் கி.பி.1520-ல் துவங்கியது. கி.பி. 1570-ல் மார்ட்டின் லூத்தர் அவர்கள் தன்னுடைய 95 கொள்கை முழுக்கங்களை ஜெர்மனி தேசத்திலுள்ள விட்டன்பர்க் என்ற ஊரில் ஆலயக் கதவில் ஆணியறைந்து, அதை பிரசித்தம் செய்தார். அது வரையிலும் ரோமனிய சபை முழுவீச்சில் இயங்கி வந்தது. அதற்குப் பிறகுதான் அது மட்டுப்பட்டது. அதிலிருந்து சீர்திருத்த காலம் ஆரம்பமாகிறது. நீங்கள் அந்த தேதிகளை குறித்துக் கொண்டீர்களா? நீங்கள் உறுதியாக தெரிந்து கொள்வதற்காக நான் அவைகளை மறுபடியும் சொல்லுகிறேன். கி.பி.1570- அக்டோபர் மாதம் 31ம் தேதி ஜெர்மானியிலுள்ள விட்டன் பெர்க் ஆலயக் கதவில் மார்டின் லூத்தர் தன்னுடைய 95 கொள்கைப் பிரபந்தங்களை ஆணியறைந்து வைத்தார். சீர்த்திருத்தகாலம் துவங்கின நாள் முதல், அக்கினியானது பற்றியெறிந்தது. அவர் அங்கே நின்று கத்தோலிக்க சபையை ஆட்சேபித்தார். “ இதுவா கிறிஸ்துவின் பரிசுத்த சரீரம்? இது வெறும் அப்பமும் சிறிது திராட்சைரசமுமே" என்று சொல்லி அதைக் கீழே வீசியெறிந்து விட்டார். அது உண்மை 147. அவர் கத்தோலிக்க சபையை எதிர்த்தார். அப்பொழுது அதிலிருந்த மக்கள் வெளியே தப்பித்து வேளியேறுவது நடந்தது. சரி, பாருங்கள். அது நடந்து கொண்டேயிருந்தது. ஆனால் அக்காரியம், உண்மையான சபைக்காகவும், கிறிஸ்தவ நெறிமுறைகளுக்காகவும் என்ற போராட்டமாக இருப்பதைக் காட்டிலும், அது அரசியல் அதிகாரச் சண்டையாக அதிக அளவில் இருந்தது. ஒரு சபையிலிருந்து வெளி வரவும், வெளியே வந்து இன்னொரு சபையை உருவாக்கிக் கொள்ளவுமாக அதற்குத் தேவையான உரிமைக்காக போராடும் ஒரு அரசியல் ரீதியிலான போராட்டமாக அது உருவெடுத்தது. அவர்கள் கத்தோலிக்க சபையைவிட்டு வெளி யேறி, சபையில் பரிசுத்த ஆவியையும், வல்லமையையும் திரும்பக் கொண்டு வருதலான சீர்த்திருத்தத்தை செய்வதற்குப் பதிலாக அதை மறுதலித்தார்கள். பாருங்கள், அது ஒரு அரசியல் ரீதியிலான அணிவகுப்பாக மாறியது. ''நீ உயிருள்ளவன் என்ற பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்'' என்ற அந்த கண்டனத்திற்கு அது பொருத்தமாக அமைந்துவிட்டது. அதையே இன்னொரு விதமாகச் சொல்லப்போனால், ஒரு பிராடெஸ்டெண்ட் ஸ்தாபன சபையைத்தான் அவர் வெளியே கொண்டு வந்தார். அவ்வளவுதான். சபையிலிருந்து அவளுடைய மகளைத்தான் அவர் வெளியே கொண்டு வந்தார். சரியாக அது தான் சம்பவித்தது. யேசபேலிடமிருந்து ஒரு அத்தாலியாளை வெளியே கொண்டு வந்தார். 148. சீர்த்திருத்தத்தைப் பற்றிய வரலாற்றைப் படித்திருக் கிறவர்கள் எவரும் அது அவ்வாறு தான் நடந்தது என்பதை அறிவர். கத்தோலிக்க சபையில் காணப்பட்ட பழைய நினைவுச் சின்னங்களை வணங்குதல். சடங்காச்சாரங்கள், சில ஒழுங்குகள் ஆகியவைகளை அவர் ஒழித்துக்கட்டினார். ஆனால் ஆதியில் இருந்தது போல் சபையில் திரும்பவும் பரிசுத்த ஆவியைக் கொண்டுவருகிற காரியத்தை அவர் செய்யவேயில்லை. அப்படிச் செய்யவில்லை. ஐயா, அது ஆவிக்குரிய போராட்டமாக இருப்பதைக் காட்டிலும், அரசியல் ரீதியிலான போராட்டமாகவே ஆகியது. அது பரிசுத்த ஆவிக்குப் பதிலாக அரசியலாக இருந்தது. பரிசுத்த ஆவியானவர் இன்னும் சபைக்குள் திரும்ப பிரவேசிக்க வில்லை. ஒ, சகோதரனே, அந்த சபைக்காலத்திற்குள் பரிசுத்த ஆவியானவர் இன்னும் திரும்பி வரவில்லை. அவர் இந்த (கடைசி கால) சபைக்குள் தான் திரும்பி வருகிறார். அங்கேயல்ல. 149. பரிசுத்த ஆவிக்காகவும், பரிசுத்த வேதவாக்கியங்களுக் காகவும் உள்ள அணிவகுத்து ஒன்று சேருதலாக அவர்கள் இருக்காமல், அது பெரிய அரசியல் ரீதியிலான அணிசேருதலாக ஆகி விட்டது. பழைய நினைவுச் சின்னங்களாகிய சிலுவை போன்ற வற்றை வணங்குதல், “ மரியே வாழ்க'' என்பன போன்ற காரியங்களிலிருந்து விடுவித்துக்கொள்ள அவர்கள் அரசியல் ரீதியில் மட்டும் ஒன்று திரண்டிட லூத்தர் செய்தார். அப்படியிருந்தும் கூட, லூத்தர் கத்தோலிக்க சபையிலிருந்து 'ஞான உபதேசத்தை கொண்டு வந்துவிட்டார். (Catechism - இன்னும் அவர் வேறு சிலவற்றையும் தன்னுடன் கொண்டு வந்தார். அதாவது ஈஸ்டர் காலையில் உள்ள அர்ப்பணிப்பு செய்யும் ஆராதனைகள், கிறிஸ்துமஸ் காலையில் பாஸ்டர் சபையாரைப் பார்த்து, ''மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் என்று வாழ்த்துதல் கூறுவது போன்ற காரியங்களையும் தன்னுடன் கொண்டு வந்துவிட்டார். அவர்களை ''கிறிஸ்துமஸ் காலம்வரையிலும் உங்களை பார்க்கமாட்டோம்'' என்று அவரே கூறியுள்ளதை நீங்கள் அறிவீர்கள் அடுத்து, திடப்படுத்துதல் (உறுதி பலிபூசை) ஆராதனையை அவர் கொண்டு வந்தார். அதைபற்றி நான் கூறுவது என்னவெனில்: ஜனங்களை எடுத்து அவர்களுக்கு முதல் நற்கருணையை கொடுத்து அவர்களை 'திடப்படுத்தல்' (உறுதிப் படுத்துகிறார்கள்) செய்கிறார்கள். திடப்படுத்தல் (உறுதிப்படுத்துதல் ஆராதனை) என்றொரு காரியம் கிடையாது. வேதத்தில் கூறப்பட்டுள்ள 'உறுதிப்படுத்துதல்' எல்லாம், தேவன் அற்புதங்களையும் அடையாளங்களையும் தொடரச் செய்து தமது வார்த்தையை உறுதிப்படுத்துவதே. அதுவே உறுதிப்படுத்துதல், லூத்தரன் சபையை சேர்ந்து கொள்ளும் உறுதிப்படுத்துதல் அல்ல அது. உங்களில் தேவன் தன்னுடைய வார்த்தையை உறுதிப்படுத்துல் தான் காரியம். “ கர்த்தர் அவர்களோடிருந்து கிரியை நடப்பித்து, அற்புத அடையாளங்களினால் வசனத்தை உறுதிப்படுத்தினார்'' என்று மாற்கு 16-ல் கூறப்பட்டுள்ளது. அதுவே உண்மையான பெந்தெகொஸ்தே அனுபவத்தைப் பெற்ற சபைக்குக் கொடுக்கப்படும் உறுதிப் படுத்துதல் ஆகும். அந்நிய பாஷைகளில் பேசுதல், பாஷைகளை வியாக்கியானம் செய்தல், ஆதியில் அவர்கள் செய்தது போலவே கிரியை நடப்பித்தல் ஆகியவைகளின் மூலம் சபையில் தேவன், தன்னை அற்புதங்களைச் செய்கிற தேவன் என்று காண்பித்து, தம்மைத் தாமே ஜீவனுள்ளவராக உறுதிப்படுத்துகிறார். 150. நான் உங்களை களைப்படையச் செய்து கொண்டிருக்கிறேனோ? (சபையார் “ இல்லை'' என்று பதிலளிக்கிறார்கள்? ஆசி). நல்லது. அவர்கள் பரிசுத்த ஆவியின் எழுப்புதலை சபைக்குள் திரும்பக் கொண்டு வரவில்லை என்பதைக் கவனியுங்கள். அவர்கள் ஒரு புதிய சபைக்காலத்தைத் தான் திரும்பக் கொண்டு வந்தார்கள். அவர்கள் ரோமச் சபைக் குருக்களாட்சியிலிருந்து தப்பித்து வெளியே வந்தது, ஒரு ப்ராடெஸ்டெண்ட் குருக்காளாட்சி முறையைக் கொண்டு வரத்தான் என்பதாக, அவர்கள் அதிலிருந்து வெளியேறிய பிறகு செய்தவைகள் காண்பித்தன. அதே காரியத்தைத்தான் அவர்கள் செய்தார்கள். அவர்கள் சட்டியிலிருந்து நேரே கீழே உள்ள நெருப்பில் குதித்துவிட்டார்கள். சரியாக அதே காரியம் தான் நடந்தது. 151. யேசபேல் இப்பொழுது ஒரு மகளைப் பெற்றெடுத்து விட்டாள். நான் புத்திசாலியாக என்னைக் காட்டி கொள்ள இதை சொல்லுகிறேன் என்று எண்ணிக் கொள்ளாதிருங்கள். வேதம் அவ்வாறு கூறுகிறபடியினால், நான் அதைக் கூறுகிறேன். வேதம், வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரத்தில், “ அவள் வேசிகளின் தாய்'' என்று கூறியது. இயேசு இங்கே கூறுகிறார்: "யேசபேல் செய்ததைப் போலவே இவளும் செய்வாள்'' என்று. அவள் குமாரத்திகளை ஈன்றெடுத்து, தீட்டுப்படாத தேசம் ஏதாவது இருந்தால், அதையெல்லாம் தீட்டுப்படுத்திப்போட்டாள். ப்ராடெஸ்டெண்ட் கொள்கையானது, உண்மையான தேவனுடைய ஆவிக்கு எதிராக அந்த தீட்டுப்படுத்தும் காரியத்தையே செய்து, மீண்டும் இன்னொரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டது. தேவனுக்கு சித்தமானால், ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனையில், அவர்கள் ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டதன் மூலம் மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கினார்கள் என் பதையும், அம்மிருகம் ரோமாபுரி தான் என்பதையும் நான் உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். அவ்விதத்தில் அவர்கள் ஒரு சொரூபத்தை உண்டாக்கினார்கள். அச்சொரூபமானது என்ன வாயிருக்கிறது? அது ஒரு ஸ்தாபனமே! இவ்விஷயம் உங்களுடைய இருதயத்தில் ஆழமாகப் பதிகிறது என்று நான் நம்புகிறேன். 152. நான் என் ஜீவிய காலமெல்லாம் ஸ்தாபன முறைமைகளுக் கெதிராக ஏன் கடினமாக போராடுகிறேன் என்றெண்ணி நீங்கள் வியந்து கொண்டிருப்பீர்கள். எனக்கே அது ஏன் என்று தெரியாதிருந்தது. ஆனால் என்னிலிருந்து ஏதோ ஒன்று அதற்கெதிராக குரல் கொடுத்துக்கொண்டே வந்தது. அதை என்னால் தவிர்க்க முடிய வில்லை. நான் ஏன் பெண்களின் பிழையான காரியத்தைப் பற்றி கண்டனம் செய்கிறேன் என்று வியந்ததுண்டு. என் ஜீவிய காலமெல்லாம் அவ்வாறே இருந்து வந்துள்ளது. நான் உண்மையான ஸ்திரீகளைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. ஒழுக்க நெறிகளைவிட்டு வழுவிபோய்விட்ட அந்த விதமான ஸ்திரீகளுக்கெதிராகத் தான் நான் கூறிவருகிறேன். என்னிலிருந்து ஏதோ ஒன்று... 153. நான் ஒரு சிறுவனாக இருந்தபொழுது, தங்கள் கணவன் மார்கள் வேலைக்குப் போயிருக்கும் சமயத்தில், குடித்து வெறித்து வேற்றுப் புருஷனோடு சரசமாடி சாலையில் அங்குமிங்கும் அலைந்து திரிவதை நான் கண்டிருக்கிறேன். அவர்களை மதுவின் வெறியிலிருந்து தெளியவைத்து, அவர்களது கணவரின் இரவு உணவை சமைப்பதற்கென வீடுகளுக்கு அனுப்பி வைத்தாக வேண்டும். ஒரு சுத்தமான துப்பாக்கி ரவை கூட அவர்களை துளைத்துச் செல்வதற்கு அவர்கள் லாயக்கில்லை. அது உண்மை. அவ்வாறான காரியத்தைச் செய்வதால் அவர்கள் ஒரு மிருகத்தை விடக் கேவலமானவர்கள் என்று நான் சொல்லுவதுண்டு. நான் 17 அல்லது 18 வயதாயிருந்தபோது, ஒரு பெண் வீதி வழியாக வருவதைக் கண்டால், அவள் வரும் பாதையை விட்டு விலகி எதிர்த் திசையில் போய் அதன் நிலையை எண்ணி, “ நாற்றமெடுத்த விரியன் பாம்பு'' என்று கூறுவதுண்டு, பாருங்கள்? தேவனை என் இருதயத்தில் நான் ஏற்றுக் கொண்டபோது, அப்பொழுது தான், தேவனுக்கென விலையேறப்பெற்ற ஆபரணங்களாக உள்ள உத்தம ஸ்திரீகள் தேவனுக்கு உண்டு என்பதை தேவன் எனக்குக் காண்பித்தார். அப்படியில்லாதிருந்தால், நான் முழு ஸ்திரீ இனத்தையே முற்றிலும் வெறுக்கிறவனாக ஆகியிருப்பேன். உத்தமமான ஸ்திரீகள் தேவனுக்கென்று இருக்கிறார்கள். அவர்கள் அவ்விதமான முறையில் தங்கள் அசுசிப்படுத்திக் கொள்ளமாட்டார்கள். அதற்காக தேவனுக்கு நன்றி. 154. நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது, நான் ஸ்விட்சர்லாந்தில் இருந்தபொழுது, நான் ரோமாபுரியில் இருந்தபொழுது, “ அமெரிக்காவில் உங்களுக்கு பண்பட்ட ஸ்திரீகளே கிடையாதா, சொல்லுங்கள் சகோதரன் பிரன்ஹாம் அவர்களே அங்கிருந்து வரும் ஒவ்வொரு பாடலும், உங்கள் பெண்களைப்பற்றி கீழ்த்தரமாக வருணிக்கும் பாடலாக இருக்கின்றனவே?'' என்னும் கேள்வி என்னிடத்தில் கேட்கப்பட்டது. 155. ''அவர்கள் அமெரிக்கர்கள், ஆனால் எங்களுக்கு வேறொரு இராஜ்யம் இருக்கிறது. அதுதான் தேவனுடைய இராஜ்யமாகும். அதில் உள்ள பெண்மணிகள் மிகவும் பண்புள்ளவர்கள்'' என்று கூறினேன். 156. வேதத்தில் தீர்க்கதரிசி இவ்வாறு கூறினான். அது ஏசாயா 5அல்லது 6ம் அதிகாரம் என்று எண்ணுகிறேன். நிச்சயமாகத் தெரியவில்லை. இவைகளுக்குக்கெல்லாம் தப்பி மீந்திருக்கிற சீயோன் குமாரத்தி ஆசீர்வதிக்கப்பட்டவளாகக் கூறப்பட்டிருக்கிறாள். அந்நாட்களில் கூட ஸ்திரீகள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து, ஒய்யாரமாய் நடந்தார்கள். இக்காலத்திலும் கூட, பெண்கள் அதேவிதமாக நடந்து கொள்கிறார்கள். ஆண்களைப்போல் உடையுடுத்திக் கொள்ளுகிறார்கள். அது தேவனுக்கு முன்பாக அருவருப்பாக இருக்கிறது. 157. சமீபத்தில் நான் ஒரு ஸ்தாபன சபையைச் சேர்ந்த ஒரு சங்கத்தினர் ஒவ்வொரு இரவிலும் ஏற்பாடு செய்திருந்த ஒரு பெரிய விருந்துக்கு ஜனங்கள் செல்வதைக் கண்டேன். அவர்கள் ஒரு விதமான சல்லடங்களை அணிந்திருந்தனர். அது ஒரு ஆண் உடையாகும். நிக்கர்பாக்கர்ஸ் என்னப்படும் சல்லடம் தானே அது? அப்படித்தானே அதை அழைக்கிறார்கள்? நிக்கர்பாக்கர்ஸ் என்றால், தொளதொளவென்று முழங்காலுக்கு மேல் வரை இருக்கும் ஒரு வித ஆண் ஆடையாகும் - இது அமெரிக்காவில் உபயோகிக்கப்படுகிற ஒரு ஆடை - மொழிபெயர்ப்பாளர்) குட்டையான நிக்கர் அல்ல அவைகள், மற்றது. ஆம் அவர்கள் பெடல் புஷர்ஸ் என்று அழைக்கின்ற ஒரு வகை ஆடைதான் அது. (பெடல் புஷர்ஸ் என்றால் (Pedalpushers) முழங்கால் முட்டுக்கு சற்றுக் கீழே உள்ள கெண்டைச்சதை வரை மட்டும் நீண்டிருக்கும் ஆண் ஆடை - மொழிபெயர்ப்பாளர்) அவைகளை அணிந்து கொண்டு அப்பெண்கள் விருந்துக்குப் போனார்கள். அவர்கள் இவ்வாறு ஒய்யாரமாக நடந்து தங்கள் அலங்காரத்தைக் காட்டிக்கொள்ள இப்படியாக அவர்களுக்கு ஒரு பெடல் தேவைப்படுகிறது. (அதாவது தங்கள் அவலட்சணங்களை நாகரீகம் என்று காட்டிக் கொண்டு இவ்வாறு நடந்து செல்வதற்காகாவே அவர்கள் அப்படி ஆடைகளைத் தரிக்கிறார்கள் என்பதைத்தான் தீர்க்கதரிசி சுட்டிக்காட்டுகிறார் - மொழிபெயர்ப்பாளர்). 158. “ பெண்கள் அணியும் பாவாடைகளை விட இவ்விதமான நிக்கர்கள் தான் சற்று நாணயமுள்ளதாக இருக்கிறது'' என்று நீங்கள் கூறுகிறீர்கள். 159. “ இவ்விதமான ஆண் ஆடையைப் பெண் தரிப்பது தனது பார்வையில் அருவருப்பாய் இருக்கிறது'' என்று தேவன் கூறினார். தேவனானவர், பெண்கள் பெண்களைப் போல் தோற்றமளிக்க வேண்டும் என்றும், பெண்கள் பெண்களைப்போலவே உடுத்த வேண்டும் என்றும், பெண் ஒரு பெண்ணாகவே நடந்து கொள்ள வேண்டுமென்றும் விரும்புகிறார். அப்படியிருக்கையில் பெண்ணானவள் ஆணைப்போல் தன் தலை முடியை வெட்டிக் கொண்டு, சிகை அலங்காரம் செய்து கொள்வதும் தேவனுக்கு அருவருப்பாய் இருக்கிறது. 160. ஒரு ஆணானவன் நீளமான கிருதா வைத்துக் கொள்வதையும், அது அவன் தலைக்குப் பின்னால் ஒரு வாத்து உட்கார்ந்திருப்பதைப் போல் காட்சியளிக்கும், தலை மயிரை வளர்ப்பதையும் அவர் விரும்புவதில்லை. அவன் ஆணைப்போல் காட்சியளிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆம் ஐயா, என்னே, ஆணா, அல்லது பெண்ணா என்பதைக் கண்டுகொள்ள முடியாதபடி, அவர்கள் பெண்ணைப்போல் உடுத்திக் கொள்கிறார்கள். இன்றைக்கு நம்மிடையே உள்ள பீட்னிக்குகளின் காரியமும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது. நாம் கடைசி காலத்தில் ஜீவிக்கிறோம் என்பது ஆச்சரியமல்ல; உலகத்தின் மேல் தேவன் தன்னுடைய உக்கிர கோபத்தை ஊற்றி, அவர்களை சுட்டெரிப்பதைத் தவிர வேறு எதுவும் இனிமேல் நடக்கப்போவதில்லை. அது தான் ஆயத்தமாக இருக்கிறது. நீதியும் பரிசுத்தமுள்ள ஒரு தேவனால் இதைத் தவிர வேறெதுவும் உலகுக்குச் செய்வதற்கில்லை. 161. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை அவர்கள் நிந்தித்து தள்ளிவிட்டார்கள். அவர்கள் தங்களுக்கென சமயச்சாரக் கோட்பாடுகளை உண்டாக்கிக்கொண்டு ஒரு ஸ்தாபனத்திற்குள் பிரவேசித்துவிட்டார்கள். திருமணமகாத, காலர்பட்டையை திருப்பி உடுத்திக் கொண்டிருக்கும் அந்த வயதான ஹோலி ஃபாதர் (பரிசுத்த தந்தை) பீடத்தண்டையில் வந்து, 'ஆசீர்வதிக்கப்பட்ட என் பிள்ளைகளே'' என்று கூறுகிறார். ஒரு பெண் பன்றி கூறுவதற் கும் இதற்கும் வித்தியாசம் ஏதுமில்லை. 162. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நமக்கு இன்றைக்கு தேவைப்படுவதெல்லாம், வேதத்திற்கு திரும்பிச் செல்லுதலும், பரிசுத்த ஆவியைப் பெறுதலுமே. கிறிஸ்துவின் வல்லமையானது சபைக்குள் திரும்பி வந்து, அற்புத அடையாளங்களை சபைக்குள் நிகழ்த்துவதுமே, சகோதரனே, ஆமென் அதுதான் சுவிசேஷமாயிருக்கிறது ஆம். 163. இந்தக் காலத்தில் ஏற்பட்ட எழுப்புதலானது சில அருமையான காரியத்தைச் செய்துள்ளது என்பது உண்மையே. ஆனால் அவ்வெழுப்புதல் பரிசுத்த ஆவியைக் கொண்டு வரவில்லை. இக்காலம் முதற் கொண்டு, லவோதிக்கேயாவின் காலம் துவங்கும் முன்னர் வரையிலும் ஏற்பட்ட எழுப்புதல் பரிசுத்த ஆவியைக் கொண்டு வரவில்லை. ஆனால் இவ்வெழுப்புதல் ஒருவகையில் நன்மையுள்ளதாக இருந்தது. எனவேதான் தேவனும், “ அதை சாக விட்டுவிடாதீர்கள். அதை ஸ்திரப்படுத்துங்கள் அதோடு இன்னும் நலமானதைக் கூட்டிக் கொண்டேயிருங்கள்'' என்று கூறினார். பாருங்கள்? 164. அவ்வெழுப்புதல் மக்களின் பட்சமாக, யாவரும் வாசிப்ப தற்கென சுயாதீனமாக வேதப்புத்தகம் கிடைக்கச் செய்தது. லூத்தரின் காலம், வேதாகமம் யாவருக்கும் தடையில்லாமல் சுதந்திரமாகக் கிடைக்க செய்தது. அவர்கள் ஒரு அச்சகத்தை ஏற்படுத்தி, வேதாகமத்தை தாராளமாக அச்சிட்டு உலகுக்குக் கிடைக்கச் செய்தனர். லூத்தரன்களை தேவன் அதற்காக ஆசீர்வதிப்பராக. ஆம் ஐயா! அவர்கள் சபையாரின் கைகளில் வேதப் புத்தகம் திரும்பக் கிடைக்கச் செய்தனர். அதற்கு முன்னால், குருக்கள் மட்டுமே அதை வைத்துக்கொள்ள முடியும். அதற்கு முன்னால், மக்கள் வேதத்தைப் பார்க்கக் கூட இயலாது ஏனெனில் போப் அவ்வாறு கூறியிருந்தார். போப் அவர்களுக்கு ஒரு தேவனைப் போல் இருந்தார். அவர் சொல்வதே தேவவாக்காக இருந்தபடியால் அவர் சொன்னபடியெல்லாம் அவர்கள் செய்தனர். 165. லூத்தரன்களுக்கு ஏற்பட்ட எழுப்புதலினால், அவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது? அவர்கள் “ ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. இப்பொழுது உங்கள் கரங்களில் வேதாகமம் உள்ளது. அதை வாசியுங்கள். அதை வெறுமனே அலமாரியில் வைத்து ''நல்லது, எங்களுக்கு ஒரு வேதாகமம் இருக்கிறது'' என்று பெருமையாகக் கூறிக்கொள்வதோடு விட்டு விடாதீர்கள். அதை வாசிக்காமல் அப்படியே வைத்திருப்பதினால் உங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது. இன்றைக்கு பெந்தெகொஸ்தேயில், மிக அதிகமான லூத்தரன்கள் இருக்கிறார்கள். அதாவது இவர்கள் வேதத்தை படிக்காமல் மூடிப்போட்டு, அதைப் பற்றி வேறு யாராவது ஏதாவது சொல்வதை ஏற்றுக் கொள்கிறார்கள். சகோதரனே, வேதத்தைவாசி. “ வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே, அவைகளால் நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே'' என்று இயேசு கூறினார். வேதத்தை வாசியுங்கள். அதைத் தான் செய்ய வேண்டும். 166. "அதை விட்டு விடாதீர்கள், பற்றிக் கொள்ளுங்கள் என்று அவர் கூறினார் அவர்கள் இன்னொரு காரியத்தையும் செய்யும்படி தேவன் விரும்பினார். அதாவது அவர்களுக்கு இருந்த கொஞ்சம் பெலனில் அவர்கள் நிலைத்திருக்க வேண்டுமென்று தேவன் விரும்பினார். லூத்தரன் எழுப்புதலானது, இரண்டாவதாக செய்த காரியம் என்னவெனில்; வேதத்திலுள்ள ''விசுவாசத்தினால் நீதிமானாகுதல்'' என்ற உபதேசத்தை ஒளியூட்டி வெளிக் கொணர்ந்தது. கத்தோலிக்க சபை விசுவாசத்தினால் நீதிமானாகுதல் என்ற உபதேசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. கத்தோலிக்க சபை தான் எல்லாம் என்று அவர்கள் கூறினார்கள். 167. சமீபத்தில் ஒரு மதக்குரு, 'கத்தோலிக்க சபையில் தவிர வேறு எதிலும் இரட்சிப்பு இல்லை" என்று ஒலிபரப்பில் கூறினார். அவர்கள் அந்த ஒலிபரப்பை உடனடியாக நிறுத்திவிட்டார்கள். இரட்சிப்பு கிறிஸ்துவில்தான் உள்ளது. கத்தோலிக்க சபையில் இல்லை. ப்ராடெஸ்டெண்ட் சபையிலும் இரட்சிப்பு இல்லை. கிறிஸ்துவில் தான். இரட்சிப்பு உள்ளது. ஆனால் கத்தோலிக்கர்களுக்கு வேதம் என்ன கூறுகிறது என்பதைப் பற்றி அக்கறையில்லை. அவர்களது சபை என்ன சொல்லுகிறதோ அதையே அவர்கள் விசுவாசிக்கின்றனர். பாருங்கள்? நீங்கள் அவர்களோடு பேச முடியாது. ஏனெனில் அவர்களிடம் பேச வழியில்லை. ஒருவரும் அவர்களிடம் பேசக் கூடாதபடி அவர்கள் உள்ளனர். அவர்கள் அசட்டையாக இருக்கிறார்கள். அவர்களுடைய 'ஞான உபதேச'த்திலிருந்து வேண்டுமானால் உங்களோடு அவர்கள் பேசுவார்கள். ஆனால் வேதப்புத்தகம் என்று வந்துவிட்டால், அவர்கள் அதை அடிப்படையாகக் கொண்டு பேசாதபடி, அதை தள்ளிவிடுகின்றனர். ''சபை என்ன சொல்லுகிறதோ, அதுதான்'' என்கின்றனர். அது தேவ தூஷணமாக இருக்கிறது! 168. இவ்விஷயத்தைப் பொறுத்தமட்டில், இயேசு தாமே கூறினார்: "இதிலிருந்து எதையாகிலும் ஒருவன் எடுத்துப் போட்டாலோ, அல்லது இதோடு எதையாகிலும் கூட்டினாலோ, அவனுடைய பங்கு ஜீவபுஸ்தகத்தலிருந்து எடுத்துப்போடப்படும்'' “ தேவனே சத்தியபரர், எந்த மனுஷனும் பொய்யன்'' என்று இயேசு கூறியுள்ளார். “ வானமும் பூமியும் ஒழிந்துபோம், என்னுடைய வார்த்தையோ ஒழிந்து போவதில்லை.'' ஓ, அதுதான் உண்மையானது, சகோதரனே. 169. தேவனுடைய வார்த்தையின் பேரில் விசுவாசி நான்! அங்கே தேவன் பேசுகிற அந்த வார்த்தை மட்டுமல்ல, கிறிஸ்து என்னில் ஜீவிப்பதற்காக, அவ்வார்த்தையை உறுதிப்படுத்த என்னில் பரிசுத்த ஆவியை இப்பொழுது பரம பிதாவை ஊற்றுமாறு வேண்டுகிறேன். அதினால் நான் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறேன் என்பதை அறிவேன். நான் பாத்திரமானவன் என்பதினால் அதைப் பெறவில்லை. அவரது கிருபையினால் அதை பெற்றேன். அதுவே கன்மலையாயிருக்கிறது. ''இந்தக் கன்மலையின் மேல் என் சபையைக் கட்டுவேன்'' என்று அவர் கூறினார். 170. இச்சபைக்காலத்தில் இவர்கள் விசுவாசத்தினால் நீதிமானாகுதல் என்ற நிலையை எய்தினார்கள். இந்நிலை ஒழிந்து போகாமல் பேணிக் காத்துக் கொள்ள வேண்டியது அவர்களுக்கு அவசியமாக இருந்தது. அடுத்ததாக, அவர்கள் மீண்டும் வேதப்புத்தகம் தங்கள் கைகளில் கிடைக்கப் பெற்றிருந்தனர். லூத்தரன்கள் அக்காரியத்தைச் செய்தனர். ஏற்கனவே அவர்களுக்கு 'விசுவாசத்தினால் நீதிமானாகுதல்'' என்று உபதேசமும் கிடைத்திருந்தது. அதை லூத்தர் போதித்தார். அது தான் லூத்தரின் போதகம் என்ற யாரும் அறிவர். அதற்குப் பிறகு, வெஸ்லியின் போதகம் பரிசுத்தமாகுதல் என்பதாக இருந்தது. அதையடுத்து, பெந்தெகொஸ்தே அனுபவமாகிய பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வந்தது. இது எவ்வளவு அருமையாக பூரணமானதாக இருக்கிறதென்பதை உங்களால் காண முடிய வில்லையா? அது பூரணமானதாகத்தான் இருக்கிறது. 171. “ நீ கொஞ்சம் நல்ல காரியங்களைப் பெற்றிருக்கிறாய் அவைகளை நீ சாகவிடாமல் ஸ்திரப்படுத்து, நீ அதைப் பற்றிக் கொள்ளாவிடில், நான் திருடனைப்போல் சீக்கிரமாய் வருவேன். நீ மீண்டும் ஸ்தாபனத்திற்குள் போய்விடுவாய்'' என்று இந்த சபைக் காலத்தின் சபைக்கு சொல்லுகிறார். சரியாக அதேவிதமாகத்தான் அவர்கள் செய்தார்கள். “ நீங்கள் மீண்டும் நிக்கொலாய் மதஸ்தரின் போதகத்திற்குள் போய்விடப் போகிறீர்கள்; ஏனெனில் நீங்கள் மீண்டும் ஒரு ஸ்தாபனமாக ஆகப்போகிறீர்கள். எனவே உங்களுக்குள்ளதை விடாமல் பற்றிக் கொள்ளுங்கள். வேதத்தை வாசிப்பதை காத்துக் கொள்ளுங்கள். நீதிமான்கள் ஆக்கப்பட்டதையும் காத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்'' என்று இச்சபைக்காலத்திற்கு தேவன் கூறினார். இந்த சபைக் காலத்திலும் தேவனுக்கென்று மீதியானவர்கள் வெளியே வந்தனர். அவர்கள் ஒரு சிறு கூட்டமான மீதியானவர்கள். 172. முதலில் வந்த லூத்தருக்குப் பிறகு ஸ்விங்லியும் அடுத்து கால்வினும், தொடர்ந்து வெஸ்லியும் வந்தனர். பரிசுத்தமாகுதல் என்ற வெஸ்லி கொண்டு வந்த செய்தியில் நிலைத்திருந்த குறைந்த எண்ணிக்கையிலான மீதியானவர்கள், தங்களுக்குள்ளதை காத்துக் கொண்டே வந்து பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்குள் சென்று பிழைத்துக் கொண்டனர். 173. ஆனால் இச்சபைக்காலத்தில் மூன்றாவதாக ஒரு காரியம் நடைபெற்றது. அதென்னவெனில், அவர்கள் கத்தோலிக்க சபையைவிட்டு வெளியேறியபொழுது, அநேகம் அஞ்ஞான சடங்காச்சார உபதேசங்களை, அதாவது தெளித்தல், பிழையான ஞானஸ்நானமாகிய பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம், கத்தோலிக்க ஞான உபதேசம் (Catechism) மற்றும் இன்ன பிறவற்றை தங்களோடு கொண்டு வந்தனர். அவர்களது இந்நிலை, ஆண்டவர் அவர்களுக்கு இட்ட பெயருக்கேற்றவாறு அப்படியே அமைந்து விட்டது. “ நீ உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்'' என்று கூறினார். அது சரியாக இருக்கிறது. 174. நான்காவது, இக்காலத்தில் ஏற்பட்ட சீர்த்திருத்தமானது, கத்தோலிக்க மதத்தின் புனிதச் சின்னங்கள் என்னப்பட்டவைகளை வணங்குதல் போன்ற சடங்குகளெல்லாம் ஒழிந்து போகக் காரணமாகியது. ஆனால் ஏற்பட்ட எழுப்புதலானது. சபையில் அடையாளங்களோடு கூடிய பூரண சுவிசேஷ போதகமானது திரும்ப கிடைக்கச் செய்ய தவறிவிட்டது. லூத்தரன் சபையில் இது ஏற்பட வில்லை. அவர்கள் ஒரு போதும் அதைப் பெற்றிருக்கவில்லை. வெஸ்லியின் காலத்திலும் அவர்கள் அதை திரும்பப் பெறவில்லை. லவோதிக்கேயாவின். காலத்தின் முடிவில்தான் அவர்கள் அதை பெற்றார்கள். 175. நாம் இதைப்பற்றி ஆராய்கையில், மீண்டும் வேத வாக்கியங்களுக்குச் சென்று, எவ்வாறு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது என்பதையும், அவர்களுக்கு ஏற்பட்ட எழுப்புதல் பரிசுத்த ஆவியின் எழுப்புதலைத் திரும்பக் கொண்டுவரவில்லை என்பதையும். நான் உங்களுக்கு எடுத்து காண்பிக்க முடியும். 176. அவர்கள் விக்கிரங்களிலிருந்து விலகினர். அவர்கள் விக்கிரங்களை விட்டு விட்டது உண்மைதான். அவர்கள் மரியாள், யோசேப்பு, பேதுரு, பவுல் ஆகியோரின் சிலைகளையெல்லாம் சபையைவிட்டு அகற்றிவிட்டனர். அவர்கள் விக்கிரங்களை விட்டு விட்டுத் திரும்பினர் என்பது வாஸ்தவம்தான். ஆனால் அவர்கள் உயிர்த் தெழுந்த கிறிஸ்துவிடம் திரும்பவில்லை. லூத்தர் அவர்களை விக்கிரகங்களை விட்டு திரும்பப் பண்ணினார். ஆனால் அதிலிருந்து திரும்பிய அவர்கள் ஒரு அரசியலைப் போல், தாங்கள் விட்டு வந்த ஸ்தாபனத்தைப் போலவே இன்னொரு ஸ்தாபனமாக ஆகி, தாங்கள் விட்டு வந்த ஸ்தாபனத்தை மிஞ்சிவிட வேண்டும் என்று கருதி, ஸ்தாபன எண்ணத்தோடு செயல்பட்டார்கள். அது முந்தினதைப் போலவே இன்னொரு சொரூபமாகத்தான் தான் ஆகியது. 177. அவர்கள் இன்னும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். மெதோடிஸ்ட்டுகள் இன்னமும், பாப்டிஸ்ட்டுகள் அனைவரும் மொதோடிஸ்ட்டுகள் ஆகிவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள் அனைத்து லூத்தரன்களும், ஏனைய பாப்டிஸ்ட்டுகள், மற்றும் மெதோடிஸ்ட்டுகள் ஆகியோர் லூத்தரன்கள் ஆகிவிட வேண்டு மென்று விரும்புகிறார்கள். பெந்தெகொஸ்தேயினர், அனைத்து பாப்டிஸ்ட்டுகளும், லூத்தரன்களும் பெந்தெகொஸ்தேயினராக ஆகிவிடவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆகவே இவ்வாறாக இவர்களெல்லாம் தங்கள் ஜீவனற்ற ஸ்தாபனங்களுக்கு கூட்டம் பெருகவேண்டு மென்று விரும்பி, கிரியை செய்கிறார்கள். ஆனால் பிரதானமான காரியம் என்னவெனில், தேவனுடைய திட்டம் அது அல்லவே அல்ல. ஆதியில் இருந்தது போலவே யாவற்றையும் சபைக்கு திரும்ப அளிப்பது ஒன்றுதான் தேவனுடைய திட்டமாகும். 178. கவனியுங்கள்! அதை மீண்டும் சபைக்கு அளிப்பதுதான் திட்டம்! இப்புத்தகம் தரையில் விழுந்து விடுமெனில், அது இருந்த இடத்தில் வேறொரு புத்தகத்தை எடுத்து வைப்பது என்பது புத்தகத்தை திரும்ப அளித்தல், அல்லது புத்துயிரூட்டி அதை திரும்ப தழைக்க வைத்தல் என்ற காரியமாகாது. கீழே விழுந்த அதே புத்தகத்தைத்தான் மீண்டும் அது இருந்த இடத்திற்கு கொண்டு வரவேண்டும். அவர் அதே காரியத்தைத்தான் திரும்பக் கொண்டு வரவேண்டும். ஆமென். ஆகவே சபையானது இருண்ட காலத்திற்குள் மரித்துவிட்ட நிலையில், அது அஞ்ஞானத்தன்மை கொண்டதாக மாறிவிட்ட பிறகு, அதிலிருந்து முழுமையாக மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருதல் தேவையாக இருக்கிறது. ஆனால் இது ஒரு சீர்திருத்தம் மட்டுமே சீர்திருத்தல், மறுபடியும் பிறத்தல் இவையிரண்டும் இரு வெவ்வேறு காரியங்களாகும். பாருங்கள்? அவர்கள் கத்தோலிக்க சமயத்தின் விக்கிரகங்கள் மற்றும் இன்னபிற காரியங்களிலிருந்து மீண்டும் வந்து சீர்திருத்தத்தைப் பெற்றனர். ஆனால் அவர்கள் ஒரு போதும் சபைக்கு மீண்டும் பரிசுத்த ஆவியைத் திரும்பக் கொண்டு வரவில்லை. ஓ, கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. சகோதரனே, சகோதரியே, இதை உங்களால் காண முடிகிறதா? அவர்கள் ஒருபோதும் சபைக்கு பரிசுத்த ஆவியைத் திரும்பக் கொண்டு வரவில்லை. ஏனெனில், உண்மையான சுவிசேஷ ஒளியை இங்கே யுள்ள இந்த சபைக்காலத்தின் தூதன் கொண்டு வருகிறான். இப்பொழுது நீங்கள் எல்லாவற்றிற்கும் உள்ள உச்சியான நிலையை அமைத்துக் கொள்ளலாம். (இந்த கடைசி கால தூதன் வருவதைக் குறித்து கூறும்பொழுது, தீர்க்கதரிசி "Put on Your cap" என்று கூறுகிறார். அதாவது எல்லாவற்றிற்கும் சிகரம் போன்ற பகுதியைக் காணுங்கள். அல்லது உச்ச கட்டமான பூரணப்பகுதி என்பதை சுட்டிக் காட்டுகிறார் - மொழி பெயர்ப்பாளர்) அதைக் குறித்து நீங்கள் ஞாயிற்றுக்கிழமையன்று காணப்போகிறீர்கள். 179. அக்காலத்தில் அவர்களுக்கு, மிக உயர்ந்த ஒளி, கிறிஸ்தவ ஒளி உண்டாயிருக்கும். அப்படியிருந்தும் கூட அவர்களில் அநேகர் அந்த ஸ்தாபன அமைப்புக்குள் போய்விடுவார்கள். ஆனால் அவர்களுக்கெதிராக நிற்கக்கூடிய ஒருவன் தோன்றுவான் (ஆம் ஐயா) நான் இந்தப் பிரசங்க பீடத்தில் இப்பொழுது நின்று கொண்டிருப்பது எவ்வளவு உண்மையாக இருக்கிறதோ, அதே அளவு உண்மையாக, அவன் ஸ்தாபனங் களிலிருந்து கர்த்தருக்கென மீதியாயிருக்கிற ஒரு கூட்டத்தை பிரித்தெடுப்பான். அவன் ஆதியில் இருந்த நிலைக்கு திரும்பக்கொண்டு போவான். லவோதிக்கேயாவின் தூதன் அதைச் செய்வான் என்பதையும், அவன் மூல உபதேசத்திற்கு திருப்பி, ஆதியில் நடந்தவாறு மீண்டும் ஏற்படச் செய்வான் என்பதையும் நான் பழைய ஏற்பாட்டிலிருந்தும், புதிய ஏற்பாட்டி லிருந்தும், எடுத்து உங்களுக்கு நிரூபிக்கப் போகிறேன்.. அது உண்மை. அந்த சபையின் காலத்தில் மரித்துப்போனதுபோல் இருந்த மூல உபதேசம். பரிசுத்த ஆவியின் கிரியைகள், மரித்தோரிலிருந்து எழுந்ததுபோல் மீண்டும் நடக்கும். 180. சர்தை என்றால் “ தப்பித்துக் கொண்டவன்'' என்ற அர்த்தத்திற்கேற்ப, லூத்தர் சபையை அஞ்ஞான மார்க்கத்தைவிட்டு வெளியே இழுத்தார். அவர் 'விசுவாசத்தினால் நீதிமானாகுதல்'' என்ற செய்தியோடு அஞ்ஞான மார்க்கத்தைவிட்டு ஒரு அடி வெளியே எடுத்து வைத்தார். அது நல்லதுதான். அடுத்த காலத்திற்குள் இரண்டு அடிகள் எடுத்து வைக்கப்பட்டது. 181. வேதத்தில், ஆலயத்தின் வாசற்படியின் கீழிருந்து தண்ணீரானது புறப்பட்டுச் சென்றதைப் பற்றி பார்க்கிறோம். முதலாவது தண்ணீர் முழங்காலளவு இருந்ததாகவும், அடுத்து இடுப்பு வரையிலும் இருந்ததாகவும், கடைசியாக தலைக்கு மேலே தண்ணீர் சென்றதாகவும் தீர்க்கதரிசி கூறுகிறான். தலைக்கு மேலே தண்ணீர் சென்ற கட்டம் வந்தபோது, அவன் நீந்தவேண்டியதாயிற்று. பாருங்கள், அவன் நீந்த வேண்டியதாயிற்று. 182. நாம் இப்பொழுது இன்று நீந்திக் கரை சேரவேண்டும். அல்லாவிடில் மூழ்கி அமிழ்ந்து விடவேண்டியதாகிவிடும். அவ்வளவுதான். ஒன்று அது உங்களை மூழ்கடித்து முழுவதும் போக்கடித்துவிடும், இல்லையேல், உங்களை அது கரைசேர்க்கும். எனவே அது நீந்திக்கரைசேர் அல்லது மூழ்கிவிடு என்று இருக் கிறது. அல்லேலூயா! ஓ, பரிசுத்த ஆவியைப்பற்றி நான் மகிழ்ச்சி யாக இருக்கிறேன். நீங்கள் அவ்வாறு இல்லையா? நானும் அவர்களுள் ஒருவன் என்று கூறிட மிகவும் மகிழ்கிறேன் நானும் அவர்களில் ஒருவன் (யார் இந்த அவர்கள்? இன்னார், இன்னார், இன்னார் என்று அல்ல) நானும் அவர்களில் ஒருவன் என்பதால் ஆனந்தமே அல்லேலூயா; அவர்களில் ஒருவன் நானும் அவர்களில் ஒருவன் அவர்களில் நானும் ஒருவன் என்பதால் ஆனந்தமே. 183. அது அருமையாக இல்லையா? கவனியுங்கள்; அவர்கள் மேல் வீட்டறையில் கூடினர், அவர் நாமத்தில் கூடி ஜெபித்தனர், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றனர் ஆராதனைக்காக வல்லமை அவர் மேல் வந்தது, அவர்களுக்கு அந்நாளில் என்ன செய்தாரோ அதையே உனக்கும் இன்று செய்திடுவார் நானும் அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கானந்தமே, அல்லேலூயா! அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கானந்தமே 184. அவர்கள் வேதக்கல்லூரிகளுக்குச் சென்றார்களா? இல்லை. அவர்களில் சிலருக்கு, தங்களுடைய சொந்தப் பெயரைக் கூட எழுத இயலாத அளவுக்கு இருந்தார்கள். அது உண்மை. பேதுருவும் அப்படித்தான். அவனும் யோவானும் படிப்பறியாதவர் களும், பேதமையுள்ளவர்களுமாய் இருந்தார்கள் என்று வேதம் கூறுகிறது. ஆனால் அவர்கள் இயேசுவோடு கூட இருந்தவர்கள் என்று அறிந்து கொண்டதால், அவர்கள் கூறுவதை யாவரும் செவிமடுத்தாக வேண்டியதாயிருந்தது. அவர்கள் கல்லாதவர்கள் ஆயினும் உலகில் கீர்த்தி பெற்றவர் எனும் பெருமையுமில்லை (''ஓ தேவனுக்கு துதி, நான் இன்னின்ன பட்டங்களைப் பெற்றுள்ளேன் என்ற பெருமை) அவர்கள் யாவரும் தங்கள் பெந்தெகொஸ்தேயை பெற்றனர் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றனர் அவரது வல்லமை மாறாதது என்று எங்கணும் பிரசித்தம் செய்கின்றனர் நானும் அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கானந்தமே அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கானந்தமே அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கானந்தமே. 185. நீங்கள் அதைப் பற்றி மகிழ்ச்சியாயிருக்கவில்லையா? அவர்களில் ஒருவராக இருப்பதைப் பற்றி நீங்கள் மகிழுங்கள். நான் அறிந்திருக்கிற வேறு ஏதாவது ஒன்றில் ஒருவனாக இருப்பதைவிட அவர்களில் ஒருவனாக இருப்பதையே நான் நாடுவேன். அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் குடியரசுத்தலைவராக விரும்புவதை விட, இவ்வுலகின் மேல் ஒரு அரசனாக இருக்க விரும்புவதைவிட, நான் அவர்களில் ஒருவனாக இருப்பதையே நாடுவேன். கர்த்தராகிய இயேசு இங்கே நடந்து வந்து “ நான் உன்னை இருபது வயதுள்ளவனாக மாற்றி, உன்னை ஒரு ஓவர்சீயராக (கண்காணிப்பாளராக) வோ, அல்லது உலகின் மேல் ஒரு அரசனாகவோ ஆக்கி, உனக்கு இப்புவியில் பத்தாயிரம் ஆண்டுகள் ஆயுட் காலத்தை நீட்டித்து, அக்காலம் முழுவதும் உனக்கு இருபது வயதே இருக்கும்படி செய்து, ஒரு நாள் கூட பிணியால் வாடாமல், நெஞ்சு வலியில்லாமலும் வேறெந்த பிணியும் இல்லாமலும் செய்து, ஆயுட்காலம் முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியிருக்கத்தக்கதாக செய்து விடட்டுமா, அல்லது அவர்களில் ஒருவனாகவே நீ இருந்து கொண்டு, அதினால் இப்பொழுது நீ போராடிக்கொண்டிருப்பது போலவே கால மெல்லாம் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கிற அவ்விதமான வாழ்க்கையை தெரிந்து கொள்கிறாயா? என்று என்னிடம் கேட்டால். 186. நான் கூறிவேன், “ அவர்களில் ஒருவனாக நான் இருக்கிறேன் என்று கூறிட நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன்'' என்று பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு என்ன இருக்கிறது? ஆனால் இதுவோ, நித்திய ஜீவனாக இருக்கிறது. அது எவ்வாறு வருகிறது? அது இரத் தத்தினால் வந்துள்ளது. அது நீண்ட காலமாக வந்து கொண்டிருக்கிறது. தேவன் மாமிசத்தில் தோன்றி நம்மிடையே வாசம் பண்ணியதால் அது சாத்தியமாயிற்று. மனிதனை பாவத்தினின்று இரட்சிக்க ஓர் பாலகன் வெகுகாலம் முன்பு முன்னணையில் பிறந்தார் என்பதை நான் நன்கறிவேன். சதா உயிரோடிருக்கிறவரை யோவான் நதிக்கரையில் கண்டான், ஓ அவரே சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து கலிலேயாவின் அம்மனிதனை நான் நேசிக்கிறேன் அவர் எனக்காக அநேகம் செய்திட்டார் என் பாவங்களையெல்லாம் அவர் மன்னித்தார் என்னில் பரிசுத்த ஆவியை ஊற்றிவிட்டார் கலிலேயாவின் அம்மனிதனை நான் நேசிக்கிறேன் கிணற்றண்டையில் நின்ற அப்பெண்ணின் பாவங்கள் யாவையும் கண்டு கூறினார் (அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்) அவளுக்கு ஐந்து கணவர்கள் உண்டென்பதைக் கூறினார் அவளது பாவங்கள் யாவும் மன்னிக்கப்பட்டன அவளது இதயத்தில் சமாதானம் குடிகொண்டது அவள் யாவர்க்கும் கூறினாள், “ வந்து பாருங்கள் இக்கலிலேயனை'' என அக்கலிலேயனை நான் நேசிக்கிறேன், அக்கலிலேயனை ஏனெனில் அவர் எனக்கு அநேகம் செய்திட்டார், என் பாவங்கள் யாவையும் மன்னித்து, பரிசுத்த ஆவியை எனக்கீந்தார், ஓ, நான் நேசிக்கிறேன் நான் நேசிக்கிறேன் அக்கலிலேயனை ஆயக்காரன் ஒருவன் ஆயலத்தினுள் சென்று ஜெபித்தான் “ பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்'' என்று கதறினான் அவன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, மிகுந்த சமாதானம் அவனில் குடி கொண்டது அவன் கூறினான், "கலிலேயனாகிய இம்மனிதனை வந்து பாரீர்'' என. 187. நான் அதை விரும்புகிறேன், நீங்கள் விரும்புகிறீர்களா? முடவர் நடந்தனர், ஊமையர் பேசினர் கடலின் மேல் அவ்வன்பின் வல்லமை பேசப்பட்டது. குருடர் கண்டனர், அக்கலிலேயனின் இரக்கம் தான் இதைச் செய்தது என்பதை நான் அறிவேன் 188. என்னோடு சேர்ந்து இதைப் பாடுங்கள்: கலிலேயனாகிய அம்மனிதனை நான் நேசிக்கிறேன் அவர் எனக்கு மிகுதியாயச் செய்திட்டார். அவர் என் பாவங்களெல்லாம் மன்னித்தார், என்னில் பரிசுத்த ஆவியை ஊற்றினார். நான் கலிலேயனாகிய அம்மனிதனை நேசிக்கிறேன். 189. அதை நீங்கள் நேசிக்கிறீர்களா? ஓ, என்னே ! இந்த நல்ல, பரிசுத்த ஆவியின் சுவிசேஷத்தை நான் நேசிக்கிறேன். என் முழு இருதயத்தோடும் நான் அவரை நேசிக்கிறேன். அவர்களில் ஒருவனாக நான் எண்ணப்பட்டிருப்பதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாம் யாவரும் சகோதர சகோதரிகளாக கூடி வந்திருக்கிறோம். தேவன் பாப்டிஸ்ட், மொதோடிஸ்ட், கத்தோலிக்கர் ப்ரெஸ்பிடேரியன் மற்றும் வாழ்க்கையின் இன்ன பிற காரியங்களிலிருந்தும் நம்மை வெளியே கொண்டு வந்து, இங்கே இந்த மகத்தான பரிசுத்த ஆவியின் ஐக்கியத்திற்குள் கூட்டிச் சேர்த் திருக்கிறார். நாம் இங்கே ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவில்லை, மற்றவர்கள் விரும்புவதை செய்து கொள்ளட்டும். ஆனால் நாமோ, மனிதரால் அறிந்துகொள்ள முடியாத, புரிந்து கொள்ள முடியாத ஆச்சரியமான இராஜ்யத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம். புத்திகெட்டாத ஆச்சரியமான அந்த இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்குள் பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். மெதோடிஸ்ட்டுகளோ, அல்லது பாப் டிஸ்ட்டுகளோ, ப்ரெஸ்பிடேரியன்களோ, அல்லது எவராயினும் சரி, அதற்குள் நீங்கள் வரலாம். 190. ''என் பிதா எனக்குத் தந்தவர்கள் யாவரும் என்னிடத்தில் வருவார்கள். அவர்களில் ஒருவனையும் நான் இழந்து போவதில்லை. கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்'' என்று இயேசு கூறினார். ஓ, என்னே! பீடத்தண்டையில் பின்வரும் பழங்காலத்துப் பாடலை பாடுவதுண்டு: நாம் அதைப் பாட முடியுமோ அல்லது முடியாதோ எனக்குத் தெரியவில்லை. “ இடமுண்டு, இடமுண்டு, ஆம் ஊற்றண்டையில் எனக்கு இடமுண்டு, அங்கே இடமுண்டு.'' அவ்விதமான பழைய பாடல்களை நீங்கள் விரும்புகிறீர்களா? இடமுண்டு, இடமுண்டு, அங்கே இடமுண்டு அங்கே ஊற்றண்டையில் உனக்கு இடமுண்டு இடமுண்டு, இடமுண்டு, ஆம் இடமுண்டு அங்கே ஊற்றண்டையில் உனக்கு இடமுண்டு 191.அவ்விதமான பழைய பாடல்களை நீங்கள் விரும்புகிறீர்களா? நானும் கூட விரும்புகிறேன். மீட்பர் மரித்த குருசண்டை நான் ஜெபித்த ஸ்தலத்தண்டை இரத்தத்தால் மன்னிப்பு அடைந்தேன் மீட்பரே வாழ்க அவர் நாமத்திற்கு மகிமை, அவர் நாமத்திற்கு மகிமை (அவருடைய விலையுயர்ந்த நாமம்) (கண்களை மூடியவாறு பாடுவோம்) என் இதயத்தில் இரத்தம் பூசினார் (அவர் நாமத்திற்கே) மகிமை ஆச்சரியம் உள்ளம் மாறிற்று, ஏசுவின் மாளிகை ஆயிற்று; சிலுவையண்டை உண்டாயிற்று அவர் நாமத்திற்கே மகிமை அவர் நாமத்திற்கு மகிமை அவர் நாமத்திற்கு மகிமை (அவரது விலையேறப் பெற்ற நாமம்) அவர் நாமத்திற்கு மகிமை! (விலையுயர்ந்த நாமமது) என் இதயத்தில் இரத்தம் பூசினார் அவர் நாமத்திற்கே மகிமை. 192. பின்வரும் சரணத்தை நாம் பாடுகையில், நீங்கள் உங்களுக்கு முன்னும், பின்னும் பக்கங்களில் உள்ள யாவரோடும் கைகலுக்கி கொண்டே பாடுங்கள். வாரீர் இவ்வினிய உயரிய ஊற்றண்டையில் இரட்சகர் பாதத்தில் படைப்பீர் உம் ஆத்துமாவை அவ்வூற்றில் மூழ்கி இன்றே சுத்தமாவீர் அவர் நாமத்திற்கே மகிமை. மகிமை அவர் நாமத்திற்கே! (அந்த விலையேறப்பெற்ற நாமம்) மகிமை அவரது விலையுயர்ந்த நாமத்திற்கே, என் இதயத்தில் இரத்தம் பூசினார், அவர் நாமத்திற்கே மகிமை 193. நான் அதை நேசிக்கிறேன். நீங்கள் நேசிக்கிறீர்களா? அவர் நாமத்திற்கே மகிமை! ( விலையேறப்பெற்ற நாமம்) அவர் நாமத்திற்கே மகிமை! அங்கே என் இதயத்தில் உதிரம் பூசினார் அவர் நாமத்திற்கே மகிமை. 194. ஓ, என்னே ! நான் சந்தோஷமாயிருக்கிறேன். நீங்கள் அவ்வாறில்லையா? மிகவும் உயர்ந்ததும், இனியதுமான அவ்வூற்றண்டையில் வந்து, எனது எளிய ஆத்துமாவை இரட்சகரின் பாதத்தில் சமர்ப்பிக்க எனக்கு இயன்றதால் நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக் கிறேன். 195. நான் பதினெட்டு வயது வாலிபனாக இருக்கையில் கர்த்தரை விட்டு ஓடிக்கொண்டிருந்தபோது, ஒரு குறிப்பிட்ட நாளை நான் நினைவு கூறுகிறேன். நான் மேற்கு பகுதிக்கு சென்றேன். என் தந்தை அங்க குதிரைகள் சவாரி செய்து ஜீவனம் நடத்துகிறவராயிருந்தார். நான் அங்கே சென்று குதிரைகளைப் பழக்குவிக்கிற வேலையை செய்ய விரும்பினேன். அப்பொழுது, என் இருதயத்தில் ஏதோ ஒன்றுக்காக நான் பசியாயிருந்தேன். ஓ, நான் அதை உங்களுக்கு சொல்லுவேன். 196. நான் பாப்டிஸ்ட் சபை பிரசங்கியாரிடம் சென்ற போது, அவர் என்னிடம், “ நீ எழுந்து நின்று, “ இயேசு தேவனுடைய குமாரன்' என்று மட்டும் சொன்னால் போதும், நாங்கள் உன்னுடைய பெயரை சபைப் பதிவேட்டில் பதிந்து விடுவோம்' என்று கூறினார். அதுவும் என்னைத் திருப்தி செய்யவில்லை. 197. நான் சென்ற இடமெல்லாம் ஒவ்வொருவரும்... நான் ஏழு நாள் ஓய்வு சபையைச் சேர்ந்த சகோதரன் பார்கர் (Brother Barker) என்ற அருமையான நேசமுள்ள சகோதரர் ஒருவரிடம் சென்றேன். அவரும் என்னிடம், “ பில்லி, நீ வந்து, கர்த்தருடைய ஓய்வை ஏற்றுக்கொள்'' என்று கூறினார். (நான் ஏற்கெனவே அந்த ஓய்வை என் உள்ளத்தில் பெற்றிருக்கிறேன்). ஆனால் அவர் “ ஓய்வுநாளை ஏற்றுக்கொள்'' என்று தான் கூறினார். அப்பொழுது, நான், “ ஓ, இதுவும் நான் தேடுவதைக் கொடுப்பதாக இல்லையே'' என்று எனக்குள் எண்ணினேன். 198. நான் மேற்கில் சென்றேன். அன்றொரு இரவில் நாங்கள் மந்தையை மேய்த்து அதை மடக்கினோம். குதிரையை விட்டு சேணத்தை எடுத்துவிட்டு, அங்கிருக்கும் கேம்ப் பையையும் எடுத்து வைத்துவிட்டு, படுத்துறங்கப்போகையில், அச்சேணத்தையே தலைக்கு தலையணையைப் போல் உபயோகிப்பதுண்டு. அவ்வாறு நான் அன்றிரவில் மிக வயதான பைன் மரங்களின் அடியில் படுத்துக்கொண்டிருந்தேன். நான் பகல் நேர கண்காணிப்பு வேலையைச் செய்தேன். ஆகவே இரவு நேர வேலையைச் செய்யும் பையன்கள் மந்தையை உள்ளே கொண்டு வந்தார்கள். அவர்களில் டெக்ஸாஸைச் சேர்ந்த “ ஸ்லிம்'' என்றழைக்கப்படும் ஒரு வயதான மனிதர் தன்னுடைய கிட்டாரை மீட்டு, ''அவர் நாமத்திற்கே மகிமை'' என்று பாடலை இசைத்தார். 199. இன்னொரு நபர் ஒரு சீப்பின் மேல் ஒரு தாளை வைத்து அதை ஊதி இசைத்தார் (சகோதரன் பிரான்ஹாம் அவர்கள் ''அவர் நாமத்திற்கே மகிமை'' என்ற பாடலை மௌனமாக இசைக்கிறார்ஆசி) அவர்கள் வேறு பாடல்களையும், கௌபாய் பாடல்களையும் பாடினார்கள். "மீட்பர் மரித்த குருசண்டையில் என்ற பாடலையும் பாடினார்கள்.'' 200. நான் புரண்டு படுத்தேன். என் தலையில் மேல் பக்கமாக கம்பளியை எடுத்துப் போட்டுவிட்டு, பின்னால் திரும்பிப் பார்த் தேன். இரவில் காணப்பட்ட நட்சத்திரங்கள் கீழே இறங்கி வந்து அந்த பைன் மரங்களின் உச்சியில் தொங்கிக் கொண்டிருப்பது போலவும், அங்கிருந்த மலைகள் மேலும் வந்திறங்கி விட்டது போலவும் காணப்பட்டது. பைன் மரங்களில் இருந்து சதாகால மும் மனிதரை நோக்கி அவர்கள் காதுகளில் முணுமுணுக்கும் அந்த வழக்கமான சப்தமாகிய, 'ஆதாமே நீ எங்கேயிருக்கிறாய்?'' என்று அவர் என்னை நோக்கி கூப்பிட்டது எனக்குக் கேட்க முடிந்தது. 201. மூன்று வாரங்கள் கழித்து, நான் நகரத்திற்குள் சென்றேன். அந்தப் பையன்கள் யாவரும் மது அருந்திருந்தார்கள். நான் மட்டும் குடிக்கவில்லை. நான் எப்படியாவது அவர்களை மோட்டார் வாகனத்தில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு போய் சேர்ந்ததாக வேண்டும் என்ற நிலை இருந்தது. குடித்திருந்த நிலையில் அவர்களுக்கு பாதுகாப்பின்றி அபாயகரமானதாக இருந்தது. ஏனெனில் அவர்கள் ஒருவருக்கொருவர் முன்பாத விரல்களை சுட்டுக் கொண்டார்கள். அவர்கள் அங்கே ஒரு நேர்க்கோடு ஒன்றை போட்டு, அதில் வளையாமல் கோட்டின் மேல் நேராக யார் நடக்கிறார்களோ அவர்களுக்கு 5 டாலர் என்று பந்தயம் கட்டிக் கொண்டு நடப்பார்கள். அவர்களால் குடித்த நிலையில் பாத சாரிகளுக்கென போடப்பட்டிருக்கும் நடைபாதையிலேயே சரியாக நடக்க முடியாது. இவ்வாறு அவர்கள் ஆட்டம் போட்டு, பின்பு, குடிவெறி தெளிந்து தங்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு போவார்கள். 202. அவர்கள் யாவரும் குடித்து வெறித்திருந்தார்கள் நானோ தனியே அப்புறம்போய் உட்கார்ந்தேன். இது 35 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். நான் தனியே போய் உட்கார்ந்தேன். அந்நாட்களில் பீனிக்ஸ் ஒரு சிறிய ஊர் தான். அவர்கள் விக்கன் பர்கிலிருந்து வந்திருந்தார்கள். நான் அவ்வாறு உட்கார்ந்து கொண்டிருக்கையில், வாலிபமான ஒரு ஸ்பானிய பெண்ணொருத்தி, நலுக்கி குலுக்கி கொண்டு அவ்வழியாக வந்தாள். பெரிய தொப்பி அவள் தலைக்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருக்க, அவ்வழி யாகக் கடந்து சென்ற அவள், தனது சிறிய கைக்குட்டை ஒன்றை என்னருகில் நைசாகப் போட்டுவிட்டுச் சென்றாள். நான் அவளை நோக்கி, "ஏய், உனது கைக்குட்டையை கீழே போட்டு விட்டுச் சென்றாயே'' என்றேன். நான் அவள் சமிக்ஞையின் பேரில் ஆர்வம் காட்டவில்லை. (அந்நாட்டில் பெண்ணொருத்தி ஒரு ஆணிடம் சல்லாபம் கொள்ள தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்க இவ்வித மான ஒரு சமிக்ஞையை அவ்வாணுக்குத் தெரிவிப்பதுண்டு - மொழி பெயர்ப்பாளர்). 203. கீழ்ப்பகுதியில் உள்ள தெருவில் அப்பொழுது ஒரு சப்தம் கேட்டதும் நான் அங்கே கீழே போனேன். அங்கே முகத்தில் வைசூரி வடுக்கள் கொண்ட வயதான கௌபாய் ஒருவர் உட் கார்ந்து தன்னுடைய கிட்டாரில், தன் கண்களில் கண்ணீர் வடிய இசைத்து, 'அவர் நாமத்திற்கு மகிமை'' என்ற பல்லவியைப் பாடிக் கொண்டிருந்தார். அவர் அந்த மோசமான கூட்டத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு விடுவிக்கப் பட்டவராயிருந்தார். 204. அவரது கன்னத்தில் கண்ணீர் வடிய பாடிக்கொண்டிருந்தார். நான் அவரருகில் சென்றதும் பாடுவதை நிறுத்திவிட்டு, ''சகோதரனே இந்த அற்புதமான கிறிஸ்துவை நீ பெற்றுக் கொள்கிற வரையிலும், இவ்வனுபவம் எத்தகையது என்பதை நீ அறிய மாட்டாய்'' என்று கூறினார். "அவர் நாமத்திற்கு மகிமை" 205. நான் என்னுடைய தொப்பியை கீழே இழுத்து விட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன். அவர் சமுகத்தை விட்டு உங்களால் ஒளித்துக்கொள்ள முடியாது. நீங்கள் மறைந்திருக்கிற இடத்தைவிட்டு வெளியே வந்து, கூப்பிடுகிற அவருக்கு முன்பாக வந்து, உங்கள் பாவங்களை அறிக்கை செய்தாக வேண்டும். ஓ! அவர் அற்புதமானவராக இருக்கிறார். ஆம், அவர் அப்படித்தான் இருக்கிறார். ஆச்சரியம் என் உள்ளம் மாறிற்று ஏசுவின் மாளிகை ஆயிற்று; சிலுவையண்டை உண்டாயிற்று அவர் நாமத்திற்கே மகிமை. மகிமை அவர் நாமத்திற்கே அவர் நாமத்திற்கே மகிமை என் இதயத்தில் இரத்தம் பூசினார் அவர் நாமத்திற்கே மகிமை வாரீர் இவ்வினிய உயரிய ஊற்றண்டை இரட்சகரின் பாதம் படைப்பீர் உம்மாத்துமாவ அவ்வூற்றில் மூழ்கி இன்றே சுத்தமாவீர் அவர் நாமத்திற்கே மகிமை 206. நாம் இப்பொழுது தலைகளை வணங்கி கைகளை உயர்த்துவோம். அவர் நாமத்திற்கே மகிமை (மகிமை, மகிமை) (ஓ, தேவனே விலையேறப்பெற்ற நாமம்!) என் இதயத்தில் இரத்தம் பூசினார் அவர் நாமத்திற்கே மகிமை 207. தேவனுக்கு மகிமை! நாம் எழுந்து நிற்போமாக. சொல்லப் போவதை செவிகொடுத்துக் கேளுங்கள். சற்றுப் பொறுங்கள்... (ஒரு சகோதரி அன்னிய பாஷையில் பேசுகிறார். ஒரு சகோதரன் வியாக்கியானம் செய்கிறார்-ஆசி). 208. இது என்ன என்பதைப் பற்றி அறியாத யாராவது இருப்பீர்களென்றால், அது பெந்தெகொஸ்தேயின் அனுபவம், பரிசுத்த ஆவியினால் பேசுவது என்று அறிந்து கொள்வீர்களாக. இயேசு கூறினார்: ''உலகம் முழுவதும் போய் சுவிஷேத்தை பிரசங்கியுங்கள். இவ்வடையாளங்கள் விசுவாசிக்கிறவர்களைப் பின் தொடரும். அவர்கள் நவமான பாஷைகளைப் பேசுவார்கள். வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.'' அவர் உரைத்த இக்காரியங்களெல்லாம் சம்பவித்து நிறைவேறியாக வேண்டும். 209. ஓ! நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் வந்து அந்த வார்த்தையை உறுதிப்படுத்தியதைப் பார்த்தீர்களா? ஒரு வெளிச்சம் அது. அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அதை சந்தேகிக்காதீர்கள். அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். ஒரு குழந்தையைப்போல் நீங்கள் உங்களை ஆக்கிக்கொண்டால் அப்பொழுது அவர் உங்களோடு இடைப்பட்டு, உங்களை சரியான பாதையில் நடத்துவார். பரிசுத்த ஆவியானவர் இனிமையானவராக உங்களுக்கு இருக்கவில்லையா? பரிசுத்த ஆவியானவர் இனிமை ததும்ப நம்மேல் இருக்கிறார். 210. ஒரு சமயம் கர்த்தருடைய ஜனங்கள், எந்த வழியாக சத்துருவின் சேனை வருகிறது என்பதை அறியாதிருந்தபொழுது, அவர்களில் ஒருவன் மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கிவந்து எவ்வழியாக சத்துரு வருவான் என்றும், இவர்கள் எவ்வழியாகப் போய் அவர்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதைபற்றி சரியாக உரைத்திட்டார். கர்த்தருடைய வார்த்தையின்படியே இவர்கள் சென்றபொழுது, சத்துருவின் சேனையை தேவன் குழம்பிப்போகும் படி செய்து, அவர்கள் அழிந்துபோகப் பண்ணினார். 211. நாம் இன்னும் வேதாகம நாட்களில் ஜீவித்து வருகிறோம்! அப்படியில்லையா? ஆம், எப்பொழுதும் அவ்வாறுதான் பரிசுத்த ஆவியானவர் பூமியில் இருக்கிறவரையிலும் வேதாகம நாட்களில் தான் நாம் ஜீவிப்போம். 212. நாம் இப்பொழுது நின்றுகொண்டு பாடுவோம்: இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் (செய்தியை ஞாபகங்கொள்ளுங்கள்) துயரமும் துக்கமும் கொண்ட பிள்ளையே அது உனக்கு மகிழச்சியையும் ஆறுதலையும் அளிக்கும் நீ செல்லும் இடமெல்லாம் அதைக் கொண்டு செல் விலையுயர்ந்த நாமம், (விலையுயர்ந்த நாமம்) ஓ என்ன இனிமை (ஓ என்ன இனிமை) பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம், (அந்த விலையுயர்ந்த நாமம் ஓ என்ன இனிமை) பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக சோதனைகள் உன்னை சூழும்போது அந்தப் பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. (தேவனுக்கு ஸ்தோத்திரம்) ஓ, விலையுயர்ந்த நாமம், (விலையுயர்ந்த நாமம்) ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம் (விலையுயர்ந்த நாமம்) ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் 213. இந்த சரணத்தை கவனியுங்கள் இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக சோதனைகள் உன்னைச் சூழும்போது அந்தப் பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. 214. ஓ, அதை நாம் மீண்டும் பாடுவோம் இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக சோதனைகள் உன்னைச் சூழும்போது அந்தப் பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. 215. இப்பொழுது நாம் தலைகளை வணங்குவோம். ஓ, விலையுயர்ந்த நாமம், (விலையுயர்ந்த நாமம்) ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம் (விலையுயர்ந்த நாமம்) ஓ என்ன இனிமை! (என்ன இனிமை) பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். ******* எட்டாம் அத்தியாயம் பிலதெல்பியா சபையின் காலம் THE PHILADELPHIAN CHURCH AGE சகோதரன் போய் எனக்காக ஒரு பெரிய சூடான செர்ரிபை (Cherry pie) வாங்கிக் கொண்டு வந்தார். (செர்ரி பை என்பது செர்ரி பழமும் இறைச்சியும் மாவும் முறையாக கலந்து சேர்த்து ரொட்டி சுடுவது போல் சுட்டு அதன் மேல்பாகத்தில் முறுகலாக இருக்கும் ஒருவகை சுவையான தின்பண்டம் - மொழி பெயர்ப்பாளர்) எனக்கு செர்ரி பை பிடிக்கும் என்று ஜாடையாக சொல்வது பயனை அளிக்கிறது. அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள், சகோதரன் நெவில் அவர்களே? அதோ அவர், பாருங்கள்? அது ஒரு விருப்பமுள்ள தின்பண்டம் போல் காணப்படுகிறது. அது உண்மையிலேயே அருமையாக இருக்கிறது. செர்ரி பை சாப்பிடுவதைப் பற்றி நான் ஒரு விஷயத்தைக் குறிப்பிடுவதுண்டு. அதாவது, செர்ரி பை சாப்பிடும்பொழுது, உங்கள் வாயில் அதன் கொட்டை அகப்பட்டுவிடுகிறது. அப்பொழுது நான் செர்ரி பை-ஐ தூக்கி எறிந்து விடுவதில்லை. அங்கே வாயில் அகப்படுகிற அதன் கொட்டையைத் தான் நான் தூக்கியெறிந்துவிட்டு, செர்ரி பையை சாப்பிட்டுக் கொண்டேயிருப்பேன். 2. அவ்விதமாகத்தான் நீங்கள் இந்த செய்தியைக் குறித்தும் செய்ய வேண்டுமென நான் விரும்புகிறேன். செய்தியை என்னோடு நீங்கள் புசித்துக்கொண்டே போகையில், உங்களால் ஜீரணிக்க முடியாத (கிரகிக்க முடியாத) ஏதாவதொரு விஷயம் வரும்போது, அதற்காக, முழு விஷயத்தையுமே வீசியெறிந்து விடாதீர்கள். எது உங்களுக்குப் புரியவில்லையோ, அதை (அந்த விதைப்பாகத்தை) மட்டும் அகற்றி வைத்துவிட்டு, தொடர்ந்து செய்தியாகிய அந்த பை (Pie)-ஐ சாப்பிட்டுக் கொண்டேயிருங்கள். அவ்விதமாகத் தான் அதைச் செய்ய வேண்டும். பாருங்கள். 3. நீங்கள் பொறித்த கோழியை விரும்புகிறீர்களா? ஏறத்தாழ யாவருமே அதை விரும்பத்தான் செய்கிறார்கள். நீங்கள் கோழிக் கறி சாப்பிடும்போது, உங்கள் வாயில் எலும்பு கடிபடுகிறது. அப்பொழுது நீங்கள் கோழி வறுவலையே தூக்கியெறிந்து விடுவதில்லை, வாயிலகப்பட்ட எலும்பை மட்டுமே தூக்கியெறிகிறீர்கள். அது சரிதானே, பேட் அவர்களே? எலும்பை வீசியெறிந்துவிட்டு, தொடர்ந்து கோழிக்கறியை புசித்துக் கொண்டேயிருக்கிறீர்கள். 4. நல்லது, நமக்கு எலும்போ, அல்லது கொட்டையோ அகப்படாத ஒரு மகத்தான உணவு நாம் உண்பதற்கு இருக்கிறது என்பதற்காக நாம் சந்தோஷமாய் இருக்கிறோம். ''மன்னா'' என்றழைக்கப்படும், முழுவதும் பரலோகத்தின் இனிமையினால் நிறைந்திருக்கும் அப்பங்கள் பரலோகத்திலிருந்து இறங்கி வந்தது. 5. தாவீது ஒரு தடவை, “ கன்மலையின் தேனைப்போல் மதுரமுள்ளது'' என்று கூறியிருக்கிறான் என்று நம்புகிறேன். ஒரு கவியும், ''அது கன்மலையின் தேனாக இருக்கிறது'' என்று பாடியிருக்கிறார் என்று நம்புகிறேன். ஓ, என் சகோதரனே, கன்மலையின் தேனைப்போல் மதுரமுள்ள அதை நீங்கள் ருசி பார்த்ததுண்டா ? ''என் சகோதரனே, அது கன்மலையின் தேனாக இருக்கிறது''. அவ்விதமாகத்தான் அது உள்ளது. 6. ஒரு சமயம், கன்மலையின் தேன் என்றால் எப்படிப்பட்டதாயிருக்கும் என்று நான் அறிய விழைந்ததுண்டு. ''நல்லது, ஒருவேளை அவர்கள் ஒரு கன்மலையில் எங்காவது ஒரு தேன் கூட்டைக் கண்டு பிடித்திருப்பார்களாய் இருக்கும்'' என்று எண்ணினேன். அதைப்பற்றி தியானித்துக் கொண்டேயிருக்கையில், அதைப்பற்றி எனக்கு ஆவியினால் ஏவப்பட்டுக் கிடைத்த ஒரு சிறு சிந்தனை உண்டாயிற்று. நான் அதைப்பற்றி அறிய அவாக்கொண்டு தேடியபோது அது உண்டாகவில்லை. ஆனால் பின்னால் ஒரு சமயத்தில் நான் அது என்னவென்று அறிந்து கொள்ள லாயிற்று. அதாவது ஆட்டு மந்தையை மேய்க்கும் மேய்ப்பர்கள் ஒவ்வொருவரும்...... அதைப்பற்றி ஒரு காரியம் உண்டு என்று நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். நமது சரீரங்கள் பூமியின் மண்ணினால் உண்டாக்கப்பட்டவையாகும். உயிருள்ள ஒவ்வொன்றும் மண்ணிலிருந்து தோன்றினவையாகும். மேய்ப்பர்கள், தங்கள் மந்தையின் ஆடுகள் வியாதிப்பட்டால், அல்லது ஏதாவது உடல் நிலைப் பழுது உண்டானால், சுண்ணாம்பு அவைகளுக்கு உதவி செய்கிறது என்று நம்பினார்கள். வியாதிப்படும் அவ்வாடுகள் பாறையை நாக்கால் நக்கிடவேண்டும் என்று விரும்பிடும். அவ்வாறு ஆடுகள் பாறையில் போய் நாக்கால் நக்குவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். அவ்வாறு ஆடுகள் பாறையில் தங்கள் நாக்கால் நக்கும்படி செய்வதற்காக அவர்கள் கொஞ்சம் தேனை அப்பாறையில் ஊற்றிவிடுவார்கள். அப்பொழுது தேன் தடவப்பட்ட அப்பாறையை ஆடுகளானது போய் நாக்கால் நக்கும், தேனை நக்குகையில், பாருங்கள், அவைகள் அப்பாறையையும் நக்கி விடும். 7. நம்மிடம், சிறிய பை நிறைய தேன் உள்ளது. நாம் அதை பாறையாகிய கிறிஸ்து இயேசுவிலே ஊற்றிடுவோம். ஒரு சபையின் மேலல்ல. ஆடுகளாகிய நீங்கள் போய் அக்கன்மலையில் வடிந்தோடும் அத்தேனை நக்குங்கள்; அப்பொழுது நிச்சயமாக நீங்கள் குணமடைவீர்கள், நலமடைவீர்கள். அக்கன்மலையை நீங்கள் நக்கும் பொழுது, பாவத்தொல்லைகள் யாவும் உங்களை விட்டு அகன்று போய்விடும். அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். 8. சுகமளித்தலைக் கொடுக்கக்கூடிய ஒரு பாறையைப் பற்றி ஒரு விஷயம் உண்டு. முன் காலங்களில் நாய்கடிக்கான ஊசிமருந்து கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர், “ மேட் ஸ்டோன்'' (mad stone) என்ற ஒரு பாறையை வைத்திருப்பார்கள். ஒரு நபர் வெறி நாய் ஒன்றினால் கடிக்கப்பட்டால், அவனை அந்த 'மேட் ஸ்டோன்'' என்ற கல்லின்மேல் அமரவைப்பார்கள். இப்பொழுது அக்கல்லானது... அந்நபர் அந்த பைத்தியம் பிடித்தவர்களைக் குணமாக்கும் கல்லோடு ஒட்டிக்கொண்டு விட்டால், அவன் குணமடைந்தான். அவனோடு அந்தக் கல் ஒட்டிக்கொள்ளாவிடில், அந்நோயாளி வியாதி முற்றிப்போன நிலையில் ஆகிவிட்டான் என்பதாக அர்த்தம், அந்நபர் மரித்துப்போய்விடுவான். 9. எனவே, இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. எனக்குத் தெரிந்தவரையில், மிக மோசமான கடி, வெறி நாய்க்கடி இல்லை. பிசாசினால் ஏற்படுவதுதான் மிக மோசமாக இருக்கிறது. அதி லிருந்து குணமடைய நமக்கு ஒரு கல் உண்டு. அதுதான் நித்திய கன்மலையாகும். அதை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். அதை நீங்கள் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறவரையிலும் நீங்கள் நலமுடன் காணப்படுவீர்கள். நீங்கள் பிடியைத் தளர்த்தி விடாதீர்கள். அதனோடு பற்றிக்கொண்டவாறு இருங்கள். நீங்கள் நலமடைவீர்கள். 10. நாம் இன்றிரவுக்குரிய பாடத்திற்கு போகுமுன்னர், முடிந்தால் ஜெபத்திற்காக சற்று நேரம் எழுந்து நிற்க விரும்புகிறோம். 11. நீங்கள் ராபர்ட் டார்ட்டியின் சகோதரி தானே? அவள் நேற்று என்னை தொலைபேசியில் அழைத்து, தனக்கு ஜெபம் தேவைப்படுவதாகச் சொல்லிக்கொண்டிருந்தாள் என்று நான் நம்புகிறேன். எனக்குத் தெரியவில்லை... நீ சற்று அவளைப்போலக் காணப்பட்டதால், நீ அவள்தானோ அல்லது இல்லையோ என்று எனக்குத் தெரியவில்லை. நான் நேற்று மாலையில் உன்னை இங்கே கண்டேன். 12. இப்பொழுது எத்தனைபேர் தேவனுக்கு முன்பாக நினைவு கூரப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள், அல்லது எத்தனை பேர் தேவன் தங்களை நினைத்தருள வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? 13. எங்கள் பரம பிதாவே, சிக்காகோவிலுள்ள எங்களுடைய அந்த பாடல் நடத்துபவர் வழக்கமாக பாடும், ''கண்ணீர் வழிந்தோடுகையில் என்னை நினைத்தருளும்'' என்ற பாடலின்படி, கர்த்தாவே, என்னை இப்பொழுது நினைத்தருளும். மரண நேரம் சூழ்கையிலும், வாழ்க்கை முழுவதிலும், நீர் எங்களை நினைத்தருள வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். கர்த்தாவே, நாங்கள் பாவிகளாக இருக்கிறோமே, அவ்வண்ணமாக எங்களைக் குறித்து நினைத்தருளாமல், எங்கள் பாவங்களை அறிக்கை செய்துவிட்ட கிறிஸ்தவர்களாகவும், உம்முடைய குமாரனும் எங்கள் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களாகவும் எங்களைக் குறித்து நீர் நினைத்தருள வேண்டுகிறோம். அவரே எங்களின் பாவங்களுக்காக, பாவ பிராயச்சித்தமாயிருக்கிறாரே. எங்களுக்கு இருக்கிற இரட்சிப்புக்கான ஒரே வாய்ப்பும், ஒரே வழியும், ஒரே சாதனமும் அது ஒன்றே தான் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். அது எந்தவொரு சபையின் மூலமாகவும் அல்ல, அல்லது வேறு எந்த இயந்திர சாதனத்தின் மூலமாயும் அல்ல, அல்லது ஒரு சங்கத்தின் மூலமாயும் அல்ல, ஆனால் இயேசுகிறிஸ்துவின் மூலமாக மட்டுமே, அவர் மூலமாக மட்டுமேதான். 14. எனவே நாங்கள் இன்றிரவில் அவரது நாமத்தில் அணுகுகிறோம். நாங்கள் உம்முடைய வேதத்தை படித்து, இன்றிரவில் எங்களுக்காக என்ன வைத்திருக்கிறீர் என்பதை அறிவதற்காக கூடி வந்திருக்கையில், எங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். ஜீவனுள்ள சபையாக எங்களுடைய ஆவிக்குரிய சரீரங்களை கட்டுவதற்கு உதவி செய்யும். நீர் வாசம் பண்ணுவதற்கு ஏற்றதாகவும், நீர் தாராளமாக எங்கள் மத்தியில் உலாவவும், தங்குதடையின்றி சௌகரியமாக உமது ஜனங்கள் மத்தியில் நடந்து நீர் திரியவும், நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை நீர் எமக்கு எடுத்தியம்ப உமக்கு இயலவும், நீர் கூறியதை அப்படியே நாங்கள் செய்பவர்கள் என்பதை நீர் அறிந்திருக்கவும் கூடியதான ஒரு சபையாக நாங்கள் ஆகட்டும். 15. பிதாவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம். ஆனால் நாங்கள் இன்னும் நீர் விரும்புகிறபடி எங்கள் மூலம் பேசத்தக்கதான நிலையில் நாங்கள் இருக்கவில்லை என்பதை அறிவோம். எனவே இன்றிரவில் நீர் எங்களில் இருக்கிற தேவைக்கு மேலதிகமாக காணப்படும் மாம்சமாகிய மதியீனத்தை விருத்தசேதனம் செய்து அகற்றிப்போடும் என்று வேண்டிக்கொள்கிறோம். அதினால் நீர் எங்களை எந்த வேளையிலும் உபயோகிக்கும்படி, நாங்கள் எங்களை உமக்கென முழுவதுமாக தத்தம் செய்திட உதவி செய்தருளும். இன்றிரவில் அவ்வேளையில், வேதாகமத்திலிருந்து பொற்பாளங்களை நாங்கள் தோண்டி யெடுக்கச் செய்து, அதை பாலீஷ் செய்து, அதிலிருந்து கிறிஸ்து மகத்தான இச்சபைக்காலத்தில் பிரதிபலிப் பதை மக்கள் காணும்படி செய்ய நீர் எங்களை உபயோகித்தருளும். பிதாவே. இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம், ஆமென். 16. நாம் இதுவரை சபைக்காலங்களைப்பற்றி பார்த்து வந்தோம். இன்றிரவில் ஆறாவதான சபைக்காலத்தைப் பற்றி நாம் பார்க்கப் போகிறோம். இவ்வாறு ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு சபைக்காலத்தைப் பற்றி நாம் பார்த்து வந்துள்ளதில் நாளை இரவில் சபைக்காலங்களைப் பற்றி படித்து முடித்திருப்போம். நாம் இவைகளை திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டு வருகிறோம். இன்றிரவில் நாம் பார்க்கப்போவது பிலதெல்பியா சபைக் காலமாகும். இந்த சபைக்காலத்திற்குரிய நட்சத்திரமாக விளங்கியவர், அல்லது தூதர் செய்தியாளராக விளங்கியது ஜான் வெஸ்லி தான் என்று நாம் பயபக்தியுடனும் முழு இருதயத்துடனும் விசுவாசிக்கிறோம். இந்த சபைக்காலம் கி.பி.1750ல் ஆரம்பித்தது. அப்பொழுதுதான் லூத்தரன் சபைக்காலமானது முடிவுற்றது. இந்த ஆறாவது சபைக்காலமானது கி.பி. 1906-ம் ஆண்டு வரை நீடித்தது. இது வெஸ்லியின் சபைக்காலம் ஆகும். அது முடிந்தபிறகு லவோதிக்கேயாவின் காலம் பிறந்தது. 17. இந்த சபைக்காலமானது “ சகோதர சிநேகத்தின்'' காலமாகும். மகத்தான “ மிஷனரி'' யுகமும், “ திறந்த வாசல்'' யுகமும் இதுவே. 'இச்சபைக்காலத்தில் ஜெயங் கொள்ளுகிறவனுக்கு அளிக்கப்படும் பலனானது, தேவாலயத்தில் தூணாக ஆக்கப்படுதலேயாகும். மற்றும், மூன்று நாமங்கள் வெளிப்படுதலும் கிடைக்கிறது. அவையாவன: தேவனுடைய நாமம், தேவனுடைய நகரத்தின் நாமம், தேவனுடைய புதிய நாமம் இவற்றின் வெளிப்படுத்துதல் இந்த சபைக்காலத்திற்கு அளிக்கப்படுகிறது. இப்பொழுது, சபையானது.... இந்த சபைக்காலம் வெளிப்படுத்தின விசேஷம் 3:7ல் துவங்கி 13ம் வசனத்தில் முடிவடைகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 3:7 முதல்13. 18. நாம், இச்சபைக்காலங்களைப் பற்றி ஒவ்வொரு இரவிலும் சிறிது பின்னோக்கிப்போய் திரும்பிப் படிக்கிறோம். முதலாவதான சபைக்காலம் எபேசு சபைக்காலமாகும். அந்த சபைக்காலத்திற்குரிய தூதன் அல்லது ஒளி (ஊழியக்காரன்) யார் என்பதை யாராவது கூறமுடியுமா? பவுல். எபேசு சபைக்காலமானது கி.பி. 55 முதல் 170 முடிய நீடித்தது கி.பி. 55-ஐ இச்சபைக்காலத்தின் துவக்கமாக நான் எடுத்துக் கொண்டதற்குக் காரணம், அவ்வாண்டில்தான், பவுல், தனது மிஷனரி பிரயாணத்தை துவக்கினான். அப்பொழுதுதான் அவன் எபேசு என்ற அந்த பட்டணத்தில் சபையை நிறுவினான். மற்றும் அதைச்சுற்றியுள்ள இடங்களிலும் ஏனைய சபைகளையும் அவன் நிறுவினான். 19. இரண்டாவது சபைக்காலமானது சிமிர்னா சபைக் காலமாகும். வகுப்பில் யாருக்காவது இந்த சபையின் தூதன் யார் என்பதைக் கூறமுடியுமா? ஆம் அது ஐரேனியஸ் தான் என்பது சரி. இச்சபைக்காலமானது கி.பி.170 முதல் கி.பி.312 முடிய நீடித்தது. 20. மூன்றாம் சபைக்காலமானது பெர்கமு சபைக் காலம் ஆகும். இச்சபைக் காலத்தின் பரிசுத்தவான் யார் என்பதை வகுப்பில் கலந்துகொண்ட யாராவது நினைவு கூர்ந்து சொல்ல முடியுமா? பரிசுத்த மார்ட்டின் என்பது சரிதான். கி.பி. 312 முதல் கி.பி. 606 முடிய இச்சபைக்காலம் நீடித்தது. 21. அதற்கடுத்த சபைக்காலம், தியத்தீரா சபைக்காலம் ஆகும். இச்சபைக் காலத்தின் பரிசுத்தவான், செய்தியாளன், தூதன் யார் என்பதை நினைவில் வைத்திருக்கிறீர்களா? அது கொலம்பா என்பவர் ஆகும். கி.பி. 606 முதல் 515 முடிய. 22. அதற்கடுத்த சபைக்காலம் சர்தை சபைக்காலமாகும். அதை நாம் நேற்றிரவில் பார்த்தோம். மேலும், யாராவது.... அச்சபைக் காலத்திற்குரிய தூதன் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது ஞாபகத்திலுள்ளதா? மார்டின் லூத்தர்தான் அத்தூதன் ஆகும். இவருடைய சபைக்காலம் கி.பி.1520 முதல் கி.பி.1750 முடிய நீடித்தது. 23. இன்றிரவில் நாம் பிலதெல்பியா சபைக்காலத்தைப் பற்றிப் படிக்கப்போகிறோம். அச்சபைக்காலத்திற்குரிய தூதன் ஜான் வெஸ்லியாவார். கி.பி.1750 முதல் கி.பி.1906 முடிய இச்சபைக் காலம் நீடித்தது. அது ''சகோதர சிநேகத்தின்'' காலமாக விளங்கியது. 24. இவ்வேழு பட்டினங்களிலும் காணப்பட்ட இந்த சபைகள் ஒவ்வொன்றும், வரப்போகும் ஒவ்வொரு சபைக்காலங்களில் இருக்கும் சபைகளுடைய குணாதிசயத்தை பிரதிபலிப் பவையாக இருந்து வந்திருக்கின்றன. 25. நேற்றிரவில் நாம் மார்ட்டின் லூத்தரைப் பற்றி பார்த்தோம். இவைகளில் நான்... இதை நான் பிரசங்கிப்பதற்கும், அவைகள் ஒலி நாடாக்களில் வாலிபப் பிள்ளைகளால் பதியப் பெறுவதற்கு காரணம் என்னவெனில்.... நான் இதைக் குறித்து நாள் முழுவதும் படித்துக்கொண்டிருக்கிறேன். "நாள் முழுவதும் படித்துவிட்டு, வரலாற்றிலிருந்து ஒரு சிறிதளவே இங்கு வந்து கூறுகிறீர்களே'' என்று நீங்கள் கேட்கக்கூடும். இல்லை வரலாற்றுக் குறிப்புகள் நாம் தயாரித்தளிக்கப்போகும் புத்தகத்தில் இடம் பெறும், பாருங்கள். இங்கே கூடி வந்திருக்கிற நாம், இச்செய்தியின் தேவ ஆவியின் ஏவுதலினால் அளிக்கப்படும் விஷயங்களை பெற்றுக் கொள்வதற்காக, இவைகளை இங்கு பிரசங்கிக்கிறேன். வரலாற்று விஷயங்களை நான் உரிய புத்தகத்திலிருந்து வாசித்தளிக்க முடியும். ஆனால் தெய்வீக ஏவுதலினால் கிடைக்கும் ஆவிக்குரிய விஷயங்களைப் பெறுவதற்குத்தான் நான் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவைகளை பிரசங்கித்து ஒலிநாடாவில் பதிந்து கொண்டால், நாம் அதிலிருந்து அவற்றை வேண்டும் போது பெற்றுக்கொள்ள முடியும். அதன் பிறகு, நாம் சபைக் காலங்களைப் பற்றிய வரலாற்று தகவல்களையும், இங்கே இப்பொழுது நாம் கிறிஸ்து இயேசுவோடு உன்னதங்களிலே வீற்றிருக்கையில் நமக்குக் கிடைத்துக்கொண்டிருக்கும் தெய்வீக ஆவியின் வெளிப்பாடுகளையும் ஒருங்கிணைத்திடுவோம். அப்படிப் பட்டதான ஒன்று, இந்த சபைக்காலங்களைப் பற்றிய ஒரு சிறிய ஆனால் மிகச்சிறந்த வியாக்கியானப் புத்தகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். கர்த்தர் தாமே அதற்கு ஆசீர்வாதங்களை அளிப்பாராக. 26. நேற்றிரவில் நாம் சர்தை சபைக்காலத்தைப் பற்றிப் பார்த்தோம். கிரேக்க மொழியில் “ சர்தை'' என்ற சொல்லுக்கு உண்மையிலேயே “ தப்பித்துக் கொண்டவன்'' என்று பொருள். ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பின்படி “ மரித்தவன்'' என்று பொருளாகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். அது 'மரித்த'' நிலையில் உள்ளதாகவும், அதே சமயத்தில் ''தப்பித்துக்கொண்டவன்'' என்ற நிலையையும் உடையதான சபையாகவும் இருக்கிறது. ஏனெனில் அந்த சபையானது கி.பி.1500 வரையிலும், அல்லது 1520 வரையிலும் போப்பு மார்க்க ஆட்சியின் கீழ், இருண்ட காலங்கள் என்றழைக்கப்பட்ட அக்காலத்தில், மரித்துப்போன நிலையில் இருந்தது. அக்காலத்தில் தான் கிறிஸ்தவம் தனது மிகக் கேடான சரிவுற்ற நிலையில் காணப்பட்டது. அதுபோல் ஒரு காலத்திலும், ஏன் இந்த லவோதிக்கேயா சபைக்காலத்தில்கூட இல்லாத அளவுக்கு, மிக மோசமான நிலையில் இருந்தது. 27. குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றை நீங்கள் அங்கே காணலாம். அதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளல் வேண்டும். அது என்னவெனில்: ஒவ்வொரு சபைக்காலமும் ஆரம்பித்த போது, அச்சபைக் காலத்தில் என்ன நிலைமை காணப்பட்டதோ, அடுத்தடுத்து வரும் சபைக்காலங்களிலும் அதே போன்ற நிலைமை காணப்பட்டது. அந்த சபைக்காலங்கள் ஒவ்வொன்றும், அடுத்து வரும் சபைக்காலத்தின்மேல் கொஞ்சம் நீண்டு தொடுத்துக் கொண்டு இருந்தது (lap over). வரலாற்றை நீங்கள் கருத்தாய் ஆராய்ந்தால், நீங்கள் அதைக் கண்டு கொள்ளுவீர்கள். 28. அது, ஒன்றின் முடிவுப்பாகம் அடுத்ததின் துவக்கப் பாகத்தில் மேல் வரைக்கிலும் நீண்டிருப்பதாக இருந்தன. ஒரு சபைக்காலம் முடிந்துபோகிறபோது, அதன் மத்திய காலத்தில் வருகிற அச்சபையின் தூதன், அது இழந்துபோன விசுவாசத்திற்கு அதை திரும்ப அழைக்கிறான். அவ்வாறே எக்காலமும் இருந்து வந்துள்ளது. 29. வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்திற்கு வருவதற்கு முன்னால் வேதத்தில் இருக்கிற கடைசிப் புத்தகமான யூதாவின் நிருபத்தைப் பாருங்கள். ''பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாக போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது'' வெளிப்படுத்தின விசேஷ புத்தகம் வருவதற்கு முன்னரும், அப்போஸ்தல நிருபங்களின் முடிவின் இடையிலும் தொக்கிக் கொண்டிருக்கிற ஒன்றாக இந்நிருபம் இருக்கிறது. ஏனெனில் அப்போஸ்தலர்களில் அநேகர் அப்போது மரித்து விட்டிருந்தனர். அவர்கள் கடந்து போய் விட்டனர். அச்சமயத்தில் ஜீவித்து வந்தவன், திவ்யவாசகனாகிய பரிசுத்த யோவான்தான். அவன் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை எழுதுவதற்காக, கர்த்தருடைய தூதனிடத்திலிருந்து வெளிப்படுத்தலைப் பெற்று, அதை எழுதினான். 30. இவ்வாறு ஒன்றைத் தொக்கிக் கொண்டு ஒன்று அடுத்தடுத்து வந்தன. நான் அதை விளக்கிக் கூறிக் கொண்டு வருகையில், நீங்கள் அதை கவனித்து, அதை புரிந்து கொண்டு விட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். சர்தை சபைக்காலத்திலும்கூட, விவாககாலமாக இருந்த அக்காலத்தில் எவ்வாறு இருந்தது... உண்மையில், தியத்தீரா வரையிலும் சபையானது தன் முழு நிலைநிற்றலில் உண்மையாக வரவில்லை. ஆனால் அது சர்த்தையில் வந்தபோது, விவாகம் செய்துகொண்டதாக சபை ஆனது. சர்தை என்றால் விவாகம் என்று அர்த்தம். 31. இங்கே இச்சபையின் காலத்தில் அது விவாகம் செய்து கொள்ளுகிறது அதன்பின்பு அது அதற்கடுத்து வந்த சபைக்குள்ளும் நீண்டுபோய் முடிவடைகிறது. கடந்த இரவில், லூத்தர் “ மரித்துப் போன” என்ற நாமத்தோடு வெளியே வருகிறார். செத்துப்போன தான அர்த்தம் கொள்ளும் ஒரு பெயரோடு புறப்பட்டு, பிறகு, “ தப்பித்துக் கொண்டவன்'' என்று அர்த்தம்கொள்ளும் பெயரைப் பெறுகிறார். அது அங்கே மரித்தவன் என்ற நிலையில் இருந்து வந்திருக்கையில், அக்காலத்தில் அந்த சிறு கூட்டமான மீதியாயிருக்கிறவர்கள் தப்பித்துக்கொண்டு, அதற்கடுத்த சபைக் காலத்திற்குள் வந்து சேருகிறார்கள். 32. இன்றிரவில் நாம் பிலதெல்பியா சபைக்காலத்தை பார்த்து முடித்திருக்கையில், லவோதிக்கேயாவின் சபைக்காலத்தின் துவக்கத்தில் வந்துவிடுவோம். 33. அதன்பிறகு, நாளை இரவில், ஏழாம் சபைக்காலமானது முடிவடையும் தருணத்தில், அதின் இறுதிக்கட்டத்தில், சரியாக கடைசிக் காலத்தில் தூதன் தோன்றுவதை கவனியுங்கள். அவன் வந்து சபையை, அது ஆதி அன்பை இழந்ததற்காகவும், காலங்கள் தோறும் மக்கள் செய்தது போலவே இவர்களும் தேவனைவிட்டு விலகிவிட்டதற்காகவும் கடிந்துகொள்ளுவான். அந்த நேரத்தில், செய்தியின் அந்த வேளையில், சபையானது தனது வாசஸ்தலத்திற்கு, மகிமையான எடுத்துக்கொள்ளப்படுதலில் எடுத்துக்கொள்ளப்பட்டுவிடும். எனவே நாம் இப்பொழுது அந்த காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அதை நீங்கள் பெற்றுக்கொண்டீர்களா? நல்லது, பாருங்கள். சரியான நேரத்தில் அந்த சபையின் தூதன் (அக்காலத்தின் செய்தியாளன்), சபையானது தங்களிலிருந்து ஆதி அன்பை இழந்துவிட்டதற்காக அதை கடிந்துகொள்ளுவான், அதை திரும்பக் கொண்டுவர முயலுவான். 34. இன்றிரவில் நாம் பார்க்கப்போகும் சபைக்குரிய செய்தியாளனும், தூதன்-செய்தியாளன்... திரும்பி வந்து அவர்கள் செய்தவற்றிற்காக அவர்களை கடிந்துகொள்ளுவான். (ஒவ்வொரு காலத்திலும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு சபைக் காலங்களிலும் மாடிப்படியில் ஏறிச்செல்லும் போது, ஒரு படியில் கால் இருக்கும்பொழுதே அடுத்ததின் மேலும் கால் நீண்டு அதை மிதித்து விடுவதைப்போல், ஒரு சபைக் காலம் அடுத்த சபைக் காலத்திற்குள்ளும் நீண்டு இருந்ததாக இருந்தது). 35. இன்றிரவில் ஜான் வெஸ்லியாகிய தூதனைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பு ஒன்று என்னிடம் உள்ளது. ஜான் வெஸ்லி தான் இச்சபைக் காலத்திற்குரிய நட்சத்திரமாக விளங்குகிறார். அவர் 1703ம் ஆண்டில் ஜூன் மாதம் 17ம் தேதி இங்கிலாந்தில் உள்ள எப்வொர்த் என்னும் இடத்தில் ஒரு மதகுருவின் வீட்டில் பிறந்தார். அவரது பெற்றோருக்கிருந்த பத்தொன்பது பிள்ளைகளில் இவர் பதினைந்தாவது மகனாக திகழ்ந்தார். ஜான் மற்றும் சூசன்னா வெஸ்லி ஆகியோர் அவருடைய தாய் தந்தையராவார். தந்தையார் ஒரு பிரசங்கியாவார். அவரது தாய் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு இருக்கிற ஒரு பரிசுத்தவாட்டியாக விளங்கினாள். பத்தொன்பது பிள்ளைகளை அத்தாய் கவனிக்க வேண்டியதிருந்தாலும், தன்னுடைய மிகுந்த அலுவல்கள் மத்தியிலும் பிள்ளைகளுக்கு வேதாகமப் பாடங்களையும், வேதாகமக் கதைகளையும், சொல்லிக் கொடுத்து, அவர்களுக்காக ஜெபிப்பதற்கு அத்தாய்க்கு நாள் தோறும் அதிக நேரம் கிடைத்தது. அதுதான் அச்சிறுவர்களை தேவபக்தியுள்ளவர்களாக உருவாக்கியது. ஜான் வெஸ்லியின் அண்ணன் சார்லஸ் என்பவர் பிரசித்தி பெற்ற பாடலாசிரியராவார். அவர் உலகுக்கு மிகவும் தெய்வீக எழுப்புதலையளிக்கும் பாடல்கள் சிலவற்றை கொடுத்தவராவார். 36. ஜார்ஜ் வொயிட்ஃபீல்ட் என்பாரின் ஒரு கூட்டாளியாக ஜான் வெஸ்லி விளங்கினார். ஜான் வெஸ்லி, ஜார்ஜ் வொயிட்ஃபீல்ட் ஆகிய இருவர் தான் மெதோடிஸ்ட் சபை உருவாகக் காரண மானவர்கள். பரிசுத்தமாகுதல் செய்தி அதிலிருந்து வந்தது. 37. ஜான் வெஸ்லியிடம் அதிகாலையில் எழும்பும் பழக்கம் இருந்தது. அவரது ஆயுட்காலத்தில் அறுபது ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான்கு மணிக்கே அவர் எழும்பி விடுவார். அந்த ஒரு காரியத்தில் சபையானது தவறியிருக்கிறது. ஐம்பது ஆண்டுக்காலம் தொடர்ந்து ஒவ்வொரு நாளிலும் அதிகாலை நான்கு மணிக்கே எழும்பி, ஐந்து மணிக்கு பிரசங்கிப்பார். சில வேளைகளில் அவர் ஒரு நாளில் இரண்டு முதல் நான்கு தடவைகள் பிரசங்கிப்பார். 'அவர் ஒரு ஆண்டிற்கு நாலாயிரத்து ஐந்நூறு மைல்கள் குதிரையின் மேல் பயணம் செய்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்திருக்கிறார்'' என்று அவரைக் குறித்து இங்கிலாந்து தேச மக்கள் கூறுகிறார்கள். நாலாயிரத்து ஐந்நூறு மைல்கள் ஒரு ஆண்டிற்கு... அது ஆங்கிலேய மைல்களாகும். அவை நம்முடையதைவிட நீளமானதாகும். இவ்வளவு தூரம் பயணம் செய்து பிரசங்கித்திருக்கிறார். 38. அவரது நாட்களில் அவரைப் பரிகசித்தும் தூஷித்தும் அநேக புத்தகங்கள் எழுதப்பட்டன. ஆனால் அப்புத்தகங்களும், அவைகளது ஆக்கியோன்களும் வெகுகாலமாக மறக்கப்பட்டே போய் விட்டார்கள். ஒரு தேவ பிள்ளைக்கெதிராக எதுவும் உங்களால் செய்ய முடியாது. அப்படி எதுவும் செய்துவிட்டு, தப்பித்துக் கொள்ளவும் முடியாது. அச்செய்கை வெறும் ஆகாயத்துடன் சண்டை போடுவதுபோல் தான் இருக்கும். தேவன் தனது பிள்ளையை எப்படியாகிலும் விடுவித்துக் காப்பார். 39. அவரை “ மெதோடிஸ்ட்'' என்று அழைத்தனர்; ஏனெனில் அவர் காரியங்களைச் செய்வதற்காக 'ஒழுங்குகளைக்' கொண்டவராக (Methods) இருந்தார். ''அவரது ஆயுட்காலத்தில் அவர் நாற்பதாயிரத்திற்கு மேலதிகமாகவே பிரசங்கங்கள் பிரசங்கித்துள்ளார்'' என்று அவரைப் பற்றி கூறப்படுகிறது. நாற்பதாயிரம் பிரசங்கங்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். அவர் இவ்வுலகத்தை விட்டு 1791-ல் கடந்து சென்றபிறகு, உலகத்தில் மெதோடிஸ்ட் ஸ்தாபனமானது தனது வேர்களை பரவவிட்டு மெதோடிஸ்ட் சபை அதிலிருந்து ஆரம்பித்தது. அப்பொழுது ஆஸ்பரி மற்றும் ஏனை யோர்களும் இருக்கத்தான் செய்தார்கள். 40.நாம் இப்பொழுது 7ம் வசனத்திலிருந்து துவங்கும்பொழுது, பிலதெல்பியா சபைக் காலத்திற்குரிய செய்தியாளனுக்கும், சபைக்கும் கொடுக்கப்படும் வாழ்த்துதலை கவனிக்கிறோம். உண்மையான சபையானது... உண்மையான சபையானது நல்ல அறிக்கைபண்ணுகிறது. நல்ல அறிக்கை பண்ணிய உண்மையான சபையாக அது இருக்கிறது. "பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்.” 41. ஒவ்வொரு சபைக்காலமும் அடுத்துவரும் சபைக் காலத்திற்குள் நீண்டு இருக்கும் காரியத்தைப்பற்றி உங்கள் கவனத்திற்கு நான் கொண்டு வந்துள்ளேன். இப்பொழுது நீங்கள் அந்த தூதனைக் குறித்து தெரிந்து கொள்ளப்போகிறீர்கள். மெதோடிஸ்ட் காலத்தை அவர் எவ்வாறு கொண்டுவந்தார் என்பதை நீங்கள் கவனிப்பீர்களானால்... மெதோடிஸ்ட் காலமானது பெந்தெகொஸ்தே காலமாகிய லவோதிக்கேயாவின் சபைக் காலத்திற்குள்ளும் சிறிது நீண்டு இருந்தது. பின்பு நாளையிரவில், பெந்தெகொஸ்தே காலத்திற்குரிய செய்தியாளன் திரும்பி வந்து இச்சபைக்காலத்து மக்களை விழுந்து போனதற்காக கடிந்துகொள்ளுவான். எப்படி இந்த ஆறாவது சபைக்காலத்து தூதன் தனக்கு முந்தின சபைக் காலமாகிய சர்தையின் காலத்தில் (லூத்தரின் காலம்) உள்ள மக்களை வழுவிப்போனதற்காக கடிந்துகொள்ளுகிறானோ அதைப் போலவே தான் அதுவும். ஒன்று அடுத்துவரும் காலத்திற்குள்ளும் சற்று நீடித்து இருப்பதான காரியம் இது. 42. இச்சபைக்காலம் சகோதர சிநேகத்தின் காலம். மகத்தான மிஷனரிகளையும், மிஷனரி ஊழியங்களையும் கொண்டதான மகத்தான காலமாக இது இருந்தது. உலகமானது இந்த அளவுக்கு அது வரையிலும் இவ்வளவு அதிகமான மிஷனரி ஊழியங்களைப் பார்த்ததேயில்லை. அது நமது காலத்திற்குள்ளும்கூட நீடித்திருக்கிறது. உலகின் எப்பகுதியிலும் மிஷனரிகள் இருப்பதான வேளையாக, உலகம் இதுவரை காணாத அளவுக்கு இருந்துகொண்டிருக்கிறது. உலக வரலாற்றின் மிகக் குறிப்பிடத்தக்க காலங்களில் ஒன்றான இக்காலத்தில், கடந்த 150 ஆண்டுக்காலமாக, உலகின் சகல பாகங்களிலுமே சுவிசேஷத்துடன் மிஷனரிமார்கள் பரவியிருக்கின்றனர். 43. எழுத்துத் துறையில் எடுத்துக் கொண்டால், சுவிசேஷ செய்தியானது துண்டுப்பிரதிகள், புத்தகங்கள் ஆகியவற்றின் வாயிலாக வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு தேசத்தையும் நீண்ட காலமாக சென்றடைந்து கொண்டிருக்கிறது. எனவே, இயேசுவானவர் கூறினது இதைப்பற்றியல்ல என்பது ருசுவாகியது. “ உலகம் முழுவதிலும் போய் பைபிள் ஸ்கூல்களை உண்டாக்குங்கள்'' என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. “ நீங்கள் உலகம் முழுவதிலும் போய் பத்திரிக்கைகளை விநியோகியுங்கள்'' என்றும் அவர் கூறவேயில்லை. 44. அவைகள் யாவும் நல்லது தான். ஆனால் அவரது கட்டளை சபைக்கு எவ்வாறு உள்ளதென்றால், 'உலகம் முழுவதும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' என்பதாகத்தான் இருக்கிறது. சுவிசேஷமானது முற்றும் வெறும் வார்த்தையாக இருக்கவில்லை, ஆனால் அது வார்த்தையை ஜீவிக்கச் செய்கிறதாக இருக்கிறது. ஏனெனில் இயேசு அத்துடன் இதையும் கூறியிருக்கிறார்: “ விசுவாசிக்கிறவர்களை தொடரும் அடையாளங்களாவன'' என்று. சபைக்கான அவரது கடைசிக் கட்டளையைக் கொண்ட மாற்கு 16ம் அதிகாரம் உங்களுக்குத் தெரியும்: ''விசுவாசிக்கிறவர்களைத் தொடரும் அடையாளங்களாவன'. மத்தேயு 10ம் அதிகாரத்தில் சபைக்கு அவர் கொடுத்த கட்டளையென்னவெனில், “ வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்குங்கள், மரித்தோரை எழுப்புங்கள். பிசாசுகளைத் துரத்துங்கள், இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்'' என்பதாகும். சபைக்குரிய அவரது கடைசிக் கட்டளையானது என்னவெனில், “ நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள், விசுவாச முள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான், “ விசுவாசிக்கிறவர்களை இவ்வடையாளங்கள் பின் தொடரும்'. 45. அனேகர் இங்கே இப்பகுதியை துண்டித்துவிடுகிறார்கள் அல்லவா? “ ஆகவே'' என்பது வாக்கியத்தை ஒன்று சேர்க்கின்ற தாயுள்ளது. பாருங்கள்? இப்பொழுது அவர், (“ நீங்கள் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'', என்று மட்டும் அனேக பிரசங்கிகள் கூறுவார்கள்.) இப்பொழுது விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான், என்னுடைய நாமத்தினால் பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும், அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்றார். ஜீவனுள்ள தேவனின் அடையாளங்கள் ஜனங்கள் மத்தியில் அசைவாடிக் கொண்டிருக்கின்றன. எவ்வளவு தூரம்? உலகம் முழுவதிலும். நீங்கள் அதை அறிந்து கொண்டீர்களா? உலகம் பூராவிலுமே. 46. ஆகவே, நான் பெந்தெகொஸ்தே செய்தியானது என்று கூறும் பொழுது... இப்பொழுதிருக்கிற பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தைப் பற்றி நான் குறிப்பிடவில்லை. பெந்தெகொஸ்தே செய்திதான் தேவனிடத்திலிருந்து வந்துள்ள ஒரே உண்மையான செய்தியாக இருக்கிறது. இப்பொழுது மாற்கு 16ம் அதிகாரத்தைப் பாருங்கள். இங்கே இயேசு தனது சபைக்கு கட்டளையிடுகிறார்: “ உலகெங்கும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். இவ்வடையாளங்கள்: அந்நிய பாஷைகளில் பேசுதல், பிணியாளிகளைச் சொஸ்தப்படுத்துதல் அற்புதங்களை நடப்பித்தல்....'' எந்தப் பிரதேசம் வரைக்கிலும்? முழு உலகத்திலுமே. யாருக்கெல்லாம் பிரசங்கிக்க வேண்டும்? ''சர்வ சிருஷ்டிக்கும்'' இங்கேயுள்ள உலகத்தின் முடிவு பரியந்தமும் அது பிரசங்கிக்கப்படவேண்டும். “ முடிவு பரியந்தம்'' இந்த சபைக்கு மட்டும்தானா இவ்வடை யாளங்கள் பின் தொடரும்? முழு உலகிலும் விசுவாசிக்கிறவர்களை இவ்வடையாளங்கள் பின்தொடரும். முழு உலகத்திற்கும், சர்வ சிருஷ்டிக்குமே இவ்வடையாளங்கள் பின் தொடரும். இது மட்டுமல்ல, விசுவாசிக்கிறவர்களையெல்லாம். எனவே அது பெந்தெகொஸ்தே சபையாக இருக்கிறது. பாருங்கள்? 47. நாம் இன்றிரவில், இந்த பிலதெல்பியா சபையின் காலத்தைப் பற்றி படிக்க எடுத்துக்கொண்டுள்ளோம். அந்த சபைக்காலத்தில் மிஷனரிமார்களைக் கொண்டு சுவிசேஷம் பிரசங்கித்தலும், முழு உலகத்திற்கும் பத்திரிக்கைகள், துண்டுப்பிரதிகள் வாயிலாக சுவிசேஷம் பரம்பியது. 48. இயேசு சொன்னார்: “ இந்த சுவிசேஷமானது எனக்கு சாட்சியாக உலகமெங்கும் பிரசங்கிக்கப்படும், அப்பொழுது முடிவு வரும்'' என்று. அவர் பத்திரிக்கைகளை எங்கும் பரவச் செய்தலும், நன்கு படிக்கவும், எழுதவும், கணக்குப் போடவும் உள்ள உயர்கல்வியுள்ள மிஷனரிகளை அனுப்பவும், துண்டுப் பிரதிகளை விநியோகித்தலும், ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கிக்கொண்டு, தேவன் ஒருவர் உண்டு என்று விசுவாசித்தலும் ஆகிய இவைகளைப் பற்றித்தான் உரைத்திருக்கிறார் என்றால், அதுதான் எல்லாம் என்றால், அப்பொழுது இயேசுவானவர் திரும்பி வரும் நேரம் அதிகம் தாமதித்துவிட்டது என்றாகிவிடுமே. எனவே இது காண்பிக்கிறதாவது, சுவிசேஷம்... பவுல் கூறினான். ''சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடே மாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும் முழு நிச்சயத்தோடும் வந்தது''. 49. இயேசுவானவர், “ உலகம் முழுவதிலும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' என்று கட்டளையிட்டதோடு, ''உலகம் முழுவதிலும் போய் சுவிசேஷத்தின் வல்லமையை யாவருக்கும் பிரத்தியட்சப்படுத்துங்கள்'' என்றும் கூறியிருக்கிறார். ஓ, நான் அதை விரும்புகிறேன். வார்த்தையை எடுத்து, அது என்ன கூறுகிறதோ, அதன்படி வல்லமையான கிரியைகளை செய்துகாட்டி, அவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரத்தியட்சமாக்கிக் காட்ட வேண்டும். அது அந்தவிதமாகத்தான் செய்யப்படவேண்டும். அது வார்த்தையை நிருபிக்கிறதாக இருக்கிறது. 50. உலகிலேயே பெரிய மிஷனரி ஸ்தாபனமாக சூடான் மிஷன்களின் தலைவர் மோரிஸ் ரீட்ஹெட் என்பவர் அன்றொரு நாளில் எனது அறையில் நின்றுகொண்டு, “ சகோ. பிரன்ஹாம் அவர்களே, நீங்கள் ஒரு பாப்டிஸ்டாக இருக்கிறபடியினால், சத்தியமானது என்னவென்று உங்களுக்குத் தெரிந்தேயிருக்க வேண்டும்'' என்று கூறினார். ''வேதாகமமே சத்தியமாயிருக்கிறது'' என்று நான் கூறினேன். அதற்கு அவர், “ நல்லது, இந்த பெந்தெகொஸ்தேயினர் பெற்றிருப்பதுதான் என்ன?' என்று கேட்டார். 'பரிசுத்த ஆவியை'' என்று நான் பதிலளித்தேன். பாருங்கள்? “ ஓ, அவர்கள் தட்டுமுட்டு சாமான்களை உதைத்து எறிவதை நான் கண்டிருக்கிறேன்'' என்று கூறினார். 51. நான் அதற்கு, 'ஆம்! நீங்களெல்லாம் அந்த ஒரு விஷயத்தில் தான் அவர்களைவிட்டு பின்தங்கிப் போய், உங்களை தனிமைப் படுத்திக்கொண்டுள்ளீர்கள்'' என்று அவரிடம் கூறினேன். "அவர்கள் ஏராளமான நீராவி சக்தியைப் பெற்றிருக்கிறார்கள். அதைக்கொண்டு அவர்கள் இரயில் வண்டியின் சக்கரங்களைச் சுழலச் செய்வதற்கு பதிலாக, இரயில் என்ஜின் விசிலை ஊதி அதைப் போக்கடித்து விடுகிறார்கள். அவர்கள் மட்டும் அதை சரியான விதத்தில் உபயோகித்தால், அவர்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் பெற்றிருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதை கொண்டு ஏதாவதொன்றை செய்தாக வேண்டும், எனவே அவர்கள் கூக்கூரலிட்டு கத்தி முடித்து விடுகிறார்கள். அவர்கள் அதை ஊதி அணைத்துவிடுகிறார்கள்'' என்றேன். 52. நான் நீராவியற்று ஊதாமல் இருப்பதைவிட நீராவியைப் பெற்று அதை ஊதிக் கொண்டேயிருப்பேன். நீங்கள் அவ்வாறு செய்ய விரும்பவில்லையா? அந்த முதியவர் ஒருவர் கூறுவதைப் போல், 'அக்கினி ஒன்றுமே இல்லாமலிருப்பதைவிட ஒரு சிறிது அளவு காட்டுத் தீயையாவது நான் உடையவனாக இருப்பதையே விரும்புவேன்'' என்பேன். 53. இன்று நம்மிடையே இருக்கும் தொல்லை என்னவெனில்: ''முன் காலத்தில் பெந்தெகொஸ்தே நாள் அன்று, இவ்வாறு அவர்கள் செய்தார்கள்'' என்று கூறி அதை விளக்க அவ்வக்கினியைப் பற்றிய ஒரு சித்திரத்தை வரைந்திட நாம் முயலுகிறோம். ஆவிக்குரிய குளிர்ந்த நிலையினால் உறைந்து போன நிலையில் உள்ள, மரிப்பதற்கேதுவாக உறைந்துபோன நிலையிலுள்ள ஒரு மனிதனுக்கு, இவ்வாறு பெந்தெகொஸ்தே அக்கினியைப் பற்றி வரையப்பட்ட சித்திரத்தைக் காண்பித்தால், அது என்ன நன்மை செய்துவிடப்போகிறது அவனுக்கு? அம்மனிதனுக்கு உங்களால் ஒரு சிறிதளவுகூட உதவி செய்ய முடியாது. அவன் தன்னிலே தானே அவ்வக்கினியைப் பெற்றிருக்க வேண்டும். பெந்தெகொஸ்தே அனுபவம் பெற்றவர்களை கர்த்தருக்காக கிரியை செய்ய வைக்கவும், அவர்கள் செய்யும் அற்புதங்கள், அடையாளங்கள் ஆகியவற்றை செய்ய வைக்கும் படியாக தேவனுடைய வல்லமையானது ஒன்று இருக்குமானால், அப்பொழுது அவ்வனுபவத்திற்காக அக்கினியைப் பற்றிய ஒரு படம் வரைந்து காண்பிப்பதை நிறுத்தி விட்டு, அச்சித்திரத்தில் உள்ள அக்கினியை நிஜமாக அவர்களுக்குக் கிடைக்கச் செய்தால், அவர்கள் பெற்றிருப்பது போன்ற அதே அனுபவத்தையும், அதே இரட்சிப்பையும், இவர்களும் பெற்று, தங்கள் சாட்சியை அவர்கள் முத்திரையிட்டது போலவே, இவர்களும் செய்திட முடியும். பாருங்கள்? அவர்கள் அதைப்பெற்றிட நீங்கள் வழி செய்ய வேண்டும். முன்காலத்தில் இருந்த சந்ததிக்கு உரியதாக அதை நீங்கள் ஆக்கிவிடாமல், இக்காலத்துக்கும் உரியதாக அது இருப்பதால், இங்கும் அதைப் பெற்றிட கொண்டுவரவேண்டும். 54. இப்பொழுது நாம், இந்த சகோதர சிநேகத்தின் காலமாகிய இது, ஒரு மகத்தான மிஷனரி ஊழியத்தின் காலமாக இருக்கிறது என்று கண்டோம். இயேசு சொன்னார், ''உலகம் முழுவதிலும், சர்வ சிருஷ்டிக்கும் இவ்வடையாளங்கள் பின்தொடரும்” என்று. 55. நாம் வரலாற்றையும், வேதாகமத்தையும் தொடர்ந்து ஆராய்ந்து வருகையில் நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன், ஒவ்வொரு இரவிலும்... என்ன சம்பவிக்கும் என்பதைப்பற்றி யோவானுக்கு இயேசுவானவர் கூறியதை நாம் வேதாகமத்தில் வாசித்தோம், இதே இடத்தில் நாம் வரலாற்றையும் எடுத்துக் கொண்டு, வேதத்தில் கூறியுள்ளபடியே அது நிறைவேறினது என்பதையும் நிரூபித்தோம். சரியாக அவ்வாறே நடந்துள்ளது. எனவேதான் நான் வேதத்தில் கூறியுள்ள இச்செய்தியை சுமந்து செல்லும் அத்தேவ ஊழியக்காரனான அந்த மனிதன் காலங்கள் தோறும் எங்கே இருக்கிறான் என்பதை வரலாற்றில் ஊன்றிக் கருத்தாய் ஆராய்ந்து பார்த்துக்கொண்டு இருந்தேன். அவன் அங்கே இருந்தான். வேதத்தில் கூறியுள்ளபடி ஆதியில் இருந்ததைப் போலவே, செய்தியை பற்றிக்கொண்டிருக்கிற அம்மனிதன் காலந் தோறும் இருக்கிறதை நான் கண்டேன். ஒருபோதும் ஏமாற்ற மடையச் செய்யாமல் அது சரியாக இருந்து வந்துள்ளது. 56. இதன்பிறகு, அது ஏறத்தாழ ஒழிந்து போனது போன்ற நிலைமை ஏற்பட்டபோது அக்காலத்தை அவர் மரித்துப்போன காலம்'' என்றும், இருண்டது என்றும் அழைக்கிறார். அதன்பிறகு, சிறிது ஒளி வெளிவந்தது, சற்றுக் கூடுதலான பெலனும் வந்தது. அதன்பிறகு உண்மையான அனுபவமாகிய பெந்தெகொஸ்தேக் குள் இக்கடைசி காலத்தில் அது சென்றடைந்துவிட்டது. அதன் பிறகு மணவாட்டி எடுத்துக்கொள்ளப்பட்டாள், அவள் போய் விட்டாள். மகா உபத்திரவக் காலமானது மீண்டும் ஏற்பட்டது, அது சர்வ லோகத்திற்கும் ஏற்படப்போகிறது. 57. மகத்தான மிஷனரி ஊழியங்களின் காலமாகவும், சகோதர சிநேகத்தின் காலமாகவும் இக்காலம் திகழ்கிறது. அக்காலத்தில் வாழ்ந்த சில மகத்தான தேவ மனிதர்களின் பெயர்களை உங்களுக்குக் குறிப்பிட விரும்புகிறேன். அவர்களது பெயர்களை தான் இங்கு எழுதி வைத்துள்ளேன். ஜான் வெஸ்லி, வொயிட்ஃபீல்ட்... வொயிட்ஃபீல்ட், இவர் 1739 வாக்கில் ஜீவித்தவர், சார்ல்ஸ் ஜி. ஃபின்னி, ட்வைட் மூடி, வில்லியம் கேரி. வில்லியம் கேரி ஒரு மகத்தான மிஷனரியாவார். இவர் இந்தியாவுக்கு 1773ல் சென்றார்; டேவிட் லிவிங்ஸ்டன் தெற்கு ஆப்பிரிக்காவுக்குச் சென்றார். பாருங்கள், மகத்தான மனிதர்களில் சிலர் இவர்கள். சகோதர சிநேகத்தின் காலத்தில் வாழ்ந்த இன்னும் அநேகரின் பெயர்களை இங்கே குறித்து வைத்துள்ளேன். கறுப்பு மனிதன், வெள்ளையன், பழுப்பு நிறத்தவன், மஞ்சள் நிறத்தவன் ஆகிய தடுப்புச் சுவர் களெல்லாம் தகர்த்தெறியப்பட்டது. இம்மனிதர்கள் போய் செய்த மிஷனரி ஊழியங்களினால் சகோதர சிநேகத்தின் கரமானது எங்குமுள்ள அனைத்து தேசங்களுக்கும் நீட்டப்பட்டது. அவர்கள் அவ்வாறு போகத்தக்கதாக எங்கும் அவர்களுக்கு வாசல் திறக்கப்பட்டிருந்தது. திறந்த வாசலின் காலமாக இது திகழ்ந்தது, ஏனெனில் அவர்களால் இயலவில்லை... இக்காலத்திற்கு முன்னால் அவர்களால் அவ்வாறு மிஷனரி ஊழியங்களுக்கு பரவித் திரிந்து செல்ல இயலாதபடி, ரோமாபுரியின் போப்பு மார்க்கமானது எங்கும் வாசலை அடைத்து வைத்திருந்தது. ஆனால் இந்த சபைக் காலத்தில் (ஆறாவது சபைக்காலத்தில்) வாசல்கள் திறக்கப்பட்டிருந்தது. ஏனெனில் இது "திறந்த வாசலின் காலம்'' என்று ஆண்டவர் கூறியுள்ளார். 58. இந்தக் காலத்தில் அநேக வாசல்களை அவர்கள் திறந்தார்கள். சுவிசேஷத்திற்காக வாசல்களும், மிஷனரி ஊழியக் களத்திற்காக வாசல்களும், கிறிஸ்துவினிடம் திரும்புவதற்காக வாசலும், மற்றும் தேவையான அனைத்து வாசல்களும் திறக்கப்பட்ட காலம் இதுவே. அவர்கள் அன்று என்ன செய்தார்கள் என்பதை உங்களால் காண முடிகிறது. அக்காலத்தில் சகோதரர்கள் மகத்தான பணியை செய்தார்கள். 59. சர்தை சபையின் காலத்திற்குப் பிறகு வந்த நட்சத்திரமான ஜான் வெஸ்லியின் காலத்திலிருந்து, அவர் வந்து சர்தை சபையின் காலத்திலிருந்தவர்களை உறக்கத்திலிருந்து எழுப்பியதற்குப் பிறகு, இதற்கு முன் வேறு எந்த வேளையிலும் காலத்திலும் இல்லாத அளவுக்கு, மகத்தான மிஷனரிமார்கள் கடந்த 150 ஆண்டுக்கால மாக பூமி முழுவதிலும் சுவிசேஷத்தைப் பரப்பச் செய்தார்கள். அதைப்பற்றி எண்ணிப் பாருங்கள். வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு தேசமும் தேவனுடைய வார்த்தையை கேட்டிருக்கிறது. அநேக ஆண்டுகளுக்கு முன்பாகவே பூமி முழுவதும் கூறி முடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சுவிசேஷத்தையல்ல, வெறும் வார்த்தையை மட்டும்தான் அறிவித்தார்கள். ''எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது''. பாருங்கள்? 60. நான் தென் ஆப்பிரிக்காவில் பிரசங்க மேடையில் அன்றொரு நாள் நின்றிருந்தபோது, முகம்மதியர்கள் அங்கே பல்லாயிரக் கணக்கில் அமர்ந்திருப்பதை நான் பார்த்தேன். முகம்மதியர்களுக்கு சுவிசேஷத்தைக் கூறிவரும் ஒரு மிஷனரியை நான் சந்தித்தேன். "ஓ அந்த விலையேறப்பெற்ற ஆத்துமாவினிமித்தம் தான்'' என்று அந்த முகம்மதியர்களுக்கான மிஷனரி கூறினார். அவர் அங்கே அநேகமாண்டுகளாக இருந்து வருகிறார், இருப் பினும் அவர் ஒரேயொரு முகம்மதியரை மட்டுமே கிறிஸ்து வண்டை திருப்பியிருக்கிறார். ஏனெனில் முகம்மதியர்கள் மேதிய பெரிசியரிலிருந்து தோன்றியவர்கள். அவர்களது பிரமாணமானது மாறுவதில்லை. அவர்களது சட்டங்கள் மாற்றப்படுவதோ திருத்தப்படுவதோ கிடையாது, அவர்கள் முகம்மதியர்கள் என்றால் எக்காலத்தும் முகம்மதியராகவே இருக்கவேண்டும். 61. எனவே, அவர்களுக்கு இருந்த இந்த சகோதரன் குறிப்பிட்ட அந்த ஒரே ஆத்துமாவானது, தென் ஆப்பிரிக்காவின் தலை நகரமாம் ப்ரிடோரியாவின் மைதானத்தில் நின்று கொண்டிருந்தார். அது சுதந்திர மாகாணத்தில் உள்ளது, ஆரஞ்ச் ஃப்ரீ ஸ்டேட்டில் உள்ளது. அது ட்ரான்ஸ்வாலில் உள்ளது. 62. அங்கிருந்து நாங்கள் கேப்டவுனுக்கும், ப்ளோம்ஃபோன் டைனுக்கும் போய், அங்கிருந்து, திரும்பி க்ரஹாம்ஸ்டவுன், கிழக்கு லண்டன் வழியாக மறுபடியும் ஜோஹென்ஸ்பெர்க் வந்து சேர்ந்து கரையோரத்தில் வந்தோம். கேப்டவுனிலிருந்து புறப்பட்ட பிறகு இங்குதான் வந்தோம்: 63. சரி, கடைசியாக நாங்கள் சென்ற நகரம் டர்பன் ஆகும். அங்கே முகம்மதிய மதத்தைச் சேர்ந்த 1 1/2, இலட்சத்திலிருந்து 2 இலட்சம் வரை எண்ணிக்கையுள்ள பழங்குடியினரைக் கூட்டிச் சேர்ந்திருந்தோம். அவர்கள் அங்கே அமர்ந்திருந்தார்கள். அக் கூட்டங்களுக்காக வாரக்கணக்கில் அங்குள்ள குதிரைப் பந்தய மைதானத்தை எடுக்கவேண்டியதிருந்தது. உலகத்திலேயே அது இரண்டாவது பெரிய பந்தய மைதானமாகும். சர்ச்சில் டௌன்ஸ் என்ற இடத்தில் உள்ளதைவிட பெரியது அது. லண்டனில்தான் மிகப் பெரிய மைதானம் உள்ளது. அதற்கடுத்து தென் ஆப்பிரிக்காவில், பிறகு சர்ச்சில்டெளென்சிலும் உள்ளவைகளைச் சொல்லலாம். அப்பொழுது அங்கே அவர்கள் வேலி போட்டிருந்தார்கள். ஏனெனில் அப்பழங்குடியினருக்குள் சண்டை நடந்துகொண்டிருந் தது. காவல்துறையினர் (இரு நூறு அல்லது முன்னூறு காவலர்கள்) ஒவ்வொரு பழங்குடிப் பிரிவினரையும் தனித்தனியே ஒதுக்கி வைத்து, அவ்வேலிகளுக்குள் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாதவாறு, அனுப்பிவிட்டார்கள். அவர்களிடத்திலிருந்து ஈட்டி போன்ற ஆயுதங்களை பறித்துவிட்டார்கள். அம்மைதானத்தில் அமர்ந்திருந்து, அவ்வேலிகளின் வழியாக ஒரு வகுப்பார் மற்ற வகுப்பாரை உற்று நோக்கிக்கொண்டு, இவ்வாறு அப்பழங்குடிகள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக்கொள்ள காத்திருந்தனர். அவர்களுடைய தலைவர்கள் தங்கள் இராணியோடு, விசிறியால் மனிதர்கள் தங்களுக்கு விசிறச் செய்து அமர்ந்திருந்தார்கள். 27 கோச்சுகள் நிறைய ஆட்களோடு ரொடீஷியாவிலிருந்து, ரொடீஷியாவின் இராணியும் அக்கூட்டங்களில் கலந்து கொள்ள வந்திருந்தாள். (ரொடீஷியா இன்றைக்கு ஜிம்பாப்வே என்று அழைக்கப்படுகிறது. இது தென் ஆப்பிரிக்காவுக்கு வடக்கில் உள்ளது - மொழிபெயர்ப்பாளர்). விசேஷ இரயில் வண்டி விடப்பட்டிருந்தது. 64. கர்த்தர் அக்கூட்டங்களில் மகத்தான அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார். நாங்கள் ஒருநாள் அங்கே கண்ட தென்னவெனில், டர்பன் நகரத்தின் மேயராக இருக்கும் சிட்னி ஸ்மித் என்பவர் அங்கு போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தோம். ''அதென்ன அம்மனிதன் தன் கழுத்தில் ஒரு அட்டையை அணிந்திருக்கிறானே, அது என்ன?'' என்று நான் அவரைக் கேட்டேன். அட்டையை அணிந்திருந்தவன் ஒரு கருப்பு மனிதன். நாம் அவர்களை நீக்ரோ இனத்தவர் என்று இங்கே அழைக்கிறோம். அவர்களுக்குத்தான் நான் பிரசங்கிப்பதாக இருந்தேன். அவர்களில் அநேகர், ஆண், பெண் இருவருமே உடையுடுத்தியிருக்கவேயில்லை. அம்மனிதனின் கையில் ஒரு விக்கிரகம் இருந்தது. அவனது கழுத்தில் ஒரு அட்டை தொங்கிக்கொண்டிருந்தது. “ அவர்களின் கழுத்தில் காணப்படும் அவ்வட்டைகள் எதைக் குறிக்கிறது?'' என்று நான் மேயரைக் கேட்டேன். 65. “ அவர்கள் கிறிஸ்தவர்கள்'' என்று கூறினார். 66. ''கிறிஸ்தவரா, அப்படியானால் கையில் ஒரு விக்கிரகத்தை வைத்திருக்கிறார்களே?'' என்று வினவினேன். 67. அவர் என்னிடம், ''சகோ. பிரன்ஹாம் அவர்களே, அம்மனிதன் ஹோங்காய் பாஷை பேசுபவன், எனக்கு அவனுடைய பாஷையைப் பேசமுடியும். நாம் அவனிடம் காரோட்டிச் சென்று, அவனிடம் நீங்கள் பேசலாம். நீங்கள் அவனை எந்தப்பெயர் வேண்டுமானாலும் சொல்லி அழையுங்கள். ஏதாவது கேள்விகளை நீங்கள் அவனை கேளுங்கள், நான் அவனிடம் எடுத்துச்சொல்லி, அவன் என்ன பதிலளிக்கிறானோ அதை உங்களுக்கு எடுத்துரைப்பேன்'' என்றார். 68. எனவே, நாங்கள் அம்மனிதனிடம் சென்று, ''தாமஸ் எவ்வாறிருக்கிறாய்?'' என்று கேட்டேன். நான் அவனை தாமஸ் என்று அழைத்தேன். ஏனெனில் அதுவே அவனுக்குப் பொருத்தமான பெயராக இருக்கும் என்று எண்ணினேன். “ எப்படியிருக்கிறாய் தாமஸ்?'' என்று கேட்டேன். அவன் என்னை உற்று நோக்கினான். “ நீ கிறிஸ்தவனா" என்று கேட்டேன். 69. “ ஆம், அவன் கிறிஸ்தவன் தான்'' என்று மொழிபெயர்ப்பாளர் எடுத்துரைக்கிறார். 70. நான் கூறினேன்... அவனுக்கு என்னை வாஸ்தவமாகவே யாரென்று தெரியாது. அது வரைக்கிலும் அவன் எங்களை பார்த்ததே கிடையாது. ''உன்னிடமுள்ள அவ்விக்கிரகத்தை வைத்து நீ என்ன செய்கிறாய்?'' என்று நான் அவனைக் கேட்டேன். 71. "ஓ, அவனது தந்தை அதை தரித்திருந்தார்'' என்று கூறினார். பாருங்கள், அது அவனுக்கு ஒரு தெய்வமாக இருந்தது. 72. "உன் தந்தை அதை சுமந்து திரிந்தார் என்ற காரணத்தால் நீ அதை சுமக்க வேண்டும் என்பதில்லையே. நீ கிறிஸ்தவன் என்றால், நீ அதை சுமக்கக்கூடாது'' 73. அவர் கூறினார்: ''ஒரு நாள் சிங்கமானது அவனுடைய தந்தையை துரத்தியபொழுது, அவன் ஒரு சிறு தீயை வளர்த்து, மந்திரவாதி தனக்குச் சொல்லிக்கொடுத்த ஒரு மந்திரத்தை இவ்விக்கிரகத்தின் பேரில் கூறியதாகவும், அப்பொழுது அவ் விக்கிரகம் அச்சிங்கத்தை துரத்திவிட்டதாகவும் இவன் கூறுகிறான்'' என்றார். அங்கெல்லாம் காட்டுமிருகங்கள் அநேகரை கொன்றுவிடுவதுண்டு. 74. நான் கூறினேன், "பார்; அந்த மந்திரவாதி சொல்லிக் கொடுத்த மந்திரம் ஒன்றும் அச்சிங்கத்தை துரத்திவிடவில்லை. அந்நெருப்புத்தான் அதைத் துரத்திவிடக் காரணமாய் அமைந் திருந்தது. சிங்கமானது நெருப்பைக் கண்டு பயப்படக் கூடியது'' என்று. நான் மேலும் கூறினேன். “ தாமஸ்! ஒரு கிறிஸ்தவன் என்ற முறையில், விக்கிரகத்தையெல்லாம் நாம் சுமக்கக்கூடாது. அதற்கும் உனக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது'' என்று. 75. அதற்கு அவன், "ஓ, நல்லது, அமோயா காப்பாற்றத் தவறினால், இது கைகொடுக்குமே'' என்றான். அமோயா என்றால், "காணப்படாத சக்தி'' அல்லது 'நாம் காணக்கூடாத தேவன்'' அதாவது, “ காற்றைப்போன்ற ஒரு சக்தி' என்று பொருள்படுமாம். எனவே அவன் இரண்டையுமே நம்புகிறான், ஏனெனில் ஒன்று கைவிட்டால் இன்னொன்றாவது கைகொடுக்குமே என்ற எண்ணத்தில் போலும். அங்குள்ள கிறிஸ்தவத்தின் பெலன் இதுவாகத்தான் இருக்கிறது. உ-ஊ, ஆம், ஓ, என்னே ! 76. ஆனால் அன்று மத்தியானத்தில், அந்த குதிரைப் பந்தய மைதானத்தில் நடந்த கூட்டத்தில் நான் வேதவாக்கியத்தை எடுத்துக்கொண்டு பேசினபிறகு, பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்த ஆரம்பித்த போது... 77. எனது பிரசங்கத்திற்கு உண்மையிலேயே பதினைந்து நிமிடங்கள் தான் பிடித்தது; ஆனால் பதினைந்து வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்கள் அந்தந்த மொழியில் மொழிபெயர்த்து சொல்ல வேண்டியிருந்ததால் பிரசங்கத்தை முடிக்க ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆயிற்று. 'இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்'' என்று சொல்லுகிறேனென்றால், ஒருவர் கூறுவார், “ பாபா பாபா'' என்று; இன்னொரு மொழிபெயர்ப்பாளர் 'க்ளூக்ளூ க்ளூ'' என்பார்; அதற்கடுத்த மொழிபெயர்ப்பாளர்: "உம் உம் உம்'' என்பதுபோல ஏதோ சொல்லுவார். ஆக மொத்தத்தில் இம்மொழிபெயர்ப்பாளர்கள் பல்வேறுவிதமான பாஷைகளில் கூறியதெல்லாம், “ இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்'' என்று நான் கூறியதைத்தான். அவர்கள் இத்தனை மொழிகளில் மொழிபெயர்த்து சொல்லி முடித்த பிறகு, நான் மீண்டும் பிரசங்க வாக்கியத்தை தொடர வேண்டிய எனது முறை வருகையில், நான் முதலில் என்ன சொன்னேன் என்பதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். மொழிபெயர்ப்பாளர் என்ன சொல்கிறார் என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் முடிக்கிற வரையிலும் காத்திருக்க வேண்டும். 78. பிறகு, நான் பிரசங்கத்தை தொடரும்பொழுது, ''உங்களை இரட்சிக்க வருகிற இயேசு என்ற ஒருவரைப்பற்றி உங்களுக்கு மிஷனரி கூறியிருக்கிறார்'', மிஷனரி என்று கூறியபோது, பல பிரிவினரான பழங்குடிகளான அவர்கள் ஒருவரையொருவர் மேலுங்கீழுமாகப் பார்த்துக்கொண்டார்கள். ஆனால் அந்த மிஷனரி... "இந்தப் புத்தகத்தை வாசிக்கையில், அங்கே அவர் மகத்தான சுகமளிக்கிறவராக இருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர் தன் ஜனங்களுக்குள், தான் திரும்பி வருகிற வரையிலும் காலங்கள் தோறும் ஜீவித்திருப்பார் என்று கூறியுள்ளாரே, அதை அறிந்துகொண்டிருக்கிறீர்களா? ‘நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்' என்று கூறினாரே. கழுத்தில் அட்டைகளை, கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக தொங்க விட்டுக்கொண்டிருக்கிறவர்களே, இயேசு இன்று இங்கே திரும்பிவந்து, மக்கள் மத்தியில் உலாவி, அவர் பூமியில் இருந்தபோது செய்த அதே காரியத்தைச் செய்வதைக் காண விரும்புகிறீர்களா?'' என்று கேட்டேன். 79. ஓ அவர்கள் யாவருமே, “ நிச்சயமாக'' என்றார்கள். அவர்கள் அதைக் காண விரும்பினார்கள், பாருங்கள். அவர்கள் அதை விரும்பினார்கள். 80. 'அவர் பூமியிலிருந்தபொழுது செய்த அதே காரியத்தை, இங்கேயிருக்கிற எங்களை உபயோகித்து நாங்கள் அதைச் செய்யும் படி அவர் கிரியை செய்வாரானால், அப்பொழுது நீங்கள் அவருடைய வார்த்தையை விசுவாசிப்பீர்களா?'' என்று கேட்டேன். 81. "ஓ நிச்சயமாக'' என்றனர். அங்கே அமர்ந்திருந்த முகம்மதியர்கள் அதைச் சொன்னார்கள் என்பதைப் பாருங்கள். 82. முதலாவது... இரண்டாவதாக மேடையின்மேல் வந்தது ஒரு முகம்மதிய பெண்மணியாவார். பரிசுத்த ஆவியானவர் பேசிக் கொண்டிருக்க, நான் அப்பெண்மணியிடம், “ எனக்கு உன்னைத் தெரியாது என்று நீ அறிவாய், உன்னுடைய பாஷையைக் கூட என்னால் பேச இயலாது'' என்று கூறினேன். அதை அவள் ஒத்துக் கொண்டாள். 83. அவளது கண்களுக்கு இடையில் ஒரு சிவப்பு நிற பொட்டு இருந்தது. உயர்குடியில் பிறந்த முகம்மதியர் என்பதை அப் பொட்டு குறிக்கிறதாம். நான் அவளை நோக்கி, “ உன்னை சுகமாக்குவது என்றால், அதை நான் செய்ய இயலாது, இன்று மத்தியானத்தில் நான் பிரசங்கித்த செய்தியை நீ புரிந்து கொண்டாயா?'' என்று கேட்டேன். 84. அவள் அந்த முகம்மதிய பாஷை மொழி பெயர்ப்பாளரிடம் பதில் சொன்னாள். அவள் ஒரு இந்தியப் பெண்ணாம். அவள் கூறினாள். 'ஆம், அவள் புரிந்து கொண்டாள். அவள் புதிய ஏற்பாட்டையும் வாசித்திருக்கிறாள்'' என்று மொழி பெயர்ப்பாளர் எடுத்துக் கூறினார். ஓ, ஆம். ஊ-ஊ. 85.அவர்கள் தேவனில் விசுவாசம் கொள்ளவும்கூட செய்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்களும் ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறார்கள். 'அவள் தேவனில் விசுவாசங்கொண்டிருக்கிறாள். ஆனால் முகம்மது தேவனுடைய தீர்க்கதரிசி என்று அவள் விசுவாசிக்கிறாள்'' என்று அவள் கூறியதைப்பற்றி எனக்கு எடுத்துரைக்கப்பட்டது. நாமோ இயேசு தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறோம். பாருங்கள்? “ அவள் தேவனில் விசுவாசங்கொண்டிருக்கிறாள் என்று கூறுகிறாள்'' என்று எடுத் துரைத்தார் மொழிபெயர்ப்பாளர். 86. 'உனக்கு பழைய ஏற்பாடு தெரியுமென்றால், ஆதிகாலத்தில் தேவன் மனிதனில் எவ்விதமாக செயல்பட்டார் என்பதும் உனக்கு தெரிந்திருக்கிறதென்றால், நாங்கள் 'கிறிஸ்து' என்றழைக்கும் இயேசுவானவர், அப்பொழுது, தேவன்-தீர்க்கதரிசியாகத்தான் இருக்கவேண்டும். ஆம், அவர்கள் அவரைக் கொலை செய்தார்கள். நீங்கள் அவ்வாறில்லை என்று எண்ணுகிறீர்கள். ஏனெனில், அவர் ஒரு வெள்ளைக் குதிரையின் மேல் ஏறிப்போய்விட்டார் என்று கூறுகிறீர்கள். அவ்விதமாகத்தான் உங்களது மதகுருவினால் நீங்கள் போதிக்கப்பட்டிருக்கிறீர்கள். 'அவர் கொல்லப்படவில்லை, சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எங்கோ இயற்கையாக மரித்து விட்டார்' என்று போதிக்கிறார்கள் உங்களுக்கு'' என்றேன். 87. “ நீங்களெல்லாம் அவ்வாறு விசுவாசிக்கிறீர்கள். ஆனால் இந்த இயேசுவானவர் மரித்து உயிர்த்து எழும்பி, தனது சபையின் மேல் மீண்டும் தனது ஆவியை அனுப்பினார் என்று புதிய ஏற்பாடு உரைக்கிறது” என்று கூறினேன். இப்பொழுது இங்கேதான் நீங்கள் அவர்களை மடக்குகிறீர்கள், அதே விஷயத்தில் தான் அந்த முகம் மதியன் பில்லி கிரஹாமுக்கு சவால்விடுத்தான். அதே விஷயம், அதே கொள்கையில்தான் என்பதைப் பாருங்கள். 88.''இப்பொழுது, ஒருவேளை... முகம்மது உங்களுக்கெல்லாம் எந்த வாக்குத்தத்தத்தையும் கொடுக்காதபோது, இயேசு எங்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுத்திருக்கிறார், அதாவது அவர் செய்த அதே கிரியைகளை நாங்களும் செய்வோம் என்பதாக. அவர் பரிசுத்த யோவான் எழுதிய சுவிசேஷம் 5:19 இல், பிதாவானவர் எனக்குக் காண்பிக்கிற வரையிலும் தானாக எதையும் செய்வதில்லை என்று கூறப்பட்டுள்ளதை ஞாபகத்தில் கொள்வாயாக. இயேசுவானவர் வந்து உன்னுடைய கஷ்டம் என்ன என்பதையும், எதற்காக நீ இங்கிருக்கிறாய் என்பதையும், உன்னுடைய முடிவு என்னவாயிருக்கும் என்பதையும், உன்னுடைய கடந்த காலத்தையும், எதிர்காலம் என்னவாயிருக்கும் என்பதையும், அவர் உன்னுடைய எதிர்காலத்தையும் பற்றி கூறுவாரென்றால்,... உன்னுடைய கடந்த காலத்தையும் கூறக்கூடுமென்றால், அப்பொழுது நிச்சயமாக நீ எதிர்காலம் என்னவாயிருக்கும் என்று அவர் கூறுவதையும் உன்னால் விசுவாசிக்க முடியும்'' என்று கூறினேன். ''அது உண்மைதான்'' என்று அவள் மொழிபெயர்ப்பாளர் மூலம் கூறினாள், பாருங்கள். “ நல்லது, அவர் அவ்வாறு செய்யட்டும்'' என்றேன் நான். 89. அப்பொழுது அந்த முகம்மதியர்கள் அனைவரும் எழுந்து நின்று, கவனித்துக்கொண்டிருந்தார்கள். பரிசுத்த ஆவியானவர் அப்பொழுது இவ்வாறு கூறினார்: ''உன் புருஷன் குட்டையான, கருத்த மீசையையுடைய கனத்த சரீரமுள்ள மனிதன். மூன்று நாட்களுக்கு முன்னர் நீ ஒரு டாக்டரிடம் போயிருந்தாய். உனக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. அந்த மருத்துவர் பெண்களுக்குரிய சோதனையை உன்னில் செய்தார். உன்னுடைய கருப்பையில் ஒரு கட்டி இருக்கிறது என்று அவர் கூறினார்'' என்று. 90. அவள் கீழ் நோக்கிப் பார்த்து, "தலைவணங்கி, ''அது உண்மை '' என்று கூறினாள். 91. இப்பொழுது, நீ புதிய ஏற்பாடு வாசித்திருக்கிறாய் என்று கூறுகிறாயானால், கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரீயிடம் இயேசு கிறிஸ்து கூறியது போல் இது உள்ளதாக உனக்குத் தெரிகிறதா?'' என்று அவளிடம் கேட்டேன். 92. ''அது உண்மை '' என்றாள் அவள். 93. நான் அவளிடம், ''நீ ஏன் ஒரு கிறிஸ்தவனான என்னிடம் வந்திருக்கிறாய், நீ ஏன் உன்னுடைய முகம்மதிய தீர்க்கதரிசியிடம் போயிருக்கக்கூடாது?'' என்று கேட்டேன். 94. “ நீர் எனக்கு உதவி செய்ய முடியும் என்று நான் கருதுவதினால்'' என்று கூறினாள். 95. ''நான் உனக்கு உதவி செய்ய இயலாது, ஆனால் நீ இப்பொழுது இங்கே இருக்கிற இயேசுவை ஏற்றுக் கொள்வாயானால், அவர் உனக்கு உதவி செய்வார். அவர் உன்னுடைய வாழ்க்கை முழுவதையும் அறிந்திருக்கிறார், உன்னைப் பற்றி யாவையும் அறிந்திருக்கிறார்'' என்று நான் கூறினேன். 96."நான் இயேசுவை என்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன்'' என்று கூறினாள். 97. அதுதான் கிரியை செய்தது. அதுதான் காரியம். அன்று மத்தியானத்தில் பத்தாயிரம் முஸ்லிம்கள் கிறிஸ்துவண்டை வந்தனர். பார்த்தீர்களா? முப்பது ஆண்டுகள் ஆகியும், அந்த மிஷனரி ஊழியக்களத்தில் துண்டுப்பிரதிகள் மூலம் ஒரேயொரு மனிதனைத் தான் கிறிஸ்துவண்டை கொண்டுவர முடிந்திருக்கிறது. ஆனால், ஐந்தே நிமிடத்தில் சுவிசேஷமானது வல்லமையோடு பிரத்தியட்சப் படுத்தப்பட்டபோது, பத்தாயிரம் ஆத்துமாக்கள் கர்த்தரிடம் வந்தனர். 98. தேவன் ஒருபோதும் நம்மை ஆலயங்களைக் கட்டச் சொல்லவில்லை, பாடசாலைகள் உண்டாக்கவும் சொல்லவில்லை. அவைகளெல்லாம் நல்லதுதான். மருத்துவமனைகள் மற்றும் ஏனைய காரியங்கள் நமக்கு தேவைதான் என்பதை தேவன் அறிவார், அது அவருடைய திட்டமே, ஆனால் சபைக்கு தேவன் கொடுத்த கட்டளையென்னவெனில், “ சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' என்பதே. ஆனால் நாமோ இந்த அருமையான ஸ்தலமாகிய ஆஸ்பரியிலிருந்து வந்த துண்டுப்பிரதிகள், பத்திரிக்கைகள் ஆகியவைகளை விநியோகிக்கிறோம். இங்கே கென்டக்கியில் உள்ள வில்மோர் என்ற இடத்தில் உள்ள அந்த நல்ல மெதோடிஸ்ட் வேதகல்லூரியின் மக்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. இவ்வேளையில் உலகிலுள்ள மிகச்சிறந்த ஆவிக்குரிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று என்று நான் கருதுகிறேன். அவர்கள் அருமையான மக்கள். 99. நான் ரொடீஷியாவிலுள்ள ஒரு நகரத்திலிருந்து வந்து கொண்டிருந்தேன். அதின் பெயரை மறந்துவிட்டேன். பில்லி உனக்கு ஞாபகமிருக்கிறதா? (பில்லி பால் 'சாலிஸ்பரி'' என்று கூறுகிறார் - ஆசி.) சாலிஸ்பரி - அது சரிதான். நியூ சாலிஸ்பரி (அவன்தான் எனது ஞாபகசக்தியாக இருக்கிறான்). அந்நகரத்தின் பெயர் நியூ சாலிஸ்பரி, ரொடீஷியா. நாங்கள் ரொடீஷியாவி லிருந்து புறப்படுவதற்காக விமானத்தில் ஏறுகையில், அமெரிக்க பாஸ்போர்ட்டைக் கண்டேன் அவர்கள் ஒரு இளைஞனும், மூன்று பெண்பிள்ளைகளுமாய் இருந்தனர். நான் அவர்களிடம் சென்று "ஹெல்லோ, உங்களிடம் அமெரிக்கன் பாஸ்போர்ட் இருக்கிறதைக் காண்கிறேனே'' என்றேன். அவ்விளைஞன் கூறினார்: “ நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா?'' நான், “ ஆம், நான் ஒரு அமெரிக்கன்'' என்று கூறினேன். அவர் அதற்கு, “ நல்லது, அது அருமையானது'' என்று கூறினார். “ நீங்கள் சுற்றுலா போய்க்கொண்டிருக்கிறீர்களா?'' என்று நான் கேட்டேன். “ இல்லை, நாங்கள் மிஷனரிகள்'' என்று பதிலளித்தார். 100. “ ஓ, அது எத்தனை அருமையாயிருக்கிறது'' என்றேன் நான். “ நிச்சயம் உங்களைச் சந்திக்க மகிழ்ச்சியாயிருக்கிறது. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? எந்த சபையைச் சேர்ந்தவர்கள்? அல்லது ஏதாவது ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது சுயாதீனரா யிருக்கிறீர்களா?'' என்று மேலும் கேட்டேன். 101.“ இல்லை, நாங்கள் மெதோடிஸ்ட்டுகள், நாங்கள் கென்டக்கியிலுள்ள வில்மோரைச் சேர்ந்தவர்கள்'' என்று கூறினார். 102. ''அது என் வீட்டிற்கு கொல்லைப்புறத்தில் உள்ளது போல் மிக அருகாமையில் உள்ளதாயிற்றே'' என்றேன் நான். நான் கூறினேன்.... 103. அதற்கு அவ்விளைஞன், ''நீங்கள் அந்த சகோதரன் பிரன்ஹாம் தானே?'' என்று கேட்டான். 104.“ ஆம் ஐயா, அது சரிதான்'' என்றேன் நான். அப்பொழுதே அந்த க்ஷணமே அது அவனை கலக்கியது, அவன் அதற்குப்பிறகு ஒன்றுமே பேசவில்லை. அந்த வேளையில் அவன் மேற்கொண்ட அவனது மனோபாவத்தை நான் பார்த்தேன். அவன் அப்பெண்களை முழித்துப் பார்த்தான், அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அவன் ஒரு இளைஞனாகத்தான் இருந்தான். அப்பெண்பிள்ளைகளும் அப்படித்தான். எனவே நான் அவனை, "மகனே, சற்று நேரம்... நான் ஒரு நிமிடம் உங்கள் யாவரோடும் கிறிஸ்தவ நெறிமுறைகளைப் பற்றி பேச விரும்புகிறேன். நாம் யாவரும் இங்கே அந்த மகத்தான நோக்கத்திற்காகவே வந்திருக்கிறோம். நீங்கள் இப்பிரதேசங்களில் கடந்த இரண்டு ஆண்டுக் காலமாக இருந்து வருவதாகக் கூறுகிறீர்கள். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால், நீங்கள் இப்பிரதேசத்தில் கர்த்தருக்காக ஒரு ஆத்துமாவையாவது, ஆதாயப்படுத்தினோம் என்று விரலை மடக்கிக் கூறக்கூடுமோ என, இளைஞனே, உன்னையும் மூன்று வாலிபப் பெண்களே, உங்களையும் நான் கேட்க விரும்புகிறேன்'' என்று நான் கேட்டேன். அவர்களால் முடியவில்லை. ஒரு ஆத்துமாவை கூட ஆதாயப்படுத்தவில்லை. 105. நான் அவர்களிடம், “ நான் உங்களுடைய உணர்வுகளை புண்படுத்த விரும்பவில்லை. நீங்கள் செய்யும் காரியத்தைப் பற்றி மெச்சுகிறேன். ஆனால் பெண் பிள்ளைகளாகிய நீங்களோ, உங்கள் வீடுகளில் இருந்து உணவுவகைகளை சமைக்க உங்கள் தாயாருக்கு உதவியாக இருக்கவேண்டும். அதுதான் சரியான காரியம். உங்களுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை. சரியாக அப்படித்தான் நீங்கள் செய்யவேண்டும்'' என்று கூறினேன். 106. பரிசுத்த ஆவியைப் பெறாமலும், ஆவியின் வல்லமையால் வல்லமையான செயல்கள் பிரத்தியட்சப்படுத்தப்படாமலும் பிரசங்கிக்கப் போவதற்கு ஒருவருக்கும் ஊழியக்களங்களில் அலுவல் ஒன்றும் இல்லை. ஏனெனில் அது ஒன்றுதான் அம்மக்களை அசைக்க முடியும். உண்மையான சுவிசேஷமானது அப்பிரதேச மக்களுக்கு பிரசங்கிக்கப்படாததினால், அங்கெல்லாம் மக்களின் கலகங்கள், கிளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. அவர்களுக்கு வெறும் வார்த்தை ரூபத்தில் மட்டுமே சுவிசேஷம் கொடுக்கப்பட்டுள்ளது. அது என்னவாயிருக்கிறது என்று பாருங்கள்? அதுதான் உலகுக்கு. சுயாதீனமாக வேதமும், சுயாதீனமான அச்சகமும் கிடைக்கச் செய்த லூத்தரின் காலமாகிய ''தப்பித்துக்கொண்ட'' காலத்தின் தொடர்ச்சியாக அது இருக்கிறது. 107. இந்த காலம் ஒரு பெரிய மகத்தான காலமாகும். நாம் 7ம் வசனத்தைப் பார்ப்போம். அது வாழ்த்துதலைக் கொண்டதாயிருக்கிறது. அவ்வசனத்தைத்தான் நாம் வாசிக்கவேண்டும் என்று நான் நம்புகிறேன். “ பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக் கூடாதபடிக்குத் திறக்கிற வரும், ஒருவரும் திறக்கக் கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது; வெளி.3:7. 108. சரியானதொரு அறிக்கை இது! அவ்வாறில்லையா? இன்னும் ஒரு நிமிடத்தில் அவ்வசனத்திற்கு நான் திரும்பி வரப்போகிறேன். ஏனெனில் அது வேதத்தில் இக்காலத்தையும் தாண்டியுள்ள காலத்திற்கு பொருந்துகிறதாயிருக்கிறது. “ உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும் நீ என் நாமத்தை மறுதலியாமல் என் வசனத்தைக் கைக் கொண்டபடியினாலே, இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத் திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்”. வெளி.3:8 109. சகோதர சிநேகமும், மகத்தான மிஷனரி ஊழியத்தின் அசைவும் கொண்ட இக்காரியம் உலகையெல்லாம் நிரப்பி, எங்கும் பரம்பியதற்குப் பிறகு வரும் வேளையை கவனியுங்கள். பத்திரிக்கைகள், துண்டுப் பிரதிகள் ஆகியவற்றை உலகின் பல பாகங்களில் விநியோகித்தலாகிய காரியத்தைப் பற்றி நான் ஒன்றும் விரோதமாகச் சொல்லவில்லை. இப்பொழுது ஸ்தாபன சபையானது கல்வியறிவு, கிரியைகள் ஆகியவற்றுக்கு திரும்பிப் போய்விட்டது. திரும்பிப்போய்விட்டது என்பதைப் பாருங்கள். 110. மகா ஸ்தாபனமானது ஸ்தாபிக்கப்பட்டதற்குப்பிறகு, இயேசுவோ ''திறந்த வாசலை'' வைக்கிறார். வெஸ்லியின் காலம் வந்ததற்குப் பிறகு, பூமியில் மெதோடிஸ்ட் சபையானது ஸ்தாபிக் கப்பட்டது. அது வேர்கொண்டு, வளர்ந்து, இன்றைக்கு இருக்கிறபடி மகாபெரிய சபையாக உருவாகியது. ப்ராடெஸ்டெண்ட் சபைகளுக்குள் உள்ள பெரிய சபைகளுள் ஒன்றாக அது திகழ்கிறது. அச்சபை உருவான அக்காலத்தில்தான், சபையானது லவோதிக்கேயா சபைக்காலத்தினுள் பிரவேசிக்கும் முன்னர், சபைக்கு இயேசு 'திறந்த வாசலை' வைத்தார். 111. ஒரு சபைக்காலம் அடுத்த சபைக்காலத்திற்குள் சற்று நீண்டு நீடித்தது என்பதைப்பற்றி நான் கூறிய காரியத்தை நீங்கள் புரிந்து கொள்வதற்காகத்தான் நான் இதை இவ்விதமாகக் கூறுகிறேன். பாருங்கள்? அவ்வாசலானது, மிஷனரி ஊழியத்தின் காலம் முதற்கொண்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் அவர்களுக்கு, தான் தாவீதின் திறவுகோலை உடையவராயிருக்கிறதாகக் கூறியுள்ளார் என்பதை பாருங்கள். வொயிட்ஃபீல்ட், ஃபின்னி, சேங்கி மற்றும் கடைசியாக வந்த மூடி ஆகிய மிஷனரிகள் தோன்றிய மிஷனரி ஊழியக்காலத்திற்குப் பிறகு, இப்பொழுது வந்து, சபைக்கு முன்பாக அவர் திறந்தவாசலை வைக்கிறார். ஓ, இப்பொழுது இங்குதான் நீங்கள் கவனிக்கவேண்டியதிருக்கிறது. அது பிலதெல்பியா சபையின் காலத்திற்கும், லவோதிக்கேயா சபையின் காலத்திற்கும் இடையில் உள்ளதாக இருக்கிறது. 112. இயேசுவே வாசலாயிருக்கிறார். நீங்கள் என்னுடன் யோவான் எழுதின சுவிசேஷம் 10:17-க்கு இப்பொழுது திருப்பி, இவ்விஷயத்திற்கு அதை ஆதாரமாக ஆக்கி, விசுவாசத்தின் நிச்சயத்தை உங்களில் அநேகர் உடையவர்களாயிருப்பீர்களாக. ஏனெனில், யாராவது, 'அவர்தான் அப்படிச் சொன்னார், நான் ஒருபோதும் இல்லை...'' என்று பின்னால் சொல்லிவிடக்கூடும். யோவான் எழுதின சுவிசேஷம் 10ம் அதிகாரம் 17ம் வசனத்தை நான் வாசிக்க விரும்புகிறேன். யோவான் 10:17. நல்லது, இந்த வசனங்களை நாம் வாசிக்கிறோம். யோவான் 10:7,17 அல்ல. "...இயேசு... அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.'' யோவான் 10:7 113. அது ஆசீர்வாதத்திற்குள் திரும்பவும் போக வைக்கிறது. எவ்வாறு நாம் கிறிஸ்துவுக்குள் பிரவேசிக்கிறோம்? அவர் என்னவாயிருக்கிறார்? ஆட்டுத்தொழுவத்திற்கு அவர் என்னவாயிருக்கிறார்? நான் அடிக்கடி, ''இது என்ன? அவர் ஒரு மனிதனாயிருக்க, அது எப்படி அவர் வாசலாயிருக்க முடியும்?'' என்று எனக்குள் வியந்ததுண்டு. ஒருநாள் நான் கிழக்கத்திய தேசங்களில் ஒன்றில், மேய்ப்பனானவன் ஆட்டுத் தொழுவத்திற்குள் ஒரு வாசல் வழியாக ஆடுகளையெல்லாம் இரவு நேரத்தில் ஓட்டிவிட்டு அவைகளையெல்லாம் ஒன்று சேர்த்து, எல்லா ஆடுகளும் உள்ளே வந்துவிட்டனவா என்று அவைகளை எண்ணுகிறதைக் கண்டேன். அதன்பிறகு, அவனே அத்தொழுவத்தின் வாசலுக்கு குறுக்கே வாசலாக அடைத்துக்கொண்டு படுத்துக்கொள்கிறான். அவனைத் தாண்டிப் போகாமல், யாதொன்றும் உள்ளே இருக்கும் ஆடுக ளண்டையில் போகவோ, அல்லது ஆடு ஒன்று வெளியே ஓடி விடவோ முடியாது. எனவே, பாருங்கள், இயேசுவே ஆட்டுத் தொழுவத்திற்கு வாசலாயிருக்கிறார். 114. நாங்கள் ஒரு பிரிட்டிஷ் ஜீப்பில் பயணம் செய்து கொண் டிருந்தோம். அப்பொழுது என்னுடன் ஜீப்பில் வந்தவரிடம் நான், ''இது என்ன விஷயம்? மேய்ப்பர்கள் நகருக்குள் வந்தவுடன் ஒரு விசில் ஊதப்படுகிறது, அப்பொழுது அனைத்து வாகனங்களும் ஓடாதபடி சடன் பிரேக் போட்டு நிறுத்தி விடுகிறார்களே'' என்றேன். ஒரு மேய்ப்பன் தனது ஆடுகளோடு நகரின் பிரதான பகுதி வழியாக கடந்துசென்று கொண்டிருந்தான். 115. இங்கேயிருப்பதைப்போல் கிழக்கில் இருக்கவில்லை. அவர்கள் அங்கே வீட்டருகில், சந்தைகளில் நற்பலன்களாகிய விளைபொருட்களை கொண்டு வந்து குவிக்கிறார்கள். அங்கே ஆப்பிள் பழங்களும், பேரிக்காய்களும், இன்னும் பலப்பல விதமான கனிவர்க்கங்களும், திராட்சையும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதற்குரிய ரேக்குகளில் அவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தங்களுடைய பழங்களையும் பொருட்களையும் உங்களை வாங்கச் செய்ய, அவர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு, உங்களை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறார்கள். 116. குறிப்பிட்ட அந்த மேய்ப்பனானவன் நகரின் பிரதான வீதியின் வழியாக அப்பொழுது வந்தபொழுது, நான் அவரிடம், “ சகோதரனே, இதோ இங்கே பரபரப்பான விஷயம் வருகிறது, நான் நின்று கொண்டு அதை கவனிக்கப்போகிறேன்'' என்று கூறினேன். 117. ''நீங்கள் ஆச்சர்யப்படப் போகிறீர்கள், கவனியுங்கள் சகோ. பிரன்ஹாம் அவர்களே'' என்று அந்த சகோதரன் கூறினார். யாவும் நின்றுவிட்டன. மேய்ப்பன் ஆடுகள் எதையும் பற்றி கவனிக்காமல் முன் நடந்து சென்றான். ஆடுகள் அப்படியே சரியாக அவன் பின் சென்றுகொண்டிருந்தன. அவனைப் பின் சென்றன! அவனுடைய ஒவ்வொரு அசைவையும், திரும்புதலையும் பொறுத்து அவைகளும் அவனைப் பின்பற்றி அவ்வாறே செய்தன. ஒவ்வொன்றும் அணி பிசகாமல் சரியாக யாவும் அவனை அப்படியே பின்பற்றின. 118. அந்த விதமாகத்தான் நாமும் பரம மேய்ப்பரைப் பின்பற்றுகிறோம். அது உண்மை. பிரதான வீதியின் நடுமையத்தில் அவ்வாடுகள் தங்கள் மேய்ப்பனை ஒரு நாயைப்போல் பின்பற்றிச் சென்று, மறுமுனையில் ஏதோ ஒன்றைப் பெறுவதற்காக சென்றன. வழியில் சந்தையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கனி வர்க்கங்களையெல்லாம் அவை ஏறெடுத்துப் பார்க்கின்றன, ஆனாலும் தங்கள் மேய்ப்பனையே அவை பின்பற்றிச் சென்றன. ஓ, அது எனக்கு மிகவும் விருப்பம். பாருங்கள்! “ ஓ சகோதரனே, எனக்கு இந்த பாஷையைப் பேச முடிந்தால் நலமாயிருக்கும். அவ்வாறு என்னால் பேச முடிந்தால், இப்பொழுதே பிரசங்கிப்பேன்'' என்று கூறினேன். அவ்வாடுகள் வலது புறமோ அல்லது இடது புறமோ சாயாமல், சரியாக மேய்ப்பனின் பின்னால் அணிவகுத்துச் சென்றன. 119. தான் நடந்து வந்த பாதையிலெல்லாம், இவ்வளவு காலமாக, அவருடைய சபையும், அவ்வாடுகளைப் போலவே, சரியாக, தங்களை நித்திய ஜீவனுக்குள் வழி நடத்துகிற மேய்ப்பரான பரிசுத்த ஆவியானவரை பின்பற்றி, அவர் பின்னால் நிலைத்திருக்கிறது. அவர்கள் கவனத்தை திருப்பத்தக்கதாக, இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும், கவர்ச்சிகரமான ஆடம்பரமான சபைகள் இருந்த போதிலும், இதில் பெரிய வேதபண்டிதர் இருக்கிறார். அதில் அநேக வேதபண்டிதர்கள் இருக்கிறார்கள் என்னப்பட்ட போதிலும், மேய்ப்பனின் பின்னாலேயே அவர்கள் தங்கித்தரித்து இருக்கிறார்கள். மேய்ப்பன் போகிற இடமெல்லாம், ஆடுகள் அவனை பின் செல்லுகின்றன. '...என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது. அவைகள் அன்னியனுக்குப் பின்செல்லுவதில்லை''. அது சரிதான். ஆடுகளை கிரியை செய்யச்செய்யும் ஒலிகளையெல்லாம் அந்த மேய்ப்பன் அறிந்திருக்கிறான். 120. அதன்பிறகு நாங்கள் நகரத்தைவிட்டு வெளியே வந்த பொழுது, அங்கே ஒரு ஆச்சர்யமான காரியத்தை நான் கண்டேன். அங்கே வயல்வெளியில், சில மனிதர்கள் சுற்றி அமர்ந்திருந்தனர். அவர்கள் வசமாக கழுதைகளும், பசுமாடுகளும், பன்றிகளும், ஆடுகளும், வெள்ளாடுகளும் இருந்தன. ''அங்கேயிருக்கிற ஆட்கள் யார்?'' என்று நான் கேட்டேன். “ மேய்ப்பர்கள்'' என்று சொன்னார் என்னுடன் இருந்த அந்த மனிதர். ''ஒரு மேய்ப்பன் கழுதைகளையா மேய்த்துக் கொண்டிருப்பான்?'' என்று நான் கேட்டேன். அவர் சொன்னார், “ ஆம், ஐயா'' என்று. ''மேய்ப்பன் என்றால் ஆடுகளை மேய்ப்பவன் என்றுதான் பொருள் என்று நான் நினைத்திருந்தேனே'' என்றேன். 121. அவர் அதற்கு, “ இல்லை, இங்கு ஒரு மேய்ப்பன் என்னப்பட்டவன் எந்த மந்தையையும் மேய்க்கிறவன், கால்நடைகளை புல்வெளிகளில் மேயவிடுபவன் என்றுதான் பொருள். உங்களுடைய தேசத்தில் இவர்களை கௌபாய் (Cowboy) என்று கூறுகிறார்கள்'' என்று கூறினார். ''ஓ அப்படியா, ஒரு மேய்ப்பன் என்றால் இங்கே மந்தையை மேய்ப்பவன் என்றுதான் பொருளா?'' என்று நான் கூறினேன். ''ஆம்'' என்றார். “ அவன் மந்தையை காத்துக்கொள்கிறான்'' என்றேன். 122. 'அது சரிதான்'' என்றார் அவர். அவர் மேலும், “ ஆச்சரியப் படக்கூடிய வினோதமான காரியம் ஒன்றுண்டு, நீங்கள் ஒரு ஊழியக்காரராக இருக்கிறபடியினால் நான் ஒரு காரியத்தை உங்களுக்குச் சொல்லக்கூடும். இரவு நேரம் வருகையில்... அவைகள் ஒவ்வொன்றையுமே அவன் மேய்த்து, வழிநடத்தி, பகற்காலத்தில் அவைகள் உண்பதற்கு நல்லவைகளைப் பெற்றுக் கொள்ளும்படி அவன் பார்த்துக்கொண்டு, அவ்வாறு அவை களுக்கு அவன் உதவி செய்கிறான், அது உண்மைதான்; ஆனால், இரவு நேரம் வருகையில், அம்மேய்ப்பனிடத்தில் இருக்கிற கோவேறு கழுதைகள், கழுதைகள், ஒட்டகங்கள் மற்றும் வேறு என்னவெல்லாம் கால்நடைகள் அவன் வசமாய் இருக்கின்றனவோ, அவைகளையெல்லாம் வயல்வெளியிலேயே விட்டு விடுகிறான், ஆனால் அவன் ஆடுகளையோ, சுற்றிவளைத்து, அழைத்துக்கொண்டு போய் தொழுவத்துக்குள் சேர்த்துவிடுகிறான்” என்று அவர் கூறினார். 123. "ஓ, கர்த்தாவே, நீர் என்ன செய்தாலும் சரி, என்னை ஒரு ஆடாக ஆக்கும். இரவு நேரம் வருகையில், நான் ஆட்டுத் தொழுவத்திற்குள் போய்விட விரும்புகிறேன்'' என்று நான் கூறினேன். வாசல் வழியாக பிரவேசிக்கவேண்டும், வாசல் வழியாக வரவேண்டும். இயேசு யோவான் 17:7 இல்லை, யோவான் 10:7ல் அவர், “ நானே ஆட்டுத் தொழுவத்திற்கு வாசல்...'' என்று கூறினார். ''எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால் அவன் இரட்சிக்கப்படுவான். அவன் உள்ளும் புறம்பும் சென்று மேய்ச்சலைக் கண்டடைவான்'' என்றார். (யோவான் 10:7-9). 124. “ இப்பொழுது, பிலதெல்பியா சபையின் காலத்திற்கும், லவோதிக்கேயா சபையின் காலத்திற்கும் இடையில் உள்ள இந்த சபைக்கு முன்பாக நான் திறந்த வாசலை வைக்கிறேன்'' என்றார். ஓ, நீங்கள் அதை இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? நீங்கள் இதைப்பற்றி மிகவும் கவனமாய், கருத்தாய் எண்ணிப் பார்க்கிறீர்களா? இப்பொழுது கவனியுங்கள். இது அருமையாயிருக்கிறது. அது கன்மலையின் தேனாக இருக்கிறது. அதிலிருந்து தங்கப் பாளங்களை அது வெளிக்கொணர்ந்து பிரகாசிக்கவைக்கிறது. “ நானே ஆட்டுத்தொழுவத்திற்கு வாசல்''. இப்பொழுது இங்கே வைக்கப்பட்டுள்ள அந்த வாசல் என்ன? 125. நம்முடைய சிந்தையில் நாம் பின்னால் திரும்பிப் போவோம். பரிசுத்தமாகுதலின் செய்தியோடு உலகம் முழுவ திலும் பரவிய மெதோடிஸ்டுகளின் அந்த மகத்தான மிஷனரி காலத்திலிருந்து பார்ப்போம். லூத்தரின் காலம் நீதிமானாகுதல் என்ற செய்தியை பரம்பச் செய்தது. வெஸ்லியோ பரிசுத்தமாகுதல் என்ற செய்தியோடு வந்தார். மெதோடிஸ்டுகளின் காலத்தின் முடிவில் அது வேர் பிடிக்கும்போது, அது பெரிய ஸ்தாபனமாக ஆக ஆரம்பித்தது. எந்தவொரு சபையும் எப்பொழுதாவது... 126. இப்பொழுது, இதை மிகவும் கவனமாகக் கேளுங்கள். இது கருகலானதாக இருக்கிறது. இவ்விஷயத்தைக் குறித்து யாராவது எனக்கு வரலாற்றிலிருந்து சேகரித்துக் கூறுங்கள் பார்க்கலாம். பெந்தெகொஸ்தே வழியில், ஸ்தாபனமாக அமையாமல், தேவனால் எழுப்பப்பட்ட எந்தவொரு சபையும் ஸ்தாபனமாக தன்னை ஆக்கிக்கொண்ட உடனேயே மரித்தது. அது திரும்ப எழுந்திருக்கவேயில்லை. ஓ, உறுப்பினர் எண்ணிக்கை கூடியிருக்கிறது. ஆனால் அது விழுந்து போன நிலையிலிருந்து எழும்பினதாக வரலாறு கிடையாது. லூத்தரால் ஏற்பட்ட எழுப்புதலும், மெதோ டிஸ்டுகளுக்கு ஏற்பட்ட எழுப்புதலும், மீண்டும் ஏற்படவில்லை. ஏன், பெந்தெகோஸ்தேயினருக்கு ஏற்பட்ட எழுப்புதலும்கூட திரும்ப வரப்போகிறதில்லை. இல்லை, ஐயா! ஏனெனில் அவர்கள் யாவரும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு விட்டார்கள். "அக்காரியத்தை அவர் வெறுப்பதாக'' தேவன் சபைக்காலங்களில் கூறியிருக்கிறார். அதுதான் நிக்கொலாய் மதத்தினரின் போதகமாகும். 127. நாம் எவருக்கெதிராகவும் பேசிக்கொண்டிருக்கவில்லை என்பதை இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். தேவனுடைய ஆடுகள் அங்கிருக்கிற அவைகள் யாவிலும்கூட இருக்கின்றன. நல்ல ஜனங்கள் சிதறியிருக்கிறார்கள். அது உண்மைதான். மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், அவர்கள் யாராயிருந்தாலும் சரி, தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்திருந்தால், அவர்கள் தேவனுடைய ஜனங்கள். ஆனால் ஸ்தாபனங்கள் அவர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கின்றன. மெதோடிஸ்டிலிருந்து கடிதம் பெற்றுக்கொண்டு பாப்டிஸ்டுக்கும், அதிலிருந்து கேம்ப்பெல்லிட்டுகளிடமும் போகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு சபையாக தாவிக்கொண்டேயிருக்கிறார்கள். 128. சரி, அந்த சபையின் காலத்தின் முடிவில் கர்த்தர் எவ்வாறு கூறினார்? ''ஆட்டுத்தொழுவத்திற்கு நானே வாசல்'' என்று கூறினார். இயேசுவைப் பற்றிய என்னவிதமான வாசல் இவ்விரு காலங்களுக்கும் நடுவில் திறக்கப்பட்டது? ஏறக்குறைய 1906ம் ஆண்டில், மெதோடிஸ்டுகளின் காலம் மங்கிக்கொண்டே வந்தது. அப்பொழுது ட்வைட் மூடி போன்றவர்கள் வந்துவிட்டு, அவர் களின் ஊழியமும் முடிவுறுகிற கட்டத்தில், மக்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுதலும், அந்நியபாஷைகளில் பேசுதலும் மற்றும் இன்னபிற காரியங்கள் செய்தலும், சபைக்குள் மீண்டும் ஏற்பட்டது. ஏறக்குறைய 1906ம் ஆண்டில் அது சம்பவித்தது. 129. நல்லது, அதற்குப் பிறகு என்ன சம்பவித்தது? அவர்கள் செய்த முதல் காரியம் என்னவெனில், அந்த பழைய ஜெனரல் கவுன்சிலை இப்பொழுது ''அசெம்ப்ளீ ஸ் ஆஃப் காட்'' என்று அழைக்கப்படும் சபை ஸ்தாபனமாக ஸ்தாபித்தார்கள். பாருங்கள், முந்தின காலத்திலிருந்து அடுத்த காலத்திற்குள்ளும் சற்று நீடித்து இருந்து கொண்டிருந்த சபையிலிருந்துதான் இது நடந்தது. அதன்பிறகு என்ன சம்பவித்தது? அவர் ஒரு திறந்த வாசலை வைத்தார். 130. நாம் இப்பொழுது அதை வாசிப்போம். நான் வார்த்தைக்கு வார்த்தை அவர் கொண்டு வருகிறபடியே அதனுடைய வியாக்கியானத்தை பார்க்கிறேன். “ அதை ஒருவனும் பூட்டமாட்டான்'' "...திறந்த வாசலை உனக்கு முன்பாக வைக்கிறேன்...'' 131. இதோ இது மற்ற பக்கத்தில் காணப்படுகிறது. “ உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அதை ஒருவனும் பூட்ட மாட்டான்.” 132. “ ஒரு திறந்த வாசல்'' அது என்னவாக இருக்கிறது- அது தானே இயேசு கிறிஸ்துவின் உன்னத தேவத்துவத்தைப் பற்றிய வெளிப்படுத்துதலாயிருக்கிறது. திரித்துவத்தின் இரண்டாவது ஆள் என்பதாக அல்ல, ஆனால், தேவன் தாமே மாம்சமாகி நம் மத்தியில் வாசம் பண்ணிக்கொண்டிருக்கிறார் என்பதே அவ் வெளிப்பாடாக இருக்கிறது. 133. இதையடுத்துள்ள வசனத்தை நாம் வாசிக்கையில் ஒரு நிமிடம் கவனியுங்கள். "...பூட்டி... உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும்... என் நாமத்தை மறுதலியாமல்...'' 134. நாமத்தை இழந்துபோன அந்த சபைக்காலத்திற்குப் பிறகு, இப்பொழுதுதான் முதன்முறையாக மீண்டும் இச்சபைக் காலத்தில், நாமத்தைக் குறித்து பேசப்பட்டிருக்கிறது. லூத்தரின் காலம் உயிருள்ளவன் என்ற நாமத்தோடு வெளிவந்தது. அது மரித்ததாயிருந்தது. (அது சரிதானே?) “ பிதா குமாரன் பரிசுத்த ஆவி''. இங்கே மீண்டும் இவ்விரண்டு காலங்களுக்கிடையில், இயேசுவின் நாமம் வெளிவருகிறது. இரு காலங்களுக்கிடையில், “ திறந்த வாசல்'' வருகிறது. அவர் என்னவாயிருக்கிறார் என்பதின் வெளிப்பாடாக அது இருக்கிறது. அவருடைய தெய்வீகத் தன்மையைப் பற்றிய வெளிப்பாடு அது. 135. அதைத்தான் அவர் முதலாவது சபைக்காலத்திலேயே வெளிப்படுத்தினார். இப்பொழுது கவனியுங்கள். அவர் ஏழு குத்து விளக்குகளின் மத்தியில் நின்று கொண்டிருப்பதை யோவான் காண்கையில், அவர் தன்னுடைய கைகளை விரித்தவராக நின்று கொண்டு இருக்கிறார். இங்கே முதலாவது குத்துவிளக்கு, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழு ஆகிய இவற்றின் நடுவே இயேசு சிலுவையில் இருப்பது போல் கைகளை விரித்தவாறு நிற்கிறார். அவர் நான் அல்பாவும் ஓமெகாவுமாயிருக்கிறேன்'' என்று கூறினார். அதாவது ''நான் முதலாவதில் உன்னதமானவராயிருப்பது போலவே, கடைசியானதிலும் உன்னதமானவராயிருக்கிறேன்'' என்கிறார். ஒளியானது கிழக்கில் எழும்பி மேற்கில் மறைகிறது. அது இருண்ட அந்தகாரமான நாளாக இருந்திருக்கிறது. ஆனால் சாயங்கால நேரத்திலே வெளிச்சம் உண்டாகும். '' கிழக்கில் ஒரு கையின் பகுதியில் எழும்பிப் பிரகாசித்த அதே சுவிசேஷ வல்லமையானது இப்பொழுது மேற்கில் பிறிதொரு கையின் பகுதியில் பிரகாசித்து, “ நான் அல்பாவும் ஓமெகாவு மாயிருக்கிறேன். "A" யும் நானே, "Z"ம் நானே என்கிறார். அவரது கரத்தில்! நீங்கள் புரிந்துகொண்டீர்களா? 136. வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதிகாரத்தில் அவர் என்ன செய்தார்? முதல் சபையாகிய எபேசுவுக்கு அவர் தன்னுடைய உன்னத தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தினார். அப்படித்தானே? நல்லது, இப்பொழுது கவனியுங்கள். அதை யடுத்து வந்த ஒவ்வொரு சபைக்கும் அவர், மகிமைப்படுத்தப் பட்ட ரூபத்தில், அவருடைய தெய்வீகத் தன்மையை வெளிப் படுத்தினார். ஆனால் இந்த கடைசி சபைக்காலத்தில், அவர் அகர வரிசையில் கடைசி எழுத்தான "Z" ஆகிறார். அது ஆதி நிலைக்குத் திரும்புகிறதாயிருக்கிறது. அவர் 'ஆதியும் அந்தமுமாயிருக் கிறதைப் பாருங்கள். முதலாவது காலம், இப்பொழுது கடைசி காலம். ஏனெனில் அவர் கூறினார், “ நான் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்'' என்று. 137. “ அது எப்படி சம்பவித்தது?'' என்று நீங்கள் கேட்கிறீர்கள். “ எந்த ஆள் அதைச் செய்தது?'' என்று கேட்கிறீர்கள். அது வெளிப்படுத்துதலாயிருக்கிறது. இங்கே உங்களில் அநேகர் அதைப் பெற்றிருக்கிறீர்கள். ஏனெனில் அவருடைய ... இப்பொழுது ஒரு காரியத்தைக் கூறப்போகிறேன். பாருங்கள்! அவருடைய முழுச்சபையும் இயேசுவின் தெய்வீத் தன்மையைப் பற்றிய வெளிப்படுத்துதலின் மேல் கட்டப்பட்டுள்ளது. அது சரிதானே? அதை நீங்கள் விசுவாசிக்காவிடில், நாம் மத்தேயு 16:18ம் வசனத்திற்குப் போவோம். அங்கே நீங்கள், முழு வெளிப்படுத்துதலுமே அவர் மேலயே கட்டப்பட்டுள்ளது என்பதை இன்னும் சிறிது நேரத்தில் காண்பீர்கள். அவரைப் பற்றிய வெளிப்பாட்டின்மேல்தான் அவரது முழுச்சபையும் கட்டப் பட்டுள்ளது. நாம் இப்பொழுது 14ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். “ அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும்...'' இங்கு கேட்கப்பட்ட கேள்வி என்னவெனில், மத்தேயு 16:13ம் வசனத்தில் இயேசு கேட்டார். “ பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லு கிறார்கள் என்று கேட்டார்.'' மத்.16:13 138. இப்பொழுது கவனியுங்கள். இங்கேதான் முதல் முறையாக அவர் சபை என்னும் சொல்லைக் குறிப்பிடுகிறார். அவர் கடைசியாக வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் இந்த சொல்லை உபயோகிக்கிறார். “ அதற்கு அவர்கள் : சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லு கிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார் (அந்த முழு குழுவினரிடமும்). சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக : நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்” மத். 16:14-17. 139. ஓ, என்னே ! “ நீ இதை ஒருபோதும் வேதக்கல்லூரியில் கற்று அறிந்து கொள்ளவில்லை. வேறு எந்த வழியிலும், யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ இதைப் பெற்றுக் கொள்ளவில்லை. நானே அவர் என்ற ஆவிக்குரிய வெளிப்பாடு, பரலோகத்திலிருந்து உனக்கு வெளிப்படுத்தப்பட்டதின் மூலமாகத்தான் நீ பெற்றுக் கொண்டாய்'' என்றார். ''நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்'' என்று இயேசு கூறினார். “ மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை" மத். 16:18 140. அது என்னவாக இருக்கிறது? ஆவிக்குரியது! ஆவிக்குரியது! அது ஆவிக்குரிய சத்தியமாயிருக்கிறது! அது கர்த்தருடைய வார்த்தை ! 141. தேவன் இவ்விரண்டு காலங்களுக்கு இடையில், சபைக்கு இக்கடைசி காலத்தில் அனுப்பிக் கொடுத்துள்ள வெளிப்பாடு, தேவன் தன்னைத்தானே “ திறந்த வாசலாக'' வெளிப்படுத்துவதாகத் தான் இருக்கிறது. அது பிலதெல்பியாவின் காலத்தில் கொடுக்கப்படவில்லை, அல்லது அது லவோதிக்கேயா சபைக் காலத்தில் கொடுக்கப்படவில்லை. அல்லது, பிலதெல்பியா சபையின் காலத்திலும் கொடுக்கப்படவில்லை, ஆனால் இவையிரண்டுக்கும் இடையில் உள்ள (ஒரு சபைக்காலம் முடிவடைந்த பிறகும், அதற்கடுத்த சபைக்காலத்திற்குள் சற்று நீண்டு இருக்கிற அந்தக் காலத்தில்) தான் அது ஏற்பட்டது. இன்னும் சற்று கடந்து போய், நான் உங்களுக்கு அதை நிரூபிப்பேன். அப்பொழுது நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டு காண முடியும். பாருங்கள். நீங்கள் அதைக் காண விரும்பினால், உங்களால் அதைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது என்ற அளவுக்கு சிறப்பாக வளமையாக அதை எடுத்துக் காண்பிப்போம். பாருங்கள். சரி. 142. அவருடைய சபையை அவர் எங்கே கட்டியிருக்கிறார் என்றால், அவரைப் பற்றிய வெளிப்படுத்துதலின் மேல் தான். இப்பொழுது, அது தான் உண்மை என்று எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? அவர் தம்முடைய சபையை தன்னைப்பற்றிய வெளிப்பாட்டின் மேல் கட்டியிருக்கிறார். நல்லது, இப்பொழுது அவர் என்ன கூறுகிறார்? “ ஒருவனும் பூட்டக்கூடாதபடிக்கு''. “ உன்னுடைய கிரியைகளை அறிந்திருக்கிறேன்.... இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்...'' வெளி.3:8 143. ''திறந்த வாசல்'' என்பது என்ன? இயேசுகிறிஸ்துவின் உன்னத தெய்வீகத் தன்மையைப் பற்றிய வெளிப்படுத்துதலாக அது இருக்கிறது. அவர் தன்னுடைய முதல் சபைக்கு, அதின் காலத்தில் என்ன கூறினார்? “ இருக்கிறவரும், இருந்தவரும், வருகிறவருமானவர் நானே! முந்தினவரும் பிந்தினவருமாகியவர் நானே! சர்வ வல்லமையுள்ளவர் நானே!'' என்று கூறினார். அதை அவர் மூன்று வெவ்வேறு சமயங்களில் கூறியிருக்கிறார். இந்த முதல் சபைக்கு இங்கே அவர் தன்னுடைய தெய்வீகத் தன்மையைப் பற்றி வெளிப்படுத்தினார். கடைசி சபைக் காலத்திற்குள் போகும் முன்னர் அவர், ''திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்'' என்று கூறினார். வெளிப்படுத்தலை நீங்கள் காண விரும்பினால் இது இங்கேதான் உள்ளது. சபையை அவர் அதின்மேல் கட்டுவார். அவர் தன்னுடைய சபையை எடுத்துக் கொள்வதற்குரிய ஒரே வழி, அதை திரும்ப, தாம் யார் என்பதைப் பற்றிய வெளிப்படுத்துதலுக்கு கொண்டு செல்லுவதேயாகும். உண்மையாக அப்படித்தான்! 144. கவனியுங்கள்! ஆபிரகாம் தேவனோடு உடன்படிக்கை செய்தபொழுது, அல்ல, தேவன் ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்தபொழுது, அந்நாளில் அவன், “ இக்காரியங்கள் எப்படியாகும்? நான் வயது முதிர்ந்தவனாயிருக்கிறேனே? இதோ, இந்த என்னுடைய ஊழியக்காரனாகிய தமஸ்கு ஊரானாகிய எலியேசர் தான் என்னுடைய வாரிசாக இருக்கிறான். எனக்கு வயதாகி விட்டது. நீர் எனக்கு ஒரு குழந்தையை தருவதாக வாக்களித்துள்ளீரே, அதை நீர் எவ்வாறு செய்வீர்? அது எவ்வாறு செய்யப்படும்?'' என்று கேட்கிறான். 145. அவனுக்கு ஆழ்ந்த நித்திரை ஏற்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படுவதுபோல் அயர்ந்த நித்திரை அவனுக்கு உண்டாயிற்று. அது மரணம். அப்பொழுது சூளையின் புகை அங்கு உண்டானதை அவன் கவனித்தான். ஒவ்வொரு பாவியும் பாதாளத்திற்குப் போவதற்கு பாத்திரவானவனாக இருக்கிறான். அவன் ஒரு மிருகத்தை, அதாவது கிடாரியைக் கொன்றான். ஒரு பெண் வெள்ளாட்டையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப் புறாவையும், ஒரு புறாக் குஞ்சையும் அவன் பலி செலுத்தியிருந்தான். அவன் காட்டுப் புறாவையும் புறாக்குஞ்சையும் வெவ்வேறாகக் பிரிக்கவில்லை. அங்கே அப்பொழுது, இந்த சிறிய வெண்ணொளி முன்னும் பின்னும், துண்டிக்கப்பட்ட மிருகங்களின் துண்டங்களின் நடுவே, ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, கடந்து சென்றது. 146. ஜப்பானில் ஒரு உடன்படிக்கையை அவர்கள் செய்யும் பொழுது, எவ்வாறு அதைச் செய்வார்கள் என்பதை, ஜப்பானியர் யாராவது இங்கிருந்தால் அதை அறிந்திருப்பார். அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் உப்பை எறிந்துகொள்வர். ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் உப்பை வைத்துக்கொண்டு, அவர்கள் ஒருவர் இன்னொருவரை நோக்கி, ''நீ இன்னின்னதைச் செய்ய ஒப்புக் கொள்கிறாயா?'' என்று கேட்க, மற்றவர் பிரதியுத்தரமாக, “ ஆம், நான் இன்னின்னதைச் செய்வேன்'' என்று கூறுவார். இவ்வாறு அவர்கள் ஒரு உடன்படிக்கையைச் செய்து கொள்ளுவார்கள். அப்பொழுது அவர்கள் கொஞ்சம் உப்பை ஒருவர்மேல் ஒருவர் எறிந்து கொள்வார்கள். ஏனெனில் உப்பானது பத்திரப்படுத்தும் வஸ்துவாக இருக்கிறது, பாருங்கள், நல்லது, அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் பரஸ்பரம் உப்பை எறிந்து கொள்வது ஒரு உடன்படிக்கையைக் குறித்துக் காட்டுவதாக இருக்கிறது. 147. இங்கு அமெரிக்காவில் நாம் ஒரு உடன்படிக்கையை எவ்வாறு செய்கிறோம்? நாம், “ நல்லது, நீ இந்தக் குறிப்பிட்ட காரியத்தைச் செய்வாயா?'' என்று கேட்க, மற்றவர் “ நான் இன்ன காரியத்தைச் செய்வேன்'' என்று கூறுகிறார். அவ்வாறு உடன்படிக்கை செய்து கொண்டதற்கு அடையாளமாக நாம் கை குலுக்கிக் கொள்ளுகிறோம். அவ்வுடன்படிக்கையின் பேரில் கைகுலுக்கிக் கொள்ளுதல். அதுவே ஒரு உடன்படிக்கையா யிருக்கிறது. 148. ஆனால் கிழக்கத்திய தேசங்களில், அவர்கள் உடன்படிக்கை செய்யும் விதமானது எவ்வாறு உள்ளதென்றால்: அவர்கள் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டு மென்றால், அவ்வுடன் படிக்கையை எழுதிக்கொண்டு, ஒரு மிருகத்தைப் பலியிட்டார்கள். ஆபிரகாமின் காலத்தில் இவ்வாறு இருந்திருக்கிறது. அவர்கள் அம்மிருகத்தை வெட்டிப் பிளந்து, அதன் நடுவில் நிற்பார்கள். ஒப்பந்தத்தை எழுதிக்கொண்டு, அவ்வொப்பந்தம் எழுதப்பட்ட பத்திரத்தை இரு கூறாக கிழித்துவிடுவார்கள். ஒருவர் ஒரு துண்டையும், மற்றவர் மற்ற துண்டையும் எடுத்துக்கொள்வர். அதன்பிறகு அவர்கள், “ இவ்வொப்பந்தத்தை சம்மந்தப் பட்டவர்கள் முறித்துப் போட்டால், அப்பொழுது, பிளக்கப்பட்ட இந்த மரித்த மிருகத்தின் உடல்களைப்போல் அவர்கள் ஆகக்கடவர்கள்'' என்று சத்தியம் செய்து கொள்ளுவார்கள். இந்த ஒப்பந்தத்திற்கு நகல் எடுத்துக்கொண்டு எதுவும் செய்யமுடியாது. இரு கூறாகக் கிழிக்கப்பட்ட இரு துண்டுகளைத்தான் மீண்டும் சரியாக ஒன்று சேர்க்கவேண்டும். அதைத்தவிர வேறு வழியில்லை. 149. ஆபிரகாமுக்கு தேவன் என்ன காண்பித்தார்? அவர் என்ன செய்யப்போகிறதாகக் காண்பித்தார்? ஈசாக்கு வழியாக வந்த ஆபிரகாமின் சந்ததியான இயேசுவை அவர் எடுத்து, அவரைக் கல்வாரி சிலுவையில் வைத்து, அங்கே அவரைக் கிழித்து, அவருடைய சரீரத்திலிருந்து ஆவியை கிழித்து எடுத்துவிடப் போவதாகவும், அவருடைய சரீரத்தை உயிர்த்தெழச்செய்து உன்னதமானவருடைய வலது கரத்திற்கு அவரை உயர்த்தி அமரச் செய்து, பரிசுத்த ஆவியை சபையின்மேல் திரும்ப அனுப்பப் போவதாகவும் ஆபிரகாமுக்கு தேவன் காண்பித்தார். அதுவே, இருகூறாகக் கிழிக்கப்பட்ட தேவனுடைய உடன்படிக்கையாக இருக்கிறது. நமக்கு ஆவி கிடைத்திருக்கிறது, அவரிடத்தில் சரீரம் உள்ளது. இரண்டும் ஒன்றாக திரும்பச் சேரும்பொழுது, நம்மில் இருக்கும் ஆவியானது அவரோடு மணவாட்டியாக ஒன்று சேர்ந்துவிடும். ஆமென். எந்தவொரு ஸ்தாபனமும் அதனோடு பிணைக்கப்படவே முடியாது. இல்லை, ஐயா. அது கலப்பட மில்லாத, சுத்தமான, பரிசுத்த ஆவியின் பிறப்பினால் பிறந்ததாக இருக்கிறது. அவ்வளவுதான். அதுவே உடன்படிக்கை. 150. “ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்'' என்று அவர் கூறியதை நாம் கண்டோம். எத்தனை வித விதமான, மனிதனால் உண்டாக்கப்பட்ட சங்கங்கள், அல்லது ஸ்தாபனங்கள் தோன்றினாலும் எனக்கு அதைப்பற்றி கவலையில்லை, பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை. நீங்களாக அதை சேர்ந்துகொள்ள முடியாது, நீங்கள் அதற்குள்ளாக பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். உண்மை! இயேசுகிறிஸ்துவின் உன்னத தெய்வீகத் தன்மையைப் பற்றிய வெளிப்பாட்டையும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உள்ள ஞானஸ்நானத்தையும் பற்றிய செய்தியை எவரும் தடுத்து நிறுத்தமுடியாது. பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை. 151. "அது சரியானதுதான் என்று நீங்கள் எப்படி அறிவீர்கள்?'' என்று நீங்கள் கேட்கலாம். அது சரியாக வார்த்தையோடு பொருந் தினதாக இருக்கிறது. அதைப்பற்றி எவரும் எதுவும் பழுது சொல்ல முடியாது. மிகவும் சரியானபடி தேவனுடைய வார்த்தையாக அது இருக்கிறது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் எவரும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதாக வேதத்தில் ஒரு இடத்திலும் காணப்படவில்லை. 152. எபேசு சபைக் காலத்து தூதனாக விளங்கிய இந்த மகத்தான பரிசுத்த பவுல், ஞானஸ்நானம் எடுக்காத எந்த நபரும், அல்லது வேறு எந்தவிதமாக ஏற்கனவே எவரொருவர் ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும் சரி, அப்படிப்பட்ட நபருங்கூட, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிருக்காவிடில், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மீண்டும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படி கட்டளையிட்டான். “ வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறு எதையாகிலும் பிரசங்கித்தால், அவன் சபிக்கப் பட்டவனாயிருக்கக்கடவன்'' என்று பவுல் கூறினான். 153. எனவே, இக்கடைசி நாட்களில் வரும் தூதனானவன் எந்தவிதமான செய்தியைக் கொண்டு வருவான் என்பதை நீங்கள் காணமுடியும். நாம் ஒருவேளை அத்தூதனுக்கு நேராக நடத்தப்பட்டுக் கொண்டிருக்கக்கூடும். ஆனால் அத்தூதன் வருகையில், அவன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உள்ள ஞானஸ்நானத்தைக் குறித்து பிரசங்கிப்பான் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் விசுவாசிக்காவிடில், நாளை இரவு நீங்கள் வந்தீர்களென்றால், நான் வேதவாக்கியங்களிலிருந்து அதை நிரூபித்துக் காண்பிப்பேன். அவன் நிச்சயமாக அவ்வாறே செய்வான். பெந்தெகொஸ்தே நாளில் நடந்தது போலவே, இப்பொழுதும், இருதயம் விருத்தசேதனம் பெறுதலும், தெய்வீக அற்புதங்களையும், வல்லமையானவைகளையும் நடப்பித்தலும் உண்டாயிருக்கும். பெந்தெகொஸ்தேயின் அதே மூல ஆசீர்வாதம் இக்காலத்தில் இருக்கிற மீதியாயிருப்பவர்களிடத்தில் திரும்பி வந்து அவர்களை மேலே கொண்டு செல்லும். முதல் வழியில் உடன்படிக்கையானது ஏற்பட்டவண்ணமாக சரியாக அதேபோல் இந்தக் காலத்திலும் இருகூறாகப் பிளந்த உடன்படிக்கையானது உண்டாயிருக்கும். ஓ, நான் அவரை நேசிக்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியா யிருக்கிறேன். இன்னும் வலுவாக இதை விவரிக்க என்னால் இயலவில்லை. அவர்களில் நானும் ஒருவன் என்று கூறிட மகிழ்ச்சி யாயிருக்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். 154. என்னுடைய சகோதரர் யாவரும் அவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க நான் விரும்புகிறேன். இந்த மகத்தான காரியத்தை உலகெங்கிலும் உள்ள என்னுடைய சகோதர, சகோதரிகள் யாவரும், என்னுடைய விலையேறப்பெற்ற சிநேகிதர் யாவரும், கண்டு கொள்ளவேண்டுமென்று நான் வாஞ்சிக்கிறேன். நான் இன்றிரவே... சித்தமாயிருக்கிறேன். தேவன் அதை அறிவார். எனக்கு சிறிய மகன் ஜோசப் இருக்கிறான். அவனை வளர்த்து ஆளாக்கவேண்டும், மகள்கள் சாராளும் ரெபெக்காளும் இருக்கிறார்கள், எனது இனிய மனைவியும் இருக்கிறாள். இவர்களையெல்லாம் விட்டுப்பிரிய நான் விரும்பவில்லை. ஆனால் உலகிலுள்ள நான் அறிந்திருக்கிற எனது சகோதரர்கள் அதை விசுவாசித்து, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருத்தல் முடிந்துவிட்டால், அப்பொழுது, நான் இவ்வுலகைவிட்டுப்போக ஆயத்தமாகிவிடு வேன். அது முற்றிலும் உண்மை . பாருங்கள், ஓ, எனக்கு இயலுமென்றால்.... நீங்கள் மிருதுவாகப் பேசினால், அவர்கள் மேல் நாம் எதையோ தந்திரமாய் புகுத்திவிட முயலுகிறோம் என்பதைப்போல் சிலர் எண்ணிவிடுகிறார்கள். வார்த்தையோடு சரியாக நிலைத்திருந்து, அதை ஆணித்தரமாக உறுதியான முறையில் பதியவைப்பதுதான் சரியான வழியாக உள்ளது. அதுதான் சரியாக இருக்கிறது. வார்த்தையோடு சரியாக நிலைத்திருங்கள். ஓ, நான் எவ்வளவாய் அவரை நேசிக்கிறேன்! 155.அவரைப்பற்றிய, அவரது உன்னத தெய்வீகத் தன்மையைப் பற்றிய ஒரு வெளிப்பாடு. என்ன, அவர் அதைச் செய்தாரா? அதை விட்டுவிட என்னால் முடியவில்லை. அதை அவர் எபேசு சபையின் காலத்திலே வெளிப்படுத்தினார். அது சரிதானே? அப்பொழுது தான் ஒளியானது, அதாவது கிறிஸ்தவ ஒளியானது, முதன் முதலாக துளிர்விட்டு பிரகாசிக்கத் தொடங்கியது. அது சரிதானே? பரிசுத்த ஆவியின் யுகம், சரியாக இங்கே எபேசுவிலே துவங்கிற்று. 156. “ ஒரு நாளுண்டு, அது பகலுமல்ல இரவுமல்ல, ஆனால் சாயங்கால நேரத்திலே வெளிச்சம் மீண்டும் உண்டாகும்'' என்று தீர்க்கதரிசி கூறியிருக்கிறான். அதை நீங்கள் கண்டு கொண்டீர்களா? ஆனால், பாருங்கள், இந்த அந்தகார நாளானது அங்கிருந்து வருகிறது, ஸ்தாபனங்கள் மற்றும் யாவும் இங்கே அந்தகாரமுள்ளதா யிருக்கிறது. ஆனால் இந்தக் கடைசி நாட்களில் இங்கே அவர் திறந்த வாசலை வைக்கிறார். இயேசு, “ நானே வாசல்'' என்று கூறினார். 157.“ நானே வாசல், நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்'' என்று அவர் கூறியதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? தண்ணீரே வாசலாகவும், வழி நெருக்கமுமாயிருக்கிறது'' (மத்.7:14). (தமிழ் வேதாகமத்தில் ''...வாசல் இடுக்கமும்...'' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கில வேதாகமத்திலோ ''...தண்ணீரே வாசலாயிருக்கிறது...'' என்று கூறப் பட்டுள்ளது. Strait is the gate" - மொழிபெயர்ப்பாளர்). அங்கே Strait என்ற வார்த்தை எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பார்த்தீர்களா? Strait என்றால் தண்ணீ ர் என்று பொருள். Straight என்றல்ல. தண்ணீரே வழியாயிருக்கிறது. தண்ணீரே வாசலாகவும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. எது அந்த தண்ணீர்? அதுதான் கதவு, அதுதான் அந்த வாசல். பாருங்கள்? அதை எப்படித் திறப்பது? “ கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் தண்ணீரின் மூலமாக'' அவ்வழியுள்ளது. தண்ணீரே வாசலாயிருக்கிறது. வழி நெருக்கமுமாயிருக்கிறது. இயேசு.... ''தண்ணீரே கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் பிரவேசிப்பதற்கென வாசலாய் இருக்கிறது''. 158. “ நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக் கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது கல்வாரியை நீங்கள் நோக்கிப் பார்க்கையில், பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும்... உண்டாயிருக்கிறது''. சிலர் அவ்வாக்குத்தத்தம் அப்போஸ்தலருக்கு மட்டுமே உரியது என்று கூறுகிறார்கள். “ வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது''. “ நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' ஆகவே, உங்களின் பரிகாரத்திற்காக எழுதப்பட்டுள்ள அச்சீட்டின்படி அதே வழியில் நீங்கள் வந்தால், வாக்குத்தத்தமானது உங்கள் ஒவ்வொருவருக்கும் உரியதாக இருக்கும். அது சரிதான். 159. “ நான் வேறு ஏதாவது வழியில் உள்ளே நுழைந்து விடுவேன்'' என்று சொல்லாதீர்கள். 160. ஒரு சமயம் வேறு வழியாக உள்ளே நுழைந்துவிட்ட ஒரு மனிதனைப்பற்றி நீங்கள் அறிவீர்கள். அதை நீங்கள் அறிவீர்களா? அதைப்பற்றி எழுதப்பட்டுள்ள உவமையை நீங்கள் எப்பொழு தாவது வாசித்திருக்கிறீர்களா? உள்ளே வேறு வழியாக நுழைந்து விட்ட மனிதனொருவன் அங்கே இருந்தான். கிழக்கத்திய தேசத்தில், அவர்கள் கலியாண விருந்துக்குப் போகும்போது... நாம் இதைப்பற்றி நாளை காலை பார்ப்போம். அக்கலியாண விருந்தில் அம்மனிதன் எவ்வாறு உள்ளே நுழைந்தான் என்பதைப் பார்ப்போம். நாளைக் காலையில் நாம் அதை எடுத்துக்கொள்வோம். நான் அதைப்பற்றி இப்பொழுது பேசலாம் என்று இருந்தேன். ஆனால் இப்பொழுது வேண்டாம். அக்கலியாண விருந்துக்கு அம்மனிதன் எவ்வாறு உள்ளே நுழைந்தான் என்பதைப் பற்றி நாளைக் காலையில் பார்ப்போம். 161. நல்லது, "தண்ணீரே வாசலாயிருக்கிறது. வழி இடுக்கமாயிருக்கிறது''. தண்ணீரே வாசலாயிருக்கிறது, தேவனாகிய கர்த்தரிடம் பிரவேசிப்பதற்கு அதுவே நுழைவு வாசலாக இருக்கிறது. 162. ''நான் திறந்த வாசலை வைத்திருக்கிறேன். என்னிடத்தில் திறவு கோல்கள் உள்ளன. நான் ஒருவர்தான் அதை திறக்க முடியும். நான் தான் அதை வெளிப்படுத்திக்கொடுக்கமுடியும். என்னிடத்தில் திறவுகோல்கள் உள்ளன'' என்று இயேசு கூறுகிறார். அது சரிதானே? “ என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். என் பிதா எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்''. எந்த சபையின் மூலமாயுமல்ல, எந்த ஸ்தாபனத்தின் மூலமாயு மல்ல; எந்த அத்தியட்சகரோ, போப்போ ஆகியோர் மூலமாயுமல்ல. இயேசுகிறிஸ்துவின் மூலமாக மட்டுமே ஒருவன் இரட்சிப்படைய முடியும். அவரிடம் திறவுகோல்கள் உள்ளன. அவரால் மாத்திரமே இயலும். எதற்குரிய திறவுகோல் அவரிடம் உள்ளது? தாவீதின் திறவு கோல். எதிர்வரும் ஆயிர வருட அரசாட்சியில், அவர் தாவீதின் சிங்காசனத்தில் அமருவார். ''என்னிடம் தாவீதின் திறவுகோல் உள்ளது. நான் கதவைத் திறப்பேன். ஒருவனும் அதை பூட்டமுடியாது. என்னையன்றி ஒருவனும் அதைத் திறக்கமுடியாது. ஒருவனும் எனக்கு அதைப்பூட்ட முடியாது''. 163. அது எவ்வாறு இயலும்? அவர் தாமே தன்னை ஒருவனுக்கு கிறிஸ்து என்று வெளிப்படுத்தும் வரைக்கிலும், எப்படி ஒருவன் அவரைப்பற்றி அவ்விதமாக அறிந்துகொள்ளமுடியும்? பாருங்கள், அவர் தம்மைத் தாமே வெளிப்படுத்துகிறார், அவரிடமே திறவுகோல் உள்ளது. அவரால் தான் அதைத் திறக்க இயலும். அல்லது திறக்காமல் விட்டு விடவும் இயலும். பாருங்கள்? "வாசலுக்குரிய திறவுகோலை நானே உடையவராயிருக்கிறேன். நானே வாசல். நானே வழி. நானே சத்தியமாயிருக்கிறேன். நானே ஒளியாயிருக்கிறேன்.'' ''ஓ! நானே அல்பாவும் ஓமெகாவுமா யிருக்கிறேன். நானே முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நானே பிதாவும், நானே குமாரனும், நானே பரிசுத்த ஆவியுமாயிருக்கிறேன்.'' இருந்தேன் என்றல்ல, இருப்பேன் என்றும் அல்ல, இருக்கிறவராக இருக்கிறேன் என்பதாகத்தான் முழுவதும் அவர் இருக்கிறார். இருக்கிறேன் என்றால், நித்தியமாக ஜீவிக்கிறவர் என்று பொருள். இருக்கிறவராக இருக்கிறேன் என்பதைப் பாருங்கள். கடந்த காலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி, நிகழ்காலத்தில் இப்பொழுது இருக்கிறவராக இருக்கிறது போலவே அவர் எப்பொழுதும் இருக்கிறார். அவர் இருக்கிறேன்'' என்பதாகத்தான் இருக்கிறார். 164. இராஜ்யத்திற்கான தாவீதின் திறவுகோலை அவர் உடையவ ராயிருக்கிறார். ஒருவனும் அதைப்பூட்ட முடியாது. 7ம் வசனம் அது சரியென்று நிரூபிக்கிறது. ஒருவரும் பூட்டக்கூடாதபடி அவர் தாவீதின் திறவுகோலையுடையவராயிருக்கிறார் என்பதை அது நிரூபிக்கிறது. 165. அடுத்து என்ன உள்ளது என்பதைப் பற்றி விரைவாகப் பார்ப்போம். "...உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும்...” வெளி.3:8 166. ஓ, இச்சபைக் காலத்திலுள்ள அந்த சிறிய குழுவினருக்கு அவர், “ உனக்கு சிறிதளவே பெலன் இப்பொழுது இருக்கிறது'' என்று கூறினார். அதன் அர்த்தம் என்ன? மரித்துப்போன மனிதன், கொஞ்சம் அசைந்து கொடுத்து, மெதுவாக உயிரடைந்து, சிறிது புத்துணர்ச்சி பெற்று, மெல்ல அசைந்தாடி, நடக்க ஆரம்பிப்பது போல் உள்ளது. ''உனக்குக் கொஞ்சம் பெலன் உள்ளது. நான் உனக்கு முன்பாக இப்பொழுது திறந்த வாசலை வைத்துள்ளேன்'' என்று கூறுகிறார். அவர்கள் போப்புமார்க்கக் கொள்கைகளையும், லூத்தரன் சபைக்கொள்கைகளையும் விட்டு, மற்றும் ஏனைய கொள்கைகளையும் மெதோடிஸ்ட்டு கொள்கைகளையும் விட்டு வெளியே வந்தபிறகு, அவர் அவர்களிடம், “ நான் உனக்கு முன்பாக திறந்தவாசலை வைத்துள்ளேன். உனக்கு சிறிதளவே பெலன் இருக்கிறது. அதைப்பற்றி நீ என்ன செய்யப்போகிறாய்? அது உனக்கு முன்பாக திறவுண்டு வைக்கப்பட்டிருக்கிறது, நீ விரும்புகிறதற்கேற்றவாறு, அதனுள்ளே அல்லது வெளியே நடந்து செல்லலாம், இவ்விரண்டில் ஏதாவதொன்றைச் செய்யலாம். வாசலானது உனக்கு முன்பாக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. உனக்குக் கொஞ்சமாக பெலன்தான் உள்ளது. இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சம் ஜீவனை அடைந்து கொண்டிருக்கிறாய், நீ உள்ளே வந்துவிட்டாய்'' என்றெல்லாம் கூறுகிறார். 167. எனவே, இவ்வாறாக ஆதி சபையோடு காரியமானது இருந்தது. லவோதிக்கேயா சபையின் காலத்தின் இறுதிக் கட்டத்தை நீங்கள் கவனித்தால், அது மீண்டும் கிரியைகளைச் சார்ந்து கொள்ளுதலைக் கவனியுங்கள். லவோதிக்கேயா சபையின் காலத்திற்குள் நீங்கள் போகும் பொழுது, ''உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்'' என்று கூறுகிறார். அதை லவோதிக்கேயா சபையின் காலத்தினுடைய இறுதி கட்டத்தில் அவர் கூறுகிறார். அது என்ன? ''உன்னுடைய கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் இருக்கிறதையும்''. சாத்தானுடைய சிங்காசனமானது என்ன? பாருங்கள், அவர்கள் மீண்டும் ஸ்தாபனமாக ஆனார்கள். 168. அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் சபையினரே, பெந்தெகொஸ்தே ஒருத்துவக்காரர்களே, மற்றும் தேவ சபைக்காரர்களே, நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் காணவில்லையா? தேவன் வெறுத்த, சகோதரத்துவத்தை உடைத்துப்போட்ட காரியத்திற்குள் நீங்கள் நேராக திரும்பிச் சென்றீர்களே. அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் சபைக்காரர்களைப் பாருங்கள், அதில் உலகத்திலேயே அருமையான மக்கள் உள்ளனர். யுனைடெட் பெந்தெகொஸ்தே சபையினரைப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இதுவரை சந்தித் திருக்க முடியாத அருமையானவர்கள் அதிலும் இருக்கிறார்கள். தேவ சபைக்காரர்களைப் பாருங்கள். அவர்களுடைய அந்த ஸ்தாபனங்களினிமித்தமாக, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, பரஸ்பரம் பிகு பண்ணிக்கொண்டு, ஒருவருக்கொருவர் கூச்சலிட்டுக் கொண்டு, ''பருந்துக்கூடு'' என்றும், ''எலிவளை'' என்றும் ஏசிக்கொள்கிறார்கள். ஏன், இது அவமானகரமானதாக இருக்கிறது. 169. சகோதரருக்கு இடையில் விரோதத்தை உண்டு பண்ணுதலை தேவன் வெறுக்கிறார். ஸ்தாபனங்கள்தான் அதைச் செய்கிறது, அது சகோதரருக்கு நடுவே விரோதத்தை உண்டு பண்ணுகிறது. நாம் இடைவெளியில் நின்று, “ நாம் சகோதரர்கள்'' என்று கூற வேண்டும். நாம் பிரிந்திருக்கவில்லை நாம் யாவரும் ஒரே சரீரம் நம்பிக்கையிலும், உபதேசத்திலும் நாம் ஒன்றாகவே யிருக்கிறோம். (வேதத்தின் உபதேசத்தில்) அன்பிலும் ஒன்றாகவேயிருக்கிறோம். 170. “ முன்செல்லுவீர் கிறிஸ்துவின் வீரரே'' என்ற பழைய பாடலை நான் விரும்புகிறேன். ஆம் ஐயா. 171. லவோதிக்கேயர்கள் இறுதியில் கிரியைகளுக்குத் திரும்பிச் சென்றனர். அதாவது பெந்தெகொஸ்தே ஸ்தாபனங்கள், ஒரு ஸ்தாபனமாக ஆகிட திரும்பிச் சென்றனர். 15ம் வசனத்தை எடுத்துக்கொள்வோம். வெளிப்படுத்தின விசேஷம் 3ம் அதிகாரம் 15ம் வசனம். அங்கே அது சரியாக இருக்கிறதா இல்லையா என்பதைப் பாருங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 3ம் அதிகாரம்... நான் அவ்வசனத்தை சரியாக குறித்து வைத்துள்ளேனா என்று பார்ப்போம். ஓ, இல்லை, இல்லை, நான் தவறு. வசனம் 15. அவ்வதிகாரத்தின் 15ம் வசனம்தான். அதே காரியத்தையே அது காட்டுகிறது. "உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல, அனலுமல்ல,..." 172. “ உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்”. அவர்கள் தங்கள் பழைய நிலைக்கே திரும்பிவிட்டார்கள் என்பதைத்தான் அது காட்டுகிறது. தங்களுக்கிருந்த பெலத்தோடு, அவர்கள் பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்திற்குள் போய்விட்டார்கள். அதே அதிகாரத்தின் 15ம் வசனம். சரி. 173. இரு சபைக்காலங்களுக்கும் இடையில் அவர்களுக்கு சிறிதளவு பெலன் இருந்தது. இரண்டு மதஸ்தாபன நிக்கொலாய் மதத்தினரின் போதகத்தின் காலத்திற்கு இடையில் அவ்வா றிருந்தது. இங்கே இந்த லூத்தரன்கள் உருவாகி வந்தபொழுது, அவர்கள் மீண்டும் குருக்களாட்சித் தத்துவத்தைக் கொண்டிருக்கும் நிக்கொலாய் மதத்தினரின் போதகத்திற்கே திரும்பிச் சென்றனர். அதன்பிறகு வெஸ்லி வந்தார், அவர்கள் ஸ்தாபித்து, கேண்டர் பரியிலுள்ள ஆர்ச்பிஷப் (தலைமை அத்தியட்சகர்) பதவியை உண்டாக்கிக்கொண்டு, சபைகளில் பெரிய பீடங்களையெல்லாம் ஏற்படுத்தி, அவர்களும் அவ்வாறே ஆகினர். அதற்கடுத்து வந்த பெந்தெகொஸ்தேயினர் காலத்தில், அவர்களும் அப்படியே மீண்டும், அவ்விதமான காரியத்திற்குள் திரும்பிச் சென்று, நிக்கொலாய் மதத்தினரின் போதகப்படியான அவர்களுடைய பெரிய பெரிய ஸ்தாபனங்களை உண்டாக்கிக்கொண்டார்கள். ஆனால் இவ்விரண்டு காலங்களுக்கும் இடையில், அவர் வாசலைத் திறந்து, சபைக்கு பெலன் ஈந்து, அது தலையை அசைத்துக்கொள் ளும்படி போதுமான உயிர்ப்பித்தலை அதற்குக் கொடுத்து, வெளியே எட்டிப்பார்த்து, அது, தான் எங்கேயிருக்கிறோம் என்று பார்த்துக்கொள்ளும்படி அதற்கு வெளிப்படுத்துதலைக் கொடுத்தார். ஒரு ஜந்துவை அடித்து அல்லது சுட்டு நாம் கீழே தள்ளிவிட்டால், முதலாவதாக அது செய்வதென்னவெனில், தலையை அசைத்து, நிமிர்ந்து சுற்றுமுற்றும் திரும்பிப்பார்க்கிறது. 174. நான் கடந்த இரவில் அதைப்பற்றி ஒரு சொப்பனங் கண்டேன். சார்லி! நான் ஒரு அணிலைச் சுட்டேன் என்று நினைக்கிறேன். நான் அதை அதினுடைய காலில் சுட்டேன். அப்பொழுது அங்கே ஒரு வயதான ஸ்திரீ இருக்கிறதைப் பார்த்தேன். ஓ, அவள் என் மேல் கடுங்கோபங்கொண்டு, என்னைப்பிடிக்க வருவதற்கு இருந்தாள். இந்த சிறிய அணில் தன் கழுத்தைச் சுற்றி ஒரு வெள்ளை நிற வளையத்தை உடையதாயிருந்தது; அது அங்கே விழுந்து கிடந்து கொண்டு, தன் தலையை இரண்டு மூன்று தடவைகள் அசைத்து என்னை நோக்கிப் பார்த்துவிட்டு, இயன்ற அளவு விரைவாக காட்டுக்குள் திரும்ப ஓடிவிட்டது. 175. அந்த வயதான ஸ்திரீ ஒருவேளை சபையைக் குறிக்கக் கூடும். அப்படி ஒருவேளை இருக்கலாம அல்லவா? அவள் என்னை மிதித்துக் கொன்றுவிடலாம் என்று முயற்சித்தாள். எப்படியோ அவளிடமிருந்து நான் தப்பித்துக்கொண்டுவிட்டேன். ஆனால் ஒரு சிறிதளவே ஒளி உண்டாயிருந்தாலும், தெருவுக்கு வழியைக் கண்டுபிடித்துக்கொண்டு போவதற்குப் போதுமானதாக இருந்தது. அவள் என்னை வெட்டி வீழ்த்திவிடலாம் என்றிருந்தாள். நான் உடனே எனது ஃபோர்ட் மோட்டார் வாகனத்தை விரைவாகத் திருப்பி ஓட்டிச் சென்றேன். எனக்குப் பின்னால் அவர்கள் பாதையை வெட்டிக் கொண்டிருந்தார்கள். வேறு வழியாக நான் திருப்பிக்கொண்டு, அவள் என்னைப் பிடிக்காதபடிக்கு, தப்பிச் சென்றேன். பாருங்கள், நான் பிடிபடாமல் தப்பித்துக் கொண்டேன். 176. உன்னிடம் கொஞ்சம் பெலன் மீதியாக விடப்பட்டுள்ளது. அதைக்கொண்டு, நீ இந்த இரு ஸ்தாபனங்களுக்கு நடுவில் அவைகளுக்கெதிரான நேர் எதிர்த்திசையில் திரும்புவதற்காக அதை உபயோகிக்க நீ விரும்புகிறாய். “ என் வசனத்தைக் கைக்கொண்டாய்'' என்று அவர் கூறுகிற வார்த்தையைக் கவனித்தீர்களா? அடுத்த வசனத்தை இப்பொழுது கவனிப்போம். "...உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும்... என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே...” வெளி. 3:8 177. “ என் வசனத்தை கைக்கொண்டபடியினாலே" இப்படியாகத் தான் அவர்கள் தங்களுடைய பெலனைப் பெற்றுக்கொண்டார்கள். அவ்விதமாகத்தான் அவர்கள் தங்களுடைய வெளிப்படுத்துதலைப் பெற்றுக்கொண்டார்கள். லூத்தர் வேதாகமத்தை அச்சிட்டுக் கொடுத்தபோது, அது வெஸ்லியின் யுகத்தின் வழியாக தொடர்ந்து இக்காலத்துக்கு வந்தபோது, அவர்கள் அவருடைய வசனத்தைக் கைக்கொண்டார்கள். அதிலிருந்து இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாட்டை, அவர் மாம்சத்தில் நம் மத்தியில் தோன்றிய தேவன் தான் என்ற வெளிப்படுத்துதலையும், இயேசுவின் நாமத்தில் உள்ள தண்ணீர் ஞானஸ்நானத்தைப் பற்றிய வெளிப்படுத்து தலையும் அவர்கள் பெற்று, அவ்வாறு அவருக்குள் சென்றார்கள். அப்பொழுதுதான் அவர்கள் அவருடைய நாமத்தைப் பெற்றுக் கொண்டார்கள். பார்த்தீர்களா? ஏன், அது செய்திப்பத்திரிக்கையில் படிப்பதைப் போல் அவ்வளவு தெளிவாக இருக்கிறது. பாருங்கள்? செய்திப் பத்திரிக்கையில் படிப்பதைவிட மிகவும் தெளிவாக அது உள்ளது. பாருங்கள்? நீங்கள் அதை மறுத்துரைக்க இயலாது, ஏனெனில் அது சரியாக இங்கே அமைந்துள்ளது. வேதத்திலும் சரியாக அது காணக்கிடக்கின்றது. அது வரலாற்றுப் பூர்வமாக அப்படியே சரியாக அமைந்துள்ளது. சரியாக அக்காலத்தில்தான் பெந்தெகொஸ்தே சபையானது ஆரம்பித்தது. 1908 அல்லது 1910 அல்லது 1912ம் ஆண்டில்தான் அது பெயர்பெற்று விளங்க ஆரம்பித்தது. 178. இப்பொழுது, சரி. "...என் நாமத்தை மறுதலியாமல்...'' வெளி.3:8 179. “ என் நாமத்தை மறுதலிக்கவில்லை '' என்று கூறுகிறார். நான் அதை விரும்புகிறேன். இப்பொழுது அவரிடம் தாவீதின் திறவுகோல் உள்ளது. அவர் தனது வார்த்தையை காத்துக்கொண்டு உங்களை இராஜ்யத்தில் சேர்த்துக் கொள்ளுவார். அவருடைய நாமமும் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் “ உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிற'' சபையைவிட்டு வெளியேறி, ஜீவனை அளிக்கும் நாமத்தையுடைய சபைக்குள் பிரவேசித்துவிட்டார்கள். பாருங்கள்? “ பிதா குமாரன் பரிசுத்த ஆவி'' என்ற மரித்துப்போன ஒன்றைவிட்டு வெளியே வாருங்கள். 'பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால்'' என்பது அர்த்தமற்றது. பாருங்கள்? அது வெளிப்படுத்து தலினால் புரிந்து கொள்ளப்படுவதற்காக அங்கே அவ்வாறு கொடுக்கப் பட்டுள்ளது. அவருடைய முழு வேதாகமமும் வெளிப்படுத்துதலின் பேரில் எழுதப்பட்டுள்ளது. அவ்வாறுதான் அது உள்ளது. அவர் தன்னையே வெளிப்படுத்துகிறார். 180. மத்தேயு 28:19ல் “ நீங்கள் புறப்பட்டுப்போய், ஜனங்களுக்கு பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்று கூறினார். நீங்கள் அவைகளில் எதனுடைய நாமத்தை உபயோகப்படுத்தப்போகிறீர்கள்? அநேக திரித்துவக் காரர்கள், ''பிதாவினுடைய நாமத்தினாலும், குமாரனுடைய நாமத்தினாலும், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலும்'' என்று கூறி ஞானஸ்நானம் கொடுத்து வருகிறார்கள். அவ்வாறு செய்வது வேதபூர்வமானது அல்ல. ஆம், எவர் அதைச் செய்தாலும் சரியல்ல... ‘நாமத்தில்' என்றுதான் கூறப்பட்டுள்ளது. “ நாமங்கள்'' அல்ல. ஒருமையில்தான் கூறப்பட்டுள்ளது. பண்மையிலல்ல. ‘நாமத்தில்' என்றுதான். பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால். பாருங்கள்? பிதா என்பது ஒரு நாமமல்ல. குமாரன் என்பதும் ஒரு நாமமல்ல, பரிசுத்த ஆவியென்பதும் ஒரு நாமமல்ல. எனவே அது என்னவாகத்தான் இருக்கிறது? அவைகள் அவற்றின் நாமமல்ல, அப்பட்டங்கள் மரித்தவைதான். ஆனால் அந்த மரித்த பட்டங்களின் மூலமாக... 181. கிறிஸ்துவின் ஜீவனால் அது வெளிப்படுத்தப்படுகிறது. பேதுரு திறவுகோல்களைப் பெற்றிருந்தவனாக, அங்கே அவன் பரலோக இராஜ்யத்திற்குரிய திறவுகோல்களைக் கையில் கொண்டவனாக நின்றுகொண்டிருந்தான். இராஜ்யம் என்பது பரிசுத்த ஆவி. இராஜ்யத்தின் திறவுகோல்கள் தன்னுடைய பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்தன. திறவுகோல்கள் என்றால், இயேசு அவனுக்குச் சொன்னபடி அது வெளிப்படுத்துதலாகும். ஓ, சகோதரனே, அதை நீங்கள் காணவில்லையா? சத்தியத்தின் வெளிப்படுத்துதலினால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவனாக பேதுரு இருந்தான். ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளுக்கும் போதித்து, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்று இயேசு சொன்னதை பேதுருவும் அந்த இடத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்தான். 182. பேதுரு அவர் பக்கமாகத் திரும்பி, “ கர்த்தாவே, நிச்சயமாகவே இதற்கான திறவுகோலை நான் பெற்றிருக்கிறேன். அது எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றிய வெளிப்படுத்துதலை நான் பெற்றிருக்கிறேன். ஏனெனில், பிதா என்ற பதம் ஒரு நாமமல்ல, குமாரன் என்பதும் ஒரு நாமமல்ல, பரிசுத்த ஆவி என்பதும் ஒரு நாமமல்ல என்பதை நான் அறிவேன். அதன் நாமம் என்ன வென்பதை நான் அறிவேன்'' என்று கூறினான். “ எனவேதான் நான் கர்த்தராகிய இயேசு நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்'' என்றான். ஆமென். வ்யூ! அதுதான் சரி. 183. இவ்விஷயம் ஒரு காதல் கதையைப் படிப்பது போல் உள்ளது. நீங்கள்... மத்தேயு எழுதின சுவிசேஷத்தின் இறுதிப்பகுதியாகும் அது. ஸ்திரீகளாகிய உங்களில் சிலர் வாசிக்கும்படியாக ஒரு காதல் கதையைத் தெரிந்து கொண்டு இருப்பீர்களானால்... இப்பொழுது நீங்கள் நிச்சயமாக அவ்வாறு செய்கிறதில்லை. அவ்வாறு நீங்கள் இனி செய்யவும் போவதில்லை என்பதை நான் அறிவேன். இல்லை, இல்லை. ஆனால் நீங்கள் பாவியாக இருந்த காலத்தில், நீங்கள் அதைச் செய்தீர்கள். அவ்வாறு அக்காலத்தில் ஒரு காதல் கதையை தெரிந்து கொண்டு வாசிக்கையில், வாலிபமான பெண்ணாக இருக்கிற காலத்தில் அப்படிப்பட்டவைகளையெல்லாம் வாசித்திருக்கையில், கதையின் இறுதியின் என்ன படிக்கிறீர்கள்? ''ஜானும் மேரியும் அதற்குப் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். சுபம்'' என்று இவ்வாறு கதையின் முடிவு வருகிறது. ஹூ! யார் இந்த ஜானும், மேரியும்? கதையின் இறுதியில் ஜான், மேரி ஆகியோரைப் பற்றி படிக்கிறோமே, இவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ள, நீங்கள் கதையின் ஆரம்ப பாகத்திற்குத் திரும்பிச் சென்று அங்கிருந்து நீங்கள் படித்துக் கொண்டே வரவேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். 184. நல்லது, அதைப்போலவே, இயேசுவானவர், மத்தேயு எழுதிய சுவிசேஷத்தின் கடைசிப் பாகத்தில், “ நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளுக்கும் போதித்து, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவைவும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்'' என்று கூறினார். எனவே இப்பொழுது, பிதா என்பது ஒரு நாமமல்ல, குமாரன் என்பது ஒரு நாமமல்ல, பரிசுத்த ஆவி என்பதும் ஒரு நாமமல்ல என்றால், இது என்ன என்று காண இப்புத்தகத்தின் தொடக்கப் பகுதிக்குச் சென்று நீங்கள் காண வேண்டும். நாம் மத்தேயு சுவிசேஷத்தின் முதலாம் அதிகாரத் திற்குப்போனால் அங்கே அது என்னவென்று காணமுடியும். 185. ஒருக்காலும் இதைக் கண்டு கொள்ளாத சிலர் இங்கு வந்திருக்கக்கூடும். அவர்கள் நிமித்தமாக நான் இந்த பின்வரும் ஒரு உவமையின் மூலமாக இதை விவரிக்க விரும்புகிறேன். இதைக் கவனியுங்கள. இதுதான் பிதா, இதுதான் குமாரன், இதுதான் பரிசுத்த ஆவி என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது கவனமாகக் கேளுங்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. இதைத்தான் இயேசு மத்தேயு 28:19ல் கூறினார். அது சரிதானே? பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. இப்பொழுது, இது யார்? பரிசுத்த ஆவி. இது யார்? (சபையார் “ பிதா'' என்று பதிலளிக்கின்றனர் - ஆசி). இது யார்? (சபையார் “ குமாரன்'' என்கின்றனர் - ஆசி). குமாரன். சரி, இவர் யாருடைய பிதா? இயேசு கிறிஸ்துவின். அது சரிதானே? 186.இப்பொழுது நாம் மத்தேயு 1ம் அதிகாரம் 28ம் வசனத்தைப் படிப்போம். நாம் இந்த காதல் கதையை எடுத்துக்கொண்டு, அது என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம். ''நீங்கள் புறப்பட்டுப் போய் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்று சொல்லப்பட்ட இந்த நபர் யார் என்று நாம் பார்ப்போம் நல்லது, மத்தேயு எழுதின சுவிசேஷத்தின் முதலாம் அதிகாரம் வம்ச வரலாற்றுடன் துவங்குகிறது. ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான், ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்.... மத்.1:1-2 187. இவ்வாறு வம்ச வரலாறு தொடர்ச்சியாக 18ம் வசனம் முடிய நீண்டு கொண்டே போகிறது. இப்பொழுது, நீங்கள் முன்னே சென்று 17ம் வசனத்தை எடுத்துப் படியுங்கள். இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போன கால முதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம். இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப் பட்டிருக்கையில்...” மத்.1:17-18. 188. என் பின்னால் நீங்கள் இதை வாசித்துக்கொண்டு வருகிறீர்களா? மிகவும் கவனமாகப் பாருங்கள். "...அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப் பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பிதாவாகிய தேவனால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. மத்.1:18. 189. அங்கே இவ்விதமாகவா எழுதப்பட்டுள்ளது? யாரால் கர்ப்பவதியானாள்? (சபையார் “ பரிசுத்த ஆவியினால்'' என்று பதிலளிக்கின்றனர் - ஆசி). சிலர் முதலாவதாக உள்ள பிதாவே அவருடைய பிதா என்று கூறிவருவதாக நான் எண்ணினேன். பரிசுத்த ஆவியானவர் ஒரு தனி ஆள் என்றும், பிதா வேறொரு ஆள் என்றும் இருக்குமானால், அப்பொழுது அவருக்கு இரு பிதாக்கள் உள்ளதாக அர்த்தமாகிறது. அப்படியிருந்தால், அது என்ன? அது முறை தவறிப் பிறந்த பிள்ளை என்றாகிவிடுமே. நீங்கள் கூறுகிறீர்கள், “ ஓ அவர்கள் தவறுதலாக அவ்வாறு அச்சுப்பிழையாக அடித்துவிட்டார்கள்'' என்று. சரி. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது (சபையார் “ பரிசுத்த ஆவியினால் உண்டானது” என்று கூறுகின்றனர் - ஆசி.) மத்.1:19-20 190. "இரண்டு அல்லது மூன்று சாட்சிகளினால் எந்தவொரு காரியமும் உறுதிப்படுத்தப்படக்கடவது''. பார்த்தீர்களா? பரிசுத்த ஆவியானவர் அவருடைய பிதா. நல்லது, “ தேவன்'' தனது பிதா என்று அவர் கூறினார். இப்பொழுது அவர்கள் இருவரும் இரு வெவ்வேறு ஆட்கள் என்றிருக்குமானால், இவர்கள் இருவரில் யார் இயேசுவின் பிதாவாகும்? ஹூ! இந்தக் கட்டத்தில் நீங்கள் எங்கே இருக்கிறதாக காண்கிறீர்கள்? மத்திய ஆகாயத்தின் மத்தியில் நீங்கள் தொங்கிக்கொண்டு இருக்கிறவர்களாக காண்பீர்கள். பாருங்கள்? இப்பொழுது நீங்கள் இங்கே பரிசுத்த ஆவியானவரே தேவனாக இருக்கிறார் என்று கூறியாக வேண்டியதாகிறது. பரிசுத்த ஆவியானவரே தேவனாய் இருக்கிறார். அப்படியானால், இப்பொழுது உங்களுக்கு மூன்றுக்குப் பதிலாக இரண்டு ஆட்கள்தான் இருக்கிறார்கள். 191. 21ம் வசனம் "..அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது… (அவளிடத்தில் இதை ஜெநிப்பிக்கச் செய்தது யார்? பரிசுத்த ஆவியானவர்தான் அதைச் செய்தது. அது சரி.) அவள் ஒரு குமாரனைப்பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக (நாமம்); ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம் . மத்.1:20-23. 192. அவரது நாமம் என்ன? இப்பொழுது, ''ஜானும் மேரியும் அதற்குப்பிறகு எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்'' என்று கூறப்பட்ட அந்த ஜானும் மேரியும் யார்? பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமமானது என்ன? இயேசு இப்புவியில் பிறந்தபொழுது, அவர் கர்த்தராகிய கிறிஸ்துவாக இருந்தார். அவர் விருத்தசேதனம் செய்யப்பட்ட எட்டாம் நாளில், அவரது தாயார் அவருக்கு பெயர் சூட்டினாள். அவரது தகப்பன் “ இயேசு'' என்று நாமத்தை அவருக்கு சூட்டினார். அப்பொழுதிலிருந்து அவர் இயேசு கிறிஸ்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானார். 193. அவர் கர்த்தராயிருந்தார்! அவர் பிறந்தபொழுது, அவர் கர்த்தராகிய கிறிஸ்துவாக இருந்தார். அதன்பிறகு, அவர் தனது நாமமாகிய இயேசு என்ற நாமத்தைப் பெற்றுக்கொண்டபோது, அவர் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து ஆனார். அதேதான் சரியாக பேதுருவுக்கும் வெளிப்படுத்தப்பட்டது. ஜானும் மேரியும் யார் என்பதை அவன் தெளிவாக அறிந்திருந்தான். “ பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்று இயேசு கூறினது என்னவென்று பேதுரு அறிந்து இருந்தான். பேதுருவுக்கு ஆவியினால் வெளிப்படுத்துதல் பெறும் வரம் உண்டென்று இயேசு அறிந்திருந்தபடியால், அது வெளிப்படுத்தப்படும் என்று இருந்தது. அவனுக்கு உன்னதத்தின் ஆவியினால் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டிருந்தபடியால், அவன் அதை அறிந்திருந்தான். ஒரு மனிதனால் உன்னதத்திலிருந்து வரும் வெளிப்படுத்துதல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை தேவன் காண்கையில், அவர் அவனை நம்பி, அவனோடு கிரியை செய்ய இயலும். அது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கும் பொழுது; ஏனெனில், பிதா தவிர வேறு எவரும் இதை வெளிப்படுத்த முடியாது என்று அவர் கூறினார். தேவன் ஒருவர் மாத்திரமே அதை வெளிப்படுத்த முடியும். பேதுரு ஆவியானவரோடு தொடர்பு கொண்டிருப்பவன் என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே, அவன்... 194. பேதுரு வெளிப்படுத்துதலை அறிந்திருந்தான். எனவேதான், அவன் எழும்பி நின்று, "நீங்கள் மனந்திரும்பி, பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறினான். 195. இதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் இயேசு பேதுருவிடம், “ நீ பேதுருவாய் இருக்கிறாய். உனக்கு திறவுகோல்களைக் கொடுப்பேன்'' என்றார். இராஜ்யத்தின் திறவுகோல்கள் அவைகள். அந்த சமயத்தில்தான் அவர் பேதுருவிடம் அவனுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல் யார் என்று கூறினார். “ இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை'' என்று கூறினார். “ நீ பூலோகத்தில் கட்டுவது எதுவோ அதை நான் பரலோகத்தில் கட்டுவேன். நீ பூலோகத்தில் கட்டவிழ்ப்பது எதுவோ, அதை நானும் பரலோகத்தில் கட்டவிழ்ப்பேன்'' என்றார். 196. ''நீங்கள் புறப்பட்டுப்போய், பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்று இயேசு சொன்னதற்கு பத்து நாட்களுக்குப் பிறகு, பெந்தெகொஸ்தே நாளிலே, சபையின் துவக்க நாளிலே, பேதுருவும் ஆவிக்குரிய வெளிப்படுத்துதலினாலே, வெறுமனே ''பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம்'' என்ற ஒன்று கிடையாது என்பதை அறிந்திருந்தான். கத்தோலிக்க காலம் வரைக்கிலும் அப்படிப்பட்டதொன்றை எவருமே சிந்தித்தது கிடையாது. “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே'' என்று ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டுள்ள ஒவ்வொரு நபரும் வாஸ்தவமாகவே கத்தோலிக்க விசுவாசத்திற்குள்தான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் என்பதுதான் சரி. அது கிறிஸ்தவ ஞானஸ்நானம் அல்லவே அல்ல. மீதியாயிருப்பவர்களுக்குள் அக்காரியம் காணப்படவேயில்லை . 197. பெந்தெகொஸ்தே நாளில், அவர்கள் யாவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தார்கள்; அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசிக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் நடந்து கொண்ட விதம் குடித்தவர்களைப்போல் இருந்தது. அவர்கள் குடித்திருந்தார்கள், அதாவது உன்னத கானானாகிய பரலோகத்திலிருந்து வந்திருந்த புதிய திராட்சை இரசத்தைப் பருகியிருந்தார்கள். அதினால் அவர்கள் யாவரும் கூக்குரலிட்டு, சப்தமிட்டுக் கொண்டிருந்தபொழுது, அவ்வாறு அவர்கள் குடித்தவர்களைப் போல் நடந்து கொண்டபொழுது, பேதுரு அவர்கள் நடுவில் எழும்பி நின்று, ''நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறி கொண்டவர்களல்ல. தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. அவர் தம் ஆவியை ஊற்றுவேன் என்று உரைத்தபடியே நடந்ததாகும் இது'' என்று கூறுகிறான். 198. அப்பொழுது அவர்கள், “ சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று கேட்டார்கள். அதுவே அவர்கள் கேட்ட கேள்வி. 'அதை நாங்கள் எவ்வாறு பெறப்போகிறோம்? யாரிடம் திறவுகோல்கள் உள்ளன?'' 199. "சீமோனே, இங்கே வா, உன்னிடம்தான் திறவுகோல்கள் உள்ளன, உன் இடுப்பிலிருந்து அதை எடு. நீ இப்பொழுது, என்ன சொல்லப்போகிறாய்?'' என்று கேட்டிருப்பார்கள். இப்பொழுது, “ நீ பூலோகத்திலே கட்டுகிறது எதுவோ, அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், நீ பூலோகத்திலே கட்டவிழ்ப்பது எதுவோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்'' என்று இயேசு கூறியதை நினைவுகூருங்கள். அவர் தேவனாயிருக்கிறபடியால், அவர் தனது வார்த்தையை காத்துக்கொள்ள வேண்டும். 200. இப்பொழுது கத்தோலிக்க மதகுருக்களே! ''பாவங்களை மன்னித்தல்' என்ற உங்களுடைய கொள்கையை நிரூபியுங்கள். ஓர் சமயம், ஒரு கத்தோலிக்க மதகுருவானவர், என்னிடம், “ எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ, அவைகள் மன்னிக்கப்படும்' என்று இயேசு கூற வில்லையா?'' என்று கேட்டார். “ அவர் கூறினார்'' என்றேன் நான். “ எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ, அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும்' அல்லவா?'' என்றார் அவர். "ஆம்" என்றேன் நான். 201. ''அது எவர்களுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவர்கள் மன்னிக்கப்பட்டு இருப்பார்கள், எவர்களுக்கு நீங்கள் மன்னிக்க வில்லையோ, அவர்கள் மன்னிக்கப்படமாட்டார்கள் என்பதாகத் தானே இருக்கிறது'' என்றார் அவர். 202. ''அவ்வாறுதான் அது கூறப்பட்டுள்ளது'' என்று நான் பதிலுரைத்தேன். 203.“ கிறிஸ்து தனது சபைக்கு - நாமே அவருடைய சபையாயிருக்கிறோம் - பூலோகத்தில் பாவங்களை மன்னிக்கிறதற்கான அதிகாரத்தை கொடுக்கவில்லையா?'' என்று அவர் கேட்டார். 204. “ நிச்சயமாகவே அவர் அவ்வாறு கூறினார்'' என்று நான் பதிலுரைத்தேன். அவர்கள் அவர்களை மன்னித்த வண்ணமாகவே நீங்களும் செய்தால், நான் உங்களுடன் கூடச் செல்லுவேன்'' என்றேன் நான். 'அவர்கள் எவ்வாறு அவர்களின் பாவங்களை மன்னித்தார்கள்? அவர்கள் அவர்களிடம், போய் 'ஒரு நோவீனா செய்யுங்கள்' அல்லது “ நீங்கள் செய்யும் வேறெந்த ஒன்றையும் செய்யுங்கள்' என்று கூறினார்களா?'' என்று நான் கேட்டேன். 205. இல்லை, ஐயா. பேதுரு, ''மனந்திரும்புங்கள்'' என்று தான் கூறினான். ஆமென். அங்கேதான் திறவுகோல் உள்ளது. “ நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்'' என்று கூறினான். இதைப் பேதுரு கூறியபொழுது, திறவுகோலானது "க்ளிக்'' என்று திறந்தது. பரலோகத்திலும் அவ்வாறு “ க்ளிக்'' என்று திறந்து கொடுத்தது. 206. இதனால்தான், இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்திருந்த அதே மனிதனால் ஏற்கனவே ஒரு தடவை ஞானஸ்நானம் பெற்றிருந்த சிலரை பவுல் சந்தித்தபொழுது, “ நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?'' என்று கேட்டான். 207. அவன் கூறினான், ''எதற்குள்...'' நீங்கள் உங்களுடைய கிரேக்க வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள், 'நீங்கள் எவ்வாறு ஞானஸ்நானம் பண்ணப்பட்டீர்கள்?'' என்று கேட்டான். 208.“பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவேயில்லை'' என்றார்கள். 209. “ யோவான் கொடுத்ததை...'' என்றார்கள் அவர்கள். 210. “ அது இனிமேல் கிரியை செய்யாது, அதற்குப் பரலோகம் அடைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறவேண்டும்'' என்றான் பவுல். 211. இதை அவர்கள் கேட்டபொழுது, அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். அவர்கள் கீழ்ப்படிந்தபொழுது, பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்தான். பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் வந்தார். அவர்களும் அந்நியபாஷைகளில் பேசி, தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். 212. ஓ, சகோதரனே, அது ஆதி நிலைக்கு திரும்பிச் செல்லுதலாகும். அதுவே சரியானதாகும். அதுதான் இங்கே வைக்கப் பட்டுள்ள ''திறந்த வாசலாகும்''. பூகோள ரீதியாக அது சரியாக சாயங்கால வெளிச்சங்களின் வேளையாக இருக்கிறது. வேதத்தில் உள்ள ஒவ்வொரு வேதவாக்கியமும், அதற்கு நேராக நடத்திச் செல்லுகிறது. 213. இங்கே மணிக்கணக்கில் நாம் நின்று கொண்டிருக்க முடியும். நமக்கு இன்னமும் பதினைந்து நிமிடங்கள் உள்ளன. இன்னும் முப்பத்தைந்து வெவ்வேறு கருத்துரைகளை கொடுக்க வேண்டியுள்ளது. இன்றிரவில் நாம் அவைகளை பார்க்க முடியாவிடில், காலையில் நாம் பார்க்கலாம். 214. "...உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.'' வெளி.3:8 215. அங்கே அதை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம். “ என் நாமத்தை மறுதலிக்கவில்லை'', நாமமானது வெளிப்படுத்தப் பட்டது. முந்தைய சர்தை பழைய செத்த ஸ்தாபனத்தினின்று விடுபட்டு, ஜீவிக்கிற சபைக்குள் வந்தாகிவிட்டது. 216. 9ம் வசனத்தை நாம் எடுத்துக்கொள்வோம். மிகவும் ஆபத்தான ஒரு விஷயத்தை நாம் இப்பொழுது கவனிக்கப் போகிறோம். இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன் மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன். வெளி.3:9 217. அது முழு இரவும் பேசக்கூடிய விஷயமாயிருக்கிறது. கவனியுங்கள்! அவர்கள் இப்பொழுது என்னவாயிருக்கிறார்கள்? அவர்களோடு அவர் பேசினார். அவர்கள் அவரது நாமத்தைக் கண்டுகொண்டுவிட்டார்கள். இத்தனை காலத்திற்குபிறகு இக்காலத்தில் தான் இயேசு கிறிஸ்துவாகிய “ திறந்த வாசலானது" வருகிறது. அவர்கள் ஜீவ வார்த்தையைப் பெற்றுக்கொண்டார்கள், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தபடியினால், இப்பொழுது, அவர், ''சாத்தானுடைய ஜெப ஆலயத்தைச் சேர்ந்தவர்களாகிய சிலரை (தமிழில் ''சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை'' என்று குறிப் பிடப்பட்டுள்ளது - மொழிபெயர்ப்பாளர்) உனக்குக் கொடுப்பேன்'' என்று கூறுகிறார். 218. இப்பொழுது எனது சகோதரனே! வெளிப்படுத்தின விசேஷம் 2:13ல் பெர்கமு சபைக்கு நீங்கள் ஒரு நிமிடம் திரும்பிச்சென்றால், அது என்ன என்பதை, அது ஸ்தாபனம் என்பதை, நான் உங்களுக்கு காண்பிப்பேன். “ உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும்... அறிந்திருக்கிறேன்.' வெளி.2:13 219. அங்கேதான் விஷயம் உள்ளது. அந்த லவோதிக்கேயா... அல்லது அந்த நிக்கொலாய் மதஸ்தரின் சபைக்காலமான அக்காலத்தில் அவர்கள் மதஸ்தாபனத்தை உண்டாக்கிக்கொண்டு விட்டார்கள். கவனியுங்கள். அவர்கள் ஒரு சபை, ஒரு கூட்டம், அவர்கள் ஒரு மதஸ்தாபன சபை, சாத்தானின் கூட்டம் என்று காண்பிக்கப்படுவதை பார்த்திடும்படி கவனியுங்கள். ஓ, சகோதரனே! அப்படியானால் ஸ்தாபனத்தின் கிரியைகள் பிசாசினால் உண்டாயிருக்கிறது. அவர்கள் கிறிஸ்தவர்களல்ல. இப்பொழுது அதை நினைவில் கொள்ளுங்கள்; அவர்கள் கிறிஸ்தவர்களா யிருக்கின்றனர். ஆனால் ஸ்தாபனமாக இருக்கிறார்கள். சரி. 220.'உன் நடுவில் தங்களை யூதரென்று கூறிக்கொள்ளுகிறவர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் பொய்யரென்று கண்டறிந்தாய்'' என்று அவர் கூறியதை கவனித்தீர்களா? 221. இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். இந்த மகத்தான தூதன்... இப்பொழுது அவர் யாரிடம் இதைக் கூறுகிறார்? இந்த கடைசி சபைக்கு. கடைசி சபைக்காலத்திற்கும், அதற்கு முந்தைய சபைக்காலத்திற்கும் நடுவில் உள்ள இந்த திறந்த வாசலின் காலத்தில் உள்ளவர்களுக்கு. 222. முதலாம் சபைக்காலமானது யாரால் போதிக்கப்பட் டிருந்தது? பவுலினால். நாம் இப்பொழுது ரோமர் 2:29க்கு போவோம். அங்கே ஒரு யூதனென்னப்பட்டவன் யார் என்பதை நாம் காணலாம். அப்பொழுது, இதைக் குறித்து நான் கூறுவது எனது சொந்தக்கருத்தல்ல என்பதை நீங்கள் நிச்சயமாக அறிந்து கொள்ளுவீர்கள். “ உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப் பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது”. 223. யூதனென்னப்பட்டவன் எவன்? பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட கிறிஸ்தவனே யூதனாவான். பரிசுத்தமாக்குதலின் காலத்திற்குப்பிறகு உள்ள காலத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். அங்கே அக்காலத்தில், அவர்கள் தாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதாகக் கூறிக்கொள்ளுகிறார்கள். ஆனால் அவரோ, “ நான் அவ்வாறு கூறவில்லை'' என்கிறார். அடையாளங்களைப் பெற்றிராமல் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதாக அவர்கள் கூறிக்கொள்ளுகிறார்கள். ஆனால் அவரோ, அவர்களைப் “ பொய்யர்'' என்று கூறுகிறார். “ விசுவாசிக்கிறவர்களைப் பின்தொடரும் அடையாளங் களாவன'' (தமிழ் வேதாகமத்தில், ''விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது - மொழி பெயர்ப்பாளர்) என்று ஆண்டவர் கூறியுள்ளார். அவரைப் பொய்யராக்க முடியாது. ஓ சகோதரனே! சுற்றிலும் அது உங்களை குருடாக்கியுள்ளது, பாருங்கள்? ஓ, என்னே! “ இதோ, யூதரல்லாதிருந்தும், தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் ... (அவர்கள் தாங்கள் ''ஆவியினால் நிரப்பப்பட்ட கிறிஸ்தவர்கள்'' என்று தங்களைக் குறித்து கூறிக் கொள்ளுகின்றனர். அவர்கள் மத ஸ்தாபன சபையைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் தங்களுக்கு பரிசுத்த ஆவி உண்டு என்று கூறுகின்றனர். அவர்களோ ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு விட்டனர். அவர்களுக்கோ இன்னமும் ஆவிக்குரிய வெளிப்படுத்துதல் கிடைக்கவேயில்லை. அது சரிதான். பார்த்தீர்களா?) ...தங்களை யூதரென்று பொய் சொல்லு கிறவர்களாகிய... (அல்லது அவர்கள் தங்களை கிறிஸ்தவர்க ளென்று சொல்லிக் கொள்ளுகிறார்கள்) ... சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன். இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன் மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்." வெளி.3:9 224.சரியாக இந்த இடத்தில் உள்ள செய்தினாது, நாளைக்காலையில் உள்ள என்னுடைய செய்தியோடு வந்து இணைகிறது. அங்கேதானே நித்திரை செய்யும் கன்னிகைகளை நமக்கு எடுத்துக் காண்பிக்கிறது. அதை உங்களால் காண முடிகிறதா? அது எப்பொழுது வருகிறது? கடைசி காலத்தில். ஓ, அவர்கள் புறப்பட்டு வெளியே சென்ற பொழுது, இங்கேயே ... பாருங்கள்? அவர்கள் விசுவாசத்தினால் நீதிமான்களாகின்றனர். லூத்தரன் செய்தியினால் அவர்கள் நீதிமான்களாக்கப்பட்டு, இங்கே இக்காலத்தில் பரிசுத்தமாக்கப் படுகின்றனர். ஆனால் "திறந்த வாசலை'' அவர்கள் கண்டுகொள்ளத் தவறிவிடுகின்றனர். அதை நீங்கள் பார்த்தீர்களா? விசுவாசத்தினால் நீதிமானாகுதல் லூத்தரின் மூலமாக பெறுகின்றனர்; வெஸ்லியின் காலத்தின் மூலமாக பரிசுத்தமாக்கப்படுகின்றனர். 225. நசரேய சபைக்காரர்கள் (Nazarenes), யாத்திரைப் பரிசுத்த சபைக்காரர்கள் (Pilgrim Holiness), வெஸ்லியன் மெதோடிஸ்ட்டுகள் (Weseleyan Methodists) ஆகியோர் அனைவரும் நல்ல, சுத்தமான, பரிசுத்தமாக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதாக எண்ணிக் கொள்ளுகின்றனர். ஆனால் ஏதாவது ஒரு நபர் அந்நிய பாஷைகளில் பேசிவிட்டதை கேட்டுவிட்டு, அதைக் குறித்து எள்ளி நகையாடுகின்றனர். அந்நபரைக் குறித்து பரிகசிக்கின்றனர். “ அது பிசாசினால் உண்டானது'' என்று கூறிவிடுகின்றனர். சகோதரனே, அதை நீங்கள் செய்கையில் உங்களுடைய அழிவை நீங்களே முத்தரித்துக் கொண்டுவிடுகிறீர். நீங்கள் பரிசுத்த ஆவியைத் தூஷணம் செய்துவிட்டீர்கள். அது மன்னிக்கப்பட முடியாத பாவமாகும். 226. நல்லது, நீங்கள் கூறுகிறீர்கள், “ நாங்கள் முதல் சபையைச் சேர்ந்தவர்கள்'' என்று. நீங்கள் எத்தனை சபைகளைச் சேர்ந்திருந்தாலும் அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. கூட்டவோ குறைக்கவோ முடியாத தேவனுடைய வார்த்தைக்கும் அதற்கும் எள்ளளவும் சம்பந்தம் கிடையாது. ''சாத்தானுடைய கூட்டம்' என்று கூறப்பட்டதுதான் அது. அது சரிதான். 227. நான் உங்களை மனம் புண்படுத்தி விடவில்லை என்று நம்புகிறேன். நான் இவ்விதமாக பேச விரும்பவில்லை. ஆனால் எனக்குள்ளாக ஒன்று இதைச் செய்திட என்னை நெருக்கி ஏவுகிறது. நான் ஏன் இவ்வாறு செய்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவ்வாறு பேசிட விரும்பவில்லை. நான் அவைகளைக் கூறுகையில், மிகவும் மோசமாக உணருகிறேன். ஆயினும் நான் அதை உரைக்கத்தான் வேண்டியதாக உள்ளது. என்னில் ஏதோ ஒன்று அதை கூறவைக்கிறது. ஸ்திரீகளைக் கடிந்து கொள்வது எப்பொழுதும் எனக்கு விருப்பமாக இல்லை. நான் அவ்வாறு உணருகிறேன்... ஒரு ஸ்திரீயானவள் அழுதுவிட்டால், அது எனக்கு பயங்கரமாக இருக்கும். ஸ்திரீகளை அவர்கள் மனம் புண்படும்படியாக பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் என்னுள் ஏதோ ஒன்று அதைச் செய்யச் செய்கிறது. பாருங்கள். ஒரு கேடான ஸ்திரீயைக் கண்டால், ஓ என்னே! என்னால் அதை பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. ஏனெனில் எனக்குள் இருக்கும் ஏதோ ஒன்று, தவறானவைகளுக்கு எதிராக என்னை பேச வைக்கிறது. அதுதான் பரிசுத்த ஆவி. 228. நான் இங்கே வார்த்தையில் உற்று நோக்கி, எனக்குள்ளாக சிந்தித்து, “ கர்த்தாவே, நான் தவறாக இருந்தால், அதை எனக்குக் காண்பியும். நான் அவ்வாறு தொடர்ந்து செய்து கொண்டே போகவிடாதேயும். நான் மக்களை நேசிக்கிறேன். நான் அதைச் செய்ய விரும்பவில்லை. நான் ஜனங்களை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர். நான் யார் மனதையும் புண்படுத்த என்னை விடாதேயும். நான் வேண்டு மென்றே அவ்வாறு செய்திட விரும்ப மாட்டேன் என்பதை நீர் அறிவீர்'' என்று நான் ஜெபிக்கிறேன். 229. ஆனால் பரிசுத்த ஆவியானவர் எழுந்து நின்று, “ அந்த வார்த்தையில் நில், அங்கே நிலைத்திரு, சரியாக வார்த்தையில் நிலைத்திரு'' என்று கூறுகிறார். 230. அதற்கு நான், “ ஆம் கர்த்தாவே, நீர் என்னுடைய சிறந்த சிநேகிதர், எனக்கு நீர் ஒருவர்தான் உண்டு. நீர் என்னுடைய உண்மையான நண்பர், நீர் ஒருவர்தான், இந்த வாழ்க்கை மங்கிப்போகையில், எனக்கு உதவி செய்கிறவராக இருக்கிறீர். எனவே நான் அப்பொழுது, உம்மோடுகூட நிற்பேன், கர்த்தாவே'' என்று கூறுகிறேன். 231. இதோ வருகிறேன். நான் யாவரையும் மனம் புண்படச் செய்ய நோக்கங்கொண்டிருக்கவில்லை. ஸ்தாபனங்களையும் அவற்றின் காரியங்களையும் குறித்து நான் கண்டனம் பண்ணி கடிந்து கொள்கையில், என்னைத் தவறாக நினைத்திடாதிருங்கள். இதைக் குறித்து நான் எதையும் அறியும் காலத்திற்கு முன்னரே, என் வாழ்நாள் முழுவதும் நான் அதைக் குறித்து கடிந்து கொண்டுள்ளேன். ஸ்தாபனங்களை நான் விசுவாசித்ததேயில்லை. எனவேதான் நான் அவைகளோடு என்னை பிணைத்துக் கொண்டதில்லை. ஆம். நல்லது, அவற்றிலிருந்து என்னை விலக்கிக் காத்ததற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். இதோ தங்களை ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள் என்று கூறியும் அப்படியில்லாதவர்களான பொய் சொல்லு கிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை... உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்துகொள்ளும்படி செய்வேன்... 232. நித்திரை செய்த கன்னிகைள் எப்பொழுது நித்திரையை விட்டு எழும்பினார்கள் என்பதை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களா? அவள் என்னவென்று அழைக்கப்பட்டாள்? அவர்கள் பத்து பேர்களானவர்கள் மணவாளனை சந்திக்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அது சரிதானே? அவர்களில் ஐந்து பேர்கள் புத்தியுள்ள வர்களாயிருந்தனர், தங்கள் விளக்கில் (தமிழ் வேதாகமத்தில் ‘விளக்கு' என்பதற்குப் பதிலாக ‘தீவட்டி' என்று கூறப்பட்டுள்ளது - மொழிபெயர்ப்பாளர்) எண்ணெயைக் கொண்டவர்களாக அவர்கள் இருந்தனர். வேதாகமத்தில் எண்ணெயானது எதைக் குறிக்கிறது என்பதைப்பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? எண்ணெய் பரிசுத்த ஆவியைக் குறித்தும். அந்தப் பத்துக் கன்னியரைக் குறித்து எவராவது, அவர்கள் பரிசுத்தமாக்கப்படவில்லை என்று கூறிட முடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் பரிசுத்தமாக்கப்பட்டேயிருந்தனர். அவர்கள் அனைவரும் பரிசுத்தமாக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களில் ஐவர் வெளிப்படுத்துதலின் ஞானத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஆவியினால் நிரப்பப்பட்டு, வாசலைப் போய் அடைய, பாருங்கள், போதுமான அளவு ஞானமுள்ளவர்களாக இருந்தனர். இவர்கள் ஐவரும் தங்கள் விளக்குகளில் எண்ணெயை உடையவர்களாக இருந்தனர். மற்றவர்களுக்கோ எண்ணெய் இருக்கவில்லை. அவர்கள் அனைவரும் நித்திரை தெளிந்து எழுந்தபோது, அவர்கள் இவர்களிடம் வந்து, “ ஓ! ஓ! உங்களிலுள்ள பரிசுத்த ஆவியை எனக்குக் கொஞ்சம் கொடுங்கள். எனக்குக் கொஞ்சம் கொடுங்கள்' என்று கெஞ்சினார்கள். ஆம். 233. ''மன்னிக்கவும் சகோதரி, எனக்குப் போதுமான அளவுதான் என்னிடம் உள்ளது. உங்களுக்கு கொடுப்பதற்கு உபரியாக என்னிடம் இல்லை'' என்று இவர்கள் கூறினார்கள். 234. எனவே, அப்பொழுது, அவர் கூறினார், “ போய் ஜெபித்துக் கேளுங்கள்'' என்று. அவ்வாறு அவர்கள் போய் கொஞ்சம் எண்ணெயைப் பெற்றுக்கொள்ளப் போயிருக்கையில், மணவாளன் வந்துவிட்டார். உடனே, புத்தியுள்ள கன்னியர் கலியாண விருந்துக்காக உள்ளே பிரவேசித்துவிட்டனர், கதவு அடைக்கப்பட்டது, அப்பொழுது புத்தியில்லாதவர்கள் கைவிடப்பட்டு, மகா உபத்திரவக் காலத்திற்குள் போகின்றனர். இன்னும் கொஞ்சம் கவனித்து, மேற்கொண்டு வரும் இரு வசனங்களில் படித்தால், அவர்கள் நேராக மகா உபத்திரவ காலத்திற்குள் போய்விடுவதை நீங்கள் காண்பீர்கள். பாருங்கள்? 235.இப்பொழுது, இந்த நித்திரை செய்யும்... நாம் நாளைக் காலையில் அதைத் தொடர்ந்து பார்ப்போம். நேரமானது இன்னும் கொஞ்சம் தான் இருப்பதை முன்னிட்டு, இங்கே இப்பொழுது நாம் முடிக்க வேண்டியிருப்பதால், இந்தச் செய்திக்காக சற்று காத்திருப்பது நலமாயிருக்கும் என்று நம்புகிறேன். 236. இப்பொழுது நாம் காண்போம் : இதோ, நான்.... அவர்கள் அவர்களிடம் பரிசுத்த ஆவி இருக்கவில்லை என்றும் அவர்கள் பொய்யரென்றும் கண்டறிந்தார்கள். 237. நாம் இங்கு கூடியிருக்கையில் ஒரு சிறிய காரியத்தை தயவு செய்து பார்ப்போம். நான் நேற்றிரவு கூறியபடி யூதாஸ்காரியோத்து கேட்டின் மகனாக இருந்தான். ''அவன் கேட்டின் மகனாகப் பிறந்தான்'' என்று வேதாகமம் கூறுகிறது. அப்பொழுது அவன்,... இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாகப் பிறந்தார். தேவன், அப்பொழுது, கிறிஸ்துவிலே வாசம் பண்ணினார். அது சரியல்லவா? சாத்தான் யூதாஸில் வாசம் பண்ணினான். இயேசு தேவனுடைய குமாரனேயானால், தேவனுடைய குமாரனாக பிறந் திருந்தால், மாம்சத்தில் பிறந்த தேவனுடைய குமாரனேயானால், அப்பொழுது சாத்தானானவன் கேட்டின் மகனாகப் பிறந்திருந்தான். கேட்டின் மகனாக பிசாசாகிய சாத்தான் அவதாரம் எடுத்திருந்தான். 238. அவனும், இயேசுவோடு தன்னை இணைத்துக்கொண்டு, அவருடைய கூட்டத்தாரில் ஒருவனாக ஆகினான் என்பதை நீங்கள் கவனித்தீர்களானால் அறிந்து கொள்வீர்கள். அவ்வாறு அவன் செய்யக்காரணம் என்னவெனில், இந்த நாளுக்குள் சபையில் அவன் மீண்டும் நுழைந்து, அதே வஞ்சத்தை உள்ளே நுழைத்து விட அவன் விரும்பியதே காரணமாகும். இயேசு, “ அந்த சபைகள் சாத்தானுடையதாக இருக்கிறது'' என்று கூறினார். ஓ! என்னே ! அது மனதில் பதிந்ததா? அவர்கள், சாத்தானுடைய கூட்டத்தாரா யிருக்கின்றனர். அது கிறிஸ்தவனாக நடிக்கும் யூதாஸாக இருக்கிறான். 239. யூதாஸின் முக்கியமான காரியமாக இருந்தது எது? அது பணமாக இருந்தது. இன்றைக்குள்ள அநேகமானவற்றின் மிகப்பெரிய இழுப்பெல்லாம் பணமாகத்தான் இருக்கிறது. அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் சபையின் கட்டிடத்தைப் பாருங்கள். அதை 60 இலட்சம் டாலர் செலவில் கட்டி முடித்திருக்கிறார்கள். "கர்த்தருடைய வருகை சீக்கிரமாய் இருக்கிறது. ஓ குண்டுகள் யாவரையும் அழிக்க ஆயத்தமாக தலைக்குமேல் தொங்கிக்கொண்டு இருக்கின்றன'' என்றெல்லாம் போதித்துக்கொண்டே, அவர்கள் 60 இலட்சம் டாலர்கள் செலவில் அக்கட்டிடத்தை கட்டியிருக்கிறார்கள். ஓ, என்னே ! இவர்கள் ஐசுவரியவான்களாகவும், ஒன்றும் குறைவுபடாதவர்களாகவும் இருக்கின்றனர். கர்த்தருக்குச் சித்தமானால் நாளை இரவு அதைப் பற்றிப் பார்ப்போம். 240. இங்கே கவனித்துப் பாருங்கள். ஓ, சபைக் கட்டிடங்களை எவ்வளவு பெரிதாக இந்த ஸ்தாபனங்கள் கட்டியெழுப்பியுள்ளன என்பதைப் பாருங்கள். அவர்கள் தங்கள் பணத்தையெல்லாம் ஒரு பொது நிதியாக சேர்த்து வைத்திருக்கிறார்கள். ஓ, இரக்கம்! அவர்கள் கோடீஸ்வரர்களாகிவிட்டார்கள். அவர்கள் நிதியுதவி செய்யும், கடன் வழங்கும் சங்கங்களைக்கூட தங்களுக்குள் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். சபைகள் கடன் வழங்குவதைக் கூட செய்து வருகின்றனர். சகோதரரே, அது அப்போஸ்தல ஊழியம்போல் எனக்கு தோன்றவில்லை. 241. பேதுரு, ''என்னிடத்தில் வெள்ளியும் பொன்னுமில்லை. ஆனால் என்னிடத்தில் உள்ளதை நான் உனக்கு தருகிறேன்'' என்றான்... உனது பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு அதை எனக்கு தந்துவிடு... ''வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை. என்னிடத்தில் உள்ளதை உனக்குத் தருகிறேன்; இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்...'' என்னிடத்திலுள்ளது என்று அவன் கூறியது, அந்த நாமம்தான். அதைப்பற்றிய வெளிப்படுத்துதல் தான் அது. ''... உனக்குத் தருகிறேன்; இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எழுந்து நட'' என்றான். 242. நல்லது, இங்கே நாம், அவர்கள் யாவரும் “ சாத்தானுடைய கூட்டத்தார்'' என்று கண்டுகொண்டோம். அவர்கள் எவ்வாறு அப்படி இருக்கமுடியும்? யூதாஸானவன் வந்தபொழுது.... இப்பொழுது பாருங்கள்! இயேசு காட்சியில் தோன்றி அதே சமயத்தில்தான் யூதாஸும் தோன்றினான். அதை நீங்கள் கவனித்தீர்களா? இயேசு காட்சியை விட்டு மறைந்த அதே வேளையில்தான், யூதாஸும் காட்சியை விட்டு மறைகிறான். பரிசுத்த ஆவி திரும்ப காட்சியில் தோன்றிய அதே சமயத்தில்தான், அந்தி கிறிஸ்துவின் ஆவியாகிய யூதாஸும் மீண்டும் காட்சியில் தோன்றி, கிரியை செய்ய வந்தான். கீழ்ப்படியாமையின் பிள்ளை களும் அப்பொழுது தோன்றினார்கள். அவர்கள் வேதத்தை மதியாமலும், ஸ்தாபனத்தைப் பற்றி மதிக்கிறவர்களாக மட்டும் இருந்தார்கள். அவர்கள் தங்களுக்கென ஒரு சங்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். இயேசு அதைக் குறித்து, ''அது சாத்தானுடைய சபையாக இருக்கிறது'' என்றே கூறுகிறார். அது எங்கே வருகிறது? சரியாக இங்கே இந்த சபைக்காலத்திற்குள் அது வருகிறது. இங்கே அது எவ்வாறு ஆரம்பித்தது? ஒரு ஸ்தாபனத்தின் மூலமாக. அதே காரியம்தான் இங்கேயும் அது செய்தது. ''சாத்தானுடைய சங்கம் அல்லது சபை'. நீங்கள் அதை அறிந்துகொண்டீர்களா? 243. “ சாத்தானுடைய சபை' (Synagogue of Satan). அவர்கள் ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளுகிறார்கள். அவர்களால் எவ்வாறு கூறிக்கொள்ள முடிகிறது? 244. யூதாஸ் இப்பூமியில் இருந்தபொழுது, இயேசுவை அவன் சந்திக்க நேர்ந்தபோது, தான் இயேசுவில் விசுவாசம் கொண்டுள்ளவன் என்ற ஒரு அறிக்கையை அவன் செய்து, அவருடைய கூட்டத்தில் ஒரு பொக்கிஷதாரியாக ஆகி, பணத்தையெல்லாம் கட்டி சேர்த்து வைத்திருந்தான். அப்படித்தானே அவன் செய்தான்? நீங்கள் யாவரும் அதை அறிவீர்கள். அவன் இயேசு கிறிஸ்துவை விசுவாசித் திருந்தானென்றால், அவன் (போலியாக) நீதிமானாக்கப்படுதலை ஏற்றுக்கொண்டான். அப்படித்தானே? ரோமர் 5:1ல், ''...விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப் பட்டிருக்கிற படியால்...'' சரி. 245. இப்பொழுது இன்னொரு காரியம். யோவான் 17:17ல் இயேசு அவர்களை சத்தியத்தினால் பரிசுத்தமாக்கினார். “ உமது வசனமே (வார்த்தையே) சத்தியம்'' என்று அவர் கூறினார். அவரே வார்த்தையாக இருந்தார். 246. அவர் சீஷர்களுக்கு அசுத்த ஆவிகளின் மேல் அதிகாரம் கொடுத்தார். பிணியாளிகளை சொஸ்தமாக்கும் ஆராதனைகளை நடத்தவும், பிசாசுகளைத் துரத்தவும், எல்லாவிதமான அற்புதங்களைச் செய்யவும் அவர் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அவர்கள் ஊழியம் செய்துவிட்டு இயேசுவிடம் திரும்பி வந்தபொழுது, யூதாஸும் அவர்களுக்குள் ஒருவனாக காணப்பட்டான். நசரேய சபைக்காரர்களே, வெஸ்லியன் மெதோடிஸ்டுகளே, இப்பொழுது கவனியுங்கள். சீஷர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு தேவனைத் துதித்துக்கொண்டு திரும்பி வந்தார்கள். ஏனெனில், பிசாசுகளும் அவர்களுக்கு அடங்கின. அப்பொழுது இயேசு, “ பிசாசுகள் உங்களுக்கு கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் பெயர் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டதற்காக மகிழ்ந்து களிகூருங்கள்'' என்றார். 247. அந்த சீஷர் கூட்டத்தில் யூதாஸும் ஒருவனாக இருந்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! சபையை அவனால் அது வரைக்கிலும் வஞ்சிக்க முடியும் என்பதைப் பாருங்கள். அவர்களோடு ஒன்றாக நின்றுகொண்டே, அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் பெந்தெகொஸ்தே நாள் வந்தபொழுது, அவன் தனது நிறத்தை காட்டிவிட்டான். அதே காரியத்தைத்தான், அவன் மெதோடிஸ்ட்டு சபையிலும், லூத்தரன் சபையிலும், நசரேய சபையிலும் செய்தான். தேவனுடைய சபைகளுக்குள்ளும் அவன் அதையே செய்தான். அவர்கள் பரிசுத்தமாகுதல் வரைக்கிலும் வந்து, அதன்பிறகு, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் வந்தபொழுது, அந்நிய பாஷைகளில் பேசி, அற்புத அடையாளங்களைச் செய்தலை அவர்கள் கண்டனம் செய்தனர். 248. உங்களுக்காக அவர்கள் தெய்வீக சுகமளித்தல் வரைக்கிலும் செல்வார்கள். நிச்சயமாக, அப்படித்தான் யூதாஸும் செய்தான். பார்த்தீர்களா? ஆனால் அப்பொழுது... தெய்வீக சுகமளித்தல் ஊழியம் செய்பவர்கள் அநேகர் இருக்கிறார்கள். அவர்கள் இன்று காலையில் இருக்கிறார்கள், சகோதரனே! அவர்கள் இரண்டு மணி நேரம் நின்றிருந்து, ''ஒரு இரவுக்கு தலா 60 டாலர்கள் கொடுக்காவிடில், உங்களுடைய பயிர்கள் எரிந்துபோகும்'' என்று கூறுகின்றனர். அவ்விதமான அநேக காரியங்கள் உள்ளன. அவைகளெல்லாம் பிசாசினால் உண்டானவையாக இருக்கின்றன. நிச்சயமாக அவைகள் அப்படித்தான். என் முழு இருதயத்தோடும் சுகமளித்தலை நான் விசுவாசிக்கிறேன். ஆனால் அவ்விதமான காரியம் பிசாசினால் உண்டானதாக இருக்கிறது. அது பிசாசினால் உண்டானதாகும். நீங்கள் எவ்வளவு செய்ய முடியும் என்பதோ, அல்லது இன்னும் கூடுதலாக எவ்வளவு செய்ய முடியுமோ என்பதைப் பற்றி அக்கறையில்லை. ஏனெனில், யூதாஸும் பிசாசுகளைத் துரத்தினான். 249. ''அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே, கர்த்தாவே, உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்'' என்று இயேசு கூறினார். 250.“ நீங்கள் அதைச் செய்திருந்தால், அதைப்பற்றி நான் அறிந்திருக்கவில்லை. நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்'' என்றார் (மத். 7:23). 251. ஓ சகோதரனே, “ வாசல் நீர் வழிப்பாதையாயிருக்கிறது (வாசல் இடுக்கமும் - தமிழ் வேதாகமம் - மொழிபெயர்ப்பாளர்) வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்'' (மத். 7:14). நாம் இந்த ''சிலரை'ப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். ஏனெனில் நாம் இருக்கிற இந்த கடைசி காலத்தில் அது மிகவும் கொஞ்சப் பேராகத்தான் இருக்கப்போகிறது. தயவு செய்து, என்னுடைய சகோதரர்களே, அதை ஏற்றுக்கொள்ளுங்கள். 252. நானாக இருந்தால் என்னைப் பொறுத்தமட்டில், நான் என்னோடு ஒத்துப்போய்விடுவேன். அதாவது, ''அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் அல்லது இன்னொரு இயக்கத்தை நாம் சேர்ந்து கொள்வோம், அவர்களோடு ஒத்துப்போய்விடுவோம்'' என்று சொல்லுவேன். ஆனால் நான் அப்படிச் செய்தால் எனக்கு ஐயோ! எனக்கு ஐயோ! அதைவிட மேலாக நான் அறிந்திருக்கிறேன். அவ்விதமானதொரு காரியத்தை நான் செய்தால், தேவன் என்னை நரகத்திற்குத்தான் அனுப்புவார். ஆம், ஐயா, நான் என்னுடைய சாட்சியை என் ஜீவனைக்கொண்டு முத்திரையிட வேண்டுமெனில், நான் அவ்வாறு முத்திரையிட்டாக வேண்டும். அவ்வளவுதான், ஏனெனில் என்னிலுள்ள ஏதோ ஒன்றின் நிமித்தமாக அக்காரியத்தை நான் செய்ய முடியாது. 253. இது சத்தியமாயிருக்கிறது. சத்தியமானது எதுவோ , அதன் பக்கத்தில் நான் நின்றாக வேண்டும். வேதமும் அதையே ஆதரித்து நிற்கிறது. மதஸ்தாபனங்கள் எனக்கெதிராக உள்ளன; ஆனால் வேதமோ நான் கூறுவது சரியாயிருக்கிறது என்று கூறுகிறது. “ தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன்...'' அதுவே சத்தியமாயிருக்கிறது, அதோடு நிலைத் திருங்கள். ..."சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை... உன் பாதங்களுக்கு முன்பாக வந்து... நான் உன் மேல் அன்பாயிருக்கிறதை அறிந்து கொள்ளும்படி செய்வேன்.” வெளி.3:9 "என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால் ... சோதனை காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்." வெளி.3:10 254. இங்கே மெதோடிஸ்ட்டின் காலத்தைக் குறித்துப் பேசவில்லை என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன். இப்பொழுது கவனியுங்கள். ஆயினும் இது இரண்டு சபைக் காலங்களுக்கும் இடையில் உள்ள இடைப்பட்ட ஒரு காலமாகும் என்பதைப் பாருங்கள். அதைப்பற்றிக் கேட்க நீங்கள் ஒவ்வொருவரும் ஆயத்தமா? மிகவும் கவனமாகக் கேளுங்கள் இப்பொழுது. என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால்,... சோதனை காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னை (அந்த சிறு மீதியாயிருக்கிற கூட்டம் அது) காப்பேன். வெளி.3:10 255. சபையானது நீங்கள் இந்த ஸ்தாபன அமைப்புக்குள் பிரவேசிக்கப்போகும் அந்த இடத்திற்கு வரப்போகிறது. நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள், சகோதரனே. அப்படித் தான். நீங்கள் ஸ்தாபனத்தை அமைத்துக்கொண்டு, மிருகத்தின் முத்திரையை எடுத்துக்கொண்டாக வேண்டும் என்ற நிலை வருகிறது. ஒன்று நீங்கள் ஒரு ஸ்தாபனத்தை அமைத்துக்கொண்டாக வேண்டும் என்ற நிலையோ, அல்லது ஸ்தாபனத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்ற நிலை வருகிறது. அதுதான் மிருகத் தின் முத்திரையைக் கொண்டு வரப்போகிறது. இதைச் செய்யாவிட்டால், அது ஒரு பகிஷ்கரிப்பாக ஆகிவிடும். பாருங்கள்? “ பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக் கரத்தின் மேலெங்கும் வரப்போகிற... “ இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக் கொண்டிரு.'' வெளி. 3:10-11 256. இப்பொழுது இந்த பெரிய சோதனையானது, பூமி முழுவதின் மேலும் சோதிக்கும்படியான வரப்போகிற அந்த சோதனைக்காலமானது, உபத்திரவ காலத்திற்குள் செல்லுகிறது. சில நிமிடங்களுக்குள் அதைப்பற்றிப் பார்ப்போம். இது சோதனைக் காலத்திற்குள் செல்லுகிறது. வெஸ்லியின் காலத்தில் இந்த உபத்திரவமானது வரவில்லை. எனவே, எந்தக் காலத்தில் நாம் இருக்கிறோம்? வைக்கப்பட்ட இந்த “ வாசலானது'' என்னவாயிருக்கிறது? வெஸ்லியின் காலத்திற்கும் அதற்கடுத்த காலத்திற்கும் இடைப்பட்ட காலமாக இருக்கிறது. அங்கே சபையானது ஏற்கனவே லவோதிக்கேயா சபைக்காலத்திற்குள் முன்னோக்கிச் சென்றுவிட்டது. இடைப்பட்டதாக இருக்கிற இந்த சிறிய காலத்தில், கடந்த 35, 40 ஆண்டுக்காலத்தில், உள்ளே பிரவேசிக்கிறதற்காக மக்கள் முன்பாக, மக்களுக்கென ''திறந்த வாசலானது" வைக்கப்பட்டுள்ளது; தேவன் மீதியாயிருக்கிற அச்சிறு கூட்டத்தை எடுத்து முத்தரித்து விடுகிறார். மற்றவர்களோ அனலுமின்றி குளிருமின்றி வெதுவெதுப்பாகப் போய்விடுகிறார்கள். தேவன் அவர்களை தன் வாயிலிருந்து வாந்தி பண்ணிப் போட்டுவிடுவார் கிரியையானது காலத்திற்கு முன்பாகவே விரைந்து செய்து முடிக்கப்பட்டு, சபையானது மேலே எடுக்கப்படும், அழிவுக்காக அந்திகிறிஸ்து வருகிறான். இது மிகவும் பரிபூரணமாக இருந்து, முழு வேதத்தோடும் சுற்றிலும் நன்கு பொருத்தமாக அமைந்துள்ளது. சரி, இப்பொழுது. 257. அப்பொழுது, நித்திரை செய்யும் கன்னியர் தோன்றுவதும் கூட ஏற்படுகிறது. சபைக்காலங்களின் இறுதிக்கட்டமானது, பெந்தெகொஸ்தேயின் முதல் பாகத்திற்கு நகர்ந்து செல்லுகிறது. ஏனெனில் அவர்கள் மகா உபத்திரவத்திற்குள் செல்வார்கள். அது வெஸ்லியின் காலத்தில் வரவில்லை. 258. 11ம் வசனம், அங்கே 11ம் வசனத்தில் “ ஜீவ கிரீடம்'' "இதோ, சீக்கிரமாய் வருகிறேன்... (என்ன? இக்காலத் திற்குப் பின்னால்)... ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக் கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக் கொண்டிரு.'' வெளி.3:11 259. கிரீடம் என்னப்படுவது என்ன? கிரீடமானது என்ன? கிரீடம் என்றால், ஒரு நாட்டின்மேல் ஆட்சியை நீங்கள் பெற்றிருப்பதாக அர்த்தம். நீங்கள் கிரீடம் சூட்டப்பட்டீர்களென்றால், நீங்கள் ஒரு இராஜாவாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். பாருங்கள்? நித்திய ஜீவனால் நாம் முடி சூட்டப்படுகையில், நாம் தேவனுடைய புத்திர ராயிருக்கிறோம். அப்பொழுது நம்முடைய ஆட்சியதிகாரத்திற்குட்பட்ட பிரதேசம் இப்பூமியாகும். “ தேவனுக்கு முன்பாக உங்களை ஆசாரியர்களும், இராஜாக்களும் ஆக்கினார்.'' அது சரிதானே? 260. புதிய எருசலேமில், எவ்வாறு பூமியின் இராஜாக்கள் அந்நகரத்தினுள் தங்களுடைய மகிமையைக் கொண்டு வந்தார்கள்? ஓ, அது அற்புதமாயிருக்கிறது. அதை நீங்கள் எடுத்துக் கொள்ள விரும்பினால்... நட்சத்திரங்களைப்போல் பிரகாசிக்கும் கிரீடங்கள் என்பதைப் பாருங்கள். தானியேல் 12:3 அதைப்பற்றிய பெரிய விவரணத்தைக் கொடுக்கிறதா யிருக்கிறது. நீங்கள் விரும்பினால் குறித்துக்கொள்ளுங்கள். நமக்கு இன்னும் சில நிமிடங்கள் மாத்திரம் உள்ளது. எனவே இதைப் பெற்றுக்கொள்வோம். தானியேல் 12ம் அதிகாரத்தில் அவன் என்ன கூறுகிறான் என்பதைப் பார்ப்போம். 12ம் அதிகாரம் 1ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். “ உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல்... (இவர் யார் என்று நீங்கள் அறிவீர்களா?)... அக்காலத் திலே எழும்புவான்; யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்கால மட்டும் உண்டாயிராத ஆபத்துக் காலம் வரும்..... (இது என்ன? இக்காலத்திற்குப் பிறகு வரும் உபத்திரவகாலமாகும்).... அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்திய ஜீவனுக்கும்... (கிரீடம்)... சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப் போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். தானி.12:1-3 261. ஓ, சகோதரனே, அங்கேதான் உங்களுடைய ''கிரீடம்'' காணப்படுகிறது. அதுதான் நித்திய ஜீவனின் மகிமையான கிரீடமாகும். நித்திய ஜீவனின் கிரீடம். 262. 12ம் வசனம், நாம் விரைவாகப் பார்ப்போம்... அதற்கு பிறகு நாம் போய்விடலாம் என்று எண்ணுகிறேன். ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன்... வெளி. 3:12 263. நாம் இதை விரைவாக பார்க்கப் போகிறோம். ஏனெனில் நான் ஏற்கனவே, குறிப்பிட்ட நேரத்திற்கு ஐந்து நிமிடத்திற்கு மேல் போய்விட்டேன். காலையில் கொஞ்சம் கூடுதலாக நீங்கள் உறங்கிக் கொள்ளலாம், இயலாதா? அம்மா, அப்பாவை கொஞ்சம் உறங்க விட்டுவிடுங்கள். நீங்கள் எழுந்து விடுகிறீர்கள், ஆனால் அப்பாவுக்கு எழும்ப சற்று கடினமாயுள்ளது. ஆனால் நீங்கள் அவரை சற்று கூடுதலாக உறங்கும்படி விட்டுவிடுங்கள். மெதுவாக நழுவிச் சென்று அவருக்கு காப்பி பானம் அல்லது அவர் பருகும் வேறெதாவது பானத்தை தயார் செய்துவிடுங்கள். அப்பொழுது அவர் சற்று மகிழ்ச்சியாக இருப்பார். “ ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன்...” வெளி.3:12 264. ஒரு நிமிடம் இவ்வசனத்தை வார்த்தைக்கு வார்த்தையாக எடுத்துக்கொண்டு பார்ப்போம். இன்னும் சற்று நேரம் என்னைப் பொறுத்துக்கொள்வீர்களா? வெப்பமாக இருக்கிறதை நான் அறிகிறேன், இங்கும்கூட உஷ்ணமாக இருக்கிறதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இதை பார்ப்போம். “ ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன்...” வெளி.3:12 265. ''தூண்'' - ஒரு தூண் அல்லது ஒரு 'அஸ்திபாரம்'' தேவனுடைய வீட்டின் ஆலயத்திலே அஸ்திபாரம். "ஆலயத்திலே'' அல்லது “ என் தேவனுடைய வீட்டிலே''. அது ஒரு தூணாக, அஸ்தி பாரமாக இருக்கிறது. இந்த மக்கள்தான், தாங்கள் கேட்ட வசனத்தை ஏற்றுக்கொண்டு (8ம் வசனம்) அஸ்திபாரத்திற்குத் திரும்பிச் சென்றவர்கள். 266. எபேசுவின் சபைக்காலத்திலுள்ள எபேசியருக்கு எழுதின நிருபம் 2:19-ஐ நாம் இப்பொழுது எடுத்துக்கொள்வோம். நீங்கள் எபேசுவுக்கு திரும்பிப் போயாக வேண்டும், ஏனெனில், அது துவக்கமாயிருக்கிறது. அது சரிதானே? சரி, நாம் எபேசுவுக்கு திரும்பிச் செல்லுவோம். அது பவுல் நிறுவின சபையாகும். நாம் எங்கேயிருக்கிறோம் என்பதைப் பார்ப்போம். எபேசுவிலுள்ள சபை. நாம் இப்பொழுது திரும்பிச் சென்று, அங்கே அஸ்திபாரமானது என்னவென்றும், முதலாம் சபைக்காலத்தில் அஸ்தி பாரத்தைக் குறித்து பவுல் என்ன கூறியுள்ளான் என்பதையும் பார்ப்போம். பவுல் இப்பொழுது இங்கே எபேசுவிலுள்ள சபையாரோடு பேசுகிறான்: "ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளு மாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,... அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர் களுமாயிருக்கிறீர்கள்.... (லூத்தரன், பாப்டிஸ்ட்டுகளே... இப்பொழுது, பொறுத்துக் கொள்ளுங்கள். நான் வேறு வசனத்தை எடுத்துக்கொண்டு விட்டேனோ?) அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். அதற்கு இயேசு கிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்.'' எபே. 2:19-20 267. உள்ளே பிரவேசித்தவை யாவும் இயேசுவாகிய வாசலால் தான் பிரவேசித்தன. “ ஜெயங்கொள்ளுகிறவனெவனோ, அவனை... தூணாக்குவேன்''. அதாவது, அஸ்திபாரத்தின் பாகமாக்குவேன். “ நான் அவனுக்கு எண்ணத்தைக் கொடுப்பேன்? ஆதி முதற் கொண்டு இருந்து வந்த அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகளின் உபதேசத்தில் அவனை நிலைநாட்டுவேன், அவனுக்கு வெளிப் படுத்துதலைக் கொடுப்பேன்''. அவரைக் குறித்து தீர்க்கதரிசிகள் என்ன சொல்லுவார்கள்? அவர் ஆலோசனைக் கர்த்தா, சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, என்று இவ்விதமாகத்தான் தீர்க்கதரிசிகளும், அப்போஸ்தலர்களும் அவரைக் குறித்து கூறினர். “ இந்த சாத்தானுடைய சபைகள் அனைத்தையும் வென்று, தன்னை சுயாதீனமாக வைத்துக்கொண்டு, நேராக வாசலை உற்று நோக்குகிறவன் எவனோ, அவனை நான் தூணாக்குவேன். என் தேவனுடைய வீட்டில், எனது வார்த்தையின் அஸ்திபாரத்திலே மீண்டும் அவனை நிலை நாட்டுவேன்''. ஓ, என்னே! “ நான் அவனை அந்த தூணிலே வைப்பேன். வார்த்தையோடு சரியாக நிற்கும் அந்த அஸ்திபாரத்தில் அவனை வைப்பேன்'' என்கிறார். ஆமென். நான் அதை விரும்புகிறேன், சகோதரனே. அது நல்லதாயிருக்கிறது. நான் விசித்திரமாக நடந்து கொள்வது போல் தோன்றலாம். நான்... எனக்கு நல்லுணர்வு தோன்றுகிறது. சரி. .... அவனை ஆக்குவேன்... ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை.... (அது என்னவாயிருக்கிறது? அவன் தூணாக இருப்பானெனில், இனி அவன் அகன்றுவிடமாட்டான். அவன் மணவாட்டியாயிருக்கிறான்! அது சரிதான்).வெளி. 3:12 268. எபேசுவின் காலத்தில் இருந்ததைப்போல்... அப்போஸ்தலர் நடபடிகளில் பவுல் போதித்தது போல.... இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுத்திருங்கள். மணவாட்டியைப் பற்றிப் பார்க்கப் போகுமுன்னர், இன்னொரு வேதவாக்கியத்தைப் பற்றி உங்க ளுக்குக் குறிப்பிட நான் விரும்புகிறேன். நீங்கள் ஒரு தூணாக இருக்கப்போகிறீர்களென்றால், நீங்கள் எபேசுவுக்கு திரும்பிச் செல்லப்போகிறீர்கள். பவுல் இருந்த காலத்திற்குள் நீங்கள் திரும்பிச் செல்லப்போகிறீர்கள். பவுல் எபேசு சபைக்காலத் திற்குரிய தூதனாயிருந்தான். அது சபையின் ஆரம்பமாகும். அஸ்திபாரமானதொன்றாகும். அவன் எபேசியருக்கு போதித்த தென்னவெனில்: எவராவது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தவிர வேறு எவ்விதத்திலும் ஞானஸ்நானம் பெற்றிருந்தால், மீண்டும் சரியானபடி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றாக வேண்டும் என்றான். அதுதான் சரியானமுறை. அப்போஸ்தலர் 19:5. கலாத்தியர் 1:8ல் அவன், ''ஒரு தூதனாவது வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனா யிருக்கக்கடவன்'' என்றான். 269. ஆலயத்தில் இருந்த அவர்கள், மணவாட்டியாகவும் இருக்கிறார்கள். இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 7ம் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு, அவர்கள் மணவாட்டியா இல்லையா என்பதைப் பார்ப்போம். 270. இவ்வதிகாரத்தில் நாம் இஸ்ரவேலில் மீதியான இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரைப்பற்றி பேசிக் கொண்டிருந்தோம். நாம் அதைச்சற்று விட்டு விலகிச்சென்று, 12ம் வசனத்தில் உள்ளதைப்பற்றிப் பார்ப்போம். அது ஒரு பெந்தெகொஸ்தே கூட்டம் போல் இருக்கிறது. இந்த ஜனங்கள்தான்... நல்லது, நாம் 9ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். ஏனெனில் முதலில் உள்ளது இஸ்ரவேலருக்கு சம்மந்தமுள்ளதாகும். நாளைக்கு நாம் அதைப்பற்றி பார்க்கப்போகிறோம். “ இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல... ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்... நிற்கக் கண்டேன்...'' வெளி. 7:9 271. இவ்வதிகாரத்தில் 4 முதல் 8 முடிய உள்ள வசனங்கள் இஸ்ரவேலரைப் பற்றியது, அவர்கள் ஆலயத்தைக் காக்கிற அண்ணகர்களாவர். கர்த்தருக்குச் சித்தமானால், நாளை காலை நாம் இதைப் பற்றிப் பார்ப்போம். அவர்கள் 12 கோத்திரத்தார்களாவர் என்பதைப் பாருங்கள். யூதா கோத்திரம், அவர் பன்னீராயிரம் பேர்களை முத்தரித்தார். ரூபன் கோத்திரத்தார், பன்னீராயிரம் பேர்களை முத்தரித்தார். காத் கோத்திரத்தார், அவர் பன்னீராயிரம் பேர்களை முத்தரித்தார். மேலும் லேவி, செபுலோன் மற்றும் பென்யமீன் - ஒவ்வொரு கோத்திரத்திலும் தலா பன்னீராயிரம் பேர்களை முத்தரித்தார். இஸ்ரவேலில் எத்தனை கோத்திரங்கள் உண்டு? (சபையார் பன்னிரண்டு என்று பதிலளிக்கின்றனர் - ஆசி). எனவே, பன்னீராயிரத்தை பன்னிரண்டால் பெருக்கினால் எவ்வளவு வருகிறது? இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள். அவர்கள்தான் இஸ்ரவேல் புத்திரராவார். அவர்கள் ஒவ்வொரு வரும் யூதர்கள் என்பதை யோவான் அறிந்திருந்தான். “ இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல... ஜாதிகளிலும், கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலு மிருந்து வந்ததும், ..... (புறஜாதிகள்தான் இவர்கள்) .... ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள் வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து,...'' வெளி.7:9 272. அந்தக் கூட்டமான ஜனங்கள்தான், அக்காலங்களில் பரிசுத்த ஆவி சுவிசேஷத்திற்காக நின்ற பொழுது, சிங்கங்களினாலும் மற்றும் காரியங்களினாலும் பட்சிக்கப்பட்டு தங்கள் இரத்தத்தை சிந்தினவர்களாக இருந்த எளிமையான சிருஷ்டிகள் ஆவர். ஆயிரமாயிரமான சிறு குழந்தைகள் தெருக்களில் தங்கள் மண்டைகள் உடைக்கப்பட்டு உயிர் நீத்தனர். ஆயினும் அவர்கள் நிலை நின்றனர். அவர்கள் வெண்ணங்கி தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்தவர்களாய் நின்றிருந்தனர். ஓ, என்னே! "அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித் தார்கள். "இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குடியானவருக்கும் உண்டாவதாக...'' தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பவர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழ நின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு; வெளி.7:10-11 273. கவனியுங்கள், இது ஒரு பெந்தெகொஸ்தே கூட்டம்தானா இல்லையா என்பதைப் பாருங்கள். “ ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். (வ்யூ! இங்கே எனக்கு ஒரு காம்ப் கூட்டம் உண்டாயிருக்கிறது, அல்லவா?) அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். (“ யோவானே, நீ ஒரு யூதன், உனக்கு அந்த அனைத்து பன்னிரண்டு கோத்திரத்தாரையும் தெரிந்திருக்கிறது. இப்பொழுது இந்த ஜனங்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? அவர்கள் வெண்ணங்கி தரித்தவர்களாயிருக்கிறார்கள். இவர்கள் எங்கிருந்து வந்திருப்பார்கள்? இவர்கள் பென்யமின் கோத்திரத்தாரோ, அல்லது மற்றவர்களோ அல்ல, இவர்கள் யார்? என்று கேட்கிறான்) வெளி.7:12-13 274. யோவான் அதைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்: அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கு தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக் குடியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். (வீட்டின் உள்ளே ). (இவர்கள் சற்று பசியடைந்திருப்பார்கள் போலும், இல்லையா?) இவர்கள் இனி பசியடைவதுமில்லை, (மகிமை!) இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள் மேல் படுவதுமில்லை. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்று களண்டைக்கு நடத்துவார்; தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான். (அதோ அவர் இருக்கிறார், அதோ மணவாட்டியிருக்கிறாள். ஓ, என் னே! எவ்வளவு அழகாயிருக்கிறது! அது மணவாட்டி). வெளி.7:14-17 275. 12ம் வசனத்தை இப்பொழுது நாம் பார்ப்போம். அவர் என்ன கூறியிருக்கிறார் என்பதைப்பற்றி பார்த்து, அதை விட்டு விடாதிருப்போம். ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை (மணவாட்டி அங்கே மணவாளனுடன் நின்று கொண்டிருக்கிறாள்). வெளி.3:12 276. ஆ, ஓ, அதைக்குறித்து பார்க்கும்படி நமக்கு சமயம் உண்டா யிருந்தால் அது எப்படியாயிருக்கும்! அதை நான் புத்தகத்தில் வெளியிட வைத்திருக்கிறேன். வெளிப்படுத்தின விசேஷத்தில் “ பூமியின் இராஜாக்கள் யாவரும் தங்களுடைய கனத்தை அதற்குள் கொண்டு வந்தார்கள்'' என்று கூறுகிறது. இக்காரியம், கோத்திரத் தாருக்கு மற்றவர்களெல்லாம் தசம பாகங்களைக் கொண்டு வந்ததைப்போல் உள்ளது. ஒரு பௌர்ணமியிலிருந்து இன்னொன்று வரையிலும், ஒரு ஓய்வு நாளிலிருந்து மற்றது வரையிலும், அவர் கள் தொழுது கொள்ளும்படி போனார்கள். அது எப்படியான நாளாயிருக்கும்! "...அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை...'' என்பதைப் பார்ப்போம். “ என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன்... என் தேவனுடயை நாமத்தையும்... அவன் மேல் எழுதுவேன்.” வெளி.3:12 277. தேவனுடைய நாமமானது என்ன? அது 'இயேசு'வாகும். இதை நீங்கள் குறிப்பெடுத்துக்கொள்ள விரும்பினால் (கொஞ்ச நேரம் கழித்து நாம் அதை பார்க்கப் போகிறோம்) “ இயேசு''! எபேசியர் 3:15ல், பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ளவை களெல்லாம் இயேசு என்று நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள். அது சரிதான். அது சரிதான். "...என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கி வருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும்.... (ஓ! நீங்கள் காண்பீர்களானால், அவையாவும் அதே நாமத்தைத்தான் உடையனவாய் உள்ளன என்பதை நீங்கள் ஏற்கனவே கண்டு பிடித்திருக்கலாம்).... அவன் மேல் எழுதுவேன்." வெளி.3:12 278. “ நகரம்” அவர் தொடர்ந்து , “ அது புதிய எருசலேம்'' என்கிறார். அது புதிய எருசலேம் என்பதைப் பாருங்கள். “ நான் அவன்மேல் புதிய எருசலேமின் நாமத்தையும் எழுதுவேன்'' என்கிறார். மணவாட்டி, அல்லது சபைதான் புதிய எருசலேமாகும். எத்தனை பேர்கள் அதை அறிவீர்கள்? சபைதான் புதிய எருசலேமாகும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 279. நாம் அதை நிரூபிப்போமாக. வெளிப்படுத்தின விசேஷம் 21:21ம் அதிகாரம் என்று எண்ணுகிறேன். அவ்வதிகாரத்தை நாம் எடுத்துப்பார்த்து, அதுதான் அது என்பதை நாம் உங்களுக்கு காண்பிப்போம். ''எல்லாவற்றையும் சோதித்துப் பாருங்கள்'' என்று வேதம் கூறுகிறது. இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 21ம் அதிகாரம். ஓ, இதற்கு செவிகொடுங்கள். (தேவனுடைய நாமத்தையுடைய) அவருடைய புதிய நகரமானது என்னவென்று காண விரும்பினால், இதற்கு கவனமாக செவி கொடுங்கள். “ பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது." வெளி.21:1-2 280. இந்த புதிய - புதிய சபையானது புறஜாதி சபையாகிய மணவாட்டியாகும். மணவாட்டியானவள் புறஜாதியிலிருந்து வந்தவள். புறஜாதியாருக்கு அவரது நாமம் உள்ளது. அவர் தமது நாமத்திற்காக புறஜாதியிலிருந்து ஒரு ஜனத்தை பிரித்தெடுத்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 281. நீங்கள் விசுவாசியாவிடில், அப்போஸ்தலர் 15:14க்கு திருப்பி அங்கே பாருங்கள். ஒரு வினாடி நீங்கள் அப்.15:14-ஐ எடுத்துக் கொள்வீர்களானால், அங்கே நாம் அதைக் குறித்துப் பார்த்துவிட்டு, முடித்துக் கொள்வோம். "அவர்கள் பேசி முடித்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள். தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல் முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தை சிமியோன் விவரித்துச் சொன்னாரே." (நல்லது, அதோ அங்கே அவள் இருக்கிறாள் ஓ!). அப். 15:13-14 282. இப்பொழுது இது முடிவானதற்கு மிக அருகில் வந்து விட்டது என்று நான் எண்ணுகிறேன். அது அவர்தான் என்று கூறுவதோடு இதை நாம் முடித்துக்கொள்வோம். "...என் தேவனுடைய நாமத்தையும்... என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும்... அவன்மேல் எழுதுவேன்.” (இதன் நாமமெல்லாம், இயேசு, இயேசு, இயேசுதான். மணவாட்டி இயேசுவை விவாகம் செய்து கொண்டு விட்டபடியால், அவள் திருமதி இயேசு என்று ஆகிவிடுகிறாள். பாருங்கள்). வெளி.3:12 283. இன்றிரவில் இக்கட்டிடத்தில், அருமையான உயர் மதிப்பிற்குரிய ஸ்திரீகள் வீற்றிருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்குள், எனக்குச் சொந்தமான ஒரேயொருத்திதான் இருக்கிறாள், அவளே என் நாமத்தைத் தரித்தவளாயிருக்கிறாள், நான் சொல்லுவதை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று நம்புகிறேன். அவள் மட்டுமே என் பெயரைத் தரித்தவளாயிருக்கிறது போல், அவ ருடைய மணவாட்டியும் அவருடைய நாமத்தை தரித்தவளாயிருக்கிறாள். "...என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கி வருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் எழுதுவேன்.” வெளி.3:12 284. அத்தோடு அதை விட்டுவிடுகிறேன். அங்கே 'அவன்'' என்று ஒருமையில் கூறப்பட்டுள்ளதை கவனியுங்கள். நீங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 2:17ஐ ஒரு நிமிடம் பார்த்தீர்களானால்; அதை ஒரு வினாடி மறுபடியும் கவனித்துப் பாருங்கள். “ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக் கல்லையும், அந்தக் கல்லின் மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவ னேயன்றி வேறொருவனும் அறியக் கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது." வெளி.2:17 285. நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? அவர் அற்புதமானவராயில்லையா? நான் நேசிக்கிறேன், அவரை நேசிக்கிறேன் அவர் முந்தி என்னில் நேசம் கொண்டு கல்வாரி சிலுவையில் என் இரட்சிப்பை கிரயத்திற்குக் கொண்டதால். 286. கடிந்து கொள்ளுதல் மற்றும் உள்ளவைகள் உள்ள ஒரு கூட்டத்திற்குப் பிறகு, நான் எப்பொழுதும் ஆவியில் பாடிட விருப்பங்கொண்டுள்ளேன். உங்களுக்கும் அவ்வாறுதானே? ஓ, அப்பொழுது எவ்வளவாய் நான் ஆவியில் பிரவேசிக்க விரும்பு கிறேன்! வார்த்தை! பாருங்கள், வார்த்தையானது இப்பொழுது விழுந்திருக்கிறது, இப்பொழுது, அதற்குத் தேவையானதெல்லாம் கொஞ்சம் ஈரப்பசைதான். பாருங்கள், கொஞ்சம் துதி செலுத்துதல், ஸ்தோத்திரங்கள் செய்யவேண்டும், அப்பொழுதுதான் அது முளைத்து வளர ஆரம்பிக்கும். நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? நமது கைகளை உயர்த்தி அப்பாடலைப் பாடுவோம்: என்னில் அவர் முந்தி நேசம் கொண்டும், என் இரட்சண்யத்தை, கல்வாரி சிலுவையில் கிரயத்திற்கு கொண்டதால், நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் 287. ஓ, நாம் நம் தலைகளை வணங்கி, இவ்வாறு கூறுவோம்: "பிதாவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம், நாங்கள் உம்மை நேசிக்கிறோம். ஓ, நாங்கள் எவ்வளவாய் உம்மை நேசிக்கிறோம்! கர்த்தாவே, நாங்கள் உமக்கு வெகுவாக நன்றி செலுத்துகிறோம். எங்களது எளிய மானிட இதயங்களால், உம்முடைய சொந்த இரத்தத்தால் எங்களை எவ்வாறு கழுவினீர் என்பதைப் பற்றி, எங்களுக்குள்ளாக நாங்கள் எவ்வாறு உணருகிறோம் என்பதைப் பற்றி, விவரிக்க இயலாதபடி இருக்கிறது. நாங்கள் அன்னியரா யிருந்தோம், கர்த்தாவே. நாங்கள் இவ்வுலகின் காரியங்களை நேசித்து, உலகத்தின் காரியங்களால் முற்றிலும் கலந்துபோனவர்களாக காணப்பட்டோம்; அப்பொழுது நீர் இறங்கி வந்து, உம்முடைய கிருபையினால், உம்முடைய பரிசுத்த விலையேறப் பெற்ற கரங்களால், பாவச்சேற்றில் மூழ்க்கிக்கிடந்த எங்களை தூக்கியெடுத்து, எங்களைத் தெரிந்துகொண்டு, எங்களை கழுவி சுத்திகரித்து, எங்களில் புதிய ஆவியை வைத்து, உன்னதத்தின் காரியங்களின்மேல் நாங்கள் பாசம் கொள்ளும்படி செய்தீர். ஆகவே நாங்கள் எவ்வளவாய் உம்மை நேசிக்கிறோம், கர்த்தாவே! 288. இந்த காலமானது வஞ்சிக்கப்பட்ட நிலையில் உள்ளது, எனவே இவ்வுலகில் எங்களுக்கு எதுவும் வைத்து வைக்கப் படவில்லை, கர்த்தாவே, உலகத்திற்கு இனிமேல் ஒன்றும் இல்லை, அது அதன் முடிவுக் காலத்தில் உள்ளது. வேதாகமத்தின் வாயிலாக, ஒவ்வொரு காலமும் கடந்து போய்விட்டதை நாங்கள் காண்கிறோம். நாங்கள் இப்பொழுது முடிவான வேளையில் இருக்கிறோம். நேரமானது விரைவாகப் போய்க்கொண்டிருக் கிறது. இயேசு வரப்போவது இன்னும் அதிக தூரத்தில் இல்லை. ஓ தேவனே, எங்கள் இதயங்களை கொழுந்துவிட்டு எரியச் செய்யும், நாங்கள் அசையாமல் அமர்ந்திருக்கவேண்டாம். மகத்தான பரிசுத்தவானாகிய பவுல் இன்றிரவில் இங்கே இருந்தானெனில், இப்பொழுது இருக்கிற காரியங்களை அதின் போக்கில் பார்த்தால், அவன் என்ன செய்வான் என்பதைப் பற்றி நான் எண்ணிப் பார்க்கிறேன். விடியற்கால வெளுப்பு வரும் முன்னர் அம்மனிதனை அவர்கள் சிறையில் அடைத்து வைத்திருக்கக்கூடும். அவன் வெளியே வந்து, கர்த்தருடைய வருகைக்காக ஆயத்தமாக இருக்கும்படி மக்களுக்குச் சொல்லிக்கொண்டு இருந்திருப்பான். 289. இந்த சமயத்தில், கர்த்தாவே, அநேகர் வியாதிப் பட்டவர்களாக இருக்கின்றனர். ஏனெனில், இங்கே ஜெபக் கைக்குட்டைகளும், ஜெப வேண்டு கோள்களும் வைக்கப்பட்டுள்ளன. பிதாவே, அவர்கள் ஒவ்வொருவரையும் குணமாக்கவேண்டுமென நான் ஜெபிக்கிறேன். அது உம்முடைய ஊழியத்தின் ஒரு பாகமாக இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். ''விசுவாசிக்கிறவர்களை இவ்வடையாளங்கள் பின் தொடரும்'' என்ற சத்தியத்தை, பிசகில்லாத - வழுவாத சத்தியம்தான் என்று நீர் உம்முடைய ஊழியத்தின் மூலம் நிருபித்தீர். அவைகளை வியாதிப்பட்டவர்களுக்கு அனுப்பி, அசுத்த ஆவியுள்ளவர்கள் அவர்களை விட்டு வெளியேறி, அவர்கள் குணமடைந்தனர். ஏனெனில் மக்கள் ஜீவனுள்ள தேவன் பேரில் விசுவாசம் கொண்டிருந்தனர். பிதாவே, அவர்களை கர்த்தாவே, உம்மிடம் இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஒப்படைக்கிறேன். இன்றிரவில் அதை அனுக்கிரகித்தருளும். 290. இப்பொழுதும், கர்த்தாவே, நீர் எங்களுடைய ஆத்துமாக்களை உம்முடைய கரத்தில் எடுத்து, எங்களை கழுவி, எங்களை பெலப்படுத்தியருளும் என்று ஜெபிக்கிறேன்; ஏனெனில், கறை திரையற்ற ஒரு சபைக்காகத்தான் வருகிறீர் என்று வார்த்தையானது கூறியிருக்கிறது. பரிசுத்த ஆவியாகிய இஸ்திரிப்பெட்டி, எங்களை நன்கு அழுத்தி, எங்களிலிருக்கிற சுருக்கங்களையெல்லாம் நீக்கி விடட்டும், அப்பொழுது, நாங்கள் மனுஷகுமாரனுடைய வருகைக்கு ஆயத்தமானவர்களாக இருப்போம். 291. இப்பொழுதும், பிதாவே, எங்கள் மேல் உமது ஆசீர்வாதங்கள் தங்கியிருக்கவேண்டுமென ஜெபிக்கிறோம். நாங்கள் இன்றிரவில் நின்றிருந்து உமக்கு எங்களது இதயங்களை அளிக்கிறோம். நாங்கள்... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி).